ந்துக்களின் மீது வெறுப்பை உமிழும் விதமாகப் பேசிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சர், அப்பேச்சிற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 5-ம் தேதியன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், இந்தியாவுடனான பாகிஸ்தானின் உறவு மேலும் மோசமான நிலையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஃபயாசுல் ஹஸன் சோகன் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அவரது இந்த பேச்சின் காணொளி வைரலாக இணையத்தில் பரவியது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும், பாகிஸ்தானின் மூத்த அரசியல் தலைவர்களும் அவரது இந்து வெறுப்புப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

படிக்க:
♦ நரோடா பாட்டியா கலவரம் : முன்நின்று நடத்திய பாபு பஜ்ரங்கி பிணையில் விடுதலை !
♦ ரஃபேல் ஊழல் : திருடப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக எடுக்கக் கூடாதாம் !

பாகிஸ்தான் அரசின் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மசரி தனது டிவிட்டர் பக்கத்தில் “இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். யாருக்கும் பிறரது மதத்தை தாக்குவதற்கு உரிமை கிடையாது. நமது இந்து குடிமக்களும் இந்த நாட்டிற்காக தியாகங்களை செய்துள்ளனர்.” என்று கூறினார்.

இதுகுறித்து பாகிஸ்தானின் மத்திய நிதித்துறை அமைச்சர் ஆசாத் ஓமர் தமது டிவிட்டரில் குறிப்பிடுகையில் “பாகிஸ்தான் இந்துக்களும் இந்த தேசத்தின் கட்டமைப்பில் என்னைப் போன்றே அங்கம் வகிப்பவர்கள். பாகிஸ்தானின் கொடியில் வெறும் பச்சை நிறம் மட்டுமே இல்லை; சிறுபான்மையினரை குறிக்கும் வெள்ளை நிறம் இல்லாமல் நமது கொடி நிறைவு பெறாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் நயீம் உல் ஹக், தனது டிவிட்டில், “அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த உறுப்பினர் ஒருவரின் இத்தகைய அறிவீனமான நடத்தையை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது.” என்றார்.

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானியர்கள் இதனைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில், #SackFayazChohan என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இது குறித்து விளக்கமளிக்குமாறு அவருக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேட்டதன் பேரில், கடந்த மார்ச் 5 அன்று அவரைச் சந்தித்த ஹசன் சோகன், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஃபயாஸ் சோகனின் ராஜினாமா கடிதத்தை அம்மாநில அமைச்சரவையும் ஏற்றுக் கொண்டது.

ஹஸன் சோகன்

தமது இந்து வெறுப்புப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது டிவிட்டரில் தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் இந்திய படையணிகளையும் அதன் ஊடகங்களையும் மட்டுமே அவ்வாறு பேசியதாகவும் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கு எதிராக அவ்வாறு பேசவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பேச்சு பாகிஸ்தானிலுள்ள இந்துக்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்குமெனில் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

‘தீவிரவாத நாடான’ பாகிஸ்தானில், இது போன்ற ஒரு வெறுப்புப் பேச்சு சம்பவம் நடப்பது என்பது அங்கு ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. அங்குள்ள மக்கள் இத்தகைய பேச்சுகளை எதிர்த்துப் பதிவிடுகின்றனர். அவ்வாறு பேசிய அமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளனர். ‘சகிப்புத் தன்மை மிக்க’ நாடாக சொல்லிக் கொள்ளப்படும் இந்தியாவில், பாஜக அமைச்சர்கள் முதல்  அடிபொடிகள் வரை அனைவரின் யதார்த்தமான பேச்சே இசுலாமிய வெறுப்புப் பேச்சாகத்தான் இருக்கிறது. இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கள் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் கேட்காத நாளில்லை எனலாம். அந்த அளவிற்கு ஆளும் பாஜகவினரும், சங்க பரிவாரக் கும்பலும் தொடர்ச்சியாக இசுலாமிய வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.

ஒருவேளை பாகிஸ்தான் அரசு செய்ததுபோல் வெறுப்புப் பேச்சு பேசியவர்களையெல்லாம் பதவிநீக்கம் செய்திருந்தால், பாராளுமன்றத்தில் பாஜக தரப்பில் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.


நந்தன்
நன்றி : அவுட்லுக்

8 மறுமொழிகள்

  1. இதுவும் பாகிஸ்தானின் முஸ்லிம் வெறி சதியாக இருக்குமோ…..?
    அந்த முட்டாப்பய மணிகண்டன் விளக்கினா நாமலும் புரிஞ்சிக்கலாம்…..

    • இதையெல்லாம் நம்பினால் உங்களை போன்ற ஒரு முட்டாள் உலகத்தில் வேறு யாருமே இருக்க முடியாது. இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களால் என்றுமே மாற்று மதத்தினரோடு ஒற்றுமையாக இருக்க முடியாது… அவர்களின் மத அடிப்படையிலேயே மாற்று மதத்தினரை ஏற்க மாட்டார்கள். அதற்காக உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை கொலை செய்து இருக்கிறார்கள் (இது மறுக்க முடியாத வரலாற்று உண்மை)

      பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அழித்தது போக மீதம் இருந்தது வெறும் 428 ஹிந்து கோவில்கள் தான், இன்றைய தினத்தில் அதுவும் அழிந்து வெறும் 20 ஹிந்து கோவில்கள் தான் உள்ளது.

      சென்ற மாதம் 9ம் தேதி சிந்து மாகாணத்தில் இருந்த Khairpur என்ற பகுதியில் இருந்த ஹிந்து கோவிலும் உடைக்கப்பட்டு புனித நூல்கள் எரிக்கப்பட்டன…

      மீதம் இருந்த 20 கோவில்களில் ஒன்று நாசம் செய்யப்பட்டுவிட்டது இப்போது வெறும் 19 ஹிந்து கோவில்கள் மட்டுமே பாகிஸ்தானில் உள்ளது அவைகளும் வரும் காலத்தில் இடிக்கப்பட்டு விடும்.

      பாக்கிஸ்தான் என்ற பெயருக்கு பின்னால் “Land of Pure” என்று சொல்வார்கள் அதன் அர்த்தம் அங்கே இருந்த அனைத்து ஹிந்து கோவில்களும் அழிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம்…

      பேசுவது எல்லாம் வக்கணையா பேசுவாங்க ஆனா நடைமுறையில் பாகிஸ்தானிகள் காட்டுமிராண்டிகள்.

  2. பாகிஸ்தானோடு சேர்ந்து கொண்டு இந்தியாவை பற்றி பொய்களையும் அவதூறுகளையும் பரப்பும் வினவு… பாகிஸ்தானில் எதாவுது தப்பித்தவறி ஒரு நல்ல விஷயம் நடந்துவிட்டால் உடனே பாகிஸ்தானிகளை போன்ற உத்தமர்கள் உலகில் வேறு யாருமே இல்லை என்பது போல் பிரச்சாரம் செய்ய வேண்டியது.

    உங்களின் பாக்கிஸ்தான் கொண்டையை கொஞ்சமாவுது மறைக்க பாருங்கள், உங்களின் பாக்கிஸ்தான் விசுவாசத்தை இவ்வுளவு வெளிப்படையாக காண்பிப்பது படுகேவலமாக இருக்கிறது.

  3. வினவு டுபாக்கூர் தீ கம்யூனிஸ்ட்..
    1947இல் 27 சதவீதமாக இந்துக்கள் இப்போது 1.5 சதவீதமாக மாற்றிய பெருமை இசுலாமிய பயங்கரவாதம்
    இல்லையா?!? பல அடிப்படை உரிமைகள் சட்ட நிவாரணம் கூட இந்துகளுக்கு இல்லை. இங்கே சிறுபான்மையினர் பெரும்பான்மை யினரை மிரட்டுகிறார்கள்.

  4. எனக்கு தெரிந்த பாகிஸ்தானில் இப்போது தான் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு தேர்ததில் போட்டியிட ஒரு சில சட்ட ரீதியிலான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன

    பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்கள் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி கிடையாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க