ர்மபுரி – சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான விடிவெள்ளியாய் முளைத்த நக்சல்பாரி இயக்கம் தீவிரமாய்ச் செயல்பட்டு வந்த மாவட்டம். இம்மாவட்டத்தின் நாயக்கன் கொட்டாய் தான் அந்த எழுச்சியின் குவிமையமாய் இருந்தது. நக்சல்பாரிகளின் தலைமையில் திரண்டெழுந்த உழைக்கும் மக்கள் சாதித் தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை அடக்கி ஒடுக்கியிருந்தனர்.

1980களுக்குப் பிறகு ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளால் நக்சல்பாரி இயக்கங்கள் பின்னடைவுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சாதி அமைப்புகள் திட்டமிட்ட ரீதியில் வளர்த்து விடப்பட்டன. பல்வேறு சாதி அமைப்புகள் தமது சாதி மக்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் செல்வாக்கை வளர்க்க முயற்சித்தன. எனினும் சாதிக் கூட்டணியில் துவங்கி, தமிழ் தேசியத்தில் வளர்ந்து, ஓட்டரசியலில் கிடைத்த பதவிகளில் சீரழிந்து, மக்களிடம் செல்வாக்கு இழக்கத் துவங்கி, தற்போது முற்றிலுமாய் அம்பலப்பட்டு நிற்கின்றன.

இந்நிலையில் தான் கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று நாயக்கன் கொட்டாய் பகுதியிலிருக்கும் மூன்று கிராமங்களின் தலித் குடியிருப்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்னும் தாழ்த்தப்பட்ட இளைஞருக்கும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதல் திருமணம்தான் இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்று சொல்லப்பட்டாலும், ஆதிக்க சாதிவெறி பிடித்த வன்னியர் சங்கத்தின் திட்டமிடல் தான் முக்கியக் காரணம்.

தர்மபுரி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசியல் அரங்கில் சாதி மீண்டும் முன்னணிக்கு வந்து விட்டதைப் போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராமதாசின் முயற்சியால் 42 ஆதிக்க சாதிச் சங்கங்கள் ஒன்றிணைந்தன. ‘காதல் நாடகத் திருமணங்களை’ எதிர்ப்பதாகவும், “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்” தவறாகப் பயன்படுத்தப்படுவதால் அதைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கைகளை நிறைவேற்றினர். தலித் அல்லாதோர் இயக்கம் ஒன்றும் துவங்கப்பட்டது.

சாதி நல்லிணக்கம் பேசும் திராவிடக் கட்சிகளோ இந்தப் பச்சையான ஆதிக்கசாதி வெறித்தனத்தை எதிர்கொள்ளத் திராணியற்று இருக்கின்றனர். ராமதாசின் குறிப்பான சாதித் திமிரைக் கண்டிப்பதற்கு பதிலாய் பொதுவான சாதி சமத்துவம் பேசுவதாக மழுப்பி வருகினறனர். தலித் இயக்கங்களோ ஒட்டு மொத்தமாக சரணாகதி நிலையை எடுத்துள்ளன. அம்பேத்கரியத்தின் அடிப்படையில் தலித்திய அணி திரட்சியை முன்வைத்த திருமாவளவனோ, பா.ம.க.வின் சாதித் திமிரை எதிர்கொள்ள வக்கற்று, திராவிட இயக்கங்கள்,போலி கம்யூனிஸ்டுகள் பின்னால் நின்று ஆதரவு தேடுகிறார்.

ராமதாசின் வன்னிய சாதித் திமிரை புரட்சிகர இயக்கங்கள் தவிர்த்து வேறு எவரும் களத்தில் நேருக்கு நேராய் சந்திக்கத் தயங்கி வந்த நிலையில், அவர் உரிமை கொணடாடும் அந்த ‘2 கோடி’ வன்னியர்களில் சிலரையாவது நேருக்கு நேர் சந்தித்து விடுவது என்றும், அவர்களிடம் ராமதாஸ் முன்வைக்கும் சாதிவெறி அரசியலுக்கும் எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை நேரடியாகக் கண்டறிவது என்றும் தீர்மானித்தோம்.

இந்தக் கள ஆய்வுக்காக இரண்டு வெவ்வேறு பகுதிகளைத் தேர்ந்தெடுத்தோம். சென்னையின் மத்தியில் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஒனறையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வன்னிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு கிராமங்களையும்தேர்ந்தெடுத்தோம்.

கள ஆய்வுக்கென தருமபுரி சம்பவம், ராமதாசு, காடுவெட்டி குரு மற்றும் கொங்கு வெளாள கவுண்டர் சங்கத் தலைவர் மணிகண்டன் ஆகியோரது பேச்சுக்கள், சாதிச் சங்கங்களின் செயல்பாடுகள், தந்தை பெரியார் குறித்த கருத்து, சாதி மறுப்புத் திருமணங்களுக்கு மக்களின் ஆதரவு எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் விதமாகவும் கேள்விகளை அமைத்துக் கொண்டோம்.

ஆய்வின் முடிவுகளைத் தனியே பெட்டிகளில் அளித்துள்ளோம். சாராம்சமாகச் சொல்ல வேண்டுமென்றால், பா.ம.கவும் சரி, வன்னியர் சங்கமும் சரி; அல்லது பிற சாதி அமைப்புகளும் சரி – தங்களுக்கு இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பலம் என்பது அசிங்கமாய்த் துருத்திக் கொண்டிருக்கும் ஊளைச் தசை தான். இவர்களுக்கு மக்களிடையே – அதிலும் குறிப்பாக வன்னியர் சாதியைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களிடையே எள்ளளவும் மரியாதை இல்லை என்பதை இந்த கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முதல் சுற்று ஆய்வை சென்னையில் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஒன்றில் நடத்தினோம். ராமதாஸ், காடுவெட்டி குரு மற்றும் இரா.மணிகண்டன் ஆகியோர் காதலுக்கு எதிராகவும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகவும் பேசியதன் விவரங்களை விவரிக்கத் துவங்கிய மாத்திரத்திலேயே மலத்தை மிதித்து விட்டதைப் போல் அசூசையான முகபாவனைகளையே காட்டினர். கேள்வியை முடிக்கும் முன்னதாகவே “இவனுங்க எல்லாம் சரியான காட்டுமிராண்டிங்க சார்”என்று அர்ச்சனையைத் துவங்கி விட்டனர். சென்னை மொழியில் சொல்வதானால், ராமதாசையும் காடுவெட்டியையும் ‘கழுவிக் கழுவி ஊற்றினர்’. இவர்களில் ஆகப் பெரும்பான்மையான மக்கள் தர்மபுரி தாக்குதல் சம்பவத்தை மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்தனர்.

நகர முடிவுகள்

வன்னியர் சாதியைச் சேர்ந்த வயதானவர் ஒருவர், “நானே வன்னியன் தான் சார். நான் சொல்றேன். இந்த நாயிங்களை நடு ரோட்டுல ஓட விட்டு சுட்டுக் கொல்லணும் சார்” என்று கோபத்துடன் தன்னுடைய சாதிவெறியர்களைச் சாடினார். காதல் என்பதும், திருமணம் என்பதும் தனிப்பட்ட நபர்களின் விருப்பங்கள் என்பதே மக்களின் கருத்தாக இருந்தது. தனிப்பட்ட இருவரின் பிரச்சினைக்காக 300 குடிசைகளை எரித்துள்ளதைக் கேட்டு மக்கள் ஆத்திரப்பட்டனர்; வன்னியர் சங்கத்தைக் கடுமையான வார்த்தைகளில் சாடினர்.

“யாரைக் காதலிக்கலாம், யாரைக் காதலிக்க கூடாதுன்னு சொல்ல இவன்லாம் யாரு சார்? இவன்ட்ட எவன் சார் கேட்டான்? இவன்ட்ட கேட்டா சார் காதல் வருது? அதுல்லாம் காத்து மாதிரி சார்; தடுக்க முடியாது… இவன் சுத்த லூசுப் பய சார். ஒரே சாதின்றதுக்காக குருவோட பொண்ணை கூலி வேலை செய்யிற வன்னியனுக்கு கட்டித் தருவானா சார்? ஒவ்வோரு தரமும் கருணாநிதி-ஜெயா கால்ல விழுவுறானுவோ… அப்பல்லாம் சாதி சாதி பெருமை எங்க போச்சா சார் இவனுக்கு? த்தா… இவனுங்கள தூக்கி உள்ள போட்னும் சார். உள்ளயே கெடந்து சாதிய வளத்துக்கங்கடான்னு அப்டியே விட்ரணும் சார்..” இது வன்னியர் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் கருத்து.

மக்களின் ஆத்திரமும், கோபாவேசமும் கவிதையாய்ப் பொங்கியது. சாதாரண உழைக்கும் மக்கள் சாதிச் சங்கங்களே தேவையில்லை என்கிற கருத்தை முன்வைத்தனர். சாதிச் சங்கம் தேவை என்று சொன்னவர்கள் கொஞ்சம் நடுத்தர வர்க்கத்தினராகவும், நடுத்தர வயதினராகவும் இருந்தனர். இவர்களும் மிகச் சிறிய சதவீதத்தினரே. அப்படி வேண்டும் என்று தெரிவித்தவர்களும் ‘கண்ணாலத்துக்கு பொண்ணு பார்த்து தருவான் சார்’ என்று தரகர் வேலை பார்க்கவே சாதிச் சங்கங்கள் தேவையென்றனர். இதே பிரிவைச் சேர்ந்த ஒரு சிலர் சாதி மறுப்புத் திருமணம் தங்களுக்கு உவப்பானதாக இல்லையென்றாலும், இனிமேல் அதையெல்லாம் தடுக்க முடியாது என்பதையும் சேர்த்தே சொன்னார்கள்.

பொதுவான இந்தக் கருத்துக்களுக்கு ஒரு சில விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்தன. இவர்கள் காடுவெட்டியையும், ராமதாசையும் ஆதரித்தனர்; தருமபுரி குடிசை எரிப்பு சம்பவம் சரிதான் என்றனர். ஆனால், ஆச்சரியப்படும் விதத்தில் அவர்கள் யாரும் வன்னியர்கள் இல்லை. தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் – அதிலும் குறிப்பாக தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள்.

சென்னைக் கள ஆய்வில் இன்னும் சில சுவாரசியமான விஷயங்களும் உண்டு.

– அநேகமான குடும்பங்களின் உறவு வட்டத்தில் காதல் திருமணங்கள் நடந்திருக்கின்றன. பெரும்பாலான இளைஞர்கள் ஒன்று வேறு சாதிப் பெண்ணைக் காதலிப்பவர்களாவோ அல்லது சாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்தவர்களாகவோ தான் இருந்தனர்.

– திருமண வயதில் பெண்கள் இருக்கும் வீடுகளிலும் கூட சாதி மறுப்பு, காதல் திருமணங்களுக்கு ஆதரவு இருந்தது. இது போன்ற இடங்களில், கூடுதலாக “உங்கள் வீட்டில், உங்கள் பெண்ணே வேறு சாதிப் பையனைத் திருமணம் செய்து கொண்டாலும் இப்படித் தான் பேசுவீர்களா?” என்றும் கேட்டுப் பார்த்தோம். அப்போதும் அதே பதில் தான் வந்தது. அதில் கணிசமானோர், “பையனின் ஸ்டேடஸ் மட்டும் பார்ப்போம் சார். சாதி பிரச்சினையில்லை” என்று வர்க்கத்தை முன்னிறுத்தினர்.

– வர்க்கம், சாதி, பாலினம், வயது என்று எந்த வேறுபாடுகளும் இன்றி ராமதாசை சகலரும் கரித்துக் கொட்டினர். பாட்டாளி மக்கள் கட்சியை சாதிக் கட்சி என்று தூற்றினர். அரசியல் ரீதியாக விவரம் தெரிந்த சில வன்னியர்கள் ராமதாசின் ஆரம்பகால சவடால்களையும், தற்போதைய பல்டிகளையும் ஒப்பிட்டுப் பேசினர்.

– ஆச்சரியப்படும் விதமாக பலரும் திருமாவளவனை தலித் தலைவராக அறிந்திருக்கவில்லை; தமிழ் தேசிய அரசியல்வாதியாகப் பார்க்கின்றனர். ‘ஈழத் தமிழர்களுக்காக ஏதோ செய்யும்’ தலைவர் என்று இவர்கள் திருமாவைப் பற்றிச் சொல்கிறார்கள். தேவர் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே திருமாவைப் பற்றி அவ்வாறு குறிப்பிட்டதோடு, தனக்கு மிகவும் பிடித்தமான தலைவர் இவர் என்றும் தெரிவித்தார்.

கடுமையான பிற்போக்குக் கருத்துக்கள் வரக் கூடும் என்றே நாங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்திருந்தோம். அதிலும், வன்னியர்களில் சிலராவது ராமதாசை கேள்விக்கிடமின்றி ஆதரிக்கக் கூடும் என்று நினைத்தோம். தாக்குதல் நிலையில் எவராவது பேசினால் அதை எப்படிக் கையாள்வது என்று விரிவாகத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கெல்லாம் மக்கள் எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.

காலை ஏழு மணிக்குத் துவங்கி நாள் முழுவதும் அலைந்து திரிந்ததில் எமது தோழர்கள் உடல் அளவில் சோர்வடைந்திருந்தாலும், தங்கள் அனுபவங்களை விவரித்த போது அவர்களிடம் எல்லையில்லாத உற்சாகம் கரை புரண்டோடியது. ஆதிக்க சாதி வெறிக்கு எதிர்காலம் இல்லை என்பதை நேரடியாகக் கண்டதில் அவர்கள் அளவிலாத மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

“காலம் மாறிப் போச்சுங்க; இனிமேட்டு ஒன்னியும் செய்ய முடியாது”

அடுத்து சென்னை நகரத்தின் வெளியே சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிறு நகரம் ஒன்றை அடுத்துள்ள கிராமங்களைத் தேர்ந்தெடுத்தோம். இது கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டிய பகுதி. இப்பகுதியின் மக்கள் தொகையில் வன்னியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் சரிபாதியாக உள்ளனர். இவ்விரு பிரிவினரிடையே சாதிக்கலப்பு நிகழ சாத்தியங்கள் அதிகமுள்ள பகுதி. மட்டுமின்றி, விடுதலைச் சிறுத்தை கட்சியிலும், பா.ம.க.விலும் உள்ளூர் மட்டத் தலைவர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் அவ்வப்போது உரசிக் கொள்ளும் வாய்ப்பு உள்ள பகுதி இது.

இந்தப் பகுதியிலிருந்து கிடைத்த ஆய்வு முடிவுகள் சென்னை முடிவுகளில் இருந்து பெருமளவுக்கு மாறுபடவில்லை.

ஊரக விபரங்கள்

காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் கணிசமான பேர் இல்லை என்றாலும், பெரும்பான்மையோர் சாதி மறுப்புத் திருமணஙகளை ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே உள்ளனர்.

46 சதவீதம் பேர் சாதி மறுப்புத் திருமணங்களை நேரடியாக வரவேற்றுப் பேசினார்கள். மேலும் 25 சதவீதம் பேர் ‘காலம் மாறி விட்டது; இதற்கு மேல் காதலைத் தடுப்பதோ, சாதி மறுப்புத் திருமணங்களை நிறுத்துவதோ சாத்தியமில்லை’ என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். சுமார் 29 சதவீதம் பேர் மட்டுமே காதல் திருமணங்களை எதிர்த்தனர்.

ஒட்டு மொத்தமாக சுமார் 82 சதவீதம் பேர் தர்மபுரி சம்பவத்தை மிகக் கடுமையாக கண்டித்தனர். சுமார் 27 சதவீதம் பேர் சாதிச் சங்கங்கள் தேவை என்கிற கருத்தைக் கொண்டிருந்தாலும் சுமார் 94 சதவீதம் பேர் சாதிச் சங்கங்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு போராட வருவதில்லை என்றே தெரிவித்தனர்.

இளைஞர்கள் பெரும்பாலும் காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணங்களை வரவேற்றனர்.

இந்தப் பகுதியில் முன்பு வன்னியர் சங்கத்தின் கிளைத் தலைவராக பொறுப்பு வகித்த இளைஞர் ஒருவரே சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ள தகவலைக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தோம். ராமதாஸ் குறிப்பிடுவது போல் நாடகக் காதல் என்றெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை என்று மறுத்தவர், காடுவெட்டி குருவின் பேச்சை கடுமையாக விமர்சித்தார். அவரிடம் ராமதாசின் பேச்சுகள் பற்றி குறிப்பிட்டுக் கேட்டோம், “அவர் சொல்வது போல் ஜீன்ஸ், டீ சர்ட் போட்டு மயக்குவது உண்மையென்றால், வன்னிய பெண்கள் அந்தளவுக்கு இளிச்சவாயர்கள் என்று ராமதாஸ் சொல்கிறாரா?” என்று கிண்டலாகக் கேட்டார்.

அவரிடம் பேசி விட்டு சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு புது வீட்டில் நுழைந்தோம். இன்னும் மர வேலைகள் முடியவில்லை; முகப்பிலேயே தச்சு தொழிலாளி ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டின் உரிமையாளர் தனது மகனுக்கு ரூ 50 லட்சம் கொடுத்து மருத்துவப் படிப்புக்கான சீட்டு வாங்கியதாகவும், அடுத்து மேற்படிப்பு படிக்க இன்னும் ஒரு கோடி ரூபாய் திரட்டி இருப்பதாகவும் நாங்கள் கேட்காமலேயே பெருமையாக சொல்லிக் கொண்டார். தச்சுத் தொழிலாளி இயல்பாக ஜனநாயகப் பூர்வமாகப் பேசினார். தருமபுரி சம்பவத்தைக் கண்டித்ததோடு, சாதி மறுப்புத் திருமணங்களையும் ஆதரித்தார். ஆனால் வீட்டு உரிமையாளரோ, அசப்பில் காடுவெட்டிக் குருவைப் போன்றே பேசினார். “எங்க தலைவராவது சொல்றதோடு விட்டாரு… நானா இருந்தா வெட்டி எறிந்திருப்பேன்” என்று ஆத்திரப்பட்டார்.

சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்ப்பதோடு, வன்னியர் சங்க ஆதரவோடு பேசுபவர்கள் அநேகமாக இவரைப் போல ரியல் எஸ்டேட் மூலம் புதுப் பணக்காரர்களாக ஆனவர்களாகவோ, பெரும் நிலச்சுவான்தார்களாகவோ இருக்கிறார்கள். கூடவே இவர்களை அண்டிப் பிழைக்கும் முறையான வேலைகளுக்குச் செல்லாத உதிரிகளும், லும்பன்களும் சாதி அராஜக அரசியலை ஆதரிக்கிறார்கள். இந்த இரண்டு வகைப்பட்டவர்களைத் தவிர்த்து பெரும்பான்மையான உழைக்கும் மக்களிடம் சாதிக்கு எதிரான கருத்துக்களும், சாதிச் சங்கங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற கருத்துக்களையுமே காண முடிந்தது.

ஓரளவுக்கு நடுத்தர வயதுடையோர், தாங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் காதலைத் தடுப்பதோ, சாதிக் கலப்பைத் தடுப்பதோ சாத்தியமில்லை என்பதை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறார்கள்.

நாங்கள் சந்தித்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் மூத்த மகன் சமீபத்தில் தான் சாதி மறுப்புத் திருமணம் புரிந்துள்ளார். ஆறு மாதப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது சேர்த்துக் கொண்டதாகத் தெரிவித்தார். “என்ன இருந்தாலும் கொள்ளி வைக்கப் போறவன் அவன் தானே தம்பி? சாதியா பெத்த புள்ளையான்னு பாத்தா புள்ள தான் தம்பி பெரிசா தோணிச்சி” என்றார். அவரிடம், “இனிமேல் நீங்கள் காதல் திருமணங்கள் சரி என்று ஒப்புக் கொள்வீர்களா?” என்று கேட்டோம். “இல்லை” என்றே பதிலளித்தார்.

மேற்கொண்டு பேசிய போது, பிள்ளைகள் வேலைகளுக்குச் செல்லும் இடங்களில் பல்வேறு சாதிக்காரர்களும் வருவதாகவும், அங்கே பிறருடன் பழக்கம் ஏற்படுவதைத் தடுப்பது சாத்தியமில்லை என்றும், ஆனாலும் பழைய விழுமியங்களைப் பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்தே ஒழுங்காக சொல்லிக் கொடுத்து வளர்த்தால் காதலில் இருந்து அவர்களைக் காப்பாற்றி விடலாம் என்றும் தெரிவித்தார். அப்படியும் ஒருவேளை காதலித்து வேறு சாதிப் பெண்ணையோ, பையனையோ திருமணம் செய்து விட்டால் அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார். விடைபெறும் சமயத்தில், “சின்னஞ் சிறுசுக தம்பி! இனிமேட்டு எல்லாம் இவங்க காலம் தானே; எங்க காலமெல்லாம் எப்பவோ போயாச்சு தம்பி” என்று சொல்லி வழியனுப்பினார்.

தொகுப்பாக, பெரும்பான்மை உழைக்கும் மக்களிடையே சாதி வேறுபாடுகள் மங்கி வருவதை நேரடியாகக் கண்டுணர முடிந்தது. இன்றைய நிலையில் ராமதாசுக்கு வன்னியர்களிடையே குறிப்பிடத் தகுந்த ஆதரவு இல்லை என்பதும், இருக்கும் சொற்ப ஆதரவும் அவருக்கு தேர்தல் டெபாசிட்டைக் கூட தக்கவைத்துக் கொள்ள உதவாது என்பதும் இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டும் உண்மை. எனில், இவர்கள் வெறும் காமெடியர்கள் மட்டும் தானா? சிரித்து விட்டுக் கலைந்து விடலாமா?

ராமதாஸ்-காடுவெட்டி குரு : சமூகத்தில் பரவும் புற்றுநோய் செல்கள்..!

உலகமயமாக்கலின் விளைவாய் நகரமயமாதல் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது. ஒரு பக்கம் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம் பெயரச் செய்யும் பொருளாதாரப் போக்குகள் பல்வேறு சமூகங்களை மேலும் மேலும் நெருங்கி வரச் செய்துள்ளது. இதன் விளைவாய், நகரங்களில் உழைக்கும் வர்க்கத்தினரிடையே சாதிவாரியான பிரிவினைகள் மங்கி வருவதைக் கண்கூடாய்ப் பார்க்க முடிகிறது. ஒரே தரமான வாழ்க்கை வாழும் மக்கள் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே தங்களை இனம் பிரித்துப் பார்க்கிறார்கள்.

நகரங்களைப் பொறுத்த வரை புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பலன்களை ருசித்தவர்களாக ஐ.டி சேவைத் துறையைச் சேர்ந்தவர்களும், புதிய ரக உயர்நடுத்தர வர்க்கத்தினரும் இருக்கிறார்கள் என்றால், கிராமங்களில் அன்றைய நிலச்சுவான்தார்களும், இன்றைய ரியல் எஸ்டேட் பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ள இவர்களே சுயசாதி அபிமானம் கொண்டவர்களாக உள்ளனர். ‘உயர்’ சாதி நடுத்தர வர்க்கத்து இளைஞன் முகநூலில் தனது சாதி அபிமானத்தை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.

ஊரகப் பகுதிகளில் தரகு வேலைகளால் உருவெடுத்த திடீர் பணக்காரர்களுக்கும், பழைய நிலச்சுவான்தார்களுக்கும் கட்டப்பஞ்சாயத்து வேலைகளுக்காகவும், தொழில் போட்டியைச் சமாளிக்கவும் சாதிச் சங்கங்களின் ரவுடித்தனம் தேவைப்படுகிறது. பதிலுக்கு சாதிச் சங்கங்களை வாழவைக்கும் புரவலர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். வேலையற்ற உதிரிகளையும், லும்பன்களையும் தங்களது அடியாட்களாகச் சேர்த்துக் கொள்கின்றனர். மொத்த சமூகத்தில் இவர்கள் சிறுபான்மை என்றாலும் ஆபத்தானவர்கள்.

முதலில் பொய்யான கதைகளை இட்டுக் கட்டுவது, பின் அதையொட்டி அவதூறுகளைப் பரப்புவது, தொடர்ந்து சிறு சிறு கலவரங்களைத் தூண்டுவது, அதனடிப்படையில் சமூகத்தைப் பிளவுபடுத்துவது – அதன் மூலம் அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்வது என்கிற இந்துத்துவ பாணியைத் தற்போது ஆதிக்க சாதிச் சங்கங்களும், அவர்களின் அரசியல் அமைப்புகளும் கையிலெடுத்துள்ளன. இதை மிகக் கச்சிதமாக திட்டமிட்ட ரீதியில் வன்னியர் சங்கம் செய்து வருகிறது.

முதலில் மாமல்லபுரம் கூட்டத்தில் காடுவெட்டியின் பேச்சு, பின் வன்னியர்கள் வாழும் பகுதிகளுக்கு தொடர்ச்சியாக சென்று பிரச்சாரம், தொடர்ந்து தர்மபுரி கலவரம், ஸ்ரீமுஷ்ணத்தில் தலித் இளைஞர் படுகொலை – இப்போது ராமதாஸ் தலைமையில் 51 அமைப்புகளைக் கொண்ட கூட்டணி. வேகமாக முளைவிடத் துவங்கியுள்ள நச்சுக் காளான்களை இந்த மட்டத்திலேயே ஒழித்துக்கட்டத் தவறினால், நாளைய தமிழகம் சாதித் தாலிபான்களின் கைகளில் விழுவதைத் தவிர்க்கவே முடியாது.

வன்னியர் சாதிச் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதிக் கூட்டணியை எதிர்த்து நிற்கும் அரசியல் சித்தாந்த பலமோ, தார்மீக பலமோ தலித் அமைப்புகளிடம் இல்லை என்பதைத் தான் திருமாவின் சரணாகதிப் பேச்சுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆதிக்க சாதிவெறி என்பது அதே சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கே எதிரானது என்பதை உணர்த்தி, வர்க்க ரீதியில் அம்மக்களை அணி திரட்டுவதால் மட்டுமே இந்தக் கூட்டணியை வீழ்த்த முடியும். அதற்கு கடந்த காலத்தில் தர்மபுரியே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

– வினவு செய்தியாளர் குழு
__________________________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
______________________________________________________________________________________________

76 மறுமொழிகள்

 1. ஆதாரம் எதுவுமில்லாமல், ஓரிரு ஸ்கிரீன்ஷாட்கள் மட்டும் எப்படி ஒரு ஆய்வின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்த முடியும்? நம்பிக்கைவரவில்லை, இந்த ஆய்வின் முடிவுகளை நீங்கள் கூறியிருக்கும் தரவுகளை வைத்து பார்க்கும்போது!

  • கரெக்டா சொன்னிங்க இது மாதிரி ஆய்வெல்லாம் குப்பைக் கூடையில் பொடவேன்டியவை. பொழப்பத்தவங்க வேலை.

 2. //- ஆச்சரியப்படும் விதமாக பலரும் திருமாவளவனை தலித் தலைவராக அறிந்திருக்கவில்லை; தமிழ் தேசிய அரசியல்வாதியாகப் பார்க்கின்றனர். ‘ஈழத் தமிழர்களுக்காக ஏதோ செய்யும்’ தலைவர் என்று இவர்கள் திருமாவைப் பற்றிச் சொல்கிறார்கள். தேவர் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே திருமாவைப் பற்றி அவ்வாறு குறிப்பிட்டதோடு, தனக்கு மிகவும் பிடித்தமான தலைவர் இவர் என்றும் தெரிவித்தார்.//

  யாரு இங்க இருக்குரப்போ வீரமாப் பேசீட்டு ராஜபக்ஸேட்டப் போயி பம்மி சிர்ச்சுப்போட்டோ எடுத்துட்டு வந்தாரே அந்தத்திருமாவா..

  • ஆஹா …. ராமதாசை சாதி வெறிபிடித்தவர் என்றும் அதே நேரத்தில் திருமாவளவனை தமிழின போராளியாக சித்தரிக்கும் உங்களின் இரட்டை நாக்கை என்னெவென்று சொல்வது …. திருமாவளவனும் சாதிக் கட்சி தானே நடத்துகிறார் …

  • சரி உன்க அய்யா யேன் ஈழத் தமிழர்களுக்காக பேசவே மாட்ரரு பயமா ஜாதி வெரியரே.?!!!

   • அட உங்க திருமா மாதிரி ஈழம் சொல்லிட்டு பொய் பேச சொல்லறியா

 3. //பொதுவான இந்தக் கருத்துக்களுக்கு ஒரு சில விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்தன. இவர்கள் காடுவெட்டியையும், ராமதாசையும் ஆதரித்தனர்; தருமபுரி குடிசை எரிப்பு சம்பவம் சரிதான் என்றனர். ஆனால், ஆச்சரியப்படும் விதத்தில் அவர்கள் யாரும் வன்னியர்கள் இல்லை. தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் – அதிலும் குறிப்பாக தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள்.//

  அதான சும்மாவாச்சும் யாரையாவது வம்பிலிக்கனுமே…

  • அப்புறம் வன்னியருக்கு , தேவருக்கும் சிண்டு முடிஞ்சி விடலனா எப்பிடி ..

 4. இதே அளவு திறந்தமனதோடு பார்ப்பனர் தொடர்பான ஏதேனும் ஒரு பிரச்னையில் சென்னை மற்றும் சென்னை புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் பார்ப்பனரிடையே கருத்துக்கணிப்பு நடத்தும் எண்ணம் உண்டா?

 5. Actually the alliance between the PMK and VCK was there for such a long time though this alliance in fact was not really supported by the majority Vanniyar community and because of this alliance Vanniyar community in PMK were slowly leaving the PMK and Dr.Ramadass. Now it seems very clearly that all the Vanniyars again cumming to PMK under Dr.Ramadass and those Vanniyars in other political parties also indirectly supporting Dr.Ramadass, especially Vanniyars in DMK which is a close ally of VCK are strongly supporting Dr.Ramadas indirectly.Further, all other cast outfits are joining together and discussing often under Dr.Ramadass is not good for major political parties like DMK and ADMK in which sizable number of Vanniyars are there and they are openly supporting Dr.Ramadass and abusing Thirumavalvan is not good for cast free political parties which governed the Tamilnadu so far.So,instead of watching these developments silently and helplessly, the major political parties both DMK and ADMK must talk to Dr.Ramadass and settle the matter; otherwise no major political party can form government in Taminadu as today

 6. இதெல்லாம் சும்மா புரூடா வேலை…. இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்.. சும்மா ஒரு துண்டு சீட்ட காட்டிட்டா சரியாப்போச்சா?? உண்மையாகவே இப்படி ஒரு சர்வே வினவு பண்ணியிருந்தா வீடியோ ஆதாரம் வெளியிட முடியுமா? சத்தியமா முடியாது… கேட்டா சம்மந்த பட்டோர்கள் பாதிப்பட கூடாது என்று சொல்லுவானுங்க…. கடைசி வரைக்கும் வினவு சும்மா படம் மட்டும்மே காட்டும்… ஆனா இவங்க கட்டுரை எல்லாம் படா தமாசா இருக்குது….

 7. ஆளே இல்லாத கடையில எதுக்கு டீ ஆத்துரீங்க?

  அதரவே இல்லாது போன மருத்துவர் பற்றி எதுக்கு ‘கள’ ஆய்வு நடத்துரீங்க?

  • பா.ம.க இல்லாம வினவும் இல்லை. பா.ம.க இல்லாம தமிழ்நாடு அரசியலும் இல்லை. சமீப காலமா ராமதாஸ் அய்யாவுக்கு ஆதரவு கூடி வருவதை கண்கூடா பாக்கும் போது இப்படி களஆய்வு கதை வினவுக்கு தேவை படுது. சும்மா விடுங்க பாசு!பாவம் வினவு.

   • உங்கள் ஆய்வும் முடிவும் முன்னுக்கு பின் முரணா இருக்கு. ராமதாசின் பேச்சுக்களை காட்டுமிராண்டித்தனம் என்று பெரும்பான்மையான மக்கள் (அதாவது 80 சதவிகிதத்துக்கும் மேல) சொல்றாங்க-நு ஆய்வு சொல்லுது. ஆனா முடிவிலே இதை சொல்லறீங்க

    *****
    “இப்போது ராமதாஸ் தலைமையில் 51 அமைப்புகளைக் கொண்ட கூட்டணி. வேகமாக முளைவிடத் துவங்கியுள்ள நச்சுக் காளான்களை இந்த மட்டத்திலேயே ஒழித்துக்கட்டத் தவறினால், நாளைய தமிழகம் சாதித் தாலிபான்களின் கைகளில் விழுவதைத் தவிர்க்கவே முடியாது.”
    ****

    உங்களுக்கே இது குழப்பமா இல்லையா ?. ஆதரவே இல்லாத மருத்துவர் ஐய-வை பாத்து இவ்வளோ பயப்படறது வேடிக்கை.

    • மூளை இல்லாதவன்-நு எல்லாம் சொல்ல கூடாது, முடியாது. அவரவர் கருத்துக்களை பரப்ப எல்லாருக்கும் உரிமை உண்டு. இணைய தளம் ஆரம்பித்து அதில் சமூகத்தில் நடப்பவை பற்றி பதிவுகள் செய்து விவாதிப்பது மூளை இல்லாதவன் செய்யறது இல்ல. ஒரு சார்பாக பேசுவதும் , அதாவது ராமதாஸ், பா.ம.க மற்றும் வன்னியர்களுக்கு எதிராக பேசுவதும் எழுதுவதும் தப்பு இல்லை. ஆனா சொல்லறது நம்பற மாதிரி இருக்கணும்.

     ஒரு வகையில் ஊரே ரவுண்டு கட்டி மருத்துவர் ஐயாவை ஆதாரமே இல்லாமல் திட்டுவது, ஏளனம் செய்வது எல்லாம் ஒரு வகையில் நல்லதே. அதனால் வன்னியர் மத்தியில் குறிப்பாக ஜாதி உணர்வு அற்ற வன்னியர் மத்தியில் கண்டிப்பாக மருத்துவர் ஐயாவை ஆதரிக்க வழி செய்யும்.

   • பா .ம .க வின் பொய் முகம் தமிழர் மத்தியில் அம்பலபடுத்த பட்டு விட்டது ..வினவுவின் இந்த கட்டுரை போன்று நிறைய கட்டுரைகள் தொடர்ந்து வர வேண்டும் . வஜ்பையோடு,அத்வானியோடு அரசியல் செய்த ஒரு தலைவர் ,இப்படி ஒரு கொள்ளை
    கூட்ட தலைவனாக மாறி ,ஒடுக்க பட்ட மக்கள் உழைத்து சேர்த்த சொத்துகளை கொள்ளை
    அடித்து அதில் தனது குடும்பம் தின்று கொள்ளுக்க …அப்பாவி ஏழை வன்னியன் விடிதத்தும்
    இருட்டியதும் தெரியாமல் பாடுபட்டு உழைத்து சேர்த்த அற்ப பணத்தையும் பிடுங்கி
    வன்னியர் கல்வி கோயில் கட்டிக்கிறேன் ,மயிரை புடுங்கிறேன் என்று கூறி
    பொண்டாட்டி பேரில் கல்லுரி கட்டி கொண்டார் …மனைவி பேரில் வழக்கு வந்த பொழுது
    அவரை வெளி நாட்டிக்கு அனுப்பினர் …தர்மபுரி கலவரத்தில் மாட்டிகொண்ட அப்பாவி
    வன்னியர்களுக்கு நன்றாக வாய் நீரைய அல்வா கொடுத்தார் … எங்கே வன்னியர் விழிப்படைந்து விடுவார்களோ ,தனது டௌசர் கழண்டு விடுமோ என்று அஞ்சி
    தொடர்ந்து தலித் மக்களின் மிது வன்முறையை தொடர்கிறார் …சதி வெறியை தனக்கு
    முகமுடியை பயன் படுத்த முயல்கிறார் …..இவளவு நடந்தும் வருங்காலம் நம்பிக்கை அளிக்கிறது ..தொடர்ந்து கலப்பு திருமணங்கள் நடக்கின்றன ….திருப்பூர்.கோவை ,கரூர் ,சேலம் , ஈரோடு போன்ற நகரங்களில் காதல் நாடக !திருமணங்கள் தொடர்ந்து சீராக
    நடந்து வருகிறது ..தர்மபுரி சம்பவத்திற்கு பிறகு அது கூடவும் இல்லை ,குறையவும் இல்லை ….தர்மபுரி,கடலூர் வில்லுபுரம் பற்றிய என்னக்கு தெரியாது ….இருபவர்கள் பதிவிடலாம் ….

  • அருள் அடிப்பொடி அவர்களே,

   நாலு பேர (நாப்பது பேருன்னே வச்சுக்குவோம்) சேத்துக்கிட்டு தடியும், அருவாளுமா சுத்துற கூட்டத்தைப் பாத்து சாதாரண ஜனம் ‘நமக்கெதுக்கு வம்பு’ன்னு ஒதுங்கத்தான் செய்யும்.

   ஜனங்ககிட்ட பேசினாத்தான், அவங்க வயித்துப்பாட்டுக்கு எப்படி தலையால தண்ணீ குடிச்சு உழைக்கிறாங்கன்னு தெரியும். கட்ட பஞ்சாயத்து, இன்னோவா காரு, கூட ஆமாம் போட சில வெத்து ஆளுங்கன்னு ஊருக்கு ஊரு வச்சுக்கிட்டு சுத்துறவருக்கு மக்கள் மத்தியில என்ன மவுசு இருக்குன்னு இப்பத்தான் தெரியுது.

   • இவரு பெரிய கப்பல் வியாபாரி உலச்சி கிளிசிட்ட்ராறு , தெரிதல் வரும்போது தெரியும் நீங்க கொஞ்சம் சாத்துங்க

  • என்னை படையசியாய் உணர வைத்த வினாவுக்கு நன்றி.

   பெண்ணை பெத்தவனெல்லாம் இப்ப ராமதாஸ் அய்யவதான் குலதெய்வமா பாக்குறான்.

   அய்யா வாழ்க … குரு வாழ்க … சின்னய்யா வாழ்க

 8. அதாவது நம்ம ஆளுங்க பேண்ட் சட்டைய போட்டுக்கிட்டு ஒரு பேப்பர் பேனாவோடு போய் நின்னு எந்த கேள்வி கேட்டாலும் ரொம்ப முற்போக்கான பதிலையே சொல்லுவார்கள் இதை நம்ம்புவது வேஸ்ட்டு வினவு.சாதி வெறி கொலைகள் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறுகின்றன.

 9. பா மா கா குறித்த கள ஆய்வு தகவல்கள் எந்த அளவுக்கு சரி என்பதை விட கருத்து உருவாக்கம் என்ற அளவில் வரவேற்கிறேன்

 10. வினவு ஆசிரியரே கதை அருமையாக உள்ளது! ஆனால் படம் எடுக்கற அளவுக்கு இல்ல. இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர் பாக்குறேன். நீங்க என்னதான் ராமதாஸ் அய்யாவை விமர்சனம் செய்தாலும் ஊற சுத்தர எங்களுக்கும் தெரியும் அவருக்கு இருக்கற மவுசு. நீங்க தினமும் வரிஞ்சு கட்டி கட்டுரை எழுதற அப்பவே புரியுது அவருக்கு எந்த அளவு அனைத்து சமூக ஆதரவு இருக்குன்னு. பா.ம.க இல்லாம வினவும் இல்லை. பா.ம.க இல்லாம தமிழ்நாடு அரசியலும் இல்லை. சமீப காலமா ராமதாஸ் அய்யாவுக்கு ஆதரவு கூடி வருவதை கண்கூடா பாக்கற அப்போ, இப்படி அநியாயமா குற்றம் சொள்ளரீகளே வினவு ஆசிரியரே. அத்தோட உங்க திருமா பற்றிய கருத்து பிரமாதம். வாழ்க வினவு! வாழ்க தலித் பத்திரிக்கை! ஹய்யோ !! ஹய்யோ !! அனுபவம் உள்ள செய்தியளர விட்டு களஆய்வு நடத்துங்க. சும்மா சும்மா கிச்சுகிச்சு பண்ணாதீங்க. தலித் மக்களை சகோதரான எதுக்க்கலாம்னு பார்த்த, சம்பந்தியா மட்டுமே வருவேன்னு ஆட்டம் காட்டுன எப்பூடி? சும்மா இருந்த ராமதாஸ் அய்யாவை சொறிஞ்சா இப்படித்தான் நடக்கும். அதான் களத்துல இறங்கி பாடம் சொல்லறாங்க. தேவையா இது? பாவம் வினவு.

  • //தலித் மக்களை சகோதரான எதுக்க்கலாம்னு பார்த்த, சம்பந்தியா மட்டுமே வருவேன்னு ஆட்டம் காட்டுன எப்பூடி?//

   ஓசியில பொழைக்கிற பா.ம.க ‘தொண்டர்கள்’ மட்டுந்தான் இப்படி சொல்றாங்க, சாதாரண உழைக்கும் வன்னிய சாதி ஜனங்க அப்படி நெனைக்கலைன்னுதான் இந்த சர்வேல தெரியுது.

   • //சாதாரண உழைக்கும் வன்னிய சாதி ஜனங்க //

    இத சொல்லி சொல்லி இவனுங்க நடுநிலைமையா காடிகிராணுகலாம்.

    கிராமத்தானுங்க உங்கள எந்த நிலையில வச்சி இருக்கனுங்க தெரியுமில்ல ? சொன்னா வறுத்த படுவீங்க போங்கடா டேய்.

  • ராமதாஸ் அய்யாவை சொறிஞ்சா இப்படித்தான் நடக்கும்///////////அவரை ஐயான்னு சொல்லறதுக்கு ஒரே ஒரு தகுதியை சொல்லுங்கள்.

   • அவர் படித்த மருத்துவர். அய்யா என சொல்வதில் தவறு இல்லை. மனைவி, இனைவி, துனைவி என முன்று பெண்களை ஆளும் டாக்டர் கலைஞரை ஐயா என அழைக்கும் போது மருத்துவர் ஐயாவை மரியாதை உடன் அழைப்பது நன்றாகவே 100% பொருந்தும்.

    • “படித்த மருத்துவர், வெளி உலகுக்கு ஒரே ஒரு மனைவியுடன் வாழ்பவர்” என்பது தான் அய்யா என்று அழைப்பதற்கான வரையறை என்றால், அதே தகுதியுடைய மற்றவர்களையெல்லாம் அய்யா என்று அழைப்பீர்களா? அல்லது கொய்யா என்பீர்களா? கொய்யாலே என்பீர்களா? (ஆனால் உங்கள் அய்யா மாதிரி வெட்கமில்லாமல் மாற்றி மாற்றி கூட்டணி வைத்தவரையும், புரட்டி புரட்டி வர்ணித்து பேசியவரையும், வர்ணித்தவரையே வரைமுறை இல்லாமல் திட்டி பேசியவரையும் வேறு எங்கும் பார்க்க முடியாது.)
     ஒரு மலையாள படத்தில் இன்னசென்ட் என்ற நடிகர், போலிஸ்காரரைப் பார்த்து குரங்கு என்பார். உடனே போலிஸ்காரன், “என்ன போலிஸைப் போய் குரங்கு என்கிறாயா?”, என்று அடிக்க லத்தியை ஓங்குவார். உடனே இன்னசென்ட், “அப்ப நான் இனிமே குரங்கை போலிஸ்காரர் என்று கூப்பிடலாமா?”, என்று கேட்பார். போலிஸ்காரனும் சரி என்பான்.
     இங்கும் அப்படித்தான் வைத்துக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது.

 11. இதே மாதிரி நானும் தயார் செய்து ஒரு சர்வே முடிவை கொடுக்க முடியும். வேண்டுமா? கொடுக்கப்பட்டுள்ளது எவ்வள்ளவு பெரிய ஏமாற்றுவேலை. ஒரிஜினல் online சர்வேயை தினமணியில் பார்த்து தெளிவுபடுத்திக்கொள்ளவும்.

 12. வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது ப்ரௌசிங் சென்டரிலோ இணையத்தை அணுகும் வினவின் படித்த பின்னூட்டகாரர்களே இதை நம்பாமல் புருடா என்கிறார்கள்.காஞ்சிபுரம் மாவட்ட கிராமத்தில் உள்ள வன்னியர்களா சாதியை தூக்கி எறிந்துவிட்டார்கள்?

 13. பா.ம.க வுக்கு வன்னியர்களின் ஆதரவே குறைந்ததால் தான், மரம்வெட்டி சாதி வெறியை கடைசி ஆயுதமாக எடுத்திருக்கு.

  • இப்ப வன்னிய இனம் மட்டுமல்லாமல், அனைத்து சமூக மக்களின் ஆதரவை பா.ம.க பெற்றுள்ளது. ஏனெனில் அனைத்து சமூகங்களும் இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

   • அன்னிய முதலீடு /விலைவாசி உயர்வு /காவிரில தண்ணி வராதது/முல்லை பெரியாறு/தாமிரபரணி ஆற்றை கொககொலாவுக்கு குடுத்தது/கூடங்குளம் /….. போன்ற பல பிரச்சனைகள் நாட்டுல இருக்கு

    இதில் எதற்குமே இயக்கம் எடுக்க மாட்டாரம்.

    ஆனால் தமிழ் நாடே இவர் பின்னாடி நிக்குதாம்

    • செய்திதாள்கள் படிப்பது உண்டா? அனைத்து பிரச்சனைகளுக்கும் எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்.

     • மாவட்டம் மாவட்டமாக போய் எதை மிக மிக முக்கிய பிரச்சனையாக கருதி பேசுகிரார்

      நான் கூட ஒரு கூட்டத்துக்கு வந்த்துள்ளேன்

      நாடக காதல் தான் இன்று நாட்டையே உலுக்கும் பிரச்சனை என்று சோற்பொழிவு ஆற்றிகொண்டு இருந்த்தார்

      • ஒரே கூட்டத்தை பார்த்து எப்படி முடிவு செய்வீர்கள். மேற்கு தமிழகத்தில் இயற்கை எரிவாயு குழாய் விவசாய நிலத்தில் பதிப்பதை கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார். வேறு எவரும் இது வரை வாயே திறக்கவில்லை.

       • பா.ம.க தலைவர் ராமதாஸ்.. என்ன சொன்னார்? 10 நாட்களில் ரிலையன்ஸ் பிரஷ்-ஐ மூடா விட்டால் நடக்கிறதே வேற என்று 2007 மார்ச் 20 யில் அறிக்கை விட்டார். இன்று ரிலையன்ஸ் செல்பவர்களின் காலைத் தொட்டு போகாதீர்கள் என்று கதறுகிறார்.

        இவர்கள் தான் மத்தியில் அங்கம் வகித்தார்கள் . மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி கலந்து கொண்ட கூட்டத்தில் தான் இந்த மக்கள் விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்று மக்களை பார்த்து போகாதீர்கள் என்று காலில் விழ வேண்டும்? அமைச்சரவைக் கூட்டத்திலேயே மன்மோகன் சிங், மற்றும் ப.சிதம்பரத்தின் காலில் விழுந்து ரிலையன்ஸ் பிரஷ்-ஐத் தடுத்து இருக்கலாமே?
        அல்லது காலில் இருக்கும் செருப்பாக நினைத்து மந்திரி பதவியை தூக்கி வீசி எறிந்து இருக்கலாமே.அதை எல்லாம் விட்டு விட்டு மக்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறாராம்.

        சரி அதை அப்புறம் விவாதிக்கலாம்
        இன்னும் சில கூட்டத்துக்கு சென்றுள்ளேன்

        அதில் ஒன்றில்
        ”வன்னியன் வாழவேண்டும் என்றால் வன்னியன் ஆழ வேண்டும் ”
        இது நாட்டின் அடுத்த முக்க்க்கியமான பிரச்சனை

        • உங்கள் முதல் கேள்வி.// போன்ற பல பிரச்சனைகள் நாட்டுல இருக்கு இதில் எதற்குமே இயக்கம் எடுக்க மாட்டாரம்.//

         அதற்கு பதில்:மேற்கு தமிழகத்தில் இயற்கை எரிவாயு குழாய் விவசாய நிலத்தில் பதிப்பதை கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார். வேறு எவரும் இது வரை வாயே திறக்கவில்லை.

         இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். பிறகு RELAIANCE பற்றி பேசலாம். ராமதாஸ் அனைத்து பிரச்சனைகளுக்கும் எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்.

         • இயக்கம் என்பதிற்கு அர்த்தம் குரல் குடுப்பது என்பது அல்ல

          //மேற்கு தமிழகத்தில் இயற்கை எரிவாயு குழாய் விவசாய நிலத்தில் பதிப்பதை///
          அதை முக்கிய பிரச்சனையாக கருதி தமிழகம் முழுவதுமாக பொது கூட்டம் ,ஆர்ப்பாட்டம் ,நீதிமன்றத்தில் வழக்காக ,என அனைத்தையும் செய்வதை .

          குறைந்த பச்சம் நீதிமன்றத்தில் வழக்காவது //மேற்கு தமிழகத்தில் இயற்கை எரிவாயு குழாய் விவசாய நிலத்தில் பதிப்பதை../// என்பதிற்கு போட்டது உண்டா.

          • குறைந்த பட்சம் குரல் கொடுத்தால். நடுநிலைவாதிகள் யோக்கியவாங்கள் இதை பற்றி வாயே திறக்கவில்லை.

           மதுபான கடைகளை பூட்டு போடும் போராட்டம் நடத்தினார்.

       • தூங்கரவனை எழுப்பலாம் தூங்கர மாதிரிநடிக்கிரவனை எழுப்ப முடியாது. ஐயாவுக்கு இனி யாரும்நற்சான்று கொடுக்க வேன்டியதில்லை.அவரை வன்னியர்கள் முழுமையாக நம்புகிறோம்.

   • நான் என் காதால் கேட்டது ….

    பொண்ண பெத்தவன் ஒருத்தன் , அய்யாவ அவன் குல தெய்வம்னான். அவன் வன்னியன் இல்லை வேறு சமூகம்.

   • ராமதாசு தான் தன் சமுதாய பெண்களை கூலிங் கிளாஸிற்கும், ஜீன்ஸ் பேண்டுக்கும் மயங்குபவர்கள் என கேவலப்ப்டுத்தினார் என்றால், நீங்கள் மற்ற சமூகங்களையும் அதே போல் சொல்கிறீர்களே? (எப்போதும் எச்சில் துப்பும் போது மல்லாக்கப் படுத்துக் கொண்டு துப்பக் கூடாது)

  • அடே அஸ்வின் வன்னியர்கல் ஆதரவு குறைந்து விட்டதா இப்ப தான் டா அவருக்கு பலம் அதிகரித்திவிட்டது

 14. தன் சாதி இன்னொரு சாதியை விட மேல் சாதி என நம்பும் ஒரு சாதிவெறியன் தன் சாதியை விட மேல்சாதியும் உள்ளது என்பதை அறிய அவன் நிறைய படிக்கவேண்டுமா?சுத்தி பார்த்தாலே போதும் ,ஆனால் சாதி படித்தவர்கள் கண்ணையே மறைக்கும் பொது பாமரன் என்ன செய்வான்? குடிசையை கொளுத்தத்தான் போவான்….இங்கே பின்னூட்டம் இடும் பலரின் பதட்டத்தை பார்த்தாலே பயமாய் இருக்கிறது…என்னது எங்க ஆளே ஜாதி எல்லாம் இல்லன்றானா?அய்யய்யோ இருக்காது இல்லவே இல்லை சரியாய் ஆய்வு செய்யுங்கள்….அடச்சே ……தலித்கள் தங்களை உலகிலேயே உயர்ந்த சாதியாய் அறிவித்துக்கொள்ளும் போது தான் சாதி முற்றிலும் ஒழியும்.

 15. சாதிகள் இல்லையடி பாப்பா ! அதை புத்தியில் ஏத்திக்கொடா அடிமைத் தமிழா !

 16. ஊருக்குள்ள தான் வுண்டு தன் வேலை வுண்டுன்னு இருந்தவனை காதல், சமத்துவம், தீண்டாமை, வன்கொடுமை, சாரயக்கடை அப்படின்னு எல்லா மக்களையும் அடித்துக்கொள்ள வாய்த்ததில் தொலைக்காட்சிக்கும், வூடகங்களுக்கும் நிறைய பங்கு இருக்கிறது. முன்னாடியும் இருந்தது இப்போது ஊடகம் வளர்துபோச்சு அதனால எல்லாருக்கும் தெரியுது அப்படீன்னு திருப்பி சொல்லாதீங்க ப்ளீஸ். நீங்க தலித் என்பவர்கள் முன்னேற வேண்டும் என நினைத்தால் முதலில் ஜாதி சார்ந்த கட்டுரைகளை பதிவு செய்ய வேண்டாம். யாருமே ஜாதி பற்றி உயர்வகவோ, தாழ்வாகவோ பேசுவது இல்லை. அவனவன் அப்பன் சொன்னதை தொடர்கிறான். வினவு ஒவ்வொரு முறை மருத்துவர் அய்யா மற்றும் இன்னும் பிற ஜாதி சார்ந்த விமர்சனம் பதிவு செய்யும் போது தேவையில்லாத ஜாதி உணர்வை நீங்களே அனைவரின் மனதிலும் விதைக்கிறீர்கள். ஜாதி அழிய பொரளாதார ஏற்ற தாழ்வுகள் களையப்பட வேண்டும். வினவு குரல் கொடுக்க வேண்டியது பொரளாதார ஏற்ற தாழ்வுக்காக இருக்கவேண்டுமேயன்றி ஜாதிக்காக அல்ல. பொருளாதார சமநிலை இல்லாதவனுக்கு காதல் எதுக்கு? நான் பாடுபட்டதை என் மகள் காதலிக்கிறாள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு சோம்பேறியை மருமகனாக ஏற்க விரும்ப வில்லை.

  • Mr. Pandiarasu’s statement is quit logic.

   வினவு ஒவ்வொரு முறை மருத்துவர் அய்யா மற்றும் இன்னும் பிற ஜாதி சார்ந்த விமர்சனம் பதிவு செய்யும் போது தேவையில்லாத ஜாதி உணர்வை நீங்களே அனைவரின் மனதிலும் விதைக்கிறீர்கள்
   The above statement is 100% true.

   பொருளாதார சமநிலை இல்லாதவனுக்கு காதல் எதுக்கு? நான் பாடுபட்டதை என் மகள் காதலிக்கிறாள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு சோம்பேறியை மருமகனாக ஏற்க விரும்ப வில்லை.
   This tendency will be there for all fathers including in Dhalith family also.

   ஜாதி அழிய பொரளாதார ஏற்ற தாழ்வுகள் களையப்பட வேண்டும். வினவு குரல் கொடுக்க வேண்டியது பொரளாதார ஏற்ற தாழ்வுக்காக இருக்கவேண்டுமேயன்றி ஜாதிக்காக அல்ல.
   Very good advice to Venavu. Here you should include religion also.

 17. என்னான் _____…சும்மா சாதி வெறி சாதி வெறிந்னு கூவறிங்க? எல்லாம் பயலும் தன்னொட சாதியை சொல்லி தான் படிகிரான்… தன்னொட சாதில் தான் கல்யானம் பன்ட்ரான்… அய்யா வோட செல்வாக்கு என்ன என்பதை வடமாவட்டங்களில் உன்மையாக பார்தவர்கலுக்கு தெரியும். அப்படியே அய்யா சாதி பேசினாலும் உஙகளுக்கு என்___ பயம் வருது ? பெரும்பான்மை சாதி என்பதால் தானே… அய்யா அவர்கலுக்கு எதிரான கருத்து உருவாக்கம் செய்து வன்னிய மக்கலை உன்கலை போன்டர பத்திரிக்கைகள் எமாத்திய காலம் எல்லாம் மலையெரி போச்சி… இனிமேல் உன்க பருப்பு வேகாது.

 18. திருமாமாவே கட்சிய களச்சிட்டு திமுகவுக்கு ஜால்றா அடிக்கப் போயிட்டாரு. இதுல அவரு தமிழர் தலைவராம்.
  நாதாரித்தனத்துலயும் ஒரு நாசூக்கு வேணாமா???

 19. தேர்தல்ல இராமதாசும் சாதி கட்சிகளும் ஒரு அணியாகவும் திருமாமா உள்ளிட்ட தலித் கட்சிகள் ஒரு அணியாகவும் தனித்தனியே நிறகட்டும். யார் டெப்பாசிட் போதுனு பாப்போம். பொய் மூட்டைய அவிழ்க்கிற வினவ பத்தி எங்களுக்கு தெரியும்.

  • unmai. நானெல்லாம் … படையாச்சி ன்னு டைப் பண்ணினதோ , எழுதி பாத்ததோ கூட கிடையாது . என் பேரா அத யூஸ் பண்ண ஒரே காரணம் , இந்த நாடக காதல் விவகாரம். அய்யா ராமதாசோட சமூக பொறுப்பு.

 20. நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை மருத்துவர் அய்யாவைப் பற்றி தவறாக உங்களாள் என்னென்ன எழுத முடியுமோ எழுதுங்கள்.அப்போது தான் வன்னியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மருத்துவர் அய்யா தலைமையில் வெற்றி பெறுவார்கள்.கடைசியில் எங்களைஒன்று சேர்த்து வெற்றி பெற வைத்த உங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.நன்றி(மருத்துவரை பற்றி தவறாக எழுதுவதை நிறுத்த வேண்டாம்)

 21. நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை மருத்துவர் அய்யாவைப் பற்றி தவறாக உங்களாள் என்னென்ன எழுத முடியுமோ எழுதுங்கள்.அப்போது தான் வன்னியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மருத்துவர் அய்யா தலைமையில் வெற்றி பெறுவார்கள்.கடைசியில் எங்களைஒன்று சேர்த்து வெற்றி பெற வைத்த உங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.நன்றி(மருத்துவரை பற்றி தவறாக எழுதுவதை நிறுத்த வேண்டாம்)

  • பா.ம.க தலைவர் ராமதாஸ்.. என்ன சொன்னார்? 10 நாட்களில் ரிலையன்ஸ் பிரஷ்-ஐ மூடா விட்டால் நடக்கிறதே வேற என்று 2007 மார்ச் 20 யில் அறிக்கை விட்டார். இன்று ரிலையன்ஸ் செல்பவர்களின் காலைத் தொட்டு போகாதீர்கள் என்று கதறுகிறார்.

   இவர்கள் தான் மத்தியில் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி கலந்து கொண்ட கூட்டத்தில் தான் இந்த மக்கள் விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்று மக்களை பார்த்து போகாதீர்கள் என்று காலில் விழ வேண்டும்? அமைச்சரவைக் கூட்டத்திலேயே மன்மோகன் சிங், மற்றும் ப.சிதம்பரத்தின் காலில் விழுந்து ரிலையன்ஸ் பிரஷ்-ஐத் தடுத்து இருக்கலாமே?

 22. வினவு தரும் முடிவுகல் மகிழ்ச்சியலிக்கிரது நம்பமுடியவில்லை

 23. “பா.ம.க வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு !”

  தப்பு

  “பா.ம.க வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கயவர்களின் ஆய்வு ?”

 24. அடவ பாவிங்களா நல்ல பன்னிரிக்கிங்க இந்த மாதிரி எங்களுக்கும் பண்ண தெரியும் வினவு நீங்க தலித் என்றால் openaa சொல்லிடுங்க

 25. நான் வன்னியன் வினவு பதிவுகளை பார்க்கும் போது எனக்கு எங்கள் சாதி மேல் அதிக பற்று தானாகே வந்துவிடுகிறது நன்றி வினவு ……!!!!….

 26. ராமதாஸ் மட்டுமே சாதி அரசியல்நடத்துவதாக வினவு கூறுவது வேடிக்கையாக உள்ளது.வன்னியர்
  சங்கம் ஆரம்பித்து போராடி இட ஒதுக்கீட்டை பெற்ற பின் அரசியல் கட்சியை தொடங்கினார் ராமதாஸ்.
  புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல ராமதாஸை பார்த்து விடுதலை சிறுத்தைகள்
  என்ற ஜாதி அமைப்பை ஏற்படுத்திப் பின் ஜாதி அர்சியலைநடுத்துபவர்தானே இந்த திருமாவளவன்.

  ஓட்டுக்காக மற்ற கட்சிகள் தலித்துகளுக்காக ஆதரவாக பேசுவதெல்லாம் வெளி வேஷம்.திருமாவளவன்
  கட்சி ஆரம்பிப்பதற்கு முன் மற்ற கட்சிகள் தலித்துகளின் மீது பரிவுடன் இருந்தனர்.ஆனால்
  இவர்கள் தீண்டாமை வன் கொடுமை சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் லீலை
  களால் மற்ற அரசியல் கட்சிகளும் மக்களூம் வெறுத்துப்போயியுள்ளனர் என்பதை வினவு புரிந்து
  கொள்ள வேண்டும்.

 27. ஈழத் தமிழர்களுக்காக பேசுபவர்கல் எல்லாம் மோடியை ஆதரிப்பது விந்தையாக உல்லது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க