தூய்மை இந்தியா : 4000 கோடி ரூபாயை அபேஸ் செய்த மோடி அரசு | காணொளி

தலைமை தணிக்கையாளரின் அறிக்கையின் படி வசூலிக்கப்பட்ட ரூ. 16,401 கோடியில் 4,000 கோடி ரூபாயின் கதி என்னவென்று தெரியவில்லை.

தூய்மை இந்தியா வரியை ஒழித்த பிறகும் ரூ.2,000 கோடிக்கும் மேல் வசூலித்த மோடி அரசு !

2017, ஏப்ரல் 1 முதல் 2018, மார்ச் 31 வரை தூய்மை இந்தியா பெயரில் ரூ. 4,242.07 கோடி வசூலிக்கப்பட்டதாக தலைமை செயலகம் (The Directorate General) கூறியுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த வரி வழக்கொழிக்கப்பட்ட ஜூலை 1 வரை ரூ. 2,357.14 கோடி வசூலிக்கப்பட்டதாகவும் அதன் பிறகு 2018, மார்ச் வரை ரூ. 1,884.93 கோடி வசூலிக்கப்பட்டதாகவும் நிதியமைச்சகம் பதிலளித்திருந்தது. அதேபோல 2018, ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரூ. 182.25 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா வரி முதன்முதலில் 2015-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பிறகு ஒவ்வொரு சேவைக்கும் 0.5% கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்தது. மேலும் 2015 மற்றும் 2018 -க்கு இடையில் ரூ. 20,632.91 கோடி தூய்மை இந்தியா வரியாக வசூலிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ரூ. 3,901.83 கோடியும் 2016-17-ம் நிதியாண்டில் ரூ. 12,306.76 கோடியும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 4,242.07 கோடியும், 2018-19-ம் நிதியாண்டில் ரூ. 182.25 கோடியும் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது…

… தலைமை தணிக்கையாளரின் அறிக்கையின் படி வசூலிக்கப்பட்ட ரூ. 16,401 கோடியில் ரூ. 12,400 கோடி (75%) மட்டுமே இந்திய தேசிய பாதுகாப்பு நிதி கணக்கிற்கு செலுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதி 4,000 கோடி ரூபாயின் கதி என்னவென்று தெரியவில்லை.

விரிவான செய்திக்கு காணொளியைப் பாருங்கள்!!

பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க