
01.04.2026
அண்ணல் அம்பேத்கர் சிலையை அவமதித்த
சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்!
பத்திரிகைச் செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், வீராணகுப்பத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு சாதிவெறியர்கள் அவமதித்துள்ளனர். இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்த சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
மேலும், ஊத்தங்கரை வட்டாரத்தில், தலித் மக்கள் மீது சாதிரீதியான தாக்குதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் சாலையோரம் நின்று கொண்டிருந்த ரித்தீஷ் என்ற தலித் இளைஞர் மீது சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்திய கொடூரம் அரங்கேறியது. ஆனால் போலீசோ சாதிவெறியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட ரித்தீஷ் மற்றும் அவரைப் பாதுகாக்க வந்த அவரது நண்பர்கள் மீதே பொய் வழக்குப் புனைந்த அவலத்தை மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக அப்போதே கண்டித்திருந்தோம்.
அரசு மற்றும் போலீசு துறையின் ஆதிக்கச் சாதிச் சார்புப் போக்கும், சாதிவெறியர்களின் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதும் குற்றங்கள் அதிகரிக்கவே வழிவகை செய்யும்.
தற்போது அண்ணல் அம்பேத்கர் சிலையை அவமதித்த சம்பவம் நடந்தேறியுள்ளது. உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
சாதிவெறிக் குற்றங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும் ஆதிக்க சாதிவெறி சங்கங்களைத் தடை செய்ய வேண்டும்!
ஆதிக்க சாதிவெறி சங்கங்களில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யைத் தடை செய்ய வேண்டும்!
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





