சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமங்கள் நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல். இக்கிராமங்களில்ஆயிரம் குடும்பங்கள் விசித்து வருகின்றனர்.

மேலும், சிதம்பரம் தாலுகா ஜெயங்கொண்ட பட்டிணம், மரத்தான் தோப்பு, திட்டுகாட்டூர், குண்டலபாடி ஆகிய கிராமங்களில் 1300 -க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் நீர் டெல்டாவின் கடைமடைக்குப் போய்ச்சேராத நிலையில், கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றுக்கு அருகில் உள்ள மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பலர் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பலரும் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து பரிதவித்து வருகின்றனர்.இந்நிலையில் எடப்பாடி அரசு பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை சந்திக்கவில்லை. எந்தவித நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை. மக்களை நட்டாற்றில் தவிக்கவிட்ட அரசு, இந்த பகுதியில் உள்ள பழையப்பாளையம் ஓ.என்.ஜீ.சி- எண்ணைய் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க கரைகளை பலப்படுத்தி பாதுகாத்து வருகிறது.

இவ்வாறு அரசால் புறக்கனிக்கப்பட்ட கையறு நிலையில் அப்பகுதி கிராம மக்கள் தங்களுக்குள்ளாகவே, ஒருவருக்கொருவர் உதவிகளை செய்துகொண்டு, வெள்ளப் பாதிப்பகளிலிருந்து மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் மேற்கண்ட பகுதிகளில் அங்குள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் மக்கள் தற்காலிகமாக குடியேறுவதற்கான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம், சீர்காழி, தொடர்புக்கு: 78450 18440