இந்து மதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்!

முஸ்லீம் மக்களை படுகொலை செய்! விரட்டியடி, பாலியல் வன்கொடுமை செய்! என்று பொதுவெளியில் பேசித்திரியும் இந்து பயங்கரவாதிகளை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்.

0
தி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப் ஆகியோரை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று ட்வீட் செய்ததற்கான Alt News என்ற இணைய தளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர்-ன் மீது உத்தரப்பிரதேசத்தின் கைராபாத்தில் உள்ள போலீசு நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
ராஷ்டிரிய இந்து ஷேர் சேனாவின் மாவட்டத் தலைவர் பகவான் சரண் என்பவரின் புகாரின் அடிப்படையில், ஜுபைர் மீது பிரிவு 295 ஏ (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள், மதத்தை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை தூண்டும் நோக்கம்) தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (மின்னணு வடிவில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
டைம்ஸ் நவ் சேனலின் ‘தி கியன்வாபி ஃபைல்ஸ்’ குறித்த விவாதத்தின் வீடியோ கிளிப்பைப் பகிர்ந்து, சுபைர் ட்வீட் செய்துள்ளார். ட்வீட்டைக் குறிப்பிட்டு, ஜுபைரின் ட்வீட்டால் அவரது மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாக புகார் தாரர் கூறியுள்ளார். மேலும், மஹந்த் பஜரங் முனியை வெறுப்பாளர் என்றும், இந்து தலைவர்களை “கொலை” செய்ய ஜுபைர் முஸ்லீம்களை தூண்டுவதாகவும் சுபைர் மீது குற்றம்சாட்டினார்.
படிக்க :
♦ ’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !
♦ ’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !
யதி நரசிங்கானந்த், ஜூனா அகாராவில் தீவிர இந்துத்துவா தலைவராவார். இவர் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வன்முறைக்கான அழைப்புகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்.
“நமது தற்போதைய காலத்தில் முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுபவர்கள் முந்தைய காலங்களில் பேய்கள் என்று அழைக்கப்பட்டனர். நாதுராம் கோட்சே ஜியைப் புகழ்வதற்கு போதுமான வார்த்தைகள் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீர சாவர்க்கர் மற்றும் நாதுராம் கோட்சே ஆகியோரை எனது மிகப்பெரிய ஹீரோக்களாக நான் கருதுகிறேன்” என்று கூறியவர்தான் யதி நரசிங்கானந்த்.
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கான நரசிங்கானந்தின் அழைப்புகள் உண்மையில் CAA மற்றும் அதற்கு எதிரான போராட்டங்களுக்கு முந்தையவை. 2019 அக்டோபரில் லக்னோவில் ஒரு தீவிர இந்துத்துவா தலைவர் கமலேஷ் திவாரி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட உடனேயே, அவர் அனைத்து முஸ்லீம்களையும் வன்முறையால் அச்சுறுத்தினார் மற்றும் இந்தியாவில் இருந்து இஸ்லாத்தை ஒழிப்பேன் என்று கூறினார்:
“ஒரு இந்து சிங்கம் கொல்லப்பட்டதையடுத்து, எங்கள் வீடுகள் அனைத்தும் துக்கத்தில் இருக்கிறது. இன்று கமலேஷ் திவாரியின் வீடு துக்கப்படுவதைப் போல நான் உங்களை துக்கப்படுத்தாவிட்டால், நான் என் தந்தையின் மகன் அல்ல என்று முஸ்லீம்களிடம் சொல்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரை ஆயுதங்களைப் பயன்படுத்துவேன். ஒவ்வொரு முஸ்லீம்களிடமும் நான் சொல்கிறேன், ஒரு நாள் நாட்டில் இருந்து இஸ்லாத்தை ஒழிப்போம்” என்று வெறுப்பு பேச்சு பல பேசித் திரிபவர்தான் யதி நரசிங்கானந்த்.
இதேபோல், பாடி சங்கத் ஆசிரமத்தின் பூசாரி மஹந்த் பஜ்ரங் முனி, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் இந்து புத்தாண்டின்போது போலீசுத்துறை முன்னிலையில் முஸ்லீம் பெண்களுக்கு எதிராக பாரிய பாலியல் வன்முறைக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.
மஹந்த், கைராபாத் பகுதியில் உள்ள பாடி சங்கத் உதாசின் ஆசிரமத்தின் தலைமை பூசாரி ஆவார். “நீங்கள் ஒரு இந்து பெண்ணை துன்புறுத்தினால், நான் வெளிப்படையாக உங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வேன்” என்று மஹந்த் மிரட்டினார்.
இப்படி வெறுப்பு பேச்சுக்களை பேசித் திரியும் யதி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப் போன்ற இந்துமதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவதில் எந்த குற்றமும் இல்லை. எனினும் இது ஓர் குற்றம்போல் சித்தரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு கருத்து சுதந்திரத்திற்கு மிகவும் ஆபாயத்திற்குறியது.
முஸ்லீம் மக்களை படுகொலை செய்ய வேண்டும், விரட்டியடிக்க வேண்டும், பாலியல் வன்கொடுமை செய்யவேண்டும் என்று பொதுவெளியில் பேசி இந்துமத வெறியையும், மத கலவரங்களையும் தூண்டி நடந்தி வரும், இந்த இந்து பயங்கரவாதிகளை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம். இதைவிட கேலிக்கூத்து இந்த நாட்டில் வேறெதுவும் இருக்க முடியாது. இது போன்ற கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலை நாம் உழைக்கும் மக்களாக இணைந்து ஒழித்துக் கட்டாவிட்டால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் சங் பரிவார் கும்பல் ஜனநாயகத்தின் நுகத்தடியை முற்றாக வெட்டிவீசும் நாள் வெகுத்தொலைவில் இல்லை.
காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க