Saturday, November 8, 2025

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

போர் நிறுத்த ஒப்பந்தம் அமலான பிறகு சுமார் 62 முறை இஸ்ரேல் ராணுவம் ஒப்பந்தத்தை மீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ம.பி: தலித் இளைஞரை அடித்தே கொன்ற கொடூரம்!

பஞ்சாயத்துத் தலைவரின் மகன் வயலில் வைத்து ஜாதவை அடித்ததுடன் பிறகு அவனுடைய கடைக்குள் இழுத்துச் சென்று ஷட்டறை மூடிக் கொண்டு கொலை வெறியுடன் அடித்துள்ளான்.

ஃபெஞ்சல் புயலின் தீவிரம்: காலநிலை நெருக்கடியின் விளைவு

ஃபெஞ்சல் புயல் காரணமாக குறுகிய நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டு புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட கடலோர டெல்டா மாவட்டங்களும், புயல் கரையைக் கடந்த பின்பு கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களும்...

மீண்டும் தொடங்கியது விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!

போலீசு அமைத்திருந்த தடுப்புகளையும் மீறி விவசாயிகள் தங்கள் கைகளில் விவசாயச் சங்கக் கொடிகளை ஏந்தியவாறு அங்குள்ள கண்டெய்னர் லாரிகள் மீது ஏறி தங்களின் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.

மின்சக்தி துறை கொள்கை முடிவுகளுக்கு கார்ப்பரேட்டுகளே பதில் சொல்லுங்கள் | PCPSPS கடிதம்

"நாட்டின் மின் நுகர்வோர்கள் அடைந்த மொத்த நட்டத்தொகையையும் மேலும் அதற்கான கூடுதல் தண்டத் தொகையையும் கணக்கிட்டு அதை அந்த நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். மேலும் அக்குற்றவாளிகள் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்".

புதுச்சேரியைப் புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல்

ஃபெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடந்தது. இப்புயல் காரணமாக புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. அங்கு 47 செ.மீ மழை பதிவாகி உள்ளதால், புதுச்சேரி வெள்ளக்காடாகக்...

அமேசான் நிறுவனத்தைத் திணறடித்த “பிளாக் ஃப்ரைடே” வேலை நிறுத்தப் போராட்டங்கள்

அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களிலும் பல்வேறு கிளைகளிலும் இந்த வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன. தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக இப்போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐயம் சாரி ஐயப்பா… ஆறு வருசமாச்சப்பா!

பாலிமர், தந்தி போன்ற ‘கோடி’ மீடியாக்கள், கிறிஸ்தவ நிறுவனங்களின் மேடையில் நின்று கொண்டு இந்த ஐயப்ப பாடலை பாடுவது போலச் சித்தரித்து வீடியோ வெளியிடுவது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.

குஜராத்: இந்துத்துவ மடமையை விதைக்கும் வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகம்

வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்து வரும் வினாத்தாள் கசிவைத் தடுக்க, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மற்றும் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் கட்ட ஜோதிடம் மூலம் ஆலோசனை செய்யப்பட்டள்ளது.

அமரன்: கண்ணீருக்குள் மூழ்கடிக்கப்படும் தேசப்பற்று!

காஷ்மீரில் நடக்கும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் தீவிரவாதம் என திரித்தும், இந்து முஸ்லீம் பிரிவினையை உண்டாக்கி முஸ்லீம்கள் நாட்டை துண்டாடுகிறார்கள் என்ற கடைந்தெடுத்த பொய்யைத் திட்டமிட்டுப் பரப்பி வரும் இந்திய ஆளும் வர்க்கத்தைத் திரைப்படம் தோலுரிக்காமல் அதன் மேல் தேசப்பற்று எனும் சாயம் பூசுகிறது.

இந்து மதத்தை இழிவுபடுத்துவது இசைவாணியா? இல்லை சனாதனமா?

"தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" குழுவால் உருவாக்கப்பட்டு பாடகி இசைவாணியால் பாடப்பட்ட "ஐயாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா" பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்கூறி சங்கிகள் கூச்சலிட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட...

மழைவெள்ள பாதிப்பில் டெல்டா மாவட்டங்கள்!

பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 54 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு உரிய இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் சென்ற ஆண்டு இயற்கை சீற்றங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கே போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து 2000 பேர் ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட உள்ள டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நவம்பர் 28 அன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய...

அண்மை பதிவுகள்