ன்பார்ந்த வினவு வாசகர்களே,

அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு சேவை செய்யவும் தனது பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒட்டுமொத்த நாட்டையும் பத்து ஆண்டுகாலமாக சூறையாடி வருகிறது பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் பாசிசக் கும்பல்.

தற்போது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ராமர் கோவில் திறப்பை ஆயுதமாக கையிலெடுத்துள்ளது.

ராமர் கோவில் திறப்பை “இந்துராஷ்டிரத்தின் பட்டாபிஷேகம்” என்ற வகையில் ஆர்ப்பரிக்கிறது காவிக் கும்பல். ராம ராஜ்ஜியத்தின் ‘மன்னனாக’ (கார்ப்பரேட் சேவகனாக) முடிசூட்டிக்கொள்ள ஆயத்தமாகி வருகிறார் பிரதமர் மோடி.

இந்நிலையில், ‘மோடி அரசின் சாதனையாக’, ‘இந்துக்களின் வெற்றியாக’ பிரச்சாரம் செய்யப்படும் ராமர் கோவில் திறப்பு நிகழ்வு உண்மையில், அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலின் சேவைக்கான, உழைக்கும் மக்களுக்கு எதிரான பாசிசக் கும்பலின் பேயாட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சதி என்பதனை அம்பலப்படுத்தி ஜனவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் வினவு தளத்தில் தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியிட உள்ளோம். வாசகர்கள் இக்கட்டுரைகளை படித்து தொடர்ந்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 


வினவு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க