ஊபா (UAPA) : செயற்பாட்டாளர்களை செயலிழக்க செய்வதற்கு தான் || அருந்ததி ராய்
செயல்பாட்டாளர்கள் உடல்நலக்குறைவால் இறக்கும் வரை அல்லது வாழ்க்கை அழிக்கப்படும் வரை தொடர்ந்து சிறையில் அடைக்கத்தான் உபா சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டான்சுவாமி மரணத்திற்கு நீதி விசாரணை கோரும் சமூக செயற்பாட்டாளர்கள் !
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை)-இன் கீழ் என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் குர்லேகர் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் திறப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் செல்லும் வேதாந்தா : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?
ஆக்சிஜன் பற்றாக்குறையை காரணமாக முன் வைத்து ஸ்டெர்லைட் திறப்பை அன்று ஆதரித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று தாமாக முன் வந்து சட்டரீதியாகவும், களத்திலும் ஸ்டெர்லைட்டை எதிர்க்கப் போகிறார்களா ?
பெட்ரோல் விலை குறைக்க நிதி இல்லை – பூங்காக்களுக்கு ரூ. 2500 கோடி ஒதுக்கும் திமுக அரசு
மின்சாரம், விவசாயம் போன்ற பல்வேறு மக்கள் நலத்துறைகளில் நிதிப் பற்றாக்குறை இருக்கும் நிலையில், சென்னையை அழகு படுத்தும் திட்டத்திற்கு மட்டும் ரூ. 2500 கோடிபணம் ஒதுக்குவது ஏன் ?
பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடும் 37 தலைவர்களில் ஒருவர் மோடி !
சட்டரீதியான ஆயுதங்களை ஊடக சுதந்திரத்திற்கு எதிராகப் பயன்படுத்துகிறது மோடி அரசு. உதாரணமாக, தேசதுரோக வழக்கின் கீழ் வாழ்நாள் சிறைத் தண்டனை அபாயத்தோடு தான் பத்திரிகையாளர்கள் பணிபுரிகின்றனர்.
மருத்துவர் தினம் : மருத்துவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !
மருத்துவர் சுதாகர் ராவின் மரணம் ஒரு உதாரணம் மட்டுமே. இந்தியா முழுவதும் தமது உரிமைகளைக் கேட்ட மருத்துவர்கள் வெவ்வேறு அளவுகளில் மிரட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டனர். உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.
அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !
பல பத்தாண்டுகளாக எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 21 முதல் தின்சுகியா நகரில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாமிட்டு, சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை !
கடந்த 15 நாட்களில், 14,161 மாணவர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதில் 9,305 மாணவர்கள் தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்தவர்கள் என்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள்.
கூடங்குளம் : புதிய அணு உலைகளின் கட்டுமானத்தை தடை செய் !!
ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் அணு உலைகளே காலாவதியானவையாக, அடிக்கடி பழுதடையும் தன்மை உடையதாக இருக்கின்ற நிலையில், புதியதாக அணுவுலைகளை நிறுவுவது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும்
கனடா : மோடி அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து போராட்டம் !
பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை குறிவைக்கும் கொடுமையான சட்டங்களை நீக்க வேண்டும், சிறையில் உள்ள சமூக செயல்பாட்டாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்
வேலையின்மை : எதிர்காலத்தை பற்றி அச்சம்கொள்ளும் இளம் தலைமுறை !
நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10 சதவீதமும், மே மாதம் 35 சதவீதமும் குறைந்துள்ளது. வேலை குறிந்த நம்பிக்கையின்மை ஆண்-பெண் இருபாலருக்கும் அதிகரித்துள்ளது.
அம்பலமாகும் அடிமை அதிமுகவின் வேளாண்துறை ஊழல் முறைகேடுகள் !!
விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற எதுவும் செய்யாமல், விவசாயிகளின் பெயரில் போலியான தரவுகளை உருவாக்கி, கோடிக்கணக்கான பணத்தில் ஊழல் முறைகேடு செய்துள்ளது, முந்தைய அதிமுக அரசு
சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !
சிறிய துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கார்ப்பரேட்டுகளின் கையில் கொடுக்க விளைவதையும், ஆழ்கடல் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விடும் அயோக்கியத்தனத்தையும் மோடி அரசு நிறுத்த வேண்டும்,
ராம ஜென்மபூமி அறக்கட்டளை : தொடர்ந்து அம்பலமாகும் பல கோடி ஊழல் !
ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பெயரில் ராமர் கோயில் அமைய உள்ள இடத்தை சுற்றி இருக்கும் மக்களின் நிலங்களை வாங்குவதில் இடைத்தரகர்களை வைத்து ஊழலை நிகழ்த்துகிறது ஆர்.எஸ்.எஸ். - சங்க பரிவாரக் கும்பல்.
ரூ. 4.74 இலட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு : பெருமைப் பட முடியுமா ?
பெரும் இலாபத்தை அள்ளிச் செல்வலவே அந்நிய நிறுவனங்கள் நம் நாட்டில் மூலதனத்தைக் குவிக்கின்றனவே அன்றி, நமது கலாச்சார அழகில் மயங்கியோ அல்லது இந்தியாவின் ஏழ்மையைக் கண்டு வருந்தியோ அல்ல