தமிழக சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம் எது ? கருத்துக் கணிப்பு

தூத்துக்குடியில் நமது சோஃபியா கால்வைத்த போது இந்த அளவிற்கு இணையப் பெருவெளியில் கழுவிக் கழுவி ஊற்றப்படுவோம் என்பதை பா.ஜ.க. நினைத்திருக்காது. முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மீதான வெறுப்பும் தமிழகத்தில் வளர ஆரம்பித்திருக்கிறது.

தூத்துக்குடியில் நமது சோஃபியா கால்வைத்த போது இந்த அளவிற்கு இணையப் பெருவெளியில் கழுவிக் கழுவி ஊற்றப்படுவோம் என்பதை பா.ஜ.க. நினைத்திருக்காது.

“கேரளாவில் பா.ஜ.க. அரசு மீது வெறுப்பு வருவதற்கு ஒரு பெருமழையும், வெள்ளமும் வந்து அழிக்க வேண்டியிருந்தது. தமிழகத்தில் அதை ஒரு பெண் சாதித்து விட்டார்” என்று டிவிட்டரில் ஒரு கேரள நண்பர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சோஃபியாவின் விமான யுத்தத்திற்கு முன்பேயே அது பெருமளவு நடந்திருக்கிறது.

மோடி ஆட்சியேற்ற பின்பு தமிழகம் ஒரு புதிய பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அட்ரசே இல்லாத பா.ஜ.க., ஊடகங்களை மிரட்டியும், அ.தி.மு.க-வை ஏவியும் தன்னை தமிழகத்தில் நிறுத்திக் கொள்ள தீவிரமாக முயன்று வருகிறது. அதே நேரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மீதான வெறுப்பும் தமிழகத்தில் வளர ஆரம்பித்திருக்கிறது. மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக மக்களிடையே பொதுவில் அரசியல் விவாதங்களை அதிகரிக்கவும், அரசியல் நிகழ்வுகளை கவனிக்கவும் வைத்திருக்கிறது.

குறிப்பாக இணையத்தில் அரசியல் சார்ந்த விவாதங்கள் பல்வேறு வடிவங்களில் – மீம்ஸ் – செய்தி – குறிப்பு – கட்டுரை – வீடியோ – விவாதம் என அதிகரித்திருக்கின்றது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு அரசியல் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் மோடி அரசின் மீது விமர்சனங்களை வைப்பதோடு தங்களுக்குள்ளும் உரையாடுகின்றன.

கேள்வி இதுதான்:

தமிழக  சமூக வலைத்தளங்களில் மக்களிடையே செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம் எது?

  • கம்யூனிசம்
  • திராவிடம்
  • தமிழ் தேசியம்
  • தலித் அரசியல்
  • இந்துத்துவம்

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க