கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்துகொண்டிருக்கிறது மோடியின் அடிமை எடப்பாடி அரசு. அதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து அந்த ஆலைக்கு எதிராக பேசினாலே போலீசை வைத்து கைது செய்கிறது.

இந்நிலையில் அந்த ஆலைக்கு எதிராக நோட்டிசு கொடுத்தார் என்பதற்காக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்தோஷ் என்பவரை அடாவடியாக உளவுப் போலீசை வைத்து கைது செய்துள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து தனது விளம்பரத்தை தடையில்லாமல் செய்கிறது.

கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக அதன் அடியாளாக செயல்படும் போலீசு கும்பலையும் அரசையும் கண்டித்து பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

படிக்க:
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்

புமாஇமு
தகவல்:
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி,
திருச்சி.
தொடர்புக்கு: 99431 76246.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. அன்பான மாணவர்களே, இந்த வகையான எதிர்ப்பு செய்ய உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்க வேண்டாம் … உங்கள் சுய கல்வி மற்றும் பிற மாநில மாணவர்கள் உடன் போட்டியிட உங்கள் திறன்களை மேம்படுத்த முயற்சி செய்து உங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய முயலுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க