Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 483

எது மகளிர் தினம் ? கடலூரில் திரண்ட பெண்களைக் கேளுங்கள் !

0
  • உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்!
  • பெண்ணடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் முறியடிப்போம்!
  • பெண்ணும் ஆணும் சமம் என்பதை உயர்த்திப் பிடிப்போம்!

களிர் தினக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில், அழகிப் போட்டி, கோலப் போட்டி, விளையாட்டுப் போட்டி, சமையல் போட்டி என பெண்களை அழகுப் பதுமைகளாகவும், அடுப்பறைப் பதுமைகளாகவும் இருத்தி வைத்து  பெண்ணடிமைத்தனத்தை கட்டிக் காக்கும் வகையில், “பெண்குயீன்” போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் இச்சமூகம் பயிற்றுவிக்கிறது.

பெண்களும் கூட்டாக கோயில், குளங்களைச் சுற்றி வருவது, சுற்றுலா செல்வது என்றே பொழுது போக்குகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களோ, அதையே சற்று மாற்றி, ஒரே டிசைனில் உடையணிந்து வேலைக்கு வருவது, சக பெண்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர்.

பொட்டு வைத்து, பூ முடித்து, அடக்க ஒடுக்கமாக முந்தானையை எடுத்து மூடிக்கொண்டு, குடும்பத்திற்கான அத்தனை உழைப்பையும் செலுத்துகின்ற கூலியில்லா அடிமையாக மாற்றி வைத்தது நிலப்பிரபுத்துவம். ஆனால், பெண் விடுதலை, சமத்துவம் என்ற பெயரில், பெண்களை நுகர்வுப் பண்டமாகவும், குறைந்த கூலிக்குச் சுரண்டும் கொத்தடிமைகளாக கூலி அடிமைகளாகவும் மாற்றியுள்ளது முதலாளித்துவம்.

எது பெண் விடுதலை? பெண்கள் மீது திணிக்கப்படும் சமூக அவலங்களை எதிர்த்துப் போராடி உலகை அதிர வைத்து பெண்ணுரிமைகளை வென்றெடுத்தது உழைக்கும் பெண்களின் போர்க்குரல். ஆணுக்குப் பெண் சமம், என்பதை நிலைநாட்டி அரசியல் தளத்திலும் சமூக அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, தியாகத்திலே உருவான அந்த ரத்தம் தோய்ந்த வரலாறில் உதித்தது தான் பெண்கள் தினம். அந்த வரலாறைத் தெரிந்து கொண்டு, இன்றைய பின் தங்கிய நிலைக்கான காரணத்தை உணர்ந்து, அதை மாற்றப் போராட வேண்டிய தருணத்தை புரிந்து கொள்வது தான் பெண்கள் தினம்.

இதை விளக்கும் வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி சங்கத்தின் சார்பில் 2018, மார்ச் – 08 அன்று கடலூர் தேரடித் தெருவில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு, உழைக்கும் பெண்கள் குழு தோழர் ஜோதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளை, கடலூர் மின்வட்டச் செயலாளர் தோழர்.முருகையன் தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ஸ்ரீதர் அவர்களும், புதுச்சேரி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பு ஆய்வாளர், முனைவர் கீதா அவர்களும், சென்னை, பெண்கள் விடுதலை முன்னணி தோழர் ஜெயலட்சுமி அவர்களும் சிறப்புரையாற்றினர்.

தோழர் ஸ்ரீதர்

தோழர் ஸ்ரீதர் தனது உரையில், “புத்தாடை அணிந்தும், குழுவாக ஒரே மாதிரியான உடையணிந்தும் வேலைக்கு வந்து, வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வது, இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது தான் மகளிர் தினமாக பெண்கள் நினைக்கின்றனர். அதையும் தாண்டி, தங்களது வேலையிடத்தில் நிகழும் வேலைப்பளு, உழைப்புச் சுரண்டல், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் அதையும் தாண்டி, சமூக அவலங்களையும் எதிர்த்துப் போராடும் வகையில் பெண்கள் தினத்தைப் பற்றி, பெண் தோழர்கள் பேசுவது தான் சிறந்ததாகும்.” என்று கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்.

முனைவர் தோழர் கீதா மேடையில் நின்று பேசாமல், கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுடன் கலந்துரையாடி கேள்வி கேட்டு, அதிலிருந்து விளக்கங்களைக் கொடுத்துப் பேசினார். அவர் பேசும் போது, “நாம் பெண்கள் தினம் என்று சொல்லிக் கொண்டாடுகிறோம். கொண்டாடும் அளவிற்கு நமக்கு எல்லாம் கிடைத்து விட்டதா? பிரச்சினையின்றி வாழ்கிறோமா?” என்று கேட்டார்.

அதற்கு பெண்கள், இல்லை என்றதோடு, “பிரச்சினைகளுடன் தான் வாழ்கிறோம். அடிமையாகத் தான் வாழ்கிறோம்” என்றனர். அதற்கு தோழர் கீதா, “அப்படியெனில் இந்த அடிமைத்தனத்திற்கு யார் காரணம்?” என்று கேட்க, குடும்பம், அரசு, சமூகம், பெண்கள் என பலவாறு பதில்கள் வந்தன.

முனைவர் தோழர் கீதா

“உண்மையில் நம்மை அடிமையாக வைத்திருப்பதற்கு சாதியத்தையும், சொத்துரிமையையும் பாதுகாப்பதற்கான சமூகம் செய்த ஏற்பாடு தான். இதற்கு ஒத்து வராமல் இருப்பதால் தான் மூன்றாம் பாலினத்தவரை ஒதுக்கியும், விரட்டியும் விடுகின்றது இந்த சமூகம்.

சாதி வழித் திருமண முறைகளையும், தந்தை வழி சொத்து உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பெண்களை குடும்ப உறவுகளில் அமிழ்த்தி வைக்கிறது. இதைக் கட்டிக் காப்பதன் மூலம் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறது. எனவே, அந்த குடும்ப முறையிலிருந்து விடுபட்டு, சமூக வெளிக்கு வரும் போது தான் பெண்களாகிய நம் மீது திணிக்கப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும்.” என்றார். கலந்துரையாடல் போலப் பேசியது பல்வேறு கருத்துக்களை பெண்களுக்கு உணர்த்துவதாக இருந்தது.

அடுத்தாகப் பேசிய தோழர் ஜெயலட்சுமி, ஜன கன மன என்ற தேசியகீதப் பாடலுடன் தொடங்கியவர், “நான் தேசிய கீதம் பாடும் போது யாரும் எழுந்து நிற்கவில்லை. அதனால், நீங்கள் எல்லோரும் ஆன்டி இண்டியன்ஸ்” என்றார். மேலும், “ஆன்டி இந்தியனாக இருந்தால் மட்டுமே நாம் நமது விடுதலையைச் சாதிக்க முடியும். ஏனெனில், இந்தியன் என்று சொல்லி உலகை சுற்றி வரும் மோடி, முதலாளிகளிடம் நாட்டை கூவிக் கூவி விற்று வருகிறார்” என்று சொன்னது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒரு காலத்தில் பெண்கள் அடுப்படி பராமரிப்பையும், குடும்ப பராமரிப்பையும் மட்டுமே பார்த்து வந்தனர். இன்று வேலைக்குச் செல்கின்றனர். அதனால் பெண்களுக்கு சமத்துவம் வந்து விட்டது என்கின்றனர். உண்மையில் அடுப்படி, குடும்ப வேலையுடன் வேலைக்குச் செல்வது கூடுதல் சுமையாக மாறி விட்டது. அதாவது உழைப்புச் சுரண்டல் என்பது, குடும்பம், முதலாளித்துவம் என்ற இரு முனைகளாக மாறி குத்துகிறது. மற்றொரு புறம் அதிக வேலை, குறைந்த கூலி என்பது முதலாளித்துவத்திற்கு கூடுதல் ஆதாயத்தை தருகிறது . குடும்பத்திற்கு வரும் கூடுதல் வருமானம் மீண்டும் முதலாளிகள் கையில் தான் சென்று சேருகிறது. இதன் மூலம் இன்னும் கூடுதல் ஆதாயம் தான் முதலாளிக்கு.

தோழர் ஜெயலட்சுமி

இன்று நாம் காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் இரவில் கொசுவர்த்தி வைத்து தூங்கச் செல்வது வரை நமது ஒவ்வொரு அசைவிலும் கார்ப்பரேட் முதலாளிகள் நம்மை கண்ணுக்குத் தெரியாத வகையில் இயக்குகிறார்கள். அந்தப் பொருட்களுக்கு மயங்கி நாம் குடும்பத்துடன் உழைத்து கார்ப்பரேட்டுக்களை மீண்டும் மீண்டும் கொழுக்க வைக்கிறோம். எனவே, அடுப்படி வேலைகள், குடும்ப வேலைகளைத் தாண்டி, நம்மை அணுதினமும் சுரண்டும் கார்ப்பரேட் மயத்தை ஒழிக்க பொது வெளிக்கு வந்து சமூக விடுதலைக்காகப் போராடுவதில் தான் பெண்களது உண்மையான விடுதலை அமைந்துள்ளது. பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சமூக விடுதலை சாத்தியமில்லை என்ற ஆசான் லெனின் அவர்களது வழியில் பெண்களின் பங்களிப்போடு சமூக விடுதலையைச் சாதிப்போம்!” என்றார்.

நிகழ்ச்சியில் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது. பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டலையும், அதற்குக் காரணமான இன்றைய அரசியல் சூழல்களையும் விளக்கும் வகையில் பாடப்பட்ட பாடல்கள் பெண்கள் மத்தியிலும், திரண்டிருந்த மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்களின் உரைகள் பெண்களைச் சிந்திக்கவும், விவாதிக்கவும் வைத்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி,
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கடலூர் மின் வட்டம்.

 

சோடா பாட்டில் பார்ப்பனர்கள் – காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு ?

16

சோடா பாட்டில் பார்ப்பனப் பொறுக்கிகள் !

ண்டாள் விவகாரத்தில் எச். ராசாவின் பேச்சு, புதிய தலைமுறை நெறியாளர் செந்திலுக்கு அளித்த பேட்டியில் எஸ்.வி. சேகரின் பேச்சு, ஜீயரின் சோடாபாட்டில் எச்சரிக்கை – ஆகியவற்றுக்குப் பின்னர் இவர்களைப் பார்ப்பனப் பொறுக்கிகள் என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்குமெனத் தோன்றுகிறது.

இருப்பினும், ஊடக உலகில் பொறுக்கி என்ற சொல், லுங்கியை ஏற்றிக் கட்டிய சூத்திர தோற்றத்துடனும், சூத்திர அரசியல்வாதிகளின் நடத்தையுடனும் மட்டுமே இணைத்துக் காட்டப்பட்டிருப்பதால், இது பொருத்தமில்லையென்றும் சிலருக்குத் தோன்றக்கூடும்.

பார்ப்பனர்கள் என்றால் மென்மை, நாகரிகம் என்பதாகவும், தன் இயல்பில் நாகரிகமற்றவர்களான பிற சாதியினர் நாகரிகமடைவதென்பதே பார்ப்பனப் பண்பாட்டுக்குப் பழக்கப்படுவதுதான் என்பதாகவும்தான் பொதுப்புத்தி இருக்கிறது. ஆம். பெரியார் பிறந்த மண்ணாகிலும் தமிழகத்தின் பொதுப்புத்தி இப்படித்தான் இருக்கிறது.

”நாங்களும் சோடாபாட்டில் வீசுவோம்” என்று ஜீயர் சொன்னதை விமரிசித்துப் பேசியவர்களும் கூட, ”ஜீயர் இப்படிப் பேசலாமா?” என்றார்கள். பேசியவர்களுக்கு ஜீயரைப் பற்றிய மயக்கம் இல்லையென்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் அப்படி பேசக் காரணம் மக்களிடம் பார்ப்பனர்கள் குறித்து நிலவுகின்ற மேற்சொன்ன பொதுப்புத்தி. இந்த மடமையை அகற்றுவதுதான் நம் வேலையேயன்றி, இந்த மடமையை அனுசரித்துப் பேசுவது அல்ல.

சோடா பாட்டில் பார்ப்பனப் பொறுக்கிகள் !

நயினார் நாகேந்திரன், வைரமுத்துவைக் கொலை செய்தாலென்ன என்று பேசியபோது மேடையில் அமர்ந்திருந்த ஜீயரும் பிறரும் புன்முறுவலுடன் அதை ரசித்தார்கள்.  ”நாங்கள்லாம் பயந்து ஒடுங்கிடுவோம்னு நெனச்சீங்களா?” என்பது எஸ்.வி.சேகர் பேசிய வசனம் மட்டுமல்ல, மேடைக்கு மேடை எச்.ராசா பேசி வருவதும், வைரமுத்துவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பார்ப்பனர்கள் பேசுவதும் இதைத்தான். இறுதியாக பார்ப்பன குருபீடமான துக்ளக் பத்திரிகையின் தலையங்கத்தில், ”மாறி வரும் தமிழகத்தில் பூசல்களை உருவாக்கக்கூடிய விமரிசனங்களைத் திராவிட அரசியல்வாதிகளும் சிந்தனையாளர்களும் கைவிடுவது நல்லது. இல்லையென்றால், அமைதியாக நடக்கும் போராட்டங்கள் வன்முறையாகவும் மாறலாம்” என்று மிரட்டியிருக்கிறார் குருமூர்த்தி.

சட்கோப ராமானுஜ ஜீயர் தலைமையில் வைரமுத்துவைக் கண்டித்து கோவை மாவட்டம், காரமடையில் ஹிந்து பார்ப்பனர்கள் நடத்திய ஊர்வலம்

இவ்வாறு ஜீயர் முதல் குருமூர்த்தி வரை எல்லோருமே தாங்கள் சோடா பாட்டில்கள்தான் என்று நிரூபித்துக் கொள்வது குறித்து நாம் ஒரு வகையில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். பார்ப்பன பொறுக்கித்தனம், தனது அலங்காரங்களையும் சாத்வீகத் தோற்றத்தையும் களைந்து விட்டு, தனது கருத்துக்குப் பொருத்தமான மொழியில் வெளி வந்துகொண்டிருக்கிறது.

எச்.ராசாவின் மீசையை மழித்து மொட்டையடித்து மேடைக்கு மேல் ஒரு மேடை போட்டு உட்கார வைத்தால், அவர்தான் ஜெகத்குரு. எஸ்.வி. சேகருக்கு காவி அணிவித்து, கையில் குச்சியைக் கொடுத்தால் அவர்தான் ஜீயர். இருவருக்குமிடையிலான ஒற்றுமை தொந்தியில் மட்டும் இல்லை, மண்டைக்குள் இருக்கும் சரக்கும் ஒன்றுதான். ”நான் போலீசு இல்லடா, பொறுக்கி” என்ற சாமி பட வசனத்தைத்தான் தனது பாத்திரத்துக்கு ஏற்ப மாற்றிப் பேசியிருக்கிறார் சோடாபாட்டில் ஜீயர்.

* * *

மறைந்த பத்திரிகையாளர் ஞாநி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் யூ டியூபில் ஆண்டாள் விவகாரம் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்துகள் இப்பிரச்சனையுடன் தொடர்புள்ளவை.

ஆண்டாள் பிரச்சனையை அணுக வேண்டிய முறை பற்றி விளக்கிவிட்டு, வைரமுத்து மன்னிப்பு கேட்டிருக்கக்கூடாது என்றும் ஞாநி சரியாகவே சொல்லியிருந்தார். அந்த உரையின் கடைசிப் பகுதியில் அவர் கூறியிருந்த கருத்துகள் நம் கவனத்துக்குரியவை.

காலஞ்சென்ற பத்திரிக்கையாளர் ஞாநி

”ரொம்ப அதிர்ச்சியாக இருக்கக்கூடிய விசயம், ரொம்ப சாதுவானவர்கள், அமைதியானவர்கள், எந்த வம்புதும்புக்கும் போகாதவர்கள் என்று நாம் கருதக்கூடிய கதாகாலட்சேபம் செய்யும் பௌராணிகர்கள் திருவல்லிக்கேணி, சீரங்கம் கோயில் வாசலில் போராட்டம் நடத்துகிறார்கள். எங்களைப் பழிக்கிறவன் தலையை வெட்ட நாங்கள் தயங்கமாட்டோம் என்கிறார்கள். வேளுக்குடி கிருஷ்ணன் மாதிரி, பார்த்தால் சாதுவாக இருக்கக்கூடியவர்களெல்லாம் வன்முறையாகப் பேசுகிறார்கள். இதை அவர்களிடம் நாம் எதிர்பார்க்கவே இல்லை” என்று சொல்லி, சங்கப் பரிவாரம் தமிழ்ச் சமூகத்தை மதரீதியாகப் பிளவுபடுத்த முயற்சிப்பதைக் குறிப்பிட்டு எச்சரிக்கிறார் ஞாநி.

”பார்த்தால் சாதுவாக இருக்கக்கூடியவர்களெல்லாம் வன்முறையாகப் பேசுகிறார்கள். இதை நாம் எதிர்பார்க்கவே இல்லை” என்று ஞாநி சொல்லியிருக்கிறாரே, அந்த வரிதான் நம் கவனத்துக்குரியது. இவ்விசயம் தொடர்பாகப் பல ஆண்டுகளுக்கு முன் அவருடன் நடந்த ஒரு சிறு விவாதம் நினைவுக்கு வருகிறது.

புதிய கலாச்சாரம் இதழில், ”ஹே ராம்” திரைப்படத்துக்கு எழுதப்பட்ட விமரிசனத்தில் ஞாநிக்கு உடன்பாடு இல்லை. ”பார்ப்பன நடுத்தர வர்க்கத்தை நீங்கள் அளவுக்கு அதிகமாக வில்லனாகப் பார்க்கிறீர்கள். அவர்கள் பெரும்பாலும் பயந்தாங்கொள்ளிகள். ஆபத்தற்றவர்கள்” என்றவாறு அவரது கருத்து அமைந்திருந்தது.

”மேற்பரப்பில் தெரியும் அவர்களது மென்மையைக் கண்டு ஏமாறக்கூடாது. அதன் தன்மைதான் நமது கவனத்துக்குரியது. பொருத்தமான தருணத்தில் அது விகாரமாக வெளிப்படும்”  என்பது அன்று என் பதிலாக இருந்தது. என் கருத்தை அவர் ஏற்கவில்லை.

”இதை அவர்களிடம் நாம் எதிர்பார்க்கவே இல்லை” என்று தற்போது பார்ப்பன நடுத்தர வர்க்கத்தினர் குறித்து ஞாநி வெளிப்படுத்தியிருக்கும் அதிர்ச்சி, அன்று ”ஹே ராம்” திரைப்பட விமரிசனத்தையொட்டி அவர் தெரிவித்த கருத்தின் தொடர்ச்சியாகவே அமைந்திருப்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.

* * *

 ஆண்டாள் விவகாரத்தில், இந்துக் கடவுளையும் மத நம்பிக்கையையும் காயப்படுத்தி விட்டதாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு இவர்கள் எவ்வளவுதான் முயன்ற போதிலும், இந்தப் பிரச்சினைக்காகப் போராடத் திரண்ட ஹிந்துக்களில் ஆகப்பெரும்பான்மையோர் பார்ப்பனர்களாகவே இருந்தனர் என்பது தொலைக்காட்சிகளைக் கண்ட அனைவரும் புரிந்து கொண்டிருக்கக்கூடிய உண்மை.

தமிழாற்றுப்படை உரைவீச்சு நடத்திவரும் கவிஞர் வைரமுத்து

பார்ப்பனப் பெண் என்று நாங்கள் நம்புகின்ற ஆண்டாளைத் தேவதாசி என்று எப்படிச் சொல்லலாம்? என்பதுதான் பார்ப்பன சமூகத்தின் மத உணர்வை புண்படுத்திய மையப்பிரச்சினை. இசை வேளாளர் குலத்தில் பிறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியைக் கர்நாடக இசையின் நாயகியாக்குவதற்கு முன், அவருக்கு மடிசார் அணிவித்துப் பாப்பாத்தியாக ஞானஸ்நானம் செய்து வைத்தவர்கள், கேரளத்தில் யதுகிருஷ்ணா என்ற தலித் இளைஞரை அர்ச்சகராக்குவதற்கு முன் அவரைப் பார்ப்பானாக மாற்ற பத்தாண்டுகள் பயிற்சி கொடுத்தவர்கள், ஆண்டாள் என்ற பார்ப்பனப் பெண்ணைத் தேவதாசியாக மாற்றுவதை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்? அருவெறுப்பான இந்த பார்ப்பன சாதி உணர்வுதான் மத உணர்வாக வேடம் கட்டிக் கொண்டது.

மேற்கூறிய உண்மைகள் அறிவுத்துறை சார்ந்தோர் அறியாததல்ல. இருப்பினும் ஒரு சாதி என்ற முறையில் பார்ப்பன சமூகத்தினர் குறித்துப் பலருக்கும் ஒரு தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது.

லிபரல் பார்ப்பனர்கள் என்றொரு வகையினர் இருப்பதாக ஒரு புரிதல் அறிவுத்துறையினர் மீது மட்டுமின்றி, மொத்த சமூகத்தின் பொதுப்புத்தியின் மீதும் கவிந்திருக்கிறது. சாதுவானர்கள் என்ற ஞாநியின் மதிப்பீடும் ஏறத்தாழ இதுதான். லிபரல் என்பதற்கு பொது வரையறை எதுவும் கிடையாது. மட்டன் சாப்பிடுவது, சரக்கடிப்பது போன்றவற்றில் தொடங்கி சாதி பாராட்டாமல் வீட்டுக்கு சாப்பிட அழைப்பது, சாப்பிடப்போவது என்பது வரை லிபரலுக்கான இலக்கணம் மதிப்பிடுவோரின் அளவுகோலுக்கு ஏற்ப வேறுபடக்கூடும்.

சாதி என்பது ஜனநாயக விரோத நிறுவனம். சாதி உணர்வு என்பது ஜனநாயக விரோத உணர்வு. லிபரல் எனப்படுபவர் சாதியை இழிவாகவும் அநீதியாகவும் கருதுபவரா, தன்னளவில் சாதி உணர்வை ஆபாசம் என்று கருதி வெறுப்பவரா, நடைமுறையில் சாதியப் பண்பாடுகளை வெறுத்து ஒதுக்கியவரா, சாதி மறுப்பைக் குடும்பத்திலும் அமல்படுத்துபவரா என்ற கேள்விகளையெல்லாம் யாரும் கேட்பதில்லை.

லிபரல் என்றழைக்கப்படும் ஜனநாயக உணர்வு சாதியை மறுத்துத்தான் வரமுடியுமேயன்றி, சாதியின் முன்னொட்டாக வர முடியாது. தமிழ்ச்சாதி என்று கூறுவதும், சாதி சமத்துவம் என்ற ஆர்.எஸ்.எஸ். இன் கருத்தும் அடிப்படையில் இந்த வகையைச் சேர்ந்தவைதான். இவையனைத்தும் படிநிலை சாதி ஆதிக்கத்தைச் சாதி வித்தியாசம் என்று திரித்துக் காட்டுபவை.

காலச்சுவடு இதழின் ஆசிரியர் கண்ணன்

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராதல் என்ற பிரச்சினையில் பார்ப்பனரல்லாத பல சாதியினர் வெவ்வேறு கோயில்களில் பூசாரிகளாக இருப்பதைக் காட்டி, சாதி என்பது ஒரு பன்மைத்துவ (Plural)  பண்பாடேயன்றி, பார்ப்பனிய ஒடுக்குமுறை அல்ல என்று நிறுவுவதற்கு சங்கப் பரிவாரத்தினர் முயற்சிப்பதை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.

இனி லிபரல் பார்ப்பனர் விவகாரத்துக்கு வருவோம்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தாழ்த்தப்பட்டவர்கள் பஞ்சாயத்துத் தலைவராக முடியாமல் தடுத்தவர்களைத் தேவர் சாதி வெறியர்கள் என்று குறிப்பிட்டு நாம் எழுதியபோது, யாரோ சிலர் அந்த ஊரில் சாதிவெறியுடன் நடந்துகொள்கிறார்கள் என்பதற்காக தேவர் சாதியினர் அனைவரையும் வெறியர்கள் என்று எப்படி நீங்கள் கூறலாம் என்று அச்சாதியினர் விமரிசித்தார்கள். இளவரசன் கொலையின் போது வன்னிய சாதிவெறி என்று எழுதியபோதும் இதே விதமான கேள்வி அந்த சாதிகளைச் சேர்ந்தோரால் எழுப்பப்பட்டது.

இதே சாதியில் பிறந்திருந்தாலும், சாதி ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் யாருக்கும் தான் பிறந்த சாதியை விமரிசிக்கிறார்களே என்று சிந்தனையே எழவில்லை. தான் பிறந்த சாதியை யாரேனும் விமரிசிக்கும்போது அதன் காரணமாகக் கோபப்படுகிறவர் சாதி உணர்வைத் துறந்தவராக இருக்க முடியாது. தங்களை ஜனநாயக உணர்வு கொண்டவர்களாகக் கருதிக்கொள்பவர்கள் பலரும், பொதுமேடையேறி தமது சாதிகளைச் சேர்ந்த சாதிவெறியர்களைக் கண்டிப்பதில்லை. மாறாக, சாதிவெறி தலைவிரித்தாடும் தருணங்களில் சாமர்த்தியமாக மவுனம் சாதிக்கிறார்கள். இது ஆண்டாள் விவகாரத்தில் மவுனம் சாதிக்கின்ற அல்லது மழுப்பி பேசுகின்ற பார்ப்பன அறிவுத்துறையினருக்கும் பொருந்தும்.

இளவரசனை வெட்டிக் கொன்றதைப் போலவோ, கௌசல்யாவின் கணவன் சங்கரை வெட்டிக் கொன்றதைப் போலவோ தங்கள் ஆட்கள் நடந்து கொள்வதில்லையென்பதால், தங்கள் சாதிக்கு இயல்பிலேயே ஒரு லிபரல் குணாதிசயம் இருப்பதாக பல நடுத்தர வர்க்கப் பார்ப்பனர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். பார்ப்பனரல்லாத சாதிகளைச் சேர்ந்த பல நடுத்தர வர்க்கத்தினரும்கூட அவர்களைப் பற்றி இத்தகைய அபிப்ராயத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். சாதுவானவர்கள் என்ற ஞாநியின் கருத்துக்கு இப்படி ஒரு பொருளும் இருக்கிறது.

சாது, மென்மை,- நாகரிகம் என்று எந்த சொல்லால் குறிப்பிடுவதாக இருந்தாலும், அந்தப் பண்பை பல்வேறு சாதியினரிடமும் உருவாக்குவதில் நவீனக் கல்வியும் நகரமயமாக்கமும் பெரும்பங்காற்றியிருக்கிறது. எல்லோருக்கும் முன்னதாக நகரமயமானவர்களும் கல்வி மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பைப் பெற்றவர்களும் பார்ப்பனர்கள். இது சொல்லிக்கொள்ளப்படும் அவர்களது மென்மைக்கு முக்கியக் காரணம். இதற்கும் மேற்பட்டு தாங்கள் தனிச்சிறப்பான முறையில் பண்பானவர்கள் என்று தமிழகத்துப் பார்ப்பனர்கள் கருதும் பட்சத்தில், அவர்களைப் பண்படுத்திய பெருமை பெரியாரையே சாரும்.

சாதியை மறுக்கின்ற நவீனக் கல்வி, பகுத்தறிவு அல்லது பொதுவுடைமைக் கருத்துகள்தான் ஒருவரிடம் ஜனநாயகப் பண்பைக் கொண்டுவருகிறதேயன்றி, சாதி – மத நிறுவனங்களுக்குள்ளிருந்து ஜனநாயகப் பண்புகள் ஒருபோதும் வருவதில்லை. ”வீழ்ந்தேன் என்று நினைத்தாயோ” என்று எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும், ஜீயரும், குருமூர்த்தியும் இன்று பேசிவரும் பேச்சுகளே இதற்குச் சான்று.

நாங்கள் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் என்று தி.மு.க. பேச்சாளர்கள் தங்கள் கட்சியைப் பற்றி மேடையில் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். பெரியாரைத் தாக்குப் பிடித்து நின்று, திராவிட இயக்கத்தில் ஊடுருவி – உடைத்து, – ஊழலில் ஊறவைத்து, அதனைக் கைப்பற்றியிருக்கும் தமிழகத்துப் பார்ப்பனர்கள்தான் உண்மையில் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர்கள்.

ஜெயலலிதாவின் ஊழல் மறைக்கவே முடியாதவாறு நாறும்போதும் சரி, பார்ப்பனப் பொறுக்கித்தனம் அல்லது சங்க பரிவாரத்தின் பாசிசத் தாக்குதல்கள் நியாயப்படுத்தவே முடியாத அளவுக்குத் தலைவிரித்தாடும்போதும் சரி, சம்பவாமி யுகே யுகே என்று பார்ப்பன மேன்மையை காப்பாற்றுவதற்கு அந்தந்த சூழலுக்குப் பொருத்தமான அவதார புருஷர்கள் களமிறங்குகிறார்கள்.

பார்ப்பனமயமாக்கப்பட்ட சூத்திரசாதியை சேர்ந்த காலஞ்சென்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி(இடது) மற்றும் கேரளாவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த யது கிருஷ்ணா (கோப்புப் படங்கள்)

இதன் பச்சையான வடிவம் தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க. வினருடன் பங்கேற்கின்ற சமூக ஆர்வலர்கள் அல்லது வல்லுநர்கள். நைச்சியமான வடிவம் அறிவுத்துறையினர். ஆண்டாள் விவகாரம் குறித்த காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கு ஒரு சான்று. வளைத்து நெளித்து அது கூறுகின்ற கருத்து இதுதான்.

வைரமுத்து எனப்படுபவர் விளம்பரம் தேடும் ஒரு அரைவேக்காடு. பரபரப்பைக் கிளப்பும் நோக்கத்துக்காக, தெரிந்தேதான் அவர் கட்டுரைக்கு தொடர்பேயில்லாமல் இந்த வாக்கியத்தை நுழைத்திருக்கிறார். பிறரால் கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் தேவதாசிகளுக்கும் தன்னைத்தானே கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஆண்டாளுக்குமிடையிலான வேறுபாடு தெரியாதவர். ஆண்டாள் தேவதாசியே ஆனாலும், கவிஞராகத்தான் அவரைக் காணவேண்டும். அவரால் ஆண்டாளின் கவித்துவப் பரப்பை அணுக முடியவில்லை. வைரமுத்துவுக்கு எதிராக இத்தனை நியாயங்கள் இருந்த போதிலும், பெரும்பான்மைத் தாலிபான்களிடமிருந்து வைரமுத்துவின் கருத்துச் சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் – இந்த தலையங்கத்தின் தலைப்பு, ”அசட்டுப் பாவனைகளுக்கு மதிப்புக்கூட்டும் தாலிபானியம்.”

”வைரமுத்து பிரச்சினை முக்கியமில்லை. இந்துக்களை இழிவுபடுத்தியோ, ஒரு சமூகத்தினரை மட்டும் விமரிசித்தோ யாரும் பேசக்கூடாது என்பதுதான் எங்கள் போராட்டத்தின் நோக்கம்” என்று திருவல்லிக்கேணியில் கூடிய பூணூல் அணிந்த ஹிந்துக்கள் வெளிப்படையாக அறிவித்தார்கள். இருந்த போதிலும், காலச்சுவடுவுக்குள் இருக்கும் லிபரல் மனச்சாட்சி அவர்களைப் பார்ப்பனர்கள் என்றோ, பார்ப்பனியம் என்றோ அழைப்பதை அனுமதிக்கவில்லை. எனவேதான், அக்கிரகாரத்தை அடையாளப்படுத்த ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபான் என்ற சொல்லை இறக்குமதி செய்கிறது.

அப்போதும் தாக்குதல் தாலிபான் மீது இல்லை. தலையை எடுப்பேன், நாக்கை அறுப்பேன் என்றெல்லாம் பேசி வைரமுத்துவுக்கு சாகித்ய அகாதமி அவார்டு கொடுத்ததைப் போல மதிப்பைக் கூட்டிவிட்டீர்களே என்பதுதான் அவர்களது அங்கலாய்ப்பு.

”கழுதையாகவே இருந்தாலும் அது எங்கள் கடவுள். எங்கள் மத நம்பிக்கை. அதைப் பற்றி எவனும் பேசக்கூடாது” என்கிறது பார்ப்பனக் கும்பல். நாச்சியார் திருமொழியின் கற்பூர வாசனை தெரியாத ஒரு கழுதையை அடித்து, அதைப் பிரபலமாக்கி விட்டீர்களே என்று வருந்துகிறது காலச்சுவடு. ஆமையைத் திருப்பிப் போட்டல்லவா அடிக்கவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்ற, வன்முறையில் ஈடுபடாத சாதுவின் கூற்றாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

– மருதையன்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே ! திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0

லஞ்சம் – வழிப்பறி – ரவுடித்தனம்! போலீசு ராஜ்ஜியத்திற்கெதிராக அணிதிரள்வோம்! திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

போலீசு ராஜ்ஜியத்திற்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் 07.03.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. முதல் நிகழ்வாக பறையிசைக்கப்பட்டு, காவல்துறையை அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், தோழர்கள் என நூற்றைம்பதற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தலைமை உரை பேசிய மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், “போலீசு எங்கு பார்த்தாலும் வாகன சோதனை என்ற பெயரில் லஞ்சம், ஊழல், வழிப்பறியில் ஈடுபடுகிறது. இதை தட்டிக்கேட்ட உய்யகொண்டான் பகுதி இளைஞர்களை வெறித்தனமாக தாக்கியுள்ளனர். தேவேந்திரன் என்ற இளைஞர் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமான SI கோபால் உள்ளிட்ட உறையூர் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன்

தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ம.ப சின்னதுரை, “தமிழகம் முழுவதும் காவல்துறை செய்யும் வசூல் எடப்பாடிக்கு செல்கிறது. டாஸ்மாக் கடை வேணாம் என்று இளைஞர்கள் போராடினால் டாஸ்மாக் கடைக்கு காவல் நிற்கிறது ‘காவல்துறை’. சாலையில் நின்று அடிக்கிறதுக்கு சட்டம் இருக்கா? உய்யகொண்டான் பகுதி சுடுகாட்டுக்கு ரோட்டுல போக முடியுமா? ரோடு அவ்வளவு சேதம் அடைந்துள்ளது. இது போலீசுக்கு தெரியாதா? இன்று காவல்துறை மாநாடு நடக்கிறது. மாநாட்டில் வாகன சோதனை என்ற பெயரில் நடக்கும் வழிப்பறியை தடுத்து நிறுத்த ஆவண செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

பாதிக்கப்பட்ட பகுதி மக்கள்

கீதா, “மக்கள் நாங்க எல்லாம் கேனையா? கஷ்டபடுறோம்யா நாங்க. 100 ரூபா, 50 ரூபாக்கு கஷ்டப்படுறோம். வயிறு எரிஞ்சு சொல்றோம் நாங்க. எங்க வீட்ல எல்லாம் குடிக்கிறாங்கன்னு சொல்றீங்க. குடிய உருவாக்கிறதே நீங்க தான்யா. ஒயின்ஷாப்ல சின்னப் பசங்க்ளா போய் குடிக்கிறாங்க, ஆஸ்பத்திரிக்கு போறாங்க. ஆஸ்பத்திரிகாரன் உங்களுக்கு லஞ்சம் கொடுத்தானா? கேட்கிறோம். ஹெல்மெட்டுங்கிற பேர்ல காசு வாங்குறீங்க. எல்லாத்தையும் வசூலிச்சு சாப்பிடுறீங்க.

அப்ப இல்லாத நாங்க என்ன செய்யுறது? ரேசன் கடைய குளோஸ் பன்றங்கீங்க. சீமெண்னைய குளோஸ் பன்றங்கீங்க. எல்லாத்தையும் முடிச்சுருங்க. இனிமே, எங்கள ஒரேயடியா கொன்னுருங்க. கொன்னுட்டிங்கனா பிரச்சனை இல்லாம இருப்பீங்க. இருக்கப்பட்ட கவர்மெண்ட் போலீசும், இருக்கப்பட்ட கலெக்டரும் நீங்க மட்டும் இருப்பீங்கயா… போலீச முத ஒழிக்கனும். முத எங்க ஏரியாக்குள்ள வராதீங்கயா… பிச்சக்கார பயலுகளா, எங்க ஏரியாக்குள்ள வராதீங்க.

கஷ்டப்படுற எங்கட்ட வாங்கித் திங்காதிங்க. பாதிக்கப்பட்டது எங்க அண்ணன் தான்யா. பாருங்க அவங்க குடும்பத்த இரண்டு மாசமா வீட்டுல கிடக்கிறாங்க கால உடச்சிட்டு. எங்க அப்பா கிடையாதுயா. அப்பா இல்லாத அவனுக்கு எப்படியா நல்லது கெட்டது செய்வோம். ஆயா வேலைக்கு போக மாட்டா? அவளுக்கு யாரு நல்லது கெட்டது செய்வா? அவன் வேலைக்கு போனாதான் சோறு. இனி யாரு சோறு போடுவா? சோறு திங்க உன் கால்ல வந்து விழனுமா? எங்க வயித்தெறிச்சல் உங்கள சும்மா விடாது. எங்களுக்கு மட்டும் சொல்லல. எங்கள மாதிரி வெளிய வந்து பேச முடியாதவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க…” என்று முடித்துக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண் வனிதா

இதே போல அப்பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவரும் போலீசுக்கு எதிரான தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட எஸ். ஐ. இப்ராஹிம், தனிப்பட்ட முறையில் திட்டக்கூடாது என்றார். தோழர் வாஞ்சிநாதன், போலீஸ் ஸ்டேசனில் நீங்கள் நடந்துகொள்வதற்கு எதிர்வினை தான் இது என்றும், மேலும் அனுமதி பெற்று நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் குறுக்கிடுவதே தவறு என்றும் மைக்கில் அறிவித்தவுடன் பின்வாங்கிக் கொண்டார் எஸ்.ஐ. இப்ராஹிம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் தோழர் தண்டபாணி, “எஸ்.ஐ. கோபால் மீது 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. இனி உன்னை குண்டாசில் தான் போட வேண்டும். திருப்பூரில் டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய பெண்ணை அடித்தவனுக்கு ஒரே மாதத்தில் பதவி உயர்வு. மதுரை மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தலைவர் நல்லகாமனை அவமானப்படுத்தியதற்காக எஸ்.பி. பிரேம்குமாருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வாங்கித் தரப்பட்டது. மேலும், சிவகாசி ஜெயலெட்சுமி முதல் பல்வேறு சம்பவங்களின் மூலம் போலீசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி பேசினார்.

போலீசு என்றாலே வழக்கு, சிறை, சித்ரவதை தான். போலீசின் மாநாட்டில் பயங்கரவாதமும், மதவாதமும் நாட்டின் முக்கிய பிரச்சினை என்கிறான். எது பயங்கரவாதம்? நாட்டில் விவசாயிகள் கொத்து கொத்தாக சாவதற்கு யார் காரணம்? தண்ணீர் இல்லை என்று போராடினால் கூட போலீசு தான் வந்து நிற்கிறது. நேர்மையாக செயல்பட்டதற்காக டிஎஸ்பி விஷ்ணு பிரியா, அவர் தோழியான கீழக்கரை டிஎஸ்பி என அனைவரும் மிரட்டப்பட்டு ஓரங்கட்டப்படுகிறார்கள்.

போலீசுத்துறையில் ஆண் போலீசால் பெண் போலீசார் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினைகள், போலீசார் நிம்மதியாக குடும்பத்துடன் வாழ முடியாத நிலை என போலீசுத்துறையின் நெருக்கடியையும், நெடுவாசல், கதிராமங்கலம் என அனைத்திலும் போலீசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிற்பதையும், போலீசை எதிர்கொள்ள வேண்டுமானால் மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்களை அணுகுங்கள். எமது வழக்கறிஞர்கள் சார்பில் இலவசமாக வழக்கு நடத்துகிறோம்” என்றார்.

சி.பி.ஐ மாவட்ட செயலர் தோழர் திராவிட மணி பேசுகையில்;  “எஸ்.ஐ. கோபால், மெண்டல் போல் தெரியாமல் செஞ்சிட்டான் என்கிறார்கள். மெண்டலை ஏன் வேலைக்கு வைத்துள்ளீர்கள். வீட்டுக்கு அனுப்ப வேண்டியது தானே? இவனை போல் சில்வர் ஸ்டாலின் என்று ஒருத்தன் இருந்தான். இப்ப இருக்கிற இடமே தெரியல. காவல்துறையில் இது போன்ற வல்லுறுகள் அதிகம். சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படி தான் நடந்துகொள்கிறார்கள். காவல்துறை மீது நாங்கள் எங்கள் வெறுப்பை காட்டவில்லை. போலீஸ்டேசன் போனாலே பலவிதமான தொல்லைகள். மக்களின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியுமா காவல்துறை அதிகாரிகள்? காவல்துறையில் எல்லோரும் அயோக்கியனாக தான் இருக்கிறான். காவல்துறையை தோலுரித்துக் காட்டும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்ததற்கு நன்றி” என முடித்தார்.

வி.சி.க திருச்சி மாவட்ட நெறியாளர் தோழர் குணவேந்தன், “எனக்கு பல நெருக்கமான ஆய்வாளர்கள் உண்டு. நண்பர்களாக இருந்தாலும் காக்கிச்சட்டைப் போட்டால் ஒரு மிதப்பு. காலனிய காலத்து அடியாள்தனம் இது. எங்ககிட்டேயே சட்டம் பேசுறியா? எதிர்த்து பேசுறீயா? என்பார்கள். போலீசு பற்றி நாள் கணக்கில் பேசலாம். எதைக் கேட்டாலும் மேலிடத்து உத்தரவு என்பார்கள். யார் மேலிடம் என்று கேட்டால் அவர்களுக்கு தெரியாது.

மிக மோசமாக மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் பேசுவதை பதிவு செய்கிறாயே, மணல் கொள்ளை, கள்ளச்சாராயம் விற்பது தெரியாதா? பணம் வாங்க தான் தெரியும். போலீசு அடித்தால் திருப்பி அடிக்கக் கூடிய நிலை வருமானால், போலீசு தன்னை திருத்திக் கொள்வார்கள் அல்லது திருத்தப்படுவார்கள்.” என முடித்தார்.

மக்கள் அதிகாரம் தோழர் ராஜா,  “இங்கு பேசிய பகுதி பெண்கள் காவல்துறை பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றிரண்டை சொன்னதற்கு முகம் சுழிக்கிறது காவல்துறை. காவல்துறையின் வார்த்தைகளை நேரடியாக அனுபவித்தவர்கள் நாங்கள். ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய காவல்துறையின் நடவடிக்கை நேர்மையாக இருக்கிறதா? குற்றம் செய்த கோபாலை உள்ளே வைத்துக் கொண்டு எங்களை பேசாதே என்கிறீர்கள்.

ஒருத்தர் இரண்டு பேர் அல்ல. சம்பவத்தில் அடிவாங்கியது நூற்றுக்கும் மேற்பட்டோர். அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று போலீசின் அராஜகத்தை எதிர்த்து நிற்கிறார்கள். யாரை அடித்தாலும் கேட்கக் கூடாது, எழுந்து நிற்கக்கூடாது. காவல்துறையின் Block List-ல் இருந்த பல அடித்தட்டு மக்கள் வாழக்கூடிய பகுதிகளை விடுவித்தது நாங்கள். காவல்துறை என்ன செய்தது? மொத்த மக்களையும் கிரிமினல் போல சித்தரித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கிறது. அரசின் திட்டங்களுக்கு அடியாள்படையாக செயல்படுகிறது.

கதிராமங்கலம், நெடுவாசல் என போராடும் மக்களை; நம்மை நொறுக்கியது போல கை கால்களை உடைத்து நொறுக்குகிறார்கள். போராடும் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்கிறார்கள். இந்த காக்கிச்சட்டைகள் சட்டப்பூர்வ சமூக விரோத ரவுடிப்படையாக வளர்க்கப்படுகிறது.

இது எஸ்.ஐ கோபாலுக்கு எதிரான போராட்டமல்ல. நாளை கோபாலுக்கு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று பட்டம் கொடுக்கலாம். எனென்றால் சைக்கோக்கள் தான் காவல்துறைக்கு தேவை. எஸ்.ஐ. காதர் பாட்சாவின் நிலை கோபாலுக்கு உருவாகும். நீ செய்யும் நடவடிக்கையை உன் அதிகாரிகள் மன்னிப்பார்கள், எங்கள் மக்கள் மன்னிக்கமாட்டார்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இத்தகைய காவலர்களுக்கு மக்களே தண்டனை வழங்குவார்கள்’’ என்றார்.

சிறப்புரைற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன், “சீருடை அணிந்த வழிப்பறி கும்பலுக்கு எதிராக மிகுந்த எழுச்சியோடு ஆர்ப்பாட்டத்தை நடத்தும் மக்கள் அதிகாரம் தோழர்களே, பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களே, போலீசை எதிர்க்க ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி புரட்சிகர அமைப்புகளுக்கு தான் என்ற அடிப்படையில் மக்கள் அதிகாரம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறது. இந்த இடத்தை பார்த்தால் நாட்டில் எந்தளவு கருத்துரிமை இருக்கிறது? அரசியல் சட்டத்தை காவல்துறை எந்தளவு மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இது தான் சட்டத்தின் ஆட்சியினுடைய லட்சணம். கோபால் என்ற தனிநபர் பிரச்சினை அல்ல. கோபாலுக்கு பின்னால் உள்ள காவல்துறை அதற்கு பின்னால் உள்ள அரசு அதிகாரம், நீதிமன்றம் என இந்த கட்டமைப்பு தான் பிரச்சினை. கோபாலுக்கு ஆரம்பத்திலேயே சில விசயங்களை சொல்ல வேண்டும். பின்னால், வழக்கறிஞர் அலுவலகம், தோழர் செழியன், பாதிக்கப்பட்ட மக்கள் வீடு என வந்து இந்த பிரச்சினையை கொஞ்சம் முடித்து விடுங்க சார் என்று கெஞ்ச வேண்டி வரும். ‘சினிமா ஹீரோக்கள்’ போல செயல்பட்ட தஞ்சாவூர் ஆய்வாளர் சேதுமணி மாதவன், எஸ்.பி. பிரேம் குமார், வெள்ளதுரை ஆகியவர்களின் சம்பவத்தின் மூலம் எந்த காவல்துறையும் அவர்களுக்கு உதவாததுடன், சொந்த காவல்துறையினராலேயே லூசு என்று திட்டி தீர்க்கப்பட்டு, சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டதையும் விளக்கி, மக்கள் ஆதரவுடன் இதே நிலையை SI கோபாலுக்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மக்கள் அதிகாரமும் ஏற்படுத்தும்…

வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்ற நீதிபதி கிருபாகரனின் முட்டாள்தனமான உத்தரவு அதற்கெதிரான, வழக்கறிஞர்கள் போராட்டம் நீதித்துறைக்கெதிரான போராட்டமாக மாறி வழக்கறிஞர் தொழில் செய்யத்தடை விதிக்கப்பட்டு அது உடைக்கப்பட்டு, தற்போது மீண்டும் பணியாற்றி வருவதை கூறினார்.

ஹெல்மெட், டாஸ்மாக் என அனைத்திலும் நிறுவனங்களிடம் போலீசு உயரதிகாரிகள் காசு வாங்குவது, சட்டத்தை அமுல்படுத்துவதாக கீழ்நிலை போலீசு சம்பாதிப்பதை சுட்டிக்காட்டினார். மணல் கொள்ளை, கிரானைட் என எந்த கொள்ளையாக இருந்தாலும் எல்லா கொள்ளையிலும் போலீசுக்கு பங்கிருக்கிறது. போலீசுக்கும் ரவுடிக்கும் தொடர்பில்லாமல் எதாவது குற்றம் நடந்திருக்கிறதா? சட்டத்தை மதிக்க சொல்லும் காவல்துறை எங்காவது சட்டத்தை மதிக்கிறார்களா? சட்டத்தை மதிக்காத ஒரே துறை காவல்துறை தான்.

தோழர் வாஞ்சிநாதன்

போலீசு ஈடுபடாத குற்றம் எதாவது உண்டா? வழிப்பறி, பாலியல் குற்றம், கொலை, கொள்ளை, கடத்தல், கீழிருந்து மேல் வரை சிவகாசி ஜெயலெட்சுமி முதல் சிவகங்கை சிறுமி பாலியல் குற்றம் வரை அத்தனையும் குற்றம். அதே போல போலீசு சம்பந்தப்படாத ஊழல் உண்டா? (குட்கா ஊழல் பற்றி விளக்கினார்). குட்கா ஊழலில் ஈடுபட்ட போலீசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? போலீசு ஈடுபடாத குற்றங்களே இல்லை. எல்லா துறைகளையும் எடுத்துக்கொண்டால் காவல்துறை தான் அதிகமான ஊழலில் ஈடுபடுகிறார்கள்.

போலீசு மீதான அச்சத்தை உடைக்காமல் போலீசை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு நாள் திருப்பி அடிச்சா என்ன? பகுதி இளைஞர்கள் திருப்பி அடிங்க இரண்டு பேர் மேல கேசு. நம் மீது கேசு போட்டால் கேசு நடத்த நாங்கள் இருக்கிறோம் இலவசமாக நடத்த. அவனுக்கு தண்டனை கிடைத்தால் என்ன ஆகும்? வேலை போகும். அதோடு அவன் குடும்பம் தெருவில் போகும். அப்படி இளைஞர்கள் தயாராகாமல் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது.

ஹெல்மெட் போட்டால் நமக்கு பாதுகாப்பு என்று அரசு சொல்கிறது. டாஸ்மாக் கடை அரசு தானே நடத்துகிறது. மக்கள் உயிர் மேல் நேசம் இருந்தால் டாஸ்மாக் கடை நடத்த முடியுமா? கேலி கூத்தாக இல்லையா? நீரவ் மோடி, விஜய் மல்லையா பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்துவிட்டு ஓடிவிட்டார்கள். பிடிக்க முடிந்ததா?

ஒரத்தநாட்டு விவசாயி டிராக்டர் கடன் இரண்டு லட்சம் கட்டவில்லையென அடித்து கொலை செய்கிறாய். மக்கள் சொத்தை கொள்ளையடித்த பி.ஆர்.பி, வைகுண்டராஜன் மீது என்ன நடவடிக்கை? அதிமுக-வில் எவன் கொள்ளையடிக்கவில்லை. எவன் சொத்தையாவது பறிமுதல் செய்ய முடியுமா? எந்த கட்சி அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சொத்து விவரத்தை மட்டும் எடுத்தால் போதும். எவன் யோக்கியன் என்று தெரிந்துவிடும், எடுக்க தயாரா? காவல்துறை மீது எத்தனை வழக்குகள் என்பதை வெளியிடு… உன் யோக்கியதை தெரியும். இப்படிப்பட்ட குற்ற கும்பல்கள் தான் காவல்துறை.

சட்டத்தின் மேல், அதிகாரிகள் மேல் யாருக்கும் நம்பிக்கையில்லை. ஓட்டுக்கட்சிகள் மேல் நம்பிக்கையில்லை. கோர்ட் மேல் நம்பிக்கையில்லை. நீதிபதிகள் எல்லோரும் திருடனாக இருக்கிறார்கள். பத்திரிக்கைகளை எல்லாம் பெரிய பெரிய பணக்காரன் வைத்துள்ளான். எல்லா போன பிறகு மக்கள் இன்று வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அவர்களை தடுக்கிற ஒரே சக்தியாக காவல்துறை, காக்கிச்சட்டை அடியாள் கூட்டம் தான் உள்ளது.

உய்யகொண்டான் பகுதியில் போலீசு தேவையில்லை. பெண்கள்-இளைஞர்களைக் கொண்ட பாதுகாப்புக் குழுக்களை நாங்களே உருவாக்குகிறோம். பிரச்சினை வந்தால், தவறு செய்தால் நாங்களே தீர்த்துக் கொள்கிறோம். எதற்கு போலீசு, கோர்ட்க்கு போக வேண்டும்? இந்த அதிகாரத்தை ஏற்கும் வரை இப்பிரச்சினையை நாம் தீர்க்க முடியாது. என்ன நடந்தாலும் எங்களிடம் தானே வர வேண்டுமென நினைக்கிறார்கள் அவர்கள். உன் அதிகாரத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்புக் குழுக்களை நாம் உருவாக்குவோம். அதிகாரத்தை நாம் கையில் எடுப்போம் அது தான் நிரந்தரத்தீர்வு…” எனக்கூறி முடித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே ம.க.இ.க கலைக்குழுவின் புரட்சிகர பாடல்கள் மக்களை உணர்வூட்டின.

அப்போது, பேசிய தோழர் கோவன், “ஹெல்மெட் அணிவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், உங்கள் அக்கறையின் மேல் தான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், எங்கள் மக்கள் பல காரணங்களால் தினம் தினம் செத்து மடிகிறார்கள், நிம்மதியிழக்கிறார்கள் குறிப்பாக டாஸ்மாக். அதை செய்யக்கூடிய அரசுக்கு ஏவல் வேலை செய்கிறீர்கள். அந்த வகையில், எங்களை கொல்வது என்ற அரசின் கொள்கைக்கு உடன்படுகிறீர்கள்.

அதில் உடன்படக்கூடிய உங்களை எப்படி நம்ப முடியும்? அதனால் உங்கள் நோக்கம் எங்களை காப்பாற்றுவதல்ல. கொள்ளைடிப்பது தான் உங்கள் கொள்கை. உங்களுக்கு நியாயம் பேச துளியும் அருகதையில்லை. பெரியார் அணை பிரச்சினையா – கேரளா, காவிரி பிரச்சினையா – கர்நாடகா, நீட்டு, மாட்டு பிரச்சினையா – மோடி, மீத்தேன் பிரச்சினையா – தமிழக அரசு, மோடி அரசு எதிரி. ஆனால் இதில் எல்லாத்திலேயும் போலீசு தான் நிரந்தர எதிரி. நீங்கள் காக்கிச் சட்டை போட்டுள்ள வரை நீங்களும் நாங்களும் தான் எதிரி. முடிவு செய்யுங்கள், உங்கள் காக்கிச் சட்டையை தூக்கியெறியுங்கள் அல்லது இந்த மோசமான காரியத்தை செய்ய முடியாது என உயரதிகாரிகளுக்கு எதிராக போராடுங்கள். குறைந்தபட்சம் உங்கள் சங்கத்திற்காகவாவது போராடுங்கள்.

அதிகாரம் இருப்பதனால் எதையும் செய்யலாம் என திரிபுராவில் எங்கள் தோழர் லெனின் சிலையை உடைத்து காவி கும்பல் ஆட்டம் போடுகிறது. காவி என்றால் அராஜகம், ஜனநாயக விரோதம், சர்வாதிகாரம். இதே வேலையை தான் போலீசு செய்கிறது. அதிகாரம் இருப்பதால் தோழர் லெனின் சிலையை உடைத்ததை போல் இங்கு இளைஞர்களின் காலை உடைத்துள்ளீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

அதனால், உங்கள் அதிகாரத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். லெனின் சிலையை, இளைஞர்களை – பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமானால் இனி மக்கள் அதிகாரம் தான். அதற்கான துவக்கமாக தான் இந்தக்கூட்டம் என்றார்.”

“போலீசுக்கு மக்களோட உசுரு மேல அக்கற”, “ஏழை மக்கள பாதுகாக்க போலீஸ் இருக்குதா” என்ற பாடல்கள் போலீசை அம்பலப்படுத்தியதுடன், மக்களுக்கு விரோதமான போலீசு துறைக்கு எதிராக போராட வேண்டுமென்ற அறைகூவலாகியது!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

 

சாவர்க்கரின் வாரிசுகளுக்கு லெனினை எப்படிப் பிடிக்கும் ? கருத்துப்படம்

1

பகத்சிங்கின் நாயகன் லெனினை வெள்ளைக்காரனிடம் மண்டியிட்ட சாவர்க்கரின் வாரிசுகளுக்கு எப்படிப்பிடிக்கும் ?

படம்: வேலன்

இணையுங்கள்:

போலீசோட அக்கறை ஹெல்மெட்டா, வசூலா ? கோவன் பாடல் வீடியோ

0

திருச்சியில் போலீசால் கொல்லப்பட்ட உஷாவின் மரணம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போராட்டத்தின் போது தோழர் கோவன் பாடிய பாடல் – போலீசின் கடமை உணர்வின் இரகசியத்தை அம்பலப்படுத்துகிறது.

 

 

 

போலீசால் கொல்லப்பட்ட திருச்சி உஷாவின் இறுதி ஊர்வலம்

0

மார்ச் 07,2018 அன்று திருச்சி கணேஷ் ரவுண்டனா பகுதியில் ஹெல்மெட் வசூலில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உஷா என்ற கர்ப்பிணியை, இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று உதைத்துக் கீழே தள்ளிக் கொலை செய்துள்ளார். உஷாவின் கணவர் ராஜா காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உஷாவின் இறுதி ஊர்வலம், அஞ்சலிக் கூட்டத்தில் தோழர் கோவன், ம.க.இ.க தோழர்கள், மக்கள் அதிகாரம் தோழர்கள், எவிடன்ஸ் கதிர், ராயல் சித்திக் மற்றும் பகுதி வாழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி  செலுத்தினர்.

 

 

திருச்சி ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய் ! PRPC பத்திரிக்கை செய்தி !

1

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்:09.03.2018

பத்திரிக்கை   செய்தி

  • திருச்சியில் இரட்டைக் கொலை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்!
  • தடியடி நடத்தி ரவுடித்தனம் செய்த திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய்!

மார்ச் 07,2018 அன்று திருச்சி கணேஷ் ரவுண்டனா பகுதியில் ஹெல்மெட் வசூலில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உஷா என்ற கர்ப்பிணியை, இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று உதைத்துக் கீழே தள்ளிக் கொலை செய்துள்ளார். உஷாவின் கணவர் ராஜா காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹெல்மெட் தாக்குதல்கள், கொலைகள் தமிழக காவல்துறைக்குப் புதிதல்ல. கடந்த ஜூலை 1, 2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனால் மிகப்பெறும் பயனடைந்த ஒரே அரசுத்துறை  காவல்துறைதான். டாஸ்மாக் பார், மணல் கொள்ளை எப்படி கீழ்மட்ட ஆளுங்கட்சி ஊழியர்களுக்கு வசூல் வகையைத் திறந்து விட்டதோ, அதேபோல் ஹெல்மெட் உத்தரவு காவல்துறையின் அன்றாட வருமானத்திற்கான வழியானது. மணல் கொள்ளை, சேகர் ரெட்டி டைரி,குட்கா ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களில் ஆதாரத்துடன் பிடிபட்ட எடப்பாடி-பன்னீர் கூட்டம், மேல்மட்ட காவல்துறை அதிகாரிகள் இதனைத் தெரிந்தே அனுமதித்தனர்.

மக்களின் உயிரை காப்பாற்றத்தான் ஹெல்மெட் கட்டாயம் என்கிறோம் என்கிறது அரசு. உண்மையில் மக்கள் மேல் அக்கறை இருந்தால் டாஸ்மாக்கைத் திறந்து கோடிக்கணக்கான தமிழ்ப் பெண்களின் தாலியை அறுப்பதேன்? உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மணல் கொள்ளையில் தமிழகத்தையே சூறையாடுவதேன்? அரசு, காவல்துறை, நீதிமன்றத்தின் மக்கள் மீதான அக்கறை என்பது ஏமாற்றே! கொலையை நேரில் பார்த்துப் பதபதைத்துப் போராடிய மக்களை கொடூரமாகத் தடியடி நடத்தி பொய்வழக்குப் போட்ட அயோக்கியக் கூட்டம்தான் திருச்சி காவல்துறை.

சென்ற வாரம் திருச்சி உய்ய கொண்டான் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் கோபாலிடம், ரூ.500/- கொடுத்து, அபராதம் ரூ.100/- போக மீதம் கேட்டதற்கு, கேட்டவரை மட்டுமல்ல, உடன் இருந்தவர்கள் அனைவரையும் தாக்கியுள்ளார். இந்த அநீதியைப் பார்த்து சாலை மறியல் செய்த உய்யகொண்டான் பகுதி மக்கள் மீதும் தடியடி நடத்தியுள்ளார் கமிசினர் அமல்ராஜ்.

தேவேந்திரன் என்ற இளைஞரின் கால் முறிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பு, காவல்துறையின் வசூல்வெறியைக் கண்டித்து மார்ச் 6, 2018 அன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

பாஜக ஹெச்.ராஜா  முதல் தொலைக்காட்சிகளில் கருத்து கூறும் முன்னாள் போலீசு அதிகாரிகள் வரையிலானவர்கள் ஹெல்மெட் போடாதது தவறில்லையா என்று மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். விரட்டிய ஆய்வாளர் காமராஜ் ஏன் ஹெல்மெட்  அணியவில்லை என இவர்கள் கேட்கவில்லை? 83 கோடி மக்கள் தினமும் ரூ.20/- வருமானத்தில் வாழும் நாடு, மோடியின் இந்தியா என்பது இந்த ஏ/சி அறைக் கணவான்களுக்குத் தெரியாதா?

பொதுவாக காவல்துறை என்றால் எதுவும் செய்யலாம் என்பதே இன்றைய நிலை. ஜல்லிக்கட்டில் ஆட்டோவுக்குத் தீவைத்து, கல்லெறிந்து கலவரம் செய்து; தடியடி, பொய் வழக்குப் போட்டது முதல் மதுரையில் சென்ற வாரம் வி.கே.குருசாமி குரூப்புக்கு ஆதரவாக, கூலிப்படை போல, எதிர் குரூப் ஆட்களை கட்டி வைத்துச் சுட்டதுவரை அனைத்துக் குற்றங்களையும் செய்துவிட்டு, காவல்துறை உங்கள் நண்பன் என்கிறார்கள். உண்மையில் திருச்சியில் நடந்த இரட்டைக் கொலை, ஆதாயத்திற்காக நிகழ்த்தப்பட்ட கொலை( MURDER FOR GAIN). செயின் அறுப்பில் கழுத்தை அறுத்துக் கொல்வது போன்றதுதான் இச்சம்பவம்.

ரூ.100/- பைன் கட்டாமல் சென்றதற்காக விரட்டி விரட்டித் தாக்கிக் கொலை செய்யும் காவல்துறை,  11,000 கோடி அடித்த நீரவ் மோடியை என்கவுண்டரில் சுடுமா? சேகர் ரெட்டியை எட்டி உதைக்குமா? மக்கள் போராடி விசயம் வெளியே வந்திருக்காவிட்டால் உஷாவின் கணவர் ராஜா கஞ்சா விற்றதாக பொய் வழக்கு போட்டிருப்பார்கள். காமராஜ் கடமை தவறாத காவல் அதிகாரியாக சித்தரிக்கப்பட்டிருப்பார். குற்ற கும்பலாக மாறியுள்ள காவல்துறைக்கு மாற்று என்ன? இனி தங்களைத் தாங்களே எப்படி பாதுகாத்துக் கொள்வது? என்பதை தமிழக மக்கள் சிந்தித்துச் செயல்படவேண்டிய தருணம் இது.

வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தொடர்புக்கு:
அலுவலகம்: 150-இ, ஏரிக்கரை சாலை,
அப்போலோ மருத்துவமனை அருகில்,
கே.கே.நகர், மதுரை – 9865348163,  vanchiadv@gmail.com

இளம் சிந்தனையாளர் குழு : அறிவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்.- இன் ஐந்தாம்படை !

3

டெல்லி அதிகாரம் கையில் இருந்தும், காலால் உத்தரவிட்டால் தலையால் நிறைவேற்றும் மானங்கெட்ட எடுபிடியாக தமிழக அரசு நடந்தும், ஊடகங்களை விரும்பியபடியெல்லாம் ஆட வைக்க முடிந்தும், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் சங்க பரிவாரத்துக்குத் தமிழகத்தில் அமைதி இல்லை. தமிழகத்தின்  சமூக ஊடகங்கள் ஒவ்வொரு பிரச்சினையிலும் பார்ப்பன பாசிஸ்டுகளைத் தெளியவைத்துத் தெளியவைத்து அடிக்கின்றன.

சமூக வலைத்தளங்கள் குறித்து இளம் சிந்தனையாளர் குழு சென்னையில் நடத்திய கருத்தரங்கம்

“சமூக வலைத்தளங்களைப் பொருத்தவரை தமிழ்நாடு தனித்துவமாக இயங்குகிறது. சமூக வலைத்தளங்களைப் போராட்ட அரசியலுக்குப் பயன்படுத்துவதும், அதில்  இடதுசாரி கருத்துக்கள் ஆதிக்கம் பெற்று வருவதும் அதிகரித்திருக்கிறது. அதை நாம் முறியடிக்க வேண்டும்.”

இந்தக் கருத்து, இளம் சிந்தனையாளர் குழு (Young Thinkers Forum)  என்ற அமைப்பின் சார்பில், சமூக வலைத்தளங்கள் குறித்து சென்னையில் கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசப்பட்டதாகும். இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினார், அ.தி.மு.க. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். போலீஸ் உளவுத்துறை துணை கமிசனர் திருநாவுக்கரசு ,  தந்தி டி.வி.-யில் விவாத நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அசோகவர்ஷிணி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சுமந்த் சி.ராமன், பானு கோம்ஸ், ஷ்யாம் சேகர்,  பாடகி சின்மயி,  நியூஸ் மினிட் இணைய இதழின் தலைமை ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் ஆகியோர் இக்கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டடத்திற்கு ஸ்பான்சர் செய்த ஸ்வராஜ்யா என்ற தீவிர வலதுசாரி (அதிகாரபூர்வமற்ற ஆர்.எஸ்.எஸ்.) பத்திரிகையின் சார்பில் பேசிய பிரசன்னா விஷ்வநாதன்,  “தமிழகத்தில் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் பொருளாதார கருத்துகள் இடதுசாரி சார்பாக இருப்பது கவலையளிக்கிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்துகளும், கெயில், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் எதிர்க்கப்படுவதும், ஜல்லிக்கட்டு பிரச்சினையைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கும் சமூக வலைதளங்கள் களமாகப் பயன்படுவதும் கவலையளிக்கிறது” என்று பேசினார்.   கார்ப்பரேட்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முறியடிக்கவும், பா.ஜ.க. அரசுக்கு எதிராக வைக்கப்படும் சகிப்பின்மை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எப்படிச் செயல்படவேண்டும் என்பதும் இக்கருத்தரங்கில் பேசப்பட்ட விசயங்கள்.

இளம் சிந்தனையாளர்கள் –  ஆர்.எஸ்.எஸ். இன் முகவர்கள்!

2016_-இல் இக்குழுவின் தமிழகப் பிரிவின் தொடக்க நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.-இன்  தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். இணை பொது செயலாளர்  தத்தாத்ரேய ஹோஸபலே, பா.ஜ.க.விற்கு நெருக்கமான ராஜ்யசபா எம்.பி. ஸ்வபன்தாஸ் குப்தா, ஸ்வராஜ்யா  பத்திரிகையின் ஆசிரியர் ஜெகன்னாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பதிலிருந்தே இவர்கள் யார் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வமைப்பைத் தொடங்கிவைத்து உரையாற்றிய  ஆர்.எஸ்.எஸ்.-ன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே,  அறிவுத்துறையில் தங்களுக்கான போர்வீரர்களை உருவாக்க வேண்டுமென்றார்.   ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை ஆதிக்கம் செலுத்த வைப்பது எப்படி என்பதும் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

கருத்தரங்கின்  ஒவ்வொரு அமர்விலும் ஆர்.எஸ்.எஸ். அரசியலை முன்வைத்து ஒருவர் பேசுவது, மற்றவர்கள் பொதுவாகப் பேசுவது என்று இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் வழியே பொதுவான நிகழ்ச்சி போன்ற தோரணையில் இடதுசாரி அரசியலும் போராட்டங்களும் தீங்கானவை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

இளம் சிந்தனையாளர் குழுக்கள் தமிழகத்தில் மட்டும் உருவாக்கப்படவில்லை. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்டு இந்தியா முழுமைக்கும் உருவாக்கப்பட்டுள்ளன.  காஷ்மீரின் இளம் சிந்தனையாளர் குழுவின் கூட்டத்தில் ராம் மாதவ் உடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காஷ்மீரின் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்  கலந்துகொண்டனர். இவர்கள் நடத்தும் கூட்டத்தில்  ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் ஒருவர்,  உள்ளூர் தலைவர், ஒரு பா.ஜ.க. தலைவர், ஜே.என்.யூ. பேராசிரியர் அல்லது ஆய்வு மாணவர் ஒருவர், ஒரு பத்திரிகையாளர், ஒரு பேராசிரியர் ஆகியோர் கலந்து கொள்வதை  ஒரு முறையாக வைத்திருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.-ன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே

இளம் சிந்தனையாளர் அமைப்பை இந்தியாவின் அனைத்து  மாநிலங்களிலும் ஆரம்பித்து இயக்கி வருவதும், மேற்கண்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதும் இந்தியா பவுண்டேசன் என்கிற ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சிந்தனைக் குழாம்.  இந்த சிந்தனைக் குழாமின் இயக்குநர்களாக  மோடி அரசில்  தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவலின் மகன்   சவுரியா தோவல், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆர்.எஸ்.எஸ். தேசிய செயலர் ராம் மாதவ், மத்திய அமைச்சர்கள் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

தீவிர வலதுசாரி அரசியலுக்கு ஆதரவான ஒரு பொதுமேடையை உருவாக்குவது தான் மேற்கண்ட நிகழ்ச்சியின் நோக்கம்.  இதைத்தான் விவேகானந்தா இன்டர்நேசனல் என்ற பெயரில் அவர்கள்  ஏற்கனவே செயல்படுத்தி வருகிறார்கள்.

அன்னா ஹசாரேயின் பின்னால் !

அஜித் தோவல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆவதற்கு முன்பு வரை விவேகானந்தா இன்டர்நேசனல் பவுண்டேசன் என்ற சிந்தனைக் குழாமை நிறுவி, அதன் இயக்குநராக இருந்தவர். இதன் தளகர்த்தர்களில் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியும் ஒருவர். விவேகானந்தா கேந்திரம் என்கிற ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது விவேகானந்தா இன்டர்நேசனல்.

2011 -இல் அன்னா ஹசாரேவை முன்னிறுத்தி ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பொது மேடையை அமைத்து, அதன் கீழ் பா.ஜ.க.வுக்குச் சாதகமான அரசியல் அணி சேர்க்கையை வடிவமைத்துச் செயல்படுத்தியது விவேகானந்தா இன்டர்நேசனல். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தொடங்கும் முன்னர் அவ்வாண்டு ஏப்ரல் மாதமே விவேகானந்தா இனடர்நேசனல் நடத்திய கருப்புப் பணம் தொடர்பான கருத்தரங்கில் குருமூர்த்தி, பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், சுப்ரமணிய சாமி,  கிரண்பேடி, கோவிந்தாச்சார்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலகமயமாக்கல் மற்றும் மறுகாலனியாக்க கொள்கைகள், அதன் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் நடத்தும் சுரண்டல், இயற்கை வளச் சூறையாடல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை மறைத்து, அரசியல்வாதிகளின் ஊழல்தான் மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முழுமுதற்காரணம் என்ற கருத்தினை உருவாக்குவது  என்பது உலக வங்கியின் திட்டம். இந்த உலக வங்கித் திட்டத்தை உலக வங்கியின் விருது பெற்ற அன்னா ஹசாரேவை முன்நிறுத்தி தன்னுடைய அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது விவேகானந்தா இன்டர்நேஷனல் அமைப்பு.

அன்னா ஹசாரேவை முன்நிறுத்தி அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம், 2014  நாடாளுமன்றத் தேர்தலின் மையப்பிரச்சினையாக ஊழலை மாற்றியது. மோடியைப் பிரதமராக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது.

பல  தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுமேடை என்கிற முகத்துடன் ஆர்.எஸ்.எஸ்.-, பா.ஜ.க. வின் நிகழ்ச்சி நிரலை முன்தள்ளுவது விவேகானந்தா இன்டர்நேசனலின் செயல்தந்திரத்தில் ஒன்று. மோடி அரசு பதவியேற்றதும் அஜித் தோவல் தேசியப் பாதுகாப்பு ஆலோசராக நியமிக்கப்பட்டார். மோடி அரசின் முதன்மைச் செயலாளராக  விவேகானந்தா இன்டர்நேசனல் செயற்குழு உறுப்பினர் நிருபேந்திர மிஸ்ராவும், கூடுதல் முதன்மை செயலாளராக அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் பி.கே.மிஸ்ராவும் நியமிக்கப்பட்டனர். நிதி ஆயோக்கின் உறுப்பினர்களாக சரஸ்வத் மற்றும் பிபேக் தேப்ராய் ஆகியோரும் விவேகானந்தா இன்டர்நேசனல் அமைப்பைச் சேர்ந்தவர்களே.

பாசிசத்துக்கு ஜனநாயக வேடம் !

நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.-உடன் உறவு இல்லை, கொல்லைப்புறமாக உறவு கொள்ளும் ’நடுநிலை’ அறிவுஜீவிகள்

இளம் சிந்தனையாளர்கள் என்ற பெயரில் ஒரு பொது அடையாளத்துடன் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலை முன்வைப்பது தான் இந்தியா பவுண்டேசனின் நோக்கமும்.  இந்த அமைப்புகள் பார்ப்பன_பாசிச அரசியலுக்கு ஒரு தாராளவாத ஜனநாயகத் தோற்றத்தை உருவாக்க முனைகின்றன. மேலும்,  நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.-உடன் உறவு வைத்துக்கொண்டால் மக்கள் மத்தியில் அம்பலமாவோம் என்று அஞ்சும் அளும்வர்க்க ‘நடுநிலை’ அறிவுஜீவிகள், அச்சமின்றி  இக்கள்ளக் குழந்தைகள் மூலம் ஆர்.எஸ்.எஸ். தொடர்பைப் பேணிக்கொள்கிறார்கள்.

உ.பி., ராஜஸ்தானைப் போலத் தமிழகத்திலும் பார்ப்பன பாசிசக் கருத்துகளை மையநீரோட்டக் கருத்தாக மாற்ற முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ். அதற்கான முதல்படி, பார்ப்பன பாசிசமும் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தே என்ற மனநிலையை அறிவுத்துறையினர் மத்தியில் உருவாக்குவதாகும். இட்லரின் ஆரியவெறியை விவாதத்துக்குரிய ஒரு கருத்தாக எடுத்துக் கொண்டு மேடையமைத்துத் தருவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ததரினன்னா  என்று தொடங்கியவுடனே தமிழகத்தின் சமூக ஊடகவெளியில் காறி உமிழ்ந்து தனிமைப்படுத்தப்படுகிறது பார்ப்பனியம். ஆனால், எங்கே டெபாசிட் போனாலும், விவாதங்களில் பாதிக்குப் பாதி நாற்காலி போட்டுக் கொடுத்து ஆர்.எஸ்.எஸ். கருத்தை மைய நீரோட்டக் கருத்தாக மாற்ற உதவுகின்றன ஊடகங்கள். இந்த வேலைக்கு அறிவுத்துறையினரைத் தயார்படுத்தும் பட்டறைதான் சிந்தனையாளர் குழுவின் கருத்தரங்கம்.

– ரகு

* * *
பெட்டிச் செய்தி : சிந்தனையாளர் தோற்றமும் மாமாப்பயல் வேலையும்

மோடி அரசின் தேசியப் பாதுகாப்புச் செயலர் அஜித் தோவலின் மகன் சுவுரியா தோவல் (இடது) இயக்குநராக உள்ள ஜெமினி பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களான சவூதி மன்னர் குடும்பத்தின் இளவரசர்களுள் ஒருவரான மிஷால் பின் அப்துல்லா (நடுவில்) மற்றும் சையத் அலி அப்பாஸ் (வலது)

இந்தியா பவுண்டேசன் இளம் சிந்தனையாளர் குழுவை மட்டும் இயக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தரகு வேலையும் செய்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது “தி வயர்” இணையதளம்.

சமீபத்தில் இந்தியா பவுண்டேசன்,  இந்திய முதலாளிகளின் சங்கமான FICCI – உடன் இணைந்து நடத்திய “ஸ்மார்ட் பார்டர் மேனேஜ்மென்ட்” என்ற நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் பின்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது. “இந்நிகழ்ச்சியில் நீங்கள் சந்திக்க வாய்ப்பிருக்கும் நபர்கள்” என்று தலைப்பிட்டு 7 மத்திய அமைச்சகங்கள், போலீஸ், சுங்கதுறை உள்ளிட்டு பல்வேறு அரசு துறைகள் இடம்பெற்றிருந்தன. பலான தரகர்கள் பெண்களின் புகைப்படங்களை வைத்துத் தனது வாடிக்கையாளர்களைக் கவர்வது போல,  அமைச்சர்களின் பெயர்களைக் காட்டி முதலாளிகளை  நிகழ்ச்சிக்கு அழைக்கிறது இந்தியா பவுண்டேசன்.  இக்கருத்தரங்கிற்கு இராணுவத் தளவாடம் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் நிதியளித்தன.

இந்தியா பவுண்டேசனின் இயக்குநர் என்கிற முறையில்  அந்நிய இராணுவத் தளவாட நிறுவனங்களிடம்  நிதி பெறும் நிர்மலா சீதாராமன்,  பாதுகாப்பு அமைச்சர் என்கிற பெயரில் எந்த நிறுவனத்திடம் கருவிகள் வாங்குவது என்று முடிவும் செய்யும் இடத்திலும் இருக்கிறார் என்கிறது, “தி வயர்” பத்திரிகை.

அதே போன்று, போயிங் நிறுவனம்  ரூ.70,000 கோடி ஆதாயம் அடையும் விதமாக அந்நிறுவனத்திடமிருந்து விமானங்கள் வாங்குவதற்கு மன்மோகன் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சின்ஹா இயக்குநராக இருக்கின்ற இந்தியா பவுண்டேசனுக்கு போயிங்  நிறுவனம் நிதி அளிக்கிறது.

மேலும், அதன் இயக்குநர் சவுரியா தோவல் ஜெமினி ஃபினான்சியல் சர்வீஸ்  என்ற நிறுவனத்தை சவுதி மன்னர் குடும்பத்தின் இளவரசர்களின் ஒருவரான  மிஷால் பின் அப்துல்லாவுடன் இணைந்து நடத்தி வருகிறார். கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு  சப்ளை அண்டு சர்வீஸ்தான் இந்த நிறுவனத்தின் தொழில். ஒருபக்கம் இந்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் சிந்தனைக் குழாமில் அமைச்சர்களுடன் இயங்கும் சவுரியா தோவல் மறுபக்கம் ஷேக்குடன் சேர்ந்து இயங்குகிறார்.

முன்பக்கம் பார்த்தால் சிந்தனையாளர், பின்பக்கம் பார்த்தால் புரோக்கர். இதுதான்  இந்தியா பவுண்டேசன். இதன் ஒரு பிரிவு தான் இளம் சிந்தனையாளர்கள் குழு.

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

ஆர்.எஸ்.எஸ் கும்பலை அடித்து விரட்டுவோம் ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

0

1. ஓசூர்:

“திரிபுராவில் பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின் சிலை தகர்ப்பு! திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை உடைப்பு! உ.பி -யில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு!” சம்பவங்களை நடத்தி பயங்கரவாத வெறியாட்டம் போட்டுவரும் இந்து மதவெறி பார்ப்பன RSS, BJP கும்பலை கண்டித்து  08. 03. 2018 அன்று மாலை 5 மணியளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஓசூரி்ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழர் ரவிச்சந்திரன் தலைமைதாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். ” அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சிம்ம சொப்பனமாக இருந்து லெனின் நமக்கெல்லாம் வழிக்காட்டுகிறார். பெரியார் – அம்பேத்கர் பார்ப்பன பாசிஸ்டுகளின் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.

எனவே, உழைக்கும் மக்களின் பொது எதிரிகளான ஆர். எஸ்.எஸ், பி.ஜே.பி காட்டுமிராண்டிகள் நமது உன்னத தலைவர்களை அவமதித்து வெறியாட்டம் போடுகின்றனர். இதனை போராடி முறியடிக்கவேண்டும்” என்றவகையில் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஒரே குரலில் RSS, BJP கும்பல்களை கண்டித்து கண்டன முழக்கங்களை முழங்கினர். பெண்கள், சிறுவர்கள், பெரியோர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். கடை வியாபாரிகள், தேனீர் அருந்தும் பொதுமக்கள் அனைவரும் இறுதிவரை கவனித்து ஆதரித்துச் சென்றனர். தினசரி மற்றும் தொலைக்காட்சி பத்திரிக்கை நண்பர்கள் படம்பிடித்தும் பேட்டிக் கண்டும் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர். தொடர்புக்கு – 97880 11784.

2. சென்னை

உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்! உலக உழைக்கும் மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!’

பெண்கள் விடுதலை முன்னணி சென்னை கிளை சார்பாக திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் சிலை உடைப்பை கண்டித்தும், தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைப்போம் என்ற எச்.ராஜாவை கண்டித்தும் சென்னை தியாகராயநகரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், எச்.ராஜாவின் படத்தை எரித்தும் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. உலக பெண்கள் தினத்தில் தமிழகத்தில் இருந்து பிஜேபி, ஆர்எஸ்எஸ், சங்பரிவாரி கும்பலை நாட்டைவிட்டே விரட்டியடிக்கவும்,
உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்! உலக உழைக்கும் மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!’

உலக பெண்களின் நாளான இன்றைய தினத்தை 50% தள்ளுபடியுடன்  கல்லா கட்டுகிறார்கள், முதலாளிகள். குடும்பத்தைக் காக்கும் பெண்கள் நாங்கள் தான் என்பதை நீண்ட நெடிய தொடர்கள் மூலம் நிருபிக்க கண்ணீர் கதைகள், பாட்டுப் போட்டிகள், டான்ஸ் போட்டிகள், ரியாலிட்டி ஷோக்கள்  என டிஆர்பி-யை ஏற்றி, ஊடகமும் கொண்டாடுகிறது. பத்திரிக்கைகளும், பெண்கள் பாதுகாப்பிற்கு என்ன செய்யவேண்டுமென்று பெண்ணியவாதிகளின் கட்டுரை ஒரு பக்கம், நான்கு பக்கத்திற்கு திருமணத்திற்குப் போட வேண்டிய நகைகள் பற்றி நான்கு பக்க விலைப்பட்டியலுடன் விளம்பரம், சத்தான, சுவையான சமையல் செய்து குடும்பத்திடம் பாராட்டு வாங்குவது பற்றி இரண்டுப் பக்கம் என்று கொண்டாடுகிறது.

ஆனால், உலக பெண்கள் நாள் பிறந்து 108 ஆண்டுகளாகியும், பெண்கள் தான் விரும்பியதை படிக்க முடியவில்லை. படித்த, படிப்புக்கேற்ற வேலை இல்லை, வேலைக்கேற்ற கூலி இல்லை. வேலைக்கு சென்று பாதுகாப்பாக வீடு திரும்ப உத்திரவாதம் இல்லை.  தான் விருப்பியவனை மணந்தால், ஆணவக் கொலை. பிடிக்காதவனை வேண்டாமென்றால் ஆசிட் வீச்சு. பச்சிளம் குழந்தைகள் முதல் 90 வயது மூதாட்டியர்கள் வரை தொடரும் பாலியல் வன்முறைகள், குடும்பத்தைக் காக்க வேலைக்கு சென்றால் முதலாளிகள் நமது உழைப்பு சக்தியை அட்டைப் போல உறிஞ்சு எடுக்கின்றனர். உழைப்பு சுரண்டல் போதாதென்று பாலியல் சுரண்டல் வேறு, பட்டினிக்கு தள்ளும் விலைவாசி ஏற்றத்திற்கு எதிராக, தாலி அறுக்கும் டாஸ்மாக் எதிராக வீதியில் இறங்கினால் கடித்துக் குதறும் போலீஸ் வெறிநாய்கள், இவைகள் போதாதென்று தினமும் ஒரு வரி விதிப்பு, பணப் பறிப்பு, எப்ப என்ன திட்டத்தை போட்டு நம்மை வழிப்பறி செய்வார் என அஞ்சும் வகையில் மோடி அரசின் அசத்தல் திட்டங்கள் பெண்களின் தலையில் இடியாய் இறங்குகிறது.

இக்கொடுமைகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட விடாமல் ஆணாதிக்கம் அடக்குகிறது. இதற்கு மதங்களும், சாதிகளும், சடங்குகளும், சொந்த பந்தங்களும் ஒத்து  ஊதுகின்றனர்.

இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும், தன் பங்கிற்கான போராட்டங்களை பெண்கள் நடத்திக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்.  பெங்களூரை மிரள வைத்த பெண் தொழிலாளர்கள் போராட்டமானாலும், பணி நிரந்தரம் கோரி செவிலியர் போராட்டமானாலும், டாஸ்மாக்கிற்கு எதிரான பெண்கள் போராட்டமானாலும், கல்வி, மருத்துவம், தண்ணீர், விவசாயம் என்று எந்த போராட்டமானாலும் பெண்களின் பங்களிப்பில்லாமல் இல்லை.

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. குடும்பத்தை காக்க புயலாகும் நாம். நாட்டையும், சமூகத்தின் விடுதலையையும் காக்க சூறாவளியாக மாற ஏன் தயங்க வேண்டும்?

உதாரணமாக, உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்த மெரினாவில் அல்லவா அது சாத்தியப்பட்டது. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. தமிழகத்தின் இளைஞர்களை உலகமே கொண்டாடியது. யார் காரணம்?-  நம் வீட்டு பிள்ளைகளோடு நாமும், இணைந்து சென்றதால்தானே அப்படியான நிகழ்கால சரித்திர மிக்க வரலாற்றை நடத்திக் காட்ட முடிந்தது.

பெண் உரிமைக்கும் விடுதலைக்கும் கிளாரா ஜெட்கினாக, நாட்டைக் காக்க குயிலியாக, ஜாதி ஆணவத்திற்கு எதிராக கௌசல்யாவாக, மதவெறிக்கு எதிராக ஹாதியாவாக, மூடநம்பிக்கைக்கு முடிவு கட்ட பெரியாரின் பேத்திகளாக, முதலாளிகளின் லாபவெறிக்கும், நுகர்வுவெறிக்கும் முடிவு கட்ட மார்க்சின் வாரிசுகளாக வீதியில் இறங்காமல் விடிவு இல்லை என்பதை உணர்ந்து உழைக்கும் பெண்களாய் ஒன்றிணைவோம். சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்.

உலக பெண்கள் நாளில் சூளுரைப்போம்!
பாலியல் சுரண்டலுக்கும் – உழைப்பு சுரண்டலுக்கும் முடிவு கட்டுவோம்!
நுகர்வு வெறியையும்- லாப வெறியையும் அறுத்தெறிவோம்.
ஆணாதிக்கத்தையும் – பெண்ணடிமை தனத்தையும் முறியடிப்போம்!
பெண்ணும் – ஆணும் சமம் என்பதை உயர்த்திப் பிடிப்போம்!
சமூக விடுதலையை முன்னெடுப்போம் – பெண் விடுதலையை சாதிப்போம்!

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னைக் கிளை

3. விழுப்புரம்

பார்ப்பன பொறுக்கி பி.ஜே.பி எச்ச.ராஜா-வை பெரியார் சிலைக்கு செருப்பால் அடித்து இழுத்து வந்து மண்டியிட வைத்த விழுப்புரம் மக்கள் அதிகாரம்.

எச்ச.ராஜா-வை கண்டிக்கும் விதத்தில் 07-03-18 அன்று விழுப்புரம் “மக்கள் அதிகாரம்” சார்பில் மதியம் 12மணியளவில் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திலிருந்து காமராஜர் வீதியிலுள்ள சங்கரமடம் அக்கரகாரத் தெரு பக்கத்திலுள்ள “தந்தை பெரியார்” சிலைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்று மக்கள் அதிகாரம் தோழர்கள் மாலை அணிவித்தனர்.

பேரணியில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் பெரியாரின் படத்தை முகமூடியாக அணிந்து இருந்தனர். மேலும் இந்து பயங்கரவாதி என்ற எச்ச. ராஜா-வின் முகமூடியை அணிந்து கொண்டும், அவனின் கை, கழுத்தில் கயிரு கட்டி அதை பெரியார் வேடமிட்ட தோழர்கள் கையில் செருப்புடனும், துடைப்பத்துடனும் எச்ச.ராஜா வேடமிட்டவரை அடித்து உதைத்து கண்டன முழக்கங்கள் இட்டவாரே  வீதியில் இழுத்து வந்தனர். இறுதியில் பாஜக- பொறுக்கி எச்ச.ராஜா-வை பெரியாரின் சிலை முன் மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்க வைத்து தோழர்கள் செருப்பால் சாத்தினர். பின் எச்ச.ராஜா, ஆர்.எஸ்.எஸ் –இன் சித்தாந்த குரு கோல்வால்கர் ஆகியோரின் உருவ படங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கண்டன முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

பெரியார் முகமூடி அணிந்து தோழர்கள் வீதியில் முழக்கமிட்டு வந்ததை பார்த்த அணைத்து பொது மக்களும், மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களும், குறிப்பாக மாணவர்- இளைஞர்களும் நின்று ஏய்! பெரியார் பாரு என்று நின்று தாங்கள் வைத்திருந்த கை பேசியில் படம் பிடித்தனர். வாழ்த்து சொன்னார்கள். அவர்கள் முகத்தில் இருந்த பூரிப்பு இது பெரியாரின் பூமி, நாங்கள் பெரியாரின் வாரிசுகள் என்பதை உணரமுடிந்தது.

பின் மக்கள் அதிகாரம் விழுப்புரம் வட்ட ஒருங்கிணப்பாளர் தோழர்.சிவானந்தம் தலைமையில் உளுந்தூர்பேட்டை வட்டம் மக்கள் அதிகார தோழர் ஏழுமலை பேசும்போது ஏய்! BJP பயங்கரவாதி எச்ச.ராஜா-வே! உனக்கு என்ன தைரியம் இருந்தால் சிலையை உடைப்பேன் என்பாய். உனக்கு பெரியார் என்றால் யார் என்று தெரியுமா?  உங்கள் நான்கு வர்ண கொள்கைக்கு எதிராக கலகம் செய்தவர், நீங்கள் பெண்களை போதைப் பொருளாக அடிமைபடுத்தி வைத்து நீங்கள் செத்தால் கூடவே  அவர்களையும் உடன்கட்டை ஏற செய்த மரபை உடைத்து பெண்களின் அடிமை விலங்கை உடைத்தவர், அடிமை பட்டுக் கிடந்த மக்களுக்கு தன்மான உணர்வை ஊட்டியவர். ஆனா நீங்கள் யார்? அன்று முதல் இன்று வரை கோயில் நிலங்களையும், சொத்துக்களையும் கொல்லைப்புறமாக திருடி தின்பவர்கள், காவிரியை தடுத்து விவசாயிகளை கொன்றவர்கள், அனிதா போன்ற மாணவர்களின் படிப்பை கெடுத்து கொன்றவர்கள், உனக்கு என்ன யோக்கியதை இருக்கு பாட்டாளி வர்க்க தலைவர் மாமேதை லெனின் அவர்களின் சிலையை உடைக்கவும்,  பெரியார் சிலையை உடைக்கவும் என்று முடித்தார்.

அடுத்து பேசிய தோழர் ரவிகார்த்திகேயன் (மருதம் ஒருங்கிணைப்பாளர்- விழுப்புரம்) எவ்வளவு திமிரு இருந்தால் தன் சுய சாதி திமிரோடு தந்தை பெரியாரை சாதி வெறியன் என்று அவனால் பதிவிட முடியும். காலம் காலமாக சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் மக்களை பிரித்து சூழ்ச்சியின் மூலம் வாழ்ந்து வருபவர்கள், இன்று தன் ஒரு மொழி, ஒரு பண்பாடு கொள்கையை நிறுவ தாங்கள் பதவியின் மூலமும், அதிகாரத்தின் மூலமும் கட்சிகளை விலைக்கு வாங்கியும். இங்கே அடிமை ADMK எடப்பாடி அரசையும் வைத்து அவர்கள் தாங்கள் திட்டத்தை நிறைவேற்ற நினைக்கிறார்கள். ஆனால் இது பெரியாரின் பூமி. இங்கு உங்கள் கனவு பலிக்காது என்பதற்கு இங்கு கூடியுள்ள மாணவ இளைஞர்களே சாட்சி. இப்படி ஒரு நல்ல போராட்டத்தை நடத்தும் மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடித்தார்.

இறுதியாக பேசிய விழுப்புரம் மண்டலம் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் பேசுகையில் தமிழகத்தில் இன்று நாம் பேன்ட்-சட்டை, சூ, போட்டுக்கொண்டு கல்வி அறிவோடு தன்மானத்தோடு வாழ விதை விதித்தவர் பெரியார். வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் அழிவை தாங்களே தேடிக்கொள்வார்கள். எப்படி பாசிஸ்ட் ஹிட்லர் மாமேதை லெனின் சிலையை உடைத்து மாவீரன் ஸ்டாலின் அவர்களால் தன் அழிவை தேடிக்கொண்டானோ அதே போல் இன்று பிஜேபி எச்ச பொருக்கி ராஜாவின் கருத்து என்பதும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பிஜேபி காரன் முத்துக்குமரன் பெரியார் சிலையை உடைத்த நிகழ்வு என்பதும் இந்த RSS -BJP பயங்கரவாத கும்பல் தங்கள் அழிவை இன்று பெரியார் பூமியான தமிழகத்தில் தங்களுக்கான கல்லறையை தாங்களே உருவாக்கிக் கொண்டது. கட்டாயம் அதில் RSS -BJP புதைக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று முடித்தார்.

இதன்  தொடர்சியாக 07/03/2018 அன்று மாலை விக்கிரவாண்டி வட்டம் தொரவி பகுதியில் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் 50 பேர் மக்கள் அதிகாரம் தோழர் ராஜீவ்காந்தி தலைமையில் இனணந்து ஊர் முழுவதும் எச்ச. ராஜாவின் கழுத்தில் செருப்பு மாலை போட்டு இழுத்து சென்றனர். விக்கிரவாண்டி – புதுச்சேரி பிரதான  சாலையில் அவனது கொடும்பாவியை எரித்து முழக்கம் இட்டனர். பிறகு மக்கள் அதிகார தோழர் ராஜீவ்காந்தி பேசுகையில் பார்ப்பன மதவெறி கும்பலையும் பெரியாரின் மண் இங்கு பார்ப்பான் ஆதிக்கம் செய்ய விடமாட்டோம் என உரையாற்றினார்.

அடுத்து பேசிய விழுப்புரம் பகுதி தோழர் சிவானந்தம் பேசுகையில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறிய பார்ப்பன கும்பல் இங்கு நமது மொழி, பண்பாட்டை அழித்து பார்ப்பணீய மனித விரோத பண்பாட்டை திணித்து நான்கு வர்ணங்களாக நம்மை இழிவுபடுத்தியது. இந்த இழிவுகளுக்கு எதிராக தமிழகத்தில் பார்பணீயத்தை வீழ்த்தியவர் பெரியார். அது தான் பாஜக- காரர்களுக்கு பெரியார் பெயர் கேட்டாலே சூத்துல பச்ச மிளகாய் வைத்ததுபோல் எரிகிறது.

எனவே தான் பெரியாரை அழிக்க வேண்டும், திராவிட மரபை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே நாம் வந்தோம் சென்றோம் என்று இல்லாமல் இந்துத்துவத்தை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.-வை நாட்டை விட்டு விரட்ட பெரியார், அம்பேத்கர், மார்க்சியம் கற்க வேண்டும். பெரியாரின் வாரிசுகளாக, அம்பேத்கரின் வாரிசுகளாக, மார்க்சியவாதிகளாக களத்தில் இறங்க வேண்டும். அவர்கள் விட்டு சென்ற பணியை நாம் இனி தொடர வேண்டும். அம்பேத்கர் சொன்னது போல் கற்பி- ஒன்றுசேர்- கலகம் செய் என்பதை உள்வாங்கி அரசியலை கற்று, ஒரு அமைப்பாக திரண்டு இந்துத்துவத்துக்கு எதிராக நமது பிரச்சனைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடவேண்டும் என்று முடித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்

4. பென்னாகரம்

“லெனின் சிலை உடைப்பு! பெரியார் சிலையை உடைப்பு! பாசிச வெறியாட்டம் போடும் பி.ஜே.பி  கொடிக் கம்பத்தை தமிழகம் முழுவதும் மாணவர்கள் அகற்றுவோம்!” என்று பென்னாகரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்  நடைப்பெற்றது.  தோழர் சத்திய நாதன் தலைமை தாங்கினார். இந்த இந்த ஆர்ப்பாட்டத்தினை விளக்கி  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அன்பு பேசினார்.

மக்கள் அதிகாரம் பென்னாகரம் பகுதி கோபிநாத் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கோல்வர்கர், எச்ச ராஜாவின் உருவபடம் எரிக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி.
தருமபுரி, 81480 55539.

5. திருநெல்வேலி

“திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் சிலை உடைத்து வெறியாட்டம் போடும் ஆர். எஸ். எஸ். பா.ஜ.க. கும்பலை கண்டித்தும்! தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என சொன்ன எச்ச ராஜாவை கண்டித்தும்!”

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் 07-03-2018 அன்று மாலை 4.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சந்திப்பு பேருந்து நிலையத்தின் உள்ளிருந்து கண்டன முழக்கங்களுடன் ஊர்வலமாக தோழர்கள் வெளிவர ஆரம்பித்தனர்.

அதன் பின்னர் அங்கிருந்த அம்பேத்கர் சிலை முன்பு தோழர்கள் கோல்வால்கர் மற்றும் எச்.ராஜா ஆகியோரின் படத்தை எரிக்க முற்பட்டனர். அப்போது அங்கு வந்த போலீசு படங்களைப் பறித்துக் கொண்டனர். ஆனபோதும் அவற்றை தோழர்கள் மீண்டும் பிடுங்கி கிழித்தெறிந்து காலில் போட்டு மிதித்தனர். இந்நிகழ்வு அங்கு சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

*****

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் எச்.ராஜாவைக் கண்டித்தும்! அவரது உருவப்படத்தை எரித்தும் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து போராட்டம் நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருநெல்வேலி.

7. கும்பகோணம்

திரிபுராவில் நடத்தப்பட்ட தோழர் லெனின் சிலை உடைப்பை பயன்படுத்தி காவிபரிவாரத்தை உள்நுழைக்க “தந்தைபெரியார் சிலையை உடைக்கவேண்டும்.” என கூறிய எச்(ச).ராஜாவை கைது செய்ய கோரி குடந்தை அரசு கலை கல்லூரி சார்பில் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
குடந்தை, தொடர்புக்கு : 96297 01560.

 

தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ

1

தோழர் லெனின் சிலை இடிப்புக்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. பாஜகவின் ஊடக பேச்சாளர்களும், பொறுப்பில் இருப்போரும், ”லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு?, கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? “ என எக்காளத்துடன் பேசுகின்றனர். பார்ப்பனக் கொழுப்பின் பிண்டமான சுப்பிரமணிய சாமி, லெனின் ஒரு தீவிரவாதி என்றும், பல மக்களைக் கொன்றவர் என்றும் கூச்சநாச்சமில்லாமல் பேசியுள்ளார்.

லெனினைக் கண்டு இக்கும்பல் அலறுவது ஏன்? கொஞ்சம் வரலாற்றுரீதியாகப் பார்ப்போம். தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயர்களை தூங்க விடாமல் செய்த தோழர் பகத்சிங் தனது ஆதர்சன நாயகனாக குறிப்பிடுவது தோழர் லெனினை மட்டுமே. தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு வரை அவர் படித்துக் கொண்டிருந்தது, லெனினுடைய நூல்களைத்தான். சோசலிச புரட்சி ஒன்றே, சகல ஒடுக்குமுறைகளில் இருந்தும் இந்திய மக்களை விடுதலை பெறச் செய்யும் என்றார் பகத்சிங். லெனின் பிறந்தநாளுக்கு சிறையில் இருந்து ரசியாவிற்கு வாழ்த்துத் தந்தி அனுப்பினார் பகத்சிங்.

வெள்ளைக்காரனின் காலை நக்கி அவனிடம் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து, வெளியே வந்த ’வீர்’ சாவர்க்கரின் வாரிசுகளுக்கு, ஆங்கிலேயனின் சிம்ம சொப்பனமான பகத்சிங்கின் ஆதர்சன நாயகனான லெனினை எப்படிப் பிடிக்கும்?

இதோ லெனினின் சாதனைகள் – ரசியப் புரட்சி தோற்றுவித்த உலகளாவிய சாதனைகளை இந்தக் காணொளியில் காணுங்கள் …

 

 

பேருந்துக் கட்டண உயர்வு : தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி !

0

பயணச்சீட்டுக் கட்டணம் இரு மடங்காக உயர்ந்திருப்பதால், கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழை பெற்றோர் பெண் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
–  பிரியா, கல்லூரி மாணவி, உத்திரமேரூர்.

பா.ஜ.க.வின் தயவிலும் பாதுகாப்பிலும் இருந்துகொண்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக ஆட்சி நடத்திவரும் எடப்பாடி கும்பல் அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வு பகிரங்கமான பகற்கொள்ளை என்பதையும் தாண்டி, தமிழகத்தை ஓர் இருண்ட காலத்திற்குள் இழுத்துச் செல்லும் சதி என்பதைக் கல்லூரி மாணவி பிரியாவின் எதிர்வினை அம்பலப்படுத்துகிறது.

3,600 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ள இக்கட்டணக் கொள்ளை ஏழை மாணவர்களின் படிப்புக்கு வேட்டு வைப்பதோடு, ஏழைகளின் அன்றாடப் பிழைப்பையே சூறையாடக்கூடிய அபாயத்தையும் கொண்டிருக்கிறது. பூ, கீரை, காய்கறிகளை வாங்கி வந்து விற்கும் ஏழைத் தாய்மார்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் ஏழை, ஆதரவற்ற பெண்கள், சித்தாள் வேலைக்குச் சென்று திரும்பும் கூலிகள், கடைச் சிப்பந்திகள் – இப்படியான பல தரப்பட்ட தொழிலாளர்களின் வருமானத்தில், கூலியில் ஏறத்தாழ 30 சதவீதம் வரை பேருந்துக் கட்டணத்திற்கே அழுது தொலைக்க வேண்டிய நிலை, இக்கட்டண உயர்வால் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் வேலைக்குச் செல்வோரில் 23.3 சதவீதம் பேர் அரசுப் பேருந்தை மட்டுமே நம்பியிருப்பதாக 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களுள் ஆகப் பெரும்பாலோர் கூலித் தொழிலாளர்களாக இருப்பது உறுதி. கிடைக்கும் கூலியில் 30 சதவீதத்தைப் பேருந்துக் கட்டணத்திற்கே செலவழித்துவிட்டால், இந்த ஏழைகளால் எப்படி வாழ்க்கை நடத்த முடியும் ?  விலைவாசி உயர்வைச் சமாளிக்க உணவுச் செலவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டு வாழும் இம்மனிதர்களிடம் இனியும் இழப்பதற்கு என்ன இருக்க முடியும் ?

டீசல் விலை உயர்ந்த அளவிற்குப் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், இது காறும் பேருந்துகளை இயக்கி வந்ததால்தான் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நட்டத்தில் சிக்கிக் கொண்டுவிட்டதாகப் பொருளாதாரக் கணக்கொன்றை எடுத்துவிட்டு, இக்கட்டணக் கொள்ளையை நியாயப்படுத்துகிறது சட்டவிரோத எடப்பாடி அரசு. அதற்கு பொன்னார் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பொருளாதார நிபுணர்கள் என்ற போர்வையில் உலவிவரும் மக்கள் விரோதிகளும் ஒத்தூதி வருகிறார்கள்.

இந்தக் கணக்கு பொய்யும் மோசடியும் நிறைந்தது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்த உண்மை. அது மட்டுமல்ல, ஆற்று மணலையும், தாது மணலையும், கிரானைட் கற்களையும் கொள்ளையடித்த அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டம் போக்குவரத்துக் கழகங்களையும் விட்டுவைக்கவில்லை என்பதும் தமிழக மக்கள் அறிந்து வைத்திருக்கும் உண்மை. அதனால்தான் எடப்பாடி கும்பலின் வாதத்தைத் தெருநாய்கூடச் சீந்தவில்லை.

ஏதோ மலிவான கட்டணத்தில் அரசு பேருந்துகளை இயக்கி வந்ததாக எடப்பாடி அரசு அளித்துள்ள விளக்கம் ஒரு வடிகட்டிய பொய். அல்ட்ரா டீலக்ஸ் பஸ், பாயிண்டு டு பாயிண்டு பஸ், எக்ஸ்பிரஸ் பஸ், ஒன் டு ஒன், ஒன் டு த்ரீ சர்வீஸ் என விதவிதமான பெயர்களில் இயக்கப்படும் பேருந்துகளிலும், திருவிழா மற்றும் தொடர்விடுமுறை நாட்களையொட்டி இயக்கப்படும் பேருந்துகளிலும் வழமையான கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மறைமுகக் கட்டண உயர்வு ஏற்கெனவே அமலில் இருந்துவருகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 22,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன; அப்பேருந்துளில் 2 கோடி பேருக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இந்த 22,000 பேருந்துகளில் 70 சதவீதத்துக்கும் மேலான பேருந்துகள் காயலாங்கடைக்குப் போக வேண்டிய நிலையில் உள்ளன என்றால், 2 கோடி பேர் தரும் கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம் எங்கே போனது? இதோடு, தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்களைத் தராமல், 7,000 கோடி ரூபாயை அவர்களிடமிருந்து போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் சுருட்டிக் கொண்டுள்ளன.

இந்தப் பணமெல்லாம் எங்கே போய்ச் சேர்ந்திருக்கிறது, எப்படி மாயமானது என்பதும், எந்தெந்த வழிகளிலெல்லாம் போக்குவரத்துக் கழகங்களில் ஊழல், திருட்டு நடந்திருக்கிறது என்பதும் பொதுமக்களைவிடத் தொழிற்சங்கத் தலைமைக்குத்தான் நுணுக்கமாகத் தெரிந்திருக்கும். பேருந்துக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் பள்ளி – கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் தெருவில் இறங்கிப் போராடியபோது, போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழலையும் கொள்ளையையும் விரிவாக மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்துச்சென்று போராட்டத்தை வலுப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு சட்டவிரோத ஆட்சிக்குப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவை எடுக்கும் அதிகாரம் கிடையாது எனப் பொதுமக்களிடம் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், தி.மு.க. மற்றும் இடதுசாரி தொழிற்சங்கத் தலைமையோ வெறும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டன. இத்தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களோ சட்டவிரோத எடப்பாடி அரசு ஏவிவிட்ட கட்டண உயர்வைப் பொதுமக்களிடமிருந்து பிடுங்குவதில் எவ்வித தயவுதாட்சண்யமும் காட்டவில்லை. உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் கொடுக்காமல் கலகத்தில் இறங்கும்படி புரட்சிகர அமைப்புகள் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தபோது,  இந்தக் கட்டண உயர்வை முன்பே, படிப்படியாக அமல்படுத்தியிருக்க வேண்டும் என எடப்பாடி அரசின் குரலில் பேசி, இக்கட்டணக் கொள்ளையைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நியாயப்படுத்தினார்கள். பொங்கலுக்கு முன்பாகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து நின்ற தமிழக மக்களுக்கு இடதுசாரி மற்றும் தி.மு.க., தொழிற்சங்கங்களும் போக்குவரத்துத் தொழிலாளர்களும் செய்திருக்கும் கைம்மாறு இது.

இத்தகைய அநீதியைக் குற்ற உணர்வின்றிச் செய்யத் துணியும் அளவிற்குத் தொழிற்சங்கத் தலைமையிடமும் தொழிலாளர்களிடமும் சுயநல, பிழைப்புவாத தொழிற்சங்கவாதம் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. பொதுமக்களும் தொழிலாளர்களும் இணைந்து போராட உருவாகியிருந்த வாய்ப்பை இந்தத் தொழிற்சங்க பிழைப்புவாதம் ஒதுக்கித் தள்ளியதால் பலன் அடைந்தது எடப்பாடி கும்பல்தான். போராட்டம் வலுவடையாத சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, இக்கட்டண உயர்வை நிரந்தரமாக்குவதில் அது வெற்றியடைந்துவிட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் தழுவிய அளவில் ஓர் எழுச்சி நடைபெற்றதைப் போன்று, இக்கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை உருவாக்கியிருக்க முடியும். அந்தளவிற்குப் பேருந்து கட்டண உயர்விற்கு எதிராகத் தமிழக மக்களிடம் ஆத்திரமும் வெறுப்பும் சூல் கொண்டிருந்தது. மக்கள் எழுச்சியுறும் தருணங்களில் அவர்களுக்கு எதிராகத் தமது துப்பாக்கிச் சனியன்களைத் திருப்ப போலீசும், இராணுவமும் மறுத்திருப்பதை வரலாற்றில் கண்டிருக்கிறோம். போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைமையும், தொழிலாளர்களும் மக்களுடன் இணைந்து கட்டண உயர்வை ஏற்கமறுத்துப் பேருந்துகளை நிறுத்திக் கலகத்தில் இறங்கியிருக்க வேண்டும். அத்தகையதோர் ஐக்கியப்பட்ட போராட்டம் வெடித்திருந்தால், அது எடப்பாடி அரசை வீழ்த்தவல்ல ஒரு மக்கள் எழுச்சியாகவும் வளர்ந்திருக்கும். அத்தகையதொரு முன்மாதிரியான அரசியல் எழுச்சி உருவாகாமல் சிதைத்த பழிக்கு  போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைமையும், தொழிலாளி வர்க்கமும் பொறுப்பேற்க வேண்டும்.

ரஹீம்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

பொய்யிலே பிறந்த ராசா நீ செய்யும் உதவி லேசா !

2

எச்சு ராஜாவுக்கு எச்ச கச்ச நன்றி…!

காரைக்குடி சீதனமே
கடிவாய் மோகனமே
தேடினாலும் கிடைக்காத
தில்லுமுல்லு பொக்கிசமே
கழுவி கழுவி ஊத்தினாலும்
சளைக்காத ஜாதகமே,
எங்களாலேயே முடியாததை
எடுத்து செய்யும் கல் மனமே
என்னான்னு  சொல்லுவமே!

ஒரே நாளில்
ஒரே நூலில்
ஊரையே இழுத்துவிட்டாய்
பெரியாரையும், லெனினையும் பேசி, பேசி
நாட்டையே ஒன்ணு சேர்த்தாய்
நீ, நிறுத்தாமல் சொல்லனுமே
நிமிருது தமிழினமே!

பொய்யில் பிறந்த ராசா – நீ
செய்யும் உதவி லேசா
பேசாத நாளெல்லாம் வீண் தானே
பெரியாரின் பெருந்தொண்டன்   நீதானே,
ஒயாமல் உசுப்பிடுது,
உன் வாய் தானே!

ஆண்டாளுக்கு உறுமுனது
ஜீயர் வயிறை தாண்டவில்லை
பெரியாரை பேசுனது
தமிழகமே தாங்கவில்லை
நீ,
பிள்ளையார் சுழி போட்டால்
அது பெரியார் சுழியாய் மாறுது
வேற யாரும் தேவை இல்லை,
வெளங்கிடும் உன் வாயாலே
பி.ஜே.பி   நாறுது!

ஆயிரம் பேர்
ஆயிரம் சொல்லட்டும்
அப்படியே போ ராசா
நீ உதிர்க்கும் முத்துக்களால்
திராவிடமே திரளுதையா
மாஸ்சா!

– துரை. சண்முகம்

 

கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !

3
உஷா தம்பதியினர்.
கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்ற காவல் ஆய்வாளர் காமராஜ்

திருச்சி தெருவெறும்பூரில், ஒரு பெண்ணை கொடூரமாகக் கொன்றிருக்கிறது போலீசு. புதன்கிழமை 07-03-2018 அன்று திருச்சி திருவெறும்பூர் பகுதியில் போக்குவரத்து போலீசு ஆய்வாளர் காமராஜ் தனது பரிவாரங்களோடு வாகன சோதனை என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இரவு 7.30 மணியளவில் தஞ்சை மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ராஜா (தர்மராஜ்) உஷா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

ஹெல்மெட் போடாமல் வந்த ராஜா வண்டியை திருவெறும்பூர் அருகேயே நிறுத்தியுள்ளார் காமராஜ். வண்டியை நிறுத்தி நின்று கொண்டிருந்த ராஜா மனைவியுடன் வந்திருந்ததால், மற்றொரு காவலர் அவரைக் கிளம்பச் சொல்லி இருக்கிறார். அதனை ஒட்டி அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் ராஜா. பிற வாகனங்களில் வசூலை முடித்துவிட்டு வந்த காமராஜ், ராஜா இல்லாததைக் கண்டு உடனடியாக போலீசு ஜீப்பை எடுத்துக் கொண்டு ராஜாவைப் பிடிக்க கிளம்பினார். தனது மனைவி உஷாவுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜாவை வாகனத்தோடு எட்டி உதைத்துள்ளார். இதில் நிலைகுலைந்து ராஜா, உஷா இருவரும் கீழே விழுந்தனர். இதில் கர்ப்பிணிப் பெண் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  ராஜா பலத்த காயமடைந்தார்.

இச்சம்பவத்தை விபத்து போல காட்டுவதற்காகவே ஊடகங்களுக்கு போலீசு தெரிவித்த செய்தியில் வேன் ஏறி உஷா இறந்ததாக செய்தி வெளியிட்டது.
நடந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் சுமார் 3000-க்கும் அதிகமானோர் சாலையில் குவிந்தனர்.

வசூல் ஆய்வாளர் காமராஜைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசு மக்களைக் கலைந்து போகுமாறு எச்சரித்துள்ளது. போக மறுத்த மக்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தியிருக்கிறது கிரிமினல் போலீசு. இத்தாக்குதலை ஏவிவிட்ட திருச்சி போலீசு கமிஷனர் அமல்ராஜ், யார் என்று நினைவிருக்கிறதா ?

திருச்சி போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ்

கோவையில் கடந்த 2016-ம் ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த ரவுடி சசிக்குமாரின் மரணத்தையொட்டி இந்து முன்னணிக் கும்பலுக்கு கலவரம் நடத்த ஏதுவாக பேரணிக்கு அனுமதி கொடுத்தவர்தான் இந்த அமல்ராஜ். அது  மட்டுமல்லாது கலவரம் நடத்தப்பட்டபோதும், பிரியாணி அண்டாக்கள் திருடப்பட்ட போதும், போலீசை வேடிக்கை பார்க்க வைத்தவர். கலவரப் பிரியரான அமல்ராஜிற்கு மக்களிடம் பேசப் பொறுமை இருக்குமா என்ன? அதன் காரணமாகவே தடியடி நடத்தி மக்களைக் கலைத்திருக்கிறது போலீசு.

இச்சம்பவம் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக பரவிய பின்னர் வேறு வழியின்றி ஆய்வாளர் காமராஜைக் கைது செய்திருக்கிறது போலீசு. இது திருச்சிக்கோ, தமிழகத்துக்கோ முதல் சம்பவம் அல்ல.

சிறிது நாட்களுக்கு முன்னர், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் வாகனச் சோதனையில் இலஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த போலீசுக் கிரிமினல்களை வீடியோ எடுத்தவரை மிகவும் மோசமாகப் பேசி அவரி தனியாக இழுத்துச் சென்று இரும்புப் பைப் வைத்து அடித்திருக்கிறது போலீசு. இதனால் மனமுடைந்த அந்த டிரைவர், அதே இடத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

சிறைக்கு ஒய்யாரமாகப் போகும் கொலைகார காவல் ஆய்வாளர் காமராஜ்

திருச்சி, சென்னை கே.கே. நகர் என பல்வேறு சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இது போன்று போலீசு இலஞ்சம் வாங்கிப் பொறுக்கித் தின்ன ஏற்பாடு செய்து கொடுக்கும் வேலையைதான் கிருபாகரன் போன்ற நீதிபதிகள் செய்து வருகின்றனர். அவரவர் நிலைமையைப் பொறுத்து அல்லாமல் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், ஒரிஜினல் லைசன்ஸ் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற புதுப்புது உத்தரவுகளைத் தலைமயிரை உதிர்ப்பது போல அவ்வப்போது உதிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த உத்தரவுகளை வைத்துக் கொண்டு போலீசு கும்பல் எந்த வண்டியை நிறுத்தினாலும், பணம் பிடுங்கித் தின்னலாம் என்ற நிலையில் நடுரோட்டில் நின்று அராஜகம் செய்கிறது. பணம் கொடுக்காதவனையும், நிற்காமல் செல்பவர்களையும், இரையை நோக்கிப் பாயும் ஓநாய் போல கொலைவெறியோடு அணுகுகிறது கிரிமினல் போலீசு.

கட்டற்ற அதிகாரம் கைகளில் இருக்கும் திமிரில்தான் இந்த போலீசு கும்பல், மக்களின் உயிரை மயிரினும் கீழாக மதிக்கிறது. போலீசின் கட்டற்ற அதிகாரத்தைப் பறித்து மக்கள் கையில் அதிகாரத்தைக் அளிக்கும் போதுதான் ஜனநாயக முறையில் மக்கள் தாங்களாகவே விதிகளைப் பின்பற்றுவார்கள். அங்கிருந்துதான் சமூக ஒழுக்கம் பிறக்க முடியுமேயன்றி போலீசு கையிலிருக்கும் லத்திக் கம்பிலிருந்து ஒரு போதும் பிறக்க முடியாது.

********

திருச்சியில் போலீசு தாக்கி கர்பிணிப் பெண் படுகொலை ! எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் !

மக்கள் எதிரிகளான காக்கிச்சட்டை ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்ட தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 94451 12675.

__________

லஞ்சம் – வழிப்பறி – படுகொலை… நேற்று… எடத்தெரு சரஸ்வதி… இன்று தஞ்சை உஷா…

கிரிமினல் மயமாகிவரும் போலீசுக்கு எதிராக தமிழக மக்களே அணிதிரள்வோம் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

 

திருச்சியில் மோடி, எச்.ராஜா படம் எரிப்பு – ம.க.இ.க போராட்டம் !

1

பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என்று பேசிய எச்.ராஜா-வை கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் 07.03.2018 புதன் கிழமை அன்று திருச்சியில் மோடி, எச்.ராஜா உருவப் படங்களும் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார், இரண்டாவது தலைவர் கோல்வால்கர் படங்களும் எரிக்கப்பட்டன.இந்த போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
திருச்சி.

*****

ஞ்சையில் 07.03.2018 அன்று பெரியார் – லெனினை உயர்த்திப் பிடிப்போம் ! பார்ப்பனப் பாசிஸ்டு கோல்வால்கரைக் கொளுத்துவோம் ! என்ற முழக்கத்தின் கீழ் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் மற்றும் பெரியார் சிலையை இடிக்கச்சொன்ன எச்.ராஜா உருவப்படத்தை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.

 

காரைக்குடி எச்சல ! நீ வாங்குனது பத்தல !

4

திரிபுரா மாநிலத்தில், உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் லெனினின் சிலையை, ஏகாதிபத்தியங்களின் அடிமைச் சேவகம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் சில நாட்களுக்கு முன்னர் உடைத்தது. இதே போல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என திமிராக பேசிய எச்.ராஜா பின்னர் அதை நீக்கிவிட்டு அதை தான் வெளியிடவில்லை என நாடகமாடுகிறார்..

தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் எச்.ராஜாவையும், பா.ஜ.கவையும் கண்டித்து வருகின்றனர். அந்தப் போராட்டத்தில் இணைகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழு தோழர்களின் “காரைக்குடி எச்சல, நீ வாங்குனது பத்தலை” முழக்கப் பாடல்.

முழக்க வரிகள்

காரைக்குடி எச்சல..
நீ வாங்குனது பத்தல ..
உன் காவிக் கொடி பறக்காது ..
எங்க தமிழ்நாட்டுல ..

(காரைக்குடி எச்சல)

எச்சல .. எச்சல ..
காரைக்குடி எச்சில…
பத்தல .. பத்தல ..
நீ வாங்குனது பத்தல …

(எச்சல.. எச்சல..)

காவிக் கொடி பறக்காது …
எங்க தமிழ் நாட்டுல …
எங்க தமிழ் நாட்டுல …
எங்க தமிழ் நாட்டுல ..