சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை என்று அழைக்கப்படும் அந்த அழிவுச்சாலை யாருக்கானது என்ற பொதுமக்கள் கருத்தை வினவு தளத்தில் வெளியிட்டிருந்தோம்

தொழில்ரீதியாக தமிழக சாலைகளில் பயணிக்கும் சரக்குந்து ஓட்டுநர்களிடம் எட்டு வழிச் சாலையின் அவசியம் என்ன என வினவினோம். அவர்களோ அச்சாலையை 360 டிகிரி கோணத்தில் பிரிந்து மேய்ந்து விட்டார்கள்.

சாமுவேல், சென்னை – லோடு டிரைவர்

எட்டு வழிச் சாலை

எட்டு வழிச் சாலையால என்ன யூஸ்..? பி.எம்.டபுள்யூ. கார்ல்ல போவாங்க, ஏ.சி ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறவங்க எட்டுவழி சாலை வேணும்னு சொல்றாங்க. அவங்களுக்கு விவசாயியோட வலி தெரியாது. நாம அவங்களுக்கு வலிய திருப்பிக்கொடுக்கனும்.

குமார், மதுரை – டிரைவர்

ஸ்டெர்லைட்ட மூடறதுக்கு 13 பேர் உயிரக் கொடுத்தாங்க, அது இங்கும் நடக்கும். அப்பதான் முடிவு கிடைக்கும். 2 மடங்கு இல்ல 3 மடங்கு ஈடா, நிலத்துக்கு பணம் கொடுத்தாலும் அவங்க வேணாம்ன்னு சொல்றாங்க. அப்புறம் இவன் யாரு, அவங்க நிலத்துல கல்ல நடுறதுக்கு?

சக்தி, சேலம் – டிரைவர்

அவங்க தென்னமரத்த மிஷின வைச்சி நோண்டி அங்க கல்ல நடறானுங்க! அவனுங்க இருக்கிற எடத்தையும் நாம இதே மாதிரி நோண்டனும்!

யுவராஜ், சென்னை – கொரியர் ஊழியர்

பி.ஜே.பி. பொன்னாரு, ஸ்டெர்லைட் வேண்டாம்னு அப்பவே போராடுனாரு! அப்ப, அங்க தொழிற்சாலை எங்களுக்கு வேணும்னு சொன்னாங்க! ஆனா, இப்ப மூட சொன்னா எப்படி? இப்ப, சேலத்துக்கு எட்டு வழி சாலை வேணாம்னா முடியுமா? மெட்ராசுல குடிசைய இடிச்சா, மாத்து இடம் தாராங்க இல்ல. அது மாதிரி கேட்டு வாங்கிக்க. அதுதான் வழி. சாலை வேணும், ஆமாம். (பா.ஜ.க ஆதரவாளர்)

கார்த்திக், சென்னை – கார்கோ டிரைவர்

இருக்கிற ரோடு போதும். புதுசா எந்த ரோடும் தேவையில்ல. இந்த ஆட்சியில கல்லு நடுவான், அடுத்த ஆட்சியில அது வேணாம்னு சொல்லுவான். ஒவ்வொரு ஆட்சியிலும் அதான் நடக்குது. பலி ஆவறது நாம, வசதியா வாழறது அவங்க.

சுரேஷ், திருவண்ணாமலை – பாரத் கேஸ் டிரைவர்

நிலத்தை பிடுங்கினு மூனு,நாலு லட்சம் கொடுத்தா அது எவ்வளோ நாளைக்கு வந்திரும்? குடும்பத்துல ஒரு பையன் படிப்பு செலவே ஒரு லட்சத்த தாண்டுது. இவன் செத்தானா அவன் பேரன் பிள்ளை வரைக்கும் அந்த நிலம் சோறு போடும். பணம் நாளைக்கே செலவாயிடும். பிறகு, நடுத்தெருவுலதான் நிக்கணும்.

மோகன், செஞ்சி – லோடு வேன் ஓனர்

எட்டு வழிச் சாலைஉனக்கு 50 கிலோ மீட்டர் தூரம் குறையணும்ன்னா எங்க வீட்ட, நிலத்த புடுங்குவியா? 500 கி.மீ. சுத்திகினு போ, அது உன் பாடு. நாங்க விடமாட்டோம். அரசாங்கம்னா யாரு? நாமதான். ஊருக்கு ஒரு காரியம்ன்னா நாம எல்லோரும் சேர்ந்து செய்யலியா? அது மாதிரிதான் இதுவும். கெட்ட வார்த்தையா… வாய்ல வருது. நீ.. என் நிலத்த வெட்டி ரோடு போட்டா, நான் உன்னை ________. என்ன வீடியோக்கூட எடு. நான் பயப்படமாட்டேன். விவசாயிங்கள எளக்காரமா பாக்கிறானுங்க, என்னா…மயித்துக்கு நான் அவனுங்களுக்கு மரியாதை கொடுக்கணும்?

அஜித், விழுப்புரம் – லோடு டிரைவர்

அரசாங்கம் சொன்னதுபடி என்னைக்காவது நடந்திருக்கிதா? காவிரி தண்ணி வாங்கிக் கொடுக்காம விவசாயிகள சாவடிச்சானுங்க. இப்ப, நிலத்தையும் புடுங்குறானுங்க.. அவனுங்களுக்குதான் வளர்ச்சி, விவசாயிக்கு சுடுகாடுதான்.

சூரியா, உதயபிரகாஷ், தரணிதாஸ், கிண்டி – ஐ.டி.ஐ மாணவர்கள்

விவசாயிக்கு எதுக்குங்க எட்டு வழி சாலை? எனக்கு பாதை போதும், ஒத்தயடி பாதையில இருக்கிறேன். நிலத்த எங்கிட்ட வுட்டுடுன்றான் விவசாயி. அடுத்து இருக்க ஊருக்கே அவன் வருஷத்துக்கு ஒருவாட்டிதான் போவான்.

வெக்கம் கெட்டவனுங்க, இந்த லச்சனத்தில எட்டு வழி சாலை போடுரானுங்களா! நம்ம கைய வெட்டி நமக்கே சூப்பு கொடுப்பானுங்க…

சூரியபிரகாஷ், நாகராஜ், கிண்டி – ஐ.டி.ஐ மாணவர்கள்

எட்டு வழிச் சாலைஎங்களுக்கு அதப்பத்தி நெறைய தெரியல. டிவியில பாத்தா அவங்க ரொம்ப பாவமா நிலத்த விடுங்கன்னு அழுவுறாங்க.. காரு வச்சி இருக்கிறவங்களுக்குதான் பெரிய… ரோடு, வழவழனு இருக்கனும். அவங்களுக்கு எதுக்கு?

கார்த்திக், சேலம்

விவசாயிகிட்ட இருந்து நிலத்த எடுத்துகின பிறகு எப்படி வளர்ச்சி வரும்? 10,000 கோடிய வச்சி, விவசாயத்துக்கு நீராதாரத்துக்கு வழி செய்யட்டும். வளர்ச்சின்னா என்ன? எற்கனவே இருக்கிற நிலமைய மேம்படுத்தறதுதானே! விவசாயிகிட்ட இருக்கிறதையும் அழிக்கிறானுங்க. இத வளர்ச்சின்றாங்க.

சதிஷ், கமல் – கேப் டிரைவர்கள்

எட்டு வழிச் சாலைஅவசரமா, இப்ப யாருக்கு வழி வேணும்? எங்களுக்கு நிலம்தான் வேணும்னு சொன்னா விட வேண்டியதுதானே ஏன் இவனுங்களுக்கு இவ்ளோ ஆத்திரம் வருது. அதுவே காட்டிக்கொடுக்குதே ஆதாயம் யாருக்குன்னு? விவசாயி கஞ்சிக்கு அழுவுறான். இவன் கனிமத்துக்கு அலையறான். அத மறைக்கிறதுக்கு எட்டுவழி, பத்து வழின்னு சொல்றான்.

விஜய் அன்பு, சேலம் – வோடபோன் ஊழியர்

வெள்ளக்காரன் ஆட்சியிலகூட இந்த அராஜகம் இல்லனு சொல்றாங்க. மாட்டு வண்டி போற ரோடு இருக்கும்போதே நாங்க நல்லா இருந்தோம். இப்ப மலைய தூக்கினு போறதுக்கு ரோடு போட்டு எங்கள நாசம் பண்றானுங்கனு ஊரே அழுவுது.

செல்வம், இஞ்சிமேடு – வோடபோன் ஊழியர்

எட்டு வழிச் சாலைதூத்துக்குடி போராட்டம் மாதிரியே எட்டுவழிச் சாலையும் உயிர்பலி வாங்கிதான் முடிக்க போறானுங்க. அதுக்கு அவனுங்க ரெடியாயிட்டானுங்க. வேறு வழியில்ல. அந்த மாதிரிதான் நடக்க போவுது. மத்திய அரசு என்ன சொல்லுதோ அதுக்கு இவனுங்க ஆடறாங்க. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட்டு மாதிரி மக்கள் ஒண்ணு சேர்ந்தாதான் இவனுங்கள அடக்க முடியும்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க