பி.எம். ஸ்ரீ திட்டம்: தேசிய கல்விக் கொள்கையின் சோதனைச்சாலை
ஒட்டுமொத்த அரசுப் பள்ளி கட்டமைப்பையே ஒழித்துக்கட்டி காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடுவதற்கேற்பவே மோடி அரசு இப்பாசிச திட்டத்தை வடிவமைத்துள்ளது.
உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லை அரங்கக் கூட்டத்திற்கு வருக !
கல்வியை கார்ப்பரேட்மயமாக்கவும், காவிமயமாக்கவும் துடிக்கும் இந்த அரசின் சதியை முறியடிக்க, கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரும் இக்கருத்தரங்கத்துக்கு வருக!
நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
இந்த (தற்)கொலைகளின் தாக்கம் நீட் எனும் மனுநீதிக்கு எதிராக எந்தக் கருத்தியலையும் மக்கள் மனதில் கொண்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீட் மரணங்களை இழப்பீட்டிற்காக நடக்கும் தற்கொலைகளாக சித்தரிக்கிறார்கள் நீதியரசர்கள் !
13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறையில் கூடுதலாக 4 ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் அது பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கே போதாது என்கிறார்கள் ஆசிரியர்கள். அப்படியானால் புதிதாக ஆசிரியர் பணியை நிரப்ப எந்தப் பணத்தை செலவு செய்வார்கள்.
கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கை!
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ரூ.22.94 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுவே சமஸ்கிருதத்தை மேம்படுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.
மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ?
"பெயிலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவ்வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கிறது" என மாணவர்களிடம் கூறித் தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார் கணித ஆசிரியை ஒருவர்...
நீட் : பாஜக கையாளப் போகும் உத்திக்கு பிள்ளையார் சுழி போட்ட கரு நாகராஜன் !!
நீட் தொடர்பாக தமிழ்நாடு தனிச்சட்டம் இயற்றினாலும், அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, கிடப்பில் போட்டு, நீர்த்துப் போகச் செய்யும் வகையில் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முடியும்.
பாரதிதாசன் பல்கலையில் தேர்வு கட்டண உயர்வு! திரு.வி.க அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
போராட்டம் நடத்தி இரண்டு நாட்கள் ஆகியபோதும் தேர்வு கட்டண குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தை அப்படியே வசூலிக்க தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
தொழில்நுட்ப கல்வியான நுண்கலை துறை படிப்பை, கலை மற்றும் அறிவியல் கல்வியாக மாற்ற புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு கலை பண்பாட்டு துறைச் செயலர் கடிதம் எழுதியதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE
கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் ஆணைகளாகவே உள்ளது.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – வஞ்சிக்கும் தமிழக அரசு !
மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டியிருந்தும், ஆட்சிக்கு வந்த திமுக அரசானது ஒரு மாதமாக மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களை கண்டுகொள்ளவில்லை.
ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்!
அனுதினமும் தற்கொலைகள் தொடர்கிறது. இதை சாதாரண செயலாக எண்ணி கடந்து செல்வது என்பது இனி நம் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு அல்ல அதை நினைப்பதற்கே பயம் கொள்ளும் நிலைமையே நோக்கி செல்லும்.
சிதிலமடைந்து வரும் குஜராத்தின் கல்வி கட்டமைப்பு!
தாய்மொழி குஜராத்திலேயே 96,000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது அம்மாநில அரசின் கல்வி கட்டமைப்பு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.
ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி – நெல்லை கருத்தரங்க செய்தி
‘’உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள்’’ எனும் தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் கடந்த நவம்பர் 10 அன்று நெல்லையில் நடைபெற்ற கருத்தரங்கம்.
பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !
பாரதியார் பல்கலையில் மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டிய NEP கருத்துக் கேட்பு கூட்டத்தை திட்டமிட்டே மாணவர்களைப் புறந்தள்ளி கண் துடைப்புக்காக நடத்துயுள்ளது. மாணவர்களின் நேர்காணல் ! பாருங்கள் !