புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு || புமாஇமு கண்டனம்
மக்களுக்கான சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல், புதிய கல்விக் கொள்கை போன்ற தனது காவி, கார்ப்பரேட் பாசிச செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது மோடி அரசு
கொரோனா பேரிடியால் வாழ்விழந்த நாடக, நாட்டுப்புற கலைஞர்கள், ஓவியர்கள், இலக்கியவாதிகள் || ம.க.இ.க. செய்தி !!
தமிழகமெங்கும் வீதிதோறும் பாடல், இசை, நடனம் போன்ற கலைகளின் மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு இக்கலைஞர்களை ஈடுபடுத்தலாம்.
இந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக !
சர்வதேச பத்திரிக்கைகளும் கொரோனா மரணங்களின் குற்றவாளி மோடிதான் என்று 56 இன்ச் மார்பை விமர்சனங்களால் பிளந்து போட்டிருக்கின்றன. சொந்த கட்சியினரிடையேயே நிலவும் அதிருப்தியை களைய, உடைந்து நொறுங்கிய மோடியின் இமேஜை ஒட்டவைக்க ஆர்.எஸ்.எஸ் Positivity Unilimited என்ற பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது.
மணிப்பூர் : மாட்டுச்சாணம் கொரோனாவை குணப்படுத்தாது என பதிவிட்ட பத்திரிகையாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது
அறிவியலாளர்கள், மருத்துவர்கள் பசும் சாணத்தில் எந்தவித மருத்துவ குணங்களும் இல்லை என பல காலமாக விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.க-வைப் பொறுத்த வரையில் பசுவும், பசு சார்ந்த சாணியை விமர்சிப்பதும் கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படக் கூடிய அளவுக்கு பெரும் குற்றமாகி விடுகிறது.
கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!
ஒரே நாடு ஒரே கொள்கை என்று முழங்கியவர்கள், பேரிடர் காலத்தில் மாநிலங்கள் சுயமாக பன்னாட்டு கம்பெனிகளிடம் விலை பேசி தடுப்பூசியை வாங்கி கொள்ளுங்கள் என்று கையை விரித்து விட்டது. தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு அதிக விலையை நிர்ணயித்து, அதில் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்ளவே துடித்தனர்.
இந்திய முன்னணி 15 நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு 37.39 லட்சம் கோடி !
கடந்த 2020-ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் மருந்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.8.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையான மருத்துவம் எந்த அளவிற்கு இலாபம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அசாமில் 12வயது சிறுமி பாலியல் வன்கொலை
அவள் பகலில் தீக்குளித்திருந்தால் அவளது அழுகை குரல் தங்களுக்கு கேட்டிருக்கும் என்றும், அந்த சிறுமியை முதல் நாள் இரவே அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துவிட்டு மறுநாள் உடலை அவளது முதலாளிகள் எரித்து விட்டனர் என்று கூறுவதோடு அவள் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தாள் என்றும் சந்தேகிக்கின்றனர்.
மதுரை : கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை
சென்ற ஊரடங்குக்கு முன்பே மோடி அரசால் அமுல்படுத்தப்பட்ட, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு போன்ற திட்டங்களால் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் முடங்கியது. அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தவே கடன் தான் வாங்க வேண்டும் என்று நிலையை ஏற்படுத்தி விட்டது. ஊரடங்கோ மொத்தமாகவே அவர்களின் தொழிலை சவக்குழியை நோக்கித் தள்ளியது.
பூவிருந்தவல்லி தூசான் ஆலை தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய சதி ! || பு.ஜ.தொ.மு
அநீதியை தட்டிக்கேட்டு விடக்கூடாது என்பதற்காக தனது பேச்சைக் கேட்கும் டம்மி சங்கத்தை வைத்து தொழிலாளர்களை ஒருவருடன் ஒருவரை மோதவிடுவது, பிளவுபடுத்துவது, மிரட்டுவது, பொய்க் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்வது என பேயாட்டம் போட்டது, நிர்வாகம்.
இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதப் போரை முறியடிப்போம் !
அனைத்துலக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் கட்டியமைத்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதப் போரையும் தகர்த்தெறிவோம் !
லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு
சுகாதாரக் கணக்கீடு மற்றும் அளவீட்டு நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டை சுட்டிக் காட்டி இந்தியாவில் கோவிட் மரணங்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சமயத்தில் 10 இலட்சத்தைத் தொடும் வாய்ப்புள்ளதாக லான்செட் தலையங்கம் எச்சரிக்கிறது. “அப்படி ஒன்று நிகழ்ந்தால், மோடி அரசாங்கம்தான், தானே உருவாக்கிய தேசிய பேரழிவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளது லான்செட் தலையங்கம்.
கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்
கொரோனா பேரிடரில் பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகளை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் மக்களை சாகடிக்கிறது மோடி அரசு. இந்த கொரோனா தொற்றில் இருந்தும் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளில் இருந்து உழைக்கும் மக்களை காப்பதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பு மக்களுக்கும் அரசுகளுக்கு பல்வேறு முழக்கங்களை முன்வைக்கிறது.
ஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு || NDLF
ஆட்டோமொபைல் துறைக்கு வழங்கப் பட்டிருக்கும் அத்தியாவசிய பணி என்கிற பொருத்தமற்ற விலக்கினை ரத்து செய்து அந்த ஆலைகள் முழுஊரடங்கை கடைப்பிடிக்க உத்தரவிடுமாறும், மூடப்பட்ட முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காலத்துக்கு முழுஊதியம் வழங்க உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
தோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.
சாதி, மதவெறிப் பண்பாடு, சீரழிவுக் கலாச்சாரத்தின் நடுவே அமைப்பின் பத்திரிக்கைகளையும் துண்டறிக்கைகளையும் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மத்தியில் எடுத்துச் சென்று பல இளம் கம்யூனிசப் போராளிகளை உருவாக்கியவர் தோழர் சம்புகன்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு
தடை செய்யப்பட்ட அமைப்புகள் மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மோடி அரசின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்தும் போராடிய ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளாகும்.