தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் ! பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை !

அனைவரும் குரல் எழுப்புவோம்! முகிலனை விடுதலை செய் என்று! அனைவரும் பரப்புவோம் முகிலன் வெளியிட்ட ஸ்டெர்லைட் - காவல்துறை சதி வீடியோவை !

தோழர் முகிலன் எங்கே ? – மே,22,2018 – ஸ்டெர்லைட் – காவல்துறை படுகொலைகளுக்கும்
முகிலன் வெளியிட்ட வீடியோவிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது!

ன்பார்ந்த தமிழக மக்களே !

கடந்த மே-22, 2018 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு, வரலாறு காணாத அரசு வன்முறை நிகழ்த்தப்பட்டது. மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர்  உள்ளிட்ட அமைப்புகளும், வழக்கறிஞர்கள் வாஞ்சி நாதன், அரிராகவன் மற்றும் மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலரும்  குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டோம். அதன்பின் பல்வேறு உண்மைகள் வெளிவந்தன.

முகிலன் வெளியிட்ட வீடியோ :

ஆனால், மே-22, 2018 காலை 11.45 – 12.30 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே என்ன நடந்தது? என்பது தற்போதுவரை மர்மமாகவே இருந்தது. தற்போது முகிலன் வெளியிட்டிருக்கும் காணொளித் தொகுப்பு, மர்மத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சி, உண்மைகளை உரத்துச் சொல்லியுள்ளது.

முகிலன் வீடியோ மீது விசாரணை நடந்தால், தென்மண்டல காவல்துறை தலைவர் உட்பட பலர் சிறை செல்வது உறுதி. முக்கியமாக 18.02.2019-ல் உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணைக்குத் தடை கோரிய தமிழக அரசின் வழக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஏற்பாட்டில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு காலின் கன்சாவேல்ஸ்  உள்ளிட்டோரின் வலுவான வாதத்தால், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதியக் கோரி மக்கள் அதிகாரம் தோழர்கள், கூட்டமைப்பினர், சி.பி.எம். தோழர்கள், சம்பவத்தைப் பார்த்த மக்கள் உள்ளிட்டோர் புகார் அனுப்பி அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ.யும் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளது.

படிக்க:
ஸ்டெர்லைட் : கொலைக் குற்றவாளி போலீசாரை கைது செய் | இராஜு | தியாகு உரை | வீடியோ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் !

இந்தப் பின்னணியில்தான் தோழர் முகிலன் காணாமல் போயுள்ளார். எனவே அனைவரும் குரல் எழுப்புவோம்! முகிலனை விடுதலை செய் என்று! அனைவரும் பரப்புவோம் முகிலன் வெளியிட்ட  ஸ்டெர்லைட் -காவல்துறை சதி வீடியோவை !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சே.வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.


இதையும் பாருங்க:

புதைந்தது உடலல்ல விதையான வீரமடா

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க