மின்கட்டண உயர்வை எதிர்த்து சிறு, குறு தொழில்முனைவோர் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தை ஆதரிப்போம்!
இந்த மின்கட்டண உயர்வுக்கு முன்பு ஒரு தொழில் நிறுவனம் தோராயமாக 1720 யூனிட் பயன்படுத்தினால் செலுத்தி வந்த கட்டணம் ரூ. 16,148. மின் கட்டண உயர்வுக்கு பின், அதே அளவு பயன்பாட்டுக்கு தற்போது ரூ. 24,234 கட்ட வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் தொழிலை நடத்த முடியாத அவலநிலைக்கு தொழில்முனைவோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது காங்கிரஸ் அல்ல, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள்!
இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்ளும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள், மக்கள் பிரச்சினையில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசக் கும்பலை களத்தில் விரட்டியடிக்க மக்கள் முழக்கங்களை எழுப்ப வேண்டும். அத்துடன் மாற்றை முன்வைத்து செயல்பட வேண்டும்.
ஆன்லைன் தணிக்கையில் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் பாசிச மோடி அரசு
இந்தியாவின் தகவல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு , ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட "69A" என்ற பெயரில் ரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று தற்போது அம்பலமாகியுள்ளது.
அக்டோபர் 7: தனது சொந்த மக்களையே படுகொலை செய்த இஸ்ரேல்!
போரட், “பெயேரியில் இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டனர்; ஹமாஸ் போராளிகளால் அல்ல” என்று கூறினார். இது குறித்த செய்தியை “தி எலக்ட்ரானிக் இன்டிபாடா” (The Electronic Intifada) வெளியிட்டது.
வரலாறு பாடத்தில் இராமாயணம், மகாபாரதம்: கல்வியில் காவிக் குப்பைகள்!
இராமாயணம் மகாபாரதம் ஆகிய புராண குப்பைகளுக்கும் வரலாற்றுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கட்டுக்கதைகள் என்ற அளவில் கற்பிப்பதற்குக்கூட இவை தகுதியற்றவை.
ஒடிசா: பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்கத் திட்டமிடும் நவீன் பட்நாயக் அரசு!
தற்போது நவீன் பட்நாயக் அரசு முன்வைத்துள்ள திருத்தமானது கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் பழங்குடி மக்களின் நிலத்தைக் கையகப்படுத்துவதை எளிமையாக்கும்.
ஒடிசா மஜிங்மாலி மக்களின் இயற்கை வளங்களை சூறையாட துடிக்கும் கார்ப்பரேட்டுகளும் – அரசும்
அக்டோபரில் சிஜிமாலியில், ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் முன்னிலையில் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு எதிராக உள்ளூர்வாசிகள் இடைவிடாத போராட்டங்களை நடத்தினர்.
கட்சிரோலி: சுரங்கத்தை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டு என்று கூறி ஒடுக்கும் அரசு!
சுர்ஜாகர் மலையில் (Surjagarh hills) ஆறு இரும்பு சுரங்கங்கள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து கட்சிரோலி மாவட்டத்தின் எட்டாபள்ளி தாலுகாவில் அமைந்துள்ள டோட்கட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களின் மக்கள் மார்ச் 11-ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.
ஹலால் சான்று பெற்ற பொருட்கள் விற்க தடை விதித்த யோகி!
ஹலால் செய்யப்பட பொருட்கள் என்றபெயரில் மத பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று கூச்சலிடுகிறது சங்கிக்கூட்டம். ஆனால், பதஞ்சலி என்ற நிறுவனத்தின் மூலம் இந்துமதவெறியை பிரச்சாரம் செய்யும் பாபா ராம்தேவ் பற்றி வாய்த்திறக்காது.
”ஜி.எஸ்.டி வரி” என்பதே ஒரு மோசடி! அதை வைத்து கொள்ளையடிக்கும் குற்றவாளிகள்!
லஞ்சம், ஊழலில் ஊரிப்போயுள்ள இந்த அரசு அதிகாரிகள் இதை கண்டுகொள்ள போவதில்லை. எனவே உழைக்கும் மக்களாகிய நாம்தான் மக்களுக்கு விரோதமான ஜிஎஸ்டி வரிமுறையை கேள்வியெழுப்ப வேண்டும்.
எல் நினோ: ஏழை மக்கள் எதிர்நோக்கவிருக்கும் பட்டினி அபாயம்!
சர்க்கரையின் விலை உயர்வால், ரொட்டி உற்பத்தியை பாதியாகக் குறைக்க முடிவு செய்துள்ள ரொட்டி விற்பனையாளர்கள், “இது மிகவும் மோசமான சூழ்நிலை” என்று வேதனை பெருமூச்சுவிடுகின்றனர். இதனால், அந்நாட்டு ஏழை, எளிய மக்கள் பட்டினி அபாயத்தை எதிர்நோக்கவிருக்கின்றனர்.
செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டமும் தி.மு.க. அரசின் ஒடுக்குமுறையும்
செய்யாறில் மட்டுமல்ல, ‘வளர்ச்சித் திட்டம்’ என்ற பெயரில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் விளைநிலங்களையும் அழித்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கார்ப்பரேட் நலத் திட்டங்களை அமல்படுத்தத் துடிக்கிறது தி.மு.க. அரசு.
காசாவை இன அழிப்பு செய்யும் இஸ்ரேல்!
யூத மதவெறி இஸ்ரேலும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் தங்களின் நலன்களுக்காக எத்தனை பாலஸ்தீன மக்களை வேண்டுமானாலும் படுகொலை செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.
கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை கட்டிவரும் பாசிச மோடி அரசு!
மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு சில சமூக ஊடகங்களே எதிர்த்துப் பேசுகின்றன. அவற்றையும் இல்லாது ஒழிப்பதன் மூலம் எதிர்ப்பே இல்லையென்ற சூழலை உருவாக்குவதுதான் பாசிச மோடி கும்பலின் நோக்கம்.
உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்கள் – பேரழிவு அபாயங்களை புறந்தள்ளும் பிஜேபி அரசு!
உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகை 1 கோடி. ஆனால், அதை விட 3 மடங்கு பேர் (3 கோடி பேர்) ஆன்மீக சுற்றுலாவுக்காக அங்கு செல்கின்றனர். அங்கு ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையில் 140 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என கடந்த காலத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.