Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 485

திருச்சி போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் ! மக்களிடம் கையெழுத்தியக்கம் !

0

திருச்சியில் போலீசு ராஜ்ஜியத்திற்கெதிராக கையெழுத்தியக்கம் !

மிழகம் முழுவதும் வாகன சோதனை எனும் போலீசாரின் அத்துமீறலால் பொதுமக்கள் சொல்லிமாளாத்துயரத்திற்கு ஆளாகின்றனர். நள்ளிரவில் கூட குடும்பத்துடன் வருபவர்கள், அவசர அவசரமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகத்துக்கு செல்பவர்கள் என பொதுமக்களை வழிமறித்து இடையூறு செய்கின்றனர்.

மேலும், சந்துக்கு சந்து நின்று கொண்டு வழிப்பறி செய்யும் வகையில் நடந்து கொள்வதுடன் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் வாகன சோதனையின் போது எடத்தெருவைச் சேர்ந்த 25 -வது வார்டு திமுக வட்டச் செயலர் முகேஷ்குமாரின் மனைவி சரஸ்வதி மீது பைக் மோதியதில் பின் தலையில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 26.02.18 அன்று மரணமடைந்தார்.

காவல்துறையினர் ஏற்படுத்தும் விபத்துக்களையும், உயிழப்புகளையும் மற்றும் பொதுமக்களிடம் அத்துமீறி வழிப்பறி செய்வதையும் உடனடியாக நிறுத்தக்கோரி பொதுமக்கள் மத்தியில் 27.02.18 காலை 11 மணியளவில் புத்தூர் நான்கு ரோடு சிக்னலில் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் குமார் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

பொதுமக்கள் உற்சாகமாக கையெழுத்திட்டதுடன், உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும், இதற்க்கெதிராக போராட்டம் நடந்தால் நாங்கள் வருவோம் என்றனர். ஒருவர் தன் கையெழுத்துக்குக் கீழ் “கொள்ளைக்காரனை பிடி அப்பாவி மக்களை தொந்தரவு பண்ணாதே” என எழுதிச் சென்றார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157

 

ஐ.டி துறையில் பவுன்சர்கள் !

1

.டி துறை வேலைன்னா வெளிநாட்டு பயணம், 6 இலக்க சம்பளம், மேட்டுக்குடி வாழ்க்கைன்னுதான் கேள்விப்பட்டிருக்கிறார், ஆனந்த். முதல் முறையாக ஐ.டி கம்பெனி வேலைன்னா “பவுன்சர்களும்” உண்டுன்னு அவருக்கு தெரிய வந்தது.

ஹைதராபாதில் உள்ள வெரிசான் நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்த ஆனந்த், டிசம்பர் மாதம் 12 -ம் தேதி வழக்கம் போலத்தான் வேலைக்குப் போனார். நிறுவனத்துக்குள் நுழைந்ததும், அவரது பொருட்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு தனது அலுவலகத்தில் சந்திக்குமாறு எச்.ஆர் அதிகாரி சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே காக்னிசன்ட், விப்ரோ, டெக் மகிந்த்ரா, ஐ.பி.எம் என்று பல ஐ.டி நிறுவனங்களில் ஊழியர்களை கட்டாய ராஜினாமா செய்ய வைத்து ஆட்குறைப்பு நடந்து வருவது பற்றிய செய்திகளை படித்திருந்த ஆனந்த், நமக்கும் ஏதோ நடக்கப் போகிறது என்று ஊகித்துக் கொண்டார். “என்ன ஆனாலும் ராஜினாமா செய்யக் கூடாது,” என்று நினைத்துக் கொண்டு, இருந்தாலும் “எச்.ஆர் என்னதான் சொல்றான்னு பார்க்கலாம்” என எச்.ஆர் அறைக்குள் சென்றிருக்கிறார்.

அங்கு போன பிறகுதான் தெரிந்தது, ‘ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மறுப்பதற்கெல்லாம் இடம் இல்லை’ என்று. எச்.ஆர் அதிகாரியுடன் ஒரு “பவுன்சரும்”, மனோதத்துவ ஆலோசகரும் உட்கார்ந்திருந்தார்கள்.

ராஜினாமா செய்யப் போவதாக எழுதப்பட்ட தாளில் கையெழுத்திட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறார்கள். தாளில் என்ன எழுதியிருக்கிறது என்று முழுதாக படித்துப் பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை. “கொஞ்சம் நேரம் வேணும். யோசிச்சுதான் முடிவு எடுக்கணும்” என்று கையெழுத்திட மறுத்து விட்டு எழுந்திருக்க முயற்சித்திருக்கிறார் ஆனந்த். “பவுன்சர்” அவரை எழுந்திருக்க விடாமல் வலுக்கட்டாயமாக நாற்காலியில் உட்காரச் செய்து தோளை பிடித்து அழுத்தியிருக்கிறார்.

“வீணா டென்ஷன் ஆனா உன்னோட உடலுக்குத்தான் நல்லது இல்ல” என்று கடன் வசூலிக்கும் மாஃபியா தலைவரை போல ‘அறிவுரை’ கூறியிருக்கிறார் மனோதத்துவ ஆலோசகர். அதாவது, டென்சன் ஆகாம கையெழுத்து போட்டாதான் உருப்படியா வெளிய போகலாம் என்பது அதில் அடங்கியிருக்கும் மிரட்டல்.

வேறு வழியில்லாமல் கையெழுத்து போட்ட பிறகு ஆனந்தை கையோடு அழைத்துக் கொண்டு போய் கட்டிடத்துக்கு வெளியில் கார் பார்க்கிங்-கில் விட்டு இடத்தை காலி செய்யும்படி அறிவுறுத்தியிருக்கின்றனர்.

ஹைதராபாதிலும், சென்னையிலும், பெங்களூருவிலும் 993 ஊழியர்கள் இப்படி வேலையை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 500 பேர் சென்னையிலும், 200 பேர் ஹைதராபாதிலும் பணி புரிபவர்கள். சென்னை வளாகத்தில் எச்.ஆர், பவுன்சர், மனோதத்துவ ஆலோசகர் அடங்கிய 50 குழுக்கள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

“பவுன்சர்கள்” என்பவர்கள் நைட் கிளப் அல்லது மதுபான விடுதியில் அல்லது விபச்சார விடுதிகளில் நிர்வாகத்தின் விதிகளுக்கு மாறாக நடந்து கொள்ளும் அல்லது நிர்வாகத்துக்கு ஒப்புதல் இல்லாத வாடிக்கையாளர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியில் எறிவதற்காக அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்கள். முதலாளிகளை பொறுத்தவரை மதுபான விடுதியாக இருந்தாலும் சரி, தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, ஐ.டி நிறுவனமாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றுமே மூலதனம் போட்டு லாபம் சம்பாதிப்பதற்கான இடங்கள். அதற்கு இடையூறாக வரும் எதையும் குண்டு கட்டாக தூக்கி எறிவதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை.

தமது மிரட்டலுக்கும், ஏமாற்று வார்த்தைகளுக்கும் மயங்கி எந்த எதிர்ப்பும் காட்டாமல் சுரண்டலுக்கு தொழிலாளர்கள் அடிபணிவது வரை முதலாளிகளின் உண்மை முகம் தெரிவதில்லை. தமது லாப இலக்கை எட்டுவதற்காக தொழிலாளர்களை சுரண்டுவதற்கும், வேலையை விட்டு தூக்கி எறிவதற்கும் தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது என்று தெரிந்தவுடன் முதலாளிகள் தமது உண்மை முகத்தை காட்டி விடுகின்றனர்.

குறிப்பாக தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்து தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் துணியும் போது அவர்களது குரல்வளையை நெரிக்கத் துவங்குகின்றனர்.

தொழிலாளர்களை பவுன்சர்கள் மூலம் அடக்குவது என்பது இந்தியத் தொழில்துறையில் முதன்முறையாக நடக்கவில்லை. டெல்லி மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் 2012 -ம் ஆண்டில் நடந்த வன்முறையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

நிர்வாகத்தின் கைக்கூலி சங்கத்துக்கு மாற்றாக தொழிலாளர்களை உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கத்தை அமைப்பதற்காக தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக மாருதி நிர்வாகம் தனது பணபலத்தையும், நிர்வாக அமைப்பையும், செக்யூரிட்டி என்ற பெயரில் கூலிப்படைகளையும், கூடவே போலீசையும் களத்தில் இறக்கியது.

பெயரளவுக்கு ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து அதில் வன்முறையை ஏவி விட்டது, நிர்வாகம். இந்த வன்முறையின் போது எச்.ஆர் பொது மேலாளர் அவனிஷ்குமார் தேவ் கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். 148 தொழிலாளர்கள் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 117 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சங்க நிர்வாகிகள் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும், 18 பேருக்கு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை வேரோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் மாருதி நிர்வாகத் தெளிவாக இருந்தது. அரியானா மாநில அரசும், நீதிமன்றமும் மாருதி நிர்வாகத்தின் கூட்டாளியாகவே செயல்பட்டன.

இதே போல, கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிர்வாகம் 2009 -ம் ஆண்டு செப்டம்பர் 21 -ம் தேதி அடக்குமுறைக்கு எதிராக போராடிய 42 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய உணர்வுபூர்வமான போராட்டத்தை ஒடுக்குவதற்கு நிர்வாகம் கூலிப்படையை ஏவியதில் எச்.ஆர் அதிகாரி ராய் ஜார்ஜ் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து போனார்.

இந்த வழக்கிலும் 27 தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தொழிற்சங்க முன்னோடிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நிர்வாகத்மான் கொலை வழக்கை சோடித்தது என்பது அம்பலமான போதிலும், விடுவிக்கப்பட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு போயிருக்கிறது, நிர்வாகம்.

தொழிற்சங்கம் என்று வந்தாலே முதலாளிகளுக்கும் அவர்களது நீதிமன்றங்களுக்கும் கொலை வெறி ஏற்படுகிறது. இந்த கொலைவெறி முதலாளித்துவத்தின் இரத்தத்திலேயே இருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் பல ஆண்டுகளாக சட்ட ரீதியாகவும், குண்டர் படையை பயன்படுத்தியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதை தடுத்து வந்தது. 1937 டிசம்பர் மாதம் ஃபோர்ட் வாக்னர் சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொண்டதாக கண்டறியப்பட்டு நிர்வாகம் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் தலையிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

அமெரிக்காவின் பொருளாதார பெருமந்தத்தின் உச்சத்தில் டெட்ராய்ட் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்தனர். அதே நேரம் ஹென்ரி ஃபோர்ட் உலகின் முதல் பணக்காரராக இருந்தார். 1932 -ம் ஆண்டு மார்ச் 7 -ம் தேதி டெட்ராய்ட் வேலை இல்லாதோர் சங்கம் 5,000 தொழிலாளர்களையும், இளைஞர்களையும் பேரணியாக நடத்திச் சென்று ஃபோர்ட் தொழிற்சாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பேரணியை போலீசும், ஃபோர்டின் தனியார் கூலிப் படைகளும் தாக்கியதில். 5 தொழிலாளர்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர்.

தொழிற்சங்கத்தை அனுமதிக்காமல் இருக்க வன்முறையை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என்பதில் ஹென்ரி ஃபோர்ட் தெளிவாக இருந்தார். 1937 மே மாதம் 26 -ம் தேதி யுனைட்டட் ஆட்டோ வொர்க்கர் தலைவர் வால்டர் ராவ்தரும் பிற தொழிற்சங்க நிர்வாகிகளும் கூலிப்படைகளால் தாக்கப்பட்டனர்.

இத்தகைய பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான் மாருதிகளும், பிரிக்கால்களும், வெரிசான்களும். ஐ.டி சேவை அயலகப் பணிக்கு அமெரிக்க / ஐரோப்பிய சம்பளத்தை விட குறைந்த சம்பளத்தில் இந்திய ஊழியர்களை அமர்த்தி லாபம் சம்பாதித்தன இந்திய ஐ.டி சேவை நிறுவனங்கள். இப்போது அந்த சாதகம் குறையத் தொடங்கி தமது லாபம் பாதிக்கப்படும் போது ஊழியர்களை தூக்கி எறிய முயற்சிக்கின்றன. அதை எதிர்த்து தமது சட்டப்படியான உரிமைகளுக்காக தொழிலாளர்கள் போராட ஆரம்பிக்கும் போது முதலாளிகள் “பவுன்சர்களை” களம் இறக்குகின்றனர்.

நேற்று ஃபோர்ட், மாருதி, பிரிக்கால்; இன்று வெரிசான் என்று அடுத்தடுத்து தொடரும் முதலாளிகளின் பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்க ஐ.டி ஊழியர்கள் தொழிலாளி வர்க்கமாக இணைந்து முதலாளித்துவ சதியை முறியடிக்க அணிதிரள வேண்டும்.

– குமார்

நன்றி: புதிய தொழிலாளி, பிப்ரவரி 2018
NEW DEMOCRATIC LABOUR FRONT I.T. Employees Wing

நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது ?

7
பாஜகவின் ஆசியோடு தப்பிச் சென்ற ‘தொழிலதிபர்கள்’

சென்னை மாநகரத்தில் 2012 -ம் ஆண்டு 5 பேர் கொண்ட வடநாட்டு கும்பல் இரண்டு வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்துச் சென்றது. முதலாவதாக நான்கு பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் ஜனவரி 23 அன்று பெருங்குடியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளையில் 19 லட்சம் ரூபாயை துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்தது. சென்னை மாநகர போலீசார் இந்தக்
கொள்ளைக் கும்பலை விரைவாக பிடிக்க 30 தனிப்படைகளை அமைத்தனர்.

மீண்டும் பிப்ரவரி 20 அன்று கீழ்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நான்கு பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் 14 லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்தது. அதைத் தொடர்ந்து இந்தக் கும்பல் வேளச்சேரியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சென்னை போலீசார் பிப்ரவரி 23 அன்று அவர்கள் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்து என்கவுண்டர் நடத்தி 5 நபர்களை சுட்டுக் கொன்றனர். வங்கிக் கொள்ளையர்களை உயிரோடு கைது செய்யாமல் போலீஸ் முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்து விட்டது எனவும், துப்பாக்கிச் சண்டை என்பது போலீசார் நடத்திய நாடகம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தினர். என்றாலும் 33 லட்சம் ரூபாய் வங்கிப் பணத்தை கொள்ளை அடித்த அந்தக் கும்பலை நமது போலீசார் விரைவாக பிடித்து 14 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டதை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

*****

மீபத்தில் பஞ்சாப் தேசிய வங்கியில் நீரவ் மோடி என்பவர் தலைமையிலான கும்பல் 11,500 கோடி ரூபாய் ஏமாற்றி விட்ட விபரங்கள் சூடான செய்தியாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிதி மோசடியை விஜய் மல்லையாவுடன் ஒப்பிட்டும் பெரும் பணக்காரர்கள் வங்கிகளை ஏமாற்றுவதாகவும் பல ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. நமது வினவு தளத்தில் இந்த மோசடி எப்படி நடந்தது என்று விரிவான கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

மோசடிகள் பலவிதம். மல்லையா, ரோட்டோமேக் (பான்பராக்) கோத்தாரி போன்ற முதலாளிகள் வங்கிகளுக்கு ஏற்படுத்திய இழப்புக்கும், நீரவ் மோடி கும்பல் செய்த மோசடிக்கும் தன்மையில் வேறுபாடுகள் உள்ளன. ஒரு நிதி நிறுவனத்திற்கோ, வங்கிக்கோ நிதி அபாயம் என்பது 3 வழிகளில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த மூன்று முறைகளை ஆராய்ந்தால் இந்த வேறுபாடு உங்களுக்கு தெளிவாக புரியும்.

சந்தை அபாயம்

நிதி நிறுவனங்களில் முதலாவதும் பிரதானதுமான அபாயம் சந்தை அபாயம் (market risk) என்பதாகும். நாம் பல விளம்பரங்களில் இந்த வாசகங்களை பார்த்து இருப்போம் “உங்களுடைய முதலீடானது சந்தை அபாயத்திற்கு உட்படுத்தப்பட்டது” என்பது சந்தை அபாயம் பற்றியது ஆகும்.

எடுத்துக் காட்டாக நாட்டில் நிலவும் பணமதிப்பு மாறுவதால் ரிசர்வ் வங்கி வட்டி வீதங்களை மாற்றலாம்; அதன் மூலம் வங்கி/நிதி நிறுவனம் முதலீடு செய்த அரசு கடன் பத்திரங்களின் விலை குறைந்து இழப்பு ஏற்படலாம். வங்கி பங்குச் சந்தையில் அல்லது ஊக வணிகத்தில் முதலீடு செய்திருந்தால் பங்குகள் அல்லது ஊக வணிக பத்திரங்களின் மதிப்பு ஏறி இறங்கலாம். இவற்றை சந்தை அபாயம் (market risk) என்று குறிப்பிடுகிறோம்.

இரண்டாவது, கடன் கட்டும் அபாயம் (credit risk) என்பதாகும். கடன் வாங்கியவர் கடனை கட்ட முடியாமல் போகும் அபாயம். உதாரணமாக, வீட்டுக் கடன் வாங்கிய ஐ.டி ஊழியருக்கு வேலை போய் விட்டால் கடன் கட்ட முடியாது. கல்விக் கடன் வாங்கிய மாணவருக்கு வேலை கிடைக்கா விட்டால் கடன் கட்ட முடியாது. வணிகக் கடன் வாங்கிய முதலாளியின் தொழில் நொடித்து போய் விட்டால் கடன் கட்ட முடியாது.

மல்லையா போன்ற முதலாளிகள் வங்கிக் கடனிற்கான ஈடாக தமது சொத்துக்களையோ, பங்குகளையோ (மல்லையாவின் விஷயத்தில் கிங் ஃபிஷர் பிராண்டையும் சொத்தாக காட்டியிருக்கிறார்) வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெறுகிறார்கள். தொழில் நஷ்டம் காரணமாகவோ, ஊதாரித்தனமாக செலவழித்தது காரணமாகவோ தொழில் நொடித்து போனால் வங்கிக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு ஏற்படும் போது வங்கி தன்னிடம் ஈடாக வைக்கப்பட்ட சொத்தினை விற்று தனது கடன் பணத்தை மீட்டுக் கொள்ளலாம். இந்த முறையில் இந்திய தவங்கிகளுக்கு 9 லட்சம் கோடி வரை வாராக்கடன் உள்ளது.

சந்தை அபாயம், கடன் கட்டுவதில் அபாயம் என்ற இந்த இரண்டு அபாயங்களையும் தனிப்பட்ட வங்கியின் தவறுகள் என்று நேரடியாக குற்றம் கூற முடியாது. ஒட்டுமொத்த வங்கித் துறையின் செயல்பாடே சந்தை அபாயத்தையும், கடன் கட்டும் திறன் அபாயத்தையும் உள்ளடக்கி உள்ளது. எனவே, எவ்வளவுதான் வங்கி எச்சரிக்கையாக இருந்தாலும், வங்கி செயல்பாட்டு முறையாலும் முதலாளித்துவ முறையின் உள்ளார்ந்த அராஜகத் தன்மையாலும் வங்கியால் இந்த இரண்டு அபாயத்தில் இருந்தும் தப்பவே முடியாது.

ஆனால் நீரவ் மோடி ஏற்படுத்தி இருக்கின்ற நட்டமானது மேற்கூறிய இரண்டு அபாயங்களால் ஏற்பட்டது இல்லை. ஒரு வங்கியூ நடத்தும் போது அதன் செயல்பாட்டு முறைகளில் இருக்கும்
ஓட்டைகளினாலோ, பாதுகாப்பு குறைபாடுகளாலோ அபாயங்கள் ஏற்படலாம். அந்த அபாயம் செயல்பாட்டு அபாயம் (operational risk) என்று அழைக்கப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் ஒரு செயல்பாட்டு அபாயம் ஆகும். வங்கியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த சில ஓட்டைகளை கண்டுபிடித்து கொள்ளைக் கும்பல் கைவரிசையை காட்டியது. அதே போல நீரவ் மோடி விவகாரத்தில் சில வங்கி ஊழியர்கள் வங்கி நடைமுறைகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நீரவ் மோடி கும்பல் பஞ்சாப் தேசிய வங்கியின் பொறுப்பில் வெளிநாட்டில் கடன் பெறுவதற்கு வசதி செய்து கொடுத்துள்ளனர். அதாவது நீரவ் மோடியின் கடனிற்கு பஞ்சாப் நேசனல் வங்கி உத்திரவாதம் (surety) தருவதற்கு இவர்கள் உதவியுள்ளனர். இதனால் வங்கிக்கும், நாட்டிற்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த நட்டம் நீரவ் மோடியால் மட்டும் வந்தது அல்ல. வங்கிக் கொள்ளையர்களை போல வங்கியின் நடைமுறையில் இருந்த ஓட்டையை பயன்படுத்தி கன்னமிட்டு நீரவ் மோடி கும்பல் திருடியிருக்கிறது. அதற்கு உள்ளிருந்து உளவு சொல்பவர்களாக வங்கி ஊழியர்கள் சிலர் செயல்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளை பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்திருக்கிறது. வங்கி ஊழியர்கள் தமக்கு நீரவ் மோடி கும்பல் கொடுத்த கையூட்டுக்காக இதைச் செய்திருக்கின்றனர்.

இந்த மூன்று வகை அபாயங்களை புரிந்து கொள்ள அமெரிக்காவில் ஏற்பட்ட சப்-பிரைம் வீட்டுக் கடன் நெருக்கடியை எடுத்துக் கொள்ளலாம். அங்கு கடன் கட்டும் அளவு போதுமான வருமானம் இல்லாத தரப்பினருக்கு (இதைத்தான் சப் பிரைம் – அதாவது முதன்மையான வாடிக்கையாளர் அல்லாத – என்று குறிப்பிட்டனர்) வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கின. ரியல் எஸ்டேட் துறையில்
விலைகள் ஏறிக் கொண்டே போவதால், வீட்டை வாங்கியவர்கள் கடன் தவணை கட்டமுடியாவிட்டாலும், ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகு சந்தையில் அதிக விலைக்கு வீட்டை விற்று கடனை அடைத்து விடலாம் என்று ஆசை காட்டி இந்தக் கடன்கள் வழங்கப்பட்டன. அதாவது, வங்கிகள் வாங்குபவரின் கடனை திரும்பிக் கட்டும் திறனை (வருமானத்தை) நம்பியிருக்காமல் வீட்டின் சந்தை மதிப்பை நம்பி கடன் கொடுத்தனர்.

2007-ம் ஆண்டு வீட்டு விலை குமிழி வெடித்து அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதனால் வீடுகளின் விலை பெருமளவு குறைந்தது.

வீட்டுக் கடனாக வங்கியிடம் இருந்து 50 லட்சம் பெற்றிருக்கும் ஒரு சப்-பிரைம் கடனாளியை எடுத்துக் கொள்வோம். விலை வீழ்ச்சியால் அந்த வீட்டின் மதிப்பு 30 லட்சம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது மக்கள் (சப் பிரைம் கடன் கொடுக்கப்பட்டவர்கள்) 50 லட்சம் கடனை கட்டுவதற்கு வழியில்லாமல் கடன் கட்டுவதை நிறுத்தி வீட்டு வீடுகளை விட்டு
வெளியேறி விட்டனர். வங்கிகள் கடனுக்கு ஈடாக வீடுகளை கைப்பற்றினாலும் வீட்டை விற்று கடன் தொகையை திரும்பப் பெற முடியவில்லை. அதனால் அவை மிகப்பெரிய இழப்பினைச் சந்தித்தன.

இதில் வாடிக்கையாளர் மீதான கடன் கட்டுவதில் அபாயம் என்ற போர்வையில் சந்தை அபாயத்தை வைத்து வங்கிகள் சூதாடியிருந்தன. இத்தகைய “சப்-பிரைம்” கடன் வழங்கும் செயல்பாட்டை  கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வங்கிகளின் செயல்பாட்டு அபாயமும் இதில் அடங்கியிருந்தது.

பஞ்சாப் தேசிய வங்கிக்கு செயல்பாட்டு அபாயத்தினால் நீரவ் மோடி கும்பல் ஏற்படுத்தியுள்ள நட்டம் நமது நாடு வங்கிச் சேவையில் எவ்வளவு பின் தங்கி உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது போன்று செயல்பாட்டு அபாயத்தினால் உலகில் எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய ஊழல் நடந்தது கிடையாது. மோடி அரசு digital money என்றும் வங்கிச் சேவையை எல்லா விஷயங்களுக்கும்
பயன்படுத்தப் போவதாக கூறினாலும், நமது வங்கிகள் முதலாளிகளின் பல்வேறு வகைப்பட்ட ஊழல்களால் எவ்வளவு புரையோடி உள்ளன என்பதை நீரவ் மோடி கும்பல் அம்பலப்படுத்தியிருக்கிறது.

அதாவது மோடி அரசின் digital முகத்தை மோசமாக கிழித்திருக்கிறது நீரவ் மோடி – சோக்சி கும்பல். ஆனால், மோடி அரசும் பா.ஜ.க-வினரும் இந்த ஊழலுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பழி போடும் அரசியலை செய்கின்றனர். ஆனால், இத்தகைய ஜேப்படி நபருடன்தான் டாவோசில் நரேந்திர மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார், இன்னொரு ஜேப்படி பேர்வழியை சோக்சி பாய் என்று நெருக்கமாக குறிப்பிட்டார்.

நீரவ் மோடி பஞ்சாப் நேசனல் வங்கிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது நிறுவனத்தின் நற்பெயரை கெடுத்து விட்டதாக குறை கூறி இருக்கிறார். அவர்களின் செயலால் தனது நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சரிந்து விட்டதாகவும், அதனால்தான் தன்னால் கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இது ஒரு திருடன் திருட்டுக் கொடுத்தவனை கேலி செய்யும் நடவடிக்கை.

மேலும் இந்தக் குற்றச்சாட்டில் தனது சகோதரருக்கோ, மனைவிக்கோ, மாமாவிற்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிடுகிறார். அவருடைய சகோதரர் சோக்சியோ இந்தக் கடனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் ஊழியர்கள் வேறு வேலையை
தேடிக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது, நீரவ் மோடி கும்பல் திருடிய பணத்தை வெவ்வேறு பெயர்களில் மாற்றி வெளிநாட்டு சொத்துக்களாக நீரவ் மோடி மனைவி பெயரிலும், அவரது தம்பி பெயரிலும், மாமா பெயரிலும் பதுக்கி விட்டனர்.

எனவே சோக்சியும் மோடியும் கூறுவது முற்றிலும் உண்மை. சோக்சி பெல்ஜியம் நாட்டின் குடியுரிமை பெற்றவர். மோடியின் மனைவியோ அமெரிக்க குடியுரிமை பெற்றவர். எனவே, மோசடி நடந்திருக்கிறது என்று நிரூபித்தாலும் சட்டரீதியாக இந்திய அரசாங்கத்தால் இந்தக் கொள்ளையின் எந்த சொத்துக்களையும் கைப்பற்றி கொண்டு வர முடியாது.

33 லட்சம் கொள்ளையில் ஈடுபட்ட வங்கிக் கொள்ளையர்களை சென்னை போலீசார் சுட்டுக் கொன்று பணத்தை கைப்பற்றியதோடு, வங்கிகளுக்கான எதிர்கால செயல்பாட்டு அபாயத்தை (operational risk) குறைத்துள்ளனர். மோடி அரசு நீரவ் மோடி கும்பலை சுற்றி வளைத்து இந்த 11,500 கோடி ரூபாயை எப்படி கைப்பற்றும், அவர்களை என்கவுண்டர் செய்வதன் மூலம் வங்கிகளுக்கான எதிர்கால அபாயத்தை எப்படி குறைக்கும் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

– சியாம் சுந்தர், தலைவர்
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு
NEW DEMOCRATIC LABOUR FRONT I.T. Employees Wing

 

மேலும் :

 

தமிழுக்காக களமிறங்குவோம் ! தமிழகமெங்கும் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – படங்கள் !

0

தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

கேரளா, கர்நாடக, மேற்கு வங்க மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் மொழிகளை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்திருக்கிறது அந்த மாநில அரசுகள். பச்சைத் தமிழர்கள், மறத் தமிழர்கள் என்று பேசக் கூடிய தமிழகத்தில் தமிழுக்கு இடமில்லை என்பது மிகப்பெரிய அவமானம்.

ஐ.ஐ.டி-யில் 26-2-2018 அன்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை, அதற்கு பதிலாக கணபதி வந்தனம் என்ற சமஸ்கிருத பாடலைப்பாடி நிகழ்ச்சியை தொடங்கியிருக்கிறார்கள். “தமிழை வளர்த்தால் ஆண்டாள்” “ஆண்டாள் தேவதாசியாக இருக்கலாம்” என்று ஒரு ஆராய்ச்சி நூலின் மேற்கோளை வைரமுத்து கூறினார். உடனே ‘எங்க ஆண்டாள வேசின்னு அவமதித்துவிட்டார்’ என கொதித்தெழுந்தார்கள் பார்ப்பனர்கள்.

ஆரிய பார்ப்பனக் கூட்டம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கூட்டம் தமிழகத்தில் காலுன்றுவதற்காக இந்தியை, சமஸ்கிருதத்தை திணிக்கிறவர்கள் இப்படி மேலெழுந்து பேசுகிறார்கள்.

ஆனால், தாய் மொழி, முதுமொழி, செம்மொழியாகவும் இருக்கக் கூடியது தமிழ் மொழி. அந்த தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டில் பயிற்று மொழியாகவோ, அலுவல் மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ இருக்க இடமில்லையென்றால் இதை நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது. காவிரியில் கூட தற்போது உரிமையை இழந்து நிற்கிறோம். எனவே தமிழர்கள் தன்னுரிமைகளுக்காக திரண்டெழ வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு இயக்கமாக தொடங்கி வைக்கிறோம்.

  • பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு!
  • அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு!
  • அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!
  • தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 27.2.2018 அன்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை பு.மா.இ.மு வின் சென்னை கிளை செயலாளர் தோழர் சாரதி தலைமை தாங்கினார். பு.மா.இ.மு -வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், பேராசிரியர் சிவக்குமார், வாலாசா வல்லவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க பாடல்கள் பாடப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை,
தொடர்புக்கு : 94451 12675
மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com, facebook : rsyftn

*****

“பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழை பயிற்று மொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்றம் மொழியாக தமிழை நிலைநாட்டு!” – என்ற தலைப்பில் விருத்தாசலம் பாலக்கரையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் உட்பட 70-வதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.

*****

விழுப்புரம் பகுதி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக “பள்ளி ,கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு! தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு !” – என்ற தலைப்பில்  27.02.2018 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விழுப்புரம் அமைப்புக்குழு உறுப்பினர். தோழர் மனோகரன் தலைமை வகித்தார். அவரது உரையில் “இன்றைக்கு மாணவர்கள் நாம் படித்துவிட்டோம், வேலைக்கு போய்விட்டோம் என இருந்துவிட்டால் வரும் தலைமுறையின் வாழ்க்கை எப்படி சுமுகமாக இருக்கும். கொஞ்சம் யோசிங்க, மோடி அரசு நீட் தேர்வை திணிப்பதாகட்டும், காவேரி தீர்ப்பு, விவசாயத்தை அழிக்க ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், சாகர்மாலா திட்டம் போன்ற பேரழிவு திட்டத்தை திணிப்பது. கல்வி நிலையங்களில் சமஸ்கிருத திணிப்பு என இருக்க நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்.

கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் தனது தாய்மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கி இருக்கிறது, தமிழகத்தில் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்று முடித்தார்.

அவரைத் தொடர்ந்து விழுப்புரம் – கானை வட்டார மக்கள் அதிகாரம் அமைப்பாளர், தோழர் இளவேந்தன் பேசுகையில்; “மக்கள் பிரச்னைக்கு நாம் போராடினா அரசும், போலீசும் ஒடுக்குவது மட்டும் இல்லாமல் ஜனநாயகபூர்வமாக ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க கூட அனுமதி மறுக்கும் அரசை நாம் நம்பலாமா. ஓநாய் கிட்ட போய் ஆடு நீதி கேட்டால் என்ன நடக்கும், ஆட்டையே சாகடிக்கும் அது போலதான் தமிழக எடப்பாடி அரசு மத்திய அரசிடம் நீதி கேட்குது. ஆகவே இந்த அரசமைப்பு மக்களுக்கு எதிராக போய்விட்டது. இதற்க்கு தீர்வு மக்கள் அதிகாரமாக மக்கள் மாறுவதுதான் தீர்வு” என்று பேசி முடித்தார்.

அதன் பின் தோழர் திலீபன், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி விழுப்புரம் அமைப்பு குழு உறுப்பினர் பேசுகையில்; “இந்த ஒட்டுமொத்த அரசும் மக்களை நாயினும் கீழாய் நடத்துகிறது. மாணவர்கள், இளைஞர்கள் இதை எதிர்த்து ஒரு புரட்சிகர அமைப்பாக ஓன்று சேர்ந்து போராடவேண்டும்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் இரவிகார்த்திக், மருதம் ஒருங்கிணைப்பாளர். பேசுகையில்; “ஒரு மொழிதான் ஒரு இனத்தின் அடயாளம் ஒரு மொழியின் மூலமாகதான் நாம் தகவலையும், நம்மை சுற்றி நடக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் பேச முடியும். அப்பொழுது அவர்கள் கலாச்சாரம், பண்பாடு மேம்படும். ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழியும், கலாச்சாரம் அழியும் அதை நோக்கிதான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறது.

சமீபத்திய உதாரணம் ஆண்டாள் பிரச்சனையே தமிழத்தில் கிளப்பி இதன் மூலம் தனது செல்வாக்கை உயர்த்த முயற்சி எடுத்து. இந்த ஆபாயத்தை உணர்த்து நாம் போராட வேண்டும். இன்றைக்கு ஆர்ப்பாட்டத்தில் இவ்வளவு மாணவர்கள், இளைஞர்கள், பார்க்கும் பொழுது எனக்கு சந்தோசமாக இருக்கு” என்று முடித்தார்.

பின்னர்  தோழர் அம்பேத்கர் , விவசாயிகள் விடுதலை முன்னணி, விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் பேசுகையில்; “இந்த RSS – BJP கும்பலுடைய தமிழ் விரோதம் என்பது நீண்ட நாள் பகை, குறிப்பாக இந்தி எதிர்ப்பில் தமிழகத்திடம் அடிவாங்கிய இந்த பார்ப்பன நச்சு பாம்பை அன்றைக்கே காலால் நசுக்கி கொன்று இருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு கொல்லாமல் விட்டதன், விளைவாக அடிவாங்கிய பாம்பு மீண்டும் படமெடுத்தது வருகிறது.

காவேரி தீர்ப்பில் மட்டும் தமிழகத்தை வஞ்சிக்க வில்லை, தமிழ் தாய் வாழ்த்துக்கு அவமரியாதை, சென்னை IIT- யில் நடந்த நிகழ்சிகளில் தமிழ் அவமதிப்பு, விவசாய நிலங்களை நாசமாக்கும் அழிவு திட்டம் தமிழகத்தில் திணிப்பு, ஆண்டாளை ஒரு புனிதராக சித்தரித்து நடந்த போராட்டத்தில் பார்பன கும்பலை தாண்டி யாரும் பங்கேற்க வில்லை, இருந்தாலும் அதைவைத்து இந்துமதவெறியை கிளப்பி இந்துகளை திரட்ட முயற்சி செய்தது. இதை நாம் அனுமதிக்கலாமா இதை முறியடிக்க ஒரு புரட்சிகர அமைப்பாக திரளவேண்டும்” என்று முடித்தார்.

இறுதியாக தோழர் ஞானவேல், அமைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, பேசுகையில்;  “அந்த காலத்தில் போர் நடக்கும் ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போர்தொடுக்கும் அபொழுது தனது நாட்டை காக்கவும், தனது பண்பாடு கலாச்சாரத்தை காக்கவும், வளங்களை காக்கவும் எதிரி நாட்டு படையோடு போரிடுவது, மற்றொன்று அவனிடம் அடிபணிந்து அவன் கொடுக்கும் பதவிக்கும், பொருளுக்கும் விலை போவது.

இன்றைக்கு தமிழகத்தின் மீது R.S.S , BJP கும்பல் ஒரு போரை தொடுத்து இருக்கிறது. இந்த போரில் நாம் வெற்றி பெறவில்லை என்றால், நமது பண்பாடு, கலாச்சாரம், மொழி, இயற்கை வளம் எல்லாம் அழியும்! அபொழுது நாம் என்ன செய்ய போகிறோம். மாணவர்கள், இளைஞர்கள் ஒரு புரட்சிகர அமைப்பாக ஓன்று திரளவேண்டும்” என பேசி முடித்தார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.

டெல்டாவை பாலைவனமாக்கும் டெல்லி சூழ்ச்சி ! பென்னாகரம் ஆர்ப்பாட்டம்

0

காவிரித் தீர்ப்பு! டெல்டாவை பாலைவனமாக்கும் டெல்லியின் சூழ்ச்சி !” என்கின்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி தபால் அலுவலகம் அருகில் 23-02-2018 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் விவசாய சங்க தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜனநாயக சக்திகள் கலந்துக்கொன்டு உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தினை தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக, வழக்கு வாய்தா என்று வந்துக் கொண்டு இருக்கிறது, ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் வந்துபாடு இல்லை,  நீண்ட நெடிய காலமாக தீர்க்காமல் இந்த அரசு துருப்பிடித்துக்கொண்டு இருக்கிறது.

தமிழக மக்களின் வாழ்வில் ஜீவாதாரமாக இருக்கும் காவிரி பிரச்சனையை சில பேரால் மட்டும் தீர்க்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து ஜல்லிகட்டு போராட்டம் போல போராடுவது தான் தீர்வு” என்றார்.

அடுத்ததாக தமிழக விவசாய சங்க மாநில தலைவர் எஸ்.ஏ .சின்னசாமி பேசுகையில் உச்சநீதி மன்ற தீர்ப்பு 192 டிஎம்சி தண்ணீரை 177.25 டிஎம்சியாக குறைத்துள்ளது. இதனால் 88 ஆயிரம் ஹெக்டர் பாசனம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் உணவு களஞ்சியத்தை பாலைவனமாக்கி, விவசாயிகளை வெளியேற்றி, அங்குள்ள கனிமவளங்களை கொள்ளையடிக்கும் நோக்கம் கொண்டுள்ள கார்ப்பரேட்டுகளின் நலன் அடங்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது ‘குரங்கு ஆப்பத்தை பங்கிட்டுது போல’ ஒரு தூரோகத்தனமான தீர்ப்பாக உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியும் மத்திய அரசும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்றைக்கு 2013 மன்மோகன் சிங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் போராட்டமே இவர்களை அடிபணிய வைக்க முடியும்.

அடுத்தது விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் அர்ச்சுனன் பேசுகையில் ”வெள்ளகாரன் ஆட்சியில் தான் மேட்டூர் அணையும், கர்நாடகவில் கிருஷ்ணசாகர் அணையும் காவிரி பாசனத்துக்கு கட்டப்பட்டது”. 1990-யில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மனித சங்கிலி போராட்டம் நடத்தியதன் விளைவாக நடுவர் மன்ற தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த தீர்ப்பை காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கட்டுபடமாட்டோம் என்று அடாவடித்தனம் செய்கிறது.

இதன் விளைவாக டெல்டா பகுதியில் 8 இலட்சம் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து, நூறு நாள் வேலையும் இல்லாமல் மொத்த பொருளாதாரத்தையும் அடித்து நொறுக்கியதன் விளைவாக நகரங்களுக்கு தினக்கூலிகளாக குடிபெயர்ந்து வருகின்றன. இப்படி மக்கள் பிரச்சனை முன்னுக்கு வரும் போது எல்லாம் ராமனை தூக்குவது, மதத்தை தூக்குவது, திசை திருப்புவது தான் பாஜக-வின் திட்டம். எனவே ஒருங்கிணைந்த போராட்டம்தான் தீர்வு என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குமரேசன் பேசுகையில், ”காவிரி தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டும்தான் பொருந்தும் ஏனெனில் கர்நாடகாவில் சாதி மதம் பார்க்காமல் ஒன்றிணைகின்றனர். ஆனால் தமிழகத்தில் அவ்வாறு ஒன்றிணைவது இல்லை. டெல்லியில் நல்ல வழக்கறிஞர்களை வைத்து வாதாடி தண்ணீரை பெற ஆட்சியாளர்கள் கருதுவது இல்லை. ஏனெனில் இவர்கள் ஊழல் பேர்வழிகளாக இருக்கின்றனர். இதில் இருந்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் திருந்த வேண்டும். இருப்பினும் சாதி மதம் விட்டு மக்கள் அதிகாரம் போல் பொது வெளியில் போராடினால் தான் தீர்வு” என்றார்.

அடுத்து பேசிய புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு பேசுகையில், ”காவிரி தீர்ப்பு மீண்டும் தமிழகத்தின் மீது தாக்குதல். இது தமிழகத்துக்கும், கன்னட மக்களுக்கும் எதிரானது. இவை கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு வந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பின் வாயிலாக விவசாயிகளை சாகடிக்கிறார்கள். நீட்டைகொண்டு வந்து மாணவர்களை  சாகடிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் ஒரு கோடி பேருக்கு வேலை என்றார் மோடி, ஆனால் இன்று பக்கோடா விற்க சொல்கிறார் இப்படி சொல்ல ஒரு அரசு தேவையா?

நீதித்துறையும், மத்திய அரசும் தமிழகத்துக்கு எதிரானவையே. மத்தியில் இருக்கும் பாஜக  அரசு பக்கோடா விற்க சொல்கிறது. மாநிலத்தில் இருக்கும் அரசு மிக்சர் தின்கிறது. இவர்களுக்கு  நம்மை ஆள என்ன அருகதை இருக்கு. இப்படி தன்னுரிமையை இழந்துக்கொண்ட அரசை நம்பி இருந்தால் நமது பிரச்சனைகளை தீர்க்க முடியாது எனவே தன்னூரிமையை நிலைநாட்ட தமிழகமே தீரண்டுவா” என அறைகூவல் விடுத்தார்.

மக்கள் அதிகாரம் பென்னாகரம் பகுதி தோழர் கோபிநாத் பேசுகையில், ” காவிரி தீர்ப்பு வந்ததும் தமிழகத்தை வஞ்சிப்பது எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராடுகிறார்கள். இதனை எப்படி ஒடுக்குவது என்பதையே அரசு செய்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கர்நாடக முதல் அமைச்சர்  சித்தராமைய்யா சொல்கிறார் அதனை வேடிக்கை பார்க்கிறது உச்சநீதி மன்றம்.

உச்சநீதி மன்ற தீர்ப்பையும் கர்நாடக அரசு மதித்தது இல்லை. இந்த நீதி மன்றம் நமக்கானது என்று நம்ப முடியுமா ? பிலிகுண்டு பகுதிக்கு தண்ணீர்  வருவதற்கு முன்பே பெரிய குழாய்கள் மூலமாக தண்ணீரை எடுக்கின்றன. கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் என்பது ஒரு பகுதிதான். ‘சோறுடைத்த சோழமண்டலம் டெல்டாவை அழித்தால் நமக்கு எப்படி சோறு வரும்’ வளமிக்க சோமலியாவை முதலாளிகள் கொள்ளையடித்தததை போல டெல்டாவை அழிக்கும் சதிதிட்டம் வைத்திருக்கும் அரசிடம் பிரச்சனையை சொன்னால் தீர்ந்திடுமா?  மாற்று மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும். அதுதான் தீர்வு”  என்றார்.

இதனை நூற்றுக்கணக்கானோர் கவனித்தனர் காவிரி தீர்ப்பு தமிழகத்துக்கு வஞ்சகம் என்று விளக்கும் வகையிலும், இந்த துரோகத்துக்கு எதிராக போராட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் ஆர்ப்பாட்டம் அமைந்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம் –  81485 73417

***

காவேரி துரோகம், நீட் திணிப்பு, இந்தி சமஸ்கிருதம் திணிப்பு, தமிழ்மொழி அவமதிப்பு தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு !

ஆர்ப்பாட்டம்

நாள் : 27-02-2018
விருத்தாசலம்.

தமிழக பாஜக: நேர்காணல் பகடி வீடியோ !

1

தமிழக செய்தி ஊடகங்களில் அன்றாடம் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் விவாதங்களைப் பார்த்திருக்கலாம். வினவு இணையதளத்தின் சிறப்பு நேர்காணல்  நிகழ்ச்சி ”ஒண்டிக்கு ஒண்டி வாறியா?”

ஒண்டிக்கு ஒண்டி வாறியா? நிகழ்ச்சியில் இந்த வாரம் திரு வேலன், நமது ’சிறப்பு’ விருந்தினர் எஸ்.வி.எஸ். சேகரை புரட்டியெடுக்கிறார் மன்னிக்கவும் பேட்டியெடுக்கிறார். மோடி அரசின் ஊழல்கள், மோடியின் கல்விச் சான்றிதழ் மோசடி, ஆண்டாள் விவகாரம், என தற்போதைய நீரவ் மோடி மோசடி வரையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் எஸ்.வி.எஸ். சேகர். கண்டு மகிழுங்கள் “பூணூல் ஜூம்லா!”. அனைவருக்கும் பகிருங்கள்!

 

இணையுங்கள்:

தொடர்புக்கு:
அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876
மின்னஞ்சல் : vinavu@gmail.com

 

வாலறுந்த பார்ப்பன நரிகள் !

1

வ்வாமை காரணமாகத் தன்னியல்பாக உடல் வெளியேற்றும் உணவுப் பொருளைப் போன்ற நிலையில் இருக்கிறது பாரதிய ஜனதா. இதுதான் தமிழகத்தில் அக்கட்சியின் நிலை. பார்ப்பன பாசிச அரசியலை எத்தகைய இனிப்புக்குள் வைத்து மறைத்துக் கொடுத்தாலும், அதனை உடனுக்குடன் கக்கித் துப்பிவிடுகிறது தமிழகம். பொன்.இராதாகிருஷ்ணனும், தமிழிசையும், எச்.ராஜாவும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அன்றாடம் ஒரு பரபரப்பூட்டும் அறிக்கை கொடுக்கின்றனர். ஒருவரை மிஞ்சி ஒருவர் விளம்பரம் தேடுகின்ற வெறியில் பஞ்ச் டயலாக்குகளையும் எடுத்து விடுகின்றனர். அவை தேடித்தரும் ஊடக விளம்பரம், அவர்களுடைய விருப்பத்துக்கு நேர் எதிரான விளைவுகளையே பெற்றுத் தந்திருக்கின்றது.

தமிழகத்தை வஞ்சிக்கும் எந்த திட்டத்திற்கும் குரலைக்கூட கொடுக்காத வைணவ பார்ப்பனர்கள் கூட்டம் வைரமுத்துவை கண்டித்து கொதித்தெழுந்து வீதிக்கு வந்தது

ஆண்டாள் விவகாரத்தில் எச்.ராஜாவின் பேச்சைத் தூண்டுதலாக வைத்துத் திராவிட இயக்க எதிர்ப்பு இந்து எழுச்சியைக் கிளப்பலாமென்று அவர்கள் கண்ட கனவு பகல் கனவானது. அவர்களால் திரட்டப்பட்ட கூட்டமனைத்தும் வைணவப் பார்ப்பனக் கூட்டமாக மட்டுமே இருந்ததைத் தொலைக்காட்சி காமெராக்கள் அம்பலமாக்கின. வைரமுத்துவுக்கு எதிரான எச்.ராஜாவின் வசைப்பேச்சு மட்டுமின்றி, நித்தியானந்தாவின் பெண் சீடர்களின் வாயிலிருந்து வழிந்த ஆபாசமும், தினமணி வைத்தியநாதன் ஜீயரின் காலில் விழுந்ததும், தொலைக்காட்சி நெறியாளர் செந்திலுக்கு எதிராக எஸ்.வி.சேகர் வெளிப்படுத்திய பார்ப்பனக் கொழுப்பும் மக்கள் மனதில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மீதான வெறுப்பைக் கூட்டுவதற்கு மட்டுமே பயன்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரன் அவமதித்ததும், அதை நியாயப்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கும்பல் வாதிட்டதும், சங்கரமடத்தின் திமிர்த்தனமான அறிக்கையும் பார்ப்பன எதிர்ப்புணர்வைப் பெருமளவில் புதுப்பித்தன.

பாரதிய ஜனதாவின் பார்ப்பனக் கொழுப்பை அம்பலப்படுத்துவதில்  தமிழகத்தின் அரசியல் சமூக அமைப்புகளும், சமூக ஊடகங்களும் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன என்ற போதிலும், எச்.ராஜா, சேகர் முதலானோர் தமது நாக்கினால் பா.ஜ.க.-வுக்கு வெட்டிக்கொண்ட குழிதான் ஒப்பீட்டளவில் ஆழமானது. அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற பா.ஜ.க.-வின் கோரிக்கை, தமிழகத்தில் தீவிரவாதம் என்கிற பூச்சாண்டி, இது பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண் என்ற வசனம் போன்றவையெல்லாம் அவர்களது அடிமனதில் கனன்று கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியை வெளிக்காட்டினவேயன்றி, இவையெதுவும் அவர்கள் எதிர்பார்க்கின்ற மக்கள் ஆதரவைப் பெற்றுத்தரவில்லை. மாறாக, இவற்றுக்குக் கிடைத்த பதிலடி மேலும் அவர்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறது.

இது பா.ஜ.க. தலைமைக்கும் உரைத்திருப்பதனால்தான், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று பேசிய பொன்னாரின் வாய், நானும் திராவிடன்தான் என்று சமாளிக்கிறது. சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பதைத் தனது மூலமுதற் கொள்கையாகக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையான மொழி தமிழ் என்று மோடியை நாடகமாட வைக்கிறது. நரிக்கு வாலறுந்த போதிலும், அது நரிதான். சங்கப் பரிவாரம் தனது உத்தியை மாற்றிக் கொள்ளுமேயன்றி, தனது முயற்சியை அது கைவிடப்போவதில்லை.

பா.ஜ.க.-வின் மதவெறிப் பேச்சையும் நடவடிக்கைகளையும் தனது எதிர்வினையின் மூலம் தமிழகம் முறியடித்துவிடுகிறது என்ற காரணத்தினால் மெத்தனம் கூடாது. தமிழகத்தின் எதிர்வினை பெருமளவில் தன்னியல்பான பதிலடியாகவே இருந்து வருகிறது. அதனை உணர்வுபூர்வமான எதிர்த்தாக்குதலாக வளர்த்தெடுக்க வேண்டும். பார்ப்பன பாசிசம் என்பது வர்க்க, இன, மொழி, சாதி ஒடுக்குமுறைகளை ஒருங்கிணைந்த முறையில் ஏவுகின்ற ஆயுதம். மக்களுக்கெதிரான குத்தீட்டியாகவும், தனது தோல்விகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் கவசமாகவும் மோடி அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் அது பயன்படுகிறது. பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான நமது பதிலடி இத்தகைய புரிதலுடன் அமைவது அவசியம்.

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2018

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

வாலறுந்த பார்ப்பன நரிகள் ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2018 மின்னூல்

0

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1.வாலறுந்த பார்ப்பன நரிகள்!
ஒவ்வாமை காரணமாகத் தன்னியல்பாக உடலால் வெளியேற்றும் உணவுப் பொருளைப் போன்ற நிலையில் இருக்கிறது பாரதிய ஜனதா. இதுதான் தமிழகத்தில் அக்கட்சியின் நிலை.

2.இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள்!
மதுரைக் கோயில் தீ விபத்தை / சதியைத் தொடர்ந்து தமிழகக் கோயில்களை அறநிலையத் துறையிடமிருந்து பிடுங்கித் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற பிரச்சாரத்தை பார்ப்பனக் கும்பல் முடுக்கி விட்டிருக்கிறது.

3.காவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்!
பகை நாடுகளை அழிக்கத் தண்ணீரை மறிப்பது, போர்களில் கடைப்பிடிக்கப்படும் தந்திரோபாயம். அது போன்று தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைத் தட்டிப்பறித்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.

4.பேருந்துக் கட்டண உயர்வு: தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி!
பயணச்சீட்டுக் கட்டணம் இரு மடங்காக உயர்ந்திருப்பதால், கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழை பெற்றோர் பெண் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. – பிரியா, கல்லூரி மாணவி, உத்திரமேரூர்.

5. பார்ப்பனப் பொறுக்கிகள் !
பார்ப்பனப் பொறுக்கித்தனம், தனது அலங்காரங்களையும் சாத்வீகத் தோற்றத்தையும் களைந்துவிட்டு, தனது கருத்துக்குப் பொருத்தமான மொழியில் வெளிவருகிறது.

6. ஆர்.எஸ்.எஸ். – இன் தொந்தி டி.வி.!
ஆண்டாள் விவகாரத்தை முதலில் கிளப்பியது எச்.ராஜா. பிறகு நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் சமூக ஊடகங்களில் வழங்கிய நாச்சியார் திருமொழி. இந்த வரிசையில் அடுத்து வருவது தந்தி டி.வி. நடத்திய புலனாய்வு.

7. குற்றப் பாரம்பரியம் குரு பரம்பரையான கதை!
ஆழ்வார்கள் எனப்படுவோர் புனிதர்கள் என்றும், உலக மகா உத்தமர்கள் என்றும் பொதுமக்கள் நினைக்கக்கூடும். ஆனால், நித்தியானந்தா, எச்.ராசா போன்றோரையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற அளவுக்கு இவர்கள் அயோக்கிய சிகாமணிகள் என்பதை, வைணவப் பார்ப்பனர்கள் எழுதியுள்ள வரலாற்று நூல்களிலிருந்தே வாசகர்கள் அறியத் தருகிறோம்.

8. இந்து அறநிலையத் துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி!
கோவில் சொத்துக்களைக் கொள்ளையடிக்கவும், பக்தி உணர்வை இந்து மதவெறியாக மாற்றும் தனது திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கிலும்தான் கோவில்களைப் “பக்திமான்களிடம்” ஒப்படைக்கக் கோருகிறது, பா.ஜ.க.

9. கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது!
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் 36435 கோயில்கள் உள்ளன. இவற்றுக்கும் மடங் களுக்கும் சேர்த்து மொத்தம் 4,78,000 ஏக்கர் நிலமும் 22,000 கட்டிடங்களும் உள்ளன. இவற்றைக் கைப் பற்றிக் கொள்வதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம்.

10. இளம் சிந்தனையாளர் குழு: அறிவுத்துறையில் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஐந்தாம்படை!
பார்ப்பன பாசிசமும் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தே என்ற மனநிலையை அறிவுத்துறையினர் மத்தியில் உருவாக்குவதுதான் இளம் சிந்தனையாளர் குழுவின் நோக்கமாகும்.

11. சிந்தனையாளர் தோற்றமும் மாமாப்பயல் வேலையும்
இந்தியா பவுண்டேசன் இளம் சிந்தனையாளர் குழுவை மட்டும் இயக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தரகு வேலையும் செய்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ‘தி வயர்” இணையதளம்.

12. மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம்!
பத்திரிகையாளர்கள் ஜிப்சன் ஜான், பி.எம்.ஜித்தீஷ் ஆகியோர் ஜான் பெலாமி ஃபாஸ்டருடன் நிகழ்த்திய நேர்காணலை ஃபிரண்ட் லைன் ஆங்கில இதழ் (“Socialism a necessity for human survival”, Jan 17, 2018) வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட மொழியாக்கத்தைத் தருகிறோம்.

13. பட்ஜெட்: கவர்ச்சிகரமான மோசடி!
மோடி அரசின் பட்ஜெட்டைக் கவர்ச்சி பட்ஜெட் என ஒற்றை அடைமொழி போட்டு விமர்சிப்பது பொருத்தமற்றதுதான். அதற்குப் பதிலாக, கவர்ச்சிகர மான மோசடி பட்ஜெட் என்றுதான் இதனைக் குறிப்பிட வேண்டும்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

பூணூல் ஜூம்லா : ஒண்டிக்கு ஒண்டி வாறியா ? டீசர்

1

பூணூல் ஜூம்லா – ஒண்டிக்கு ஒண்டி வாறியா? – டீசர்

மோடியின் தேர்தல் ஜூம்லாவில் இருந்து சமீபத்திய நீரவ் மோடி வங்கிக் கொள்ளை, ஆண்டாள் பிரச்சனை வரை இருவர் விவாதிக்கின்றனர். தொலைக்காட்சி நெறியாளர் கேள்விகளுக்கு காவிப் படையின் பூணூல் தளபதி பதில் அளிக்கிறார்.

ஒண்டிக்கு ஒண்டி வாறியா? – விவாத நிகழ்சசி நாளை 27 .02.2018 பகல் 2.00 மணிக்கு வெளியாகிறது.

 

இணையுங்கள்:

தொடர்புக்கு:
அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876
மின்னஞ்சல் : vinavu@gmail.com

காவிரி நதி யாருக்குச் சொந்தம் ? வீடியோ

1

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையைக் கேலிக்குள்ளானதாக மாற்றி இருக்கிறது இத்தீர்ப்பு. ஏற்கனவே தமிழகத்துக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான பங்கான 192 டி.எம்.சி நீர் அளவை மேலும் குறைத்துத் தீர்ப்பளித்து, தமிழகத்தின் முதுகில் குத்தியிருக்கிறது.

அயோக்கியத்தனமான இத்தீர்ப்பு ஒருபுறம் வரும் போது, மற்றொரு புறத்தில் தமிழகம் காவிரியை நம்பியிருக்கக் கூடாது . கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமும், தமிழகத்தில் நீர் மேலாண்மைத்திட்டங்களை அமல்படுத்துவதையும் குறித்தும் விவாதத்தை திட்டமிட்டு கிளப்பியிருக்கிறது, பாஜக. சுப்பிரமணியசாமி திமிராகப் பேட்டியளிப்பது மட்டுமல்ல, சாதாரண மக்கள் மத்தியிலும் அத்தகைய கருத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புகின்றது பாஜக கும்பல்.

அதனை மறுத்து, காவிரி நமது உரிமை என்பதை வரலாற்றுத்தரவுகளுடன் நிலைநாட்டுகிறது இந்தக் காணோளி

பாருங்கள், பகிருங்கள்

காவிரி நதி யாருக்குச் சொந்தம்?

1. தென்னிந்தியாவில் ஓடும் கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்குப் பிறகு மூன்றாவது பெரிய நதி காவேரிதான். கர்நாடகா மாநிலத்தில் குடகு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்தான் தலைக்காவிரி எனும் இடத்தில் காவிரி ஆறு பிறக்கிறது

2. கர்நாடகாவில் தோன்றி, தமிழகத்தில் ஓடும் காவிரி நதியோட நீளம் 800 கி.மீட்டர். தமிழகத்தின் பூம்புகாரில்தான் காவிரி கடலில் கலக்கிறது. காவிரி நதி நீர் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுவை ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் சொந்தம்.

3. ஒரு நதி இரண்டு, மூன்று நாடுகளில் ஓடினாலும், அதன் நீரைப் பயன்படுத்தும் முதல் உரிமை என்பது நதியின் கழிமுகப் பகுதிக்குத்தான் சொந்தம். இது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அப்படிப் பார்த்தால் காவிரி நதி மீதான தமிழக உரிமையின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

4. திருச்சிக்கு அருகே இருக்கும் கல்லணையில் கி.பி 2-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, உலக அளவில் நான்காவது மூத்த அணையும், இந்திய அளவில் முதல் மூத்த அணையுமாகும். இந்த அணையை கி.பி 1804-ம் ஆண்டில ஆங்கிலேய இராணுவ என்ஜினியர் கேப்டன் கால்டுவெல் புதுப்பித்தார். காவிரி நதியின் வெள்ளத்தை திருப்பி விடவும், விவசாய பாசன வசதிக்காகவும்தான் கரிகால் சோழன் இந்த அணையைக் கட்டினார்.

5. காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்ட போது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1892-ஆம் ஆண்டிலேயே மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் முதன் முறையாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இரண்டாவது ஒப்பந்தம் 1924-ஆம் ஆண்டில் போடப்பட்டது. அன்றே ஒப்பந்தைத்த மீறி கர்நாடகா அரசு 11 டிஎம்சி கொள்ளளவில் கட்ட வேண்டிய கிருஷ்ணராஜ சாகர் அணையை 41.5 டி.எம்.சி கொள்ளளவில் கட்டியது.

6. காவிரி போல இந்தியாவில் ஓடும் சில நதிகளை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்களை ஒட்டி, நதிநீர்ப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 1956-ம் ஆண்டு சட்டப்பிரிவு 262 இயற்றப்பட்டு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன் படி நதிநீர் சிக்கல் வந்தால் நாடாளுமன்றம் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்.

7. 1990-ம் ஆண்டில்தான் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி “காவிரி நடுவர் மன்றம்” அமைக்கப்பட்டது. இந்த மன்றம் 1991-ம் ஆண்டில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் படி கர்நாடகம் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு 205 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். இந்த தீர்ப்பை ஒட்டி கர்நாடகாவில் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் கலவரத்தை கன்னட இனவெறியர்களும், காங் – பாஜக கட்சிகளும் நடத்தினார்கள்.

8. காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 16 வருடங்கள் கழித்து 2007-ம் ஆண்டு, பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின்படி காவரி நதி நீரில் தமிழகத்திற்கு 419 டிஎம்சி நீரும், கர்நாடகாவிற்கு 270 டிஎம்சி நீரும், கேரளாவிற்கு 30 டிஎம்சி நீரும், பாண்டிச்சேரி மாநிலத்திற்கு 7 டிம்சி நீரும் பிரித்துக் கொள்ளப்பட வேண்டும். இத்தீர்ப்பின் படி கர்நாடக மாநிலம் ஒராண்டில் 192 டிஎம்சி நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். ஆனால் கர்நாடகா மாநிலம் இந்த தீர்ப்பை கடுகளவு கூட மதிக்கவில்லை. தமிழகத்திற்கும் நீரை வழங்கவில்லை.

9. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு இந்திய அரசின் அரசாணையாக கெசட்டில் 2013- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இப்படி சட்ட அங்கீகாரம் கிடைத்தும் கர்நாடகம் நீரை திறந்து விடவில்லை. காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் தொடுத்த வழக்கில்தான் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16ம் நாள் அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதன்படி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீரப்பில் சொல்லப்பட்ட 192 டிஎம்சி நீரை 177.25 டி.எம்.சியாக குறைத்து தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

10. காவிரி நீரை நம்பித்தான் தமிழகத்தில் 24.5 இலட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. காவிரி நீர்தான் தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீர் ஆதாரம். டெல்டா மாவட்டங்களில் 15 இலட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் சம்பா பயிரை நம்பி 40 இலட்சம் விவசாயிகள் உள்ளனர். ஆனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடியே நடைபெறவில்லை. சம்பா பயிருக்குக்கூடத் தண்ணீர் கிடைக்காது என்ற நிலையும் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

11. காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகா அடாவடியாக நடந்து கொள்வதைப் பற்றி முன்னாள் மத்திய நீர்வளத்துறை செயலர் ராமசாமி ஆர். ஐயர் என்ன சொல்கிறார்?

“சம உரிமை என்ற ஹெல்சிங்கி கோட்பாட்டையும், சமத்துவமான பயன்பாடு என்ற ஐ.நா தீர்மானத்தையும் கர்நாடகம் ஏற்க மறுப்பதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்றன. தமிழகத்துடன் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது என்ற சொற்றொடரைப் பயன்படுத்தவே கர்நாடகம் மறுக்கிறது. எங்களுக்குப் போக எவ்வளவு தர முடியும் என்றுதான் பேசுகிறது. அதையும் தாங்கள்தான் தீர்மானிப்போம் என்று கூறுகிறது. அதனால்தான் மேலே உள்ள பகுதிகள் ஒரு ஆற்றின் இயல்பான நீரோட்டத்தை தடுப்பதாக இருந்தால், கீழே உள்ள பகுதிகளின் ஒப்புதல் இன்றி செய்யக்கூடாது என்ற சர்வதேச நெறியை அது மீறுகிறது. இதன்படி பார்த்தால் இந்தியாவைக் கேட்காமலேயே பிரம்மபுத்திராவுக்கு குறுக்கே சீனா அணை கட்டிக்கொள்ளலாம் என்று ஆகிவிடும்.”

12. உச்சநீதிமன்றத்தைப் பற்றியும் ராமசாமி ஆர். ஐயர் என்ன சொல்றாரு பார்ப்போம்.

““நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்தான். ஆனால் நடுவர் மன்றத்தில் தமிழகம் இடைக்கால நிவாரணம் கோரியபோதும் சரி, ஆணையத்தின் இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகம் மறுத்தபோதும் சரி, தமிழகம் எழுப்பிய சட்டரீதியான கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்காமல் நழுவியது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிராக 2007-ல் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 262 இன் படி தனக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். மாறாக, மேல்முறையீட்டை அனுமதித்து அதனைக் கிடப்பில் போட்டிருக்கிறது” என்று சாடியிருக்கிறார்.
இன்னைக்கு இந்த தீர்ப்பில்தான் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு எதிரா தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

13. ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் கர்நாடகாவின் நலனுக்கு எதிராக உள்ளதுன்னு கர்நாடக அரசு சொல்கிறது. அது உண்மையா? இதைப் பற்றியும் ராமஸ்வாமி ஆர். ஐயர் சொல்றாரு பாருங்கள்.

“1924 ஒப்பந்தத்தைப் படித்துப் பார்க்கும்போது அது ஒரு நியாயமற்ற ஆவணமாகத் தெரியவில்லை. ஒப்பந்தத்தில் மைசூர் அரசின் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு காரணம் பிரிட்டிஷாரின் வலிமை அல்ல. மாறாக, ஆற்றின் தலைக்கட்டுப் பகுதியில் உள்ளவர்கள் மீதுதான் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சிந்து நதி விசயத்தில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியா மீது கட்டுப்பாடு அதிகம். அதேபோல கங்கை விசயத்தில் வங்கதேசத்தைக் காட்டிலும் இந்தியா மீதுதான் கட்டுப்பாடு அதிகம். 1924-ல் கர்நாடகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அதற்குப் பின் காவிரியில் வரிசையாக அணைகளைக் கட்டி விட்டனர். இப்போது தமிழகம்தான் பாதிக்கப்பட்ட மாநிலம்.!” என்கிறார் ராமசாமி ஐயர்.

14. தமிழகத்தில ஆறு, ஏரி, குளம்ணு எல்லா நீராதரங்களையும் சேர்த்துப் பார்த்தால் கூட ஒரு வருசத்துக்கு கிடைக்கும் நீரின் சராசரி அளவு 835 டிஎம்சி தான். கர்நாடகாவுல ஆறுகள் மூலம் கிடைக்கும் நீரின் அளவு ஒராண்டிற்கு 3,475 டி.எம்.சி. இதுல கடல்ல 1500 டிஎம்சி நீர் கலக்க, பாசனத்திற்கு 1,872 டி.எம்.சி பயன்படுது. கர்நாடகாவில் 11 பெரிய அணைகளின்கொள்ளளவு 705 டிஎம்சி. தமிழக்தின் 11 பெரிய அணைகளின் கொள்ளளவு 190 டி.எம்.சி.
ஆக இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் நீர் வளத்தில் பல மடங்கு வலிமையுடன் கர்நாடக மாநிலம் இருப்பதும் தமிழகம் பலவீனமாய் இருப்பதும் புரியும். எனில் காவிரியும் நமக்கு இல்லை என்றால் தமிழகம் பாலைவனமாகத்தான் ஆக வேண்டியிருக்கும்.

16. இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர்ப் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறைக்கும், காவிரிப் பிரச்சினையில் மைய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கும் வேறுபாடு இருக்கு. காங்கிரசு பா.ஜ.க., கட்சிகளுக்கு ஆட்சியைப் பிடிக்கின்ற வாய்ப்பு கர்நாடகத்தில் இருப்பதும், தமிழகத்தில் இல்லாதிருப்பதும்தான் தமிழகத்துக்கு எதிரான இந்த ஓரவஞ்சனைக்கு காரணம் என்று இதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. இது கொஞ்சம் மேலோட்டமானது.

இந்த தேசியக் கட்சிகள் தமிழகத்தில் செல்வாக்கு பெற முடியாமல் இருக்க என்ன காரணம்? “ஆரிய – பார்ப்பன எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு” உள்ளிட்ட திராவிட இயக்கம் சார்ந்த கருத்தியல்கள் மீது இருக்கும் காழ்ப்புதான், இவர்களுடைய தமிழ் வெறுப்புக்கு மிக முக்கியமான காரணம்.

இத்துடன் காவிரி டெல்டா மாவட்டங்களின் அடியில் கொட்டிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட நிலக்கரியையும், மீத்தேனையும் கைப்பற்றும் ஆளும் வர்க்கங்களின் நோக்கமும், விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்த விரும்பும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையும தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்குப் பின்னணியாக உள்ளன.

இப்போது இருக்கம் மோடி அரசுக்கு நம்மீது காழ்ப்பும், பகையும் அதிகம். மெரினாவில ஜல்லிக்கட்டிற்காக நாம நடத்திய டெல்லிக்கட்டை இப்போது காவிரிக்காக நடத்த வேண்டியிருக்கிறது.  இல்லையென்ன்றால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் இனி பாலைவனமாக மாறிவிடும். காவிரிக்காக வீதியில் இறங்குவோம், மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை தட்டிக் கேட்போம்.

தொடர்புக்கு:
அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876
மின்னஞ்சல் : vinavu@gmail.com

 

அவர்கள் ஒபாமாவுக்கு வேண்டியவர்கள் ! தாமதம் வேண்டாம் !

ஒபாமாவுக்கு வேண்டியவர்கள் !

ழைப்பு வந்தது. வழக்கம்போல இம்முறையும் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக்கிழமை நன்றி கூறல் என்று நாள்காட்டி சொன்னது. ஆரம்பத்தில் ஆப்பிரஹாம் லிங்கன் நன்றி கூறல் நாள் நவம்பர் கடைசி வியாழக்கிழமை என்று அறிவித்திருந்தார். சில வருடங்களில் ஐந்தாவது வியாழக்கிழமையும், சில வருடங்களில் நாலாவது வியாழக்கிழமையும் நன்றிகூறல் நாள் வந்தது. சனங்களின் குழப்பத்தை தீர்ப்பதற்காக ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இனிமேல் நவம்பர் நாலாவது வியாழக்கிழமையில் மட்டுமே நன்றி கூறல் நாள் கொண்டாடப்படவேண்டும் என பிரகடனம் செய்தார்.

மகன் மொன்ரானாவில் இருந்ததால் அங்கே வந்து 24 -ம் தேதி வியாழக்கிழமை வரும் நன்றி கூறல் நாளில் கலந்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தான். மகன் விஞ்ஞானி என்பது தெரியும். ஆனால் அவன் ஒரு தலைசிறந்த சமையல்காரன் என்பது பலருக்கு தெரியாது. சமையல் கலை படித்துப் பட்டம் பெற்றதல்ல. தானாகக் கற்றுக்கொண்டபடியால் சமைக்கும் உணவில் புதுமையும், சுவையும் இருக்கும். சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க தொலைக்காட்சி அவனுடைய நன்றிகூறல் நாள் சமையலை நேரடியாக ஒளிபரப்பியது.

நானும் மனைவியும் அமெரிக்காவுக்கு விருந்துண்ணப் போவதென்று முடிவுசெய்தோம். ரொறொன்ரோவில் ( டொறொண்டோ – கனடா ) இருந்து விமானத்தில் கிளம்பி முதலில் மினியப்பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து மொன்ரானாவின் மிசூலா நகரத்துக்கு போய்ச் சேர்ந்தோம். அந்தப் பயணத்தின்போது அசாதாரண சம்பவம் ஒன்று நடந்தது.

என் மனைவி தன் மடியில் கைப்பையை வைத்திருந்தார். அந்தக் கைப்பையில் காசும், கடன் அட்டைகளும், மருத்துவ அட்டை மற்றும் வாகன ஓட்டுநர் அட்டைகளுடன் வேறு முக்கியமான ஆவணங்களும் இருந்தன. விமானப் பணிப்பெண் கைப்பையை மேலே சாமான் தட்டில் வைக்கச் சொன்னார். மனைவி மறுத்தார். அப்படியிருந்தும் விமானப் பணிப்பெண் விடாமல் தொந்திரவு செய்து அந்தக் கைப்பையை வாங்கி மேலே வைத்து விட்டார். மடியிலே வைக்கக்கூடிய சிறிய கைப்பையை மேலே வைக்கும்படி விமானத்தில் ஒருவரும் இதற்கு முன்னர் கட்டாயப் படுத்தியது கிடையாது.

மாதிரிப் படம்

விமானம் தரையில் இறங்கியதும் நானும் மனைவியும் வெளியேறினோம். கைப்பையை மறந்துவிட்டோம். வெளியே வந்து சூட்கேசுகளைக் காருக்குள் ஏற்றும்போது நினைப்பு வந்தது. திரும்பி ஓடிப்போனபோது அதிகாரிகள் எங்களை விமானத்துக்குள் நுழைய விடவில்லை. அவர்களாகவே தேடினார்கள். கைப்பை அகப்படவில்லை. ஆச்சரியமாக இருந்தது. பதினைந்து நிமிடங்களுக்குள் கைப்பை மறைந்துவிட்டது.

விமானப் பணிப்பெண்ணை தேடினோம். அளவான ஒப்பனையுடன், நாகரிகமாக உடை உடுத்திய மிடுக்கான பெண் அவர். எந்தக் கூட்டத்திலும் அவரை இலகுவாக அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். அவர் ஹொட்டலுக்குப் போய்விட்டார் என்றார்கள். விமான அதிகாரியிடம் முறைப்பாடு எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். கைப்பை வரும் என்ற நம்பிக்கை இல்லை. எங்கள் சந்தேகம் ஏனோ அந்த விமானப் பணிப்பெண்மீது இருந்தது. எப்படி யோசித்தும் கைப்பை மறைவதற்கு வேறு காரணத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நன்றிகூறல் நாள் வியாழக்கிழமை என்பதால் செவ்வாய்க்கிழமையே பொருட்களை வாங்கவேண்டும். காலை ஆறு மணிக்கு புறப்பட்டு சுப்பர்மார்க்கெட் வாசலில் வரிசையில் நின்றோம். முதல் நன்றி கூறல் நாள் 1621 -ம் ஆண்டு நடந்தது. ஆரம்பத்திலே குடியேறியவர்கள் ஒரு வருடம் பூர்த்தியானபோது முதல் அறுவடையில் கடவுளுக்கு விருந்து படைத்து நன்றி கூறிய நாள். 400 வருடங்களாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இது. இந்த ஒரு நாளில் அமெரிக்காவில் 51 மில்லியன் வான்கோழிகள் உண்ணப்படும். இரண்டு பில்லியன் டொலர்கள் செலவாகும். வேறு ஒரு கொண்டாட்டமும் அமெரிக்காவில் இத்தனை சிறப்புடன் நடப்பதில்லை.

வரிசை நகர்ந்து உள்ளே நுழைந்ததும் கேக்கும் கோப்பியும் இலவசமாக வழங்கினார்கள். 10 றாத்தல் எடை , 20 றாத்தல் எடை, 40 றாத்தல் எடை என வான்கோழிகளுக்கு பல வரிசைகள் இருந்தன. இந்த சுப்பர்மார்க்கெட்டில் ஹுட்டரைட் வான்கோழிகளுக்கு நல்ல வரவேற்பு. ஜேர்மனியில் 400 வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய ஹுட்டரைட் சமயக்குழு அமெரிக்காவுக்கு 125 வருடங்களுக்கு முன்னர் வந்து மொன்ரானா மாநிலத்தில் குடியேறியது.

இன்றும் அவர்கள் சமுதாயக் குழுவாக விவசாயம் செய்து ஒரு தலைவரின் கீழ் இயங்குகின்றனர். தனியாக ஒருவரிடமும் சொத்து கிடையாது. அனைத்துமே பொதுச் சொத்துதான். கூட்டாக சமைத்து ஒன்றாக உண்பார்கள். அவர்கள் பண்ணையில் திறந்த வெளியில் இயற்கை முறையில் வான்கோழிகள் பராமரிக்கப்படுவதால் மக்கள் நெடுநேரம் வரிசையில் நின்று அவற்றை வாங்கினார்கள். வான்கோழியுடன் இன்னும் பல சாமான்களையும் வாங்கிக்கொண்டு நாங்கள் வீடு திரும்பினோம்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புதன் இரவு 40 றாத்தல் வான்கோழி ஒன்றை மன்னித்து விடுதலை செய்தார். அது ஒரு குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்தது மனிதன்தான். இன்னொரு வான்கோழி சேமக் கையிருப்பாக இருந்தது. முதல் சொன்ன வான்கோழி இயற்கை மரணம் எய்திவிட்டால் மன்னிக்க முடியாதே. அதற்காக இன்னொரு வான்கோழியும் சேமிப்பில் இருந்தது. இரண்டாவது வான்கோழியும் விடுதலை செய்யப்பட்டது. அதே சமயம் மூன்றாவது வான்கோழி ஒன்று சமையல் அறையில் உணவுக்கு தயாரானது.

நன்றி கூறல் நாள் அன்று 16 விருந்தினர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். வான்கோழியுடன் இன்னும் பல சுவையான உணவுகளும் தயாரிக்கப்பட்டிருந்தன. விருந்தினர்கள் உணவின் சுவையை புகழ்ந்து தள்ளினார்கள். அன்று விருந்தினர்கள் பேசியது மூன்றே மூன்று பொருள்தான். ட்ரம்ப், ஹுட்டரைட் வான்கோழி, தொலைந்துபோன கைப்பை. கைப்பை பற்றிய வாதப் பிரதிவாதங்களும், ஊகங்களும் அதிக நேரத்தைப் பிடித்தன. ட்ரம்ப் பற்றிய நகைச் சுவையில் முதல் இடம் பிச்சைக்காரனுக்கு. அவன் ஒரு பலகையில் இப்படி எழுதி பிச்சை எடுத்து பணக்காரனாகிவிட்டான். ‘எனக்கு ஒரு டொலர் பிச்சை தாருங்கள். இல்லாவிட்டால் நான் ட்ரம்புக்கு வாக்களிப்பேன்.’ இரண்டாம் இடம் மொன்ரானா பத்திரிகையாளருக்கு. ‘ட்ரம்ப் இன்று மொன்ரானா வந்தார். நாளை அவருடைய தலைமுடி வரும் என்று நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.’

கைப்பையை தொலைத்த நாட்கள் கூடக்கூட அது கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. அடுத்த நாள் மாலை ரொறொன்ரோ திரும்பவேண்டும். ஆனால் காலை ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கைப்பை கிடைத்து விட்ட செய்தி வந்தது. சோல்ட் லேக் நகரத்து சலவைக்கூடத்துக்கு, விமானத்தில் உபயோகிக்கும் துணிகளையும் கம்பளிகளையும் சலவைக்கு அனுப்பியிருந்தார்கள். கம்பளிகளுடன் மாட்டுப்பட்டு ஒரு கைப்பை காணப்பட்டது. அந்த சலவைத் தொழிலாளி கைப்பையை மேலதிகாரியிடம் கொடுத்தார்.

மேலதிகாரிக்கு தகவல் ஏற்கனவே போயிருந்ததால் அவர் நடந்ததை ஊகித்துவிட்டார். கைப்பையை திருப்பி அதே விமானத்தில் மிசூலாவுக்கு உடனேயே அனுப்பும்படி கட்டளையிட்டார். அப்படித்தான் கைப்பை திரும்பி வந்தது. நாங்கள் விமான நிலையத்துக்குச் சென்று கைப்பையை மீட்டோம். காசும், கடன் அட்டைகளும் இன்னும் பிற ஆவணங்களும் சரியாக இருந்தன. கைப்பையுடன் ஒரு கடிதமும் வந்திருந்தது. வீடு வந்த பின்னர் அந்தக் கடிதத்தை திறந்து படித்தோம். கைப்பையை கண்டுபிடித்த சலவைத் தொழிலாளி எழுதிய கடிதம் இப்படி இருந்தது.

‘சோல்ட் லேக் நகரத்து சலவைத் தொழிலாளியாகிய நான் எழுதுவது. 3716 பறப்பில் வந்த சலவைத் துணிகளுக்குள் இந்தக் கைப்பை கிடந்தது. ஜோன் வார்னரின் கட்டளைப்படி இதை நான் திரும்பவும் மிசூலாவுக்கு 4742 பறப்பில் அனுப்புகிறேன். கைப்பையின் உரிமைக்காரரிடம் இதை தவறாது சேர்ப்பிக்கவும். மூன்று நாட்களாக அவர்கள் காத்திருக்கிறார்கள். எது காரணம் கொண்டும் தாமதிக்க வேண்டாம். அவர்கள் ஒபாமாவுக்கு வேண்டியவர்கள்.’

கடிதத்தைப் படித்த நான் திகைத்து நின்றுவிட்டென். அந்த பெயர் தெரியாத நேர்மையான சலவைத் தொழிலாளி எங்கள் கையில் கைப்பை எப்படியும் கிடைக்கவேண்டும் என்று மற்ற அதிகாரிகளை வெருட்டுவதற்காக அப்படி ஒரு பொய் எழுதியிருந்தார். சிரிப்பாக வந்தது.

அன்று மாலை ரொறொன்ரோவுக்கு புறப்பட்டோம். மனைவி கைப்பையை இறுக்கிப் பிடித்தபடி வந்தார். ரொறொன்ரோ விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் நெடுநேரம் நின்றோம். ’கைப்பை இருக்கிறதா?’ ‘ஓ, இருக்கிறது.’ கடவுச்சீட்டுடன் குடிவரவு படிவத்தை நிரப்பி கையொப்பம் இட்டு நீட்டினோம். அதிகாரி எங்கள் முகத்தை நிமிர்ந்து பார்க்காமலே மெசினில் இழுத்துவிட்டு திரும்பவும் தந்தார். சூட்கேசுகளுக்காக காத்திருந்து மீட்டு அவற்றை உருட்டிக்கொண்டு வெளியே வந்தோம். ‘கைப்பை இருக்கிறதா?’ ‘ஓ, இருக்கிறது.’ வரவேற்பு கூடத்தில் நிறைய சனங்கள் பயணிகளை வரவேற்பதற்கு நின்றார்கள். பலர் பலவிதமான பெயரட்டைகளைக் காவிக்கொண்டு காத்திருந்தனர். எங்கள் பெயர் அந்த அட்டைகளில் இல்லை. ஒருவரும் எங்களைப் பார்த்து சிரிக்கவில்லை. துள்ளித் துள்ளி கைகளை எட்டி அசைக்கவுமில்லை. ஒருவருக்குமே நாங்கள் ஒபாமாவுக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பது தெரியவில்லை.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர்
முத்துலிங்கத்தின் இணைய தளம்

ஐ.டி துறை பணிப் பாதுகாப்பு – 2018 நிலவரம்

1

ஐ.டி – இந்தியாவின் மிகப்பெரிய காண்டிராக்ட் உழைப்புத் துறை !

லட்சங்களில் சம்பளம் என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஐ.டி துறையில் நிலவுகின்ற வேலைநிலைமை காண்டிராக்ட் தொழிலாளர்களின் வேலை நிலைமையை ஒத்திருக்கிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் தமது பணியிடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் சிலவற்றைப் பாருங்கள்.

  1. அமர்த்து & துரத்து (hire & fire) என்கிற கொள்கைப்படி இஷ்டம் இருந்தால் கொடுக்கின்ற சம்பளத்துக்கு வேலை செய்; இல்லையென்றால் ஓடிப்போ என்று வேலையை விட்டு துரத்துதல்
  2. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு ஷிப்டுகள் அளவுக்கு வேலை செய்வது
  3. கூடுதல் நேரம் உழைப்பது என்கிற பழக்கத்தின் உச்சகட்டமாக வாரத்தின் ஏழுநாட்களும் உழைப்பதாக வளர்ந்து நிற்பது. வாராந்திர விடுமுறை என்பது கேள்விக்குறியாவது.
  4. 8 மணிநேர வேலைக்கு மேல் செய்யப்படுகின்ற வேலைக்கு மிகை நேரப்பணி (ஓவர்டைம்) அடிப்படையில் இரட்டிப்பு சம்பளம் தராமல் ஏய்க்கப்படுவது.
  5. ’எச்.ஆர்’ என்கிற பெயரில் வலம் வருகின்ற அடியாளுக்கு ஊழியர்கள் நடுங்குதல். பெண் ஊழியர்கள் மீது பாலியல் வக்கிரங்கள்

ஐ.டி துறையில் வேலை செய்வது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய இளைஞர்களின் கனவு வாழ்க்கையாக இருந்து வந்தது. டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா முதல் சமீபத்தில் வெரிசான் வரையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஒரே இரவில் வேலையிலிருந்து துரத்திய பிறகு அந்த கனவு ஓரளவு மட்டுப்பட்டிருக்கிறது. இருந்தாலும், படித்து முடித்ததுமே 5 இலக்க சம்பளம், குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் வேலை, கையில் அழுக்குப்படாத கணினி வேலை என்ற கவர்ச்சி இன்னும் தொடர்கிறது.

ஓரிரு ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பிறகு “ஆன்-சைட்” என்ற பெயரில் அமெரிக்காவுக்கு போகும் வாய்ப்பு, சமூக கவுரவம் போன்றவை ஓரளவு மங்கி போயிருந்தாலும், புதிதாக அடிபடும் “கிளவுட் (மேகக் கணிமை)”, செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களை படித்து நாமும் அந்தக் கப்பலில் ஏறி விடலாம் என்ற கனவு மறைந்து விடவில்லை. ஆனால், எதார்த்தமோ வேறொன்றாக இருக்கிறது. ஐ.டி துறை வேலை என்பது நித்திய கண்டம்; பூரண ஆயுசு தான். கணினியில் வேலை என்றாலும் அது ஒருவகை காண்டிராக்ட் வேலை தான். காண்டிராக்ட் என்பதற்குப் பதிலாக அயல்பணி ( அவுட் சோர்சிங் ) என்று கவுரவமாக சொல்லிக்கொள்கின்றனர்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விட இந்தியாவில் குறைந்த கூலி என்பதால் இந்த நாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய சேவைகளை செய்வதற்கு இந்திய ஐ.டி நிறுவனங்களுக்கு அயல்பணி ஒப்பந்தங்கள் வழங்கி வந்தன. உதாரணமாக, இந்திய மென்பொருள் துறையின் தொடக்க காலங்களில் ஊழியர்களின் சம்பளம் ஒப்பிடக் கூடிய மட்டத்திலான அமெரிக்க ஊழியர்களின் சம்பளத்தில் 10%-20% ஆக மட்டுமே இருந்தது.

அடிப்படை ஆங்கில மொழித்திறன் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான படித்த இளைஞர் பட்டாளம் இந்தத் துறையின் தேவைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவித்து பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் வேலை நேரம் இந்திய வேலை நேரத்துக்கு நேர் எதிராக இருப்பதால் அந்நாட்டு நிறுவனங்களுக்கு இரவும் பகலும் பராமரிப்பு சேவை வழங்குவதற்கு ஏற்ப இந்திய நிறுவனங்களும் இரவுப்பணி செய்வதற்கு தோதாக சட்டங்களும் மாற்றப்பட்டன. வேலைமுறையும் மாற்றப்பட்டது.

2018-ம் ஆண்டு உலக அளவில் தலா $10 கோடிக்கு அதிகமான மதிப்புடைய 196 சேவை ஒப்பந்தங்கள் (மொத்த மதிப்பு சுமார் $510 கோடி) புதுப்பிக்கப்பட உள்ளன. இந்த 196 ஒப்பந்தங்களில் வெறும் 4 மட்டுமே இந்திய ஐ.டி நிறுவனங்கள் வசம் உள்ளன. டி.சி.எஸ் தவிர பிற இந்திய நிறுவனங்கள் $100 கோடி+ ஒப்பந்தங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதில்லை. பல ஒப்பந்தங்களில் இந்திய நிறுவனங்கள் இரண்டாம் நிலை பங்காளிகளாக உள்ளனர். அதாவது ஒப்பந்தத்தை வெல்லும் முதல்நிலை சேவை நிறுவனத்திடமிருந்து ஒரு பகுதி பணியை இரண்டாம் நிலை சேவை வழங்குனராக பெற்றுக் செயல்படுத்துகின்றனர்.

காண்டிராக்ட் தொழிலகங்கள் போலவே வாடிக்கையாளருக்குத் தேவையான சேவைகளை குறைந்த கூலியில் அமர்த்தப்பட்ட ஊழியர்கள் மூலமாக செய்து கொடுத்து கொள்ளை இலாபம் சம்பாதிப்பதுதான் இந்திய ஐ.டி துறை முதலாளிகளின் வணிக முறையாக இருந்து வருகிறது. எனவேதான் சமீபத்தில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட, அதிக சம்பளம் வாங்கும் இடைமட்ட ஊழியர்கள் டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா போன்ற நிறுவனங்களில் வேலையை விட்டு தூக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் இடத்தில் குறைந்த கூலி பெறும் புதிய ஊழியர்கள் அமர்த்தப்படுகின்றனர்.

இந்தத் துறையின் முன்னணி நிறுவனங்களான 1968-ல் தொடங்கப்பட்ட டி.சி.எஸ் (டாடா கன்சல்டிங் சர்வீசஸ்), 1976-ல் கணினி/கணினி பொருட்கள் (hardware) நிறுவனமாக தொடங்கப்பட்டு 1991-ல் தகவல் தொடர்பு சேவை வழங்க ஆரம்பித்த எச்.சி.எல், 1982-ல் தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ், அதே காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த விப்ரோ டெக்னாலஜிஸ் ஆகியவையும் பிற நடுத்தர, சிறு நிறுவனங்களும் அமெரிக்கமயமாக்கப்பட்ட இந்தியர்களால் தொடங்கப்பட்டன அல்லது நிர்வகிக்கப்படுகின்றன.

உற்பத்தித்துறையில் காண்டிராக்ட் தொழிலாளர்களை முதன்மை வேலையளிப்பவரான வாடிக்கையாளர் நிறுவனமே உற்பத்தி இலக்கு போன்றவற்றை தீர்மானித்து வேலைவாங்குகிறது இதைப்போலவே இந்திய ஐ.டி நிறுவனங்களின் சேவை வழங்கலிலும், வாடிக்கையாளர் நிறுவனம்தான் தரம், செய்முறை ஆகியவற்றை வரையறுத்து, உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது. ஒரு தொழில்நிறுவனம் தொழிலாளியின் உழைப்புச்சக்தியை சுரண்டி இலாபத்தை அதிகரிப்பதைவிட , அயல்பணி அல்லது காண்டிராக்ட் நிறுவனம் உழைப்புச்கக்தியை சுரண்டி இலாபமீட்டுவதில் வேறுபாடு இருக்கிறது. தொழில் நிறுவனத்தின் இலாபத்தில் அதன் உற்பத்திப்பொருளின் விற்பனைக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்கும். ஆனால், தொழிலாளர்களது உழைப்புச் சக்தியையே சரக்காக விற்கின்ற காண்டிராக்ட் மற்றும் அயல்பணி நிறுவனங்களது இலாபத்தை உழைப்புச்சக்தி என்கிற சரக்கே தீர்மானிப்பதால், அந்த நிறுவனத்தின் இலாபம் அதிகரிப்பு என்றால், உழைப்புச் சக்தி மீதான சுரண்டல் அதிகரித்திருகிறது என்று பொருள்.

இதைப் பற்றி புரிந்து கொள்ள இந்திய ஐ.டி நிறுவனங்களில் மிகப் பெரியதான டி.சி.எஸ்-ஐ எடுத்துக் கொள்ளலாம். இந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 3.87 லட்சம். இந்நிறுவனம் 2016-17 ஆண்டில் மொத்தம் ரூ 1.17 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதில் 59.7% ஊழியர்களின் ஊதியத்துக்கு செலவிடுகிறது. நிறுவனத்தின் மொத்த லாபம் 27.4% ஆக உள்ளது.

2015-16 ஆண்டில் ஊழியர்களுக்கான செலவு 58.6% ஆகவும் லாபம் 28.25% ஆகவும் இருந்தது. முந்தைய ஆண்டை விட 2016-17ல் லாபவீதம் குறைந்ததற்குக் காரணம் அமெரிக்காவில் அதிக சம்பளம் கொடுத்து அந்நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தியதுதான் என்கிறது டி.சி.எஸ்-ன் நிதிநிலை அறிக்கை.

அதாவது ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை குறைத்து உபரி மதிப்பை அதிகரிப்பதுதான் ஒரு இந்திய ஐ.டி நிறுவனத்தின் லாபவீதத்தை உயர்த்துவதற்கான வழியாக உள்ளது. அதனால்தான் உழைப்பு காண்டிராக்டர்கள் என்ற முறையில் உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஐ.டி நிறுவனங்கள் கையாள்கின்றன. நிர்வாகங்களின் நிறுவனங்களின் முழு கவனமும் மனிதவளத்துறை என்று அவர்களால் அழைக்கப்படும் ஊழியர்களை மேலாண்மை செய்வதில்தான் உள்ளது.

வெளிப்படைத்தன்மை இல்லாத அறிவியலுக்கு எதிரான அப்ரைசல் ரேட்டிங், வரம்பற்ற வேலை நேரம், தனித்தனியான ஊதிய விகிதங்கள், வேலை அழுத்தம் என்று ஊழியர்களை உடல் ரீதியிலும், உளரீதியிலும் வதைக்கும் ஐ.டி நிறுவன நிர்வாகங்கள் ஊழியர்களை உபரி மதிப்பை கறப்பதற்கான எந்திரங்களாகவே பார்க்கின்றனர்.

அதாவது உழைப்பை சுரண்டி கொழுக்கும் காண்டிராக்டர்கள்தான் இந்திய ஐ.டி துறை முதலாளிகள்.

எனவே, ஐ.டி ஊழியர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பிற துறைகளிலும் வேகமாக புகுத்தப்பட்டு வரும் காண்டிராக்ட் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு இணையானவையே. அனைத்துத் தொழிலாளர்களுடனும் இணைந்து போராடுவதே தமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான ஒரே வழி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

– குமார்
நன்றி: புதிய தொழிலாளி, ஜனவரி 2018
NEW DEMOCRATIC LABOUR FRONT I.T. Employees Wing

 

கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் தமிழ் ஃபேஸ்புக் !

6

எனக்கென்னமோ கமலின் அரசியல் வருகை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க கூடாரத்தில் சேதாரத்தை உண்டு பண்ணும்ணுதான் தோணுது..!

  • Arul Ezhilan

கமல் கட்சி ஆரம்பிக்கும்போது இதுவரை உளறியதைவிட பயங்கரமாக உளறுவார் என்று அதற்கு முந்தையைய தினம் நியூஸ் 18 நேரலையில் பதிவு செய்தேன். என் அனுமானத்தை அவர் ஒரு துளிகூட பொய்யாக்கவில்லை. மக்கள் கேட்டதாக பாரதிகிருஷ்ணகுமார் மேடையில் கமலிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்த விதம் ஒரு மாபெரும் அவல நாடகம்.

இவ்வளவு அரசியல் பேசப்படும் ஒரு மாநிலத்தில் எதைப்பற்றியுமே ஒரு குறைந்த பட்ச அறிவும் இல்லாத ஒருவர் முன்னிறுத்தப்படுவது மிகப்பெரிய அவமானம். நீட் பற்றியும் புதிய கல்விக்கொள்கை பற்றியும் நாம் போராடிக்கொண்டிருக்கும்போது ‘நல்ல பள்ளிக்கூடங்கள் வேண்டும்’ என் று பேசுவதற்கு ஒரு அசட்டுத்துணிச்சல் வேண்டும். தமிழகத்தில் காமராஜரும் அதற்கு பின்திராவிட இயக்கமும் வளர்த்த கல்விபற்றி அவருக்கு கைதட்டுபவர்களுக்கு ஏதாவது தெரியுமா?

‘நான் எந்த சித்தாந்தையும் பின்பற்றவில்லை…எல்லா சித்தாந்தத்திலிருந்தும் நல்லதை எடுத்துக்கொள்வேன்’ என்று பேசுகிற ஒருவருக்கு சித்தாந்தம் என்றால் என்னவென்று புரியவைக்க முடியுமா? மோடியையும் பிரனாய் விஜயனையும் சமமாக பாவிக்கும் ஒருவரை தமிழகம் பெற்றதன் தவப்பயனை என்னவென்று சொல்வது?

இலவசங்களை எதிர்த்துப் பேசுகிறார். இலவசங்களுக்கும் சமூக நலக்கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி எந்த அறிவும் இல்லாத ஒருவர்தான் இப்படி பேச முடியும். இலவசங்களை எதிர்ப்பவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள், மானியங்களை எதிர்ப்பவர்கள் அனவருடைய முகமும் வலதுசாரி பொருளாதார முகம்தான்.

‘ தமிழ் நாட்டில் தமிழ் அழிகிறதே ‘ என்று கேட்டால் ‘ எல்லோரும் நல்லா தமிழ் பேசுங்க ‘ என்கிறார். மொழி உரிமைக்காக ரத்தம் சிந்திய மாநிலத்தில் இப்படி ஒரு மொழிக்கொள்கையை ஒருவர் பேசுகிறார். ‘ தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கிறதே? என் று கேட்டால் ‘ எல்லா பெண்களையும் உங்கள் அககா தங்கச்சியா நினைங்க ‘ என்கிறார்.

காவிரி பிரச்சினை பற்றிக் கேட்டால் ‘ கர்நாடகாவில் இருந்து தண்ணீர் என்ன ரத்தமே வாங்கித்தருகிறேன்…ஆள் ஆளுக்கு தூண்டிவிடாதீர்கள்..உட்கார்ந்து பேசுவோம்” என்கிறார். இந்தப்பிரச்சினையில் என்ப நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியாத மூடர்கள் மட்டுமே இப்படி பேச முடியும்.

கமல் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். ஆனால் அவருக்கு நமது சமூகபிரச்சினைகளின் அரிச்சுவடிகூட தெரியாது என்பதன் சாட்சியமே நேற்றைய உரை. கமலஹாசனைபோலவே எந்த புரிதலுமற்ற டுபாக்கூர்கள் வேண்டுமால் இந்த உளறல்களுக்கு கைதட்டலாம்.

கமலை யாரும் எதிர்க்க வேண்டியதில்லை. அந்த வேலையை நம்மைவிட அவரே சிறப்பாக செய்துகொள்வார்…..

  • Abdul Hameed Sheik Mohamed

இடதுசாரியா – வலதுசாரியா?
மடிசாரி!   ம்ம் சரி சரி!
இந்த #மக்கள் #நீதினு தொடங்குதே!
அவாள்களுக்கான நீதிதான் அது.
அதென்னப்பா #மய்யம்?
நடு செண்டர் – அதாவது நடுநிலை ….க்கி!

  • ராஜா ஜி

நடுநிலைனு ஒண்ணு இல்லவே இல்ல கமல். எல்லோருக்கும் நல்லவனாக இருக்க ஒரு அயோக்கியனால்தான் முடியும்.

  • Muthu Ram

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தை வேற யாரையாவது நடத்த சொல்லுங்க ஆண்டவரே. உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.

  • Muthu Ram

ரஜினி, கமல், யோகிபாபு, போண்டா மணி என்று யார் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவும், அதிமுகவும் ஏன் பதட்டப்படுகிறது என்று சமூக வலைத்தளங்களில் கேட்கிறார்கள். குறிப்பாக பா.கம்யூவினர். ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பவர்கள்தான் இதுபோன்ற சிறு சிறு சலனங்களுக்குகூட ரியாக்ட் செய்வார்கள். அதுதான் இயல்பும்கூட. கடந்த தேர்தலில் மநகூ அமைத்து போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்த பா.கம்யூவுக்கு என்ன கவலை?

தூத்துக்குடியில் மாநில மாநாடு நடந்திருக்கிறது. புதிய மாநிலச் செயலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். போலிஸ் வேறு பேரணியில் வெளுத்து வாங்கியிருக்கிறது. இத்தகைய சூழலில் நியாயமாக பேசுப்பொருள் ஆகவேண்டியிருக்க வேண்டிய பா.கம்யூவை பற்றி யாருமே பேசுவதில்லை. மாறாக கமல்ஹாசனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

சூடு, சொரணையோ, சுயமரியாதையோ இருக்கும் பட்சத்தில் பா.கம்யூவினர் இதற்காக கொதித்திருக்க வேண்டும். நம்மூர் கம்யூவினரிடம் இவ்வளவு வீரத்தையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது. அடுத்த தேர்தலில் அடுத்தவன் குடிகெடுக்க ஒரு கூட்டணி அமைக்க அவர்களுக்கு ஓர் இரட்சகன் உருவாகிவிட்டார் என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் ஆவி இவர்களை மன்னிக்காது.

  • Yuva Krishna

பாரதி கிருஷ்ணகுமாரை அந்த ‘மநிம’ மேடையில் பார்த்து பல தோழர்களுக்கு கடும் கோபமும் அதிர்ச்சியும் ஏற்பட்டு இருப்பது தெரிகிறது. ஒருகாலத்தில் மிக நெருக்கத்தில் இருந்து அறிந்தவன் என்ற முறையில் எனக்கொன்றும் அதிர்ச்சியாக இல்லை. எனக்குள் இடதுசாரி சிந்தனையை, அதன் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்ற முறையில் எப்போதும் அவர் மீது அதற்கான மரியாதை எனக்குண்டு. அவர் விதைத்த மார்க்சீய சிந்தனைகளே அவரிடமிருந்து பின்னர் அவரை விட்டு விலகவும் வைத்தன என்கிற புரிதலும் எப்போதும் உண்டு.

தன்னை சுடர வைத்த சிந்தனைகளுக்கு நியாயம் செய்ய முடியாமல் தோற்றுப்போன ஒரு மனிதராக அவரைப் பார்த்து பரிதாபம் மட்டுமே கொள்கிறேன். பிழைக்க ஒரு வழி தேடி இருக்கும் அவருக்கு வாழ்த்துகள்!

  • Mathava Raj

இரண்டு கம்யுனிஸ்டு கட்சிகளும் தமிழகத்தில் தெரிந்தே செய்கிறார்களா? தெரியாமல் செய்கிறார்களா? தெரியவில்லை. திராவிடத்தை ஒழிப்பேன் என்று தேசியம் பேசிய எம்ஜியாரை கொண்டுவந்தார்கள். இப்போ நம்மவா-வைக் கொண்டு வந்துள்ளார்கள். கட்சியை கொள்கை அடிப்படையில் கட்டும் எண்ணமே இல்லை. காரணம் தேசமே அற்ற தேசியத்தை ஏற்றவர்கள் அல்லவா நம்ம ”ஹிந்திய தேசிய கம்யுனிஸ்டுகள்” அதான். ”இடது” மய்யத்தை நோக்கி நகர்கிறதோ?

  • Jamalan Tamil

கமல் மேடையில் மக்கள் கேட்டதாக கேட்கப்பட்ட கேள்விகள் சென்னையில் இருந்து எழுதப்பட்டு ஒரு குழுவால் தெரிவு செய்யப்பட்டு பதிலும் ஸ்கிரிப்ட் படி தயாரானது..! ஆளுக்கு பத்து கேள்வி எழுதியிருக்கிறார்கள்.

கமல் தமிழக மக்களை ஏமாற்ற முனைகிறார் , தமிழகத்தில் உயிர் நாடிக் கொள்கையான இட ஒதுக்கீடு, நீட் தேர்வு அநீதி, காவிரி நீர் விவகாரம், சுற்றுச் சூழல் பிரச்சனைகள் என பேசாமல் அடிப்படையான இந்த விஷயங்களுக்கு பதில் சொல்லாமல் ஊழல்,. ஓட்டுக்கு பணம், கல்வி சரியில்லை, சாக்கடை சரியா ஓட மாட்டேங்குது.. என்று பேசுகிறார்…

என்.ஜி.ஓ பாணி அரசியலை மாற்று அரசியலாக தமிழகத்தில் முன் வைக்கிறார். இவரால் திமுக, அதிமுக வை எதுவும் செய்ய முடியாது. காரணம் இந்தியாவையே நாசக்காடாக்கிக் கொண்டிருக்கும் மோடியின் பேரழிவு திட்டங்கள் பற்றி எதுவுமே வாய் திறக்கவில்லை. பணமதிப்பிழப்பு, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி என மவுனம் காக்கும் கமல் தமிழக அரசியலில் வடை சுட நினைக்கிறார்.

  • Arul Ezhilan

எதிர்பார்த்ததைப்போல ஆங்கில ஊடகங்கள் காலைமுதல் ”நம்மவா” (கடற்கரய் மத்தவிலாச அங்கதம் காப்பிரைட்) கூட்ட வாசலில் கட்டிலைப்போட்டு ஆரம்பித்துவிட்டார்கள்.. விடிவெள்ளி என எம்ஜியார், ஜெ துவங்கி விசயகாந்தவரை சினிமா அரசியல் வரலாறை புலம்பிக்கொண்டுள்ளனர். தமிழ் சேனல்கள் மானத்துடன் (கலைஞர் செய்திகள், சேனல்-18) ஆகியவை காவிரி பிரச்சனை மற்ற செய்திகளை பேசிக்கொண்டுள்ளன. மற்றசேனல்கள் ”செட்டாப் பாக்ஸ்” இல்லாமல் வரவில்லை.

எதிர்பார்த்ததைப்போல, ஆன்மீக அரசியல், திராவிட அரசியல் என எல்லா அரசியலையும் இறங்கி அலசி எப்படியாவது தமிழகத்தில் காவிக் கொடி நாட்ட கங்கணம் கட்டி இறங்கியுள்ளது இந்துத்துவ-பார்ப்பனியக்-காவிப்படை

  • Jamalan Tamil

அடுத்த ”மநகூ”-வின் விஜயகாந்த்-தான் கமல். செங்கொடி தோழர்கள் அதில் உள்ள சிவப்பு கைகள்தான். அவரை தூக்கிச் சுமப்பார்கள் போலிருக்கிறது. இலுமினாட்டிகள் பற்றிய செய்திகளில் அக்கறை இல்லை என்றாலும், இலுமினாட்டிகளின் ஆறுகலை தாவீதின் ஜியோனிச நட்சத்திரம் அந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

கேஜ்ரிவாலுக்குப்பின் உருவாகியிருக்கும் மற்றொரு என்ஜிவோ கட்சி என்பதே ”மக்கள்? நீதி? மய்யம்?” போன்ற சொற்களின் சேர்க்கை. உலகமயமாகிவிட்ட அரசியல் சொல்லாடல்களத்தில் கட்சிகள் என்ஜிவோ சீர்திருத்த இயக்கங்களாக மாறிவருதன் ஒரு வெளிப்பாடு இது. கொள்கை, கோட்பாடு எதுவும் தேவையில்லை. தேவை நீதி, நேர்மை, உண்மை என்கிற விளம்பர வாசகங்கள் மட்டுமே.

  • Jamalan Tamil

அழைக்காவிட்டாலும் வலியச்சென்று கமல்ஹாசனை வாழ்த்துவது. ஆனால் எத்தனையோ போராட்டங்களில் 2009 முதல் அழைத்தும் போகாமல் இருந்ததும், போக வேண்டுமானால் தமிழகத்திற்குள் விமானச்சீட்டு, சொகுசு அறை கேட்டதும், தான் மட்டும் இறுதியில் பேசவேண்டுமென நிபந்தனைகள் வைத்ததும், சில போராட்டங்களில் நுழைந்து ‘முடித்துவிட்டு போங்கள். அண்ணன் நான் பார்த்துக்கிடுதேன். ஆட்சிக்கு வந்ததும் ஒற்றைக் கையெழுத்தில் முடித்துவிடுவேன்.’ என்றெல்லாம் அரசியல்நீக்கம் செய்ததும் யாரப்பா?

பொங்குகிற, மடைமாற்றம் செய்கிற, திரைக்கதை சொல்லுகிற நாதக இதற்கு மறுப்பை சொல்ல முடியாது. காரணம், ஈழத்தை முதலீடாக்கி பதவி கனவில் இருக்கிற தலைமை இவற்றை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாது.

  • Thiru Yo

கட்சி பெயரை நம் தலைவர் அறிவிக்கப்போகிறார் எல்லோரும் ஒருமுறை கரவொலி எழுப்புங்கள்.

#ஹெல்லலூயா

  • SD Prabhakar

ஒருபொழுது தோழர் பாரதி கிருஷ்னகுமாரேதான் இப்படி எழுதினார்.

‘ எப்போதும் நீதி மறுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட கைவிடப்பட்ட மக்களின் பக்கம் நின்று கொள்ளுங்கள். அது நீதியின் பக்கம் நிற்பது மட்டுமல்ல, நீதியாகவே நிலைபெறுவது’

அடிப்பவனுக்கும் அடிபடுபவனுக்குமிடையே நடுநிலைமையென்பதே அயோக்கியத் தனம்.

நடுநிலைமை என்பது
கோழைகளின் முகமூடி…
நடுநிலைமை என்பது
முட்டாள்களின் உளரல்..
நடுநிலைமை என்பது
தேன் பூசப்பட்ட விஷம்..
நடுநிலைமை என்பது
பூசி மொழுகப்பட்ட பக்கச்சார்பு..

  • Samsu Deen Heera

MNM = MLM…

  • Udayakumar Balakrishnan

பாஜக ஆட்சியின் கூத்துகளில் ஒன்றைக் கூட விமர்சிக்கத் துப்பில்லை…
அதிமுக சரியில்லை எனச் சொல்வது,

அடிமைகள் வேண்டாம் பார்ப்பனியச் சட்டாம்பிள்ளை நான் இருக்கிறேன் என்று சொல்வது தான்.

கற்பைக் கற்பிதம் என்று துணிச்சலுடன் கருத்து சொல்லி அதற்கான கடும் எதிர்ப்புகளைக் கண்ட குஷ்பு இவரை விட எவ்வளவோ நேர்மையான அரசியல்வாதி. மய்யமாம்…

  • Deepa Lakshmi

கமல்ஹாசனின் கட்சிக் கொடியில் திராவிட நிறங்களான கறுப்பும் சிவப்பும் அத்தோடு வெள்ளையும் இருக்கின்றது. கறுப்பில் வெள்ளை கலந்தால் அது சாம்பலாகி விடும். சிவப்பில் வெள்ளை கலந்தால் அது காவியாகி விடும்.

கட்சியின் பெயர் பற்றி பல ஊகங்கள் வந்தன. கடைசியில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று ஒரு பெயரை வைத்திருக்கிறார். ‘இலக்கிய குவியம்’ என்பது போன்ற ஒரு பெயராக இருக்கிறது. கொஞ்சம் கூட கம்பீரமாக இல்லை. ‘மையம்’ என்று எழுதாமல் ‘மய்யம்’ என்று பெரியார் தமிழில் இருந்தது ஒரு மகிச்சியான விடயம்.

கமல் என்னப் பேசப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தால், சோறு பருப்பு என்று கவிதை சொன்னார். அவர் தமிழக மக்களுக்கு ஏற்றபடி பேச இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. கமலுடைய கட்சி உருப்பட்ட மாதிரித்தான்!!!

  • வி. சபேசன்

ஊழலை ஒழிக்கிறதுன்னா…ஊழல் பண்ணவே இல்லன்னு நம்பும்படியா ஏமாத்தறது… சாதி அரசியல் ஒழியணும் அப்படின்னா…

“நாம ரெண்டு பேரும் ஒரே ஜாதி, அதனால உனக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்றா…” ந்னு நக்கலா காயத்ரி ரகுராம்(‘சேரி பிஹேவியர்’ டயலாக் புகழ்) கிட்ட சொல்லி அவர் பேந்தப் பேந்த முழிச்ச மாதிரி ஆக்ட் குடுத்ததை ரசிச்சு, “பாருங்க..அவங்க என்ன சொல்றாங்கன்னு கூட உங்களுக்குப் புரியல…அவளோ இன்னசண்ட்” ந்னு புல்லரிச்சாரே… அதான்.

சுருக்கமா சொல்லணும்னா சாதி வெறிக்கு எதிரான குரல்களைப் புறக்கணிக்கிறது… இடதும் இல்ல வலதும் இல்ல அப்படின்னா வாஸ்துப் பிரகாரம் வலது கோடி மூலைன்னு அர்த்தம்.

‘எல்லாருக்கும்’ தரமான கல்வின்னா…’பிம்பிளிக்கி பில்லாபி’ந்னு அர்த்தம்

#முடியல

  • Deepa Lakshmi

வணக்கம் கமல் அவர்களே… கொடியைகூட சுயமாக வடிவமைக்கும் பணியை செய்யாத நீங்கள்… நாட்டிற்கு என்ன செய்ய போரீங்க…

  • கோ தேவராஜன் சமூக ஆர்வலர்

நீதிமன்றத்தினால் ஊழல் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு, தண்டிக்கப்பெற்ற ஜெயலாலிதாவை, “அம்மா, அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு” என்று உருக்கமா பாடி துதித்த கவிஞர் சிநேகன்;

அதே ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடச்சொல்லி தமிழகமெங்கும் பிரசாரம் செய்த வையாபுரி இவங்க எல்லாம் யாருன்னு பார்த்தால் இவங்கதான் “ஊழல் ஒழிப்பு” என புறப்பட்டிருக்கும் கமலஹாசனின் பிரசார படை வீரர்கள்.!

#த்தூ

  • Gopinath Kubendran

பத்திரிக்கையாளர் — அப்துல்கலாம் இறந்தபோது நீங்கள் ஏன் வரவில்லை…

ஆல்வார்பெட் காட் — பொதுவாக எனக்கு இறுதி ஊர்வலங்களில் கலந்துகொள்வதில் உடன்பாடில்லை…

டியூட்ஸ்…..
ஓ மை காட் … மிக்கமகிழ்ச்சி …. அப்போ நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்துல வண்டில ஏறி … உங்க ஃபிரெண்டு… அதாங்க கொள்க என்னானு கேட்டா தலசுத்துமே அவுருகூட உக்காதுனு போனீங்கலே அது இன்னாது.. ஒரு வேல சூட்டிங்க்னு சொல்லி ஆல்வார்பெட் காட ஃபூலிங்க் பன்னி தள்ளினு போயிருப்பாங்களோ டியூட்ஸ்.

  • Rathna Senthil Kumar

#சமுத்திரக்கனியிடம் உங்களுக்கு பிடித்த தலைவர் யார் என்று கேட்ட போது ஜோதி பாசு, நல்லக்கண்ணு……இப்ப யோகி ஆதித்யநாத் என்று சொன்னார். அதாவது உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் கமல், ரஜினி….. இப்போது பவர்ஸ்டார் சீனிவாசன் என்று சொன்னால் எப்படி இருக்கும்??? எல்லாரும் நம்மை பார்த்து சிரிப்பார்கள். ஏன் சிரிக்கிறான்னா அவனுக்கு அது புரிஞ்சிருக்கு. அதே சமயம் அரசியல் என்று வரும் போது எந்தெந்த பெயர்களை சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கூட தெரியாது.

ஒரு சினிமாவை டிவிட்டர், பேஸ்புக்கில் விமர்சனம் செய்தால் உடனே “அந்த படத்துக்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருந்துச்சு தெரியுமா….. அதெல்லாம் தெரியாமா விமர்சனம் பண்ணாதீங்க” என்று விஷால் போன்ற நடிகர்கள் கோபப்படுவாங்க. உங்களுக்கு நல்லா தெரிஞ்ச விசயத்தை சரியாக பண்ணாமல் இருக்கும் போது, அதை விமர்சித்தால் உங்களுக்கு தாங்க முடியவில்லை. அரசியலை பற்றி எதுவுமே தெரியாம….படத்துல யாரோ எழுதி கொடுத்ததை வைச்சு பேசுறது மாதிரி மொட்டையா பேசுனா அதுக்கு எங்களுக்கு எவ்வளவு கோபம் வரனும்.

சமுத்திரக்கனி, #விஷால் மாதிரி #கமல் அரைகுறை கிடையாது. அவர் எல்லாவற்றையும் தெரிந்து புரிந்து தான் பேசுவார் என்று பார்த்தால். அம்பேத்கர், நேரு, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் என்கிறார். அதாவது நடிப்பில் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்றால் சிவாஜி, கமல், விக்ரம், ராம்கி, ஜித்தன் ரமேஷ் ரொம்ப பிடிக்கும் என்பது மாதிரி. கமலுக்கு அருகில் உட்கார்ந்த சோம்நாத் பாரதி என்பவர் அதிமுகவில் ரமணா என்று ஒரு அமைச்சர் மாதிரி தான். அதுக்கு பேசாம செல்லூர் ராஜூவை மேடை ஏற்றியிருக்கலாம். “தமிழ்நாட்டில் நல்ல கல்வி, மருத்துவம், சாலை வசதி இல்லை” என்று உத்தர பிரதேசம், பிகார்ல பேசுவதா நினைச்சுக்கிட்டு கேஜ்ரிவால் தமிழ்நாட்டை பற்றி பேசுகிறார். டெல்லியில் இருந்து அரசியல் செய்பவன் அறிவாளி என்று நினைப்பதும்……வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் மாதிரி தான்.

தமிழ்நாட்டில் கலைஞர் ஆக்டிவாக இல்லை, ஜெயலலிதா இல்லை, விடுதலை புலிகள் பிரச்சினை இல்லை, காவிரி விவகாரம் தீர்ப்பு வந்துவிட்டது, அரசியலுக்கு வருவதற்கு முன்பே நீட் அமல்படுத்தியாச்சு, ஓபிஎஸ்-இபிஎஸ் மேல் மக்களுக்கு கோபம்…….. இதெல்லாம் தான் கமல் அரசியலுக்கு வர காரணமே தவிர, மற்றபடி அந்த கால்சென்டர்​ தொடங்க காரணம் எதுவும் இல்லை.

“நடிகன் நடிகனாகத்தான் இருக்க முடியும். தர்ம உபதேசம், அரசியல், தத்துவ ஞானமெல்லாம் அவனுக்கு இருக்காது, இருந்தால் அதெல்லாம் இரவல் சரக்காகத்தான் இருக்க முடியும்” என்று எம்.ஆர்.ராதா சொன்னது எவ்வளவு பெரிய உண்மை.

  • தோழன் பாலா

இவரே இப்படி ஒளறுறாரே, அடுத்து வரப்போற அவர் கட்சியை நினைச்சாதான்..!

  • வாசுகி பாஸ்கர்

அப்துல் கலாம் ஊர்வலத்தில் ஏன் பங்கேற்கவில்லைன்னு கமலை நோக்கி அரைவேக்காட்டுத்தனமான ஒரு கேள்வி. ஒருவர் பற்றிய மதிப்பை அளவிடுவதற்கான காரணமாய் இறுதிஊர்வல பங்கேற்பை எல்லாம் சொல்ல முடியாது.

அப்படியும் கமலஹாசன் வேறு ஏதாவது சொல்லி சமாளிப்பார்ன்னு பார்த்தா “இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதில் எனக்கு நம்பிக்கையில்லையென” சொன்னார்.

நம்மாளுங்க சும்மா இருப்பாங்களா? சிவாஜி கணேசன் ஊர்வலத்தில் ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் நடுவுல இத்தா தண்டி குத்துக்கல்லு மாதிரி குந்திட்டு வேன்ல போற போட்டோவை அப்லாட் பண்ணிட்டாங்க.

கமல் சிக்குற இடமே மைக்கை கொடுத்து சுதந்திரமா ஆத்து ஆத்துன்னு ஆத்துற இடமில்லை, rapidfire கேள்விகளில் தான்.

வாடி ராசாத்தி

  • வாசுகி பாஸ்கர்

சினிமா நடிகர்கள் கட்சி துவங்குவதால் சில சாதகங்கள் உண்டு. variety யான புகைப்படங்கள் கிடைக்கும், தீம் ம்யூசிக், பாடல்கள் கிடைக்கும், இருபது வருடம் கட்சி நடத்தினாலும் கிடைக்காத ஊடக வெளிச்சம் free of cost . முரசொலி, கலைஞர் டிவி, மதிமுகம், வெளிச்சம், மக்கள் டிவி போல தன் அரசியலை பேசுவதற்கென்று தனியான ஒரு ஊடகத்தளம் தேவையில்லை, இதற்கெல்லாம் மேல மக்களுடன் உரையாடித்தான் அறிமுகம் செய்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

எம்ஜிஆருக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எம் எஸ் வி, கண்ணதாசன், கேவி மஹாதேவன் ஆகியோரது படைப்புகள் பின்புலமாக இருந்ததை போல, கமலஹாசனுக்கு காலையில் இருந்து ஷங்கர் மஹாதேவன் குரலில் இசையில் காலையில் இருந்து “ஆளவந்தான்” தீம் ம்யூசிக் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினிக்கு மொத்த இளையராஜா, தேவா பாட்டு, விஜய்க்கு தமிழன் முதல் மெர்சல், சூர்யா ஒருவேளை வந்தால் ஆயுத எழுத்து பாட்டு.

இதையெல்லாம் கலந்துவிட்டு அப்படியே ஒரு ஆடியோ வீடியோ விஷுவல் போடுறப்ப ஜிவ்வுன்னு இருக்கும்பாரு, தமிழ்நாடே மாறி பெரிய புரட்சிக்கு தயாராகுற மாதிரி இருக்கும், அந்த போதையிலையே விழுந்து சாவுங்க

  • வாசுகி பாஸ்கர்

இடதையும் வலதையும் சமமாக நிறுத்தும் தராசு வலதைவிட மோசமானது, இழிவானது.

நான் இடதும் இல்லை வலதும் இல்லை நடு செண்டர் என்பதை இப்படியும் சொல்லலாம்.,.,

நான் ஒழுக்கமாவனும் இல்லை ரேப்பிஸ்ட்டும் இல்லை.

  • Villavan Ramadoss

இவுனுக மாற்று அரசியலுக்கு கட்சி ஆரம்பிக்கறானுகளா ?
இல்லை மீம்ஸ்க்கு கட்சி ஆரம்பிக்கறானுகளா?
இல்லை மாற்று அரசியலே மீம்ஸ்க்கானதா ?

டே இதோ பாரு..
நீங்க என்னமோ பண்ணி தொலைங்க..
ஆனா மீம்ஸ் ஸ்லாட் என்பது பாஜகவிற்கானது ..
அந்த உரிமையை தமிழன் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டான். Mind it !

  • Thameem Tantra

கமல் பேசுவதை நீங்கள் இன்று நீங்கள் கிண்டல் செய்யலாம் … ஆனால் இன்னும் பத்து வருடங்கள் கழித்து எவ்வளவு அட்வான்ஸடாக பேசி இருக்கிறார் என்று புரியும். எதுக்கும் சொல்லிவைப்போம்.. இவுனுக படத்துக்கும் இதான சொல்லுவானுக..

ஆனா ஒன்னு இந்த scriptக்கும் பேசாம crazy மோகனையே எழுத சொல்லிருக்கலாம்..கொஞ்சம் சிரிப்பாச்சி வந்துருக்கும் … வீம்புக்கு நானே எழுதுறேன்னு சொல்லி மொக்க தாங்க முடியலடா சாமி.

  • Thameem Tantra

கமலின் கட்சி பெயர்- ‘மக்கள் நீதி மய்யம்’

டே என்னடா ?

கட்சிக்கு பேரு வைக்க சொன்னா.. கம்ப்யூட்டர் சென்டெர்க்கு பேரு வெச்சுருக்கீங்க

  • Thameem Tantra

காரல் மார்க்ஸ்:

மனிதர்கள்தாம் அவர்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்கள் ஆசைப்பட்ட படியும், அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட சூழல்களுக்குள்ளிருந்தும் உருவாக்குவதில்லை. ஏற்கெனவே கடந்த காலத்தில் உருவாகி ஏற்கெனவே இருக்கும் சூழலிருந்துதான் செய்கிறார்கள். இறந்துவிட்ட தலைமுறைகளின் பாரம்பரியம் உயிரோடிருப்பவர்களின் மூளைகளை ஒரு கெட்ட கனவு போல் அழுத்திக்கொண்டிருக்கிறது. அவர்கள் தம்மையும் தம்மைச் சுற்றி இருப்பவற்றையும் புரட்சிகரமாக மாற்றுவதாகவும், முன்னெப்போதும் இருந்திராத ஒன்றை உருவாக்கப்போவதாகவும் நினைத்துக் கொண்டு முனைப்புடன் செயல்படும் ஒரு சிக்கலான நேரத்தில், அவர்கள் கடந்தகாலத்தின் ஆவிகளையும், அவற்றின் பெயர்களையும் போர் முழக்கங்களையும், ஆடைகளையும் துணைக்கழைத்துக் கொள்கிறார்கள்; உலக வரலாற்றின் இந்தப் புதிய காட்சியை காலத்தால் நிரூபிக்கப்பட்ட மாறுவேஷத்துடனும் கடன்வாங்கப்பட்ட மொழியுடனும் படைக்கிறார்கள்.

  • Vijayasankar Ramachandran

சிஸ்டம் கெட்டுப் போச்சு என்பதை கமல் அவர் பாணியில் பேசுகிறார். ஆசிரியருக்குக் கடிதம் எழுதி, பெயரை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் அனுப்பி வைப்பதையே அதிகபட்ச அரசியல் செயல்பாடாகக் கருதும் மத்தியதர வர்க்கத்தின் திண்ணைப் பேச்சுதான் அது.

  • Vijayasankar Ramachandran

காஞ்சிபுரம் விபத்து : நமது மக்கள் இப்படித்தானா சாக வேண்டும் ?

1

காஞ்சிபுரம் அருகே தாமலில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற டாடா ஏஸ் வாகனம் மீது தனியார் ஆலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோதிய விபத்தில் 8 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியை சேர்ந்தவர் தேவன்மணி என்பவரின் மனைவி நளினி குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த சிறுணமல்லியைச் சேர்ந்த சுமார் 25 -க்கும் மேற்பட்டோர் டாடா ஏஸில் தாமல் கிராமத்துக்கு 18 -ம் தேதி மதியம் சென்றிருக்கிறார்கள்.

படம் : நன்றி தினகரன்

இவர்கள் வந்த டாடா ஏஸ், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் இருந்து எதிர்புறம் செல்ல வழி இல்லாததால், சாலையில் உள்ள சென்டர் மீடியனை உடைத்து அந்த வழியை பொதுமக்கள் பைக், கார் போன்ற வாகனங்கள் செல்ல பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இவ்வழியாக சென்றால் விரைவில் தாமல் கிராமத்திற்கு சென்று விடலாம் என்பதால் சாலையில் இருந்து சற்று உயரமாக இருந்த சென்டர் மீடியன் உடைக்கப்பட்ட பாதை வழியாக டாடா ஏஸ் கடக்க முயன்றது.

அதிக பாரம் மற்றும் மேடான பகுதியாக சென்டர் மீடியன் இருந்ததால், டாடா ஏஸ் வண்டி வேகமாக ஏற முயன்ற போது, சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி எதிர்திசையில் மற்றொரு வாகனம் வந்ததால், டாடா ஏசை பிரேக் போட்டு நிறுத்த டிரைவர் முயற்சி செய்துள்ளார். ஆனால், மேடான பகுதி என்பதால் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து அவ்வண்டி பின்னோக்கிச் வேகமாக கீழே இறங்கியுள்ளது.

அதே சமயம், பெங்களூரு மார்க்கத்தில் இருந்து காஞ்சிபுரம் மார்க்கமாக ஒரகடம் சென்ற ஒரு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி வந்த டாடா ஏஸ் மீது உரசிவிட்டு சென்றது. இதனால் தடுமாறிய டாடா ஏஸ் நிற்காமல் பின்னோக்கி வந்து கொண்டே இருந்ததை டிரைவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், டாடா ஏஸ் மீது இரண்டாவதாக வேகமாக வந்த மற்றொரு தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இதில் டாடா ஏஸ் தூக்கி வீசப்பட்டு, வேனில் இருந்தவர்கள் அலறித்துடித்தனர். இந்த கொடுரமான விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிரார்கள். படுகாயமடைந்த 4 பேர் நிலை கவலைக்கிடமாகவும், 3 பேரை மேல் சிசிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தை டாடா ஏஸ் டிரைவரின் அஜாக்கிரதையால் நேர்ந்த கோரம் என்கிறார்கள். முக்கியமாக, தேசிய நெடுஞ்சாலையில் வளைவே இல்லாத இடத்தில் விதியை மீறி வலதுபுறமாக திரும்பி கடக்க முயன்றது, பின்னால் பேருந்துகள் வருவது தெரிந்தும் கவனக் குறைவாக சாலையைக் கடக்க முயன்றது, அனைத்துக்கும் மேலாக சரக்குகள் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டிய டாடா ஏஸ் சரக்கு வண்டியில் விதிகளை மீறி ஆட்களை ஏற்றிச் சென்றது ஆகிய காரணிகளே 9 பேரின் உயிரைப் பறித்த கோர விபத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது.

உண்மையில் எந்த ஓட்டுனர்களும் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வாகனத்தை இயக்குவது இல்லை. அப்படியிருந்தால் தினந்தோறும் லட்சக்கணக்கான விபத்துக்கள், மரணங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அதனையும் மீறி கன நேரத்தில் நிகழக்கூடும் விபத்தின் சமூகக் காரணிகளை நாம் பரிசிலீக்க வேண்டியது அவசியமாகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு “எங்கேயும் எப்போதும்” என்ற திரைப்படம் விபத்து குறித்த ஓர் மாபெரும் அச்சத்தை நமக்கு ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அப்படத்தில் விபத்துக்கான காரணிகள் குறித்து சிறிதும் பேசாமல் கடந்து சென்றிருக்கும். அத்திரைப்படம் குறித்த விமர்சனம் வினவில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக கிராமப்புறங்களில் நல்லது கெட்டது, காரியங்களுக்கு மினி வேன்களை ஏற்பாடு செய்து அதில் சென்று வருவது என்பது அதிரித்திருக்கின்றது. நகரமயமாக்கலின் விளைவு மனித உறவுகளை பிரித்து பந்தாடி வருவதால் திருமண நிகழ்ச்சிக்கு கூட ஆட்களை கூப்பிட்டு செல்வது என்பது மிகவும் அரிதாகி விட்டது. பேருந்தில் செல்லலாம் என்றால் அதிக கட்டணம். மேலும், எப்பொழுதாவது வரும் பேருந்து என்றால் ஆட்கள் வருவார்களா? மாட்டார்களா? என்ற கவலை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து துரத்துவதால் மினி வேன்களை ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.

மினி சரக்கு வேன் ஓட்டுனர்களின் பாடு என்பது பெரும்பாடு. நாள் ஒன்றுக்கு சவாரி கிடைப்பது என்பதே பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைவதற்கு சமமாக உள்ளது. இதுபோக அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள், டீசல் விலை உயர்வு , போலிசின் வழிப்பறி, மற்றும் குடும்ப பிரச்சனைகள் என்று ஏராளமாக உள்ளது. இதற்கு இடையில் தான் தங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இருப்பினும் சாலை விதிகளை மீறுவது சரியா? என்று கேள்வி எழலாம். தவறு தான். ஆனால் இந்த இந்தத் தவறுகளின் பின்னே நிறுவனமயமான தவறுகள் பல அடிப்படையாக இருக்கின்றன. அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டும் தொழிலாளர்களது தவறு மட்டுமல்ல.

தேசிய நெடுஞ்சாலைகளைப் பொறுத்த வரையில் சாதாரண மக்கள் நடப்பதற்கு கூட இடமில்லை எனுமளவிற்கு கார்கள், தனியார் ஆம்னி பேருந்துகள், கார்ப்பரேட் முதலாளிகளின் சரக்கை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் என்று இடைவிடாமல் தாறுமாறாக தறிகெட்டு ஓடுகிறது. இந்த தனியார் வாகனங்களின் ஓட்டுநர்க் குறிப்பிட்ட நேரத்தில் டிரிப்பை முடித்தால்தான் ஊதியம் என்பதால் தங்களது உயிரையும் பணயம் வைத்து ஓட்டுகின்றனர். லாரி உரிமையாளர்களுக்கோ அன்றாடம் ஏறும் டீசல் விலையால் குறிப்பிட்ட நாளில் சரக்கை கொண்டு சேர்க்கவில்லை என்றால் முதலுக்கே மோசம். இந்த இக்கட்டான நிலைமைகளில் விபத்துக்கள் ஏன ஏற்பாடாது?

இந்த நெருக்கடியின் துன்பத்திலிருந்து தப்பிப்பதற்கு ஓட்டுநர்கள் மது அருந்துகிறர்கள். அந்த வகையில் இந்த விபத்துக்கள் து தமிழக அரசின் “டாஸ்மாக்” நிகழ்த்தி வரும் சாதனையாகும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு கட்டண வசூல் என்ற அடிப்படையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறது. அந்த ஒப்பந்தப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் சாலைகளைப் பராமரிப்பதில்லை. சாலைகளுக்கு இடையே முறையான தடுப்புச்சுவர் இருப்பதில்லை.

பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை பலகையோ,பாதுகாப்பு குறியீடுகளோ இருப்பதில்லை. மேலும், வளைவுகளிலும் மற்றும் தேசிய நெடுஞ்சாலையை பிரிக்கும் பகுதிகளிலும் எச்சரிக்கை பலகைகள் இருப்பதில்லை; இரவு நேரங்களில் எச்சரிக்கை விளக்குகளும் இருப்பதில்லை. அத்துணை விதி முறைகளும் அலட்சியமாகக் காற்றில் வீசப்பட்டுள்ளது.

இதன் விளைவு கடந்த 2017 -ல் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 5,121 பேரும், மாநில சாலை விபத்துகளில் 4,922 பேரும், மாவட்ட சாலை விபத்துகளில் 2,471 பேரும், கிராம சாலை விபத்துகளில் 1,563 பேரும் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமோ, அரசு உயர் அதிகாரிகளோ எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகனப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு சாலை விபத்துக்களைத் தவிர்க்க சாலைகளை அகலப் படுத்துவதும் இல்லை; மேம்படுத்துவதும் இல்லை.

மக்களின் உயிர்களைக் காவு வாங்கும் நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு பற்றி கவலைப் படாத அரசும், போலீசும் கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்து கட்டணக் கொள்ளையில் மட்டும் கறாராக செயல்படுகிறார்கள். இவர்களை நம்பிய பொதுமக்களை காவு கொடுக்கிறார்கள்!

மேலும் :

தூத்துக்குடி : சி.பி.எம் தோழர்களை தாக்கிய போலீசு ரவுடிகள் !

3
குவித்து வைக்கப்பட்டிருக்கும் விறகு கட்டைகள்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு கடந்த 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாநில மாநாட்டின் இறுதி நாளான நேற்று (20.02.2018) அன்று மாலை அணிகளின் செங்கொடி அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது. அனுமதி பெற்று நடைபெற்ற இந்தப் பேரணியில் தூத்துக்குடி ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையிலான போலீசு, அமைதியாக சென்று கொண்டிருந்த பேரணியின் மீது தாக்குதல் நடத்தியது. திட்டமிட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 6 வயது குழந்தை உட்பட 4 பேர் கடுமையாகக் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சி.பி.எம். கட்சியினர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். இப்பேரணி பொதுக்கூட்டத் திடலுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை சந்திப்பில் நின்று கொண்டிருந்த ஏ.எஸ்.பி செல்வநாகரத்தினம் மற்றும் அவரது போலீசுப் படையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பேரணியில் சென்று கொண்டிருந்த தோழர்களை கூட்ட நெரிசலை வாய்ப்பாகக் கொண்டு கைகளால் தாக்கியுள்ளனர். இதைப் பேரணியில் சென்ற தோழர்கள் கண்டித்துள்ளனர்.

திட்டமிட்டே குவித்து வைத்த விறகு கட்டைகளை  கொண்டு தோழர்களை தாக்கும் ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம்  மற்றும் போலீசு

பேரணியில் குழப்பத்தை உண்டாக்குவதையே நோக்கமாகக் கொண்ட ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம், அந்த சாலை சந்திப்பில் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த விறகுக் கட்டைகளை எடுத்துப் பேரணியில் நிராயுதபாணியாகச் சென்று கொண்டிருந்த தோழர்கள் மீது தாக்குதல் தொடுத்தார். ஏனையப் போலீசும் விறகுக்கட்டையால் தோழர்களை தாக்கியது.

போலீசின் தாக்குதலைக் கைகளால் தடுத்து போலீசை அமைதிகாக்கும் படி சொன்னார்கள் சிபிஎம் தோழர்கள். எதையும் காதில் வாங்காமல், பேரணியைச் சீர்குலைப்பதிலேயே கவனமாக இருந்தது போலீசு. இதில் 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் காயமடைந்தனர். 5-க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுதது சி.பி.எம். தோழர்கள் சிலர் போலீசின் கைகளில் இருந்த விறகுக்கட்டையை பிடுங்க ஆரம்பித்தனர்.

தோழர்கள் திருப்பி தாக்கியதும் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடும் ஏ.எஸ்.பி  செல்வநாகரத்தினம்

ஏ.எஸ்.பி செல்வநாகரத்தினமோ, தனது சீர்குலைக்கும் வேலையைச் செய்து முடித்த திருப்தியில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். திருப்பூரைச் சேர்ந்த நவநீதக் கிருஸ்ணன் என்பவரின் 6 வயதுக் குழந்தையான அகிலேஷைப் போலீசு தாக்கி அக்குழந்தைக்கு மண்டை உடைந்து இரத்தம் வந்ததைப் பார்த்த சி.பி.எம். தொண்டர்கள் போலீசு கும்பலை விரட்டினர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினமும், உடனிருந்த காக்கிச் சட்டைக் கும்பலும், பின்வாங்கினர்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பேரணிக்குப் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் கொடுக்கும் காவிப் போலீசு, சி.பி.எம். கட்சியினரின் பேரணியை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட்டிருக்கிறது. பதிவாகியிருக்கும் வீடியோக்கள் மற்றும் அங்கிருந்த தொண்டர்கள் கூறுவதைப் பார்க்கையில், ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஏதோ மத்திய அரசு சொல்லி அடித்தது போல நடந்து கொண்டிருக்கிறார். ஏனெனில் இவ்வளவு பெரிய ஊர்வலத்தில் எந்த ஊர் போலீசும் அடிப்பதை கனவு கூட காணாது. இவரோ ஏதோ தனிப்பட்ட அஜென்டாவில் செயல்பட்டிருப்பது போல தெரிகிறது.

ஆர்.எஸ்.எஸ் கிரிமினல் போல் செயல்பட்ட ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம்

ஆளும் எடப்பாடி அரசும், அதன் போலீசும் பதில் சொல்லவேண்டிய பல கேள்விகள் இங்கு இந்தக் காணொளிகளில் தொக்கி நிற்கின்றன. ஒரு சாலையின் பெயர்ப்பலகை உள்ள இடத்தில், அப்பெயர்ப்பலகைக்கு கீழே விறகுக்கட்டை குவிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன ? அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் ஊர்வலத்தில் எதற்காக செல்வநாகரத்தினமும் அவரது ஏவல்படையும் தலையிடவேண்டும்?

போராட்டத்தைச் சீர்குலைக்க சட்டவிரோதமாக விறகுக்கட்டையை வைத்து தாக்கி விட்டு, பின்னர் தப்பிச் சென்ற ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினத்தையும், சிறு குழந்தையின் மீது கண்மூடித்தனமாக வெறித் தாக்குதல் நடத்திய கிரிமினல் போலீசின் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.