Wednesday, November 29, 2023
முகப்புபணமில்லையா, ஹார்ட் அட்டாக் வந்து சாகட்டும் !
Array

பணமில்லையா, ஹார்ட் அட்டாக் வந்து சாகட்டும் !

-

balance-money-heart

6.5.09 தினமணியில் வந்துள்ள இந்த செய்தி தாரளமயத்தின் அருகதையை வலியுடன் சொல்கிறது. இதய வால்வு கோளாறு உள்ளிட்ட இதயநோய் உள்ளவர்கள் நாள்தோறும் ஒரு வேளை சாப்பிட வேண்டிய உயிர்காக்கும் மாத்திரையின் பெயர் டிகாக்ஸின். இதன் விலை 60 காசு. ஆக மாதம் இருபது ரூபாய் செலவழித்தால் தீடிர் இதயத் தாக்குதலை பெருமளவு தடுக்கமுடியும்.

இவ்வளவு நாளும் வெளிச்சந்தையில் கிடைத்துவந்த இந்த மாத்திரை இப்போது தீடீரெனக் கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் கடை கடையாய் ஏறி இறங்கியும் இந்த மாத்திரைகள் கிடைத்தபாடில்லை. இந்த மாத்திரைக்கு சமமாக வேறு மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டாலும், அவை டிகாக்ஸின் மாத்திரைக்கு ஈடாகாது என இதயநோய் மருத்துவர்கள் சொல்கின்றனராம்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கட்டாயமாக உற்பத்தி செய்ய வேண்டிய மருந்து பட்டியலில் இந்த மருந்தும் உள்ளதால் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் இந்த மாத்திரை கொடுக்கப்படுகிறதாம். ஆனால் தினசரி இந்த மாத்திரைக்காக அரசு மருத்துவமனை சென்று வரிசையில் நின்று வாங்கினால் அதுவே இதயத்தின் இயக்கத்தை நிறுத்திவிடும். 60 காசு மாத்திரைக்காக அரை நாள் முழுவதும் செலவழிக்கும் அளவுக்கு நம் மக்களுக்கு வசதியில்லையே.

ஏற்கனவே இந்த மருந்தை தயாரித்து வந்த கிளாக்ஸோ, மேக்லாய்ஸ் நிறுவனங்கள் இதன் இலாபம் குறைவு என்பதால் உற்பத்தியை நிறுத்தி விட்டன. அறுபது காசில் மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையளர் கழிவு போக சில நயா பைசாக்கள்தான் இலாபமென்பதால் தற்போது டிகாக்ஸின் வெளிச்சந்தைக்கு கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாத்திரையை இப்படி இதயநோயாளிகளைப் பற்றிய கவலையில்லாமல் கொன்றதற்கு காரணம் வேறு விலை கூடிய மாத்திரைகளை அறிமுகப்படுத்துவதற்குத்தான். இனி அறுபது காசு மாத்திரைகள் கிடைக்கவில்லை என்பதால் மருத்துவர்கள் புதிய விலைகூடிய மாத்திரைகளை எழுதுவார்கள்.

ஆக இதய வலி வந்தால் பணமிருக்க வேண்டும். இல்லையேல் சாக வேண்டும். இந்தியாவில் தாராளமயம் வந்து செல்போன் என்ன, பேரங்காடிகள் என்ன, என்று வாய் பிளப்பவர்கள் எவரும் இந்த தனியார்மயமும், தாராளமயமும் பணமிருப்பவன் மட்டுமே வாழ்க்கைய அனுபவிக்க வேண்டும், மற்றவர்கள் சாக வேண்டுமென்ற விதியை மறைமுகமாக இல்ல நேரடியாகவே பிரச்சாரம் செய்வதை புரிந்து கொள்வதில்லை. அப்பல்லோக்களும், 24 மணிநேர மருத்துவமனைகளும் பெருகிவரும் நாட்டில் மக்களின் பணம் வம்படியாக கொள்ளையடிப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த இதயவலி மாத்திரையின் மறைவு. இனி உயிரோடிருக்க வேண்டுமென்றால் இதயத்தை மட்டுமல்ல பொதுசுகாதரத்தையும் பாதுகாப்பதற்கு தனியாரின் இலாபவேட்டைக்கு எதிராகவும் போராடவேண்டும். அப்போது மட்டுமே உயிர் வாழ்வது உத்திரவாதம் செய்யப்படும்.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

  1. பணமில்லையா அட்டாக் வந்து சாகட்டும்…

    6.5.09 தினமணியில் வந்துள்ள இந்த செய்தி தாரளமயத்தின் அருகதையை வலியுடன் சொல்கிறது. இதய வால்வு கோளா…

  2. எந்த நேரத்தில் என்ன பதிவை போட்டிருக்கிறீர்கள்
    கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை உங்கள் பதிவு.

  3. இந்த மருந்து கொள்ளையில் மற்றொரு அங்கம்:

    சரி. விலை அதிகமான மாத்திரை endraalum பரவா இல்லை வாங்கி தொலையலாம் என்றால் இவர்கள் மாத்திரையை ஒன்று இரண்டு மூன்று என்று தேவைக்கு தருவதில்லை. விற்பதில்லை. அவர்களிடம் ஒரு அட்டையாகவே வாங்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கிறார்கள்.

  4. தோழர் அரைடிக்கட்டு ஏன் வருவதில்லை? எங்கே போனார்!!!!

      • பொட்டி தட்டுவதை ஒரு விஞ்ஞானபூர்வமான கலையாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காரணத்தினால் காணாமல் போயிருந்தேன். இறுதியில் ஆணிகள் தீர்ந்ததோ ஆராய்ச்சி முடிந்ததோ மீண்டும் விட்ட இடத்திலே தொடர வந்தாயிற்று… மே ஐ கம் இன்சைட்

  5. ஒரு தெரிந்த தோழர் ஒருவருக்கு இதய ஆபரேசன். அரசு மருத்துவமனையில் செய்யலாம் என்றால்… உடனடியாக முடியாது என்ற நிலை. தனியாரில் செய்யலாம் என்றால், பணம் இல்லை. பிறகு, எல்லா அமைப்பு தோழர்களிடமிருந்தும் உதவி கேட்டார்கள். உதவி செய்தும் ஆபரேசனும் நல்லபடியாக முடிந்துவிட்டது. அப்பாடா! நிம்மதி என்று நினைக்கும் பொழுது, திரும்பவும் நெஞ்சு வலித்தது. காரணம் – அதற்கு பிறகு, அவருக்கு மாதந்திர மாத்திரைக்கே ரூ. 3000 க்கு மேல் தேவைப்பட்டது தான் காரணம். கடந்த 15 ஆண்டுகளில், மருந்தின் விலை தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள். ஒபாமா பதவியேற்பின் பொழுது, அமெரிக்கர்கள் தங்களுடைய உழைப்பில் ஒரு பெரும்பங்கை மருத்துவ இன்சூரன்ஸ்க்காக செலவிட வேண்டியிருக்கிறது என வருந்தினார் (!). அந்த நிலை இப்பொழுதே இந்தியர்களுக்கு வந்துவிட்டது.

  6. இந்த செய்தி முழுமையாக உன்மை என்று சொல்லுவதற்க்கில்லை. நான் சேலத்தில் வேலை செய்யும் தனியார் மருத்துவமனையிலும் சில பெரிய தனியார் மருந்து கடைகளிலும் விசாரித்த போது கேள்விப்பட்டது – டிகாக்ஸின் (Digoxin) மருந்தின் மிக அதிகமாக விற்க்கபடும் லனாக்ஸின் (Lanoxin – GSK – க்லாக்ஸோ ஸ்மித்க்லைன் கம்பனி) மாத்திரைகள் கிடைப்பதில்லை. உள்ளூர் கம்பனிகளில் வேறு பெயர்களில் தயாரிக்கபடும் அதே மருந்து கிடைக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க