Wednesday, July 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 418

வளர்மதி மீது பாலியல் சீண்டல் ! போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

டவுளின் தேசமான கேரளாவில் பெரு வெள்ளத்தில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த மக்களுக்காக பல நாடுகளும் உதவிகரம் நீட்ட தயார்! என்ற போது ‘56” மார்புடைய’ இந்தியாவின் பாரத பிரதமர் நானே என் மக்களை “பார்த்துக் கொள்கிறேன்” என்று வாய்சவடால் அடித்து 20,000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு அடைந்த மக்களுக்கு வெறும் 600 கோடியை பரந்த மனத்துடன் அள்ளி வீசியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க கேரள மக்களுக்கு உதவுவதற்காக தன்னார்வமுடன் பலரும் முன்வந்து நிதி திரட்டிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில்,

23.08.2018 அன்று மாணவி வளர்மதியும் தன் பங்களிப்பாக மக்களிடம் பிரச்சாரம் செய்து நிதி திரட்டும் வேலையை செய்துள்ளார். அதை தடுக்கும் விதமாக அவரிடம் தகாத முறையில் நடத்து கொண்டது போலீசு.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கேட்பது தேச பாதுகாப்பிற்கே ஆபத்து என்பது போல அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்து தங்களுடைய அடாவடிதனத்தை அரங்கேற்றி உள்ளது.

இதனைத் தொடர்ந்து “போராடினால் தேசப்பாதுகாப்பு சட்ட அடக்குமுறை ! போராடும் பெண்களுக்கு பாலியல் சீண்டல் ! போலீசின் பொறுக்கித்தனம் !” என்ற முழக்கத்தின் கீழ் மக்களை அச்சுறுத்தும் காவல் துறையைக் கண்டித்தும்;

போராடும் பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களை வேடிக்கை பார்க்கும் ‘மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா’வின் வழியில் ஆட்சி நடத்தும் ‘எடப்பாடி அரசை’க் கண்டித்தும்;

பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் கடந்த 25.08.2018 அன்று சென்னை சென்ட்ரல் இரயில்நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை, தொடர்புக்கு : 94990 38982.

அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை, தேக்கத்தை, வேலை இல்லா திண்டாட்டத்தை முதலாளிகளால்  சரி செய்ய முடியுமா? ஒரு தனிப்பட்ட முதலாளி புதிய புராஜக்டில் முதலீடு செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை அதில் லாபம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை பொறுத்துதான் முடிவு செய்வார். வேலை வாய்ப்பை உருவாக்கவோ, பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்கவோ ஏற்ற வகையில் முதலீட்டை லாப நோக்கமில்லாத அரசு/பொதுத்துறைதான் செய்ய முடியும் என்பது சீன முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை என்கிறது இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரையின் பின்னூட்டங்களில் சீன பொருளாதாரம் பற்றியும், சீன அரசின் தன்மை பற்றியும் பல விபரங்கள், கருத்துக்கள் பேசப்படுகின்றன. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை சமாளிக்க சீனா எடுக்கும் நடவடிக்கைகள் இந்தியா போன்ற நாடுகளில் செல்லுபடியாகுமா என்பதை பார்ப்பதற்கு மேலே சொன்ன பின்னூட்டங்களில் கிடைக்கும்  ஒரு சில தகவல்களை கணக்கில் எடுத்துக் கொள்ள  வேண்டும்.

  1. சீனாவில் நிலம் அனைத்தும் அரசுக்கே சொந்தம். தனிநபர்கள், நிறுவனங்கள் 70 ஆண்டு குத்தகைக்கு வாங்கிக் கொள்ளலாம். எனவே, நிலத்தை வைத்து சூதாட்டம் ஆடுவது, வங்கியில் கடன் வாங்கி ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்துவது போன்றவற்றுக்கான சாத்தியங்கள் குறைவு.
  2. சீனாவில் தனியார், வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவு அனுமதிக்கப்பட்டு விட்ட பிறகும் இன்னும் அரசுத் துறை (பொதுத்துறை நிறுவனங்கள்) பெரும்பான்மையாக உள்ளன. எனவே, வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கும், பொருளாதாரத்தை தூண்டி விடுவதற்கும் சாதகமாக பொருளாதாரத்தை நிர்வகிப்பது சீன அரசுக்கு ஒப்பீட்டளவில் எளிதாக உள்ளது. இருப்பினும், இந்த நிலைமை வெகு வேகமாக மாறி வருகிறது.

இனிமேல், கட்டுரையை படியுங்கள்.

சீனாவின், “கீனிசிய” கொள்கைகள் (China’s ‘Keynesian’ policies – ஆகஸ்ட் 6, 2018)

டொனால்ட் டிரம்ப் சீன ஏற்றுமதிகள் மீது வரி விதித்து தொடுத்த வர்த்தகப் போருக்கு பதிலடியாக சீனா அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் மீன், சோயாபீன் போன்ற உணவு பொருட்கள் மீது இறக்குமதி வரி விதித்துள்ளது.

மேலும் சீன அரசு சீன நாணயமான யுவானின் டாலருக்கு எதிரான மதிப்பை குறைய அனுமதித்தது. இதன் மூலம் சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் டாலர் விலை டாலர் விலை குறைந்து அவற்றின் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பை கணிசமான அளவு சரி செய்து விடுகிறது. மேலும், இது சீனாவுக்குள் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களின் சீன விலையையும் அதிகரித்து விடுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து வர்த்தக போரில் டிரம்பின் தாக்குதலை முனை மழுங்கச் செய்து, தனக்கு சாதகமான வர்த்த சமநிலையை பராமரிக்க முயற்சிக்கிறது, சீனா.

மேலே சொன்ன இரண்டு நடவடிக்கைகளுக்கும் மேலாக மூன்றாவது ஒரு திட்டத்தையும் சீன அரசு மேற்கொண்டிருக்கிறது. மேலே சொன்ன பதிலடிகளையும் தாண்டி ஏற்றுமதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைச் சரிக் கட்டுவதற்காக உள்நாட்டு வேண்டலை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக கட்டுமான திட்டங்களில் பொதுத்துறை முதலீட்டை திட்டமிட்ட முறையில் அதிகரித்துள்ளது.

2008-09-ல் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பெரும் தேக்கத்தின் தாக்கத்திலிருந்து சீன பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு சீன அரசு இது போன்று உள்கட்டுமானங்கள் மூதான முதலீடுகளை அதிகரித்தது எதிர்பார்த்த பலனை அளித்தது. அதாவது, அனைத்து முக்கியமான முதலாளித்துவ பொருளாதார நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும், முதலீடும் குறைந்து போன காலகட்டத்தில், சீன பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. 2009-ல் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.4% வீழ்ச்சியடைந்த போது, சீனாவின் வளர்ச்சி 9.1% ஆக இருந்தது. அந்த ஆண்டில் வளர்ச்சி கண்ட ஒரே முதலாளித்துவ நாடு ஆஸ்திரேலியா. வேகமான வளர்ச்சி வீதத்தை பராமரித்த சீனாவுக்கு கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம்தான்அந்நாடு தனது வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டது .

இதன் அடிப்படையில், முன்னணி பிரிட்டிஷ் கீனிசிய பொருளாதார அறிஞரும், வலைப்பதிவருமான சைமன் ரென்-லூயிஸ் பொருளாதார பெரும் தேக்கத்தில் சீனப் பொருளாதாரம் சிக்காமல் தப்பித்ததற்குக் காரணமாக இரண்டு விஷயங்களை குறிப்பிடுகிறார்.

  1. பெரிய முதலாளித்துவ நாடுகளில் பெரும் தேக்கத்துக்கும், அதைத் தொடர்ந்த பலவீனமான பொருளாதார மீட்சிக்கும் காரணமாக இருந்தது அரசுகளின் செலவுகளை வெட்டும் சிக்கன நடவடிக்கைகள்தான்.
  2. மாறாக, சீன அரசு செலவுகளை அதிகரித்து பற்றாக்குறை பட்ஜெட் போட்டது சீன பொருளாதாரம் தேக்கமடையாமல் தவிர்ப்பதை சாத்தியமாக்கியது.

இது எந்த அளவு உண்மை என்று பார்க்கலாம். 2008—09ல் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் தனியார் முதலீடும், உற்பத்தியும் பெருமளவு வீழ்ச்சியடைந்த நிலையில் அரசு செலவினங்களை வெட்டியது நிலைமையை மேலும் மோசமாக்கியது என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், மேற்கத்திய அரசுகள் மேற்கொண்ட ‘சிக்கன நடவடிக்கை’ ஒரு தவறான கொள்கைதான்.

ஆனால், நான் முந்தைய பல கட்டுரைகளில் விளக்கியது போன்று கீனிசியர்கள் கருதுவது போல ‘சிக்கன நடவடிக்கை’ என்பது ஏதோ  முதலாளித்துக்கு கிறுக்கு பிடித்ததால்  நடப்பது இல்லை. அதற்கு ஒரு தர்க்க அடிப்படை உள்ளது : தனியார் லாபவீதம் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் அதை மீட்பதற்கு செலவுகளை குறைக்க வேண்டும். அதற்கு தனியார் நிறுவனங்கள் மீது வரிவிதிப்பை குறைப்பது ஒரு நடவடிக்கையாகும். அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்ட பொது செலவினங்களையும் அரசு முதலீட்டையும் வெட்ட வேண்டும். இப்படி செய்வது  வரி விதிப்பை அதிகரித்தோ, துண்டு  பட்ஜெட் அடிப்படையிலோ செலவினங்களை அதிகரிப்பதை விட மூலதனத்துக்கு மிக உகந்தது. வரியை வெட்டி விட்டு செலவுகளை குறைக்கா விட்டால், அதை ஈடு கட்ட வாங்கும் கடனை பிற்காலத்தில் சமாளிக்க  வேண்டியிருக்கும்.

அரசு செலவுகளை அதிகரிப்பதன் மூலம் மூலம் பொருளாதாரத்தை தேக்கத்திலிருந்து மீட்க முடியுமா, முடியாதா?

இது பற்றி ரென் லூயிஸ் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

“இந்த கீனீசிய கோட்பாட்டு சரியானது என்பதற்கு சீனா ஒரு சிறந்த நடைமுறை உதாரணம். இதனால் நிதி பேரழிவு நடக்கும் என்று சாபம் விட்ட புலவர்கள் எங்கே போனார்கள்? ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் ஒரு சிறிய அளவு நெருக்கடி ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், இந்த நெருக்கடிக்கும் பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசு செய்த செலவுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்ல முடியாது. மேலும், இந்த இப்போதைய இந்த நெருக்கடி சீன பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. அத்தகைய பொருளாதாரத்தை மீட்பதற்கான அரசு செலவுகள், எதிர்கால தலைமுறை மீது மிகப்பெரிய சுமையைப் ஏற்றி விடுமே என்று கேட்கலாம். சீனாவின் அத்தகைய திட்டதிதன் பலனாக உயர் வேக ரயில் வலைப்பின்னல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாடு ரயில்வே கட்டுமானத்தில் உலக அளவில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.”

அதாவது, எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கும் போது சீனா கீனீசிய கொள்கைகளை நடைமுறையில் நிரூபித்து காட்டியிருக்கிறது என்கிறார் ரென் லூயிஸ்.

ஆனால், சீனா பின்பற்றியது உண்மையிலேயே கீனீசிய கொள்கைகள்தானா? கறாராக சொல்வதென்றால், ஒரு கீனீசிய அரசு, பள்ளம் தோண்டி மீண்டும் நிரப்புவது போன்ற அபத்தமான செயல்பாடுகள் உள்ளிட்டு [100 நாள் வேலைத் திட்டம் நினைவுக்கு வருகிறதா] ஏதாவது ஒரு வகையில் தனது செலவினங்களை அதிகரிக்க வேண்டும். அதனால் தூண்டி விடப்படும் சந்தை வேண்டல் அதிகரிப்பின் மூலம் தனியார் முதலீட்டையும்  குடும்பங்களின் நுகர்வையும் தூண்டி விட வேண்டும்.  [அதாவது மயிரைக் கட்டி மலையை இழுக்க வேண்டும், இதற்கு மேல் அரசு எதையும் செய்வது முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைக்கு நேர் விரோதமானது]

இதற்கு மேலும் பொருளாதாரம் பிக் அப் ஆகவில்லை என்றால், வேறு வழியே இல்லாமல் கடைசி தீர்வாக ‘முதலீட்டை சமூக மயமாக்க வேண்டும்‘ என்று கீன்ஸ் சொன்னது என்பது உண்மைதான்.

ஆனால், கீனீசிய கோட்பாட்டை கடைப்பிடித்த எந்த அரசும் முதலீட்டை சமூக மயமாக்குவதை ஒருபோதும் அமல்படுத்தியதில்லை [அதன் பெயர் சோசலிசம்]. அதன் பொருள் தனியார் முதலீட்டை தேசிய மயமாக்குவது ஆகும். உண்மையில், ரென் லூயிஸ் போன்றவர்கள் முதலீட்டை தேசியமயமாக்குவது, அல்லது சமூகமயமாக்குவது பற்றி தப்பித்தவறிக் கூட பேசுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கீனீசிய கொள்கை என்பது சந்தை ‘தேவையை தூண்டுவதற்கான’ அரசு செலவின அதிகரிப்புதான். [அதன் மூலம் தனியார் முதலீட்டை தூண்டி விட வேண்டும்].

ஆனால், பொருளாதார பெரும் தேக்கத்தின் போது சீனா பின்பற்றிய கொள்கை வெறும் கீனீசிய ‘நிதித் தூண்டுதல்’ இல்லை.  சீன அரசு பொருளாதாரத்தில் நேரடியாக முதலீடு செய்து உள்கட்டுமானத்தை உருவாக்கியது. அதாவது, அது ‘சமூகமயமாக்கப்பட்ட முதலீடு’.  சீனாவின் பொருளாதார மீட்பு கொள்கை நுகர்வை அதிகரிப்பதையோ, ஏதோ ஒரு வகையில் அரசு செலவை அதிகரிப்பதையோ அடிப்படையாகக் கொண்டது கிடையாது. அது ஒரு நிலையான சொத்துக்களை உருவாக்கும் முதலீடு ஆகும்.

உண்மையில் பார்க்கப் போனால் அமெரிக்காவின் பொருளாதார பெரும் தேக்கம் குடும்பங்களின் நுகர்வு குறைபாட்டாலோ, அரசின் ‘சிக்கன நடவடிக்கைகளாலோ’ ஏற்படவில்லை, தனியார் முதலீட்டின் வீழ்ச்சியால் ஆரம்பித்தது; அதன் தேக்கத்தால் தொடர்ந்தது. ஐரோப்பாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு முழுவதும் நிலை முதலீட்டு வீழ்ச்சியினால் ஏற்பட்டது.

ஜான் ராஸ் அந்த நேரத்தில் தனது வலைப்பதிவில் சொன்னது போல, “சீனா உண்மையில் அமெரிக்காவின் நேரெதிர் உதாரணமாக உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார பெரும் தேக்கம் நிலை முதலீட்டின் வேகமான சரிவால் ஏற்பட்டது என்றால், சீனா தேக்கத்தை தவிர்த்ததும் அதன் வேகமான பொருளாதார வளர்ச்சியும் நிலை மூலதன வளர்ச்சியால் சாத்தியமானது. இந்த  வெளிப்படையான வேறுபாட்டில் இருந்து பொருளாதார நெருக்கடியின் போது அமெரிக்க பொருளாதாரமும், சீன பொருளாதாரமும் எப்படி வெவ்வேறு திசையில் பயணித்தன என்பதை  தெளிவாக புரிந்து கொள்ளலாம்”

கீனீசிய கொள்கைகளை பின்பற்றியிருந்தால் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கலாம் என்றும், பெரிய முதலாளித்துவ நாட்டு அரசுகளின் “சிந்தனை தேக்கம்தான்” கீனீசிய கொள்கைகளை புறக்கணித்து சிக்கன நடவடிக்கையில் கொண்டு போய் அவற்றை தள்ளியது என்றும் சொல்லப்படுவது எந்த அளவுக்கு உண்மை?

பெரிய முதலாளித்துவ நாட்டு அரசுகள் சீனாவின் முன்னுதாரணத்தை பின்பற்றாமல் இருந்ததற்கு ஒரு காரணம் அவை சித்தாந்த ரீதியாக அரசு முதலீட்டை எதிர்க்கின்றன உண்மைதான். உண்மையில், ‘சிக்கன’ நடவடிக்கையின் முதல் இலக்காக அவர்கள் வெட்டியது பொதுத்துறை முதலீடுகளைத்தான். அதுதான் செலவுகளை குறைப்பதற்கான மிக விரைவான வழியாக கருதப்பட்டது.

ஆனால், முக்கியமான பிரச்சனை சித்தாந்த கண்ணோட்டமோ, “சிந்தனை தேக்கமோ” இல்லை. கீனீசிய மீட்பு கொள்கைகள் அமெரிக்கா போன்ற பொருளாதாரத்தில் செல்லுபடியாவதில்லை என்பதுதான் விஷயம். தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும், ஏற்கனவே முதலீட்டிற்கான லாபவீதம் குறைவாக இருப்பதால் முதலீடுகள் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தில்  கீனீசிய கொள்கையின் அடிப்படையிலான நடவடிக்கைகள்  எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.  ஏனென்றால், முன்னேறிய முதலாளித்துவ பொருளாதார நாடுகளில் அரசு முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என்ற அளவிலும் தனியார் முதலாளித்துவ முதலீடு 15%+ ஆகவும் உள்ளது

இந்நிலையில், அரசு முதலீடு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் பொதுத்துறையின் பங்கு பெருமளவு அதிகரிக்கப்பட வேண்டும். குறைந்த வட்டி வீதங்கள் மூலமும், நலத்திட்ட செலவினங்கள் மூலமும் தனியார் முதலீட்டை ‘தூண்டி’ விடுவது மட்டும் போதாது. அதாவது தனியார் முதலீட்டுக்கு பதிலாக ‘சமூகமயமாக்கப்பட்ட’ முதலீடு செய்யப்பட வேண்டும்.

மேற்கத்திய நாடுகளின் வரலாற்றில் அது தற்காலிகமாகக் கூட நடந்தது 1940-45 போன்ற போர்க்காலங்களில் மட்டுமே. [அதாவது முதலாளித்துவ அரசுகள் நேரடி முதலீடு செய்வது கொலைத் தொழிலில் மட்டும்தான்].

கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் முதலாளிகள்தான் முதலீடு தொடர்பானதும் வேலை வாய்ப்பு தொடர்பானதும் ஆன முடிவுகளை எடுத்தனர். அவர்கள் அந்த முடிவுகளை எடுத்தது, லாபத்தின் அடிப்படையில். பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம் இல்லை. எனவே, அரசு பண அளவை அதிகரித்தாலும், நிதித்துறையை ஊதிப் பெருக்கினாலும் அது தனியார் முதலீட்டை குறிப்பிட்ட அளவுக்கு தூண்டி விட முடியவில்லை. [அத்தகைய நிதி ஊக வணிகத்திலும், ரியல் எஸ்டேட் சூதாட்டத்திலும் பாய்ந்தது, உண்மையான பொருளாதாரத்தில் சொத்துக்களை உருவாக்கவில்லை]

இதற்கு முற்றிலும் மாறாக, சீனாவில் அரசே நேரடியாக முதலீடு செய்வதன் மூலமும், பொதுத்துறை வங்கிகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களை அதிகரிப்பதன் மூலமும் நிலை மூலதனம் வெகு வேகமாக அதிகரித்தது.

இது 2008-09 பொருளாதார பெரும் தேக்கத்தின் போது நடந்தது.

இப்போது தனியார் முதலாளித்துவ நாடுகளில் கீனீசிய நடவடிக்கைகளுக்கும், சீனாவின் அரசின் கட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டுக்கும் இடையேயான வேறுபாடு மீண்டும் ஒருமுறை பரிசீலனைக்கு உள்ளாக போகிறது. பெரும்பாலான முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் டிரம்பின் அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் சீனா கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அதன் பொருளாதார வளர்ச்சி வீதம் குறையப் போகிறது என்றும் கணித்திருக்கின்றனர். உண்மையில் சீனாவில்  கடன் மலையால் தூண்டப்படும் ஒரு மிகப்பெரிய நெருக்கடிக்கான அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சீன அரசு ஏற்கனவே இதை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. சாதாரண பற்றாக்குறை பட்ஜெட்டுடன் (நிதி ‘தூண்டுதல்’) கூடவே, அரசு நேரடியாக முதலீட்டு திட்டங்களுக்கு நிதி அளிப்பதன் மூலமும் முதலீடு தூண்டப்படுகிறது.

அரசு முதலீட்டுக்கான நிதியில் பெரும்பகுதி உள்ளூராட்சி அமைப்புகள் நிலத்தை விற்பதன் மூலம் திரட்டப்படுகிறது. உள்ளூராட்சி அமைப்புகள், நிதி பத்திரங்கள் மூலம் நிலத்தை கட்டுமான நிறுவனங்களுக்கு விற்று, சாலைகள், வீடுகள், நகரங்களை கட்ட வைக்கின்றன. மத்திய அரசின் நேரடி நிதியும் அளிக்கப்படுகிறது. (80%)

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் ஏற்றுமதிகள் குறைந்தால் இத்தகைய நிதி உதவியும், முதலீட்டு திட்டங்களும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். பெரிய முதலாளித்துவ பொருளாதாரங்கள் தத்தளிக்கும் நேரத்தில் அரசு முதலீடு சீன பொருளாதாரத்தை தொடர்ந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஆங்கில மூலம் : (China’s ‘Keynesian’ policies – ஆகஸ்ட் 6, 2018), மைக்கேல் ராபர்ட்ஸ் நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை

மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் !

0

சென்னையில் கடந்த 2018 ஆகஸ்ட், 21-ஆம் தேதி அன்று உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் அரங்குக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

அக்கூட்டத்திற்கு பு.மா.இ.மு-வின் சென்னை மாநகர செயலாளர் தோழர் சாரதி தலைமை தாங்கினார்.

மேலும் அரங்குக் கூட்டத்தில் குடியாத்தம் அரசுக்கல்லூரியின் மேனாள் முதல்வர் ப.சிவக்குமார், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் நிறுவன உறுப்பினர் முனைவர் ரமேஷ், மற்றும் பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சென்னையின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரங்கக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஏழை மாணவர்களின் பட்டதாரி கனவைப் பறிக்கும் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். இலவசக் கல்வி கிடைக்க பெற்றோர்கள், ஆரிசியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஓர் அணியில் திரளுவோம். என்ற உறுதியேற்புடன் இக்கூட்டம் நிறைவடைந்தது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,  சென்னை. தொடர்புக்கு : 94451 12675.

மே-17 திருமுருகனை விடுதலை செய் ! ஊபா சட்டத்தை ரத்து செய் !

 

25.08.2017

காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்.

பத்திரிகைச் செய்தி

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி அவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்  பிரிவின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்ற ஆண்டு அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. இந்த மாதம், பெங்களூரு விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த படுகொலைக்கு எதிராக ஐ.நா வில்  பேசியது குற்றமல்ல என்றும் அவரை காவலில் வைக்கத் தேவையில்லை என்றும் கூறி நீதித்துறை நடுவர் விடுவித்தவுடனேயே, அனுமதி இல்லாமல் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றதாகக் கூறி ஒரு பழைய வழக்கில் அவரை மீண்டும் கைது செய்தனர்.

இன்னும் பழைய வழக்குகள் அனைத்திலும் கைது செய்தாலும் பிணையில் வெளியே வந்துவிடக்கூடும் என்பதால், அவ்வாறு வரமுடியாமல் தடுப்பதற்காகவே UAPA சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பயங்கரவாதத்தை அடக்குவதற்கு என்று சொல்லி கொண்டுவரப்பட்ட தடா, பொடா சட்டங்கள் எப்படி ஜனநாயக உரிமைக்காகப் போராடுவோர் அனைவர் மீதும் ஏவப்பட்டதோ அவ்வாறே UAPA சட்டமும் தற்போது ஏவப்படுகிறது.

குறிப்பாக வளர்ச்சி என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கப்படும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களுக்கு எதிராகவும், இவற்றைத் திணிக்கின்ற பாஜக அரசுக்கு எதிராகவும் போராடுகின்ற இயக்கங்கள் மற்றும் தனிநபர்கள் அனைவரையும் நசுக்குவதன் மூலம் மட்டுமே தமிழகத்தில் இத்திட்டங்களை அமல்படுத்த முடியும் என்று மத்திய உளவுத்துறை, ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் என்ற புதியதொரு விளக்கத்தை பாஜக-வின் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தொடர்ந்து கூறிவருகிறார். அதை மோடியும் வழிமொழிந்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எதிர்த்துப் பேசிய திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் ஏவப்படுகிறது.

அச்சுறுத்தி அடக்கி விடலாம் என்பதுதான் இந்தக் கைது நடவடிக்கைகளின் நோக்கம்.  அந்த நோக்கத்தை முறியடிப்போம். திருமுருகன் காந்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் காவி – கார்ப்பரேட் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம். ஊபா சட்டம் உள்ளிட்ட அனைத்து கருப்பு சட்டங்களையும் நிரந்தரமாக அகற்ற அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவோம்.

நன்றி!

தோழமையுடன்,
காளியப்பன்
மாநிலப் பொருளாளர்

தொடர்புக்கு :
மக்கள் அதிகாரம்,
எண்: 1, அண்ணா நகர்,
தஞ்சாவூர்94431 88285

கேரளா : மக்களின் வாழ்க்கை மீண்டும் பூஜ்யத்திலிருந்து…

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 7

நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்து பெற்றுச் செல்லும் மக்கள்.

_____________________________________________________________________
வீட்டின் சுற்றுச் சுவரையும் தகர்த்துப் பாய்ந்திருக்கிறது வெள்ளம்.

_____________________________________________________________________

வெள்ளத்தில் ஊறிக் கிடந்த பொருட்களை வெயிலில் காயவைத்திருக்கும் காட்சி.

_____________________________________________________________________

சுற்றுச்சுவரும் தோட்டமும் சேதமடைந்திருக்கும் மற்றொரு வீடு.

_____________________________________________________________________

சேரும் சகதியுமாயிருக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்.

_____________________________________________________________________

வெள்ளத்தில் ஊறிய பொருட்களையும் துணிகளையும் தேறுமா தேறாதா என தரம்பிரிக்கும் குடும்பத்தினர்.

_____________________________________________________________________

பாண்டநாடு பிரையார் பகுதியில் அகன்று பரந்து ஓடும் பம்பை ஆறு.

_____________________________________________________________________

பிளாஸ்டிக் பாட்டில் முதல் மூங்கில், தென்னை மட்டை வரை அடித்து வரப்பட்டவை அனைத்தையும் குவித்து வைத்துள்ளது பம்பையாறு.

_____________________________________________________________________

வெள்ளத்தின் கைவண்ணம் : இது காட்டு பங்களா அல்ல. சாதாரணக் குடியிருப்புப் பகுதிதான்.

_____________________________________________________________________

கிணறு, மோட்டார், தோட்டம் என அனைத்தையும் கபளீகரம் செய்திருக்கிறது வெள்ளம்.

_____________________________________________________________________

சர்வீசுக்காக குவிக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தில் மூழ்கிய இரு சக்கர வாகனங்கள்.

_____________________________________________________________________

சர்வீசுக்காக குவிக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தில் மூழ்கிய பம்புசெட் மோட்டார்கள்.

_____________________________________________________________________

புனித தாமஸ் பொறியியல் கல்லூரி சார்பில் அனுப்பப்பட்டிருந்த நிவாரணப் பொருட்கள்.

_____________________________________________________________________

  • வினவு களச்செய்தியாளர்கள் செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.

கேரளா : ஆயுசு முழுக்க சம்பாதிச்சதை ஒரு நாள் மழை அழிச்சிருச்சு ! நேரடி ரிப்போர்ட்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : பாண்டநாடு – புத்தன்காவு பகுதிகளிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 6

கேரளாவில் பெய்த கனமழை அம்மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது என்பதற்கு சாட்சி பல லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் வடிந்த பிறகும் வீட்டுக்கு செல்லாமல் முகாம்களில் தங்கியுள்ளதே. முக்கியமாக பாண்டநாடு – பிரையார் பகுதி மற்றும் புத்தன்காவு பகுதியில் பம்பை ஆற்று வெள்ளம் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. #KeralaFlood #KeralaFloodRelief

வெகுநாட்களுக்குப் பின் வெயில் எட்டிப்பார்க்கிறது, சுற்றுப்புறம் சேரும் சகதியுமாய் வீடுகள்

இன்றுவரை இப்பகுதிகளுக்கு மின்சாரம் இல்லை. இப்பகுதிகளுக்கு மின்சாரம் வர குறைந்த பட்சம் 3 நாட்கள் ஆகும் என்கிறார்கள் மின்துறை ஊழியர்கள். பேருந்து செல்லவில்லை. ஆட்டோக்களும் இப்பகுதிகளுக்கு போக வேண்டும் என்றால் வர மறுக்கிறார்கள். இருப்பினும் மக்கள் நடந்தே தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து வீட்டை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களும் குறைந்தபட்ச வாழ்க்கை உத்திரவாதத்துடன் இருப்பவர்கள் மட்டும்தான்.

கேரள வெள்ளம் : ஆலப்புழா செங்கனூர் பாண்டநாடு வெள்ள நிவாரணப் பணிகள்
வீட்டின் முன்புறம் உலர வைக்கப்பட்டுள்ள மெத்தை, புத்தகங்கள் மற்றும் மரச்சாமான்கள்
காய வைக்கப்பட்டிருக்கும் நாற்காலிகள்

வீட்டிற்கு சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு சரிவர இல்லாததால் மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் சோர்வாகவே காணப்படுகிறார்கள். தன்னார்வலர்களின் நிவாரண உதவியும் பெரிய அளவில் இல்லாததால் அரசு சார்ந்த உதவிகளை மட்டுமே அப்பகுதி மக்கள் தற்போது பெற்று வருகின்றனர். உயர் நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் வீதியில் வரும் நிவாரண வாகனங்களை எதிர்பார்த்தே வாழும் நிலைதான் உள்ளது. அன்றாட தொழிலாளிகள், ஏழைகள் நிலை வேறு. அவர்களுக்கு இன்னமும் முகாம் ஒன்றே கதி.. படிப்படியாக தண்ணீர் வடிந்தாலும் அவர்களின் கண்ணீர் மட்டும் குறையவில்லை.

அணில் குமார் முன்னாள் ராணுவ ஊழியர்

என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லாரும் இப்போ குன்னூரில் இருக்காங்க.. என்னோட பொண்ணுக்கு பிரசவ காலம் என்பதால அதை பார்க்க போயிட்டாங்க.. நான் மட்டும் இங்க வந்தேன். வந்தபோது இங்க பெரும் மழையில் மாட்டிக்கிட்டேன். விஷயம் கேள்விப்பட்டு எங்க சொந்தக்காரங்க எல்லோரும் பதறிட்டாங்க. நான் இருக்கேனா இல்லையான்னு கூட தகவல் சொல்ல முடியலை. இப்பவும் கரண்ட் எதுவும் இந்த பகுதிக்கு வரல. இந்த கெட்டதுலயும் ஒரு நல்லது என் மனைவி அங்க இருந்துட்டாங்க. பொருட்களையும் எல்லா சாதனங்களையும் மீட்பது கடினம்தான்.


ஜெர்ரி தெரு விளக்குகள் அமைக்கும் நிறுவனம் வைத்திருப்பவர்கேரள வெள்ளம் : ஆலப்புழா செங்கனூர் பாண்டநாடு வெள்ள நிவாரணப் பணிகள்எங்க வீடு முழுதும் நீரில் முழ்கி விட்டது. எங்களோட மாமா வீட்டின் இரண்டாவது மாடியில் மொத்த முடும்பமும் தங்கிட்டோம். அங்கேயே அனைவரும் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். ஆர்மி ஹெலிகாப்டரிலிருந்து போட்ட உணவு பொருட்களை கொண்டு சமாளிச்சோம். வீட்டில் உள்ள பொருட்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்துக்கும் மேல நஷ்டம். மின்சாதன பொருட்கள், துணி, பர்னிச்சர் எல்லாம் போச்சி… இப்ப எங்களோட பணியாளர்களை கொண்டு வீட்டை சுத்தம் செஞ்சிட்டு இருக்கோம். நாலஞ்சி பேர் இந்த வேலையை செஞ்சாலும் ரொம்ப சிரமமா இருக்கு. இதுக்கே நாங்கள் சொந்தமாக ஜெனரேட்டர் ஏற்பாடு செஞ்சி மோட்டார் வச்சி தண்ணீர் இறச்சி மிஷினால சுத்தம் பண்ணிட்டு இருக்கோம். ஆனாலும் வேலை தீர்ந்தபாடில்ல.


பிலிப் போஸ் ரப்பர் தோட்ட முன்னாள் அதிகாரி
கேரள வெள்ளம் : ஆலப்புழா செங்கனூர் பாண்டநாடு வெள்ள நிவாரணப் பணிகள்பிலிப்-ன் வீட்டு வெளியில் காய வைக்கப்பட்டிருக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்

எங்களோட வாழ்நாளின் மொத்த சேமிப்பையும் ஒரு இரவில் வந்த பெரு மழை அழிச்சிட்டு போயிடுச்சி. இப்போ கேம்பில் இருந்து திரும்பி வந்து பார்த்தா பொருட்கள் எல்லாம் நாசமாயிருக்கு. வீட்டு கதவை திறக்குறதே ரொம்ப கஷ்டமாயிருந்தது. திறந்து பார்த்ததும் பெரிய நல்ல பாம்பு இருந்தது. நான் பொதுவா பாம்புகளை அடிக்க மாட்டேன். ஆனா வேற வழியில்ல. கிரசின் தெளிச்சி அடிச்சி அத தூக்கி போட வேண்டியதாயிற்று. அது ஒண்ணுதான்னு பார்த்தா, சிலாப்புல இன்னொரு பாம்பு இருக்கு. அதையும் அடிக்க வேண்டியதாக போச்சு. ரொம்ப மோசம்.

நாங்க இரண்டே பேர்தான் கணவன்-மனைவி. அறுபது வயசுக்கு மேல ஆனவங்க. எல்லாம் போச்சி. எனக்கு பென்சன் பணம் மட்டும்தான் வருமானம் என்பதால வீட்டுல சில தென்னை மரம், கோழி வளர்க்கிறதுன்னு செஞ்சேன். அறுபத்தி அஞ்சி கோழிக்கு மேல வளர்த்தேன். அது எல்லாம் செத்து போச்சு. அரசாங்கம் இவ்ளோ நடந்த பின்னாடியும் இழப்பீடு பத்தி பேசவே இல்ல. அணைகளை முழு கொள்ளளவு எட்டிய பிறகு திறந்து விட்டதுதான் இவ்ளோ பெரிய பாதிப்பு.

ஜோபி மற்றும் அவரது மாமியார்

என்னோட கணவர் வளைகுடா நாட்டுல வேலை செய்கிறார். நானும் என் மாமியார் என் குழந்தை, மூணு பேர்தான் இங்க இருக்கோம். மழை பெய்ய ஆரம்பிச்ச பின்னாடி இவ்ளோ வெள்ளம் வரும்னு நாங்க யாரும் எதிர்பாக்கல. இந்த திடீர் வெள்ளத்தால் பொருட்கள பாதுகாக்கிறது முடியாம போச்சி. எல்லா பொருட்களும் வீணாகி போச்சி. இது  என்னோட சொந்த வீடு இல்ல. உறவினர் வீடு. எங்க வீட்டுல கொஞ்சம் சீரமைப்பு வேலை நடக்கிறதால. இங்க தங்கினோம். அங்க கொஞ்சம் பொருள், இங்க கொஞ்சம் பொருள்னு மொத்தமா போச்சி… இதெல்லாம் சீராக எத்தனை நாள் ஆகும்னு தெரியல. ஒரு சில தன்னார்வலர்கள் வந்து வீட்ட சுத்தம் பண்ண உதவி செஞ்சாங்க. அதுக்கு பின்னாடி இப்ப பொருட்களை எல்லாம் நாங்க சரி பண்ணிட்டு இருக்கோம்.

வேணுகோபால் மற்றும் கே.எஸ்.ராஜன் கரிங்காட்டுகாவு தேவி கோவில் அறங்காவலர்கள்

கேரள வெள்ளம் : ஆலப்புழா செங்கனூர் பாண்டநாடு வெள்ள நிவாரணப் பணிகள்

சேரும் சகதியுமாய் கோவில்

பம்பையாற்றின் கரையிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. இதுல பத்திரகாளியும், துர்கையும் இருக்காங்க. கோவிலுக்குள்ள வெள்ளம் புகுந்துடுச்சி. இப்ப கோவில் முழுக்கவே சேரும் சகதியுமா இருக்கு. அதை எல்லாம் சுத்தம் செய்யும் வேலையை தான் இப்ப செய்யுறோம். ஓணம் தொடங்குறதால குறைந்தது பூஜைகளை செய்யலாம் அப்படிங்கிறதால முடிஞ்சத செஞ்சிட்டு இருக்கோம். மழை வெள்ளத்துக்கு பிறகு பூஜை எதுவும் நடக்கவேயில்லை.

வினிஷ்குமார் பம்பையாற்றின் கரையோரம் அமைந்துள்ள முகாமில் தற்போது தஞ்சமடைந்திருப்பவர்

கேரள வெள்ளம் : ஆலப்புழா செங்கனூர் பாண்டநாடு வெள்ள நிவாரணப் பணிகள்வயதான அப்பா, அம்மாவோட சேர்ந்து இந்த முகாமில் தங்கியிருக்கிறோம். எங்களுடைய வீடு முழுவதும் சேதமடைந்து விட்டதால் திரும்ப போக முடியவில்லை. இந்த மழையின் போது என்னோட அப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு ரொம்ப மோசமான நிலைக்கு போயிட்டார். எப்படியோ அவரை காப்பாத்தி வச்சிருக்கோம். இதெல்லாம் எப்ப சரியாகுமோ தெரியல.

பாண்டநாடு – பிரையார் பகுதியில் பரந்து விரிந்து ஓடும் பம்பை ஆறு

சின்னம்மா சாக்கோ புத்தன்காவு.

”என்பத்தைந்து வயதான என்னோட வாழ்நாள்ல இந்த மாதிரி வெள்ளைத்த பார்த்ததே இல்ல. வீடு முழுக்க தண்ணி. கூரை மண்டை வரைக்கும் ஏறிடுச்சி. ஓடுகள் எல்லாம் ஒடஞ்சி சேதமாகிடுச்சி. இப்ப வரை ஒரு பொருளும் எனக்கு நிவாரணமா கிடைக்கல. நாம் கேம்புக்கு போயி தங்கல. இங்க பக்கத்துலயே உறவின வீட்டுல தங்கிட்டேன். அதையே சொல்லி அதிகாரிகள் யாரும் எந்த பொருளும் தராம இருக்காங்க. சாப்பாடு கூட சர்ச்லதான் கொடுத்தாங்க.” என்று சொல்லிக்கொண்டே தன்னிடம் இருக்கும் பிஸ்கட்டுகளை நம்மிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். ”அடுப்பு எதுவும் இல்லை. இல்லனா டீ போட்டு கொடுத்திருப்பேன்” என்கிறார்.

உஷா புத்தன்காவு.

கேரள வெள்ளம் : ஆலப்புழா செங்கனூர் பாண்டநாடு வெள்ள நிவாரணப் பணிகள்இந்த வீடு கட்டி பதினெட்டு வருஷமாகுது. இந்த இடம் ரொம்ப பள்ளத்துல இருக்கு. மழை எப்ப வந்தாலும் முழங்கால் அளவுக்குதான் தண்ணி வரும். ஆனா இப்ப தரையில இருந்து 8 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் வந்துடுச்சி. மழை கொஞ்சம் அதிகமா வரும்போதே நான் கீழ இருந்த எல்லா பொருளையும் எடுத்து மாடி மேல வச்சிட்டு உறவினர் வீட்டுக்கு போயிட்டேன். வந்து பார்த்த பிறகு எல்லாம் சாதனங்களும் நனைஞ்சி வீணாகி போயிருக்கு. வீட்டுல இப்ப ஒரு சாதனமும் மிஞ்சல.. எனக்கு மகன் மகள் யாரும் இல்ல. எப்படி இதெல்லாம் சரிகட்ட போறன்னு தெரியல…!

வீட்டின் மேற்கூரைகளின் ஓடுகள் அளவிற்கு வெள்ளம் பாய்ந்திருக்கிறது

வாசவன் வயது 75, புத்தன்காவு

நானும் என்னோட மனைவியும் மட்டும்தான் இருக்கோம். மழை வெள்ளம் வர ஆரம்பிச்சதுமே.. நாங்க முகாமுக்கு போயிட்டோம். திரும்பி வந்து பார்க்கும்போது பொருட்கள் எல்லாம் வீணாகி போயிருந்தது. ரொம்ப நாசமாகி போயிருக்கதால எங்களால சுத்தம் செய்ய முடியல… அவ்ளோ மண்ணு,குப்பை இருக்கு. அதனால தன்னார்வலரும், சர்ச்ல ஏற்பாடு செய்த ஆட்களும் வந்து சுத்தம் பண்ணிட்டு இருக்காங்க. இதெல்லாம் இனிமே எப்படி சம்பாதிக்க போறனோன்னு தெரியல.

செபாஸ்டின் பாதிரியார் மற்றும் பர்னாபாஸ் கேரளா பல்கலைக்கழக மாணவர்

கேரள வெள்ளம் : ஆலப்புழா செங்கனூர் பாண்டநாடு வெள்ள நிவாரணப் பணிகள்சர்ச் சார்பா பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் வேலைகள்ல ஈடுபட்டிருக்கோம். ஜெனரேட்டர், மோட்டாரையும் கொண்டு போயி தண்ணிய வெளில இறச்சிட்டு கிணத்து தண்ணிய கொண்டு சுத்தம் பண்ணி தருகிறோம். அது மட்டுமில்லாம கிணத்தையும் சுத்தம் பண்ற வேலைய நாங்க செய்யுறோம். இதெல்லாம் எங்க சக்திகுட்பட்டுதான் செய்யுறோம். பல பகுதிகள்ல பாதிப்பு இருக்கு. அதையெல்லாம் சுத்தம் செய்ய அதிக ஆட்கள் தேவைப்படுறாங்க. என்னோட கல்லூரி இருக்க இடத்துல எதுவும் பெரிய அளவில் பிரச்சினை இல்ல. ஆனாலும் நாங்க மாணவர்கள் சார்பா பொருட்களை சேகரிப்பது, நிவாரண மருந்துகளை சேமிக்கிறது போன்ற வேலைகளை செஞ்சேன். இப்பதான் நான் எங்க வீட்டுகிட்டயே வந்திருக்கேன்.

சந்தோஷ் மற்றும் அவரது குடும்பம். நீர்விளாகம் பகுதி

கேரள வெள்ளம் : ஆலப்புழா செங்கனூர் பாண்டநாடு வெள்ள நிவாரணப் பணிகள்சினு கேட்டரிங் சர்விஸ் என்ற பெயரில் இங்க கடை வச்சிருக்கேன். அரிசி மூட்டைகள், தட்டு, பேப்பர் ரோல், தேநீர் கப்புகள், என பல பொருட்கள் நாசமாகிட்டது.  கேட்டரிங் உணவு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்துக்கு நஷ்டம். இது இல்லாம வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாமும் நாசமா போயிடுச்சி” என்று சொல்லிக் கொண்டே, “நீங்க ஏதாவது நிவாரணம் தருவீங்களா?” என்று ஏக்கமாகக் கேட்டார்.

  • வினவு களச் செய்தியாளர்கள் பாண்டநாடு, புத்தன்காவு, ஆலப்புழா மாவட்டம், கேரளா.

தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு : சென்னையில் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்

தூத்துக்குடி சதி வழக்கு :
தேசிய பாதுகாப்புச்சட்டம் , குண்டாஸ் சிறை சென்ற போராளிகளுக்கு வரவேற்பு ! விடுவித்த வழக்கறிஞர்களுக்கு நன்றி!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது கடும் அடக்குமுறையை  அரசு மேற்கொண்டது. அதனால்  பலர்  குண்டாஸ் வழக்கிலும் என்.எஸ்.ஏ.விலும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருமே தமிழக மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஆதரவாலும் வழக்கறிஞர்களின் இடைவிடாத பணியால்  விடுவிக்கப்பட்டுளனர். தேசிய பாதுகாப்புச்சட்டம், குண்டாஸ், சிறை சென்ற போராளிகளுக்கு வரவேற்பும் விடுவித்த வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் அரங்கக்கூட்டம்  நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அரங்கக்கூட்டம்
26.08.2018 | ஞாயிறு மாலை 4 மணி,
சென்னை நிருபர்கள் சங்கம்,சேப்பாக்கம், சென்னை._____________________________________________________________________

வரவேற்புரை :
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர், மக்கள் அதிகாரம்.

தலைமை :
தோழர் வெற்றிவேல் செழியன்,
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

கருத்துரை :
வழக்கறிஞர் அரிராகவன்,
மாவட்டச்செயலாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி.

வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன்,
மாவட்டச்செயலாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

பேராசிரியர் கருணானந்தன்,
மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவர், விவேகானந்தா கல்லூரி.

தோழர் தியாகு,
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.

தோழர் ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

தோழர் முகமது அனஸ்,
என்.எஸ்.ஏ., சிறை சென்றவர், நெல்லை.

தோழர் சரவணன்,
என்.எஸ்.ஏ. சிறை சென்றவர், கோவில்பட்டி.

தோழர் மகேஷ்,
குண்டாஸ் சிறை சென்றவர், குமரெட்டியாபுரம்,
தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

மற்றும் சிறை சென்றவர்களின் குடும்பத்தினர்.

_____________________________________________________________________

தகவல்:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு. 9176801656

பரோலில் விடப்பட்டிருக்கும் கிரீஸ் ! இந்தியா பாடம் கற்றுக் கொள்ளுமா ?

கோர்பு நகரம்.

லக முதலாளித்துவ நெருக்கடிக்கு விலை கொடுத்த நாடுகளில் முக்கியமானது கிரேக்கம். கிரேக்க பொருளாதாரம் உலகமயமாக்கலில் பிணைக்கப்பட்டு,  கிரேக்க உழைக்கும் மக்களை பணயம் வைத்து அந்நாட்டு முதலாளிகளும் ஐரோப்பிய வங்கிகளும் நடத்திய சூதாட்டம், 2008-இல் தொடங்கிய உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் போது கிரேக்க நாட்டை திவால் நிலைக்குத் தள்ளியது. வயதானவர்களின் ஓய்வூதியங்கள் காணாமல் போயின, வங்கிகள் திவாலாகின, வேலை இழப்புகள் அதிகரித்தன, வணிகம் படுத்து விட்டது.

நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக ஐரோப்பிய/அமெரிக்க நிதி நிறுவனங்கள் முதியவர்களின் ஓய்வூதியங்களை மறுசீரமைத்து வெட்டுவது, அரசு வழங்கும் பொதுச் சேவைகளை குறைப்பது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்தன. அவற்றை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ‘ஜனநாயக’ அரசை அவமானப்படுத்தி தமது கட்டளைக்கு பணிய வைத்தன. இதன் விளைவாக அந்நாட்டு மக்களில் பலர் தமது வாழ்வாதாரங்களை இழந்து கடும் நெருக்கடியில் சிக்கினர்.

கிரேக்கம் பற்றிய குறிப்பு : இந்நாடு கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு தீவுகளைக் கொண்டது. இதன் தலைநகர் ஏதென்ஸ். மக்கள் தொகை சுமார் 1.1 கோடி, தனிநபர் ஆண்டு வருமானம் $29,030.

கிரேக்க நாடு தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு இந்தக் கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டிகளை பார்க்கவும்.

இப்போது கிரேக்கத்தின் நிலை என்ன? மைக்கேல் ராபர்ட்சின் ஆகஸ்ட் 9, 2018 கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே

பரோலில் விடப்பட்டிருக்கும் கிரேக்க பொருளாதாரம் மூவரணியின் மீட்பு திட்டம் என்று அழைக்கப்படும் சிறையிலிருந்து கிரேக்கம் (கிரீஸ்) சட்டபூர்வமாக விடுவிக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க அரசு அதன் வரி வருவாயை எப்படி செலவிட வேண்டும் என்பது பற்றியும், அது எவ்வளவு கடன் வாங்கலாம் என்பது பற்றியும் யூரோ குழு, ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகியவை அடங்கிய மூவரணியின் கட்டுப்பாடுகளும், வெளிப்படையான உத்தரவுகளும் முடிவுக்கு வந்திருக்கின்றன.

ஆனால், கிரேக்க நாட்டின் முழுமையான விடுதலையாக இதை பார்க்க முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, கிரேக்க அரசு யூரோ குழுவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது. அதன்படி ஓய்வூதிய திட்டத்திலும், அரசு வழங்கும் பொது சேவைகளிலும் ‘சீர்திருத்தங்கள்’ செய்வது உள்ளடங்கிய கறாரான செலவு குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக, கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 180 சதவீதமாக உள்ள அரசு கடனை திரும்பக் கட்டுவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட கடன்-நீட்டிப்பு திட்டத்தின் படி, கிரேக்கம் இரண்டாவது மீட்பு திட்டத்தின்கீழ் பெற்ற 9,700 கோடி யூரோ ($11,200 கோடி) மதிப்பிலான கடன்களை திருப்பிக் கட்டுவதற்கு இன்னும் 10 ஆண்டு அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதாவது, அந்தக் கடன்கள் மீதான வட்டியையும், அசலையும் கட்டுவது 10 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்படுகிறது. கட்டாமல் நிலுவையில் இருக்கும் பழைய கடன் பாக்கிகளை தீர்ப்பதற்கும், எதிர்வரும் கடன் கட்டும் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும், 2400 கோடி யூரோ கையிருப்பை ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு 1500 கோடி யூரோ புதிய கடன் கொடுப்பதாக கடன் காரர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோர்பு நகரம்.

அதாவது, யூரோ குழுவுக்கு கிரேக்கம் கொடுக்க வேண்டிய கடன் தொகையை அந்நாடு 2032 வரை கட்ட வேண்டியதில்லை. இது நல்ல விஷயமாக தெரியலாம். ஆனால், கடன் சுமை எந்தக் குறைப்பும் இல்லாமல் தொடர்கிறது.

“கடன் தள்ளுபடி செய்யாமல் கடன் கட்டும் தவணையை மட்டும் தள்ளிப் போடுவதன் விளைவாக ஐரோப்பிய அரசுகள் கிரேக்க நாட்டிடமிருந்து வசூலிக்க வேண்டிய கடன் 2018- இறுதியில் எந்த அளவில் இருக்கும்  என்ற இப்போதைய மதிப்பீட்டை விட 50%-க்கும் மேல் உயரும். இதன் விளைவாக 22-ம் நூற்றாண்டு வரையிலும் கிரேக்கம் ஐரோப்பிய கடன் காரர்களுக்கு கடன் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்”. என்று சொல்கிறது ஒரு ஆய்வு.

இப்போது, வெளியாகியிருக்கும் இன்னொரு அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், மூவரணியின் ஒரு பகுதியாக கிரீசுக்கு கடன்களை வழங்குவதற்கு பொறுப்பாக இருந்த ஐ.எம்.எஃப் அதிகாரிகள், ஐ.எம்.எஃப்-ன் அனைத்து விதிகளையும், நடைமுறைகளையும் மீறியதோடு, ஐ.எம்.எஃப் இயக்குனர் குழுவிடமிருந்தும் பல தகவல்களை மறைத்திருக்கின்றனர். இது ஐ.எம்.எஃப்-ன் சுயேச்சையான மதிப்பீட்டு அலுவலகம் தயாரித்த ஒரு அறிக்கையில் வெளியாகியிருக்கிறது. இந்த அலுவலகம் ஐ.எம்.எஃப் மேலாண்மை இயக்குனர் கிரிஸ்டீன் லகார்ட் மற்றும் அவரது அதிகாரிகளை பைபாஸ் செய்து அதன் செயல்பாட்டு இயக்குனர்களான அரசுகளின் பிரதிநிதிகளுக்கு அறிக்கையை அனுப்பியிருந்தது. கிரீஸ், போர்ச்சுக்கல், அயர்லாந்து நாடுகளுக்கான பொருளாதார மீட்பு திட்டங்களில் அந்நாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட ஐ.எம்.எஃப் நிதி ஒதுக்கீட்டை விட 2000% அதிகம் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது. அதிகாரபூர்வ வரம்பான 435%-ஐ இது அப்பட்டமாக மீறியிருந்தது.

இப்படி விதிமுறைகளை மீறியது “இந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமே” என்ற ஐ.எம்.எஃப் அதிகாரிகளின் நல்லெண்ணத்தால் நடக்கவில்லை. இதன் நோக்கம், திவாலாகிக் கொண்டிருந்த இந்த கடன் வாங்கிய நாடுகளுக்கு கடன் கொடுத்திருந்த ஐரோப்பிய வங்கிகளை திவால் ஆகாமல் பாதுகாப்பது ஆகும். பிரெஞ்சு, ஜெர்மன், பிரிட்டிஷ் வங்கிகள் நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டு அரசுகளின் கடன் பத்திரங்களை, அவை மிக உயர்ந்த வட்டி வீதத்தை ‘ஈட்டுவதால்’ வாங்கின. அதன் மூலம் பெருமளவு லாபத்தை குவிப்பதுதான் அவற்றின் நோக்கம். இந்நாடுகள் தங்கள் கடன்களை கட்டத் தவறியிருந்தால் ஐரோப்பிய வங்கி அமைப்பே குலைந்து போகும் அபாயம் இருந்தது. இந்த அபாயத்திலிருந்து முதலாளித்துவத்தை (நிதி மூலதனம்) காப்பாற்றுவது ஐ.எம்.எஃப்-க்கு மிக முக்கியமானது, அதை சாதிக்கும் முயற்சியில் விதிமுறைகளை மீறி, அனைத்து ஐரோப்பிய நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்நிலையையும் துயரத்தில் தள்ளி பண முதலைகளின் பணத்தை மீட்டுக் கொடுத்தனர்.

ஐ.எம்.எஃப் மீதான மதிப்பீட்டு அறிக்கை இதை வெளிப்ப்படையாக சொல்கிறது, “வங்கித் துறை வாராக் கடன்கள் சர்வதேச அளவில் பரவி விடாமல் தடுப்பது அவசியமான ஒரு பொறுப்பு என்றால், அதைத் தடுப்பதற்கான செலவை, அதனால் பயனடையும் சர்வதேச சமூகம் பகுதியளவாவது சுமக்க வேண்டும்”. [அதாவது, வங்கிகளின் ஊதாரித்தனத்துக்கும், லாப வேட்டைக்கும் விலையை உழைக்கும் மக்கள் கொடுக்க வேண்டும்.]

அதாவது, யூரோ கடன் நெருக்கடி வெடித்துக் கிளம்பிய போது வங்கிகள் தாம் கடன் கொடுத்த முழு தொகைகளையும் திரும்பிப் பெறுவதையும் இலாபத்தை தக்க வைத்துக் கொள்வதையும் ஐ.எம்.எஃப், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மூலம் உறுதி செய்து கொண்டன – எனவே வங்கிகள் தமது பணத்தை இழக்கும் எந்த அபாயமும் இல்லாமல் உறுதி செய்யப்பட்டது. [அதாவது, லாபம் எங்களுக்கு ரிஸ்க் பொதுமக்களுக்கு என்பது நிதி மூலதனத்தின் மந்திரம்]

இதற்கிடையில் அயர்லாந்து, போர்ச்சுக்கீசிய, கிரேக்க குடிமக்கள் இந்த மூவரணியின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக சிக்கன நடவடிக்கைகளை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக எதிர் கொண்டனர். இதை அப்போதைய கிரேக்க நிதி அமைச்சர் யானிஸ் வருஃபகிஸ் இதை “நிதி சித்திரவதை (financial waterboarding)” என்று அழைத்தார்.

கடனை திரும்பக் கட்டுவதற்கான கிரேக்க நாட்டின் மீதான சுமை 10 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டிருந்தாலும். இன்னும் ஒரு மலை போன்ற கடன் சுமை தொடர்கிறது. பொதுச் சேவைகளில் வெட்டு, வரி அதிகரிப்பு போன்ற அரசின் கழுத்தை நெரிக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஏதுவான நிதிநிலை அரசிடம் இல்லை, ஏற்கனவே செய்த வெட்டுகளை குறைத்து சேவைகளை மீண்டும் வழங்குவது  பற்றி பேசவே வேண்டியதில்லை.

கடந்த மே மாதம் நான் சொன்னது போல, “நிதர்சனம் என்னவென்றால், கிரேக்க பொருளாதாரத்தின் நிஜ வளர்ச்சி கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆண்டுக்கு 2%-க்கு அதிகமாக போவது சாத்தியமற்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக உள்ள கடன் சுமை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரிக்கிறது. அதைக் கட்டுவதற்கு மீண்டும் கடன் வாங்க வேண்டும், சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் கடன் காரர்கள் கைப்பற்றிக் கொண்டு, உயிர் வாழ்வதற்கு அவர்களையே சார்ந்திருக்கும் கடன்பட்டவரின் சங்கிலியிலிருந்து கிரேக்க நாடு விடுபடுவதற்கு வழியே இல்லை.”

கிரேக்க நாட்டு மக்களின் வாழ்வில் 8 ஆண்டுகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. 2010-க்குப் பிறகு பொருளாதாரம் நான்கில் மூன்று பங்காக சுருங்கியிருக்கிறது; குடிமக்களின் வருமானம் மூன்றில் இரண்டாக குறைந்திருக்கிறது. வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களைத் தவிர மீதம் இருப்பவர்கள் மத்தியில் வேலையின்மை 20 சதவீதம் ஆக உள்ளது.

“நெருக்கடிக்கு முன்பு நன்றாக செயல்பட்ட நிறுவனங்களில் சுமார் 20 சதவீதம் தம்மை வெற்றிகரமாக புதுப்பித்துக் கொண்டு செயல்படுகின்றன. இன்னொரு 40 சதவீதம் கடனை அடைக்கும் அளவுக்கு செயல்பட்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அதற்கு மேல் லாபம் ஈட்டுவதில்லை.” என்கிறார் ஏதென்ஸ் சேம்பர் ஆஃப் சிறு நிறுவனங்களின் தலைவரும், முதிர்ந்த தொழில் முனைவருமான பாவ்லோஸ் ரவனிஸ். இவற்றைத் தவிர 40 சதவீதம் நிறுவனங்கள் நடமாடும் பிணங்கள் என்று அழைக்கும் நிலையில் உள்ளன. “அவற்றால் வரி கட்டவும் முடிவதில்லை, வங்கிகளிடம் வாங்கிய கடனையும் அடைக்க முடிவதில்லை” என்று சொல்லும் அவர், “பெரும் அளவு நிதியை முதலீடு செய்ய தயாராக ஒரு முதலீட்டாளர் முன்  வந்தாலும் இந்த நிறுவனங்களில் பாதிக்கும் குறைவானவற்றையே மீட்க முடியும்.”

கிரேக்க பொருளாதார வளர்ச்சி 2%-ஐ விட குறைந்தாலோ, உலக முதலாளித்துவம் புதிய பொருளாதார தேக்கத்தில் விழுந்தாலோ, கடன் அடைக்கும் சுமை மீண்டும் கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கும்.

முதலாளித்துவ சூதாட்டத்திற்கு இரையாகி மீள முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கும் கிரேக்க நாடு அதே சூதாட்டத்துக்குள் கண்ணை திறந்து கொண்டே போய் விழும்படி தூண்டும் நமது நாட்டின் முதலாளிகளையும், அவர்களுக்கு சொம்படிக்கும் மன்மோகன் சிங், மோடி போன்ற அரசியல்வாதிகளையும், அவர்களை ஆதரித்து புகழ்பாடும் முதலாளித்துவ அறிவாளிகளையும் முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்துகிறது.

கிரேக்க பொருளாதார நெருக்கடி பற்றிய கூடுதல் விபரங்களுக்கு

கேரளா : வடியாத வெள்ளம் தீராத சோகம் | நேரடி ரிப்போர்ட்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 5

தண்ணீரால் சூழப்பட்டிருக்கும் ஆலப்புழா – செங்கனாச்சேரி சாலை

_____________________________________________________________________

சாலைப் போக்குவரத்து படகுப் போக்குவரத்தாகவே நீடிக்கிறது

_____________________________________________________________________

கரை தெரியாத அளவிற்கு இன்றும் வெள்ள நீர் வடியவில்லை

_____________________________________________________________________

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வாழை மரங்கள்

_____________________________________________________________________

வீடுகளில் இன்னும் நீர் வடியவில்லை

_____________________________________________________________________

குடியிருப்புப் பகுதிகளில் குளம்போல் நிரம்பியிருக்கும் வெள்ளநீர்

_____________________________________________________________________

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடு

_____________________________________________________________________

ஆக்ரோசமான வெள்ளத்திற்குப் பின் அமைதியாக ஓடும் பம்பை ஆறு

_____________________________________________________________________

புழவாது பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகள்

_____________________________________________________________________

  • வினவு களச்செய்தியாளர்கள்  செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.

ரஃபேல் விமானம் மானம் ! UAE பணம் அவமானமா ? கருத்துப்படம்

UAE கிட்ட பணம் வாங்கினா… இந்திய வல்லரசுக்கே அவமானம்!

கேலிச்சித்திரம்: வேலன்.

_____________________________________________________________________

மோடியின் விளம்பரச் செலவு 4300 கோடி:
கேரள பேரிடருக்கு நிவாரணம் 600 கோடி!

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.
நன்றி: rsyftn

_____________________________________________________________________

கேரளா: கடவுளின் தேசம்:
என்னய வச்சு அரசியல் மட்டும் செய்யுங்கடா… அடேய்… பக்தாள்ஸ்…
என்னய காப்பாத்துங்கடா… கதறவிடாதீங்கடா…

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.
நன்றி: rsyftn

_____________________________________________________________________

இணையுங்கள்:

சிசேரியன் எனும் உயிர்காக்கும் சிகிச்சை !

சிசேரியன் என்றால் என்ன ?

பெண்கள் கர்ப்பமுற்று, கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவிக்கும் நேரத்தில் ஏற்படும் இடர்களைக் களைந்து, அடி வயிற்றில் அறுவை செய்து கர்ப்பப்பையில் இருந்து குழந்தையை எடுக்கும் சிகிச்சை முறைக்கு பெயரே சிசேரியன் ஆகும்.

இதை மருத்துவ வழக்கில் LSCS என்போம். அதாவது lower segment caesarean section என்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

மாதிரிப்படம்

இந்த சிகிச்சை முறை பன்னெடுங்காலமாக வழக்கில் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் கிபி 300-களில் மவுரிய அரசு ஆட்சியில் இருக்கும் போது
பிந்துசாரரின் தாயார் கர்ப்பமாக இருக்கையில், தவறாக விசத்தை உண்டு இறந்து விடுகிறார்.

சந்திரகுப்தரின் ஆசிரியரும் அரசின் ஆலோசகருமான சாணக்கியர் ராணியின் வயிற்றை கிழித்து மகவை வெளியே எடுத்ததாக வரலாறு கூறுகிறது. இதே முறை ரோமானிய அரசுகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது

இந்த சிகிச்சை முறையினால் நாம் அடைந்த நன்மை என்ன?

சுமார் 40 – 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த சிசேரியன் நமது தமிழ்நாட்டில் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. கடந்த 30 வருடங்களாக இந்த சிகிச்சை நமது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது.

வீட்டில் பிரசவம் நடக்கையில் பிரசவத்தின் போது நிகழும் பல பிரச்சினைகளுக்கு நமக்கு வழி தெரியாமல் இருந்தது.

கர்ப்ப கால பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படும் பல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு குழந்தை மற்றும் தாயின் உயிரைக்காக்க முன்னெச்சரிக்கையாக சிசேரியன் செய்யப்படும்.

காரணங்கள் பல அவை என்னென்ன?

1. தாயின் இடுப்பெலும்பு குறுகிய தன்மை இதை cephalo pelvic disproportion என்றோம். குழந்தையின் தலை கீழே இறங்குவது தடைபடும் இதனால் பிரசவம் நிகழாமல் குழந்தை உள்ளே இறந்து அதன் விளைவாய் தாயும் இறப்பாள்.

cephalo pelvic disproportion பொதுவாக 140 – 145 CM அளவுக்கு கீழ் வளர்ச்சி உள்ள தாய்மார்களுக்கு இடுப்பெலும்பு குறுகலாக இருக்கும். இன்னும் வளர்ந்த தாய்மாரில் சிலருக்கும் கர்ப்ப காலத்திலும் இடுப்பெலும்பு அளவு குறுகலாக இருப்பது கண்டறியப்படுகிறது. சிலருக்கு குழந்தையின் தலை பெரிதாக இருப்பதால் இந்த நிலை ஏற்படும்

2. அசாதாரண குழந்தை இருப்பு நிலை ( abnormal presentation) குழந்தையின் தலை கீழ் இருப்பது சாதாரண நிலை 100-க்கு 95 சதவிகிதம் சாதாரண நிலையிலும் 5 சதவிகித குழந்தைகள் குதம் கீழாகவோ, பக்கவாட்டில் படுத்துக்கொண்டோ இருக்கும்.

இத்தகைய நிலைமைகள் ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டு இறுதிவரை அவை தலைகீழ் நிலைக்கு வரவில்லையெனில் சிசேரியன் மூலம் எடுக்கப்படுகின்றன.

3. தாய்க்கு ரத்த கொதிப்பு மற்றும் அதை ஒட்டிய பிரசவத்தின் போது வரும் வலிப்பு நோய் ( இதை eclampsia) என்று கூறுவோம். இத்தகைய கர்ப்பிணிகளை தொடர் சோதனைகள் மூலமே கண்டறிகிறோம்.

இவர்கள் பிரதிமாதம் மருத்துவரை சந்தித்து ரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டு ஸ்கேன் மூலம் குழந்தையின் நலத்தை சோதித்து ரத்த அழுத்தம் மாத்திரைகள் கொண்டு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

இந்தநோயினால் பிரசவமாகும் போது வலிப்பு வந்து பல தாய்மார்களின் இழப்புக்கு காரணமாக இருப்பதால் இத்தகையோருக்கு அவர்களது கர்ப்ப கால முடிவில் சிசேரியன் செய்து குழந்தை எடுக்கப்படுகிறது

4. கர்ப்ப காலத்தில் நீரிழிவு தாய்மார்களுக்கு வருவதை கண்டறிந்து அவர்களுக்கு உணவு முறை மாற்றம் மற்றும் இன்சுலின் சிகிச்சை அளிக்கப்படுகிறது இத்தகையோரின் குழந்தை சாதாரண நிலையை விட அதிகமாக வளரும் தன்மையுடன் இருக்கும் இதை macrosomia என்றோம்.

இத்தகைய குழந்தைகள் பிறக்கையில் 4 முதல் 5 கிலோவுடன் தலை பெரிதாக இருக்கும் ஆகவே இத்தகைய தாய்மார்களும் சிசேரியன் செய்யபடும் வாய்ப்பு அதிகமாகிறது.

5. இரட்டை கர்ப்பம் கொண்ட தாய்மார்களுக்கு சிசேரியன் செய்யப்பட்டு குழந்தைகள் எடுக்கப்படுகின்றன இதனால் குழந்தைகள் இறப்பு குறைகிறது.
தாய்மார் இழப்பும் குறைகிறது.

6. தாய்மார்களுக்கு இதய நோய் இருப்பின் அவர்களால் பிரசவகால வலி மற்றும் ஆற்றல் விரயத்தை தாக்குப்பிடிக்க முடியாது. ஆகவே அவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிசேரியன் செய்யப்படுகிறது.

இவையனைத்தும் தாய் சேய் உயிரை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிசேரியன் செய்ய காரணங்களாக அமைகின்றன.

அடுத்த பாகத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் இடற்பாடால் சிசேரியன் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.

(தொடரும்)

நன்றி: ஃபேஸ்புக்கில் Dr.ஃபரூக் அப்துல்லா,MBBS.,MD., சிவகங்கை.

லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி

8
பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி

காதல் அனைவரையும் ஏதேனுமொரு சமயத்தில் கிளர்ச்சி கொள்ள வைக்கும் ஒன்று. பதின்மத்தின் ஒருதலைக் காதலுக்காகவோ, திருமணத்தில் முடிவுறாத காதலுக்காகவோ, ‘உண்மையான காதலை’த் தேடியோ பெரும்பாலான மனங்கள் ஏங்கித் தவிக்கின்றன. கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்த  தினத்தில் அவருடைய கோட்பாடுகளை விவாதிப்பதைக் காட்டிலும் ஜென்னியுடனான அவருடைய காதலின் மகத்துவத்தை சொன்ன பதிவுகளைத்தான் முகநூலில் அதிகம் காணமுடிந்தது. காதலைக் கொண்டாட எல்லோருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. இடது, வலது, லிபரல் என வேறுபட்ட கருத்துடையவருக்கும் காதல் மிகக் கிளர்ச்சியூட்டும் வார்த்தை! எது காதல்? அது எப்படிப்பட்ட தன்மையில் இயங்குகிறது? காதல் உணர்வு ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானதா?

மிகைப்படுத்தப்பட்டு, பதின்மத்தின் உயிரியல் தேவைகளை புனிதத்துடன் முன்வைக்கும் ’காதல்’ உதாரணங்கள்தான் நம் முன்னே மலைபோல் குவிக்கப் பட்டிருக்கின்றன.  தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் ‘காதல்’களில் ஆண் நாயகர்கள் வெள்ளையான, தங்களைவிட உயரம் குறைவான, நாகரிக உடைகள் அணிந்த, ஒல்லியும் குண்டுமல்லாத பெண்களையே காதலிக்கிறார்கள். புரையோடிப்போன ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்தும் களமாக தமிழ் சினிமாக்கள் உள்ளன. ஒரு பெண்ணை துரத்தித் துரத்தி துன்புறுத்தி ‘காதல்’ கொள்ள வைக்கும் நவீன ‘கிருஷ்ணர்’கள் தமிழ் சினிமாவில் நாயகர்களாக உலவுகிறார்கள். தன் காதலை ஏற்காத பெண்களை குத்துடா, கொல்லுடா என்னும் போது தியேட்டரில் விசில் ஆராவாரம் காதை அடைக்கும்.

‘அடிடா அவளை கொல்றா அவளை’ என்ற நடிகர் தனுஷின் புகழ்பெற்ற பாடலை பகடி செய்யும் விதமாக சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’-இல் ‘அடிடா அவனை’ என நாயகி பாடுவதாக ஒரு பாடல் அமைக்கப்பட்டிருந்தது.  இந்தப் பாடலின் போது திரையரங்கு ஆழ்ந்த அமைதியில் இருந்தது.

‘அடிடா அவளை கொல்றா அவளை’ என்ற நடிகர் தனுஷின் புகழ்பெற்ற பாடலை பகடி செய்யும் விதமாக சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’-இல் ‘அடிடா அவனை’ என நாயகி பாடுவதாக ஒரு பாடல் அமைக்கப்பட்டிருந்தது.  இந்தப் பாடலின் போது திரையரங்கு ஆழ்ந்த அமைதியில் இருந்தது. விசிலடிக்கும் ‘ரசிகர்’கள் இதை ரசிக்கவில்லை என படம் பார்த்த பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்கள். தமிழ் சினிமாவும் அதில் தன்னை பிணைத்துக் கொண்டிருக்கும் சமூகமும் ஒன்றைப் பார்த்து ஒன்று பிரதியெடுத்துக்கொள்கின்றன. இந்த பிரதியெடுப்பில் முதன்மையானது ஆணாதிக்க சிந்தனை.

ஒரு லும்பன் (வேலையற்ற-பெரியோரை மதிக்காத-சதா குடியும் கூத்துமாக திரியும் ஒருவன்) ஒரு கல்லூரி பெண்ணை ஈவ் டீசிங் செய்கிறான், பின் அந்தப் பெண் அவனை காதலிக்கிறாள். அந்தக் காதலுக்காக தன் படிப்பை, வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறாள். பல இடர்ப்பாடுகளுக்கிடையே இருவரும் திருமணம் செய்துகொள்வதாக ஒரு சினிமா முடியும். இது பொதுவானதொரு சினிமா டெம்ப்ளேட். இதில் ஆண்-பெண்ணின் பின்னணி, ஊர் இவைகளை மாற்றி பல சினிமாக்களை உருவாக்கிவிடலாம். இப்படியான சினிமாக்கள் முக்கியமான இரண்டு விஷயங்களுக்காக எடுக்கப்படுகின்றன. முதலாவதாக திரையரங்குக்கு வரும் பதின்பருவத்தினருக்காக எடுப்பது, இரண்டாவது பதின்பருவ அல்லது இருபது வயதுக்குள்ளான காதல்களைக் காட்டும்போது பெண்களுக்கு அரைகுறை ஆடை அணிவித்து அதிக பாலுணர்வு தூண்டும் காட்சிகளை வைக்க முடியும். சமூகவியல் நோக்கில் சொல்லப்போனால் காதலை பண்டமாக மாற்றும் நுகர்வுத்தன்மையை விதைக்க உதவுபவையே இத்தகைய சினிமாக்கள்.

சமூகவியல் பேராசிரியர்  இவா இலோஸ் (Eva Illouz) தன்னுடைய ‘Consuming the romantic utopia: Introduction to a political economy of love’ என்ற நூலில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அமெரிக்க சமூகத்தில் நுகர்வை மையப்படுத்திய கற்பனாவாத காதலை பிரபலப்படுத்த சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் எப்படி பங்களித்தன என்று குறிப்பிடுகிறார்.  முதலாளித்துவ கலாச்சாரத்தில் நவீன காதல் எப்படி பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது அதன் நடைமுறைகள் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தனது நூலில் விவரிக்கிறார் இவா இலோஸ்.

“மரபார்ந்த இணைந்திருத்தல் என்பதற்கு பதிலாக டேட்டிங் என்பது அறிமுகமாகிறது. நுகர்வை மையப்படுத்திய ஓய்வுநேர செயல்பாடுகள் (உணவகங்களுக்குச் செல்லுதல், சுற்றுலா, சினிமாவுக்குச் செல்வது, வாகனங்களில் பயணிப்பது போன்றவை) டேட்டிங்கின் முக்கிய வழிமுறைகளாக  உருவாக்கப்பட்டன என்கிறார் இவா. வெகுஜென பரப்பில் விளம்பரங்கள், சினிமாக்கள் மூலம் ‘நுகரும் இணைகளாக’ அவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். விளம்பரங்களும் நடுத்தர வர்க்கத்தினர் வாசிக்கும் இதழ்களும் முன்வைக்கும் மிகைப்படுத்தப்பட்ட காதலும் ஓய்வை மையப்படுத்திய சந்தையும் ஒன்றுக்கொன்றை கருவியாக பயன்படுத்திக்கொண்டன.  ஓய்வை மையப்படுத்திய சந்தை, காதல் நடத்தையை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. அதுபோல, இந்தப் பொருட்களை நுகர்வதன் மூலம் இதுதான் ‘காதல்’ என உறுதிப்படுத்தப்படுகிறது.  சந்தையை அடிப்படையாகக் கொண்ட காதல் இத்தகைய கற்பனாவாதத்தின் அடிப்படையில் இயங்குவதாக இவா தன்னுடைய கருத்தை முன்வைக்கிறார்.

நுகர்வின் வழியாக உடோப்பிய – கற்பனாவாத காதலை பெற்று, திருமணத்தின் மூலம் அது நிறைவை எட்டுவதாக திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லப்படுகின்றன. லும்பனை திருமணம் செய்துகொண்ட பெண்ணின் வாழ்வு எப்படி இருக்கும்? லும்பனை மட்டுமல்ல, இளவரசனை திருமணம் செய்து கொண்ட சிண்டரெல்லாக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூட எவரும் கவலைப்படுவதில்லை.

‘‘பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் மையமாக காதல் இருக்கிறது. ஒரு படுகுழியைப் போல, நரகத்தைப் போல, தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதைப் போல பெண்களுக்கு எதிராக காதல் பயன்படுத்தப்படுகிறது”

புரட்சிகர பெண்ணியவாதியான ஷுலமித் ஃபயர்ஸ்டோன் (Shulamith Firestone, ‘The dialectic of sex: the case for feminist revolution’ என்ற நூலின் ஆசிரியர்) தன்னுடைய நூலில், ‘‘பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் மையமாக காதல் இருக்கிறது. ஒரு படுகுழியைப் போல, நரகத்தைப் போல, தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதைப் போல பெண்களுக்கு எதிராக காதல் பயன்படுத்தப்படுகிறது” என்கிறார்.

ஷுலமித் தன்னுடைய நூலில் The Culture of Romance என்ற தலைப்பில்  சொல்கிறார், “கற்பனைமயமாக்கப்பட்ட காதல் (ரொமாண்டிக்)அதிகாரத்தின் பார்வையில் சிதைந்துபோய் பாலின வர்க்க அமைப்பை வலுப்படுத்துகிறது. பெண்கள் உளவியல் ரீதியாக ஆண்களை சார்ந்திருக்க சமூக, பொருளாதார ஒடுக்குமுறைகள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிவோம். நவீன உலகில் சமூக-பொருளாதார ஒடுக்குமுறைகள் மட்டுமே பெண்களை உளவியல் ரீதியாக கட்டுப்படுத்தி வைக்கப் போதுமானதாக இல்லை. எனவே, அங்கு ரொமாண்டிசம் தேவைப்படுகிறது. பாலின வர்க்க அமைப்பு தகரும்போது செயற்கையான ஒன்றை அல்லது, முந்தைய ஒடுக்குமுறையின் மிகைப்படுத்தப்படுத்தப்பட்ட வடிவம் ஒன்றின் மூலம் ஆண் மேலாதிக்கம் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு முந்தைய குடும்ப அமைப்பு தளர்வான கட்டுப்பாடுகளுடன் இருந்தது. இப்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய, இறுக்கமான ஆணாதிக்க தனிக்குடும்ப அமைப்பு உருவாக்கப்படுகிறது.  ஒருகாலத்தில் வெளிப்படையாக பெண்கள் அவமதிக்கப்பட்டனர். இப்போது, போலியாக துதிக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். ரொமாண்டிசம் பெண்களை கலாச்சார ரீதியாக தங்களுடைய நிலையை உணர முடியாமல் வைக்கிற ஆண்களின் அதிகாரம். தொழிற்மயமாகிவரும் சமூகங்களில் அது முக்கிய தேவையாக உள்ளது.”

‘உண்மையான காதல்’, ‘தெய்வீகமான காதல்’ என பல பெயர்களில் உருவாக்கப்பட்ட அனைத்து ‘காதல்’களும் ஆண்களுக்கு தேவைப்படும் கட்டுக்கதைகள்; ஆணாதிக்க சிந்தனையில் உருவான கட்டுக்கதைகள் என்பதே பெண்ணியலாளர்களின் கருத்தாக உள்ளது.

அன்பு, காதல் எதுவும் உண்மையில்லை என்கிற ‘விரக்தி’ நிலைக்கெல்லாம் வரவேண்டியதில்லை. பெரும்பாலான உயிரினங்கள் அன்பு கொள்கின்றன. இதற்கெல்லாம் உதாரணம் சொல்ல உயிரியியலாளர்களின் மேற்கோள்களைச் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் அருகிலேயே இருக்கும் நாய், பூனைகளை கவனியுங்கள். மனித தாயைவிட அவை தங்கள் குட்டிகளுக்காக செய்யும் ‘தியாகம்’ மிகப் பெரியதாகத் தெரியும். அவற்றை தியாகம் என எண்ணி அவை செய்வதில்லை, வழியாக வந்த மரபணுக்களின் வழியாக அந்த குணங்களை அவை பெறுகின்றன. அதுபோலத்தான் மனிதர்களும். நம்மால் சிந்திக்க முடிகிறது என்பதற்காக மனிதர்கள்தான் அன்பு காட்டுவதில் சிறந்தவர்கள் எனக் கோரிக் கொள்கிறோம்.

‘உண்மையான காதல்’, ‘தெய்வீகமான காதல்’ என பல பெயர்களில் உருவாக்கப்பட்ட அனைத்து ‘காதல்’களும் ஆண்களுக்கு தேவைப்படும் கட்டுக்கதைகள்; ஆணாதிக்க சிந்தனையில் உருவான கட்டுக்கதைகள்

சற்றே நுணுக்கமாக அணுகிப் பார்த்தால் ஆண் மேலாதிக்கம், பெண்களை குடும்ப அமைப்புக்குள் இறுக்கிக் கொள்ள ‘தாய்மை’ உணர்வை பயன்படுத்திக் கொண்டது. இயல்பாக குழந்தைகள் வளரும்வரை தாயின் உதவியும் அரவணைப்பும் வழிகாட்டுதலும் தேவைப்படலாம். ஆனால், ஒரு பெண் தன் குழந்தைகள் வளர்ந்து பெரியர்களாகி, அவர்களுக்கு குழந்தை பிறந்து, அதாவது அந்தப் பெண் இறக்குவரை அவளை ‘தாய்மை’யின் பெயரால் சுரண்டுவது ஆணாதிக்கம் உருவாக்கிய குடும்ப அமைப்பில் விதியாக மாற்றப்பட்டுள்ளது.

ஷுலமித் சொன்னதுபோல, நகரமயமாதல்-தொழில்மயமாகும் சூழல் காரணமாக கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. பல கிராமங்களில் வயது முதிர்ந்த பெண்கள் தனியாக வசிக்கிறார்கள். வயது முதிர்வின் காரணமாக கணவர்களின் ஆதிக்கம் தணிந்திருக்க, பெண்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள். அதேசமயம் தனிக்குடும்ப அமைப்பில் பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் பிடி இறுக ஆரம்பிக்கிறது. ஒடுக்குமுறை ஆயுதமாக ‘காதல்’ பயன்படுத்தப்படுகிறது.  சமூகவியலாளரும் பெண்ணியவாதியுமான கேரல் ஸ்மார்ட் (Carol Smart), “ஆணாதிக்க சமூகத்தின் கருத்தியல் ஆயுதமாக காதல் உள்ளது. காதல் என்ற பிணைப்பின் மூலம் பெண்கள், ஆண்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பின், திருமணம் என்கிற சாதகமற்ற சட்ட ஒப்பந்தத்தில் நுழைந்து, குழந்தைகளை பராமரித்தல் என்கிற இறுதி முடிவில் நிறுத்தப்படுகிறார்கள்” என்கிறார்.

“ஆணாதிக்க சமூகத்தின் கருத்தியல் ஆயுதமாக காதல் உள்ளது. காதல் என்ற பிணைப்பின் மூலம் பெண்கள், ஆண்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பின், திருமணம் என்கிற சாதகமற்ற சட்ட ஒப்பந்தத்தில் நுழைந்து, குழந்தைகளை பராமரித்தல் என்கிற இறுதி முடிவில் நிறுத்தப்படுகிறார்கள்”

பல சமூகவியல் அறிஞர்கள் காதல் பெண்களுக்கு சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சுயத்தையும் அளிப்பதாக சொல்கிறார்கள்.  நம்முடைய சாதிய சமூகத்தில் சாதியை ஒழிக்கும் காரணியாக ‘காதல்’ இருக்கும் என பலர் பேசிவருகிறார்கள். பெரியாரும்கூட இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். காதல் மட்டுமே பெண்களுக்கு போதுமானதல்ல, அந்தக் காதலில் சமத்துவம் இருக்க வேண்டும் என்கிறார் பெரியார். ஆனால் இங்கே முந்தைய கருத்து மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. சமத்துவம் மீண்டும் குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறது.

என்னைச் சுற்றிலும் இருக்கும் ‘காதல்’களைப் பார்க்கிறேன். உடன் பணியாற்றியவர்கள், அருகில் வசிப்பவர்கள், உறவினர் என பலருடைய ‘காதல்’களை ஆராய்ந்ததில் அவர்களுடைய திருமணத்துக்குப் பின்பான வாழ்க்கை என்பது பிற்போக்குத்தனமான நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்ட பெண்களின் துயர வாழ்க்கைப் போலவே உள்ளது. திருமணம் முடிந்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்; குழந்தை பிறந்தவுடன் வேலையை விடவேண்டும். முழுநேரமாக குழந்தைகளை வளர்த்து சரியாக மூன்று ஆண்டுக்குப் பின் அடுத்த குழந்தைக்கு தயாராக வேண்டும். அடுத்த குழந்தையை பெற்றெடுத்து இரண்டு குழந்தையை ‘சிறப்பாக’ வளர்த்து, கான்வெண்டில் படிக்க வைத்து, எண்ட்ரென்ஸ் எழுத வைத்து, வேலைக்கு அனுப்பி, திருமணம் செய்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆய் கழுவி… அதாவது அந்தப் பெண் சாகும்வரை இத்துப்போன குடும்ப அமைப்புக்காக உழைக்க வேண்டும். பெண்ணின் விருப்பங்கள், தேர்வுகள் எப்போதும் கண்டு கொள்ளப்படுவதேயில்லை. தான் பார்த்து வந்த பணியில் தனிப்பட்ட திறமையுடன் மிளிர்ந்த பெண்கள், காதல் – திருமணம் – குடும்பம் என்கிற ஆண் மேலாதிக்க அமைப்புகளால் சிதைந்துபோகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் இதழ் வடிவமைப்பாளராக பணியாற்றியவர். காதல் திருமணம் செய்துகொண்டு, குழந்தை பிறந்தபின் பணியை விட்டுவிட்டார். பணி நிமித்தமாக அவரைத் தேடி தொடர்பு கொண்டேன். குழந்தையை கவனிக்கும் நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் வடிவமைப்பு வேலைகளை செய்து தருவதாக சொன்னார். தன்னை தொடர்புகொண்டு பணி கொடுத்ததற்காக நன்றி சொன்ன அவரிடம், வீணாகிக் கொண்டிருக்கும் திறமை ஏதோ ஒருவிதத்தில் பயன்படுத்துவது மகிழ்ச்சி என்றேன். உடனடியாக மறுத்த அவர் தன் குடும்ப பொருளாதாரத்துக்கு சிறு உதவியாக இருக்கும் என்பதற்காக மட்டுமே செய்வதாகவும் திறமை, பெரிய இலட்சியமெல்லாம் தனக்கில்லை என்றார். சுயமான கனவும் இலட்சியமும் கொண்ட பெண்களெல்லாம் குடும்ப வாழ்க்கைக்கு ஆகாதவர்கள் என அவருடைய ஆழ்மனதில் பதிந்து போயுள்ளதை அறிய முடிந்தது. உரையாடலின் முடிவில் தான் கற்றது வீணாகக்கூடாது. தன்னாலும் பொருளீட்ட முடியும் என்கிற சுயத்தை இந்தப் பணி மீட்டுத்தரும் என போகிற போக்கில் சொன்னார்.

இவா இலோஸ் சொல்கிறார், “காதல் சுதந்திரமானதாகவும் முற்போக்கானதாகவும் இருக்கலாம். அதே சமயம் அது அடக்குமுறையுடனும் இருக்கலாம்.” அடக்குமுறையையும் ஆணாதிக்கத்தையும் மறுத்த காதல் மட்டுமே புரட்சிகரமானதாகவும் சமநிலை திறன் கொண்டதாகவும் அமையும் என்கிறார்.

எழுத்தாளர் வெண்டி லாங்ஃபோர்டு தன்னுடைய Revolutions of the Heart: Gender, Power, and the Delusions of Love நூலில்  காதலின் தன்மை நீதியின் கூறுகளை உள்ளடக்கி உள்ளதை சுட்டிக்காட்டுவதோடு அது பெரும்பாலும் தவறான வழிநடத்தல்களில் போய் முடிவதாகவும் சொல்கிறார்.

“நாம் எதிர்ப்பார்க்கும் சமத்துவம், சுதந்திரம், இணைவு ஆகியவற்றை காதல் தருவதில்லை. கூடவே வலிமிகுந்த உணர்வையும் திருப்தியின்மையையும் சுயத்தையும் இழக்க வைக்கிறது. சொல்லப்போனால், அது நேர்மறையாக மட்டுமல்ல, நடுநிலையாகவும் இல்லை; ஆனால் பெரும்பான்மையும் எதிர்மறையானது.  காதலின் வெற்றி என்பது தனிப்பட்டவர்களின் குணங்களின் அடிப்படையிலும் அவர்களுடைய பகுத்தறிவு மிக்க நடவடிக்கைகளின் அடிப்படையிலும் அமைகிறது” என்கிறார்.

காதல் குறித்த இந்தக் கட்டுரையை எழுதக் காரணம் காதலின் மிகைப்படுத்தப்பட்ட பிம்பத்தை உடைக்க வேண்டும் என்பதும் காதலும்கூட ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு அமைப்பாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவுமே. நமக்குத் தேவை ஒரு இணைவு. அந்த இணைவு சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். அதோடு, காதலோ, இணைவோ வாழ்வின் இலக்காக ஒருபோதும் இருந்துவிடுவதில்லை. திருமணம் செய்துகொள்ளாவிட்டால் வாழ்க்கை முழுமையடையாது என  சொல்லப்படுகிறது. உண்மையில் காதலோ, திருமணமோ எவருக்குமே முழுமையைத் தந்து விடாது. ஒரு குறிப்பிட்ட வயதின் தேடலாக மட்டுமே காதல், திருமணமும் இருக்குமே அன்றி, வாழ்க்கையின் தேடல்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

கட்டுரைக்கு உதவியவை:

மு. வி. நந்தினி.

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

கேரளா : மீனவர்கள் வரலேன்னா என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது ! நேரடி ரிப்போர்ட்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 3

கேரள மழை வெள்ள பாதிப்பு குறித்தும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை வினவு செய்தியாளர்கள் சந்தித்து வருகின்றனர். கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைசேர்ந்த புதனூர் மற்றும் பாண்டநாடு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இங்கே பதிவு செய்கின்றனர். #KeralaFloods #KeralaFloodReliefலூயிஸ் கே.ஆபிரகாம், டெல்லி காவல்துறை, ஓய்வு, பாண்டநாடு.

வெள்ளம் வந்தபோது மேல்தளத்தில் நான் மட்டும் தனியாக இருந்தேன். வீட்டில் வேற யாரும் இல்லை. சுமார் இருபது மணிநேரம் தவித்துகொண்டிருந்தேன். என்ன செய்வது என்று புரியவில்லை. உதவிக்கு யாரையும் கூப்பிடவும் முடியவில்லை. முதல் தளம் வரை வெள்ளம். வீட்டில் ஒரு பொருளும் மிஞ்சவில்லை. அந்த நேரம் மீனவர்கள் வந்தார்கள். அவர்கள் வரவில்லை என்றால் இந்நேரம் என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது. கடற்படை எல்லாம் அவர்களுக்கு பிறகு வந்தவர்கள்தான். அவர்கள் வந்திருந்தாலும் காப்பாத்தியிருக்க முடியாது.

சந்தோஷ், பெந்தெகொஸ்தே சர்ச், பாண்டநாடு.

வெள்ளம் வந்தபோது சர்ச் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் வீட்டின் மேல் தளத்தில்தான் இருந்தோம். எங்கு பார்த்தாலும் வெள்ளம். வெளியேறி செல்வதற்கு எந்த வழியும் இல்லை. வெள்ளத்தின்போது மேல்தளத்தில் போட்டிருந்த ஓடும் உடைந்து விட்டது. ஒன்றும் புரியவில்லை. ஹெலிகாப்டர் வருமா என்று எதிர்பார்த்தோம், வரவில்லை. அப்படியே வந்திருந்தாலும் நிச்சயம் அவர்களால் எங்களை மீட்டிருக்க முடியாது. மேல்தளம் முழுவதும் ஓடுகள். அவர்கள் கீழே வந்திருக்க மாட்டார்கள். மீனவர்கள்தான் எங்களை மீட்டனர். தங்கள் உயிரைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. எங்களை காப்பற்றுவது மட்டும்தான் மீனவர்களின் லட்சியமாக இருந்தது.

ராதிகா, புதனூர்.

கடந்த ஒரு வாரமா முகாமில் தங்கியிருக்கோம். கழிப்பிடம் முதற்கொண்டு எல்லாம் பிரச்சினையாகத்தான் இருந்தது. சுத்தமான தண்ணியும் உணவும் இல்லை.  இப்பதான் தண்ணி வடிய ஆரம்பிச்சிருக்கு. வீட்ட கிளின் பண்ணலாம்னு வந்திருக்கோம். நிவாரணம் கொடுக்குற வண்டியும் உள்ள வர ஆரம்பிச்சிருக்கு. வண்டி வரும்வரை காத்திருந்து வாங்கிட்டு போறோம்.

ராதாமணி, புதனூர்.

ஒன்பது ஆடு இறந்துடுச்சி… ஒரு மாடு ரொம்ப நோய் வாய்பட்டிருக்கு. என்னோட வருமானமே இந்த ஜீவன்களை நம்பிதான். இப்ப அதுவும் இல்லாததால.. கஞ்சிக்கு கூட வழி இல்லை… ரோட்டுல யாராவது உணவு பொட்டலம் கொடுப்பாங்களான்னு காத்துக்கிட்டிருக்கோம். இங்க இருந்து கேம்புக்கு போனபோது கட்டியிருந்த துணியோட போனோம். திரும்பி வந்தா உடுத்தக்கூட துணி இல்லை. அதுவும் ஏதாவது வண்டியில வந்து தருவாங்களான்னு பார்த்துட்டிருக்கோம்.

சுதி,  புதனுர்.

கேம்புல இருந்து இன்னைக்குதான் வந்தோம். வீட்டுல ஒரு சாதனமும் இல்ல. மொத்தமும் போயிடுச்சி. கட்டிக்க கூட துணி இல்ல. இப்ப இந்த துணி கொடுத்தாங்க…. ஏதோ.. பழசோ… புதுசோ. இதை விட்டா வேற வழி இல்ல.

கருணாகரன்- கனகாம்பாள், பாண்டநாடு.

சமீபத்துலதான் எனக்கு ஹார்ட் ஆபரேசன் பண்ணேன். மழை பெய்ய ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா வீடு மூழ்கிடுச்சி. அதனால பக்கத்து வீட்டு மாடியிலதான் தங்கியிருக்கோம். இங்க இருந்து மாடிக்கு நீந்தி தான் போனோம். அப்பவே நிறைய மழை தண்ணிய குடிச்சிட்டோம். அதுக்கு பிறகு மூணு நாள் சோறு தண்ணி இல்லாம கிடந்தோம். மழை தண்ணிய குடிச்சிட்டு இருந்தோம். எனக்கு கண்ணெல்லாம் சொருக ஆரம்பிச்சிடுச்சி. இப்ப கொஞ்சம் கொஞ்சம் தண்ணி வடிய ஆரம்பிச்ச பிறகு சில வண்டிகள்ல வந்து பிரட் கொடுத்தாங்க. அதைத்தான் சாப்பிட்டோம். அதுவும் சிலது கிடைக்கும்.. கிடைக்காது…. ஒரு வாரமா மாத்திரை மருந்து எதுவும் சாப்பிடல… எல்லாம் வெள்ளத்துல போயிடுச்சி… அஞ்சி லட்ச ரூபா வரைக்கும் நஷ்டம்.

சுதா ராஜேந்திரன், பாண்டநாடு.

இப்ப வரைக்கும் வீட்டுக்கு தேவையான அடிப்படையான எந்த பொருளும் இல்ல.   அரிசி, பருப்பு எதுவும் இல்ல… நிவாரண பொருட்கள் எல்லாம் வருது. ஆனா மெயின் ரோட்டில இருப்பவங்களுக்கு மட்டுந்தான் கிடைக்குது. உள்ளே 52 குடும்பங்கள் இருக்கு. அவங்களுக்கு எதுவும் கிடைக்கலை. எனக்கு கிடைச்சது இந்த டார்ச் லைட் மட்டும்தான்.

ராஜலட்சுமி, புதனூர்.

கேம்பா இருந்தாலும், வீடா இருந்தாலும் பெரும் பிரச்சனையாத்தான் இருக்கு. பாத்ரூம் எங்கயும் போக முடியல. வெளியில தண்ணியா இருக்கு. வீட்டுல இருக்க பாத்ரூமும் மூழ்கிடுச்சி. பெண்களுக்கு தான் நிறைய பிரச்சனையே. முக்கியமா மாத்து துணி இல்ல.  ஒரே துணிய போட்டுட்டு இருக்கோம். வீடுகள் எல்லாம் மூழ்கி இருக்கிறதால, என்ன நிலைமையில இருக்குன்னு பார்த்துட்டு நிவாரணப் பொருட்களை எல்லாம் சேகரிச்சி மாடி வீட்டுல வச்சிட்டு எல்லாரும் திரும்ப முகாமுக்கு போறாங்க. எல்லா இடத்துலயும் தண்ணியா இருக்கிறதால நிவாரணப் பொருட்களை வாங்க திரும்பத் திரும்ப மெயின் ரோட்டுக்கு வர முடியல.

  • வினவு களச் செய்தியாளர்கள் செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்! பாகம் 1

கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்! பாகம் 2

கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 2

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்கனச்சேரி, குட்டநாடு, பாண்டநாடு ஆகிய பகுதிகள் மிகவும் மோசமான வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. செங்கனச்சேரியிலிருந்து ஆலப்புழா செல்லும் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருக்கும் பகுதி குட்டநாடு. இப்பகுதியில்தான் பம்பை ஆறு ஓடுகிறது. இந்த பம்பை நதிக்கரையோரம் பல நூறு குடும்பங்கள் குடியிருக்கின்றன.

இன்றுவரை பம்பா நதியில் வெள்ளநீர் கரைபுரண்டு சாலைகளில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வாரி அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. இப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக மீட்கபட்டாலும் எட்டுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் இறந்துள்ளதாக கூறுகின்றனர்.

கடந்த ஏழு நாட்களாக முகாமில் தங்கியிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று பார்வையிட முடியாத சூழல்தான் நிலவுகிறது. போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் யாரும் செல்லவில்லை. அதையும் மீறி சிலர் எட்டு கிலோ மீட்டர் துரம் வரை நடந்தே வீடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் மீண்டும் மாலை நடந்தே முகாமிற்கு திரும்ப வேண்டிய நிலைதான் நீடிக்கிறது.

எட்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள முகாமிலிருந்து நடந்தே வந்து வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு மீண்டும் முகாமுக்கு செல்லும் அவலம்.

பாண்டநாடு பகுதியின் முழு சேதாரத்திற்கும் பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளில் வந்த வெள்ளபெருக்குதான் காரணம். இந்த இரண்டு ஆறுகளின் வடிகாலாக பாண்டநாடு குடியிருப்புப்பகுதி மாறியுள்ளது. அந்தளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. வீடுகள் மற்றும் சுற்றுசுவர்கள் பெரும்பாலும் காட்டாற்று வெள்ளத்தில் தகர்ந்து கிடக்கின்றன. பல கடைகளின் ஷட்டர்கள் உடைந்து போயிள்ளன.

இப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. இன்னமும் வீட்டுல வெள்ளம் வடியல….!

தங்களுடைய வீட்டு மாடி முழுவதும் நிரம்ப தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாகவும் மீனவர்கள் மட்டும் வரவில்லை என்றால் இங்கே யாரையும் உயிரோடு பார்த்திருக்க முடியாது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான நேரம், சாலையின் இருபக்கமும் நிவாரண பொருட்கள் ஏதேனும் கிடைக்குமா என கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

பம்பையாற்றுக் கரையோரப் பகுதி மக்களுக்கான முகாம். மக்கள் தங்களது வீடுகளுக்கு சென்று புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவதால் முகாம் காலியாக இருக்கிறது.

செங்கனாச்சேரி, மணக்கச்சிரா, பம்பையாற்றங்கரை ஆகிய பகுதிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் தமது வீட்டு நிலைமையைக் காண வந்திருந்த மக்களின் கருத்துக்கள்:

லல்லு சூசன்,  புழவாது, செங்கனாச்சேரி.

இது எங்களோட  வீடும், அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட் சென்டரும். ஒன்னரை மாசமா பெய்த மழையால் ஒரு சிகிச்சை கூட செய்ய முடியலை. பதினைந்தாம் தேதி அன்று பலமாக மழை பெய்ததால் வீட்டில் இருந்த சில பொருட்களை மட்டும் பத்திரமாக எடுத்து மேலே வைச்சிட்டோம். கீழே இருந்த  சாதனங்கள் எல்லாம் நாசமாகிடுச்சி. வீட்டில் போட்டிருந்த தோட்டம் எல்லாம் அழிஞ்சிடுச்சி. இப்போது வெள்ளம் வடிஞ்சிடுச்சு… கனமழையின்போது ஆள் உயரம் வெள்ளம் வந்தது. குடும்பத்தோட முகாமுக்கு போய் தங்கிட்டோம். ஆறு நாளா முகாமில்தான் இருக்கோம்.

பொன்னப்பன், தட்டு கடை வைத்திருப்பவர். மணக்கச்சிரா.

இந்த ஏரியா முழுவதும் வெள்ளம்… இங்க இருக்கும் முப்பது குடும்பமும் முகாமுக்கு போயிட்டோம். வெள்ளத்துல அடிபட்டவங்கள உடனடியா பக்கத்துல இருக்க அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனதால உயிர்கள காப்பாத்த முடிஞ்சது…. வீடு முழுக்க வெள்ளம். வீட்டிலிருந்த பொருள் எல்லாம் நஷ்டம்… இது என்னோட கடைதான். எல்லாம் போயிடுச்சு…. இப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. இன்னமும் வீட்டுல வெள்ளம் வடியல….!

ஜோபின் ஜான்சன், மனக்கச்சிரா.

வீடு முழுக்க வெள்ளம்… 7 நாளா கேம்புல இருக்கோம். இன்னைக்குதான் வீடு எப்படி இருக்குன்னு பார்க்க வந்தோம்.. வீட்டில் இருந்த எல்லா சாதனங்களும் நஷ்டம். இப்ப குடிக்க சுத்தமான தண்ணி இல்ல… உணவு இல்ல…. கேரளா சர்கார் எல்லா உதவிகளையும் செஞ்சாலும் எல்லா பகுதிகளுக்கும் செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கு.. எங்க ஏரியாவில் இருந்து குட்டநாடு வரைக்கும் அதிகம் பாதிக்கபட்டிருக்கு. இந்த பக்கம் யாரும் இதுவரை வரலை… எங்களுக்கு வீட்டில் உள்ள சாதனங்கள் போனது கவலை இல்ல… உடனடியாக சுத்தமான தண்ணியும், உணவும்தான் தேவையா உள்ளது. கேம்பில் எல்லா அதிக ஆட்கள் இருக்கிறார்கள். எல்லா உதவியும் கிடைக்கிறது. அங்க பிரச்சனை இல்லை… ஆனால் இங்கு உள்ள பிரச்சனைகளை சர்கார் அறியணும்.

கனகன், பம்பையாற்றின் கரையோரம் வசிப்பவர்.

வீட்டில் எதுவும் இல்ல, இங்க இருக்க எல்லாரும் முகாமுக்கு போயிட்டோம்… எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்ல முடியாது… இங்க இருக்க சவுரியம் கேம்பில் இல்ல…  இருந்தாலும் எங்க நிலைமை சரியில்லை… அங்க இருக்கோம்.

கோபி, பம்பையாற்றின் கரையோரம் வசிப்பவர்.

மொத்தம் இங்க தொண்ணூறு குடும்பங்கள் இருக்கு.. இப்ப யாரும் வீட்டில் இல்ல. எல்லாம் கேம்பில் இருக்காங்க.. இன்னைக்குதான் வீட்டை பார்க்க வந்தேன்… வீட்டில் எந்த சாதனமும் இல்ல. எல்லாம் வெள்ளத்தில் போயிடுச்சி.

  • வினவு களச் செய்தியாளர்கள், செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்! பாகம் 1

உன்ன விட பெரிய டாக்டர் யாரும் இங்க இல்லையா ?

ன்று காலை என்னுடைய மருத்துவமனையில் உட்கார்ந்து நோயாளிகள் ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டிருந்தேன். (கலைஞர் இருந்திருந்தால் நோயாளிக்கு மாற்றாக வேறு பெயர் வைக்கச் சொல்லிக் கேட்டிருக்கலாம். நோயாளி என்ற சொல்லே நோய்வாய்ப்பட்டுவிட்டது. நோயாளியை ஆங்கிலத்தில் அழைக்கும் பேசண்ட் என்ற வார்த்தை இதமாக இருக்கிறது)

சரியாக பதினாறாவது பேஷண்ட்டாக வாட்ட சாட்டமான ஜீன்ஸ் பேண்ட் அரைக்கை சட்டை அணிந்திருந்த 50 வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார். வந்ததும் என்னிடம் “தம்பி டாக்டர் இருக்காரா?” என்று எதன் மேலும் அக்கறை இல்லாத, தான் மட்டும்தான் உயர்ந்தவன் என்று நினைப்பில் இருக்கும் மனிதனைப் போல் கேட்டார். நானும் சிரித்துக் கொண்டே ” நான் தான் டாக்டர்” என்றேன். ‘என்னது நீயெல்லாம் டாக்டரா?’ என்று அவர் மனதில் நினைப்பதை அவரது பாடி லாங்குவேஜ் எனக்கு காட்டிக் கொடுத்தது. ” இல்ல தம்பி, உன்ன விட பெரிய டாக்டர் யாரும் இங்க இல்லையா?” என்றார். ( இப்பவும் அவர் என்னை டாக்டராக ஏற்றுக் கொள்ளவில்லை. டாக்டர் என்று அழைக்காமல் தம்பி என்றுதான் அழைத்தார், ‘உன்னவிட’ என்று ஒருமையில்தான் அழைத்தார் ).” இங்க நான் மட்டும்தான் பெரிய சிறிய டாக்டர் எல்லாம் ” என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னேன். ( டாக்டர்கள் முக மலர்ச்சியுடன் இருப்பது புரோபஷனல் எதிக்ஸ்ஸாம். போலிஸ் ஸ்டேஷன் போய் அங்கு இருக்கும் இன்ஸ்பெக்டரைப் பார்த்து , தம்பி இன்ஸ்பெக்டர் இருக்காரா ? என்று கேட்டால் அந்த இன்ஸ்பெக்டர் காண்டாகி வாயிலையே மிதித்திருப்பார்?. அப்படி ஒரு டாக்டர் காண்டாக முடியாது.)

“சரி, உட்காருங்க, பேரு சொல்லுங்க ?” என்றதும் என் மேல் நம்பிக்கையற்று வேண்டா விருப்பாய் உட்கார்ந்து , ” ராகவன் சீனிவாசன் ” என்றார்.

ராகவன் சீனிவாசன் என்ற பெயரிலேயே அவர் யார் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். (பெயரில் என்ன இருக்கிறது? பெயரில்தான் எல்லாமும் இருக்கிறது).

“சொல்லுங்க சார் என்ன பண்ணுது ? ” என்றேன். அவர் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் ” தம்பி, எந்த காலேஜ்ல படிச்சிங்க? கவர்ன்மெண்ட்டா பிரைவேட் மெடிக்கல் காலேஜ்ஜா? என்று கேட்டார்.

அவர் பேசிய தமிழைப் பார்த்து நான், ” என்ன ராகவன், நீங்க கும்பகோணமா? ” என்றேன். ( சார் எனக்கு இப்போ ராகவனாகிவிட்டார் )

அவர் முகமலர்ச்சியுடன் ” ஆமா சார், எப்படி கண்டுப்பிடிச்சிங்க??” (தம்பி இப்போது ‘சார்’ராகிவிட்டேன் )

” நான் ஆடுதுறை தான் ” என்றேன். ஆடுதுறை என்றதும் ராகவன் இன்னும் குஷியாகிவிட்டார்.

அடுத்த கேள்வி, “ஆடுதுறைல எங்க சார்?” என்றார். அவரது நோக்கம் வீடு இருக்கும் இடத்தை வைத்து எப்படியாவது என்னுடைய ஜாதியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதே. ஆனால் என்னுடைய ஊர் தூத்துக்குடி.

(சென்னையில் இருப்பவர்களில் அதிகப்பட்சம் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் தான். என்னிடம் பேஷண்ட்டாக வருபவர்களின் பேச்சு ஸ்லாங்கை வைத்து அவர்கள் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று கண்டுப்பிடித்துவிடுவேன். உதாரணத்திற்கு சேலம் மாவட்டைச் சேர்ந்தவர் என்று கண்டுப்பிடித்துவிட்டால், அவரிடம் நான், ‘என்ன சார் சேலமா?’ என்று கேட்பேன். அவரும் குஷியாகி ‘ஆமா சார். நீங்களும் சேலமா?’ என்று என்னிடம் கேட்பார். நானும் சேலம் தான் என்பேன். அவர் சேல்த்தில் அம்மா பேட்டை என்றால், நான் எனது ஊரை சீல நாயக்கன்பட்டி என்று சொல்லிவிடுவேன். இப்படிப் பொய் சொல்வதால், இரண்டு நன்மைகள் உண்டாகின்றன, 1. டாக்டர் நம்ம ஊர்க்காரர் என்ற எண்ணம் அவர்களுக்கு வருவதால், என்னிடம் மிகவும் நெருங்கிவிடுவார்கள். மனதார நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 2. அவர்கள் என்னைவிட்டுவிட்டு வேறு மருத்துவர்களிடம் அதன்பின்பு போக மாட்டார்கள்)

நான் யூ.பி.எஸ்.ஸி மெயின் எக்ஸாமிற்கு இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆப்ஷனல் பேப்பர் தமிழ் இலக்கியம். தமிழ் விருப்பப் பாடத்தில் பக்தி இலக்கியம் என்ற பகுதியில் திருஞானசம்பந்தரின் திருவாசகத்தில் ‘ நீத்தல் விண்ணப்பம்’ என்ற பகுதியும் உள்ளது. நீத்தல் விண்ணப்பம் பகுதியை இன்று படித்துக் கொண்டிருந்ததால் அந்த புத்தகத்தை எனது மேசையில் வைத்திருந்தேன். ராகவன் அந்த திருவாசகம் புத்தகத்தைப் பார்த்து மேலும் குஷியாகிவிட்டார். ” சார் நீங்க் திருவாசகம் எல்லாம் படிப்பீங்களா? ” என்று என் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார். ( தம்பி டாக்டராகி இப்போது என் கையைப் பிடித்துவிட்டார்)

“திருவாசகம் மட்டுமல்ல, தேவாரமும் படிப்பேன் ” என்றேன். ராகவனின் கண்களில் உள்ள பாப்பா விரிந்து கண்களில் நீர்க்கோர்த்துப் பளிச்சிடுவதைப் பார்க்கிறேன் இப்போது.

” நீங்க சிவன் பக்தரா ? ” என்று அடுத்தக் கேள்வியைப் போட்டார். அதாதவது அவர் நான் என்ன ஜாதி என்று கண்டுபிடித்துவிட்டார். இப்போது அதன் உட்பிரிவுக்குள்ப் போய் சைவமா, வைணவமா என்று கண்டுப்பிடிக்க வேண்டும்.?

“அதெல்லாம் இன்னொரு நாள் வாங்க அப்போ ஃபிரீயா பேசலாம் ராகவன். வெளியில் நிறைய பேஷண்ட்ஸ் வெயிட் பண்றாங்க, நீங்க உங்க உடம்புக்கு என்னப் பிரச்சனைனு சொல்லுங்க?” என்றேன். ( மனதிலுள்ள பிரச்சனையை அல்ரெடி கண்டுப்பிடித்துவிட்டேன்)

” சார் மோஷன் போற இடத்துல கட்டி இருக்கு” என்றார்.

“மோஷன் போற இடத்துல மட்டும்தான் கட்டி இருக்கா?” என்றேன் சிரிப்புடன்.

“உங்களுக்கு ரத்தக் கொதிப்பு இருக்கணுமே? , சுகரும் கொலஸ்டிராலும் இருக்கணுமே? என்றேன்.

“ஆமா சார் இருக்கு” என்றார்.

” நீங்க பேசும்போதே இவ்ளோ மூச்சு வாங்குதே, அப்போ நடக்கும்போது இதவிட அதிகமா மூச்சு வாங்குமே ? ”

“ஆமா சார்…. ஆமா சார்”

“அப்படின்னா உங்களுக்கு ரீசண்ட்டா ஹார்ட்ல எதுவும் பிரச்சனை வந்திருக்குமே? LVH வேற இருக்கும் போல. ரெண்டு காலும் வீங்கிப் போய் இவ்ளோ ஷைனிங்கா இருக்கே , ரத்தத்துல யூரியா லெவலும் ஜாஸ்தியா இருக்கும் போலயே?? என்றேன்.

” ஆமா சார், எப்படி ரிப்போர்ட் எதுவும் பாக்காம இவ்ளோ கரெக்ட்டா சொல்றீங்க தெய்வம் சார் நீங்க..!”

(தம்பி டாக்டராகி, இப்போது தெய்வமாகிவிட்டார் )

(ஹாரிசன் புக்க ஒழுங்காப் படிச்சா எந்த ரிப்போர்ட்டும் தேவை இல்லை. நோயின் அறிகுறியையும் உடலில் ஏற்பட்ட மாற்றங்களையும் வைத்து எந்த நோயையும் எளிதில் கண்டுப்பிடிக்கலாம். தேங்க்ஸ் டூ ஹாரிஸன் )

எக்ஸ்டர்னல் ஹெமராயிடிற்கு மெடிசின்ஸ் கொடுத்து, ‘சிட்ஸ் பாத்’ எடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறேன்.

அடுத்த முறை ராகவன் வரும்போது மேஜையில் 1.அம்பேத்கர் 2.பெரியார் புத்தகங்கள். 3.மார்க்ஸ், 4.ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய டெலூசன் ஆஃப் காட் போன்ற புத்தகங்களை வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி: ஃபேஸ்புக்கில்   Selva Prabhu