இலங்கை மக்கள் எழுச்சி : உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளுக்கு பீதியூட்டும் போராட்டம்! | வீடியோ

இலங்கை மக்கள் போராட்டம் என்பது உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், அதேபோல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வலதுசாரி பாசிஸ்டுகளுக்கு பீதியை ஏற்படுத்து வகையிலும் அமைந்துள்ளது.

ஜூலை காலிமுகத்திடல் பகுதியில் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதன் 90வது நாள் நிறைவடைகிறது. அதையடுத்து நாடுமுழுவதும் ஒரு போராட்டத்தை நடத்தவேண்டும் என்று காலிமுகம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அறைகூவல் விடுக்கிறார்கள்.

அதனையடுத்து, இலங்கை முழுவதும் ஓர் பேரெழுச்சி ஏற்பட்டது. அதில் குறிப்பாக அதிபரின் செயலகத்தை பெருந்திரளான மக்கள் சென்று கைப்பற்றினார்கள். அங்கிருக்கும் நீச்சல் குளத்தில் மக்கள் விளையாடுகிறார்கள். அங்கிருக்கும் நாற்காலிகளிலும் கட்டில்களிலும் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். அங்கிருக்கும் உணவு பொருட்களை எடுத்து சமைத்து சாப்பிடுகிறார்கள்.

அங்கு நிறைய பதுங்கு அறைகள், ரகசிய அறைகள் எல்லாம் இருக்கின்றன. அதில் ஒருஇடத்தில் கிட்டத்தட்ட 1.78 கோடி ரூபாய் ரொக்கப்பணம் இருந்திருக்கிறது. அந்தப்பணத்தையெல்லாம் முறையாக எடுத்து போலீசுத்துறையிடம் ஒப்படைந்துள்ளார்கள்.

இந்த போராட்டம் என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய புரட்சிகர சக்திகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதேபோல உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வலதுசாரி பாசிஸ்டுகளுக்கு ஓர் பீதியை ஏற்படுத்தக்கூடிய போராட்டமாகவும் இது அமைந்துள்ளது. மேலும் பல்வேறு விவரங்களுடன் இலங்கை மக்களின் எழுச்சிக்கு இக்காணொலியில் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

  1. ஆமாம் சீனாவில் மக்களை அடிமைப்படுத்தி ஆளும் கம்யூனிஸ்ட் பாசிஸ்டுகளுக்கு பீதியூட்டும் போராட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க