சங்க பரிவாரத்தை தெறிக்க விடும் இளம் குருத்துகள் – காணொளி !

நவம்பர் 7, ரசிய புரட்சியின் 102-வது ஆண்டு நிறைவை ஒட்டி, சென்னையில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய அரங்கக் கூட்டத்தில் அரங்கேற்றப்பட்ட கலை நிகழ்ச்சிகளின் காணொளிகள் !

102-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளையொட்டி சென்னையில் கடந்த நவம்பர் 7 அன்று நடைபெற்ற விழாவில் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகளின் காணொளிகள்.

சங்க பரிவாரத்தை தெறிக்க விடும் இளம் குருத்துகள் !

மோடி மஸ்தானின் குரளி வித்தைகள் – நகைச்சுவை நாடகம் !

மலக்குழியில் இறங்கிய அப்பா வருவாரா ? | தோழர் ஸ்ரீஜா பாடல் !

1 மறுமொழி

  1. செல்வங்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சித்தின வாழ்த்துக்கள்…!

    குழந்தைங்க எப்படியிருந்தாலும், என்னப் பேசினாலும் அழகுன்னு எல்லாரும் சொல்லிட்டாங்க…உண்மை. ஆனா, எனக்கென்னமோ இன்னிக்கு இந்த காணொளியில் ரொம்ப அழகாத் தெரியுறாங்க… ஏன்? சமூகத்தை பற்றி பேச ஆரம்பிச்சாலே அழகும், அறிவும் அதிகமாயிடும் போல…!

    எங்க குழந்தைகளுக்கு, டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் காமெடி ஜூனியர் ன்னு ஃப்புல் மேக்கப்புல, கணிசமான தொகைய வாங்கிகிட்டு அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ஏத்த உட்கார்ந்திட்டிருக்கும் ஜட்ஜூங்க கிட்ட மார்க் வாங்க நெளிந்து, குனிந்து நிற்க கற்றுத்தராமல், மக்கள் முன் நிமிர்ந்து நின்று அதிகார வர்க்கத்தைத் தட்டிக் கேள்விக் கேட்கும் பாட்டாளி வர்க்கத் திமிரைக் கற்றுத்தரும் அமைப்புக்கும் நன்றிகள் – வாழ்த்துக்கள்.

    “சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் பார்த்தோமானால், அரசுப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த (மோடி) அரசு முதலாளிக்களுக்கானது, மக்களுக்கானது இல்லை… இதற்கு மாற்று – தீர்வு….? ரஷ்ய சோசலிசப் புரட்சியப் போன்ற இந்திய புதிய ஜனநாயகப் புரட்சி.”

    நிகழ்ச்சியின் தொகுப்பு – புது நம்பிக்கையும், உத்வேகத்தையும் அளிக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க