உத்தரப்பிரதேசம்: பட்டியல் சாதியினருக்கு எதிராக அதிக வன்கொடுமைகள் நடக்கும் மாநிலம்
முக்கியமாக பாசிசக் கும்பல் ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடைபெற்றுள்ளதாக அரசு அறிக்கையே கூறுகிறது.
ஆதவ் அர்ஜுனாவும் செல்வப் பெருந்தகையும் – இருவித அணுகுமுறைகள்
நீங்கள் உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். அவர்கள் திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். உங்கள் கோரிக்கையில் அல்லது உங்கள் ஆசையில் நியாயம் இருக்கிறது என்றால் அவர்கள் ஆசையிலும் நியாயம் இருக்கத்தானே வேண்டும்.
மகாராஷ்டிரா: மருத்துவ ஊழலில் ஈடுபட்டுள்ள மாஃபியா கும்பல்!
மருந்துப்பொருட்களில் கலப்படம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் மாஃபியா கும்பல்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் இது நடந்திருக்காது.
உ. பி: பள்ளியின் வளர்ச்சிக்காக நரபலி கொடுக்கப்பட்ட சிறுவன்
உறங்கிக் கொண்டிருந்த சிறுவனை விடுதிக்கு பின்புறம் உள்ள கிணற்றின் அருகே நரபலி கொடுத்துக் கொன்றுவிட்டு மீண்டும் சிறுவனின் உயிரற்ற உடலை விடுதியில் கொண்டு வந்து போட்டுள்ளனர்.
சென்னையில் இளம்பெண்ணை படுகொலை செய்து மூளையை வறுத்து தின்ற கொடூரம்!
மறுகாலனியாக்க கொள்கைகளைத் திட்டமிட்டே சமூகத்தில் பரப்பும் செய்தி ஊடகங்கள், ஆபாச சினிமா போன்றவற்றிற்கு எதிராகவும், இவற்றைத் தடுக்காமல் கட்டிக்காக்கும் அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலால் பரப்பப்படும் பார்ப்பனிய கொள்கையானது இயற்கையாகவே பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பதையே போதிக்கிறது. இந்நிலையில் போதைக் கலாச்சாரமும், பார்ப்பனிய கொள்கையும் இணைந்து பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
சீசிங் ராஜா, செந்தில் பாலாஜி: ஒரே ‘நீதி’யின் இரண்டு தண்டனைகள்
கொடிய ரவுடி என்பதால் ‘என்கவுண்டர்’ செய்யலாம் என்றால், பா.ஜ.க.வில் பாதி பேர் ‘என்கவுண்டரி’ல் கொல்லப்பட வேண்டியவர்கள். இதற்கு போலீசு தயாரா? ஊழல்வாதிகளையெல்லாம் சிறைவைப்பதென்றால், பா.ஜ.க.வின் முக்கால்வாசி தலைவர்களை சிறைவைக்க வேண்டியிருக்கும். இதற்கு அமலாக்கத்துறை தயாரா?
சீசிங் ராஜா படுகொலையின் மறுபக்கம்
பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக இருப்பவர்களும் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய ரவுடிகளும் கூலிப்படை தலைவர்களும் மட்டும் காப்பாற்றப்படுகிறார்கள். பா.ஜ.க.வைச் சேராத ரவுடிகள், பெரும் பணக்கார ரவுடிகளுக்கு எதிரியாக இருக்கக்கூடிய ரவுடிகள்தான் போலீசால் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
இஸ்ரேலின் நலனுக்காக 10,000 இந்தியர்களின் உயிரைப் பணையம் வைத்துள்ள பாசிச மோடி அரசு
ஏற்கெனவே, இஸ்ரேலுக்கு ஆயுத உபகரணங்களை வழங்கிவரும் பாசிச மோடி அரசு தற்போது உயிருக்கு அச்சுறுத்தலான சூழலில் பணிபுரிய இந்தியத் தொழிலாளர்களை தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பி வருகிறது.
உ. பி: இஸ்லாமிய உணவகங்கள் மீது வன்முறைக்கு வழிவகுக்கும் யோகி அரசு!
உ. பி யின் அனைத்து சாலையோரக் கடைகள், தாபாக்கள், சிறிய மற்றும் பெரிய உணவகங்களின் உரிமையாளர்கள், உணவகத்தில் வேலை செய்பவர்களின் பெயர்கள் அடங்கிய அட்டையினை கடைகளின் முன்பாக தொங்கவிட வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு” | கோவை – மேட்டுப்பாளையம் அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்
"இது வழக்கறிஞர்களுக்கான பிரச்சனை அல்ல அனைத்து மக்களுக்குமான பிரச்சனை. சட்டத்தின் ஆட்சியை ஒழித்துக்கட்டிவிட்டுச் சிறு கும்பலின் ஆட்சியை உருவாக்குவதே இக்கும்பலின் நோக்கம்."
காரணம் கேட்புக் குறிப்பாணை அனுப்பி தொழிலாளர்களை அச்சுறுத்தும் சாம்சங் நிறுவனம்
“நான்கு நாட்களுக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்; இல்லையெனில் காரணமின்றி நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சாம்சங் நிறுவனம் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தியுள்ளது.
லெபனான்: 500 பேரை படுகொலை செய்த போர்வெறி பிடித்த இஸ்ரேல்!
லெபனான் சுகாதார அமைச்சர் பிராஸ் அபியாட் கூறுகையில், “இஸ்ரேலின் ஏவுகணைகள் மருத்துவமனைகள், ஆம்புலன்சுகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறியவர்களைக் குறிவைத்துத் தாக்கியது” என்று தெரிவித்துள்ளார்.
அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் பாசிச இஸ்ரேல் அரசு
அல்ஜசீரா செய்தி நிறுவனம் தொடர்ந்து இஸ்ரேலின் இனவெறி நடவடிக்கைகளை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி வந்தது. இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் மீதான இனப்படுகொலையை மறைப்பதற்கு, இஸ்ரேல் அரசு தற்போது அல்ஜசீரா அலுவலகத்தை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பாசிசக் கும்பலை விரட்டி அடித்த ஹரியானா மக்கள்!
முதல்வர் சைனி தனது சொந்த தொகுதியான கர்னலின் லட்வா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஹரியானா மக்கள் “இங்கே எதற்கு வந்தீர்கள்” எனக் கேள்வி எழுப்பியதோடு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.