Friday, July 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 214

ஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது? || வீடியோ

மிழக சட்டமன்றத் தேர்தல் – 2021 நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் கட்சிகள் முதல் தேர்தலில் பங்கேற்காத பல்வேறு அமைப்புகள் / கட்சிகள் வரை அனைவரும் மக்களை தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தல் ஜனநாயகம் என்பதே எப்படி ஒரு ஏமாற்று என்பதைப் பற்றி வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோரின் உரையாடல் !! மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது.

தேர்தல் ஆணையம் நேர்மையானதா?

தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் இந்த அரசு எந்திரத்தில் லஞ்சம் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளே இவர்கள் எப்படி தேர்தலை நேர்மையாக நடத்துவார்கள். தேர்தல் என்றால் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தானே செயல்பட முடியும் போன்ற பல்வேறு விளங்கங்களை அளிக்கிறார்கள் மக்கள் அதிகாரம் தோழர் மருது மற்றும் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன்.

சீமான், கமல் இருவரும் தான் மாற்றா ?

எந்த ஓட்டுக்கட்சிகளும் தற்போது கொள்கையை பற்றியெல்லாம் பேசுவதில்லை. எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்பது மட்டுமே பிரதானமாக இருக்கிறது. இந்நிலையில் மாற்று என்று கமல், சீமானுக்கு ஓட்டு போடுவதன் மூலம் ஏதும் நடக்கபோவது இல்லை. தி.மு.க-வும் தனது திராவிட கொள்கையில் இருந்து படிப்படியாக குறைந்து கொண்டுவருகிறது. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க எந்த திட்டமும் அக்கட்சியிடம் இல்லை.

 

தேர்தலில் ஓட்டு போடுவது மூலம் பாசிசத்தை தடுக்க முடியுமா?

பரவி வரும் பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசிசத்தை தேர்தலில் ஓட்டு போட்டு தி.மு.க-வை கொண்டுவருவதன் மூலம் தடுக்கமுடியுமா? நிச்சயம் முடியாது. கார்ப்பரேட் நலன்களுக்கான சேவையில் தி.மு.க-வும் ஓரணியில்தான் இருக்கிறது. மக்களை தாக்கும் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க தேர்தல் தீர்வில்லை.

மியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை

மியான்மரில் முன்னாள் அதிபர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு இராணுவ தளபதி மின் ஆங் ஹேலிங் தலைமையிலான ராணுவ ஆட்சி பிப்ரவரி 1 முதல், பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஜனநாயக ஆட்சியை நடைமுறைப்படுத்தக் கோரி நடந்து வரும் போராட்டத்தை மியான்மர் போலீஸ் மற்றும் இராணுவம் தொடர்ந்து ஒடுக்கி வருகின்றது.

மியான்மரின் பெருநகரங்களான யாங்கூன் மற்றும் மாண்டலேவில் போராட்டங்கள் பெருமளவில் நடக்கின்றன. இதுவரை 500-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையம் இந்த தாக்குதலை கண்டித்திருந்தாலும் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எதையும் இதுவரை பரிந்துரைக்கவில்லை. மேற்கத்திய வல்லரசுகளின் மூலதனத்திற்கு பாதிப்பு வந்தால் ஒருவேளை அதற்குப் பிறகு நடவடிக்கை தொடங்கப்படலாம்.

அதே நேரத்தில், தொடர்ந்து சர்வதேச அளவில் வரும் நெருக்கடிகளுக்குப் பிறகு, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், இயல்பு நிலை திரும்பிய பிறகு மீண்டும் ஒரு நேர்மையான தேர்தல் நடத்தப்போவதாகவும் இராணுவம் கூறியுள்ளது.

படிக்க :
♦ மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி
♦ ரோஹிங்கியா : பச்சிளங் குழந்தைகளைப் பலி வாங்கும் மியான்மர் அரசு

இன்று மக்கள் போராட்டங்களை கடுமையாக ஒடுக்கி வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங் சான் சூகியின் ஆட்சியை ஜனநாயக ஆட்சி போல மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிக்கின்றன. 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சிக்குப்பிறகு, ஜனநாயகம் மலர்ந்ததாகவும், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நாட்டை பின்னோக்கி இழுத்து செல்லும் என்றும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றன.

ஆனால் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்தில், இதே ராணுவம் , மியான்மரின் பவுத்த பேரினவாதிகள் ஆதரவுடன் சிறுபான்மை ரோஹிங்கிய முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் வேட்டையாடியது. இதற்காக மின் ஆங் ஹேலிங் மீது பல்வேறு பொருளாதார தடைகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில், ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது இராணுவத்தின் இனப்படுகொலையை அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஜனநாயகவாதி ஆங் சான் சூகி திருவாய் மறுதலித்திருந்ததை நாம் நினைப்படுத்த வேண்டியிருக்கிறது.

இன்று மியான்மர் மக்கள் மீண்டும் பழைய இராணுவ ஆட்சி வந்துவிடக் கூடாது என்று எண்ணி வீதியில் இறங்கி போராடிவருகின்றனர்.

யாங்கூனில் தடுப்பரணுக்கு பின்னால் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் நிற்கின்றனர். பிப்ரவரி இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், 100 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை ஒரே நாளில் பாதுகாப்புப் படை கடந்த சனிக்கிழமை (27-03-2021) படுகொலை செய்ததால் இரத்தக்களறியானது. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையில் மீண்டும் மியான்மர் தெருக்களில் இறங்கியிருக்கும் போராட்டக்காரர்கள். (AP Photo)

 

மியான்மரின் இரு பெரு நகரங்களான யாங்கோன், மாண்டலே மற்றும் நாட்டின் பிற இடங்களிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் சில போலிஸ் படையினரை மீண்டும் சந்தித்தன. (AP Photo)

 

யாங்கோனில் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பாளர் ஒருவர் பாதுகாப்புப் படையினரை நோக்கி ஒரு பெட்ரோல் குண்டை வீசுகிறார் (AP Photo)

 

யாங்கோனில் பொலிஸை எதிர்கொள்ள ஒரு பெரிய கவண்வில்லை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்துகின்றனர் (AP Photo)

 

யாங்கோன் தெருவொன்றில் எதிர்ப்பாளர்கள் தடுப்பரண் கட்டுகின்றனர். சனிக்கிழமை, குறைந்தது 27 பேர் அங்கு கொல்லப்பட்டதாக மியான்மர் நவ் செய்தி வலைத்தளம் தெரிவித்துள்ளது.. (AP Photo)

 

யாங்கோனில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது தற்காலிக தடுப்பரண்கள் எரிகின்றன. (AP Photo)

 

ஆட்சிக் கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் யாங்கோனில் ஒன்றுகூடுகிறார்கள். பிப்ரவரி 1-ம் தேதி அதிபர் ஆங் சான் சூகியை இராணுவம் தனிமைப்படுத்தி வைத்ததிலிருந்து மியான்மரில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும் என்று கோரி பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை அது தூண்டியது. (AP Photo)

 

மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் எரியும் தடுப்பரண்களுக்கு பின்னால் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள். (AP Photo)

தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : அல்ஜசீரா

வெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் !!

ன்புக்குரிய தோழர்களே! ஆதரவாளர்களே!

வணக்கம் !

நக்சல்பாரி கலாச்சாரம் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கின்ற, கம்யூனிச கொள்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரட்டும் வகையில், புதிய கலாச்சாரத்தை தன்னளவில் கடைப்பிடித்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்ற, பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகவும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்க சீர்குலைவு கலாச்சாரத்திற்கு எதிராகவும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பாடல்கள், இசைச் சித்திரங்கள், நாடகங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் – போன்ற பல்வேறு வடிவங்களில் புதிய கலாசாரத்தை முன் நிறுத்துகின்ற, இந்தியாவில் தனிப்பெரும் அடையாளங்களாக திகழ்கிற புரட்சிகர ஜனநாயக சக்திகளின் மத்தியில், ஒரு முத்திரை பதித்துள்ள மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில முன்னணியாளர்கள் கூட்டம் ஏப்ரல் 1, 2021 தேதியில் மதுரையில் நடைபெற்றது.

இதில் கோவை, மதுரை கிளையைச் சேர்ந்த ம...க உறுப்பினர்கள் நேரில் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள உறுப்பினர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பினர். ...க-வின் முதல் செயலாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான மூத்த தோழர் கதிரவன் உடல் நிலை காரணமாக நேரில் கலந்துக் கொள்ள முடியாத தனது சூழலை தெரிவித்து, இக்கூட்டத்திற்கு தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார்.

கடைசியாக 2014-ல் மாநில மாநாடு கூட்டப்பட்டது. அதன்பிறகு மாநில மாநாடு கூட்ட வேண்டும் என பலமுறை தோழர்கள் நேரில் சென்று சொல்லியும், அறிக்கை மூலமாக வலியுறுத்தியும் கூட மாநில மாநாட்டை கூட்டவில்லை. இது உறுப்பினர்களின் ஜனநாயக உரிமையை பறிக்கின்ற ஜனநாயக விரோத போக்காகும்.

படிக்க :
♦ உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!
♦ தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தீர்வு தருமா ?

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 23, 2020 அன்று காவிகார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அஞ்சாதே போராடு ! என்னும் முழக்கத்தை முன்வைத்து, தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மிகப் பெரும் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்ற சூழலில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பல ஆயிரக்கணக்கான தோழர்களுக்கு அவநம்பிக்கையையும், சோர்வையும் ஏற்படுத்தும் வண்ணம் மாநாட்டின் வெற்றியையும் உற்சாகத்தையும் குலைக்கும் வகையில், நமது அமைப்பின் இணையதளத்திலேயே தங்களுக்கு வழங்கியுள்ள உரிமையை கேடான வகையில் பயன்படுத்தி, சதி செயல்களில் ஈடுபட்டு தங்களது விலகல் அறிக்கையை பொதுவெளியில் மாநில செயற்குழு உறுப்பினர் நாதன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் மருதையன் ஆகியோர் வெளியிட்டனர்.

இவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தங்களுக்கு அமைப்பின் தலைமையுடன் முரண்பாடு இருப்பதாகவும் அமைப்பில் ஜனநாயகம் இல்லை என்பதையும் காரணமாக அறிவித்தனர். ஆனால் உண்மையில் ம...க உறுப்பினர்களாகிய எங்களிடம் கூட எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருவரும் அவ்வாறு செயல்பட்டது, கடும் அமைப்பு விரோத சீர்குலைவு நடவடிக்கையாக இருந்தாலும், அவர்களின் கடந்தகால பங்களிப்பின் காரணமாக அவ்விருவரும் மீண்டும் அமைப்பிற்குள் வரவேண்டும் என விரும்பினோம்.

இந்நிலையில் அவ்விருவரும் மீண்டும் அமைப்பிற்குள் வரமுடியாது என அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டனர். சதித்தனமாக சீர்குலைவு செய்து பொதுவெளியில் விலகல் அறிக்கை வெளியிட்ட அவர்களின் இந்த நடவடிக்கையானது, காவிகார்ப்பரேட் பாசிசத்திற்கு ஆதரவாக சேவை செய்வதாகும். அமைப்பை சீர்குலைக்கின்ற, காட்டிக் கொடுக்கின்ற செயலாகும் என இக்கூட்டம் ஒருமனதாக முடிவு எடுக்கின்றது.

மருதையன், நாதனின் சதிச் செயல்கள் ஒருபுறமிருக்க, அவர்களுடன் இணைந்து கொண்டு சதி செயல்களில் ஈடுபட்ட மாநில இணைச் செயலாளர் காளியப்பன் மற்றும் கோவன், சத்தியா போன்றோர் ம...க வின் மாநில மாநாட்டை நடத்துவதற்கும் அமைப்பை நடத்துவதற்கும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தங்களுடைய புகழ் நாட்டம் பிழைப்புவாத செயல்பாட்டிற்கு ஏற்ப அமைப்புக் கொள்கை, கட்டுப்பாட்டை மீறி பொது வெளியில் பல்வேறு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “அதிமுக பாஜகவின் கூட்டணியை தேர்தலில் தோற்கடிப்போம்” என்று போலி ஜனநாயகத் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். “வாக்களி! வாக்களி!” என மிகக் கேவலமாக ஓட்டுச் சீட்டு அரசியலில் மூழ்கித் திளைக்கின்றனர்.

“ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!” என்ற ம...க வின் கொள்கைக்கு எதிராக செயல்படுகின்றனர்.

அவர்கள் தங்களின் பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காகவும், சுயநல சீரழிவு கலாச்சாரத்திற்கு ஏற்பவும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அவரவர் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆகையால் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் அடிப்படை கொள்கை விதிகளின் (கொள்கை அறிக்கை பக்கம் 38 விதி 10) படி அமைப்பின் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதற்காக, காளியப்பன், கோவன், சத்தியா ஆகிய இம்மூவரையும் ம...க-வில் இருந்து வெளியேற்றுகிறோம்.

தற்போது ஓட்டுச் சீட்டு அரசியலுக்குச் சென்று சீரழிந்து விட்ட இந்தக் கும்பல் கடந்த பல ஆண்டுகளாக கிளைகளை முறையாக கூட்டி இயக்காமல் இருந்தனர். இதனால் சில மாவட்டங்களில் கிளைகள் கலைந்து போய்விட்டன. தற்போது எஞ்சியுள்ள மூன்று மாவட்டங்களில் உறுப்பினர்கள் தங்களை முறைப்படுத்திக் கொண்டு மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம்.

ஓடுகாலியாக சீரழிந்துபோன மருதையனும், நாதனும் தற்போது தி.மு.கவிற்கு ஆதரவாக ஓட்டுப் பொறுக்கி அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்த சதிகார கும்பல் 2020-ல் அமைப்பில் இருந்து வெளியேறிய போது சில அமைப்பு பிரச்சினைகளை காரணம் காட்டியது. ஆனால் உண்மையில் இந்த கும்பல் வலது சந்தர்ப்பவாத கும்பல் என்றும் இது தாராளவாத பாணியிலான அமைப்பு கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்துகிறது என்றும் நமது அரசியல் தலைமை தெரிவித்தது.

அப்போது அதையெல்லாம் மறுத்து அவதூறு செய்து வந்த இந்தக் கும்பல், அவர்களது வலைப்பூவான ‘இடைவெளி’யில் கடை விரித்து 2018-லேயே தங்களுக்கு தேர்தல் அரசியல் மோகம் வந்து விட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் இத்தனை ஆண்டு காலம் இவர்கள் செயல்பட்ட ம...விலேயே தேர்தல் நிலைபாட்டை தெரிவிக்காமல், தமது கருத்துகளை மறைத்து வைத்துக் கொண்டு இந்த கும்பல் சதித்தனமாக செயல்பட்டு வந்தது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்தக் கும்பலின் சதித்தனத்தை புரிந்துகொள்ள இயலாமல் இவர்கள் பின்னே உள்ள ஓரிரு ம...க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், தற்போது இவர்களது ஓட்டு சீட்டு அரசியல் நடவடிக்கையிலும் காளியப்பன், கோவன், சத்தியா போன்றவர்களின் பிழைப்புவாத நடவடிக்கைகளாலும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆகையால் ம...க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் ம...க வை முறைப்படுத்தி இயங்கும் ஒருங்கிணைப்பு குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழர்களே! நண்பர்களே!

இன்றைக்கு அசாதாரணமான சூழலுக்கு நாடு சென்று கொண்டு இருக்கிறது. காவி கார்ப்பரேட் பாசிசம் அனைத்து அரங்குகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டுவருகிறது. மிச்சம் மீதி இருக்கின்ற ஜனநாயக உரிமைகளை துப்புரவாக துடைத்தெறிவது மட்டுமின்றி, உழைக்கும் மக்களை ஒரு மிகப்பெரிய கேடான சூழலுக்கு இழுத்துச் செல்லும் இந்து ராஷ்டிரத்தை நிலைநாட்ட துடித்துக் கொண்டிருக்கிறது.

காவி கார்ப்பரேட் பாசிசம் நெருங்கி வருகின்ற இன்றைய சூழலில், கலை இலக்கிய ரீதியாக புரட்சிகர கருத்துகளை கொண்டு செல்வது முன்னிலும் அவசியமாக உள்ளது. இந்த கடமைகளை நிறைவேற்றும் வகையில் செயல்படும் ம...க-வில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்! காவிகார்ப்பரேட் பாசிசத்தை முடிப்பதற்கும், புதிய ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கும் அணிதிரள்வோம் !

இவண்
தோழர் ப.
ராமலிங்கம்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தமிழ் நாடு, புதுச்சேரி.
தொடர்புக்கு
: 97916 53200

ரஜினிக்கு பால்கே விருது !! தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்

ஜினிக்கு பால்கே விருது அறிவித்திருக்கிறது மத்திய அரசு!  “வாழ்த்துக்கள் தலைவா” என மோடி தனது டிவிட்டில் வாழ்த்தியிருக்கிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனும் பாணியில் இதற்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருக்கிறார் பிரகாஷ் ஜவடேகர்.

கருத்துப்படம் : மு. துரை

ஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் !! || கலையரசன்

6

♠ ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது என்று வதந்திகள் உலாவின. அடோல்ப் ஹிட்லரின் தாத்தா பெயர் யாருக்கும் தெரியாது. அவரது பாட்டி ஒரு யூத செல்வந்தர் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்து வந்தார். ஆகையினால் அடோல்ப் ஹிட்லரின் தந்தை ஆலோயிஸ் ஹிட்லர் உண்மையில் திருமணத்திற்கு புறம்பான உறவில் பிறந்திருக்கலாம். அவரது தந்தை ஒரு யூதராக இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்னர் ஹிட்லரின் உறவினர்களின் DNA எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில், வட ஆப்பிரிக்க அரேபியர்கள், அல்லது மத்திய கிழக்கை பூர்வீகமாக கொண்ட அஷ்கனாசி, செபெர்டிம் யூதர்களின் DNA உடன் ஒத்துப் போவது தெரிய வந்தது. ஆகவே உண்மையில் யூதக் கலப்பில் பிறந்த ஹிட்லர் தான் தீவிரமாக ஜெர்மானிய இனத் தூய்மைப் பேசி வந்தார். ஒருவேளை அவர் இதன் மூலம் தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ள நினைத்திருக்கலாம். உண்மையில் அந்தக் காலத்தில் யூத இனக் கலப்புக் கொண்ட ஜெர்மானியர்கள் ஏராளம் பேர் இருந்தனர்.

  • சீமான் குடும்பத்தில் மலையாளிக் கலப்பு இருப்பதாக வதந்திகள் உலவுகின்றன. ஏற்கனவே சிலர் இது குறித்த ஆதாரங்களைத் தேடி உள்ளனர். உண்மையில் DNA சோதனை செய்து பார்த்தால், சீமானும் அவரது நாம் தமிழர் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் தமிழர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்படும். ஆனால் அவர்கள் தான் இன்று மிகத் தீவிரமாக தமிழினத் தூய்மை குறித்துப் பேசி வருகின்றனர்.

படிக்க :
♦ ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !
♦ சீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்

♠ ஹிட்லரின் கொள்கை ஜெர்மானிய இனத்தை மட்டும் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடவில்லை. ஜெர்மன் மொழியையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். ஜெர்மன் மொழியில் அன்றாடப் பாவனையில் இருந்த யூதர்களின் ஹீபுரு மொழிச் சொற்கள் அகற்றப்பட்டன. அத்துடன் நவீன ஜெர்மன் மொழியில் ஏராளமான பிரெஞ்சு சொற்கள் கலந்திருந்தன. அவற்றிற்குப் பதிலாகத் தூய ஜெர்மன் சொற்கள் கொண்டுவரப் பட்டன.

  • சீமானின் கொள்கை தமிழ் இனத்தை மட்டும் தூய்மைப்படுத்துவதோடு நின்று விடவில்லை. தமிழ் மொழியைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். தமிழ் மொழியில் அன்றாடப் பாவனையில் இருந்த சமஸ்கிருத, ஆங்கில சொற்களுக்குப் பதிலாகத் தூய தமிழ்ச் சொற்கள் கொண்டுவரப் பட்டன.

♠ ஹிட்லர் இளம் வயதில் எந்த விதமான அரசியல் ஆர்வத்தையும் காட்டவில்லை. அவர் எதிர்காலத்தில் ஓர் ஓவியக் கலைஞராக வருவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காக வியன்னா சென்று கலைக் கல்லூரியில் சேர்ந்துப் படித்தார். சிறிது காலம் ஓவியங்கள் வரைந்து விற்று வருமானம் ஈட்டினார்.

  • சீமான் இளம் வயதில் எந்தவிதமான அரசியல் ஆர்வத்தையும் காட்டவில்லை. எதிர்காலத்தில் ஒரு சினிமா டைரக்டராக வருவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காக சென்னைக்கு சென்று சிறிது காலம் சினிமாத் துறையில் வேலை செய்து வந்தார். அதன் மூலம் வருமானம் ஈட்டினார்.

♠ ஹிட்லர் இளம் வயதில் இருந்தே ஒரு நாஸ்திகராக இருந்து வந்தார். ஆனால் பிற்காலத்தில் அரசியலில் இறங்கியதும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தை ஆதரித்தார். மரபுவழி கிறிஸ்தவ மதம் யூதர்களின் கதைகளை கூறும் பழைய ஏற்பாட்டை பைபிளின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். அதனால் “யூதக் கலப்பு” இல்லாத புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம் மட்டுமே ஜெர்மனியர்களின் மதம் என்பது ஹிட்லரின் கொள்கையாக இருந்தது.

  • சீமான் இளம் வயதில் இருந்தே ஒரு நாஸ்திகராக இருந்து வந்தார். திராவிடர் கழகக் கூட்டங்களிலும் உரையாற்றினார். ஆனால், பிற்காலத்தில் அரசியலில் இறங்கியதும் இந்து மதத்தை ஆதரித்து முப்பாட்டன் முருகன் என்று கொண்டாடினார். “ஆரியக் கலப்பு” இல்லாத சைவ சமயம் மட்டுமே தமிழர்களின் மதம் என்பது சீமானின் கொள்கையாக இருந்தது.

♠ ஹிட்லர் அரசியலுக்கு வந்த காலத்தில் ஜெர்மானிய தேசியவாதிகளின் ஆயுதப் போராட்டக் கொள்கையை ஆதரித்து வந்தார். அரசுக்கு எதிரான ஆயுதக் குழுவை ஆதரித்த குற்றத்திற்காக மியூனிச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சிறையில் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக தண்டனைக் குறைக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் வன்முறைப் புரட்சியை நிராகரித்து, ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட “ஜெர்மன் தேசிய சோஷலிசத் தொழிலாளர் கட்சி” (NSDAP) என்ற அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தார்.

  • சீமான் அரசியலுக்கு வந்த காலத்தில் தமிழீழ தேசியவாதிகளின் ஆயுதப் போராட்டக் கொள்கையை ஆதரித்து வந்தார். அரசுக்கு எதிரான ஆயுதக் குழுவை ஆதரித்த குற்றத்திற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சிறையில் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக தண்டனை குறைக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் வன்முறைப் புரட்சியை நிராகரித்து, ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்தார். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட “நாம் தமிழர் கட்சி” (NTK) எனும் அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தார்.

♠ ஹிட்லர் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் வாழ்வில் தான் கண்டவற்றையும், அவரது இனவாத உலகப் பார்வையும் சேர்த்து, தனது உள்மனப் போராட்டங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக எழுதி வந்தார். அந்தத் தொகுப்பு பின்னர் “எனது போராட்டம்” என்ற பெயரில் நூலாக வெளியானது. நாசிக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அந்த நூலை விரும்பி வாசித்து வந்தனர்.

  • சீமான் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் வாழ்வில் தான் கண்டவற்றையும், அவரது இனவாத உலகப் பார்வையும் சேர்த்து, தனது உள்மனப் போராட்டங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக எழுதி வந்தார். அந்தத் தொகுப்பு பின்னர் “திருப்பி அடிப்பேன்” என்ற பெயரில் நூலாக வெளியானது. நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அந்த நூலை விரும்பி வாசித்து வந்தனர்.

♠ நாசிக் கட்சியான NSDAP ஹிட்லர் உருவாக்கியது அல்ல. ஹிட்லர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அது போன்று பல ஜெர்மன் தேசியவாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவை மக்களால் கவனிக்கப்படாத மிகச் சிறிய அமைப்புகள். அவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. அவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்த NSDAP கட்சியை ஹிட்லர் பொறுப்பேற்று அதற்கு மறுவாழ்வு கொடுத்தார். மக்களை கவரும் வகையில் பேசும் ஹிட்லரின் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளால், NSDAP கட்சி பவாரியா மாநிலத்தில் பிரபலமானது.

  • நாம் தமிழர் கட்சி சீமான் உருவாக்கியது அல்ல. அது சி.பா. ஆதித்தனார் உருவாக்கிய இயக்கம். சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, தமிழகத்தில் அது போன்ற பல தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவை மக்களால் கவனிக்கப்படாத மிகச் சிறிய அமைப்புகள். அவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. அவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்த நாம் தமிழர் கட்சியை சீமான் பொறுப்பேற்று அதற்கு மறுவாழ்வு கொடுத்தார். மக்களை கவரும் வகையில் பேசும் சீமானின் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளால், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு மாநிலத்தில் பிரபலமானது.

♠ நாசிக் கட்சி கொடியில் உள்ள ஸ்வஸ்திகா சின்னம் கூட ஹிட்லரின் கண்டுபிடிப்பு அல்ல. அது ஏற்கனவே தூலே கேமைன்ஷாப் போன்ற சில அமைப்பினரால் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டது. ஹிட்லர் ஸ்வஸ்திகா சின்னத்தை மறுபக்கம் திருப்பி வரைந்து அதைத் தனது கட்சிக் கொடியாக்கிக் கொண்டார். நாசிக் கொடியில் உள்ள கருப்பு, வெள்ளை, சிவப்பு வர்ணங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த ஜெர்மன் சாம்ராஜ்யத்தின் கொடியாக இருந்தது.

  • நாம் தமிழர் கட்சிக் கொடியில் உள்ள புலிச் சின்னம் சீமானின் கண்டுபிடிப்பு அல்ல. அது ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளினால் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் இயங்கிய சில தமிழ்த் தேசிய இயக்கங்களாலும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டது. சீமான் புலிச் சின்னத்தை மறுபக்கம் திருப்பி வரைந்து அதைத் தனது கட்சிக் கொடியாக்கிக் கொண்டார். புலிக் கொடி நூறாண்டுகளுக்கு முன்பிருந்த சோழ சாம்ராஜ்யத்தின் கொடியாக இருந்தது.

♠ ஹிட்லர் வாழ்ந்த காலத்தில், “சியோன் ஞானிகளின் இரகசியக் காப்புவிதிகள்” என்ற நூல் பிரபலமாக இருந்தது. அது இலுமினாட்டிக் கதை போன்று புனைவுகளால் எழுதப்பட்டது. அமெரிக்க, பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருந்து கொண்டு, யூதர்கள் தான் உலகை ஆள்வதாக வதந்திகள் பரப்பப்பட்டன. அதை உண்மை என ஹிட்லர் நம்பினார். அதனால் யூதர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் இருந்து ஜெர்மன் மக்களைப் பாதுகாக்கப்போவதாக சொல்லிக் கொண்டார்.

படிக்க :
♦ கிரீசில் நாஜி வெறியர்களை எதிர்த்து மக்கள் போராட்டம்
♦ நாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்

  • சீமான் வாழும் காலத்தில் இலுமினாட்டிகள் பற்றிய புனை கதைகள் பிரபலமாக இருந்து வருகின்றன. அமெரிக்க, பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருந்து கொண்டு, இலுமினாட்டிகள் தான் உலகை ஆள்வதாக வதந்திகள் பரப்பப்பட்டன. அதை உண்மை என சீமான் நம்பினார். அதனால் இலுமினாட்டிகள் ஆதிக்கத்தில் உள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்கப்போவதாக சொல்லிக் கொள்கிறார். அன்று ஹிட்லர் யூதர்கள் என்று நேரடியாக சொன்னதை, இன்று சீமான் இலுமினாட்டிகள் என்று மறைமுகமாக சொல்கிறார். ஆனால், இருவரும் ஒரே விடயத்தை பற்றித்தான் பேசுகின்றனர்.

கலையரசன்
நன்றி : கலையகம்

யோகி என்ட்ரி : உ.பி. மாடல் ட்ரெய்லர் || கேலிச்சித்திரம்

கோவையில் ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் வருகையின் போது பேரணி சென்ற சங்க பரிவாரக் கும்பல் கடை வீதியில் இருந்த ஒரு கடையை மூடக் கூறி வன்முறையில் ஈடுபட்டது.

உத்தரப் பிரதேசத்தின் இழிபுகழ் யோகியை இங்கு பிரச்சாரத்திற்கு அழைத்திருப்பதன் மூலமும், அச்சமயத்தில் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் மூலமும் தமிழகத்தில் தாம் அமல்படுத்தத் துடிக்கும் சமூக எதார்த்தத்தின் முன்னோட்டத்தைக் காட்டியிருக்கிறது பாஜக !

படிக்க :
♦ உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!
♦ உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??

வன்முறை ஆட்சியின் உ.பி மாடலே, யோகியின் தமிழக என்ட்ரி !
இதுதான் இந்து ராஷ்டிரத்தின் ட்ரெய்லர் !!

கருத்துப்படம் : மு. துரை

உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!

பிரதமர் மோடி நேற்று (30-03-2021) தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார். அடுத்தபடியாக மீண்டும் ஏப்ரல் 2-ம் தேதியன்று மதுரையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் மோடி கலந்துக் கொள்ள இருக்கிறார். ஏப்ரல் 1-ம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  “ஐ.பி.எஸ்.” அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இவற்றையெல்லாம் விட  மிக முக்கியமாக இன்று (மார்ச் 31) கோவையிலும் விருதுநகரிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்  உத்தரப் பிரதேச முதல்வரான ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்.

படிக்க :
♦ தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !
♦ யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !

கொலை, கலவரம் செய்தல், கடவுள் பெயரால் ஊரை ஏமாற்றுவது ஆகியவற்றையே தொழிலாகக் கொண்ட ஒரு தொழில்முறை ரவுடி சாமியாரை முதல்வராகப் பெற்ற பரிதாபத்துக்குரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். தாம் பெற்ற முதல்வருக்கு ஏற்றவாறான “வெகுமதியை” போலீசின் போலி மோதல் கொலைகளாகவும், சங்க பரிவாரக் கும்பலின் அடாவடிகளாகவும், லவ் ஜிகாத் சட்டம் போன்ற மனிதகுல விரோதச் சட்டங்களாகவும் அந்த மக்கள் பெற்று வருகின்றனர்.

மாநில தேர்தல் என்ற அளவில் எடுத்துக் கொண்டால், அந்தந்த தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அனைவரும் அறிந்த பிரபலங்களை அழைத்து வந்து பிரச்சாரம் செய்யச் சொல்வார்கள். ஆனால் பாஜக-வில் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு யாரென்றே தெரியாத, யாருக்கும் புரியாத ‘பாஷை’ பேசும் இந்த ரவுடி சாமியாரை பிரச்சாரத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது தமிழக பாஜக.

மக்களுக்கு பரிச்சியமான பிரபலமாக இல்லை என்றாலும், ஏதேனும் ஒரு துறையில் சாதித்தவரை கூப்பிட்டு வந்து பிரச்சாரம் செய்யலாம். நமது யோகி ஆதித்யநாத், ஒரு முதலமைச்சர் என்ற வகையில் அவர் என்ன சாதித்திருக்கிறார் ?

இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாநிலமாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் முதன்மை மாநிலமாகவும் உத்தரப் பிரதேசத்தை மாற்றியிருப்பது மட்டுமே அவரது “சாதனை”.

அரசு மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாத காரணத்தால் ஒரே நாளில் கொத்துக் கொத்தாக குழந்தைகளை பலி கொடுத்த ஒரு மாநிலத்திலிருந்து, இந்திய அளவில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பிடம் பெற்ற தமிழகத்திற்கு வந்து, நாம் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று வகுப்பெடுக்கிறார் யோகி ஆதித்யநாத்.

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பெண்கள் குறித்த அக்கறை கிடையாது என்று கூறிய யோகி ஆதித்யநாத், பொள்ளாச்சி பாலியல் வன்முறை இழிபுகழ் அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஆதரவு கேட்டிருக்கிறார்.  இந்தியாவிலேயே அதிகமாக பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் பலாத்காரமும் நடக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்ய்நாத்தின் திருவாயிலிருந்து இது மலர்ந்திருப்பதுதான் சிறப்பு.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் பெருவாரியானவர்களுக்கு பரிச்சயமற்றவர் என்பதும் அறிந்தவர்களுக்கும் தமது இழிபுகழால்  மட்டுமே அறியப்பட்டவர் என்பதும் பாஜக தலைமை அறியாதது இல்லை. ஆனாலும் அவரை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்திருக்கிறது.

தமிழகத்திற்குள் மோடி நுழைந்தாலே “கோ பேக் மோடி” என தமிழக மக்கள் டிரெண்டிங் செய்யத் துவங்கிவிடுகிறார்கள் என்பதோடு, மோடியின் மீதான வெறுப்பு தமிழக மக்களிடம் பெருமளவில் இருக்கிறது என்பதும் பாஜக தலைமை அறியாதது அல்ல.

அவ்வளவு ஏன், பாஜக வேட்பாளர்கள் அனைவரும் தங்களது பிரச்சாரங்களில் கூட மோடியின் படத்தை ஒழித்துக் கட்டிவிட்டு, ஏ1 ஜெயா படத்தை மாட்டிக் கொண்டுதான் திரிகின்றனர். ஆனாலும் மோடி தைரியமாக “234 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவதாக நினைத்து அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று உரையாற்றுகிறார்.

இவர்களின் மீதான மக்களின் வெறுப்பு மேலோங்கியிருக்கையில் எந்த தைரியத்தில் அல்லது எந்தத் திமிரில் இவர்கள் யோகி, மோடி, அமித்ஷா ஆகியோரை தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு அழைத்து வருகின்றனர் ?  எந்தத் திமிரில் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னரும் கூட, இனி கலைக் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு என்ற அறிவிப்பை வெளியிட்டது மோடி அரசு ?

அதிகாரவர்க்கத்தில் தமது கைக்கூலிகளையும், கீழ் மட்டத்தில் ரவுடிகளையும் பொறுக்கிகளையும், வைத்து தமிழகத்தில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்த, தெளிவான திட்டத்துடன்தான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.

இன்றும் கூட யோகி வருகையை ஒட்டி கோவையின் நகர்ப்பகுதியில் ஊர்வலம் செல்லுகையில் வழியில் உள்ள கடைகளை எல்லாம் மூடச் சொல்லி வன்முறையில் ஈடுபட்டிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எந்தக் கட்சியாவது மக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் வன்முறையில் ஈடுபடுமா ? ஆனால் பாஜக அதனைச் செய்திருக்கிறது.

மேலும், தங்களது காவிக் கொள்கையை தமது தேர்தல் வாக்குறுதிகளில் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறது பாஜக.

காணொலி : கோவையில் இன்று (31-03-2021) கடையை மூடச் சொல்லி சல்லித்தனம் செய்யும் சங்கிகள்

“நாங்கள் இப்படித்தான்.. உன்னால் ஆனதைப் பார்.. உனக்கு வேறு வாய்ப்பில்லை..  ”  என்று தமிழக மக்களை நோக்கி சவால்விடும் தொனியில்தான் பாஜகவின் இந்த நடவடிக்கைகள் இருக்கின்றன.  இது திராவிடத்திற்கு ஆரியம் விட்டிருக்கும் சவால். ஜனநாயகத்திற்கு பாசிசம் விட்டிருக்கும் சவால். இந்தக் கும்பலை களத்தில் வீழ்த்த மக்களை அணிதிரட்ட வேண்டிய வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டிய நேரம் இது.


கர்ணன்

மோடி பொம்மைக் கடை : ரெண்டு பொம்மைக்கே தமிழ்நாடு தாங்கல !! || கருத்துப்படம்

செய்தி :
பொம்மைகள் தயாரிப்பு மையமாக தமிழகம் மாறும் – பிரதமர் மோடி

மக்கள் :
தமிழகத்தில் ஏற்கெனவே இருக்குற ரெண்டு பொம்மைக்கே தாங்கலடா சாமி.. இதுல பொம்மை தயாரிப்பு மையம் வேறயா ?


கருத்துப்படம் : மு. துரை

 

சீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்

5

சீமானின் “தற்சார்பு” பொருளாதாரம் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அர்ஜுன் பேசும் வீடியோ பார்க்கக் கிடைத்தது. அதில் அவர் விவசாய உற்பத்திப் பொருட்களை வணிக மயமாக்கி ஏற்றுமதி செய்வதைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார். வெளிப்படையாகவே தமிழ் முதலாளிகளை உருவாக்கி வளர்க்க வேண்டும் என்கிறார். அவரது பேச்சு, கிட்டத்தட்ட பூமி திரைப்படம் பார்ப்பது போலிருந்தது.

Make in India என்ற பெயரில் மோடி பிரச்சாரம் செய்து வந்த “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும், சீமானின் “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே விடயத்தை தான் பேசுகிறார்கள். ஆனால், இவர்கள் சொல்லாமல் மறைக்கும் உண்மை ஒன்றுள்ளது.

படிக்க :
♦ இந்தியா தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறிவிட்டது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம்
சீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்

இந்தியா சுதந்திரமடைந்த நாளில் இருந்து இன்று வரை IMF, உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கி வருகின்றது. மத்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாடு மாநில அரசு தனக்கென தனியாக கடன் வாங்கி வருகின்றது. அந்தக் கடன்கள் நிபந்தனையின் பேரில் கொடுக்கப்படுகின்றன. பொருளாதாரத்தை தாராளமயப்படுத்த வேண்டும், சந்தையை நூறு சதவீத அந்நிய முதலீடுக்கு திறந்து விட வேண்டும்.

அதனால்தான் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களின் விவசாய வணிகப் பொருட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இந்திய நிறுவனங்களால் உலக சந்தையைப் பிடிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு சாக்லேட் தயாரிக்க தேவையானக் ககாவோ (cocoa) சுவிட்சர்லாந்தில் கிடைக்காது. அந்த மரம் ஆப்பிரிக்காவில் உள்ளது. குறிப்பாக, கானா, ஐவரி கோஸ்ட் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ககாவோ (cocoa) இறக்குமதி செய்யப்படுகின்றது.

சுருக்கமாக, உண்மையில் ஆப்பிரிக்க சாக்லேட்தான் சுவிஸ் சாக்லேட் என்ற பெயரில் உலகம் முழுவதும் விற்பனையாகின்றது. ஏன் அந்த ஆப்பிரிக்க நாடுகள் தாமே சாக்லேட் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்க முடியவில்லை? உண்மையில் உள்நாட்டு முதலாளிகள் தயாரித்து விற்கும் சாக்லேட்டுகள்  நிறைய கிடைக்கின்றன. ஆனால் அவை அந்த நாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. சில நேரம் அயல்நாட்டு சந்தைகளில் விற்பனையாகலாம்.

அதைவிட அமெரிக்காவுக்கு சாக்லேட் ஏற்றுமதி செய்வதெல்லாம் கனவிலும் நினைக்க முடியாது. அமெரிக்காவில் உள்ள ஒரு விநியோகஸ்தர் இறக்குமதி செய்தால், அதற்கு நிறைய வரி விதிப்பார்கள். அதற்கும் மேலே பல தடைகள் வரும். ஆனால் சுவிஸ் சாக்லேட்டுக்கு அப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இது அமெரிக்காவுக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நடக்கிறது.

நாம் தமிழரின் “தற்சார்பு” பொருளாதாரமும், இப்படித் தான் தடுக்கி விழும் என்று எதிர்பார்க்கலாம். அவர்களால் குறைந்த பட்சம் பால்மாவை உற்பத்தி செய்து உள்நாட்டில் கூட அதைச் சந்தைப்படுத்த முடியாது. அதற்குக் காரணம் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதியான பால்மா தமிழ்நாட்டு சந்தையில் மிகக் குறைந்த விலையில் விற்பனையாகின்றது. முறைப்படி பார்த்தால், சுவிஸ் பால்மாதான் அதிக விலையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். உண்மை தான். ஆனால், உலக சந்தையை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதற்காக சுவிஸ் அரசு மானியம் அள்ளிக் கொடுக்கிறது.

அதே மாதிரி இந்திய, தமிழ்நாடு அரசும் மானியம் கொடுக்கலாம் தானே என்று கேட்கலாம். இங்கு தான் IMF, உலக வங்கி மூக்கை நுழைக்கிறது. அப்படி செய்து விட்டால் கடன் கொடுப்பது நிறுத்தப்படும். அரசு மானியங்களைக் குறைக்க வேண்டும், அல்லது நிறுத்த வேண்டும் என்பது அவை முன்வைக்கும் முக்கியமான நிபந்தனையாக உள்ளது. இன்னொருவிதமாக சொன்னால், மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களுக்கு சமமாக இந்திய நிறுவனங்கள் வளர விடாது ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்து விடுகிறார்கள். இதைப் பற்றி சீமான் பேசவே மறுக்கிறார்.

கலையரசன்
முகநூலில் : kalai marx

குமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் !

0

ரக்கு பெட்டகத் துறைமுகம் அமைப்பதற்கு எதிராக கீழமணக்குடி என்ற குமரி மாவட்டத்தின் கடலோர கிராமத்தில் கடந்த மார்ச் 27 அன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

ஏன் இந்த போராட்டம் ?:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகம், இயற்கையாக அமைந்த ஓர் பழமையான துறைமுகமாகும். அதை மிகப் பெரிய சரக்கு பெட்டகத் துறைமுகமாக விரிவாக்கம் செய்ய கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தின் மூலம் கொண்டுவர நினைத்தது மோடி அரசு. மக்களின் கடும் எதிர்ப்பினாலும் போராட்டத்தினாலும் துறைமுக விரிவாக்கத்தில் இருந்து பின்வாங்கியது. அதே சமயம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை மீனவர்களுக்கு மேம்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.

படிக்க :
♦ குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !
♦ துயரத்தின் விளிம்பில் குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் !

அதே ஆண்டே இனயம் கிராமத்தில் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டது மோடி அரசு. அங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மிகப்பெரிய சாலை மறியல் போராட்டங்கள், கடலில் படகுகளுடன் போராட்டங்கள் என பல்வேறு போராட்டங்கள் நடந்தது. அதன் விளைவாக, இனயம் கிராமத்தில் துறைமுகம் அமைக்கும் முயற்சியை ஒத்தி வைத்தது பாஜக அரசு.

அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, 2019-ம் ஆண்டு கோவளம் – தென்தாமரைக்குளம் ஆகிய கிராமங்களுக்கு இடையே துறைமுகம் அமைக்க இடம் தேர்வு செய்தது மோடி அரசு. இதற்கும் மாபெரும் எதிர்ப்புக் கிளம்பியது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் படுதோல்வி அடைந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அதன்பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு வெளிப்படையான அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது மோடி அரசு. தற்போது, 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி தூத்துக்குடி வ.உ.சி துறைமுகப் பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி அருகே பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பு (பிபிபி) திட்டத்தில் 65 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் பசுமை துறைமுகம் அல்லது டிரான்ஷிப்மெண்ட் ஹப் அமைத்தல் பணிகளுக்கு துறைமுக கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இது சாகர்மாலா திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளனர்.

இந்த அறிவிப்பு கன்னியாக்குமரி மக்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 14-ம் தேதி இதனைக் கண்டித்து ஆரோக்கியபுரம் முதல் நீரோடி கிராமம் வரை போராட்டங்கள் நடந்தன. அதானி குழுமத்துக்காக தங்களது வாழ்வாதாரத்தை அழிக்க மோடி அரசு திட்டமிடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள போராடும் குமரி மக்கள்.

This slideshow requires JavaScript.

இந்த அறிவிப்பால் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்(2021) அ.தி.மு.க கூட்டணிக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பொன்.ராதாகிருஷ்னணும், அதிமுக கட்சியின் தளவாய் சுந்தரமும் ‘துறைமுகம் வராது’ என தேர்தல் ஆதாயத்திற்காக கூறிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா-வும் துறைமுகம் குறிந்து பேசுவதை தவிர்த்துவிட்டார்.

சரக்கு பெட்டகத் துறைமுகம் வருவதை எதிர்த்து குமரி மக்கள் மார்ச் 27-ம் தேதி மாலை மாபெரும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தனர். இந்நிலையில் மார்ச் 27 அன்று காலையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி, “சரக்கு பெட்டகத் துறைமுகத் திட்டம் கண்டிப்பாக வராது” என்று கூறிச் சென்றிருக்கிறார். இதுவெல்லாம் தேர்தலுக்கான கண்துடைப்பு  என்று கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

திட்டமிட்டபடி கடந்த மார்ச் 27 அன்று மாலை 4 மணியளவில் துறைமுகம் அமைக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டிருந்த கீழமணற்குடி கிராமத்தில் ஓர் மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மீனவர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.

ஏன் இந்த துறைமுகம் அமைத்தே ஆகவேண்டும் என நிற்கிறது அரசு :

கன்னியாகுமரி என்பது சர்வதேச வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு வழித்தடம். அதானி குழுமத்துடன் கூட்டு சேர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த சரக்குப் பெட்டகத் துறைமுகத்தை அமைக்க துடிக்கிறது மோடி அரசு.

இந்த சரக்கு பெட்டகத் துறைமுகம் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மிகவும் தீவிரமாக கட்டியே தீரவேண்டும் என்று அரசு செயல்படுவற்கு காரணம் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் மட்டுமே. மக்கள் நலம் என்பது இதில் துளியும் கிடையாது.

துறைமுகம் அமைந்தால் என்ன ஆகும் கன்னியாகுமரி :

இந்த பிரம்மாணடமான துறைமுகம் அமைந்தால், குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது உறுதி. மேலும், ராட்சச கப்பல்கள் வருவதற்கு கடற்கரைக்கு அடியில் இருக்கும் மணல், பவளப்பாறைகள், கரும் பாறைகளைத் தோண்டி எடுத்து ஆழப்படுத்துவார்கள். இதனால், நிலத்தடி நீரில் உப்புநீர் கலந்து விடும் அபாயம் உள்ளது. இது விவசாயத்தையும் மக்களின் வாழ்வையுமே கடுமையாகப் பாதிக்கும். கழிமுகம் இல்லாமல் ஆறுகளின் முகத்துவாரங்கள் மண்ணால் அடைக்கப்பட்டு விவசாய நிலங்களும், மக்களின் வீடுகளும் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது.

சுருங்கச் சொன்னால், இந்த துறைமுகம் அமைந்தால், மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத ஒரு மாவட்டமாக குமரி மாவட்டம் மாறும். சுற்றுலா தலம், இயற்கை வளம், மீன் வளம், பறவை இனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு குமரி மாவட்டம் பாலைவனமாக மாறும் சூழல் உருவாகும்.

படிக்க :
♦ கொன்றது ஒக்கி புயலா ? அரசுக் கட்டமைப்பா ? குழித்துறையில் ரயில் மறியல்
♦ ஒக்கி புயல் : குமரி மீனவர்களின் உள்ளக் குமுறல் – வீடியோ

இதற்கு ஓர் உதாரணமாக, சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அருகில் மீனவர்கள் மீன் பிடிப்பது இடையூறாக உள்ளது. எனவே மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது அதானி குழுமம்.

குமரி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த சரக்கு பெட்டகத் துறைமுகத்தை எதிர்ப்போம் :

சாகர்மாலா திட்டம் தமிழ்நாட்டின் மீன் வளம் கடல் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் சூறையாடுவதற்கே வழிவகை செய்யும். இலட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களை வீதியில் வீசிவிடும். மக்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிராக அமையவிருக்கும் இந்த சரக்கு பெட்டகத் துறைமுகத்தை எதிர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி விவசாயிகள், மீனவர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டுவது என்பது இன்று நெருங்கிவரும் பாசிசத்திற்கு எதிரான அவசியமான தவிர்க்கவியலாத பணிகளில் ஒன்றாகும்.


சந்துரு

செய்தி ஆதாரம் : சரக்கு பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் – முகநூல் பதிவு

உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??

0

ரு காணொலிக் காட்சியில் ஒரு பெண்ணிடமும் போலீசு அதிகாரி ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். வாதத்தின் இடையே சட்டென தனது கால் செருப்பைக் கழட்டி அந்த போலீசின் கன்னத்தில் அறைகிறார் அந்தப் பெண். கூட்டத்தை ஒழுங்கு செய்யும் மற்றொரு போலீசோ எவ்வித அதிர்ச்சியையும் காட்டாமல், தனது கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்.

மற்றொரு காணொலிக் காட்சியில் ஒரு போலீசு அதிகாரியை பத்து பதினைந்து பேர் கொண்ட ஒரு கூட்டம் சுற்றி வளைத்துத் தாக்குகிறது. ஒருவன் போலீசு அதிகாரியின் கையைப் பிடித்து தன்னை அடிக்குமாறு இழுக்கிறான். அவனோடு அந்த அதிகாரி பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கையில், மற்றொருவனோ ஹெல்மெட்டைக் கொண்டு அந்த போலீசு அதிகாரியின் பின்புறத்தில் தாக்குகிறான். திரும்பிப் பார்க்கும் அந்த அதிகாரியை மீண்டும் முன்னால் வந்து ஹெல்மெட்டால் தாக்குகிறான். தப்பி ஓடும் அதிகாரியின் மீது ஹெல்மெட்டை வீசி எறிகிறான்.

காணொலிக் காட்சியைக் காண இங்கே அழுத்தவும்

இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த சனிக்கிழமை (27-03-2021) அன்று உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் நடந்தவை. போலீசு அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில், போலீசை தாக்கிய ‘கயவர்களை’ யோகி ஆதித்யநாத் அரசு உடனடியாக என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருக்கும் என்று எண்ண வேண்டாம். ஏனெனில் தாக்கியவர்களே பாஜக-வைச் சேர்ந்த சங்க பரிவாரக் கும்பல்தான்.

கடந்த சனிக்கிழமை அன்று மதுராவில் உள்ள யமுனை ஆற்றின் கரையில் உள்ள தேவ்ரஹா பாபா காட் எனும் இடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்டத் தலைவரான மனோஜ்குமார் மற்றும் அவரது அடிபொடுகளுக்கும் அங்கு வந்த போலீசு துணை ஆய்வாளருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில், அந்த போலீசு அதிகாரி ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவரை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே போலீசின் நடைமுறைக்கு எழுதப்படாத விதி என்பது என்ன ? போலீசுக்கு தவறு செய்தவர்களை அடிக்கும் உரிமை இருக்கிறது என்பதுதானே? உலகம் முழுவதும் நடத்தப்படும் என்கவுண்டர்கள், லாக் அப் சித்திரவதைகள், படுகொலைகள் எல்லாமே இந்தப் பெயரால் தான் நியாயப்படுத்தப்பட்டன. போதாத குறைக்கு தமிழ் சினிமாக்களில் புல்லரிக்கச் செய்யும் டயலாக்குகள் மூலமும் இந்த ‘நியாய உரிமை’ போலீசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

படிக்க :
♦ பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி
♦ உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !

அப்படிப்பட்ட ‘நியாய உரிமையை’ ஒரு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவரிடம் அந்த உதவி ஆய்வாளர் காட்டியிருக்கிறார். அவ்வளவுதான். சாதாரண மனிதர்களிடம் அப்படி நடந்திருந்தால் அந்த போலீசு அதிகாரிக்கு உயர்பதவி கிடைத்திருக்கும். ஆனால் அவர் தனது நியாய உரிமையை காட்டியது ஒரு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவரிடம்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆர்.எஸ்.எஸ் மாவட்டத் தலைவர் மனோஜ்குமார் போலீசு நிலையத்தில் தன்னை அடித்த உதவி ஆய்வாளர் உபாத்யாயா மீதும் அவருடன் இருந்த இரு போலீசார் மீதும் புகார் அளித்துள்ளார்.

இந்த மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி வழக்கு மற்றும் முறைமீறி நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதோடு, உடனடியாக இரண்டு கீழ் நிலை போலீசாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

சாத்தான்குளத்தில் லாக்கப் கொலையே செய்த அந்த போலீசு அதிகாரிகள் மீது பல நாட்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது நினைவிருக்கலாம். இங்கு ‘சும்மா’ அடித்ததற்கே தற்காலிக பணிநீக்கம். ஏனெனில் உத்தரப் பிரதேசம், இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலை அல்லவா ?

புகார் கொடுத்த கையோடு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் மதுரா நகர் முழுவதும் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பலின் காலிகளுக்கு தகவல் சொல்லி, நகரில் பல இடங்களில் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பாஜக, சங்க பரிவாரக் கும்பலைச் சேர்ந்த பொறுக்கிகள் போலிசை தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.

அப்படிப்பட்ட சம்பவங்கள் தான் இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு காணொலிக் காட்சிகள். அந்த முதல் சம்பவத்தில் போலீசை செருப்பால் அடித்த அந்தப் பெண்மணி வேறு யாருமல்ல, பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர் ரஷ்மி சர்மா என்பவ்ர்தான்.

ஒரு போலீசு அதிகாரியை பொது இடத்தில் செருப்பால் வைத்து அடிப்பது என்பது உத்தரப் பிரதேசத்தில் தற்போது நடைபெற்ற புதிய சம்பவம் அல்ல.

போலீசை செருப்பால் அடிக்கும் பாஜக கவுன்சிலர் ரஷ்மி சர்மா

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீரட் நகரில் ஒரு போலீசு அதிகாரியை லோக்கல் பாஜக தலைவர் ஒருவர் போய் விடாமல் அடித்த வீடியோ காட்சி வைரல் ஆனது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு அரசு ஊழியரை நடுத்தெருவில் வைத்து கிரிக்கெட் மட்டையால் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் இந்தூரில் அடித்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. – கிசான் லால் ராஜ்பூட் என்பவர் போலீசு ஒருவரை செருப்பால் அடித்து, சிறுநீரைக் குடிக்கச் செய்துள்ளார்.

இவையெல்லாம் மீடியா வெளிச்சத்திற்கு வந்த செய்திகள் மட்டும்தான். இன்னும் வராத செய்திகள் எத்தனையோ? பாஜக – சங்க பரிவாரக் கும்பலால் போலீசு அதிகாரிகள் அசிங்கப்படுத்தப்படுவது மற்றும் தாக்கப்படுவது அனைத்தும் சங்க பரிவாரக் கும்பலின் கனவான இந்துராஷ்டிரத்தின் ஒரு முன்னோட்டமே ஆகும்.

போலீசு உள்ளிட்டஅதிகாரவர்க்கத்தை மக்களை ஒடுக்க பயன்படுத்திக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக தலைமையிலான சங்க பரிவாரக் கும்பல், நடைமுறைப்படுத்தப் போகும் சனாதன தர்ம ஆட்சியில், சத்திரிய – வைசிய – சூத்திர – பஞ்சம சமூகத்தைச் சேர்ந்த போலீசாருக்கு கிடைக்கப் போகும் மரியாதையும் சிறப்பும் இப்போதே நம் கண்முன்னே தெரிகின்றன !!


சரண்
செய்தி ஆதாரம் :
The Wire

 

மக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? || தோழர் மருது

க்கள் அதிகாரம் அமைப்பு தேர்தல் புறக்கணிப்பு பற்றி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர், தோழர் மருது.
1) தேர்தல் மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியும், நீங்கள் ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
2) வாக்களிப்பது ஜனநாயக கடமையா?
3) நீங்கள் ஏன் சாத்தியமானவற்றை பேசுவது இல்லை?
4) தி.மு.க தான் பாசிசத்தை எதிர்ப்பதற்கான மாற்றா?
5) மூச்சு விடுவதற்கு நேரம் வேண்டும்; அதற்கு, தேர்தல் தேவை இல்லையா?
6) வாக்குறுதிகளை பார்த்த பிறகும்; தேர்தல் மீது நம்பிக்கை வரவில்லையா?
7) தேர்தல் புறக்கணிப்பு மூலமாக நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
8) தேர்தலை புறக்கணிப்பது பாசிசத்திற்கு ஆதரவாக போய்விடுமா?
9) தேர்தலை புறக்கணித்து விட்டால் வேறு என்ன தான் மாற்று?
தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

சீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்

2

♠ ஹிட்ல‌ர்: முத‌லாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌ன் இராணுவ‌ம் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் பெர்லினில் ஆட்சியில் இருந்த‌ ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க் க‌ட்சி(SPD) ஜெர்ம‌னிய‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான். ஜெர்ம‌னியை ஆள்ப‌வ‌ர்க‌ள் யூத‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ SPD தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் யூத‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் பிரெஞ்சு இராணுவ‌த்தால் ஜெர்ம‌னிய‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கின‌ர். (முத‌லாம்) உல‌க‌ப் போரில் ந‌ட‌ந்த‌ ஜெர்ம‌ன் இன‌ப்ப‌டுகொலையின் சூத்திர‌தாரிக‌ள் SPD, மார்க்சிய‌வாதிக‌ள் ம‌ற்றும் யூத‌ர்க‌ள் தான்.

♣ சீமான்: ஈழ‌ப் போரில் புலிக‌ள் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் டெல்லியில் ஆட்சியில் இருந்த‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌மிழ‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான். த‌மிழ்நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் தெலுங்க‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ திராவிட‌க் க‌ட்சிக‌ளின் தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தெலுங்க‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் சிறில‌ங்கா அர‌ச‌ ப‌டைக‌ளால் த‌மிழ‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கினார்க‌ள். ஈழ‌ப்போரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலைக்கு கார‌ண‌ம் காங்கிர‌ஸ், திராவிட‌வாதிக‌ள், ம‌ற்றும் தெலுங்க‌ர்க‌ள் தான்.

*****

♠ ஹிட்லர் ஜெர்மன் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் ஆஸ்திரிய நாட்டு பிரஜை. அன்றைய ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் பல மொழிகளை பேசும் இனங்கள் இருந்தன. ஹிட்லர் ஒரு ஆஸ்திரிய பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் அன்று பிரஷிய ராஜ்ஜியமாக கருதப்பட்ட ஜெர்மனி பற்றியதாக இருந்தது.

சீமான் தமிழ் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் இந்தியப் பிரஜை. இன்றைய இந்தியாவில் பல மொழிகளைப் பேசும் இனங்கள் இருக்கின்றன. சீமான் ஓர் இந்தியப் பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர் பற்றியதாக இருக்கின்றது.

படிக்க :
♦ சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் !

ஹிட்லர் ஆஸ்திரியாவில் இருந்து ஜெர்மனி சென்று, சக்கரவர்த்தியின் இராணுவத்தில் தானாகப் போய்ச் சேர்ந்தார். அவர் யுத்தகளத்தில் நின்றாலும் எந்தவிதமான சண்டையிலும் ஈடுபடவில்லை. போர் நடந்த இடத்திற்கு வெகுதூரம் தள்ளி பங்கருக்குள் இருந்து விட்டு, பிற்காலத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். அன்று இராணுவ வீரர்களாக இருந்த பலருக்கு ஹிட்லரின் புளுகுகள் எல்லாம் தெரிந்திருந்தன.

சீமான் இந்தியாவில் இருந்து, இலங்கையில் புலிகளின் பிரதேசத்திற்கு சென்று போர்க்களத்தில் நின்று விட்டு வந்தார். ஆனால் வன்னியில் சீமான் நின்ற இடம் போர் நடந்த இடத்தில் இருந்து வெகு தூரம். எந்தச் சண்டையும் நேரில் காணவில்லை. பிற்காலத்தில் சீமானும் ஈழத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். முன்னாள் புலிப் போராளிகள் பலருக்கு சீமானின் புளுகுகள் எல்லாம் தெரியும்.

ஹிட்லர், சீமான் இருவரும் சிறந்த பேச்சாளர்கள். கைகளை உயர்த்தி, நரம்பு புடைக்க, சத்தமிட்டுப் பேசும் குணவியல்பைக் கொண்டவர்கள். இன உணர்வைத் தூண்டும் வகையில் உணர்ச்சிவசமாகப் பேசி மக்களைக் கவரும் வல்லமை பெற்றிருந்தனர்.

அன்றைய காலகட்டத்தில் ஹிட்லரின் பேச்சுக்களை கேட்டவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைத்தார்கள். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரித்தார்கள். அதே மாதிரி, இன்று சீமானின் பேச்சுக்களை கேட்பவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைக்கின்றனர். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரிக்கின்றனர்.

ஜெர்மன் குடியரசில் இரகசியமாக கூட்டம் கூடி வந்த சட்டவிரோத தீவிர ஜெர்மன் தேசியவாத அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப் பட்ட ஆள் தான் ஹிட்லர். மியூனிச் நகரில் கூட்டம் ஒன்றுக்கு காவல்துறைக்காக குறிப்பெடுக்க சென்று கொண்டிருந்த ஹிட்லர், பின்னர் அவர்களின் கொள்கைகளால் கவரப் பட்டு அங்கத்தவராக சேர்ந்து கொண்டார். ஆளுமை மிக்க பேச்சுகள் மூலம் பலரை தன்பக்கம் ஈர்த்தார். பெரும்பாலும் மாணவர்கள், இளைஞர்கள் ஹிட்லரால் கவரப் பட்டனர்.

தடா, பொடா போன்ற அடக்குமுறை சட்டங்களின் விளைவாக, தமிழ்நாட்டில் இரகசியமாக இயங்கிய தீவிர தமிழ்த்தேசிய அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப்பட்டவர் தான் சீமான். 2009 ஆண்டளவில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் கலந்து கொண்டு, தனது ஆளுமை மிக்க பேச்சுக்கள் மூலம் பலரை ஈர்த்தார். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் சீமானால் கவரப் பட்டனர்.

அன்று ஜெர்மனியில் இருந்த தீவிர வலதுசாரிக் கட்சிகள் குறிப்பிட்ட அளவு மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே பெற்றிருந்தனர். அதனால் வளர முடியவில்லை. ஏனெனில் அவர்களது ஆதரவுத்தளமாக இருந்த மத்தியதரவர்க்க, பணக்கார வர்க்கத்தினர் மிகச் சிறுபான்மையினர். ஹிட்லர் ஒரு வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தார். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்து, சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசினார். அது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் ஹிட்லரின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே உலகப்போரில் வென்ற நாடுகள் ஜெர்மனி மீது விதித்த பொருளாதாரத் தடை காரணமாக, அன்று ஏராளமான ஜெர்மன் விவசாயிகள் தற்கொலை செய்திருந்தனர்.

படிக்க :
♦ ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !
♦ ஜெயா என்றால் சீமான், நெடுமாறனுக்கு பயம் பயம் !

இன்று தமிழ்நாட்டில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற தீவிர வலதுசாரிக் கட்சிகள், பிராமணர்கள், உயர்சாதியினர், செல்வந்தர்கள் போன்ற மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளனர். அதனால் வளர முடியவில்லை. சீமான் சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசுகிறார். இது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் சீமானின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே, பொருளாதாரப் பிரச்சினை காரணமாக ஏராளமான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

அன்று ஜெர்மனிக்கு வெளியே பல ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஜெர்மன் இனத்தவர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர். ஆஸ்திரியா தவிர செக்கோஸ்லாவாக்கியா, போலந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா என்று பல நாடுகளில் ஜெர்மனியர்கள் வாழ்ந்தனர். அவர்களில் பலர் ஹிட்லரை தமது இனத்தின் மீட்பராக பார்த்தனர். அதனால் நிறையப் பணம் அனுப்பினார்கள்.

இன்று பல மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் சீமானுக்கு ஆதரவளிக்கின்றனர். இந்தியா, இலங்கைக்கு வெளியே பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளில் வாழும் தமிழர்களில் பலர் சீமானை தமது இனத்தின் மீட்பராக பார்க்கின்றனர். அதனால் நிறையப் பணம் அனுப்புகிறார்கள்.

கலையரசன்

நன்றி : கலையகம்

disclaimer

கம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு !

சிரியாவில் நடைபெறும் துன்பியல் நிகழ்வுகள்

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமான பத்தாவது ஆண்டை நினைவு கூருமுகமாக இவ்வாண்டு மார்ச் நடுப்பகுதியில் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்ட அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள், சிரியாவில் நடைபெற்று வரும் மோதல்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி பஸீர் அல் – ஆஸாத்தும் அவரை பின்னால் இருந்து ஆதரிப்பவர்களும்தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்கள்.

ஆனால், உண்மை வேறு விதமானது. ஆஸாத் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்பே அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., 1947-ம் ஆண்டே சிரியாவில் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. ஆட்சி மாற்றம், சதி முயற்சிகள், கொலை முயற்சிகள், கூலிப்படைத் தாக்குதல்கள் என சி.ஐ.ஏ-வால் சிரியாவில் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகளுக்கு ஒரு தொடர்ச்சியான வரலாறு உண்டு.

படிக்க :
♦ சிரியா : அடுத்த இராக் ?
♦ சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்

1949-ல் அப்போதைய சிரிய ஜனாதிபதி சுக்ரி அல் – ஹ-வாட்லிக்கு எதிராக இரத்தம் சிந்தாத இராணுவச் சதியொன்றை சி.ஐ.ஏ. அரங்கேற்றியது. இதுபற்றி பின்னர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்ட அந்தக் காலகட்டத்தில் சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸில் இருந்த சி.ஐ.ஏ. நிலையத்தின் தலைமையதிகாரியான மைல்ஸ் கோப்லான்ட் (ஜூனியர்), இந்தச் சதியின் நோக்கம் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்தும், மற்றைய தீவிரவாதிகளிடம் இருந்தும் சிரியாவைப் பாதுகாப்பதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவச் சதியின் பின்னர் சி.ஐ.ஏ-வால் பதவியில் அமர்த்தப்பட்ட கேர்ணல் அடிப் ஸேய்ஸாக்லி பதவியில் இருந்த 4 வருட காலத்தில் அமெரிக்க ஆதரவைப் பெறுவதற்காக கொலை, விபச்சாரம், கொள்ளை போன்ற பல வகையான பாவச்செயல்களில் ஈடுபட்டார். பின்னர் அவரை பாத் கட்சியும், இராணுவ அதிகாரிகளும் இணைந்து பதவியில் இருந்து தூக்கியெறிந்தனர்.

1955-ல் சிரியாவில் இன்னொரு இராணுவச் சதிக்கான நிலைமைகள் உருவாகியிருப்பதாக சி.ஐ.ஏ. மதிப்பிட்டது. 1956 ஏப்ரலில் சி.ஐ.ஏ-வும், எஸ்.ஐ.எஸ்-ம் (பிரித்தானிய இரகசிய உளவுச் சேவை) இணைந்து வலதுசாரி சிரிய இராணுவ அதிகாரிகள் மூலம் ஒரு சதியை நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் சுயெஸ் கால்வாய் பிரச்சினை உருவானதால் அந்தத் திட்டம் தடைப்பட்டுவிட்டது.

சிரிய அதிபர் பஷார் அல் அஸாத்

சிரியாவை ‘கம்யூனிஸத்திலிருந்து காப்பாற்றுவது’ என்ற நோக்கத்துடன் இன்னொரு சதியை 1957-ல் சி.ஐ.ஏ. அரங்கேற்றியது. இதற்காக சிரிய இராணுவ அதிகாரிகளுக்கு 3 மில்லியன் டொலர்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டது. இதுபற்றி 2008-ல் ‘பரம்பரைச் சொத்தின் சாம்பல்: சி.ஐ.ஏ-ன் சரித்திரம்’ என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்ட ரிம் வெய்னர் பின்வருமாறு கூறுகிறார்:

கடவுளுக்கு எதிரான கம்யூனிஸத்துக்கு எதிராக இஸ்லாமிய ஜிகாத் கருத்தை நாம் உருவாக்க வேண்டும் என (ஜனாதிபதி) ஐஸனோவர் கூறினார். 1957இல் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ‘புனித யுத்தம்’ என்ற கருத்தை முடியுமான எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்”.

ஆனால் சில “வலதுசாரி – இராணுவ” அதிகாரிகள் இந்தத் திட்டம் பற்றி சிரியாவின் உளவுச் சேவைக்கு தகவல் கொடுத்துவிட்டனர். அதன் காரணமாக சிரியா டமஸ்கஸ்ஸில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த 3 சி.ஐ.ஏ. அதிகாரிகளை வெளியேற்றியதுடன், அங்கிருந்த அமெரிக்கத் தூதுவரையும் திருப்பியழைக்கும்படி அமெரிக்காவை நிர்ப்பந்தித்தது. அதைத் தொடர்ந்து சிரியாவை அமெரிக்கா “சோவியத் துணைக்கோள்” என வர்ணித்ததுடன், மத்தியதரைக் கடலில் தனது கடற்படையையும் நிறுத்தியது.

அத்துடன் சிரியாவின் “அத்துமீறல்களுக்கு எதிராக” என்ற போர்வையில் அமெரிக்கா சிரியா மீது இராணுவத் தாக்குதல் ஒன்றையும் நடத்தியது. இந்தத் தோல்வியடைந்த சதி நடவடிக்கையில் பிரித்தானியாவின் எம்16-ம் பங்குபற்றியது. இந்த விபரம், பின்னர் அந்தக் காலகட்டத்தில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சராகவிருந்த காலம் சென்ற டன்கான் சான்டேஸ் அவர்களின் ஆவணங்கள் சில 2003-ல் தற்செயலாக வெளியானபோது அம்பலத்துக்கு வந்தது.

2006-ல் ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ஒரு தகவலின்படி, லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சிரியர்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பதுடன், சி.ஐ.ஏ. குழு கிளர்ச்சிக் குழுக்களை உருவாக்கி சிரியாவுக்குள் இறக்கியுள்ளதுடன், குறிப்பிட்ட விநியோக வழிகளையும் உருவாக்கியுள்ளது. 2012-ற்குப் பிறகு வருடாந்தம் 1 பில்லியன் செலவிட்டு சிரிய அரசுக்கு எதிராகப் போரிடும் 10,000 கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

நன்கறிந்த அமெரிக்க புலனாய்வு ஊடகவியலாளரும், அரசியல் எழுத்தாளருமான சேமௌர் ஹேர்ஸ் எழுதியதின்படி, அந்த நேரத்தில் லிபியாவின் பெங்காசியிலிருந்து தனது புலனாய்வு அதிகாரிகளை அமெரிக்கா சிரியாவுக்கு நகர்த்தியுள்ளது. உலகத்திலேயே ஆஸாத்தை சிரியாவிலிருந்து அகற்ற வேண்டும் என 2011-ல் பகிரங்கமாக அறிவித்த ஒரே உலகத் தலைவர் பராக் ஒபாமாதான்.

பாரசீக வளைகுடாவிலுள்ள அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபுக் குடியரசு என்பன சிரியாவில் அரச படைகளை எதிர்த்துப் போராடும் ஆயிரக்கணக்கான ஜிகாதிகளுக்கு தமது செலவில் நிதியுதவியும் தளபாட வசதிகளும் அளித்து வருகின்றன. இந்த நிலைமையில் 2015-ல் ரஸ்யா சிரிய அரசாங்கத்துக்குச் சார்பாகக் களமிறங்கியதை அடுத்து, 2017-ல் சவூதி அரேபியா அங்கிருந்து வெளியேறியது.

சிரியாவின் உள்நாட்டுப் போர்தான் எமது காலத்தில் நடைபெறும் மிகவும் அழிவுகரமான யுத்தமாகும். இந்த யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான சிரிய மக்கள் இறந்து போயுள்ளனர், சனத்தொகையில் அரைவாசிப்பேர் இடம் பெயர்ந்துள்ளனர், மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாடுகின்றனர். ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கணிப்பீட்டின்படி, சிரியாவின் சனத்தொகையில் 70 சதவீதமானோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர், 6.7 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர், 13 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் மனிதாபிமான உதவிகளையும் பாதுகாப்பையும் வேண்டி நிற்கின்றனர், சனத்தொகையில் 60 வீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.

மத்திய கிழக்கில் சிரியா உயர்ந்த சமூகக் கட்டமைப்பையும், மத்தியதரமான வாழ்க்கைத் தரத்தையும் கொண்ட ஒரு நாடாக விளங்கியது. அந்த நாட்டை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சேர்ந்து சீர்குலைத்து நிலைகுலைய வைத்துள்ளன. ‘அரபிஸம்’ என்ற கருத்துருவத்தை அமெரிக்கா திட்டமிட்டு அழித்து வருவதையே சிரியாவில் நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கி போரை முடிவுக்குக் கொண்டுவர இரு தடவைகள் முயன்றாராயினும், அமெரிக்க பெண்டகன் இராணுவ அதிகாரிகள் அதற்கு விடவில்லை. புதிய ஜனாதிபதி பைடன் சிரிய விடயத்தில் என்ன செய்யப் போகின்றார் என்பது இன்னமும் தெரிய வரவில்லையாயினும், அங்கிருந்து அமெரிக்கத் துரப்புகளை விலக்கிக் கொள்ளும் நோக்கம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

முகநூலில் : Maniam Shanmugam

disclaimer

கையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் ? || தேர்தல் பாடல் || மக்கள் அதிகாரம்

தேர்தல் நெருங்கிவிட்டது. ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் தேர்தலில் வாக்குக் கேட்டு பவனி வரத் துவங்கிவிட்டன. அழுகை முதல் நடனம் வரை அனைத்து கூத்துக்களையும் அரங்கேற்றி ஓட்டுக் கேட்டு வருகின்றனர் தேர்தல் கட்சிகள்.

ஜனநாயகத்தின் ஆட்சி எனும் பெயரில் மக்களின் வாழ்வில் தாக்கம் செலுத்தும் மின்சாரம், கல்வி, மருத்துவம், தண்ணீர், கடல் என அனைத்தையும் நீதிமன்றங்களையே செல்லாததாக்கும் ஆணையங்களின் கைகளுக்குக் கொடுத்த பின்னர் நடைபெறும் இந்த தேர்தல் என்பது வெறும் கண் துடைப்பு நாடகம் தான் என்பதை இந்தப் பாடலில் விளக்குகின்றனர் தருமபுரி மக்கள் அதிகாரம் கலைக்குழு தோழர்கள் !!

பாருங்கள் !! பகிருங்கள் !!

பாடல் – இசை :
புரட்சிகர கலைக்குழு, தருமபுரி
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
செல்: 97901 38614

சமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள் !

பெயர் : Gopinath P
கணக்கு எண் : 6720415617
வங்கி விவரம் : Indian Bank, Pennagaram Branch
IFSC NO : IDIB000P076

பாடல் வரிகள் :

கையில மையவச்சா
வந்திருமா மாற்றம்
தேர்தல் எப்போதுமே
மக்களைதான் ஏமாத்தும்

இன்னுமா புரியல
தேர்தல் ஒரு சூதாட்டம்
ஒட்டு போட்டு ஒன்னுமில்ல
தொடங்கிடு நீ போராட்டம்

எட்டுவழிசாலைய
இங்கே தடுக்காது தேர்தலு
மீதேன், சாகர்மாலா
நிறுத்தாது தேர்தலு

மின்சார திருத்த சட்டம்
முடக்காது தேர்தலு
வேளாண் திருத்த சட்டம்
துரத்தாது தேர்தலு
விவசாயி கோவணத்த
உருவதான்டா தேர்தலு

விலைவாசி குறைய
இங்கே உதவாது தேர்தலு
சாதிய படுகொலைய
தடுக்கலடா தேர்தலு
பெண்களுக்கு பாதுகாப்பு
கொடுக்கலடா தேர்தலு

லஞ்சம் ஊழல் கொறையலடா
திருடத்தான்டா தேர்தலு
சாதிமத மோதலுக்கு
தூபமிடும் தேர்தலு

பெட்ரோல் விலைய குறைக்காது
கார்ப்பரேட்டு தேர்தலு
பொதுத்துறை கொள்ளையடிக்க
தொறந்துவிட்ட தேர்தலு
கேஸ் விலைய ஏத்திவிட்டு
நடத்துறாங்க தேர்தலு

ஏழை உழைப்பை சுரண்டி சுரண்டி
வளருது இந்த தேர்தலு
இத ஜனநாயக பாதையின்னு
கவுறுவுடுது கமிசனு

கார்ப்பரேட் கொள்ளையடிக்க
நடத்துறாங்க தேர்தலு
மதவெறி தாக்குதல்
காத்து நிக்குது தேர்தலு
கொள்ளையடிக்கும் கூட்டத்துக்கு
பாதுகாப்பு தேர்தலு

நாட்டுபற்று பேசினாலே
ஊபா போடுது தேர்தலு
அமைச்சரோட திருட்டு சொத்த
பாதுகாக்க தேர்தலு

காவி பாசிசத்த
வளக்குது தேர்தலு
கார்ப்பரேட்ட வீழ்த்தாம
தீராது மோதலு

நாட்ட பாதுகாக்க
உதவாத தேர்தலு
பாசிசத்த வீழ்த்திடவே
தொடங்கிடு மோதலு

 

வீடியோ ஆக்கம்
வினவு