தமிழ்நாட்டில் கொட்டமடிக்கும் பி.ஜே.பி என்ன செய்யப் போகிறோம்? | தோழர் ரவி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
தமிழ்நாட்டில் கொட்டமடிக்கும் பி.ஜே.பி என்ன செய்யப் போகிறோம்? | தோழர் ரவி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பழங்குடிகள் ஆண்டு: பி.ஜே.பி தேர்தல் அறிக்கையின் அயோக்கியத்தனம்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஈரான் தூதரகம் மீதான தாக்குதல்:
அமெரிக்கா–இசுரேலின் அடுத்த போருக்கான தயாரிப்பு
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
“The Final Countdown for BJP” Newsroom
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 தேர்தல். மோடியின் பிரச்சாரப் பயணத்திற்கேற்ப பிற மாநிலங்களில் தேர்தல் பல கட்டங்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது. மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டத் தேர்தல். மோடி-அமித்ஷா கும்பலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சுமார் 75 நாட்கள் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்துமுனைவாக்கக் கண்ணோட்டத்தில் பிரச்சாரம் செய்கிறது பா.ஜ.க. கும்பல். கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் மோடி. எதிர்க்கட்சிகளை இந்து விரோதிகள் என்று பிரச்சாரம் செய்கிறார். தேர்தல் ஆணையமோ, இவை எவற்றையும் கண்டுகொள்ளாமல், மோடி வீட்டு ஏவலாளியைப் போல எஜமான விசுவாசத்தைக் காட்டி வருகிறது.
தேர்தல் பத்திரங்கள் வெளியீடு, தேர்தல் அதிகாரி நியமனம் முதலாக அனைத்து விசயங்களிலும் எல்லா மரபுகளையும் ஜனநாயக வழிமுறைகளையும் தூக்கியெறிந்துவிட்டது, மோடி-அமித்ஷா கும்பல். தேர்தலில் வெற்றிபெற வேண்டும், அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பேசலாம் என்பதுதான் அக்கும்பலின் ஒரே கொள்கை. சாம, தான, தண்ட, பேதம் எனும் பார்ப்பன சதிக் கோட்பாட்டையே தனது கொள்கையாக வைத்திருக்கும் இந்த கும்பல் எந்த கடைகோடிக்கும் செல்லும் என்பதற்கு இந்த தேர்தலை ஒட்டிய அந்த கும்பலின் அணுகுமுறைகளே சாட்சி.
எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கியதில் செய்த அடாவடித்தனத்தைப் பாருங்கள். வி.சி.க., ம.தி.மு.க., நா.த.க-விற்கு ஒரு நீதி, ஜி.கே.வாசன் போன்ற பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கு ஒரு நீதி. தேர்தல் கட்சிகளைக் கூட ஜனநாயகமாக அணுகத் தயாராக இல்லை.
தேர்தல் பத்திரங்கள் மூலமாக மட்டுமே பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டிய பா.ஜ.க. கும்பல், காங்கிரசு கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கியது; அதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்று போராடிய பின்னர், வருமான வரித்துறை மூலமாக காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்தது.
எதிர்க்கட்சித் தலைவர்களை சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்யவும் அனுமதிக்கவில்லை. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது; பாரதீய ராஷ்டிரிய சமிதியின் தலைவர் கவிதா கைது; ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது – இவ்வாறாக அமலாக்கத்துறையை ஏவி நாள்தோறும் எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது.
இத்தனைக்கும் காரணம் என்ன?
தோல்வி பயம்!
ஆம், தோல்வி பயம் மோடி-அமித்ஷா கும்பலுக்குத் தொற்றிக் கொண்டது. இனி எந்த வகையிலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை அக்கும்பல் நன்குணர்ந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் மோடி-அமித்ஷா கும்பல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்குவோம், வங்கிக் கணக்கில் ரூ.15,00,000 நிதி போடுவோம்; இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்; விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்பூர்வ உரிமையாக்குவோம்; பெண் கல்வியை மேம்படுத்துவோம்; கருப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவோம்… அப்பப்பா, மோடி-அமித்ஷா கும்பல் அவிழ்த்துவிட்ட இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய், பித்தலாட்டம் என்பதை மக்கள் தமது சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துவிட்டனர்.
பாசிச பயங்கரவாதம்
மாறாக, மோடி-அமித்ஷா கும்பலின் பத்தாண்டு ஆட்சி செய்ததுதான் என்ன?
கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்னடைந்துள்ளது; சிறுதொழில்கள் நசிந்துள்ளன; விவசாயம், சிறு வணிகங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன; சீனாவில் இருந்து இரும்பு, மலிவுவிலைப் பொருட்கள் போன்றவற்றின் இறக்குமதியால் இந்திய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன; ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் மூலமாக தென்மாநிலங்களைச் சுரண்டி “பசு வளைய மாநிலங்கள்” என்றழைக்கப்படும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு மிகப்பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்படுகின்றன; நீட், தேசியக் கல்விக் கொள்கை, தேசிய நதிநீர் கொள்கை, குற்றவியல் சட்டத்திருத்தம், தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம் போன்ற பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்களால் மக்களின் பெரும்பகுதியினரின் வாழ்நிலைமை மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது; வேலையின்மை அதிகரித்துள்ளது; விலையேற்றம் அதிகரித்துள்ளது.
அம்பானி, அதானி, வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியையே நாட்டின் வளர்ச்சியாக சித்தரிக்கிறது மோடி கும்பல். இந்த கார்ப்பரேட் முதலாளிகளோ உலகப் பணக்காரர்களாக உயர்ந்து வருகின்றனர். மொத்தத்தில், மக்களின் இரத்தத்தில், அம்பானிகளுக்கான சொர்க்கத்தை உருவாக்குகிறது பாசிச மோடி கும்பல்.
இந்த பத்தாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். என்னும் நச்சுப் பாம்பானது, நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் அனைத்து இடங்களிலும் கிளை பரப்பியுள்ளது.
பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறைகள், சமூகத்தை சீரழிக்கும் போதைக் கலாச்சாரம், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடும் ரவுடி கும்பல் போன்ற பல்வேறு குற்றங்களின் பின்னணியில் கணிசமான அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். கும்பல் உள்ளது. பா.ஜ.க-வின் பல முன்னணி பிரமுகர்கள் கேடி கிரிமினல்களாக இருப்பதையும் அவர்களது குற்றச்செயல்கள் அம்பலத்திற்கு வந்து அவ்வப்போது கைது செய்யப்படுவதையும் நாம் பார்க்கிறோம். இதுபோன்ற குற்றப் படையினரைக் கொண்டுதான் மதக்கலவரங்களை அரங்கேற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல்.
டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, மணிப்பூர், அசாம், திரிபுரா, கர்நாடகா, ஒரிசா, சத்தீஸ்கர், உத்தராகண்ட், குஜராத், மகாராஷ்டிரா என இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இஸ்லாமியர்கள், தலித்துகள், உழைக்கும் மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலால் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் உரிமை கேட்டுப் போராடினாலோ, விவசாயிகள் போராட்டங்கள் நடத்தினாலோ உள்ளூர் சமூக விரோதிகள், கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து கொண்டு மக்களை ஒடுக்குவதும் இந்த ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல்தான்.
ஆம். ஒரு வரியில் சொன்னால், மோடி-அமித்ஷா கும்பல் பத்தாண்டுகளில் அரங்கேற்றியிருப்பது, பாசிச பயங்கரவாதம்.
படிக்க: டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!
போராட்டக் களம்
இந்த பாசிச பயங்கரவாதம் தோல்வி முகம் தழுவியதற்கு காரணம் என்ன?
மோடி கும்பலின் பயங்கரவாத நடவடிக்கைகளாக மேலே விளக்கியிருப்பவை ஒரு சிறு பகுதிதான். நமது நாட்டின் உழைக்கும் மக்கள் மீது மோடி-அமித்ஷா கும்பலும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலும் திணித்திருக்கும் பயங்கரவாதம் என்பது கொஞ்ச நஞ்சமல்ல.
தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கைகளைக் கட்டற்ற முறையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த இந்த கும்பல், அதற்கெதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடையும் என்பதையும் உணராமல் இல்லை.
இப்போது மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டை அடிமைப்படுத்தி சூறையாடிய போது அது உருவாக்கிய ஒரு கொள்கை இருக்கிறது. அதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி. இந்துக்களையும் இஸ்லாமிய மக்களையும் பிளவுப்படுத்தி ஆட்சி செய்யும் முறையை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உருவாக்கியது. அதற்கு உற்றத் துணையாக இருந்த அமைப்புதான் 1925-இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்றழைக்கப்படும் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம்.
இன்று, மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் போதும், அதே பிரித்தாளும் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். கும்பல் நடைமுறைப்படுத்தி வருகிறது. அன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம், கிறிஸ்தவர்களான வெள்ளையர்களின் அடிமையாக இருந்தது. இன்றோ, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்கள், பழங்குடி மக்கள் என ஒவ்வொரு பகுதிக்கும் இடத்திற்கும் ஏற்ற வகையில், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறது.
இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மக்கள் பலியாகாமல் இல்லை. “வளர்ச்சி நாயகன்” என்ற மோடியின் பிம்பத்தைப் பார்த்தும், இந்துமுனைவாக்கத்திற்கு பலியாகியும் வடமாநில மக்கள் மோடிக்கும் பா.ஜ.க-விற்கும் மீண்டும் மீண்டும் ஆதரவளிக்கவே செய்கின்றனர்.
அதேவேளையில், மக்கள் மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான மக்கள் வங்கி வாசல்களில் வரிசையில் நின்றபடியே மரணமடைந்தனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்தன. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் சிறுதொழில்கள் நசிந்தன. கொரோனா திடீர் ஊரடங்கின் போது இலட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்தனர். ஆக்ஸிஜன் இன்றி பல இலட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். இச்சூழல்களின் போதெல்லாம் வெவ்வேறு வகைகளில் மக்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர்.
அதேவேளையில், பா.ஜ.க-விற்கு எதிரான மக்கள் போராட்டங்களும் வளர்ந்து வந்தன.
தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் பா.ஜ.க-விற்கு எதிரான உறுதியான மக்கள் போராட்டமாகும். 2019-ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது இஸ்லாமியப் பெண்கள் தொடங்கிய ஷாகின்பாக் போராட்டம் இந்தியாவே கிளர்ந்தெழுந்த முதல் போராட்டமாகும்.
மூன்று வேளாண் சட்டங்களை மோடி கும்பல் கொண்டுவந்த போது, டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உ.பி. மாநில விவசாயிகள் தொடங்கிய போராட்டம், ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது; பல நூறு விவசாயிகள் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்; இப்போராட்டம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றது. ஆம், மோடி-அமித்ஷா கும்பலைப் பணியவைத்த முதல் நாடுதழுவிய போராட்டம் இதுவே.
இதோ இன்றும் தொடர்கிறது, மோடி-அமித்ஷா கும்பலுக்கெதிரான மக்கள் போராட்டங்கள்.
குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டமாக்கக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்; மகாராஷ்டிராவில் மராத்தா சாதியினர் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர்; காஷ்மீரைப் பிரித்தபோது லடாக் மக்களுக்கு பழங்குடி அந்தஸ்தும் மாநில அந்தஸ்தும் வழங்குவதாக சொன்ன மோடி-அமித்ஷா கும்பலின் பொய்யை நம்பி ஏமாந்த லடாக் மக்கள் 21 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
ஆம், மக்களின் போராட்ட அலை, இந்துமுனைவாக்கத்தை மழுங்கடிக்க வைத்துள்ளது. அதனால்தான், தோல்வி பயத்தில் இருக்கும் பாசிசக் கும்பல், அனைத்து ஜனநாயக, சட்ட வழிமுறைகள் மீதும் நம்பிக்கையிழந்து, வெறிப்பிடித்து எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது.
படிக்க: பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல் – PDF வடிவில்!
எதிர்க்கட்சிகளின் வெற்றியின் அடிப்படை
மக்கள் போராட்டங்கள்தான் எதிர்க்கட்சிகளையும் வெற்றிப்பெற வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டில் நடந்தது என்ன?
2ஜி அலைக்கற்றை ஊழல் என்ற ஒரு பொய்யைப் பரப்பி ஆ.ராசா, கனிமொழி கைது செய்து சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். தி.மு.க. மீது ஊழல் முத்திரை குத்தப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. மிக மோசமான தோல்வியைத் தழுவியது.
ஆனால், 2019-இல் நடந்ததென்ன?
கொங்குவேளாளர் சாதி அடித்தளத்தைக் கொண்ட அ.தி.மு.க-வும், வன்னிய சாதி அடிப்படையைக் கொண்ட பா.ம.க-வும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தன. இத்துடன், தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் இணைந்து நின்றன. ஆனால், தி.மு.க. கூட்டணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது!
இதற்கு என்ன காரணம்? தி.மு.க. ஊழல் கட்சி அல்ல என்று மக்கள் கருதிவிட்டார்களா? தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் எல்லாம் பாசிச எதிர்ப்புக் கட்சிகள் என்று மக்கள் நம்பிவிட்டார்களா? இல்லை.
தமிழ்நாட்டு மக்களிடம் எழுந்த மோடி எதிர்ப்பலைதான், தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறவைத்தது. அப்போது மட்டுமல்ல, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் மோடி எதிர்ப்பலைதான் முதன்மையான பங்காற்றியது.
மோடி எதிர்ப்பலை என்பது மோடி என்ற தனிமனிதருக்கு எதிரான எதிர்ப்பலை அல்ல. ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலின் இந்துராஷ்டிர வெறி அரசியலுக்கும் பா.ஜ.க. அரசின் கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோதத் திட்டங்களுக்கும் எதிரான அலையாகும்.
ஆகையால், மக்கள் போராட்டங்களே எதிர்க்கட்சிகளை வாழவைக்கிறது.
மக்களின் விழிப்புணர்வு
மக்களின் விழிப்புணர்வு வளர்ந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை தமிழ்நாட்டில் நடந்த மக்கள் போராட்டங்களைக் கவனியுங்கள்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு பிரிவினர் தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராடினர்.
இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட தமிழ்நாட்டில் நிலைமை என்ன?
மேல்மா சிப்காட்டிற்கு எதிராக அங்கிருக்கும் விவசாயிகள் போராடி வருகின்றனர்; பரந்தூர் விமான நிலையத்திற்கு எங்களது விளைநிலங்களை ஒருபோதும் கொடுக்க மாட்டோம் என அம்மக்கள் போராடி வருகின்றனர். காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் அமைக்கப்படுவதற்கெதிராக மீனவ கிராம மக்கள் போராடி வருகின்றனர். இவை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தங்களது நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றப்படாததை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.
ஆம், பாசிச மோடி கும்பலை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மக்களின் உணர்வாகும். அதேவேளையில், எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக, எதிர்க்கட்சிகள் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். அதன் விளைவுதான், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களாகும்.
மக்கள் இந்த அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். அதற்கு காரணம், பா.ஜ.க. மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும்தான்.
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவார கும்பலுக்கு ஜனநாயகம் மீதும் சமத்துவத்தின் மீதும் தீராத வெறுப்பு இருப்பதை மக்கள் நன்கறிவர். இதனால்தான், அக்கும்பல் முன்வைக்கும் இந்துராஷ்டிரம் தங்களுக்கு வேண்டாம் என்று மக்கள் கருதுகின்றனர்.
ஆனால், “அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்” என்று முழங்கும் எதிர்க்கட்சிகள்தான், இந்த அரசியல் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்குக் காரணமாக இருக்கிறார்கள். இந்த நிலைமை மாறாமல், பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவதால் எந்தப் பயனும் இல்லை என்று மக்கள் கருதுகின்றனர். அதன் விளைவுதான், தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள்.
படிக்க: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு || வெளியீடு
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மோடி-அமித்ஷா கும்பல் கொண்டுவந்த அத்தனை சட்டத் திட்டங்களும் நடைமுறையில் இருக்கும் என்றால், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று என்ன பயன் என்பதுதான் மக்களின் கேள்வி.
மக்களுக்குத் தேவை, அரசியல்-பொருளாதார மாற்றுத் திட்டமாகும். அதுதான், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசாகும்.
ஆம், வைரஸ் நோய்க்கிருமி தொற்றிலிருந்து மக்களைக் காப்பற்ற ஆண்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதைப் போல, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் பாசிசம் வளர்வதற்கான அடிப்படைகளைத் தகர்க்கும்.
குறைந்தபட்ச ஆதாரவிலை, எட்டுமணி நேர வேலை, பணிப்பாதுகாப்பு, அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு, இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகள், பழங்குடியினர் தங்களது வாழ்விடத்திலேயே வாழ்வதற்கான உத்தரவாதம் என அனைத்து வகையிலும் மக்களின் உரிமைகளை இந்த பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் பாதுகாக்கும்.
இந்த மாற்றுக் கொள்கைதான், பா.ஜ.க-வைத் தேர்தலிலும் வீழ்த்தும்! அதனால்தான், மக்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.
பாசிசக் கும்பலால் எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவதைத் தடுக்க எதிர்க்கட்சிகளும் இப்போது போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்கள்.
தேர்தல் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான மார்ச் 31 டெல்லியில் நடக்கும் “இந்தியா கூட்டணி”யின் போராட்டம், மக்கள் உரிமைகளுக்கான போராட்டங்களுடன் கைகோர்க்கட்டும். இதன்மூலம் தான் தேர்தல் வெற்றியை மட்டுமல்ல, பாசிசத்திற்கு எதிரான வெற்றியையும் சாதிக்க முடியும்!
வெற்றிவேல் செழியன்
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | மின்னிதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
கொங்கு பகுதியில் கலவரம் செய்து தேர்தலை நிறுத்த சதி செய்யும்
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலை எதிர்த்து நிற்போம்!
பதிலடி கொடுக்காமல் பாசிசக் கும்பல் ஒருபோதும் அடங்காது!
14.04.2024
பத்திரிகை செய்தி
வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் போட்டியிடக் கூடிய எந்த தொகுதியிலும் வெல்ல முடியாது என்ற நிலைமை வந்துவிட்டதால் பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். கும்பல் போட்டியிடக் கூடிய பகுதிகளில் கலவரம் செய்வதற்கு துணிந்து விட்டார்கள்.
நெல்லை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றக்கூடியவர்கள் நயினார் நாகேந்திரனுக்காக நான்கு கோடி ரூபாயை எடுத்துச் செல்லும் பொழுது கையும் களவுமாக ரயிலில் பிடிபட்டார்கள்.
சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி சார்பாக போட்டியிடக் கூடிய தேவநாதன் என்பவர் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்தில் 525 கோடி மோசடி செய்துள்ளார் என்ற தகவலால் தேவநாதனின் செல்வாக்கு புழுத்து நாறிப் போய் உள்ளது. இதனால் அமித்ஷா தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
ரோடு ஷோ என்ற பெயரில் தெருத் தெருவாக இழுத்துக் கொண்டு சென்றாலும் சீண்டுவதற்குக்கூட நாதியில்லாமல் போய்விட்டது பாசிச பா.ஜ.க கும்பல்.
படிக்க: பாசிச பி.ஜே.பி கும்பல் இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால் தொடர்பான வழக்கில் “தேர்தல் நேரம் என்பதால் செய்த குற்றத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” என்றது அமலாக்கத்துறை. ஆனால் அமலாக்க துறையால் இதுவரை தேவநாதன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எப்படிக் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்ற சூழல் வந்து விட்டதால் கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் தேர்தலையே நிறுத்துவது என்ற சதி வேலையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக்கும்பல் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே கோவையில், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த அண்ணாமலையை தட்டி கேட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது இந்த பாசிசக் கும்பல்.
இச்சம்பவம் நடந்து அடுத்து சில நாட்களுக்கு உள்ளாகவே, ஜிஎஸ்டி தொடர்பாக கேள்வி எழுப்பிய திராவிட விடுதலைக் கழகத்தின் தோழர் சங்கீதா அவர்களின் கடையில் உள்ளே புகுந்து, தோழர் சங்கீதாவை தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவருடைய செல்போனை பறித்துச் சென்றிருக்கிறது பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.
படிக்க: மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை | மக்கள் அதிகாரம் கண்டனம்
இது போலவே கோவை மற்றும் நீலகிரியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் பிரச்சாரத்திலும் இடையூறு செய்தது பாசிச பா.ஜ.க கும்பல்.
தற்பொழுது வரை போலீசை வைத்துக்கொண்டு பல்வேறு பொய் காரணங்களை கூறி தோழர் திருமுருகன் காந்தியின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை விதிக்கிறது.
தமிழ்நாட்டில் எங்கேயும் வெல்ல முடியாது என்ற மிக மோசமான நிலைமையை திசை திருப்பவே திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தலை நிறுத்த பா.ஜ.க சதி செய்து வருகிறது.
மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ரவுடிகள் யார் மீதும் இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அந்த மேட்ச் பிக்சிங் சதிச் செயலை கூட தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்பதால் தேர்தலையே நிறுத்துவதற்கான மிகப்பெரிய சதித்திட்டத்துடன் செயல்படக்கூடிய ஆர்எஸ்எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு தமிழ்நாடு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒருபோதும் இந்த பாசிசக் கும்பல் அடங்கப் போவதில்லை.
இனி தமிழ்நாட்டில் எந்த மூலையிலாவது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல் தமிழ்நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கான எதிர்வினையாக தமிழ்நாட்டில் பா.ஜ.க எங்கேயும் பிரச்சாரம் செய்ய முடியாத சூழலை தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நேற்று (13.04.2024) மாலை, இசுரேலுக்கு சொந்தமான கப்பல் ஒன்றை, ஹொர்மோஸ் ஜலசந்தியில் ஈரான் பிடித்து வைத்துள்ளது. தேவையெனில், இந்த வழித்தடத்தை மூடுவோம் என்று அறிவித்ததன் மூலம், ஈரான் இசுரேல் மீது தாக்குதல் தொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. போர் மூளும் என்ற அச்சம் மத்தியக் கிழக்கை ஆட்டுவித்து வருகிறது.
(சிரியாவில் ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் நேற்று இரவு இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளதன் மூலம் நேரடித் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. இது மிகத் தீவிரமான போராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது பிரசுரமாகியுள்ள இக்கட்டுரை தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்பு எழுதப்பட்டது.)
என்ன நடக்கிறது மத்திய கிழக்கில்?
பாலஸ்தீனத்தின் மீதான ஆறு மாத கால போரின் விளைவாக இதுவரை 35,000-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸை அழிப்பது என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், துருக்கி உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் கூட, பாலஸ்தீனத்தின் மீதான போரைக் கண்டிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
மத்திய கிழக்கு ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் வகையில், சீனா-ரசியா மேற்கொள்ளும் முயற்சிகள் அமெரிக்கா-இசுரேல் கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, பல ஆண்டுகளாக பகையாக இருந்த சவுதி அரேபியா – ஈரானுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தியது சீனாவின் முக்கியமான சர்வதேசப் போர்த்தந்திர முக்கியத்துவமுள்ள வெற்றியாகும். இதன் விளைவாக, அமெரிக்க-இசுரேல் கும்பலின் பாலஸ்தீன இன அழிப்புப் போருக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.
இத்துடன், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற அமைப்புகள் இசுரேலுக்கு எதிராகவும் இசுரேலை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராகவும் நடத்திய தாக்குதல்கள் அமெரிக்காவை நிலைகுலைய வைத்தன. இதனால், செங்கடல் பிராந்தியத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் உலக வினியோகச் சங்கிலி அறுபடுவதுடன், அமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரும் அளவுக்கு சீர்குலையும் நிலைமை உருவானது.
படிக்க: செங்கடல்: ஹவுதியின் கடல்வழி தாக்குதல்களை எப்படிப் பார்ப்பது?
இந்நிலையில், செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கப்பல்களை இலக்கு வைத்து ஹவுதி நடத்திய தாக்குதல்களின் போது, அமெரிக்கா பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறத் தொடங்கியது. உண்மையில், பாலஸ்தீனத்தை இரண்டு அரசுகளாகப் பிரித்து, நாடுகளுக்கான அந்தஸ்த்தை வழங்குவது என்ற தீர்வை முன்தள்ளி வருகிறது.
அமெரிக்கா திருந்திவிட்டது என்று கருத வேண்டாம். இது போருக்கான புதிய தயாரிப்பு என்பதைத்தான் அதன் அண்மைகால சில நகர்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
000
மார்ச் 01-ஆம் தேதி சிரியாவின் டாமஸ்கசில் உள்ள ஈரானின் துணை தூதரகத்தின் மீது இசுரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஈரானின் பிரிகேடியர் ஜெனரல் மொகமத் ரெடா அல்-ஜாஹெதி (Mohamed Reda al Zahedi) கொல்லப்பட்டார். இது ஈரானுக்குப் பெரிய இழப்பாகும். அமெரிக்க-இசுரேல் கும்பலால் ஈரானின் இராணுவத் தளபதி கொல்லப்படுவது இது முதல் முறை அல்ல. 2020-ஆம் ஆண்டு, ஜனவரி 03-ஆம் தேதி, ஈரானின் காசிம் சொலைமானி (Qasem Soleimani) அமெரிக்காவின் ஆள் இல்லாத விமானத் தாக்குதல் மூலமாகக் கொல்லப்பட்டார்.
ஈரானை ஒரு அணு ஆயுத நாடாக சித்தரித்து அதன் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வைத்துள்ளது என்பதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இதனைக் காரணம் காட்டித்தான் இதுநாள் வரை ஈரான் மீதான அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் அமெரிக்கா நியாயப்படுத்தி வருகிறது.
ஈரானை ஆத்திரமுட்டிய மார்ச் 1-ஆம் தேதி தாக்குதலுக்கு 48 மணி நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் 13-04-2024 அன்று காலை அறிவித்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மூளும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இசுரேலுக்கு பக்கபலமாக இருப்போம் என்று அமெரிக்கா தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதேவேளையில், ஈரான் அமெரிக்க தூதரகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏவுகனைகள், விமானங்கள், ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேவேளையில், அமெரிக்க அதிகாரிகள் “ஈரான் நடத்த இருக்கின்ற தாக்குதல் நாடுகளுக்கு இடையிலான போர் அல்ல. அமெரிக்காவுக்கு ஈரானுடன் ஒரு போர் நடத்த விருப்பமில்லை. அதனால், அமெரிக்கா படை கொண்டு இறங்காது” என்று தெரிவித்துள்ளனர்.
படிக்க: காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
ஆனால், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீனா, துருக்கி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு, இசுரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ஈரானிடம் தெரிவிக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளது, போருக்கான அனைத்து வேலைகளையும் அமெரிக்கா மேற்கொண்டுவருவதை உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறைத் தொடர்பாளர் மேத்யூ மில்லர், மத்திய கிழக்குப் போரில் தனக்கு நாட்டமில்லை” என்று கூறினாலும் இது உலக மக்களை திசைத்திருப்புவதற்கான ஒரு அணுகுமுறையே அன்றி, உண்மையில், அமெரிக்காதான் மத்திய கிழக்கில் புதிய போர்முனை ஒன்றை உருவாக்குவதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளதை நிலமைகள் உணர்த்துகின்றன.
அண்மையில், ஐ.நா. பாதுகாப்பு சபை, பாலஸ்தீனத்திற்கு இரண்டு நாடுகளைப் போன்ற தீர்மானத்தைப் பாதுகாப்பு சபைக்குக் கொண்டுவர இருக்கிறது. ஒன்பது நாடுகள் ஏற்றுக்கொண்டால் இது நிறைவேறும். அமெரிக்காவும் இதனை ஆதரித்துப் பேசிவந்துள்ளது. இருப்பினும், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது போல அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சி ஒரு நாடகமே.
இப்போதைய நிலையில், ஈரான் இசுரேலைத் தாக்கினால் இதனைக் காரணம் காட்டி, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் இரண்டு அரசுகள் தீர்மானத்தை அமெரிக்கா மறுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிவிடும். ஒருவேளை, இரண்டு அரசுகள் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்காமல் போனால், அதனையும் சேர்த்துக் காரணமாக வைத்து ஈரான் இசுரேலைத் தாக்குவதற்கு ஒரு வலுவான முகாந்திரம் கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் ஈரானை ஆத்திரமூட்டியிருப்பதால், ஈரான் தாக்குதலை அமெரிக்கா ஆர்வமாக எதிர்ப்பார்த்து வருகிறது. அத்துடன், இதனைக் காரணமாக வைத்து பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு தனது விட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை போட்டு பழியை ஈரான் மீது போட்டுவிடலாம் என்பது அமெரிக்காவின் சதித்திட்டமாகும்.
படிக்க: காசா: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் இராணுவம்!
மொத்தத்தில், போர் வெறிப்பிடித்து அலையும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் தொடர்ந்து சரிந்து வருகிறது. தனது உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, அது உலகத்தில் பல பகுதிகளில் போர்முனைகளை உருவாக்கி வருகிறது. அதன் ஓர் அங்கம்தான், இப்போது ஈரான் மீது போர்த்தொடுப்பதற்கான முயற்சியாகும். ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் ஏற்கெனவே பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து வருபவை என்பது முக்கியமான காரணமாகும்.
இசுரேல் என்ற பேட்டை ரவுடியை வைத்துக் கொண்டு, அமெரிக்கா மேலும் ஒரு போர்முனையை உருவாக்குவதை உலகத்தின் அனைத்து மக்களும் எதிர்க்க வேண்டும். தனது உலக மேலாதிக்க வேட்டைக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவின் போர் முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்கள் உலகெங்கும் நடத்தப்பட வேண்டும்.
ஒரு பக்கம் உலகத்தின் அணி சேராத யோக்கியர் போல நாடகமாடிக் கொண்டே, இசுரேலுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க-இசுரேல் போர்வெறி, இரத்தவெறிப் பிடித்த ஓநாய்களின் பாதுகாவலனாக மோடி அரசு செயல்படுவதையும் முறியடிக்க வேண்டும்.
இசுரேல்-அமெரிக்காவின் போர் முயற்சிகளைக் கண்டிக்காமல், அதனை ஒரு விறுவிறுப்பான திகில் படக்காட்சி போலக் காட்டி மக்களை மடமையில் ஆழ்த்தும் அமெரிக்க ஆதரவு ஊடகங்கள், சமூக ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
தங்கம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஸ்விக்கியில் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆறு வருடங்களுக்கும் மேலாக உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். அவர், கடந்த ஜனவரி மாத இறுதியில், ஹைதராபாத் பகுதியில் உணவு ஆர்டர்களை டெலிவரிக்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரது மனைவியிடமிருந்து அவசர அழைப்பு வந்தது. ”எனக்கு உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் அவசரமாக வரவேண்டும்” என்று அவரது மனைவி ராகேஷுக்கு தெரிவித்தார். மனைவிக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கண்டறிவதற்காக விடுமுறை எடுத்த ராகேஷ் மூன்று வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை.
அவரது மனைவிக்கு ஏற்பட்டுள்ள நோயை கண்டறிந்த பிறகு, சிகிச்சை செய்வதற்காக ராகேஷுக்கு ரூ.1,20,000/- தேவைப்பட்டது. சிகிச்சைக்கான பணத்தை ஸ்விக்கியின் மருத்துவக்காப்பீட்டின் மூலம் கட்டுவதற்கு ராகேஷ் முயற்சித்தபோது, மருத்துவக்காப்பீடு கிடைக்காது என்பதை தெரிந்து அதிர்ச்சியடைந்துவிட்டார். ஸ்விக்கியின் மருத்துவக் காப்பீட்டை பெறுவதற்கான நிபந்தனையை அவர் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி அவருக்கான காப்பீட்டு நிதி நிராகரிக்கப்பட்டது. மூன்று வாரங்களாக வேலைக்கு செல்லாதால் ”கோல்ட்” (Gold) என்ற நிலையை இழந்து அதற்குக் கீழான நிலைக்கு சென்று விட்டதை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொண்டார் ராகேஷ்.
அதென்ன ”கோல்ட்” (Gold) என்ற நிலை?
எந்த மாதிரியான மருத்துவக் காப்பீட்டை ஒரு தொழிலாளி பெற வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பொருட்டு தொழிலாளர்களை மூன்று நிலைகளில் தரம் பிரித்து வைத்துள்ளது ஸ்விக்கி நிறுவனம். அவை: தங்கம் (Gold), வெள்ளி (Silver), வெண்கலம் (Bronze). ”தங்கம்” மதிப்பிடப்பட்ட தொழிலாளர்களால் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவக் காப்பீட்டைப் பெற முடியும். ”வெள்ளி” மதிப்பிடப்பட்ட தொழிலாளர்களால் தனக்கு மட்டுமே காப்பீட்டைப் பெற முடியும்; அவரது குடும்பத்தால் காப்பீட்டைப் பெற முடியாது. ”வெண்கலம்” மதிப்பிடப்பட்ட தொழிலாளர்களால் விபத்துகளின் போது மட்டுமே மருத்துவக் காப்பீட்டை பெற முடியும்.
மேலே குறிப்பிடப்பட்ட, மூன்று நிலைகளும் நிரந்தரமானவையும் கிடையாது. இவை மாறக்கூடியது. ஒவ்வொரு வாரமும், டெலிவரி தொழிலாளர்கள் கோல்ட் தரவரிசையைத் தக்கவைக்க 70 புள்ளிகளுக்கு மேல் பெற வேண்டும். 50 முதல் 70 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் அவர்கள் வெள்ளிப் பிரிவிலும், 50 புள்ளிகளுக்குக் கீழே இருக்கும் தொழிலாளர்கள் வெண்கலப் பிரிவிலும் சேர்க்கப்படுவார்கள்.
தனது உயிரைப் பனையம் வைத்து குறிக்கப்பட்ட நேரத்திற்குள் உணவை பத்திரமாக டெலிவரி செய்தால் மட்டுமே “பர்பெக்ட் டெலிவரி” (perfect delivery) ஆக கருதப்படும். ஒரு பர்பெக்ட் டெலிவரி செய்தால் ஒரு புள்ளி வழங்கப்படும்.
சில நேரங்களில் ட்ராஃபிக் காரணமாக ஆர்டர்களை சரியான நேரத்தில் தொழிலாளர்களால் டெலிவரி செய்ய முடியாது. அப்போதெல்லாம் ஸ்விக்கி செயலி அந்த ஆர்டரை மோசமான ஆர்டருக்குள் சேர்த்துவிடும். இதனால் அவர்களுடைய புள்ளிகள் குறையும்.
தொழிலாளர்கள் தங்களுடைய கோல்ட் தரவரிசையைத் தக்க வைப்பதற்காக ஒரு நாளைக்கு 15-16 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
படிக்க : கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?
ராகேஷுக்கு நடந்ததைப் போன்றதொரு அவலம், கடந்த அக்டோபர் 2023 இல், மும்பையில் ஸ்விக்கி டெலிவரி தொழிலாளர் ஒருவருக்கும் நடைபெற்றுள்ளது. அவர் ஸ்விக்கி நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். தனது மனைவியின் மகப்பேறு செலவுக்காக ரூ. 23,000/- மதிப்புள்ள காப்பீட்டுக்கான கோரிக்கையை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தாக்கல் செய்தார். ஆனால், நான்கு மாதங்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் இந்த உரிமைகோரலை மறுத்து அவருக்கு பதில் கடிதம் அனுப்பியது. அதில் ”நீங்கள் சில்வர் மதிப்பிடப்பட்ட நிலையில் இருப்பதால் உங்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ செலவுகளை வழங்க முடியாது” என தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், ஸ்விக்கி தனது கார்ப்பரேட் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸிலிருந்து ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸுக்கு மாற்றியது. அதன் பிறகுதான் தொழிலாளர்களை வகைப்படுத்தும் முறை கொண்டுவரப்பட்டது என்று ஸ்விக்கி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான மருத்துவக் காப்பீட்டை தருவதற்கு கூட பல்வேறு நிபந்தனைகளை விதித்து கார்ப்பரேட் நிறுவங்கள் தொழிலாளர்களை ஏமாற்றுகின்றன. அவர்களை கசக்கிப் பிழிவதற்காகவே இது போன்றதொரு காப்பீட்டு மாதிரியை பின்பற்றுகின்றன. இதற்கு அரசும் எப்போதும் துணையாகவே இருந்து வருகிறது.
கிக் தொழிலாளர்கள் தங்களை சங்கமாக்கிக் கொண்டு தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே தங்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளையாவது பெற முடியும்.
செய்தி ஆதாரம்: ரெஸ்ட் ஆஃப் வேர்ல்ட் (restofworld)
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
சனாதனம் ஒழிப்போம்! | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு பாடல்
| மறுவெளியீடு
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சனாதனத்தை வீழ்த்துவதன் அவசியத்தை வலியுறுத்தி இப்பாடலை மீண்டும் வெளியிடுகிறோம்.
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நயினார் (நாலுகோடி) நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்காத
தேர்தல் ஆணையம் | தோழர் ரவி
விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தங்கியிருந்த அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைக்கப்பட்டிருந்ததா? என்று சோதனை செய்யப்பட்டது. ஆனால் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட பின்பும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை தனது வேட்புமனுவை முறையாக தாக்கல் செய்யாதபோதும் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொண்டது. இந்த தேர்தல் ஆணையம் பா.ஜ.க. வின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு பாடல்
| மறுவெளியீடு
மணிப்பூரில் கலவரத்தை ஏற்படுத்திய RSS-BJP கும்பலை அம்பலப்படுத்தி இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்த பாசிசக் கும்பலை தடை செய்ய வேண்டிய தேவையை மீண்டும் வலியுறுத்தும் பொருட்டு இப்பாடலை மீண்டும் ஒருமுறை வெளியிடுகிறோம்.
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உட்பட்ட பொட்டலூரணி கிராம மக்கள் தங்களுடைய கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள கழிவு மீன் நிறுவனங்களை நிரந்தரமாக அகற்றக்கோரி போராடி வருவதோடு தற்போது தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள கழிவு மீன் நிறுவனங்களான ஜெனிஃபா இந்தியா,மேக்ஸ் மென் போன்ற பெரும் நிறுவனங்கள் கழிவு மீன்களை கொண்டு வந்து அதனுடன் சில வேதிப்பொருட்களை சேர்த்து விலங்கு தீவனங்களை அதிகளவில் உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது வெளிவரும் துர்நாற்றத்தால் கிராமமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நடு இரவில் இந்த கழிவு மீன் ஆலைகளிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் திறந்து விடப்படுகிறன. இதனால் கண் எரிச்சல் ஏற்பட்டு குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுந்து விடுவதுடன் மூச்சுத்திணறல் உண்டாகி வாந்தி, மயக்கம் என கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதிகளவில் சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கப்படுவதோடு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புள்ளது.
இவ்வளவு கேடுகளை விளைவிக்கும் இந்த கழிவு மீன் நிறுவனங்கள் இத்தோடு நின்று விடாமல் ஆலைகளின் மீன் கழிவுநீரை கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் கலந்து விட்டு சென்றுவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் விவசாயம் கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் துர்நாற்றம் காரணமாக பாதியிலேயே தங்களுடைய வேலைகளை நிறுத்திவிட்டு வீட்டிற்கு ஓடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்தால் அங்கேயும் சுத்தமான காற்றை சுவாசிக்கமுடியாமல் அப்பகுதி மக்கள் சொல்லொன்னா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். மேலும் கிராம மக்கள் வளர்க்கும் கோழிகள் ஆடுகள் போன்ற கால்நடைகளும் காகங்கள், மயில்கள் போன்ற பறவைகளும் இந்த துர்நாற்ற வாயுக்களை சுவாசிப்பதால் இறந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் வேதனைப்படுகின்றனர்.
படிக்க: சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு தேர்தல் எதற்கு? தேர்தலைப் புறக்கணிக்கும் ஏர்வாடி மக்கள்
இப்படி பிரச்சனை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீடிக்கவே மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்களுக்கும் என சுமார் 11 துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பொட்டலூரணி பொதுமக்கள் சார்பாக பல மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை கண்டுக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இதுவரை எந்த ஒரு முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இப்படி பல ஆண்டுகளாக போராடியும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்பதால் தற்பொழுது ஊர் பொதுக்கூட்டம் கூட்டி தீர்மானம் போட்டு இந்த தேர்தல் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஊரை சுற்றி பதாகைகள் அமைத்தும் கருப்பு கொடிகள் கட்டியும் அவர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அடுத்த கட்டமாக கிராம மக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முயன்ற போது காவல்துறை உடனே அனைத்திற்கும் தடை விதிக்கிறது.
ஆகவே இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதாக மாவட்ட ஆட்சியர் இப்பகுதி மக்களை நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் அடுத்த கட்டமாக சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுப்போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு குறித்து கேட்டபோது வாக்களிப்பது குடிமகனின் ஜனநாயகக் கடமையெனில் வாக்களித்த மக்களுக்கு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கடமை. அதனை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மீறும்போது தாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வது குற்றமல்ல. தேர்தலை புறக்கணிப்பது தங்களது உரிமை என்று கூறுகின்றனர்.
தகவல்
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பா.ஜ.க வின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம்
தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
கோவையில் பாசிச பிஜேபிக்கு எதிராக பேசக்கூடாதா?
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பாசிச பா.ஜ.க-வை அம்பலப்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த தோழர்கள் திருமுருகன் காந்தி மற்றும் குடந்தை அரசன் ஆகியோரின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தகராறு செய்துள்ளது. இந்த பாசிச கும்பலுக்கு ஆதரவாக இருந்த போலீசு பரப்புரையை முடித்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்தியுள்ளது. எனினும், போலீசுக்கும், பாசிச கும்பலுக்கும் அடிபணியாமல் தொடர்ந்து பிரச்சாரத்தை தோழர்கள் மேற்கொண்டனர்.
பாசிச கும்பலை கண்டித்து தோழர் வெற்றிவேல் செழியன் மற்றும் தோழர் அமிர்தா ஆற்றிய உரை.
தோழர் வெற்றிவேல்செழியன்
தோழர் அமிர்தா
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
இலங்கையில் சீன – அமெரிக்க மேலாதிக்க போட்டாப்போட்டியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அந்நாட்டின் பொருளாதாரம் திவால் அடைந்தது. 2022 ஜனவரியில் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றம், எரிபொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எழுச்சி உருவானது. வெகுண்டெழுந்த மக்கள், ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றி, அப்போதைய ஜனாதிபதியான, சீன அடிவருடி கோத்தபய ராஜபக்சேவை நாட்டைவிட்டு விரட்டியடித்தனர். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினரைக் கூட கொண்டிராத அமெரிக்க கைக்கூலி ரணில் விக்கிரமசிங்கேவை ஜனாதிபதியாக்கியது.
அதன் பிறகு, அரசியல் குழப்பங்கள், கடுமையான பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களைக் காட்டி 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டது ரணில் கும்பல். இந்த இரண்டாண்டுகளில் மக்கள் மீது கடும் வரிச்சுமைகளை ஏற்றுவது, ஐ.எம்.எஃப்-இன் கடுமையான கட்டளைகளை அமல்படுத்துவது, போராடும் மக்களை இராணுவத்தைக் கொண்டு ஒடுக்குவது என ஓர் எதேச்சாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது ரணில் அரசு.
இந்நிலையில்தான், இந்தாண்டு செப்டம்பர்-நவம்பர் மாதங்களுக்குள்ளாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் வேட்டையாடப்பட்டு, சொல்லிக் கொள்ளப்படும் தேர்தல் ஜனநாயக வழிமுறைகள் அனைத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது அந்நாட்டு ஆளுவர்க்க கும்பல். இந்தியாவிலும் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, எதிர்க்கட்சிகள் மீது பாசிச அடக்குமுறைகளை ஏவிவருகிறது மோடி-அமித்ஷா கும்பல். இந்நிலையில், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் ஒன்றான இலங்கையிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் சக்திகள் மத்தியில் முக்கியத்துவமுடையதாக பார்க்கப்படுகிறது.
படிக்க : ரணில்: இலங்கையின் மோடி!
அமெரிக்க-இந்திய மேலாதிக்கவாதிகள் உருவாக்கிய புதிய அடிமை ஜே.வி.பி.
கடந்த டிசம்பர் மாதத்தில், இலங்கையைச் சேர்ந்த சுகாதாரக் கொள்கை நிறுவனம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்குள்ளது என கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவிற்கு 30 சதவிகித வாக்குகளும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 13 சதவிகித வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சிக்கு 6 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. ஆனால், பலரும் எதிர்பாராத வகையில், ஜே.வி.பி. என்றழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனாவின் (Janatha Vimukthi Peramuna) தலைவரும் சிங்கள இனவெறி பௌத்த மதவெறி போலி கம்யூனிஸ்டுமான அனுர குமார திசநாயக்கே-விற்கு 51 சதவிகித வாக்குகள் கிடைத்திருப்பதுதான் கவனிக்கத்தக்க முக்கிய விசயமாகும்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனை தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சிக்கு பிறகு, அனைத்து கட்சிகளின் மீதும் இலங்கை மக்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். இந்நிலையில், ரணில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இலங்கை மக்கள், தங்கள் போராட்டத்தின் மூலம் விரட்டியடித்த கோத்தபய ராஜபக்சேவை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜபக்சே கும்பலின் ஆதரவுடனே ரணில் பதவியேற்றார். ஐ.எம்.எஃப்-இன் கட்டுப்பாடுகளை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அதுவரை, நாட்டை மறுகாலனியாக்குவதாக விமர்சித்துவந்த எதிர்க்கட்சிகள், இலங்கை மக்கள் எழுச்சிக்குப் பின்னர் அடக்கி வாசிக்கத் தொடங்கின.
இந்நிலையில், ஆளும் வர்க்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட அதன் புதிய விசுவாசிதான் இந்த திசநாயக்கே. சென்ற ஆண்டுவரை, 3 சதவிகித வாக்குகளைக் கூட பெற முடியாத கூட்டணிதான், ஜே.வி.பி-யின் தலைமையில் இலங்கையில் இருக்கும் போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை இணைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட “தேசிய மக்கள் சக்தி” (என்.பி.பி.) என்ற கூட்டணியாகும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நாட்டை அடகு வைக்கும் கார்ப்பரேட் முதலாளி வர்க்க அரசியலை மக்கள் வெறுத்து வந்த நிலையில், இடதுசாரி போர்வைப் போர்த்திக் கொண்ட இந்த கும்பலை ஆளும் வர்க்கம் புதிய முகமாக முன்தள்ளுகிறது.
ஒருபுறம் மக்களிடம் இருக்கும் ஆளும் வர்க்க எதிர்ப்புணர்வையும் இன்னொருபுறம் மக்களிடம் எழுந்துவரும் இடதுசாரி ஆதரவுப் போக்கையும் அறுவடை செய்து கொள்வதுதான் திசநாயக்கேவை ஆளும் வர்க்கங்கள் முன்தள்ளுவதற்கு முக்கிய காரணமாகும்.
ஆளும் வர்க்கத்தின் கடைக்கண் பார்வை தன் மீது திரும்பியுள்ளதை அடுத்து, ஜே.வி.பி. தலைமையில் அமைக்கப்பட்ட என்.பி.பி. கூட்டணியில் இளைஞர்களை இணைப்பது, சமூக வலைதளங்களில் திசநாயக்கேவை “வளர்ச்சி நாயகனாக”, “பொருளாதார மீட்பராக” முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது. இத்துடன் இலங்கையின் முன்னணி ஆளும் வர்க்க ஊடகங்கள், ஜே.வி.பி. 1980-களில் நிகழ்த்திய “இனப்படுகொலை வன்முறைகளுக்கு மன்னிப்பு தெரிவிக்குமா”, என்றெல்லாம் விவாதங்களைக் கட்டமைத்து, ஏ.கே.திசயநாயக்கேவைப் புனிதப்படுத்தி, அவரை அனைவருக்குமான தலைவராக ஏற்க வைக்கும் வேலையில் இறங்கியுள்ளன.
இந்திய நாட்டாமையின் கட்டுப்பாட்டில் இலங்கை
இலங்கையின் ஆட்சி அதிகார பீடத்தில் அமர்த்துவதற்காக சீன எதிர்ப்பு, இந்திய ஆதரவு அடிவருடியைத் தேடிக் கொண்டிருந்த அமெரிக்க ஆதரவு நாடுகள், ஜே.வி.பி-யின் தலைவர் ஏ.கே.திசயநாக்கேவை தமக்குத் தேர்ந்த அடிமையாகக் கருதி பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளன. இவர்தான் அடுத்த ஜனாதிபதியாக ஆக்கப்படுவார் என்ற நிலைமையில், இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதே இவரை தங்களது நாட்டிற்கு அழைத்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் பாசிச மோடி அரசின் அழைப்பின் அடிப்படையில், ஏ.கே.திசநாயக்கே பிப்ரவரி 5 முதல் 10-ஆம் தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டார். இச்சுற்றுபயணத்தின் போது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்ளிட்டோரைச் சந்தித்தார். இத்துடன், குஜராத், கேரளா போன்ற மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதோடு அங்கிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜே.வி.பி. அதன் தொடக்க காலத்திலிருந்தே இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்த்து வந்தது. 1980-களில் “இந்திய விரிவாக்கம்” என்ற கட்சி ஆவணத்தை எழுதி முன்வைத்த ஜே.வி.பி., இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டது. “அமைதிப் படை” என்ற பெயரில் இலங்கைக்குள் அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தை எதிர்த்தது. 2021-ஆம் ஆண்டு கிழக்கு கொள்கலன் முனையத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதை எதிர்த்து இலங்கையில் நடந்த போராட்டத்திலும் ஜே.வி.பி. கலந்துகொண்டது. ஆனால், இவையெல்லாம், எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பது, ஆளும் கட்சியாக மாறிவிட்ட பின்னர் ஆதரிப்பது என்ற கார்ப்பரேட் அரசியலின் பிழைப்புவாத சீரழிவு என்பதை ஜே.வி.பி-யின் நடவடிக்கை இப்போது வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
அண்மை காலங்களாக, இந்தியாவுடனான ஜே.வி.பி-இன் அணுகுமுறை மாறி வருவதோடு இந்தியாவுடன் இணக்கம் பாராட்டுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 2023-இல் “தி இந்து” பத்திரிகைக்கு நேர்காணல் கொடுத்த திசநாயக்கே, “எங்கள் நெருங்கிய அண்டை நாடான இந்தியா ஒரு பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, நாங்கள் பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளை எடுக்கும்போது, அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதைப் பற்றி எப்போதும் அக்கறை காட்டுவோம்” என்றார். இதுமட்டுமின்றி, இவர் பொது இடங்களில் இந்திய ஆட்சியாளர்களை புகழ்ந்து பேசுவதும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கோத்தபய, ரணில் வரிசையில் திசநாயக்கேவும் இந்திய ஆதிக்கத்தின் தேர்ந்த அடிமை என்பதையே அவரது செயல்பாடுகள் நிரூபிக்கின்றன.
குஜராத் முதல்வரையும் அம்மாநிலத்தின் உள்ளூர் கார்ப்பரேட் முதலாளிகளையும் தனது இந்தியப் பயணத்தின் மூன்றாவது நாளன்று சந்திக்க ஏ.கே.திசயநாயக்கேவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், மோடியின் “குஜராத் மாடல்” பற்றிய விளக்கக்காட்சியும் அவருக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. அதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிற மூத்த இந்திய அதிகாரிகளுடனான திசநாயக்கேவின் இச்சந்திப்பின்போது, “முதலில் அண்டையர்கள்” (Neighbour First) மற்றும் “சாகர்” (SAGAR) உள்ளிட்ட இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் திட்டங்கள் குறித்து திசநாயக்கேவுடன் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட இந்தியா, சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியது. மேலும், இலங்கையை கடனிலிருந்து ‘மீட்க’ பாடுபடுவதாக நாடகமாடுவதன் மூலம், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவி வருகிறது. அமெரிக்க அடிவருடி ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது, இந்தியாவிற்கு மேலும் சாதகமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, இலங்கையில் இந்திய முதலீடுகளும் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது.
ரணில் ஆட்சிக்கு வந்த பிறகு கோத்தபய ஆட்சியில் மக்களின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்திவைக்கபட்ட மன்னார் எரிசக்தித் திட்டம் மீண்டும் அதானிக்கு வழங்கப்பட்டது; இந்தியா-இலங்கை இடையிலான உறவு தொடர்பாக இந்தியா முன்வைத்த “கூட்டுப் பார்வையை” (joint vision) இலங்கை ஒப்புக்கொண்டது; இலங்கையின் கொழும்பு துறைமுகம் மற்றும் எரிசக்தித் துறையில் அதானியின் ஆதிக்கம் வளர்ந்து வருவது; இந்திய ரூபாயில் வத்தகம் செய்ய இலங்கை முயற்சித்து வருவது போன்றவை இலங்கையில் இந்தியாவின் மேலாதிக்கம் வளர்ந்து வருவதற்கான சான்றுகளாகும். தற்போது, இந்த ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கிலேயே ஏ.கே.திசநாயக்கேவை இந்தியா ஆதரிப்பதும் அமைந்துள்ளது.
ஏ.கே.திசயநாயக்கேவின் இந்தியப் பயணத்திற்குப் பிறகு, இலங்கைக்கான இந்தியாவின் உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, இலங்கையின் வடக்குப் பகுதிகளுக்கும் தெற்குப் பகுதிகளுக்கும் தனித்தனியாக பயணம் மேற்கொண்டார். அவரை பிப்ரவரி 15-17 வரையிலான நாட்களில், வட இலங்கையின் முன்னணி தமிழ்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். குறிப்பாக, இலங்கை தமிழ்கட்சிகளை இந்தியாவிற்கு வரவழைத்துப் பேச இருந்த திட்டம் கைவிடப்பட்டு பின்னர், இந்த சந்திப்புகள் நடந்தேறின. அந்தவகையில், பிழைப்புவாத தமிழினக் கட்சிகளைக் கொண்டு, ஏ.கே.திசநாயக்கேவிற்கு ஆதரவு திரட்டும் வேலையை இந்தியாவே முன்னின்று செய்வதை இந்த சந்திப்புகள் உறுதி செய்கின்றன. இவை அனைத்தும் இலங்கையின் அரசியலில் இந்தியா முழுமையான தலையீட்டைக் கொண்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
அண்மையில், மாலத்தீவு அதிபராக பதவியேற்றுகொண்ட முகமது முய்சு முதல் அதிகாராப்பூர்வ பயணமாக சீனாவிற்குச் சென்று சீனாவின் மேலாதிக்கத்திற்கு முன்னுரிமைக் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்தியா மாலத்தீவுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்து தனது மேலாதிக்கத்தை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், இலங்கையைப் பொருத்தவரை, 2021 கடும் பொருளாதார நெருக்கடியே அமெரிக்க-சீன போட்டாபோட்டின் விளைவாக உருவானதாகும். இந்தப் போட்டியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இலங்கையின் அரசியலை தனது மேலாதிக்கத்தின் கீழ் இந்தியா கொண்டுவந்திருப்பதையே அண்மைகால இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
வளர்ந்துவரும் இன-மத முரண்பாடுகள்
இவைமட்டுமின்றி, ஈழத் தமிழ் மக்களின் எதிரியாக இருந்து செயல்பட்ட ஜே.வி.பி. கட்சி இத்தனை ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் கால்பதிக்க முடியாமல் இருந்தது. ஆனால், தற்போது யாழ்ப்பாணத்திலேயே ஜே.வி.பி. கட்சிக்கு பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டிருப்பது இத்தமிழினக் கட்சிகளின் துரோகத்தை எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி உருவாகும் சூழலில், சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி அடிப்படையிலான அமைப்புகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் இலங்கையில் அதிகரித்து வந்தன. சான்றாக, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு திருநாள் அன்று மூன்று கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2020 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, இசுலாமியர்களை எதிரிகளாகக் காட்டி சிங்கள இனவெறி, பௌத்த மதவெறியைத் தூண்டிவிடும் போக்குகள் அதிகரித்தன. முக்கியமாக, இந்தத் தாக்குதலின் விளைவாக இலங்கைக்கு வருகைப் புரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இது, இலங்கைப் பொருளாதார வீழ்ச்சியில் முக்கியப் பங்காற்றியது.
ஆனால், இத்தாக்குதலின் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு உறுதியளித்த கோத்தபய கும்பலும், ரணில் கும்பலும் தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை விமர்சிக்கும் முன்னணி ஊடகங்கள், இதில் சதிக்கோட்பாடுகள் இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளன.
மேலும், இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்குப் பின்னர் ஓரளவிற்கு குறைந்திருந்த சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி அரசியல் நடவடிக்கைகள், தற்போது மீண்டும் மேலோங்கி வருவதை அண்மைகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதுமட்டுமல்ல, இந்தியாவில் பாசிச மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்தது பின்னர், இலங்கையிலும் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது.
படிக்க : ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!
வளர்ந்து வரும் புதிய பாசிசக் கும்பல்
இலங்கை மற்றும் பிற நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் திசநாயக்கேவை தங்களது சுரண்டலுக்கான புதிய முகமாக கருதுகின்றன. அந்த முகம் இடதுசாரி வேடம் தரித்திருப்பது தற்போதைய இலங்கை மக்களின் மனநிலைக்கும் பொருத்தமாக உள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதுவர்களும் முக்கிய தலைவர்களும் ஜே.வி.பி. அலுவலத்தில் திசநாயக்கேவை சந்தித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி ஒரே சமயத்தில், பாலஸ்தீனம், துருக்கி, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட ஆறு நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் ஜே.வி.பி. அலுவலகத்தில் திசநாயக்கேவை சந்தித்தனர். மார்ச் 8 அன்று கியூப நாட்டு தூதுவர் ஜே.வி.பி. அலுவலகத்தில் திசநாயக்கேவை சந்தித்தார். மார்ச் 13-ஆம் தேதி இலங்கைக்கான கனடாவின் உயரதிகாரி எரிக் வால்ஷ்-வும் 19-ஆம் தேதி ஜப்பான் தூதுவர் மிசுகோஷியும் திசநாயக்கேவை சந்தித்தனர்.
ஆளும் வர்க்கத்தால் தான் முன்னிறுத்தப்பட்டிருப்பதை தனது வளர்ச்சிக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ள துடிக்கும் திசநாயக்கே, பிற நாடுகளின் ஆளும் வர்க்கங்களை சந்தித்து ஆதரவு திரட்டவும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளை சேகரிக்கவும் அடுத்தடுத்து பல நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்றுகொண்டிருக்கிறார். அண்மையில், கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க திசநாயக்கே கனடா சென்றது அதற்கான சான்றாகும். இவை மட்டுமின்றி, ஸ்வீடன், தென் கொரியா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் திசநாயக்கேவின் அடுத்தடுத்த பயணப் பட்டியலில் அடங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், திசநாயக்கேவும் ஜே.வி.பி-யும் ஆளும் வர்க்கத்தால் முன்னிறுத்தப்பட்டு, அக்கும்பலுக்கு ஆதரவு வளர்ந்து வருவதை சிலர் அடியோடு மறுக்கின்றனர். ஜே.வி.பி. சமூக வலைதளக் கட்டமைப்பில் பலமாக இருப்பதால் இவ்வாறு முன்னிறுத்தப்படுகிறது; தற்போது வெளியாகியுள்ள கருத்துகணிப்பு ஜே.வி.பி-யை இனவாதக் கட்சியாக பார்க்கும் தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் எடுக்கப்படாததால் அவர்களின் உணர்வு கருத்துகணிப்பு முடிவில் எதிரொலிக்கவில்லை, எனவே, திசநாயக்கே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற மாட்டார் என்கின்றனர்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் உண்மை இருப்பதைப் போலத் தோன்றினாலும், பொருளாதார நெருக்கடிக்கு பிறகு ஜே.வி.பி. வளர்ந்து வருவதும் அதனை அமெரிக்க ஆதரவு நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் ஊக்குவிப்பதையும் மறுக்க முடியாது. அதேவேளையில், இலங்கை ஆளும் வர்க்கங்களும் இலங்கையைக் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் ஏகாதிபத்தியங்களும் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் இலங்கை மக்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்குவதற்கும் ஒரு வல்லமைமிக்க அரசியல் தலைவரை முன்னிறுத்தி, அவரை வெற்றிப் பெறச் செய்து, “நிலையான ஆட்சி”யை அமைக்க வேண்டியுள்ளது. இந்த உண்மையில் இருந்துதான் மொத்த நிகழ்வுகளையும் பார்க்க வேண்டும்.
தேவை, பாசிச எதிர்ப்பு அரசியல் பார்வை!
எனவே, திசநாயக்கே போன்றதொரு இனவெறி கும்பலை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதற்கு இலங்கை ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்கள் அனைத்து ஜனநாயக விரோத வழிமுறைகளையும் மேற்கொள்ளும். மேலும், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிச கும்பலும் அதன் தலைமையிலான ஆட்சியும் இலங்கையில் ஜனநாயகமான முறையில் மாற்றம் உருவாவதைத் தடுத்து தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளதையே இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஆகையால், பாசிசக் கூறுகளை கொண்ட இனவெறிக் கட்சியான ஜே.வி.பி., இலங்கை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது இலங்கை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள முதன்மையான பிரச்சினையாகும். தற்போதைய நிலையில், அதன் அரசியல் வெற்றியை முறியடிப்பது மட்டுமின்றி, இலங்கை பேரெழுச்சி உருவாக்கிய ஒற்றுமை உணர்வை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பரந்துவிரிந்த மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். இந்த இரண்டு கடமைகளையும் ஒருங்கே நிறைவேற்றும் வகையிலான அரசியல் செயல்தந்திரங்களை வகுத்து முன்னேறுவது இலங்கையில் உள்ள புரட்சிகர சக்திகளின் கடமையாகும்.
தெற்காசியப் பிராந்தியத்தில் வங்கதேசம், பாகிஸ்தானை அடுத்து இந்தியாவில் மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி அமைவதை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள், இலங்கையில் பாசிச சிங்கள இனவெறி ஜே.வி.பி. தலைமையிலான ஓர் ஆட்சி அமைவதை முறியடிப்பதற்கு இலங்கை உழைக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
துலிபா
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | மின்னிதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube