இந்து மதவெறி பார்ப்பன பாசிச மோடி அரசு போராளிகள் மீதான நரவேட்டையை தீவிரமாக்கி இருக்கிறது. மோடியைக் கொல்ல சதி என ஒரு அப்பட்டமான பொய்யை சொல்லி தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் தொழிலாளர்கள் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் இந்தியாவின் புகழ்பெற்ற சமூக செயல்பாட்டாளர்கள் 5 பேரை கைது செய்திருக்கிறது மராட்டிய பாஜக அரசு.
கவிஞர் வரவர ராவ் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் பேராசிரியர் வெர்ணன் கன்சால்வேஸ் வழக்கறிஞர் அருண் பெரிரா பத்திரிக்கையாளர் கௌதம் ஆகியோர் ஆள்தூக்கி உஃபா சட்டத்தின் கீழ் செவ்வாய் அன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இதே காரணத்திற்காக பேராசிரியர்கள் சத்யநாராயணா ஆனந்த் தெல்தும்டே பாதிரியார் ஸ்டாண்சாமி பத்திரிக்கையாளர் குர்மலாக் (வரவரராவ் மருமகன்) கிரந்தி தெகுலா ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
பிரதமர் மோடியைக் கொல்ல சதி செய்து இருப்பதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் ரோனா வில்சன் உள்ளிட்ட 5 பிரபல மனித உரிமைப் போராளிகள் கொடிய உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மோடியை கொல்ல சதி செய்யும் கடிதம் ஒன்றை கைப்பற்றியதாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதே காரணத்தை கூறி இப்போது கைது சோதனை என அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடி கும்பல்.
கடந்த ஜனவரியில் மராட்டிய மாநிலம் பீமா கோரேகானில் பார்ப்பனர்களை தாழ்த்தப்பட்ட படை வீரர்கள் வெற்றி கொண்ட 200வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சார்ந்த ரவுடிகள் கலவரம் செய்தனர்.
இதனை தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தும் பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தியும் எழுதி, பேசி வருகின்ற நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளர்கள் பேராசிரியர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள் அறிவுத்துறையினர் கழுத்தை நெரித்து மக்கள் போராட்டங்களை ஒடுக்க நினைக்கிறது மோடி அரசு.
அவசரநிலை அடக்குமுறையை விட கொடிய ஓடுக்குமுறைக்கு தயாராவதின் தொடக்கம் தான் இந்த கைது சோதனை. ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் பாசிச ஒடுக்குமுறையை முறியடிக்காமல் ஒடுக்கப்பட்ட மக்களின் சிறுபான்மையினர் விவசாயிகள் தொழிலாளர்கள் ஆகியோர் நலனைக் காப்பாற்ற முடியாது.
எனவே அனைத்து ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் இந்த அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போம் ஓரணியில் திரண்டு முறியடிப்போம்.
– தோழர் காளியப்பன் மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321
டெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா ?
நூற்றுக் கணக்கான சீனியர் ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு குறிவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு செயற்கையாக, நியாயமின்றி குறைந்த ரேட்டிங் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புராஜக்ட் மறுக்கப்பட்டு, எச்.ஆர்-ஆல் ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
அதை எதற்கு எங்களிடம் கூறுகிறீர்கள்? நாங்கள் டெக் மகிந்த்ராவில் வேலை செய்யவில்லையே? நாங்கள் என்ன செய்ய முடியும்?
2015-ல் டி.சி.எஸ், 2017-ல் விப்ரோ, காக்னிசன்ட், ஐ.பி.எம், டெக் மகிந்த்ரா, 2018-ல் வெரிசான், மீண்டும் டெக் மகிந்த்ரா. இப்படி எல்லா ஐ.டி கம்பனிகளிலும் வேலை பறிப்பு என்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது.
இது வேலை இழப்பு அல்ல, வேலை பறிப்பு. விழித்துக் கொண்டு நாம் எல்லோரும் கைகோர்க்கா விட்டால் இது ஒரு வாடிக்கையாகி விடும்.
எனக்கு எல்லாம் வேலை போகாது, நான் கம்பெனிக்கு விசுவாசமாகத்தான் வேலை செய்கிறேன்.
நம்முன் உள்ள மிகப் பெரிய சவால், இருக்கிற வேலையைத் தக்கவைத்துக் கொள்வது. இதற்காக நாம் முழு மூச்சுடன் ‘விசுவாசத்துடன்’ வேலை செய்து கொண்டிருக்கிறோம். குறைந்த பட்சம் 8 மணி நேரத்திற்கு மேல், நமது சுக துக்கங்களை இழந்து, குடும்பத்தை தவிர்த்து, நமது அனுபவம் மற்றும் துறை சார்ந்த வேலை என்றில்லாமல் கொடுக்கப்படும் அனைத்து வேலைகளையும் நம் திறமைக்கு சிறப்பாக, வேகமாக செய்ய முற்படுகிறோம். சிலர் ஜால்ரா அடிப்பது, போட்டு கொடுப்பது, எட்டப்பன் பாலிடிக்ஸ் பண்ணுகிறார்கள் என்று பார்க்கிறோம். அதைப் பற்றி பேசுகிறோம்.
ஒருவகையில் நாம் அனைவருமே வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த அனைத்து வேலைகளையும், தெரிந்தும், தெரியாமலும், செய்து கொண்டுதான் இருக்கிறோம். நம்முடைய சொந்த நேரம் அல்லது பணம் அல்லது இரண்டுமே செலவழித்து, நிறுவனத்தின் நலனுக்காக அன்றாடம் வளர்ந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டும் வருகிறோம்.
இத்தனையும் சிறப்பாக செய்தாலும் நிறுவனம் தனது செலவு குறைப்புக்காக ஆட்களை துரத்த முடிவு செய்யும் போது இது எல்லாம் கணக்கில் வருவதில்லை என்பது நிதர்சனம்.
ம்ம். நீங்கள் சொல்வது சரிதான்? ஆனால் என்ன செய்வது. போகச் சொன்னால் கேள்வியே கேட்க முடியாது. வேறு வேலை தேடி போக வேண்டியதுதானே ஒரே வழி? எல்லோரும் அதைத் தானே இவ்வளவு காலம் செய்து கொண்டிருக்கிறோம்.
இதை எத்தனை காலத்துக்கு நாம் சகித்துக் கொள்ளப் போகிறோம்.
இது ஏதோ ஒரு நிறுவனம், அதன் ஊழியர்களை வேலையிலிருந்து துரத்துவது அல்ல, எல்லா கார்ப்பரேட்டுகளும் இணைந்து ஒட்டு மொத்த ஐ.டி ஊழியர்களின் வேலையைப் பறிப்பது என்பதாக உள்ளது. எந்த நிறுவனத்திற்கு போனாலும் இதுதானே நிலைமை.
அப்படியானால், இப்படி நாம் துரத்த துரத்த ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா? இப்படியே நாம் பணிந்து போனால், எதிர்காலத்தில் நமது குழந்தைகளின் நிலைமை எப்படி இருக்கும்?
கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கும்போது நாங்கள் என்ன செய்ய முடியும். இதை எப்படி எதிர் கொள்ள வேண்டும்?
ராஜினாமா செய்ய மறுக்க வேண்டும். என்ன மிரட்டினாலும் ராஜினாமா செய்யக் கூடாது.
அப்படியென்றால், இவ்வளவு பெரிய கார்ப்பரேட்டுகளை எதிர்க்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? வாய்ப்பே இல்லை?
ஆம்.
இதில் பாதி உண்மை உள்ளது. கார்ப்பரேட்டுகள் மிகப் பலம் பொருந்தியவைதான். பணம் பார்லிமென்ட் வரை பாயத்தான் செய்கிறது. ஆனால் நம்முடைய பலம் அதைவிட பலமடங்கு அதிகமானது. நம் பலம் குறித்து நாம் குறைவான மதிப்பீட்டையே வைத்துள்ளோம். நம்முடைய பலமே நமது எண்ணிக்கைதான். அதை பயன்படுத்த நாம் சங்கமாக ஒன்று சேர வேண்டும்.
சங்கமா? சங்கம் என்பது தொழிலாளர்களுக்குத்தான். ஐ.டி ஊழியர்களுக்கு கிடையாது.
இந்தக் கேள்வியே ஒரு பரிதாபமான நிலையைத்தான் காட்டுகிறது. நாம் தொழிலாளர்கள் இல்லை என யார் கூறியது? எதற்கெடுத்தாலும் இணையத்தை தோண்டி நமக்கு தேவையான விசயத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நாம், என்றாவது நமக்கான உரிமை, தொழிலாளர் என்பதற்கான வரையறை, தொழில் தகராறு சட்டம் என்றால் என்ன? அது நமக்கான என்ன உரிமைகளைக் கொடுத்துள்ளது? நாம் அதன் கீழ் வருவோமா என்று பார்த்துள்ளோமா?
தேர்தலில் ஓட்டு போடுவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை, அடிப்படை உரிமை என எகிறும் நாம், என்றாவது நமது வாழ்க்கையை நடத்த தேவைப்படும் பணியிட ஜனநாயக உரிமை என்ன என்று யோசித்ததுண்டா?
உண்மை என்னவெனில், தொழிற்சங்கம் என்பது ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை. நாம் அனைவரும் கணினியை பயன்படுத்தி உழைக்கும் தொழிலாளர்கள்தான். தொழில்தகராறு சட்டம் உட்பட தொழிலாளர் சட்டம் அனைத்தும் நமக்கும் பொருந்தும் என்பதே உண்மை. இனிமேல் இதை நோக்கியும் நமது தேடுதலைச் செலுத்துவோம்.
எங்கள் நிறுவனத்தில் சங்கம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. சங்கம் என்று கூறினால் ப்ளாக் மார்க் வரும். சங்கம் மூலம் கேள்வி கேட்டால் ரிலீவிங் லெட்டர் கொடுக்க மாட்டார்கள், டெர்மினேட் செய்து விடுவார்கள். வேறு எங்கும் வேலை கிடைக்காது.
இந்தக் கருத்து உங்களுடையதா… .இல்லை இல்லை. கார்ப்பரேட்டின் குரல் இது. கார்ப்பரேட்டிடம் வேலை செய்து செய்து, அவன் சொன்னா சரியாகத்தான் இருக்கும், தவறாக இருந்தாலும் பிழைப்பை ஓட்டணுமே என்று அடங்கி அடங்கி வேலை செய்ததன் விளைவு இது. கார்ப்பரேட்டின் கருத்தை நமது கருத்தாகவே ஆக்கிவிட்டோம்.
சங்கம் வைக்கும் உரிமை அரசியல் சட்டமும், இந்திய தொழிற்சங்க சட்டம் 1926-ம் வழங்குவது. இதை மறுக்க எந்த ஒரு தனிநபருக்கும், நிறுவனத்துக்கும் அதிகாரம் கிடையாது என்பதுதான் உண்மை.
NDLF, FITE போன்ற ஐ.டி தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் வெளிப்படையாக சங்கத்தில் செயல்படுகிறார்கள், தமது நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.
நீங்க சொல்வது சரிதான். ஆனா, நிறுவனத்தை எதிர்த்து வேலையை காப்பற்றுவது, அதை தக்க வைத்துக்கொள்ளுவது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இப்பெல்லாம், நிறுவனத்திடமிருந்து ஃபைனல் செட்டில்மென்ட் ஐ முழுமையாக, முறையாக வாங்குவதே குதிரைக் கொம்பாக உள்ளது?
ஆம். சரிதான். ஆனால் நமக்குத் தெரிந்த விசயங்கள் கடுகளவு, தெரியாத விசயங்கள் கடலளவு. தொழிற்சங்கங்கள் சாதித்த விசயங்கள் கடலளவு உள்ளன. தொழிற்சங்கங்களைக் கண்டு கம்பெனி பயப்படுவது ஏன்? அதுபற்றி தெரிந்து கொள்வோம்.
நமது இந்த விவாதம் வெறுமனே நமது வேலை தொடர்பான விவாதம் மட்டும் அல்ல. இதுவரை லட்சக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் பெற்ற தொழிற்சங்க உரிமைகள் மீதான கேள்விகள், சந்தேகங்கள். கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதியான, தானே ஒரு பெரிய கார்ப்பரேட்டான அரசிடமிருந்து (காலனிய காலத்திலேயே) தொழிலாளர்கள் இரத்தம் சிந்திப் போராடி பெற்ற உரிமைகள் மீதான விவாதம்.
இன்றுவரை பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து, தனியார் நிறுவனங்கள் வரை தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க சங்கம் ஒரு கலங்கரை விளக்காக திகழ்கிறது. அதனால்தான் போக்குவரத்து, வங்கி, காப்பீடு, அரசு ஊழியர்கள், ஆலைகள் என்று அனைத்து துறைகளிலும் சங்கம் இன்னும் உயிர்த்துடிப்போடு செயல்படுகிறது.
ஆனால் நாமோ நம் கண்முன்னே, நமது முன்னோர் போராடிப்பெற்ற உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறோம். அதுவே கார்ப்பரேட்டுகளின் மூச்சுக்காற்றாக பரிணமிக்கிறது.
நமக்காக மட்டுமல்ல, நம்முடைய அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லவும் அவசியம் தேவைப்படுவது ஒற்றுமை; தொழிலாளர்களாக நாம் ஒன்றுபடுவது. அதுதான் நமது குழந்தைகளின் வாழ்க்கையை, எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
டி.சி.எஸ், ஐ.பி.எம், விப்ரோ, காக்னிசன்ட், அக்செஞ்சர், வெரிசானைத் தொடர்ந்து இன்று டெக்.மஹிந்திரா. இவர்களின் தொடர்ச்சியான இந்த வேலைப்பறிப்புக்கு மூலகாரணமே நமது ஒற்றுமையின்மைதான்.
சரி. சரி எல்லாம் புரிகிறது. என்னதான் செய்வது?
இந்தியா முழுவதும் கம்ப்யூட்டரின் முன் நமது வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும், கார்ப்பரேட்டுகளின் அசுர வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஐ.டி துறை தொழிலாளர்களும் நமது ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சங்கமாக ஒன்றிணைவோம்.
ஆரம்பத்தில் அந்நியமாக இருந்த “தொழிலாளர்”, “சங்கம்” என்ற வார்த்தைகள் இப்போது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது!
இதை அனைவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக, நமது ஒற்றுமையை உலகுக்கு முன்னறிவிக்கும் வகையில் எல்லோரும் கைகோர்ப்போம்,
ஆட்குறைப்புகளுக்கு நமது எதிர்ப்பை தெரிவிப்போம், சங்கமாக இணைவதை பேரலையாக மாற்றுவோம்.
சங்கமாக இணைவோம், நமக்காக, நம் வருங்கால தலைமுறைக்காக.
ஐ.டி/பி.பி.ஓ/கே.பி.ஓ தொழிலாளர்களே வாருங்கள்!
சங்கமாக இணைவோம்! நமது ஒற்றுமையை பதிவு செய்வோம்!
நமது உரிமைகளை பாதுகாப்போம்! எதிர்காலத்தை உறுதி செய்வோம்!
மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக செலவிட்ட பணம் தொடர்பான தகவல்களை வெளியிட தொடர்ந்து மறுத்து வருகிறது. அப்படி வெளியிடுவது பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்கிறது. இது ஒரு வடிகட்டிய பொய் என்கின்றனர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் பிரசாந்த் பூஷன்.
கடந்த ஆகஸ்ட் 8, 2018 அன்று அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டமுழு அறிக்கையின்சற்று சுருக்கப்பட்ட மொழியாக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மோடி அரசின் கீழ் ரபேல் போர் விமானங்கள் வாங்கும் நடைமுறை திடீரென மாற்றப்பட்டது; இந்திய அரசு கடைபிடிக்கும் வழக்கமான அடிப்படை நடைமுறைகள் அனைத்தும் தூக்கியெறியப்பட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் குழப்பமான மற்றும் உண்மைக்குப் புறம்பான பேச்சுக்கள் தொடர்ந்தன. ஊடகங்கள் மொத்தமாக மழுங்கடிக்கப்பட்டன. விமானத் தளவாடங்கள் உற்பத்தியில் நீண்ட அனுபவம் வாய்ந்த உள்நாட்டு அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)-ஐ இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கி வைத்து, ஒரு பெயர்ப் பலகை நிறுவனத்தை ஒத்த, விமானத் தளவாடங்கள் உற்பத்தி குறித்து குறைந்தபட்ச அனுபவம்கூட இல்லாத, தொடர்ந்து பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வருகின்ற, கடனில் மூழ்கிய ஒரு தனியார் நிறுவனம் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டது.
நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவிலான முறைகேடுகளனைத்தும் ஒட்டுமொத்தமாக அரங்கேற்றப்பட்ட இந்த ரபேல் ஒப்பந்த ஊழல்தான் பாதுகாப்புத்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலாகும். இந்த ஊழலானது நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமன்றி இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.
நாங்கள் பின்வரும் மூன்று கோரிக்கைகளை இங்கு முன்வைக்கிறோம்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்திய அரசு உடனே வெளியிட வேண்டும். குறிப்பாக எவ்வளவு பணம் இந்திய அரசால் செலுத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று மத்திய அரசை இவ்விவகாரத்தில் எதிர்க்க வேண்டும்; ஏனென்றால் மோடி தலைமையிலான இந்த அரசு, ஊழல் புரிந்ததோடு மட்டுமன்றி, அரசு நிறுவனத்தை ஒதுக்கிவைத்து தனியார் நிறுவனத்தை உள்நுழைத்து ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த அரசு மூடி மறைக்கும் அத்தனை உண்மைகளையும் வெளிக்கொண்டு வர அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும்.
சில உண்மைகளும் கேள்விகளும்
1. கடந்த 2007-ம் ஆண்டு இந்திய விமானப் படை வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 126 மத்திய ரக பல்நோக்கு போர் விமானங்களை (Medium Multi-Role Combat Aircrafts (MMRCA)) வாங்குவதற்கென வரைவுத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி முதன்முதலில் போர் விமானங்களை வாங்குதல், தொழில்நுட்பங்கள் பகிரப்படுதல், பிறகு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் உரிமம் போன்றவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். கூடுதல் சேர்க்கைகள் இருப்பதால்தான் ’தஸ்ஸால்ட்’ நிறுவனத்திற்கு கூடுதலாகப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது என மத்திய அரசு கூறுவதைப் பொய் என நிருவுகிறது மேற்குறிப்பிட்ட ஒப்பந்தம்.
2. தஸ்ஸால்ட் ஏவியேஷன், லாக்கீட் மார்ட்டீன், போயிங், சாப், யூரோ ஃபைட்டர், ரஷ்யன் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆகிய ஆறு நிறுவனங்கள் போர் விமானங்களுக்கான ஏலத்தில் பங்குபெற்றன. பரிசோதனை ஓட்டம், தொழில்நுட்ப மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய விமானப்படை 2011-ம் ஆண்டு தஸ்ஸால்ட் நிறுவனம் மற்றும் யூரோ ஃபைட்டர் ஆகிய இரு நிறுவனங்கள் தங்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக உள்ளன என அறிவித்தது. 2012-ம் ஆண்டு ஏல மதிப்பீட்டின் அடிப்படையில் தஸ்ஸால்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
3. தொடர்ந்து நடைபெற்ற பேரங்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட இறுதிநிலையை அடைந்தனர். கடந்த 25.03.2015 அன்று பிரான்சில், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எரிக் டிரேப்பியர் ”எச்.ஏ.எல் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது, இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது விரைவில் நடந்தேறும்” என்று அறிவித்தார்.
4. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தது.
டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி எரிக் ட்ரேப்பியர்
முதலாவதாக தஸ்ஸால்ட் நிறுவனம் இந்திய விமானப்படைக்கு சில போர் விமானங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும், ஏனென்றால் மிக்-21 மற்றும் மிக்-27 வகை போர் விமானங்களின் வாழ்நாள் சேவை நிறைவுற்று இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்று விட்டன. இந்திய வான்வெளி உற்பத்தித்துறை சீர்செய்யப்படுவது மிகவும் அவசியம்; இதற்காக நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் கருவிகளை இந்தியா விரைவில் பெற்றாக வேண்டும்.
பல பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற இந்திய அரசின் விமான உற்பத்தித் துறை நிறுவனமான எச்.ஏ.எல்-ஐ அபிவிருத்தி செய்வதன் மூலம் இந்தியாவால் வாங்கப்படும் ரபேல் விமானங்களை உள்நாட்டிலேயே மராமத்துப் பணிகளைச் செய்துகொள்ளலாம். ஏனென்றால் இவை 30 முதல் 40 வருடங்கள் வரை பயன்பாட்டில் இருக்கும். மேலும் இந்த அனுபவத்தின் மூலம் நாமே போர் விமானங்களை உற்பத்தி செய்துகொண்டு தன்னிறைவு பெறலாம்.
5. இதனடிப்படையில் மொத்தம் 18 விமானங்களை முழுவதுமாக இறக்குமதி செய்துகொண்டு, மீதமுள்ள 106 விமானங்களையும் எச்.ஏ.எல் நிறுவனம் மூலமாகவே உற்பத்தி செய்துகொள்ளலாம். 2007-ம் ஆண்டு போடப்பட்ட வரைவுத் திட்டத்தில், மொத்தமுள்ள 126 ரபேல் போர் விமானங்களுக்கு ரூ.42,000/- கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் இறுதி மதிப்பீடு பொதுவில் வெளியிடப்படவில்லை. 13.04.2015 அன்று மோடியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு, தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பேட்டியளித்த அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ’126 போர் விமானங்களுக்கான மொத்த விலை ரூ.90,000/- கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; ஏனென்றால் ரபேல் விமானங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை மற்றும் தொழில்நுட்பத்தில் மற்றவற்றை விட மிகவும் முன்னேறியவை; எனவே 126 போர் விமானங்களுக்கு ரூ.90,000/- கோடி என்பது தவிர்க்கவியலாதது’ என்றார். இந்தக் கூற்றின்படி ஒரு போர் விமானத்திற்கு ரூ.714 கோடி செலவாகும் என்று நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பாரிக்கர் கூறிய முக்கியமான விடயம் 90,000 கோடி என்பது ஒப்பந்தத்தில் போடப்பட்ட அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியது என்பதாகும்
6. ஏற்கனவே போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தின்படி 18 போர் விமானங்களை (முழுமையான பயன்பாட்டில் உள்ள) வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், புதிதாகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 36 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே மோடி அரசின் மாயாஜால வித்தை வெளியில் தெரிந்துவிடும்.
7. பழைய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போன்று 108 விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனம் மூலம் தயாரிப்பதற்கு ஆகப்போகின்ற செலவும், 18 விமானங்களை தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து நேரடியாக இறக்குமதி செய்வதற்கும் பாரிய அளவிலான வித்தியாசமிருக்கும். ஏனென்றால் நேரடியாக வாங்குவது என்பது அந்த நிறுவனம் ஏற்கனவே உற்பத்தி செய்வதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதால் ஒரு போர் விமானத்திற்கான உற்பத்தி செலவு, ரூ.714 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும். இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல்-ல் உற்பத்தியைத் தொடங்கும் போதுதான் கட்டமைப்பு வசதி, தொழில்நுட்பத் தகவல் பரிமாற்றம், இன்னபிற செலவுகள் உட்பட ஒட்டுமொத்த செலவும் (ஒரு போர் விமானத்திற்கு) ரூ.714 கோடியை எட்டும் என்பது மோடி அரசு போட்ட கணக்கீட்டின்படியே செல்லும். எனவே 36 ரபேல் போர் விமானங்களை நேரடியாக தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் வாங்கும் போது ஒரு விமானத்திற்கான விலை என்பது ரூ.714 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டுமென்பது மிகத்தெளிவான செய்தி
8. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்து கூறுகையில் ”ரபேல் விவகாரத்தைப் பொறுத்தவரையில், தஸ்ஸால்ட் நிறுவனம், இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் எச்.ஏ.எல் நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையுடன் பிரதமர் மோடியின் பிரான்சு பயணத்தைத் தொடர்புபடுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் மேல்மட்ட பேச்சுவார்த்தைகளோ அல்லது பாதுகாப்பு குறித்த மற்ற அம்சங்கள் குறித்தோ பேசுவதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது”.
பிரதமர் மோடியின் ரபேல் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக திரு.ஜெய்சங்கரின் மேற்சொன்ன கூற்றிலிருந்து 4 விடயங்கள் நமக்குத் தெளிவாகப் புரிகின்றன.
பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முதன்முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
எச்.ஏ.எல் நிறுவனம் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தையில் பங்குபெறுகிறது.
இந்தியப் பிரதமரும், பிரான்சு அதிபரும் வேறு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவிருக்கின்றனர்.
எஸ். ஜெய்சங்கர்
இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து (10.04.2015) மோடி தன்னிச்சையாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பிரான்சு நாட்டு நிறுவனத்துடன் செய்துகொண்ட புத்தம் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசு 36 புதிய ரபேல் போர் விமானங்களை வாங்கவிருப்பதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய பிரான்சு அரசுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் ’இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையே ஏற்பட்ட புரிந்துணர்வின்படி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து போர் விமானங்களை இந்திய விமானப்படையில் சேர்க்கும் பணி திட்டமிடப்பட்டு வருவதாகவும், இந்திய விமானப்படை போர் விமானங்களின் தரம் குறித்து உறுதி அளிக்கும் பட்சத்தில் மற்ற போர்க்கருவிகளையும் அனுப்பி வைக்கவிருப்பதாகவும் மேலும் போர் விமானங்களைப் பராமரிக்கும் பணி பிரான்சு நிறுவனத்தின் பொறுப்பிலேயே இருக்கப்போவதாகவும் தெரிவித்தது.
இந்த அறிக்கை இரண்டு முக்கியமான விடயங்களை தெளிவாக்குகிறது.
36 ரபேல் போர் விமானங்களுக்கான மொத்த விலை ஏற்கனவே திட்டமிடப்பட்ட 18 விமானங்களின் விலையை விட மிகவும் குறைவானதாகவே இருக்க வேண்டும்
முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட மத்திய ரக பல்நோக்கு போர் விமானம் தொடர்பான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் 36 போர் விமானங்களுக்கென நிர்ணயம் செய்யப்பட்ட பணமதிப்பு மிக மிக அதிகம் என ஒரு தகவல் உலா வந்தது.
மனோகர் பாரிக்கர்
இந்த ஒப்பந்தம் தொடர்பாக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் கேட்கப்பட்டபோது அவர் தன்னிடம் எதுவுமே கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்று ஒரே போடாக போட்டுடைத்துவிட்டார். மேலும் இது தொடர்பாக என்.டி.டிவி செய்தி நிறுவனத்திற்கு 13.04.2015 அன்று அளித்த பேட்டியில் ”இது பிரதமர் மோடியின் முடிவு; எனவே எனக்கு இதில் வேறெந்த வேலையுமில்லை; மேலும் இது இரு நாட்டு தலைவர்கள் கலந்தாலோசித்து எடுத்த முடிவு. எனவே கருத்து எதுவும் சொல்ல முடியாது” என்று நழுவிக்கொண்டார்.
இந்தப் புதிய ஒப்பந்தத்தில் ஆச்சர்யமூட்டும் வேறு சில செய்திகளும் உள்ளன.
36 போர் விமானங்கள் வாங்க வேண்டுமென்பது எதனடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பது விளக்கப்படவில்லை
இந்தியாவில் உற்பத்தித் திட்டம் இருக்கிறதா என்பது குறித்தும் எந்தத் தகவலுமில்லை
தகவல் தொழில் நுட்பப் பரிமாற்றங்கள் குறித்து எந்த விளக்கமுமில்லை.
இந்திய விமானப்படை 126 போர் விமானங்கள் வேண்டுமென்று கோரிக்கை விடுத்த பட்சத்தில், எந்த அடிப்படையில் அவை 36 ஆகக் குறைக்கப்பட்டன என்ற விவரமும் இல்லை.
மேற்கண்ட எல்லா கேள்விகளுக்கும் இந்திய அரசு தெரிவித்த ஒரே பதில் இந்திய விமானப்படையின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் 36 விமானங்களும் இன்னும் இரண்டு வருடத்திற்குள் நம் கைக்கு வந்துவிடும் என்று மட்டும் கூறி நிறுத்திக்கொண்டது.
இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 3 ஆண்டுகளாகியும், ரபேல் போர் விமானம் இந்திய விமானப்படை வசம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. செப்டம்பர் 2019-க்குள் போர் விமானங்கள் வந்துவிடும் என்று நம்பப்படுகிறதாம். மேலும் குறிப்பிடப்பட்ட 36 போர் விமானங்களும் 2022-ம் ஆண்டு மத்தியில்தான் நம் கைக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.
ரஃபேல் விமானம் வாங்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் நிர்மலா சீதாராமன்
2007-ல் போடப்பட்ட ஒப்பந்த வரைவின்படி இந்நேரம் 18 போர் விமானங்கள் இரண்டரை ஆண்டுகளுக்குள் நம் கைகளில் வந்திருப்பதோடன்றி, தஸ்ஸால்ட் நிறுவனமும் எச்.ஏ.எல் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கி 2022-க்குள் 108 விமானங்களையும் முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்து முடிக்கும் திறனையும் எட்டியிருக்கும். இந்திய விமானப்படையின் அவசரத் தேவை என்பதைப் பயன்படுத்தி 36 விமானங்களை 2022 மத்தியில் வாங்கி முடிப்பதற்கும், 108 விமானங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கும் வித்தியாசம் என்பது இந்த நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவது என்பதைத் தவிர்த்து வேறு என்னவாக இருக்க முடியும்?
மேலும் சில கேள்விகள் இப்போது எழுகின்றன
கடந்த 2007-ல் போடப்பட்ட 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை அவசர நிலை கருதி ரத்து செய்து 36 விமானங்களை உடனே வழங்குமாறு இந்திய விமானப்படை மத்திய அரசிடம் எப்போது கோரிக்கை வைத்தது?
அப்படி வைத்ததென்றால் 126 விமானங்கள் பாதுகாப்புக்கு வேண்டுமென்ற கோரிக்கை எந்த அடிப்படையில் இந்திய விமானப் படையால் கோரப்பட்டது?
இந்திய – பிரான்சு நாடுகளின் கூட்டறிவிப்புக்கு முன் (ஏப்ரல் 2015-க்கு முன்), மத்திய அரசு நாடாளுமன்ற அமைச்சரவையில் 36 விமானங்களை வாங்குவதற்கான ஒப்புதலைப் பெற்றதா?
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில், ஏன் புதிய டெண்டர்கள் (ஏலமுறை) கோரப்படவில்லை? குறிப்பாக யூரோஃபைட்டர் நிறுவனம் 04.07.2014 அன்று அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எழுதிய கடிதத்தில் தங்களுடைய ஏலத்தொகையிலிருந்து 20% சதவீதம் வரை கழிவுகள் தர தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
புத்தம் புதிய ஒப்பந்தமும், எச்.ஏ.எல் நிறுவனம் விலக்கி வைக்கப்படுதலும்
9. கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தஸ்ஸால்ட் மற்றும் எச்.ஏ.எல் நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 108 போர் விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனமே உற்பத்தி செய்யும் பட்சத்தில், அதற்குத் தேவையான மற்றும் இன்னபிற வசதிகளை தஸ்ஸால்ட் நிறுவனம் செய்து தருவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2015-ம் ஆண்டு மோடியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், இரண்டு புதிய தனியார் நிறுவனங்களின் பெயர் அடிபட்டது. அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்டு டெக்னாலஜீஸ் லிட் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிட் ஆகிய இரு நிறுவனங்கள்தான் அவை.
மோடியின் அன்பர்கள் அனில் அம்பானி, அதானி
10. அதானி, ரிலையன்ஸ் நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்ட சில நாட்கள் கழித்து 10.04.2015 அன்று மோடி வெளியிட்ட அறிவிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கவிருப்பதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு நான்கு அதிர்ச்சி தரும் விவரங்களை உள்ளடக்கியுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து போடப்பட்ட ஒப்பந்தத்தின் கதி என்னவாயிற்று என்பதும், அந்த ஒப்பந்தத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும், தரவுகளும் என்னவாயின என்பதும் தெரியவில்லை
இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டது; அதோடு கூடவே ‘மேக் இன் இந்தியா’ திட்டமும் குப்பையில் போடப்பட்டது.
’மேக் இன் இந்தியா’ குப்பையில் போடப்பட்டது மட்டுமன்றி, போர் விமானங்கள் தயாரிப்பது தொடர்பான தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் குறித்த பேச்சும் புறந்தள்ளப்பட்டது.
குறுகிய காலத்திற்குள்ளாகவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் உள்நுழைக்கப்பட்டு பில்லியன் டாலர் வருமானம் தரக்கூடிய ரபேல் நிறுவன ஒப்பந்தத்தின் முழு பலன்கள் அனைத்தும் அம்பானிக்குத் தாரைவார்க்கப்பட்டது.
11. புதிய ஒப்பந்தம் முறையாகக் கையெழுத்திடப்பட்ட பிறகு தஸ்ஸால்ட் ஏவியேஷன் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனங்களுக்கிடையிலான புரிதலின் அடிப்படையில் கூட்டு நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு அனில் அம்பானி தலைமை செயல் அதிகாரியாகச் செயல்படுவார் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 51% பங்குகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடமும் 49% பங்குகள் தஸ்ஸால்ட் நிறுவனத்திடமும் இருக்கும். இந்தப் புதிய நிறுவனத்திற்கு 70% இலாபம் கிடைக்கும், அதாவது மொத்த பொறுப்பீட்டுத் தொகையான ரூ.30,000 கோடியில், ரூ.21,000 கோடி இந்தப் புதிய நிறுவனத்திற்கு இலாபத் தொகையாகக் கிடைக்கும் வகையில் வழிசெய்யப்பட்டுள்ளது.
12. இதே மத்திய அரசால் 01.04.2016 அன்று அமல்படுத்தப்பட்ட புதிய இராணுவ ஒப்பந்த வழிகாட்டுதல் பிரிவு 8.6-ன் படி ”எந்த ஒரு புதிய அந்நிய முதலீட்டுத் திட்டமும் அது எத்தனை சிறிய பணமதிப்பைக் கொண்டதாக இருந்தாலும் பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறது. ஆனால் மத்திய அரசோ தங்கள் கையில் எதுவுமில்லை என்று கைகழுவுகிறது. அதோடன்றி தஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவில் யாருடன் கூட்டு சேர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அந்த நிறுவனத்திற்கே தரப்பட்டுள்ளது. மேலும் எந்த அடிப்படையில் எச்.ஏ.எல் நிறுவனம் விலக்கி வைக்கப்பட்டது என்ற விளக்கமும் இதுவரை பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பிலோ அல்லது மத்திய அரசு தரப்பிலோ தரப்படவில்லை.
இராணுவப் போர் விமானங்கள் உற்பத்தியில் நீண்ட அனுபவம் பெற்ற தஸ்ஸால்ட் நிறுவனம் எப்படி ஒரே ஒரு வருட அனுபவம் மட்டுமே பெற்ற ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் கூட்டுசேர முடிந்தது? அதுவும் மத்திய அரசின் ஒப்புதலே இல்லாமல்? இன்னொருபுறம் பார்க்கும்போது ரிலையன்ஸ் ட்ஃபென்ஸ் நிறுவனம் ரூ.8000 கோடி கடனில் மூழ்கியுள்ளது மேலும் ரூ.1300/- கோடி வியாபார நட்டம் ஏற்பட்டதோடன்றி, ஒட்டுமொத்த அனில் அம்பானி குழுமங்களுமே கடனைக் கட்டாமல் நட்டத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பெருநிறுவனமாகும்.
13. ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கோ அல்லது அது கூட்டு சேர்ந்திருக்கும் எந்த ஒரு நிறுவனத்திற்குமோ இராணுவ போர் விமானங்கள் தயாரிக்கும் அனுபவம் கொஞ்சம்கூட இல்லை. குஜராத்தில் உள்ள பிப்பாவாவ் கடற்படை கட்டுமான தளத்தில் ரோந்துக் கப்பல்கள் தயாரிப்பதிலேயே ஏகப்பட்ட குழப்பங்களைச் சந்தித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம் இன்னும் அந்த ஒப்பந்தத்தையே நிறைவேற்ற வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முரணாக இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம், விமானங்கள் தயாரிப்பில் 60 ஆண்டுகள் அனுபவம் பெற்ற முன்னோடியாக இருக்கிறது. தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எரிக் டிரேப்பியரே இதை உறுதிபடுத்தியிருக்கிறார்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் – டஸ்ஸால்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் தொடக்க விழா
புதிய விமானங்களுக்கான விலையை வெளியிடாமல் இரகசியம் காக்கும் இந்த அரசு
14. பிரான்சு நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பாதுகாப்பு மற்றும் இராணுவ இரகசிய நடவடிக்கைகளைக் கருதி போர் விமானங்கள் வாங்கப்படும் விலையை வெளியிட முடியாது என்று சாதிக்கிறது மத்திய அரசு. இது ஒரு அப்பட்டமான பொய்.
15. கடந்த 18.11.2016-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ” 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கென 23.09.2016-ம் தேதியன்று பிரான்சுடன் இணைந்து கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விமானம், உதிரிபாகங்கள், மராமத்து பணிகள், ஆயுதங்கள் என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு விமானத்திற்கு ரூ.670 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 2022-க்குள் அனைத்து போர் விமானங்களும் இந்தியாவிற்குள் வந்துவிடும்” என்று பதிலளித்தார்.
மேற்சொன்ன கூற்றிலிருந்து தெரியவரும் உண்மைகள்
அரசாங்கம் ஒரு போர் விமானத்தின் விலை என்ன என்பதைச் சொல்லியிருக்கிறது.
ஒரு விமானத்திற்கு ஆகும் செலவு ரூ.670 கோடி என்றும் தெரியவருகிறது.
விமானம் மட்டுமன்றி ஆயுதங்கள், பராமரிப்புச் செலவுகள் உட்பட அனைத்தும் இந்த விலைக்குள் உள்ளடங்கியிருக்கிறது என்றும் தெரியவருகிறது.
16. போர் விமானத்திற்கான விலையைச் சொல்லும் வெளிப்படைத்தன்மை ஏதோ 2016-ம் ஆண்டில் மட்டும் தற்செயலாகச் சொல்லப்பட்டதல்ல. 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதியிலும் நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ரபேல் போர் விமானங்களின் விலைகுறித்து தகவல்கள் தரப்பட்டன.
17. இரகசியம் என்பது போர் விமானத்தின் பாகங்கள், செயல்திறன், வேகம் மற்றும் தொழில்நுட்பத் தகவல்கள் போன்றவற்றை வெளியிடக்கூடாது என்பதே தவிர விலை குறித்து இரகசியம் காக்கத் தேவையில்லை என்பதே. இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த பிரத்தியேக பேட்டியில் ‘ரபேல் போர் விமானங்களுக்கான விலையை வெளியிடும் முடிவு முழுக்க முழுக்க இந்திய அரசாங்கத்தினுடையது; இதில் எங்கள் தலையீடு எதுவுமில்லை’ என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.
18. இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் எந்த ஒரு இராணுவத் தளவாடங்களின் விலையையும் யார் வேண்டுமானாலும் இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நடைமுறை.
19. ரபேல் போர் விமானங்கள் 36-க்கான விலையை தஸ்ஸால்ட் அண்ட் ரிலையன்ஸ் நிறுவனமும், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் 2016-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையும் வெளியிட்டுள்ளன. அதன்படி 36 விமானங்களின் விலை தோராயமாக ரூ.60,000 கோடி என்கிறது அவற்றின் அறிக்கை. அப்படியென்றால் ஒரு விமானத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.1660/- கோடியாகும். பழைய ஒப்பந்தத்தில் கணக்கிடப்பட்ட 126 விமானங்களுக்கான விலையிலிருந்து பார்க்கும்போது இரண்டு மடங்குக்கும் மேல் அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் நாடாளுமன்றத்தில் 18.11.2016 அன்று தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு விமானத்திற்கு ரூ.1000/- கோடி அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது.
20. கடந்த 2016-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு போர் விமானம், ஆயுதங்கள், பராமரிப்பு என அத்தனை செலவுகளும் உட்பட ரூ.670/- கோடி என்று சொல்லிவிட்டு இப்போதோ கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால்தான் ரூ.1660/- கோடியாக அதிகரித்து விட்டது என்று பசப்புகிறது இந்திய அரசு
21. இந்திய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருவதை நிரூபிக்க மேலும் ஒரு உதாரணமாக தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிரேப்பியர் 19.02.2015 அன்று பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ‘போர் விமானுங்களுக்கான விலை நிர்ணயம் குறித்து நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். முதல் ஒப்பந்தத்தில் என்ன விலை குறிப்பிடப்பட்டதோ அதுவேதான் இப்போதும் தொடர்கிறது’ என்று கூறியுள்ளார்.
22. இறுதியாக போபர்ஸ் ஊழல் வழக்கில் என்ன நடைமுறைகளை காங்கிரஸ் கையாண்டதோ அதே நிலையைத்தான் மோடியின் பாஜக அரசும் எடுத்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை அநியாயமான முறையில் செலவிட்டு விட்டு, அதற்கான காரணங்கள் கேட்கப்படும்போது பாதுகாப்பு, இரகசியம் என்ற பெயரில் வெளியிடவிடாமல் தடுப்பது என்ற போக்கில்தான் இந்த அரசாங்கம் சென்று கொண்டுள்ளது.
இவ்விவகாரத்தில் ஊழலின் நாயகன் – வெட்டி வாய்ச்சவடால் மோடி கல்லுளிமங்கனாய் மவுனித்திருக்கிறார்
மூன்று கேள்விகள் நம்முன்னே இப்போது எழுகின்றன
எந்த ஒரு வெளிநாட்டுடனும் போடப்படும் ஒப்பந்தத்திற்கும் இந்திய நாடாளுமன்றத்தின் வரம்புகளுக்கு உட்படாமல் செயல்படும் அதிகாரம் இருக்கின்றதா?
ஆர்.டி.ஐ மற்றும் சி.ஏ.ஜி போன்ற சட்டங்களுக்கு அப்பாற்பட்டு எந்த ஒரு அன்னிய நாட்டு ஒப்பந்தமும் போடப்பட முடியுமா?
அப்படியே இது போன்ற ஒப்பந்தங்கள் இரகசியமானது என்றாலும் ஊடகங்களுக்கு இந்த இரகசியத் தகவல்கள் எப்படி கிடைக்கின்றன, அரசாங்கத்தின் அனுமதியின்றி இந்த இரகசியத் தகவல்கள் கிடைப்பது சாத்தியமா என்ன?
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அரசு எந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி 126 ரபேல் விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக வெறும் 36 விமானங்களை அநியாய விலையில் வாங்குவதன் மூலம்
தேசப்பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாக்கப்பட்டுவிட்டது
அரசின் கருவூலம் அநியாயமாகச் சூறையாடப்பட்டுவிட்டது
அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம் அநியாயமாகத் தூக்கியெறியப்பட்டுவிட்டது
விமான மற்றும் இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் குறைந்தபட்ச அனுபவமே இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திடம் பெருமளவிலான நிதி அதாயம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு கிரிமினல் குற்ற நடவடிக்கையாகும். அரசு எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, தேச நலன் மற்றும் தேசப் பாதுகாப்பினை காவு கொடுத்து பலதரப்பினரை வளப்படுத்தும் செயலாகும்.
பாராளுமன்றம் மற்றும் நாட்டின் பாதுகாப்பையும், அரசின் வெளிப்படைத் தன்மையையும், ஊழலைத் தடுப்பதையும், உறுதி செய்து மேற்பார்வையிடக் கூடிய பிற அமைப்புகளும், ஊடகங்களும் முதலில் போடப்பட்ட ரபேல் ஒப்பந்தம் எவ்வாறு கீழிறக்கப்பட்டது என்பதையும் அதனிடத்தில் தகுதியற்ற மற்றொரு ஒப்பந்தம் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பதன் பின்னணியை தோண்டி வெளியிட வேண்டும்.
நேற்று (28.08.2018) அதிகாலை 6 மணிக்கு டெல்லி, ஐதராபாத், ஃபரிதாபாத், மும்பை, தானே, கோவா, ராஞ்சி போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் கைது மற்றும் சோதனை நடவடிக்கைகளை நடத்தியிருக்கிறது மகாராட்டிரா போலீசு.
சிவில் உரிமை செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் தோழர் வரவர ராவ் மற்றும் வழக்கறிஞர் வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா ஆகிய 5 பேர் ஊஃபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கோவா ஐ.ஐ.எம் -இல் பணியாற்றும் தோழர் ஆனந்த் தெல்தும்டெ, ராஞ்சியில் பாதிரியார் ஸ்தான் சாமி, வெர்னான் கன்சால்வேசின் மனைவி சூசன் ஆப்ரகாம், ஐதராபாத்தில் பத்திரிகையாளர் கிராந்தி தெகுலா, வரவரராவின் மகள்கள் ஆகியோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடைமைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
கைது செய்யப்படுபவர்கள் பிரபலமான சிவில் உரிமை அமைப்புகளின் தேசியத்தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள் என்ற போதிலும், கைது மற்றும் சோதனையின் போது பின்பற்ற வேண்டிய சட்டபூர்வ வழிமுறைகள் எதையும் மகாராட்டிரா போலீசு பின்பற்றவில்லை. கைது குறித்தும் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்தும் மராத்தி மொழியில் எழுதி அதன் கீழ் கையெழுத்திடுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்தக் கைது நடவடிக்கை எதிர்பாராததல்ல. மோடியைக் கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருப்பதாகவும், அது தொடர்பான “கடிதம்” தங்களிடம் சிக்கிவிட்டதாகவும் கூறி, ஜுன் 7 ஆம் தேதியன்று வழக்கறிஞர்க்கள் உள்ளிட்ட 5 பேரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்தது மகாராட்டிர போலீஸ்.
கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட அந்த “மொட்டைக் கடிதம்” பீமா கோரேகான் நிகழ்ச்சியுடன் மாவோயிஸ்டுகளை மட்டுமின்றி ஜிக்னேஷ் மேவானி முதல் காங்கிரசு கட்சி வரையிலான அனைவரையும் தொடர்புபடுத்தி போலீசால் தயாரிக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதில் கூடுதலாக “மோடியைக் கொல்ல சதி” என்ற மசாலாவும் சேர்க்கப்பட்டிருந்தது.
மேற்சொன்ன கைதுகள் நடந்த ஒரு மாதத்துக்குள்ளாக, அடுத்த புரளியை கடந்த ஜூலை 4 ஆம் தேதியே ரிபப்ளிக் டிவி கிளப்பத் தொடங்கி விட்டது. பியுசிஎல் அமைப்பின் தேசிய செயலரான சுதா பரத்வாஜுக்கும், நக்சலைட்டுகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை நிரூபிக்கும் கடிதம் தங்களிடம் சிக்கியிருப்பதாக ஒரு பொய்ப் பிரச்சாரத்தை இடையறாமல் தொடர்ந்தது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி.
உடனே, “தங்களிடமும் ஒரு கடிதம் சிக்கியிருப்பதாக” இந்த பொய்ப் பிரச்சாரத்தை போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்தது டைம்ஸ் நவ் டிவி. இந்த கோயபல்ஸ் பிரச்சாரத்தின் தொடர்ச்சியே தற்போதைய கைது நடவடிக்கை. உமர் காலித் உள்ளிட்ட ஜே.என்.யு மாணவர்களுக்கு எதிராக “தேசவிரோதிகள், நாட்டை துண்டாடுபவர்கள், பாக் கைக்கூலிகள்” என்ற பிரச்சாரத்தை மேற்சொன்ன தொலைக்காட்சிகள் இடையறாமல் நடத்தின. “என்னைக் சுட்டுக் கொல்ல முயன்றவன் இந்தப் பிரச்சாரத்தை உண்மையென நம்பிய ஒரு முட்டாளாகவும் இருக்கலாம்” என்று உமர் காலித் கூறியதை இங்கே நினைவிற்கொள்ள வேண்டும்.
தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் “மோடியைக் கொலை செய்வதற்கான சதியில் சம்மந்தப்பட்டவர்கள்” என்ற தோற்றத்தை, மோடியின் ஏவல்நாய்களான ஊடகங்கள் திட்டமிட்டே உருவாக்குகின்றன. ஆனால் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக அத்தகைய குற்றச்சாட்டு எதுவும் மகாராட்டிர போலிஸ் அளித்துள்ள ஆவணங்களில் இல்லை. குற்ற எண் 04- 2018 இன் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அது பீமா கோரேகான் சம்பவம் தொடர்பானது மட்டுமே.
*****
“மோடியைக் சொல்லச் சதி என்பது குஜராத்தில் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட நாடகம்தான். இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலையில் என்ன நடந்ததோ அதுதான் இதிலும் நடக்கிறது. இது தலித் மக்களின் போராட்டத்தை மாவோயிஸ்டு சதி என்று திசைதிருப்புவதற்கான திட்டமிட்ட முயற்சி” என்று ஜூன் மாதத்தில் நடந்த கைதுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் ஆனந்த் தெல்தும்டே.
அந்த நாடகம் இப்போது புதிய பரிமாணங்களை எடுத்திருக்கிறது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரிலான ஆக்கிரமிப்புகள், சூழல் அழிவு, பண மதிப்பழிப்பு முதல் ஜி.எஸ்.டி வரையிலான நடவடிக்கைகள் மக்களிடம் தோற்றுவித்திருக்கும் கோபம், அதிகரித்து வரும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவற்றால் மக்களின் கடும் கோபத்தை எதிர்கொண்டிருக்கிறது மோடி அரசு.
இந்தக் கோபத்திலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கு “முஸ்லிம் தீவிரவாதம்” என்ற பழைய பூச்சாண்டி பயன்படாது என்பது மோடி – அமித் ஷா கும்பலுக்கு தெரிந்திருக்கிறது. எனவேதான், மேற்கூறிய பிரச்சினைகளில் மோடி அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள், மக்களைத் திரட்டுபவர்கள் யாரோ, அவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கு “நகர்ப்புற நக்சல்கள், அறிவுத்துறை நக்சல்கள், அரை மாவோயிஸ்டுகள்” என்ற புதிய முத்திரைகளை தயார் செய்திருக்கிறது.
மோடி அரசை விமரிசிக்கும் அறிவுத்துறையினர், ஊடகத்தினர் முதல் அரசியல் கட்சி பிரமுகர்கள் வரை ஒவ்வொருவரும் “தாங்கள் நகர்ப்புற நக்சல்கள் அல்ல” என்றும், “வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல” என்றும், “இந்திய அரசியல் சட்டத்தின் மீது பக்தி கொண்டவர்கள்” என்றும் தன்னிலை விளக்கம் அளிக்குமாறு அச்சுறுத்தப்படுகின்றனர்.
தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஆதரித்தவர்கள் மீது பாஜக வினர், “சமூகவிரோதி, நக்சலைட்டு” என முத்திரை குத்தியதை நாம் அறிவோம்.
தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஆதரித்தவர்கள் மீது பாஜக வினர், “சமூகவிரோதி, நக்சலைட்டு” என முத்திரை குத்தியதை நாம் அறிவோம். இத்தகைய முத்திரை குத்தல்களுக்கு அஞ்சி தன்னிலை விளக்கம் அளிப்பது இழிவானது. “நான் நடத்தை கெட்டவள் அல்ல” என்று ஒரு பெண் தன்னிலை விளக்கம் அளிக்க நேர்வதற்கு ஒப்பானது.
“சட்டத்தின் ஆட்சி குறித்தோ ஜனநாயக வழிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தோ, வன்முறையைத் தவிர்ப்பது குறித்தோ பேசுவதற்கான அருகதை உனக்கு கிடையாது” என்று திருப்பியடிப்பது ஒன்றுதான் பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்கொள்ளப் பொருத்தமான வழி.
“சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு” என்று சொல்லிக் கொண்ட போதிலும், மோடி அரசு நடத்துவது “சட்டத்தின் ஆட்சி” அல்ல. சொல்லிக் கொள்ளப்படும் அரசியல் சட்டத்தின் ஆட்சியை நாடாளுமன்றத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கவிழ்க்கும் நடவடிக்கைகள்தான் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன.
பாஜக -வினர் அரசியல் செல்வாக்கு பெற்றிருக்கும் வட இந்திய மாநிலங்களில் முஸ்லிம் மக்களும், தலித் மக்களும் பார்ப்பன பாசிசக் கும்பல்களால் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளுக்கு போலீசும் அரசு எந்திரமும் துணை நிற்பதை நாம் பார்க்கிறோம்.
பாஜக அரசியல் செல்வாக்கு பெற முடியாத தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் பிற பகுதிகளில் பார்ப்பன பாசிசத்தை எதிர்க்கும் அறிவுத்துறையினர் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர். இது இன்னொரு உத்தி. கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையின் மூலம் அத்தகைய கொலைப்பட்டியல்கள் குறித்தும் நாம் அறிகிறோம்.
தற்போது மேற்கொள்ளப்படும் “ஊஃபா” கைது இன்னொரு வகைத் தாக்குதல். இதற்கும் இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலைக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் நாடறிந்த அறிவுத்துறையினர் என்ற ஒரே காரணத்தினால்தான் இஷ்ரத் ஜகானுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கு நேரவில்லை. ஒருவேளை இந்தக் கைது நடந்திராவிட்டால், உமர் காலித் மீது நடத்தப்பட்ட கொலைமுயற்சியைப் போன்ற ஒன்று இவர்களுக்கு எதிராகவும் நடந்திருக்கும்.
கவுரி லங்கேஷ் வழக்கு விசாரணை பார்ப்பன பாசிச அமைப்புகள் தயாரித்திருக்கும் கொலைப்பட்டியலை அம்பலமாக்கியிருக்கிறது. பன்சாரே மட்டுமின்றி அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொலைப்பட்டியலில் இருப்பதை கர்நாடகா போலீசே உறுதிப் படுத்தியிருக்கிறது.
கவுரி லங்கேஷ் விசாரணையில் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் சனாதன் சன்ஸ்தாவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசு மகாராட்டிர அரசை வலியுறுத்தி வருகிறது. மும்பையில் இந்துக்கள் வாழும் பல பகுதிகளில் சனாதன் சன்ஸ்தாவினர் குண்டு தயாரிப்பதும், விநாயகர் சதுர்த்தி மற்றும் ஈத் பண்டிகைகளின் போது குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
“இதன் காரணமாக சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று பரவலாக எழுந்துள்ள கோரிக்கையை திசை திருப்புவதற்காகவே தற்போதைய கைது நாடகம் நடத்தப்படுகிறது” என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறியிருப்பதையும் நாம் இங்கே கணக்கில் கொள்ள வேண்டும்.
கார்கில் போர், நாடாளுமன்றத் தாக்குதல், கோத்ரா – குஜராத் படுகொலை உள்ளிட்ட ஒவ்வொன்றின் பின்னாலும் பாசிஸ்டுகள் மறைக்கத் துடிக்கும் ஒரு மர்மம் இருந்துள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
வீழ்த்தப்பட முடியாததல்ல பார்ப்பன பாசிசம். அப்படி ஒரு தோற்றத்தைக் காட்டி அது அச்சுறுத்துகிறது. அஞ்சுவதும், சமரசம் செய்து கொள்வதும், மவுனம் சாதிப்பதும்தான் பாசிசத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும். கைது செய்யப்பட்டிருப்பவர்கள் யாரும் இந்த அடக்குமுறைக்கு அஞ்சக் கூடியவர்கள் அல்ல என்பது மோடி அரசுக்குத் தெரியும்.
அத்தகைய அச்சமின்மையை சமூகம் முழுமைக்கும் நாம் பரப்ப வேண்டும். பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான அரசியலை மேலும் போர்க்குணமாக, மேலும் பரவலாக கொண்டு செல்வதும், மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதும்தான் அச்சமின்மையைப் பரப்புவதற்கான வழி. தமிழகம் அதனைச் செய்து காட்ட வேண்டும்.
மருதையன் பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தலித் மக்கள் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடும் இடது சாரி செயல்பாட்டாளர்களின் மீது அடக்குமுறையை ஏவும் விதமாக அவர்களது வீடுகளை சோதனை செய்வது மற்றும் அவர்களை ஆள்தூக்கி சட்டங்களின் கீழ் கைது செய்வது என அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது மோடி அரசு.
இதனை கண்டித்து சமூக வளைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவாக டிவிட்டரில் #MeTooUrbanNaxal என்ற வார்த்தை டிரெண்டாகியுள்ளது. நாம் ட்ரெண்ட் செய்ய வேண்டியது வார்த்தைகளை மட்டுமல்ல செயலையும் தான்.
_______________
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான மகாராஷ்ட்ரா & தமிழ்நாடு போலிசாரின் அத்துமீறல்களுக்கு தமுஎகச கண்டனம்!
பீமா கோரேகான் போர் வெற்றியின் 200 ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடச் சென்ற தலித்துகள் மீது இந்துத்வ அமைப்பினர் நடத்திய கொடிய தாக்குதல் உலகளாவிய கண்டனத்தைப் பெற்றது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்வதற்கு பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை கோரி நடந்த போராட்டங்களை பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரித்து ஒடுக்குவதில் மும்முரம் காட்டி வருகிறது மகாராஷ்ட்ர காவல்துறை.
இது தொடர்பில் சுதிர் தாவ்லே, சுரேந்தர் கட்லிங், மகேஷ் ரௌட், ஷோமா சென், ரொனா வில்சன் உள்ளிட்ட தலித் அமைப்பினரையும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும், வழக்கறிஞர்களையும், ஊடகவியலாளர்களையும் கடந்த ஜூன் மாதத்தில் கைதுசெய்த மகாராஷ்ட்ர காவல்துறை இன்று அடுத்தக்கட்ட கைதுகளை நடத்தியுள்ளது.
புரட்சிகரக் கவிஞர் வரவரராவ் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
தலித்துகள், பழங்குடிகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் நலனை காப்பதிலும், மத்திய அரசின் மக்கள்விரோதத் திட்டங்களை எதிர்ப்பதிலும், சங்பரிவாரத்தின் இந்துத்வ வெறுப்பரசியலை விமர்சிப்பதிலும் முன்னணியில் இயங்கும் கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சல்வெஸ், அருண் ஃபெரைரா, எழுத்தாளர் வரவரராவ் ஆகியோர் இன்று மகாராஷ்ட்ர காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது மடிக்கணினி, செல்பேசி, பென் டிரைவ் ஆகியவையும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்களது சமூக ஊடகங்ளின் கணக்குகளும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கல்வியாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளரும் அண்ணல் அம்பேத்கரது குடும்ப உறுப்பினருமான ஆனந்த் டெல்டும்டேவின் வீடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
நாடறிந்த ஆளுமைகளான இவர்களுக்கே இந்த கதியா..? என்கிற பீதிக்குள் கருத்தியல் தளத்தில் இயங்குகிறவர்களை மூழ்கடித்து, சுயதணிக்கையின் மூலம் அவர்கள் தம்மைத்தாமே முடக்கிக் கொள்ளும் நிலையை உருவாக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.
நாட்டை வழிநடத்திச் செல்லும் பொறுப்பிலிருந்து வழுவி பல்வேறு முனைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள பா.ஜ.க, தனக்கெதிரான விமர்சனங்களின் கழுத்தை நெறித்துவிட்டு தேர்தலைச் சந்திக்க தயாராகி வருவதன் முன்னோட்டமாக இத்தகைய நடவடிக்கைகளை கருத இடமுண்டு. அதற்காக அது அரசதிகார அமைப்புகளை சட்டநியதிகளுக்குப் புறம்பாக, பழிவாங்கும் இயந்திரமாக பயன்படுத்தி வருகிறது.
திவ்யபாரதி, திருமுருகன் காந்தி, வளர்மதி போன்றோர் மீது தமிழக அரசும், பீமா கோரேகான் போராட்ட வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் மீது மகாராஷ்ட்ர அரசும் இழைத்துவரும் கொடுங்கோன்மைகளுக்கு இந்துத்துவ வாதிகளின் எதேச்சதிகார கருத்தியலே காரணமாக இயங்குகிறது.
மக்களின் உயிர்வாழும் உரிமை உட்பட அனைத்தையும் அரசுக்கும் அரசின் வழியாக ஆளுங்கட்சிக்கும் கீழ்ப்படுத்தும் இத்தகைய முயற்சிகளை த.மு.எ.க.ச வன்மையாக கண்டிக்கிறது.
மாட்டிற்க்காக மனிதர்களை அடித்து கொல்லும் காவிபயங்கரவாதிகளை கைது செய்யாமல் மக்களுக்கான கருத்துரிமையாளர்களை கைது செய்யும் மோடி ஆட்சி
பீமா கோரேகான் தலித் எழுச்சியை திசைதிருப்பவே பாசிச பேஷ்வா பார்ப்பனகாவி கும்பல் சதியே மனித உரிமையாளர்கள் கைது.
_______________
மருத்துவர் அரவிந்தன்
பெண் மனநோயர் உரிமைகள் , மனித உரிமை செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ் !
2010 எனறு நினைக்கிறேன், அமகாவின் பெண்கள் பிரிவில் இருக்கும் வெளி மாநிலத்தின் மனநலம் தேறிய நோயர்களை அவர்கள் வீட்டிற்கு கொண்டு போய் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம்.
அப்போது வார்டு எண் 14,15 -ல் இரு பெண்கள் சட்டிஸ்கர் மாநிலத்தின் குக்கிராமத்தை சேர்ந்தவர்கள்.அவர்கள் குக்கிராமத்திற்கு கொண்டு சேர்பது எப்படி என்று திட்டங்கள் முயற்சிகள் மேற்கொண்ட போது தான் நண்பர் ஒருவர் மூலம் மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்குரைஞருமான தோழர் சுதா பரத்வாஜ் அவர்கள் எண் கிடைத்தது. அவரிடம் விஷயத்தை சொன்னோம். அனுப்பி வைக்க சொன்னார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு பெண் நோயர்களோடு மூன்று பெண் உடனாளர்கள், மூவருக்கும் இந்தி தெரியாது. அதிலொருவர் மாற்றுத்திறனாளி இருந்தாலும் நோயர்களை கொண்டு சேர்க்கும் கடமை உணர்ச்சியோடு அவர்கள் சென்றனர்.
ராய்பூர் ரயில் நிலையத்தில் அவரை மனித உரிமைகள் அமைப்பு சார்பாக இருந்த ஒருவர் அழைத்து சென்று இரவு தங்குவதற்கு இடமும் உணவும் கொடுத்து பாதுகாப்பாய் பார்த்துக்கொண்டார்.
மறுநாள் அவர்களை அழைத்துக்கொண்டு நோயர்களின் ஊர் தேடி பயணித்து கடினமான பாதைகள், உறவினர்களின் மனத் தடைகளை மீறி பெண் நோயர்களை அவர்கள் வீட்டில் சேர்க்க பேருதவி செய்தது தோழர் சுதா பரத்வாஜ் சார்ந்த மனித உரிமை அமைப்பு. அவர்களை வீட்டில் சேர்க்கும் வரை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தினார்.
அமகா பெண் உடனாளர்களை மீண்டும் பத்திரமாய் ரயில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னை வந்த பெண் உடனாளர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம். பாராட்டும் அவர்களின் சேவை ஊக்குவிக்க அது முக்கியமானதாக கருதினோம்.
எட்டுவருடங்கள் கடந்துவிட்டன அந்த பெண் நோயர்கள் இன்றும் சுதா பரத்வாஜ் அவர்களின் உதவியை மறக்கமாட்டார்கள். அவர் இல்லையென்றால் நாட்பட அமாகாவிலோ, அல்லது ஏதோ ஒரு என் ஜி ஓ ஹோமிலோ சிறையிலிருந்திருப்பார்கள்.
தங்கள் நிறுவனம் நலன், வளர்ச்சி , பொருளாதாரம் சார்ந்து மன நோயாளிகள் உரிமைகள் அதிகாரப் பகிர்வை அரிதாரம் பூசி சந்தையில் விற்பனை செய்யும் எத்தனையோ என்.ஜி.ஓ-க்கள் இருக்கின்றன. அவர்களுக்கு சர்வதேச, தேசிய விருதுகள்.
மனித உரிமைகளுக்காக 30 ஆண்டுகளுக்காக போராடும் சுதா பரத்வாஜ் போன்றோர்க்கு திடீர் கைது அரசு அடக்குமுறை ஒடுக்குமுறை.
– மருத்துவர் அரவிந்தன்
_______________
Aazhi Senthil Nathan
மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஐந்து பேர் கைதுக்குத் தன்னாட்சித் தமிழகம் கடும் கண்டனம்.
மீண்டும் ஓர் அவசரநிலைக் காலம் பிறப்பிக்கப்பட்டுவிட்டதோ என்கிற அச்சம் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் நேற்று பரவியது. மனித உரிமைகளுக்காக போராடிய வரும் ஐந்து பேர் நேற்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் ஏழு நகரங்களில், ஒரே சமயத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், புனே காவல்துறை, மும்பையில் வெர்ணோன் கான்சால்வஸையும் தானேயில் அருண் ஃபெரெய்ராவையும் தில்லியில் கெளதம் நவ்லேகாவையும் அரியாணாவில் சுதா பரத்வாஜையும் ஹைதராபாதில் புரட்சிக் கவிஞர் வரவர ராவையும் கைது செய்திருக்கிறது. கோவாலில் அம்பேத்கரிய அறிஞர் ஆனந்த் டெம்டுல்டேவும் மும்பையில் மனித உரிமையாளர் சூசன் ஆப்ரஹாமும் விசாரிக்கப்பட்டார்கள். இவர்களின் வீடுகளில் நேற்று காலை புகுந்த காவல்துறை, பின்பு இவர்களுக்கு மாவோயிஸ்ட் கட்சியோடு தொடர்பிருக்கிறது என்று கூறி முதலில் குறிப்பிடப்பட்ட ஐவரைக் கைதுசெய்திருக்கிறது.
இந்தக் கைதுகளையும் விசாரணைகளையும் தன்னாட்சித் தமிழகம் கடுமையாகக் கண்டிக்கிறது. இக் கைதுகளுக்கு எதிராக குழலெழுப்பியுள்ள அனைத்து எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், அறிவுஜீவிகள் உள்பட அனைவரோடும் அது தன் கைகளை இணைத்துக்கொள்கிறது.
நரேந்திர மோடி தலைமையிலான மதவெறி-பாசிஸ்ட் அரசின் கோர முகம் உலகின் பார்வையில் கிழிந்து தொங்குகிறது. மகாராஷ்ட்டிரத்தில் பீமா கோரேகாவில் கடந்த எல்கார் பரிஷத் நிகழ்ச்சி தொடர்பாக இந்த கைதுகள் அரங்கேறியுள்ளன. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1818 ஜனவரி 1 இல் பீமா கோரேகாவில் நடந்த போர் ஒன்றில், பார்ப்பனீய பேஷ்வா ஆட்சியாளர்களுக்கு எதிராக மகாராஷ்ட்டிரத்தைச் சேர்ந்த தலித் மக்கள், ஆங்கிலேயர்களோடு இணைந்து போராடி, ஆதிக்கசாதி பேஷ்வா சாம்ராஜ்யத்தை உடைத்தெறிந்தார்கள். அந்த போரின் 200 ஆவது ஆண்டை நினைவுகூர்வதற்காக தலித் அமைப்புகளும் முற்போக்காளர்களும் 2017 ஆம் ஆண்டின் கடைசி நாளில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். குஜராத் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவாணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட அந்த நிகழ்வைத் தொடர்ந்து, புனே பகுதியில் ஆதிக்கசாதியினர் வன்முறையில் இறங்கினர். எல்கார் பரிஷத் நிகழ்வில் மாவோயிஸ்ட் தொடர்பு இருக்கிறது என்று காரணம் காட்டி மகாராஷ்ட்டிரா காவல்துறை இப்போது இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
இந்தியாவின் வரலாற்றை ஆதிக்க சாதியினரின் வரலாறாக மட்டுமே கற்பிக்க முயலும் ஆர் எஸ் எஸ்ஸின் நேரடி தலையீட்டில்தான் மகாராஷ்ட்டிர பாஜக அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையானது.
தலித் மக்களுக்கும் இடதுசாரி அரசியலுக்கும் இடையிலான உறவு என்பது எப்போதுமே அடிப்படையான அரசியல் உறவுதான். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக நிற்பது என்பது குற்றம் என்கிறது இந்திய அரசு. அதனால்தான் அவர்கள் மீது யுஏபிஏ உள்பட பல்வேறு சட்டங்களை ஏவியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெட்கங்கெட்டத் தனமாக, பிரதமர் மோடியைக் கொல்ல இவர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. தேசத்துக்கு அச்சுறுத்தல், பிரதமருக்கு அச்சுறுத்தல் என்கிற அதே பழைய தந்திரத்தைப் பயன்படுத்தி மனித உரிமையாளர்களையும் கவிஞர்களையும் தலித் தலைவர்களையும் மிரட்டிப்பார்க்கிறது மோடி அரசு.
கோரேகாவ் வன்முறை தொடர்பாக ஆதிக்கச் சாதியினரையும் அவர்கள் தரப்பில் ஈடுபட்டவர்களையும் சுதந்திரமாக விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருப்பவர்களை அச்சுறுத்துவதன் மூலம் மோடி அரசு தான் யார் பக்கம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்கிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை. இது மகாராஷ்ட்டிரத்தில் மராத்தா சமூக மக்கள், மற்றும் பிற ஆதிக்கசாதியினரிடம் அவர்களின் பாதுகாவலன் தாங்கள்தான் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக எதிர்வரும் தேர்தலை மனத்தில் வைத்து நகர்த்தப்படும் திட்டமும் ஆகும். மராத்திய இன மக்களை சாதி வேறுபாடுகளைக் கொண்டு பிளவுபடுத்தி அதில் பலனடையும் பிரித்தாளும் சூழ்ச்சிதான் இது. மராத்திய இன விவசாயிகளின் போராட்டங்களால் அதிர்ந்துபோயிருக்கும் மகாராஷ்ட்டிர பாஜக இப்போது மக்களை பிரித்தாள முயல்கிறது.
தோழர்கள் வர வர ராவ் உள்ளிட்ட அனைவருக்காகவும் நாம் குரல்கொடுக்கிறோம்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் தோழர்கள் திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மோடி அரசின் பாசிச நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றன. அதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள ஜனநாயக, முற்போக்கு சக்திகள் இணைந்து எதிர்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
ஆழி செந்தில்நாதன்
ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சித் தமிழகம்
____________
பா. ஏகலைவன்
ஒரு பயலும் சீண்ட மாட்டான்.
———————————————————
பொய்யும் புரட்டிலுமே
இந்த ஆட்சியை கடந்து விடலாம் என்றிருக்கிறது மோடி அரசு.
அதிகாரத்திற்கு வந்து இதுவரை ஒரு நன்மையும் மக்களுக்கு கிட்டவில்லை.
எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலை ஏறினபடியே உள்ளது. என்னமோ இவர் நாட்டை வல்லரசாக்க துடிக்கின்ற மாதிரியும், அதை பார்த்து பொறாமையில் அமெரிக்க சதி திட்டம் தீட்டுகின்ற மாதிரியும் பினாத்திக்கொண்டு திரிகிறார்கள்.
சதி திட்டம் தீட்டும் நக்ஸல்பாரிகள் யாராவது பிட் நோட்டீஸ் அடித்து சொல்வார்களா என்ன? பொய்யும் புரட்டுக்கும் ஒரு அளவு வேண்டாம்.
இவரைப் போன்றவர்களை அம்பானி, அதானி, ராம்தேவ் மாதிரியான ஆட்கள் போட்டுத் தள்ளினால்தான் உண்டு, அதுவும் கொடுக்கல் வாங்கல் தகறாரில். மற்றபடி ஒரு பயலும் சீண்ட மாட்டான். தானாகவே அழியப்போறதுக்கு எதற்கு சதித் திட்டம் தீட்டுவார்கள்.?
அந்த 15 லட்சம் என்னாச்சின்னு கேட்டா போதும், ‘ஐயையோ..என்னைய கொல்ல சதி நடக்குதுன்னு’ ஒப்பாரி வக்கிறதே பொழப்பா போயிடுச்சு..
_______________
_______________
PRESS ANNOUNCEMENT / INVITE
28th August 2018
Dear friends,
On 28th August 2018, simultaneous raids were conducted by Police on the premises of prominent human rights and civil liberties activists and intellectuals – Advocate Sudha Bharadwaj (National Secretary, PUCL) in Faridabad, Father Stan Swamy in Jharkhand, Senior Writer and Poet Varavara Rao, his two daughters – Anala and Pavana, ‘The Hindu’ journalist KV Kumaranath, English and Foreign Languages University (EFLU) Professor Satyanarayana, ‘Namaste Telangana’ journalist Kranthi Tekula – all in Hyderabad, Anand Teltumbe (General Secretary, CPDR) in Goa, Gautam Navlakha (founder member, PUDR) in Delhi, Arun Ferreira, Writer Vernon Gonsalves and Advocate Susan Abraham in Mumbai, and several of them have been arrested on false and fabricated charges under the draconian UAPA law.
WE the aforesaid civil society organisations/ groups/ collectives, are jointly convening an urgent Press Conference to condemn the appalling state actions of reprisals against noted human rights activists and intellectuals, which are clearly politically motivated and an attempt to stifle voices of dissent. The unjustified raids on and arrests of the above public spirited individuals who have tirelessly worked for the cause of the poor and marginalized sections of society, are nothing but an attack on Indian democracy and an attempt to undermine the democratic fabric of our society.
JOINT PRESS CONFERENCE BY –
(1) PEOPLE’S UNION FOR CIVIL LIBERTIES (PUCL) – MAHARASHTRA,
(2) COMMITTEE FOR PROTECTION OF DEMOCRATIC RIGHTS (CPDR),
(3) WOMEN AGAINST SEXUAL VIOLENCE AND STATE REPRESSION (WSS),
(4) FORUM AGAINST OPPRESSION OF WOMEN,
(5) LABIA – A QUEER FEMINIST LBT COLLECTIVE,
(6) AWAAZ-E-NISWAAN,
(7) BEBAAK COLLECTIVE,
(8) AKSHARA WOMEN’S RESOURCE CENTRE
(9) POLICE REFORMS WATCH,
(10) AMBEDKAR PERIYAR PHULE STUDY CIRCLE (APPSC) – IIT BOMBAY
(11) NEW TRADE UNION INITIATIVE (NTUI)
(12) BHARAT BACHAO ANDOLAN
(13) CITIZENS FOR JUSTICE AND PEACE (CJP)
(14) PEOPLE’S COMMISSION ON SHRINKING DEMOCRATIC SPACES (PCSDS)
(15) HUMAN RIGHTS DEFENDERS ALERT (HRDA) – INDIA
(16) INDIAN CHRISTIAN WOMEN’S MOVEMENT, MUMBAI CHAPTER
(17) SATYASHODHAK, MUMBAI & OTHERS
CONDEMNING THE ARRESTS OF PROMINENT HUMAN RIGHTS ACTIVISTS FOLLOWING SIMULTANEOUS MULTI-CITY RAIDS BY POLICE ON 28TH AUGUST 2018.
Date : Wednesday, 29 August 2018 Time : 4 p.m. onwards
We request you to attend and / or depute a reporter to cover this event.
With Regards,
All of the Joint Organisers.
_______________
பா. ஜீவ சுந்தரி
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இந்தியாவில்..
தமிழகத்திலும் கைது நடவடிக்கை, ரெய்டுகள் அறிவுஜீவிகள், செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வாய்ப்பை எதிர்பார்க்கலாம்…
_______________
Arul Doss Borntowin
மக்கள் போராளிகள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களா ?தமிழக ஊடகங்கள் பாசிச விஷத்தில் மிதக்கிறது !!
_______________
Bharathi Raja
பாசிச மோடி கும்பலின் தொடரும் அடக்குமுறை இப்போது
அறிவுஜீவிகளின் மீது நேரடி தாக்குதல்..
_______________
Rajathi Salma
கவிஞர் வரவர ராவ் மோடியை கொலை செய்ய திட்டம் போட்டதாக கைது . எப்படி சிரிப்பது எனத்தெரியவில்லை. எதற்கும் கவிஞர்கள் ஜாக்கிரதையாக இருந்து கொண்டால் நல்லது..
________________
PUCL STRONGLY CONDEMNS AND DENOUNCES THE ARRESTS UNDER THE DRACONIAN UAPA OF
Sudha Bharadwaj, PUCL National Secretary
Gautam Navalakha of PUDR,
Prof. Anand Teltumde of CPDR,
Vernon Gonsalves and Arun Ferreira, advocates, and
Vara Vara Rao, noted poet and rights activist.
Kranti Tekula of Virasam, Hyderabad.
PUCL also denounces the simultaneous multi-city raids conducted today, 28th August 2018 in a concerted and pre-meditated manner across the country at the premises of other eminent human rights activists including:
Father Stan Swamy in Jharkhand;
Senior Writer and Poet Varavara Rao, as also the houses of his two daughters and sons-in-law, Anala and the Hindu journalist KV Kumaranath; and Pavana and her husband, Prof. Satyanarayana, of English and Foreign Languages University;
Anand Teltumbde in Goa;
Gautam Navlakha in Delhi,
Arun Ferreira, Vernon Gonsalves and Susan Abraham, Advocates in Mumbai.
PUCL asserts that the arrests and raids are nothing but a targeted crackdown and attack by the police and state on civil liberties and democratic rights activists across the country in a concerted attempt to crush human rights interventions and silence voices of dissent;
Such systematic and pre-meditated crackdown on human rights activists is unprecedented and unheard of in a democracy and PUCL strongly condemns this unconstitutional crackdown by the state and police ;
PUCL stands firmly in solidarity with advocate Sudha Bharadwaj, National Secretary, PUCL and the other human rights activists who face raids and have been arrested under false and fabricated charges.
We would like to point out that in a Habeas Corpus petition filed before the Delhi High Court, his transfer on transit warrant to Pune has been stayed pending further hearing of the habeas corpus petition tomorrow 29th August, and he is currently under house arrest. As per sources, Anand Teltumbde’s house in Goa was raided by the police in a completely illegal manner, in his absence, after procuring keys from the security guard. While some news channels state that the raids and arrest have been made in the Pune case of Bhima Koregaon caste violence, where the prime accused are Hindutva right wing groups and leaders who are enjoying state impunity and at large, some other news agencies are alleging that the arrests are linked to claims of alleged plot to assassinate Prime Minister Narendra Modi and Chief Minister Devendra Fadnavis.
It is pertinent to note that just last month on 4th July 2018, a scurrilous, motivated, fabricated and malicious media propaganda and hate campaign was run by Republic TV and its anchor Ms. Shivani Gupta, Deputy Editor Mr. Shrawan Sen and its Managing Director, Mr. Arnab Goswami, by way of a series of programmes presented as “Super Exclusive Breaking News” and also showcased by way of a national debate on Prime Time TV. Relying on a fabricated letter allegedly addressed by her to a Maoist named ‘Comrade Prakash’, the channel repeatedly aired, completely false, unsubstantiated and scurrilous accusations against Advocate Sudha Bharadwaj, falsely profiling her as “Urban Naxal”. The allegations were categorically denied by Advocate Sudha Bharadwaj in her rebuttal statement. The programmes were aired with headers of“#UrbanNaxalsExposed” and similar allegations were made against other human rights activists like Mr. Gautam Navlakha in part 2 of the programme, via a second letter supposedly procured by the Channel. PUCL has previously issued a statement dated 7th July 2018 strongly condemning the incident and demanding strict action against the Channel. Advocate Sudha Bharadwaj also issued a legal notice in respect of the Channel’s illegal acts.
The current arrests and raids are taking place in the backdrop of the arrests of five human rights activists – Advocate Surendra Gadling, Professor Shoma Sen, Rona Wilson, Mahesh Raut and Sudhir Dhawale – who were also arrested under UAPA on 6th June 2018, relying on a similar fabricated letter produced by Republic TV allegedly addressed to the same “Comrade Prakash”, in the same Pune case. Following this, on 7th June 2018, Advocate Sudha Bharadwaj had addressed a press conference organized by the Indian Association of People’s Lawyers (IAPL) in New Delhi to condemn the arrest of Advocate Surendra Gadling of the Nagpur High Court. Susan Abraham, Arun Fererreia and Vernon Gonsalves are in fact representing the Bhima Koregaon accused in Court.
Advocate Sudha Bharadwaj has been a dedicated trade unionist for more than three decades and has served as a general secretary of its Chhattisgarh branch, during which time the branch did remarkable work in the State. She is also associated with the Chhattisgarh Mukti Morcha, which was founded by the late Shankar Guha Niyogi. She started her legal practice in the year 2000 and has since, fought innumerable cases of workers, farmers, adivasis and poor people in the fields of labour, land acquisition, forest rights and environmental rights. Since the year 2007, she has been practicing in the High Court of Chhattisgarh at Bilaspur and was nominated by the High Court to be a member of the Chhattisgarh State Legal Services Authority. She also supported young lawyers to set up the Jagdalpur Legal Aid group as a civil society initiative to provide legal aid to incarcerated Tribals. She is a visiting faculty at the National Law University Delhi, where she teaches the course on tribal rights and land acquisition.
PUCL believes that the intention of the state and police in targeting the aforesaid human rights activists by foisting false and fabricated cases against them, is clear and apparent from their profiles of work. All the aforesaid human rights activists targeted in this multi-city “operation” by the police have been tirelessly involved in advocating the cause and fighting for the rights of the most poor, marginalized sections of society against serious state violations and unscrupulous corporates. They have stood for the principles of human rights enshrined in the Indian Constitution and the international standards on human rights.
PUCL strongly condemns the actions of the state and police. This simultaneous crackdown against human rights activists across the country signals the imposition of an unofficial Emergency in our nation and is a direct attack on Indian democracy. This is a deliberate strategy of the state to target noted human rights activists in a clear act of reprisals against them for calling out the human rights violations by the state and police, and to intimidate those who are fighting for justice.
PUCL cautions the public at large on the concerted efforts underway to stifle voices of dissent and threaten the democratic fabric of the country.
In light of the above, PUCL makes the following urgent demands:
PUCL calls upon the state and the police to immediately and unconditionally release human rights activists, Sudha Bharadwaj, Gautam Navalakha, Anand Teltumbde, Varavara Rao, Arun Ferreira, Kranti Tekula and Vernon Gonsalves and withdraw the false and fabricated case against them;
PUCL calls upon the National Human Rights Commission (NHRC) to urgently intervene to ensure the release of the human rights activists and to order an immediate, transparent, effective and impartial investigation into the simultaneous multi-city raids and arrests of the human rights activists by the state and the police on false and fabricated accusations and charges ;
PUCL also calls upon the democratic minded citizens of India to condemn the unprincipled manner in which human rights activists are being targeted and oppose such insidious and collusive attempts by State agencies and media outfits to silence human rights activists against the vindictive State policies and action ;
PUCL further condemns the constant profiling as “Urban Naxals/ Maoists” and criminalisation of human rights activists working tirelessly against the state’s anti-people actions and policies, in an attempt to malign them and influence public sentiment.
Mr. Ravi Kiran Jain, National President, PUCL Dr. V. Suresh National General Secretary, PUCL
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவருடைய மறைவிற்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் தி.மு.க. சார்பாக வருகிற 30-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு அ.தி.மு.க. தவிர்த்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது தி.மு.க. முக்கியமாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா வரலாம் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.தி.மு.க.வின் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்தது. தற்போது அமித்ஷாவிற்கு பதில் நிதின் கட்காரி வருவார் எனத் தெரிகிறது.இந்த சூழலில் தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 28.08.2018 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க.வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க ஸ்டாலின், “மாநில உரிமைகளை பறிக்கும், மதவாதத்தை பரப்பும் காவி அரசையும், சுயமரியாதை என்னும் முதுகெலும்பில்லாத மாநில அரசையும் தூக்கி எறிய வேண்டும்” என்று பேசினார்.ஒரு பக்கம் எதிர்ப்பு… மற்றொரு பக்கம் அழைப்பு…. இதனை எப்படி எடுத்துகொள்வது? புகழஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்குமோ என்ற விமர்சனத்திற்கான எதிர்வினைதான் அவ்வாறு பேச வைத்ததா? இல்லை… திராவிட இயக்கக் கொள்கை கோட்பாடுதான் பேச வைக்கிறதா?
அண்ணா அறிவாலயத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களிடமே கேட்டோம்!
கரும்பாயிரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முன்னாள் செயலர், தஞ்சாவூர்.
பதினைந்து வயசுல இருந்து தி.மு.க.வுல இருக்கேன். தமிழ் மேல இருந்த பற்று தான் தி.மு.க. மீதான பற்றானது. நான் கட்சிக்கு வரும்போது மதுரை முத்து தான் மேயரா இருந்தாரு. கர்நாடகா – தமிழ்நாடு பிரச்சனை அப்போ பெரிசா இருந்தது. இப்ப அறுபத்தி ஐந்து வயசாவுது. இன்னும் தி.மு.க. மேல இருக்க பற்று போகல. அதுக்கு காரணம் கொள்கை. பி.ஜே.பி.காரனுங்க மதவெறி, ஜாதிவெறி புடிச்சவனுங்க. அவங்கள நாம நம்ப முடியாது. அவங்க மொழிப்பற்றுக்கு எதிரானவங்க. இந்தி வெறிய திணிக்கிறாங்க. இருந்தாலும் அவங்கள நினைவேந்தலுக்கு கூப்பிட்டதுக்கு காரணம் கலைஞர் சாவுக்கு பிரதமர் வந்தார் என்ற அடிப்படையில தான். அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் எங்களை கூப்பிடவில்லைன்னு சொல்லுறது சரியில்லை. அவர்களை கூப்ப்பிடக் கூடாது. அவர்கள் தமிழக விரோதிகள். கலைஞர் இறப்பு நிகழ்வுக்கு முதலைமைச்சர் எங்கே போயிருந்தார்? இப்ப மட்டும் எதுக்கு கூப்பிடலன்னு சொல்லுறாங்க? நாங்க எதுக்கு கூப்பிடனும்?
கலைஞர் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சரா இருக்கும் போது எங்க அப்பா எனக்கு கலைஞர் கருணாநிதிய அடையாளம் காமிச்சார். அப்ப நான் சின்ன பையன். அதுல இருந்து நான் தி.மு.க. தான். நான் கலப்பு திருமணம் பண்ணினேன். கட்சி கொள்கைப் படிதான் அப்படி செஞ்சேன். என் பையனுக்கும், பொண்ணுக்கும் கலைஞர் தான் கரிகாலன், கண்ணகின்னு பேரு வச்சார்.
இப்ப தளபதி ஸ்டாலின் வாரிசு அரசியல்ல தலைவரா வந்தது சரிதான். அதுக்கான தகுதி அவருக்கு உண்டு. அதேபோல இப்ப நினைவேந்தலுக்கு அமித்சாவ கூப்பிட்டது சரிதான். ஆனா இதை வைத்தே கூட்டணி வச்சா நான் ஏத்துக்க மாட்டேன். அது தேவை இல்லாத வேலை. தளபதி ஸ்டாலின் கலைஞர் வழியில வந்த புடம் போட்ட தங்கம். அவர் பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்க மாட்டார். அப்படி கூட்டணி வச்சா நான் கட்சிய விட்டே வெளியேறுவேன். தி.மு.க.வினுடைய உண்மையான தொண்டர்களோட உணர்வுகள் இதுதான்.
அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர், மானாமதுரை.
ஒரு விஷயம் பார்க்கணும். திதிக்கு கூப்பிடுறது எல்லாம் கூட்டணியில இருக்கணும்னு கணக்கு கிடையாது. தேர்தல் வேற… நினைவேந்தல் வேற… அமித்சாவை கூப்பிடுறாங்கன்னா அவர் பொறுப்புல இருக்காரு. அதனால கூப்பிடுறோம். அதுக்காக கூட்டணிக்கு கூப்பிடறதா நினைக்க கூடாது. பா.ஜ.க. மத நல்லிணக்கத்துக்கு ஒத்து வராது. இங்க அவங்க எடுபட மாட்டாங்க. அதே போல அ.தி.மு.க.வ புகழஞ்சலி நிகழ்வுக்கு கூப்பிடாததுக்கு காரணம், அவர்கள் நேரடியா எங்களுக்கு எதிரி. தலைவர் கலைஞருக்கு மெரினாவுல இடம் கொடுக்க மாட்டேன்னு சொன்னது அவங்க தான். பி.ஜே.பி. எல்லாம் பின்னணியில இருக்கிறது என்பதெல்லாம் வேற. ஆனா அ.தி.மு.க. அதிகார பூர்வமா நீதிமன்றத்துலயும் எதிர்த்தாங்க. அவனுங்கள மன்னிக்க முடியாது. அதே மாதிரி, அழகிரிக்கு பயந்துகிட்டு நாங்க பி.ஜே.பி.க்கு இன்விடேசன் கொடுப்பதாக ஒரு செய்தி வந்தது. அது தவறானது. அழகிரி எல்லாம் எங்களுக்கு தலைவர் இல்ல. அவரும் கலைஞர் புள்ள. அந்த அளவுக்கு தான் அவர் மேல மதிப்பு. கட்சின்னு வந்துட்டா அவர் எங்களுக்கு தேவை இல்லை. தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க. கட்சிக்கு தான் கட்டுப்படுவாங்க. அழகிரிக்கு இல்ல. பி.ஜே.பி. தமிழநாட்டுக்கு எவ்வளவு மோசம் செஞ்சாங்கன்னு தெரியும். நீட் தேர்வுல இருந்து ரேசன் வரைக்கும் அவன் தமிழ்நாட்டுக்கு எதிரா தான் இருந்தான். பி.ஜே.பி.யிடம், தமிழகம் இழந்த உரிமைய தளபதி மீட்டெடுப்பாரு. கூட்டணி எல்லாம் இருக்காது.
முனியாண்டி, ஆதிதிராவிடர் மாவட்ட அமைப்பாளர், தேனி.
தி.மு.க., தொண்டர்கள் தலைமைக்கு கட்டுப்படுவார்கள். தளபதி இப்ப தலைவர். கலைஞர் இடத்துல அவர நாங்க வச்சிருக்கோம். அவர் ஈரோட்டு பெரியார் வழியில, காஞ்சிபுரம் அண்ணா வழியில, கலைஞர் வழியில வந்தவரு. அவங்களுக்கு எதிரா தளபதி போக மாட்டாரு. இருந்தாலும் தலைமை எடுக்கிற முடிவுக்கு கட்சி கட்டுப்படும். நாங்களும் அமைப்பு என்ன சொல்லுதோ அதைத்தான் கேட்போம். பி.ஜே.பி. கூட்டணி இருக்காது.
ஆலன், விவசாய தொழிலாளர் மாவட்ட அமைப்பாளர், நீலகிரி.
நான் 1986-ல இருந்து தி.மு.க.வுல இருக்கேன். பி.ஜே.பி.யோட உறவு இப்ப முடிச்சி போட்டு பேச முடியாது. அமித்சாவை கூப்பிட்டும், அவர் அழைப்பை ஏத்துக்கல. அவர்கள் எப்பவுமே அப்படி தான். அவங்க ஜாதித் திமிர் பிடிச்சவங்க. அ.தி.மு.க.வ ஏன் கூப்பிடலன்னு ஜெயக்குமார் சொல்லுறதுக்கு காரணம், நாங்க எங்க பி.ஜே.பி.யோட கூட்டணி வச்சிக்க போறோம்னு பயம். மெரினாவுல இட ஒதுக்கீடு செய்ய எதிர்த்தவனுக்கு இன்விடேசன் ஒரு கேடா? பி.ஜே.பி.கூட கூட்டு என்பது தலைமை எடுக்கிற முடிவுதான். ஆனா எங்க கொள்கைய விட்டு கொடுக்க மாட்டோம். கொள்கை தான் முக்கியம். பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒன்னு இல்ல. அதனால தளபதி சரியான முடிவு எடுப்பார். அதுக்கு நாங்க கட்டுப்படுவோம்.
நீலகண்டன், தி.மு.க. இளைஞரணி, திருவள்ளூர்.
வலதுபுறம் இருப்பவர்.
அமித்சா வரல. அதுக்கு முட்டுக்கட்ட போட்டுட்டாங்க. என்பதை எல்லாம் இப்ப சொல்ல முடியாது. இது இணைப்பு, கூட்டு பத்தி பேசுற நேரம் இல்ல. தேர்தலின் போது கூட்டணி பத்தி தலைமை தான் முடிவெடுக்கும். நாம் தொண்டர் தான். பி.ஜே.பி. எதிரி. அதுங்கூட எப்படி கூட்டணி வக்கலாம்? அமித்சாவை எப்படி கூப்பிடலாம்னு நாம கேக்க முடியாது. அதுபற்றி தலைமை தான் முடிவெடுக்கும். தொண்டர்கள் அதை கேட்டுக்கணும்.
சேகர், ஆதிதிராவிடர் நகர அமைப்பாளர், திருவாரூர்.
பி.ஜே.பி. கூட ஒருபோதும் தி.மு.க. உறவு வச்சிக்கிறது இல்ல. மதவாத கட்சி அது. நூற்றுக்கு தொண்ணூறு சதவிதம் கூட்டணி இருக்காது. இங்க ஏற்கனவே பலமான கூட்டணி எங்க கிட்ட இருக்கு. கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க.ன்னு. பி.ஜே.பி. கிட்ட திடீர்னு கூட்டணி வச்சிகினா இவர்கள் எல்லாம். வெளியே போயிடுவாங்க. அதால கட்சி என்கிற ரீதியில கூட பி.ஜே.பி. சரியில்ல. அதனால் கூட்டணி இருக்காது.
கருப்பசாமி, திருப்பூர்.
கம்யூனிஸ்ட் கட்சியில தொழிற்சங்க பணியில இடுந்தேன். 2009-ல தி.மு.க. கட்சிக்கு வந்துட்டேன். அப்ப தி.மு.க. ஆட்சியில இருந்தது. நான் நாற்பது ஆண்டுகாலம் கம்யூனிஸ்ட் கட்சியில ஒழச்சேன். தி.மு.க. கொள்கை, மொழிப்பற்று இதை வைத்து தான் தி.மு.க.வுக்கு வந்தேன். அமித்சாவை கூப்பிடுறது கருணாநிதி இரங்கல் கூட்டம், கூட்டணி இதெல்லாம் வேற வேற… கண்டிப்பா பி.ஜே.பி. கூட இதை வைத்து கூட்டணி வைக்க மாட்டாங்க. தி.மு.க. கட்சிகாரங்க இதை விரும்ப மாட்டாங்க.
கோவிந்தராஜி, தலைமை செயற்குழு உறுப்பினர், நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம்.
இப்பொழுது வெளிப்படையா மொழி அச்சுறுத்தல் எதுவும் நேரடியா இல்ல. பி.ஜே.பி. என்பது எதிர் கட்சி தான். தேசிய தலைவரா இருந்த கலைஞர் கருணாநிதி இரங்கலுக்கு அவர்களை கூப்பிடுவது தப்பு இல்ல. மறைமுகமா கூட்டணி வச்சிக்கணும்னு தி.மு.க.வுக்கு எண்ணம் இல்ல. அதை முடிச்சி போடுறது தவறு. நாம் மதவாத கருத்தை தான் எதிர்க்கிறோம். மதத்தை பின்பற்றுபவர்களை இல்ல. அப்படி தான் எல்லா விஷயத்தையும் பார்க்கணும். எப்படி இருந்தாலும் பி.ஜே.பி.யோட கூட்டு 99 சதவீதம் இருக்காது. அ.தி.மு.க.வ கூப்பிடாதற்குகாரணம் எந்த ஒரு கொள்கையும் இல்லாத கொள்ளையடிக்கிற கட்சி. இன்று தளபதி ஸ்டாலின் கட்சிக்கு தலைமை பதவிக்கு வந்துட்டார். அவர் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரா போக மாட்டார், அந்த வகையில் தான் கூட்டணி பற்றியும் சிந்திப்பார்.
மாடசாமி, வாழும் கலைஞர், நெல்லை மாவட்டம், கருங்குளம்.
நான் எந்த கட்சியும் இல்ல. எனக்கு நாடகம் தான் மூச்சி. பிரம்மன் நாடகக்குழு நடத்துறேன். எங்க அப்பா பேர். நான் எம்.ஜி.யாரு மாதிரியும் வேஷம் போட்டிருக்கேன். கருணாநிதி மாதிரி அச்சு அசலா இருக்குன்னு எல்லோரும் சொல்லுறாங்க. பார்க்கறவங்க என்னோடபோட்டோ எடுக்காம போக மாட்டாங்க.
ராஜேஸ்வரி, தருமபுரி மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர்.
உண்மைய சொல்லனும்னா, நான் 1972- ல பொறந்ததுல இருந்தே தி.மு.க.வில இருக்கேன். 89-ல தான் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட ஆரம்பிச்சேன். எங்க வீட்டுல குழந்த குட்டி எப்பவுமே தி.மு.க. தான். இப்ப கலைஞர் இறப்பின் போது என் ஆறு வயசு பேரன், இரங்கல் பாடி வாட்சப்புல அனுப்பினான். அது பெரிசா போச்சி. அந்த அளவுக்கு தி.மு.க. மீது பற்று.
பி.ஜே.பி.யோட, வாஜ்பாயோட தலைவர் கலைஞர் அப்பவே கூட்டு வச்சிக்கினாரு. அப்போ பல மந்திரிங்க பதவி வாங்கி தமிழ்நாட்டுக்கு பல நல்லது செஞ்சாரு. கொள்கைய விட்டுக்கொடுக்காத கூட்டணி வக்கிறது கட்சி முடிவு. அதை நாங்க ஏத்து தான் ஆகனும். கலைஞர் இந்தியாவுக்கு ஒரு பொது சொத்து. அதனால அமித்சாவ இப்ப கூப்பிட்டது தப்பு இல்ல. அவர் எதுக்கு வரலன்னு தெரியல. எதிர்காலத்துல கூட்டணி பத்தி எங்க தலைவர் முடிவு எடுப்பார். எங்க கொள்கைக்கு எதிரா… எங்க தலைவர் போக மாட்டார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு!
தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் வராக் கடனும், ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையும், அதில் மோடியின் சாதனையும்!
இந்தியா முழுவதும் செயல்பாட்டாளர்கள் கைதுகள், மாட்டின் பெயரில் கொலைகள், சபரிமலைக்கும் வெள்ளத்துக்கு உள்ள தொடர்புகள், இன்னும் பல செய்திகளுக்கு மத்தியில் வேறு சில நிகழ்வுகளும் நடந்துகொண்டு இருக்கின்றது.
மார்ச்சில் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை ஒன்று வந்தது. 2000 கோடிக்கு அதிகமாக உள்ள கடன்களில், தவணை தேதி முடிந்து ஒரு நாள் கடன் தொகை கட்டாமல் இருந்தால் கூட அந்த கடன்களை அழுத்தத்தில் உள்ள கடன்கள் (stressed loans) என்று வகைப்படுத்தும்படி வங்கிகளுக்கு அந்த சுற்றறிக்கையின் மூலம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இவ்வாறு வகைப்படுத்தி 180 நாட்களுக்குள், அந்த கடன்களுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை கூறியது. அப்படி தீர்வு காண முடியவில்லை என்றால் அந்த கம்பெனியை திவாலான கம்பெனி என்று அறிவித்து அதை ஏலத்தில் விடுவதற்கான பணிகளை துவங்க வேண்டும்.
இந்த சுற்றறிக்கையை எதிர்த்து மின்சார உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு என்ற தனியார் கம்பெனிகளின் கூட்டமைப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. திங்கள் (27 Aug) அன்று ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை செல்லும் என்று தீர்ப்பு வந்தது.
விளக்கமாக கூற வேண்டிய செய்தியின் முக்கிய விவரங்களை மட்டும் கூறி இருக்கிறேன்.
இந்த செய்தி தொடர்பான, முக்கியமான தகவல்கள் உள்ளது. கடனை திருப்பி செலுத்த தவறிய, அதாவது அந்த 180 நாட்களையும் கடந்துவிட்ட, மின் உற்பத்தி கம்பெனிகள் மொத்தம் 34. அந்த 34 கம்பெனிகளின் கடனை கூட்டினால், மொத்த தொகை 1.75 லட்சம் கோடி ரூபாய்.
கேரளா வெள்ளத்துக்கு யூனியன் அரசு கொடுத்த தொகை எவ்வளவு? கேரளா அரசு கேட்ட தொகை எவ்வளவு? எதுவாக இருந்தாலும் 1.75 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால் சில்லறை காசு போல் தெரிகிறது.
இன்னொரு தகவலையும் தருகிறேன். ஆகஸ்ட் 27 படி, மொத்தம் அழுத்தத்தில் உள்ள கடன்கள் 70, அதாவது 70 கம்பெனிகள் வாங்கிய கடன் திருப்பி செலுத்தாததால் அழுத்தத்தில் உள்ளன. இந்த கடன்களின் கூட்டு தொகை 3.8 லட்சம் கோடி ரூபாய். (இதற்கு எத்தனை பூஜ்யங்கள் என்று கல்லூரி மாணவர்களின் தேர்வில் கேள்வியாக கேட்கலாம்!)
இதில் இன்னும் சுவையான செய்தி ஒன்று இருக்கிறது. குஜராத்தில் GSPC (Gujarat State Petroleum Corporation) என்ற ஒரு மாநில அரசு நிறுவனம் உண்டு. இது திருவாளர் மோடி அவர்கள் முதல்வராக இருந்த பொழுது, குஜராத்தின் வளர்ச்சிக்காக, வெளிநாட்டு கம்பெனிகளுடன் கூட்டு சேர்த்து பல திட்டங்களை செய்வதாக சொன்னது.
இந்த ஒப்பந்தங்களை செயல்படுத்த GSPC ஏராளமாக கடன்களை வாங்கியது. அதிகமான முறைகேடுகள் நடந்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ இப்பொழுது பொது துறை வங்கிகளுக்கு GSPC ரூ. 12,519 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் உள்ளது, அதாவது தவணை தேதி முடிந்தும் செலுத்தாமல் உள்ளது.
சுவையான செய்தி என்னவென்றால், மேலே கூறிய அலகாபாத் உயர்நீதி மன்ற வழக்கில், மோடி அரசு ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்கு எதிராக தன்னையும் இணைத்துக் கொண்டது. அதாவது, ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை எதிர்த்து மோடி அரசு நீதி மன்றத்துக்கு சென்றுள்ளது.
ரிசர்வ் வங்கியை எதிர்த்து இந்திய அரசு நீதி மன்றம் சென்றது இதுவே முதல் முறை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆக, இதுவும் திருவாளர் மோடிஜீ அவர்களின் சாதனைகளில் ஒன்று.
நான் பெட்ரோல் போடும்போது நீங்க மீட்டரைப் பார்க்க முடியாது சார். அதோ.. அந்த மோடிஜி போஸ்டரைத் தான் பார்க்கனும். இது மேலிடத்து உத்தரவு சார் !நன்றி: rsyftn
வரவிருக்கும் நாடாளுமன்றத்தில் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பலவித திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசியல் கட்சிகளை வளைப்பது, இமேஜ் பில்டப் செய்வது, முக்கியமாக கலவரங்களை திட்டமிடுவது என பா.ஜ.க.வும் அதன் மூளையான ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடுமையாக திட்டமிடுகின்றன. எந்தக் கட்சியை உடைக்கலாம், வளைக்கலாம் என்பதை நான்கைந்து மாநிலங்களில் செயல்படுத்திய அனுபவத்துடன் தமிழகத்திலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் என்ன ரிசல்ட் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்து அறிவு தளத்தில் இவர்கள் செய்த சமீபத்திய பில்டப் ஒன்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் வால்டர் ஏ ஆண்டர்சன் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் ‘ஆர்.எஸ்.எஸ்-இன் உள்ளே ஒரு பார்வை (The RSS: A View to the Inside) என்பது நூலில் பெயர். இந்த நூல் குறித்து அனைத்து ஆங்கில ஊடகங்களிலும் கட்டுரைகளும் பேட்டிகளும் வெளியாகின. இடதுசாரி, லிபரல் ஊடகங்களும்கூட மதிப்பிற்குரிய பேராசிரியர் ஒருவருடைய நூல் என்கிற வகையில் நேர்காணல்களை வெளியிட்டிருந்தன. கேள்விகள் என்னவோ சூடாகத்தான் இருந்தன, ஆனால் ஆண்டர்சனின் பதிலோ ஆர்.எஸ்.எஸ். பிரச்சார பிரமோத் அதாவது ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளரைப் போல உள்ளன.
உதாரணத்துக்கு ஸ்க்ரால் இணையதளத்தில் வெளியான நேர்காணலில் ஆர்.எஸ்.எஸ். காரர்களின் உளவியல் எப்படிப்பட்டது என்கிற கேள்விக்கு ஆண்டர்சன் இப்படிச் சொல்கிறார், “நான் சந்தித்த அத்தனை பிரச்சாரக்குகளும் (ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியர்கள்) கல்லூரி படிப்பு முடித்தவர்கள். கல்வி மிக முக்கியமான தேவையாக உள்ள அவர்களுடைய திட்டங்களுக்கு அது பொருத்தமாக உள்ளது. பெரும்பாலானவர்கள் உயர்சாதியினர்; அனைவரும் அல்ல. பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பிரச்சாரக்குகள் அதிக அளவில் வரத்தொடங்கியிருக்கிறார்கள்.
இவர்களுடைய ஆளுமை பற்றி சொல்வதென்றால், இளையவர்கள் தேசியத்தில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஆர்.எஸ்.எஸ்.ஸை சாதியற்ற இந்து மடம் என்பார்கள். இவர்கள் குடும்பத்தை விட்டுக்கொடுத்தவர்கள், சொத்துக்களை துறந்தவர்கள், அமைப்புதான் இவர்களை ஆதரிக்கிறது. கொள்கை பற்று இருந்தால் மட்டுமே முழு வாழ்வையும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காக அர்ப்பணிக்க முடியும். ஆர்.எஸ். எஸ். பிரச்சாரக்குகள், சமயத் தொண்டர்களைப் போல இந்த உலகத்துக்கு நல்லது செய்ய வந்தவர்கள். நான் நூலில் குறிப்பிட்டிருக்கும் வாக்கியத்தில் சொல்வதென்றால், அவர்கள் தர்மத்தின் தூதுவர்கள்” என்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு கிறித்துவர்களுடன், இஸ்லாமியர்களுடன், இந்துக்களில் சில பிரிவினருடன் இடதுசாரிகளுடன் பிரச்சினை இருக்கிறது. அவர்களுக்கு இந்தியாவின் கடந்தகாலம் குறித்து குறைகள் உள்ளன இல்லையா? என்ற மற்றுமொரு கேள்விக்கு,
“இல்லையில்லை. 50 பிரச்சாரக்குகளை சந்தித்த பின்பே இந்த கருத்தாக்கத்துக்கு வந்துள்ளேன். வெளியிலிருந்து பார்க்கும்போது ஆர்.எஸ். எஸ். அப்படியான தோற்றத்தைத் தரலாம். சாதாரண உறுப்பினர்களிடம் இத்தகைய பண்புகள் இருக்கலாம். பிரச்சாரக்குகளிடம் அப்படியில்லை” என்கிறார் ஆண்டர்சன். பசுவின் பெயரால் கட்டவிழ்க்கப்படும் கும்பல் கொலைகளுக்கும் முஸ்லீம்கள்கள் மீதான திட்டமிட்ட வெறுப்பு செயல்பாடுகளுக்கும் கலவரங்களுக்கும் ஆண்டர்சனின் பதில் ‘அவர்கள் அப்படியில்லை’ என்பதுதான்.
பைசாபாத்தில் முஸ்லீம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறும் விழா ஒன்றில் எடுக்கப்பட்ட படம். (கோப்புப் படம்)
பெரும்பான்மையாக உள்ள இந்துக்களில் பெரும்பான்மையினர் தங்களை ‘இந்து’க்களாக உணருவதில்லை. அதாவது, இந்து தேசியத்துக்கு அடித்தளம் போட்ட சாவர்க்கரின் இந்துக்களாக அவர்கள் இல்லை. எனவே அவர்களை ஒருங்கிணைக்க ‘இந்து தேசியம்’ மிகத் தேவையாக உள்ளது. அறிவு தளத்தில் தாக்கம் செலுத்தும் நடுத்தர வர்க்கத்தின் கருத்தை கவர, ஆண்டர்சன் போன்ற ‘அறிவுஜீவி’ பேராசிரியர்களின் துணை ஆர்.எஸ்.எஸ்ஸுக்குத் தேவைப்படுகிறது. அதை அவரும் ‘இந்துத்துவ’ அறிஞர் ஸ்ரீதர் டீ டம்ளே இந்நூலில் சேர்ந்து செய்திருக்கிறார்கள்.
ஆண்டர்சன் என்ற அமெரிக்க அறிவுஜீவி ஆர்.எஸ்.எஸ். உள்ளிருந்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலை ஒலித்தார் அல்லவா, அதுபோல் ஆர்.எஸ்.எஸ்ஸின் உள்ளிருந்து அதன் உண்மையான குரலை ஒலிக்க வைத்திருக்கிறார் மேற்குவங்க சமூக செயல்பாட்டாளர் ஒருவர். சய்பால் தாஸ்குப்தா என்ற அவர், ஆர்.எஸ்.எஸ். கூடாரத்துக்குள் சென்று, ஆர்.எஸ். எஸ்.ஸின் பிரபலமான முகமான ‘கலவர’ முகத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார். சய்பால் வெளியிட்ட இந்தத் தகவல்கள் ஆண்டர்சனின் ‘தர்மத்தின் தூதுவர்கள்’ முகத்திரையை கிழிக்கப் போதுமானவை.
செப்டம்பர் 2-ஆம் தேதி நடக்கவிருக்கிற கிருஷ்ண ஜெயந்தி (ஜென்மாஷ்டமி) விழாவில் ஊர்வலம் என்ற பெயரில் பெரும் கலவரம் ஒன்றை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டிருப்பதாக ஆதாரத்துடன் சொல்கிறார் சய்பால். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினராக இணைந்து அதன் இணைய பிரிவில் பணியாற்றிய சய்பால், மேற்குவங்க பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பெரும்தலைகள், ஆண்டர்சன் எழுதியிருக்கும் படித்த பட்டதாரி பெரும்தலைகள் கலவரத்துக்காக திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்.
கடந்த மார்ச் 25-ஆம் தேதி ராமநவமி ஊர்வலத்தின்போது மேற்குவங்கத்தின் அன்சோல், ராணிகன்ஞ், துர்காபூர் போன்ற இடங்களில் திட்டமிட்ட கலவரத்தை உண்டாக்கியது இந்த கும்பல். இதில் மூவர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். கலவரங்களை முன்வைத்து மட்டுமே தனது செல்வாக்கை பெருக்கிக் கொள்வது ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வின் ‘இந்து தேசிய’ திட்டத்தின் ஒரு பகுதி. எனவேதான், வரவிருக்கும் ஜென்மாஷ்டமியில் ஹவுரா மாவட்டத்தின் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருக்கிறது இந்தக் கும்பல்.
ஹவுரா மாவட்டத்தின் பா.ஜ.க. செயலாளர் நித்தீஷ் குமார் சிங் என்பவர் செப்டம்பர் 2-ஆம் தேதி நடக்கிவிருக்கிற ஊர்வலத்தின் திட்டங்களை இமெயில் வழியாக ஆர்.எஸ்.எஸ்.காரராக நடித்துக் கொண்டிருக்கும் சய்பாலிடன் விவரிக்கிறார். ஊர்வலம் கிருஷ்ண மந்திரில் தொடங்கிய ஹவுரா நிலையத்தில் முடிவதாகவும் இடையே முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று கோஷங்கள் போடுவதன் மூலமாக அவர்களைத் தூண்டி கலவரத்தை உண்டாக்குவதே திட்டம் எனவும் விவரிக்கிறார் நித்தீஷ் குமார்.
ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்த மனோஜ் திவாரி . (வாள் ஏந்தியபடி உள்ளவர்)
ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்த மனோஜ் திவாரி (படத்தில் கையில் வாள் ஏந்தியபடி உள்ளவர்) என்பவர் ஊர்வலம் எப்படி எந்த வழியாக செல்ல வேண்டும் என மிக விரிவாக சாய்பாலுக்கு விவரிக்கிறார். கண்டிப்பாக ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாக செல்ல வேண்டும் என சொல்லும் அவர், “அவர்கள்(முஸ்லீம்கள்) எதுவும் செய்ய மாட்டார்கள். அப்படியும் எதிர்வினையாற்றினால் நாம் பலமாக திருப்பித் தாக்க வேண்டும். போலீஸ் மட்டும் அமைதியாக இருந்தால் இவர்களை காலி செய்துவிடலாம்” என அறைகூவல் விடுக்கிறார். இவர் கலவர கமிட்டியின் உறுப்பினர் என தன்னிடம் கூறியதாக சய்பால் தெரிவிக்கிறார். 50 மேற்பட்ட சங்கிகளிடம் ஒன்றரை மாதங்களாக ‘களப்பணி’ செய்து கலவர திட்டத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார் சய்பால்.
சங்பரிவாரத்தின் சூப்பர் ஹிட் திட்டமான ரத ராத்திரை ஊர்வலமும் பாபர் மசூதி இடிப்பும் பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய நீண்ட நெடிய பலனைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் பிரிவினைக்கான சாத்தியங்கள் உண்டோ அங்கெல்லாம் இந்தத் திட்டத்தை மீள் உருவாக்கம் செய்து பலனடையப் பார்க்கிறது சங்பரிவார் கும்பல். மேற்கு வங்கம் அதன் சமீபத்திய களம். தர்மத்தின் தூதுவர்கள் இந்து தேசியத்தை அமைக்கும் பொருட்டு கைகளில் வால் ஏந்தி தலைகளை கொய்ய காத்திருக்கிறார்கள். ஆண்டர்சன் போன்ற அமெரிக்க கெட்டிக்காரன் சொன்ன புளுகு எட்டு நாள்கூட தாங்கவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம், சமகாலத்தில் மிகமுக்கியமான வரலாற்று பதிவாகும். லட்சக்கணக்கான மக்கள் அமைதியாக நடத்திய போராட்டம் ரத்தச்சகதியில் மூழ்கடிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அத்துடன் 200-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டும், 1000-க்கும்அதிகமானோர் கிரிமினல்களைப் போல தேடப்பட்டும், முக்கியமாக கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும், 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும், சிறை வைக்கப்பட்டனர். 22.05.2018 நாளின் ஒரே சம்பவத்திற்காக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரின் மீதும் 50 முதல் 100 வழக்குகள் என மக்கள் மீதான அடக்குமுறையும், மனித உரிமை மீறல்களும் கணக்கில் கொள்ள முடியாதவை.
அதேவேளையில், மக்கள் மீது ஏவப்பட்ட இந்த அடக்குமுறையை எதிர்த்த, வழக்கறிஞர்களின் சட்டப்போராட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. துப்பாக்கிச் சூட்டிற்கு அடுத்த நாள், காவல்துறையின் சட்டவிரோத ‘முற்றுகையை’ தகர்த்ததில் துவங்கி, கொல்லப்பட்டவர்களின் உடல்களை சிறப்பு மருத்துவர் குழு மூலம் பரிசோதனை செய்வது, காவல்துறையால் பீதியூட்டும் வகையில் பதிவு செய்யப்பட்ட 200 மேற்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவு பெற்றது, சட்டவிரோத கைதுகள், மிரட்டல்களை முறியடித்தது, NSA, குண்டர்சட்டம் போன்ற தடுப்புக்காவல் அடைப்புகளை தகர்த்தது, கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்கு துணைநின்றது, தமிழக காவல்துறையின் ஒருதலைபட்சமான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றியது என வழக்கறிஞரின் பணி மக்கள் போராட்டத்தின் நிழல்போல் பின் தொடர்ந்தது என்றால் மிகையல்ல.
போராடும் மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரித்து அச்சுறுத்தப்பட்ட நிலையில் நமது சட்டப்போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. தூத்துகுடியில் மட்டுமல்ல ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை மீறலை எடுத்துப் பேசியதற்காக கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி, நீதிமன்றம் சிறையிலடைக்க மறுத்ததால், ஒன்றன்பின் ஒன்றாக 24 பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது UAPA என்ற கருப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், எட்டு வழிச் சாலைக்கு எதிராக யார் பேசினாலும் கைது என்பதான ’சட்டத்தின் ஆட்சியல்ல, இது போலிசின் ஆட்சி’ என்ற ஆபத்து பெறுகிவரும் காலத்தில் சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர்கள் ஒன்றாய் இணைவதும், மக்களுடைய போராடும் உரிமையை காப்பதும் காலத்தின் தேவையாக உள்ளது.
தற்போது வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு சட்டரீதியாகவும், சட்டத்திற்கு புறம்பான வகையிலும் முயற்சி எடுத்து வருகிறது. ஆலையின் மாசுபாடு பற்றியும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் உள்ள வழக்கு நிலைமைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தனை போராட்டத்திற்குப் பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா ? இதனை நாம் சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றி வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது பற்றியும், உரிமைப் போராட்டத்தில் மக்களுடன், வழக்கறிஞர் கடந்து வந்த பாதையையும், எதிர்காலத்தில் நாம் நம்முன் உள்ள கடமையையும் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.
1 of 2
தகவல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை. தொடர்புக்கு: 9962366320, 9842812062
வாஜ்பாயிக்கு புகழஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது பாஜக. இந்தக் கூட்டத்தில் ‘அரசியல் நாகரிகம்’ கருதி திமுக, காங்கிரஸ், விசிக போன்ற பாஜக அரசை கடுமையாக எதிர்க்கும் கட்சிகளும் இந்த புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்கின்றன. முத்தாய்ப்பாக எப்போது ஒன்று சேர முடியாத சித்தாந்த எதிரிகளாக சொல்லிக்கொள்ளும் இடதுசாரிகளும் (சிபிஐ, சிபிஎம்) இந்த ‘புகழஞ்சலி’ கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்த அரசியல் நாகரீகம் சப்பைக் கட்டைத் தாண்டி ‘புகழஞ்சலி’ செலுத்துவதென்பது வேற லெவல் அரசியல். வாஜ்பாயிக்கு இவர்கள் என்ன மாதிரியான ‘புகழஞ்சலி’ செலுத்துவார்கள் என சமூக ஊடகங்கள் பரபரக்கின்றன. இந்த நிலையில் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாஜ்பாயிக்கு எப்படியெல்லாம் ‘புகழஞ்சலி’ செலுத்தலாம் என சில யோசனைகளை அள்ளித் தருகிறோம்.
‘ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்!’ என்ற தலைப்பில் அவுட்லுக் இதழ் ‘எஸ்ஸார் டேப்’ விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தது. ரிலையன்ஸால் ஆட்சியதிகாரத்தில் எவ்வளவு ஆழமாக ஊடுருவ முடிகிறது என்பதையும் அவர்களால் அரசாங்கத்திலும் நாடாளுமன்ற குழுக்களிடையேயும் எப்படி செல்வாக்கு செலுத்த முடிகிறது என்பதையும் யாரை அமைச்சராக்கலாம் என்பதையும் நீதித்துறையினருக்கு லஞ்சம் தருவதையும், மத்திய பட்ஜெட்டையும்கூட இந்நிறுவனம் தீர்மானிப்பதையும் எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தியது. அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுக்கும் அளவுக்கு ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனர் ஆட்சி செலுத்தியிருக்கிறது. ரிலையன்ஸ் ஸ்பான்ஸரில் ஊர் முழுக்க பல்லிளித்த ‘இந்தியா ஒளிர்கிறது’ விளம்பரங்கள் நினைவிருக்கிறதா? முந்தைய பிரதமர்கள் கார்ப்பரெட்டுகளுக்கு சாதகமாக இருந்தவர்கள்தான். ஆனால், கார்ப்பரேட்டுகளுக்காக குடியரசையே விற்ற பெருமை வாஜ்பாயியை சேரும். ஆக, ‘இந்தியாவை ரிலையன்சுக்கு விற்ற கார்ப்பரேட் பிரதமரே வாழ்க!’ என்று புகழுடன் இரங்கற்பாவை துவங்கலாம்.
அப்பாவிக்குஉதாரணமானஅடல்பிஹாரிநாமம்ஓங்குக!
பிரதமர் அப்பாவி, ஆனால் வாஜ்பாயி ரூ.42 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தினார் என்கிறது 2013-ஆம் ஆண்டு வெளியான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை. காங்கிரசின் 2ஜியை பேசி தேர்தலில் வெற்றி பெற்ற மோடியின் குரு வாஜ்பாயி அரசு செய்தது இது. வாஜ்பாயி அரசில் கொண்டு வரப்பட்ட புதிய டெலிகாம் பாலிசியால் இந்த இழப்பு ஏற்பட்டதாக கூட்டுக்குழு அறிக்கை சொல்கிறது. இதையெல்லாம் தெரியாத அப்பாவி பிரதமராக வாஜ்பாயி இருந்திருக்கிறார். எனவே, அவரை அப்பாவிக்கு உதாரணமான அடல் பிஹாரி நாமம் ஓங்குக! என வாழ்த்தலாம்.
மதசார்பின்மையைஉதறியமாமனிதரேபோற்றி!
ஏப்ரல் 12, 2002 குஜராத் கலவரத்துக்குப் பின், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயி கோவாவில் தன்னுடைய கட்சியினருடன் ஆற்றிய உரை இப்போதும் பிரபலமானது. கம்போடியாவில் இந்து மன்னர்களின் ஆட்சியில் அனைவரும் சுபிட்சமாக இருந்ததாக குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கிய வாஜ்பாயி ’மதச்சார்பின்மை இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நம்மை குற்றம்சாட்டும் இவர்களெல்லாம் யார்? மதச்சார்பின்மை என்பதற்கான பொருள் என்னவென்பதை இவர்கள் அறிவார்களா? முசுலீம்கள், கிறித்தவர்கள் இங்கே வராத போது இந்தியாவில் மதச்சார்பின்மை இருந்தது. கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவார்கள் என யாரும் நினைக்கவில்லை. நம்முடைய மதத்தில், நம்முடைய கலாச்சாரத்தில் அது இல்லை” என்கிறார். பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர், சிறுபான்மை மதத்தினரை அச்சுறுத்தும் வகையில் பேசுகிறார். தனது பதவியின் சார்பற்ற தன்மையை உதறித்தள்ளி ‘நாம்’, ‘நமது’ என பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்துகிறார். எனவே இவருக்கு ‘மதசார்பின்மையை உதறிய மாமனிதரே’ என புகழஞ்சலி செலுத்தலாம்.
அதே கோவா உரையில் வாஜ்பாயி சொல்கிறார், “குஜராத்தில் என்ன நடந்தது? சபர்மதி எக்ஸ்பிரஸில் அப்பாவி மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது நடந்திருக்காவிட்டால், குஜராத்தில் அந்த சோக சம்பவம் (முசுலீம் படுகொலை) நடந்திருக்காது. ஆனால், மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். இதை செய்த குற்றவாளிகள் யார்? அரசு வேகமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது. உளவுத்துறை வேகமாக தகவல்களை திரட்டி வருகிறது. ஆனால், குஜராத்தில் இந்த கொடுமை எப்படி தொடங்கியது என்பதை மறக்கக் கூடாது. அதன்பின் நிகழ்ந்த விளைவுகள் கண்டிக்கத் தக்கவைதான், ஆனால், கொளுத்தியவர்கள் யார்? எப்படி நெருப்பு பரவியது?” என வீரவேசம் பேசுகிறார் ஒரு சங்கியின் பாணியில். இதையேதான் குஜராத் படுகொலைகள் குறித்த டிவி பேட்டியில் மோடியும் சொன்னார். குருவின் பாணியில் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்றார் மோடி. எனவே, நியூட்டனின் மூன்றாம் விதிக்கு உதாரணம் சொன்ன குருவே சரணம் என புகழஞ்சலி செலுத்தலாம்.
கும்பல்வன்முறையைஅனுமதித்தமூத்தமுன்னோடிதேவாபோற்றி!
1998-2004 வரையிலான வாஜ்பாயி ஆட்சியில் விஎச்பி பிரவீன் தொகாடியா வார்த்தைகளில் சொல்வதென்றால் ’இந்துத்துவ சோதனைக் களமான குஜராத்’தில் மத சிறுபான்மையினர் மீதான வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. விஎச்பி, பஜ்ரங் தள், இந்து ஜக்ரான் மஞ்ச் போன்ற வலதுசாரி கும்பல் அமைப்புகள் சிறுபான்மையினரின் வழிபாட்டிடங்கள், பள்ளிகள், திருமணங்கள், பணி இடங்கள், வீடுகளில் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். அந்தக் காலக்கட்டத்தில்தான் பசு பாதுகாப்பை முன்வைத்த வன்முறைகளும் சோதனை செய்யப்பட்டன. 1998-ஜூன், ஜூலை மாதங்களில் குஜராத் டங்க்ஸ் மாவட்டத்தில் வலதுசாரி கும்பல் ஏற்பாடு செய்திருந்த 4000 பேர் பங்கேற்ற பேரணியில் கிறித்துவர்களுக்கு எதிரான முழுக்கங்கள் வெளிப்படையாக எழுப்பப்பட்டன. கிறித்தவ பள்ளி ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது. எனவே, மோடி ஆட்சியில்தான் சிறுபான்மையினர் மீதான கும்பல் தாக்குதல் அறிமுகமானது என முழு ‘பெருமை’யையும் மோடி-அமித் ஷா கூட்டணிக்கு தரமுடியாது. பிரதமராக கும்பல் வன்முறையாளர்களை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதில் முன்னோடியான வாஜ்பாயியை, ‘கும்பல் வன்முறையை அனுமதித்த மூத்த முன்னோடி தேவா போற்றி’ என புகழலாம்.
எல்லாம்முடிந்தபின்விழித்தெழுந்தசூரியனேவாழ்க!
மீண்டும் குஜராத் படுகொலைக்கு வருவோம். குஜராத் படுகொலைகள் நிகழ்ந்தேறிய சமயத்தில் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டின் பிரதமர் மக்கள் அமைதியாக இருக்கும்படி கேட்கிறார். கலவரத்தில் ஈடுபடுகிறவர்களை அரசு எந்திரம் இரும்பு கைக் கொண்டு அடக்கும் என்பதற்கு பதிலாக ‘மதநல்லிணக்கம்’ வேண்டும் என்றார். அவருடைய பேச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவோ, வன்முறையாளர் மீது கோபமோ வெளிப்படவில்லை. குஜராத் கலவரம் முடிந்து மூன்று நாட்கள் கழித்து, அதாவது 2002, மார்ச் 2-ஆம் தேதி இந்தத் தொலைக்காட்சி உரையை ஆற்றினார் வாஜ்பாயி. அதற்குள் பரிவாரங்கள் எல்லா படுபாதகங்களையும் செய்து முடித்திருந்தார்கள். எனவே, எல்லாம் முடிந்த பின் விழித்தெழுந்த சூரியனே வாழ்க! என்ற புகழஞ்சலி முழக்கம் மிகப் பொருத்தமாக இருக்கும்.
நாக்பூர்தலைமைபீடத்தின்வழிநடப்பவரேவாழ்க, வாழ்க!
குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலையை (ஆமாம், சமகால வரலாற்றில் மறக்கக்கூடாத ரத்த ஆறு ஓடிய படுகொலை அல்லவா அது?) ஒட்டி அந்த ஆண்டின் மே மாதத்தில் மாநிலங்களவையில் வாஜ்பாயி பேசினார், “நான் கோவாவுக்குப் போனது, குஜராத் ஆட்சியாளரை (மோடி) மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஆட்சியாளரை மாற்றினார் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதால் அதைச் செய்யவில்லை”. உண்மையில் அந்த நேரத்தில் மோடி பதவியிலிருந்து அகற்றப்படுவதை எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ்ஸும் விஎச்பியும் மட்டும் தான். மோடியை பதவியிலிருந்து அகற்றியிருந்தால் குஜராத்துக்கு நல்லது நடந்திருக்கும் இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், ஒரு நாட்டின் பிரதமர் கிரிமினல் கும்பலுக்கு பயந்து பின்வாங்கியதை வரலாற்றில் இப்படி பதிந்து புகழஞ்சலி செலுத்தலாம், “நாக்பூர் தலைமை பீடத்தின் வழிநடப்பவரே வாழ்க, வாழ்க!”
இந்துதேசியத்தின்முதல்ஊழல்அரசைஅமைத்தகாம்ரேட்!
இந்து தேசியத்தை முழங்கும் பாஜக ஊழல் கரைபடியாத தூய கட்சி என சங்கிகள் பிரசங்கம் செய்வார்கள். வாஜ்பாயி அதிலும் முன்னோடி! தொலைத் தொடர்பு துறையில் ஊழல், ரிலையன்சுக்கு நாட்டை விற்றது, சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், ஹர்ஷத் மேத்தா ஸ்டாக் மார்க்கெட் முறைகேடு, ரூ.80 ஆயிரம் கோடி அளவுக்கு கார்ப்போரேட்களின் வாராக்கடன் காரணமாக தேசிய வங்கிகளை போண்டியாக்கியது (ஆமாம் அதிலும் முன்னோடி), ஓயாமல் கூச்சலிடும் தேசபக்தி காரணமாக இராணுவத்தில் டஜனுக்கும் மேல் ஊழல்… இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டிருப்பது சிபிஎம் கட்சியின் இணையதளம். புகழஞ்சலி கூட்டத்துக்கு செல்லும் முன் காம்ரேட்டுகள் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்று ‘இந்து தேசியத்தின் முதல் ஊழல் அரசை அமைத்த காம்ரேட்!’ என முழுங்கிவிட்டு வரவும்.
புகழஞ்சலி செலுத்துவோருக்கு இன்னும்கூட யோசனைகள் சொல்ல விரும்புவோர் பின்னூட்டத்தில் தாராளமாக அள்ளி வழங்கலாம். தோழர் வாஜ்பாயி நாமம் வாழ்க! புரட்சியாளர் வாஜ்பாயி புகழ் ஓங்குக!
இறந்து போன பா.ஜ.க தலைவர் வாஜ்பாய்-க்கு தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் அஞ்சலிக் கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகத்தின் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு, பா.ம.க, புதிய தமிழகம், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, தேவநாதன் கட்சி, ஏ.சி.சண்முகம் கட்சி, லோக் ஜனசக்தி இவர்களோடு விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவனும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பி.சம்பத்தும், சி.பி.ஐ சார்பில் வீரபாண்டியனும் கலந்து கொள்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க சார்பில் நெல்லையில் நடந்த கலைஞர் அஞ்சலிக் கூட்டத்தில் தமிழிசை கலந்து கொண்டு முழங்கினார். இன்று வாஜ்பாய் கூட்டத்தில் தமிழிசையின் முன்னால் இவர்கள் வாஜ்பாயிக்காக கண்ணீர் வடிக்கப் போகிறார்கள்.
அரசியல் நாகரீகம், இரங்கல் கூட்டம், நீத்தோர் நினைவு, வாஜ்பாய் மட்டும் நல்லவர் என பல சமாதானங்களைக் கூறிக் கொண்டு ‘தோழர்கள்’ இன்று காவிக் கரையோரம் கண்ணீர் வடிக்கப் போகிறார்கள். இந்த வெட்கம்கெட்ட நடத்தையை காறித்துப்புகிறது தமிழ் ஃபேஸ்புக்! -வினவு
Thiru Yo அப்போ இனிமேல் சாவர்க்கர் நினைவு தினம், கோட்சே தியாகநாள், கோல்வால்கர் நினைவுநளெல்லாம் தோழர்கள் கொண்டுவார்களா என்கிறார் ஆர்வமிகுதி கொண்ட ஒருவர்.
அவருக்கு என்ன பதிலைத் தருவது தோழர்களே? (இந்த கேள்வி சிவப்பிற்கும், நீலத்திற்கும்)
————-
Keetru Nandhan இவங்க எல்லாம் வருசா வருசம் பசும்பொன் முத்துராமலிங்கத்துக்கு திதி கொடுக்கிறதை நினைச்சிப் பார்த்தால், இதுக்கு ஷாக் ஆக மாட்டீங்க…
————-
Samsu Deen Heera என்ன சொல்லிப் புகழப்போகிறீர்கள் தோழர்களே..?
நரகலை மிதித்துவிட்டதைப் போல அருவெறுப்பாய் இருக்கிறது. அரசியல் நாகரிகம், மண்ணாங்கட்டி என்று பிழைப்பு வாதிகளைப்போல பசப்பப்போகிறோமா..? அவநம்பிக்கையாய் உணர்கிறேன். இனம் புரியாத பதட்டமும் கடும் எரிச்சலும் கலந்த மனநிலையில் எதாவது மரியாதைக் குறைவாக எழுதிவிடுவேனோ என்ற அஞ்சுகிறேன்.
கம்யூனிஸ்டுகளுக்கென்று ஒரு பாரம்பரியமுண்டு.. பாசிஸ்ட்டுகளைப் புகழ்ந்து பேச கம்யூனிஸ்டுகளின் நா எழுமா..?
#கொடுமை..
————-
Villavan Ramadoss அன்னைக்கு சாயங்காலம் கொஞ்சம் ஃப்ரீ. அதான் வாஜ்பாய மகிமைப்படுத்தி, அக்ரஹாரத்தை ஜனநாயக்கப்படுத்தி அப்படியே முதலாளித்துவ கழுதைய வென்றெடுக்கலாம்னு முடிவு பண்ணி நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டோம்!
————-
Sukirtha Rani is feeling angry.
இனி
பசு எனக்குப் புனிதம்
தாமரை என் மலர்
காவி என் நிறம்
தமிழிசை எனக்குத் தலைவி
ஸ்ரீசுகிர்தானந்தமாயி என் பெயர்.
————-
Nethaji AT
#வாஜ்பாய்க்கு_புகழஞ்சலிப்_பாடப்போகும்_தலைவர்களே!
௦ வந்தேமாதிரப் பாடலை பாடதவர்கள் பாக்கிஸ்தானுக்கு ஓடவேண்டுமெனச் சொன்னவர்தான் வாஜ்பாய்.
௦ பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரனை நடத்திய லிபரான் கமிசனை முடக்கிப்போட்ட மகான்தான் வாஜ்பாய்.
௦ மும்பை கலவரம் குறித்த கிருஷ்ணா கமிசனை ஒன்றுமில்லாமல் அடித்த உத்தமர்தான் வாஜ்பாய்.
௦ கார்கில் போர்வீரர்களின் சவப்பெட்டியில் கூட ஊழலை நிகழத்திகய கண்ணியவான்தான் வாயஜ்பாய்.
௦ குஜராத் கலவரத்தின்போது மோடி! ராம ராஜ்ஜியத்தை காத்துக்கொள்ளென முழங்கிவர்தான் வாய்பாய்.
௦ ஆர்.எஸ்.எஸ் என் ஆன்மா என்று தீரமுடன் சொன்ன மதவாதிதான் வாஜ்பாய்.
௦ சிறப்பு பொருளாதர மண்டலத்தின் மூலம் நூறு சதவீதம் அன்னிமுதலீடுகளை திணித்த கார்பரேட் கைக்கூலிதான் வாஜ்பாய்.
௦ ரியலெஸ்டேட்டில் எம்பது சதவீதம் அன்னிய முதலீட்டை திணித்து தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகுத்தவர்தான் வாஜ்பாய்.
௦ காப்பீட்டுத் துறைகளை தனியாருக்கு கபலிகரம் செய்த புன்னியவான்தான் வாஜ்பாய்.
o ஆயிரக்கணக்கான சதுர ஏக்கர் கனிமவள நிலஙககளை தனியாருக்கு விற்றுபோட்டு இந்திய இயற்கை வளங்களை அழித்தவர்தான் வாஜ்பாய்
————-
இரவிக்குமார் சோசலிசத்துக்குப் பதிலாகத் தேசியவாதத்தை முன் வைத்த, சுட்டுக் கொல்லப்பட்ட இணையற்ற வீரன் முசோலினிக்குப் புகழாஞ்சலி!
————-
Thiru Yo அரசியல் நாகரீகம் கருதி ஆர்எஸ்எஸ்-ல் கூட சேரலாம். 🤷🏿♂️
வாஜ்பாய்க்கு கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் ஆற்ற வேண்டிய ‘இகழாஞ்சலி‘! CPI ML செய்தி!
தேவையற்றுப்போன முகமூடி!
————-
மு.வி.நந்தினி அப்பயும் பாருங்க, இடதுசாரிகளை விமர்சனம் பண்றாங்க, விசிகவை விமர்சனம் பண்றாங்க, ஆனா திமுக அந்த லிஸ்ட்லேயே சேர்த்துக்கல.
————-
வில்லவன்: இந்தியாவின் பெரிய அச்சுறுத்தல் இந்துத்துவா.
அடுத்ததாக வரப்போவது இந்த அரசியல் நாகரீகம்தான் போல..
விசி மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களும் வாஜ்பாயை என்ன சொல்லி புகழப்போகின்றன?
செத்தவர்கள் எல்லோருமே புகழத்தக்கவர்கள் என்றால் அடுத்து இந்து மகாசபா போன்ற இயக்கங்கள் கோட்ஸேவுக்கு புகழஞ்சலி செலுத்த கூப்பிடும். போவீர்களா?
பாஜகவை மகிமைப்படுத்துவதான் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை மோடி டெமோ காட்டிவிட்டார். டெட்பாடிக்கு பாவ புண்ணியம் பார்க்க வேண்டாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்சுக்கு டெட்பாடிகள்தான் மூலதனம்
————-
எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயகச் சாந்து அடிக்குறாங்க. பாசிசம் பத்தி இனிமே வகுப்பு எடுக்காம இருங்க..
————-
பத்திரிகையாளர் கவின்மலர் வாஜ்பாய் நல்ல கவிஞர். அமைதியே உருவானவர். அதனால்தான் குஜராத்தின் புகழ்பெற்ற கவிஞரான வலிகுஜராத்தியின் கல்லறையை மோடி இடித்தபோது வாஜ்பாய் அமைதியாய் இருந்தார். மெல்லிய மனம் படைத்த வாஜ்பாயால் மோடியின் இந்த செயலுக்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்கமுடியும்? அதனால்தான் குஜராத் வன்முறைகளின்போதும் அமைதிகாத்தார். தன் ஆசீர்வாதம் கிடைக்கவில்லை என்றால் மோடி வருத்தப்படுவார் என்பதை உணர்ந்து குஜராத் வன்முறைகளை நிறைவாகச் செய்யும்படி ஆசீர்வதித்த உத்தமர் அவர். பாபர் மசூதியை இடிக்கப் புறப்பட்டு வந்த கரசேவகர்களின் மனம் கோணாமல் அவர்களுக்கு ஆதரவளித்த மஹான் வாஜ்பாயி. எவர் மனதையும் நோகடிக்காத மென்மையான கவிமனம் அவருக்கு…
அரசியல் செயல்பாட்டாளர் நிவேதா: அடுத்ததாக
சாத்வீக தீவிரவாதி வாஜ்பாய் ஜி அவர்களுக்கு தோழர் புகழஞ்சலி செலுத்துவார்…
————-
செயல்பாட்டாளர் முருகன் கண்ணா: வாஜ்பாயை நாமும் கொஞ்சம் புகழுவோமா ?
சுதந்திர போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்ததாக பிரிட்டிஷ் அரசிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மிக சிறந்த போராளி.
சர்வதேச முதலாளிகள் மிக எளிதாக தங்களின் சரக்குகளை நகர்த்தி செல்ல தங்க நாற்கர சாலை திட்டத்தை செயல்படுத்திய ஒரு சிறந்த கார்ப்ரேட் எடுப்பு.
குஜராத் படுகொலை உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அரங்கேற்ற துணையாக இருந்த சிறந்த மனிதநேய பண்பாளர்.
ராமர் கட்டிய பாலத்தை கண்டு பிடித்து இடிக்கவிடாமல் தடுத்து தேச வளர்ச்சிக்கு உதவிடும் சேதுசமுத்திர திட்டத்தை நிறுத்திய மிக சிறந்த பொறியியல் வல்லுனர்.
ராணுவ வீரர்களுக்கு சவபெட்டி வாங்கும் போது எப்படி ஊழல் செய்யனும் என்று கற்றுக் கொடுத்த முன்மாதிரி அரசின் மிக சிறந்த பிரதமர்.
மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ்ன் ஒரு சிறந்த சங்கி
போதுமா இன்னும் புகழனுமா ?
***
அடல் பிகாரி வாஜ்பாயும் இந்திய வலதின் அகோர வளர்ச்சியும்
முன்னாள் பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாய் இன்று காலமானார்.
இந்திய வலதுசாரி அரசியல்வாதிகளில் மிகப்பெரும் உயர்ந்த நிலையும் கௌரவமும் கொண்டவராக வாஜ்பாய் இருந்தார். ஜனசங்க காலத்திலிருந்து, அதன்பின் ஜனதா கட்சி கட்டம் ஊடாக, இறுதியில் BJPயாக அது வளர்ச்சியடையும் வரையில் RSSன் நாடாளுமன்ற அரசியலை அவர் வழிநடத்தினார். காந்தியத்தோடும், சோசலிசத்தோடும் அவர் கொண்டிருந்த சிறுபிள்ளை காதல் BJPயின் வரலாற்றுக் கட்டத்தில் மறக்கப்பட்ட ஒன்றானது. ஆனால், அத்வானியின் தாக்குதல் தன்மைகொண்ட இந்துத்துவா பிரச்சார இயக்கத்துக்குப் பின்பு BJP இந்தியாவின் ஆகப் பெரும்பான்மை கொண்ட கட்சி ஆனபோது வாஜ்பாய் BJPயின் அரச முகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
RSS ன் கருத்தியல் தலைவர் கோவிந்தாச்சார்யா சொன்ன மறக்க முடியாத உருவகத்தை நினைவுபடுத்திக்கொள்வோம். “வாஜ்பாய் தாராளவாத முகமூடி. BJPயின் உண்மையான முகம் அத்வானி“. BJP தனது மதவெறி பாசிச முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டிய காலத்தில் , அக்கட்சியின் கவனத்தை ஈர்த்த தலைவர்களில் ஒருவராக வாஜ்பாய் இருந்தார். அத்வானி, அல்லது மோடி போன்ற தீவிர RSSகாரர்ககளை ஆதரிப்பதில் சங்கடத்துக்கு ஆளான NDA கூட்டணியின் பங்காளிகள் வாஜ்பாயின் மகிழ்வான, பண்பானவர் என்ற தோற்றத்தைக் கொண்டு தங்களின் அம்மனத்தை மறைத்துக்கொள்ள முடிந்தது.
NDAவின் முதல் அரசு காலத்தின்போது, தான் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை நிறைவேற்றுவதற்கு வாஜ்பாய் தனது அரசியல் வார்த்தைகளை மென்மையாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இன்று நாம் NRC பிரச்சனையில் மோடி மற்றும் அமித் ஷா புலம்பெயர்ந்தவர்கள் பற்றி விஷத்தைக் கக்கும் உரைகளைக் கேட்டுவருகிறோம். 1983ல் அசாமில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது “அன்னியர்கள் இங்கே வந்திருக்கின்றனர். ஆனால், அரசு ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் ஒருவேளை பஞ்சாப்பில் நுழைந்திருப்பார்கள் என்றால், கண்டம்- துண்டமாக வெட்டி வீசப்பட்டிருப்பார்கள்“ என்று அனல் கக்கப் பேசியதை நாம் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது. அதனையடுத்து ‘நெல்லி‘யில் 2000 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன்பின் மேற்படி உரையிலிருந்து விலகி நிற்பது நல்லது என்று BJP உணர்ந்தது.
1992ல் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு அயோத்தியிலிருந்து RSSஆல் திட்டமிடப்பட்ட வகையில் வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர் வாஜ்பாய். அதற்கு முன்பு அவர் கரசேவகர்கள் மத்தியில் உரையாற்றினார். “தரையைச் சமப்படுத்த வேண்டும் என்றால், இடித்துத் தள்ளுவதற்கான ‘சாதனங்கள்‘ வேண்டும்“ என்ற பொருள்பட மறைபொருளாகப் அவர் பேசினார். கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர். அது அடுத்த நாள் மசூதியை இடிக்கும் வரை நீண்டது. வாஜ்பாய் பயன்படுத்திய உவமையைக் கரசேவகர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள் என்பதை அது காட்டியது.
2002ல் குஜராத்தில் மதவெறி வன்முறை அரங்கேறியபோது வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்தார். மோடி ‘ராஜதர்மத்‘தில் தவறிவிட்டார் என்று கள்ளத்தனமாகக் கண்டித்தார். அதன்பின்னும் மோடி முதலமைச்சராகத் தொடர்வதற்கு அனுமதித்தார். 2002 மதவெறி வன்முறையின்போதும், அதன் பின்னரும் முஸ்லீம்கள் காக்கப்படுவதை உறுதி செய்வதற்கு வாஜ்பாய் எதனையும் செய்யவில்லை.
நயத்தக்க நாகரீகம்- விவாதம் என்ற நிலைப்பாட்டை வாஜ்பாய் கடைபிடித்து வந்தார். மதமாற்றத்தைத் தடுப்பது என்ற காரணம் சொல்லிக்கொண்டு, RSSன் அமைப்புகள் நடத்திய மதவெறி வன்முறையை கிருத்துவர்கள் எதிர்கொண்டிருந்த சூழலில் “வாருங்கள்.. மத மாற்றம் பற்றி விவாதம் நடத்துவோம்“ என்று கிருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்தார்! 2004ல் குஜராத் படுகொலைகளுக்குப் பின்னர், இந்தியா ஜொலிக்கிறது என்ற கட்டுக்கதை குப்புற வீழ்ந்த பின்னர் வாஜ்பாய் வழிநடத்திய NDA ஒட்டுமொத்த தோல்வியைத் தழுவியது.
இன்றைய BJPயும் NDAவும் அவர்களின் அரசும் மிகவும் மாறுபட்ட காலத்தில் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு முகமூடி எதுவும் தேவையில்லை. மோடியும் யோகியும் இன்றைக்கு BJPயின் நட்சத்திரங்கள். அவர்கள் மதவெறியைச் சற்றும் மறைப்பதில்லை. அடித்துக்கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு மந்திரிகள் மாலையிடுவர். முஸ்லீம் ஒருவரை உயிருடன் எரித்தவரை RSS அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கேமிரா முன்பு கட்டித் தழுவிக்கொள்வார்கள். அவரை ’வீரக் கதாநாயகர்‘ ஆக்கி மகிழ்வார்கள். ‘பசு வதை‘ பற்றியோ, ‘காதல் கொலை‘ பற்றியோ ‘தேசிய விவாதம்‘ எதனையும் நடத்த வேண்டிய தேவை இனியும் BJPக்கு இல்லை. வாஜ்பாய் காலத்தைச் சேர்ந்த BJP தலைவர்கள் அனைவரும், NDAவில் வாஜ்பாயின் பாத்திரத்திற்கு துணையாக நின்ற அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் இன்று ‘ஆலோசனை‘ சொல்கின்ற இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுவிட்டனர்.
மதவெறி பாசிசமாக அல்லாமல், பிற்போக்கு வலதுசாரிக் கட்சியாக BJP இருக்க முடியும் என்ற இந்திய ஆளும் வர்க்கம் மற்றும் வலதுசாரி அறிவாளிகளின் மாயக் கனவின் பிரதிநிதியாக வாஜ்பாய் இருந்தார். வாஜ்பாய் உடல் ரீதியாக மறைவதற்கு வெகுமுன்பே அந்த மாயக்கனவு கரைந்து கலையத் துவங்கியிருந்தது.
இன்றைய நிலையில், இந்திய வலதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமான அடையாளமாக வாஜ்பாய் இருக்கிறார். வாஜ்பாயின் நேற்றைய காலத்துக்கும் மோடியின் இன்றைய காலத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன? மாறுபாடு என்ன? என்பதை வேறுபடுத்தி தற்போதைய பாசிச தாக்குதலின் தீவிரம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான அளவுகோலாக இருக்கிறார்.
– CPI(ML) Liberation கட்சியால் 16 August 2018 அன்று வெளியிடப்பட்டது.
மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த ராஜதந்திரி… போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்த சாணக்யன்… பிரிட்டிஷ் அரசுக்கு பணிந்த மதியூகி. .. குஜராத் கலவரத்துக்காக நீலிக்கண்ணீர் வடித்த நீதிமான்… தங்க நாற்கர சாலையில் சாவடி அமைக்க காவடி தூக்கிய தேசபக்தர்… வங்கி சேமிப்பு வட்டியை குறைத்த வள்ளல்… இன்னும் புகழ வார்த்தையின்றி தொண்டை அடைக்கிறது.
————————–
குறிஞ்சி நாதன் கலைஞர்க்கு அஞ்சலி செய்வது—- சுயமரியாதை
வாஜ்பேய்க்கு செய்வது— அவமரியாதை
பாசிச பாஜக வாஜ்பேக்கு யார் செய்தாலும் சந்தேகம் கொள்
அவர்கள் தமிழின விரோதிகள்தான் என்பதை விட #மக்கள் விரோதிகளே என்பதை புரிவோம்
————-
Sasi Dharan நான் பி.ஜே.பி இல்ல..
ஆர்.எஸ். எஸ் சப்போட்டர் இல்ல..
ஆனா எங்க இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு..
யோசிச்சி சொல்லு..
————-
Thiru Yo
ஒரு ஓநாயின் நிகழ்ச்சித் திட்டத்திற்குள் எல்லா ஆடுகளும் தானாக சென்று அடைந்து கொ(ல்)ள்கின்றன. பெரிய ஆடு, சின்ன ஆடு, மலையாடு, வரையாடு, வெள்ளாடு, செம்மறியாடு… என எந்த வேறுபாடுமில்லை. அனைத்தும் ஒற்றைமயம்.
————-
Thiru Yo “அரசியல் நாகரீகம்” கருதி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்தால் தேர்தல் செலவு மிஞ்சும்.
————-
இரவிக்குமார் மிக மென்மையாக மனிதக்கறி சுவைத்துண்ட இடி அமீனுக்குப் புகழாஞ்சலி!
————-
பரிசல் சிவ. செந்தில்நாதன் ஹிட்லருக்கு வீர வணக்கம் செழுத்துறது அரசியல் நாகரிகம் தோழர்😳
வெங்காயம்
————-
இரவிக்குமார்
அகாலத்தில் தற்கொலையுண்ட சிறந்த ஓவியக் கலைஞரான தோழர் ஹிட்லருக்குப் புகழாஞ்சலி…
மணல் திருடர்கள்
சொல்கிறார்கள்,
கரை மீறிய காவிரி
பயங்கரமாம்!
மலைத் திருடர்கள்
சொல்கிறார்கள்,
நிலம் சரியும்
நீல மலை
ஆபத்தாம்!
வனக் கொலையாளிகள்
‘ஸ்னைப்பர்’ துப்பாக்கியின்
ஆவி பறக்க
கதை அளக்கிறார்கள்
வண்ணத்துப் பூச்சிகள்
வன்முறையைத்
தூண்டுகின்றனவாம்!
தேசக் கொள்ளையர்கள்
தெரிவிக்கிறார்கள்,
மக்கள் அதிகாரம்
தேசவிரோதியாம்!
மக்களை,
தூண்டி விடுகிறார்களாம்.
தூண்டுதல் இன்றி
துலங்கும் காட்சி ஒன்று
உலகில் உண்டா?
இயற்கையின் தூண்டுதல்
இப் புவிக்கோளம்.
புவி அமைப்பின் தூண்டுதல்
நம் உயிர்க் கோலம்.
ஈரம் வந்து
வேரைத் தூண்டாமல்
ஏது செடி?
செடியை வந்து
ஒளிக்கதிர் தூண்டாமல்
ஏது மலர்?
மலரை வந்து
வண்டு தூண்டாமல்
ஏது தேன்?
காணும் ஒவ்வொன்றிலும்
தூண்டுதலின் இயக்கம்
மக்கள் அதிகாரம்
மக்களின் இதயத்தின்
இயக்கம்!
நதிகளும்
நாங்களும் ஒன்று,
காவிரி காய்ந்தால்
கழனிகள் காயும்,
கழனிகள் காய்ந்தால்
கருவறையும் காயும்,
மகசூல் இல்லாத
ஊரில்
மகவு சூலும்
இல்லாது போகும்…
ஆனாலும்…
காய்ந்தது போல்
தோன்றும்…
நடை
ஓய்ந்தது போல்
தோன்றும்,
திடீரென
பாய்ந்து வரும்
உணர்ச்சிப் பெரு நதியை
தடுக்க முடியாமல்,
பொய் நா தெறித்து
புறம் பேசும்
நாணல்கள்
தலை சுற்றும்!
பழைய கோலங்கள்
மாறும்.
புதிய நியாயங்கள்
வாழும்!
கண் துஞ்சாது
பசி அறியாது
கடை மடைக்கு
நீர் பாய்ச்சி
விளை நிலத்தை
பாதுகாக்கும்
விவசாயி போல்,
வன் நெஞ்ச அரசின்
பொய் – களையெல்லாம்
வேரறுத்து,
மண்பசை காத்த
மாண்புமிகு வழக்கறிஞர்களே!
தண்டனையை விட
தாளாத கொடுமை
சட்டப்போராட்டம்!
சாதாரணமல்ல,
உயிர் வலி தாங்கி
பனிக்குடம் உடைத்து
வேதனையின் முடிவில்
புத்துயிர் களிக்கும்
போராட்ட மகிழ்ச்சியின்
தாய்மடி நீங்கள்.
உங்கள்,
தன்னலமில்லா
உழைப்பின் ஈரத்தில்
தாய் நிலம் சிலிர்க்கிறது!
தரு நிழலும் வாழ்த்துகிறது!
நெஞ்சின்
கரு மணலை
நெறித்த போதும்,
நிழலாடும்
உழைக்கும் மக்களோடு
உறவாடும்,
அன்பின் பொழுதையெல்லாம்
பறித்த போதும்,
உண்மையின் உதடுகளை
சிதைத்த போதும்,
ஊற்றுக் கண்களையே
ஒடுக்கிய போதும்,
அக்கரையில் தவிக்கும்
அக்கா குருவியின்
ஒற்றைக் குரலுக்கும்
பொறுப்பான அக்கறையோடு,
இத்தனைக்கும் பிறகும்
கரை வந்த
காவிரி போல்
சிறை மீண்ட தோழர்களே!
உணர்வுகளை
சிறைபடுத்த மறுத்ததால்
உங்கள்
உடல் சிறைபட்டது.
ஆனாலுமென்ன,
மக்களுக்காக வாழும்
உங்கள் உணர்ச்சிகள்
பலர் உடலெங்கும்
வெளிப்பட்டது! செயல்பட்டது!
நீங்கள்,…
மண்ணின் விசை
மக்கள்,
கண்ணின் பசை!
வையமே வாழ்த்துகிறது
நடந்தாய் வாழி காவிரி!
நடந்தாய் வாழி
மக்கள் அதிகாரம்!
சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமங்கள் நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல். இக்கிராமங்களில்ஆயிரம் குடும்பங்கள் விசித்து வருகின்றனர்.
மேலும், சிதம்பரம் தாலுகா ஜெயங்கொண்ட பட்டிணம், மரத்தான் தோப்பு, திட்டுகாட்டூர், குண்டலபாடி ஆகிய கிராமங்களில் 1300 -க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் நீர் டெல்டாவின் கடைமடைக்குப் போய்ச்சேராத நிலையில், கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றுக்கு அருகில் உள்ள மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பலர் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பலரும் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து பரிதவித்து வருகின்றனர்.இந்நிலையில் எடப்பாடி அரசு பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை சந்திக்கவில்லை. எந்தவித நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை. மக்களை நட்டாற்றில் தவிக்கவிட்ட அரசு, இந்த பகுதியில் உள்ள பழையப்பாளையம் ஓ.என்.ஜீ.சி- எண்ணைய் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க கரைகளை பலப்படுத்தி பாதுகாத்து வருகிறது.
இவ்வாறு அரசால் புறக்கனிக்கப்பட்ட கையறு நிலையில் அப்பகுதி கிராம மக்கள் தங்களுக்குள்ளாகவே, ஒருவருக்கொருவர் உதவிகளை செய்துகொண்டு, வெள்ளப் பாதிப்பகளிலிருந்து மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் மேற்கண்ட பகுதிகளில் அங்குள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் மக்கள் தற்காலிகமாக குடியேறுவதற்கான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், சீர்காழி, தொடர்புக்கு: 78450 18440
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 8
கேரளாவின் கனமழை அம்மாநிலத்தையே உருக்குலைக்கும் என்பதை நாம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஏன்..! அம்மக்களே அதனை எதிர்பார்க்கவில்லை. மழை எப்பொழுதும் அவர்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்றாலும், கடந்த 8 -ஆம் தேதி முதல் 15 -ம் தேதி வரை பெய்த மழை அவர்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பெரும் துயரம்.
கடந்த ஒரு நுற்றாண்டாக இது போன்றதொரு கனமழை பெருவெள்ளத்தை கண்டதில்லை என்கிறார்கள் கேரள மக்கள். எதிர்காலத்தில் மழை என்றால் அச்சப்படவும் வாய்ப்புள்ளது என்கிற அளவிற்கு கடும்பாதிப்பு.
பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதும் கடுமையான பாதிப்பு. கேரளாவில் படகுப் போட்டிக்கு பெயர்போன ஆரன்முலா முழுவதும் சேதாரம். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட படகுகளுக்கு அப்பகுதியில் இருந்த வீடுகள் தான் தடுப்புச் சுவராக இருந்தது என்றால் அந்த கோரத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அப்பகுதிக்கு அருகே உள்ள ஒரு சிறிய நகரம் கொழஞ்சேரி. இதையொட்டிய பம்பை ஆறு. அதன் கீழ் பகுதியில் நெடும்பிரையார் என்கிற சிறிய ஊர். அதில் அப்பகுதியில் பிரபலமான ஒரு டென்டல் கிளினிக்.
ஒரு வட மாநில இளைஞர் மட்டும் கிளினிக்கின் முன் வாசலில் இருந்த சேற்றை சிரமப்பட்டு அள்ளிக் கொண்டிருந்தார். உள்ளே இருந்து வாளிகள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தெருவில் ஊற்றிக் கொண்டிருந்தார் மற்றொருவர்.
உள்ளே ஜெனரேட்டர் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சற்று எட்டிப் பார்த்ததும் மூன்று பேர் பி.வி.சி. பைப்பில் தண்ணிரை பீய்ச்சி சுவர், தரை எங்கிலும் அடித்துக் கொண்டிருக்க, ஒருவர் கிளினிங் வைப்பரைக் கொண்டு தரையை அழுக்குப் போக அழுத்தி தேய்த்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கருகே தன்னால் முடிந்த வரை சிறு சிறு உதவிகளை செய்துகொண்டிருந்தார் கிளினிக்கின் உரிமையாளர் மருத்துவர் ஜான் ஜோஜி.
மருத்துவர் ஜான் ஜோஜி
சாதாரண நாட்களில் அந்த கைகள் சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே கத்தியை பிடித்திருக்கும் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து விட்டது. இருப்பினும் தற்போது வேறு வழியில்லாமல் சகதியை அள்ளிக்கொண்டிருந்தது. அவரிடம் கேட்டதும் சொல்ல ஆரம்பித்தார்.
“1988 -இல் ஆரம்பிக்கப்பட்டது இந்த மருத்துவமனை. தொடக்கத்தில் ஒரு சிறிய ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட கட்டிடத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் வாழும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களின் நம்பிக்கையையும் பெற்று… டூ வீலர் பார்கிங், கார் பார்கிங் என்று நோயாளிகளின் வாகனங்களுக்கு இடம் விட்டு இந்த மருத்துவமனையை உருவாக்கினேன்.
படிப்படியாக முன்னேறி இந்த உயர்ந்த கட்டிடத்திற்கு வந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் சில புதிய தொழில்நுட்ப கருவிகளையும் வாங்கி போட்டிருந்தேன். இதுபோன்ற காட்டாற்று வெள்ளம் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய இத்தனை ஆண்டுகள் உழைப்பையும் இந்த மழை வாரி சுருட்டிக் கொண்டு சென்று விட்டது.
மழை வரும் என்று எச்சரித்தவுடன் வீட்டிற்கு முன்னுரிமை கொடுத்து எல்லா பொருட்களையும் எடுத்து பத்திரப்படுத்தினோம். அதே சமயம் இந்த இடத்தில் இவ்வளவு தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதால் பெரிய அளவில் மருத்துவமனை மீது கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவு எல்லா பொருட்களும் நாசமாகி விட்டது. குறைந்தது பத்தடி உயரத்திற்கு இப்பகுதியில் வெள்ள நீர் ஓடியது.
எனக்கு ஏற்பட்ட இழப்பை நான் கணக்கிட விரும்பவில்லை… அப்படியே விரும்பினாலும் என்னால் கணிக்க இயலாது….. இனி நான் திரும்ப பின்னோக்கி செல்ல வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்த பட்ச உபகரணங்களைக் கொண்டு சிறிய அளவில் மருத்துவ மனையை மீண்டும் நடத்த உள்ளேன்.” என்று சொல்லிக் கொண்டே அடுத்த வேலையைப் பார்க்க செல்கிறார்.
1 of 8
சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள்
மழை வெள்ளத்தால் சேதமாகிப் போன மருத்துவ பொருட்கள்
மழை வெள்ளத்தால் சேதமாகிப் போன மருத்துவ சாதனங்கள்
மழை வெள்ளத்தால் சேதமாகிப் போன மருத்துவ சாதனங்கள்
மழை வெள்ளத்தால் சேதமாகிப் போன மருத்துவ சாதனங்கள்
மழை வெள்ளத்தால் சேதமாகிப் போன மருத்துவ சாதனங்கள்
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
*****
அதே பகுதியில் சற்று தொலைவில் இருக்கும் ஆட்டிங்கரா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வாசலில் குப்பை கிடந்குபோல் கொட்டி கிடந்த சேறு படிந்த பொருட்களில் துழாவிக் கொண்டிருந்தனர் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள்.
அனைத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி, கிரைண்டர், கட்டில் , பீரோ, மெத்தை போன்ற பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள். அதில் எதானும் தேறாதா? சேதமடையாமல் இருக்கும் பொருட்களை எடுத்து மீண்டும் உபயோகிக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தனர். அதில் நல்ல பொருட்கள் எவ்வளவு உள்ளது என்று ஒருவர் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்.
உள்ளே பளிங்குக் கல் பதிக்கப்பட்ட தரையை இரண்டு பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். உள்ளேயும் வெளியேயும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆபர்கள் அறிவித்து தொங்க விடப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் நுகர்வோரை சுண்டி இழுக்கும் விதமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தது. அவர்களை எல்லாம் வேலை வாங்கியபடி அதன் உரிமையாளர் ஸ்ரீகுமார் நின்றிருந்தார்.
ஸ்ரீகுமார்
அவரிடம் கேட்டபோது “ என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதனை எல்லாம் எப்படி ஈடுகட்டுவது என்றும் தெரியவில்லை. எல்லா பொருட்களுக்கும் இன்சுரன்ஸ் கட்டி இருந்தாலும் கம்பனியில் இருந்து வந்து பார்த்து விட்டு கணக்கெடுத்து மட்டும் சென்றுள்ளனர்.
அவர்களோ… இந்த எல்லா பொருட்களுக்கும் எவ்வாறு இன்சுரன்ஸ் கிளியர் செய்வது என்று தெரியவில்லை. நாங்களும் இதுபோல் பாதிப்பை எதிர்கொண்டது இல்லை என்று சொல்லி விட்டு சென்றார்கள். அவர்கள் சொல்வதைப் பார்த்தல் பாதி பணம் கூட கிடைக்காது என்றுதான் தோன்றுகிறது.
வெள்ளத்தால் நான் தற்போது இழந்துள்ள பொருட்களின் மதிப்பு மட்டும் ஒரு கோடி இருக்கும். அரசாங்கம் வீடுகளுக்கு மட்டும்தான் இழப்பீடு கொடுப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். தொழில் நிறுவனங்களுக்கு அப்படி எதுவும் சொல்லவில்லை. இது ஒரு பெரும் வருத்தமாக இருக்கிறது” என்கிறார்.
1 of 5
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கிட்டத்தட்ட கொழஞ்சேரியில் உள்ள சிறு கடை முதல் பெரிய கடைகள் வரை இதே பாதிப்புக்கு உள்ளாகித்தான் இருந்தன. இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள் கடைகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. வீட்டில் இருந்த பொருட்களையும் இழந்துள்ளார்கள் என்பது கூடுதல் துயரம்!
வினவு களச்செய்தியாளர்கள்கொழஞ்சேரி, பத்தினம் திட்டா மாவட்டம், கேரளா.