மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை
– உடலை வாங்க மறுத்த 100வது நாள்
– தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, அவரது பெற்றோர் உறவினர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வந்த நிலையில், நீதிமன்றத்தின் துணையுடன் பெற்றோரின் விருப்பமின்றியே ஆகாஷின் போலீசு எரித்துள்ளது. இப்போராட்டத்தின் 100-வது நாளில் 16 குற்றவாளி போலீசுகளை கைது செய்யக்கோரி மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை:
மக்கள் அதிகார கழகம் சென்னை மாவட்டம் சார்பாக, ஜூன் 15 அன்று சென்னை மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகத்தில காலை 11 மணிக்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் ராஜ்குமார்,
வடசென்னை மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.
தோழர் ஆவடி நாகராசன்,
ஆவடி மாவட்டச் செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
தோழர் அஸ்கர் அலி,
மாநில செயற்குழு உறுப்பினர்,
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI).
தோழர் அ.முகமது காசிம்,
மாநில ஊடகப்பிரிவு செயலாளர்,
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
தோழர் அறிவு,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
தோழர் ராஜேந்திரன்,
வழக்கறிஞர், சென்னை.
ம. முகமது கவுஸ்,
தமிழ்நாடு வெல்ஃபேர் கட்சி.
***
காஞ்சிபுரம்:
மக்கள் அதிகாரக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக ஜூன் 15 அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

***
திருவள்ளூர்:
ஜூன் 17 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் அதிகாரக் கழகத் தோழர் ஆகாஷ் தலைமையில், எஸ்.டி.பி.ஐ. திருவள்ளூர் மாவட்டச் செயலாளர், தோழர் வி.எம்.துல்கர் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் அறிவு இணைந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மு.வெங்கட்ராமனிடம் மனுக் கொடுக்கப்பட்டது.

***
திருவாரூர்:
திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் நிகழ்வில் மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் ஆசாத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலத் துணைச் செயலாளர் தோழர் சீமா மகேந்திரன், தமிழக இயற்கை உழவர் இயக்கத் தோழர் ஜி.வரதராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சீனி செல்வம், கிராமிய நாடக இசைக்கலைஞர் தோழர் பக்ரீத் தாஸ், மக்கள் அதிகாரக் கழக இணைச் செயலாளர் தோழர் லெனின், மக்கள் அதிகாரக் கழக மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர் முரளி, தோழர் மோகன், தோழர் வாஞ்சிநாதன் மற்றும் அம்மையப்பன் போராட்டத் கமிட்டி தலைவர் தென்கால் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

***
கோவை:
கோவையில் மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன் தலைமையில் ஜனநாயக சக்திகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கப்பட்டது.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் இனியன்,
சி.பி.ஐ(எம்.எல்) ரெட் ஸ்டார்.
தோழர் ஆனந்தி,
விடுதலை தமிழ் புலிகள் கட்சி.
தோழர் பார்த்திபன்,
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்.
தோழர் ரகுபதி,
திராவிட மக்கள் இயக்கம்.
தோழர் மலரவன்,
புரட்சிகர இளைஞர் முன்னணி.
தோழர் நேரு தாஸ்,
தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகம்.
ராஜுவ் காந்தி,
மக்கள் விடுதலை முன்னணி.
***
திருப்பூர்:
திருப்பூரில் மக்கள் அதிகாரக் கழக இணைச் செயலாளர் தோழர் மாறன் தலைமையில் ஜனநாயக சக்திகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கப்பட்டது.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் சுப்பையா,
மாவட்டச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் முகில் ராசு,
மாவட்டத் தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
தோழர் இசாக்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் ரிஸ்வான்,
வெல்ஃபேர் கட்சி.
***
ஈரோடு:
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரக் கழக கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமையில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனுக் கொடுக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள்:
சு.சலீம் பாட்ஷா,
ஈரோடு மத்திய மாவட்டப் பொருளாளர்,
தமிழ்ப் புலிகள் கட்சி.
S.K.ஹரீஷ்
ஈரோடு மத்திய மாவட்டத் தொழிற்சங்கம்,
தமிழ்ப் புலிகள் கட்சி.
***
உதகமண்டலம்:
மக்கள் அதிகாரக் கழக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் தலைமையில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து உதகமண்டலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள்:
தோழர் பெரியார் கார்த்திக்,
நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்,
மனித நேய ஜனநாயக கட்சி.
***
கரூர்:
மக்கள் அதிகாரக் கழக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள்:
தோழர் சுடர் வளவன்,
மாநில தொழிற்சங்க பேரமைப்பு,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
***
நெல்லை:
மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் தோழர் சந்துரு தலைமையில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள் :
தோழர் ராமகிருஷ்ணன்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
தோழர் முத்துவீரன் மற்றும் கட்சி தோழர்கள்
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி.
தோழர் மீனா,
மாநில மகளிர் அணி செயலாளர்,
திராவிட தமிழர் கட்சி.
தோழர் கபிலன்,
நெல்லை மாவட்டச் செயலாளர்,
மக்கள் தமிழகம் கட்சி.
தோழர் பிரியா மனோகரன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
***
தூத்துக்குடி:
மக்கள் அதிகாரக் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா தலைமையில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் முத்துலட்சுமி,
வழக்கறிஞர்,
அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கம்
தோழர் அ.அசோக்குமார்,
ஓட்டப்பிடாரம் தாலுகா செயலாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
தோழர் சார்ல்ஸ்
மாவட்டச் செயலாளர்
ஓட்டப்பிடாரம் தொகுதி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் மின்னல் அம்ஜ்த் ,
தேசிய செயற்குழு உறுப்பினர்,
AICCTU.
தோழர் சந்தோஷ்
சமூக செயற்பாட்டாளர்.
தோழர் தூத்துக்குடி சம்ஸ்தீன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு இஸ்லாமியர் கூட்டமைப்பு.
தோழர் காந்தி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு மக்கள் நலக் இயக்கம்.
***
தென்காசி:
மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணி தோழர் கின்ஷன் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள்:
தோழர் பொதிகை ஆதவன்,
தென்காசி மாவட்டச் செயலாளர்,
ஆதித் தமிழர் கட்சி.
தோழர் செல்வராஜ்,
தென்காசி நகரச் செயலாளர்,
ஆதித் தமிழர் கட்சி.
தோழர் தென் தமிழரசு,
தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர்,
ஆதித் தமிழர் பேரவை.
***
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைபில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனு அளிக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள்:
தோழர் சு.கோபி போரறிவாளன்,
மாவட்டச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் கி.குமரேசன்,
மாவட்டச் செயலாளர்,
ஆதித்தமிழர் கட்சி.
தோழர் மு.ராஞ்சித் குமார், மாவட்ட இளைஞரணி,
திராவிட தமிழர் கட்சி.
தோழர் ஆத்தியப்பன்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்ப்புலிகள் கட்சி.
தோழர் நாஞ்சில் துரை,
நில உரிமை மீட்பு இயக்கம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் செல்வன்,
ஒன்றிய செயலாளர்,
ஆதித்திராவிடர் நலக்குழு உறுப்பினர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் P.பாபு,
மாவட்டத் துணைச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் S.ராஜன்,
மாவட்டத் துணைச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
மற்றும் பல்வேறு ஜனநாயக – முற்போக்கு அமைப்புகளின் பிரதிநிதிகளும் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
***
கள்ளக்குறிச்சி:
மக்கள் அதிகாரக் கழகத்தின் மனு கொடுக்கும் இயக்கமான மானாமதுரை பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை செய்த காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் அதிகாரக் கழகம் தோழர் வினாயகம் தலைமையில் மனு கொடுத்தோம்.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் வினாயகம்
செயலாளர் மக்கள் அதிகாரக் கழகம்,
தோழர் மணிபாலன்
இனைசெயலாளர் மக்கள் அதிகாரக் கழகம்,
அறிவுக்கரசு மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி,
இளையராஜா மாவட்ட துனை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி,
மகேந்திரன்
திருநாவலூர் தெற்கு ஒன்றிய செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
***
மானாமதுரை பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் போலீஸ் லாக்கப் படுகொலை செய்த போலீசு குற்றவாளிகளை கொலை வழக்கு பதிவு வேண்டும் உடனே கைது செய்ய வேண்டும் என்று படுகொலை செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷின் பெற்றோர் உறவினர்கள் ஜனநாயக சக்திகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
அந்தப் போராட்டம் நூறாவது நாளை அடைந்துள்ளது ஆகாஷ் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெறும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாட்டில் கொட்டடி கொலைகள் நடைபெறுவதை தடுக்கவும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவும் இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் 15/6/26 அன்று மேற்கொண்டது.
அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் தோழர் சாந்தகுமார் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாணவரணி செயலாளர் தோழர் பிரசாத், தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுச்சேரி இளைஞரணி செயலாளர் தோழர் விஜயன், மக்கள் பாதுகாப்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரமேஷ் ஆகியோர் பங்கெடுத்து கொண்டு தங்களுடைய கண்டனங்களையும் ஆதரவினை தெரிவித்தனர்.
கடலூர்:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் முருகானந்தம் தலைமையில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனு அளிக்கப்பட்டது.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் சா.முஜிபுர் ரஹ்மான்,
வழக்கறிஞர்,
மாவட்ட செயற்குழு,
SDPI.
தோழர் A.உத்ரவேல்
வழக்கறிஞர் அணி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் வே.விடுதலை,
மாநகர செயலாளர்,
ம.தி.மு.க.
தோழர் தீனதயாளன்,
வழக்கறிஞர்,
LIC லிக்காய் முகவர் சங்கம்.
தோழர் அருள்,
மக்கள் அதிகாரக் கழக சட்ட ஆலோசகர்.
தோழர்.ராமலிங்கம்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர்.சக்திவேல்,
நகர செயலர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் சக்திவேல்,
மாவட்ட துணை செயலர்,
மக்கள் அதிகாரக் கழகம்
தோழர் பெருமாள், தோழர் சத்தியமூர்த்தி, தோழர் ராமு, தோழர் ஜீவா, தோழர் விஸ்வநாதன் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.
***
ராணிப்பேட்டை:
மக்கள் அதிகார கழகம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைந்து ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மானாமதுரை ஆகாசின் லாக்கப் படுகொலை கண்டித்து அவருடைய பெற்றோர்கள் நூறாவது நாளாக போராடிக் கொண்டு வருகிறார்கள்.
ஆகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு 100 நாட்களாக போராடி வருகிறார்கள் அவருடைய பெற்றோர்கள் கிராம மக்கள் இவர்களுடைய போராட்டத்தை ஆதரித்து மக்கள் அதிகாரக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரிடம் கொட்டடி படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

***
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகளை இணைத்துக்கொண்டு மனு அளிக்கப்பட்டது.

***
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகளை இணைத்துக்கொண்டு மனு அளிக்கப்பட்டது.

***
தகவல்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











