கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ் ரவி கலந்துகொண்டார்.

இந்தியாவில் ஆளும் அரசுக்கு எதிராக துப்பாக்கியை பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். அதாவது வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் சில குழுக்கள் தங்களது வாழ்க்கை மற்றும் உரிமையை மறுக்கும் இந்த அரசுக்கு எதிராக ஆயுதந்தாங்கி போராடி வருகிறன்றனர். இந்த குழுக்களையும் நக்சலைட் மவோயிஸ்டுகளையும் துப்பாக்கி கொண்டு அடக்குவோம் என்று அவர் பேசியுள்ளார்.

இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் உழைக்கும் மக்களை இந்திய ராணுவ அடியாள்படை கொன்று குவித்து வருகிறது. அங்கு இருக்கும் சிறப்பு ராணுவ ஆயுத சட்டத்தை பயன்படுத்தி கொண்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சொல்லிமாளாத பல்வேறு கொடுமைகளை செய்து வருவதை தனது வாடிக்கையான தொழிலாக இந்திய ராணுவத்தினர் வைத்துள்ளனர். ஆயுதம் காட்டி அடக்குமுறை செய்யும் இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு எதிராகதான் அந்த குழுக்கள் ஆயுதம் தாங்கி போராடி வருகிறது. அதுபோல் உழைக்கும் மக்களின் விடியலுக்காவும் இந்திய அரசின் அடக்குமுறை மற்றும் இயற்கை கொள்ளைக்கும் எதிராக ஆயுதம் தாங்கி போராடி வருகிறார்கள் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்டுகள். ஆயுதம் தாங்கிய தனது போராட்டத்தின் மூலம் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் செயல்படும் அவர்களை கொன்று ஒழிப்பதுதான் தீர்வு என்ற பொருளில் பேசியுள்ளார் இந்த ஆர் எஸ் எஸ் உளவாளி.

ஆனால் பீமாகொரேன்கான், மாலேகான் கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம், ஜாகின்பாக் கலவரம், பாபர் மசூதி இடிப்பு போன்றவற்றை நடத்திக்காட்டிய இந்துத்துவ ஆயுதந்தாங்கிய பயங்கரவாத கும்பல்களுக்கு அவர்கள் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்பு தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்துராஷ்டிரம் அமைக்க போராடுபவர்கள். அதனால் அவர்களை ஊக்குவித்து சட்டப்பாதுகாப்பும் அளிப்பதுதான் இந்த அரசின் நோக்கம்.

‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

தொடர்ந்து பேசிய அவர், ’’தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை” என்று கூறியுள்ளார். அதாவது நாம் ஆயுதம் தாங்கி போராடவில்லை என்றாலும் கூட அரசின் அக்கப்போர்கள், அடக்குமுறைகள், உரிமை பறிப்பு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக பேசினால் கூட ஆளும் வர்க்கத்தின் துப்பாக்கி நம்மை நோக்கி பாயும். அது ராணுவத்தின் துப்பாக்கியாக கூட இருக்கலாம் அல்லது கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்ற முற்போக்கு அறிவு ஜீவிகளை கொன்ற ஆர் எஸ் எஸ் அமைத்து இருக்கும் நிழல் ராணுவத்தின் துப்பாக்கி குண்டாக கூடா இருக்கலாம்.

மேலும் அவர் தேச ஒருமைப்பாடு என்று கூறுவது தற்போது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கும் ஒருமைப்பாடு அல்ல என்றும் அவர்கள் இந்தியாவில் மிகவேகமாக நடைமுறைபடுத்தி வரும் இந்து ராஷ்டிரத்தின் ஒருமைப்பாடுதான் என்று அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

ரவி தொடர்ந்து இப்படி பேசுவது என்பது அவர் ஏற்றுக்கொண்ட இந்துத்துவ சனாதன சித்தாந்தத்தின் அடைப்படியில் தான். அவருக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அதுதான் அகண்ட பாரத்தத்தில் இந்துராஷ்டிரா அமைப்பது. அந்த இந்து ராஷ்டிராவில் சனாதன தர்மம் சட்டமாக இருக்கும். அதற்கான பணிகளை அடித்தளத்தில் அவர்களது அடியாட்படை செய்து கொண்டு இருக்கும்போது அதை வெளிக்கூறும் நபராக தான் ரவி இருக்கிறார்.

ஏற்கனவே, சென்னை வானகரத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆர்.என்.ரவி, ‘பாரதம் என்பது சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டது. மரத்தில் உள்ள இலைகள், கிளைகள் ஆகியவற்றைப் போல நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் கொள்கைகளும் மாறுபடலாம். வேற்றுமையில் ஒற்றுமையைப் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத்தான் சனாதன தர்மமும் கூறுகிறது. நாட்டில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி என்பது அவசியம். அதுவே இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்’ எனக் குறிப்பிட்டார்.

ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலைப்புச் சட்டமானது, சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. என்று தான் ஏற்றுக்கொண்ட ஆர் எஸ் எஸ் சித்தாந்த கருத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் சானதன தர்மம் அடங்கி இருப்பதாகவும் அது தேவைக்கு ஏற்றவாறு வளர்ச்சியடைய வேண்டும் என்றும் கூறுகிறார். அதாவது இனிமேல் உருவாக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் வெளிப்படையாக சனாதன தர்மத்தின் அடிப்படையில் இருக்கும் என்றும் இலைமறைக்காயாக எடுத்து இயம்புகிறார். தற்போது பாசிச மோடி அரசால் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள் இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்கும் வகையில் தான் உள்ளன. உபா சட்ட திருத்தம், பசுவதை தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம், மாட்டுக்கறி உண்ண தடை, லவ் ஜிகாத, கலால் ஜிகாத் என்று பல்வேறு செயல்பாடுகளை நாம் கூறலாம். இதுதான் தற்போது இருக்கும் இந்திய தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு. இதற்கு எதிராக யார் பேசினாலும் துப்பாக்கி குண்டுகள் பாயும். அது அமைப்பாக இருந்தாலும் தனி நபராக இருந்தாலும் சரி. இந்துத்துவ துப்பாக்கிகுண்டுகள் நம் உடலில் பாய்ந்தே தீரும் என்றும் திருவாளர் தமிழக ஆளுநர் கூறுகிறார்.

இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுந‌ர், திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் சென்னை ஸ்ரீ  ராம் சமாஜத்தில் ராம நவமி விழாவை தொடங்கி வைத்து, இன்றைய மிக முக்கிய காலத்தில் நம் நாடு அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருவதை விளக்கினார் என்று கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற கருத்துகள் மற்றும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள், இந்துத்துவ காலிகளின் களியாட்டங்கள் ஆகியவை இந்தியாவில் இந்துராஷ்டிரம் கட்டமைக்கப்பட்டு மிக தீவிரமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது என்பது நன்கு புலனாகிறது.

ரவி தமிழக ஆளுநராக பதவியேற்றது முதல் அவர் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் வெறும் மாநில அரசின் உரிமை பறிப்பு மட்டும் அல்ல. அது அகண்ட பாரதத்திற்கான அடித்தளம். தற்போது இந்த இந்துராஷ்டிரத்திரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் ஆர் எஸ் எஸ், பாஜக அறிவிக்கும் இது இந்து ரஷ்டிரம் என்று. அந்த அறிவிப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகோ அல்லது முன்பாக கூட இருக்கலாம். அறிவிப்புக்காக மட்டும்தான் காத்து இருக்கிறது. தற்போது நம்மை ஆளும் இந்த இந்து ராஷ்டிரா.

மூச்சுவிட நேரம் தரும் என்று ’’இடைவெளியும்’’ அவர்களின் இளவல்களும் எடுத்து கூறிய, எந்த முன்னேற்ற கழகங்களும் நம்மை இந்த இந்துத்துவ அதானி அம்பானி பாசிசத்தில் இருந்து காத்துவிடாது. நாம் களம் புகாதவரை இந்த பாசிசத்தையும் வீழ்த்த முடியாது.

ராவண வடிவேல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க