மணல் கடத்தலை முறியடித்த விவசாயிகள் விடுதலை முன்னணி !
வி.வி.மு. தோழர்கள் கடந்த 11.07.2013 அன்று மதிய வேளையில் 5 லாரிகளில் மணல் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்லும் செய்தி அறிந்து கூடலூரில் பொதுமக்களை திரட்டி 5 லாரிகளையும் மடக்கிப் பிடித்தனர்.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் : உணவைப் பிடுங்கும் பயங்கரவாதத் திட்டம் !
இவ்வளவு கொடிய சட்டத்தை நிறைவேற்ற பி.ஜே.பி,. சி.பி.ஜ., சி.பி.எம். உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும் காங்கிரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டன.
போலீசு சுவரொட்டியைக் கிழித்ததாம் ! சுவரொட்டியோ போலீசை கிழித்தது !
பா.ம.க.வின் வன்னிய சாதிவெறியை இளவரசனின் மரணம் திரைகிழித்தது என்றால், இளவரசனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒட்டிய சுவரொட்டி போலீசுக்குள் மறைந்துள்ள பா.ம.க.வினரை அடையாளம் காட்டியுள்ளது!
இளவரசன் வழக்கறிஞர்களை விடுவிக்க மறுப்பு !
வழக்குரைஞர் ரஜனிகாந்த், செங்கொடி உள்ளிட்ட அனைவரும் சேலம் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
நத்தம் காலனியில் போலீஸ் அடக்குமுறை ஆரம்பம் – வீடியோ !
திவ்யா, இளவரசனின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வக்கில்லாமல் இளவரசனின் உயிர்ப் பலியை வேடிக்கை பார்த்த அரசு இப்போது மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
ரேப் ஸ்வயம்சேவக் ராகவ்ஜி !
பாலியல் குறித்த நமது ரெடிமேடு, பிற்போக்கு சிந்தனைகளை ராகவ்ஜி அடித்து தகர்த்திருக்கிறார். அந்த வகையில் பின்நவீனத்துவவாதிகள் இவருக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள்.
வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய் !
இளவரசன் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்! ஆர்ப்பாட்டங்கள் !!
கல்விக் கொள்ளையில் ராமகிருஷ்ண தபோவனம் ! HRPC நடவடிக்கை !!
நூற்றுக்கும் மேற்பட்டோர் நம்பிக்கையோடு மாணவர்களின் கல்வியுரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினரானார்கள். நம் போராட்டத்தைத் தடுக்க வந்த பெல் செக்யூரிட்டிகளில் சிலரும் அச்சங்கத்தில் உறுப்பினரானார்கள்.
திவ்யாவை தருமபுரி எஸ்பியிடம் ஒப்படைத்து ஓடிய பாமக !
திவ்யா உண்மையை பேசினால் அது இளவரசனது மரணத்திற்கு பாமக சாதிவெறியர்கள்தான் காரணம் என்பதற்கு மற்றுமொரு சாட்சியமாக இருக்கும், அவர் தனது கணவனது மரணத்திற்கு காரணமாணவர்களை அப்படித்தான் தண்டிக்க முடியும்.
ராமதாஸ் கொடும்பாவி – பாமக கொடி எரிப்பு ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !!
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்! வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்! சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
இளவரசன் உடலை உடன் புதைக்க சதி !
இளவரசனது தந்தை இளங்கோ அவர்கள் தனது மகன் மரணத்திற்கு (அது கொலை அல்லது தற்கொலையாகவே இருந்தாலும்) மூல காரணம் என்று பாமக ராமதாஸ் உட்பட பிற தலைவர்கள் மீது புகார் அளித்திருக்கிறார்.
திவ்யாவை காப்பாற்றக் கோரி HRPC வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !
இளவரசன் மரணம் குறித்தும், திவ்யாவின் மீது சாதிய வாதிகளின் ஆதிக்கம் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திவ்யாவிற்கு உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
இளவரசனுக்கு நீதி கேட்டு தருமபுரியில் மக்கள் வெள்ளம் – படங்கள் !
தருமபுரி மருத்துவமனை முன்பு ஆயிரக் கணக்கான மக்கள் கூடி தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சரிதா நாயர் கும்பலின் 10,000 கோடி கேரள ஊழல் !
சூரியனையும், காற்றையும் வைத்தே சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை திரட்டி பட்டை நாமம் போட முடியுமென்றால் நிலம், கனிம வளம் போன்ற உடனடி பலன்களில் எவ்வளவு கொள்ளையடிப்பார்கள்!
பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !
தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யாவும் இளவரசனும் சாதி, சொத்து, அரசியல் என்று காதலை கொச்சைப்படுத்தும் பாமக கும்பலின் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கின்றனர்.












