Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 820

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!

65

முக்கியச் செய்தி: சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று பயந்த்து சங்கராச்சாரி கும்பல். வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றிக் கொடுத்த்துடன், தமிழக அரசின் அரசு வழக்குரைஞர் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டு ஜெகத்குரு எஸ்கேப் ஆவதற்குத் தோதாக சன்னலைத் திறந்து விட்டது உச்ச நீதிமன்றம்.

புதுவை செசன்சு நீதிமன்றத்தில் நடந்த கொலை வழக்கின் குறுக்கு விசாரணையில் பிரதான சாட்சியங்களான சங்கரராமனது மனைவி பத்மாவும், மகளான மைத்ரேயியும், கோயில் ஊழியர்களும் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்திற்கு எதிராக மாற்றிச் சொல்லியருக்கிறார்கள். தாங்கள் கொலைசெய்த கொலைகாரர்கள் எவரையும் கண்ணால் பார்க்கவில்லை என்றும், போலீசார் காட்டிய புகைப்படங்கள் மூலமாகத்தான் அவர்களைத் தெரிந்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். சங்கர்ராமன் வீட்டிலிருந்து கைப்பற்ற ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து அவருடையதல்ல என்றும் அவரது மனைவியும் மகளும் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களை பிறழ் சாட்சிகள் (hostile witnesses) என்று அரசு தரப்பு அறிவித்திருக்கிறது.

இதற்கு முன்னரே இரண்டு சாட்சிகள் பிறழ்சாட்சிகளாகி விட்டனர். தங்கள் சாட்சிகளாக அரசு தரப்பு கொண்டுவந்து நிறுத்திய இவர்களையே இனி அரசு தரப்பு குறுக்கு விசாரணை செய்யும். அந்த குறுக்கு விசாரணை கூர்மையாக நடத்தப்பட்டால், சாட்சிகள் பொய் சொல்வது நிரூபக்கப் படலாம். பெஸ்ட் பேக்கரி வழக்கில் நடந்தது போல. அந்த வழக்கில் பணத்தால் விலை பேச முடியாத, மோடியால் மிரட்ட முடியாத தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்டவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். இந்த வழக்கில் அப்படி நடக்குமா? சொல்ல முடியாது.

இந்துக்களின் லோககுரு இன்னும் சில மாதங்களில் எந்த தவறும் செய்யாத மகானாக விடுதலை அடைவார். தனது கணவனை கோரமாக ரவுடிகளை வைத்துக் கொன்றது ஜெயேந்திரன்தான் என்பது பத்மாவுக்கு நன்கு தெரியும். எல்லாப் பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்திருக்கிறார். உலகுக்கும் அதில் சந்தேகமில்லை. நக்கீரன் பேட்டியிலேயே இந்த சங்கர்சாரி இதை தெனாவெட்டாக பெருமையடித்திருக்கிறார். எனில் என்ன நடந்தது?

தனது கணவன் கொடூரமாக கொலைசெய்யப்பட்தை அறிந்திருக்கும் பத்மாவை அவ்வளவு சுலபமாக பணத்திற்கு விலைபேசியிருக்க முடியாது. வழக்கு நடக்கும்போது அடையாளம் தெரியாதவர்களால் மிரட்டப்படுவதை அப்போதே பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார் பத்மா.

சங்கரமடத்தின் சொத்து மதிப்பு ஏறத்தாழ பத்தாயிரம் கோடிகள் தேறும். அம்பானி முதல் எல்லா முதலாளிகளுக்கும், சேஷன், கலாம் முதலான அதிகார வர்க்கத்தினருக்கும் பிரம்ம ஞானத்தை வழங்கும் இடமல்லவா சங்கரமடம்! பாபர் மசூதியை இடித்த சங்கபரிவாரத்தின் சார்பில் முசுலீம் அமைப்புக்களிடமும் கட்டைப் பஞ்சாயத்து பேசியவரல்லவா ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்?

ஆளும் வரக்க்திற்கு தரகன், இந்து மதவெறி அமைப்புகளின் லோக குரு ஆயுள் தண்டனையில் உள்ளே போனால் தர்மத்தை யார் நிலைநாட்டுவது? ஆள்பவர்கள் கைவிட்டு விடுவார்களா என்ன?

சீனியரும் ஜூனியரும் சீக்கிரமே விடுதலையாகி விடுவார்கள். அன்று இந்தக் கொலைகள் பற்றியும் இவர்களது லீலைகள் பற்றியும் கதை கதையாக வந்தவை, பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகள், ஆகிய அனைத்தும், இந்த உலகம் பார்த்த, படித்த அனைத்தும், பொய்யாய் புனைகதையாய் போய்விடும்.

“பிரம்ம ஸத்யம் ஜெகன் மித்யா” என்றார் ஆதிசங்கரர். அதாவது பிரம்மம் தான் உண்மையானது. நாம் காணும் இந்த உலகம் மாயை என்றார். அந்த ஆதிசங்கரன் பெயரிலேயே போலி டாகுமெண்டு தயார் பண்ணி, காஞ்சி மடத்தை உருவாக்கியவர்கள் அல்லவா கும்பகோணத்துப் பார்ப்பனர்கள்! உலகம் பொய் என்று நிரூபிக்கப் பட்டுவிட்டது. பிரம்மம் எது? உருட்டுக் கட்டையா, ஏ.டி.எம் மா?

எனினும், இந்த ஜனநாயக நாட்டில் சங்கரசாச்சாரி சட்டப்படிதான் விடுவிக்கப் பட இருக்கிறார். டஜன் கணக்கில் கொலைகள் செய்த ரவுடிகளும், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முதலாளிகளும் சட்டப்படி விடுவிக்கப்படவில்லையா? அந்த ஜனநாயக உரிமை சங்கராச்சாரிக்கு மட்டும் கிடையாதா என்று ஆன்மீக மெய்யன்பர்கள் கேட்கலாம். உண்டு, உண்டு, உண்டு.

இல்லை என்று சொல்வதற்கு இனி கண்ணால் கண்ட சாட்சி ஒருவர் மட்டுமே இருக்கிறார். வரதராஜ பெருமாள். அவர் வருவாரா?

ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!

கண்டதேவி தேரோட்டம்

இந்தியா முழுவதும் தலைவிரித்தாடும் சமூகக் கொடுமையாக சாதி இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால் தமிழ்நாடு மட்டும், சாதிய ஒடுக்கு முறைக்கெதிராகப் போராடிய முன்னோடி மாநிலம் என்றும், சுயமரியாதை இயக்க பூமி இது என்றும் சோல்வதில் நமக்கெல்லாம் பெருமை இருந்தாலும், இன்றைக்கு நடைமுறை என்னவாக இருக்கிறது? ‘சமத்துவப் பெரியாரின்’ ஆட்சியில் சாதிக் கொடுமை ஒழிந்திருக்கிறதா எனும் கேள்விக்கு மதுரையைச் சேர்ந்த “எவிடென்ஸ்” எனும் தன்னார்வ நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வு விடையளிக்கிறது.

தென்மாவட்டங்களில் சுமார் 85 கிராமங்களில் அந்நிறுவனம் நடத்திய கள ஆவில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல கோவில்களில் தாழ்த்தப் பட்டோருக்கு எதிரான சாதிப்பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அன்னதானம் செய்வது அனுமதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோர் கோவில்களுக்குக் கால்நடைகளைத் தானம் செய்வது ஏற்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோர் 69 கோவில்களில் நுழைய முடியாது. 72 கோவில்களில் நுழைய முடிந்தாலும், கோவிலுக்குள் வழிபடக்கூடிய பொதுவான இடங்களில் அனுமதி இல்லை. 52 கோவில்களில் இவர்களுக்குப் பரிவட்டம் கட்ட அனுமதி இல்லை. 33 கோவில்களில் தேர் இழுக்க அனுமதி இல்லை. 64 கோவில்களில் பூசை வைக்கவோ, கோவில் விழாக்களில் கலைநிகழ்ச்சி நடத்தவோ உரிமை இல்லை.  54 கோவில்களின் சப்பரமோ, தேரோ இம்மக்களின் தெருக்களிலோ காலனியிலோ வலம் வருவதில்லை. தென்மாவட்டங்களில் கோவில் கொடைகளில் ஆதிக்கச் சாதியினரின் சப்பரங்கள் சுற்றிவரும் பாதைகள் சேரி தவிர்த்த தெருக்களில் மட்டுமே – துல்லியமாக தங்களின் ஆதிக்க எல்லையை மறு உறுதி செய்யும் வகையில்தான் உள்ளன.

அண்மைக்காலங்களில் கோவிலில் வழிபாட்டு உரிமை கேட்கும் ஒடுக்கப்பட்டோர் மீது ஆதிக்க சாதிவெறியர்கள் தாக்குவதும் படுகொலைகள் செய்வதும் தொடர்ச்சியாக நடக்கிறது. திருப்பித் தாக்கப்படும் சூழல் நிலவினால் ஆதிக்க சாதியினர், உத்தப்புரத்தில் செய்ததைப் போல கூண்டோடு ஊரை விட்டு வெளியேறி மிரட்டி, அரசு உதவியுடன் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுகின்றனர்.

கடந்த ஓராண்டில் தமிழகம் எங்கும் பரவலாக ஒடுக்கப்பட்டோர் மீது இவ்வாறு வன்கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன.

  • அருப்புக்கோட்டை கல்லூரணியில் கோவில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலம் நடத்த முயன்ற அருந்ததியினர் மீது சாதிவெறிக் கும்பல் கற்களை வீசித்தாக்கியது.
  • செஞ்சி சோரத்தூர் காலனியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரின் கோவில் வழிபாட்டுரிமை வன்னிய சாதிவெறியர்களால் மறுக்கப்பட்டு வந்தது. நீதிமன்றத் தீர்ப்பும் சாதித்திமிரை அசைக்கவில்லை. சாமிக்குப் பொங்கல் வைத்த தாழ்த்தப்பட்டோர் மீது போலீசு தடியடி நடத்திப் பலரைக் கைது செய்தது.
  • சேலம் கவுண்டம்பட்டி திரௌபதி அம்மன் கோவிலில் நுழையும் உரிமையை தாழ்த்தப்பட்டோர் நீதிமன்றம் சென்று போராடி வாங்கியதும், அம்மனையே ஆதிக்க சாதியினர் ஒதுக்கி வைத்தனர்.
  • நெல்லை மாவட்டம் படர்ந்தபுளி கிராமத்தில் மாரியம்மனை ஒடுக்கப்பட்டோர் வழிபட விடாமல் தேவர் சாதிவெறியினர் தடுத்து வந்தனர். நீதிமன்றத்தில் உரிமை வாங்கி வந்தாலும், தேவர்சாதியினர் கோவிலையே இழுத்துப் பூட்டி சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
  • நெல்லை மாவட்டம் செந்தட்டியில் கோவில் வழிபாட்டுப் பிரச்சினையை ஒட்டி, ஆதிக்க சாதித்திமிர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இருவரை கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளது.

ஆதிக்கசாதி வெறியர்களைப் பொறுத்த மட்டில், கோவில்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தின் தூண்கள் என்றுதான் கருதுகின்றனர். பக்தி எல்லாம் இரண்டாம்பட்சம்தான். தாழ்த்தப்பட்டோர் கோவிலில் சம உரிமை கேட்டாலோ, சாமியையே சாதிவிலக்கம் செய்யும் அளவிற்கு பக்தியை விட சாதிவெறிதான் கோலோச்சுகிறது.

கோவிலில் மட்டுமல்ல, செத்த பிறகு தாழ்த்தப்பட்டோரின் பிணங்களை எரிக்கக் கூட பொது சுடுகாட்டில் சாதிவெறியர்கள் அனுமதிப்பதில்லை. திருச்சி மாவட்டம் திருமலையான்பட்டியில் அரசு நிதியில் கட்டப்பட்ட சுடுகாட்டில் ஆதிதிராவிடர்களின் பிணங்களை எரிக்க சாதி இந்துக்கள் அனுமதி மறுப்பதைக் கண்டுகொள்ளாத காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ரத்தினம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

செய்தியாகப் பதிவாகாத சாதிய வன்கொடுமைகளோ நாள்தோறும் நூற்றுக்கணக்கில் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஆனால் துணைமுதல்வர் ஸ்டாலினோ, புதிதாக பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் 29 ஊர்களில் எழுப்பப்படும் என்று அறிவித்ததும், சாதியை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை இது என தி.மு.க.வின் செல்லப்பிராணி கி.வீரமணி தெளிவுபடுத்துகிறார்.

கோவில்களில் வழிபாட்டு உரிமை வேண்டிய தாழ்த்தப்பட்டோர் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடந்த போதெல்லாம் அதற்கெதிராகப் போராட முன்வராமல், காங்கிரீட் சமத்துவபுரம் சாதியை ஒழிக்கும் என நம்மை நம்பச் சோல்லுகிறது தி.மு.க. அரசு. தலித் விடுதலை எனும் இலட்சியத்தோடு ஆரம்பிக்கப்பட்ட டஜன்கணக்கான இயக்கங்களும் இத்தகைய கொடுமைகளுக்கெதிராகத் தொடர்ச்சியாகப் போராடுவதில்லை. மேலும் தாழ்த்தப்பட்டோர் மட்டும் தனியாகப் போராடி சமத்துவ உரிமைகளைப் பெற்றுவிடமுடியாது; ஆதிக்கசாதிகளில் இருக்கும் ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் தாழ்த்தப்பட்டோரும் ஒருங்கிணைந்து போராடுவதைத் தவிர இதற்கு மாற்றுவழியும் கிடையாது.

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

இந்து மதம் கேட்ட நரபலி !

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா?

கடத்தல்

டாடா, பிர்லாக்களின் வரிசையில் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் தொழில் குடும்பங்களில் மஃபத்லால் குடும்பமும் ஒன்று. இக்குடும்பத்தின் மருமகளான ஷீதல் மபத்லால் கடந்த ஜூன் முதல் வாரத்தில் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இலண்டனில் இருந்து மும்பை திரும்பிய ஷீதல் மபத்லால், தன்னிடம் 20,000 ரூபா பெறுமான நகைகள் மட்டுமே இருப்பதாகவும், அவையும் தனது சோந்த பழைய நகைகள் என்பதால் சுங்க வரி எதுவும் கட்டத்  தேவையில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றார். அவர் மீது சந்தேகங்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரது பெட்டியைத் திறந்து பார்த்தபொழுது அதிர்ந்தே   போ விட்டார்கள். கிட்டத்தட்ட 55 இலட்சம் ரூபா பெறுமான பலவிதமான தங்க, வைர நகைகள் ஷீதல் மபத்லாலின் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதற்குண்டான 18 இலட்ச ரூபா சுங்க வரியைக் கட்டாமல் நகைகளைக் கடத்திக் கொண்டு போவிட முயன்ற ஷீதல் மபத்லால் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

குளுகுளு அறைகளிலேயே வாழ்ந்து பழகிய, பஞ்சு மெத்தைகளிலேயே படுத்துப் பழகிய ஷீதல் மபத்லால், ஒரேயொரு இரவுப்பொழுதை சிறையில் ஓட்டை மின்விசிறிக்கு அடியில் கழிக்க நேர்ந்துவிட்ட அவலத்தை எண்ணி, மும்பை நகரின் மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் கண்ணீர் வடித்துள்ளனர். ஷீதல் மபத்லால் செய்த குற்றம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

இப்பயங்கரத்தைக் கேள்விப்பட்ட மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த ஒருவர், “நம்மைக் குறி வைக்கிறார்கள்; இனி நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தமது சக நண்பர்களிடம் சோன்னதாக “அவுட்லுக்” ஆங்கில ஏடு குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள், ஒரு காலத்தில் மும்பை மாநகரைக் கலக்கி வந்த கடத்தல் மன்னன் மஸ்தானை, மேட்டுக்குடி கும்பல் தொழில் போட்டியில் வென்றுவிட்டது என்பதுதான். உதாரணத்திற்குச் சோல்ல வேண்டும் என்றால், புகழ் பெற்ற இந்தி நடிகர் அமிதாப்பச்சன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலண்டனில் இருந்து திரும்பிய பொழுது ஒரு கோடி ரூபா பெறுமான பொருட்களைச் சுங்க வரி செலுத்தாமல் கடத்த முயற்சி செய்த பொழுது மாட்டிக்கொண்டு, பின்பு அதற்கு 36 இலட்ச ரூபா வரியும் அபராதமும் செலுத்திச் சிறைக்குப் போகாமல் தப்பித்துக் கொண்ட “கிரைம்” கதை உள்ளிட்ட பல சம்பவங்கள் இப்பொழுது ஒன்றன்பின் ஒன்றாக அம்பலத்துக்கு வருகின்றன.

இச்சம்பவங்களைக் கேள்விப்படும் பாமர மக்கள் வேண்டுமானால், ஷீதல் மபத்லாலையும் அமிதாப்பச்சனையும் குற்றவாளிகளாகக் கருதலாம். ஆனால், மேட்டுக்கடி கும்பலோ ஷீதல் மபத்லாலைக் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்த சட்டங்களைத்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள்.

‘‘உயர்தரமான சட்டை ஒன்றின் விலையே 20,000 ரூபாயாக இருக்கும் இந்தக் காலத்தில், ஒரு பெரிய முதலாளியின் மனைவியின் பெட்டியில் 50 இலட்ச ரூபா பெறுமான நகைகள் இருப்பது அதிசயமா?”
“அழகு நிலையத்துக்குக்கூட 50 இலட்ச ரூபா பெறுமான நகைகளை அணிந்து போ வரும் ஷீதல் போன்றவர்கள் இலண்டனில் இருந்து வெறும் கையுடனா திரும்ப முடியும்?”

‘‘உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி வரும் இவ்வேளையில், இந்தியச் சட்டங்கள் இன்னும் பழமையானதாக, பிற்போக்குத்தனமாக இருக்கின்றன. சட்டம் எங்களைக் காந்திய வழியில் வாழச் சொல்கிறதா?” ‘‘தாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் நபர் மபத்லாலின் மனைவி என்று தெரிந்தவுடனேயே அதிகாரிகள் அவரை விடுவித்திருக்க வேண்டும்; மாறாக, ஷீதலைக் கடத்தல் பேர்வழி போல நடத்தி அவமதித்துவிட்டார்கள். அபராதத் தொகையை வாங்கிக்கொண்டு ஷீதலை வழியனுப்பி வைப்பதை விட்டுவிட்டு, அவரைக் குற்றவாளியாக்கி விட்டார்கள். ஷீதல் போன்றவர்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை யெனும்பொழுது, பிறகு யார்தான் பாதுகாப்பாக வாழ்ந்துவிட முடியும்?” இவையனைத்தும் மும்பையைச் சேர்ந்த மேட்டுக்குடி கும்பலின் வாயிலிருந்து பொங்கி வழிந்திருக்கும் விமர்சனங்கள். அவர்களைப் பொருத்தவரை ஷீதல் தவறு செய்யவில்லை. சட்டம்தான் தவறு செய்துவிட்டது.

இக்கும்பல் அலட்டிக் கொள்வது போல சுங்கத் துறைச் சட்டங்கள் ஒன்றும் அவ்வளவு கடுமையானதாக இல்லை. இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இரட்டை வரி விதிப்பு முறை உள்ளது. இதன்படி இங்கிலாந்திலோ அல்லது இந்தியாவிலோ வரி செலுத்தினால் போதும். அங்குமிங்குமாக இரண்டு முறை சுங்கத் தீர்வைக் கட்ட வேண்டிய தேவையில்லை. இதனைப் பயன்படுத்திக்கொண்டுதான் ஷீதல் இங்கிலாந்தில் வரி கட்டாமல் இந்தியாவிற்குப் பறந்து வந்தார். இந்தியாவில் தனது குடும்பத்திற்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு வரி கட்டாமல் தப்பிவிடலாம் எனக் கணக்குப் போட்டிருந்தார். “ஷாப்பிங்” செய்வதற்காக அடிக்கடி இலண்டனுக்குப் பறந்து போவரும் ஷீதலின் இந்தக் கணக்கு, அவருக்குப் பலமுறை சுங்கத் துறை அதிகாரிகளை ‘ஏமாற்றி’விட்டுப் ஆடம்பரப் பொருட்களைக் கடத்திவரப் பயன்பட்டிருக்கிறது. இந்த முறை அவரது கணக்குத் தப்பிப் போனதற்கு, மபத்லால் குடும்பத்திற்குள் நடந்து வரும் சோத்துத் தகராறுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், சுங்கத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்படும் ஆடம்பரப்  பொருட்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாக்கும் குறைவானதாக இருந்தால், கடத்தலில் ஈடுபட்ட நபரைச் சிறையில் அடைக்க வேண்டியதில்லை; பிணையில் விட்டுவிடலாம் என உச்சநீதி மன்றமும் தாராள மனத்தோடு ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இத்தீர்ப்பைக் காட்டித்தான் ஷீதல் சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே பிணையில் வெளியே வந்துவிட்டார்.

உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கொஞ்சமாகக் கடத்தி வராதீர்கள் என அறிவுறுத்துகிறது என்று கூறலாம். அயல்நாடுகளில் இருந்து ஆடம்பரப் பொருட்களைக் கடத்தி வரும் மேட்டுக்குடி குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இச்சலுகையைப் போன்று, ஏதாவதொரு சலுகை பல்வேறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டோ அல்லது போலீசின் பொ வழக்குகளில் சிக்கிக் கொண்டோ பிணையில்கூட வெளியே வரமுடியாமல் சிறைக்குள்ளிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய விசாரணைக் கைதிகளுக்கும் காட்டப்பட்டிருந்தால், அவர்களுள் பலருக்குச் சட்ட விரோதமான சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது.

பணத்திலும் செல்வாக்கிலும் புரளும் மேட்டுக்குடி கும்பல், தங்களின் ஆடம்பர வக்கிர வாழ்விற்கு இடையூறாக எந்தவொரு சட்டமும் இருக்கக் கூடாது என்றே விரும்புகிறார்கள். அப்படி ஏதாவதொரு சட்டமிருந்தால், அதனை மீறுவதற்குத் தங்களுக்குத் தார்மீக உரிமையும் நியாயமும் இருப்பதாகக் கருதிக் கொள்கிறார்கள். உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சட்டத்தை மீறிப் போராடினால், அவர்களைத் தயங்காமல் சமூக விரோதிகளாக, தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் அரசாங்கம், மேட்டுக்குடி கும்பல் சட்டத்தை மீறும்பொழுதோ, சட்டங்களைச் சீர்திருத்த வேண்டும் எனப் புது பல்லவி பாடுகிறது.

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

சத்யமேவ பிக்பாக்கெட் ஜெயதே!

செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

சிதம்பரம் கோவில்: சிவனடியார் ஆறுமுகசாமியைக் கொல்வதற்கு தீட்சிதர்கள் முன்னோட்டம் !!

14.07.2009 அன்று ஆறுமுகசாமி 5 வது முறையாக தீட்சிர்களால் தாக்கப்பட்டார். வழக்கம் போல சிதம்பரம் காவல் துறை பார்ப்பானுக்கு ஒரு நீதி, பஞ்சம சூத்திரனுக்கு ஒரு நீதி என்று அடித்தவன் பெயர் தெரியாது என வழக்கு போட்டது. “சிவனடியாரை தாக்கியது ரவுடி ஞானமூர்த்தி தீட்சித கும்பல்தான், கைது செய்யுங்கள், நீங்களும் விசாரித்து கொள்ளுங்கள்” என்று நாங்கள் போலீசிடம் சொன்னோம். ஆனால் பூணூல் குடுமிக்கு எதிராக காக்கிச் சட்டை அசைய மறுத்து விட்டது.

இதற்காக 17.7.2009 அன்று காலை 10.00 மணிக்கு மேலவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்புடன், பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பா.ம.க, வி.சி.க மற்றும் சிவனடியார் ஆறுமுகசாமி, வி.எம். சந்திரபாண்டியன், வி.வி.சுவாமிநாதன், வழக்கறிஞர் ராஜூ, வழக்கறிஞர் செந்தில், காவியச்செல்வன், தோழர் அம்பிகாபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அதில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ பேசிய உரையின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

” சிதம்ரம் நகர போலீசு சிவனடியாரை தாக்கிய ரவுடி ஞானமூர்த்தி தீட்சித கும்பலை இந்த ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் கைது செய்து விடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நடராசர் நகையை திருடிய தீட்சித்தர்கள் மீது சங்கர தீட்சிதர் என்பவர் கொடுத்த புகார் பதிவு செய்யப்பட்டு 1994 முதல் தூங்குகிறது. மூர்த்தி தீட்சிதர் என்பவரை கோவிலுக்குள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் நகர ஆய்வாளர் ராமலிங்கத்திற்கு தெரிந்தும் அன்றைக்கு வழக்கு பதிவு செய்யாமல் முடிக்கப்பட்டது. இவைகளுக்கு சி.பி.ஐ.விசாரணை வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் போட்ட வழக்கில் தமிழக போலீசு 2 வருடங்ளாக தீட்சிதர்களுக்கு ஆதரவாக இழுத்தடித்து வருகிறது.பின் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?”……

“போலீசு தன் கடமையை செய்ய மறுக்கிற போது , பொது மக்களே அதை செய்யவேண்டும். குற்றவியல் சட்டம் பிரிவு 43 நமக்கு அந்த அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. சிவனடியாரை தாக்கிய ரவுடி ஞானமூர்த்தி தீட்சிதரை நாமே பிடித்து கையை பின்புறம் கட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். இப்படி செய்யும் சூழல் இருந்தால் போலீசு முந்தி கொண்டு கைது செய்து விடும். கடலூரில் புதிதாக வந்துள்ள எஸ்.பி, எஃப்.ஐ.ஆர் இருந்தால் அந்த ரவுடி கையை உடைத்து விடு என்று சொல்கிறார். தீட்சிதன் கையை உடைப்பாரா அந்த கடலூர் எஸ்.பி என்று நாங்கள் கேட்கவில்லை, கைது செய் என்றுதான் கேட்கிறோம்.”

“தமிழ் பாடும் அரசாணையை போலீசு அமுல்படுத்த தவறினால் ம.க.இ.க தோழர்களும், பொது மக்களும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் தானே அமல்படுத்தும் என்பதை அறிந்த அரசு, ஏ.எஸ்.பி செந்தில் வேலன் மூலம் நிறைவேற்றியது. நாம் செய்திருந்தால் எத்தனை தீட்சிதர்களுக்கு பூணூல் குடுமி அறுந்திருக்கும், மண்டை உடைந்திருக்கும், என்று சொல்ல முடியாது. போலீசு உயர் அதிகாரிகள் வர்க்க பாசத்தோடு தீட்சிதர்கள மீது தள்ளு முள்ளு நடத்தியபோது எஸ்.பியை தாக்கிய பிறகும் அடங்காத தீட்சிதர்கள் சாதாதரண காவலர்கள், போலீசு என்பதை தாண்டி வர்க்க உணர்வோடு உடம்பு முழுவதும் எண்ணை தடவிய தீட்சித பார்ப்பனர்களை சிண்டை பிடித்து இழுத்து சிற்றம்பல மேடைக்கு வெளியே எறிந்தவர்கள் சாதாரண காவலர்கள். அன்று மாலை எங்கள் மீது தடியடி நடத்தி கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த போது ஏ.எஸ்.பி. செந்தில் வேலன் என்னிடம் என்ன தெரியுமா சொன்னார்? ‘என் உத்யோகத்தை பணயம் வைத்து இன்று காலை இந்த வேலையை செய்து முடித்தேன்’ என்றார். அரசாணையை அமுல்படுத்தும் இந்த போலீசு அதிகாரி வேலையைப் பணயம் வைக்கிறார் என்றால என்ன அர்த்தம்? பார்ப்பானிடம் பூணூல் குடுமி இருக்கிறது. அவன் ஆன்மீகத்தில், சாதாரண மக்களை பக்தியால் ஒடுக்கும் ஆன்மீக போலீசு. இவர்களிடம் லத்தி, துப்பாக்கி இருக்கிறது. சாதாரண மக்களை அடித்து பலாத்காரமாக ஒடுக்கும் அரசு போலீசு, அதனால் தீட்சிதப் பார்ப்பான் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இதை புரிந்து கொண்டால்தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக செய்ய முடியும்.”

“எங்களை சட்டவிரோதமாக தாக்கி கைது செய்த போலீசு மீது வழக்கு போட்டு இதே சிதம்பரம் நீதிமன்றத்தில் அவர்களை குற்றவாளிகளாக்கி கோர்ட டவாலியால் போலீசு வகையறா என்று கூப்பிட வைத்திருக்க முடியும். ஆனால் எங்கள் போராட்டம் போலீசை எதிர்த்து அல்ல. தீட்சித பார்ப்பனர்களை எதிர்த்துதான். கடந்த 2000ஆம் ஆண்டில் தமிழில் பாடி வழிபட சென்று சிவனடியார் ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் அடித்து கையை முறித்து தூக்கி வெளியே வீசினார்களே, அப்போது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தீட்சிதனுக்கு எதிராக இங்கு கண்டன ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்தியிருந்தால், நம்ம தோழரை தீட்சித பார்ப்பன வேசம்போட்டு செருப்பால் அடித்து இழுத்து சென்றதை வைத்து சிதம்ரத்தில் பிராமண சங்கம், பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்தியிருக்காது. பிரமீடு சாய்மீரா என்ற பிராடு கம்பெனி தலைவர் நாராயணன், பிராமணர் சங்க தலைவராக துணிச்சலாக இங்கு பேசியிருக்க மாட்டான். இந்து ஆலய பாதுகாப்பு குழு என்கிறான். இந்த ஆலயப்பாதுகாப்பிற்காக என்ன செயதான், கோவிலில் நடந்த தீட்சிதர்களின் காமகளியாட்டத்தை தட்டி கேட்டானா, மர்ம கொலைகளுக்கு நீதி கேட்டானா, சாமி நகையை திருடி விற்ற தீட்சிதனை தண்டித்தானா, பக்தர்களிடம் ஆன்மீகத்தை பேசாமல் டூரிஸ்ட் கைடு போல பணம் பறித்த்தை தடுத்தனா, தமிழ்பாட மறுத்த தீண்டாமை கொடுமைக்கு குரல் கொடுத்தனா? கோவில் சொத்தை விற்று பங்கு போட்ட தீட்சிதனை கண்டித்திருப்பானா? கோவில் முழுவதும் குப்பையும், மாடும், மாட்டுசாணியும் பரவி கிடந்தபோது பார்க்காதவன், இன்று தீட்சிதன் போட்ட எச்சில் எலும்பு துண்டுக்காக கைக்கூலிகளாக ஒன்று சேர்ந்து இந்து ஆலய பாதுகாப்பு குழு என்று வைத்து கொண்டு உண்டியல் வைப்பதை தடுக்கிறான், கோவிலை பாதுகாப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பெற்ற உரிமையை பாதுகாப்பது நமது கடமை.”

“இந்த கோவிலில் வரும் வருமானத்தை சாமியாரா கொண்டு போக போகிறார், இல்லை நாங்க கொண்டு போக போகிறோமா? அவர் மட்டும் பாட வேண்டும் என்று இருந்தால் எப்போதோ போராட்டம் முடிந்திருக்கும். அனைவரும் பாடவேண்டும், இந்த கோவில் முழுமையாக தீட்சித கொள்ளை கூட்டத்திடமிருந்து மீட்க வேண்டும். தீட்சித தனித்சொத்தாக உள்ள, நடராசா கோவில் பொது சொத்தாக்காப்படவேண்டும் என்பதற்குத்தான் இந்த போராட்டம். தமிழக முதல்வரால் நேரடியாக தமிழ் காவலர் என்று பாராட்டு பெற்று, மாதம் 3000 ஓய்வூதியம் பெறுபவர், பெற்ற உரிமை பாதுகாக்க படவேண்டும் என்பதற்காக தள்ளாத வயதிலும் தினந்தோறும் மாலையில் கோவிலுக்கு சென்று சிற்றம்பல மேடைக்கு போங்க, பாடுங்க, தீட்சிதன் காசு கேட்டா குடுக்காதீங்க, உண்டியல்ல காசு போடுங்க என்ற பக்தர்களை ஆற்றுபடுத்துகிற காரணத்தால் கோவிலுக்கு வரும் சிவனடியாரை தீட்சிதன் தாக்க முடிகிறது என்றால் காரணம் தீட்சிதன் அல்ல, சிதம்பரம் நகர பொதுமக்கள், பக்தர்கள்தான். வள்ளலார் ஜோதியில் கலந்தார், நந்தனார் ஜோதியில் கலந்தார், பெத்தான சாம்பான், மூத்த்தாண்டவர் ஜோதியில் கலந்தார்கள், சிவனடியார் ஆறுமுகசாமி கால் தவறி கீழே விழுந்து கருங்கல்லில் அடிப்ட்டு இறந்து போனார் என்று தீட்சிதனே சாமியாரை சுவற்றில் மோதி கொன்று விடுவான். காவல்துறை இத்துப்போன 2 தீட்சிதனை கைது செய்யும். சாட்சி சொல்ல எந்த பக்தர்களும் வரமாட்டான் கேஸ் முடிந்து போகும்.”

“காஞ்சிபுரத்தில் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த சங்கரராமனை, சங்கராச்சாரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து போட்டுத்தள்ளினார். யார் சாட்சி சொல்லுவார்கள். அது போல இங்கேயும் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கும் சாமியாரை தீர்த்து கட்ட, தீட்சிதர்கள் முன்னோட்டம் பார்க்கிறர்கள். சாமியாரை இத்தனை தடவை தாக்குகிறார்களே, நாம் ஒரு தடவை தீட்சிதனை திருப்பி அடித்து விட்டால் என்ன ஆகும்? நாம் போலீசு ஸ்டேசன்ல புகுந்து போலீசை அடிச்சா என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். கோவிலும், போலீசு ஸ்டேசனும் ஒன்றுதான்.

சாமியார் கொல்லப்பட்டால் முதல் குற்றவாளி தீட்சிதன், இரண்டாவது குற்றவாளி சிதம்பரம் நகர மக்கள், மூன்றாவது குற்றவாளி போலீசு என்பதை அறுதியிட்டு சொல்லுகிறேன். தீட்சிதர்களால் சாமியார் உயிருக்கு ஆபத்து என்றுபல முறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். ஏனென்றால் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வந்த தில்ல நடராசன் கோவில் முழுமையாக கையை விட்டு போகிறது அதை மீட்க முடியாமல் இருப்பதற்கு சாமியார்தான் காரணம், அவரை போட்டு விட்டால் நீதிமன்றத்திற்கு இவர்கள் தொடர்ந்து வாதாட முடியாது என்று தீட்சிதர்கள் நினைக்கிறார்கள்.” “சாமியாரை அடித்தால் பொதுமக்கள் திருப்பி அடிப்பார்கள் என்று தீட்சிதன் நினைத்தால் சாமியார் தாக்கப்படமாட்டார். சாமியாரை தாக்கிய தீட்சிதனை நாம் கைது செய்யாவிட்டால் தீட்சிதனுக்கு பாதுகாப்பில்லை என்று போலீசு நினைத்தால் போலீசு தீட்சிதனை கைது செய்யும். தீட்சித பார்ப்பானுக்கு எதிராக சட்டம் செயல்படாது என்பது தொடருமானால், மக்களே சட்டத்தை அமல்டுத்த வேண்டும். அப்போது நடராசர் கோவில் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படும். அதற்கு நாங்கள் முன்னணியில் இருப்போம். 15 நாட்களுக்குள் ரவடி ஞானமூர்த்தி தீட்சித கும்பலை போலீசு கைது செய்யாவிட்டால் நாங்களே கைது செய்து போலீசு நிலையத்தில் ஒப்படைப்போம் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தில் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.”

-தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

vote-012
…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

நந்தனை மறைத்தது நந்தி – நீதிமன்ற தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி !!

உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

1

2

3

4

வீரமணி கும்பலிடமிருந்து பெரியார் விடுதலை??

118

periyar-copy

90களின் ஆரம்பத்தில் “பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!” என புதிய ஜனநாயகத்தில் வந்த தொடர் கட்டுரை அரசியல் உலகில் பெரும் விவாதத்தையும் கிளப்பி போயஸ் தோட்டத்து பூசாரியாக மணியாட்டிக் கொண்டிருந்த வீரமணி கம்பெனியை முற்போக்கு உலகில் அம்பலப்படுத்தியது. அப்போது கம்பெனியார் ம.க.இ.கவின் மீது கொலைவெறியுடன் விடுதலையில் பார்ப்பனத் தலைமை இன்னபிற அவதூறுகளை வீசிக்கொண்டிருந்தனர். அப்போது இப்போதைய பெ.தி.க தோழர்களும் அங்கேதான் இருந்தனர். இந்தக் கட்டுரையின் தொடர்விளைவாகவும் ம.க.இ.கவின் இந்துத்தவ மற்றும் ஜெயாவை எதிர்த்த போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் திராவிடர் கழகத்திலிருந்து பெ.தி.க தோழர்கள் வெளியேறினார்கள். அதற்கு முன்னரே வீரமணி அரசியல் ரீதியில் சமாதியானார்.

கோபாலபுரத்திற்கும், தோட்டத்திற்கும் மணியாட்டிக்கொண்டிருந்ததன் பின்னே மாபெரும் பொருளாதார நலன்கள் இருந்தன. வட்டிக்கடையும், சுயநிதிக்கல்லூரியும் என பெரியார் ஆரம்பித்த இயக்கத்தை லிமிடெட் கம்பெனியாக மாற்றியிருந்த வீரமணி தனது அல்லக்கைகளை வைத்து பெரியார் திடலில் அவ்வப்போது ஏதோ அரிப்புக்கு கூட்டம் நடத்தி களப்பணியாற்றுவதாக பீலா காட்டிக் கொண்டு மறுபுறம் தனது சொத்துக்களை பெருக்குவதற்காகவும், பாதுகாக்கவும் ஆளும் கட்சிகளை அண்டிப்பிழைத்தார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவ்வளவு கோடிக்கணக்கில் வருமானத்தை பெருக்கியும் பெரியாரின் படைப்புகளை வெளியிடுவதற்கு கூட துப்பில்லாமல் விடுதலையிலும், உண்மையிலும் மருத்துவ நலன், தன்னம்பிக்கை, ஊட்டச்சத்து, வாழ்வியல் சிந்தனைகள் என தூரதர்ஷனில் மாமிகள் நடத்தும் அரட்டைகளை அரங்கேற்றி வந்தார்.

இதனூடாக பெரியார் தி.க தோழர்கள் பெரியார் படைப்புக்களை முழுமையாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்ட போது மட்டும் அதை நிறுத்துவதற்கு கருணாநிதியை வைத்தும் நீதிமன்றத்திலும் தடை வாங்கியிருந்தார். பெரியார் கருத்துக்கள் மக்களிடம் போய்ச்சேரக்கூடாது என இந்தக் கருப்பு பார்ப்பனர் செய்த வாதங்கள் குருவாயுரப்பனுக்கே பொறுக்காது.

ஆனாலும் நீதிமன்றத்தில் பெரியாரின் கருத்துக்களை சொந்தம் கொண்டாடுவதற்கு சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லையெனவும், பெரியார் படைப்புக்களை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் எனவும் பெரியார் தி.க தொடுத்த வழக்கில் நீதிபதி சந்துரு தீர்ப்பளித்திருக்கிறார். இதற்கு முதற்கண் பெரியார் திராவிடர் கழக தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். உடனே வெகுண்ட வீரமணி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் இந்த தீர்ப்பை இப்படியே இப்போதைக்கு தொடருமென பதிளிக்கப்பட்டிருக்கிறது. இனி ஐயா டெல்லிக்கு உச்சநீதி மன்றத்திற்கு படையெடுப்பார். எத்தனை கோடி செலவானாலும் இந்த வழக்கில் வெல்லுவதற்கு எல்லா சின்னத்தனமான வேலைகளையும் செய்வார். எனினும் அவை வெற்றிபெறப் போவதில்லை. அதற்குள் பெரியாரின் படைப்புக்கள் தோழர்களால் வெளியிடப்படும் என நினைக்கிறோம். உச்சநீதிமன்றமும் வீரமணிக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதற்கான முகாந்திரங்கள் எதுவுமில்லை.

கண்ட கண்ட அனாமதேயங்களின் படைப்புக்களையெல்லாம் நாட்டுடைமையாக்கி நவீன புரவலராக மார் தட்டும் கருணாநிதி பெரியாரின் படைப்புகளை மட்டும் வீரமணிக்கு உதவும் பொருட்டு அப்படி ஆக்காமல் இருந்து மற்றொரு துரோகமும் செய்திருக்கிறார். பெரியவர் இப்படி தனது இறுதி காலத்தில் துரோகப் பட்டங்களை நிறைய பெறுவது குறித்து தொண்டர்களே கவலைப்படுவதில்லை. நாம் மட்டும் ஆதங்கப்பட்டு என்ன ஆகப்போகிறது?

ராஜீவ் கொலையின் பின்னாளில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகமெங்கும் ம.க.இ.க வீச்சாக இயக்கம் நடத்திய நாளில் சென்னையில் ஒரு கூட்டம் நடத்துவதற்கு கூட பெரியார் திடலை தருவதற்கு பயந்து கொண்டு மறுத்தவர்தான் இந்த வீராதி வீரமணி. இன்றைக்கு ஈழத்திற்காக என்னவெல்லாம் அழுது புரண்டு நடிக்கிறார். கருணாநிதி மட்டுமல்ல வீரமணியும் தனது இறுதி காலத்தில் துரோகப் பட்டத்தோடுதான் வாழப்போகிறார். வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வீரமணியின் இணையத்தளபதியாக விடாமல் தினசரி நான்கைந்து பதிவுகள் போட்டுத்தாக்கும் தமிழ் ஓவியாவிற்கு இந்த தருணத்தில் சில கோரிக்கைகளை வைக்கிறோம்.

நண்பரே நாத்திகப் பிரச்சாரம் எப்போதும் தேவையுள்ள ஒன்றுதான். ஆனாலும் மக்களின் எல்லா வாழ்க்கைப்பிரச்சினைகளை பேசி போராடும் முழுமையில்தான் அதையும் செய்ய முடியும். இல்லையேல் அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆளில்லாத சிவன் கோவிலில் ஐயர் கொட்டாவி விட்டுக்கொண்டே பூஜை செய்து சிவனை எழுப்பமுயன்று தோற்று தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களை விரட்டிவிட்டு வீடு சென்று தயிர்சாதம் உண்டு முடங்குவது போல உங்களின் அன்றாடப்பணியும் கணினியில் அப்படி ஆகிவிட்டது. எங்களுக்கும் உண்மையிலேயே வருத்தமாகத்தானிருக்கிறது. உங்கள் தளத்தை யாரும் அதிகம் பார்ப்பதில்லை, எதைக்குறித்தும் விவாதமும் நடப்பதில்லை. “யாரோ” 5 பேர் ஓட்டு மட்டும் போடுவதால் தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவுகள் தினமும் நான்கைந்து வந்து விடுகின்றன. இனி தினமும் ஒன்று மட்டும் போட்டால் எங்களைப் போல ஏழை பதிவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

மற்றபடி பெரியாரை அவரது வீரியத்துடன் கொண்டு செல்லும் பணியினை நாங்கள், தோழர் மதிமாறன், மற்றும் பெரியார் திராவிட கழக தோழர்கள் முதலானோர் பார்த்துக் கொள்கிறோம். இனி நீங்கள் திடலுக்கு சென்று மானமிகுவை சந்தித்து அவரை நல்வழிப்படுத்தும் பணியினை செய்யலாம். அப்படி செய்த மறுகணமே நீங்கள் திடலை விட்டும் கழகத்தை விட்டும் நீக்கப்படுவீர்கள். அப்புறம் என்ன செய்யலாம்? நீங்கள் சாயம் போன கருப்புச்சட்டையை கடாசி விட்டு எங்களைப் போன்றவர்கள் அணியும் விறுவிறுப்பான செஞ்சட்டையை அணியுங்கள். காத்திருக்கிறோம்.

கட்டுரையில் ஒரு தவறு!

நீதிபதி சந்துரு தீர்ப்பினை எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்து அதன்படி தீர்ப்பினை செயல்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டிருப்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஏற்று உத்தரவிட்டிருக்கிறது. மேலும் மேல் முறையீடும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கில் பழைய நிலையே அதாவது பெரியார் திராவிடர் கழகம் புத்தகத்தை வெளியிடுவதற்கான தடை நீடிக்க்கிறது. இந்த மேல் முறையிட்டில் இந்த வெளியீட்டின் மூலம் பெ.தி.கவினர் நிறையா சம்பாதிப்பார்கள், தங்களுக்கு நட்டம் ஏற்படும் என வீரமணி சேட்டு வெட்கம் கெட்டு குறிப்பிட்டிருக்கிறார். ஆக பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்ய சட்டபூர்வ போராட்டம் மட்டும் போதாது, மக்கள் அரங்கிலும் போராட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்பது புரிகிறது.

கட்டுரையில் இந்த மேல்முறையீட்டின் விவரங்களை தெரிந்து கொள்ளாமல் தவறாக வெளியிட்டமைக்கு மன்னிக்கவும்.

vote-012
…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

periyar-viduthalai-5-8-09

ஆப்பிரிக்காவில் எமது வேர்களைத் தேடி…

16

african-roots

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – நிறைவுப் பாகம்

ஆப்பிரிக்க கண்டம் பற்றிய எமது அறிவு மிகக் குறுகியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் கற்பிக்கும் வரை, இந்து சமுத்திரத்திற்கு அப்பால் இருந்த பாரிய நிலப்பரப்பு எமது கண்ணிற்குப் புலப்படவில்லை. நாம் கற்றுக் கொண்ட வரலாற்றுப் பாடங்கள் யாவும், பிரிட்டிஷ் கண்ணோட்டத்தில்  எழுதப்பட்ட தரவுகள் தாம். அதனால் தான்,  இன்றும் கூட ஆப்பிரிக்கர்களுக்கும்,  தமிழருக்கும் இடையில் எந்த வித தொடர்பும் இல்லை, என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். வெள்ளையினத்தவர்களும், சீனர்களும் தனித்தனியே தோன்றிய இனங்களாக கருதிக் கொள்வதைப் போல, திராவிடர் வரலாறும் தனித்துவமாக காட்டிக் கொள்கின்றது. அண்மையில் தான், சமூக விஞ்ஞானிகள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னர், உலகின் அனைத்து இனங்களும் ஆப்பிரிக்க மூதாதையரைக் கொண்டிருப்பதை நிரூபித்தனர்.

தமிழரின் மூதாதையரை ஆப்பிரிக்காவில் தேடுவதா? சிலருக்கு இது அபத்தமாகப் படலாம். ஐரோப்பாவின் பழமை வாய்ந்த மொழியை பேசும் பாஸ்க் (ஸ்பெயின்) இனத்திற்கும், தமிழருக்கும் தொடர்பிருப்பதாக ஒரு தமிழறிஞர் தேடிக் கண்டுபிடித்து கட்டுரை வரைந்திருந்தார். தமிழர்கள் “தொலைந்து போன யூத இனக்குழுக்களில் ஒன்று” என்று நிறுவத் துடிக்கும் மேதாவிகளும் இருக்கின்றனர். இவையெல்லாம் பலருக்கு அபத்தமாக தோன்றுவதில்லை. அதற்குக் காரணம், ஒவ்வொரு பின்தங்கிய இனமும் தம்மை விட முன்னேற்றமடைந்த இனத்துக்கு நிகராக வர விரும்புகின்றன. உலகில் ஐரோப்பியர் வகிக்கும் மேலாண்மை, பலருக்கு “கடவுள் கொடுத்த வரமாகத்” தெரிகின்றது. மேலாண்மை பெற ஐரோப்பியர் செய்த இனப்படுகொலைகள், கொள்ளைகள், பித்தலாட்டங்கள் என்பன பற்றி அறிந்தவர்கள் குறைவு.

எமது நாடுகளில் காலனிய காலத்தில் ஆதாயம் பெற்ற வர்க்கம் ஒன்று, பரம்பரை பரம்பரையாக ஏகாதிபத்திய விசுவாசம் காட்டத் தவறுவதில்லை. ஒருவரின் அரசியல் கருத்தமைவு, அவர் சார்ந்த வர்க்க நலன்களில் இருந்தே பிறக்கின்றது.  இதனால் வளர்ச்சியடைந்த ஐரோப்பியருக்கும், நாகரீகமடையாத ஆப்பிரிக்கர்களுக்கும் நடுவில் தாம் நிற்பதாக ஒரு கற்பிதத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். பஞ்சமும், பிணியும் சூழ்ந்த இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவுடன் தம்மை இனம் காண யார் தான் விரும்புவர்? அதற்கு மாறாக செல்வச் செழிப்பு மிக்க அமெரிக்காவுடன் தம்மை இரண்டறக் கலக்க போட்டி போடுகின்றனர். இந்த தாழ்வுச் சிக்கல் தமிழரை மட்டும் பாதிக்கவில்லை. அமெரிக்க கண்ட நாடுகளில் வாழும், ஆப்பிரிக்க வம்சாவழி கருப்பினத்தவரும், பசுபிக் பிராந்திய ஆதிவாசிகளும் தமது வேர்களை ஆப்பிரிக்காவில் தேட விரும்புவதில்லை.

human-migrationதமிழ் நாட்டில் வாழும் இருளர்கள், இலங்கையில் வாழும் வேடுவர்கள் ஆகியோர்,  இன்றும் ஆப்பிரிக்க அடையாளங்களை காவித் திரியும் ஆதிவாசி இனங்கள். இந்திய உபகண்டத்தில், ஆப்பிரிக்க ஆதிவாசிகள் வந்தேறு குடிகளுடன் கலந்து புதிய இனங்கள் உருவாகின என்ற வரலாற்று உண்மையை பலர் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. ஆயிரம் ஆண்டுகளாக தாம் இனத் தூய்மை பேணி வருவதாக, தமக்கு ஏற்றவாறு வரலாற்றை திருத்தி எழுதிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் நில ஆதிக்கத்திற்காக இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட சச்சரவுகள், நாகரீகமடைந்த காலத்திலும் தொடர்கின்றன.  கால்நடை மேய்த்த காலத்தில் இருந்து, கணணி வேலை செய்யும் காலம் வரை, மனிதன் தனக்குள்ளே பிரிவினைகளை வளர்த்துக் கொண்டே போகிறான்.

சாதி வேற்றுமைகள் இந்தியாவின் வளர்ச்சியை தடைப்படுத்தும், என்று பெரியார் தீர்க்கதரிசனத்துடன் கூறிச் சென்றார். ஆப்பிரிக்கர்கள் தமக்கிடையிலான இனக்குரோதங்களை தீர்த்துக் கொள்ளாவிட்டால், சமூகப் புரட்சி இன்னும் நூறு வருடங்களுக்கு பின்தள்ளப்படும் என்று குறிப்பு எழுதிவைத்தார் சே குவேரா. இந்திய உப கண்டத்திற்கும், ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. சாதி அமைப்பு முறை, இந்திய உபகண்டத்திற்கு மட்டுமே உரியது என்று, பலர் தவறாக நினைத்துக் கொள்கிறனர். வர்ணாச்சிரம காலம் என்பது வேறு, சாதிகளின் மூலம் வேறு. இயற்கலை வளங்களின் மேலான ஆதிக்கத்திற்காக, ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்த பண்டைய இனங்கள், வெற்றி பெற்ற இனத்தின் அதிகார வலையத்திற்குள் வந்த போது சாதிகளாக உருமாறின. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இந்த சமூக மாற்றம் நடப்பதற்குள் ஐரோப்பியர் காலனிப்படுத்த தொடங்கி விட்டனர்.

சோமாலியா, மொரிட்டானியா, போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் சாதி அமைப்பு உள்ளது. இந்திய உபகண்டத்தில் நிலவும் அதே சாதி வேற்றுமை, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் கட்டிக் காக்கப்படுவது வியப்புக்குரியதாக தோன்றலாம்.  இந்தியாவில் ஆரியரின் வருகையும், சுதேசி இனங்களின் மீதான ஆதிக்கமும் சாதியத்தை நிறுவனப் படுத்தியது. அதே போல, அரேபியரின் வருகையுடன் தான், மொரிட்டானியா, சோமாலியா ஆகிய நாடுகளில் ஸ்தாபன மயப்பட்ட சாதியம் தோன்றியது. அரேபியரின் தாயகபூமியில் உள்ள ஏமனிலும் சாதி அமைப்பு உள்ளமை குறிப்பிடத் தக்கது.  புதிய சமுதாய மாற்றம் வரும் போது, இனக்குழுக்கள் சாதிகளாக தொடர்கின்றன. ஆதிக்க இனத்தின் மொழியை சுவீகரித்த பின்னர் அவர்களது பாரம்பரிய வேர்கள் அழிகின்றன. மொரிட்டானியா, சோமாலியா பற்றிய விரிவான ஆய்வு தேவை.

afric0

இந்தியாவில் நிலவும் சாதிப் பாகுபாட்டைப் பற்றி நான் ஐரோப்பியருக்கு விளக்கிய  போது, அவர்களால் அதனை சரியாக கிரகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பல்வேறு ஆப்பிரிக்க நாட்டினருடன் உரையாடிய போது, அதிசயத்தக்க விதத்தில் பல ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டுகொண்டேன்.  கிணற்றில் தண்ணீர் அள்ள உரிமையில்லாதது முதல், அகமண முறை வரை ஆப்பிரிக்க சமூகங்கள் இந்தியாவின் பிம்பமாக இருக்கின்றன. இன்றும் சில ஆப்பிரிக்க பகுதிகளில், ஒரு இனத்திற்கு(சாதிக்கு) சொந்தமான கிணற்றில், வேற்றினம் தண்ணீர் அள்ளிய குற்றத்திற்காக கொலைகள் நடக்கின்றன. சூடானின் டார்பூரில் நடந்த யுத்தம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஆப்பிரிக்காவில் உள்ளதை இனம் என்றோ, குலம் என்றோ அல்லது வேறு எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், உள்நாட்டுப் பிரிவினை பல யுத்தங்களுக்கு வழி கோலியுள்ளதை மறுக்கமுடியாது.

இந்தியர்களும், ஆப்பிரிக்கர்களும் ஒரு காலத்திலும் பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது என்பதில் ஐரோப்பியர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் “அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாட்டை”, பிச்சைக்காரர்களின் மாநாடு என்று மேற்கத்திய பத்திரிகையாளர்கள் பரிகசிப்பார்கள். அதற்கு காரணம், அவர்களுக்கிடையே இருக்கும் தீர்க்க முடியாத பிரச்சினைகள். ஐரோப்பியர்கள் தோன்றிய காலத்தில் இருந்து நாகரீகமடைந்த சமூகமாக இருக்கவில்லை. ஐரோப்பாவிலும் இனக்குரோதங்களும், சாதிப் பிரிவினைகளும் ஒரு காலத்தில் இருந்து வந்துள்ளன. இந்தியாவில் கால்பதித்த போர்த்துக்கேயர்கள், இந்திய சாதியமைப்பை தமது நாட்டில் உள்ளது போன்ற வேலைப்பிரிவினை என்று புரிந்து கொண்டார்கள்.  ஐரோப்பிய சாதிகள் இன்று சரித்திரமாகி விட்டன. சிலருடைய (தொழில் அடிப்படையிலான) சாதிப் பெயர்கள், தற்போது  குடும்பப் பெயராக மாறி விட்டன. அவை இன்று அர்த்தமற்ற வெறும் பெயர்கள்.

ஆப்பிரிக்காவில் இனங்களை ஒன்றோடொன்று மோத விடுவதில், ஐரோப்பியர்களின் பங்கு குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. இடது கையால் அரசுக்கு உதவுவார்கள், வலது கையால் கிளர்ச்சிக் குழுவிற்கு உதவுவார்கள். அரசு ஒரு இனம் சார்ந்ததாகவும், யுத்த பிரபுக்கள் (அல்லது கிளர்ச்சியாளர்கள்) இன்னொரு இனம் சார்ந்தும் இருப்பதால் தான், அவர்களால் தொடர்ந்து யுத்தம் செய்ய முடிகிறது. காலனியாதிக்கத்தை எதிர்த்து எழுந்த தேசிய விடுதலை, வர்க்க விடுதலை போன்ற கோஷங்களை இப்போது கேட்க முடிவதில்லை. தனது சொந்த இனமே சிறந்தது என்ற இனவாதம் நிகழ்கால அரசியலை தீர்மானிக்கின்றது. சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர்கள் சிறந்த உதாரணம். இனங்களுக்கிடையிலான யுத்தங்களில் ஐரோப்பிய ஆயுத வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். இந்த இரகசியங்கள் வெளியே வரும் போது, ஒரு சில தனியார் கம்பெனிகள் மட்டும் தண்டிக்கப்பட்டன.

afric1

ஆப்பிரிக்காவை பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன. இருப்பினும் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” என்ற கட்டுரைத் தொடர் இத்துடன் முடிவுறுகின்றது. இந்த தொடரில் விடுபட்டுப் போன நாடுகளின் கதைகள் இன்னும் உள்ளன. அவற்றை பிறிதொரு தொடரில் எழுதுகின்றேன். அதற்கான குறிப்புகளை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன். இது முதலாவது பாகத்தின் முடிவுரை மட்டுமல்ல, இரண்டாவது பாகத்தின் தொடக்கவுரை. அரபு பேசும் வட ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றி, மத்திய கிழக்கு சம்பந்தமான பிறிதொரு தொடரில் எழுதவிருக்கிறேன். புதிய தொடர்களுக்கான தரவுகளை சேகரிப்பதற்கு எனக்கும் கால அவகாசம்  தேவைப்படுகின்றது. அதற்கிடையில் இதுவரை வந்த ஆப்பிரிக்க தொடர் கட்டுரைகள், நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும். என்னை எழுத ஊக்குவித்த தோழர் வினவுக்கும், கட்டுரைகளை வாசித்து உற்சாகப் படுத்திய மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

-கலையரசன்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா

காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !

ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !

நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !

ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !

கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !

அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD

கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்

சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!

நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

லைபீரியா : ஐக்கிய அடிமைகளின் குடியரசு

அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்

தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com

ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் !

33

பதுங்குகுழிகளும் பாடசாலைகளும்

ஈழத்தின் நினைவுகள் பாகம் –2

ஈழவிடுதலைக்கான‌ போராட்டத்தோடு இணைந்ததுதான் எங்கள் வாழ்வியல் போராட்டங்களும். அதன் தாக்கங்கள், பாதிப்புகள் ஒவ்வொரு ஈழத்தமிழ‌ன் வாழ்விலும் நிறையவே காயங்களை உண்டாக்கியது. போர் ஓய்ந்த பின்னும் கூட எங்கள் வலிகள் இன்னும் ஆறவில்லை. அது சுலபமாக ஆறக்கூடியதுமல்ல. ஒரு சராசரி மனிதனின் வாழ்வியல் போராட்டங்களின் அடிப்படை அம்சங்களான கல்வி, பொருளாதாரம், சமூக மாற்றம் இன்னபிற விடயங்களில் போர் எவ்வளவு தாக்கங்களை உண்டாக்கியது என்பதுதான் நான் சொல்லவிளைவது. எல்லா சமூகங்களையும் போல் ஏன் எங்களால் ஓர் இயல்பு வாழ்வை வாழமுடியவில்லை என்ற கேள்வி என்னை வாட்டுவதுண்டு. ஆனாலும், எவ்வளவு வலிகளையும் தாங்கிக்கொண்டு ஈழத்தமிழர்கள் நிறையவே சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கல்வி, தனிமனிதன் ஆனாலும் சரி , சமூகமானாலும் சரி, முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைப்பது இதுதான். ஆனால், இந்த கல்வியை நான் மற்றும் ஈழத்தில் என்னைப்போன்றவர்கள் பெறுவதற்கு போர்ச்சூழலில் பட்ட அல்லது படுகிற சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சிங்கள அரசு தமிழ்மாணவர்களின் கல்வியைசிதைக்கிறது என்றுதான் தோன்றுகிறது. கல்வி மறுக்கப்பட்டால் ஈழத்தமிழர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை, அவர்களின் விடுதலை உணர்வை தடுக்கலாம் என்பது சிங்கள பேரினவாதிகளின் குறிக்கோளாக இருக்கலாம்.

நான் வாழ்ந்த ஊரில் எல்லாமாக‌ மூன்று பெரிய பாடசாலைகள் இருந்தன. அவற்றில் இரண்டு உயர்தர பாடசாலை, மற்றது எட்டாம் வகுப்புவரை உள்ளது. அதில் இரண்டு பாடசாலைகள் ராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டிருந்தன.பாடசாலைகள் கூட ராணுவ முகாம்களாக ஆக்கப்பட்டு, குண்டு வீச்சில் பாடசாலைகள் சிதைக்கப்பட்டு,மாணவர்கள் கைதுசெய்யப்பட்டும், கொலைசெய்யப்பட்டும் எங்கள் கல்வி மற்றும் மாணவர் சமுதாயம் சத்தமில்லாமல் ஈழத்தில் அன்றுமுதல் இன்றுவரை சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.ஈழத்தில் நான் படித்தது பெண்கள் பாடசாலை. ராணுவமுகாமிலிருந்து கொஞ்சம் விலகி இருந்ததால் தப்பித்துவிட்டது.ஆனாலும் விமானக்குண்டு

வீச்சுக்கும் ஷெல் அடிக்கும் (முகாம் அல்லது நேவி) தப்பியதில்லை. இப்படி பாடசாலைகள் ராணுவமுகாம்கள் ஆனதால் எங்கள் ஊரிலுள்ள என் நண்பர்கள் அருகிலுள்ள வேறு ஊர்களுக்கு நிறையநேரம் சைக்கிளில் சென்று கல்வி கற்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள்.

யாழ்ப்பாணத்தில் ராணுவம் முகாம்க‌ளிலிருந்து முன்னேற முயன்ற காலங்களில் எங்கள் தலைகள் மீது குண்டுகளை வகைதொகையில்லாமல் கொட்டியது. விமானக்குண்டு வீச்சு என்றால் சில சமயங்களில் காலை ஆறுமணிக்கெல்லாம் தொடங்கி விடும். அது ஒரு சிலமணிநேரங்களில் முடிந்ததும் உண்டு. பல மணிநேரம் நீடித்ததும் உண்டு. பல மணிநேரம் என்றால் இரண்டு அல்லது மூன்று விமானங்கள் மாற்றி மாற்றி வந்து குண்டுபோடுவார்கள். இடையிடையே ஹெலிகாப்டரிலிருந்தும் சுடுவார்கள். வெளியில் தலை காட்டமுடியாது. குண்டுவீச்சு முடியும்வரை பதுங்குகுழி தான். காலையிலேயே எங்கள் தலைமீது குண்டு வீசத் தொடங்கினால், அந்நாட்களில் எங்களுக்கு பாடசாலையும் கிடையாது; படிப்பும் கிடையாது.எனக்கு கல்வி ஒன்றுதான் என் வாழ்வில் வெளிச்சம் தரும் என்பதால் அதை என் உயிராக மதிக்கிறவள் நான். இப்படி போர்ச்சூழலில் என் கல்வி எங்கே பாதிக்கப்பட்டுவிடுமோ என்று நான் ஏங்கி அழுதநாட்களும் நிறையவே உண்டு. என் வீடு, உடமைகளை விட‌ பாடப்புத்தங்கள் குண்டுவீச்சில் தப்பவேண்டும் என்று மனம் பதறிக்கொண்டிருக்கும். அந்த குண்டுச்சத்தங்களிலும் அதன் நச்சுத்தன்மை மற்றும் வெடிமருந்தின் மணம் கலந்த காற்றிலும் என்மனம் மிகவும் சோர்வடைந்த வேளையிலும் சுதந்திரம் வேண்டும் என்ற அவா மட்டும் எனக்கு ஏனோ குறையவேயில்லை.

இப்படி நான் பலநாட்கள் பாடசாலை நடைபெறாமல் கல்வி கற்கும் சந்தர்ப்பங்களை நிறையவே இழந்திருக்கிறேன். இது எல்லோருக்கும் பொதுவானதுதான் என்றாலும் பரீட்சை காலங்களில் மிகவும் வேதனையாக இருக்கும். ஒன்று பாடத்திட்டம் முழுமையாக முடிந்திருக்காது மற்றது குண்டு வீச்சுக்களாலும் அதன் சத்தங்களாலும் மனம் மிகவும் சோர்ந்து போயிருக்கும். படிப்பில் கவனம் செலுத்துவது என்பது மிகவும் கடினமாகவும் வேதனையாகவும் இருந்தது. வேதனைகளில் மனம் சோரும் தருணங்களில் உடம்பில் வெறும் காற்று மட்டும்தான் இருப்பது போலவும் உடம்பு வெறும் கூடு போலவும் உண்ர்ந்திருக்கிறேன்.

பாடசாலையில் இருக்கும் நாட்களில் குண்டு வீச்சு என்றால், அது இன்னொரு நரகவேதனை. எங்கள் பாடசாலையில் ஏறக்குறைய ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றார்கள், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை. இந்த குண்டு போடும் கிராதகன்களுக்கு பாடசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள், சந்தை என்று மக்கள் அதிகம் சேரும் இடங்களில்தான் குண்டுபோட பிடிக்கும். அந்ததெரியவராத நாட்கள். அதனால் இந்த இடங்களில் எல்லாம் ஆசைக்கு குண்டுபோட்டு எங்கள் மக்களை கொன்று குவித்தது சிங்கள அரசு. அதனால் அதற்கு சாட்சியும் இல்லாமல் போனது, தனிமனித சாட்சிகளைத்தவிர.

குண்டு வீச்சு விமானங்கள் குண்டு வீசும்போது அல்லது நேவி/ராணுவ முகாமிலிருந்து ஷெல் அடிக்கும் போது பாடசாலையில் சிறிய குழந்தைகள்தான் மிகவும் பயந்து போய் என்ன செயவதென்றுதெரியாமல் அழத்தொடங்கி விடுவார்கள். பெரும்பாலும் நாங்கள் தான் இப்படியான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களுக்கு துணையாக அனுப்பி வைக்கப்பட்டதுண்டு. எங்களை கண்டவுடன் தாங்கள் பெற்றோரிடம் போகப்போகிறோம் என்று கேட்பார்கள். அழும் குழந்தைகளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல், ஏதோ ஒர் கோழைபோலவும், கையாலாகத ஜென்மம் போலவும் அச்சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். நாள் தொடக்கம் முதல் இந்தநாள்வரை இலங்கை அரசு, ஐக்கியநாடுகளினதும் சரி சர்வதேசத்தினதும் சரி, எந்தவொரு போர்விதிகளையும் மதித்து நடந்தது கிடையாது என்பதற்கு பாடசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள், சந்தை,பாதுகாப்பு வலயம் (No Fire Zone) என்று பொதுமக்கள் கூடும் இடங்களிலெல்லாம் குண்டு போட்டதே சான்று. ஆனால், அந்தக்காலங்களில் ஈழப்பிரச்சனை மற்றைய நாடுகளுக்கு

குண்டுகள் வெடிக்கும் சத்தங்களே மிகவும் அதிகமாய் எல்லோரையும் பயமுறுத்தும் என்று நினைக்கிறேன். விமானங்கள் குண்டு வீசும்போது யாரும் நடமாடாமல் குப்புற விழுந்து தரையில் படுக்க வேண்டும் (அது வீடானாலும் சரி, வீதியானாலும் சரி) என்பது பொதுவான எச்சரிக்கை என்றாலும், அதையெல்லாம் எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகள் விடயத்தில் கடைப்பிடிப்பது கிடையாது. விமானம் சுற்றத்தொடங்கவே பாடசாலைக்கு அருகில் வசிக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துப்போக வந்துவிடுவார்கள். இப்படி குழந்தைகளை படிக்க அனுப்பிவிட்டு எப்போ ராணுவம் முகாமிலிருந்து வெளியேற முயற்சிக்குமோ, குண்டுவீச்சு நடக்குமோ என்று பயத்தில்தான் பெற்றோரின் பொழுதுகள் கழிந்ததுண்டு படிப்பதற்குரிய எந்தவொரு தகுந்த அமைதியான சூழ்நிலையும் அன்றும் சரி இன்றும் சரி ஈழத்தில் இருந்ததில்லை. அல்லது இருப்பதில்லை. எங்கள் விடுதலைக்கு அது அவசியம் கூட‌ என்பது என் கருத்து. என்வரையில் காற்றைப்போல சுதந்திரம், காட்டாற்றைப்போல சிந்தனை நிறைந்தது மாணவப்பருவம்.

சராசரி மாணவர்களைப்போல் எங்களுக்கும் சுதந்திரமான, கவலைகளற்ற மாணவப்பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்றுதான் ஆசை. நண்பிகளோடு/நண்பர்களோடு அரட்டை அடிக்க ஒரு பொது இடம், கூட்டாக சென்று சினிமா பார்க்க, அல்லது ஒன்றாயிருந்து பரீட்சைக்கு படிக்க என்று சின்னச்சின்ன, ஆனால் நியாயமான‌ ஆசைகள் நிறையவே இருந்தன. ஆனால், நான் உயர்தரப்பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் போர்ச்சூழல் (1980 களின் நடுப்பகுதிப் பிறகு) மிகவும் மோசமடைந்திருந்தது. குறைந்தபட்சம் பாடசாலைக்கு போய் படித்துவிட்டு உயிரோடு திரும்பி வந்தாலே போதும் என்ற மனோநிலைதான் பெரும்பாலும் எல்லா மாணவர்களிடமும் இருந்தது. தவிரவும் குண்டுவீச்சில் பாதி ஊர் சிதிலமடைந்தே இருந்தது. இதில் பொது இடமேது? சினிமா கூடம் ஏது? குண்டுவீச்சில் அதன் அனர்த்தங்களில்,போர்ச்சூழலில் இருந்த இறுக்கமான சூழ்நிலையிலும் எங்கள் நியாயமான சின்னச்சின்ன ஆசைகள் கூட அடங்கிபோயின.

வடபகுதியில் ராணுவம் முகாம்களில் முடக்கப்பட்ட காலங்களில் விமானம் மற்றும் ஷெல் குண்டுவீச்சுகளால் பெரும்பாலும் நாங்கள் பாடசாலை தவிர்த்த நேரங்களில் எங்கள் வீடுகளில் முடக்கப்பட்டோம்.ராணுவம் முகாமிலிருந்து வெளியேற முயற்சிக்கும். ஆனால், விடுதலைப்புலிகள் அதை முறியடிக்க முனைவார்கள். பிறகு வேட்டுச்சத்தங்கள் கேட்கும். விமானங்கள் வந்து கண்மண் தெரியாமல் எங்களை தாக்கும். இதுவே பலநாட்கள் தொடர்ந்தது. நாங்கள் வீடுகளில் பெரும்பாலும் இருக்க விரும்பிய காரணம், ஒரு வேளை சாவது என்றாலும் குடும்பத்தோடு சாகலாம் என்ற சின்ன ஆசைதான். இப்படியான காரணங்களாலேயே கூட்டாக நண்பிகளோடு படிப்பதை கூட தவிர்த்தேன். பல சமயங்களில் நான் பதுங்குகுழியில் மெழுகுவர்த்தி வெளிச்சதில் கூட படித்திருக்கிறேன். அப்படி படித்து பல்கலைக்கழக அனுமதியும் வாங்கியிருக்கிறேன். இதெல்லாம் ஈழத்தில் வடபகுதியில் அந்தக்காலத்தில் சர்வ சாதாரணமாக எல்லா மாணவர்களுக்கும் நடந்ததுதான். ஆனாலும், நான் தொடர்ந்து என் மண்ணில், என் உறவுகளோடு தொடர்ந்து படிக்க முடியாமல் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயரவேண்டியதாகிவிட்டது.

பரீட்சை எழுதிய சில நாட்களிலேயே நான் இந்தியாவுக்கு அகதியாய் சென்றுவிட்டேன். எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது என் நண்பி மூலம் இந்தியாவில் இருக்கும் போதுதான் தெரியவந்தது.ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் திரும்பி ஈழத்துக்கு போக என்னை வீட்டில் அனுமதிக்காததால் படிப்பை தொடரும் அந்த பொன்னான சந்தர்ப்பத்தை இழந்தேன். ஈழத்தில் நான் எவ்வளவையோ இழந்தாலும், இது என்னை அதிகம் பாதிக்கும் விடயங்களில் ஒன்று. இப்படி ஈழப்போர்ச்சூழலின் காரணமாக தங்கள் படிப்பை தொடரமுடியாமல் போன சகோதர சகோதரிகள் நிறைய‌ப்பேர். தவிரவும், போர்ச்சூழலில் வாழ்வியல் போராட்டங்களுக்கு மத்தியில் கல்வியை

தொடர்வதன் பயன் என்னவென்று மனம் சலித்தவர்களும் உண்டு. ஒருமுறை என் நண்பியின் தாயார் சொன்னது என் நினைவில் இன்றும் உள்ளது. நீங்கள் எல்லாரும் என்னதான் படிச்சாலும் சிங்களவன் என்ன உங்களுக்கு வேலையை தூக்கியோ தரப்போறான்”. அவர் சொன்னதில் அதிகம் உண்மை இருந்தாலும், இதையெல்லாம் காரணம் காட்டி யாராவது படிப்பை பாதியில் நிறுத்துவது என்பது ஏனோ எனக்கு உடன்பாடாக இருந்ததில்லை. கல்வி ஒரு மனிதனுக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுக்கும். ஒரு ஒடுக்கப்பட்ட இனமாய் எங்கள் விடுதலைக்கு அது அவசியம் கூட‌ என்பது என் கருத்து.

நானும் என் நண்பிகளும் பாடசாலை நாட்களில் ஈழப்போராட்டம் பற்றி பேசும் போது என் நண்பிகளில் சிலர் சொல்வார்கள் தாங்கள் விடுதலை இயக்கத்தோடு சேரப்போவதாக. ஒருத்தி சொன்னார் எல்லாரும் போராடப்போனால், பிறகு ஊரில் பொடியன்களுக்கு யார் வாழ்வு குடுக்கிறதுஎன்று. எல்லோரும் சிரித்து விட்டோம். உண்மையில்ஈழத்தில் பெரும்பாலும் ஆண்கள் தங்களை விடுதலைப்போராட்டதில் இணைத்துக்கொண்டதால் ஆண் பெண் விகிதாசாரம் சம அளவில் இருந்ததில்லை. அதுவல்ல நான் சொல்ல வருவது.

இப்படி எங்களோடு ஒன்றாய் பழகி, சண்டைபோட்டு,சமாதானமாகி ஒர் நட்பின் இணைப்பில் இருந்த என் நண்பிகளில் சிலர் தங்களை விடுதலைப்போராட்டதில் இணைத்தும் கொண்டார்கள். திடீரென்று ஓர் நாள் பாடசாலைக்கு வராமல் விட்டார்கள். சில நாட்கள் கழித்து தான் தெரிந்தது அவர்கள் எங்கே போனார்கள் என்று. அதோடு அவர்களின் தொடர்பு எனக்கு அறுந்து போனது. என் வாழ்நாளில் நான் இனி அவர்களை பார்க்கப்போவதில்லை.இதுவும் கசப்பான, ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும் ஓர் யதார்த்தம்.

கடந்த ஞாயிறு என் ஊர்க்காரர் ஒருவர் சொன்னார் என் பாடசாலை நாட்களின் நண்பி ஒருவர் வன்னி களமுனையில் வீரகாவியம் ஆகிவிட்டதாக. என் நண்பி கொழும்பிலிருந்து 1983 தமிழின அழிப்பில் தந்தையை பறிகொடுத்துவிட்டு பின் ஊரோடு வந்து கல்வியைதொடர்ந்தார். ஈழத்தில் நாங்கள் நிம்மதியாக எங்கள் கல்வியை கற்கவேண்டுமானால் எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று பாடசாலைநாட்களில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ஈழத்து மாணவர்களின் சுதந்திரத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் போலும். இன்று என் நண்பி இல்லை. ஆனால், என் நண்பியின் சுதந்திரக்கனவு நிறைவேற வேண்டும். ஈழத்தில் ஒவ்வொரு தமிழ்மாணவனுக்கும் கல்வியும், அதை பெறுவதற்கு ஓர் அமைதியான சூழலும் வேண்டும். இது தான் என் நீண்டநாள் விருப்பம், ஆசை எல்லாமே. முடிந்தால், ஈழத்து வாசகர்கள் போர்ச்சூழலில் உங்கள் பள்ளிக்கூட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும்

ரதி

யுவகிருஷ்ணா ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?

178

குமுதம் ரிப்போர்ட்டர்: லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?

இணையத்தில் சைபர்கிரைம் பற்றி தேடு பொறியில் வலைவிரித்தால் இலட்சக்கணக்கில் பக்கங்களும் படங்களும் கிடைக்கும். தமிழகத்தில் நடக்கும் குற்றங்களில் பீரோ புல்லிங், போலீசு-இன்கம்டாக்ஸ் வேடத்தில் வழிப்பறி, காக்காய் எச்சத்தை போட்டு குனியவைத்து பையை பறிப்பது, 500 நூறூரூபாய் தாளை போட்டு உங்களுடையதா என கவனத்தை திசைதிருப்பி வங்கியில் எடுத்த பணத்தை அபேஸ் பண்ணுவது, கவரிங் நகை மோசடி, ரியல் எஸ்டேட் மோசடி, ஓடும் லாரியில் திருவது என எண்ணற்ற திருட்டு சாதனைகள் உள்ளன. இத்துடன் விபச்சாரம் என்பதும் செல்போன், மாருதி கார் வரை விரிந்திருக்கிறது. மற்றபடி செல்காமராவில் பாலியல் மோசடிகள் என்று தொழில்நுட்பம் உதவிய வகையில் வக்கிரங்கள் வகைதொகையில்லாமல் வளர்ந்திருக்கின்றன.

ஆக மண்ணில் நடக்கும் சாதாக் குற்றங்கள், பாலியல் வக்கிரங்களை மானிடரின் இணையத்தில் செய்தால் அதற்கென்று தனி மவுசா வந்து விடப்போகிறது? அப்படி ஒரு மவுசை உருவாக்குவதற்காக குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை, பதிவுலகில் நொறுக்குத்தீனி எழுத்தில் கொடிகொட்டிப்பறக்கும் லக்கிலுக்கை, யுவகிருஷ்ணா என்ற பெயரில் மவுசின் உதவியால் சைபர் கிரைம் என்ற தொடரை எழுதப் பணித்திருக்கிறது. இதற்கு பதிவுலகில் பல அப்பாவிகள் வாழ்த்து வேறு தெரிவித்திருந்தார்கள். எல்லாம் நம்ம லக்கி சுஜாதா, சாருநிவேதிதா மாதிரி ஆகட்டும் என்ற நல்லெண்ணம்தான். நம்மைப் பொறுத்தவரை இதற்கு அனுதாபம் கூட தெரிவிப்பதற்கு லாயக்கானதில்லை.

முதல் இரண்டு தொடரை படிக்கும்போதே லக்கியை கவனிக்க வேண்டுமென்று நினைத்து அப்புறம் சரி விட்டுத் தொலைப்போம் என்று மறந்த நேரத்தில் தனது பதினோராவது பாகத்தில் மீண்டும் பலான விசயத்தை  லக்கி தொட்டிருப்பதால் அதைப் பற்றி எழுதவில்லையென்றால் அந்த மகரகுழத்தாள் கூட மன்னிக்கமாட்டாள்!

லக்கியை வைத்து சைபர் கிரைமை எழுதுவதற்கு குமுதம் ஆசிரியர்களும், பின்னாளில் இந்த தொடரை நூலாக வெளியிட வாய்ப்புள்ள பதிப்பக ஓனரும் பாடத்திட்டத்தை தயார் செய்திருப்பார்கள் போலும். அதன்படி செக்ஸ் மேட்டரை தூக்கலாக காண்பித்து அதற்கு ஒரு ரிலீஃபாக பொருளாதார மோசடிகளையும் வைத்து எழுத தீர்மானித்திருப்பார்கள் என்று தெரிகிறது. இரண்டு தொடர்களுக்கு பின்னர் நைஜீரியா மோசடிகள் எல்லாம் எழுதப்பட்டாலும் அது வாசகர்களிடம் எடுபடவில்லையோ தெரியாது. பின்னே இலட்சத்திலும் கோடியிலும் நைஜீரியா பிளேடு கும்பலிடம் ஏமாறுவதற்கு கே.ஆர்.அதியமானது நண்பர்களாக இருக்கும் முதலாளிகளுக்குத்தானே வழியிருக்கிறது. எட்டு ரூபாய் ரிப்போர்ட்டரை வாங்கி மேயும் சாதரணர்களுக்கு அந்த போர்ஜரி வேலைகள் அவ்வளவு ருசிக்காது என்பதே அவர்களது பொருளாதார யதார்த்தம்.

ஆனால் இந்த சாதரணர்களை சுண்டி இழுக்கும் மகிமை சிட்டுகுருவி லேகிய சமாச்சாரங்களில்தானே இருக்கிறது? முதல் தொடரில் குற்றவாளிகள் என்றால் பிளேடு பக்கிரி போன்று இருக்கத் தேவையில்லை கோட்டு சூட்டு போட்டுக்கூட குற்றங்கள் செய்வார்கள் என்று ஆரம்பித்து அப்புறம் இணையத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் நடக்கும் மோசடிகளைப் பற்றி ஒரு பில்டப் கொடுத்துவிட்டு பிறகு சரியாக ‘மேட்டருக்கு’ வருகிறார் லக்கி.

திரிஷா குளியலறை சி.டி முதல் விசயம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டிய விசயத்தை முழு நீள நீலப்படமாக வருணிக்கிறார் லக்கி. வந்தாள், ஆடையைத் துறந்தாள், காமரா அலைகிறது என்று அந்த பொழிப்புரை படிப்பவர்களின் நாக்கில் அஜினோமோட்டோ கணக்காய் எச்சிலை ஊறவைத்து அப்புறம் திரிஷாவின் அம்மாவின் மறுப்பு அதுவும் அந்த வருண்ணைகளுக்கு பொருத்தமாய் திரிஷா அப்படி ஆடைகளை வீசமாட்டார், பாத்டப்பில்தான் குளிப்பார், அவரது பாடி லாங்குவேஜ் எனக்கு தெரியும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சங்கதிகளை கூறி எல்லாம் முடிந்த பிறகு இந்த சைபர் குற்றங்களை தடை செய்யமுடியாது, மார்ஃபிங் தொழில் நுட்பத்தில் தலையை வெட்டி மாற்றலாம் என எல்லாம் அட்சுரசுத்தமாய் காயத்ரி மந்திரம் போல ஓதப்படுகிறது. அப்புறம் இந்த சி.டி, மொபைல் வழியாக எப்படியெல்லாம் பரவியது என விளக்கி விட்டு அடுத்த மேட்டருக்கு போகிறார்.

அது சிம்பு, நயன்தாராவின் உதடைக் கவ்விய படமாம். அதையும் விலாவாரியாக விவரித்துவிட்டு நயன்தாரா இதைப் பற்றி சைபர் கிரைமில் புகார் தெரிவிக்கவில்லை என்று வருத்தப்பட்டு முடித்து விட்டு மச்சான் சி.டிக்கு வருகிறார்.

இதில் நமீதா உடலமைப்பு கொண்ட பெண் இரு இளைஞர்களிடம் உறவு கொள்வது அரைமணி நேரம் ஓடுகிறதாம். நமீதா உடலமைப்பு ரசிகர்களுக்கு மனப்பாடமென்பதால் இந்த பெண்ணை நமீதா என்றே நம்புவார்கள் என கண்டுபிடிக்கிறார் லக்கி. இதைப்படித்து விட்டு உசிலம்பட்டியிலோ, மடிப்பாக்கத்திலோ மச்சான் சி.டி தேடி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படையெடுத்திருப்பார்கள் என்பது நிச்சயம். இத்தனைக்கும் பிறகும் இந்த படங்களை வெறிப்பதற்கு நாக்கை தொங்கப்போட்டு அலையும் ஆண்களின் வக்கிரத்தை மருந்துக்கு கூட லக்கி கண்டிக்கவில்லை. அவரது நோக்கமே இவற்றை அறியாதவருக்கு அறிமுகம் செய்வதுதான், போர்னோ கிரைமை அறிமுகம் செய்கிறோம் என்ற பெயரில் ஆவலை உண்டுபண்ணுவதுதான் எனும்போது என்ன செய்வது? மற்றபடி இதெல்லம் சைபர் குற்றங்கள் என அவர் பொத்தாம் பொதுவாக கண்டிக்காமல் இல்லை. தலைப்பில் ஒழுக்கம் குறித்த எச்சரிக்கை, உடலில் ஒழுக்க மீறலை ஆவலுடன் கற்றுக் கொடுக்கும் சாமர்த்தியம். லக்கயின் இரட்டை வேடம் நன்றாகத்தான் பொருந்துகிறது!

இரண்டாவது தொடரில் செக்ஸ் ஆசைக்காக அலையும் மேட்டுகுடி ஆன்டிகள் என்று தூண்டில்போட்டு பணத்தை கறக்கும் கும்பலைப் பற்றி ஸ்டெப் பை ஸ்டெப்பாக விவரித்து வாசகர்களை எச்சரிக்கிறார். படிப்பவர்கள் இது போன்ற தூண்டில் புழுக்களிடம் சிக்கக்கூடாது என்ற நல்லெண்ணம்தான். ஐயா லக்கி அவர்களே இந்த மேட்டுக்குடி நடுத்தர வயது பெண்களை பிரச்சினை இல்லாமல் அனுபவிக்கத் துடிக்கும் ஆண் மனதின் அலைபாயும் எண்ணங்களை பற்றி இலேசாகக் கூட இடித்துரைக்க தோணவில்லையே ஏன்?  பாலியல் ஒழுக்கத்தில் தனிப்பட்ட வாழ்வில் கற்பையும், பொதுவாழ்வில் விபச்சாரத்தையும் போற்றும் பார்ப்பனியத்தின் போலித்தனமான சமூக மதிப்பீடுகளை வைத்து காமத்தை இரகசிய உலகில் முடிவில்லாமல் ருசிக்க நினைக்கும் ஆண்களைப் பற்றியும் அவர்களது இரட்டை வேடத்தைப் பற்றியும் நோக்கினால்தானே இதில் பார்க்கும் குற்றவாளிகளை குறைந்த பட்சம் தமது பலவீனங்களை பரிசீலிக்க வைக்க முடியும்.

அதனால்தான் சொல்கிறோம் இந்த தொடர் சமூக ஆய்வல்ல, அதன் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் போர்னோதான் இதன் ஆன்மா. படிப்பவர்களின் மலிவான இச்சையை தொட்டுச் சொறிந்து பத்திரிகையின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் சீப்பான தந்திரம்தான் இந்த சைபர் கிரைம்.

இதன்பிறகு பொருளாதார மோசடிகள் பக்கம் திரும்பிய லக்கி திரும்பிய வேகத்திலேயே யூ டார்ன் அடித்து மீண்டும் போர்னோ பக்கம் வந்தரா, வரவழைக்கப்பட்டாரா என்பது தெரியாது. ஆனால் லக்கி என்ற சூப்பர் மார்க்கெட்டில் எது வேண்டுமென்று கோரினாலும் அந்த சூப்பர் மார்க்கட் திருப்தி செய்யும் என்ற உண்மை நமக்கு தெரியவேண்டும்.

பதினோராவது தொடரில் சபிதா பாபியின் படக்கதையை படம் பார்ப்பவர்களுக்குக் கூட போரடிக்காத விதத்தில் எழுதுகிறார் லக்கி. பாபி என்றால் இந்தியில் அண்ணியாம். இந்த இந்தி அண்ணி செக்சுக்காக ஏங்கி வீட்டுக்கு வரும் சேல்ஸ்மேன் முதலான இளைஞர்களை அனுபவிக்கும் உணர்ச்சிப் போராட்டத்தை காமிக்ஸ் படக்கதையாக வெளியிடப்பட்டு இந்தியாவில் பெரும் வெற்றி பெற்றதாம். உயிருள்ள போர்னோ படங்கள் மவுசைக் கிளிக்கினால் கொட்டும் நெட்டில் இந்த உயிரற்ற ஓவியங்கள் வெற்றி பெற்றது எப்படி என்ற ‘சமூக ஆய்வை’ லக்கி அருவருப்பின்றி விளக்குகிறார்.

நீலப்படத்தில் எல்லாம் அவுத்துப் போட்டு சட்டுனு ஜோலியை முடிப்பதால் கிக் இல்லையாம். கிக் குறித்து வாத்ஸ்யானர் கூட இப்படி யோசித்திருக்க முடியாது. படக்கதையில் சபீதா முதல் ஷாட்டில் முழுசாக முக்காடு போட்டுத்தான் அறிமுகமாம். அப்புறம் உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப உடையும் குறையுமாம். நீலப்படத்தில் காமார பார்க்காத கோணங்களையும் வாளிப்புகளையும் இந்த படத்தில் ஓவியர் த்தரூபமாக வரைவதால் இக்கதை பல்லாயிரம் ஹிட்ஸாக வெற்றி பெற்றதாம்.

போர்னோ தளங்கள் இந்தியாவில் இயங்குவதற்கு தடை இருப்பதால் வெளிநாடுகளில் வைத்து நடத்தப்படுகிறதாம். டாக்டர் பிரகாஷ் புழலில் இருந்தாலும் அவரது படங்கள் இன்னும் உயிர்வாழ்கிறது என ஒரு போனஸ் செய்தியையும் லக்கி வாசகருக்கு தருகிறார். அப்போதுதானே பிரகாஷ் தளத்தின் படங்கள வாசகர்கள் ஆவலுடன் தேட முடியும். பிறகு சபிதா தளம் தடை செய்யப்பட்ட பிறகு அதன் உரிமையாளர் வெளிஉலகிற்கு தெரியவர என எல்லா சங்கதிகளையும் மர்மங்களை கட்டவிழ்க்கும் சுவாரசியத்துடன் தருகிறார். ஆகா பாலுணர்வு காமிக்ஸ் படக்கதை கூட கிக்கைத் தரும் போல என இந்நேரம் லக்கியின் புண்ணியத்தில் பல நூறு கைகள் கூகிலில் சபிதாபாபியைத் தேடிக் கொண்டிருக்கும். அந்தக் காலத்தில் சாண்டில்யனின் வாழத்தண்டு தொடை கதாநாயகிகளை வேறு வழியின்றி ருசித்த பெரிசுகளைப்போல இன்றைய இளசுகளுக்கு சபிதா அண்ணி. இரண்டும் ஓவியம்தான் என்றாலும் ரசனை மாறவேயில்லையே.

மற்றபடி தானும் போர்னோவை கண்டிப்பதாக பதிவு செய்யும் சடங்கிற்காக அரபு நாடுகளில் போர்னோ சைட்டுக்களை தடை செய்திருப்பதை ஆச்சரியத்துடன் முன்மாதிரியாக குறிப்பிடுகிறார். ஆனால் மக்களுக்கு மட்டும் காமத்தடை விதித்த ஷேக்குகளின் மாளிகைககளில் உள்ள டிஷ் ஆண்டாடனாக்கள் டிரிபிள் எக்ஸ் சானல்களை 24 மணிநேரமும் வழிய விட்டுக்கொண்டுதானே இருக்கிறது. இதே அரபுஷேக்குகள்தான் தமது பணத்திமிரினால் சிறுமிகளை மணப்பது முதல் எல்லா வக்கிரங்களையும் அரங்கேற்றுவதில் முன்னணி வகிக்கிறார்கள். பணக்காரர்களுக்கு வக்கிரத்தின் எல்லா வகையும் அனுபவிக்கலாம், ஏழைகள் செய்தால் அவை குற்றமென்பதுதான் அரபு நாடுகளின் விதிமுறை. இதையும் தவறாக குறிப்பிடும் அளவுக்கு லக்கியின் சமூக அறிவு போர்னோ படத்திற்கு மேலே வரமாட்டேன் என்கிறது.

இப்படி இன்றைய இளையோர் உலகம் இன்பத்தில் நீடித்திருப்பதைத் தவிர வேறு நோக்கமில்லை என்று இந்த தொடரைப் பார்த்து இன்னும் என்னவெல்லாம் அறிமுகம் செய்வார் என்று காத்திருக்கும் இதயங்களை வைத்து ரிப்போர்ட்டரின் பிரதிகள் சில ஆயிரம் கூடியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதற்கிணையாக ஜூனியர் விகடனில் நிருபரின் டயரிக் குறிப்பு என்ற பெயரில் சினிமா போர்னோ கிசுகிசு நடையில் பிளந்து கட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி நீயா, நானா என்ற போட்டியில் லக்கி ரிப்போர்ட்டரின் பங்கை வெட்கமின்றி நிறைவேற்றி வருகிறார்.

நண்பர்களே, பாலியல் மோசடிகள் அன்றாடம் கொலைகளிலும், அவலத்திலும் நடக்கும் நாட்டில் இந்த பிரச்சினைகளைப் பேசுவோர் உண்மையில் எதைப் பற்றி பேச வேண்டும்? கள்ள உறவுக்காக ஆத்திரத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, ஆணையோ கொலை செய்வது கூட பிரச்சினை இல்லை. அதை கள்ளக்காதலுக்காக கொலை என்ற தலைப்பில் கதையை கொலை செய்ய முடியாத கோழை கள்ளக்காதல் ஆர்வலர்களிடம் கேவலமாக படிக்க வைக்கிறார்களே அந்த தினசரிகள்தான் குற்றவாளிகள். சினிமாவில் சதையைக் காட்டி, தொலைக்காட்சியில் கள்ளக்காதல் ஒன்றும் கடினமல்ல என்று நெடுந்தொடரில் கற்பித்து, இப்படி ஊடகங்கள் எல்லாம் இயல்பான காமத்தை பிரம்மாண்டமாக வெறியூட்டி அலைய வைக்கின்றன.

இதுவே மேற்கத்திய நாடுகளில் இன்னும் பல்வேறு வகைகளில் நடந்து வருகிறது. ஆக பாலியல் பிரச்சினை பற்றி அதில் கணத்தில் தடுமாறி பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்ளும் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு ஒரு நியாயமான முயற்சி என்பதே இந்த ஊடகங்களை அம்பலப்படுத்துவதில்தான் ஆரம்பிக்க முடியும். மாறாக அந்த கயமைத்தனத்தில் இணைந்து கொண்டு சைபர் கிரைம் என்ற பெயரில் அதைப் பற்றி தெரியாதவர்களுக்கு இணைய போர்னோக்களை கா(ர்)ம சிரத்தையுடன் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் லக்கி, ரிப்போர்ட்டரின் ஆணைக்கிணங்க ஊதியம் வாங்கிக்கொண்டு செய்கிறார். பெண்ணுடலை குதறி தின்னும் பண்டமாக கருதும் ஆணின் மனசாட்சியை இந்த தொடர் ஒருபோதும் உலுக்கப் போவதில்லை. மாறாக அப்படி வெறியுடன் தின்னுவதற்கு நூற்றுக்கணக்கான புதிய முறைகளை லக்கி பக்திப் பரவசத்துடன் அறிமுகம் செய்கிறார்.

சும்மா வெட்கப்படாதீங்க சார் என்று நடிகைகளின் அங்கங்களை தெரிவிக்கும் படங்கள் லக்கியின் பிரபலத்திற்கு ஒரு முக்கியமான காரணமென்றால் யாராவது அதை மறுக்க முடியுமா? அதை வெறும் நகைச்சுவை என்றே பலரும் கருதுகிறார்கள். இப்போது ரிப்போர்ட்டரில் லக்கியின் கைங்கரியத்தை பார்க்கும் போது இனிமேலும் அதை வெறும் நகைச்சுவை என்று கருத முடியாது. ஆனால் லக்கி அவர்களே! இப்படி ஒரு பெண்ணுடலை ஆணின் வக்கிரத்திற்கு இரையாக்குவதன் மூலம் நீங்கள் முழு பெண்ணினத்தையும் கேவலப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு தமிழ்மொழி எனும் அழகான பெண் குழந்தை பிறந்ததற்கு பல வாசகிகள் பாசத்துடன் அண்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்ததையும் பதிவு செய்திருக்கிறீர்கள். அத்தகைய பெண்களுக்கு நீங்கள் எழுதும் போர்னோ கிரைமை சமர்ப்பணம் செய்யுங்கள் லக்கி! SHAME ON YOU !!

 

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

40

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

உலகமெங்கும் கோடிக்கணக்கணக்கான இரசிகர்களை கொண்டிருக்கும் நாயகனை ; கலைஞன், இரசிகன், சந்தை, முதலாளித்துவம், உலகமயம் முதலியனவற்றின் உறவுகளையும் அவற்றின் முரண்பாட்டினையும் அவை எழுப்பும் கேள்விகளிலிருந்து அறவியல் நோக்கில் மாற்று குறித்தும் இந்த கட்டுரை பேசுகிறது. இது சற்றே நீண்ட கட்டுரை!  நிதானமாகப் படியுங்கள், கேள்விகளை எழுதுங்கள், முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்லுங்கள் !!!

 1.மறைந்தவர் மீண்டும் எழுந்தார்!

சில ஆண்டுகளாக ஊடகங்கள் மறந்து போன மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு மீண்டும் செய்திகளில் உயிர்த்து எழுந்திருக்கிறார். நெல்சன் மண்டேலாவிலிருந்து வெனிசூலாவின் சாவேஸ் வரை பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த, மடோனாவும் இன்ன பிற இசையுலக நட்சத்திரங்களும் தமது சகாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க, பிலிப்பைன்சின் சிறையிலிருக்கும் கைதிகள் திரில்லர் பாடலை நடனத்துடன் ஆடி சிறை வளாகத்திலிருந்தே மைக்கேல் ஜாக்சனுக்கு இரங்கல் தெரிவிக்க, மைக்கேலின் இறுதி அடக்கத்திற்கு முன்னர் லாஸ் ஏஞ்செல்சில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கருப்பின, வெள்ளையின பொழுதுபோக்கு, விளையாட்டு நட்சத்திரங்கள் மைக்கேலுடனான தங்கள் உறவை நினைவு கூர, மார்டின் லூதர் கிங்கின் வாரிசுகளும் கருப்பின உலகிலிருந்து மலர்ந்த அந்த கலைஞனை போற்றிப் பேச இறுதியில் மைக்கேல் ஜாக்சனின் நினைவுகள் அவரது பல இலட்சம் ரசிகர்களின் அனுதாபத்தோடு இப்போதைக்கு விடை பெற்றுக் கொண்டன.

அவரது மரணங்கள் பற்றி பல்வேறு வதந்திகளும் செய்திகளும் ஊடகங்களின் பரபரப்பு தீனிக்காக கொட்டப்படுகின்றன. எப்படி இருந்தாலும் அவரது மரணம் சுமூகமாகவோ, இயல்பாகவோ நிகழவில்லை. பல்வேறு சூழ்நிலைகளின் இறுக்கத்தால் கழுத்து நெரிக்கப்பட்டுதான் மூச்சு நின்றிருக்கிறது. அவரது இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதா இல்லை அவரது வாழ்வின் நரம்பாய் இருந்த இசையுலக பயணம், இசை நிறுவனங்களால் புதை குழியை நோக்கி தள்ளப்பட்டதால் இந்த மரணம் சம்பவித்ததா? இறுதி ஆண்டுகளில் மைக்கேல் ஜாக்சன் இடம்பெற்றிருந்த எந்தப் புகைப்படமும் ஏதோ ஒரு துயரத்தை தாங்கியே வெளிவந்தன. யாருடைய துன்புறுத்தலின் காரணமாகவோ, நிர்ப்பந்தத்தின் பொருட்டோ வேறு வழியின்றி மரணம்தான் எல்லாவற்றிலும் விடுதலை தரும் என்பதாக அவர் இறந்து போனாரா?

90ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலேயே மைக்கேல் ஜாக்சனின் நட்சத்திர அந்தஸ்து மரித்து விட்டது. 2000ஆம் ஆண்டுகளில் அவர் மீது தொடுக்கப்பட்ட சிறார் மீதான பாலியல் வன்முறை வழக்குகள் கூட அவரது பழைய நட்சத்திர இமேஜே வைத்து பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிடுவதற்கு மட்டுமே பயன்பட்டன. நட்சத்திர வாழ்க்கைக்காக அவர் உருவாக்கியிருந்த நெவர்லாண்ட் பண்ணை வீட்டை கூட பராமரிக்க முடியாமல் காலி செய்து வாடகை பங்களா ஒன்றில் குடியேறினார். அவரது இறங்குமுக காலத்தில் நடந்த இரண்டு திருமணங்களும் ஒரிரு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தன. கூடவே பெரும் கடனும் அவரை அச்சுறுத்தி வந்தன. வாழ்ந்து கெட்ட நாயகனைப்போல எல்லாவகை துன்பங்களும் அவரது இறுதி காலத்தில் கெட்ட நனவுகளாய் அவரை கட்டிப் போட்டிருந்தன. இந்த முடிச்சில் சிக்குண்ட மைக்கேல் அவரே வருவித்தும், அதுவே பற்றிக் கொண்டதுமான நோய்கள் வேறு மிச்சமிருந்த நிம்மதியை காலிசெய்தன. உடல் எடை குறைந்து எலும்பு மனிதனாக காட்சியளித்த மைக்கேல் இத்தனை நாள் நீடித்ததே பேறு எனுமளவுக்கு வாழ்வு முடங்கிப் போனது.

ஏதுமற்று கிட்டத்தட்ட தனிமைச் சிறையில் அடைபட்டிருந்த மைக்கேலுக்கு இசை நிறுவன முதலாளிகள் கடைசியாக அளித்த வாய்ப்புதான் இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் நடை பெற இருந்த ஐம்பது இசை நிகழ்ச்சிகள். இவை நல்லவிதமாய் நடந்தேறும்போது அவரது கடன் சுமையிலிருந்து மீளலாம் என்ற உண்மையால் இது ஆலோசனையல்ல ஒரு கட்டளை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஐம்பதாவது வயலிருந்த மைக்கேல் இந்த நிகழ்ச்சிகளை தனது பழைய மாகத்மியத்துடன் நடத்த வேண்டும் என்பது அத்தனை சுலபமானதல்ல. எல்லாருக்கும் தெரிந்த இந்த உண்மை மைக்கேலுக்கும் தெரியும்தான். எனினும் உண்மைகளை விட வாழ்க்கையின் வன்மையான தருணங்களின் உத்தரவை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்ற நிலையில் அவருக்கு வேறு தெரிவுகள் இல்லை.

இலண்டனில் தொடங்கி 2010 வரை நடக்க இருந்த இசை நிகழ்ச்சிகள் பன்னாட்டு இசை நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன. அதற்கென நீண்ட ஒத்திகைப் பயிற்சியில் மைக்கேல் ஈடுபட்டிருந்தார், இல்லை இழுத்து விடப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பேற்றிருந்த சோனி நிறுவனம் மைக்கேலின் உடல்நிலையைக் கவனித்துகொள்ள தனியாக ஒரு மருத்துவரையே நியமித்தது. இது உடல்நிலையைக் கவனிக்கவா இல்லை என்ன செய்தாவது அவரது உடலை நிகழ்ச்சிகளுக்கு ‘தயார்’ செய்யும் வேலையா என்பது கேள்விக்குரியது. அந்த உடல்தான் இலட்சக்கணக்கான ரசிகர்களின் இசையாசையை தணிக்கும் என்பதால் நோய் உபாதைகளையும் வலிகளையும் தாங்கிக் கொள்ள அந்த மருத்துவர் தொடர்ந்து வலி நிவாரணிகளை ஏற்றி வந்தார். அசையும் உடலால் ரசிகர்களை வசீகரித்துவந்த நாயகன் கடந்த சில ஆண்டுகளாகவே உடலின் வலியை பொறுக்க முடியாமல் மருந்துகளைத்தான் அதிகம் நாடிவந்தார்.

ஐம்பது நிகழ்ச்சிகளும் முடித்தபிறகு வேண்டுமானால் அவர் செத்துப் போகலாம் என்ற அளவுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டிய ஆயுள் கைதியாக அவதிப்பட்ட மைக்கேல் ஜாக்சன் தனது ஒத்திகை ஒன்றிற்குப் பிறகு தீடிரென்று இறந்து போனார். அவரது உடனடிப் பிரேத பரிசோதனையின் படி அவர் உடலில் ஊசிகள் போடப்படாத இடமில்லை, வெறும் வயிற்றில் மாத்திரைகள் இருந்தன, ஐம்பது கிலோ எடையில் வற்றியிருந்த ஜாக்சனின் விலா எலும்புகள் சில முறிந்திருந்தன, விக் அகற்றப்பட்ட வழுக்கைத் தலையில் மைக்கேல் தனது பிம்பத்திற்கு எதிரான முறையில் பரிதாபமாக இருந்தார். இன்னும் வீரிய வேதியியல் பரிசோதனைகளின் முடிவுகள் சில காலம் கழித்துத்தான் வருமாம். இருக்கட்டும், மைக்கேல் ஜாக்சன் தானாக இறந்து போனாரா, இல்லை கொல்லப்பட்டரா, அவரைக் கொன்றது யார் என்ற பிரதேசப் பரிசோதனையில் நாம் இறங்குவோம்.

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

2. ஜாக்சனின் வரலாற்றுக் காலம்!

அது கலகத்தின் காலம். உலகெங்கும் பொருமிக்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடி, கீனீசிய மக்கள் நல சீர்திருத்த அரசுகள் நடக்க முயன்று விழுந்திருந்த நேரம், அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்பு போர், அங்கே கொல்லப்படும் அமெரிக்க வீர்ர்களின் சவப்பெட்டிகளைப் பார்த்தெழுந்த அமெரிக்க மக்களின் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சே குவேராவின் பொலிவிய மரணம், பாரிஸ் மாணவர் எழுச்சி, இந்தியாவில் நக்சல்பாரி எழுச்சி,தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம், இலங்கையில் ஜே.வி.பியின் கிளர்ச்சி, சீனாவில் கலாச்சாரப் புரட்சி, வியட்நாமில் அமெரிக்காவை எதிர்த்து விடுதலைப் போர் என அன்றைய இளையோர் உலகம் கலகப் பொறியில் கனன்று கொண்டிருந்த நேரம். 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் இதுதான் நிலவரம்.

வியட்நாமில் மூக்குடைபட்ட அமெரிக்கா துருப்புக்களை திரும்பப் பெற்றது. தீவிர இடதுசாரி இயக்கங்களின் தவறுகளினாலும் அரசு ஒடுக்குமுறையினாலும் பல இயக்கங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. தீவிரவாதத்தின் தோல்வியை சமரச இயக்கங்கள் அறுவடை செய்தன. அப்படித்தான் தமிழகத்தில் தி.மு.கவும், மத்தியில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஊழல் எதிர்ப்பு இயக்கமும் வெற்றி பெற்றன. ஐரோப்பிய நாடுகளில் கற்பனாவாதம் கலந்த இலட்சியவாதத்துடன் போராடிய மாணவர்கள், இளைஞர்களை தாங்கள் விரும்பிய மாற்றம் சட்டென வரவில்லை என சோர்ந்து போயினர். திசை தேடும் இளையோரின் கலகம் வற்றித் தணிந்த காலம்.

அந்நேரம் அமெரிக்காவில் வளர்ந்து வந்த பொதுமக்களின் இசை என்றழைக்கப்படும் பாப்பிசை மெல்ல ஒரு உலகச் சந்தையை உருவாக்கிக்கொண்டிருந்தது. பீட்டில்ஸ், போனியம், அப்பா முதலிய குழுக்கள் உலக அளவில் புகழ் பெற்றிருந்தன. பீட்டில்ஸ் இசை  நிகழ்ச்சிகளுக்கு இலட்சக்கணக்கில் மக்கள் அணிதிரண்டு வந்ததோடு பாடல் நடனத்தோடு சேர்ந்து உணர்ச்சிகரமாக ஒன்றுவது என்ற அளவில் பாப்பிசைக் கலாச்சாரம் ஒரு புதிய மதத்தை இளையோரின் மனதில் விருட்சமாக வளர்த்து வந்தது.

இத்தகைய புறநிலைமைகளின் சூழலில்தான் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைப்பருவம் கழிந்தது. சாதாரண தொழிலாளியின் குடும்பதில் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவரும் ஒருவர். தந்தையின் இசை ஆர்வத்தால் குழந்தைகளும் அதற்கு அறிமுகமாயினர். கருப்பினத்தவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் ஜாக்சன் சகோதரர்கள் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்துவது அந்த குடும்பத்தின் வறுமையை போக்குவதற்கு உதவியாக இருந்தது.

3. கருப்பின மக்களின் போராட்டச் சூழலில் ஜாக்சனின் இளமைப் பருவம்!

மைக்கேலின் குழந்தைப்பருவம் தந்தையின் கண்டிப்பான அணுகுமுறையில் கடந்து சென்றதால் மற்ற குழந்தைகளின் வழக்கமான வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அவர் அடையவில்லை என்பது அவரும் பலரும் ஒத்துக் கொண்ட விசயம். இதனாலேயே சிறு பிராயத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் மனபாதிப்பு பின்னாளில் பல்வேறு வகைகளில் வெளிப்பட்டது என்பதும் பல விமரிசனர்களின் கணிப்பு.

கருப்பின மக்களின் சமத்துவ உரிமைகளுக்கான சிவில் இயக்கம் தீவிரமாக செயல்பட்ட அக்காலத்தில் வறுமையிலும், வாய்ப்பின்மையிலும் ஏழைகளாய் இருந்த கருப்பின மக்கள் இத்தகைய கண்டிப்பான தந்தை, கட்டுப்பாடான குடும்பம் முதலிய பழைய மரபுகளைக் கொண்டிருந்ததோடு உழைத்து முன்னேற வேண்டுமென்ற வகையில் நடுத்தரவர்க்கத்தின் பண்பினையும் கொண்டிருந்தார்கள். ஏழ்மை நிலையை மாற்ற இயலாதவர்கள், அதை மாற்றிக் கொண்டு நடுத்தரவர்க்கமானவர்கள் என்ற வகையினங்களில் கருப்பின மக்கள் பிரிந்திருந்தனர்.

எனவே ஜாக்சன் மட்டுமல்ல எல்லாக்  கருப்பினக் குழந்தைகளும் இத்தகைய சூழலில்தான் இருந்தனர் என்பதும் மைக்கேல் மட்டும் பின்னாளில் தான் இழந்த குழந்தைப் பிராயத்தை மீட்டும் வண்ணம் செல்வத்தை அடைந்தார் என்பதே வேறுபாடு. எந்த இசையால் பிரபலமானாரோ அந்த இசையையும், நடனத்தையும் அவருக்கு அடி உதைகளுடன் கற்றுக்கொடுத்தவர்தான் அவர் தந்தை. ஒருவேளை இந்த இசைப்ப்பயிற்சி இல்லையென்றால் மைக்கேல் அவரது குழந்தைப் பருவத்தை இழந்தார் என்பதெல்லாம் செய்திகளில் அடிபடும் விசயமே அல்ல.

ஆனாலும் மைக்கேலின் தந்தை தனது மகன்களை வளர்த்த விதத்தில் வில்லனாக்கப்பட்டார். 1969இல் ஜாக்சன் சகோதரர்களால் வெளியிடப்பட்ட “தி ஜாக்சன் ஃபைவ்” பலரது கவனத்தைப் பெற்றது. அப்போது பதினொரு வயதான மைக்கேல் மற்றவர்கள் குறிப்பிட்டு பாராட்டும் பங்களிப்பை செய்திருந்தான். இதன் மீட்சியாக 1979இல் மைக்கேல் ஜாக்சனது “ஆஃப் தி வால்” முதல் தனி ஆல்பம் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்தது. 21வயதில் அவர் நட்சத்திரமாக உதித்தார்.

பலரும் நினைப்பதைப்போல குதுகலமான குழந்தைப் பருவத்தை இழந்தததனால் மட்டும் ஒரு அழுத்தமான தனிமையுணர்ச்சிக்கு அவர் ஆளாகவில்லை. சிறு வயதிலேயே மேடை நிகழ்வுக் கலைஞனின் செயற்கையான மற்றவர்களை கவரும் காட்சி நடத்தைகளை அவர் கற்றுக்கொண்டார். பளிச்சென சொல்லவேண்டுமென்றால் பிஞ்சுப்பெண் குழந்தை ஒன்று வயதான, ஆளான பெண் ஒருத்தி அழகுப்போட்டியில் செய்யும் பாவனைகளைச் செய்தால் எப்படி இருக்கும்? எப்படி இருக்கும் என்பதை விட பிஞ்சிலே ஒரு குழந்தையை பழுக்கவைத்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ அது மைக்கேலுக்கும் நடந்தது.

மைக்கேலின் குரலையும், காலையும் பயிற்றுவித்த தந்தை இந்த நடத்தை மாறும் மனவளத்தை வலுவாக்கும் பயிற்சிகளை தரவில்லை. இப்படித்தான் மைக்கேலின் இசையும் நடனமும் புத்தாக்க உணர்வுடன் மெருகேறி வளர்ந்த அதே காலத்தில் அவரது நட்சத்திர வாழ்க்கைக்கான பண்புகளும் சேர்ந்தே வளர்ந்தன. இசைத் திறமையும், நட்சத்திர பண்பும் ஒன்றையொன்று சார்ந்தும் விலகியும் விரிந்தன. சகோதரர்களெல்லாம் இசைக் குடும்பமாய் இருந்த போதும் சிறுவன் மைக்கேலின் திறமைகள் தனித்து தெரிந்தன. தந்தையின் இசைப் பயிற்சியை உண்டு செரித்ததில் அவர் மற்ற உடன்பிறப்புகளை விட முன்னணியில் இருந்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !பொதுவாழ்க்கையில் தங்களது சமத்துவத்துக்கான இடத்தை பெருவதற்காக கருப்பின மக்கள் போராடி வந்த காலத்தில் கலைத் துறையிலும் அந்த சவால் நீடித்தது. அரசியல் உலகில் அதிகாரத்தை மறுத்து வந்த வெள்ளை ஆளும் வர்க்கம் கேளிக்கை உலகில் மட்டும் கருப்பின நட்சத்திரங்களை அனுமதித்த்து வேறு விசயம். என்றாலும் கருப்பின மக்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும் வெற்றியை தமது மைய போராட்டத்தின் வெற்றியாகவே அங்கீகரித்தார்கள். இந்த உளவியல் இப்போது ஒபாமா வரையிலும் அமலில் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்று.

இத்தகைய பெருமிதம் கூட மைக்கேல் ஜாக்சனிடம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் கருப்பின மக்களின் தீவிரமான குடியுரிமை இயக்கத்தின் பயனை முதலில் பெருமளவு அறுவடை செய்தவராக ஜாக்சனைக் கருதலாம். அடிமைகளிடம் அடிமைத்தனத்தின் மீது கோபம் கொண்டோர், அந்த கோபத்தை தவிர்த்து எப்படியாவது முன்னுக்கு வருவோர், ஆண்டானின் உதவியுடன் கடைத்தேறுவோர் என பிரிவுகள் வைத்துக் கொண்டால் மைக்கேல் மூன்றாவது பிரிவில்தான் நிச்சயம் இருப்பார். கருப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்கான போராட்ட அரசியலின் சாயலைக் கூட அவரது இசையுலகில் காணமுடியாது. அத்தகைய குரலுக்கு சொந்தக்காரரான பாப் மார்லேவெல்லாம் அவரது முன்மாதிரி வரிசையில் இல்லை. இருந்தாலும் அவரிடம் திறமையைக் கண்ட இசைத்தொழிலில் உள்ள கருப்பின பிரமுகர்கள் உணர்வுப்பூர்வமாக அவருக்கு ஆதரவையும் வாய்ப்பையும் வழங்கினார்கள். இத்தகைய கூட்டு முயற்சியில்தான் அவரது பிரபல ஆல்பங்கள் வெளியிடப்பட்டாலும் அந்தப் பெருமையனைத்தும் மைக்கேலுக்கு மட்டும்தான் சென்றது. இசையிலும், நடனத்திலும் திறமை கொண்டிருந்த ஜாக்சனை ஒரு நட்சத்திரமாக மாற்றுவதனால் உள்ள ஆதாயங்களை இசை நிறுவனங்கள் தெரிந்து கொண்டன.

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

4. அறிவியல் தொழில் நுட்பத்தின் இசை !

1982ஆம் ஆண்டு அவரது புகழ்பெற்ற ‘திரில்லர்’ ஆல்பம் வெளியிடப்பட்டு விற்பனையில் உலகசாதனை படைத்தது. இதுவரை இல்லாத அளவில் தோல்கருவிகளின் தாளங்களும், கிதாரின் நரம்பு அறுபடும் வேகமும், மைக்கேலின் புதிய பாணியில் காத்திருந்த மனங்களை பாய்ந்து கவ்விக் கொண்டன. எல்லாவகை இசை வகைகளையும் தேவைக்கேற்ற விதத்தில் கலந்து கொடுத்த மைக்கேல் பாப்பிசையின் உண்மையான பொருளை இரசிப்பவர்களுக்கு உணரச்செய்தார். அவரது வீடியோ ஆல்பங்களில் அவர் பிரத்யேகமாக தயாரித்திருந்த நடன அசைவுகளும் இசையோடு போட்டி போட்டுக் கொண்டு இயங்கியதால் அவரது இசை மற்றவர்களை விட இதயங்களுக்கு நெருக்கமாக சென்றது. 60களின் இறுதியில் கலகங்களுக்காக முன்னணி வகித்த இளைய தலைமுறை இப்போது மைக்கேல் ஜாக்சனது பாப்பிசையின் மூலம் தமது இருப்பை தேட ஆரம்பித்தது.

87இல் BAD, 91இல் DANGEROUS, 95இல் HISTORY, 2001இல் INVINCIBLE முதலிய ஆல்பங்களில் கடைசியைத் தவிர்த்து மற்றவையும் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. அவர் பிரபலமாகிய அதே காலத்தில்தான் மேற்கத்திய நாடுகளின் அறிவியல் தொழில் நுட்ப புரட்சியும் உச்சத்திற்கு வந்து கொண்டிருந்தது. மைக்கேலின் பாப்பிசை ஒரு உலகச்சந்தையை கைப்பற்றுவதற்கு இதுவும் முக்கிய காரணம். ஒரு ட்ராக் மோனா ஒலிப்பதிவைக் கொண்டிருந்த ரிக்கார்டு பிளேயர் தட்டுக்கள் காலாவாதியாகி பல ட்ராக் ஸ்டீரியா ஒலிப்பதிவில் கேசட்டுகள் வந்திறங்கின. இது இசையின் நுட்பத்தையும், பயன்பாட்டையும் பெரிய அளவுக்கு கொண்டு சென்றது. மைக்கேலின் காலத்தில்தான் ஹாலிவுட் படங்களுக்கிணையாக வீடியோ இசை ஆல்பங்களை பெரும் முதலீட்டில் தயாரிக்கும் வழக்கம் பிரபலமானது. இதிலும் அவரது ஆல்பங்கள் முன்மாதிரியாக இருந்தன என்பதும் மிகையில்லை. வீடியோ க்ராபிக்ஸ், அனிமேஷன், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என எல்லா நுட்பங்களையும் கையாண்டு ஜாக்சனது வீடியோ ஆல்பங்கள் தயாரிக்கப்பட்டன. வீடியோ கேசட்டுகளும், அதன் ப்ளேயரும் புதிய வீட்டுப் பொருட்களாக வீடுகளை சென்றடைந்தன.

இதே காலத்தில் 24மணிநேர கேளிக்கை தொலைக்காட்சி சேனல்கள் மேற்கத்திய நாடுகளில் தோன்றி பெரிய உலகச்சந்தையை பிடித்து வந்தன. அதில் இசைக்கென வந்த எம்.டி.வி மைக்கேலின் பாப்பிசையோடு சேர்ந்து வளர்ந்தது. ஆரம்பத்தில் கருப்பினக் கலைஞர்களை புறக்கணித்த எம்.டி.வி திரில்லர் ஆல்பத்தின் வெற்றிக்குப்பிறகு அதன் வீடியோவை ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அரைமணி நேரத்திற்கொரு முறை ஒளிபரப்பு செய்தது. மைக்கேல் ஜாக்சன் மேற்கொண்ட உலக இசை நிகழ்ச்சி சுற்றுலாக்களெல்லாம் பிரம்மாண்டமான விளம்பரங்களுடன் இந்த சேனலில் வெற்றி பெற்றன. அவர் சென்ற எல்லா நாடுகளிலும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சி, ஒலி,ஒளி அமைப்புக்கள் அரங்கில் பார்வையாளருக்கு புதிய உணர்ச்சியை ஆச்சரியத்துடன் அளித்தன. மைக்கேலின் மேடை பொருட்கள் மட்டும் இரண்டு கார்கோ விமானங்களில் எடுத்து செல்லப்பட்டன என்பதிலிருந்து அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் பெரும்பாலான கலைஞர்கள் மேடை நிகழ்வுகளில் வெற்றிபெறுவதில்லை என்பதோடு மைக்கேல் ஜாக்சன் அதில் அனாயசமாக வெற்றி பெற்றார் என்பதையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

5. ஜாக்சனின் இசை – ஒரு சமூகவியல் பார்வை!

சுரம் தப்பாமல் பாடுவதும், தாளம் தப்பாமல் அதி வேகத்தில் ஆடுவதும் இரண்டையும் ஒருங்கே செய்வதற்கு அசாத்திய திறமை வேண்டும். அந்த திறமையை கடும் பயிற்சியில் மூலம் ஜாக்சன் அடையப்பெற்றார் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இரகசியக் குரல் அலையில் மெல்லப் பாடுவதும், அதே குரலை வைத்து குதூகலத்தை வரவழைக்கும் வண்ணம் உச்சஸ்தாயில் ரீங்காரம் செய்வதும் அவரால் வியப்பூட்டும் விதத்தில் செய்ய முடிந்தது. எல்லாப் பாடல்களிலும் சோகம், உற்சாகம், மகிழ்ச்சி, கும்மாளம், குத்தாட்டம் எல்லாம் இணைந்து வந்தன. அவர் பெரிய கவிஞர் இல்லையென்றாலும் தாளத்திற்கு உட்காரும் சொற்களை தெரிவு செய்வதிலும், எதுகை மோனைக்காக ஒரே உச்சரிப்பு வார்த்தைகளை சேகரிப்பதிலும் திறமையுடையவராக இருந்தார். பின்னே ஒரு உலக நட்சத்திர நாயகனுக்கு இந்த திறமைகள் கூட இல்லையென்றால் எப்படி?

மேற்கத்திய செவ்வியல் இசையில் ஈடுபாடு உடையோர் இத்தகைய பாப்பிசைகளை வெறும் வித்தை என ஒதுக்கிவிடுவார்கள். இங்கே கர்நாடக சங்கீதம் செய்யும் ஆச்சார வித்வான்களெல்லாம் திரையிசையை மலிவான இசை என ஒதுக்குவது போல. ஆனால் மைக்கேல் ஜாக்சனது இசை இருபது வருட இளைஞர்களை கட்டிப் போட்டு மெய்மறக்கச் செய்தது என்பதையும் அதுவே கேளிக்கை தொழிலை மாபெரும் இலாபத்தை மீட்டும் தொழிலாக தலையெடுத்தற்கு அடிப்படை என்பதையும் நாம் ஏற்கத்தான் வேண்டும். உலகச் சுற்றுலாக்களுக்கு அவர் செல்லும் போது இரசிகர்கள் பைத்தியம் போல பின்தொடர்ந்தார்கள், அழுதார்கள், மயங்கிக்கூட விழுந்தார்கள். வெற்றிகரமான ஹாலிவுட் இயக்குநர் ஸ்பில் பெர்க் தொடங்கி, சிவசேனாவின் கலாச்சாரக் காவலன் பால்தாக்கரே வரை மைக்கேலது இசை சாம்ராஜ்ஜயத்தில் வாழ்ந்து சென்றவர்கள்தான்.

இசை அரூபமானது, சூக்குமமானது, மொழி வரம்பு கடந்தது என்பதோடு கூடவே நமது உயிரியில் இயக்கமும் குறிப்பிட்ட தாளத்தில் இயங்குவதால் பொதுவில் இசை மனிதனின் உயிரியல் தொடர்புடையாதகவும் இருக்கிறது. தத்தித் தவழும் குழந்தை கூட வேகமான தாளகதி வரும் இசையைக் கேட்கும் போது அதற்குத் தகுந்த முறையில் அசைவதற்கு முயற்சிக்கிறது. இதனால் எந்த இசையையும் ரசிப்பதற்கு பெரிய ரசனையோ, அறிவோ, தயாரிப்போ தேவை இல்லையென்று சொல்ல முடியுமா?

மொழியின் இலக்கணத்தை நன்கு கற்றுக்கொண்டு பேசவோ, எழுதவோ முடியுமென்றாலும் ஒரு சிக்கலான தத்துவம் குறித்த கட்டுரையை யாரும் சட்டென்று புரிந்து கொள்ளமுடியாது. அப்பொருள் குறித்த பயிற்சியும், ஆரம்ப அறிவும் இருந்தால்தான் அதைக் கிரகிப்பதும், அறிந்து சொல்வதும் சாத்தியம். ஆனால் அந்துமணியின் வாரமலர் கிசுகிசுவை எவரும் புரிந்து கொள்ள முடியுமென்பதும் இவை போன்ற குப்பைகள்தான் அதிக கண்களால் வாசிக்கப்படுவதும் உண்மை. எல்லா நடவடிக்கைகளிலும் சினிமாவை அறிந்து வாழும் தமிழ் மனத்திற்கு ஒரு சினிமா நடிகையின் கிசுகிசு என்ன சொல்ல வருகிறதென்பது மூளையைக் கசக்கும் விசயமல்ல. அதே நேரம் இந்த உலகில் சிக்கலான அமைப்பையும் பிரமிப்பூட்டும் இயக்கத்தையும் கொண்டிருக்கும் மூளை ஒரு கிசுகிசு செய்திக்காக தனது அபரிதமான சக்தியை பயன்படுத்தும் தேவையில்லாமல் போகிறது. இப்படித்தான் கண்டதையும் உண்டு எல்லாவற்றையும் கழிக்கும் எந்திரப் பண்டங்களாக நம்மை முதலாளித்துவ சமூகம் மாற்றியிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் எல்லா பிற்போக்குகளையும் அழிப்பதற்கு முன்னோடியாக இருந்த பிரஞ்சுப்புரட்சியும் அதன் மதிப்பீடுகளை போரின் மூலம் அண்மைய நாடுகளுக்கு எடுத்துச் சென்ற நெப்போலியனது காலத்தில் வாழ்ந்த பீத்தோவான் அமைத்த சிம்பொனியை நாம் இரசிப்பதற்கு, வரலாறு, தத்துவம், இசையின் அடிப்படை அறிவு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அப்போது அந்த சிம்பொனி, மாபெரும் வண்ணக்கலவை கொண்ட பிரம்மாண்டமான ஓவியமாக நம்முன் விரியும். போராட்டத்தின் மூலம் தேவையற்றதை மறுத்து முன்னேற்றப்படிகளில் காலடி எடுத்து வைக்கும் மனித சமூகத்தின் துடிப்பை அந்த ஆழமான இசையின் மூலம் நாம் பெருமிதத்துடன் கேட்டு செரிக்கிறோம். இந்த செரித்தலில் நாம் வெளியுடுவது கழிவையல்லை, மாறாக அந்த போராட்டத்திற்கு என் பங்கு எதுவென்ற கேள்வியும், அந்த கேள்விக்கான நடைமுறை கோரும் வாழ்க்கையும் நம்மிடமிருந்து துளிர் விடுகின்றன.

தமிழ் சினிமாவில் இளையராஜாவின் இடம் காலியானதற்கும் அந்த இடத்தை தாண்டி ரஹ்மான் சென்றதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் சில நல்ல பாடல்களை ரஹ்மான் தந்திருக்கிறார் என்றாலும் அவரது பாடல் மேலாட்டமான அளவில் எவரையும் சென்றடைந்து விடும். வேகமான விதவிதமான தாளகதியும், குறிப்பிட்ட ராகத்தின் கற்பனைத் திறனையும் தாண்டி ரஹ்மானின் இசை பெரிய வெளியில் பயணிப்பதில்லை. பல உணர்ச்சி, காட்சி தோற்றங்களை கலந்து மாபெரும் சித்திரத்தை தீட்டும் திறன் அதில் இருப்பதில்லை. அவர் கண்ட ராகங்கள் மிகச் சிறிய அளவில் பயணித்துவிட்டு சோர்ந்து குறுகிய தூரத்திலேயே நின்றுவிடுகின்றன. ரஹ்மான் நமக்கு தெரிந்த ரசனையையும், உணர்ச்சியையும் மலிவாகத்தூண்டி விட்டு இரைச்சலான நிறைவைத் தருகிறார்.

பீத்தோவான் போன்ற ஒரு தேர்ந்த இசைக் கலைஞனிடம் பல வண்ண சேர்மங்களையும், தூரிகைகளையும் கொடுத்தால் அவரால் ஒரு கேன்வாசில் பிரம்மாண்டமான ஓவியத்தை வரையமுடியும். ரஹ்மானால் அதைக் கொண்டு பளீர் பளீரென சில வண்ணங்களை மட்டும் காட்ட முடியும்.   பீத்தோவானின் ஒவியத்தை முதலில் பார்ப்பவர்களுக்கு அதன் வண்ணங்கள் மங்கி இருப்பது போலவும், வண்ணங்களின் வேறுபாடு தெரியாதது போலவும் தொன்றும். ரஹ்மானின் ஓவியமோ யாரை வேண்டுமானாலும் தனது ஃபுளோசரண்ட் பிரதிபலிப்பால் கவர்ந்திழுக்கும். மைக்கேல் ஜாக்சனது இசையும் இந்த பளிர் வண்ணங்கள்தான். அதன் வேகமான தாளமும், வித்தை காட்டும் நடன அசைவும் இரசிக்கப்படுவதற்கு பெரிய ரசனை அறிவோ, தயாரிப்போ தேவையில்லை. ஆனால் இந்த இசை கேட்கப்படுவதன் மூலம் உங்கள் உணர்ச்சி கலந்த ரசனை பண்படுவதற்கு பதில் ஆரவாரத்துடன் கிளர்ந்து அதே வேகத்தில் சட்டென தணிந்தும் போகிறது.

தனது முப்பது வருட இசைவாழ்க்கையில் சுமார் அறுபது பாடல்களை மட்டும்தான், சராசரியாக ஆறு மாதத்திற்கு ஒரு பாடல்தான் மைக்கேல் ஜாக்சன் வெளியிட்டிருக்கிறார் என்பது ஆச்சரியமானதல்ல. அவருக்கென்ற உருவான பாணி வெற்றிபெற்றதும் இசையைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அந்த பாணியைத்தான் மீள் வடிவில் கொண்டு வருவதை விரும்பின. இங்கே தமிழ் சினிமாவில் ஒரு கதையோ, பாடலோ வெற்றிபெற்றால் தயாரிப்பாளர்கள் அதைப் போலத்தான் வேண்டும் என்று கட்டளையிடுகிறார்களே அது போல. ஜாக்சன் ஒரு நட்சத்திரமானதும் அவரது பாடல்கள் மிகுந்த செலவு, பிரயத்துவத்துடன் சந்தைப்படுத்தப் படுவதால் அவர் விரும்பியிருந்தாலும் விதவிதமான பாடல்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டிருக்க முடியாது.

பாப், சோல், ராக், ஹார்ட் ராக், ராப், தற்போதைய ஹிப்ஹாப் வரை எல்லா வகை இசைகளிலும் ஜாக்சன் ஆரம்பித்த பாணிகள் இன்று வரை கோலேச்சுகின்றன என்றாலும் மைக்கேல் ஜாக்சன் தனது புகழின் உச்சியில் நின்ற போது அவருக்கு போட்டியாளர்கள் யாருமில்ல என்பதும் உண்மைதான். பின்னர் இந்த பாணியில் மேலும் தேர்ந்து பல கலைஞர்கள் உதிக்கத் துவங்கியதும் ஜாக்சனது நட்சத்திர சேவை இசைத் தொழில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவைப்படவில்லை. மேலும் இன்று இணையத்தின் மூலம் எந்த புதிய இசையையும் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம் என்ற தொழில் நுட்ப சாத்தியங்களெல்லாம் ஜாக்சனது காலத்தில் இல்லை. அவரது இசை ஆல்பங்கள் 75 கோடிக்கு மேல் விற்றதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

6. நுகர்வுக் கலாச்சாரத்தின் இசை !

உணவில் சர்க்கரையோ, கொழுப்புச் சத்தோ அதிக அளவில் தீடீரென விழுங்கப்படும்போது குறிப்பிட்ட அளவில் உணர்ச்சிகள் சமநிலையிழந்து மேலடிக்கின்றன. டப்பா உணவு வகைகளில் இந்த மிகை சத்து காரணமாக அவற்றை கொறிக்கும் சிறுவர்கள் அளவு மீறிய கோபம், ஆத்திரம், பிடிவாதம், வெறுப்பு முதலியனவற்றுக்கு ஆளாவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த நிலை இசைக்கும் பொருந்தும் என்பதை வலியுறுத்தத் தேவையில்லை. மைக்கேல் ஜாக்சனின் இசை தொழில்நுட்பத்தின் இசை மட்டுமல்ல நுகர்வுக் கலாச்சாரத்திற்கான இசையும் கூட.

80களின் காலம் மேற்கத்திய நாடுகளில் நுகர்வுக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறந்த காலமும் கூட. வீடுகளை மனித உணர்வுகள் நிரப்பும் காலம் போய் விதம் விதமான வீட்டுப்பொருட்கள் நிரப்பும் காலம் வந்தது. அவற்றை வாங்கும் வழி முறைகளும், பேரங்காடிகளும், இசை, டி.வி., சமையல் அத்தனையும் நவீன பொருட்களால் மாற்றம் பெற்றன. இவற்றை விளம்பரம் செய்த சேனல்கள், அந்த விளம்பரங்களை பெறுவதற்கான பிரபலமான நிகழ்ச்சிகள் இரண்டும் ஒன்றையொன்று தேடியறிந்து கருவைக் கட்டியமைத்தன. காதல், பாசம், அன்பு, நேசம் முதலான உணர்ச்சிகளெல்லாம் மனித உறவுகளைத் தீர்மானிப்பதற்குப் பதில் பொருட்களின் சேகரிப்பே அனைத்து வகை உறவுகளையும் கட்டியமைக்கும் வலிமையைப் பெற்றன.

தொழிலாளிவர்க்கம் தனது சமூக அரசியல் கடமைகளை ஆற்றுவதற்காக போராடிப்பெற்ற எட்டுமணி ஒய்வுநேரம் எந்தப் பயனும் அற்று கேளிக்கை உலகில் மூழ்குவதாக மாறிப்போனது. சினிமா, டி.வி, ஷாப்பிங், கேளிக்கைப் பூங்காக்கள் மட்டுமே மனிதனின் சமூக நடவடிக்கைகளுக்கான நிறுவனங்களாக மாற்றப்பட்டன. அரட்டையும், நுகர்வும், சுயநலமும், தனிமனித இன்பத் துய்ப்பும், மக்களின் பண்புகளாக இயல்பாக திணிக்கப்பட்டன. பொதுநலமும், அரசியல் ஆர்வமும், சமூக நடவடிக்கைகளும் கேலிக்குரியதாக யதார்த்தத்திற்கு புறம்பானதாக கருதப்பட்டன. பதிவுலகின் மொழியில் சொல்வதாக இருந்தால் மொக்கைகள் சாகாவரம் பெற்றதாகவும், சமூக அக்கறையைக் கோரும் பதிவுகள் அறுவைகளாவும் நிலை கொண்டன. அல்லது மொக்கை அரட்டை விதிகளுக்குட்பட்டுத்தான் அரசியல் விசயங்களை பேசமுடியும் என்றாக ஆயின.

ஆரம்பத்தில் கடும் உழைப்பிற்காக அமெரிக்க தொழிலாளிகள் அணிந்து வந்த ஜீன்ஸ் பேண்ட் அறுபதுகளின் போராட்ட யுகத்தில் கலகம், கிளர்ச்சி செய்யும் இளைஞர்களது சீரூடையாக குறிக்கப்பட்டன. எண்பதுகளிலோ இந்த ஜீன்ஸ் காலுடை வெட்டி அரட்டை செய்வதையே கலகமாய் கருதும் தலைமுறையின் சீருடையாக அவதாரம் எடுத்தது. இவர்கள் தனிமனித இன்பம் துய்ப்பதற்கு இந்த சமூகம், உறவுகள், தந்தைகள் தடுப்பதாக ஆத்திரம் கொண்டு ‘கலகம்’ செய்யும் புதிய தலைமுறையினர். இன்றளவும் வலிமையுடன் நீடிக்கும் வாரிசுகளின் முன்னோடிகள். மைக்கேல் ஜாக்சனின் ‘பிளாக் ஆர் ஒயிட்’ பாடலில் இசை கேட்பதை தடுக்க நினைக்கும் தந்தையை அந்தச் சிறுவன் பல்லாயிரம் வாட்ஸ் ஒலிப்பான்களை வைத்து தூக்கி எறிவதாக ஒரு காட்சி வருமே அதுதான் இந்த இளைஞர்களை குறிக்கும் சரியான குறியீடு.

அந்தப் பாடலில் மேலோட்டாமான கருப்பு வெள்ளை நிறங்களின் ஒற்றுமை பற்றி மைக்கேல் பாடினாலும் அந்தப் பாடலின் வேகமான தாளமும், கிதாரின் கவரும் நரம்பு மீட்டலும்தான் அதாவது கிளர்ந்தெழும் இசை மட்டும்தான் ரசிகர்களின் இதயங்களுக்குள் நுழைகிறது. ட்ரேசி சாப்மெனின் பாடல்களில் ஜாக்சனது வித்தைகள் எதுவும் இல்லை என்றாலும் அவரது சமூக அக்கறை நமது மனங்களில் கேள்வியாய் இசையுடன் கலந்து முகிழ்விக்கிறது. மைக்கேல் ஜாக்சனின் ‘முற்போக்கு’ பாடல்களைக் கேட்டு சில வெள்ளை நிறவெறியர்கள் கூட திருந்தவில்லை என்றாலும் அவரது பாடல்களுக்கு நிறங்களைக் கடந்த ரசிகர்கள் இருந்தார்கள். அதாவது நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அத்தகைய பிரிவினைகள் எதுவும் தேவையில்லை என்பதும் சமூகத்தோடு முரண்படும் தனிமனினது இன்பத்துய்ப்பை மட்டும் அவனது ஒரே கிளர்ச்சி நடவடிக்கையாய் ஆக்குவதும்தான் அதனது இலக்கு என்பதால் இங்கே வேற்றுமைகள் கடந்த ஒற்றுமையில் குறிப்பாக நடுத்தர வர்க்கம் தனது அடையாளத்தை தேடுகிறது

அவரது சிநேகிதியான எலிசபெத் டெய்லரால் பாப்பிசையின் அரசனென்று அழைக்கப்பட்டு நட்சத்திரமாக நிலைகொண்ட மைக்கேல் ஜாக்சனும் தனது அடையாளத்தை தேட… அல்ல, மாற்றத் துவங்கினார். நடுத்தர வர்க்க இளைஞர்களின் பொருளற்ற அரட்டை வாழ்க்கையையே கலகமென்று பொய்யாய் மெருகூட்டிய நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாகிப் போன ஜாக்சனது இசைக்கு பொருத்தமாக அப்போது பெப்சி வெளியிட்ட விளம்பரத்தில்தான் “பெப்சி…புதிய தலைமுறையின் தெரிவு” என்ற முத்திரை வாசகம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்தில் தனது நடனத்துடன் நடித்த ஜாக்சன் அப்போது ஏற்பட்ட விபத்தினால் மூக்கில் அடிபட்டு சிகிச்சை பெறுகிறார். பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் அறிமுகமாகிறார்.

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

7. மேடை ஒளியில் உருவான உடலுக்காக…..!

ஜாக்சனை கருப்பின மக்கள் கூடுதல் நேசத்துடன் கொண்டாடினாலும் ஜாக்சன் அதை விரும்பவில்லை. தனது தந்தையின் கெடுபிடிகளை நினைவு கூர்ந்த ஜாக்சன் நிறத்தினால் தான் பட்ட  துன்பங்கள் பற்றி எப்போதும் பேசியதில்லை. உலக நட்சத்திரமாக மாற்றப்பட்ட அவருக்கு புதிய முகமும், பாணியும் தேவையென்பதை பன்னாட்டு நிறுவனங்களும் உணர்ந்து கொண்டன. கேவலம் அமெரிக்க அதிபருக்கே எப்படிப் பேசுவது, நடப்பது, கை குலுக்குவது, எந்த கோணத்தில் புகைப்படத்திற்கு முகத்தை திருப்புவது என்பதெல்லாம் ஆள் வைத்துப் பயிற்சியாக கொடுக்கப்படும் போது இசையில் உலக நாயகனுக்குரிய தோற்றத்தை பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்காமல் போய்விடுமா என்ன?

இங்கே ரகுமானின் வந்தே மாதரத்தை சோனி நிறுவனம் வெளியிடும் போது அம்பி போல இருந்த ரகுமானது முடியலங்காரம் மேற்கத்திய இசைக்கலைஞர்களது பாணியில் மாற்றப்பட்டதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும். இவையெல்லாம் அவர்களது இசை குறித்த ஒப்பந்தத்திலேயே தெளிவாக கூறப்பட்டு கையெழுத்து பெறப்படும். உலக அழகியாகும் பெண்ணின் உடலளவுகள் குறித்த வரம்பு, எடையின் அளவு, முதலியன விதியாக பின்பற்றப்படும் போது மைக்கேல் ஜாக்சனது அலங்காரம் அவர் மட்டுமே முடிவு செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

நீக்ரோ என இழிவாக அழைக்கப்படும் கருப்பின மக்களது நிறத்தையும், சுருட்டை முடியையும் ஜாக்சன் மாற்றிக் காட்டினார். வெளிர் நிறமும், நீண்ட முடியும் அவரது உலக நாயகன் இமேஜூக்கு தேவைப்பட்டது. அடுத்தடுத்து அவர் செய்து கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் அவருக்கு தேவையான வெள்ளை நிறத்தை வழங்கின. தனக்கு வெளிரும் தோல் நோய் இருப்பதாக ஜாக்சன் தரப்பு கூறினாலும் அவர் கருப்பினத்தை சேர்ந்தவர் போல இல்லை என்று காட்டுவதும் தேவையாக இருந்தது.

நட்சத்திரங்களின் பலமே குளிர்பதனப்பட்டியில் வைத்து பாதுகாக்கப்படும் இறைச்சி போன்ற அவர்களது கெட்டுப் போகாத உடல்தான். இயல்பான உடலும், அலங்காரமும் அவர்களது வாழ்க்கையில் இனி எப்போதும் இருக்கப் போவதில்லை. ரசிகர்களின் பார்வையில் பட்டு இதயத்தில் பதியப்பட்டிருக்கும் அந்த பூச்சுப் பூசப்பட்ட உருவத்தை பராமரிப்பது வரையிலும்தான் நட்சத்திரங்களுக்கு மரியாதை. இப்படி இவர்களுக்கு உடல் என்பது இல்லாத ஆறாவது விரல் போல சிந்தையில் அழுத்தமாக பதிந்து விடுகிறது. குளிர்சாதனப் பெட்டியில் எப்போதும் அடைந்து கொண்டு உடலை பாதுகாப்பது சாத்தியமில்லை என்றாலும் அதுவே நிபந்தனையாகிவிடுகிறது. மேடை வெளிச்சத்திலும், வீடியோ கிராபிக்சிலும் உருவான ஜாக்சனது உடல் தோற்றம் அவரை துரத்த ஆரம்பித்தது. இந்த உடல் கற்பிதம் பின்னர் ஒரு உளவியல் நோயாக அவருக்கு மாறிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதே நோய் மர்லின் மன்றோவுக்கும் இருந்ததாகவும் தெரிகிறது.

இதை ஒரு சமூகவியல் கோணத்தில் பரிசீலிப்போம். மர்லின் மன்றோவோ அல்லது சிலுக்கு ஸ்மிதாவோ அவர்களது கவர்ச்சியான உடலுக்காக மட்டும் போற்றப்பட்டார்கள். எல்லா வகைகளிலும் இவர்களைப்பற்றிய கவனம், பார்வை, மதிப்பு எல்லாம் உடல்களைப் பற்றியே பேசப்படும். இந்த உடல்தான் பெரும் பணத்தை சம்பாதித்துக் கொடுக்கிறது என்பது உண்மையானாலும் இதனுள் இருக்கும் உள்ளத்தை எவரும் சீண்டுவதோ அங்கீகரிப்பதோ இல்லை. இதனால் இந்த உடல் நட்சத்திரங்கள் உளவியல் ஆறுதலின்றி உடலை ரசிக்கும் கூட்டத்தின் மத்தியில் விரைவிலேயே தனிமைப்பட்டு போகிறார்கள். இறுதியில் தற்கொலையும் செய்கிறார்கள். இந்த முரண்பாடு முற்றாதவர்கள் தங்களது நட்சத்திர வாழ்வை தக்கவைத்துக் கொள்கிறார்கள். கவர்ச்சி நடிகை தீபா பின்னர் இயேசுவின் நற்செய்தியாளராக மாறியதும் கூட இந்த வகைதான்.

மைக்கேல் ஜாக்சனும் தனது உடலுக்கு ஏதோ அதீத திறனுள்ளதாக நினைத்துக் கொண்டார். இந்த உடல்போதை ஒவ்வொரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் அதிகரித்தது. மேடையில் தன்னைப் பார்த்து கதறி அழும் ரசிகர்களின் உணர்ச்சி தரும் மிதப்பில் இந்த ரணகளமான சிகிச்சையை அவர் விரும்பியே சகித்துக் கொண்டார். வெள்ளை நிறத்தின் தயவில் ஜாக்சன் நிலைபெறுவது இசையில் கோலேச்சும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேவையாக இருந்தது. கருப்பை வெளிரவைக்கும் அழகுசாதனப் பூச்சுப்பொருட்களின் விற்பனைக்கு ஜாக்சனும் ஒரு காரணம். கருப்பர்களின் மத்தியில் கூட அட்டைக் கருப்பை சற்றே மாநிறமாக்கும் ஆசையை மைக்கேலின் வெள்ளை அவதாரம் ஏற்படுத்தியது. கருப்பினத்தவரின் போராட்டத்திற்கு இப்படித்தான் ஜாக்சன் எதிர்மறைப் பங்காற்றினார்.

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

8. கலை உணர்ச்சியின் வடிகால் எது?

பொழுதுபோக்குத் தொழிலில் இருக்கும் வேறு எவரையும் விட ஜாக்சன் மிகுந்த பணம் சம்பாதித்தார் என்பது உண்மையே. இதில் குறிப்பிடத்தக்க பணத்தை அவர் சமூக சேவைக்கு பயன்படுத்தினார் என்று கூறிவிட்டு அவர் ஆடம்பரமாக செலவழித்த விடயத்தை பலரும் கவனிப்பதில்லை. தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் பத்து காட்சிகளிலும் ஐந்து பாடல்களிலும் வந்து போகும் நடிகைக்கே கார், பங்களா, தனி உதவியாளர்கள் என பந்தா தேவைப்படும்பது உலக நாயகனின் சாம்ராஜ்ஜியம் பற்றி விரித்துரைக்க தேவையில்லை. அவரது விலையுயர்ந்த ஆடைகள், 2500 ஏக்கரில் விரிந்திருக்கும் நெவர்லாண்ட் அரன்மனை வீடு, அதில் கேளிக்கைப் பூங்காக்கள், நூற்றுக்கணக்கான பணியாளர்கள், அங்கு நடக்கும் புகழ்பெற்ற இரவுநேர விருந்துகள் என்று ஏராளமிருக்கின்றன. இப்படி பணத்தை வாரியிறைத்த நபருக்கு சமூக சேவை குறித்து என்ன தெரிந்திருக்கும்?

நல்லது, இத்தகைய பிரம்மாண்டங்கள் இன்றி மைக்கேல் ஒரு ஓலைக்குடிசையில் வாழ்ந்திருக்க விரும்பினாலும் அவரது இமேஜூம், அதற்கு கடிவாளம் வைத்திருந்த இசை நிறுவனங்களும் அதை அனுமதித்திருக்காது. மேலும் தனது புகழையும், பணத்தையும் ஒரு முதலாளத்துவ சந்தையால் கைவரப்பெற்ற கலைஞன் வேறு எப்படி செலவு செய்ய முடியும்? அவனது விற்பனைக்குரிய கலை உணர்ச்சி தனது வடிகால்களை எங்கு தேடும்?

பாடலோ, நடனமோ, ஓவியமோ அதில் தோய்ந்து கரையும் கலைஞர்களை நாம் பார்த்திருப்போம். கலையின் சுபாவம் அது. இதுவே பல மக்கள் ரசிக்கும் மேடையேன்றால் அந்த கலைஞனின் பேரகன் அல்லது உயர்வு நிலையில் வெளிப்படும் நான் என்ற உணர்வு அல்லது பேரகந்தை பல மட்டங்களில் உயர்ந்து செல்லும். கலைஞன் தனது நிகழ்ச்சியை முடித்து கொண்ட பிறகு இந்த உயர்வு எண்ணத்தை விட்டு எவ்வளவு வேகமாக சகஜநிலைக்கு வருகிறானோ அந்த அளவுக்கு அவன் காப்பாற்றப்படுவான். இல்லையேல் உயர்ந்து விட்ட அந்த பேரகந்தை வாய்ப்பு கிடைக்கும் சிற்றின்பங்களில் அபரிதமாக மூழகத் துவங்கும். கலைஞர்கள் பலர் பெண்பித்தராகவோ, குடிகாரராகவோ, இல்லை போதை பொருளுக்கு அடிமையாகவோ இருப்பது நாம் அறிந்ததே.

செல்லுமிடமெல்லாம் ரசிகர்கள் வெறியுடன் துரத்திய ஜாக்சனது பேரகந்தையின் பரிமாணத்தை எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு கிராமிய சமூகத்தில் இருக்கும் ஒரு நாட்டுப்புறக் கலைஞனுக்கு அவனது ரசிகர்களும், வெகுமதியும் கண்முன்னே முடிந்து விடும் என்பதாலும் முழு கிராமமும் அவனைப் பாரமரிக்கும் என்பதால் அவன் தனது கலை உணர்ச்சியிலிருந்து அன்னியப்படுவதில்லை. பெரிய அளவு பிரச்சினையும் அவனுக்கில்லை. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் உருவாகும் கலைஞன் சந்தையைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறான். கூடவே அவனது கலை எப்படி நுகரப்படுகிறது என்பதும் அவனது கவனத்துக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடுகிறது. இப்படி அன்னியமாகும் கலைஞன் தனது கலைத் திறமையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கும், தனக்கு செல்வத்தை தரும் நிறுவனங்களின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்வதற்கும் மிகுந்த பிரயத்தனம் செய்கிறான். இங்கே கலைக்காக வாழ்வா, வாழ்க்கைக்காக கலையா என்று தெளிவாக இருப்பதில்லை. கலைஞனுக்கும் மக்களுக்கும் அப்பாற்பட்ட முதலாளிகள் மூன்றாவது கடவுளாக இருந்து கலையை கட்டுப்படுத்துகிறார்கள். கலைஞனையும் அவனது விருப்பத்தோடு கட்டிப்போடுகிறார்கள்.

இப்படி மக்களின் சமூக வாழ்க்கைக்கும் கலைஞனுக்கும் பெரிய இடைவெளி ஏற்படுகிறது. இந்தப்பிரச்சினை சோசலிச சமூகத்தில் இருக்கும் கலைஞனுக்கு இருப்பதில்லை. ஏனெனில் அங்கே அவன் கூட்டுழைப்பில் ஈடுபடும் சமூகத்தை உற்சாகப்படுத்தும் வேலையை தனது சமூகக் கடமையாக உணர்கிறான். இங்கே கற்றுக்கொள்வதற்கும், வளர்வதற்கும், தனது கலையை ரசிக்கும் ரசிகர்கள் அல்லை நேசர்களுடன் எளிமையாக பழகுவதற்கும் வாய்ப்பு அதிகம். மக்களுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும் வரைக்கும் ஒரு கலைஞனுக்கு பேரகந்தை என்ற கலையுணர்ச்சி நோய் அண்டாது.

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

9. கலைஞன் – இரசிகனின் உறவு

இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் மைக்கேல் ஜாக்சனது கலையுணர்ச்சியின் அபாயத்தை புரிந்து கொள்ளலாம். பெப்சியின் நொறுக்குத் தீனியை குதறி, கோக்கை முழுங்கி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை வெறியுடன் வெற்றியை மட்டும் எதிர்பார்த்து அலறும் ஒருவன் அந்த விளையாட்டின் ரசிகனா இல்லை ருசிகனா? இங்கு இருப்பது ரசனையல்ல, வெறி கொண்ட ஆத்திரம். மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்களில் பெரும்பானோர் இப்படித்தான் இருந்தனர் என்பதில் ஆச்சரியமேதுமில்லை. அவர்களுக்கு அந்த இசை ஊட்டிய கிளர்ச்சிதான் முக்கியமே ஒழிய அதன் கவிதை வரிகளல்ல. உள்ளடக்கத்தை நிராகரித்து வடிவத்தின் பின் ஓடும் இந்த ரசனை தோற்றுவித்திருக்கும் பிரம்மாண்ட ருசிகர் கூட்டத்தின் அன்பை அல்லது வெறியை ஏற்றுக் கொண்டிருக்கும் ஜாக்சன் அதை எப்படி எதிர் கொண்டிருக்க முடியும்?

கற்பிப்பது, கற்றுக் கொள்வது, மீண்டும் கற்பிப்பது என அறிவுத்துறையின் ஆசிரியனும், மாணவனும் இணைந்து செயல்படும்போது கலைஞன், ரசிகனின் உறவு எப்படி இருக்க வேண்டும்? கலைஞனின் கலைத்திறனை நுகரும் ரசிகனின் நுகர்திறனும், அதிலிருந்து கலைஞன் பெறும் எதிரொலியும், இதை வைத்து அவன் தனது கலையை செம்மைப்படுத்துவதும் ஒரு சங்கிலித் தொடராய் நடக்க வேண்டும். மக்களின் சமூக நடவடிக்கைகளுக்கு உணர்ச்சிரீதியாக உற்சாகத்தை அளிக்கும் ஒரு கலை தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அந்த மக்களிடமிருந்து புதிய உரத்தைப் பெறுகிறது. ஆகவே கலை என்றாலே அது மக்கள் கலையாக இருந்தால்தான் இந்த படிக்கட்டு வளர்ச்சி சாத்தியம். ஆனால் முதலாளித்துவத்தின் கலையோ இதற்கு நேரெதிராக வினையாற்றுகிறது. ரசிகனின் மேலாட்டமான உணர்ச்சியை மலிவாகத் தூண்டிவிட்டு பிறகு அதற்கு அவனை அடிமையாக்கி அதே விசயத்தை எந்த நோக்கமின்றி மீண்டும் எதிர்பார்க்கவைத்து அதற்கு பணியவைத்து ஒரு எந்திரமாக ஒரு விலங்காக பழக்குகிறது.

இப்பொது தமிழ் திரையில் ஆதிக்கம் செலுத்தும் குத்தாட்டம் இதை பளிச்சென புரியவைக்கும். ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியில் மாணவர்கள், நெசவாளிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் எல்லோரும் போராடி அடிபட்ட நிலையில் மொத்த தமிழகமும் மன்மத ராசாவில் லயித்திருந்தது. வேலையிழந்த கோலார் தமிழ் மக்களின் களத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த பாட்டு அன்றைய தமிழ் மக்களின் கலை உணர்ச்சியின் மையமாக இருந்தது உண்மையென்றால் அந்த மக்களின் அரசியல், சமூக உணர்ச்சி எப்படி இருந்திருக்கும் என்பதை விரிக்கத் தேவையில்லை.

அறிவியல் தொழில்நுட்பத்தின், நுகர்வு கலாச்சாரத்தின் அங்கமாக முன்னிருத்தப்பட்ட மைக்கேலின் பாப்பிசையும் ஒரு வகையில் இப்படித்தான் பிரபலமானது. மைக்கேலின் பிரபலம் காரணமாக அப்போது இருந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ரீகன் ஜாக்சனை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்தளித்தார். ரீகனின் காலத்தில்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மேலாதிக்கம், அரசியல் சதிகள் உச்சத்தில் இருந்தன. ஆனால் ஜாக்சனின் நிலவு நடனத்தை பார்த்து ரசிகர்கள் உலகமெங்கும், அமெரிக்க ஆக்கிரமிப்பின் இலக்காக இருந்த நாடுகளையும் சேர்த்து கதறி அழுதார்கள்!

ரசிகர்களை ஒரு ரசனைக்கு பழக்கப்படுத்திய இசை நிறுவனங்கள் ஜாக்சனை அதற்கு நன்கு பயன்படுத்திக் கொண்டன. இப்படி சந்தையின் வலிமையால் மக்களிடம் கொண்டு செல்லப்பட்ட கலை எப்படி வளரமுடியும்? இந்தப் புள்ளியில்தான் தனது உலகநாயகன் இமேஜை மைக்கேல் ஜாக்சனால் ஜீரணிக்கமுடியவில்லை. அதற்குரிய தார்மீக பலம் அவரிடம் இல்லை. உலகமெங்கும் ரசிக்கப்படும் ஒரு கலைஞன் அந்த புகழை பணிவுடன் ஏற்று உரமாக்குவதற்கு அவன் மக்களுடன் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கே ஜாக்சன் திணிக்கப்பட்டிருந்தார். அதனால் கலைஞனுக்குரிய பேரகந்தை அவரிடம் எதிர்மறைப் பங்கையே ஆற்றியது. உலகப் பிரபலம் என்ற புகழை பெறுவதற்கு சிந்தையில் போதிய இடமில்லாத மைக்கேல் அதற்குரிய இடமாக வேறு இன்பங்களை நாடத்துவங்கினார். சிம்பன்சி பாசம், குழந்தைகள் நேசம், வலி நிவாரணிகளுக்கு அடிமையாதல் என கிட்டத்தட்ட ஒரு வித்தியாசமான சைக்கோவாக மாறிப்போனார்.

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

10. மங்கிய நட்சத்திரம் !

கூடவே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டிற்கு ஜாக்சன் ஆளானார். ஒரு வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே பணம் கொடுத்து சமரசம் செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் ஆதாரம் இல்லை என புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே இந்த குற்றச்சாட்டு உண்மையானதா என்று நம்மால் உறுதி செய்ய முடியாதென்றாலும் இதைச் செய்வதற்குரிய பலவீனம் ஜாக்சனிடன் இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. மேலும் இந்த பலவீனம் சந்தையினால் திணிக்கப்பட்ட கலைஞனிடம் துருத்திய விளைவு என்பதையும் நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும்.

எப்படி புகழை ஜாக்சனால் எதிர்கொள்ள முடியவில்லையோ இந்த குற்றச்சாட்டுகளையும் அவரால் எதிர்கொண்டிருக்க முடியாதென்பதையும் இதனால் அவர் நிலை குலைந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் யூகிக்கலாம். முக்கியமாக 90களின் பிற்பகுதியிலேயே ஜாக்சனுக்குரிய உலக பாப்பிசையின் அரசன் எனும் இடம் தேவையில்லை என்றாகிவிட்டது. அவரை வைத்து கல்லாக் கட்டிய இசை நிறுவனங்களெல்லாம் அவரை சீண்டக் கூட இல்லை. அவர் நட்சத்திரமாக இருந்த போது அவரை பாப்பராசிகள் விடாமல் துரத்தினார்கள். அவரைக் குறித்த அற்ப விசயங்கள்  கூட ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக கொட்டப்பட்டன. நட்சத்திர ஒளி மங்கிய காலத்திலும் கூட பாப்பராசிகள் விடுவதாக இல்லை.

செலிபிரிட்டிகள் என்றழைக்கப்படும் மேன்மக்களது வாழ்க்கை செய்திகள் பன்னாட்டு ஊடகங்களை நிரப்பும் முக்கியமான ஒன்றாகும். அரசனையும், ஆண்டையையும் பற்றிக் கொள்ளும் இன்ப துன்பங்களின் வழியே மக்கள் தற்கால உலகத்தை நினைத்துப்பார்க்க வேண்டும் என்பதால் இது எப்போதும் அமலிலிருக்கும் ஊடக தந்திரமாகும். தங்களது வாழ்க்கை நிலைமைகள் குறித்து மக்கள் நினைத்துப் பார்க்க தெரியாமல் இருப்பதற்கு செல்வச்சீமான்களது வாழ்க்கை திரும்பத் திரும்ப ஓதப்படுகிறது. மற்றொரு புறம் சீமான்களுக்கு இப்படி செய்திகளில் நைந்து போகுமளவு அடிபட்டால்தான் அந்த வாழ்க்கையின் இருப்பு உறுதி செய்யப்படும் என்பதால் பேஜ் 3யில் வருவது என்பது அவர்களைப் பொறுத்தவரை போற்றற்கரிய பேறு. எதோ மாபெரும் உலகப் பிரச்சினை போல கிளிண்டன்-மோனிகா விவகாரம் பல மாதம் காலம் மேற்கத்திய ஊடகங்களில் வலம் வந்த கதையெல்லாம் இப்படித்தான்.

புகழின் உச்சியில் இருந்த போது தனது செய்திகள் அடிக்கடி வருவதை போதையாக அருந்திய ஜாக்சன் இப்போது நேரெதிரான காலத்தில் வரும் செய்திகளுக்காக இடிந்து போயிருப்பார் என்றால் மிகையில்லை. ஜாக்சன் இருந்தாலும் ஆயிரம் பொன் அவர் ஒழிந்தாலும் ஆயிரம் பொன் என்று சிறார்கள் மீதான பாலியல் விவகாரத்தில் ஊடகங்கள் நடந்து கொண்டன. நீதிமன்றத்திற்கு முன்பாகவே அவர்கள் தீர்ப்பு வழங்கி ஆயுள் சிறையிலிருக்கும் ஜாக்சனது வாழ்க்கை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்தார்கள். இங்கு வெள்ளை நிறவெறியும் சற்று கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இப்படித்தான் உலகை ஒரு காலத்தில் ஆடவைத்த கலைஞன் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டார்.

வழக்கிற்காக மனநிம்மதியை இழந்த ஜாக்சன் அதற்காக பெரும் செல்வத்தையும் இழந்தார். பண்ணை வீட்டையும் காலி செய்தார். ஆடம்பரத்தில் உழன்று கொண்டிருந்த நேரத்தில் பிற்காலத்தில் இப்படி ஒரு நிலை வரும் என அவர் கனவிலும் கருதியிருக்க முடியாது. உலக நாயகனுக்காக அவர் ஏற்றிருந்த லவுகீக சமாச்சாரங்கள் ஒவ்வொன்றும் பராமரிக்க முடியாமல் உதிர்ந்து கரைந்தன. வீட்டில் நிம்மதி இல்லை, வெளியே நடமாடினால் பாப்பராசிகளால் நிம்மதி இல்லை, தொழில் இல்லை, கலை இல்லை என்றால் அவர் எதை வைத்து வாழ்ந்திருக்க முடியும்? போதை மருந்துகள், வலி நிவாரணிகள் மூலம்தான் அவரது இறுதி காலம் வேறு வழியின்றி நகர்த்தப்பட்டது. இப்போது வந்திருக்கும் செய்திகள் படி அவரது உடலில் இருந்த அளவுக்கு அதிகமான மருந்துகளே அவரது உயிரைப் பறித்திருக்கலாம் எனவும கூறப்படுகிறது.

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

11. ஜாக்சனைக் கொன்றவர்கள் யார்?

ஆனாலும் ஆயுள் கைதியாக மருந்துகளின் உதவியால் ஒரு பைத்தியக்காரனைப் போல வாழ்ந்து வந்த ஜாக்சனை இசை பன்னாட்டு நிறுவனங்கள் அப்போதும் விடுவதாக இல்லை. ஒரு சிறிய காலம் அந்த நிறுவனங்களை ஆட்டிப்படைத்த அந்த கலைஞன் இப்போது அந்த நிறுவனங்களுக்கு மறுப்பேதும் சொல்லும் நிலைமையில் இல்லை. ஐம்பது வயது, முடி இல்லாத தலை, உரியும் தோல் துணுக்குகள், மருந்தின்றி நடமுடியாத நிலை, உடல் எடை குறையும் நோய், இப்படி ஆயிரத்தெட்டு பிரச்சினைகளோடு இருந்த அந்த கலைஞனை ஐம்பது நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என உத்திரவிடுவதற்கு எத்தனை கொடூர மனம் வேண்டும்? வந்த வரை இலாபம் என்பதால் முதலாளிகள் ஜாக்சனது கையறு நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். பொழுது போக்கு தொழிலில் அங்கமாகிப் போன இசைச் சந்தையை விரிப்பதற்கு, புதிய தலைமுறைக்கு பழையதை அறிமுகம் செய்து ஈர்ப்பதற்கு முதலாளிகள் நினைத்திருக்கலாம்.

இந்த இசை நிகழ்ச்சிகளுக்கான ஒப்பந்தத்தில் என்னென்ன விதிகள் இருந்தன என்பது நமக்கு தெரியாது. ஒருவேளை இந்த விவரங்கள் பிரேதப் பிரிசோதனையைவிட முக்கியமானது என நமக்குத் தோன்றுகிறது. நோய்வாய்ப்பட்டிருக்கும் சிங்கத்தை அடித்து வேலை வாங்கும் ரிங் மாஸ்டர் வேலையை முதலாளிகள் செய்தனர். ஆனால் சிங்கமோ வேலை செய்ய இயலாமல் செத்துப் போனது.

நிகழ்ச்சிகள் நடந்தால் கடனிலிருந்து மீளலாம், அதற்கு நலிவிலிருக்கும் உடலை எப்படி தயார் செய்வது? எப்படியும் தயார் செய்தே ஆகவேண்டும். மருந்துகள், இன்னும் அதிக மருந்துகள், புதிய நிவாரணிகள், மயக்க மருந்து எல்லாம் பயன்படுத்தி எப்படியாவது உடலை தயார் செய்ய வேண்டும். நிவாரணிகளின் தயவில் புகழ்பெற்ற அந்த இரகசியக் குரல் தனது பொலிவை எடுத்து வரவேண்டும். மூளையை ஏமாற்றியாவது இரசிகர்களை சொக்கவைத்த நிலவு நடனத்தை ஆட வேண்டும். எதாவது செய்ய வேண்டும். மைக்கேலின் இறுதிக்காலம் இப்படித்தான் மிகப்பெரிய சித்திரவதையுடன் இருந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக இறந்ததன் மூலம் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !இதுதான் முதலாளித்துவம் ஒரு கலைஞனை உருவாக்கி கொன்ற கதை. இந்த இலட்சணத்தில் கம்யூனிஸ்ட்டுகள்தான் கலைஞனுக்குரிய சுதந்திரத்தை வழங்கமாட்டார்கள் என்று புரளி பாடுவார்கள். இருக்கட்டும், மைக்கேல் பிரபலமான காலத்திலும், புகழ் சரிந்த காலத்திலும் அவர் சுதந்திரமாக இல்லை. சந்தையால் கட்டுப்படுத்தப்பட்டு ஆடினார், பாடினார். அதே சந்தைக்காக ஆடவும், பாடவும் முடியாமல் இறந்து போனார். அவரை வைத்து வளர்ந்த எம்.டிவியும், சோனி நிறுவனமும் இன்று பகாசுர பலத்தில் வளர்ந்துள்ளன. அவர்களது விளம்பர வித்தைப் பலகையில் இப்போது புதிய நட்சத்திரங்கள் மின்னுகிறார்கள். நட்சத்திரங்கள் மாறலாம், விளம்பர பலகையின் முதலாளிகள் மாறமாட்டார்கள். தரையிலிருந்து அந்த பிரம்மாண்டமான விளம்பரப்பலகையை பார்க்கும் இரசிகனுக்கு மேலே நடக்கும் சூட்சுமங்கள் புரிவதில்லை. அவனுக்குத் தேவை நரம்பை நிமிட்டும் இசையும் நடனமும்தான். அப்படித்தான் அவன் பழக்கப்பட்டிருக்கிறான்.

ஒரு இருபதாண்டு காலம் உலக மக்களை இசையிலும் நடனத்திலும் சற்றே மெய்மறக்கச் செய்த மைக்கேல் ஜாக்சன், கம்யூனிசம் தோற்று விழுந்த காலத்தில் முதலாளித்துவத்தின் வெற்றியை பறைசாற்றும் அமெரிக்காவின் தூதனாக உலகை வலம் வந்த நாயகன், அமெரிக்காதான் இந்த உலகின் மையம், துவக்கம் என நம்பிய கலைஞன், இப்போது அமெரிக்காவின் சூதாட்டப் பொருளாதாரம் வீழ்ந்த காலத்தில் தனது மாயவலைப் புகழை இழந்து மறைந்திருக்கிறான். உவமைகள் பொருத்தமாகத்தான் சேருகின்றன.
அடுத்த நாயகன் யார்? அடுத்த திவால் எது?

ஸ்லம்டாக் மில்லினியர் – அமெரிக்காவின் ஆசி பெற்ற இந்தியாவின் சேரி திரைப்படம்!

ஸ்லம்டாக்

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் (கோடீசுவரனான சேரி நாய்) திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடாக் அரங்கத்தின் மேடையில் விருதைக் கையில் ஏந்தியபடி,‘எல்லாப் புகழும் இறைவனுக்கே!எனத் தமிழில் உற்சாகமாக மொழிந்தார். அடுத்த கணம் இந்தியா முழுவதும் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள், ஒரே குரலில் ஜெய் ஹோ’ (வெற்றி உண்டாகட்டும்!) என ஆரவாரிக்க தொடங்கினர். ஒரு வாரத்திற்கும் மேலாக ஆரவாரம் அடங்கவில்லை. ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசினார், எனவே இது தமிழுக்கு, தமிழனுக்கு கிடைத்த வெற்றி என ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றொரு புறம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது ஒரு மாபெரும் அங்கீகாரம், யாரும் சாதிக்காத சாதனை என ஆரவாரம்.

ஒட்டு மொத்தமாக இவ்வாண்டு ஆஸ்கர் விழாவை இத்திரைப்படம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாக மேலைநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. இத்திரைப்படத்தின் இணை இயக்குனராகப் பணியாற்றிய லவ்லீன் டாண்டன், “ஏ.ஆர்.ரகுமான் போல இன்னும் பல திறமை மிக்கவர்கள் நம்மிடம் எப்போதுமே உள்ளனர். ஆனால் உலகம் இப்பொழுதுதான் விழித்துக் கொண்டுள்ளதுஎனக் குறிப்பிடுகிறார். அமெரிக்காவிற்கான முன்னாள் இந்தியத் தூதர் லலித் மான் சிங், “இந்தியாவின் சக்தியை உலகம் அங்கீகரிக்கத் துவங்கி விட்டதன் வெளிப்பாடாகவே இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை எடுத்துக் கொள்ள வேண்டும்எனக் கூறுகிறார்.

உலகத்தின் அங்கீகாரம் இருக்கட்டும். எந்த இந்தியாவைக் கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டதோ, அந்த இந்திய மக்கள் இத்திரைப்படத்தை அங்கீகரித்தார்களா? ரகுமானுக்கு விருது கிடைக்கும் வரை பெரும்பாலோனோருக்கு இத்திரைப்படம் குறித்து ஏதும் தெரியாது. ஜனவரி இறுதியில் இந்தியாவில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ரகுமானுக்கு விருது கிடைத்த செய்திக்குப் பிறகு சற்றே முன்னேற்றம் இருந்தாலும், அமெரிக்காவில் ஏற்பட்ட அலை இங்கே அடிக்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு?

புனைவுகளும், புனைசுருட்டுகளும்!

ஒவ்வொரு கேள்விக்கும் ஆயிரங்களில் தொடங்கி கோடிகள் வரை பரிசளிக்கப்படும் கோடீசுவரனாக விரும்புவது யார்?’ வினாடி வினா நிகழ்ச்சியை (கோன் பனேகா கரோர்பதி) தொலைக்காட்சியில் பார்த்திருப்போம்.சேரியில் பிறந்த, ஒரு கால் சென்டரில் தேநீர் வழங்கும் பணியாளனாகப் பணியாற்றும் ஜமால் மாலிக் எனும் இளைஞன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறான். பத்து மில்லியன் வரை ஜெயித்து இருபது மில்லியனுக்கான கேள்விக்காகக் காத்திருக்கிறான். அவன் ஏதேனும் மோசடி செய்திருக்க வேண்டும் எனக் கருதும் நிகழ்ச்சியின் தொகுப்பாளன் அவனை போலீசில் ஒப்படைக்கிறான். போலீசு அவனை அடித்து, துன்புறுத்தி, மின்சாரம் பாய்ச்சி விசாரிக்கிறது. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் தனது வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களோடு தொடர்புடையதால் தான் அப்பதில்களை அறிந்திருப்பதாக அவன் கூறுகிறான். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும், ஜமாலின் கடந்தகால வாழ்க்கையில் அதனோடு தொடர்புடைய சம்பவங்களும் மாறி மாறி எழுகின்றன.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சேரிப்பகுதியான மும்பையின் தாராவியில் ஜமாலும், அவனது அண்ணன் சலீமும் வளருகிறார்கள். காவியுடையணிந்த மத வெறியர்களின் தாக்குதலில் அவர்களது தாய் கொல்லப்படுகிறாள். ஏன், எதற்கு என்று பார்வையாளர்கள் விளங்கிக்கொள்ள வழியில்லை. அனாதைகளான சிறுவர்கள் தங்களைப் போலவே நிர்க்கதியாக நிற்கும் லத்திகா என்ற சிறுமியைத் தங்களோடு இணைத்துக் கொள்கிறார்கள். தெருவோரச் சிறார்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைக்கும் கும்பலிடம் சிக்கி, பின்னர் அதிலிருந்து இருவரும் தப்புகிறார்கள். லத்திகா மட்டும் சிக்கிக் கொள்கிறாள். கதியிழந்த சிறார்களாக ரயிலில் பயணிக்கும் இருவரும் டூரிஸ்ட் கைடுகளாகிறார்கள்; திருடுகிறார்கள். லத்திகாவை மறக்காத ஜமால் அவளைத் தேடிச் செல்கிறான். ஜமாலுடன் செல்லும் சலீம், லத்திகாவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கும் கும்பலின் தலைவன் மம்மோனை சுட்டுக் கொல்கிறான். ஆனால் மறுகணமே லத்திகாவை தனக்கு உரிமையாக்கிக் கொண்டு துப்பாக்கி முனையில் ஜமாலை விரட்டியடிக்கிறான்.

கால் சென்டரில் தேநீர் வழங்கும் ஜமால், சுறுசுறுப்பும், சமயோசிதமும் உடையவனாக விளங்குகிறான். சலீமை மீண்டும் கண்டுபிடிக்கிறான். ஒரு நிழல் உலக தாதாவிடம் தற்பொழுது வேலை செய்வதாக கூறும் சலீம் தன்னை மன்னிக்கக் கோருகிறான். அந்த தாதாவின் வைப்பாட்டியாக லத்திகா இருப்பதையும் ஜமால் கண்டுபிடிக்கிறான். ஜமாலோடு சேர்ந்து தப்பிக்க முயலும் லத்திகாவின் முயற்சி தாதாவின் அடியாட்களால் முறியடிக்கப்படுகிறது. மீண்டும் லத்திகாவை தேடிக் கண்டறிய முடியாத ஜமால், ‘கோடீசுவரனாக விரும்புவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் லத்திகா தன்னைப் பார்க்கக் கூடும் என அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறான். இறுதியில் சலீம் தாதாவைக் கொன்று தியாகம் செய்ய, ஜமாலும், லத்திகாவும் இணைகிறார்கள். ஜெய் ஹோ’ (வெற்றி உண்டாகட்டும்) என ரகுமான் பாடத் துவங்குகிறார். நாயகனும், நாயகியும் கைகோர்த்து நடக்கிறார்கள். சுபம்.

Slumdog-Millionaire-10

ஒரு பாட்டிலேயே நமது ஏழை தமிழ்ப்பட ஹீரோக்களெல்லாம் கோடீசுவரர்களாகும் பொழுது இது எம்மாத்திரம் என்கிறீர்களா?ஆஸ்கர் விருதுக்கு பொழிப்புரை வழங்கும் அறிவுஜீவிகளோ, இப்படத்தை வழக்கமான மசாலா எனச் சொல்ல முடியாது என்கிறார்கள். இந்தத் திரைப்படம் சேரி வாழ்க்கையைக் காட்டுகிறது. மதக் கலவரத்தைக் காட்டுகிறது. மும்பையின் தாதாக்களைக் காட்டுகிறது. சிவப்பு விளக்கு விபச்சாரிகளைக் காட்டுகிறது. எனவே இந்தியாவின் யதார்த்தத்தை, வறுமையின் அழகியலோடு காட்டும் திரைப்படம், இது ஒரு சிறுவர் கதை போன்ற புனைவு என வாதிடுகிறார்கள்.

இல்லை, இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது… நமது சாதனைகளைப் பற்றி இல்லாமல், நமது சேரிகளைப் பற்றி திரைப்படம் எடுப்பதன் மூலம் நமது வறுமையைக் காசாக்குகிறார்கள், இது வறுமையை ரசிக்கும் மேலைநாட்டு வக்கிர மனோபாவம்என ஒளிரும் உலகமய இந்தியர்கள் கொதித்தார்கள்.

இந்த நாட்டில் சேரிகள் இருப்பது அவமானமில்லை. அங்கே புழுக்களைப் போல மக்கள் வாழ்வது அவமானமில்லை. அறுபதாண்டு ஜனநாயக சோசலிசக் குடியரசில் அவமானம் கொள்வதற்கான அனைத்து சமூக நிலைமைகளை மாற்றாமல் சத்தமின்றி ஏற்றுக் கொள்ளும் தேசபக்தர்கள், அதனை வெளிநாட்டவர் பேசினாலோ, திரைப்படமாக எடுத்தாலோ உடனடியாக இந்தியாவை இழிவுபடுத்துகிறார்கள் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். பிரச்சினை இந்தியாவின் அவமானங்களை சித்தரிப்பதல்ல, அது சித்தரிப்பின் முழுமையும், நேர்மையும் குறித்ததாகும்.

இது தவிர, ‘சேரி நாய்என்ற சொல் சேரி மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது, அப்பெயரை நீக்க வேண்டும் என மும்பையிலும், பீகாரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இப்படியாக பல வண்ணக் கதம்பமாக இத்திரைப்படத்திற்கான எதிர்வினைகள் இந்தியாவில் எழும்பிய போதும், ஆஸ்கர் விருது கிடைத்த மறுநொடியே எல்லா முணுமுணுப்புகளும், எதிர்ப்புகளும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டன. எங்கு பார்த்தாலும், ‘ஜெய் ஹோமட்டும் ஒலிக்கத் துவங்கியது. இப்பொழுது தேசப்பற்றுக்கு புதிய விளக்கம் தொடங்கியது. பரிசுத்தமான ஆஸ்கர் மேன்மக்களின் கௌரவப் பிரச்சினைகளைக் கழுவிச் சுத்தம் செய்து விட்டதால், ஆஸ்கர் விருது பெற்றுத் தந்த திரைப்படத்தையும், கலைஞர்களையும் விமர்சிப்பது நாட்டுப்பற்றற்ற செயல் என்றாகியது. ஜெய் ஹோபாடலை யார் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது என பா.ஜ.கவிற்கும், காங்கிரசுக்கும் ஒரு பெரிய அக்கப்போரே நடந்தது. ரகுமானே கூச்சப்படும் அளவிற்கு அவரை சென்னையின் மொசார்ட்என ஒரு பத்திரிக்கை புகழ்ந்து தள்ளியது.

பிரிட்டிஷ்அமெரிக்க திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டு, டானி பாய்ல் என்ற பிரிட்டிஷ் இயக்குனரால் எடுக்கப்பட்ட திரைப்படத்தை, இந்தியத் திரைப்படம் என்று கொண்டாடுவது அறிவீனம் மட்டுமல்ல, அமெரிக்க ஆஸ்கருக்கான அடிமை மோகத்தின் வெளிப்பாடாகும். ஆஸ்கர் விருது, அமெரிக்கத் திரைப்படங்களுக்காக, அமெரிக்க குடிமக்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட கமிட்டியால் தெரிவு செய்யப்படும் திரைப்பட விருது. ஒரு வேளை டானி பாய்ல் இத்திரைப்படத்தை இயக்கா விட்டால், இந்தியாவில் வெளியிடப்படுவதற்கு முன்பே அமெரிக்காவில் வெளியிட்ட ராபர்ட் முர்டோச்சின் ஃபாக்ஸ் செர்ச்லைட் இத்திரைப்படத்தை தயாரிக்காமல் இருந்திருந்தால், ஒரு மூன்றாம் உலக நாட்டுக்காரன் தயாரித்து வெளியிட்டிருந்தால், இத்திரைப்படத்திற்கு விருது கிடைத்திருக்குமா என சிலர் வாதிடுகிறார்கள். விசயம் யார் தயாரித்தது என்பது மட்டுமல்ல, என்ன சொல்லப்பட்டது, எப்படிச் சொல்லப்பட்டது என்பதும்தான் முக்கியம்.

உதாரணமாக, தாஜ்மகாலை சுற்றி பார்க்க வரும் ஒரு அமெரிக்கத் தம்பதியர் உண்மையான இந்தியாவைக் காண விரும்புவதாக கைடாக வேலை செய்யும் ஜமாலிடம் கூறுகிறார்கள். அவர்களைப் பரந்து விரிந்த யமுனை நதிக்கரையோரம் வட மாநிலத்தவர்கள் நூற்றுக்கணக்கான துணிகளைத் துவைத்துக் காயப் போடப்பட்டிருக்கும் காட்சியைக் காண ஜமால் அழைத்துச் செல்கிறான். அதற்குள் அவர்களது காரின் டயர் முதற்கொண்டு அனைத்துப் பாகங்களையும் சலீம் களவாடி விடுகிறான். திரும்பி வரும் அமெரிக்க தம்பதியினர் அதிர்ச்சி அடைகின்றனர். ஜமாலும் திருடர்களின் கூட்டாளி என ஆவேசமுறும் இந்திய வாகன ஓட்டுனர், அவனைக் கீழே தள்ளி உதைக்கிறான். தங்களது உடைமைகளை இழந்த அந்த நேரத்திலும் ஜமால் அடிபடுவதைக் காணச் சகியாமல், தமது கரங்களால் அணைத்து அவனைக் காப்பாற்றுகின்றனர் அமெரிக்கத் தம்பதியினர். தனது கிழிந்த உதடுகளிலிருந்து கசியும் இரத்தத்தை துடைத்தவாறே, ‘உண்மையான இந்தியாவைக் காண வேண்டுமென்றீர்களே, இது தான் உண்மையான இந்தியா!எனக் கூறுகிறான் ஜமால். கவலைப்படாதே, உனக்கு உண்மையான அமெரிக்காவை காட்டுகிறேன்எனக் கூறி டிப்ஸாக ஒரு நூறு டாலர் நோட்டைத் தருகிறாள் அமெரிக்கப் பெண்.

உண்மையான அமெரிக்காவைஇராக்கின் பிணக்குவியலிலும், குவாண்டனமோவின் நிர்வாணச் சித்திரவதைகளிலும், ஆப்கானிஸ்தானின் தீராத ரணத்திலும் உலகம் தரிசித்தது. ஆனால், உண்மையான அமெரிக்காவின் மனிதாபிமானமிக்க முகத்திற்கு ஒற்றை வரியில் நுட்பமாக புதிய பொழிப்புரை வரைகிற இந்தக் ஒற்றைக் காட்சிக்காகவே ஒரு ஆஸ்கரென்ன, நூறு ஆஸ்கர் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

slumdog_award

கோடீசுவரனான சேரி நாய், ஆஸ்கர் விருது வாங்கிய இந்தியா!

விகாஸ் ஸ்வரூப் என்ற இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி வினாடி வினாக்களில் ஆர்வமுடையவர். சேரி மக்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகிறார்கள்என்ற பத்திரிக்கைத் துணுக்கு அவருக்கு ஒரு சுவாரசியமான கற்பனையைத் தோற்றுவித்தது. கோடீசுவரனாக விரும்புவது யார்?’ என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியில் சேரியில் பிறந்த இளைஞனொருவன் வெற்றி பெறுவதாக இலண்டனில் தனது ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்காக ஒரு கதை எழுதினார். வினாடி வினா நிகழ்ச்சி என்ற பெயரில் கோடீசுவரனாக விரும்புவது யார்?’ என்ற சூதாட்ட நிகழ்ச்சியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த செலடார் பிலிம்ஸ் என்ற பிரிட்டிஷ் நிறுவனம் இந்தக் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு, இக்கதைக்கான உரிமைகளை வாங்கியது. ஐந்து மில்லியன் டாலர் முதலீடு செய்த வார்னர் இன்டிபெண்டன்ட் நிறுவனம் வட அமெரிக்காவிலும், கனடாவிலும் உள்ள இந்தியச் சமூகங்களிலும், கலைப் பட விரும்பிகள் மத்தியிலும் இத்திரைப்படத்தை வினியோகித்து இலாபமீட்டலாம் எனத் திட்டமிட்டது. இப்படிப் பிறந்ததுதான் சேரி நாயின்மீதான அக்கறை.

எனவே, இந்தியாவில் சேரிகள் இருப்பதோ, இங்கே சிக்னல்களில் சிறுவர்களும் சிறுமிகளும் பிச்சையெடுக்கிறார்கள் என்பதோ இந்த மாபெரும் கலைப் படைப்பின் தூண்டுகோலாக இருக்கவில்லை. மேலை நாடுகளில் ஏற்கெனவே புகழ் பெற்றிருந்த கோடீசுவரனாக விரும்புவது யார்?‘ நிகழ்ச்சிதான் மையமான கலாச்சார இணைப்புப் பாலமாக விளங்குகிறது. அந்த வகையில் இது ஒரு உலகமயப் படம்.

பிரச்சினை வெளிநாட்டவரின் பார்வை என்பதல்ல. அமெரிக்காவில் வாழும் மீரா நாயர் மும்பைத் தெருவோரச் சிறார்களின் வாழ்வின் கோலங்களை சலாம் பாம்பேஎனும் திரைப்படமாக எடுத்தார். கனடாவில் வாழும் தீபா மேத்தா ஃபயர்மற்றும் ‘1947 எர்த்முதலான திரைப்படங்களை இந்தியாவைக் கதைக்களனாக கொண்டு எடுத்தார். இவையெதுவும் தட்டையான சித்திரங்களில், குறியீடுகளால் இந்தியாவை சித்தரிக்க முனையவில்லை. ஆனால், ‘ஸ்லம்டாக் மில்லியனர்தாராவி + தாஜ்மகால் +சிவப்பு விளக்குப் பகுதிகள் + பிச்சையெடுக்கும் குழந்தைகள் + தாதாக்கள் + மதக்கலவரங்கள் + கால்சென்டர் + கோடீசுவரனாக விரும்புவது யார்?’ + சிகரமாக ஒரு காதல் = இந்தியா என்ற சூத்திரத்தின் அடிப்படையில்தான் எடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் உச்சரிப்போடு கதாநாயகன், பெரும்பாலும் ஆங்கிலத்திலும், ஒரிஜினாலிட்டிக்காக அவ்வப்போது இந்தியிலும் விரையும் உரையாடல்கள், ஒட்டாத காதல் கதை, ஊறுகாய் போல தொடப்பட்டுள்ள சேரிகளும், சிவப்பு விளக்குப் பகுதிகளும் எனத் தட்டையான கருத்தமைவுகளில் உருவான இந்த சராசரிப் படம் இந்திய மக்களின் மனதில் ஒட்டவில்லை.

ஆஸ்கர் விழாவில் இத்திரைப்படத்தின் செய்தியாக, ‘நம்பிக்கை! இத்திரைப்படம் நம்பிக்கையைப் பேசுகிறது!எனக் குறிப்பிட்டனர். இதுகாறுமான வாழ்க்கையில் ஜமால் பட்ட காயங்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜமாலை தோற்கடிக்க செய்யும் முயற்சிகள், போலீசு செய்யும் சித்திரவதைகள் அனைத்தையும் தாண்டி நம்பிக்கையினால் ஜமால் வெற்றி பெறுகிறான் என விளக்கவுரை எழுதுகிறார்கள். மூல நாவலில் லத்திகா என்றொரு கதாபாத்திரமே இல்லை. டைட்டானிக் கப்பல் மூழ்கிய அவலத்தைக் காதலில் மூழ்கடித்த ஸ்பீல் பெர்க்கைப் போல, சேரிநாய் கோடீசுவரனான கதையும் காதலையே மைய இழையாகக் கொள்கிறது. என்ன இருந்தாலும் நாயகனுக்கு ஒரு இலட்சியம் அவசியமல்லவா? கேவலம் பணத்துக்காக அவன் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் விளையாடினான் என்றா கதை சொல்வது?

உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் இருண்ட சூழலில், திரைப்படத்தின் நாயகன் ஒரு சூதாட்டப் போட்டியில் ஜெயிப்பதை யதார்த்தத்தில் உலக சூதாட்ட முதலாளித்துவத்தினால் தோற்றுக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள் ரசிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஸ்பீல்பெர்க்கின் படத்தயாரிப்பு நிறுவனம், அம்பானியின் ரிலையன்ஸ் அடா நிறுவனத்துடன் 1.2 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. யூ டிவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஃபாக்ஸ் செர்ச்லைட்டுடன் ஒப்பந்தமிட்டுள்ளது. நெட்வொர்க் 18 நிறுவனத்துடன் அமெரிக்காவின் வயாகாம் குழுமம் கூட்டு வைத்துள்ளது. ஹாலிவுட்டில் 50 மில்லியன் செலவழித்து எடுக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை இங்கே 2 மில்லியன் தொகையில் எடுக்கலாம் என்பதும், அதே வேளையில் உலகளாவிய வலைப்பின்னல் வினியோகத்தில் அதிகபட்சமான லாபம் சுருட்டலாம் என்பதும் புரிந்த பிறகு, ‘இந்தியாவின் சக்தியை உலகம் அங்கீகரிப்பதைத்தவிர வேறென்ன உலகத்திற்கு வழி இருக்கிறது?

ஒரு காட்சியில் லத்திகாவிடம் ஜமால் சொல்லுகிறான். நாம் இருவரும் இணைவது விதி!’. இந்தியர்களிடையே விதி என்கிற கருத்தாக்கம் எவ்வளவு வலிமையானது என ஒரு பேட்டியில் விளக்குகிறார் டானி பாய்ல். ஸ்ல்ம்டாக் மில்லியனர் ஆஸ்கர் விருது பெற்றதும் கூட விதிதான், சந்தையின் விதி! உலகிலேயே அதிகமான திரைப்படங்களை தயாரிக்கும் நாட்டின் திரைப்பட நுகர்வு சந்தையில் உறுதியான அடியெடுத்து வைப்பதற்கான விதி.

ஹாலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்குமான இணைப்பின் அடையாளம் என ஒரு சராசரிப் படத்தைப் போற்றிப் புகழ்வதை சகித்துக் கொள்ள முடியாமல், சென்னையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும், விமர்சகருமான ஹரிஹரன் கசப்போடு தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆஸ்கர் கமிட்டிகளில் நான் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் அழகுப் பொருட்கள் சந்தையை விரிவுபடுத்துவதற்காக இந்திய மாடல்களுக்கு உலக அழகிப் பட்டங்கள் வழங்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு அழகிப் போட்டி நடுவர்கள் ஆளானதைப் போல, இவர்களும் நிர்ப்பந்தங்களில் சிக்கி கொண்டு விட்டார்கள். வெட்கக்கேடு!என்கிறார். எனவே, ஆஸ்கர் கொடுத்தேயாக வேண்டும் என முடிவோடு செயல்பட்ட அமெரிக்காவிற்கு, ‘எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே!என நேரடியாக நன்றி கூறி விடுவது நேர்மையானது.

__________________________________________

புதிய கலாச்சாரம் மே 2009
__________________________________________

ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

ratan‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம், நம் நாட்டு தரகுப் பெருமுதலாளி ரத்தன் டாடா. பன்னாட்டு முதலாளியாக வளர்ந்துவிட்ட டாடாவிற்குக் கடனா? அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா? இதைக் கேள்விப்படும்பொழுது இந்திய மக்களுள் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்படலாம். இதைவிட அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், டாடா தனது கடனை அடைக்கச் செய்திருக்கும் தகிடுதத்தங்கள்தான்!

டாடாவின் இந்தக் கடன் துயரம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் இந்தியாவின் டாடா நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான “கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே விலைக்கு வாங்கியது. முதலாளித்துவ வியாபாரக் கலாச்சாரத்தின்படி, ரத்தன் டாடா தனது சோந்தக் கைக்காசைப் போட்டு இந்தத் தொழிற்சாலைகளை வாங்கவில்லை. சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்களை டாடா கைப்பற்றியது. கோரஸை வாங்கிய டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலையில் 450 கோடி அமெரிக்க டாலர் கடனும் (23,850 கோடி ரூபா) ஜாகுவர் கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலையில் 15,900 கோடி ரூபா கடனும் விழுந்தது.

ரத்தன் டாடா இந்த இரு ஏகபோக நிறுவனங்களையும் வாங்க முட்டிமோதிக் கொண்டிருந்தபொழுதே, இந்தியாவைச் சேர்ந்த சில பொருளாதார அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தின் போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவ்வளவு விலைக்கு இந்த அந்நிய நிறுவனங்களை வாங்கத் தேவையில்லை என அவருக்கு அறிவுரை சோன்னார்கள். ஆனால், டாடா நிறுவன அதிகாரிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் கைகோர்த்துக் கொண்டு, அறிவுரை சோன்ன பொருளாதார நிபுணர்களை, “உலகமயத்தைப் புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகள்” எனச் சாடினார்கள். இந்த ஏகபோக நிறுவனங்களை டாடா கைப்பற்றியதை, இந்தியா வல்லரசாகிவிட்டதன் வெளிப்பாடாக ஊதிப் பெருக்கிய இந்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் டாடா கடன் வாங்குவதற்குப் பக்கபலமாக நின்றது.

ரத்தன் டாடா, இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது.

இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள், டாடாவின் “கோரஸ்” இரும்பு உருக்காலையுடன் போட்டுக் கொண்டிருந்த 10 ஆண்டு கால வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், கோரஸ் ஆலையை விற்க வேண்டிய அல்லது மூடவேண்டிய நிலைக்கு டாடா தள்ளப்பட்டார். பட்ட காலிலே படும் என்பது போல, இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடுவும் நெருங்கியது.

டாடா, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளைப் போல சூதுவாது தெரியாத அப்பாவியா? ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே தனது கடனை அடைக்கும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.

“நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை மீட்பதற்கு   இங்கிலாந்தின் வங்கிகளில் இருந்து 50 கோடி பவுண்ட் கடனும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இருந்து 34 கோடி பவுண்ட் கடனும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்; இல்லயென்றால், இந்த நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அனுமதியுங்கள்” என டாடா இங்கிலாந்து அரசிடம் பேரம் பேசினார். டாடா, தனது கடனை அடைக்க இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிணையக் கைதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இந்த மிரட்டலின் பொருள்.

இந்த பேரத்தின் முடிவில் டாடா, ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடமிருந்து 17.5 கோடி பவுண்ட் கோடி கடனாகப் பெற்றுக் கொண்டார். இந்தக் கடனை வழங்குவதற்கு கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதனை டாடா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து அரசின் தலையைத் தடவிய டாடா, அடுத்து இந்திய மக்களைக் குறி வைத்தார். கடனை அடைக்க முடியாமல் டாடா தலை குனிந்தால், அது இந்தியாவிற்கே ஏற்பட்ட தலைகுனிவாகும் என உருவேற்றிய இந்திய அரசு, டாடாவின் கடன் பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கியது. இந்திய அரசு வங்கியும் அதன் பத்து துணை வங்கிகளும், டாடா இந்திய நிதிச் சந்தையில் இருந்து 4,200 கோடி ரூபா கடன் திரட்ட துணை நின்றதோடு, இந்தக் கடன் முழுவதற்கும் தாங்கள் உத்தரவாதமளிப்பதாகவும் உறுதி கூறின. டாடா இந்த 4,200 கோடி ரூபாயை, ஜாகுவார் கார் நிறுவனத்தை வாங்குவதற்கு பட்ட கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

மேலும், இந்த கார் தொழிற்சாலையைத் தூக்கி நிறுத்துவதற்காக லேண்ட் ரோவர் கார்களை இந்திய இராணுவத்தின் தலையில் கட்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து 5,800 கோடி ரூபா அளவிற்கு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளவும், அதனைத் தனது சர்வதேசக் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய நடுத்தர வர்க்கத்திடம் டாடாவின் “நானோ” காரை வாங்குவதற்கு இருந்த ஆசையையும், தனது கடனை அடைப்பதற்கு நரித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா. டாடாவின் நானோ காருக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 10 தொடங்கி ஏப்ரல் 25 வரை நடந்தது. “காரை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் விலை முன்னூறு ரூபா. வங்கிக் கடன் மூலம் காரை முன்பதிவு செய்யும்பொழுதே காருக்கான முழுத் தொகையையும் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் பெயரில் டாடா நிறுவனம் வசூலித்து விடும். அந்தத் தொகைக்கான வட்டியாக கார் மாடலை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 2,03,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு மூலம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,500  கோடி ரூபாயை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளது.

‘‘டிமாண்டில்” உள்ள காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும்பொழுது, அக்காரின் விலையில் நான்கில் ஒரு பங்கைத்தான் முன்பணமாகச் செலுத்தும் வழக்கமும், குலுக்கலில் கார் கிடைக்காதவர்களுக்கு அம்முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும் வழக்கமும்தான் நடைமுறையில் இருந்து வருகிறதாம். ஆனால், டாடாவோ, பாம்பு-கீரிச் சண்டையைக் காட்டப்போவதாகக் கூறியே அப்பாவிகளிடம் காசு பறித்துவிடும் மோடி மஸ்தான் போல, நானோ பிரியர்களிடம் முழுத் தொகையையும் வசூலித்து விட்டார்.
இந்த 2,03,000 நானோ பிரியர்களுக்கும் கையில காசு வாயில தோசை என்றபடி உடனே கார் கிடைத்துவிடாது. இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இலட்சம் பேருக்கு 2010-ஆம் ஆண்டில்தான் கார் கிடைக்கும். மீதிப் பேருக்கு 2011-ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஒரு நானோ காரைத் தயாரிப்பதற்குப் பல்வேறு வரிச் சலுகைகளின் மூலம் 60,000 ரூபாயை மானியமாக ஏற்கெனவே டாடாவிற்கு வழங்கிவிட்டார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்பொழுது இந்திய நடுத்தர வர்க்கத்திடமிருந்து எவ்வித ஈடும் இன்றி, வெண்ணிலையாக 2,500 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டுள்ளார், டாடா.

இந்த 2,500 கோடி ரூபாயும் டாடாவின் கடன் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படக் கூடும். டாடா தனது கடனை அடைக்க 2,03,000 இந்தியர்களின் சட்டைப் பைக்குள் கையை விட்டுள்ளார். நடிகர்-நடிகைகள் தங்களது கவர்ச்சியைக் காட்டி அப்பாவி ரசிகர்களை வீழ்த்துவதைப் போல, டாடா தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு இருக்கும் கவர்ச்சியைக் காட்டி, இந்திய நடுத்தர வர்க்கத்தை வீழ்த்தியிருக்கிறார். இந்த வேசித்தனத்திற்கு இந்திய அரசும், இந்திய அரசு வங்கியும் மாமா வேலை பார்த்துள்ளன.

டாடா இப்படி ஊரான் பணத்தை விழுங்குவது புதிய விசயமல்ல. இந்தியப் பொதுத்துறை நிறுவனமாக
இருந்த விதேஷ் சன்சார் நிகாமை (வீ.எஸ்.என்.எல்.) ரத்தன் டாடா கைப்பற்றியபொழுது, அந்நிறுவனத்தின் சேமிப்பாக இருந்த 1,000 கோடி ரூபாயை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தனது தொலைதொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்றக் கடத்திக் கொண்டு போனார், அவர். வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே!

_________________________________________

புதிய ஜனநாயகம் ஜூலை 2009
_________________________________________

ஈழத்தின் நினைவுகள்

83

ஈழத்தின் நினைவுகள் - ரதி

எந்தப் பிரச்சினையுமற்று பாதுகாப்பாக வாழ்வபவர்களுக்கு அகதி என்ற வார்த்தையும் அது தரும் ரத்தமும் சதையுமான வாழ்க்கையும் அது தரும் வலிகளையும் எந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியும்? ஏகாதிபத்தியங்களின் உலகமய ஆதிக்க காலத்தில் உள்நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ்வு மாற்றப்பட்டு வரும் சூழ்நிலையில் தேசிய இன ஒடுக்குமுறைகளுக்காக உலகமெங்கும் மக்கள் அகதிகளாய் துரத்தப்படுகிறார்கள். வல்லரசு சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த மக்களின் அவலத்தை புரியவைப்பதற்கான முயற்சியே இந்தப் பதிவு. நமக்கு தெரிந்த ஈழத்தின் அகதி வாழ்க்கை பற்றி வினவு தளத்தில் பல விவாதங்களில் பங்கு கொண்டு உங்களுக்கு அறிமுகமான வாசகர் ரதி இங்கே அந்த முயற்சியை தருகிறார். ஈழத்திலும் பின்னர் தமிழகத்திலும் தற்போது கனடாவிலும் அகதி என்ற பெயரில் வாழ்க்கைய நகர்த்திக்கொண்டிருக்கும் ரதி ஒரு பெண் என்ற முறையிலும் இந்த நாடோடி வாழ்க்கையின் கசப்புகளை கூடுதலாக உணர்ந்திருப்பார். ஈழம் தற்போது பாரிய பின்னடைவு கண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தின் நினைவுகளை மீட்டிக் கொண்டு வரும் முயற்சியாகவும், வினவில் வாசகராக அறிமுகமாகும் நண்பர்களை படைப்பாளிகளாக உயர்த்த வேண்டுமென்ற எமது அவாவினாலும் இங்கே தோழர் ரதியின் நினைவுகளை பதிவு செய்கிறோம். இந்த நினைவுகள் நாம் எவ்வளவுதான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஈழப் போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு ஒரு சிறிய தூண்டுகோலாகாவாவது இருக்குமென்று நம்புகிறோம். ரதியை உற்சாகப்படுத்துங்கள், அவரது நினைவுகளை உங்கள் நினைவலைகளில் அரசியல் உணர்வோடு சேமித்து வையுங்கள். நன்றி.

நட்புடன்
வினவு

……………………………………………………..

நான் அரசியல் பேசப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். எங்க‌ள் வாழ்வு எப்படி போர் என்ற சகதியில் சிக்கி சின்னாபின்னப்பட்டது என்று என் அனுபவத்தைதான் சொல்ல வருகிறேன்.

இவை என் மனக்குமுறல்கள் மட்டுமே. உலகத்தமிழ் உறவுகள் இந்த பூகோளப்பந்தில் பத்து கோடியாம். அதில் பாதிக்கு மேல், ஆறரை கோடி, தமிழ்நாட்டு உறவுகள். ஆனால், ஈழத்தில் மட்டும் நாங்கள் உயிரோடு இருப்பவர்களை எண்ணாமல், தினம், தினம் செத்துமடிபவர்களைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதுதான் ஈழத்தமிழனின் தலைவிதியா என்று யாரிடம் கேள்வி கேட்பது, ஐ.நா. விடமா அல்லது சர்வதேசத்திடமா? தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால் அந்த நாடு நிச்சயமாக தன் உறவுகளுக்கு நடந்த கொடுமைகளை சர்வதேசத்திடம் தட்டி கேட்டிருக்கும். ஆனால், உலகத்தில் தமிழன் பத்து கோடி என்றாலும் அனைவருமே இரண்டாந்தர, மூன்றாந்தர பிரஜைகளாகத்தானிருக்கிறோம். தமிழனுக்கு என்று ஒரு தாய்நாடு இல்லாமல் போனதற்கு யார் காரணம்? நினைத்தாலே வேதனையாக இருக்கிறது. தண்ணீருக்கு என்று ஒரு தனிக்குணம் உண்டு. அதை எந்த பாத்திரத்தில் நிரப்புகிறோமோ அதன் வடிவத்தை அது பெறும். அதேபோல்தான் ஈழத்தமிழனையும் இந்திய ஆளும் வர்க்கமும் சர்வதேசம் மற்றும் ஐ. நா. சபையும் எங்களை எந்த பாத்திரத்தை அவர்கள் விரும்புகிறார்களோ அதை நிரப்பச்சொல்கிறார்கள். எதிர்த்தால் எங்கள் நியாயமான போராட்டங்களை கூட மழுங்கடிக்கிறார்கள். எங்கள் மறுக்கப்பட்ட உரிமைகள், வதைமுகாம்களில் உள்ள உறவுகள் பற்றி பேசினால் அவர்கள் மெளனிகளாகி விடுகிறார்கள். சரி, ஈழத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் இனஅழிப்பு நடந்த‌தே, அதையாவது இந்த ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் “இனஅழிப்பு” என்றாவது ஒப்புக்கொண்டார்களா? அதுவும் இல்லை. இன்று உலக இயங்குவிதிகள் இரண்டு என்று நினைக்கிறேன், ஒன்று பணம் (மூலதனம்) மற்றது வல்லாதிக்கப்போட்டி. இன்று இந்துமாசமுத்திரத்தில் இந்த இயங்கு விதிகளில் ஒன்றான உலகநாடுகளின் வல்லாதிக்கப்போட்டியில் ஈழத்தமிழன் வாழ்வா சாவா பிரச்சனை அதை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகவே மாறிவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது. இதில் நாங்கள் முற்றாக அழிக்கப்படுவோமா அல்லது மீண்டு வருவோமா? எங்களுக்கான நீதி கிடைக்குமா?

இதையெல்லாம் தாண்டி மறுக்கப்பட்ட எங்கள் உரிமைகளுக்காக தசாப்தங்களாக நடந்த போராட்டம், எங்கள் போரியல் வாழ்வு, அதன் தாக்கங்கள் என்பவற்றைதான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். போர் என்பது பொதுவாகவும் ஒவ்வொரு தனிமனிதனையும் நிறையவே பாதிக்கிறது. போர்ச்சூழலில் மரணம், உளவியல் தாக்கங்கள், மற்றும் சமூக பொருளாதார காரணிகள் எவ்வாறு தனிமனித வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது என்பதை என் அனுபவங்கள் மூலம் சொல்ல முனைகிறேன்.

நான் உலகில் அதிகம் நேசிப்பது மழலைகள், அவர்களின் மொழி, மற்றது பூக்கள். நான் மதிப்பது பெண்களின் மானம், அவர்களின் உரிமைகள், அடுத்தவரை பாதிக்காத அடிப்படை மனித உரிமைகள். நான் அதிகம் வெறுப்பது உங்களில் அனேகமானோருக்கு தெரிந்திருக்கும், “போர்”. நான் விரும்பும், மதிக்கும் அத்தனையுமே என் மண்ணில் போரின் பெயரால் நாசமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. போர் என்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான் என்பது என் கருத்து. அதற்காக நான் என் தமிழ்சோதரர்களின் இன்னல்களை குறைத்து கூறவில்லை.பொதுவாகவே குழந்தைகள், பெண்கள் என்றால் அவர்களின் இன்னல் கண்டு மனம் இரங்குவார்கள். ஆனால், சிங்கள பேரினவாதிகளிடமும் ராணுவத்திடமும் இதையெல்லாம் எதிர்பார்த்தால், அதைப்போல் முட்டாள்தனம் உலகில் வேறொன்றுமில்லை. வன்னித்தமிழன் முழு இலங்கைக்கும் சோறு போட்டான் என்றார்கள். ஆனால், அவன் குழந்தைகள் வன்னியில் தண்ணீரின்றியே சாகடிக்க‌ப்பட்டார்கள். அந்த பிஞ்சுகுழந்தைகள் என்ன சோறு கேட்டார்களா அல்லது தமிழீழம் கேட்டார்களா? தவித்த வாய்க்கு தண்ணீர்தானே கேட்டார்கள். இது ஒரு குற்றமா? அவர்களுக்கு கிடைத்தது என்னவோ குண்டுமழைதான். வன்னியில் அந்த பிஞ்சுக்குழந்தைகள் “தண்ணீ, தண்ணீ….” என்று அழுதது எப்பொழுது நினைத்தாலும் என் நெஞ்சை அடைக்கிறது. இப்படி தண்ணீர் இல்லாமல் செத்துமடிந்த எங்கள் செல்வங்கள் எத்தனையோ? இதுவும் போர் விதியா? குழந்தைகளுக்கே இந்த கதி என்றால் என் சோதரிகளின் நிலை சொல்லவே வேண்டாம். சிங்களகாடையர்களாலும் ராணுவத்தாலும் காமப்பசி தீர்க்கும் சதைப்பிண்டங்களாகவே பார்க்க்ப்படுகிறார்கள், நித்தம், நித்தம் சிங்களராணுவத்தால் என் சகோதரிகள் நாசமாக்க்ப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் போர் முறையோ? உலகில் குழந்தைகள் பெண்களின் உரிமைகள் பேசும், காக்கும் அமைப்புகள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கின்றன? அவர்களுக்கு நாங்கள் தான் சொல்லவேண்டியிருக்கிறது ஈழத்தில் எங்கள் குழந்தை செல்வங்களும் பெண்களும் உரிமைகள் மறுக்கப்பட்டு, உயிர்வாழ அனுமதி மறுக்கப்படுகிறார்கள் என்று.

ஈழத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை என்பதால், பூக்களுக்கு கூட நாங்கள் வேலை கொடுப்பதில்லை, ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தில் பங்குகொள்வதற்கு. மனித உடல்களை எரித்துவிட்டோ அல்லது புதைத்து விட்டோ, அதற்கு பக்கத்தில் பதுங்குழி வெட்டி கொண்டோம். பிறகு அதிலேயே பிணங்களாயும் ஆனோம்.

போர் என்ற பெயரில் வாழ்வுரிமை கூட மறுக்கப்பட்டு என் இனம் ஈழத்தில், என் மண்ணில், செத்துமடிவதுதான் விதியா என்று நினைத்தால், என் நெஞ்சுவெடித்து என் உயிர் போய்விடாதா என்றிருக்கிறது. பொதுவாகவே என்னை தெரிந்தவர்கள் சொல்வார்கள், எனக்கு துணிச்சல் அதிகம் என்று. ஆனால், என் உறவுகளின் தாங்கொணா துன்பங்களை நினைத்து நான் தனிமையில் அழாதநாட்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எங்கள் சொந்தமண்ணிலேயே நாங்கள் அகதிகளாய், ஏதிலிகளாய் மூன்றாந்தர பிரஜைகளாக்கூட இல்லாமல் மிருகங்கள் போல் நடத்தப்படுகிறோம். தமிழனாய் பிறந்ததால் எங்கள் உரிமைகள் மறுக்கப்படுகிறதா? ஏன் தமிழர்கள் என்றால் மனிதர்கள் இல்லையா?

நான் அகதியாய் ஈழத்திலும், இந்தியாவிலும் தற்போது கனடாவிலும் என் அனுபவங்களை மீட்டிப்பார்க்கிறேன். என் தன்மானம் என்னை எத்தனையோ தடவைகள் சாட்டையாய் அடித்திருக்கிறது. எதற்கு இந்த “அகதி” என்ற பெயர் என்று. கூனிக்குறுகி பலதடவை இந்த அகதிவாழ்க்கை தேவையா என்று என்னை நானே வெறுக்கிற சந்தர்ப்பங்களும் உண்டு. ஏன் எல்லா மானிடப்பிறவிகள் போலும் என் இருத்தலை, என் உயிரை என்னால் நேசிக்கமுடியவில்லை? காரணம், நான் தமிழ் என்பதலா? அல்லது நான் சுதந்திரத்தை அதிகம் நேசிப்பதாலா? நான் சட்ட‌ப்படியான உரிமைகளோடும், தன்மானத்தோடும் என் மண்ணில் வாழ நினைப்பது ஒரு குற்றமா? நான் அகதியாய் அன்னியமண்ணில் மடிவதுதான் விதியா?

ஈழத்தில் என் பதுங்குழி வாழ்க்கை, இடப்பெயர்வு, கல்விக்கூடங்கள், வாழ்விடங்கள் எதுவும் சந்தோசம் நிறைந்தவை அல்ல. என் சந்தோசமான மாணவப்பருவம் மற்றும் பாடசாலை நாட்களில் கூட போரியல் வாழ்வின் காயங்கள் நிறையவே உண்டு. ஆனால், சுதந்திரம் வேண்டுமென்றால் இதெல்லாம் விலையோ என்று எங்களை நினைக்கத்தூண்டிவிட்டது சிங்கள அடக்குமுறை.

என் அனுபவங்கள் தொடரும்…..

-ரதி

இது எனக்கு ஒரு கன்னி முயற்சி. நான் முன்பு இப்படி நீண்ட பதிவுகள் எழுதி பழக்கமோ அனுபவமோ இல்லை. வினவு கொடுத்த தைரியத்தில் எழுத தொடங்கிவிட்டேன். ஏதாவது குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். என்னை எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்த வினவு, நண்பர் RV க்கும் என் நன்றிகள். என்னை உண்மையில் எழுததூண்டியது பொல்லாதவன்/சரவணகுமார் என்ற ஒரு தமிழ்நாட்டு சகோதரர் சொன்னதுதான். தமிழ்நாட்டில் சாதாரண மக்களுக்கு ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை எந்த ஊடகங்களும் சொல்வதில்லை என்பதுதான்.

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் உண்மையான விசுவாசம் கொண்ட அணிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாம் நெஞ்சிலே சுமந்த அந்தத் தேசியத் தலைவன் பிரபாகரன் வீரச்சாவை எய்தினார் என்றெண்ணி வீர அஞ்சலி – வீர வணக்கம் செலுத்துவதா அல்லது அவர் பாதுகாப்பானதொரு இடத்தில் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை இன்னமும் நம்பி ஆறுதல் அடைவதா என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்துப் போயுள்ளனர். ஆனால், ஈழத்தின் வன்னி-முள்ளிவாக்கால் களப்பிரதேசத்தில் உண்மையில் நடந்தது என்னவென்று இதுவரை நமக்குக் கிட்டியுள்ள தகவல்களைத் தர்க்கரீதியில் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் முடிவுக்கு வர முடிகிறது:

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் “இறுதிப் போர்” அறிவிப்பு செய்து, மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்திய சிங்கள இராணுவம், பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திப் புலிகளின் தலைமையகமாக விளங்கிய கிளிநொச்சியைக் கைப்பற்றியது. அடுத்து, புலிகள் பின் நகர்ந்து சென்ற முல்லைத் தீவை முற்றுகையிட்டு, புலிகள் நிலை கொண்டிருந்த புதுக்குடியிருப்பையும் தாக்கிக் கைப்பற்றியது. அதன் பிறகும் புலிகள்  பின்வாங்கியபடியே நகர்ந்து சென்றனர். இறுதியாக, மே முதல் வாரத்தில், பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆண்டனி; பொட்டு அம்மன், சூசை, நடேசன் ஆகிய தலைவர்கள் – தளபதிகள் உட்பட 2,000 விடுதலைப் புலிகள், சுமார் ஒரு இலட்சம் ஈழத் தமிழர்களுடன் ஈழத்தின் வடகிழக்குக் கோடியில் நந்திக்கடலுக்கும், இந்துமா கடலுக்கும் இடையில் உள்ள முள்ளிவாக்கால் பகுதியில் ஒரு சில சதுரக் கிலோமீட்டர் பகுதிக்குள், அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய 50,000 சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர். சிங்கள இராணுவத்தின் முற்றுகையை முறியடித்து – புலிகளின் சொற்களில் கூறுவதானால் ஊடறுத்து – புலிகள் வெளியேறுவதற்கான வாய்ப்பு சிறிதுகூட இருக்கவில்லை. கடல் வழியே புலிகள் தப்பிவிடாமல் சிங்களக் கப்பற்படையோடு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தன; ஏற்கெனவே கடற்புலிகளின் படகுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன.

rajapakse_pranabஅந்த நிலையில், சிங்கள இராணுவம் தீர்மானகரமான தாக்குதல் நடத்தி இருந்தால், ஓரிரு நாட்களிலேயே புலிகளின் தற்காப்பு நிலைகள் அனைத்தையும் அழித்து, இறுதி வெற்றி ஈட்டியிருக்க முடியும். ஏற்கெனவே, புலித் தலைமையை, குறிப்பாக பிரபாகரனைப் போர்க்களத்திலேயே கொன்று விடவேண்டும், கைது செய்தாலும் உயிரோடு வைத்திருக்கக் கூடாது என்று அயலுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளை நேரடியாக கொழும்புக்கு அனுப்பி, இலங்கை அதிபரிடமும், இராணுவத் தலைமையிடமும் வலியுறுத்தியிருந்தது இந்தியா; இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை இறுதித் தாக்குதல்கள் நடத்துவதை தள்ளி வைக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தது. இந்தியாவின் இந்த விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதை மேற்பார்வையிடுவதற்கென்றே தனிச்சிறப்பாக இந்திய இராணுவ மற்றும் உளவுப்படை “ரா” அதிகாரிகள் களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொருத்தவரைக்கும் ஒன்று சிங்கள இராணுவத்துக்கு எதிராகப் போரிட்டு மடியவேண்டும்; அல்லது அவர்கள் எப்போதும் கழுத்தில் அணிந்திருக்கும் சயனைடு குப்பிகளைக் கடித்து பெருந்திரளாகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்; அல்லது மிக மோசமான வாப்பாக சிங்கள இராணுவத்திடம் சரணடைய வேண்டும். இவை தவிர, வேறொரு தெரிவு எதுவும் விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. இத்தகையதொரு நிலை ஏற்படுவதற்கு சிங்கள – இந்தியக் கூட்டின் இராணுவ ரீதியான கொலைவெறித் தாக்குதல் முக்கியமானதொரு காரணம் என்றாலும், கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி, முல்லைத் தீவுக்குள் முடங்கிய போதே தப்பிச் செல்வதற்கான எல்லாக் கதவுகளையும் அடைத்துக் கொண்டு, “பொந்தில் பதுங்கி இரையாகிப் போவது” என்பது விடுதலைப் புலிகளே தெரிவு செய்து கொண்டதுதான். இவ்வாறான “சுய அழிவு” முடிவெடுத்ததற்கான விளக்கம் எதுவும் புலித்தலைமையிடமோ, புலி விசுவாசிகளிடமோ ஒருபோதும் இல்லை.

ஆனாலும், இயக்கம் விடாது, தலைவர் பெரிய திட்டமொன்று வைத்துள்ளார்; இந்தியா வரும், அமெரிக்கா வரும்; ஜெயலலிதா, வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் தூக்கி நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் புலி விசுவாசிகள். புலித் தலைவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்த எதிர்பார்ப்பினாலேயே இன்று புலிகள் தங்கள் அழிவிற்குத் தாங்களே காரணமாகிப் போனார்கள். இதே போன்றதொரு குருட்டு நம்பிக்கையில்தான் பிரபாகரன் விசுவாசிகள் இன்னமும் இருத்தி வைக்கப்படுகிறார்கள்.

மே 13-ந் தேதியோடு இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்து போயின. கழுத்துவரை பேரழிவு ஆயுதங்களை நிரப்பி வைத்திருந்த சிங்கள இராணுவம் அடுத்த நாளே – மே 14-ந் தேதி வியாழக்கிழமை – “வங்கினுள் பதுங்கிய இரையான” புலிகளைத் தாக்கி அழிக்கும் இறுதித் தாக்குதலைக் கொடூரமான முறையில் தொடங்கியது. மூன்றே நாட்களில் எல்லாம் முடிந்து போயின. முள்ளிவாக்கால் கிராமத்தில் பதுங்கியிருந்த பல ஆயிரம் ஈழத் தமிழர்களும், புலித்தலைமை உட்பட புலிப்படைப் போராளிகள் அனைவரும் சிங்கள இனவெறி இராணுவத்தால் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.
புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் “புதினம்” என்ற இணையதளம், கடந்த ஆறாண்டுகளாகத் தனது நிறுவனத்தின் இரத்தமும் சதையுமாக இயங்கி, உண்மைச் செய்திகளை மட்டுமே அளித்துவந்த அந்த  செய்மதி  நிருபர், “என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இதுதான் கடைசியாகவும் இருக்கலாம்” என்று நினைப்பதாகக் கூறி அனுப்பிய செய்தியைப் பின்வருமாறு வெளியிட்டிருக்கிறது:

“கடந்த இரண்டரை வருடங்களாக – உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் சிறீலங்கா நடத்திவரும் தமிழின அழிப்புப் போர், அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாக்கால் கிராமத்தில் இருந்து ‘புதினம்’ செய்தியாளர், செய்மதி  மூலம் சோன்னவை அவரது வார்த்தைகளிலேயே:

2009051957540101“பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன. கனரக மற்றும் சிறுரக துப்பாக்கிச் சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன. தாக்குதல் நிகழும் இந்தப் பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின், மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன. விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சோல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும், சிறீலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களிலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்; கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரினது உடல்களும் நாலாபுறமும் சிதறிக் கிடக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடல்கள் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அகற்றப்படாத காரணத்தினால், அந்தப் பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறீலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர். படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதியெங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர். படுமோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள், அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக் கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர். அதேபோல காயமடைந்து சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள், தமது ‘சயனைட்’ வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர். பதுங்குக் குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடல்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்கா பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது. “இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண் முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டு விடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சோல்லிவிட்ட பின்பு, யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும்போது – மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது? என்று தழுதழுத்த குரலில் கேள்வி எழுப்பினார்.”

அந்தக் கடைசி மூன்று நாட்களில் என்ன நடந்தது? புலித் தலைமை என்ன செய்தது? எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதைத்தான் எஞ்சியுள்ள புலிகளின் பிரதிநிதிகளும், விசுவாசிகளும் பேச மறுக்கின்றனர். அல்லது முரண்பட்ட விளக்கங்களும் தகவல்களும் கொடுத்து, உண்மையை மூடி மறைக்கின்றனர். ஈழப் போரின் கடைசி மூன்று நாட்களில் நடந்த சம்பவங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைச் சுற்றித் தாம் கட்டியெழுப்பியிருந்த பெருமைக்குக் களங்கம் ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தால், அவை குறித்துப் பரிசீலிக்கவோ, மக்கள் முன் உண்மை விளக்கமளிக்கவோ மறுக்கின்றனர். அவ்வாறான முயற்சியில் ஈடுபடுவோருக்கு எதிரான அவதூறுகளை ஆத்திரம் ஆத்திரமாகக் கொட்டித் தீர்க்கின்றனர். ஆனால், இந்த உண்மைகளைக் கண்டறிந்து, மக்கள் முன் வைப்பதன் மூலம்தான் ஈழ விடுதலைப் போரின் இந்தப் பேரழிவு – பேராபத்துக்குக் காரணமான எதிரிகளின் வக்கிரமான பாசிச இனவெறிப் பேயாட்டங்களை மட்டுமல்ல, சதிகாரர்களையும் துரோகிகளையும்கூட வெளிச்சத்திற்குக் கொண்டு வரமுடியும். ஆனால், நடந்த உண்மைகளை மூடி மறைப்பது ஈழத்தின் எதிரிகளையும் சதிகாரர்களையும் துரோகிகளையும் காப்பாற்றவே பயன்படும்.

சிங்கள இராணுவம் ஈழத் தமிழின அழிப்புப் போரின் இறுதி தாக்குதலைக் கொடூரமான – வெறித்தனமான முறையில் நடத்திக் கொண்டிருந்த அதேசமயம், பல ஆயிரம் ஈழத் தமிழர்களை ஒரே நாளில் கொன்ற அவப்பெயர் தமக்கும், இறுதிவரைப் போராடி வீரமரணமடைந்த பெருமை புலித் தலைமைக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு சர்வதேச சதியிலும் ஈடுபட்டிருந்தது, சிங்கள பாசிச ஆளும் கும்பல். பிரபாகரன் உட்பட புலித் தலைமையையும், இறுதிவரை புலிகளோடு விசுவாசமாகத் தங்கியிருந்த தமிழர்களையும் படுகொலை செய்து விடுவது என்பதில் உறுதியாக இருந்தது. சிங்கள பாசிச ஆளும் கும்பலும் இராணுவமும். அவர்களுக்குத் தப்பிப் போவதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, யுத்தமும் – சாவும் அவர்கள் தொண்டைக் குழிவரை வந்துவிட்ட நிலையில், புலித் தலைமையின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றிச் சரணடைய வைத்து இலகுவாகப் பலியிடுவது என்ற சதியை நன்கு திட்டமிட்டு, “ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தால் பொது மன்னிப்பு” என்ற தூண்டிலை அமெரிக்க – இந்திய – நார்வே நாட்டுச் சதிகாரர்கள் மூலம் புலித் தலைமையின் முன்பு வீசியது. புலித் தலைமையை முழுமையாக நம்ப வைக்க சில வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அமெரிக்க பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரைச் சந்தித்த பின், 15.5.2009-இல் வெளியிட்ட அறிக்கை இந்த சதி நாடகத்தின் வெளிப்படையான ஒரு அங்கமாகும். அந்த அறிக்கை இலங்கை அரசுடனான கூட்டுச் சதியை நாசூக்காக வெளிப்படுத்துகின்றது. “இலங்கையில் போர்ப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன” என்று அவர் 15.5.2009 அன்று அறிவிக்கின்றார். அத்துடன், “போர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகளைக் கண்டறிய அமெரிக்க குழு இலங்கை சென்றது. எவ்வகையில் உதவி செய்ய முடியும் என்ற அறிக்கையையும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழியாக வெளியுறவுத் துறைக்கு வழங்கியுள்ளது”. அதில் “போர் பகுதியில் தமிழர்களுக்கு அமெரிக்கக் கடற்படை வழியாக உதவுவதற்கான பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளோம்” என்கிறது, அந்த அறிக்கை.

xin_0901032610043101779510நார்வே அமைச்சர் எரிக் சோல்கைம் இந்த நாடகத்தின் மற்றொரு சதிகாரன். 17.5.2009 அன்று பல தரம் (வெளிநாட்டு – உள்நாட்டு) புலியுடன் தான் தொடர்பில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். இப்படி மோசடி செய்து கொல்ல உதவிய பின், நடந்ததை, “இது மிகவும் கோரமானது” என்கிறார். இதேபோல் கடைசி நிமிடங்களில் ஐ.நா.வைச் சேர்ந்த விஜயய் நம்பியாரும் (வெளிநாட்டு – உள்நாட்டு) புலியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவையெல்லாம் இவர்கள் கூறியவைகள்தான். இந்தச் சதியின் மற்றொரு வெளிப்பாடாக மீண்டும் நம்பியார் இலங்கை சென்றார், எல்லாம் இதற்காகத்தான். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் அடிக்கடி இலங்கை சென்றதும் இதற்காகத்தான். “ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தால் பொது மன்னிப்பு” என்ற சர்வதேச சதிகாரர்களால் வீசப்பட்ட தூண்டிலைப் புலித் தலைமை கவ்வியதா, இல்லையா? பிரபாகரன் உட்பட புலித் தலைமையின் சாவில் மிகவும் சர்ச்சைக்குரிய கூறாக விளங்குவது இதுதான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் மே 17-ஆம் தேதி அன்று ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில், “நாம் எமது ஆயுதங்களை அமைதியாக்கிச் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வருகிறோம்… விடுதலைப் புலிகளின் அச்சமற்ற தன்மையையும், தங்கள் கொள்கை மீதுள்ள முடிவில்லாத கடமையுணர்ச்சியையும், அதன் மீது எம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எவரும் சந்தேகப்பட முடியாது. எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல், மரணத்துக்குப் பயமற்று எடுத்துள்ளார்கள். எமது போராட்டம் எம்மக்களுக்காகவே என்பதை நாம் மறந்துவிடவில்லை என்றும் இப்போதைய நிலைமையில், இந்த யுத்தத்தை சிறீலங்கா இராணுவம் இம்மக்களைக் கொன்று குவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்… மிகச் துணிச்சலோடு நாங்கள் எழுந்து நின்று எமது ஆயுதங்களை அமைதியாக்குகிறோம், எமது மக்களைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து சர்வதேசச் சமுதாயத்துடன் கேட்டுக் கொள்வதை விட, வேறு தெரிவு எங்களுக்கு இல்லை” என்று அறிவிக்கிறார்.

அதன் பிறகு புலி ஆதரவு இணைய தளமான தமிழ் நெட்டிற்கு பத்மநாதனே வழங்கிய பேட்டியில் “எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. எங்களின் முடிவை நாம் சர்வதேசத்துக்குக் கூறியிருந்தும், சிறீலங்காவின் தாக்குதல்களை நிறுத்தச் சோல்லிக் கேட்டிருந்தும், கொழும்பானது அதைப் பொருட்படுத்தாது, இதுதான் முடிவென்று இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்தது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி சரணடைந்து, வெள்ளைக் கொடியைத் தாங்கிச் சென்ற போராளிகளையும் தலைவர்களையும் சர்வதேச மரபைப் பொருட்படுத்தாது இரக்கமில்லாமல் கொன்றுள்ளது. சர்வதேச சமூகமும் சிறீலங்காவுக்கு எதிராக ஒரு திடமான நிலையை எடுத்து, சிறீலங்காவை ஒரு முறையான முடிவை எடுக்கச் சோல்லி ஊக்குவிக்கவில்லை. நடந்த நிகழ்வுகளையிட்டு நாங்கள் துக்கத்திலுள்ளோம்” என்கிறார்.
அதேசமயம் மே 17 அன்று, எப்போதும் இல்லாத வகையில் திடீரென்று புலிகளின் இராணுவத் தளபதிகளில் ஒருவரான சூசை, “மக்கள் வலையத்தினுள் இருக்கும் அனைத்து மக்களையும், ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்துடன் நேரடியாக செல்வராசா பத்மநாதனூடாகத் தொடர்பு கொண்டு வெளியேற்றுமாறு கேட்டிருந்தோம்” என்று பேட்டியளித்திருந்தார். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைய விரும்புவதாக வடபகுதியில் பணியாற்றிய சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்தும் சனிக்கிழமை (16.05.09) மாலை தனக்குப் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பாலித கொஹனா பிரித்தானிய ஊடகமொன்றிடம் கூறினார். “இதற்கு ஒரே வழிதான் உண்டு. இராணுவ முறைப்படி கையில் வெள்ளைக் கொடியுடன் பயமுறுத்தாத வகையில் மெதுவாக வந்து சரணடைய வேண்டும் என நான் கூறியிருந்தேன்” என்கிறார் கொஹனா. “அவ்வாறு அவர்கள் சரணடைந்தால், உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதுதானே” என்று கேட்டு நார்வே அமைச்சர் இறுதியாகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் கொஹனா அந்த ஊடகத்திடம் காண்பித்துள்ளார்.

இவற்றையும், இவற்றோடு பிரபாகரனைச் சிங்கள இராணுவ வெறியர்கள் சித்திரவதை செய்தும், கோடாறியால் மண்டையைப் பிளந்தும் கொன்ற பின், அவரது உடலை அவமானப்படுத்தி சிதைக்கப்பட்ட உடலை ஒட்டு வேலை செய்து ஊடகங்களுக்குக் காட்டியதை, “வீடியோ” படமாக, டக்ளஸ் தேவானந்தா கருணா ஆதரவு இணைய தளங்கள் சிறிது நேரம் வெளியிட்டு அகற்றியதையும் ஆதாரமாக வைத்து, பிரபாகரன் உட்பட புலித் தலைமை சரணடைந்து படுகொலை செய்யப்பட்டதாக மே 21 அன்றே புலம் பெயர் தமிழரான இரயாகரனின் இணைய தளம் (Tamilcircle.net) செய்தி வெளியிட்டது.

பழ நெடுமாறன்அதன்பிறகு, மே 22 அன்று பிரபாகரன் சாகவில்லை, உயிருடன் பாதுகாப்பாக – நலமாக இருக்கிறார் என்று அறிக்கை வெளியிட்ட செல்வராசா பத்மநாதன், ஒரு வாரத்துக்குப் பிறகு பிரபாகரன் வீரச் சாவெதியதாக பி.பி.சி.க்குப் பேட்டியளித்தார். செல்வராசா பத்மநாதனின் முதல் அறிக்கை அடிப்படையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறிவந்த நெடுமாறன் போன்ற தமிழினவாதத் தலைவர்கள், செல்வராசா பத்மநாதன் பிரபாகரன் சாவை உறுதி செய்தவுடன் “அவர் பன்னாட்டுப் போலீசு அமைப்பால் தேடப்படும் கிரிமினல் குற்றவாளி, அவரது கூற்று ஏற்கத்தக்கதல்ல” என்று ஒதுக்கிவிட்டு, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பிரச்சாரத்தைத் தொடர்கின்றனர். ஜூன் 18-ந் தேதி அன்று, புலிகளின் வெளியகப் பணிப் பிரிவு புலனாவுத் துறை பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகன் “பிரபாகரன் சரணடையவோ, அல்லது கைது செய்யப்படவோ இல்லை; சிறீலங்கா படையினருடன் போரிட்டே வீரக்காவியம் ஆனார்” என்று கூறி, செல்வராசா பத்மநாதனின் நிலையை ஆதரித்துள்ளார். இதன் பிறகு தமிழகத் தமிழினவாதிகள் உட்பட, புலி விசுவாசிகள் பிரபாகரன் மரணம் குறித்து மவுனம் சாதிக்கின்றனர்.

இதற்கிடையே யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழு தனது அறிக்கையில், பிரபாகரன் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குப் பின் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. கடைசியாக ஜூன் இறுதியில் வெளியிடப்பட்ட ஜூனியர் விகடனில், இலங்கை இராணுவம் “சரீன்” மயக்க மருந்து கலந்த இரசாயனக் குண்டு போட்டு பிரபாகரனைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்றதாக எழுதுகிறது. பிரபாகரன் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை; போரிட்டே வீரக்காவியம் ஆனார் என்று புலிகளின் அயலுறவு புலனாவுத்துறை சோன்னாலும், இந்தப் போர் எப்போது, எங்கே எவ்வாறு நடந்தது என்று கூறவில்லை! அதுவும் ஆயுதங்களை அமைதியாக்கிக் கொள்வதாக புலிகள் அறிவித்த பிறகு, இவ்வாறான போர் நடந்திருக்கக் கூடுமா? இல்லை, சிறீலங்கா இராணுவம் கூறுவதைப் போல பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிச் செல்லும்போது (ஊடறுத்துச் செல்லும்போது) சிறீலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டாரா? அப்படியானால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் காட்டும் வீடியோ, பிரபாகரன் உடலை அவமானப்படுத்துவதாகக் காட்டும் புகைப்படங்கள் ஆகிய ஆதாரங்களெல்லாம் வெறும் ஒட்டு வேலைகள்தானா?

இதற்கெல்லாம் மேலாக பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது ஒருபுறம் இருக்க, சிறீலங்கா பாசிச ஆளும் கும்பலிடமும், இராணுவத்திடமும் ஆயுதங்களை அமைதியாக்கி விட்டுச் சரணடைவது என்கிற முடிவுக்கு புலித்தலைமை வந்து விட்டிருந்தது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. “மேலை நாடுகள் சிலவற்றின் முயற்சியில கடைசி நேரத்தில் போர் நிறுத்தப் பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்களப் படை அழைத்ததன் பேரில், வெள்ளைக் கொடியுடன் பேச்சு நடத்தப்போன அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன், அமைதிப் பேச்சுச் செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்டோரை சிங்களப் படை சுட்டுக் கொன்றது” என்று புலிகளின் விசுவாசியான மணியரசன், தனது பத்திரிக்கையில் எழுதுகிறார்.

ஆயுதங்களை அமைதியாக்குவதாகப் புலித்தலைமை விடுத்த அறிவிப்பிற்கு முதல் நாளே, அதாவது மே 16-ந் தேதி இரவே,  புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பாலசிங்கம் நடேசன் “ஆயுதங்களை ஒப்படைக்கிறோம். ஒபாமா அரசு, இங்கிலாந்து அரசு ஆகியவற்றிடம் பாதுகாப்பு உறுதி கிடைக்க வேண்டும். புலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. அதிகாரியான விஜய நம்பியார் அங்கே இருக்க வேண்டும்” என்று இங்கிலாந்து “சண்டே டைம்ஸ்” நாளேட்டின் பெண் செய்தியாளர் மேரி கால்வினுக்கு தொலைபேசி மூலம்  வேண்டுகோள் விடுத்தார். பிறகு, இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினரான ரோகன் சந்திரா நேருவை அழைத்து நடேசன் பேசியிருக்கிறார். மேரி கால்வின் – விஜய நம்பியார் வழியேயும் ரோகன் சந்திரா நேரு வழியேயும் அதிபர் இராஜபக்சேவுக்கு செய்தி போனது; சிறீலங்கா அரசு இந்தச் சரணடைவை ஏற்பதாக பாசிச இராஜபக்சே கூறியதாக, நேரு வழியேயும் விஜய நம்பியார் – மேரி கால்வின் வழியேயும் மே 17-ந் தேதி காலையே நடேசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மணியரசன் கூறுவதிலிருந்து சில மேற்கு நாடுகளும் இந்த ஏற்பாட்டில் பங்கு பெற்றிருக்கின்றன. இந்த ஏற்பாட்டை நம்பிச் சரணடையப் போனபோதுதான் நடேசனும் புலித்தேவனும் வேறு சிலருடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நடேசனும் புலித்தேவனும் மேற்கொண்ட சரணடைவு முயற்சிகள் எல்லாம் பிரபாகரன் உட்பட புலித் தலைமையின் ஒப்புதலுடன் நடந்தனவா, இல்லையா? பிரபாகரன் எதிரிகளுடனான பேச்சு வார்த்தைகள் எதிலும் நேரடியாக ஈடுபட்டதே இல்லை, அரசியல் பிரதிநிதிகளை அனுப்புவதைத்தானே வழக்கமாகக் கொண்டிருந்தார். இதுவும் அப்படி நடந்ததுதானா? அல்லது பிரபாகரன் ஒப்புதல் இல்லாமலேயே நடந்ததா? அப்படியானால் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரைத் தியாகிகளாகப் புலி விசுவாசிகள் போற்றுவது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு புலிகளிடமும் அவர்களின் விசுவாசிகளிடமும் பதில் இல்லை. இன்னும் இரண்டு கேள்விகள் உள்ளன. பிரபாகரன் போரிட்டே மரணமடைந்தார், சித்திரவதை செய்து கொல்லப்படவில்லை என்ற நிலைப்பாடு சிறீலங்கா ஆளும் கும்பல் மீதான சர்வதேச கிரிமினல் போர்க்குற்றவாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து காப்பதாகாதா? பிரபாகரன் வெளிப்படையாக சம்பந்தப்படவில்லை என்றாலும், சிறீலங்கா பாசிச கும்பலைப் பற்றி அறிந்திருந்தும் நடேசன் வழி மேற்கொள்ளப்பட்ட சரணடைவு முயற்சிகள் அரசியல், இராணுவ ரீதியில் சரியானவைதானா? அது பற்றிய ஆய்வுக்குள் எஞ்சியுள்ள புலிகளும், அவர்களின் விசுவாசிகளும் போக மறுப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான விடையை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு.

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்

3

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 12

Africa---Angola-mapஇங்கிலாந்து அரசவம்சத்தின் கவர்ச்சி நட்சத்திரமான டயானா, அங்கோலாவில் கண்ணிவெடி அகற்றும் தொண்டராக சென்ற போது, தொலைக்காட்சிக் காமெராக்களும் பின்தொடர்ந்தன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அங்கோலாவை அப்போது தான் பலர் “கண்டுபிடித்தார்கள்”. சர்வதேச அரசியல் அறிவுள்ளவர்களுக்கு, அங்கோலாவின் தசாப்தகால சூடான பனிப்போர் ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அங்கோலாவின் உள்நாட்டுப் போரை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒன்று, பனிப்போர் காலகட்டம். பதினைந்து வருடங்களாக நடந்த யுத்தத்தில் இருதரப்பாலும் வெல்ல முடியவில்லை. இரண்டு, உலகமயமாக்கல் காலகட்டம். இதில் அரச படைகள் இறுதியாக வெற்றியீட்டியுள்ளன. நவீன கால போரியல் வரலாறு குறித்து அறிய விரும்புவோருக்கு, அங்கோலா போர் ஒரு நல்ல பாடம்.

16 ம் நூற்றாண்டில் போர்த்துகேயர் வரும் வரை, அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவில் இருந்து வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலுமாக மூன்று இராஜ்யங்கள் இருந்துள்ளன. ஒரு இராஜ்யத்தை ஆண்ட “நுகொலா (கிளுவஞ்சே)” என்ற மன்னனின் பெயரை, போர்த்துகேயர் முழு நிலப்பரப்பிற்கும் வைத்து விட்டனர். காலனிய காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் காலனி நாடுகளுடன் இரண்டு வகையான உறவைக் கொண்டிருந்தனர். ஒன்று, வர்த்தக மையம் ஒன்றை நிறுவி வியாபாரம் செய்வது. இரண்டு, அந்தப் பிரதேசத்தை தமது நேரடியான ஆட்சியின் கீழ் கொண்டுவருவது. ஆரம்பத்தில் போர்த்துக்கேயர்கள், அங்கோலா மன்னனுடன் சமமான இராஜதந்திர உறவை பேணி வந்துள்ளனர். இந்த நல்லுறவு காரணமாக மன்னனும் கத்தோலிக்க மதத்தை தழுவி, தேவாலயம் கட்டவும் அனுமதி அளித்துள்ளான்.

பிரேசிலுக்கு தேவையான அடிமைகளை போத்துக்கேயர்கள் அங்கோலாவில் பிடித்து ஏற்றுமதி செய்து வந்தார்கள். மன்னர்களுடன் ஏற்பட்ட வியாபாரப் பிரச்சினையை தொடர்ந்து, போர்த்துக்கேய இராணுவ நடவடிக்கைகள் அரசாட்சிக்கு முடிவு கட்டின. கரையோரப் பகுதிகளை கைப்பற்றியதுடன் நில்லாது, கனிம வளங்களை தேடி நாட்டின் உள்பகுதிகளுக்கும் படையெடுத்துச் சென்று ஆக்கிரமித்தனர். இவ்வாறு போர்த்துகேய காலனிய காலகட்டம் ஆரம்பமாகியது. 19 ம் நூற்றாண்டில், பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளை அடக்கக் கூடிய அளவு பரந்த நிலப்பரப்பை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

19 ம் நூற்றாண்டில், அடிமை வியாபாரத்தின் மீது சர்வதேச தடை வந்தது. போத்துகல்லும் அதற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அங்கோலாவை முழுமையான காலனியாக மாற்றும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அங்கோலா கறுப்பர்களை “நாகரீகப்படுத்துவதற்காக” கிறிஸ்தவ மதம் பரப்புபவர்களை அனுப்பி வைத்தார்கள். கத்தோலிக்க மிஷனரிகள் மட்டுமல்ல, புரட்டஸ்தாந்து மிஷனரிகளும் தாராளமாக ஆட்சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு மதப்பிரிவுகளுக்கும் இடையில் ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே இருந்தது. கத்தோலிக்க மதத்தை தழுவுபவர்கள் போர்த்துக்கேய மொழியை சரளமாக கற்று, மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்.

போர்த்துக்கேயர்கள் ஆப்பிரிக்கர்களை “நாகரீகப் படுத்திய” பின்னரும் அவர்களுக்கு சம உரிமை வழங்கவில்லை. சமூக மேல்தட்டில் வெள்ளையர்களும், அவர்களுக்கு கீழே கலப்பின “mestiços” உயர்ந்த அந்தஸ்தில் இருந்தனர். வெள்ளையின ஆணுக்கும், கறுப்பின பெண்ணுக்கும் பிறந்த பிள்ளைகளே கலப்பினத்தவர்கள் ( mestiços). அன்றைய காலத்தில் ஒரு வெள்ளையின பெண் கறுப்பின ஆணுடன் உறவு வைப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. தடையை மீறிய உறவு கொள்ளும் வெள்ளைப் பெண்ணை அவமானப்படுத்தி ஒதுக்கி வைப்பதுடன், கறுப்பு ஆணை கொலை செய்து விடுவார்கள். போர்த்துகேய மொழி சரளமாக பேசத் தெரிந்த ஆப்பிரிக்க கறுப்பர்கள் தனது அந்தஸ்தை உயர்த்த முடிந்தாலும், அவர்கள் மூன்றாவது தட்டிலேயே வைக்கப்பட்டனர். இதனால் இந்த மூன்றாவது பிரிவை சேர்ந்தவர்கள் assimilados என அழைக்கப்பட்டனர். போர்த்துக்கேய மொழி பேசும், மேலைத்தேய கல்வி கற்ற, கத்தோலிக்க assimilados, பிற ஆப்பிரிக்கர்களை விட நாகரீகமடைந்தவர்களாக கருதப்பட்டனர்.

Antonio_Salazar1910 ம் ஆண்டு, அங்கோலா போர்த்துக்கல் நாட்டின் ஒரு பகுதியாகியது. 1932 ல் போர்த்துக்கல்லில் ஆட்சியை கைப்பற்றிய பாஸிஸ சர்வாதிகாரி சலசார் காலத்தில், வெள்ளையர்கள் அங்கோலா சென்று குடியேறுமாறு ஊக்குவிக்கப்பட்டது. அதற்கு முன்பு, போர்த்துகல்லில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை பிடித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதாவது பிரிட்டிஷ் இந்தியாவில் அந்தமான் தீவைப் போல, போர்த்துகல்லுக்கு அங்கோலா பயன்பட்டது. பிற்காலத்தில் திரவியம் தேட விரும்பும் போர்த்துகேய பிரசைகள் அனைவருக்கும் அங்கோலா திறந்து விடப்பட்டது. பெருந்தோட்டங்களில் மேலாளராக, மாவட்ட வரி அறவிடுவோராக பணியாற்ற ஆயிரக்கணக்கான வெள்ளையினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி காரணமாக புதிய தொழில் வாய்ப்புகள் பெருகின. எண்ணை அகழ்வு, வைரக் கல் பட்டறைகள் என்பன தொழிற்துறை வளர்ச்சி கண்டன. இதைத் தவிர தாயகத்தில் வாய்ப்பற்ற வெள்ளையின உழவர்கள், அங்கோலாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரனாக முடிந்தது. அங்கோலாவில் குடியேறிய வெள்ளையர்கள், மொத்த சனத்தொகையில் 6 சதவீதமாக மாறிவிட்டிருந்தனர். 1974 ம் ஆண்டு, அங்கோலா சுதந்திரமடையும் வரை மூன்று லட்சம் வெள்ளையினத்தவர்கள் வாழ்ந்து வந்தனர்.

அங்கோலாவின் வரலாற்றில் அசிமிலாடோஸ்(assimilados) உருவாக்கம் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தூய வெள்ளையரோ, அல்லது கலப்பினமோ அல்ல. கருப்பினத்தவரில் இருந்து தோன்றிய மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். எமது சமூகத்தில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கருதும் “தமிங்கிலர்கள்” என்றொரு பிரிவு உண்டல்லவா? அங்கோலாவின் அசிமிலாடோக்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். போத்துக்கேய மொழியை பேசுவதில் மட்டுமல்ல, கலாச்சாரத்தை பின்பற்றுவதிலும் பெருமை கொண்டவர்கள். தாம் இருக்க வேண்டிய இடம் ஐரோப்பா என்று நினைத்துக் கொள்பவர்கள். இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை போர்த்துக்கல்லிற்கு உயர்கல்விக்காக அனுப்பி வைப்பார்கள். பெற்றோர் தமது பிள்ளை போர்த்துக்கல்லில் படிப்பதாக ஊர் முழுக்க பெருமையடித்துக் கொண்டு திரிவார்கள்.

சனத்தொகையில் அசிமிலடோக்களின் தொகை முப்பதாயிரத்தை தாண்டி விட்டிருந்தாலும், என்னதான் போர்த்துகேய பண்பாட்டை வழுவுறாது பின்பற்றி வந்தாலும், வெள்ளையர்கள் அவர்களை சமமாக மதிக்கவில்லை. சிறந்த அரச பதவிகள் எல்லாம் ஒன்றில் வெள்ளையருக்கு, அல்லது கலப்பினத்தவருக்கே ஒதுக்கப்பட்டன. அரசின் இனப் பாகுபாட்டுக் கொள்கை அசிமிலாடோக்கள் மத்தியில் விரக்தியை தோற்றுவித்தது. இளைஞர்கள் மத்தியில் தேசியவாத சிந்தனைகள் தோன்றின. அவர்களில் ஒருவர் அகொஸ்திஞோ நேட்டோ, போத்துக்கல்லில் மருத்துவப் பட்டம் பெற்ற கவிஞர். நேட்டோவும் அவரது தோழர்களும் போர்த்துக்கல் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் போது, மார்க்சிஸ அரசியலில் ஈடுபாடு காட்டினர். போத்துகேய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆப்பிரிக்கர்களை சமமாக மதித்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் ஆப்பிரிக்கர்கள், தமது தாயகத்திற்கான தேசிய விடுதலைக்காக போராடுவது நியாயமானது என்று கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

angolhha_lllk_klஅங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கம் என்ற MPLA (Movimento Popular de Libertação de Angola) ஸ்தாபிக்கப்பட்ட போது, சில வெள்ளையின கம்யூனிஸ்ட்களும் காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக அங்கோலா விடுதலைப் போராட்டம், ஒரு போதும் அனைத்து வெள்ளயினத்தவர்களுக்கும் எதிராக திரும்பவில்லை. இன்றும் பல வெள்ளையினத்தவர்கள் அங்கோலா பிரசைகளாக வாழ்வதைக் காணலாம். மார்க்சிஸ-லெனினிச தத்துவத்தை வரித்துக் கொண்ட MPLA, நகர்ப்புற ஏழை மக்கள் மத்தியில் ஆதரவுத் தளத்தை கொண்டிருந்தது. இன்று MPLA மார்க்சிஸ சித்தாந்தத்தை கைகழுவி விட்டாலும், பொதுத் தேர்தல்களில் மாநகர சேரிகளில் MPLA க்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன.

ஒரு சாராரால், படித்த புத்திஜீவிகளின் இயக்கமாக MPLA கருதப்பட்டது. அங்கோலாவில் மேலும் இரண்டு இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டன. அங்கோலா தேசிய விடுதலை முன்னணி (FNLA) என்றொரு கம்யூனிச விரோத, பழமைவாத கட்சியொன்று இருந்தது. இழந்த மன்னராட்சியை மீட்பது அவர்களது கொள்கை. அதாவது ஆண்ட பரம்பரைக் கனவுகளை கொண்ட வலதுசாரி தேசியவாதம் பேசியது. 1975 ம் ஆண்டு, சுதந்திரம் கிடைத்த கையோடு, MPLA க்கும், FNLA க்கும் இடையில் அதிகாரத்திற்காக சண்டை மூண்டது. FNLA க்கு அயல்நாடான காங்கோ, மற்றும் சி.ஐ.ஏ., ஆகியன உதவி செய்தன. இருப்பினும் ஒரு வருட யுத்தத்தின் இறுதியில் FNLA தோல்வி கண்டது. எஞ்சிய உறுப்பினர்கள் காங்கோவில் தஞ்சம் புகுந்தனர். மூன்றாவது இயக்கமான “அனைத்து அங்கோலா சுதந்திரத்திற்குமான தேசிய கூட்டணி” (União Nacional para a Independência Total de Angola) UNITA பல தசாப்தங்களுக்கு நின்று பிடித்து சண்டையிட்டது. இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

அங்கோலாவின் விடுதலைப் போராட்டம், 1960 ம் ஆண்டு விவசாயிகளின் எழுச்சியுடன் ஆரம்பமாகியது. காலனிய அரசு பருத்தி பயிரிடுமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தியது. விவசாயிகள் இந்த உத்தரவுக்கு அடிபணிய மறுத்து கலகம் செய்தனர். அதே நேரம் இன்னொரு பக்கத்தில் கோப்பி தோட்ட முதலாளிகள் நிலங்களை அபகரித்துக் கொண்டிருந்தனர். இந்த நெருக்கடிகள் போதாதென்று, அதிகரிக்கப்பட்ட வரி வேறு விவசாயிகளை சுரண்டிக் கொண்டிருந்தது. விவசாயிகளை கிளர்ந்தெழ வைக்க ஏதுவான காரணங்கள் அங்கே நிலவின. அங்கோலாவின் வட பகுதியெங்கும் புரட்சித்தீ பற்றியது. காலனிய அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த இரண்டாயிரம் போர்த்துக்கேயர்கள், கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர். போர்த்துக்கேய இராணுவம் பதிலடி கொடுப்பது என்ற பெயரில், கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி நசுக்கியது. குறைந்தது இருபதாயிரம் கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சம் பேர் அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சம் கோரினர்.

விவசாயிகள் எழுச்சி அடக்கப்பட்டாலும், விடுதலை இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. MPLA, FNLA, UNITA ஆகிய இயக்கங்கள் காலனிய அரசுக்கு எதிரான கெரில்லா போராட்டம் நடத்தின. காலனிய அரசினால் கெரில்லாக்களை எதிர்த்து போரிட முடியாமல் போனதால், புதிய தந்திரம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது. அங்கோலா முழுவதும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் அங்கே தங்கவைக்கப்பட்டனர். மக்கள் என்ற தண்ணீரையும், கெரில்லாக்கள் என்ற மீன்களையும் பிரிக்கும் வேலையில் போர்த்துக்கேயர் ஓரளவு வெற்றிபெற்றனர் எனலாம். 1975 ம் ஆண்டு, சுமார் 75000 போர்த்துகேய படையினரும், 20000 கெரில்லாக்களும் மீள முடியாத போர்ச் சகதிக்குள் சிக்கியிருந்தனர். அவ்வருடம் போர்த்துக்கல்லில் இடம்பெற்ற அரசியல் மாற்றம், போரில் திருப்புமுனையாக அமைந்தது.

1974portugal[1]போர்த்துகல்லில் இராணுவ இயந்திரம் சர்வாதிகாரி சலசாரின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தியது. இடதுசாரி இராணுவ அதிகாரிகள் புரட்சிக்கு தலைமை தாங்கினர். இளம் போர்வீரர்களை அரசியல்மயப்படுத்தினர். முகாம்களில் இருந்த படைகளை தலைநகர் லிஸ்பனை நோக்கி வழிநடத்திச் சென்றனர். ஒரு சில மணிநேரமே நீடித்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர், சலசார் நாட்டை விட்டு ஓடினான். மிகக் குறைந்த உயிரிழப்புகளுடன், போர்த்துக்கல்லில் சோஷலிச புரட்சி வென்றது. கம்யூனிஸ்ட்களும், சோஷலிஸ்ட்களும் லிஸ்பனில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். புதிய இடதுசாரி அரசாங்கம் ஆப்பிரிக்க காலனிகளுக்கு சுதந்திரம் வழங்க முன்வந்தது. அங்கோலா விடுதலைக்காக போராடிய மூன்று இயக்கங்களும், போர்த்துகேய அரசும், 15 ஜனவரி 1975 அன்று, “அல்கார்வே” என்ற இடத்தில் வைத்து, ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. 11 நவம்பர் 1975 அன்று பூரண சுதந்திரம் வழங்கப்பட்டது.

சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்ட நேரம், MPLA, FNLA, UNITA ஆகிய மூன்றும் சேர்ந்து கூட்டு அரசாங்கம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மூன்று இயக்கங்களும் தாம் மட்டுமே ஆள வேண்டுமென விரும்பினார்கள். போர்த்துக்கேய கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுதலின் பேரில், சோவியத் யூனியன் MPLA க்கு ஆதரவளித்தது. தலைநகர் லுவான்டாவும், எண்ணை வளமுள்ள கரையோர பகுதிகளும் MPLA இன கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அமெரிக்கா FNLA, UNITA வுக்கு ஆதரவளித்து வந்தாலும், ஒரு கட்டத்தில் உதவியை நிறுத்திக் கொண்டது. MPLA சந்தர்ப்பத்தை பயன்படுத்தி FNLA யை ஒழித்துக் கட்டியது. ஆனால் UNITA மட்டும் நிலைத்து நின்றது. எதிர்பாராவிதமாக தென் ஆப்பிரிக்காவின் ஆதரவு கிடைத்தது அதற்கு காரணம்.

அப்போது தென் ஆப்பிரிக்காவை வெள்ளை நிறவெறி அரசாங்கம் ஆட்சி செய்தது. பாசிச தென் ஆப்பிரிக்கா தனது எல்லையில் ஒரு சோவியத் சார்பு கம்யூனிச நாடு வருவதை விரும்பவில்லை. மறுபக்கத்தில் இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை MPLA தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றிய கூட்டத் தொடரில் UNITA வுக்கு தென் ஆப்பிரிக்க உதவி கிடைப்பதை அம்பலப்படுத்தியது. தென் ஆப்பிரிக்காவை சார்ந்து நிற்பது மனித விழுமியங்களுக்கு எதிரானதாக கருதப்பட்ட காலத்தில், அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் MPLA அரசாங்கத்தை அங்கீகரித்ததில் வியப்பில்லை. இன்னொரு பக்கத்தில் UNITA விற்கு சீனாவிடம் இருந்தும் உதவி கிடைத்து வந்தது. மாவோவின் “மூன்றுலகத் தத்துவம்” நடைமுறையில் இருந்த காலம் அது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகியன இரு வேறு உலகங்களாகவும், மிகுதியுள்ள நாடுகள் எல்லாம் மூன்றாவது உலகமாகவும் பார்த்த சித்தாந்தம் பின்னர் காலாவதியாகிப் போனது. அனேகமாக MPLA க்கு சோவியத் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதால், அதற்குப் போட்டியாக சீனா UNITA வுக்கு உதவியது.

அப்போதெல்லாம் MPLA இராணுவம் பலமானதாக இருக்கவில்லை. MPLA அரசின் நிர்க்கதியான நிலைமையை பயன்படுத்தி, தென் ஆப்பிரிக்கா அங்கோலா மீது படையெடுத்தது. அங்கோலாவின் தெற்கு எல்லையில் இருக்கும் நமீபியா, அப்போது நிறவெறி தென் ஆப்பிரிக்காவினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. தென் ஆப்பிரிக்க படையெடுப்பை சமாளிக்க முடியாமல் MPLA இராணுவம் பின்வாங்கிக் கொண்டிருந்தது. தக்க தருணத்தில் பிடல் காஸ்ட்ரோ தலையிட்டு இருக்காவிட்டால், தென் ஆப்பிரிக்கா அங்கோலாவை ஆக்கிரமித்திருக்கும். காஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் அன்றைய சோவியத் அதிபர் குருஷோவுடன் தொடர்பு கொண்டு, ஆயுதங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். MPLA அரசை தூக்கி நிறுத்துவதற்காக 250 கியூபா வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். கியூபா படையினர் சோவியத் ஆயுதங்களை கையாள்வது தொடர்பான பயிற்சி அளிப்பதிலும், இராணுவ ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டனர்.

தென் ஆப்பிரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை கியூபர்கள் விரட்டியடித்த பிறகு அமெரிக்கா விழித்துக் கொண்டது. கியூபா படைகளை வெளியேற்றினால், நமீபியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வழிவகுப்பதாக இராஜதந்திர நகர்வை மேற்கொண்டது. அதே நேரம் அமெரிக்கா UNITA வுக்கு சாம்பியா ஊடாக ஆயுதங்களை வழங்கி வந்தது. பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. MPLA வும், UNITA வும் சமபலத்துடன் போரிட்டு வந்தார்கள். போரில் யாரும் வெல்லமுடியாது என்ற எண்ணம் நிலவியது. MPLA கரையோர பிரதேசங்களில் பலமாக இருந்தது. உள் நாட்டுப் பகுதிகள் பல UNITA வின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த கோர்பசேவ் காலத்தில் கள நிலைமை வேகமாக மாறியது.

1991 மே முதலாம் திகதி, அமெரிக்கா, சோவியத், ஐ.நா., மேற்பார்வையின் கைச்சாத்தான சமாதான உடன்படிக்கை போரை முடிவுக்கு கொண்டுவருமென அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் இறுதியில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன. அனைத்து அந்நியத் துருப்புகளும் வெளியேற வேண்டும். UNITA போராளிகள் தேசிய இராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆயுதங்கள் வாங்குவது நிறுத்தப்பட வேண்டும். பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவற்றை கண்காணிக்க Unavem என்ற ஐ.நா. சமாதானப்படை நிறுத்தப்படும். அதே ஆண்டு சோவியத் யூனியனும் மறைந்து போனதால், அமெரிக்கா உலகின் ஒரேயொரு வல்லரசாக மாறி விட்டிருந்தது. ஒப்பந்தப் படி கியூப படைகளை வெளியேற்றிய MPLA அரசு, அமெரிக்கா பக்கம் சாயத் தொடங்கியது. ஏற்கனவே அங்கோலாவின் எண்ணைக் கிணறுகளை அமெரிக்க கம்பெனிகள் நிர்வகித்து வந்தன. அங்கோலா எண்ணை முழுவதும் இனி தனக்குத்தான் என்ற மகிழ்ச்சியில், அமெரிக்கா MPLA அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. பகைவர்கள் நண்பர்களான இன்னொரு கதை இது.

இதற்கிடையே UNITA இயக்கம் சர்வதேச அரசியல் மாற்றங்களை கவனிக்காமல் தப்புக்கணக்கு போட்டது. UNITA போரை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாகவே கருதியது. தனது பலத்தில் கொண்ட அசாத்திய நம்பிக்கையினால் மட்டுமல்ல, அமெரிக்க செனட் சபையில் இருந்த நண்பர்களையும் கருத்தில் கொண்டு, அமெரிக்க ஆதரவு தொடரும் என்று கருதியது. இதற்கிடையே 1992 ம் ஆண்டு, பொதுத் தேர்தல் இடம்பெற்றது. சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற சர்வசன வாக்குப் பதிவு, எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடந்தேறியதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 220 ஆசனங்களில், MPLA 129 ஆசனங்களை கைப்பற்றியது. எதிர்பார்த்த படி பெரும்பான்மை கிடைக்காத UNITA, இந்தத் தேர்தல் ஒரு மோசடி என்று பிரேரித்தது. தேர்தலை கண்காணித்த ஐ.நா. உயரதிகாரி UNITA வின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்த உயரதிகாரி “வைரக் கடத்தல்காரர்” என்று தூற்றப்பட்டார். உண்மையில் UNITA இயக்கத்தின் முக்கிய வருமானம் வைர விற்பனையால் கிடைத்து வந்தது. போரின் இறுதிக் காலங்கள், வைரச் சுரங்கங்களை யார் கட்டுப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது.

p155374-Angola-Children_of_warபனிப்போர் காலத்தில், அமெரிக்க, சோவியத் எதிர் வல்லரசுகள் தமது பதிலிப் போர்களை மூன்றாம் உலக நாடுகளில் நடத்திக் கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் பதிலிப் போர்கள் தேவையற்றுப் போயின. அங்கோலா அரசாங்கமே அமெரிக்காவின் கைகளுக்குள் வந்த பின்னர், UNITA என்ற போராளிக் குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் அங்கிருக்கவில்லை. ஆயினும் UNITA இந்த உண்மையை உணரவில்லை. அமெரிக்கா அதரவு நிலையானது என்ற இறுமாப்பில் யுத்தத்திற்கு தயார் படுத்தியது. மறு பக்கத்தில், MPLA அரசும் இறுதிப்போருக்கு தயாராகவே இருந்தது. தனக்கு சார்பான பொது மக்களுக்கும் ஆயுதங்களை வழங்கியது. தேர்தல் நடந்த அதே ஆண்டு, அக்டோபர் மாதம் மீண்டும் யுத்தம் வெடித்தது. இரகசியத் திட்டமொன்றின் படி, தலைநகர் லுவான்டாவில் UNITA ஆதரவாளர்கள் அனைவரும் ஒழித்துக் கட்டப்பட்டனர். போரினால் நாடு முழுவதும் சுடுகாடாக்கியது.

அங்கோலாவின் மத்தியில் அமைந்துள்ளது “குய்த்தோ” நகரம். பொதுத் தேர்தலில் UNITA விற்கு ஆதரவாக இந்தப் பகுதியில் பெருமளவு வாக்குகள் கிடைத்தன. பொதுத் தேர்தலில் UNITA விற்கு வாக்களித்த அத்தனை பேரும் ஆதரவாளர்கள் என்று சொல்ல முடியாது. தசாப்த கால யுத்தத்தினால் மக்கள் வெகுவாக கலைத்து போயிருந்தனர். குய்த்தோ போன்ற UNITA கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள், எப்படியாவது UNITA சமாதானமாகப் போனால் நல்லது என்ற எதிர்பார்ப்பில் வாக்களித்துள்ளனர். UNITA மக்களின் அபிலாஷைகளை மதிக்கத் தவறியதும், அதன் தோல்விக்கு ஒரு காரணமாகும். இறுதியாக நடந்த போரில் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த குய்த்தோ நகரை, UNITA போராளிகள் சுற்றி வளைத்தனர். 9 மாதங்களாக நான்கு சதுர மைல் நிலப்பரப்பிற்குள் முப்பதாயிரம் மக்கள் அடைபட்டுக் கிடந்தனர். கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

போர்க் காலத்தில் ஐ.நா. சமாதானப் படையின் கைகள் கட்டப்பட்டிருந்ததை உணர முடிந்தது. ஐ.நா. அதிகாரிகள் கோரிய சர்வதேச உதவி கடைசி வரை கிட்டவில்லை. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், எப்படியாவது போரில் ஒருவர் வெல்லட்டும் என்று வாளாவிருந்து விட்டனர். UNITA சமாதானமாகப் போகாமல் முரண்டு பிடிக்கின்றது என்ற ஏமாற்றத்தால் விளைந்த ஓரவஞ்சனை காரணமாக இருக்கலாம். சர்வதேச நாடுகளின் மௌனம் அரசுக்கு சார்பாக அமைந்தது. UNITA தலைவர் சாவிம்பி, அரச படைகளின் திடீர் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், போர் முடிவுக்கு வந்தது.

அடுத்த ஆறு மாதங்களில் எஞ்சிய போராளிகள் அனைவரும் சரணடைந்தனர். போர் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், UNITA தளபதி ஒருவரும் அவரது ஆதரவாளர்களும், அரசுடன் சேர்ந்து கொண்டார்கள். “புதிய UNITA” என்ற கட்சியை ஸ்தாபித்து, அரச இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்டனர். UNITA வின் வீழ்ச்சிக்கு முன்னாள் தளபதியின் துரோகம் மட்டும் காரணமல்ல. யுத்தம் தொடங்கிய நேரம், UNITA கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கிய சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களை அரசு வெளியேற்றியிருந்தது. UNITA சில தொண்டர்களை வெளியேற விடாமல் பணயக் கைதிகளாக வைத்திருந்தும், நிலைமை அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

அங்கோலா யுத்தம் ஒரு வழியாக முடிவுற்று, சமாதானம் நிலவினாலும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. அங்கோலா ஆப்பிரிக்காவின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்று. பல இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படாததால், விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதைத் தவிர பல்லாயிரம் மக்கள் அங்கவீனர்களாக எஞ்சிய காலத்தை கழிக்க வேண்டிய பரிதாப நிலை. நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் எதோ ஒரு வகையில் போரினால் பாதிக்கப் பட்டுள்ளது. போரினால் ஏற்பட்ட ஆழமான வடுக்கள் காரணமாக, மக்கள் மத்தியில் சமாதானத்திற்கான ஏக்கம் அதிகரித்து வருகின்றது. இன்று அனைவரும் அரசை ஆதரிக்கிறார்கள் என்பது இதன் அர்த்தமல்ல. நீண்ட கால போரின் விளைவாக, அரசிற்கெதிரான எதிர்ப்பு மழுங்கிப் போயுள்ளது. இதனால் வறுமை கூட சகித்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்றாகி விட்டது.

angola_oilfield_service_oil_field_sticker-p217709700012365669qjcl_400இன்று அங்கோலா அமெரிக்காவிற்கு எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. இதன் காரணமாக இரு நாடுகளிற்கும் இடையில் சிறந்த நட்புறவு நிலவுகின்றது. ஒரு காலத்தில் இருந்த சோஷலிசப் பொருளாதாரம் கைவிடப்பட்டு, முதலாளித்துவ மயமாகி விட்டது. MPLA தலைவர்கள் கூட எண்ணை விற்று கிடைத்த லாபத்தில் பணக்காரர்களாக வாழ்கின்றனர். இவையெல்லாம் அமெரிக்காவிற்கு உவப்பான செய்திகள் தான். இருப்பினும் அங்கோலாவின் அசைக்க முடியாத இராணுவ பலமும், காங்கோவில் அதன் சாகசங்களும் அமெரிக்காவின் கண்ணை உறுத்துகின்றது. இன்று உலகம் எவ்வளவோ மாறி விட்டது. மூன்றாம் உலக நாடுகள், மேற்குலகம் விதிக்கும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு அடங்கிக் கிடந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் இன்று அங்கோலா போன்ற சில நாடுகள் தேசிய அரசியல், பொருளாதாரத்தை தாமே தீர்மானிக்க வேண்டுமென விரும்புகின்றன. அங்கோலா நிலையான ஆட்சி, பலமான இராணுவம் போன்ற அரசியல் ஸ்திரத் தன்மையும், பெற்றோலியம், வைரம் போன்ற அதிக வருவாய் ஈட்டித் தரும் பொருளாதார வளங்களையும் ஒருங்கே கொண்டது. இவையெல்லாம் அங்கோலா மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவுமா?

அங்கோலாவில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. ஆரம்பத்தில் MPLA க்கும், UNITA விற்கும் இடையிலான போரில் சில இன வேற்றுமைகள் தொக்கி நின்றன. அசிமிலாடோஸ் என அழைக்கப்பட்ட போர்த்துகேய மயப்பட்ட கறுப்பர்கள், கலப்பினத்தவர்கள், வெள்ளையினத்தவர்கள் எல்லோரும் MPLA இற்கு ஆதரவளித்தனர். அதற்கு மாறாக உள்நாட்டில், பாரம்பரிய ஆப்பிரிக்க சமூக கட்டமைப்பை பேணி வரும் இனங்களின் வாழ்விடங்கள், UNITA வின் ஆதரவுத் தளமாக இருந்தது. போருக்குப் பின்னான காலத்தில், அரசுடன் ஒத்துழைக்கும் முன்னாள் UNITA பிரமுகர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய மக்களின் குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று வரை அரசாங்கம், கண்ணிவெடி இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் பிரச்சினை குறித்து மட்டுமே பேசி வருகின்றது.

இதற்கிடையே கபிண்டா மாகாணத்தின் பிரச்சினை, சர்வதேச கவனத்தைப் பெறாவிட்டாலும், அதுவும் இன்னும் தீர்க்கப்படவில்லை. அங்கோலாவின் பெரு நிலப்பரப்புடன் சேராமல், கொங்கோ எல்லையிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் தனியான மாகாணம் கபிண்டா. சுருக்கமாக அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துடன் ஒப்பிடலாம். அங்கோலாவிற்கு சொந்தமான 3000 சதுர மைல் நிலப்பரப்பு, பிராசவில்-கொங்கோவிற்கும், கின்சாசா கொங்கோவிற்கும் நடுவில் அமைந்துள்ளது. மாகாணம் சிறிதாக இருந்தாலும் அதன் மகாத்மியம் பெரிது. அங்கோலாவின் 70 வீதமான எண்ணை கபிண்டாவில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்றது. அதாவது அங்கோலாவின் பெருமளவு அந்நிய வருமானத்தை கபிண்டா வழங்குகின்றது.

FLEC என்ற ஒரு ஆயுதமேந்திய இயக்கம் கபிண்டாவின் விடுதலைக்காக போராடி வருகின்றது. 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடத்தியும், அங்கோலா அரசுக்கு தலைவலியை தவிர வேறெந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. FLEC இன்று சிறு குழுக்களாக பிரிந்துள்ளதால், அவர்களது போராட்டம் இனியும் வெல்லுமா என்பது சந்தேகமே. கபிண்டாவில் அங்கோலா படையினர் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றங்களை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கபிண்டா விடுதலை இயக்கத்தினருக்கு உள்ள ஒரேயொரு சர்வதேச ஆதரவு, ஐ.நா.சபையின் “பிரதிநிதித்துவப் படுத்தாத நாடுகளின் மன்றம்”(UNPO). எந்த வித அரசியல் அதிகாரமும் இல்லாத இந்த மன்றத்தில், திபெத், மேற்கு சஹாரா, போன்ற சுதந்திர தேசத்திற்காக போராடும் பல அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

FLEC தனது தேசியவாதத்திற்கு இன அடிப்படை இருப்பதாக கூறுகின்றது. காங்கோலிய இனத்தை சேர்ந்த “பகொங்கோ” மக்களின் தாயகமாக கபிண்டாவை வரையறுக்கின்றனர். அங்கோலா அரசு இந்த தேசிய இனக் கருத்தியலை நிராகரிக்கின்றது. வட அங்கோலா மாகாணமான ஸயரிலும் பகொங்கோ இனத்தவர்கள் வாழ்வதை சுட்டிக் காட்டி, கபிண்டர்களின் போராட்டம் வெறும் பொருளாதாரக் காரணத்தை மட்டும் கொண்டுள்ளதாக பதிலளித்து வருகின்றது. கபிண்டா விடுதலை இயக்க தலைவர்களும் பெற்றோலிய வருமானத்தை பங்கிடுவதை தமது பிரதான கோரிக்கையாக முன்வைக்கின்றனர். செல்வத்தை சமமாகப் பங்கிடாவிட்டால் அங்கோலாவின் பிற பகுதிகளும் எதிர்காலத்தில் கொந்தளிக்க வாய்ப்புண்டு.

(தொடரும்)

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொடர்புடைய பதிவுகள்:

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா –
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !
அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!
நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

லைபீரியா : ஐக்கிய அடிமைகளின் குடியரசு

தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com

கலாவதியின் துயரக்கதையும் ராகுல் காந்தியின் வக்கிரப் புத்தியும்

கலாவதிகாங்கிரசின் தேர்தல் வெற்றிக்குப் பின், “இளவரசர்” ராகுல் காந்திக்கு மகுடாபிஷேகம் பண்ணி வைக்கும் வேலையில் முதலாளித்துவப் பத்திரிகைகள் இறங்கியுள்ளன. ” அவர்தான் இந்தியாவின் ஒபாமா” என ராகுலைப் புகழ்ந்து தள்ளுகிறது, தெகல்கா வார இதழ். அவரது மேடைப் பேச்சுக்கும் மட்டுமல்ல, அவரது “ஸ்டைலுக்கும்” ஒரு பொருள் இருப்பதாகக் கண்டுபிடித்து எழுதுகிறது, இந்தியா டுடே இதழ். எதிர்கால இந்தியாவுக்கு ராகுலை விட்டால் வேறு சிறந்த தலைவன் யாரும் கிடையாது என்றொரு கருத்து, பாமர மக்களிடம் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறது.

தன்னை மக்கள் தலைவனாகக் காட்டிக் கொள்ளும் நடிப்பில் ராகுலும் சளைத்தவராகத் தெரியவில்லை. திடீரெனத் தாழ்த்தப்பட்டோர் வீடுகளுக்கு “விஜயம்” செய்து, அப்பாவி மக்களைத் திக்குமுக்காட வைக்கிறார். ஏழை விவசாயிகளைத் தேடிப்போய்ப் பேசுகிறார். அவர்களது துயர வாழ்க்கையை நாடாளுமன்றத்தில் எடுத்துப் பேசித் தன்னை ஏழைப் பங்காளனாகக் காட்டிக் கொள்கிறார். ராகுல், தனது பிறந்த நாளன்று இலண்டனில் குதூகலமாக இருந்தாலும், அவரது அடிப்பொடிகள் இந்தியாவில் அவரது பிறந்த நாளை சமூக நல்லிணக்க நாளாகக் கொண்டாடினர்.

திராவிடக் கட்சிகளின் அரசியலைப் பார்த்தவர்களுக்கு ராகுலின் இந்தக் கவர்ச்சி அரசியல் புதிதாகத் தெரியப் போவதில்லை. பழைய கள்ளு, புதிய மொந்தை; அவ்வளவுதான்!
இதோ, இந்தப் படத்தில் இருக்கும் தாயின் பெயர் கலாவதி. மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயி. விதர்பா பகுதியைப் பிடித்தாட்டி வரும் சாபக்கேடு இவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கலாவதியின் கணவர், தான் பட்ட 90,000 ரூபாய் கடனை அடைக்க வழி தெரியாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

ராகுல் காந்தி கடந்த ஆண்டு திடீரென கலாவதியின் குடிசைக்கு விஜயம் செய்து, அவரது துயரக் கதையைக் கேட்டுவிட்டு, அவருக்கு ஒரு வீடு ஒதுக்கித் தருமாறு அதிகாரிகளிடம் கூறுவதாக “அருள்” பாலித்துவிட்டு “மறைந்து” போனார். இடதுசாரிக் கட்சிகள் மன்மோகன் சிங் அரசிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டபொழுது, கலாவதியின் துயரக் கதையை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எடுத்துப் பேசி, அவர்களை மடக்கினார். பத்திரிகைகள் அனைத்திலும் கலாவதியின் துயரக் கதையும், ராகுல் அவருக்கு அளித்திருந்த வாக்குறுதியும் பிரசுரமாயின.

கலாவதி நம்பிக்கையோடு ஒவ்வொரு அதிகாரியாகத் தேடிப் போய்ப் பார்த்து, ராகுல் காந்தியின் வாக்குறுதியை நிறைவேற்றித் தருமாறு கேட்டார். அந்தோ பரிதாபம்! அவர் ஒவ்வொரு அதிகாரியாலும் பந்தாடப்பட்டார். “ஐயா, ராகுல் காந்தியே, நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை ஒரு சான்றிதழாக எழுதித் தாருங்கள்” என இப்பொழுது கலாவதி ராகுல் காந்திக்குத் தனது கதையை நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்.
கலாவதிக்குத் தான் அளித்த வாக்குறுதி அதிகார வர்க்கத்தால் உதாசீனப்படுத்தப்படும் என்பதை அறியாத அப்பாவி அல்ல ராகுல் காந்தி.  தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ளவே, அந்தப் பாமர ஏழை விவசாயத் தாயின் துயரத்தை ராகுல் காந்தி பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.

கலாவதியின் கதை, ராகுல் காந்தி தாழ்த்தப்பட்டோர் மீதும், ஏழைகளின் மீதும் காட்டும் திடீர் கரிசனம் வக்கிரம் நிறைந்த நாடகம் என்பதை அம்பலப்படுத்திவிட்டது. எனவே, உழைக்கும் மக்களே, ராகுல் காந்தி உங்கள் பகுதிக்கு வரப் போகிறார் எனக் கேள்விப்பட்டால், ஆரத்தித் தட்டிற்குப் பதிலாகத் துடைப்பத்தைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்!

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…