புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்
ஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் தனியார். கூடுதலா இயற்கைப் பேரிடர்னு எல்லாம் சேர்ந்து எங்கள விடாம துரத்தினா நாங்க எங்கதான் போறது? ஆந்திராவிலிருந்து வினவு செய்தியாளர்களின் களச்செய்தி!
கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன் வரிசையில் நிற்கும் தூய்மைப் பனியாளர்களின் துயரங்களையும், அதை சரி செய்ய மக்கள் அதிகாரம் மேற்கொண்ட முயற்சியையும் விளக்குகிறது இப்பதிவு.
இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் திமிர்ப் பேச்சு
எவ்வளவு நேரம் தான் மனைவியின் / கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று 'செல்லமாக' கேட்கிறார் எல்&டி யின் சுப்பிரமணியன். ஆனால் மனைவியை / கணவனை, குழந்தைகளை கொஞ்ச நேரம் கூடப்பார்க்க முடியவில்லை; மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்கிற ஏக்கம் தான் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது.
மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் !
மோடி வாக்களித்த வேலைவாய்ப்புகள் குறித்த கேள்விக்கு “வேலைகள் உருவாகியுள்ளன – ஆனால், அதை விளக்கும் புள்ளி விவரங்கள் தான் இல்லை” என வினோதமான ஒரு விளக்கத்தை முன்வைத்த்து நிதி ஆயோக்.
என்.எல்.சி. தொழிலாளிகள் படுகொலை – பின்னணி என்ன !
''இழப்பீடாக சில இலட்ச ரூபாய்களை அள்ளிவீசியெறிந்து விடலாம்; கண்துடைப்பு நடவடிக்கைகளை செய்து தொழிலாளர்களை சரிகட்டிக்கொள்ளலாம்'' என்ற ஆணவம் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு.
கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?
ஸ்விக்கி, சொமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்யாவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகள் குறையும் என்பதால் வேகமாக செல்லும் போது அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனர்; சிலர் மரணம் அடைகின்றனர்.
போராடும் விசைத்தறி நெசவாளர்களுக்குத் துணைநிற்போம்!
தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிப்பாகங்களின் உயர்வு போன்றவற்றிற்கு ஏற்ப கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் 15 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூனு மாடி ஏறிப் போய் சிலிண்டர் போட்டாலும் பத்து ரூபாதான் !
என்ன படிச்சிருக்கீங்க?
”பி.ஏ. எக்கனாமிக்ஸ்… பிரசிடென்ஸி காலேஜ்ல… இந்த வேலைக்கு எழுதப்படிக்க தெரிஞ்சா போதும்… டிகிரி முடிச்சவங்களும் நிறைய இருக்காங்க”
தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் !
நரேந்திர மோடி அரசு தற்போது தொழிலாளர் நலன்களைக் குறித்து நடப்பில் இருக்கும் 44 சட்டங்களைக் கூட்டிக் கலந்து நான்கு சட்டங்களாக திருத்தியமைக்க உத்தேசித்திருப்பதை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது.
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1 | சித்திரகுப்தன்
4 சட்டத் தொகுப்புகளாக மாற்றப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் இவை அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிப் படுகொலை செய்யும் சவுதி அரசு
சவூதி சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் கூடுதல் நேரம் உட்பட அதிகபட்சம் 60 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால், அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் வாரத்திற்கு 84 மணிநேரத்திற்கும் கூடுதலாக பணியமர்த்தப்படுகின்றனர்.
சேலம்: இந்தியன் ஆயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
நிர்வாகம் இடை நீக்க உத்தரவை முழுவதுமாக ரத்து செய்யாதவரை சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக இருப்பதுடன், தங்கள் தலைமையில் பிற மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சங்கங்களுக்கும் போராட்டம் பரவும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோதாவரி டெல்டாவின் கடைமடை கிராமம் ! பலுசுதிப்பா மீனவர்களின் சோகம் ! நேரடி ரிப்போர்ட்
’பெதாய்’ புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மீனவர் கிராமமான பலுசுதிப்பாவில், புயல் வருவதற்கு முந்தைய நாள் இரவே நெருப்பு அனைத்தையும் கபளீகரம் செய்துவிட்டது.
சாபு மண்டல் ஒரு தொழிலாளி – கொரானாவும், முன்னேற்பாடு ஏதும் செய்யாத அரசும் அவரை கொன்றுவிட்டன !
தன்னை நம்பி வாழும் பெரும்குடும்பம் பட்டினி கிடப்பதை காண சகிக்காமல், தற்கொலை செய்துவிட்டார் மண்டல். அரசு அவருக்கு ’மூளைக்கோளாறு’ என அறிவித்து விட்டது.
தெலங்கானா சுரங்க விபத்து: தொழிலாளர்களைக் கைவிட்ட அரசு!
சுரங்கத்தில் அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நிறுவனம் இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு தற்போது எட்டு தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்துள்ளது.