மைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களுக்கு எதிராக பார்ப்பன பாசிஸ்டு குண்டர்கள் நடத்தியிருக்கும் வன்முறை, பாசிசத்தின் வெளிப்படையான பிரகடனம்.

குருதி கொப்புளிக்க கீழே விழுந்து கிடக்கும் இசுலாமியரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு தாக்கும் காட்சி, குஜராத் இனப்படுகொலைக் காட்சியை நினைவுபடுத்துகிறது.

முஸ்லீம் ஒருவரை கொலைவெறியோடு தாக்கும் காவிக் கும்பல்
முஸ்லீம் ஒருவரை கொலைவெறியோடு தாக்கும் காவிக் கும்பல்

போலீசு காவல் நிற்க, கைத்துப்பாக்கியுடன் பஜ்ரங் தள் குண்டர்களே துப்பாக்கிச் சூடு நடத்துவது என்ற வழிமுறையை டில்லியில் தொடங்கியிருக்கிறார்கள்.

போலீசுக்கு உத்தரவிடும் சம்பிரதாயத்துக்குக் கூட உயரதிகாரிகள் தேவையில்லை, பாஜக வின் ஒரு உள்ளூர் தாதா போதும் என்பது புதிய வளர்ச்சி.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் பரவும் வன்முறை – என்று காவி வண்ணத்துக்கு கட்சி மாறுகிறது சன் டிவி. குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை என்பது மற்ற ஊடகங்களின் தலைப்புச் செய்தி.

அமைதியாகப் போராடி வந்த முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக குண்டர்களின் தாக்குதல் – என்ற அளவில் கூட செய்தி வெளியிடும் நேர்மை ஊடகங்களிடம் இல்லை.

படிக்க :
♦ படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
♦ நூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்

ஆர்.எஸ்.எஸ்-ன் சமூக ஊடக பொய்ப்பிரச்சாரங்களோ, தாக்குதல் தொடுத்தவர்களே முஸ்லிம்கள்தான் என்ற பச்சைப் பொய்யைப் பரப்புகின்றன.

குடியுரிமைப் பதிவேடு அமலுக்கு வருவதற்கு முன்னரே, முஸ்லிம்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக்கப் படுவதைப் பார்க்கிறோம்.

ஆம். பார்க்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல்தர குடிமக்கள் என்று தம்மைக் கருதிக் கொண்டிருப்போர், இரண்டாந்தரத்தினர் தாக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முஸ்லிம்களுக்கு எதிராக நீட்டப்படும் துப்பாக்கி, உங்களையும் குறி வைக்குமுன் விழித்துக் கொள்ளுங்கள்.

இத்தனை நாட்களாக முஸ்லிம் மக்கள் நடத்திய போராட்டம், அவர்களுக்கானது மட்டுமல்ல, போராடத்தவறிய பெரும்பான்மையினருக்கானதும்தான். அவர்களுக்காக குரல் கொடுப்பதென்பது நம் அனைவருக்காகவும் குரல் எழுப்புவதாகும்.

டில்லி வேறு,  தூத்துக்குடி வேறு அல்ல. குரலெழுப்புவோம் ! போராடுவோம் !

வினவு செய்திப் பிரிவு

20 மறுமொழிகள்

 1. It’s been 6years I am reading this website.it changed my placid idealogy lot.made me feel like more human and taught me leftist views.taught me why I should rise my voice.i really miss this website

 2. விடைபெறுகிறோம்…
  ஆகா எவ்வளவு எளிமையாக சொல்லிவிட்டீர்கள்…
  கடைய சாத்தியாச்சு என்பது போல..
  புரட்சிகர அரசியல் தாகம் என்பது எப்படிபட்டது என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல
  இனி நாங்கள் எங்கே செல்வது? அது ரத்தம் கலந்த கண்ணீரை கொண்டது, தொடர்ச்சியாக பழி வாங்கபட்ட, பலி கொடுக்கப்பட்ட வர்க்கத்தின் ஒரே நம்பிக்கை அதனை தகர்த்து விட்டீர் எனதருமை தோழர்களே?
  சீர்திருத்தவாதிகளிடம் போய் எங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள முடியாது!
  திருச்சி மாநாட்டின் வெற்றியை கொஞ்சம் ரசிக்கக்கூட நீங்கள் நேரம் தரவில்லையே?
  அமைப்பு மீதான உங்களின் விமர்சனம் பற்றியெல்லாம் நான் பேசவிரும்பவில்லை அது சரியானதாகவோ, தவறானதாகவோ இருக்கலாம் காலம் மட்டுமே உறுதி செய்யும் தோழர்களே
  குறைந்தபட்சம் நீங்கள் தளத்தை மற்ற தோழர்களிடம் கையளித்துவிட்டு வெளியேறியிருக்கலாம்
  வினவுதளத்தின் மீது அவநம்பிக்கையை உண்டு பண்ணிவிட்டு இப்போது கையளிக்கதயார் என்று சொல்லும்
  உங்கள் சொற்களில் நேர்மை உண்டு ஆனால் நாணயம் இல்லை தோழர்களே!
  புதிதாய் வரும் தோழர்கள் எப்படி எதிர் கொள்வார்கள், வாசகர்கள் அவர்களை எப்படி பார்ப்பார்கள்?
  நாம் தொடங்கியது நம்மோடு அழியட்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா?
  நீங்கள் தவறுக்கு மேல் தவறினை செய்து கொண்டிருக்கிறீர்கள் தோழர்களே!
  புரட்சிகர அரசியலின் மேல் அவநம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு வெளியேறி இருக்கிறீர்கள், மறந்துவிடாதீர்கள்..
  இனி என்ன செய்ய போகிறீர்கள்..? போய் பொழப்பை பார்க்கலாம் என்றா?
  நீங்கள் வைக்கும் விமர்சனங்களை களைய மாற்றாய் புதிதாய் இயங்கினால் மகிழ்ச்சியே
  ஆனால் ஒரு பார்வையளனாய் சுருங்கி போய்விடாதீர்கள், அதே சமயத்தில் சீர்குலைவுவாதிகளாகவும் மாறிவிடாதீர்கள்..
  எங்கள் தாகத்தை விடுங்கள் … உங்கள் தாகத்தை எப்படி தீர்த்துக்கொள்ள போகிறீர்கள்?
  தாகம் இருக்கிறது அல்லவா? இருக்கும்….

  கரையை காட்டவந்த தோழர்கள் கறையோடு வெளியேறி விட்டீர்களா என்பதற்கான விடை
  என்பது இனி நீங்கள் செய்யப்போகீறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

 3. ///இனி நீங்கள் என்ன செய்யப்போகீறீர்கள்? என்பதில்தான் இருக்கிறது///

 4. //விடைபெறுகிறோம் _ வினவு ஆசிரியர் குழு//

  இது சரியா ?…
  முறையா ?…
  கம்யூனிசம் என்றால்
  இதுதான் கதியா ?…

 5. நியாயமா வினவு? இந்த பனிரெண்டு ஆண்டுகளில் எத்துனை வலி மிகுந்த உழைப்பு..எத்தனை ஆயிரம் பேர்களை அரசியல்படித்தியுள்ளீர்கள்…எங்களை கூர்மையாக இயக்கியதின் மூலமாக நீங்கள் எவ்வாறான அரசியல் உயர் புரிதலில் இருந்திருக்க வேண்டும்..ஏன் வினவு?உங்களால் முழு முயற்சியோடு தொடங்கப்பட்டு புரட்சிகர அரசியலை எங்களுக்குள் விதைத்த வினவு தளம் மக்களின் விடுதலைக்கானது இல்லையா?உங்கள் ஆறுபேர்களின் தனி சொத்துடைமையா வினவு?உங்கள் பக்க விஷயங்களை மட்டும் பொதுவெளியில் சொல்லி தலைமையில் என்ன நடந்தது என்பதை நாங்கள் அறியாமல் செய்துவிட்டீர்கள்..உண்மையில் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கூட நீங்கள் பொதுவெளியில் அறிவிக்காமல் தலைமையின் கூற்றை ஏற்று அதன் வழி விலகலை மேற்கொண்டிருக்கலாமே..மிருகபலத்தில் இருக்கும் அரசியல் எதிரிகளை வீழ்த்த நாம் பலவீனமாக இருக்கிறோமே என்ற எண்ணம் துளியும் எழாமல்..உங்கள் எழுத்துக்களால் எங்களை கருத்துப் போர்க்களத்தில் வீரர்களாக வைத்திருந்தீர்களே..உங்களின் அந்த உழைப்பையெல்லாம் நாங்கள் எப்படி மறப்பது?உங்கள் பக்கம் எவ்வளவு நியாயமும் இருக்கட்டும்..தலைமையின் மீதான உங்கள் விமர்சனங்களை இப்படி தடாலடியாக பொதுவெளியில் அறிவித்தால்..அது அமைப்பையும் அதன் அணிகளையும் பாதிக்காதா..இந்த எளிய புரிதல் கூடவா அத்தருணத்தில் உங்களை ஆட்கொள்ளவில்லை?அதுமட்டும் தான் வினவு உங்கள் மீதான உரிமையோடான சங்கடத்தை ஏற்படுத்துகிறது..நீங்கள் விலகிவிட்டீர்கள்..நாடு மக்கள் நாங்கள் என அனைத்தையும் மறந்து.. வரலாற்றுப்பிழை வினவு…கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே..அதை உங்களுக்கு மட்டுமே ஆனதாக நீங்கள் சுருக்கிக்கொண்டுவிட்டதை நம்ப முடியவில்லை…விளையாட்டு வினையாகிப் போனதை பார்த்திருக்கிறோம்..வினவின் இந்த வினை…. என்ன விளையாட்டு என்றே புரியவில்லை..நீங்கள் சொன்னதுதான் வினவு…மார்க்சியம் ஒரு அறிவியல் எனும் பொழுது அது நிச்சயம் வென்றே தீரும்..நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்…..

 6. மகஇக தோழர்களுக்கும் மற்றும் தலைமைத் தோழர்களுக்கும் ஒரு வேண்டுகோள்…விலகிய வினவின் ஆசிரியர் குழுவினரிடமிருந்து வினவு தளத்தை ஏற்பதில் ஏதேனும் அரசியல் முரண்பாடு உள்ளதா?அப்படி இருந்தால் நாங்கள் அமைதி காப்பதை தவிர வேறு வழியில்லை..அப்படி இல்லையாயின் வினவு தளத்தை தோழர்கள் உடனே ஏற்று தொடர்ந்து நடத்த ஆவண செய்யுங்கள்…திருச்சி அஞ்சாதே போராடு மாநாட்டில் தோழர் ராஜு பேசினாரே போராட்டத்தின் ஊடாக அனைத்தையும் கற்போம் என்று..வினவு தளமும் அதன் வழியில் இயங்க நீங்கள் ஆவண செய்யலாமே…பரிசீலியுங்கள் அருள் கூர்ந்து…விலகிய ஆசிரியர் குழுவினர் வினவை கருந்திரையில் வைத்துள்ளார்கள்…நாங்களோ அது சிவக்கக் காத்திருக்கிறோம்…

 7. விடைபெற்ற பதிவின் மறுமொழி பெட்டியைக் கூட திறந்து வைக்காமல் சென்றிருக்கிறார்கள் தோழர்கள். நம் கருத்துக்களை கேட்க மனமில்லை போலிருக்கிறது. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கிறார்கள். ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் கூட ராஜினாமா செய்தவர் பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுவார். சீராட்டி வளர்ந்த குழந்தையின் கழுத்தை அறுத்துவிட்டு சென்றதைப் போலுள்ளது.
  90களின் ஆரம்பத்தில் கருவறை நுழைவு போராட்டத்தில் துவங்கி 90களின் இறுதியில் நான் மகஇகவை பின் தொடர்வது நின்றது. பின்னர் 2014ல் கோவன் கைதை தொடர்ந்து இன்று வரை வினவு மூலம் உறவும் அரசியலும் வளர்ந்து வருகிறது.
  வினவு நின்று போனதால் கீற்று பக்கம் சில நாட்களுக்களாக கரை ஒதுங்கி அதில் வரும் விமர்சனங்களை படித்தேன். அவற்றை சிந்திக்கும் போது மகஇக சரியான பாதையில் செல்வதாகவே கருதுகிறேன்.
  கடந்த 3 வருடங்களில் வினவிற்கு 2 லட்சத்திற்கும் மேலாக பங்களிப்பு செய்திருக்கிறேன். இனியும் தொடரவேண்டும் என்று எண்ணுகிறேன்.
  நீங்கள் தொடருவீர்களா…?

 8. பொறுப்பேற்றுருக்கும் புதிய தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

 9. வினவு தளத்தில் இதுவரை பல திரைப்படங்களை விமர்சனம் செய்திருக்கிரீர்கள். தற்போது திரையரங்கத்தில் திரௌபதி திரைப்படம் வெளிவந்துள்ளது. அத்திரைப்படத்தைப் பற்றி விமர்சனம் செய்யவும். இளைஞர்கள் இத்திரைப்படத்தை உயர்த்தி உயர்சாதி பெருமை பேசி கம்புடனும் அறிவாலுடனும் திரைக்கு சென்று வருகின்றன.

  • இருய்யா!அவிங்களே பேக்கரி யாருக்குன்னு குழப்பத்தில் இருக்காங்க.முடிஞ்சதும் வருவாங்க

 10. நாட்டுல எவ்வளவு பிரச்சனை நடந்துடு இருக்கு. பொறுப்ப ஓப்படைக்கிறோம் கிறது தான் இப்ப ரொம்ப முக்கியம். ஏன் வினவு இப்படி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிங்க.

 11. விடைகொடுக்கிறோம் தோழர்களே …இத்துனை ஆண்டுகால அர்ப்பணிப்பு மிக்க உங்களின் உழைப்பை…ஈடு செய்ய இயலா அரசியல் பணியை மறக்கவியலாமலும் கலங்குகிறோம் தோழர்களே…நன்றியுடன்…

 12. நல்ல வேலை திரௌபதி படம் வெளியான நேரத்தில் இந்த வினவு கூட்டம் இல்லாமல் போயி விட்டது , எந்த குழப்பமும் இல்லாமல் மக்களிடம் நல்லபடியாக திரௌபதி சேர்ந்து விட்டாள்..கடையை சாத்திட்டு போன வினவு கூட்டத்திற்கு நன்றி

  • ரெபெக்கா மேரி ரெண்டு கையாலும் சாப்பிடுவாங்க போலிருக்கு…

 13. சாத்திய கதவு மீண்டும் திறக்கும்…ரேபேக்காமேரிகளின் வாய்கள் நிரந்தரமாக சாத்தப்படும்.. திரௌபதியை பார்த்துவிட்டு விவாதிப்போம்..

 14. கார்த்திகேயன் நண்பா.. ரேபேக்கா அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஒற்றை வரியில் நச் என்று கூறிவிட்டீர்கள்…

 15. அஸ்ஸலாமு அலைக்கும்
  இந்த அவலத்திற்கு ஒரே தீர்வு இஸ்லாமிய ஆட்சி மட்டுமே!காவி பார்ப்பனீயத்தை தோற்கடிக்க திராவிட கோட்பாட்டாலோ கம்யூனிசத்தாலோ முடியவில்லை என்பதை முதலில் உங்களை போன்றோர் ஒப்புக்கொள்ளுங்கள்!இன்று பார்ப்பனீயத்தை வென்ற ஒரே மார்க்கமாக இஸ்லாம் மட்டுமே உள்ளது!இஸ்லாத்திற்கு வாருங்கள்.அதுவே ஒரே நல்ல தீர்வு!இன்ஷால்லாஹ் இது விரைவில் நடக்கும்

  • பார்ப்பனியத்தை வென்ற மார்க்கம் என்ற சொல்லை ஏற்க முடியாது நண்பரே! திராவிட கோட்பாட்டிலோ கம்யூனிச கோட்பாடுகளை அமுல்படுத்துவதிலே சில சறுக்கல்கள் ஏற்படலாம் அது சறுக்கல்கள் மட்டுமே ஒழிய முடிவு அல்ல. அதை நடைமுறை படுத்துபவர்களிடையே உண்டாகும் ஈகோ வே அக்கட்சி உடைவதற்கும், அழிவதற்கும் காரணமாக அமைகிறதே ஒழிய திராவிட வரலாறும் சரி கம்யூனிச கோட்பாடும் சரி அது என்றைக்கு உழைக்கும் மக்களுக்கானதே இதற்கு அழிவே கிடையாது. இன்று வரை பார்பனியத்திற்கு சிம்ம சொப்பனம் திராவிட தலைவர்களும் கம்யூனிச தலைவர்களும் தான் என்பதே மறுக்க முடியாத உண்மை. ஆகவே இதை சாக்காக வைத்து அனைவருக்கும் மார்க்கமே தீர்வு என்று குறுக்குசால் ஓட்ட வேண்டாமே!

 16. காவிகள் கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை முறியடிக்க இஸ்லாம் மார்க்கத்தில் என்ன தீர்வு சொல்லப்பட்டுள்ளது அப்துல்லா சார்..கொஞ்சம் விளக்குவீர்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க