தினமலர் பத்திரிக்கையை எரித்த திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள்

நாசகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டுமென்றும்; தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்றும்; ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தை அம்பலப்படுத்தியும், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தொடர்ந்து ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதும், மக்கள் அதிகாரம் போன்ற மக்களுக்காக போராடும் அமைப்புகளின் மீது அவதூறு பரப்பும் தினமல(ம்)ர் பத்திரிக்கையை தீயிட்டுக்கொளுத்தினர்.

தகவல்:
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள், திருச்சி.
99431 76246

 ♦ ♦ ♦

கும்பகோணம் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, குடந்தை வழக்கறிஞர்கள் சார்பாக, ஜன-10 அன்று குடந்தை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் குருமூர்த்தி , கருணாமூர்த்தி மற்றும் பாபநாசம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் என்.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.

♦ ♦ ♦

திருச்சி – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

“டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது!!ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்று !!” என்ற முழக்கத்தின் கீழ் திருச்சி வழக்கறிஞர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்பு வழக்கறிஞர்கள் இணைந்து திருச்சி நீதிமன்ற வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம் மீண்டும் பற்றிப் பரவட்டும்..

தொகுப்பு:

வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

1 மறுமொழி

  1. சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய வக்கீல்கள் இப்படி பேசுவது தவறு…

    ஹிந்துக்களுக்கு எதிராக கொடுத்த தீர்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் சொல்ல தெரிந்த இவர்கள் இப்போது மட்டும் ஏன் தீர்ப்பை மதிப்பது இல்லை.

    கம்யூனிஸ்ட்கள் என்றாலே பெரும் அயோக்கியர்கள், ஹிந்து விரோதிகள், இந்தியா விரோதிகள் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறார். அதில் மதசார்பின்மை என்ற பொய் முக்காடு வேறு…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க