தமிழகத்தில் அரசு சார்பில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற “அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் 206 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணிநியமனத்தை எதிர்பார்த்து பல்வேறு கட்ட சட்ட மற்றும் களப் போராட்டங்கள் நடத்திவந்த சூழலில், தற்போது தமிழக அளவில் இரண்டாவது நபராக மதுரை அர்ச்சக பாட சாலை மாணவர் தியாகராஜனுக்கு மதுரை நாகமலை புதுக்கோட்டை பிள்ளையார் கோவிலில் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளது. உரிய கல்வி, முறையான நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் தியாகராஜன் பணிநியமனம் பெற்றுள்ளார்.
ஆனால், இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது.
அர்ச்சகர் பயிற்சி முடித்திருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி நியமனம் பெற இயலாது உள்ள மாணவர்கள்.
பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்த பின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை.
அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரை அர்ச்சக பாடசாலை மாணவர் திரு. மாரிச்சாமி என்பவருக்கு மதுரை புதூர் அய்யப்பன் கோவிலில் பணி வழங்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தியாகராஜன் என்ற மதுரை பாடசாலை மாணவருக்கு மதுரை நாகமலை பிள்ளையார் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அர்ச்சகர் பணி வழங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது.
இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள சாதி – தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் தமிழக அரசு தயங்கித் தயங்கி, ஒவ்வொரு சாதிக்கும் தனிசுடுகாடு அமைத்துக் கொடுப்பது போல, தனியாக உள்ள சிறு கோவில்களில் பிராமணர் அல்லாத மற்ற சாதி மாணவர்களை பணி நியமனம் செய்கிறது. இதுவும் மொத்தமாக செய்யப்படுவதில்லை. நியமனம் செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு ஓய்வு பெறும் வரையில் பணி உயர்வு கிடையாது. பணி மாறுதல் கிடையாது.
சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம் என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. இப்பிரச்சனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும்.
பல்லாண்டுகளாக அனைவரும் போராடிப் பெற்ற அர்ச்சகர் பணி நியமன செய்தியைக்கூட மாணவர்கள் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமாற வேண்டும். எனவே, தமிழக அரசு இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த 200-க்கும் மேலான மாணவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை பணிநியமனம் வழங்க வேண்டும்.
பணிநியமன நிகழ்வு இந்துசமய அறைநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் விழாவாக நடைபெற வேண்டும். எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ – வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி, தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.
எனவே, தமிழக அரசிடம் !
எஞ்சிய 203 மாணவர்களுக்கும் உடனே பணி வழங்கு!
மூடப்பட்ட சைவ வைணவ அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும்
திறந்து நடத்து!
பெண்களையும் அர்ச்சகராக்கு!
என்று கோருகிறோம்.
இப்படிக்கு :
வழக்கறிஞர்.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு.
வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு.
இந்தியாவில் உள்ள சுரங்கங்களை வணிகமயமாக்குவது, அதிலும் குறிப்பாக நாட்டில் உள்ள 218 நிலக்கரி பிளாக்குகளில் 41 பிளாக்குகளை தனியாருக்கு கொடுப்பது, அதற்கு உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் ஆதிக்கம் புரியும் கார்ப்பரேட்டுகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பது, அவர்களின் மூலம் ஆண்டுக்கு 225 மில்லியன் டன் உற்பத்தி செய்வது, அதன் மூலம் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 250 மில்லியன் டன் நிலக்கரியின் அளவை ஈடு செய்வது (மூச்சு முட்டுகிறதா) என்று “ஆத்ம நிர்மான் பாரத்” கூச்சல் போடும் மோடி அறிவித்துள்ள திட்டம் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும், நிலவும் போலி ஜனநாயக அரசமைப்பின் தோல்விக்கும் துலக்கமான எடுத்துக்காட்டாகும்.
ஊரடங்கு காலத்தில் மக்களிடம் பெரிய அளவு எதிர்ப்பு ஏதுமின்றி கமுக்கமாக ஏலத்தை நடத்தி முடித்து விடலாம் என்ற நோக்கத்துடன் முதலில் ஜூன் 11ம் தேதியை ஏல நடப்பு தேதியாக அறிவித்தார் மோடி. ஆனால் அவரது எண்ணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணள்ளிப் போட்டு, முகத்தில் கரியை பூசி விட்டார்கள்!
இந்த ஏல தேதிக்கு முதல் நாளான ஜூன் 10ம் தேதியன்று அகில இந்திய அளவிலான போராட்டம் நடந்தது. நிலக்கரி சுரங்கங்கள் உள்ள 8 மாநிலங்களில் 535 சுரங்கங்களில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஒன்றரை லட்சம் பேர் ஒருநாள் போராட்டத்தில் குதித்தனர். இந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி CIL எனப்படும் கோல் இந்தியா லிமிடெட், SCCL எனப்படும் சிங்கரேணி கொலிரெஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்தச் செய்திகள் அனைத்தும் ஊடங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டது.
இந்த சூழலில் மோடி ஜூன் 11 ஏலத்தை ஒத்திப் போட்டு விட்டார். ஏலத்தில் கலந்து கொள்ள தயங்கிய எஜமானர்களின் மனங்குளிர பல சலுகைகளை அறிவித்து தாஜா செய்து மறு வாரமே, ஜூன் 18ல் இ- ஏலத்தை துவக்கினார் மோடி. பழங்குடி மக்களின் வாழ்வு மலரும், 2.8 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டு மின்னுற்பத்தி ஓகோ என உயரும் என்று வழக்கமாக சரடுகளை அள்ளிவிட்டார். ஆனால் இவற்றினால் சுரங்க தொழிலாளர்களை ஏமாற்ற முடியவில்லை.
ஜூன் 10ம் தேதி வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முடிந்தாலும், பின் வாங்காத மோடியின் திமிர்தனத்தை எதிர்த்து ஜூலை 2,3,4 என 3 நாட்கள் மீண்டும் சுரங்கத் தொழிலாளர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் 5.5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. இதில் மைய தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐசிசிடியு மற்றும் கங்காணி கூட்டமான ஆர்எஸ்எஸ்-சின் கீழ் செயல்படும் பிஎம்எஸ் என 5 மையசங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. அரசு பொதுத்துறை நிறுவனங்களான CIL மற்றும் SCCL நிலக்கரி நிறுவனங்கள்தான் நாட்டின் 92% நிலக்கரியை உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களும் இவற்றின் துணை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஒரே மாதத்திற்குள் அடுத்தடுத்து, நாடு தழுவிய லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பங்கேற்புடன் இரண்டு வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது. கொரானா கால ஊரடங்கு எதுவும் செல்லுபடியாகவில்லை.
நிலக்கரி சுரங்கங்களை பற்றி புரிந்து கொள்ள 1980ம் ஆண்டுகளில் வந்த காலா பத்தார் என்ற இந்தி படம் பார்த்தால் தனியார் சுரங்கம் எத்தனை கொடூரமான கொத்தடிமத்தனத்தைக் கொண்டது எனத் தெரியும். மிசா கால சாஸ்நல்லா சுரங்க விபத்தின் கோரம் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கு, தனியார் சுரங்க கோரங்கள் பற்றி தெரிந்திருக்கும். சமீபத்தில் வந்த அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆஃப் வாஸ்ஸிபூர்’ என்ற படமும் சுரங்கக் கொடூரங்களை மையப்படுத்தி வந்த படமே. இவற்றைப் பார்க்க முடியாதவர்கள் நம்மூர் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் கொத்தடிமைத்தனத்தை செய்திகளில் படித்திருக்கலாம் .
சங்கர் குகா நியோகி
உண்மையில் நிலக்கரி சுரங்க கொத்தடிமைத்தனம் என்பது மிகமிக கொடூரமானதும் அதில் நடக்கும் சுரண்டல் கொடுமை பூதாகரமானதுமாகும். இந்த சுரங்கத் தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடிய சங்கர் குகா நியோகி என்ற பிரபலமான தொழிற்சங்க தலைவர் படுகொலை செய்யப்பட்டது பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். அவரின் வழியில் சுரங்கத் தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடிய பெண் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் இன்று மோடியால் தன்னைக் கொல்ல சதி செய்ததாக பொய் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 100 விதமான கனிமங்கள் பூமியில் இருந்து வெட்டியெடுக்கப்படுகிறது. இந்தியாவில் 3100 சுரங்கங்கள் உள்ளதாகவும் அதில் 550 நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்க பயன்படுவதாகவும், மற்றவற்றில் 560 உலோக சுரங்கங்களாகவும், 1990 உலோகமல்லாத சுரங்கங்களாகவும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கவனியுங்கள்! அரசிடம் இது பற்றி துல்லியமான விவரம் கிடையாது.
1970-கள் வரை இந்த சுரங்கங்களில் சிலவற்றை தவிர பெரும்பாலானவை தனியாரிடமே இருந்தது. 1973ல் இந்திரா காந்தி பிரதமராயிருந்த போது நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. அதன் பிறகு 1993 ல் அதே காங்கிரசு அரசே அரசாணை மூலம் பல சட்ட திருத்தங்களைச் செய்து தனியாருக்கு தாரை வார்க்கத் தொடங்கியது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மேலும் தாராளமாக்கப்பட்டு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை எனக் கூறி இந்த நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன. பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த மன்மோகன் சிங் காலத்தில் நடந்த நிலக்கரி ஏல ஊழல்கள் ஊழல்களின் மகாராணி என்று அழைக்கப்பட்டது. சிஏஜி அறிக்கை மூலம் நாடு முழுதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘கோல்கேட்’ ஊழலின் பிரம்மாண்டம் 10.7 லட்சம் கோடி என்பதிலிருந்து நிலக்கரி சுரங்கம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதிலுள்ள யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் பராளுமன்றத்திற்கு அதே சிஏஜி அறிக்கை தந்தபோது ஊழலின் அளவு 1.82 லட்சம் கோடி என சுருங்கிப் போனது பற்றி எதிர்க்கட்சியான பா.ஜ.ககூட கேள்வி எழுப்பவில்லை. ஆனால் பா.ஜ.கவின் பினாமியான ஊழல் எதிர்ப்புக் கோமாளி அன்னா ஹசாரே போராட்டத்தை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க கும்பல்.
இப்போது தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மிகவும் துணிச்சலாக இந்த ‘டோல்கேட்’ ஊழலையே சட்டப்படி செய்யத் தொடங்கியுள்ளது. சந்தேகமிருப்பவர்களுக்கு மோடியின் வீடியோ கான்பரன்சில் பங்கேற்றவர்களின் பெயரைப் பாருங்கள் – இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் சங்கமான ஃபிக்கி (FICCI)-யின் தலைவர், வேதாந்தா, டாடா சன் குழுமம்… என நீள்கிறது. இதிலும் சந்தேகமிருப்பின் அவர்கள் கூறியதைக் கேளுங்கள்: “5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் மிகப்பெரும் அடிவைப்பு இது” – என்கிறது டாடா சன் குழுமம். ”இது வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்தம்” “நாட்டின் கனிம வளங்களைத் திறந்துவிட்டு, பொருளாதாரத்தைத் தூண்டி விடுவதோடு, 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதற்கான கிரியா ஊக்கியாக இது அமையும்” – என்கிறார் ஃபிக்கி தலைவர்.
மன்மோகன் சிங் ‘கோல்கேட்’ ஊழலில் 100 நிலக்கரி தொகுதிகள் டாடா, ஜிண்டால், பிர்லா, எஸ்ஸார், அதானி, லான்கோ……..என பலருக்கும் ஒதுக்கப்பட்டதை நினைவில் கொண்டு தற்போது ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளின் நிலைமை என்ன ஆகும், யாரிடம் போகும் என்பதை எண்ணிப் பாருங்கள்!
பாரடா சுரங்கத்தின் பரப்பை! கேளடா அதன் கதையை!
1971 முதல் கட்டமாகவும் 1973ல் இரண்டாம் கட்டமாகவும் சுரங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்டது. இந்த சுரங்கங்களின் மூலம் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்தியாவின் தேசிய வருவாயில் சுரங்கத் துறை ஆண்டுக்கு 2.4% முதல் 2.7% வரை பங்களிப்பு செலுத்துகிறது. இதிலும் குறிப்பாக நிலக்கரி சுரங்கங்களின் மூலம் 2020 மார்ச் முடிய இருந்த முதல் காலாண்டில் 6,024 கோடி லாபம் கிடைத்துள்ளது. பொதுத்துறையான கோல் இண்டியா நிறுவனம் இதில் முக்கிய பங்களிக்கிறது. கோல் இண்டியா நிறுவனம் 2019ல் 607 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தையும் நமது ‘தேச பக்தி’ கும்பல் மறைத்து நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவு அடைய தனியார் முதலீடு அவசியம் என்று சுதேசி பஜனை புரிகிறது. அதுமட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும், அதற்கு தேவையான நிலக்கரி உற்பத்திக்கும் தனியார் தான் ’ஆபத்பாந்தவன், அனாத ரட்சகன்’ எனவும் சதிராடுகிறது.
இந்த சதிராட்டங்களின் பின்னே முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார காரணம் உள்ளது. அதை போராடும் தொழிசங்கங்கள் பார்க்க மறுக்கின்றனர். 1990 களில் உலகளாவிய வலைப்பின்னலை ஏற்படுத்தியிருந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களின் உற்பத்தி வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் மூன்றாம் உலகநாடுகளில் இருந்து இயற்கை வளங்கள் ஏராளமான அளவு ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவை எழுந்தது. அதற்கு வழி செய்யும் வகையிலேயே புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயம் தாராளமயம் உலகமயம் போன்றவற்றை வலியுறுத்திய காட் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் அமைந்திருந்தன. இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் அதுவரை அரசுடமையாக்கப்பட்டிருந்த பல்வேறு பொதுத் துறைகளின் விதிகள் தளர்த்தப்பட்டு தனியார் மூலதனம் நுழைவதற்கு வழியேற்படுத்தப் பட்டது. அந்த வழியில் தான் இப்போது பட்டவர்தனமாக 33,000 கோடி முதலீடு அதுவும் 100% அன்னிய முதலீடு அவசியம், அதன் மூலமே சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைக்க முடியும். இதற்காகவே சர்வதேச டெண்டர் என்றெல்லாம் நியாயப்படுத்துகிறது மோடி கும்பல்.
ஆனால் மின்சாரத் தேவைகள் பற்றிய களநிலைமைகள் இன்று மாறி விட்டது எனக் கூறுகிறார் அரசு நிறுவனமான தேசிய காணுயிர் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், சத்புதா பவுண்டேசன் என்ற சுற்றுச் சூழல் அமைப்பின் நிறுவனருமான கிஷோர் ரித் என்பவர். 2012ம் ஆண்டில் மின்சார தேவையானது உற்பத்தியை விட அதிகமிருந்தது. அதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் தனியார் பலரும் மின்னுற்பத்தி செய்ய அனுமதி கோரினர். பெரும்பாலும் அனல் மின் நிலையங்கள் என்பதால் நிலக்கரி பயன்பாடும் அதிகரித்தது. ஆனால் இன்று மாற்று எரிசக்தி கொண்டு மின் உற்பத்தி செய்ய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராகி விட்டது. இந்த நேரத்தில் காலாவதியாகிப் போன முறையில் மின் உற்பத்தியில் இறங்கினால் லாபம் கொழிக்க முடியாது என்று கைவிட்டு விட்டனர். அதுமட்டுமின்றி 2020 மார்ச் 24ம் தேதிய நிலவரப்படி மின்தேவை 40% ஆக வீழ்ந்து விட்டது. இதனால் தான் அரசு எதிர்பார்த்த அளவு நிலக்கரி சுரங்கத் தொகுதி ஏலத்திற்கு பெரியளவு தனியார் முதலாளிகள் வரவில்லை. இந்த கொரோனா காலத்தில் முதலீடு செய்ய லாப உத்திரவாதம் உள்ள துறைகளையே கார்ப்பரேட்டுகள் தேடியலைகிறது என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
’சுரங்க அனுபவம் இல்லாதவர்களும் டெண்டரில் பங்கேற்கலாம்; லாபம் உடனடியாக கிடைக்கும் வகையில் தயார் நிலையில் உள்ள சுரங்கங்களை ஏலம் விடுகிறோம்; என CILன் சொந்த அமைப்பான மத்திய சுரங்க திட்டம் & வடிவமைப்பு நிறுவனத்தை தனித்து, சுயேச்சையாக செயல்பட சட்டத்தில் திருத்தம் செய்ததன் மூலம் சுரங்க மற்றும் நிலக்கரி உற்பத்தியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு இந்நிறுவனம் உதவும் என்று வேறு அறிவித்துள்ளனர். கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடும் வகையில் சுரங்க சட்டங்களில் 1992 முதல் செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றி சில விவரங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்
“நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டம் 1972-73-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படுகிறது. அதன் பின் சுமார் இருபதாண்டுகளுக்கு அச்சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. ஜூலை 1992-ம் ஆண்டு நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. இக்கமிட்டியின் வேலை என்னவென்றால், தனியார்களுக்கு நிலக்கரிச் சுரங்க உரிமையை தாரை வார்ப்பது எப்படி என்று அரசுக்கு வழிகாட்டுவது தான். இக்கமிட்டி, 143 நிலக்கரித் தொகுப்புகளை (coal blocks) இதற்காக அடையாளம் கண்டது.
அதைத் தொடர்ந்து தேசிய நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தில் ஜூன் மாதம் 1993-ம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, சக்தி உற்பத்தி (மின்சாரம்) மற்றும் நிலக்கரியை மூலப் பொருளாகக் கொண்ட பிற தொழில்களில் ஈடுபடும் தனியார் கம்பெனிகள் நிலக்கரியை வெட்டியெடுக்கலாம் என்பது சேர்க்கப்படுகிறது. பின்னர் 1996-ம் ஆண்டு மீண்டும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு சிமெண்டு கம்பெனிகளும் நிலக்கரியை வெட்டியெடுத்துக் கொள்ள வகை செய்யப்படுகிறது. இப்படி படிப்படியான சட்ட திருத்தங்கள் மூலம் நாட்டின் அரியவகை இயற்கை வளமான நிலக்கரி தனியார்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது.
93-ல் துவங்கி 2010 காலகட்டம் வரை சுமார் ஐந்து முறை சுரங்கச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 2006-ம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கத்தில் நூறு சதவீதம் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வகை செய்யும் சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டு விட்டது.” (ஜூலை 5, 2012 வினவு-லிருந்து)
இப்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள திருத்தம் முழுக்க சுரங்கத்தில் 100% அன்னிய முதலீட்டுக்கு தடையற்ற அனுமதி மற்றும் உற்பத்தியை வணிக நோக்கில் பயன்படுத்த அனுமதி என ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தான் தேசத் துரோகம் என போராடும் நிலக்கரி சுரங்க சங்கங்கள் எதிர்க்கின்றன. இல்லை இது வளர்ச்சிக்கானது என மத்திய அரசு கூறுகிறது. யாருடைய வளர்ச்சி? கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி!
சட்டம் அதன் கடமையை செய்யாது! அரசியல் போராட்டமே விடிவை தரும்!!
இந்த சுரங்க ஏலங்களை எதிர்த்து சட்டப்பூர்வ வாய்ப்புகளை பயன்படுத்தலாமே என சில அறிவாளிகள் போதிக்கின்றனர். அவர்கள் கூறுவதைப் போல சில மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்துள்ளனர். பெரும்பான்மையாக ஆதிவாசி மக்கள் வாழும் ஜார்கண்ட் மாநில அரசு உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் முதல் பாயிண்ட்டாக ‘எல்லா அரசியல் சட்ட விதிகளுக்கு எதிராக, பரந்த நிலப்பரப்பில் சுரங்க நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்து, இயற்கை, மக்களின் வாழ்வை தாராளமாக சூறையடிக் கொழுக்க கார்ப்பரேட்டுகளுக்கு தாராள அனுமதியளிக்கிறது இந்த ஏல அறிவிப்பு’ என்கிறது அதன் நீதிமன்ற மனு.
மேலும் முக்கியமாக அரசியல் சட்டத்தில் வரையறுத்துள்ள “ஷெட்யூல்ட் பகுதி”, வரம்புகள், மாநில உரிமைகள், பழங்குடி மக்களின் உரிமை, அடர்ந்த வனப்பகுதி, நிலச் சீர்திருத்த சட்ட விதிகள், தேசிய விலங்கான புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் வாழும் பகுதி என பல அம்சங்களின் அடிப்படையில் இந்த ஏல நடவடிக்கையின் சட்ட விரோத தன்மைகளை எதிர்த்து மனு செய்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு. ஏறக்குறைய இதே போன்ற வாதங்களை முன்வைத்து மகாராட்டிர மாநிலம், மபி, சட்டிஸ்கர் என மாநிலங்கள் எதிர்த்து வழக்குகளைத் தொடுத்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதையையும், மின் உற்பத்தி கார்ப்பரேட் நிறுவனங்களான ரிலையன்சு, அதானி பவர் உள்ளிட்ட கொள்ளைக் கூட்டத்தை பாதுகாப்பதையும், வோடஃபோன், ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சார்பான தீர்ப்புகளையும் பார்க்கும் போது நமக்கு நம்பிக்கையில்லை.
மக்களின் போராட்டங்களை கண்டு சிறிதும் பின் வாங்காத மோடி ஏல நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை. ஜூன் 18ம் தேதி ஏலம் நடப்பதற்கான துவக்கம் பற்றி அறிவிக்கப்பட்டது. ஏலம் முடியவில்லை. ஏனென்றால் அப்போதும் அரசு எதிர்பார்த்த அளவு ஏலதாரர்கள் வரவில்லை. எனவே தனது கார்ப்பரேட் சேவையில் சிறிது மனம் தளராத மோடி ஆகஸ்டிலிருந்து ஏலம் விடப்படும் என அறிவித்துள்ளார்..
நிலத்தடி நீர் அரசுக்குச் சொந்தம் என விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என சட்டம் போட்டுள்ள இந்த அரசுதான், நிலத்திற்குக் கீழே உள்ள கனிம வளங்கள் அரசுக்குச் சொந்தம் என்ற அடிப்படை அரசியல் சட்டத்தைத் திருத்தி, அந்த கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்த்ததோடு, அதை தனது லாபமிக்க வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம் என கூவிக் கூவி நாட்டையே விற்கிறது. தேசபக்தி, சுய சார்பு பொருளாதாரம் போன்ற பித்தலாட்டங்களுக்கு முடிவு கட்டாமல் சுரங்கங்களை மட்டுமல்ல நாட்டையும் காப்பாற்ற முடியாது!
இதற்கு வழக்கமான சட்ட பூர்வ போராட்டங்கள், மொட்டை மாடி, அட்டை ஏந்தி போராட்டம், போலீசு அனுமதியுடன் அடையாளப் போராட்டம் போன்றவை உதவாது. ஸ்பெயினில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் போராடியதைப் போல போர்க்குணமுடன் போராடுவதும் சுரங்க தொழிலாளர்களின் போராட்டத்தை இதர பிரிவு பொதுத்துறை தொழிலாளர்களின் போராட்டத்துடன் இணைப்பதும், அரசியல் ரீதியாக நாட்டை மறுகாலனியாக்காதே! என போர்க் குரலுடன் வீதிக்கு வந்து போராடுவதும் காலத்தின் கட்டாயமாகும். தொழிற்சங்கங்களின் பணி குறுகிய பொருளாதாரவாத அணுகுமுறையில் இருந்து விடுபட்டு நாட்டையும் மக்களையும் காக்கும் போராக மாற வேண்டும்.
சிறையில் இருக்கும் தோழர் வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற பின்னரும் அவருக்கு முறையான மருத்துவ வசதியை ஏற்பாடு செய்ய மறுத்து வருகின்றன மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள். மோசமாகி வரும் தோழர் வரவர ராவின் உடல்நிலை குறித்து கடந்த சனிக்கிழமை (11.07.2020) அன்று அவரது குடும்பத்தினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பீமா கொரேகான் கலவரம் தொடர்பான சதி வழக்கின் கீழ் 11 சமூகச் செயற்பாட்டாளர்கள் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கவிஞரும் புரட்சிகர எழுத்தாளருமான தோழர் வரவர ராவ், புனையப்பட்ட பொய்க் கதைகளின் அடிப்படையில் ஜூன் – 2018-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் துவங்கிய நிலையில், மும்பை கொரோனா பாதிப்பின் மையப் புள்ளியாக இருக்கும் சூழலில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) தோழர் வரவர ராவை மும்பை தலோஜா சிறையிலடைத்தது.
விசாரணை என்ற பெயரில் கடந்த 22 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரவர ராவை, அவரது உடல்நிலை, கோவிட்-19 தொற்று மற்றும் வயதைக் கணக்கில் கொண்டு பிணையில் விடுமாறு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நீதிமன்றத்தில் முறையிட்டு வருகின்றனர். ஆனால் 5 முறையும் அவரது பிணைக்கு என்.ஐ.ஏ எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அவரது பிணையை மறுத்துள்ளது நீதிமன்றம்.
கடந்த மே 28-ம் தேதி தோழர் வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்து கீழே விழுந்த சூழலில் அவரை மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் சேர்த்தது சிறை நிர்வாகம். அவரது உறவினர்களையோ தோழர்களையோ அவரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அவரது உடல்நிலையை சுட்டிக் காட்டி அவருக்கு பிணை வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்ததை அடுத்து, அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது என்று கூறி மீண்டும் அவரை சிறையில் அடைத்தது போலீசு.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில், தோழர் வரவர ராவ் மற்றும் சிறையில் உள்ள பிற சமூகச் செயற்பாட்டாளர்கள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் மோடி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விசிக, திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதமெழுதியிருக்கின்றனர்.
இ.க.க (மார்க்சிஸ்ட்)-யைச் சேர்ந்த தோழர் பிருந்தா காரத், வரவர ராவ் உட்பட பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இவை எதையும் கருத்தில் கொள்ளாமல், அவரை சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிப்பதாக தேசிய புலனாய்வு முகமை கூறியது. இச்சூழலில்தான் வரவர ராவின் உடல்நிலை மேலும் மோசமாகியிருக்கிறது. கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று தொலைபேசி மூலம் தோழர் வரவர ராவுடன் பேசிய அவரது குடும்பத்தாருடன் அவரால் தெளிவாகவும், கோர்வையாகவும் பேச முடியவில்லை. இது குறித்து கடந்த ஜூலை 11-ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய அவரது குடும்பத்தினர், தோழர் வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், அவரது செயல்பாடுகள் மிகவும் சுருங்கிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவரது துணைவியார், தன்னுடன் வரவர ராவ் தொலைபேசியில் பேசுகையில் கோர்வையற்று அவர் பேசியதைச் சுட்டிக்காட்டி, கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர், நடந்த தனது தந்தை ஈமக் கிரியை மற்றும் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தனது தாயாரின் ஈமக் கிரியை பற்றி சம்பந்தமில்லாமல் அவர் பேசியதாகவும் கூறுகிறார்.
மேலும், அவரது பேச்சு தெளிவற்று கோர்வையற்று இருப்பதற்கு, அவரது உடலில் ஏற்பட்டுள்ள எலெக்ட்ரோலைட் சமமின்மை மற்றும் சோடியம், பொட்டாசியம் அளவில் ஏற்பட்டுள்ள குறைபாடு ஆகியவையே காரணம் என்றார். சோடியம், பொட்டாசியம் அளவுகளின் குறைபாடு மூளையை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவரை உடனடியாக சிறையில் இருந்து பிணையில் விடுவித்து சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் தரவேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறையில் அவரை அருகில் இருந்து பார்த்துக் கொண்ட சக போராளியான கான்சால்வேஸ் வரவர ராவால் தனியாக நடக்கவோ, கழிவறைக்குச் செல்லவோ, அல்லது பல் தேய்க்கவோ முடியாத நிலையில் இருக்கிறார் என்று கூறியிருப்பதையும் அவரது குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தீவிரமான கணைய ஒவ்வாமை, இருதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் தோழர் வரவர ராவ் கொரோனாவால் எளிதாகத் தாக்கப்படும் நிலையில் இருக்கிறார். இந்தச் சூழலிலும் அவரை சிறையில் இருந்து பிணையில் விடுவிக்காமல் இருப்பது அவரை நேரடியாகக் கொலை செய்வதற்குச் சமமானது.
தண்டனை பெற்ற சிறைக் கைதியே ஆனாலும் உயிர் வாழும் உரிமை ஒவ்வொரு நபருக்கும் உண்டு. அதை இந்திய அரசியல் சாசன சட்டம் உறுதிபடுத்தியிருக்கிறது. ஆனால், கடந்த 22 மாதங்களாக (கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக) இட்டுக்கட்டப்பட்ட ஒரு வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையிலடைக்கப்பட்டு அடிப்படை மருத்துவ வசதிகளும் மறுக்கப்பட்டு வருவது வக்கிரத்தின் உச்சமாகும்.
பாசிசமயமாகியிருக்கும் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பில் நீதிமன்றம் உள்ளிட்டு அனைத்தும் தமது வக்கிர முகத்தை அப்பட்டமாகக் காட்டிக் கொண்டு நிற்கின்றன.
மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக இன்று நாம் குரல் கொடுக்கத் தவறுவது பாசிசத்தை அரவணைத்துக் கொள்வதற்குச் சற்றும் குறைவில்லாதது. பாசிசத்திற்கு எதிராக பெருங்குரல் கொடுப்போம் ! சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு துணை நிற்போம்!
ஆப்பிரிக்க-அமெரிக்கரும், ஐந்து குழந்தைகளின் தந்தையுமான 46 வயது ஜார்ஜ் பிளாய்ட், கடந்த மே 25 அன்று அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகர வெள்ளையின போலீஸ் அதிகாரி டெர்க் சௌவின்னால் 8 நிமிடங்கள், 46 விநாடிகளுக்கு கழுத்தின் மீது முழங்காலிட்டு அழுத்திக் கொல்லப்பட்டார். பிளாய்ட் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியானதும் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. அமெரிக்காவில் எப்போதெல்லாம் இனக்கலவரங்கள் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் டாக்டர் மார்டின் லூதர்கிங்கின் வார்த்தைகள் அடிக்கடி எதிரொலிக்கின்றன.
டாக்டர் மார்டின் லூதர் கிங்
“கலகங்கள்தான் புறக்கணிக்கப்பட்டவர்களின் மொழி” என்பது டாக்டர் மார்டின் லூதர் கிங்கின் வார்த்தை. பகலில் அமைதியாக நடக்கும் அணிவகுப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், இரவில் மட்டும் ஏன் வன்முறை வெறியாட்டங்களாக, பொதுச் சொத்தை சூறையாடுவதாக இருக்கின்றது என்பதை வெளிக்காட்ட முயற்சிக்கும் பண்டிதர்களால் மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சூழலுக்குப் பெருமளவில் பொருத்தமில்லாத போதும், மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்படுவதற்கு சரியாக 7 மாதங்களுக்கு முன்பு, 1967-ம் ஆண்டு வாசிங்டனில் உள்ள அமெரிக்க உளவியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய உரை முக்கியமானது. அங்கு அவரது உரையில். “வெள்ளை அமெரிக்கா தனது ஆன்மாவிலேயே இனவெறியால் நஞ்சூட்டப்பட்டுள்ளதை அது புரிந்துகொள்ள வேண்டும். அந்த புரிதல்கள் கவனமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும், அதன் தொடர்ச்சியாக இதை நிராகரிப்பது மிகக் கடினம்” என்று கூறினார்.
மேலும் “நீக்ரோ வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பற்றி துளியும் அறிவற்றவர்களாக வெள்ளை அமெரிக்கர்கள் உள்ளனர் என்பதை, உள்ளபடியே வெள்ளை அமெரிக்கர்களிடம் சமூக விஞ்ஞானிகள் எடுத்துரைக்க வேண்டுமென நீக்ரோக்கள் விரும்புகிறார்கள்” என்று தனது பார்வையாளர்கள் மத்தியில் அறைகூவல் விடுத்தார் மார்ட்டின் லூதர் கிங்.
கோவிட் 19 பரவலால், மூன்று மாத ஊரடங்கிலிருந்து அமெரிக்கா மீண்டு வரும் சூழலில், கவனத்தைச் சிதறடிக்க விளையாட்டோ, வேறு எதுவுமோ தொலைக்காட்சியில் இல்லாத நிலையில், இதுவரை அமெரிக்க போலீஸ் வரலாற்றில் இல்லாதபடி வீடியோவாக பதிவு செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டக்கூடிய, சீர்கேடான மற்றும் மனிதத் தன்மையற்ற கொலைவெறித் தாக்குதலை போலீசு பயன்படுத்தியதைப் பற்றி நாடு முழுவதும் மக்கள் மத்தியில் விவாதம் நடந்தது.
17 வயது டார்னெலா ஃப்ரேசரால் தனது செல்போன் மூலம் கவனமாக ஆவணப்படுத்தப்பட்ட பிளாய்ட் கொலைக் காட்சியானது, அமெரிக்கா தோன்றியதிலிருந்து கறுப்பின மற்றும் இதர நிற மக்கள் இடித்துரைத்து வந்த, தங்கள் மீதான அரசால் அனுமதிக்கப்பட்ட இனவெறி வன்முறையின் எதார்த்தத்தை சாரமாக வெள்ளையின அமெரிக்காவிற்கு அம்பலப்படுத்தியது. கடந்த நான்கு மாத காலங்களில், (பிப்,2020 – மே,2020) வெள்ளையினப் போலீசால் கொல்லப்பட்ட நிராயுதபாணியான கருப்பினத்தவர்களில் பிளாய்ட் மூன்றாவது நபர்.
இதற்கு முன்னர், ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பிரன்சுவிக் நகரில், ஒரு முன்னாள் சட்ட அமலாக்க அதிகாரியும் அவரது மகனும் மற்றொரு வெள்ளையினத்தவரும் சேர்ந்து தமது புதிய குடியிருப்பிப் பகுதிக்கு அருகே ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க-அமெரிக்கரான 25 வயது அகமது ஆர்பெரியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
மற்றொரு சம்பவத்தில், இன்னொருவர், மிஸ்ஸோரி மாகாணத்தின், செயிண்ட் லூயிஸில் வசிக்கும் அவசரகால மருத்துவ தொழில்நுட்பவியலாளரான 26 வயது பிரியோனா டெய்லர் தனது படுக்கையில் இருந்த நிலையிலேயே இரகசிய போதைப் பொருள் துப்பறிவாளர்களால் 8 முறை சுடப்பட்டு உயிரிழந்தார். ஏற்கனவே போலீஸ் காவலில் இருந்த சந்தேகத்துக்கிடமான ஒரு நபரின் வீட்டில் முன்னறிவிப்பற்ற தேடுதல் ஆணையை (no-knock search warrant) நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தவறான வீட்டிற்குள் நுழைந்திருக்கின்றனர்.
அடிமைமுறை முதல் ஜிம் க்ரோ சட்டங்கள் (Jim Crow), சிவில் உரிமைகள் / கருப்பின இயக்கங்கள் வழியாக போதைப் பொருள்கள் மீதான போர் மற்றும் தற்போதைய பெருமளவிலான சிறைவைப்பு காலகட்டம் வரையிலான அமெரிக்காவின் நீண்ட கொடூரமான கருப்பின மக்கள் மீதான தாக்குதல் வரலாற்றில், இந்த சமீபத்திய கொலைகள் புதியதாக சேர்ந்திருக்கின்றன.
முதன்முதலாக ஆப்பிரிக்கர்கள் அமெரிக்கக் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்ட 1619-ம் ஆண்டு முதல் 1968-ம் ஆண்டு வரையிலான 349 ஆண்டு காலத்தில், கருப்பின மக்கள் தங்கள் முழுமையான குடியுரிமை உரிமைகளை கொள்கையளவில் 1968-ம் ஆண்டுதான் சமத்துவ வீட்டு வசதிச் சட்டத்தின் (Fair Housing act) மூலம் பெற்றனர். நவீன சிவில் உரிமைகள் சட்டம், அதாவது சிவில் உரிமைகள் சட்டம் 1964 மற்றும் ஓட்டு உரிமைச் சட்டம் 1965 ஆகியவற்றை இயற்றியதன் உச்சமாகவே இச்சட்டம் இயற்றப்பட்டது. இன ஒடுக்குமுறையை நசுக்குவதாக வரையறுக்கப்படும் தற்போதைய அமெரிக்காவில் கருப்பின மக்களின் 401 ஆண்டுகால (1618 – 2020) அனுபவத்தின் 87%-த்தை (1964 வரை) இந்தச் சட்டம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஆகவே கடந்த 56 ஆண்டுகளில் மட்டும்தான், இந்த எழுத்தாளரின் வாழ்நாளுக்குட்பட்ட காலகட்டத்தில்தான் அமெரிக்கக் குடியுரிமையிலிருந்து உரிமைகளும், சுதந்திரமும் ஆப்பிரிக்க–அமெரிக்கர்களுக்கு வெளிப்பகட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அமெரிக்காவிலிருக்கும் கருப்பின மக்களின் மீதான கொடூரக் கொலைகள் தடையின்றி தொடர்கின்றன.
எவ்வாறாயினும், இதற்கு முன்னர் பெரும்பாலான அமெரிக்க மாகாணங்களில் உள்ள தற்காப்புச் சட்டங்கள் அனுமதித்துள்ள (Stand–Your-Ground law) சரத்துகளின் படி, வெள்ளையினப் போலீஸ் மற்றும் வெள்ளையின குண்டர்களால் தற்காப்பு என்ற பெயரால் கொல்லப்பட்ட நிராயுதபாணி கருப்பினத்தவர்களின் மரணங்கள் நிகழ்ந்த தருணங்களைவிட தற்போதைய தருணம் வெளிப்படையாகவே மாறுபட்டதாக இருக்கிறது. கடந்த காலங்களில், குறிப்பாக 1960-களின் பிற்பகுதியில், நிராயுதபாணியான கருப்பினத்தவர்கள் கொல்லப்பட்டதையடுத்து நடந்த கலவரங்கள் மற்றும் போராட்டங்களில் கருப்பினத்தவர்களே முதன்மையாகப் பங்கேற்ற நிலையில், இந்தமுறை வித்தியாசத்தை உணர முடிகிறது. ஜார்ஜ் பிளாய்டின் மரணத்திற்குப் பிறகு, 64% வெள்ளையினத்தவர்களும், 19% கருப்பினத்தவர்களும் வாழும் மின்னபொலிஸ் நகரின் வீதிகளில் களமிறங்கிய அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள், கிளர்ச்சியாளர்கள் மற்றும் சூறையாடியவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் பல்வேறு பின்னணியிலிருந்து வந்த பல்வேறு இனத்தைச் சேர்ந்த கலவையான மக்களே ஆகும்.
இந்தமுறை, அமெரிக்காவின் பன்முகத்தன்மையை மிக நெருக்கமாக பிரதிபிம்பப்படுத்தும் விதமாக போரட்டக்காரர்களும் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறார்கள். போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அமெரிக்காவின் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்குப் பரவிவரும் நிலையில் அங்கிருந்து வெளிவரும் புகைப்படங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
போராட்டங்கள் அமெரிக்கா முழுவதும் மற்றும் தற்போது உலகம் முழுவதும் தொடரும் நிலையில், வெள்ளையின நடுத்தரவர்க்கத்தினர் வாழும் சிறு நகர்ப்புற, கிராமப்புறப் பகுதிகளில் வெள்ளையின போராட்டக்காரர்கள் “கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” (Black Lives Matter) என்ற பதாகைகளை ஏந்தியபடி போராட்டங்களில் கலந்து கொள்வது, இந்தமுறை முந்தைய நிலையை விட வேறுபட்டது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பினும். கோரிக்கைகள் என்னவோ அவற்றின் அடிப்படைஅம்சத்தில், பல தலைமுறைகளாக கருப்பின மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாகவே இருக்கின்றன. அவையும் கூட வேறுபட்டவையே. ஒவ்வொரு விசயத்திலும், வெள்ளையின உயிருக்கும், பிறவற்றுக்கும் மதிப்பளிக்கும் அளவிற்கு கறுப்பின உயிருக்கும் சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கைகளின் அடிப்படையாக இருக்கிறது. அமெரிக்காவில் தற்போதுவரை 401 ஆண்டுகாலத்தில் சுதந்திரத்திற்காகவும், இன சமத்துவம் மற்றும் நீதிக்காகவும் நடைபெற்ற இரத்தம் தோய்ந்த போராட்டத்தின் சாரம்சத்தை “கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” என்ற ஒற்றைவரி எளிமையாகவும், நேர்த்தியாகவும் எடுத்துக் காட்டுகிறது.
தற்போதைய போராட்டங்களும் வேறுபட்டவையே. அவை இனங்களைத் தாண்டி நடப்பவையாக மட்டுமின்றி எல்லை கடந்தும் பெருங்கடல்களைத் தாண்டியும் பரவியுள்ளன. கனடா, ஐரோப்பா ஒன்றியம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் இதர நாடுகளிலும் ”கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” இயக்கத்திற்கு ஆதரவாகவும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளிலும் இருக்கும் அமைப்புரீதியான இனவெறி மற்றும் போலீசு மிருகத்தனத்துக்கு முடிவுகட்டக் கோரியும் போராட்டங்கள் நடக்கின்றன.
இதற்கு முன்னர் கொல்லப்பட்ட 12 வயதான தமிர் ரைஸ் (2014), எரிக் கார்னர் (2014), பிலண்டோ கேஸ்டில் மற்றும் இன்னும் எண்ணற்ற கருப்பினத்தவர்களுக்காக கொந்தளிக்காத வெள்ளையின அமெரிக்கர்கள் பிளாய்ட் போலீசால் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட வீடியோ வெளிவந்தவுடன் மட்டும் ஏன் கொந்தளிக்கின்றனர்? மார்ட்டின் லூதர் கிங் தனது உரையில் அறைகூவல்விடுத்த, விஞ்ஞானப்பூர்வ வழிமுறையை தமது ஆய்வுக்குப் பயப்படுத்தும், சமூக விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், இந்தக் காணொளி சந்தேகப் புத்தியுள்ள வெள்ளையின சிந்தனையோட்டத்தை ஏற்கச்செய்யப் போதுமான அளவிலான ஆதாரமாக இருக்கிறது. அமெரிக்கா எனப்படும் இந்த ஜனநாயக சோதனையில் கருப்பினத்தவர்கள் போலீஸ் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் அதே வேளையில், கருப்பினத்தவர்களின் அனுபவமானது இந்த நாட்டில் உள்ள சட்ட அமலாக்கத் துறை மற்றும் குற்றவியல் நீதித்துறையில் தங்களது அனுபவத்திற்கு நேர் எதிராக உள்ளது என்பதை அந்த ஆதாரம் நிரூபித்துள்ளது.
கருப்பினத்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம், அமெரிக்காவில் நிலவும் அப்பட்டமான இன சமத்துவமின்மையை கோவிட்-19 அம்பலப்படுத்தியதைப் போல, பிளாய்டின் கொலையானது அமெரிக்காவில் பல நூற்றாண்டுகளாக கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் அரசு அனுமதித்த மற்றும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இனரீதியான வன்முறை மற்றும் அநீதிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. சாதாரண குடிமக்கள் – குறைந்தபட்சம் – வேற்று நிற மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் நேரடியாக சந்தித்துச் சென்றிருக்கக் கூடிய, அரசின் மிகவும் சர்வவியாபகமான முகவர்களான போலீசுடனான ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் மோதல் சம்பவங்கள் பிரச்சினையில் வெளித்தெரியும் ஒரு சிறுபகுதி மட்டுமே.
போலீசுக்கும், கருப்பினத்தவருக்குமிடையிலான மோதல்கள் அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியியுள்ள ஆழமான, அமைப்பு ரீதியான இன ஏற்றத்தாழ்வுகளின் அடையாளமாகும். இது அமெரிக்காவில் உள்ள கருப்பின, பழுப்பின, பழங்குடி மற்றும் பல்வேறு சமூக அடையாளங்களைக் கொண்ட ஆசிய மக்களை பாதித்தாலும், இந்த ஏற்றத்தாழ்வு கருப்பின மக்களின் விளிம்பு நிலையில் தான் அப்பட்டமாக வெளிப்படுகிறது, அமெரிக்க ஆன்மாவில் வரலாற்றுரீதியாகவே இருக்கும், கருப்பினத்தவர்களின் பொருளாதார இழப்பு, சிறைத் தண்டனை, அவர்களை தாக்குதல் தொடுப்பவர்களாக சமூக அடையாளப்படுத்துதல் ஆகியவையே பெரும்பாலான வெள்ளை அமெரிக்கர்களை கருப்பின மக்களின் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொள்வதிலிருந்து தடுக்கிறது.
தற்பொழுது வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலகமே இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுள்ள நிலையில், கருப்பின மற்றும் குறிப்பிட்ட அளவிற்கு நிறரீதியாக வேறுபட்ட மக்களைப் பாதிக்கின்ற சமூகப் பொருளாதார விளைவுகள் மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் குற்றவியல் நீதி ஆகியவற்றிற்கு அவர்களது சொந்தத் தோல்விகளே காரணம் என்ற ஆதாரமற்ற கருதுகோள்களை நிராகரிக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. எந்த வகை சோதனைகளாலும் அதை நாம் செய்யாத பட்சத்தில் அமெரிக்கா என்றழைக்கப்படும் இந்த நாடு நிச்சயம் தோல்வியைத் தழுவும்.
கட்டுரையாளர் : Ronnie A.Dunn
தமிழாக்கம் : – ராம்குமார் செய்தி ஆதாரம்:த ஹிண்டு.
ஹாங்காங் அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்-ல் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களை ஹாங்காங் – சீன அரசுகள் தொடர்ந்து ஒடுக்கி வருகின்றன.
கடந்த ஜுன் 30 அன்று இரவு 11 மணி முதல் “ஹாங்காங் சிறப்பு ஆட்சிப் பகுதியில் தேசியப் பாதுகாப்பிற்கான மக்கள் சீனக் குடியரசின் சட்டம்” என்று தலைப்பிடப்பட்ட புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்தார் ஹாங்காங்கின் தலைமைச் செயலரான கேரி லாம்.
ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், ஜனநாயகக் கோரிக்கையாளர்களும் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு எனும் பெயரில் ஹாங்காங் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறிக்கும் விதமாக இந்தச் சட்டம் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங் சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 1-ம் தேதியன்று பல்வேறு ஜனநாயக கோரிக்கைகளை முன் வைத்து ஹாங்காங் நகரில் பேரணிகள் நடக்கும். இந்த ஆண்டும், ஜூலை 1-ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வரவிருப்பதை ஒட்டி அதற்கு எதிராக மக்கள் பேரணி மற்றும் போராட்டம் நடத்துவதைத் தடை செய்யும் பொருட்டு கொரோனாவைக் காரணம் காட்டி பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதித்தது ஹாங்காங் நிர்வாகம்.
இந்தத் தடையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் இந்தச் சட்டத்தை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடியிருக்கின்றனர். ஜுலை 1 அன்று நடந்த போராட்டங்களில் போலீசுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில், சுமார் 370-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் மீது புதியதாக போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. எனினும் ஹாங்காங்கில் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஹாங்காங்-கின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமானது, பிரிவினைவாதம், நாசகர வேலை, பயங்கரவாதம், தேசிய பாதுகாப்பை அபாயத்துக்குள்ளாக்க அன்னிய சக்திகளோடு கூட்டுச் சதியில் ஈடுபடுதல் ஆகிய குற்றங்கள் குறித்தும் அதற்கான தண்டனைகள் மற்றும் விசாரணை அமைப்பு பற்றியும் விரிவாகப் பேசுகிறது.
இந்தப் புதிய சட்டத்தின்படி போக்குவரத்து வசதிகள், போக்குவரத்து வாகனங்கள், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரியக்கூடிய, வெடிக்கக் கூடிய பொருட்களை அழித்தல் ஆகிய அனைத்து செயல்பாடுகளும் பயங்கரவாதக் குற்றத்தின் (Terrorism) கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் போல இனி ஹாங்காங்கிலும் போலீசே வாகனத்தைக் கொளுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்.
ஹாங்காங் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஹாங்காங் மீதோ, சீனா மீதோ பொருளாதாரத் தடை விதிக்க வெளிநாடுகளுக்கு கோரிக்கை விடுப்பதோ, ஹாங்காங் சட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் இடையூறு ஏற்படுத்த அந்நிய நாடுகள், நிறுவனங்கள், அல்லது அமைப்புகளிடமிருந்து உத்தரவுகள் பெற்று செயல்படுவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தப் புதிய தே.பா.சட்டத்தில் உள்ள அந்நிய நாடுகளுடன் கூட்டுச் சதி என்ற பிரிவின் கீழ் கைது செய்ய முடியும்.
சீனாவின் எந்த ஒரு பகுதியின் ராஜ்ஜிய நிலைமைகளை மாற்றுவது குறித்து அல்லது எந்தப் பகுதியையும் பிரிப்பது குறித்து திட்டமிடுவதும், அதற்கு ஏற்பாடு செய்வதும், அத்தகைய செயல்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும், அதற்கு உதவுவதும், அத்தகைய செயல்களைத் தூண்டுவதும் கடுமையான பிரிவினைவாதக் குற்றமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி ஹாங்காங் நகரத்தின் சுய நிர்ணய உரிமை குறித்தோ அல்லது திபெத்தின் விடுதலை குறித்தோ யாரேனும் இனி சாதாரணமாகப் பேசினாலும்கூட தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தை தூண்டிய குற்றத்திற்காகக் கைது செய்ய முடியும்.
புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், பெருமளவிலான தண்டத்தொகையும், பத்தாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும் கூட கொடுக்க முடியும். மேலும் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்காக என்று கூறி சீனாவுக்கு நாடு கடத்தவும் முடியும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறையும் முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமானதாகவும், ஹாங்காங்-ன் தனிப்பட்ட அடிப்படை சட்டங்களுக்கு முரணாகவும் இருக்கிறது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதற்காக ஹாங்காங் நீதிமன்றங்களில் தனிப் பிரிவுகள் அமைக்கப்படும் என்றும் இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் ஹாங்காங் நகரத்தின் தலைமைச் செயலருக்கு மட்டுமே உண்டு என்றும் இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது. ஒருவேளை குறிப்பான ஒரு வழக்கு மிகவும் ‘இரகசியம்’ வாய்ந்தது என தலைமைச் செயலர் முடிவு செய்தால், அந்த வழக்கு விசாரணை வெளிப்படையான நீதிமன்றத்தில் நடத்தப்படாமல், மூடிய அறைக்குள் நடத்த உத்தரவிடும் அதிகாரமும் அவருக்கு உண்டு. மிகவும் முக்கிய வழக்குகளை சீனாவில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றும் அதிகாரமும் தலைமைச் செயலருக்கு உண்டு.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படாது. இதன் காரணமாக, அரசியல் கைதிகள் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதற்கும் கடும் தண்டனைகள் விதிக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு. குறிப்பாக, ஹாங்காங் மீதான சீனாவின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வரும் அரசியல் எதிரிகளை துரிதமாக முடக்குவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 55, சீன அரசின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் ஒன்று ஹாங்காங்கில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கிறது. அங்கு, “தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் கமிட்டி” ஹாங்காங்-கின் தலைமைச் செயலரின் தலைமையில் அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்படும் கமிட்டியும் அதன் கீழ் செயல்படும் குழுவினரும், ஹாங்காங் நீதிமன்றம் மற்றும் போலீசின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பர். அதாவது, இந்த பிரிவு அலுவலர்களும், அதிகாரிகளும் போராட்டக்காரர்களின் மீதோ, மக்களின் மீதோ மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலோ, கொலை , கடத்தல் உள்ளிட்ட பாதகங்களைச் செய்தாலோ ஹாங்காங் சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்யவோ தண்டிக்கவோ முடியாது.
மேலும் இந்தக் கமிட்டியில் சீன அரசால் நியமிக்கப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர், இந்த கமிட்டியின் செயல்பாடுகளையும் ஹாங்காங்கிற்கான தேசிய பாதுகாப்புக் கொள்கைகளையும் வகுப்பார். ஊடகங்கள், இணையம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பள்ளி பாடத்திட்டம் வரை இந்தக் கமிட்டி தனது அதிகாரத்தை செலுத்தத்தக்க வகையிலேயே இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்சட்டம், ஹாங்காங்கில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு மேலாக அதிகாரம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டங்களிலிருந்த பெயரளவிலான ஜனநாயக அம்சங்களையும் இல்லாமல் போகச் செய்திருக்கிறது. இதை எதிர்த்துத்தான் ஹாங்காங் மக்கள் போராடி வருகின்றனர்.
ஹாங்காங்கில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்தச் சட்டத்தின் மேற்கூறிய சரத்துக்கள் அனைத்தும் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) ,ஊபா சட்டம் (UAPA) மற்றும் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் (NIA Amendment Act) ஆகியவற்றின் மூலமாக ஏற்கெனவே இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கீழ் நேரடியாக இயங்கும் என்.ஐ.ஏ பிரிவு போலீசு, என்.ஐ.ஏ. சட்டத் திருத்ததின்படி எந்த ஒரு மாநிலத்திலும் நுழைந்து யாரையும் கைது செய்து டில்லியில் சிறையிலிடைக்க முடியும். பிணை கிடையாது; இத்தகைய பயங்கரமான ஆட்தூக்கி சட்டங்கள் இங்கு கொண்டு வரப்பட்டபோது அதற்கு எதிராக பெருமளவிலான மக்கள் திரள் போராட்டங்கள் எதுவும் இந்தியாவில் எழவில்லை. (பார்க்க: வினவு கட்டுரை)
இந்தியாவின் நிலைப்பாடு :
தற்போது ஹாங்காங்கில் கொண்டு வரப்பட்டிருக்கும், ஜனநாயக விரோத தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு, உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’ நாடான இந்தியா, எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இந்த விவகாரத்தில் மிகவும் அடக்கி வாசித்திருக்கிறது. ஐக்கியநாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினரான ராஜீவ் சந்தர், “சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்தப் பார்வைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அதனை முறையாகவும், அக்கறையோடும், பொருட்டாகவும் பரிசீலிக்க வேண்டும். பெருமளவிலான இந்திய சமூகத்தினர் ஹாங்காங்கை தங்களது வசிப்பிடமாகக் கொண்டுள்ள காரணத்தால், இந்தியா இந்த நிலைமைகளை நெருக்கமாக கவனித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் எந்த ஒரு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் வாய் திறக்காமல் மவுனித்து வந்திருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு உலகமே கண்டித்த உய்கூர் முசுலீம் சிறுபான்மையின மக்கள் மீதான சீனாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியா வாய் திறக்கவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள தர்மசாலாவில் நடந்த ஜனநாயகத்திற்கான மாநாட்டில் பங்கேற்க ஹாங்காங் மற்றும் உய்கூர் பகுதியில் இருந்து வரவிருந்த இரண்டு செயற்பாட்டாளர்களுக்கு சீனாவின் மிரட்டலைத் தொடர்ந்து விசாவை ரத்து செய்தது இந்திய அரசு.
கடந்த 2014-ம் ஆண்டு மோடி பதவியேற்ற போது, திபெத்தின் மீதான சீனாவின் உரிமையை எதிர்த்து உருவாக்கப்பட்ட நாடு கடந்த திபெத் அரசின் தலைவரான லேப்சங் சங்கே-விற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாம் முறையாக 2019-ம் ஆண்டு மோடி பதவியேற்றபோது, சீனாவின் நற்பெயரைப் பெற வேண்டி, லோப்சங் சங்கே-வை அழைக்கவில்லை (ஆதாரம்: தி வயர்) என்பது குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாம் சீனாவுக்கும், அதன் மனித உரிமை மீறலுக்கும் ஆதரவாக இந்தியா நிலைப்பாடு எடுத்த தருணங்கள். இப்போதும் சீனாவை மென்மையாகக் கூட கண்டிக்கவில்லை. இதன் பின்னணியில் மோடிக்கும் பாஜக-விற்கும் படியளக்கும் இந்திய தரகுமுதலாளிகளின் நலன் அடங்கியுள்ளது. அதற்கும் மேலாக, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதில் சீனாவுக்குத் தாம் எவ்விதத்திலும் சளைத்த நாடு இல்லை, என்பதை தமது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் துவங்கி சமீபத்திய என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம் வரை ஒவ்வொரு தருணத்திலும் இந்தியா நிரூபித்துள்ளதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஹாங்காங் போராட்டங்களின் வரலாறு :
ஹாங்காங்கில் கொண்டுவரப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டம், ஜனநாயக விரோதமாகவும் ஹாங்காங் நகரத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு ஜனநாயக உரிமைகளை மறைமுகமாக ரத்து செய்யக் கூடியதாகவும் இருக்கும் காரணத்தினாலேயே ஹாங்காங் மக்கள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு, முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை ஹாங்காங் நகரிலிருந்து சீனாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஒன்றை ஹாங்காங் அரசாங்கம் கொண்டுவந்தது. அதற்கு எதிராக அந்த ஆண்டில் ஜூலை 1, அன்று ஹாங்காங் சீனாவோடு இணைந்த தினத்துக்கான பேரணியிலிருந்தே போராட்டங்கள் துவங்கின. கடுமையான ஒடுக்குமுறையை போலீசு மூலம் கட்டவிழ்த்துவிட்டது ஹாங்காங் அரசு. எனினும் விடாப்பிடியாக இந்த ஆட்கடத்தி சட்டத்திற்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராடினர்.
ஹாங்காங்கின் தலைமைச் செயலரான கேரி லாம்.
இந்தப் போராட்டம் சுமார் 2 மாதங்கள் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக 2019, செப்டெம்பர் 4-ம் தேதி அன்று இந்தச் சட்டத்தை பின்வாங்கியது ஹாங்காங் அரசு. ஆயினும் அதனைத் தொடர்ந்தும் போராட்டங்கள் நடந்தன. ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டியும், அவர்களை விடுதலை செய்ய வேண்டியும் போராட்டங்கள் தொடர்ந்தன. இந்தப் போராட்டங்களில் சீனாவின் ஆதிக்கத்தை அடையாளப்படுத்தும் கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் தகர்க்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
இளைஞர்கள் முகமூடி அணிந்து வந்து போராட்டங்களில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, முகமூடி அணியத் தடை விதிக்கும் அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது ஹாங்காங் அரசு. அந்த அளவிற்கு போராட்டத்தின் வீச்சு பெருமளவில் இருந்தது.
தற்போது இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் ஹாங்காங்-ன் தலைமைச் செயலர் கேரி லாம்-தான் கடந்த 2019-ம் ஆண்டு இந்த ஆட்தூக்கி சட்டத்தைக் கொண்டுவந்தவர். மக்களின் போராட்டம் வலுத்த பின்னர் இந்தச் சட்டத்தை பின்வாங்கி கொண்டார் ஹாங்காங் தலைமைச் செயலர் கேரி லாம்.
ஹாங்காங்கைப் பொறுத்தவரையில் ஹாங்காங்கின் தலைமைச் செயலருக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உண்டு. சுமார் 75 லட்சம் மக்களைக் கொண்ட ஹாங்காங்கின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் தகுதி படைத்த தலைமைச் செயலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதுதான் ஹாங்காங்கில் தற்போது இருக்கும் ஜனநாயகத்தின் லட்சணம்.
ஹாங்காங் : மக்கள் ஆட்சியல்ல – நேரடியான கார்ப்பரேட் ஆட்சி :
தற்போதைய நடைமுறைப்படி, 1200 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் கமிட்டியால் ஹாங்காங் தலைமைச் செயலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த 1200 பேரில் பெரும்பான்மையினர், பல்வேறு தொழிற்சாலைகள், தேசிய இனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதியாக அந்தந்த குழுமங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும்.
ஹாங்காங் மக்களைப் பொறுத்தவரையில் அங்குள்ள மாவட்டக் கமிட்டிகளின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. இந்தப் பிரதிநிதிகளும் தேர்வுக் கமிட்டியில் இடம்பெறுவர். ஹாங்காங்கில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலை, தன்னார்வ நிறுவனங்கள் சீனாவைச் சார்ந்து இயங்குவதாலேயே, இவர்களால் அனுப்பப்படும் தேர்வுக்குழு பிரதிநிதிகள் சீனாவின் ஆதரவு பெற்ற வேட்பாளரையே ஆதரிப்பர். ஆகவேதான் சீனாவின் நலன்களுக்கு ஏற்ற வகையிலான சட்டத்தை ஹாங்காங் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஹாங்காங்கில் தற்போது ஜனநாயகம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும் இந்த தேர்தல் மற்றும் ஆட்சி அமைப்பு முறை, நேரடியாக கார்ப்பரேட்டுகள் மற்றும் அவர்களின் நலன்களுக்காகச் செயல்படும் சிந்தானைக் குழாம்களினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் மறைமுகமாக நடக்கும் கார்ப்பரேட் ஆட்சி, ஹாங்காங்கில் நேரடியாக நடக்கிறது.
ஹாங்காங் அரசின் அடிப்படை சட்டங்களில் ஹாங்காங் தலைமைச் செயலரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுப்பதுதான் உச்சபட்ச இலக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாங்காங் அரசின் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஹாங்காங் மக்கள் காலங்காலமாகப் போராடி வருகின்றனர். அனால் இன்றுவரை அதற்கான நடவடிக்கைகளை ஹாங்காங் அரசாங்கம் எடுக்கவில்லை.
ஹாங்காங் தலைமைச் செயலரை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் ஒரு சட்டதிருத்ததைக் கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவந்தது ஹாங்காங் அரசு. அதாவது ஹாங்காங் தலைமைச்செயலரை மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம் (ஆதாரம்: தி கார்டியன்) என்றும், ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் என்றும் ஒரு சட்டடத்திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதாவது தமக்கு (சீனாவுக்கு) சாதகமானவர்களை மட்டுமே வாக்களிப்பதற்கான தகுதியுள்ளவர்களாக அங்கீகரிப்பதும் மற்றவர்களை புறக்கணிப்பதும்தான் இந்தச் சட்டத்திருத்தத்தின் நோக்கம்.
இதற்கு எதிராக மிகப் பெரும் போராட்டங்கள் ஹாங்காங்கில் நடைபெற்றன. உலகப் புகழ் பெற்ற மஞ்சள் குடை போராட்டம் பல வாரங்கள் நீடித்தது. பின்னர் இந்த தேர்தல் சீர்திருத்த நடவடிக்கையை ரத்து செய்தது ஹாங்காங் அரசு.
ஹாங்காங் மீதான சீனாவின் ஒடுக்குமுறை என்பது காஷ்மீர் மீதான இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு நிகரானது. தற்போது சீனாவின் ஒரு பகுதியாக ஹாங்காங் இருப்பதாகக் கூறப்படுகையில், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கான போராட்டம் நடப்பதன் காரணம் என்ன என்பது குறித்து அறிய ஹாங்காங்கின் வரலாற்றைச் சற்று பார்க்கலாம்.
ஹாங்காங் – சீனா வரலாறு :
சீனாவின் மன்னராட்சியின் கீழ் இருந்த ஹாங்காங் தீவை கடந்த 1842-ம் ஆண்டு நடந்த முதல் ஓப்பியம் போரில் பிரிட்டன் கைப்பற்றியது. அதன் பின்னர் 1898-ம் ஆண்டு சீனாவிடமிருந்து கூடுதல் நிலப்பரப்புகளையும் சேர்த்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது பிரிட்டிஷ் அரசு. பிரிட்டன் ஆட்சியில் ஹாங்காங் ஒரு பெரும் வர்த்தக நகராக உருவாகியது.
தோழர் மாவோவின் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1949-ம் ஆண்டு சீனாவில் புரட்சியைச் சாதித்து மக்கள் சீனக் குடியரசைக் கட்டியமைத்தது. அப்போதும் ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாகவே இருந்துவந்தது.
பிரிட்டிஷ் காலனிய அரசை எதிர்த்து பல்வேறு விடுதலைப் போராட்டங்கள் ஹாங்காங்கில் நடந்துள்ளன. அவை அத்தனையும் பிரிட்டிஷ் அரசால் ஒடுக்கப்பட்டது. பின்னர் 1982-ம் ஆண்டு ஹங்காங்கை சீனாவிடம் ஒப்படைக்கக் கோரி சீன அரசு பிரிட்டிஷ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக 1997-ல் ஹாங்காங்கை சீனாவிடம் கைமாற்றுவதற்கான வேலைகளை இருநாடுகளும் தொடங்கின. ஹாங்காங்-ல் பிரிட்டன் நடைமுறைப்படுத்தி வந்த அதே ஆட்சி முறைகளையும், ஜனநாயக உரிமைகளையும் 2047-வரை (50 ஆண்டுகளுக்கு) நீடிக்கும்படியான மற்றும் அங்கு முதலீடு செய்திருக்கும் தமது நாட்டு முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும்படியான நிபந்தனைகளுடன் 1997-ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் கைமாற்றிக் கொடுக்கப்பட்டது. அதாவது பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங், சீனாவின் காலனியாக தாரைவார்க்கப்பட்டது.
இந்த ஐம்பதாண்டுகளும் சீனாவுக்கும் ஹாங்காங்கிற்கும் இருக்கும் உறவு – “ஒரே நாடு, இரண்டு அமைப்பு முறை” என்பதாகும். அதாவது சட்டப்படி ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாகும். ஆனால் ஹாங்காங்கிற்கு என தனியான அடிப்படை அரசியல் சட்டமும், நீதித்துறையும், தன்னாட்சி கொண்ட நிர்வாக அரசும் நீடிக்கும். பல கட்சி ஜனநாயகம், பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவை எல்லாம் ஹாங்காங்கில் உண்டு. ஐம்பதாண்டு ஒப்பந்தம் முடிந்த பிறகு ஹாங்காங் அரசு எப்படி இயங்கவேண்டும் என்பதை சீனா முடிவு செய்யும். இதுதான் இந்த ஒப்பந்தததின் சாரம்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது முதல் இன்றுவரை தனது ஆதிக்கத்தை படிப்படியாக ஹாங்காங்கில் நிலைநாட்ட சீனா தொடர்ந்து எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் மக்கள் போராட்டத்தால் தோல்வியடைந்த நிலையில், இனி போராட்டங்களே நடைபெறாத வகையில் தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஹாங்காங் நகரம் அரசியல்ரீதியில் இரு பிரிவாக பிரிந்துள்ளது. இந்தியாவில் போலீசு ஒடுக்குமுறைக்கும், வலதுசாரி அரசியலுக்கும் ஆதரவாளர்கள் இருப்பது போல ஹாங்காங்கிலும் சீனாவின் ஒடுக்குமுறை சட்டங்களை ஆதரிக்கும் பிரிவினரும் இங்கு இருக்கின்றனர். அதே சமயத்தில் முழுமையான ஜனநாயக உரிமையையும், சீனாவின் பிடியிலிருந்து விடுதலையைக் கோரும் பிரிவினரும் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நாளில் இருபிரிவினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பெரும் பேரணிகளை நடத்துகின்றனர். இதில் மோதலும் ஏற்படுகிறது. சீன மேலாதிக்கத்தை ஆதரிக்கும் பிரிவினருக்கு ஆதரவாகவே ஹாங்காங் அரசும் போலீசும் செயல்படுகின்றன.
ஹாங்காங் மக்களைப் பொறுத்தவரையில் 1997-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஹாங்காங் ஒப்படைப்பு என்பது, பிரிட்டிஷ் காலனியிலிருந்து சீனாவின் காலனியாக ஹாங்காங் மாற்றப்பட்டதே ஒழிய காலனியாக்கத்திலிருந்து பெறப்பட்ட விடுதலை அல்ல. சீன அரசின் ஆசி பெற்ற கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக முறையிலான தேர்தல், எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ஆகியவை வேண்டும் என்பதே ஹாங்காங் மக்களின் கோரிக்கை.
ஒரு ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் சீனா, கம்யூனிஸ்ட் ஆட்சி எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்திவருகிறது. மக்கள் மீது ஒடுக்குமுறையைச் செலுத்துகிறது. தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் சுயாட்சி உரிமையைப் பறிக்கிறது. இந்தியாவும் ஜனநாயகம் எனும் பெயரில் சர்வாதிகார ஆட்சியையே நடத்தி வருகிறது. மக்களை ஒடுக்குகிறது. மாநிலங்களின் சுயாட்சி உரிமையை பறிக்கிறது.
சீன அரசின் இது போன்ற ஒடுக்குமுறை முயற்சிகளை இதுவரை தங்களது போராட்டத்தால் முறியடித்திருக்கின்றனர் ஹாங்காங் மக்கள். இந்த முறையும் அவர்கள் வீதியில் தான் இருக்கிறார்கள். வெல்வதற்கான வாய்ப்பு உண்டு ! ஆனால் இதே ஒடுக்குமுறைகளை காலங்காலமாக அனுபவித்து வரும் நாம், எதிர்த்துப் போராடாமல் அதனோடு வாழப் பழகியிருக்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை ! மிகப்பெரும் அபாயமும் கூட !
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 39-வது வார்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் கார் உடைக்கும் கூலித் தொழிலாளர்கள். இங்கு போதிய இடவசதி இல்லாததால் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. தனிநபர் இல்ல கழிவறை கட்டுவதற்கு போதிய இட வசதியோ, பணமோ இல்லாதவர்கள். பொதுக்கழிப்பிடமும் இல்லாத காரணத்தால் ஆண், பெண் அனைவரும் அருகில் உள்ள திறந்தவெளிப் பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். மழைக்காலங்களில் நோய்த்தொற்றுக்கும் உள்ளாகிறார்கள்.
மேலும் இப்பகுதிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு குடிக்க வருபவர்கள் இப்பகுதி பெண்களிடம் குடித்து விட்டு தவறான முறைகளில் நடந்து கொள்கிறார்கள். இது பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்ற சுகாதாரப் பணிகளை செய்வதில்லை.
இப்பகுதியில் உள்ள மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் இப்பிரச்சினை குறித்து பொது மக்களிடம் பேசி பொதுமக்கள் சார்பாக அருகில் உள்ள கோட்ட அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. “பொது கழிப்பறை கட்டுவதற்கு தற்போது மாநகரட்சியில் பணம் ஒதுக்கவில்லை. வேண்டுமானால் தனி நபர் இல்ல கழிவறை கட்டித்தருவதாக” மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். “தனிநபர் இல்ல கழிவறை கட்டுவதற்கான போதிய இட வசதி இல்லாத காரணத்தால்தான் பொதுக் கழிப்பறை வேண்டும் என்கிறோம்” என பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இந்திரா நகர் பகுதியில் குளியளறையுடன் கூடிய பொதுக்கழிப்பிடம் அமைப்பதற்கு போதிய நிதி ஒதுக்கித் தருமாறு மாநகராட்சி ஆணையரிடம் நேற்று (09.07.2020) மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் லெ.செழியன் தலைமையில் பகுதி மக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எனும் பெயரில் மாநகராட்சியின் மைய பகுதிகளில் அலங்கார விளக்குகள், செயற்கை நீரூற்றுகள், சாலையோர பூங்காக்கள், நடைபாதையை அலங்கரிப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களில் செய்யப்படுகிறது. அதுவே சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை கூட செய்துகொடுக்க மறுக்கிறார்கள் அல்லது அதற்காக பெரும் போரட்டத்தையே நடத்த வேண்டியுள்ளது. அப்படி தொடர்ச்சியாக வழியுறுத்தியதன் பின்புதான் தற்போது மின் விளக்குகளும், தண்ணீர் குழாய்களும் சரி செய்யப்பட்டுள்ளது. தனிநபர் கழிப்பறை கட்டவோ மக்களிடம் இடம் இல்லை. அதிகாரிகளிடமோ பொது கழிப்பறை என்ற பேச்சுக்கே இடமில்லை இதுதான் தூய்மை இந்தியா. “நல்லா இருக்கு திட்டமெல்லாம் எழுதி வச்சு நக்க சொன்னான்…” எனும் ம.க.இ.க பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது.
கொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு ? ரத்து செய் !
பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுமதியளித்துள்ளது என ஜூலை -7 ந்தேதி செய்தி வெளியாகியுள்ளது. இது நாடு முழுவதுமுள்ள கோடிக்கணக்கான கல்லூரி மாணவர்களை கொரோனா தொற்றுக்கும், மன அழுத்ததிற்கும் ஆளாக்கும் விபரீதமான முடிவு என எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலும், இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இது உச்சத்தை எட்டும் என வல்லுநர்களும், மருத்துவர்களும் எச்சரிக்கின்றார்கள். எல்லா மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், விடுதிகள் அனைத்தும் கோவிட் -19 தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து படித்த மாணவர்கள் கொரோனா – ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
ரயில், பேருந்து போன்ற போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன, மாணவர் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையின் பிடியில் சிக்கியுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் மாணவர்கள் எப்படி செமஸ்டர் தேர்வுக்கு தயாராக முடியும்? மாணவர்களின் நலன், நடைமுறைசார்ந்த பிரச்சனைகள் குறித்து சிந்தித்து திட்டமிடாமல், தாங்கள் நினைத்தை நடத்துவது என்ற அதிகார வர்க்க திமிரைத்தான் காட்டுகிறது.
இந்த கொரோனா – ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் உயர்கல்வியை தொடர்வது குறித்தும், கடந்த செமஸ்டர் தேர்வு பிரச்சனையை மட்டுமின்றி, இக்கல்வியாண்டை கடப்பது குறித்தும் ஓர் அறிவியல்பூர்வமான மாற்று வழிமுறை குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. அதற்கு கல்வியாளர்கள், பல்கலைக் கழக, கல்லூரி ஆசிரியர் சங்கங்கள், மாணவர் பிரநிதிகளைக் கொண்ட குழு அமைத்து தீர்மானிப்பதுதான் சரியானது என்பதையும் இத்தருணத்தில் நாம் வலியுறுத்த வேண்டும்.
எனவே, கொரோனா தீவிரமாகும் போது செம்ஸ்டர் தேர்வை நடத்தாதே, ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவண் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு.
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொட்டடிப் படுகொலை வழக்கில், சம்பந்தப்பட்டுள்ள அனைத்து போலீசு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இரண்டு மாதங்களுக்கு தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை தடை செய்திருக்கிறது தமிழக அரசு. போலீசாரோடு உடன் நின்று ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் கொட்டடிக் கொலையை அரங்கேற்றிய “பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” என்ற பெயரிலான சட்டவிரோத கும்பலைக் கைது செய்யாமல் இருக்கிறது தமிழக அரசு.
குறிப்பாக சாத்தான்குளம் பகுதியில் “பிரெண்ட்ஸ் ஆப் போலீசு” என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணை அமைப்பான சேவா பாரதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டியுமே அக்கும்பல் கைது செய்யப்படவில்லை.
ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலை மட்டுமல்ல, இதற்கு முன்னதாகவும் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் கும்பல் போலீசோடு இணைந்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவங்கள் குறித்து பலரும் வெளிப்படையாகப் பேசத் துவங்கியுள்ளனர். இதை உறுதிபடுத்தும் விதமாக சாத்தான்குளம் போலீசு நிலையத்தில் மகேந்திரன் என்பவரை தாக்கியது தொடர்பாக “பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்” ஒருவர் தன் நண்பருடன் பேசிய ஆடியோ உரையாடல் பதிவும் சமீபத்தில் செய்தி ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.
போலீஸ் – பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் கூட்டணி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் செய்து வந்த அட்டூழியங்களில் ஒரு சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
சம்பவம் 1: கடந்த மே 24-ம் தேதி பேய்க்குளம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை விசாரணைக்காக அழைத்து வந்து போலீசும், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் கும்பலும் கடுமையாகத் தாக்கியதில் ஜுன் 13-ம் தேதி அன்று மகேந்திரன் இறந்திருக்கிறார்.
சம்பவம் 2: சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் தமிழக முதல்வருக்கு அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறப்படும் சம்பவங்கள், சாத்தான்குளம் போலீசின் மதவெறியை அம்பலப்படுத்துகிறது. அந்த புகாரின் படி, சாத்தான்குளம் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி ஜெபக்கூட்டம் நடத்திக் கொண்டிருந்த மதபோதகர் லாசர் பர்னபாஸ் உள்ளிட்ட பத்து கிறிஸ்தவர்களை போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். குறிப்பாக மத போதகரைத் தாக்கிய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் “எங்கே கூப்டுடா உன் கர்த்தரை” என்று சொல்லியே அடித்திருக்கிறார். இந்தத் தகவல் அறிந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் போலீசு நிலையத்திற்கு விசாரிப்பதற்குச் சென்றபோது அவரையும் அடித்து விரட்டியிருக்கிறது போலீசு.
போலீசால் பாதிக்கப்பட்ட லாசர் பர்னபாஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்ற பின்னர் இது குறித்து டிஐஜியிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் தாக்குதல் தொடுத்த கிரிமினல் போலீசு மீதும் பிரெண்ட்ஸ் ஆப் போலீசு மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் சக காவலர்கள் குறுகிய காலத்தில் 40-க்கும் மேற்பட்டோரை தாக்கியிருப்பதாகவும், அதிலும் திட்டமிட்டு குறிப்பிட்ட சிறுபான்மை மக்களை கடுமையாக தாக்கி வந்திருப்பதாகவும், இவர்களுக்கு உறுதுணையாக பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற பெயரில் சில மதவாத சக்திகளும் இணைந்து கொண்டு இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
போலீசு துணை ஆய்வாளர் ரகுகணேஷின் மதவெறியையும் இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
சம்பவம் 3: கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கன்னியாகுமரி மாவட்டம் மருதன்கோடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜன் பணி முடிந்து வீடு திரும்புகையில் மார்த்தாண்டம் போலீசு நிலைய ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் உடன் ஏற்பட்ட தகராறில் கொல்லப்படார். இரு கைகள் உடைந்தும், உடலில் பல காயங்களுடன் இருந்ததாகவும் அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை மூடி மறைக்க போலீசு பெரிதும் முயன்றது. அப்பகுதியில் அனைத்துக் கட்சி சார்பாக போராட்டம் நடத்திய பின்னரும் கூட “சந்தேக மரணம்” என வழக்குப் பதிவு செய்து வழக்கை மூடியது போலீசு.
சம்பவம் 4: அதே ஆண்டு பிப்ரவரியில் தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள மற்றும் கூலி தொழிலாளியை பிரெண்ட்ஸ் ஆப் போலீசு கும்பல் கடுமையாகத் தாக்கியதில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கையில் ‘வாக்கி டாக்கி’யை வைத்துக்கொண்டு வாகன சோதனை என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் அத்துமீறிய ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பொறுக்கி ஒருவன் குறித்து அப்போதே மாவட்ட போலீசுத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அப்படி யாரையும் நாங்கள் நியமிக்கவில்லை என்று கூறி அலட்சியப்படுத்தி இருக்கிறது போலீசு.
பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் எனும் இந்த சட்டவிரோத கும்பலுக்கு மேலிருந்து கீழ் மட்டம் வரையில் போலீசு மற்றும் அரசு அதிகார வர்க்கத்தின் ஆதரவு இருப்பதால், ஊடகங்களில் செய்தி வெளியாவதையோ, பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டிப்பதையோ பற்றிக் கொஞ்சமும் தயக்கமின்றி தொடர்ந்து குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது இந்தக் கும்பல்.
யார்இந்தப்ரண்ட்ஸ்ஆப்போலிஸ்?
1993 -ம் ஆண்டு ராமநாதபுரத்தில் எஸ்.பி-யாகப் பணியாற்றிய பிரதீப். வீ. பிலீப் என்ற போலீசு அதிகாரி “பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை” தொடங்கினார். கடந்த 1994-ம் ஆண்டில் ஜெயலலிதா அரசால் தமிழகம் முழுவதும் இந்த அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 34 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்டு தமிழகத்தின் அனைத்து போலீசு நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு.
பிரதீப். வீ. பிலீப்
தொடங்கப்படும்போது, “போலீசுக்கு உறுதுணையாக இருத்தல், குற்றங்களை கட்டுப்படுத்துதல், போலீசையும் பொதுமக்களையும் இடையிலான ஒரு பாலமாக இருத்தல்” என பல்வேறு பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடும் என்று கூறப்பட்டது.
ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை, வாகன சோதனையில் பணம் வசூலித்தல், இரவு நேர ரோந்து பணியில் சாலையோரத் தள்ளுவண்டி கடைகள் தொடங்கி சட்டவிரோத பார்கள் வரையில் போலீசுக்கு மாமூல் வசூலித்துக்கொடுத்தல் போன்ற பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது இந்தக் கும்பல். “முறையாக” வசூலிக்க போலீசைப்போல, கையில் லத்திக் கம்பை வைத்துக் கொண்டு மிருகத்தனமாக தாக்கவும் செய்கிறது இந்தக் கிரிமினல் கும்பல். சுருக்கமாகச் சொன்னால் இவர்கள் போலீசுக்கு அடியாள் வேலை பார்க்கவும், ஆட்காட்டி வேலை பார்க்கவும் நியமிக்கப்பட்ட கூலிப்படைகளே. ஊதியத்திற்குப் பதிலாக போலீசு பறித்துத் தின்பதில் சிந்தியது சிதறியதை உண்டு திரியும் கூட்டமாகவே இந்த பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்காட்டி அமைப்புக்கு தமிழகத்தில் முன்னுதாரணமிக்க ஒரு வரலாறு இருக்கிறது.
தமிழகத்தில் நக்சல்பாரி எழுச்சி இருந்த 1979- 80-களில் வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கூலி விவசாயிகள் அரசியல் எழுச்சி பெற்று, அமைப்பாகத் திரண்டு பண்ணை ஆதிக்கத்தையும், கந்து வட்டிக் கொடுமையையும் மிகத் தீவிரமாக எதிர்த்து போராடினர். அப்போது அவர்களுக்குத் தலைமையேற்றுப் போராடிய கம்யூனிஸ்ட் தோழர்களை ஒழித்துக் கட்ட போலீசு முடுக்கி விடப்பட்டது. அச்சமயத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்களைத் திரட்டி ‘கிராமப் பாதுகாப்புக் குழு’ என்ற பெயரில் ஆட்காட்டி அமைப்பை உருவாக்கியது போலீசு. அத்தகைய ஆட்காட்டிகளின் உதவியோடு பல முன்னணி தோழர்கள் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் தற்போது பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசு அமைப்பு ஆட்காட்டி வேலையோடு அடியாள் வேலையையும் சேர்த்தே செய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் இதன் செயல்பாடு குறிப்பிடும்படியாக அதிகரித்து வருகிறது.. ஆர்.எஸ்.எஸ் செல்வாக்குள்ள தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இவர்கள் அடியாள் வேலையோடு இந்துத்துவா வேலைகளையும் சேர்த்து செய்கின்றனர். அப்படி செய்வதற்கு நிறைய வாய்ப்பும் இருக்கிறது.
தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு வடிவத்தை பல்வேறு மாநிலங்களும் பின்பற்றத் துவங்கியுள்ளன. குறிப்பாக இந்த அமைப்பு வடிவத்தை போலீசுத் துறையில் ஊடுருவதற்கான ஒரு வழிமுறையாக ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவக் கும்பல் பயன்படுத்தி வருகிறது.
இதே வழிமுறையில் இங்கு தமிழகத்திலும் சேவாபாரதி எனும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவு பிரெண்ட்ஸ் ஆப் போலீசு அமைப்பிற்குள் களமிறக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த சேவா பாரதி அமைப்பிற்கு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வரலாறு இருக்கிறது. கடந்த 2003-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் வெடிகுண்டு தயாரித்ததற்காகவும், கிறுஸ்தவர்களுக்கு எதிராகக் கலவரம் செய்ததற்காகவும் திக்விஜய் சிங் அரசு சேவா பாரதியை தடை செய்ய பரிசீலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. வட மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான பல்வேறு கலவரங்களை நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஒரு பயங்கரவாத அமைப்பைத்தான் இன்று பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் (ஆதாரம் இசட் நியூஸ்) என்று அங்கீகரித்திருக்கிறது தமிழக போலீசு.
“பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்” அமைப்பு கடந்த ஜூலை 1-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “சாத்தான்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் எங்கள் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கள் உறுப்பினரே இல்லை. ஊடகங்களில் வந்த ஐ.டி கார்டு போல் நாங்கள் கொடுப்பதில்லை என்றும் யாரோ ஊடுருவல் செய்து போலியான ஐடி கார்டு தயாரித்து விட்டார்கள்” என்றும் சொல்கிறது.
ஊடகங்களில் வெளிவந்த ஐ.டி கார்டுகளில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசு மற்றும் சேவா பாரதியின் பெயர் பொறித்த ஐடி கார்டுகள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் கையெழுத்தும் இருந்திருக்கிறது. பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சொல்வது படி பார்த்தாலும் கூட, சேவா பாரதி பெயரில் அவர்கள் அடையாள அட்டைகள் கொடுக்கவில்லை என்று எடுத்துக் கொண்டால், சட்டவிரோதமாக பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பெயரில் அடையாள அட்டை வழங்கிய சேவா பாரதி மேல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே ? போலீசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
அதைவிட முக்கியமாக நெல்லை மாவட்டத்தில் வெளிப்படையாக சேவா பாரதி – ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் பெயரில் கொரோனா விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டியிருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்தச் சுவரொட்டிகளையும் போலி என மறுக்கப் போகிறதா பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசு அமைப்பு.
ஜெயராஜ் – பெனிக்ஸ் கொட்டடிப் படுகொலைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உலகமே போராடும்போது தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் சங்கிகளும், பாஜகவின் தலைவரும் போலீசுக்கு வக்காலத்து வாங்கிவருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் முருகன், “சாத்தான்குளம் விவகாரம் ஒரு சிறிய பிரச்சினை. இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை. தேவையில்லாத பிரச்சினை. ஒரு சிறிய பிரச்சினையை வைத்து பெரிய அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.
எச்ச ராஜா
“போலீசுக்கு எதிரான எந்தவிதமான போராட்டமும் வெகுஜன விரோதப் போராட்டமாகவே கருதப்படும்” என்கிறார் எச். ராஜா. மேலும் தென் மாவட்டங்களில் இருக்கும் சாதிவெறி சங்களை தூண்டி விட்டு கொலைக் குற்றவாளிகளான போலீசுக்கு ஆதரவாக சுவரொட்டி பிரச்சாரம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவக் கும்பல்.
இந்தக் கொட்டடிக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ பாலகிருஷ்ணன் விசாரணையின்போது “காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வருபவர்களை வழக்கமாகத் தாக்குவது போலவே இருவரையும் தாக்கினோம். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என வாக்குமூலம் அளித்ததாக விகடன் இணையதளம் குறிப்பிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தாக்குவதே சட்டவிரோதமானது எனும்நிலையில், இவர்களின் வழக்கமான தாக்குதலே மரணத்தை வரவழைக்கத்தக்கதாக இருக்கிறது என்பது இந்த வாக்குமூலத்திலிருந்து அப்பட்டமாகத் தெரிகிறது.
சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் போரிடுவதாகக் கூறிக் கொண்டு அப்பாவி பழங்குடியின மலைவாழ் மக்களை அடித்து விரட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த கிரிமினல் கும்பலை திரட்டி சல்வா ஜூடும் என்ற அமைப்பை ஏற்படுத்தியது சட்டீஸ்கர் அரசு. இந்த சட்டவிரோதக் கும்பல் பழங்குடியின மக்களைக் கொலை செய்வது, கிராமங்களையே எரிப்பது, பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவது எனத் தொடர்ந்து அனைத்து சட்டவிரோத வழியிலும் பழங்குடியின மக்களைத் துன்புறுத்திக் கொன்றது. பல்வேறு போராட்டங்களின் ஊடாக இது அம்பலப்படுத்தப்பட்ட பின்னர் அந்த அமைப்பை சட்டவிரோதமானது என்று கூறி தடை செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் போலீசின் அனைத்து அட்டூழியங்களிலும் நீக்கமறப் பங்கு வகிக்கும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் எனும் சட்டவிரோதக் கும்பலை உடனடியாக கலைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும் இதில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதக் கும்பல் பல்வேறு பெயர்களில் ஊடுறுவியிருப்பதும் இந்த அமைப்பினால் மக்களுக்க்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
போலீசு என்ற அமைப்பு இல்லாமலேயே சமூகம் இயங்கமுடியும் என்பதையும் ஆளும்வர்க்கத்தின் அடியாள் படைதான் போலீசு என்பதையும் மெரினா போராட்டமும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் நமக்கு உணர்த்தியிருக்கின்றன. சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் இருவரின் கொடூரமான படுகொலை, இந்த போலீசு அமைப்பைக் கலைக்க வேண்டியதன் அவசியத்தை நம்மிடையே எடுத்துரைக்கிறது. போலீசு அமைப்பே தேவையில்லாத ஆணியாக இருக்கும்போது “பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்” எனும் சட்டவிரோத கிரிமினல் கும்பலையும், அதன் பின்னால் இருந்து செயல்படும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளையும் தமிழகத்தில் இருந்து துடைத்தெறியாமல் நமக்கு விடிவேதும் கிடையாது.
நிலக்கரி, தங்கம் உள்ளிட்ட சுரங்கங்கள், ரயில்வே, கூட்டுறவு வங்கிகள் எல்லாவற்றையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து 6.7.2020 அன்று காலை 11 மணிக்கு திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர் உத்திராபதி தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், “கொரோனாக் காலத்தில் ‘விழித்திரு, தனித்திரு, வீட்டில் இரு’ என்று நம்மை வீட்டில் முடக்கிப்போட்டு விட்டு, நாட்டின் பொது சொத்துக்களான ரயில்வே, சுரங்கங்கள், கூட்டுறவு வங்கிகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் செயல் மக்கள் விரோதமானது.இந்த அரசு முழுக்க முழுக்க மக்கள் விரோதமாக செயல்படுகிறது. இதை அனுமதிக்கக்கூடாது, எதிர்த்துப்போராடி முறியடிக்க வேண்டும்” என்பதை எடுத்துரைத்தார்.
அடுத்ததாக ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் மணலி தாஸ் அவர் தனது உரையில், “ரயில்வே, சுரங்கம் போன்றவை தனியார்மயமாகிறது, கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கு செல்வது அபாயகரமானது. அத்துடன் இரயில்வே சந்திப்பில் காலம் காலமாக ஆட்டோ ஓட்டி பிழைத்து வரும் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரமும் ஓலா-வின் வரவால் பறிக்கப்பட்டுள்ளது. ஓலா, ஊபர் போன்றவற்றின் வரவு பல சிறு தொழில்களை அழிக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் போன்றவை பல வணிகர்களை பாதிக்கிறது. ஆனால், அரசு இத்தகைய கார்ப்பரேட்டுகளின் நலனில்தான் அக்கறை காட்டுகிறதே தவிர, சிறு தொழில், சொந்த ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களின் நலனை சீரழிக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.
அடுத்ததாக சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் ராஜா தனது உரையில், “இன்றைக்கு நாடு முழுவதும் லாபத்தில் இயங்கும் நூற்றுக்கணக்கான ரயில்களை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கப்போகிறது. மத்திய அரசினுடைய இந்தக்கொள்கையால் நமக்கு சொந்தமாக இருக்கக்கூடிய ரயில்வே துறை, கார்ப்பரேட்- தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படுவதோடு நாம் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வது தடுக்கப்படும் என்றார். மோடி அரசு பொறுப்புக்கு வந்ததிலிருந்து இரயிலில் பொதுப்பெட்டிகளை குறைத்ததால் ஒரு பெட்டியில் பல நூறு பேர் புளி மூட்டை போல மக்கள் அடைத்துக் கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கிறோம். தனியார் முதலாளிகளிடம் சென்றால் அது இன்னும் அபாயகரமாக மாறிவிடும். இதை தடுத்து நிறுத்த நாம் போராட வேண்டும். தடுப்பதற்கு நாம் ஒன்றிணைவோம் என்று கூறினார்.
அடுத்ததாக மக்கள் கலை இலக்கியத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தனது உரையில், “மோடி அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் இப்படி மக்களுக்கு விரோதமாக கார்ப்பரேட் நலனுக்காக கொண்டு வருகின்ற இந்த கொள்கைகளை முறியடிக்காமல் மக்களுக்கு விடிவு இல்லை” என தனது உரையில் பதிவு செய்தார்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அடுத்ததாக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சுந்தரராஜன் பேசும் போது, “நாடு சுதந்திரம் அடைந்ததாகக் கூறி எழுபது ஆண்டுகள் கடந்த நிலையில், 47-க்குப் பிறகு இன்று வரை உழைக்கும் மக்கள் உருவாக்கிய இந்த நாட்டினுடைய பொது சொத்துகள் அனைத்தையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மோடி அரசு ஒப்படைக்கின்றனர். காங்கிரசை விட பன்மடங்கு வேகத்தில் தனியார்மயக் கொள்கையை அமல் படுத்தி வருகின்றனர். நம் அனைவரையும் வீட்டிலேயே இருக்க வைத்துவிட்டு, நம்மை சிறை வைத்து விட்டு சதித்தனமாக இதை செய்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை செய்யாமல், மக்களுக்கான வாழ்வாதாரத்தைப் பாதுகாக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களுடைய நலனை – அவர்களுடைய லாபத்தை அதிகப்படுத்துவதற்கான வேலையை செய்து வருகிறது.
உலக பணக்கார வரிசையில் அவர்களை உயர்த்துவதற்காக இப்படிப்பட்ட இந்த தனியார்மயக் கொள்கையை கார்ப்பரேட் மயக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி கொண்டிருக்கிறார். இதன் விளைவு இன்றைக்கு கோடிக்கணக்கான மக்கள் குறிப்பாக 40 கோடி மக்களுக்கு மேலான அமைப்புசாரா தினக்கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து பிச்சைக்காரர்களாக கையேந்தி நிற்கின்றனர்.
ஆகவே இந்த கார்ப்பரேட் நலனுக்காக மோடி அரசு கடைப்பிடிக்கின்ற இந்த திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், சிறு முதலாளிகள் என அனைத்து பிரிவினரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கிப் போராடினால்தான் இத்தகைய சதித்திட்டங்களை முறியடிக்க முடியும். அப்போதுதான் நம் வாழ்வில் விடிவு கிடைக்கும். கார்ப்பரேட்-காவி பாசிச ஆட்சியை எதிர்கொள்ளாமல் விடுதலை இல்லை என்பதை உணர்ந்து களத்தில் இறங்குவோம். இந்த கார்ப்பரேட் ஆதரவு பார்ப்பன பாசிசக் கும்பலை விரட்டி நம்முடைய வாழ்வு உரிமையைப் பாதுகாப்போம்” என தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்ததாக, அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாநிலத் தலைவர் மகேஸ்வரன் அவர்கள் தனது உரையில், “மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற கார்ப்பரேட் நலனுக்காக இந்தக்கொள்கைகள் ஆபத்தானவை. பொதுத் துறைகளான ரயில்வே, சுரங்கம், வங்கித் துறையை, கூட்டுறவு வங்கிகளை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைப்பது என்பது இந்த மக்களை முட்டாள்களாக மாற்றி கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களாக மாற்றுகின்ற ஒரு அவல நிலைக்கு தள்ளிக் கொண்டு இருக்கின்றது அரசு . ஆகவே இதை அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, போராடுகின்ற இந்த சங்கங்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்குவோம். அப்பொழுதுதான் நமக்கு விடிவு” என்று தனது உரையை நிறைவு செய்தார். அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத்தலைவர் தோழர் சம்சுதீனும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இறுதியாக, பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் சுரேஷ் நன்றியுரை கூறி நிறைவு செய்தார். நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கடைகளிலும் பாலத்தில் நின்றும் ஆர்ப்பாட்டத்தை கவனித்து ஆதரவளித்தனர்.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி. தொடர்புக்கு : 89030 42388.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மனித வளத்துறையில் பொது மேலாளராக உள்ள திருவாளர் விக்ரமன் தனது பதவியைப் பயன்படுத்தி இந்த கொரோனா காலத்தில் மிகப் பெரிய ஊழலை நடத்தியிருப்பது நெய்வேலி தொழிலாளர்கள் மத்தியிலும், பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை கொண்ட சமூக செயல்பாட்டாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள 348 பொதுத்துறை நிறுவனங்களில் முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள என்.எல்.சி., இன்று இது போன்ற ஊழல் நிறைந்த அதிகார வர்க்க முதலாளித்துவத்தால் மெல்ல மெல்ல அழிந்து கொண்டுள்ளது. 1956 முதல் பொதுத்துறை நிறுவனமாக செயல்படும் என்.எல்.சி. ஓர் ஆண்டுக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தியும், அன்றாடம் 3640 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய திறந்த வெளி நிலக்கரி சுரங்கமான இதன் சொத்து மதிப்பு 27,509.38 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனம் தொடங்கிய போது ‘உள்ளே சென்றால் பிணம், வெளியில் வந்தால் பணம்!’ என்று அறிவிக்கப்பட்டு சில ஆயிரம் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியது.
இன்று 12,675 பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாகவும், ஏறக்குறைய பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் உள்ளனர். இந்த பொதுத்துறை நிறுவனம் தொடங்கி 64 ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் இரத்த வேர்வையில் இன்று நவரத்தினங்களுள் ஒன்றாக உருவாகியுள்ளது.
ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் வளர்ச்சி, அதில் உழைக்கும் தொழிலாளர்களின் ஈடுபாட்டான உழைப்பால் உருவாகிறது என்பதை இந்த நிறுவனம் நெய்வேலி லிக்நைட் கார்ப்பரேசனாக இருந்து அதன் கிளைகளை தூத்துக்குடி, பர்க்சிங்சார்-ராஜஸ்தான், மற்றும் உபி, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும் உற்பத்தியைத் துவங்கியும், உற்பத்தியை விரிவுபடுத்தவும் தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் என்.எல்.சி இண்டியா-வாக வளர்ந்துள்ளதில் இருந்து நாம் அறியலாம்.
தொழிலாளர்களின் ஈடுஇணையற்ற உழைப்பைப் புரிந்து கொள்ள 1962 – ல் துவக்கப்பட்ட முதல் அனல் மின் நிலையத்தின் ஆயுட் காலம் மற்றும் செயல்படும் திறன் முடிவடைந்த பிறகும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதிலிருந்து அறியலாம். 1992ல் இதன் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னரும் 92 முதல் 99 வரை 7 ஆண்டுகள் முதல் அனல் மின் நிலையத்தை நவீனப்படுத்தி அதன் உற்பத்தித் திறனையும் அதன் ஆயுட் காலத்தையும் மேலும் 15 ஆண்டுகள் நீடித்தனர். பாய்லர் உற்பத்தியில் உலகிலேயே புகழ் பெற்ற மற்றொரு பொதுத் துறை நிறுவனமான பெல்-லின் துணையுடன் இந்த முதல் அனல் மின் நிலையம் 600 மெகாவாட் மின்னுற்பத்தி செய்து தருகிறது.
2020 முதல் காலாண்டில் தனது வளர்ச்சியின் மூலம் நிலக்கரி உற்பத்தியில் 2,574.65 கோடி மற்றும் மின்னுற்பத்தியில் 9133.28 கோடி என வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான ஓராண்டு உற்பத்தி மற்றும் விற்பனை வளர்ச்சி 13.58% ஆகும். இதற்கப்பாற்பட்டு என்.எல்.சி.யில் பணி புரியும் பொறியாளர்கள், தொழிலாளர் குடும்பங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், ஆயிரக்கணக்கான பொறியாளர்கள், இளம் விஞ்ஞானிகள், விளையாட்டு வீர்ர்கள் உருவாகியுள்ளனர். தனியார் என்பதுதான் திறனானது, பொதுத் துறை என்றால் மட்டமானது என்ற இந்திய மேல்தட்டு வர்க்கத்தின் பொதுப் புத்தியை செருப்பால் அடித்தது போல மேற்கண்ட பல துறைகளிலும் சாதனையாளர்களை உருவாக்கி சாதனை புரிந்துள்ளது.
மேலும் இது ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி இனத்தவர்களின் வேலை வாய்ப்பிற்கும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. மேலும் என்.எல்.சி தனது சோசியல் ரெஸ்பான்சிபிளிட்டி என்ற பொறுப்பில் சுற்று வட்டார கிராம மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தின் கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக பள்ளி, கல்லூரிகளை இயக்கி வருகிறது. இத்தகைய சாதனைகள் பல கொண்ட இந்த பொதுத்துறை நிறுவனத்தை தற்போது இரு பெரும் அபாயங்கள் சூழ்ந்துள்ளது.
ஒன்று, இந்தியா சுதந்திரம் வாங்கியதாக கூறப்பட்ட 1947க்குப் பிறகு அப்போதைய பிரதமராக இருந்த நேரு காலத்தில் கனரகத் தொழில்களின் வளர்ச்சி தான் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் என்ற நோக்கத்துடன் பொதுத் துறைகள் உருவாக்கப்பட்டது. குறிப்பாக 1956 – 60 இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்திலும் மற்றும் அரசின் தொழிற் கொள்கை 1956ன் படியும் மத்திய அரசே நேரடி பொறுப்பெடுத்துக் கொண்டு பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. 1951 ல் வெறும் 5 நிறுவனங்கள் மட்டுமே பொதுத்துறையாக இருந்தது தற்போது 348 நிறுவனங்கள் பொதுத்துறையாக உள்ளன.
1990 களில் நமது நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளின்படி லாபமீட்டும் பொதுத் துறைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பது என்ற நாசகாரத் திட்டத்தின்படி என்.எல்.சி. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. முதல் படியாக ஜீரோ யூனிட்டை அமெரிக்க தனியாருக்கு தாரை வார்க்கத் தொடங்கியது. தொடர்ந்து சுரங்க மேல்மண் நீக்கம் உள்ளிட்டு அனைத்தையும் தனியார்களுக்கு வழங்கியது. இப்போது தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களின் மின் தேவையை சுயசார்பாக நின்று ஈடுகொடுத்து வரும் நெய்வேலியை அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் விருந்து வைக்க முடிவெடுத்து வாரிக் கொடுக்க முடிவு செய்திருப்பது தேசத் துரோகமாகும்.
ஒரு ஆண்டிற்கு 1500 கோடி முதல் 2000 கோடி வரை லாபமீட்டிக் கொடுக்கிறது என்.எல்.சி.. 2025ல் நாளொன்றுக்கு 20,000 மெகாவாட் உற்பத்தி இலக்கை குறிக்கோளாகக் கொண்டு இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள நிலக்கரி மற்றும் மின்னுற்பத்தி நிலையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்வதன் மூலமும், தானே நேரடியாக மின்னுற்பத்தி நிலையங்களைத் தொடங்குவதன் ஊடாகவும் தனது இலக்கை அடைய செயல்பட்டு வருகிறது. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி தென்னகத்தின் மின் தேவையை ஈடுசெய்து வளர்ந்து வரும் என்.எல்.சி. நிறுவனத்தை கார்ப்பரேட்டுகளிடம் கொடுப்பதை தடுத்து நிறுத்த பெரும் கிளர்ச்சியில் இறங்க வேண்டியுள்ளது..
1934ல் தனது நிலத்தில் கிணறு தோண்டுவதற்காக முயற்சித்தபோது நிலக்கரி கிடைப்பதை அறிந்த ஜம்புலிங்க முதலியார் பிரிட்டன் அரசிடம், மண்ணியல் ஆய்வாளர்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்து தனது சொந்த நிலம் 630 ஏக்கரை அப்போதிருந்த சென்னை மாகாண அரசிற்கு தானமாகக் கொடுத்தார். காலனியாதிக்கத்திலும் நாட்டிற்குப் பயன்படட்டும் என்று தனது நிலத்தை தேசப்பற்றுடன் ஜம்புலிங்க முதலியார் எழுதிக் கொடுத்தார். ஆனால் ‘சுதந்திர இந்தியா’வில் பிரதமரான மோடியோ சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் பாதுகாப்பு சட்டத்தைத் திருத்தி நிலக்கரி உள்ளிட்ட சுரங்கங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வாரிக் கொடுக்கிறார். இந்த லட்சணத்தில் சுயசார்பு பொருளாதாரம் என்று வேறு கதையளக்கிறார். மோடி கும்பல் கார்ப்பரேட்டுகளுக்கு என்.எல்.சியை வாரிக் கொடுப்பதை அனுமதிக்கப் போகிறோமா? நிச்சயம் கூடாது.
இரண்டாவதாக, தற்போது 28வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ராகேஷ் குமார் காலம் வரை இதற்கு முன்பு நெய்வேலி அதிபர்களாக பணி புரிந்தவர்கள், பொது மேலாளர்களாகப் பணி புரிந்தவர்கள் மற்றும் பல பொறுப்புகளிலிருந்த உயர் அதிகாரிகள் பலரும் ’பொன்முட்டையிடும் வாத்தான’ பொதுத்துறை என்.எல்.சி.யை அறுத்து கறியை சுவைப்பதற்கு வெறியுடன் அலைந்தனர். அந்தப் பட்டியலில் திருவாளர் விக்கிரமனும் தற்போது இடம் பிடித்துள்ளார்.
ஒரு பருந்துப் பார்வையில் இந்த வரலாற்றை சற்று பார்ப்போம்!
1956 முதல் 2010 வரை பொறுப்பில் இருந்த அதிகாரிகள் பலரும் ஊழல் பெருச்சாளிகளாக இருந்து தொடர்ந்து என்.எல்.சியை நட்டத்தில் இயக்கி வந்தனர். ஜெர்மன், இங்கிலாந்து போன்ற அய்ரோப்பிய நாடுகளில் இருந்தும் ரசியாவில் இருந்தும் காலாவதியாகிப் போன சுரங்க அகழ்வு கருவிகளை வாங்கி தொழிலாளர்களை பலி கொடுத்தனர்.
2010ல் என்.எல்.சி. உயர் அதிகாரியான திருவாளர் கிருபானந்தன் சென்னையில் உள்ள நெய்வேலி ஹவுஸ்-ஐ மேன்மைப்படுத்துவதில் ஈடுபட்ட சிவில் காண்ட்ராக்டரிடம் ரூ 50,000 லஞ்சம் கேட்டு கையும் களவுமாகப் பிடிபட்டார். அப்போது சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் ரூ.32 லட்சம் பணமாகவும், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளது என வழக்கு பதியப்பட்டு 8 ஆண்டுகள் வழக்கு நடந்தது. அதன் பிறகு உயர் நீதி மன்ற நீதிபதி நீலகண்ட பிரசாத் மூலம் திருவாளர் கிருபானந்தம் தனது வருவாய்க்கு அதிகமாக ரூ.39.48 லட்சம் சொத்து சேர்த்துள்ளார் என நிரூபிக்கப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனையும், 25,000 அபராதமும் விதிக்கப்பட்டார். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகும்.
2011ல் அப்போதைய அதிபரான அன்சாரி மீது AICCTU செல்வராஜ் என்ற தொழிலாளி இரண்டாம் சுரங்க பணிகளுக்காக கன்வேயர் மற்றும் கன்வேயருக்கான சாதனங்கள் வாங்கியதில் 10,000 கோடி ஊழல் செய்ததாக சென்னை உயர் நீதி மன்றத்-தில் வழக்கு பதிவு செய்தார். இந்த ஆவணங்களின் அடிப்படையில் அப்போதைய நீதிபதி யூசுப் அலி அன்சாரியின் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் நெய்வேலியில் சிபிஐ புகுந்து பல இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது ஊழலுக்கு பல சான்றாதாரங்கள் கிடைத்தது. ஆனாலும் அவர் மீது வழக்கு பதியப்படாமல் காப்பாற்றப்பட்டார்.
அதன் பிறகு என்.எல்.சி. அதிபராக பொறுப்பேற்ற பூபதி பல கோடி ஊழல் செய்தார் என்று பணிக்காலத்திலேயே பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அது போலவே பைனான்சியல் டைரக்டராக இருந்த திருவாளர் நரசிம்மன் காலத்தில் பலகோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகினார். 1999ல் என்.எல்.சி அதிபராக இருந்தவர் மீதும் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை பதிவு செய்துள்ளது
2009ல் ஏ.ஐ.டி.யூ.சி யின் கடலூர் மாவட்ட செயலரான சேகர் சி.பி.ஐ க்கு அனுப்பிய புகார் மனுவில் அப்போது நடந்த பொறியாளர் பயிற்சி ட்ரெயினிங் பணியிடங்களுக்கு தேர்வுக்கான வினாத்தாள்களை அப்போது பொறுப்பில் இருந்த பொது மேலாளர்கள் மற்றும் பொறியாளர் சந்திரபாபு உள்ளிட்டோர் விற்று காசு பார்த்தனர். ஒரு வினாத்தாளுக்கு ரூ. 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை போட்டியில் பங்கெடுத்த மாணவர்கள் லஞ்சம் கொடுத்துள்ளனர். இது பற்றி சேகர் பொதுக்கூட்டம் ஒன்றில் அம்பலப்படுத்தி பேசினார். இந்த ஊழல் அம்பலமானவுடன் அப்போதைய ஜீ.ஈ.டி தேர்வே ரத்து செய்யப்பட்டது.
இந்த வரிசையில் டவுன்சிப் நிர்வாகத்தில் இருந்த ஓ.சிங்கார தியாகராசன், பொது மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து கொண்டு தொழிலாளிகள், அதிகாரிகளுக்கு சின்னச்சின்ன நோய்களுக்கு கூட பிரதாப் ரெட்டியின் அப்பல்லோ, வெங்கையா நாயுடுவின் குளோபல், சாராய உடையாரின் ராமச்சந்திரா போன்ற நட்சத்திர மருத்துவமனைகளுக்கு அனுப்பி காசு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதே போல, தரமற்ற பாய்லர் உதிரி பாகங்களை வாங்குவதன் மூலம் இந்த கொரோனா காலத்தில் இரண்டு முறை பாய்லர் வெடித்துச் சிதறி தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொது திருவாளர் விக்ரமன் மீது தனக்கு ஒதுக்கப்பட்ட சொகுசு பங்களாவில் விதிகளை மீறி அழகு படுத்துவதற்கென்று ரூ.70 லட்சத்தை செலவிட்டுள்ளதாகவும், தான் தங்கியிருக்கும் காலத்தில் ஒரு முறை மட்டுமே வீட்டின் திரைச் சீலைகளை மாற்றுவதற்கு நிறுவனத்தின் சட்ட விதிகள் அறிவுறுத்தியுள்ள போதிலும் அதையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய்க்கு திரைச் சீலைகள் வாங்கி ஊதாரித்தனமாக நிறுவனத்தின் பணத்தை செலவிட்டுள்ளதாகவும் மேலும் பல புகார்களும் வந்துள்ளன. ஜப்பானுக்கு சொந்த முறையில் பயணம் செல்வதாக கணக்கு காட்டிவிட்டு அங்கிருந்து தனது மாமன், மச்சான், உறவுகள் மற்றும் சகபாடிகளிடம் மணிக்கணக்கில் பேசியதற்கான தொலைபேசித் தொகை லட்சக்கணக்கான ரூபாயை என்.எல்.சி தலையில் கட்டியுள்ளார்.
இதற்கெல்லாம் மேலாக பல்வேறு பணி நியமனங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு நியமனத்திற்கும் பத்து லட்சம் முதல் 40 லட்சம் வரை கல்லா கட்டி வருகிறார். குறிப்பாக தலைமை மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பதவிகளுக்கு உரிய தகுதி உடையவர்களை என்.எல்.சி. அல்லது அதற்கு இணையான பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இவர் கேட்கின்ற அளவிற்கு பணத்தைக் கொட்ட முடியாத இந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு பதிலாக பணம் கொழிக்கும் அரசு சாராத நிறுவனங்களிலிருந்து பெரும் தொகை வாங்கிக் கொண்டு இப்பணிகளில் அமர்த்தியுள்ளார். இச்செய்திகள் சமூக வலை தளங்களிலும் இந்து போன்ற தினசரிகளிலும் ஜூனியர் விகடனிலும் வந்து நாறுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் 2019 ஆம் ஆண்டு விஜிலன்ஸ் விழிப்புணர்வு வார கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போதைய காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரத்தின் ஐ.ஜி யான தேன்மொழி ’ஊழல் என்பது வேறு ஒன்றுமல்ல. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சமூக விழுமியங்கள், மதிப்பீடுகளும் மற்றும் உளவியல் பண்புகளும் கறைபட்டு கரைந்து போவதுதான். இது சமூகம் ஆரோக்கியமாக இருப்பதை ஒழித்து விடுகிறது‘ என்று பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த விக்ரமன் நமுட்டு சிரிப்புடன் அதனை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதுடன் அப்போது விஜிலன்சு வெளியிட்ட “லிக்னைட் அய்” இதழில் ‘நமது நாட்டின் ஒவ்வோரு குடிமகனும் ஊழலுக்கு எதிரான போரில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வலிமை மிக்க, ஊழலற்ற, சுதந்திர இந்தியாவைக் கட்டியமைக்க உதவ வேண்டும்’ என்று வேறு திருவாய் மலர்ந்திருந்தார்.
பொதுவாக பொதுத் துறை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்களை கண்டு பிடிப்பதென்பது கள்ளக் காதலுக்கு சாட்சியத்தை கண்டு பிடிப்பதைப் போல சிக்கலானது. மேலிருந்து கீழ் வரை அனைத்து மட்டங்களிலும் அவரவர் தகுதிக்கும் திறனுக்கும் ஏற்ப ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதால் ஒருவரையொருவர் விட்டுக் கொடுப்பதில்லை. குறிப்பாக என்.எல்.சி போன்ற நிறுவனங்களில் ஊழல் மற்றும் நன்னடத்தை, வதந்திகள், அவதூறுகள் போன்றவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விஜிலன்ஸ் துறையே பலமுறை கேள்விக்குள்ளாகியுள்ளது. எனவே ஆதாரங்களைக் கோப்புகளிலும், வங்கிக் கணக்கிலும், வீடுகளிலும் தேடுவதைக் காட்டிலும் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் உறவுகள், நண்பர்கள், ரகசிய பினாமிகள் போன்றவர்களிடம் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் உயர்ந்துள்ள சொத்து மதிப்புகளைப் புலனறிந்து கையும் களவுமாகப் பிடிப்பதே தீர்வாக இருக்கும். ஆனால் அது இந்த கட்டமைப்பிற்குள் சாத்தியமா என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான என்.எல்.சி இன்று நவரத்தினங்களில் ஒன்றாக திகழ்கிறது. தொழிலாளர்களின் அளப்பரிய தியாகத்தினாலும், அர்ப்பணிப்பு உணர்வினாலும் மகா ரத்னா அந்தஸ்த்துக்கு முன்னேறிவரும் வேளையில் தனியார்மயம் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளும், ஊழல் முறைகேடுகளால் உயர் அதிகாரிகளான அதிகார வர்க்க முதலாளிகளும் கொழுத்து திரிவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதிப்பது அடுத்த தலைமுறைக்கும் நாட்டுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
ஆன் – லைன்கல்வி : தனியார்பள்ளிகளின்பிடியிலிருந்து மாணவர்களைமீட்போம் !
அன்பார்ந்த பெற்றோர்களே, மாணவர்களே!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வைத்ததன் மூலம் கொரோனா பெருந்தொற்று அச்சத்தில் இருந்து 10 லட்சம் மாணவர்களைக் காப்பாற்றினோம். இப்போது தனியார் பள்ளியில் படிக்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவர் மீதும் ஒரே இரவில் ஆன் – லைன் கல்வி திணிக்கப்பட்டுள்ளது. இன்னொருபக்கம், கோடிக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. என்ன செய்யப் போகிறோம்?
கொரோனா பெருந்தொற்று அபாயம் காரணமாக கடந்த மார்ச் – 24 ந்தேதி முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இன்றுவரை நீட்டிக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று அதிகரிப்பதால் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று யாராலும் கணிக்க முடியாதபடி ஒரு நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இவை எதைப்பற்றியும் கவலையின்றி தனியார் பள்ளிகள் ஜூன் -1 ந் தேதி ஆன் – லைன் வகுப்புகளை தொடங்கி வசூல் வேட்டை நடத்துகின்றன.
ஆன்லைன்கல்வி : மாணவர்கள்மீதானவன்முறை!
வழக்கமான பள்ளி நேரம் போல் காலை 9 மணி முதல் 4 மணி வரை ஆன் – லைன் வகுப்புகள் நடக்கின்றன. மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்து கொண்டு செல்போன், லேப்டாப் முன்பு அமர வேண்டும். 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுடன் பெற்றோர்களும் உட்கார வேண்டும். வகுப்புக்கு இரண்டுமுறை அட்னன்ஸ்.
வகுப்பின் போது ஆடியோ அல்லது வீடியோ எதாவது ஒன்று சரியாக கிடைக்காது. நெட்வொர்க் கிடைக்காது, நெட்வொர்க் கிடைத்தால் வேகம் இருக்காது. புரிகிறதோ இல்லையோ ஆசிரியர்கள் நடத்துவதைக் கவனித்து நோட்ஸ் எடுக்க வேண்டும். கடந்த ஒரு மாத அனுபவத்தில் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருக்கும் ஒரு சித்திரவதையாக இருப்பதாக சொல்கிறார்கள். கற்றல் கற்பித்தல் என்ற ஆரோக்கியமான கல்விக்கான அடிப்படைகள் இதில் எங்கே உள்ளது? இது மாணவர்கள் மீது திணிக்கப்படும் வன்முறை இல்லையா?
ஆன் – லைன்கல்வியின்பெயரில்கட்டணக்கொள்ளை!
ஆன் – லைன் வகுப்புகளைக் காட்டி கடந்த ஏப்ரல் மாதம் முதலே கல்விக் கட்டணங்களை வசூலிக்க ஆரம்பித்துவிட்டன தனியார் பள்ளிகள். பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடும் என்ற அச்சத்தில் பெற்றோர்கள் பல ஆயிரம் கடன் வாங்கி கட்டணங்களைக் கட்டி வருகிறார்கள். உடனடியாக பணம் கட்டாத மாணவர்கள் ஆன் – லைன் வகுப்புகளில் இருந்து ஈவிரக்கமின்றி வெளியேற்றப்படுகிறார்கள். பள்ளிகளைத் திறக்கும் முன் கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் அறிவிப்பை மதிக்கவில்லை தனியார் பள்ளிகள்.
அரசு அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு. ’’கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதான் சொன்னோம், பெற்றோர்கள் தாமாக முன் வந்து கல்விக்கட்டணம் கட்டினால் வாங்கிக் கொள்ளலாம்.’’ என பின்வாங்கிக் கொண்டது தமிழக அரசு. மூடிக்கிடக்கின்ற பள்ளிக்கு என்ன செலவு இருக்கின்றது. ஏன் கல்விக்கட்டணம் கட்ட வேண்டும்? முடியாது என்று சொல்வது நமது உரிமை.
ஆன் – லைன்கல்வி: விழிபிதுங்கிநிற்கும்பெற்றோர்கள்!
ஆன் – லைன் வகுப்புக்கு தனியாக ஆண்ட்ராய்டு செல்போன் அல்லது லேப்டாப் தேவை. குறைந்தது 10 ஆயிரம் இல்லாமல் வாங்க முடியுமா? ஒரு நாள் வகுப்புக்கு 5 முதல் 10 ஜி.பி டேடா செலவாகிறதாம். இதற்கு குறைந்தது மாதம் 1000 ரூபாய் செலவாகும். இரண்டு மூன்று பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களின் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த மக்களை கொரோனா – ஊரடங்கு நடுத்தெருவுக்கே கொண்டு வந்துவிட்டது. அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லை என்றாலும், கல்விக்கட்டணம், ஆண்ட்ராய்டு செல்போன், இணைய வசதி என பல ஆயிரங்களை செலவு செய்துதான் ஆகவேண்டும் என்கிற இந்த ஆன் – லைன் கல்வியை யார் கேட்டது?
மாணவர்களைஎந்திரங்களாக்கும்ஆன் – லைன்கல்வி!
மாணவர்கள் செல்போன் – லேப்டாப்பை தொடர்ந்து பார்ப்பதால் கண் திரை, உடல்நிலை, மனநிலை பாதிக்கப்படும், மன அழுத்தம் அதிகரிக்கும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதுமட்டுமல்ல, குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் மாணவர்கள் விலகி நிற்பார்கள், எலெக்ட்ரானிக் பொருட்களை சார்ந்து வாழ பழக்கப்படுத்தப்படுவதால் மனித உணர்வும், சமூக உணர்வும் அற்ற எந்திரங்களாக மாறிவிடுவார்கள் என்று அச்சப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.
ஆன் – லைன் வகுப்புக்கு பெற்றோர்கள் செல்போன் கொடுக்காததால் கோவை, சிதம்பரத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இவ்வளவு அபாயம் நிறைந்த ஆன் – லைன் கல்விக்கு தடைபோட முடியாது என்கிறது நீதிமன்றம்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஆன் – லைன்கல்விஅபாயத்திலிருந்துமாணவர்களைமீட்போம் !அனைவருக்கும்சமமானகல்விகிடைக்கப்போராடுவோம் !
’’கொரோனாவினால் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன, இந்தக் கல்வியாண்டே வீணாகிவிட்டது, ஆன் -லைன் கல்வியும் வேண்டாம் என்றால் மாணவர்களின் படிப்பு பாழாகிவிடும்?’’ என்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறார்கள் தனியார்பள்ளி முதலாளிகள். மாணவர்களின் படிப்பு பாழாகிவிடும் என்ற அக்கறை இருந்தால் அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
சுமார் 40 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல லட்சம் மாணவர்களுக்கு கல்வி கொடுக்க எந்தவொரு ஏற்பாடும் இல்லையே, இதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாமா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் “ஆன் – லைன் கல்விக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை. அரசுப்பள்ளியில் நடப்பதில்லை.” என்று பொறுப்பற்று ஒதுங்கிக்கொள்கிறார்.
அமைச்சர் செங்கோட்டையன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாட்சப் குழுக்களை உருவாக்குகிறோம் என்று வாயால் வடை சுடுகிறார். தனியார்பள்ளி முதலாளிகளின் கைக்கூலிகளான இவர்களிடம் இதற்குமேல் என்ன எதிர்பார்க்க முடியும்?
கல்வியில் தனியார்மயத்தை தீவிரப்படுத்தி வரும் மோடி அரசோ, ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள புதிய கல்விக்கொள்கையை குறுக்குவழியில் அமுலுக்கு கொண்டுவர துடிக்கிறது. அரசு கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டிவிட்டு, கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள், மூக் (MOOC) போன்ற பன்னாட்டு ஆன் – லைன் கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்கும் ஆதிக்கத்திற்கும், வழி வகுப்பதுதான் அந்த புதிய கல்விக்கொள்கை. அதன் ஒரு பகுதிதான் சமீபத்தில் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த “இ.வித்யா திட்டம்” அதாவது, ஆன் –லைன் கல்வி.
வசதிபடைத்த மாணவர்களுக்கு கல்வி, ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி இல்லை என்பதுதான் ஆன் – லைன் கல்வி ஏற்படுத்தும் ஆபத்துகளில் மிகவும் முக்கியமானது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகரிக்க வழிவகுக்கும், பெரும்பான்மை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் ஆன் – லைன் கல்வியை திட்டத்தை முறியடிப்போம்.
தனியார்பள்ளிகளின் பிடியில் இருந்து மாணவர்களை மீட்போம். தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு முடிவுகட்ட அவைகளை அரசுடைமையாக்கப் போராடுவோம். இந்த கொரோனா காலத்தில் கேரளாவில் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதைப்போன்று ஒரு மாற்று வழியை சமமாக அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களைக் கொண்ட குழு அமைத்து மாற்றுக் கல்விக்கான திட்டத்தை உருவாக்கி அமுல்படுத்த போராடுவோம்! வாரீர்!!
சாத்தான்குளம் படுகொலை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காவல் கொட்டடி கொலைகளை காவல்துறையே விசாரிப்பதா?
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 06.07.2020
நேரம் : காலை 11 மணி
இடம் : சென்னை உயர்நீதிமன்றம், ஆவின் பாலகம் வாயில்.
பிரகாஷ்சிங் வழக்கில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி குற்றமிழைத்த போலீசாரை விசாரிக்க தனி அமைப்பை உருவாக்கப் போராடுவோம்!
ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை 6 மாதத்திற்குள் விரைந்து நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க போராடுவோம்!
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தமிழக அரசே!
★ காவல் நிலையத்தின் நீதித்துறை நடுவர் விசாரணையில் அத்துமீறி, இடையூறு செய்த ADSP குமார், DSP பிரதாபன் மீது இ.த.ச.பிரிவுகள் 143, 353, 506(ii)ன் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்!
★ நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ADSP குமார், DSP பிரதாபனை பாதுகாக்காதே, துறை ரீதியான நடவடிக்கை எடு!
★ பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு போலீசு ராஜ்ஜியத்தை கட்டவிழ்த்து விட்ட சாத்தான்குளம் படுகொலையின் முதன்மைக் குற்றவாளி
‘தெர்மாகோல்’ கலெக்டர் சந்தீப் நந்தூரியின் மீது குற்ற / துறை ரீதியான நடவடிக்கை எடு!
★ மதவெறி RSS சேவாபாரதி ‘குண்டர்களை’ காவல் நண்பர்கள் குழுவில் சேர்த்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! சட்டவிரோத ‘காவல் நண்பர்கள்’ அடியாள் படையை கலைத்திடு!
★ காவல்துறைக்கு உடந்தையாக பொய்யாக மருத்துவச் சான்றளித்த அரசு மருத்துவர் வெண்ணிலா மற்றும் கோயில்பட்டி கிளைச்சிறை ஜெயிலர் ஆகியோர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடு!
★ உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும், உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் ‘ரிமாண்டுக்கு’ உத்தரவிட்ட சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் சரவணன் மீது துறைரீதியான நடவடிக்கை எடு!
வழக்கறிஞர்களே!!
★ மூத்த வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்ட தமிழகம் தழுவிய ‘பாதுகாப்பு அமைப்புகளை’ உருவாக்குவோம்!!
★ காவல்துறையின் காட்டு தர்பாருக்கு முடிவு கட்டுவோம்!
இவண் :
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்.
தொடர்புக்கு :
9841399900, 9994555016, 9444141925, 9842812062.
***
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
சாத்தான்குளம் இரட்டைக்கொலை : விசாரிக்கச் சென்ற நீதிபதியை மிரட்டிய காவல்துறையை கண்டித்தும், குற்றவாளிகளை கொலை வழக்கில் கைது செய்ய கோரியும்; தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு கடந்த 30-06-2020 அன்று மதியம் 12.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
***
கோவை வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் !
சாத்தான்குளம் : ஜெயராஜ்-பென்னிக்ஸ் இரட்டை படுகொலையை கண்டித்து கோவை வழக்குரைஞர்கள், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயில் முன் கடந்த 29/06/2020 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
***
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம்!
சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை செய்த நீதித்துறை நடுவர் திரு. பாரதிதாசனை அவதூறாக பேசி விசாரணைக்கு இடையூறாக இருந்து மிரட்டி காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம்!
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
தேனி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை செய்த நீதித்துறை நடுவர் திரு. பாரதிதாசனை அவதூறாக பேசிய போலீசை கைது செய்!
விசாரணைக்கு இடையூறாக இருந்து மிரட்டி காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து, தேனி வழக்கறிஞர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம்!
***
சாத்தான்குளம் படுகொலைகள் : திருநெல்வேலி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
சாத்தான்குளம் படுகொலைகள் தொடர்புடைய காவல் துறையினரைக் கண்டித்து திருநெல்வேலி நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தந்தை – மகனை கொலை செய்த போலீசாரை டிஸ்மிஸ் செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்! சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்! என வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
சாத்தான்குளம் : திண்டுக்கல் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!
சாத்தான்குளம் இரட்டை படுகொலையை கண்டித்தும் , சாத்தான்குளம் படுகொலை வழக்கை உயர்நீதிமன்ற உத்திரவுபடி விசாரிக்க சென்ற நீதித்துறை நடுவர் அவர்களை “உன்னால் ஒன்னும் புடுங்கமுடியாது டா” என பேசி நீதித்துறையை அசிங்கபடுத்திய காவலர் மகாராஜன்; அவ்வாறு பேச சொல்லி வேடிக்கை பார்த்த ADSP குமார் மற்றும் DSP பிரதாபன் ஆகியோரை பணிநீக்கம் செய்தும், கைது செய்து சிறையில் அடைக்கவும், வலியுறுத்தி திண்டுக்கல் வழக்குரைஞர் சங்கம் சார்பாக 01-07-2020 புதன் அன்று காலை 11-00 மணியளவில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பிற மாநிலங்களில் இருந்து பீகார் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்கதியாக இருக்கும் நிலையில், அவர்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அடுத்த தேர்தலுக்கு படோடோபமாகத் தயாராகி வருகிறது ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி அரசு.
இந்தியா முழுவதும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டு தொழில்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்குத் திரும்பியுள்ளனர். குறிப்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்துதான் இந்தியா முழுவதும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் குறைவான கூலிக்குப் பணி செய்ய புலம்பெயர்ந்து செல்கின்றனர்.
கடந்த 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பீகாரில் சுமார் 71.48 லட்சம் மக்கள் சொந்த ஊர்களில் இருந்து புலம் பெயர்ந்திருக்கிறார்கள். இதில் சுமார் 53 லட்சம் பேர் வெளிமாநிலங்களுக்கு வேலைதேடி புலம்பெயர்ந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, இதுவரை சொந்த ஊருக்குத் திரும்பிய சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பீகார் புலம்பெயர் தொழிலாளர்கள் தொழில் செய்வதற்கு எந்தவித மாற்று ஏற்பாடு ஏதும் செய்து தரப்படாமல், வருவாயின்றி நிர்க்கதியாக விடப்பட்டிருக்கிறார்கள். கடந்த மே மாதம் வரை, வெளி மாநிலங்களில் இருந்து பீகாருக்கு உள்ளே வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்திய பீகார் அரசு, ஜூன் முதல் வாரத்தில் அந்த பரிசோதனையையும் நிறுத்தியது.
மொத்தத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் பற்றி கவலைப்படாத ஆளும் நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி அரசு, எதிர்வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் படுசுறுசுறுப்பாக தயாராகி வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் லாலுப்பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இக்கூட்டணி ஆட்சி இரண்டாண்டுகள் நிறைவடையும் முன்னரே, அமித்ஷா – நிதிஷ்குமார் கைங்கரியத்தில் அந்தக் கூட்டணி முறிந்தது.
இந்தக் கூட்டணி உடைப்பு நாடகத்தில், கடந்த 2005-ம் ஆண்டில் லல்லு பிரசாத் யாதவ் இரயில்வே அமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல் வழக்கை தூசி தட்டி எடுத்து முதலில் லல்லுவைக் கைது செய்தது சி.பி.ஐ. பின்னர், இதனையும் துணை முதல்வராக இருந்த லல்லுவின் மகன் மீதான ஊழல் புகாரையும் காரணமாக வைத்து இந்த கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தார் நிதிஷ்குமார்.
ஆளுனரிடம் தனது பதவி விலகலை தெரிவித்து விட்டு திரும்புவதற்குள்ளும் அவரது முடிவை வரவேற்று, அவருக்கு ‘நேர்மையாளர்’ என்ற சான்றிதழ் அளித்தார் மோடி. பீகார் சட்டமன்றத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பலம் 71-ஆக இருந்த நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் 58 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் பாஜக-வின் சுஷில்குமார் மோடியைத் துணைமுதல்வராகக் கொண்டு, பீகார் முதல்வராக நீடித்தார் நிதிஷ்குமார். எதிர்வரும் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கும் ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி தொடர்கிறது. இந்தக் கூட்டணியில் லோக் ஜன்சக்தி கட்சியும் இடம்பெற்றிருக்கிறது.
தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக பீகார் மக்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் பீகாரில் டிஜிட்டல் பேரணியை நடத்தினார் அமித்ஷா. தேர்தலுக்கு இன்னும் 4 – 5 மாதங்களே இருக்கையில், தனது வழக்கமான ‘ஆள்கடத்தல்’ வேலைகளை பீகாரில் செய்துள்ளது அமித்ஷா – நிதிஷ்குமார் கூட்டணி. கடந்த ஜூன் 23 அன்று ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த மேலவை உறுப்பினர்கள் ஐந்து பேர் நிதிஷ்குமார் முன்னிலையில் ஐக்கிய ஜனதாதளத்தில் இணைந்துள்ளனர்.
கடந்த மே மாதத்திலேயே, பாஜகவின் மாநில கட்சித் தலைமை மற்றும் தேசிய தலைமை வட்டாரத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தேர்தல் பிரச்சார வியூகம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. அக்கூட்டத்திலேயே 224 தொகுதிகளுக்குமான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டது பாஜக.
டிஜிட்டல் படையெடுப்போடு இந்தத் தேர்தலுக்கு பாஜக தயாராக இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாட்சப் (Whatsapp) குழு என்ற வகையில் மொத்தம் 72,000 வாட்சப் குழுக்கள் தொடங்கவுள்ளதாகவும், அதன் மூலம் மோடி உள்ளிட்ட தலைவர்களின் பேச்சுக்கள் மற்றும் பல்வேறு வடிவிலான பிரசாரங்களை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ‘தி பிரிண்ட்’ இணையதளம் பீகார் பாஜக தலைவர் ஒருவருடன் பேசியதிலிருந்து தெரிய வந்ததாக வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாஜகவின் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரச்சாரத் திட்டம் மலைக்கச் செய்கிறது.
இத்திட்டத்தின் படி, மொத்தம் 72,000 வாட்சப் குழுக்கள், 9500 சக்தி கேந்திரங்கள் மற்றும் அவற்றுக்கான தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவர்களுடன் பாஜக தேர்தலில் களமிறங்க உள்ளது. மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலேயே இந்த 72,000 குழுக்களில் 50,000 குழுக்கள் உருவாக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள குழுக்களும் விரைவில் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார், பாஜக-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ஒருவர்.
இந்த 72,000 வாட்சப் குழுக்களை 9500 சக்தி கேந்திரங்களின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர்கள் இயக்குவார்கள் என்றும் இவர்கள் பாஜக-வின் தேசிய ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியாவின் கீழ் இயங்குவர் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு சக்தி கேந்திரத் தலைவருக்கும் கீழ் 6 முதல் 7 வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்படும்.
‘தி பிரிண்ட்’ இணையதளத்திற்கு தகவல் கூறிய பாஜக ஐ.டி. பிரிவைச் சேர்ந்தவர் “டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாஜக பல ஆண்டுகளுக்கு முன்னரே இதனைச் செய்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாயின் பேச்சுக்குரலை தொலைபேசி வழியாகக் கொண்டு சென்றது முதல் இன்று 3D வேன்கள் மூலம் எங்கள் தலைவர்களின் பேச்சை கொண்டு செல்வது வரையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல தயாராகி இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், மொத்தம் 72,000 வாட்சப் குழுக்கள் என்ற வகையில் ஒவ்வொன்றிலும் 256 பேர் எனக் கணக்கிட்டாலும் கூட தங்களது கருத்துக்களை சுமார் 2 கோடி பேருக்கு கொண்டு சேர்க்க முடியும் என்றும் கூடுதலாக இணையம் மூலம் கூட்டங்கள் நடத்த “ஜூம்” போன்ற இணையவழி காணொளி சந்திப்புக்கான உரிமம் பெற்றிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பாஜக-வின் தேர்தல் பிரச்சாரத்தில் முதற்கட்டமாக, 72,000 வாக்குச் சாவடிகளிலும் மின்னணு திரைகள் வைத்து மாநிலம் முழுவதும் அமித் ஷாவின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது. மேலும் இந்தத் தேர்தலில் முப்பரிமாண ஒளி அமைப்பின் (3D Display System) மூலம் பாஜக தலைவர்களின் பேச்சை பீகாரின் அனைத்து மூலை முடுக்குகளிலும் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக்கிறது பாஜக.
பெரும்பான்மை பீகார் மக்கள், அடுத்தவேளை உணவுக்கு வழியின்றி, ஊரடங்குக்குப் பின்னர் தமது வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கையில் அதற்கான தீர்வையோ, அதற்கான நிவாரணங்களையோ பற்றி துளிகூட அக்கறையற்ற நிதிஷ்குமார் – பாஜக கும்பல், இன்னும் 5 மாதத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கு இப்போதே திட்டம் தீட்டி களத்தில் இறங்கியிருக்கிறது. கொரோனா சூழலில் பசியாலும் வறுமையாலும் வாடும் மக்களுக்கு முன்னால் டிஜிட்டல் திரைகள் மூலம் வளர்ச்சிப் பெருமை பீற்றுவதெல்லாம் வக்கிரத்தின் உச்சம் இல்லையா ?
கொரோனா நோய்த்தொற்று வந்த பிறகு உலக பொருளாதாரமே நொறுங்கி விட்டதாக தான் முதலாளித்துவ பொருளாதார மேதைகள் கூறுகின்றனர். ஆனால் யாருடைய பொருளாதாரம்? கொரோனா ஊரடங்கினால் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கீழே விழுந்து விட்டது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களின் செல்வம் மென்மேலும் பல மடங்கு குவிந்துள்ளதே எப்படி?
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.
மார்ச் 18-க்கு பிறகு அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 565 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளதாக வாசிங்டனை சேர்ந்த கொள்கைரீதியான ஆய்வுகள் மற்றும் கிலியர்வாட்டர் (Institute for Policy Studies and Clearwater-IPS) என்ற சிந்தனை குழாம் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் அவர்களது செல்வம் 19 விழுக்காடு பெருகியுள்ளதா அதன் அறிக்கை கூறுகிறது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸிற்கு மார்ச் 18 முன்பை விட 36.2 பில்லியன் டாலர் அதிகம் செல்வம் சேர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் தான் 4.3 கோடி அமெரிக்கர்கள் வேலையின்மை காரணமாக புனர்வாழ்விற்காக விண்ணப்பங்களை அளித்திருக்கின்றனர்.
4.3 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்த போதிலும், கொரோனாவின் கோரம் உச்சத்தில் இருந்த போதிலும் நாஸ்டாக் (Nasdaq) குறியீடு என்றுமில்லா அளவில் உச்சத்தை அடைந்தது. அமெரிக்காவில் பணக்காரர்களின் இந்த திடீர் வளர்ச்சி என்பது அமெரிக்க மத்திய வங்கி எடுத்த திடீர் நடவடிக்கையினால் ஏற்பட்ட பங்கு சந்தையின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. கொரோனாவினால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க வட்டி விகிதத்தை ஜீரோவாக குறைத்தது, ஆபத்தான முதலீடுகளாக இருந்தாலும் வரம்பற்ற அளவிற்கு பத்திரங்களை வாங்கி அதை பங்குகளாக மாற்றியது போன்ற நடவடிக்கைகளை மத்திய வங்கி எடுத்தது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் நேரடி தொடர்பிலிருக்கும் மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யப்பட்டது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.
நெருக்கடியின் போது அமேசானின் பங்குகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு உயர்ந்துள்ளன. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இறக்கத்திலிருந்தாலும் அதிகபட்ச வருமான சாதனைகளை பேஸ்புக்கும் பதிவு செய்துள்ளது. பெசோஸைப் போலவே, மார்ச் 18 முதல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் செல்வத்தின் மதிப்பானது 30 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதை IPS அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஃபோர்ப்ஸின் உலகளாவிய பணக்காரர்கள் ஆய்வறிக்கை தகவல்களை அடிப்படையாக கொண்டே இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. ஃபோர்ப்ஸ் ஆய்வறிக்கை வந்த நாளும் அமெரிக்காவின் ஊரடங்கும் மார்ச் 18 ஆக இருப்பதால் அந்த தேதியிலிருந்து இந்த ஆய்வு நடந்தேறியிருக்கிறது.
கடந்த 3 மாதங்களில் டெஸ்லாவின் எலோன் மஸ்க், கூகுள் நிறுவனர்களான செர்ஜி பிரின் மற்றும் லேரி பேஜ், முன்னால் மைக்ரோசாஃப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் ஆகியோரின் சொத்து மதிப்பானது 15 பில்லியனுக்கும் அதிகமாக ஏறியிருக்கிறது. ஜூம்(Zoom) நிறுவன தலைமை அதிகாரியான எரிக் யுவான் சொத்து மதிப்பும் 2.8 பில்லியன் அதிகரித்திருக்கிறது. வால்மார்டின் பங்குதாரர்களான வாட்டன் குடும்பத்தினரின் சொத்து மதிப்பும் சுமார் 3 பில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறது.
இந்த காலக்கட்டத்தில் தான் கிட்டதட்ட 2.85 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். 2008 நெருக்கடியின் போது ஏற்பட்டதை விட இது அதிகம். அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவில் வேலையிழப்பு 20 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு, வேலையிழப்பு, பட்டினி, உயிரிழப்புகள் உள்ளிட்ட நெருக்கடிகள் எளிய மக்களுக்கு தான் இவர்களுக்கல்ல.
ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்டிருக்கும் கொரொனா உலக முதலாளிகளில் ஒருபகுதியினரையும் விட்டு வைக்கவில்லை. இதுவரையில்லாத அளவிற்கு 1,062 பணக்காரர்கள் சொத்து மதிப்பை இழந்துள்ளனர். அவர்களின் 267 பேர் பில்லியனர் தகுதியை இழந்துள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 2019 -ல் 8.9 டிரில்லியனிலிருந்து 2020 -ல் 8 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொற்றுநோய் தன்னுடைய பிடியை இறுக்கிக் கொண்டதால், உலகளாவிய பங்குச் சந்தைகள் வெடித்துச் சிதறின. எஞ்சியிருக்கும் பில்லியனர்களில், 51 சதவீதம் பேர் கடந்த ஆண்டை விட சற்று சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.
கொரோனா நெருக்கடியில் குறைந்த விலை பொருள்களை விற்பனை செய்யும் சீன நிறுவனம் பிண்டுவோடுவின் நிறுவனரான கொலின் ஹுவாங் ஜெங் (Colin Huang Zheng) கடந்த இரண்டு மாதங்களில் அதிக சொத்து ஈட்டியவர்களில் ஒருவர். ஸ்பெயின் சில்லறை வர்த்தக நிறுவனமான ஜாராவின் முதலாளியும் இண்டிடெக்ஸ் இணை நிறுவனருமான அமன்சியோ ஒர்டேகா சற்றே இறக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்.
அதே நேரத்தில் பெர்க்சயர் ஹாத்வே தலைமை நிர்வாக் அதிகாரி வாரன் ப்ஃபெட், உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் மெக்சிகன் தொலைதொடர்பு வாணிபத் துறையில் பெருஞ்செல்வரான கார்லோஸ் ஸ்லிம் ஹெலு ஆகியோர் இந்த நான்கு மாத காலப்பகுதியில் மிகப்பெரிய இழப்புக்களை சந்தித்தவர்கள்.
இந்திய நிலைமை :
ஏழை எளிய உழைக்கும் இந்திய மக்களை கொரொனா பாடாய்ப்படுத்தினாலும் இந்தியரான முகேஷ் அம்பானி உலகில் 8வது உலகப்பெருஞ்செல்வராகி இந்தியர்களுக்கு சற்றே பெருமையைத் தேடித்தந்துள்ளார்(!). அதாவது, கொரோனாவிற்கு முன்பு 9-வது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறியிருக்கிறார். ஏப்ரல் 22 முதல் பல்வேறு ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனெரல் அட்லாண்டிக் உள்ளிட்ட பெரும் உலகளாவிய முதலீட்டாளர்கள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலைபேசி மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்-ல் முதலீடு செய்துள்ளனர்.
உலகிலேயே தடுப்பூசி தயாரிப்பதில் முதலிடத்திலிருக்கும் சீரம் நிறுவனத்தின் சைரஸ் பூனவல்லா உலகிலேயே அதிவேக வளர்ச்சி விகிதத்தில் 5-வது இடம் பிடித்துள்ளார். உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 57 இடங்கள் முன்னேறி 86 வது இடத்தை பிடித்திருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தால் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மருந்தை 100 கோடி எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்க பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் விளைவுகள் என்ன?
உழைப்பில் ஈடுபடும் ஆகப்பெரும்பான்மையான மக்கள் உண்ண உணவு கிடைக்காமல் தவிக்க, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் சொத்துக்கள் மென்மேலும் சேர்வதென்பது சமூகப் பதட்டத்தையும் போராட்டங்களையும் ஏற்படுத்துவதைக் கண்டு பொதுவில் அனைவரும் குறிப்பாக முதலாளித்துவ அறிஞர் பெருமக்களே கவலைப்படுகின்றனர். அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் நடந்த போரட்டங்கள் சமீபத்திய எடுத்துக்காட்டு. “உலகளாவிய தொற்றுநோய்களின் போது பெரும்பணக்கரர்களிடம் மென்மேலும் செல்வம் சேர்வது சமத்துவமற்ற தியாகத்தின் கோரமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவரான சக் காலின்ஸ் கூறுகிறார்.
இந்தியப் பொருளாதாரத்தில் கட்டமைப்பு மந்தநிலை காரணமாக ஏற்பட்டிருக்கும் பாரதூரமான வீழ்ச்சி இந்தியப் பணக்காரர்களின் வளர்ச்சிக்கு இடையூறாகத் தெரியவில்லை. அதே சமயத்தில் வேலையிழப்பு ஏற்பட்ட இந்திய உழைக்கும் வர்க்கம் ஆயிரக்கணக்கான மைல்கள் குறுக்கும் நெடுக்குமாக கால்கடுக்க நடந்து உள்ளங்கால் வெடித்து; வயிறு காய்ந்து மடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. நேரடி உழைப்புச் சார்ந்த தொழில்கள் மண்ணோடு மண்ணாக, வெறும் ஊக வணிகத்தில் ஈடுபடும் சிலரிடம் மென்மேலும் செல்வத்தை சேர்த்தது தான் நவீன முதலாளித்துவத்தின் சாதனை.