மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு திறமையின் அடையாளமா?

தேசிய தேர்வு முகமை போன்ற ஆணையங்களைக் கலைக்க வேண்டும்; நீட் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

ஊழலின் ஊற்றுக் கண்ணா? மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்ட திரிபுவாதத்தைத் தடுக்க, இந்தியா முழுமையும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்:

டந்த மே 16 அன்று ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் தோழர் வனவேந்தன் தலைமைத் தாங்கினார். இதில், மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக மாவட்டச் செயலாளர் தோழர் இரஞ்சித் கலந்துகொண்டார்.

குறிப்பாக, கடந்த மே 3 அன்று நடைபெற்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் மோசடி-முறைகேடுகள் நடந்திருப்பது பொதுவெளியில் அம்பலமான நிலையில், தேசிய தேர்வு முகமை கடந்த மே 15 அன்று அத்தேர்வை அதிகாரப்பூர்வமாக இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, 2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் 67 மாணவர்கள் 720-க்கு 720 முழு மதிப்பெண்களைப் பெற்றது, வினாத்தாள் கசிவு உள்ளிட்டு பல்வேறு மோசடிகள் அம்பலமாகின. இதனையடுத்து, மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் நாடு முழுவதும் தீவிரமாகப் போராட்டத்தைக் கட்டியமைத்தனர். பல மாநிலங்களில் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்தன. ஆனால், மோசடிகள் நடந்துள்ளதை வேறுவழியின்றி ஏற்றுக்கொண்ட பாசிச மோடி அரசு திமிர்த்தனமாக மறுதேர்வு நடத்த மறுத்துவிட்டது. இந்நிலையில், இந்தாண்டு மீண்டும் நீட் தேர்வு மோசடி அம்பலமாகி அத்தேர்வின் யோக்கியதை வெட்டவெளிச்சமாகியுள்ளது.

உழைக்கும் மக்களே!

தமிழ்நாட்டில் 2017-இல் அனிதாவின் தியாகத்திற்குப் பிறகு நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களைக் கட்டியமைத்து வருகிறோம். இந்நிலையில்தான், நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக பா.ஜ.க. ஆளக்கூடிய பசுவளைய மாநிலங்களிலும் போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நீட் தேர்வு ஊழல் மோசடிகள் கல்வி கட்டமைப்பு சிதைந்து வருவதை நமக்கு உணர்த்துகின்றன.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் மறுகாலனியாக்க கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தை தீவிரமாக அமல்படுத்துவதன் வாயிலாக ஒட்டுமொத்த கல்வி கட்டமைப்பையும் பாசிசமயமாக்கி வருகின்றனர்.

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், கேள்வி கேட்க முடியாத அதிகாரம் கொண்ட ஆணையங்களாக தேசிய தேர்வு முகமை போன்ற அமைப்புகளை உருவாக்கி அவற்றை கார்ப்பரேட்மயமாக்கி வருகின்றனர். இதனை எதிர்த்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டி இருக்கிறது.

தேசிய தேர்வு முகமை போன்ற ஆணையங்களைக் கலைக்க வேண்டும்; நீட் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தோழர். இரஞ்சித்,
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகார கழகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க