
04.04.2026
கல்விக் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவைக் கைவிடு!
பத்திரிகைச் செய்தி
கடந்த புதன் கிழமையன்று (01/04/2026) சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் 10 சதவீதம் மற்றும் சுயநிதி பாடப் பிரிவுகளுக்கு 15 சதவீதம் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக கல்விக் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றும் சென்னைப் பல்கலைக் கழகம் மிகப் பெரிய நிதி நெருக்கடியில் இருப்பதை இதன் மூலம் ஈடு செய்வதற்காக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் காரணம் கூறுகின்றனர்.
ஒன்றிய மாநில அரசுகள் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியினை முறையாக ஒதுக்காமல் செயற்கையாக நிதி நெருக்கடியினை உருவாக்கி வருகின்றன.
ஒன்றிய மாநில அரசுகளிடம் நிதியைக் கோரி பெறாமல் மாணவர்களிடம் அதிக கல்விக் கட்டணத்தை வசூல் செய்து நெருக்கடியினை தீர்க்க முயல்வது என்பது ஏழை எளிய மாணவர்கள் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதலாகும். இது அவர்களை கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையாகும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதுடன் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவைக் கைவிடுமாறு கோருகிறது.
![]()
இவண்
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை.
9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











