புவியின் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் செறிவுகள் 2021-இல் உச்ச அளவை எட்டியுள்ளன என்று ஐ.நா வானிலை அமைப்பின் அறிக்கை அக்டோபர் 26 அன்று தெரிவித்துள்ளது.

2020 முதல் 2021 வரை, மூன்று முக்கிய பசுமை இல்ல வாயுக்களின் வளிமண்டல செறிவு – கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு – கடந்த பத்தாண்டுகளின் சராசரி விகிதத்தை விட அதிக அளவில் உயர்ந்துள்ளது என்று உலக வானிலை அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

கிரீன்ஹவுஸ்(பசுமைஇல்ல) வாயுக்கள் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களாகும். இந்த வாயுக்களின் அளவு அதிகரிப்பதற்கான காரணங்களில் மனித நடவடிக்கைகளும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர், மேலும் இதனால் புவி வெப்பமடைதல் அதிகரிக்கலாம் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடு தொழில்துறைக்கு முந்தைய அளவின் 149 சதவிதத்தை எட்டியது என்றும், புதைபடிவ எரிபொருட்கள் மற்றும் சிமென்ட் உற்பத்தியின் காரணமாக ஏற்படும் உமிழ்வுகள் இதற்குக் காரணம் என்றும் உலகளாவிய வானிலை நிறுவனம் அக்டோபர் 26 அன்று கூறியது.

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு முறையான அளவீடுகள் தொடங்கியதிலிருந்து மீத்தேன் அளவு ஆண்டுக்கு ஆண்டு மிக அதிகமாவதை பதிவு செய்துள்ளது என்று அந்த அமைப்பு கூறியது.

2019 மற்றும் 2020-க்கு இடையில் நைட்ரஸ் ஆக்சைட்டின் செறிவு 2020 மற்றும் 2021-க்கு இடையில் விகிதத்தில் அதிகரித்துள்ளது என்று உலக வானிலை அமைப்பு கூறியது. 2020 மற்றும் 2021-க்கு இடையில் வாயுவின் செறிவு மற்றும் அளவு அதிகரிப்பு, கடந்த 10 ஆண்டுகளுக்கான சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக உள்ளது என்று கூறியது.

படிக்க : அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022 – பத்திரிகை துறையின் மீதான பாசிச நடவடிக்கை!

2021 ஆம் ஆண்டில், கார்பன்-டை-ஆக்சைடு செறிவுகள் மில்லியனுக்கு 415.7 பாகங்களாகவும், மீத்தேன் ஒரு பில்லியனுக்கு 1,908 பாகங்களாகவும், நைட்ரஸ் ஆக்சைடு ஒரு பில்லியனுக்கு 334.5 பாகங்களாகவும் பதிவாகியுள்ளன. “இந்த மதிப்புகள் முறையே 149%, 262% மற்றும் 124% தொழில்துறைக்கு முந்தைய நிலைகளில் மனித நடவடிக்கைகள் வளிமண்டலத்தில் உள்ள இந்த வாயுக்களின் இயற்கையான சமநிலையை சீர்குலைக்கத் தொடங்கும் முன்” என்று அறிக்கை கூறியது.

2020 ஆம் ஆண்டு கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவுகளுக்கு பிறகு உலகளாவிய கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதாக உலகளாவிய வானிலை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான மிகப்பெரிய சவாலையும் இன்றியமையாத அவசியத்தையும் இந்தத் தரவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டேரி தாலாஸ் கூறினார். குறிப்பாக புதைபடிவ எரிபொருள் துறையில் செலவு குறைந்த உத்திகள் மூலம் மீத்தேன் உமிழ்வை குறைக்க முடியும் என்று தலாஸ் கூறினார். “இருப்பினும், மீத்தேன் 10 ஆண்டுகளுக்கும் குறைவான வாழ்நாளைக் கொண்டுள்ளது, எனவே காலநிலையில் அதன் தாக்கம் மீளக்கூடியது” என்று அவர் கூறினார்.

“முதல் மற்றும் மிக அவசர முன்னுரிமையாக, காலநிலை மாற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தீவிர வானிலை ஆகியவற்றின் முக்கிய இயக்கியான கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க வேண்டும், மேலும் இது துருவ பணிப்பாறைகள் உருகுதல், கடல் வெப்பமயமாதல் மற்றும் கடல் மட்ட உயர்வு மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான காலநிலையை பாதிக்கும்” என்றார்.

காலநிலை மாற்றங்களை குறைக்க கார்ப்பன் டை ஆக்சைடு உமிழ்வை குறைக்கவேண்டும். ஆனால் பல்வேறு கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களின் அடிவருடி நாடுகளும் பசுமை இல்ல வாயுக்களை வெளியும் தொழிற்சாலைகளை கட்டுபடுத்துவதில்லை. முதலாளித்துவத்தின் இலாபவெறி உலகை அழிவின் விளிம்பிற்கு கொண்டுசெல்லும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க