பீமா கோரேகான் பொய் வழக்கின் ஆறாம் ஆண்டு நிறைவு: ஊபாவை ரத்து செய், என்.ஐ.ஏ.வை கலைத்திடு என முழங்குவோம்!
மக்களுக்கு நேர்மையாகவும் தன்னுடைய பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயல்படுபவர்களைப் பார்த்து தொடைநடுங்கிப் போய் ஒரு கோழையைப் போல பாசிச மோடி அரசு நடுங்குகிறது.
கெஜ்ரிவால் ஜாமீனுக்குத் தடை: மக்கள் மன்றத்திற்குச் செல்வதே தீர்வு!
பாசிச பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறவில்லை என்று புளகாங்கிதம் அடைந்து உட்கார நமக்கு நேரமில்லை. சிறுபான்மை அரசு என்றாலும் பாசிஸ்டுகளின் கைகளில் தான் அதிகாரம் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
உயிரைப் பறிக்கும் வெப்ப அலை – கண்டுகொள்ளாத மோடி அரசு
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் சுரங்கம் போன்ற கடும் வெயிலில் வெளிப்படும் வேலைகளில் தான் பணிபுரிகின்றனர். 2.3 கோடிக்கும் அதிகமானவர்கள் செங்கல் சூளைகளிலும், 5.1 கோடிக்கும் அதிகமானோர் கட்டிடத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.
அம்பலமாகிறது பி.ஜே.பி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு
தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கையும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் நிகழ்த்தியுள்ள குளறுபடிகள் பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது.
மத்தியப் பிரதேசம்: மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி வீடுகளை இடித்த பாசிச பா.ஜ.க அரசு!
இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மாட்டு இறைச்சி விற்பது சட்டவிரோதமானது என்று கூறி இந்துத்துவ மதவெறியர்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் அதேவேளையில், மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலகில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.
தெலங்கானா: மேடக்கில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கலவரம்
மேடக் நகரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-வினர் முஸ்லீம்கள் மீதும் அவர்களது சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்தியதில் 7 முஸ்லீம் இளைஞர்கள் காயம் அடைந்தனர். மேடக் போலீசு வாய்மூடி அமைதியாக வேடிக்கை பார்த்தது.
நீட் முறைகேடு: மாணவர்களுக்கு துரோகமிழைக்கும் தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே இத்தகைய மோசடி முறைகேடுகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும். எனவே, மாணவர்கள் தற்போது நடத்திவரும் போராட்டத்தை “நீட் தேர்வை தடை செய்” என்ற முழக்கத்தின் அடிப்படையிலான நாடுதழுவிய போராட்டமாக கட்டியமைக்க வேண்டும்.
கங்கனாவின் கன்னத்தை பதம்பார்த்த சி.ஐ.எஸ்.எப்ஃ அதிகாரி: இது முடிவல்ல, தொடக்கம்!
விவசாய சங்கங்கள் தங்களுக்கே உரித்தான வர்க்க உணர்வுடன் "குல்விந்தர் கவுருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்போம்" என எச்சரித்து பாசிசக் கும்பலுக்கு கிலியூட்டியுள்ளனர்.
சாகர் பாலியல் வன்முறை: பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் பி.ஜே.பி
வழக்கை திறும்பப்பெறாததால் அப்பெண்ணின் சகோதரர் நிதின் அஹிர்வார் கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் விக்ரம் சிங் தாக்கூர் தலைமையிலான ஆதிக்க சாதி கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
உத்தராகண்ட்: தொடர் காட்டுத்தீயை கண்டுகொள்ளாத பாஜக அரசு
தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் உத்தரவுகளையும் மீறி வன ஊழியர்கள் மற்றும் வாகனங்களை தேர்தல் பணிக்கு மாநில அரசு அனுப்பி உள்ளது. 13 மாவட்டங்களில் இருந்து வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சங்கி நீதிபதியின் ஒப்புதல் வாக்குமூலம்!
தற்போது அரசு கட்டமைப்பில் தனது வேலை முடிந்ததும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வேலைக்கு வேண்டுகோள் விடுக்கிறார், இந்த சங்கி நீதிபதி.
நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதமானது
ஊபா போன்ற கருப்பு சட்டங்களை ரத்து செய்யவும், ஏற்கெனவே இதுபோன்ற கருப்பு சட்டங்களால மோடி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை விடுவிக்கவும் களப்போராட்டங்களை கட்டியமைப்பதே தீர்வாக இருக்கும்.
சத்தீஸ்கர் போலி மோதல் கொலை: FACAM கண்டன அறிக்கை
இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் கங்கல்லூரில் 12 ஆதிவாசி கிராம மக்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதை கண்டிக்றோம்: நிறுவனமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான கருத்துக்களம் (FACAM)
அமித்ஷாவின் பேரணியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்!
கார்ப்பரேட் ஊடங்களுக்கு மாற்றாக மோடி ஆட்சியின் பாசிசத் தன்மைகளையும் உண்மை நிலவரங்களையும் துணிச்சலாக அம்பலப்படுத்திவரும் சுதந்திர ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து பாசிசத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
இந்தியாவில் மத கலவரத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க. | USCIRF 2024 அறிக்கை
உபா (UAPA), குடியுரிமை திருத்தச் சட்டம், மத மாற்றத்தை கட்டுப்படுத்தும் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம் மூலம் மத சிறுபான்மையினர்கள் கண்காணிக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்படுகிறார்கள்.