சிறுபான்மை மக்களை ஒடுக்கவே CAA அமல்படுத்தப்படுகிறது! | வழக்கறிஞர் ஷேக்முஹம்மதுஅலி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
சிறுபான்மை மக்களை ஒடுக்கவே CAA அமல்படுத்தப்படுகிறது! | வழக்கறிஞர் ஷேக்முஹம்மதுஅலி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
மீண்டும் ஒருமுறை பாசிச மோடி அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக் கருவிகள் தனது கோரப்பற்களை அப்பட்டமாக காட்டி, அடக்குமுறையை ஏவிவிட்டதன் மூலம் விவசாயிகளின் ’டெல்லி சலோ’ பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது எந்தவகையிலும் விவசாயிகளின் போராட்ட உணர்வைக் குறைத்துவிடவில்லை.
வயல்களில் விவசாயம் செய்பவர்களுக்கு எதிரான ஆயுதமாக கண்ணீர்புகைக் குண்டுகளும், ரப்பர் தோட்டாக்களும், பெல்லட் குண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. கன்சர்டினா கம்பிகள், ஆணிகள், கான்கிரீட் தடுப்புகள் என எல்லைகளை விவசாயிகளுக்கு எதிராக பலப்படுத்தியது பாசிச மோடி அரசு. போராட்டக்காரர்களை கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்த சிறைச்சாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
படிக்க : அகதிகளாக்கப்படும் இந்திய உழைக்கும் மக்கள்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!
பாசிச அரசாங்கத்தால் இத்தகைய கடும் அடக்குமுறைகள் செலுத்தப்படுகின்ற அளவுக்கு விவசாயிகளின் கோரிக்கைதான் என்ன? எம்.எஸ்.சுவாமிநாதன் கமிசன் பரிந்துரைத்த வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 50 சதவீதமாக உயர்த்த வேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண்துறையைப் பாதிக்கும் சர்வதேச ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம், 2020-21 போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு, மேற்கு உ.பி.யில் ஜேவர் விமான நிலையத் திட்டம் மற்றும் யமுனா விரைவுச் சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தீர்வு, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் மின்கேபிள்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு என்ற வகையில் விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமைகளுக்காகத்தான் ஒன்றிணைந்துள்ளனர். இந்தப் போராட்டம் என்பது விவசாயிகளின் வாழ்க்கையின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட புறக்கணிப்பின், ஏமாற்றத்தின் உந்துதலே ஆகும்.
உண்மையில் இந்திய விவசாயத்தை ஒரு பயங்கரமான துயரம் சூழ்ந்துள்ளது. MSP க்கான போராட்டம் என்பது வெறும் பொருளாதாரக் கோரிக்கை அல்ல; இந்தியாவில் முழு விவசாயப் பொருளாதாரத்தையும் கைப்பற்றுவதற்கு போட்டியிடும் தடையற்ற சந்தைக் கோட்பாடுகள் மற்றும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சவால் விடும் கோரிக்கையாகும். இந்திய கிராமப்புற விவசாயத்தின் அவலநிலையை அறிந்து கொள்ளும்போதுதான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் (NCRB) அறிக்கையின்படி, 2014-22-க்குள் 100,741 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு 30 தற்கொலைகள்! மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியில், மொத்த விவசாயிகளின் தற்கொலைகள் ஆண்டுக்கு 10,281 இல் இருந்து 11,281 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கவலைக்குரிய வகையில், விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள் ஆண்டுக்கு 4,324 இல் இருந்து 6083 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, 2047 க்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது, பொருளாதார மந்த நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவது என மோடி கும்பல் சுயபுராணங்கள் பாடினாலும், முகத்தில் அறையும் உண்மை என்னவென்றால், இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரமானது மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதாகும். இதனை தொழிலாளர் ஆணையத்தின் உண்மையான ஊதியம் பற்றிய தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
கடந்த ஐந்தாண்டுகளில் (நவம்பர் 2023 வரை) விவசாயக் கூலியானது ஆண்டுக்கு 0.2% என்ற அளவுக்கு மட்டுமே வளர்ந்துள்ளது. அதேசமயம் விவசாயம் அல்லாத ஊதியங்கள் ஆண்டுக்கு 0.9% அளவுக்கு குறைந்துள்ளது.
இந்திய விவசாயத்தில் லாபகரமான விலை கிடைக்காதது ஒரு தொடர் பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பானது (NSSO), SAS (Statistical Analysis System) ஆல் நடத்தப்பட்ட கிராமப்புற இந்தியாவில் விவசாயக் குடும்பங்கள், நிலம் மற்றும் கால்நடை வைத்திருப்பவர்களின் நிலைமை குறித்த மதிப்பீட்டை வெளியிட்டது.
மூன்றில் ஒரு இந்திய விவசாயி தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த தரவு தெரிவிக்கிறது. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணைய் வித்துக்கள் போன்ற பயிர்களை விளைவிப்பவர்கள் மத்தியில் அதிகளவில் அதிருப்தி நிலைமை இருப்பதை தரவுகள் தெரிவிக்கின்றன.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 77வது சுற்று கணக்கெடுப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் கடன் 58% அதிகரித்து, 50% விவசாயக் குடும்பங்கள் கடனில் இருப்பதாகத் தெரிவிக்கின்றது. விவசாய வருமானத்தின் பெரும்பகுதி கூலி என்ற அடிப்படையிலோ, விவசாயம் அல்லாத வணிகத்தின் அடிப்படையிலோதான் இருக்கிறது. இந்த அதிகரித்து வரும் போக்கானது விவசாயிகளை விவசாயத் தொழிலாளர்களாக மாற்றுகிறது அல்லது வேறுவிதமாகக் கூறினால், விவசாயிகளிடையே பாட்டாளிமயமாக்கல் (ஓட்டாண்டிமயமாக்கல்) போக்கு அதிகரித்து வருகிறது.
புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியான தேவீந்தர் ஷர்மாவின் கூற்றுப்படி, பயிர் சாகுபடி மூலம் ஒரு நாள் வருமானம் என்பது வெறும் ரூ.27 மட்டுமே. இது கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளியின் வருமானத்தைவிட குறைவானதாகும். பால் கறக்கும் பசுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட குறைவானதாகும்.
உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை தருவதாக 2014 தேர்தலின் போது வாக்குறுதி அளித்த மோடி, அதன் பின்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் MSP யானது, சந்தையை சிதைத்து விடும் என்று கூறியது. அதன் பிறகு 2016, பிப்22 ல் ‘2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்’ என்று அளந்துவிட்ட வாக்குறுதியும் காற்றில் கரைந்து போனது. இந்தக் காலங்களில் விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை தீவிரப்படுத்தி வந்தது மோடி கும்பல்.
அதேசமயம் தொழிற்துறைத் தொழிலாளர்களின் கட்டமைப்பிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தரவுகள் தெரிவிக்கின்றன. தனியார் முதலீடுகள் குறைவது, கண்ணியமான வருமானம் ஈட்டும் வகையில் வேலைகள் இல்லாதது ஆகியவை பலருக்கும் நெருக்கடியில் உள்ள விவசாயத்தை கடைசி புகலிடமாக்கியுள்ளது. 2017-18 மற்றும் 2022-23 க்கு இடைப்பட்ட காலத்தில் 42 மில்லியன் தொழிலாளர்கள் விவசாயத்திற்கு திரும்பியுள்ளனர். இது 2011-12 ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஒரு பக்கம் பெண்களின் சுயதொழில்கள் அதிகரித்துள்ளது. 95 மில்லியன் மக்கள் கூலி இல்லாமல் வேலை செய்வதாக தரவுகள் கூறுகின்றன.
சமீபத்திய இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விவசாயம், கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகள் தேக்கநிலையிலோ அல்லது வீழ்ச்சியடைந்துள்ளது. இது கிராமப்புறப் பொருளாதாரத்தை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும் அபாயம் உள்ளது. இத்தகைய அவலமான சூழலில்தான் மோடியின் உதவியோடு அம்பானி, அதானி வகையறாக்களின் லாபமும், சொத்தும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பது முக்கியமானதாகும். இதுதான் வளர்ச்சியடைந்த பாரதம் என்று கூவிக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசின் சாதனை.
இத்தகைய அபாயகரமான நிலைமைகளோடு இணைத்துத்தான் விவசாயிகள் போராட்டத்தை நாம் பார்க்க வேண்டும். பொதுத்தேர்தலுக்கு முன்னதாக மோடி பிரச்சாரம் செய்து வரும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற வெற்று ஜம்பத்தை விவசாயிகள் கிழித்தெறிந்துள்ளனர்.
இதே நேரத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஆளும் அரசாங்கங்கங்களைக் கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணிகளையும், போர்க்குணமிக்க போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பெரு நகரங்களையே முடக்குகின்ற வகையில் போராடி வருகின்றனர். பிரான்ஸ், ஜெர்மனி, ருமேனியா, நெதர்லாந்து, போலந்து, லித்வேனியா, பல்கேரியா, பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்ப்பு பேரணிகளை நடத்தவும் அவர்கள் தயாராகி வருகின்றனர். இந்திய விவசாயிகளைப் போலவே, உறுதியளிக்கப்பட்ட மற்றும் நியாயமான விலையை மறுப்பதற்கு எதிராகவே அங்கும் போராட்டங்கள் எழுந்துள்ளன.
படிக்க : வலுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்!
உலகம் முழுக்கவே விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை முழுமைப்படுத்தி அதன் மூலம் கொள்ளை லாபம் அடிப்பதற்கான முனைப்புகளில் ஆளும் வர்க்க அரசுகள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதும், அதற்கெதிராக உலகு தழுவிய அளவில் தங்களின் வாழ்வுரிமைக்காக பாதிக்கப்பட்ட விவசாய வர்க்கம் வீறுகொண்டெழுந்து போராடுவதும் என்ற பொதுப்போக்கு அதிகரித்துள்ளது.
இப்போராட்டங்களின் உறுதியும், இலக்கும் கார்ப்பரேட்மயமாக்கலை வீழ்த்துகின்ற பாதையில் சரியான முறையில் வளர்த்தெடுக்கப்படும்போது சந்தையின் மூலம் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களிடமிருந்து மீப்பெரும் செல்வத்தை கொள்ளையடிக்க நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு காத்திருக்கும் கார்ப்பரேட்டுகளின் திட்டங்கள் தவிடுபொடியாகும் என்பது உறுதி.
அய்யனார்
செய்தி ஆதாரம் : Frontier Weekly
ஊருக்கு தண்ணீர் கேட்டால் தாக்குதலா? | தோழர் செல்வராஜ்
காணொயை பாருங்கள்! பகிருங்கள்!!
மார்ச்-8, உலக மகளிர் தினம்; உலக அரங்கில் பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவின் நிலை என்ன? ஒன்பது வயது பெண்குழந்தை சுதந்திரமாக தெருவில் விளையாடக்கூட முடியாத நிலையில் எப்படி சொல்வது மகளிர் தின வாழ்த்து?
ஆணாதிக்க வெறியாலும், போதை மற்றும் நுகர்வு கலாச்சார வெறியாலும் இங்கு ‘பாரத மாதாக்கள்’ தினம் தினம் சிதைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல இங்கு சுற்றுலாவரும் பெண்களுக்கும்கூட பாதுகாப்பில்லை என்பதே இன்றைய நிலைமை.
இந்தச் சமுகத்தில் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக குழந்தை ஆர்த்தி கூட்டுபாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டிருக்கிறாள். எந்த வகையிலும் ஜீரணிக்க முடியாத இந்தப் படுபாதகச் செயலை புரிந்த அந்த மனித மிருகங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் மனம் ஆறாது என்பதே நமது கருத்தாகவும், மக்கள் கருத்தாகவும் உள்ளது.
படிக்க : ஆசிரியர் உமா மகேஸ்வரி மீது அவதூறு பொழியும் தினகரன் பத்திரிகையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
தற்காலத்தில் இப்படிப்பட்ட மனித விழுமியங்கள் அற்ற மிருகங்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதற்கான மூலக்காரணங்களை இந்தச் சமூகத்தில் இருந்துதான் ஆராய வேண்டும்.
நிர்பயா, ஹாசிஃபா, ஹாசினி என ஒவ்வொரு பெண்ணும், பெண் குழந்தையும் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்படும்போதெல்லாம், இனி இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது என மக்கள் பல்வேறு வகைகளில் தன்னெழுச்சியாகப் போராடுகிறார்கள், மனம் வெடிக்கிறார்கள். ஆனாலும், பெண்கள் பாதிக்கப்படாத நாட்களே இல்லை என்ற அளவிற்கு நாளிதழ்களில் பதிவாகின்ற சம்பவங்கள் அன்றாடம் வெளிவருகின்றன.
அப்படியான சம்பவங்கள் நடக்கும்போது, சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்; பாலியல் சமத்துவத்தைப் போதிக்கும் கல்விமுறை வேண்டும்; ‘குட் டச்’ ‘பேட் டச்’ சொல்லித் தர வேண்டும்; பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்காணித்து கவனமாக வளர்க்க வேண்டும்; பெண்கள் விழிப்புணர்வாக (போலீசுத்துறை அவசர உதவி எண் வைத்திருப்பது உள்ளிட்டவை) இருக்க வேண்டும்; தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இப்பிரச்சினைகளுக்கு மூலக்காரணமான இந்தக் குற்றக்கும்பல் எப்படி உருவாகிறார்கள் என்பதை ஆய்வு செய்யாமல் ஒரு தீர்வை நாம் எட்ட முடியாது என்பதே நிதர்சனம்.
ஆணாதிக்க மனோபாவம், பெண்களை போகப்பொருளாக பார்க்கும் நுகர்வுவெறி, பரவிவரும் போதைப்பழக்கம் போன்ற சீரழிவுகள் நமது சமூகத்தில் திணிக்கப்பட்டு, விழுமியங்கள் அற்ற தக்கை மனிதர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் சக மனிதர்களை கடித்துக் குதற தயாராக உள்ளார்கள்.
பார்ப்பனிய – சாதி – ஆணாதிக்கப் போக்கு ஆணுக்குப் பெண் என்றுமே சமம் இல்லை என்று பல்லாயிரம் ஆண்டுகளாக நமது சமூகத்தில் போதித்து வந்துள்ளது.
இன்று ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் சிந்தனையே பார்ப்பனிய ஆணாதிக்க சித்தாந்தம்தான். அதனால்தான், காஷ்மீரில் ஹாசிபா எனும் எட்டு வயது குழந்தையைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி, கொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்யச் சொல்லி, தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலம் நடத்தியது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை, இரவோடு இரவாக எரித்துக் குற்றவாளிகள் வீடுகளுக்குப் பாதுகாப்பு வழங்கியது. குஜராத் கலவரத்தின்போது, தனது குடும்பத்தினரும் குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு, தானும் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு குற்றம் இழைத்த விஸ்வ ஹிந்து பரிஷதின் காவி பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கிக் கொண்டாடியது.
இத்தகைய பாசிச பாஜக ஆட்சியில்தான் நாடெங்கும் கஞ்சா போதைக் கலாச்சாரமும் அதிகரித்துள்ளது. அதானி துறைமுகத்தில் டன் கணக்கில் போதைப்பொருள் கடத்தல் பிடிப்பட்டது. இதுவரை அதில் முக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபகாலமாக பள்ளிக் குழந்தைகளிடமும் சென்றுசேரும் விதமாக போதைக் கலாச்சாரம் பல்வேறு தளங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் கஞ்சா முதல் வெளிநாட்டு ஹெராயின் வரை பரவலாகக் கிடைக்கிறது. சமூகத்தையே கட்டுப்படுத்தி வழிநடத்திச் செல்லும் அரசின் துணையின்றி இவை எதுவும் நடைபெறாது.
இந்த நிலையில்தான் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது என்ற பொதுமக்களின் புகார்களைக் கண்டுக்கொள்ளாத ஆளும் வர்க்கம்தான், தற்போது மக்கள் அதற்கெதிராகப் போராட்டத்தில் குதித்தவுடன் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாக போலீசையும் துணை இராணுவத்தையும் குவித்து மக்கள் போராட்டங்களை ஒடுக்குகிறது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் கஞ்சா கலாச்சாரம் கட்டுக்குள்தான் இருக்கிறது என்றும், தமிழகத்தில் உள்ள சிலரோடு இங்கு உள்ளவர்கள் தொடர்புகொண்டு இருப்பதினால்தான் இப்படிப்பட்ட கஞ்சா கும்பல் செயல்படுகிறது என்றும் வாய்க்கூசாமல் பேசியிருக்கிறார்.
பா.ஜ.க சாமியார்கள், அகோரிகள் பலரும் கஞ்சா போதையில்தான் அருளாசி வழங்கி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் கஞ்சா பரவலாக்கத்திற்கு அதிகார வர்க்கத்திலும் சமூகத்திலும் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல்தான் அடிப்படைக் காரணம்.
இவற்றுக்கு இணையாக இணைய உலக ஆபாசங்கள், சினிமா, சீரியல் என அனைத்தும் பெண்களை, ஆண்கள் தங்களது காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நுகர்வு பண்டங்களாகவே சித்தரித்து வருகின்றன.
ஆபாச வலைதளங்கள் பன்மடங்கு அதிகரித்திருப்பதும், செக்ஸ் சேட், பெய்டு கால், பேஸ் மார்பிங் என பல்வேறு சைபர் குற்றங்களும் சமூகத்தில் அன்றாடம் நடந்து வருகின்றன.
கடத்த பத்து ஆண்டுகால பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் கஞ்சா பரவலாக்கம் உள்ளிட்ட மேற்கண்ட கூறுகள் அனைத்தும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
படிக்க : மணிப்பூர் கலவரம் – தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தண்டிக்க முடியமா?
இதன்மூலம் உருவாக்கப்படும் பண்பாடு – விழுமியங்களற்ற தக்கை மனிதர்களில் சிலர் பல்வேறு தண்டனைகள் மற்றும் சட்டங்கள் மூலம் தண்டிக்கப்படலாம். ஆனால், குற்றங்கள் குறையப்போவதில்லை. இப்படியான குற்றச் செயல்களுக்கு அடிப்படையாக இருக்கும் கஞ்சா, டாஸ்மாக் உள்ளிட்ட போதை கலாச்சாரத்தையும் பெண்களை பாலியல் பண்டமாகப் பார்க்கும் நுகர்வுவெறிக் கலாச்சாரத்தையும் ஒழித்துக்கட்டி ஜனநாயக மாண்பை வளர்த்தெடுக்காமல் இதுபோன்ற வன்கொடுமைக் குற்றங்களைத் தடுக்க இயலாது.
பெருகிவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைளின் முதன்மை குற்றவாளி ஆணாதிக்க – போதை – நுகர்வெறி பண்பாட்டை கட்டிக் காப்பாற்றும் இந்த அரசுதான்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஆர்த்திக்கு நீதி கேட்கும் புதுச்சேரி மக்களின் போராட்டத்தை, பார்ப்பனிய – ஆணாதிக்க வெறியையும் போதை நுகர்வுவெறிப் பண்பாட்டையும் வளரக்கும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டங்களாக வளர்த்தெடுப்பது அவசியம். அதுதான் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுத்து, பெண்களுக்குப் பாதுகாப்பான சமத்துவ சமுதாயத்தைப் படைப்பதை நோக்கி முன்னேற்றும். அதுதான் ஹாசிபா முதல் ஆர்த்தி வரையிலான பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் உண்மையான நீதியாகும்.
பாரிவேல்
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: “மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி எம்.வி.முரளிதரன் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்புதான் மணிப்பூர் பற்றி எரிய காரணமாக இருந்தது. தற்போது அதே நீதிமன்றத்தால் அத்தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அத்தகைய தீர்ப்பை வழங்கிய நீதிபதி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமிருக்கிறதா?
மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வழங்கிய தீர்ப்பை ஏதோவொரு தனி நீதிபதி வழங்கிய தவறான தீர்ப்பு என்று தனித்துப் பார்த்துவிடக் கூடாது. அத்தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க. பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரலோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27-ஆம் தேதி நீதிபதி எம்.வி.முரளிதரன் வழங்கிய தீர்ப்பையடுத்து மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்களுக்கு எதிரான கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. அன்று பற்றி எரிய தொடங்கிய மணிப்பூர் ஏறக்குறைய ஒரு ஆண்டாகியும் அணையவில்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஆக பெரும்பான்மையினர் குக்கி பழங்குடியின மக்கள். வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. பல தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மிகப்பெரிய அளவில் குக்கி இனப் பெண்கள் மீது பாலியல் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே மணிப்பூரில் குக்கி இனப் பெண்கள் இனவெறியர்களால் நிர்வாணமாக இழுத்துசெல்லப்பட்டது. மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரங்களின் தலைமையில் மணிப்பூரில் ஒரு பேரழிவே நடத்தப்பட்டுள்ளது.
இக்கலவரத்தின் மூலம் மணிப்பூர் காடுகளை அம்பானி-அதானி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து விடலாம், அனைத்து மெய்தி இன மக்கள் மத்தியிலும் அடித்தளத்தை உருவாக்கிவிடலாம் என்று பாசிசக் கும்பல் கனவு கண்டது. ஆனால், குக்கி இன மக்களின் எழுச்சி அந்த கனவை நிறைவேறவிடவில்லை. காட்டையும் உரிமையையும் பாதுகாப்பதற்கான குக்கி இன மக்களின் உணர்வுபூர்வமான எழுச்சி காரணமாக ஒரு கட்டத்திற்கு மேல் இக்கலவரம் பாசிசக் கும்பலுக்கு எதிராக திரும்ப தொடங்கியது. மெய்தி இன மக்கள் மத்தியிலும் பா.ஜ.க. கும்பலுக்கு எதிர்ப்பு வலுத்தது.
படிக்க: ராமர் கோவில், பக்தியா? கலெக்ஷன் கட்டும் உத்தியா?
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், நிலைமையை ஓரளவிற்கேனும் இயல்புநிலைக்கு கொண்டுவந்தால்தான் அம்மாநிலத்தில் தேர்தலை நடத்தமுடியும் என்று பாசிசக் கும்பல் அஞ்சியதால்தான் இத்தீர்ப்பு தற்போது திரும்பப்பெறப்பட்டுள்ளது. உண்மையில், குக்கி இன மக்களின் எழுச்சி பாசிசக் கும்பலை தற்காலிகமாக பின்வாங்க வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால், இந்த பேரழிகளுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக இருந்த உள்நோக்கம் கொண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி முரளிதரன் மீது இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியுமா என்றால் முடியாது என்பதே ‘இந்திய ஜனநாயகத்தின்’ அவலநிலை.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒரு நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்பு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அந்த தீர்ப்பானது ‘நல்ல நோக்கத்தோடு’ (Good faith) வழங்கப்பட்டதாகவே கருதப்படும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 77, சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பானது குற்றமாகாது என்கிறது.
ஆக, நிலகின்ற போலி ஜனநாயகத்தின்படி, நீதிபதிகள் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் சமூகத்திற்கு மேலானவர்கள். இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பில் இவர்களையெல்லாம் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
மேலும், இந்தியாவில் நீதிபதிகள் இதுபோன்ற தீர்ப்பை வழங்குவது இது முதன்முறையல்ல. இந்தியாவில் காவி கும்பல் ஆட்சியை பிடித்ததிலிருந்து நீதிமன்றங்கள் பாசிசமயமாகி வருகிறது. இதன் விளைவாக, குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பசுவளைய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் மனுவாத அடிப்படையில் பெண்களுக்கு எதிரான, பார்ப்பனிய-ஆணாதிக்கத்தின் அடிப்படையில் பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தீர்ப்புகள் பொதுவெளியில் பேசுபொருளாகி கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவற்றில் சில தீர்ப்புகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த நீதிபதிகளுக்கு எந்த தண்டனையும் வழங்கப்பட்டதில்லை. அப்படியொரு கோரிக்கையும் வலுத்ததில்லை.
படிக்க: தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் – யார் காரணம்?
அதேபோல், 1949-இல் பாபர் மசூதியில் சங்க பரிவார கும்பல் திருட்டுத்தனமாக குழந்தை ராமனின் சிலையை வைத்ததை அங்கீகரித்து, 1951-இல் மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியது பைசாபாத் சிவில் நீதிமன்றம். இதனையடுத்து, பாபர் மசூதியை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். கும்பல் முன்னெடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும் நீதிமன்றங்கள் அங்கீகரித்து அனுமதியளித்தன. இறுதியாக 1990-ஆம் ஆண்டு மசூதியை இடித்து தரைமட்டமாக்கியதோடு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை கொன்று குவித்தனர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்.
இந்த 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கொல்லப்பட்டதில் நீதிமன்றங்களின் பங்கு இல்லை என்று நம்மால் மறுக்க முடியுமா? ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதே பிரதானமான கேள்வி. இதனைதான் நாம் இரட்டை ஆட்சிமுறை என்கிறோம். இதுவே, இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஜனநாயகத்தின்’ உண்மைநிலை.
அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் மக்க்களுக்கு மேலானவர்களாக உள்ளனர். அவர்களை திருப்பி அழைக்கும் உரிமையோ தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையோ மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்கு பெயர்தான் ஜனநாயகமா. எனவே நீதிபதிகள் உள்ளிட்ட அரசின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுத்தோரைத் திருப்பி அழைக்கவும் மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உண்மையான ஜனநாயகத்தில்தான் மக்கள் விரோத தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளைத் தண்டிக்க முடியும்.
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
மார்ச் 2024 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
🔴LIVE: புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொலை | மக்கள் போராட்டம்
இணைப்பு 1:
இணைப்பு 2:
இணைப்பு 3:
இணைப்பு 4:
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
08.03.2024
ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான
பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெறுக!
மக்கள் அதிகாரம் கண்டனம்
கல்வி செயற்பாட்டாளரும், மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான ஆசிரியர் உமாமகேஸ்வரி அவர்கள் தமிழ்நாடு அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் மீதான பணியிடை நீக்கத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
“எங்கே பயணிக்கிறோம் கல்வி பாதையில்” என்ற கட்டுரையை முகநூலில் பதிவிட்டதற்கு விளக்கம் கேட்பது என்ற பெயரில் விசாரணை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். குற்றச்சாட்டு குறித்து முறையாக விளக்கம் கேட்காமலேயே பணியிலிருந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதுள்ளனர் தமிழ்நாடு அரசு கல்வித்துறை அதிகாரிகள்.
தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது. தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரக்கூடிய ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்களின் மீதான நடவடிக்கை தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகிறது.
ஒன்றிய அரசின் பாசிச – அராஜக செயல்பாடுகளை விமர்சிக்கும் திமுக அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக மறுப்பாகும்.
அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வியை அரசு வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஆசிரியர் உமா மகேஸ்வரி.
அவருடைய பணியிடை நீக்கத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம் ,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. பிப்ரவரி மாதத்தில் சிவகாசியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 தொழிலாளர்களும் சாத்தூரில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளியும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு மாதந்தோறும் பட்டாசு ஆலை வெடி விபத்துகள் நடந்து பல தொழிலாளர்கள் உயிரிழந்தாலும் அரசினால் ஏன் இதனை தடுக்க இயலவில்லை?
பட்டாசு ஆலை வெடி விபத்துகளுக்கு முக்கியமான காரணம், அரசு வகுத்துள்ள விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படுவதில்லை என்பதுதான். இந்த விதிமீறல்களை அதிகார வர்க்கமும் பட்டாசு ஆலை முதலாளிகளும் திட்டமிட்டு மேற்கொள்கின்றனர். அரசு வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக பட்டாசு ஆலைகள் அமைக்கப்பட்டிருப்பதால், விபத்துகள் நடப்பது என்பது அதன் இயல்பான அம்சமாக அமைந்துள்ளது.
ஒன்றிரண்டு விபத்துகள் நடந்தாலே, அந்தத் தொழிலில் இருக்கும் மற்ற முதலாளிகளுக்கு தங்களது ஆலையில் விபத்து நடந்துவிடுமே என்ற அச்சம் வந்திருக்க வேண்டும். ஆனால், வெடிவிபத்து நடக்காத பகுதியோ ஆலையோ இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை இருக்கும்போது, பட்டாசு ஆலை முதலாளிகளால் விதிமுறைகளை மீறி எப்படி ஆலையை நடத்த முடிகிறது? எந்த பட்டாசு ஆலை முதலாளியும் இதுவரை விபத்துக்குள்ளாகாமல் இருப்பது எப்படி?
இந்தத் தொழிலில் கிடைக்கும் இலாப விகிதமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் அரசும் அதிகாரவர்க்கமும்தான் இதற்கான முதன்மையான காரணங்களாகும். மற்றப்படி பட்டாசு ஆலை முதலாளிகள் மட்டும் வெடிவிபத்துகளில் சிக்காமல் தப்பித்துக் கொள்வதற்கேற்ப ஆலையில் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றனர் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.
மேலும், பட்டாசு ஆலை வேலைக்குச் செல்பவர்கள் எல்லாரும், பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய, மாற்று தொழில்களுக்கு செல்ல வாய்ப்பில்லாத, பின்தங்கிய பகுதிகளில் வாழும் ஏழை உழைக்கும் மக்கள்தான். சொந்த சாதிக்காரர்களிடம் வேலைக்குச் செல்வது, ஊரில் கட்டுப்பாடு வைத்திருப்பது, முதலாளிகள்-உள்ளூர் ஆதிக்கச் சக்திகள்-அதிகார வர்க்கம்-போலீசு கூட்டை பலமாகக் கட்டியமைத்திருப்பது போன்றவைதான், இம்மக்கள் வேறுவழியின்றி இந்த வேலைக்குத் தொடர்ந்து செல்வதற்கு காரணமாக உள்ளது. உள்ளூர் கட்டப்பஞ்சாயத்துகள் மூலமாகத்தான், வெடிவிபத்துகளில் உயிரிழந்த, படுகாயமுற்றவர்களின் குடும்பங்களுக்கான நட்ட ஈடுகள், அதிலும் மிக சொற்ப அளவாக வழங்கப்படுகின்றன.
படிக்க: ராமர் கோவில், பக்தியா? கலெக்ஷன் கட்டும் உத்தியா?
சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தின்போது, விபத்து குறித்து விசாரித்த மாவட்ட ஆட்சியர், இவ்வாறு அடிக்கடி வெடி விபத்துகள் நடப்பதைத் தடுப்பதற்கு, ஃபோர்மென், சூப்பர்வைசர் ஆகியோருக்கு வெடிமருந்துகளைக் கலப்பதற்கு பயிற்சி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஒவ்வொருமுறை விபத்து நேரும்போதும் வெடிமருந்து கலப்பவர்களின் தவறுதான் விபத்துகளுக்குக் காரணம் என்று அதிகார வர்க்கம் தொடர்ந்து சொல்லி வருகிறது.
இது உண்மையல்ல, பல ஆண்டுகளாகவே இந்த பொய்யான காரணங்களைக் கூறி தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. அனுபவமில்லாதவர்கள், தவறுகளைச் செய்பவர்கள்தான் வெடிமருந்து கலக்கிறார்கள் என்றால் ஏன் அரசு இந்த வெடி ஆலைகளை நடத்துவதற்கு அனுமதிக்கிறது? ஆலைகள் சட்டபூர்வமாக நடக்கின்றனவா என்று கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள, தொழிற்சாலை ஆய்வாளர்கள் என்ன செய்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அதிகார வர்க்கம் பதிலளிக்காது.
ஆகையால், விதிமுறைகள் மீறித்தான் ஆலைகள் நடக்கின்றன, இதன் மூலமாகத்தான் கோடிக்கோடியாக சம்பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.
இந்தப் பிரச்சினையில் பட்டாசுகள் அவசியமா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். நிச்சயம் பட்டாசுகள் அவசியமானவை அல்ல. ஆனால், நுகர்வுக் கலாச்சாரம் வளர்ந்தோங்கி வரும் இன்றைய காலத்தில், பட்டாசு விற்பனை என்பது மிகவும் இலாபகரமான தொழிலாகும்.
நுகர்வுக்கலாச்சாரம், மதக் கலாச்சாரத்தின் அங்கமாக பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் வளர்ந்துள்ளது. பட்டாசு உற்பத்தி, வானவேடிக்கை நிகழ்வுகள் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையில் எதிரானதாக அமைந்துள்ளது. சமூகத்தில் மக்களிடையே ஜனநாயக உணர்வுகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்தான கண்ணோட்டத்தின் வளர்ச்சிக்கேற்ப, வாணவேடிக்கைகள் நடத்துவதும், பட்டாசு வெடித்து மகிழ்வதும் குறையத் தொடங்கும். அதேவேளையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே அளவிற்கு அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: பக்தியின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டப்படவில்லை என்று பலரும் சொல்கின்றனர். அவ்வாறு சொல்வது சரியா?
மோடி தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகத்தான் ராமர் கோவில் திறப்பு விழாவை நடத்துகிறார்; இந்த விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல் தனது சாதிய, ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பதையெல்லாம் எதிர்க்கட்சிகளே அம்பலப்படுத்தியுள்ளன.
வாஜ்பாய் – அத்வானி கும்பல், அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததாக சொல்லி, இஸ்லாமியர்களை எதிரிகளாகக்காட்டி, பொய்யான காரணங்களைக் கூறி, மதக்கலவரங்களையும் படுகொலைகளையும் அரங்கேற்றியது; இந்து மதவெறியைப் பரப்பியது; இதனைப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சங்கப்பரிவார அமைப்புகளை விரிவுப்படுத்திக் கொண்டது; பாபர் மசூதியையும் இடித்தது.
அன்று, “ராமராஜ்ஜியம் மேன்மையானது, அங்கு இந்துக்கள் உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தனர்” என்று பிரச்சாரம் செய்தது. இந்துராஷ்டிரத்தைப் படைப்போம் என்றது. அப்போது மதவெறிக்கு பலியான பலரும் ராமர் கோவிலை பழைய பக்தியின் அடிப்படையில் நியாயப்படுத்திக் கொண்டனர். ஆர்.எஸ்.எஸ்-இன் மதவெறியில் தங்களது பக்தி உணர்வை இணைத்துப் பார்த்தனர்.
இன்று, நிலைமையே வேறு. 10 ஆண்டுகளாக நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கும் மோடி-அமித்ஷா கும்பல் அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற வடநாட்டு கார்ப்பரேட் கும்பலுக்கு நாட்டை தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வடநாட்டுக் கார்ப்பரேட் கும்பலையே இராம – லெட்சுமனர்களாகக் கருதுகிறது. இந்துராஷ்டிரம் என்பது இந்த கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கேற்ற வகையில் நாட்டில் இருக்கும் பன்முகத்தன்மையை அழித்து ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு என்ற பாசிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான்.
படிக்க: மோடி அரசின் வெள்ளை அறிக்கையையும், ஜி.எஸ்.டி கொள்ளையையும் எப்படி புரிந்துகொள்வது?
ஆகையால், அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்காகவும் அவர்களது கொள்ளையை மறைப்பதற்காகவுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இதற்கும் பக்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பலரும் உணர்கின்றனர்.
இராமர் கோவிலை மையமாக வைத்து, அயோத்தியை சுற்றுலா மையமாக்கி, கார்ப்பரேட் கொள்ளை நடந்தேறிக் கொண்டிருப்பதை ஆங்கில வணிக இதழ்களில் வெளிவரும் செய்திகளே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. ராமர் கோவிலை பழனி முருகன் கோவிலைப் போலவோ திருப்பதி ஏழுமலையான் கோவிலைப் போலவோ கருதிவிட முடியாது. திருப்பதியில், பெரும்பாலான அனைத்து இடங்களும் அரசின் கட்டுப்பாட்டில், திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், அயோத்தியிலோ நிலைமையே வேறு.
குறிப்பாக, “உத்தரப்பிரதேசத்தில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்” என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஆங்கில இதழ்கள் புகழ்கின்றன. மதச்சுற்றுலா மூலம் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான யோகியின் உழைப்பை ராமர் கோவில் திறப்பில் பார்க்க முடிந்தது என்று அப்பத்திரிகைகள் கூறுகின்றன.
உலகத்தின் முக்கியமான புனிதத்தலமாக அயோத்தியை மாற்றுவதற்கான முயற்சியின் விளைவாக, அயோத்திக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையானது 2021-ஆம் ஆண்டில் 3.25 லட்சம் பேராக இருந்தது. இது, 2022-ஆம் ஆண்டில் 2.39 கோடி பேராகவும் 2023-ஆம் ஆண்டில் 3.15 கோடி பேராகவும் உயர்ந்துள்ளது. ராமர் கோவில் திறப்பை ஒட்டிய ஒரு வாரத்தில் மட்டும் 21 லட்சம் பேர் வந்து சென்றுள்ளதாகவும், தற்போது நாளொன்றுக்கு 2 இலட்சம் பேர் வருகைப் புரிவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் முதலாக நாளொன்றுக்கு ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு மக்கள் வந்துசெல்வதற்கேற்ப, சர்வதேச விமான நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் இரயில்நிலையம் மிக பிரம்மாண்டமாக விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான உல்லாச விடுதிகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நகரத்தின் விரிவாக்கத்தைத் திட்டமிட்டு மேற்கொள்ளும் வகையில், நான்குவழி, ஆறுவழி, எட்டுவழிச் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
படிக்க: பேராசிரியர் சாய்பாபா விடுதலை – களப்போராட்டம் அவசியம்
இந்தியாவின் முன்னணியான பிரபலங்கள் தங்குவதற்கான உயர் வசதிகளைக் கொண்ட பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக, இந்தி நடிகர் அமிதாபச்சன் வீடு அமைந்துள்ள “தி சரயு” என்ற ஏழு நட்சத்திர (Seven Star) தங்குமிடம் 51 ஏக்கரில் அமைந்துள்ளது. மார்ரியோட் (Marriott) இண்டர்நேசனல், சரோவார், வ்யூதம் மற்றும் ஜே.எல்.எல். குழுமம் போன்ற கார்ப்பரேட் ஹோட்டல் நிறுவனங்கள் அயோத்தியை ஆக்கிரமித்துள்ளன.
இவை மட்டுமின்றி, 550 சொந்த வீட்டில் இருக்கும் வகையிலான தன்மைகள் கொண்ட குடும்பங்களுடன் தங்கும் குடியிருப்புகளும் (Homestay centers) உருவாக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுமார் 600 பேர் வரை இங்கு தங்குவதற்கு இப்போது விண்ணப்பித்துள்ளனர். இத்துடன், 1,200 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
சுற்றுலா பயணிகளின் வருகையை உத்தரவாதப்படுத்தும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதால், ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த உள்கட்டமைப்பு வளர்ச்சியின் காரணமாக விளைநிலங்கள் வீட்டுமனைகளாவது அதிகரித்திருப்பது மட்டுமின்றி, வீட்டுமனைகளின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அயோத்தியின் புறநகர் பகுதியான “14 கோசி பரிக்கிரமா” பகுதியில், 1,350 சதுர அடி உள்ள நிலத்தின் பத்திரப் பதிவு தொகை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.65 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஒரு பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.
இத்துடன், மின்சாரத் தேவைகளும் மிகவேகமாக அதிகரித்துள்ளது. அதற்காக அயோத்தியில், உலகின் பெரிய சூரிய மின்சக்தி நகரம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் எல்லாம் சிறிதும் பெரிதுமாக பல கார்ப்பரேட் கம்பெனிகள் மூலதனமிட்டுள்ளன.
சுற்றுலாவாசிகள் தங்குவதற்கு மட்டுமின்றி அயோத்தி ராமரை மையப்படுத்தி வணிகப் பொருட்களை உருவாக்கி நாடுமுழுவதும் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது. நாளை, லல்லா ராமன் (குழந்தை ராமன்) படம் பொறிக்கப்பட்ட பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வரலாம். அதற்கு மாநில அரசு வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படலாம்.
படிக்க: ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்
தற்போது, மோடி அரசு அயோத்தி நகர விரிவாக்கத்திற்கு 15,700 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச “2031 மாஸ்டர் பிளான்” திட்டத்தின்படி, ரூ.85,000 கோடிக்கு புதிய அந்நிய முதலீட்டாளர்களை கொண்டுவர திட்டமிட்டப்பட்டுள்ளது. அந்தவகையில், அயோத்தியில், ஒரு உள்ளூர்காரருக்கு 10 சுற்றுலா பயணி என்ற விகிதத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, அயோத்தியை மையமாக வைத்துதான், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உத்திரப்பிரதேசம் அடையப் போவதாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ராமர் கோவில் கட்டப்பட்டதை ஒட்டி, அயோத்தியில் இருந்து மட்டும் 2024-25 ஆண்டில் 25,000 கோடி ரூபாய் வரி வசூல் செய்யமுடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கிறித்தவர்கள் வாட்டிகனுக்குச் செல்வதைப் போல, இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு செல்வதைப் போல, அயோத்தியை மாற்ற திட்டமிட்டுள்ளது மோடி-யோகி கும்பல். அந்தவகையில், இந்துக்களை ஈர்ப்பது ஒன்றே அக்கும்பலின் நோக்கமாகும். ஜக்கி, ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஆன்மீகத்தை சரக்காக்கியதைப் போல, பக்தியை சரக்காகுகிறது மோடி-யோகி கும்பல்.
உலகளாவிய முக்கிய வணிகங்களை ஈர்க்கும் வகையில், “பிராண்ட் உ.பி.”-ஐ (Brand UP) உருவாக்கி வருகிறது மோடி-யோகி கும்பல். அதன் மூலம் உலகின் பிடித்தமான சுற்றுலா மையமாக உத்தரப்பிரதேசத்தை மாற்ற இருக்கிறது. சுற்றுலா வளர்ச்சி என்றானபோது, சினிமா, உல்லாசம், குடி, கூத்து, விபச்சாரம் போன்றவற்றைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இவையெல்லாம் உள்ளடக்கியதுதான், இந்த “பிராண்டு உ.பி.”
“இந்திய சமுதாயத்தின் அமைதி, நிதானம், பன்முகத்தன்மை மற்றும் முதிர்ச்சியின் அடையாளம் ராமர் கோவிலாகும். அவர்களது கண்ணோட்டத்தை மறுபரிசீலனை செய்ய நான் இன்று அழைக்கிறேன்” என்று மோடி குறிப்பிடுவதும் இந்தப் பொருளில்தான்.
உத்தரப்பிரதேசத்தில், இந்த சுற்றுலா வளர்ச்சிக்கேற்ப லல்லா ராமர் பாடினார், சிரித்தார் என்று வதந்திகளைப் பரப்புவது; அக்ஷ்ய திருதியை நாளை கார்ப்பரேட் தங்க நகை வியாபாரிகள் தங்களது வணிகத்திற்காக வளர்த்ததைப் போல, ராமர் கோவில் தொடர்பான விழாக்களும் திட்டமிட்டு நடத்தப்படுவது போன்றவற்றையெல்லாம் நாம் எதிர்ப்பார்க்கலாம்.
ஆக, கார்ப்பரேட் கொள்ளையின் மையம்தான் ராமர் கோவில். புனிதத்தலம் என்ற போர்வையில், சுற்றுலா என்ற பெயரில் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச கும்பலுக்கு அயோத்தியை மையமாக்குகிறது, மோடி-யோகி கும்பல்.
மொத்தத்தில், ராமனை பிராண்டாக்கி பாபர் மசூதியை இடித்தது அத்வானி கும்பல் எனில், லல்லா ராமனை பிராண்டாக்கி கலெக்ஷ்ன் பார்க்கிறது மோடி – யோகி கும்பல்!
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளையறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஜி.எஸ்.டி. வரிப் பகிர்வில் மாநிலங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தனர். இதனை எப்படி புரிந்துகொள்வது?
காங்கிரசின் 2004-2014 ஆட்சி குறித்து மோடியின் பத்தாண்டுகால ஆட்சி நிறைவடையவுள்ள சூழலில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்வதே கேலிகூத்தானது. அவ்வறிக்கையில் உள்ள மோசடிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல விசயங்களை அம்பலப்படுத்தியுள்ளனர். இதனைவிட முக்கியமாக, பாசிச கும்பல் கொடுக்கும் அறிக்கை, “வெள்ளை” அறிக்கையாக இருக்கும் என்று கருதுவதைவிட ஏமாளித்தனம் எதுவும் இருக்க முடியாது. கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காக இந்திய உழைக்கும் மக்களை வதைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைப் பற்றி வெள்ளையறிக்கையில் எதுவும் இடம்பெறாததே அதற்கு போதுமான சான்று.
மாநிலங்களுக்கு இடையிலான ஜி.எஸ்.டி. வரிப்பகிர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, மோடி கும்பல் மொன்னையான வாதங்களை முன்வைத்தாலும் அவ்விவாதத்தின் மூலம் மோடி கும்பல் மக்களுக்கு சில செய்திகளை சொல்கிறது.
முதலில், ஜி.எஸ்.டி. வரி வசூலுக்கும் வரிப் பகிர்வுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைப் பார்ப்போம். ஜி.எஸ்.டி. வரியாக தமிழ்நாடு செலுத்தும் வரியில், ஒரு ரூபாய்க்கு 26 பைசா மட்டுமே ஒன்றிய அரசால் திருப்பி அளிக்கப்படுகிறது. இதே போல கர்நாடகாவிற்கு 16 பைசா, தெலங்கானா 40 பைசா, கேரளா 62 பைசா திரும்ப பெறுகின்றன. அதே சமயத்தில், மத்தியப்பிரதேசம் 1 ரூபாய் 70 பைசாவும், ராஜஸ்தான் 1 ரூபாய் 14 பைசாவும் உத்தரப்பிரதேசம் 2 ரூபாய் 2 பைசாவும் திரும்பப் பெறுகின்றன.
இந்த விவரங்களை தொகையில் சொல்வதாக இருந்தால், சுமார் 8 கோடி மக்கள்தொகையைக் கொண்ட தமிழ்நாட்டில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் வசூலித்த தொகை ரூ.6,00,674.49 கோடி. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு திருப்பிக்கொடுத்த தொகை ரூ.1,88,145.62 கோடி மட்டுமே.
இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டைவிட இரண்டு மடங்கு பரப்பளவும், மூன்று மடங்கு மக்கள்தொகையும் (24 கோடி) கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இருந்து வசூலித்த தொகை ரூ.3,41,817.60 கோடி. உத்தரப்பிரதேசத்திற்கு ஒன்றிய அரசு திருப்பிக்கொடுத்த தொகை ரூ.6,91,375.12 கோடி.
படிக்க: ஜி.எஸ்.டி வரிப்பங்கீடு: அம்பலமான மோடி அரசின் சதி
இது குறித்து, தமிழ்நாட்டின் சிறு குறு தொழில் முனைவோர், வியாபாரிகளிடம் கேட்கும்போது, “இங்கு வரியைக் கட்டச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் வரியைக் கட்டச்சொல்லி இந்த அளவிற்கு நெருக்கடி கொடுப்பதில்லை. ஆனால், அங்கு மட்டும் வரி வசூல் குறைவாக இருப்பதற்கு காரணம், மோடி அரசு வரியை வசூலிப்பதில் தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு கொடுக்கும் நெருக்கடியை பசுவளைய மாநிலங்களுக்குக் கொடுப்பதில்லை” என்கின்றனர்.
தமிழ்நாட்டைவிட மூன்று மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சிறு குறு தொழில்முனைவோருக்கு சலுகை வழங்கி, தனது ஓட்டு வங்கியாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில், அம்மாநில அரசுக்கு கூடுதலாக இரண்டரை மடங்கு நிதியைக் கொடுத்ததன் மூலம், அங்கு தொழில் வளர்ச்சி, மக்களுக்கு இலவசங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள் சென்று சேர்ந்துள்ளன.
ஆகையால், நிதிப்பகிர்வில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மூலமாக வடமாநில மக்களுக்கு சலுகை அளிப்பதை மோடி அரசு வெளிப்படையாகவே தெரிவிக்கிறது. பா.ஜ.க. கும்பல் உத்தரப்பிரதேச மக்களை இந்து மதவெறியால் மட்டுமே தனது செல்வாக்கில் நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைக் கொள்ளையடித்து அம்மாநிலத்திற்கு வாரி வழங்குவதன் மூலமும் இதனை செய்கிறது.
இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென்மாநிலங்களில் வளர்ச்சி இருக்கக் கூடாது என்பதற்குத்தான், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கும் கட்டுப்பாடுகளை விதித்து நிதி நெருக்கடிக்குத் தள்ளுகிறது. இந்த பட்டவர்த்தனமான கொள்ளைதான், இந்துராஷ்டிரம்.
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
உயர்நீதிமன்றத்தில் தமிழ்
உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டி எட்டாவது நாளாக சென்னையில் தொடர் உண்ணவிரத போராட்டத்தில் வழக்கறிஞர் பகத்சிங், அவரது தந்தை, மகன் மற்றும் ஒத்த சிந்தனையாளர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
”தமிழை வழக்காடு மொழியாக்கு” என்ற பதாககைகள் தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளன. தமிழ்நாடு முழுக்க வழக்கறிஞர்களும் ஆங்காங்கே மாணவர் அமைப்புகளும் போராடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கும் அதிகாரம் யாருக்கு என்றக் கேள்வி பிறக்கிறது.
1963 ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டப்படி உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை அம்மாநிலத்தின் அலுவல் மொழியில் வழங்க இயலும். அவ்வாறு வழங்கும் போது ஆங்கில மொழி பெயர்ப்பையும் இணைக்க வேண்டுமென அலுவல் மொழிச் சட்டப் பிரிவு 7 கூறுகிறது. அவ்வாறான உத்தரவை பெற குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இது தவிர அரசியலமைப்பு சட்ட உறுப்பு 348 ன்படி அம்மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளை அம்மாநில மொழியிலேயே நடக்க அனுமதிக்கலாம்.எனவே மாநில அரசு தீர்மானித்தால் கூட இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.
படிக்க: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உண்ணாநிலை போராட்டத்தை ஆதரிக்கும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள்!
பிமாரு (BIMARU) மாநிலங்கள் என்று கூறக்கூடிய பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்கின் தீர்ப்புகளிலும் உத்தரவுகளிலும் இந்தி பயன்பாடு கொண்டு வரப்பட்டு பல வருடங்களாகிறது.
ஆனால் மேற்குவங்கம், கர்நாடகம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அம்மாநில மக்களின் மொழியை உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்த போது 1965 ஆம் ஆண்டு அமைச்சரவை முடிவை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்ற முழு நீதிபதிகள் குழுவில் கருத்துரைக்காக மத்திய அரசு அனுப்பியது. முதலில் 2012 ஆம் ஆண்டிலும் பின்னர் 2014 ஆம் ஆண்டிலும் மாநில மொழிகளை மேற்சொன்ன நீதிமன்றங்களில் பயன்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் கருத்துரைத்தது.
உச்சநீதிமன்ற கருத்துரை 1965 மத்திய அமைச்சரவை முடிவின் அடிப்படையில் வழங்கப்பட்டதே தவிர அதற்கு வேறு சட்ட அடிப்படை எதுவுமில்லை.
மத்திய அரசு விரும்பினால் ஒரிரு நாட்களில் தமிழை நீதிமன்ற மொழியாக அனுமதிக்க இயலும்.
ஏறு தழுவுதல் என்ற ஜல்லிகட்டை உச்சநீதிமன்றம் தடை செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதி இராதாகிருஷ்ணன் அளித்த அத்தீர்ப்பு மே, 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது எனினும் தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரும் போராட்டத்தின் விளைவாக பின்னாட்களில் மத்திய அரசால் விலங்கு வதை சட்டத்தில் செய்யப்பட்ட 2017 தமிழ்நாடு சட்ட திருத்தம் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளான போது உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அச் சட்டம் சரியானது என்று கூறிய தீர்ப்பு நம் நினைவுக்கு வரும், அச்சட்டம் உருவாக ஒட்டுமொத்த தமிழர்களின் போராட்டம் காரணம் என்றால் மிகையாகாது.
படிக்க: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | துண்டறிக்கை
அரசியலமைப்புச் சட்ட எட்டாவது பட்டியலில் அஸ்ஸாமிய, பெங்காலி, போடா, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, மைதிலி, மணிப்பூரி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, சந்தாலி, தமிழ், தெலுங்கு, உருது என 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன இதில் இந்திக்கு சிறப்பிடமளிக்க சட்டமின்றி வேறு காரணம் ஏதுமில்லை. தென்னிந்திய மொழிகள் அனைத்தும் வட இந்திய மொழிகளுக்கு ஈடாக சொல் வளமும், இலக்கிய வளமும், தொன்மையும் கொண்டவையே.
இந்தியா எனும் நாடு பல்வேறு தேசிய இனங்களின் ஒன்றியம் என்ற பாடத்தை சோவியத் யூனியனிடமிருந்து மைய அரசு பெறுவது அவசியம்.
சோவியத் யூனியன் சிதைந்து பல நாடுகளை உருவாக்கியதைப் போல இந்தியாவிலும் நிகழாமலிருக்க, அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்குவது அவசியம்.
இந்நிலையில் தமிழை நீதிமன்ற மொழியாக்கு என்ற முழக்கங்களுக்கு முன்னால் மத்திய அரசே! என்ற சொற்களை சேர்ப்பது அவசியம்.
மத்திய அரசே! தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு!! என்ற தீவிர முழக்கம் தமிழை நேசிப்பதாகக் கூறும் மத்திய ஆட்சியாளர்கள் காதில் விழுமா எனத் தெரியவில்லை.
தி.லஜபதி ராய்
உலகனேரி
06.03.2024
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
வெல்லட்டும் விவசாயி போராட்டம் | ம.க.இ.க ”சிவப்பு அலை” கலைக்குழு
| புதிய பாடல்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உண்ணாநிலை போராட்டத்தை ஆதரிக்கும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள்!
மதுரை:
உண்ணா நிலை போராட்டத்தை ஆதரிக்கும் மதுரை வழக்குரைஞர்கள்
உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் ஐயப்பன்
உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் சரவணன்
0-0-0
தர்மபுரி மாவட்டம்:
உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் மகாலிங்கம்
0-0-0
கடலூர் மாவட்டம்:
உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | செ.சுரேஷ்
0-0-0
பாண்டிச்சேரி:
உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | தோழர் சாந்தகுமார்
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube