சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !
சூத்திரன் என அழைக்கப்படுவதை தவறாக நினைக்கக் கூடாது என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறும் நாட்டில், சிறைச்சாலைகள் மட்டும் சாதிய படிநிலைக்கு விதிவிலக்காகிவிடுமா என்ன ?
வரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா ?
மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்களை முடக்குவதிலும் ஒழித்துக் கட்டுவதிலும் ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதான் என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது !
கோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி !
கல்வி நிறுவனங்களை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் தங்களுடைய பாசிசக் கருத்துக்களை பரப்புவதற்கான தளமாக பயன்படுத்துவது என்பது பாசிஸ்டுகளின் செயல் வடிவங்களில் மிகவும் முக்கியமானதாகும்.
இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !
அரசியலிலிருந்து விலகி நிற்பவர்கள் நீதிக்காகப் போராடுபவர்களுடன் இல்லை, அநீதியை ஏற்படுத்துபவர்கள் பக்கம் இருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்தில் நடுநிலை வகிக்க எந்த வழியும் இல்லை.
மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் எல்கர் பரிஷத் வழக்கில் கைதான, 81 வயது செயல்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ், சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் வயோதிகம் காரணமாக சுயமாக முடிவுகள்...
சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !
பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களை இராம பக்தர்களாகவும், அத்வானி உள்ளிட்ட குற்றவாளிகளை மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க முனைந்த புனிதர்களாகவும் காட்டியிருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.
டானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் !
லவ் ஜிகாத் என்ற வார்த்தையே கேள்விப்பட்டிராத காலம் அது. முசுலீம் - இந்து திருமணங்கள் இயல்பாக நடந்தேறிய சூழல் இங்கு இருந்ததை தன் சொந்த அனுபவத்திலிருந்து விளக்குகிறார் பேராசிரியர் சமீனா தல்வாய்
டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?
விளம்பரத்தில் கூட இந்து முசுலீம் ஒற்றுமை என்பது ஒரு எதார்த்த அனுபவமாக, மக்களின் மனதில் பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறது சங்க பரிவாரக் கும்பல் !
குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !
மோடிக்கு அடுத்தபடியாக சங்க பரிவாரத்தின் இலட்சியத்தை நிறைவேற்றக்கூடிய சரியான ஆள் யோகி ஆதித்யநாத் மட்டும்தான். இனி இந்தியா முழுவதும் உ.பி. மாடல்தான் அமல்படுத்தப்படும் !
மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
என்.ஐ.ஏ கிளையை சென்னைக்குக் கொண்டு வருவதன் மூலம் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான தமிழகத்தின் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறது மோடி அரசு !
இன்றைய உத்தரப் பிரதேசம் தான் நாளைய ராம ராஜ்ஜியம் !
ஹத்ராஸ் பாலியல் வன்முறை சம்பவமும், குற்றவாளிகளுக்கு ஆதரவான யோகி அரசின் நடவடிக்கைகளும் தான் ராம ராஜ்ஜியத்தின் நிகழ்கால ‘மாடல்கள்’.
“ரேப்பிஸ்டு”களுக்காக போராடும் மனுவின் வாரிசுகள் || ஹத்ராஸ் பாலியல் வன்கொலை அவலம் !
ஹதராஸ் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட பெண்ணின் இறுதி வாக்குமூலத்தில் தன் மீது தாக்கூர் சாதிக் கிரிமினல்கள் நடத்திய பாலியல் வன்முறை குறித்து கூறியிருக்கிறார். அந்தக் கிரிமினல்களைக் காக்க சங்கிக் கும்பல் களமிறக்கப்பட்டுள்ளது.
ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
பார்ப்பன ஆணாதிக்க சமூகம், தனது சாதிய ஒடுக்குமுறைக்கான ஒரு ஆயுதமாக பாலியல் வன்முறையைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடுதான் தலித் இளம்பெண்கள் உள்ளக்கப்படும் இத்தகைய பாலியல் வன்கொலைகள் !
தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !
இந்து மதவெறி கலவரங்களுக்கு தமிழகத்தில் வித்திட்ட இந்து முன்னணியின் நிறுவனர் இராம கோபாலன், மக்கள் மன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே நிரந்தர பெயிலில் தப்பிச் சென்றுள்ளார்.
‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !
இந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும்