Sunday, June 14, 2026
முகப்பு பதிவு பக்கம் 557

மோடி வரட்டும் பாத்துக்குறோம் – வீடியோ

0

சென்னை சைதாப்பேட்டையில் கூவம் நதிக்கருகில் இருக்கிறது சலவைத்துறை குடியிருப்பு. அதிகமும் சலவைத் தொழில் செய்யும் மக்கள் வாழும் இடமிது. இதர வேலைகளை அதாவது அன்றாடம் உழைத்தால் கூலி கிடைக்கும் வேலைகளை செய்யும் மக்களும் இங்கே கணிசமாக இருக்கிறார்கள்.

மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பு குறித்து இம்மக்கள் சொல்வது என்ன?

கருப்புப் பணத்தை பதுக்கிய பணக்காரர்கள் எவரும் வங்கி வரிசைக்கு வருவதில்லை. நாங்கள்தான் வேலையை விட்டுவிட்டு நிற்க வேண்டியிருக்கிறது. கருப்புப் பணத்தை பதுக்கியவர்களை விட்டுவிட்டு எங்களை ஏன் வதைக்க வேண்டும்? மழைத் தண்ணியில் நாங்கள் மூழ்கிய போது மோடியோ இல்லை லேடியோ வந்தார்களா? நாங்கள்தானே ஏதோ தப்பிப் பிழைத்தோம்? இருக்கும் ஒரு ஆயிரம் அல்லது ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு ஒரு நாள் முழுவதும் சுற்றியும் மாற்ற முடியவில்லை.

வங்கிக் கணக்கை விடுங்கள், கையெழுத்தே போட தெரியாத மக்களிடம் வங்கிக்கு வாருங்கள் என்று சொல்வது ஏன்?

இன்னும் அவர்களது ஆதங்கம் குறையவில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளிகள், பெண்கள் அனைவரும் பேசுகிறார்கள். கோபப்படுகிறார்கள். மோடியை நேரில் பார்த்தால் சும்மா விடமாட்டார்கள் இந்த மக்கள்! பாருங்கள் – பகிருங்கள்!

நேர்காணல்:
வினவு செய்தியாளர்கள்.

கைத்தடி ஒன்றை எடுத்துக் கொள் !

0

நிசப்தம். காற்றுக்கும் தொண்டை அடைத்துக் கொண்டது
பனஒலைகளுக்கும் பல்வலி.
சேரியில்-குடிக்க மறந்தனரா? முனக மறந்தனரா?
சுடுகாடு கிராமத்திற்குள் வந்துவிட்டதா?
நிசப்தம்.
’அவர்கள் வரப்போகிறார்கள்!’
பரட்டைத் தலைப் பூமியை-
யார் யார் ரத்தம் நனைக்கப் போகிறதோ?

**

stickசூரியன் கிழக்கே சிவந்தபோது
கிராமத்தில்
கதவுகள் உடைந்திருந்தன.
பள்ளிக்கூடத்திற்குச்செல்லும்
ஒன்றிரண்டு குழந்தைகளும்
கிழிந்திருந்தன.
சுடுகாடு மட்டும் வெளிச்சமாகவே இருந்தது.

**

அவள் கிழவி.
தலை, தலைமுறைகளைக் கண்டிருந்தது.
கன்னங்களில் இறுகிக் காய்ந்து வெடித்த களிமண் போல் சதை
கண்ணிரா? உழைப்பா? அனுபவமா? வன்முறை
எல்லாம்தான்.
அவளால் நடக்கமுடியாது!
அவள் ஏன் ஊருக்குள் இருக்கிறாள்?
’கைத்தடி’யைக் கொண்டுபோன பேரன்
திரும்பி நிச்சயம் வருவன் என்றுதான்.

**

அதே ஊர்தான்.
வீடுகள் தளிர்த்திருந்தன.
முன்னைவிட மக்கள் இருக்கிறார்கள்.
”கைத்தடி”யோடு பேரன்மார் நிறையபேர்.
அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
கண்ணுக்குத் தெரியவில்லை.
வேலைகள் மும்முரமாக நடந்தன.
கிழவி சொன்னாள் :
”அடேய் அவர்கள் எப்போதும் வரலாம்டா”

**

வரட்டும்.
கைகள் இறுகின.
சங்கிலிகள் இல்லாமலேயே பேரன்மார்கள்
கிராமத்தை இணைத்திருந்தனர்.
இரவு மலர்ந்தது – கனத்தது.
விளக்குகளில் ஒளி தவழ்ந்தது – பின்னிக் கொண்ட
’வேன்’ ஊளையிட்டது.
‘நரிப்பயல்கள்… வக்காளி… நரிப்பயல்கள்’.

**

சூரியன் கண்கசங்கினான்
சிதறினான் – வழிந்தோடியிருந்தான்.
கிராமத்துக்கு என்ன வந்தது?
நல்ல அறுவடையா?
பேரன்மார்கள் தழுவிக் கொண்டார்கள்.
பறித்த ஆயுதங்களைப் பத்திரப்படுத்தினார்கள்.
காயங்கள் இருக்கத்தான் செய்தன.
செய்திகள் பரவின – வந்தன.

**

கிழவி ஒருபக்கம் உற்சாகமாக இருந்தாள்.
பேரன்மார்கள்.
நிறைய பேரன்மார்கள்-தொடர்ந்து பேரன்மார்கள்
குழந்தைகள் பாடின.
” ‘கைத்தடி’ ஒன்றை எடுத்துக் கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
ஆரவாரம்.

– அலகநந்தா

புதிய கலாச்சாரம், நவம்பர் 1987.

ராவணனை எரிக்காதே – ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் குரல் !

14
மேற்கு வங்க மாநிலம் புருலியா பகுதியில் மகிஷாசுரனை வணங்கும் பழங்குடியினர்.

”இந்த அடையாளம் எங்களுக்கு தீராத அவமானங்களையே வழங்கியுள்ளது. மற்ற மக்கள் எங்களைக் கேலி செய்கின்றனர். அரக்கர்களைப் போல் எங்களுக்கும் பெரிய பற்கள் இருக்கிறதா என கிண்டலாக கேட்கின்றனர்” என்கிறார் இருபத்தோரு வயதான அமர்.

அமர், அசுர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ஜார்கண்ட் மாநில பழங்குடியினரிலேயே சிறுபான்மையிலும் சிறுபான்மையினாரான அசுர் பழங்குடியினத்தவரின் மொத்த மக்கள் தொகை சுமார் 26,500. அம்மக்கள் இன்றும் தங்களை அசுர வாரிசுகளாக கருதிக் கொள்கின்றனர். அங்கே மகிஷாசுர் அசுர்களின் மூதாதை.

பழங்குடி மக்களைக் கொன்றொழித்த ஆரியப்படைகளின் வெற்றிக் கதையான மகிஷாசுர வதம் துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகின்றது. இன்று சட்டிஸ்கார், ஜார்கண்ட் பழங்குடிகள் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பு – மாவோயிஸ்டு அழிப்பு நடவடிக்கைகளின் அன்றைய வடிவமே மகிஷாசுர வதம்.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கத்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த கோண்டு பழங்குடியின மக்கள் ராவணனை அரக்கனாகச் சித்தரித்து எரிப்பதைத் தடை செய்யக் கோரி கோர்சி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கத்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த கோண்டு பழங்குடியின மக்கள் ராவணனை அரக்கனாகச் சித்தரித்து எரிப்பதைத் தடை செய்யக் கோரி கோர்சி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

மகிஷன், இராவணன், சம்பூகன் போன்றோரின் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்து வழிந்தோடிய குருதி, தொன்மங்களாகவும் இனக்குழுச் சடங்குகளாகவும் இன்றும் பழங்குடி மக்களின் நினைவில் திட்டுத் திட்டாய் உறைந்திருக்கின்து. உயிர்த்தெழும் தருணத்துக்காகக் காத்திருக்கிறது.

ஆரிய படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து மகிஷனின் தலைமையிலான அசுரர் படை தங்களைக் காப்பாற்றியதை அந்த மக்கள் இன்னும் மறக்கவில்லை. போரில் தோற்ற ஆரியர்கள், பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தக் கூடாது என்ற அசுரர்களின் யுத்த தருமத்தைப் பயன்படுத்தி, துர்கா என்கிற பெண்ணை போருக்கனுப்பி அவள் மூலம் வஞ்சகமான முறையில் மகிஷாசுரனைக் கொன்றுவிட்டதாகச் சொல்கிறது இம்மக்களின் தொன்மம். பாரதப் போரில், பீஷ்மனுக்கு எதிராக சிகண்டியை (திருநங்கை) முன்னால் நிறுத்தி வஞ்சகமான முறையில் அவரைக் கொலை செய்த கிருஷ்ணனின் தந்திரத்தை விவரிக்கும் வியாசன், மகிஷாசுர வதம் என்ற சூதுக்கு சான்று கூறுகிறான்.

மேற்கு வங்க மாநிலம் புருலியா பகுதியில் மகிஷாசுரனை வணங்கும் பழங்குடியினர்.
மேற்கு வங்க மாநிலம் புருலியா பகுதியில் மகிஷாசுரனை வணங்கும் பழங்குடியினர்.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிக் கொண்டாட்டங்களின் போது வங்காளத்தின் நகர்ப்புறங்கள் கேளிக்கையில் மூழ்கியிருக்க, அசுர் இன மக்களோ அநீதியாய் வீழ்த்தப்பட்ட தம்மினத் தலைவருக்காய் துயரில் ஆழ்ந்திருப்பர். ஒன்பது நாட்களும் அவர்கள் வீடுகளை விட்டு வெளிவருவதில்லை. வெளியாட்களிடம் பேசுவதில்லை. ஒன்பதாம் நாளன்று உறவினர்கள் கூடி தங்கள் முன்னோர்களுக்கு எளிமையான படையல் வைக்கின்றனர். அப்போது தங்கள் நாசி, வயிறு மற்றும் மார்பகங்களில் எண்ணையைத் தடவிக் கொண்டு வெள்ளரிக்காய் தின்னும் சடங்கு ஒன்றையும் செய்கின்றனர்.

“மகிஷாசுரனை வஞ்சகமாக ஏமாற்றிய துர்கா அவரது வயிற்றைக் கிழித்து விட்டாள். அவன் மூக்கிலிருந்தும் மார்பிலிருந்தும் ரத்தம் வடிந்ததை நினைவு கூர்ந்து, நாங்கள் அங்கெல்லாம் எண்ணை தடவிக்கொள்கிறோம். பழிக்குப் பழியாக எதிரிகளின் ஈரலைத் தின்பதற்கான உருவகமாகவே வெள்ளறிக்காயைத் தின்கிறோம்” என்கிறார் சுஷ்மா அசுர்.

பார்ப்பன இந்து மதம், கொலைகளைக் கொண்டாடும் மதம். நவராத்திரி முடிந்த பத்தாவது நாளான விஜயதசமியைத்தான், இராவணன் கொல்லப்பட்ட நாளாக கருதுகிறது பார்ப்பன மரபு. அன்றுதான் இராவணின் கொடும்பாவி கொளுத்தப்படும் இராமலீலா. இதே விஜயதசமி நாளில்தான் ஆர்.எஸ்.எஸ். ஆண்டுதோறும் வெற்றி ஊர்வலம் நடத்துகிறது. உத்திரபிரதேச மாநிலம் லக்னௌ நகரில் நடந்த ராம் லீலாவில் “ஜெய்ஸ்ரீராம்” என்று கூவி தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி வைத்தார் மோடி. ராமனாக மோடியையும், இராவணனாக நவாஸ் ஷெரீபையும் சித்தரித்தன சங்க பரிவாரத்தினர் இறக்கியிருந்த விளம்பரங்கள்.

ravanan-captionஇராவணவதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில், தங்களை இராவணின் வழித்தோன்றல்களாக கருதும் மத்திய இந்தியாவின் கோண்டு பழங்குடியின மக்கள் அறிவிற் சிறந்த தங்கள் மூதாதையர் அநீதியாக கொல்லப்பட்டதையும், அந்தக் கொலை கொண்டாடப்படுவதையும் எதிர்த்து கடந்த மாதம் பேரணி நடத்தியுள்ளனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த கோர்ச்சி நகரில் சுமார் 3000 கோண்டு பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட பேரணி ஒன்றும், பெந்திரி கிராமத்தில் சுமார் 6000 பேர் கலந்து கொண்ட கூட்டு வழிபாடும் நடந்துள்ளது.

அசுர் மற்றும் கோண்டு பழங்குடியினத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக போற்றிப் பாதுகாத்து வைத்திருந்த தமது அடையாளங்களை, தேவ மரபுக்கு எதிரான அசுர மரபை, கம்பீரமாகப் பிரகடனம் செய்வது கண்டு திகைக்கிறது பார்ப்பனியம்.

மகிஷன் பட்ட காயங்களின் மேல் எண்ணை தடவிக் கொண்டிருந்த அசுரர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. கோமாதா குண்டர்களால் ஊனாவில் உரிக்கப்பட்ட தலித்துகளின் முதுகுத் தோலில் ஹரியாணாவின் ஜாட் வெறியர்கள் மிளகாய்த்தூள் தடவிய போதும், போட்மாங்கேவின் கண்களில் அக்லக்கின் ரத்தம் வழிந்த போதும், ரண்வீர் சேனாவின் துப்பாக்கி ரவைகள் இஸ்ரத் ஜஹானின் இதயத்தைத் துளைத்த போதும், பெஸ்ட் பேக்கரியில் ஆர்.எஸ்.எஸ் கொளுத்திய நெருப்பில் தண்டகாரண்யக் குடிசைகள் எரிந்த போதும், அசுரர்களின் வாரிசுகள் தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை.

பார்ப்பனியப் பாலைவனத்தின் சுடுமணற்பரப்பின் அடியில், உயிர்த் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருந்த அசுர விதைகளை சிலிர்த்தெழ வைத்திருப்பது தங்களுடைய கோமாதாவின் மூத்திரம்தான் என்ற உண்மை, இந்துத்துவ மூடர்களுக்குப் புரியவில்லை. கல்கத்தாவில் நடந்த துர்கா பூஜைக்கு அசுர் இனத்தவர்கள் சிலரை அழைத்துச் சென்று அவர்களை “மைய நீரோட்டத்தில்” கரைக்க முயற்சித்திருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் அசுரர்கள் வாரம் கொண்டாடும் மாணவர்கள்.(கோப்புப்படம்)
ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் அசுரர்கள் வாரம் கொண்டாடும் மாணவர்கள்.(கோப்புப்படம்)

பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற கிராத மரபின் வழித்தோன்றல்களான மணிப்பூர், திரிபுரா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினப் பெண் குழந்தைகளை வேறு மாநிலங்களுக்குக் கடத்திச் சென்று, பார்ப்பனிய விழுமியங்களில் ஊறப்போட்டு, பார்ப்பன வைரஸ்களாக மாற்றி, மீண்டும் அவர்களை வட கிழக்குக்கே அனுப்புகிறார்கள்.

இருப்பினும் ஒன்றுகலத்தல் சாத்தியப்படவில்லை. நாக்பூர் விஜயதசமி நைவேத்தியத்தை வெறித்துப் பார்க்கிறது மாசானிக்கு வெட்டிய பன்றியின் தலை. அனந்த சயனத்தில் உறங்கும் மகாவிஷ்ணுவின் முகத்தில் சுருட்டுப் புகையை ஊதுகிறான் எல்லைக் கருப்பன். ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தியாக சித்தரித்த அமித் ஷாவைக் காறி உமிழ்கிறார்கள் மலையாளிகள். இருப்பினும் தேசியம் என்பது பார்ப்பனியமே என்று கருதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல், தனது பார்ப்ப மயமாக்கும் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை.

பார்ப்பனியத்தை மக்களின் தொண்டைக் குழிக்குள் திணிக்கும் முயற்சி அதிகரிக்க அதிகரிக்க எதிர்ப்பும் அதிகரிக்கிறது. அந்த வகையில் தான் இப்போது அசுர் பழங்குடியினரும் கோண்டு பழங்குடியினரும் தங்கள் மூதாதைகளை உயர்த்திப் பிடித்துள்ளனர்.

பார்ப்பன புராணங்களை ஆய்வு செய்து அவை ஆரியர்களால் இந்த மண்ணின் பூர்வகுடிகள் அழித்தொழிக்கப்பட்ட கதைகளின் குறியீடுகளாக உள்ளன என்பதை வரலாற்றறிஞர்கள் நிறுவியுள்ளனர். தற்போது எழுந்து வரும் இந்த எதிர்வினைகள், அந்த ஆய்வுகளுக்கான ரத்த சாட்சியங்களாக உள்ளன. உ.பி., ம.பி., ஜார்கண்டு, வங்காளம் போன்ற பல இடங்களில் இராவணனும் மகிஷாசுரனும் பழங்குடி மக்களால் வழிபடப்படுகிறார்கள் என்பது சமீப ஆண்டுகளில் தெரிய வந்த உண்மை. இருப்பினும் இவையெல்லாம் தம்மளவிலேயே இந்துத்துவ எதிர்ப்பு உள்ளடக்கத்தைப் பெற்றிருப்பதாக நாம் கருதவியலாது.

அறிவியல் ரீதியிலான ஆய்வுகளோ, நேரடி சாட்சியங்களோ இல்லாத காலத்திலேயே பார்ப்பன புராணங்களை வாசித்து தனது சொந்த புரிதலின் அடிப்படையில் அதற்கொரு அரசியல் உள்ளடக்கத்தை பெரியார் வழங்கியுள்ளார். ஆரியப் படைகள் திராவிட அசுரர்களின் மேல் நிகழ்த்திய அநீதியான போரும், கொலைகளுமே இராமாயணம் என்பதை மேடைகளில் முழங்கிய பெரியார், இராமனின் படத்திற்கு செருப்பு மாலையிட்டு பார்ப்பனியத்தின் முதுகெலும்புகளைச் சில்லிட வைத்தார்.

வால்மீகி எழுதிய இராமாயணத்தின் பிரதிகளில் இருந்தும், இன்ன பிற புராணங்களின் பிரதிகளிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டி அதிர்ச்சியில் பிளந்த பார்ப்பன வாய்களில் நெருப்பைக் கொட்டினார். பெரியாரின் இராமாயணத்தை மேடைகளில் நாடக மேடைகளில் நிகழ்த்திக் காட்டி சனாதனிகளைக் கலங்கடித்தார் எம்.ஆர்.இராதா. இராதாவின் நாடகத்தில் அவதரிக்கும்போது, ஒரு கையில் மீனும், இன்னொரு கையில் கள்ளுக் கலயமும் ஏந்தியிருந்தான் இராமன். ’இராமனைக்’ கைது செய்தால் இந்துக்களின் மனம்புண்படுமே – எனத் தடுமாறிய போலீசார், வேடத்தைக் கலைக்குமாறும் வண்டியில் ஏறுமாறும் ராதாவிடம் கெஞ்சியும், அதனை மறுத்து, கையில் மீனும் கள்ளுக்கலயமுமாக ராமன் நடந்து சென்ற கண்கொள்ளாக் காட்சியை அன்று தமிழகம் கண்டது.

பார்ப்பனியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அறிவுத் தளத்தோடு நின்றுவிடவில்லை. ராமனுக்கு செருப்பு மாலை சாத்தப்பட்டதோ, பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டதோ, இராவணலீலாவோ – அவையனைத்தும் அரசியல் உள்ளடக்கத்துடன் மக்கள் மத்தியில் இயக்கங்களாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன.

அயோத்தியை முன்வைத்து அத்வானி ரத யாத்திரை நடத்திய போதும், பாபர் மசூதியை இடித்த போதும் தமிழகத்தின் வீதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகம் இராமனை எரித்தது. சிறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், அரங்கநாதனின் உறக்கத்தைக் கலைத்தது. நந்தனும், சம்புகனும், ஏகலைவனும் பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராளிகளாக ம.க.இ.க.-வின் அசுரகானம் பாடல்களில் உயிர்த்தெழுந்தார்கள். முற்போக்காளர்களோ இராம ஜென்ம்பூமி என்ற மோசடியை நேருக்கு நேர் எதிர்க்கும் துணிவின்றி, “கடவுளின் பெயரால் கலவரம் எதற்கு” என்று மழுப்பினார்கள். அத்வானியின் ராமனுக்கு எதிராக மோடியின் ராமனை நிறுத்தினார்கள்.

ஆம். 1980-களின் பிற்பகுதி தொடங்கியே பார்ப்பன பாசிசம் தீவிரமாகத் தலையெடுக்கத் தொடங்கிவிட்டது என்ற போதிலும், இந்து மதம் என்று இவர்களால் அழைக்கப்படுவதே பார்ப்பன மதம்தான் என்பதையோ, இதன் புராணங்கள் அனைத்திலும் நிரம்பியிருப்பவை ஆரிய நிறவெறியும் வருணாசிரம வெறியும்தான் என்பதையோ முற்போக்காளர்கள் எனப்படுவோரே ஏற்கவில்லை. அவர்களும் பார்ப்பனக் கருத்தாக்கத்துக்கு ஆட்பட்டிருந்தனர் அல்லது அதனை எதிர்க்க அஞ்சினர்.

இராவண காவியமும், இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகமும் தமிழகத்தில் சென்ற நூற்றாண்டிலேயே அரங்கேறிவிட்டன என்ற போதிலும், இப்போதுதான் ஜே.என்.யு. வில் மகிஷாசுரன் தினம் கொண்டாடப்படுகிறது. இப்போதும் கூட பார்ப்பன மரபையும் பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட அசுர மரபையும் எதிர் நிறுத்தி இந்து மதத்தின் வரலாற்றையும் அதன் ஆன்மாவையும் புரிந்து கொள்வதற்கு பல அறிவுத்துறையினர் தயாராக இல்லை. தேவ மரபும் அசுர மரபும், பார்ப்பனியமும் பவுத்தமும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கான சான்றுகள் என்று இந்துத்துவ வாதிகள் அங்கீகரிக்கவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள், அல்லது விமரிசிக்கிறார்கள்.

இராவணனுக்கும் மகிஷாசுரனுக்கும் வரலாறு எழுதி, அவர்களை தேசிய நாயகர்களாக்குவது நம் நோக்கமல்ல. இராம ராச்சியத்துக்கு எதிராக இராவண ராச்சியம் எதையும் நாம் முன்வைக்கவில்லை. ஆனால் வரலாறு திரிக்கப்படும்போது, திரிக்கப்பட்ட அந்த வரலாறு, நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போது, எதிர்காலத்தை விழுங்கி விடுமோ என்று அச்சுறுத்தும்போது நாம் அசட்டையாக இருக்க முடியாது.

”சிங்கங்களுக்கென்று ஒரு வரலாற்றாசிரியன் தோன்றாதவரை, வேட்டைகளின் வரலாறு வேட்டைக்காரர்களையே கொண்டாடும்” – என்றார் நைஜீரியக் கவிஞர் சினுவா அச்சேபி (Chinua Achebe). பசுமாட்டு தேசியத்தின் கொம்பைப் பிடித்து உலுக்குகிறது எருமைமாட்டு தேசியம்.

– சாக்கியன்

___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

கடன் வாங்கிய விவசாயிகளை இழிவுபடுத்தும் அதானிகளின் அரசு !

0

வாங்கியக் கடனைக் கட்டாததால் உத்திரப்பிரதேசம், சித்ரகூட் மாவட்டத்தின் மணிக்பூர் ஊராட்சியைச் சேர்ந்த 10 ஏழை விவசாயிகளின் பெயர்களைச் சுவற்றில் எழுதி வங்கி மற்றும் வட்டாட்சி நிர்வாகங்கள் அவமானப்படுத்தியிருக்கின்றன. வறட்சியும், கடனும், ஏழ்மையும் விவசாயிகளை சுழற்றியடித்துத் துன்பத்தில் ஆழ்த்துகின்ற அதே நேரத்தில் இந்த இழி செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியிருக்கிறது.

up-farmer
நான் என்ன செய்தேன்? திருடினேனா? இல்லை, ஏமாற்றினேனா? நான் செய்தது நேர்மையாக தொழில் செய்யலாம் என்று கடன் வாங்கியது தான் என்கிறார்.

மணிக்பூர் கிராமம் இருக்கும் பண்டல்கண்ட் பகுதி உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 மாவட்டங்களை உள்ளடக்கியிருக்கிறது.

2003-லிருந்து வறட்சியின் கொடுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் கொந்தளிப்பான சூழலில், வங்கிகள் கடன் வசூலிப்பதை நிறுத்தச் சொல்லி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உ.பி அரசு விவசாயிகளிடம் கடன் வசூல் செய்வதைத் தடைச் செய்திருந்தது. இந்திய ரிசர்வ் வங்கியும் கடனாளிகளின் புகைப்படங்களைப் பொதுவிடத்தில் வெளியிடுவதை நிறுத்தச் சொல்லி வங்கிகளுக்கு சுற்றறிக்கை அளித்திருந்தது.

மத்தியப்பிரதேசத்தில் வரும் 2017-ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதையொட்டி பா.ஜ.க, காங்கிரசு, சமாஜ்வாடிக் கட்சிகள் கடந்த 10 மாதங்களாக கடனைப் பற்றியும், சாதகமான திட்டங்களைப் பற்றியும் பண்டல் கண்ட் பகுதி விவசாயிகளிடம் விதவிதமான வெற்று சவடால்களை அள்ளிவீசத் தொடங்கிவிட்டன.

ஆனால் தொடர்ச்சியான வறட்சியால், போட்ட முட்டூலியைக் (விவசாயத்தின் அடக்கச் செலவு) கூட எடுக்கவியலாமல் அப்பகுதி விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் கடன் சுமையானது ஆண்டாண்டுக்கும் அதிகரிக்கிறது. “ஒட்டுமொத்த மாநிலத்தின் 45%  கடன்சுமையை ஒப்பிடும் போது பண்டல்கண்ட் பகுதி விவசாயிகளின் கடன்சுமை 80%” இருப்பதாக பண்டல்கன்ட் விவசாய சங்கத் தலைவரான அணில் பிரதான் கூறுகிறார்.

‘’2015-ல் வழங்கப்பட்ட 818 கோடி ரூபாய் கடனில் 664 கோடி நிலுவையில் இருப்பதாக’’ சித்ரகூட் மாவட்ட வங்கிகளின் கடன் திட்டங்களை நிர்வகிக்கும் மேலாளரான அபிநந்தன் மிஸ்ரா கூறுகிறார். அதே நேரத்தில் தரகு முதலாளி அதானி பொதுத்துறை வங்கிகளிடம் பெற்றக் கடன் தொகையான 72,000 கோடி ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் கடன் தொகைக்குச் சமமாகும்.

நய சந்திரா கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான விவசாயி ராம் லோச்சனின் பெயர் அந்த சுவரில் இரண்டு ஆண்டுகளாக இருக்கிறது. மணிக்பூர் அலகாபாத் வங்கியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டருக்காக அவர் வாங்கிருந்த 2.5 இலட்சம் கடன் இன்று 4 இலட்சத்து 90 ஆயிரமாக ஆகிவிட்டது. வறட்சி மட்டுமல்ல கடுமையான மழையும் அவரது பயிர்களை ஆகஸ்டு மாதத்தில் நாசம் செய்துவிட்டது. வேறு வழியில்லாமல் அவரது இரண்டு மகன்கள் விவசாயத்தையும் தந்தையையம் விட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர்.

வாங்கியக் கடனைக் கட்டாததால் உத்திரப்பிரதேசம், சித்ரகூட் மாவட்டத்தின் மணிக்பூர் ஊராட்சியைச் சேர்ந்த 10 ஏழை விவசாயிகளின் பெயர்களைச் சுவற்றில் எழுதி அவமானப்படுத்தியுள்ளனர்
வாங்கியக் கடனைக் கட்டாததால் உத்திரப்பிரதேசம், சித்ரகூட் மாவட்டத்தின் மணிக்பூர் ஊராட்சியைச் சேர்ந்த 10 ஏழை விவசாயிகளின் பெயர்களைச் சுவற்றில் எழுதி அவமானப்படுத்தியுள்ளனர்

ராம் லோச்சனின் மூன்றாவது மகனான ஜகத்பால் தந்தையின் 5.6 ஏக்கர் நிலத்துடன் அவரது கடனையும் உரிமையாகப் பெற்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டில் ஒருநாள் வீட்டையும் டிராக்டரையும் பறிமுதல் செய்யப் போவதாகக் கடன் வசூலிப்பவர்கள் மிரட்டியிருக்கின்றனர். சுவரில் எங்களது பெயர் எழுதப்பட்ட நாளிலிருந்து கடனுடன் அவப்பெயரையும் சேர்த்துச் சுமக்கிறோம் என்று குமுறுகிறார் ஜகத்பால். ஆனால் அதே இந்திய ஜனநாயகம் தான் சுற்றுச்சூழலை நாசம் செய்ததற்காக அதானிக்கு விதிக்கப்பட்ட 200 கோடி அபராதத்தைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி லோச்சன் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேருக்கு ஒரே குடும்ப அட்டை தான் வழங்கப்பட்டிருக்கிறது. எதை நாங்கள் சாப்பிடுவது?. “சில நேரங்களில் உப்பையும் ரொட்டியையும் சாப்பிடுகிறோம், பல நேரங்களில் அதுவும் இல்லை” என்கிறார் லோக்சன்.

ஏற்கனவே பசியால் துடித்துக் கொண்டிருக்கு ஜகத்பால் போன்ற ஏழைகளை, பழைய ரூவாய் நோட்டுக்களைச் செல்லாதாக்கியதன் மூலம் கிட்டத்தட்ட முடக்இ போட்டுவிட்டார் திருவாளர் மோடி. இதுதான் நாட்டின் வளர்ச்சிக்கான தியாகமென கூறுகிறார்.

அணில்குமாருக்கு அந்தச் சுவரில் மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் டிராக்டர் வாங்குவதற்காக வாங்கியக் கடன் 3 இலட்சம், தற்போது 6.1 இலட்சமாக எகிறிவிட்டது. எப்படிக் கடன் அதிகமானது என்பது அவருக்குத் தெரியவில்லை. கடனை வாங்கும் போது 9 % ஆக இருந்த வட்டிவீதம் தற்போது 14% ஆகிவிட்டது என்கிறார் அவர்.

ஆனால் அம்பானி கட்ட வேண்டிய 8299 கோடி வட்டியைக் கூட வங்கிகள் கேட்பதில்லை அல்லது கேட்க முடியாது. மாறாக அம்பானிக்கான புதியக் கடனில் அதைக் கழித்துக் கொள்கிறது அரசு.

2014 -ல் இன்டியாஸ்பென்டின் ஆய்வின்படி ஒரு பண்டல்கான்ட் விவசாயி வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடன் நான்கே ஆண்டுகளில் 18,704 ரூபாயாக அதிகரித்துவிடுகிறது. முதல் ஆறு மாதங்களில் 4 விழுக்காடாக இருந்த வட்டிவீதம் சில ஆண்டுகளில் 22 விழுக்காடாக எகிறி வீட்டுக்கடனை விடக் கொடுமையானதாக மாறிவிட்டது.

எள் அறுவடைக்குப் பிறகு கடனைக் கட்டிவிடலாம் என்ற அவரது கனவு, விளைச்சல் பொய்த்து விட்டதால் நொறுங்கிவிட்டது. கடனாக வாங்கிய டிராக்டரும் துன்பத்தைத் தவிர வேறேதும் அவருக்குக் கொடுக்கவில்லை. அவரது டிராக்டரைப் போலீஸ் பலமுறைப் பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல் ஒரு வழிபறிக் கொள்ளைக்காரனைப் போல அவர் மீது வழக்குப் போட்டுள்ளது. சொத்தைப் பறிமுதல் செய்துச் சிறையில் தள்ளிவிடுவோம் என்ற மிரட்டலால் பயந்து போன அனில்குமார் அலகாபாத் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கியிருக்கிறார். பொதுத்துறை வங்கிகளின் 9000 கோடியை ஏப்பம் விட்ட மல்லையாவைப் பிடிக்க வக்கில்லாத இந்திய அதிகார வர்க்கம் ஒரு ஏழை விவசாயின் மீது தனது வீரத்தைக் காட்டியிருக்கிறது.

adani40 வயதாகும் யோகேந்திர குமார் சிங்கிற்கு கடன் வாங்கியவர்களின் பட்டியலில் 9 வது இடம் கிடைத்திருக்கிறது. எட்டு ஆண்டுகளாக அவருக்கு நிலையான வேலை ஒன்றுமில்லை. 2008 ஆம் ஆண்டு பால் பண்ணைத் தொடங்குவதற்காக அவர் வாங்கிய 1.9 இலட்சம் கடன் தந்தையின் கல்லீரல் புற்றுநோயைச் சரி செய்யப் போதாததால் தனது 6 ஏக்கரில் 80% நிலத்தை விற்று விட்டார்.

ஆகஸ்டில் பெய்த கனமழையால் சேதமான அவரது வீட்டை ஏலம் விடுவதற்கானத் தேதியையும் வட்டாட்சியர் அறிவித்து விட்டார். கடனைத் திருப்பி கட்டவில்லையெனில் மீதமுள்ள அவரது நிலத்தையும் இந்த ஆண்டிற்குள் இழந்து விடுவார்.

அதுமட்டுமல்லாமல் சகோதரருக்கு சிறுநீரகக் குறைபாடு, மனைவிக்கு இதய நோய்க்கான மருத்துவ செலவுகள் எனக் கடன் 2.6 இலட்சமாக எகிறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக நிலம் படைத்த விவசாயியாக இருந்த அவர் தற்போது ஒரு உதிரிப் பாட்டாளியாய் கிடைக்கும் வேலைகளைச் செய்து வருகிறார்.

கடனையும், பூப்படைய இருக்கும் மகளையும் எண்ணியேத் தனக்கு நெஞ்சு வலி வருவதாகக் கூறுகிறார் சிங்கின் மனைவி. ஒரு நாளில் குறைந்தது மூன்று முறையாவது அவர் மயக்கமடைவதாக கூறுகிறார் சிங்கின் தமக்கை.

நான் என்ன செய்தேன்? திருடினேனா? இல்லை, ஏமாற்றினேனா? நான் செய்தது நேர்மையாக தொழில் செய்யலாம் என்று கடன் வாங்கியது தான் என்கிறார். நம்முடைய வசதியான வாழ்க்கைக்காக மேம்பாலங்களையும் கட்டிடங்களையும் கட்டும் அந்தத் தொழிலாளர்களின் ஆகப் பெரும்பான்மையாவர்களில் யோகேந்திர குமாரைக் காணலாம்.

இளைஞர்கள் வேலைத் தேடுபவர்களாக இருக்க கூடாது மாறாக வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என்று ஆரவாரமான மந்திர உச்சாடனத்துடன் மோடி பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டத்தைத் தொடங்கியிருந்தார். ஆனால் ஏற்கனவே கடனாளியான சிங் போன்ற ஏழை மக்களால் அத்திட்டத்தின் குறைந்தபட்சக் கடனான 50 ஆயிரம் கூட வாங்க இயலவில்லை. ஆனால் அம்பானி, அதானிகளுக்கு பொதுத்துறை வங்களில் சில இலட்சம் கோடி ருபாய்களே வழங்கப்பட்டிருக்கின்றன.

கடன் வாங்கிய விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். உயிரோடு இருந்தால் சுவற்றில் திருடர்கள் போன்று இழிவுபடுத்துகின்றன வங்கிகள்! மல்லையா தப்பி ஓடுகிறார். அதானி சிரிக்கிறார். மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்கிறார் மோடி.

செய்தி ஆதாரம்:
Named and shamed: In Uttar Pradesh, debt-ridden farmers have their backs to the wall
‘Adani’s debt equals to entire farm debt’

பாசிச கோமாளி ! கேலிச்சித்திரம்

0
பாசிச கோமாளி slider

பாசிச கோமாளி

பாசிச கோமாளி

“நாட்டை எப்போதும் பதட்டமாகவே வைத்திருக்க வேண்டும். அமைதி நிலவினால் மக்கள் சிந்திப்பார்கள். சிந்தித்தால் நமது பலவீனங்கள் தெரிந்துவிடும்.” – இட்லர்

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

நரேந்திர மோடி: “வளர்ச்சியின்” நாயகனா, கொள்ளைக்கூட்டத் தலைவனா ?

6

யணிகளின் பர்ஸை காலி செய்வதில் தனியார் ஆம்னி பேருந்துகளைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவிற்கு பயணக் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது, இந்திய ரயில்வே துறை. சனி, ஞாயிறு உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களையொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் டிக்கெட் விலை, இந்திய ரயில்வே துறை பயணிகள் சேவையைக் கைகழுவிவிட்டு, ஏலக் கம்பெனியாக மாறிவிட்டதை எடுத்துக் காட்டுகிறது. பொருளுக்குள்ள கிராக்கியைப் பொருத்து ஏலத்தொகை ஏறிக் கொண்டே போவதைப் போல, பயணிகளின் கூட்டத்தைப் பொருத்து சுவிதா ரயில்கள் என்றழைக்கப்படும் சிறப்பு ரயில்களின் கட்டண வீதம், வழமையான கட்டணத்தைக் காட்டிலும் 20 சதவீதம், 40 சதவீதம் என ஏறிக்கொண்டே போகும் வண்ணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

railway-robbery-3
ரயில் பயணத்திற்குத் திரளும் கூட்டத்தைக் கொண்டு, ரயில்வே துறையை மாபெரும் கொள்ளைக்கார நிறுவனமாக மாற்றி வருகிறது, மோடி அரசு.

தனியார் ஆம்னி பேருந்துகளின் பண்டிகைக் காலக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடும் வாய்ப்பாவது இருக்கிறது. ஆனால், இந்த ஒப்புக்குச் சப்பாணியான வாய்ப்பைக்கூட, இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ள வளர்வீதக் கட்டணத்திற்கு எதிராகப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், அரசே அறிவிப்பதால் இந்த வளர்வீதக் கட்டண வீதத்திற்குச் சட்டபூர்வ அந்தஸ்து கிடைத்துவிடுவதோடு, சிறப்பு ரயில்கள் மற்றும் துரந்தோ, சதாப்தி, ராஜ்தானி உள்ளிட்ட அதி விரைவு சொகுசு ரயில்கள்; மேலும், எதிர்காலத்தில் இயக்கப்படவுள்ள புதிய அதிவிரைவு ரயில்கள் அனைத்திற்கும் வளர்வீதக் கட்டணம்தான் நிர்ணயிக்கப்படும் என்பதைக் கொள்கையாகவே அறிவித்துவிட்டது, இந்திய ரயில்வே துறை. இத்தகைய “வளர்ச்சி”யை முன்னிறுத்தும் அரசின் கொள்கை முடிவுகளை நீதிமன்றங்கள் கேள்விக்குள்ளாக்குவதுமில்லை, தலையிடுவதுமில்லை.

தனியார் விமான நிறுவனங்கள் அதிரடி இலாபத்தை அடையும் நோக்கில் அறிமுகப்படுத்தியதுதான் இந்த வளர்வீதக் கட்டணம். இக்கட்டண முறையைக் கொஞ்சம் பச்சையாகச் சொன்னால், புதுப்பட ரிலீஸ் நாளன்று தியேட்டர் வாசலில் கூடுதல் விலையில் விற்கப்படும் கள்ள டிக்கெட்டுக்கும், இதற்கும் அதிக வேறுபாடில்லை. கூட்டத்தைப் பொருத்து டிக்கெட்டின் ரேட்டை தியேட்டர் வாசலில் தீர்மானித்தால், அது கள்ள டிக்கெட். அதையே கவுண்டருக்குப் பின்னால் உட்கார்ந்துகொண்டு செய்தால், அதன் பெயர் வளர்வீத கட்டண முறை. இந்த நெறியற்ற, முறைகேடான வர்த்தக யுத்தியைத்தான் இந்திய ரயில்வே துறைக்குள் புகுத்தியிருக்கிறது, மோடி அரசு.

சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் பாண்டியன் அதிவிரைவு ரயிலில் படுக்கை வசதி டிக்கெட் கட்டணம் ரூ.315/-. இதுவே சுவிதா ரயில் என்றால், அதே படுக்கை வசதி டிக்கெட் விலை ரூ.1,105/-க்கு எகிறிவிடும். தூரமோ, வண்டியின் வேகமோ, பயண நேரமோ மாறாதபொழுது, டிக்கெட் விலை மட்டும் மூன்று மடங்காக வீங்கிப் போவதன் சூட்சமத்தைப் புரிந்துகொள்ள பொருளாதார அறிவெல்லாம் தேவையில்லை. பதுக்கி வைத்திருக்கும் சரக்கைக் கொஞ்சம் கொஞ்சமாகவும் படிப்படியாக விலையை ஏற்றியும் சந்தையில் விற்கும் பதுக்கல் வியாபாரிகளின் கிரிமினல் வியாபார யுத்தியைத்தான் மோடி அரசும் பயன்படுத்தி வருகிறது.

railway-robbery-captionமுதலாவதாக, சுவிதா ரயில்களில் டிக்கெட் கட்டணம் வழமையான கட்டணத்தைப் போல் அல்லாமல், தட்கல் கட்டணத்திற்கு இணையாக அதிக விலையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டாவதாக, இந்த தட்கல் கட்டணத்தின்படியும் ரயிலின் மொத்த டிக்கெட்டுகளும் விற்கப்படுவதில்லை. ரயிலின் மொத்த இருக்கைகளில் முதல் இருபது சதவீத இடங்கள் மட்டுமே இந்த தட்கல் கட்டணத்தில் விற்கப்படுகின்றன. அவை விற்ற பிறகு, அடுத்த 20 சதவீத இடங்கள், முந்தைய கட்டணத்தைவிட 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படும். அவை விற்ற பிறகு, அடுத்த இருபது சத இடங்கள் தட்கல் கட்டணத்தைப் போல இரு மடங்கு விலையிலும், அடுத்த இருபது சதவீத இடங்கள் 2.5 மடங்கு விலையிலும், கடைசி 20 சதவீத இடங்கள் மூன்று மடங்கு விலையிலும் விற்கப்படும்.

கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு கட்டணக் கொள்ளை அடிப்பது மட்டும் மோடி அரசின் நோக்கமல்ல. ஓரளவு குறைந்த கட்டணத்தில் ரயில் பயணம், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பயணச் சலுகைகள் – என இதுகாறும் பொதுமக்கள் பெற்றிருந்த உரிமைகளை ரத்து செய்துவிட்டு, ரயில்வே துறையைத் தனியார்மயத்திற்கு ஏற்றவாறு அதிரடி இலாபம் தரும் துறையாக மாற்றியமைப்பதுதான் மோடி அரசின் திட்டம். அதற்கான பரிசோதனைக் களமாக இருப்பதுதான் சுவிதா ரயில்கள்.

ரயில்வே துறையின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தில் சாதாரணப் பெட்டிகளைக் கழட்டிவிட்டுவிட்டு, அவற்றின் இடத்தில் இணைக்கப்படும் எல்.எச்.பி. பெட்டிகள்
ரயில்வே துறையின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தில் சாதாரணப் பெட்டிகளைக் கழட்டிவிட்டுவிட்டு, அவற்றின் இடத்தில் இணைக்கப்படும் எல்.எச்.பி. பெட்டிகள்

சுவிதா ரயில்களில் குழந்தைகளுக்குக்கூட முழு டிக்கெட்தான் எடுக்க வேண்டும். முதியவர்களுக்குத் தரப்படும் சலுகைக் கட்டணம் கிடையாது. முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னால் மட்டுமே  ரத்து செய்ய முடியும்; அதற்கும் 50 சதவீதக் கட்டணம்தான் திருப்பித் தரப்படும். ஆறு மணி நேரத்திற்குள் ரத்து செய்ய நேர்ந்தால் கட்டணம் திரும்பக் கிடைக்காது. இவை எல்லாவற்றையும்விடக் குரூரமானது என்னவென்றால், சுவிதா ரயில்களில் பொதுப் பெட்டிகளே கிடையாது. இதன் மூலம் சுவிதா ரயில் சேவை மிகச் சாதாரணமான, எளிய பயணிகளைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கிறது.

வழமை போலவே, பயணிகள் ரயில் சேவையால் அரசுக்கு நட்டமேற்படுகிறது என்ற அழுகுணித்தனமான காரணத்தை முன்வைத்து, இந்த வளர்வீதக் கட்டண முறையை மோடி அரசும் அதனின் துதிபாடிகளும் நியாயப்படுத்தி வருகிறார்கள். இலாப நோக்கோடு நடத்துவதற்கு பயணிகள் ரயில் சேவை வியாபாரம் கிடையாது. அது அரசின் தார்மீகப் பொறுப்பும் கடமையுமாகும். இதுவொருபுறமிருக்க, பயணிகள் ரயில் சேவையால் நட்டமேற்படுகிறது என்பதால், ரயில்வே துறையே நட்டத்தில் இயங்கி வருவதாகக் கூறவும் முடியாது.

2015-16 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மோடி அரசு, அதற்கு முந்தைய ஆண்டில் ரயில்வே துறை மைய அரசுக்கு 8,008 கோடி ரூபாயை இலாப ஈவாகத் தந்திருப்பதாகவும், இதற்கு அப்பால் ரயில்வே 3,740 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருப்பதாகவும் அப்பட்ஜெட்டிலேயே அறிவித்தது.

வசதி படைத்தவனுக்குச் சொகுசுப் பயணம்; ஏழைகளுக்கு மரணத்தோடு விளையாடுகின்ற பயணம்: ரயில்வே சேவையில் காணப்படும் வர்க்க ஏற்றத்தாழ்வு
வசதி படைத்தவனுக்குச் சொகுசுப் பயணம்; ஏழைகளுக்கு மரணத்தோடு விளையாடுகின்ற பயணம்: ரயில்வே சேவையில் காணப்படும் வர்க்க ஏற்றத்தாழ்வு

பயணிகள் சேவையைக் குறைந்த கட்டணத்தில் தருவதற்கான மானியத்தை மைய அரசு தனது கையிலிருந்து தருவதில்லை. மாறாக, சரக்குக் கட்டணத்திலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து அந்த மானியத்தை ரயில்வே துறை தானே ஈடு செய்து கொள்கிறது. இந்த உள்மானியத்தையும் (cross subsidy) ரயில்வேயின் இலாபத்தோடு சேர்த்துக் கணக்கீட்டால், ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை 30,000 கோடி ரூபாய்க்கு மேல் இலாபமீட்டும் பொன் முட்டையிடும் வாத்தாகும்.

பெட்ரோல், டீசலுக்குத் தரப்பட்டு வந்த உள்மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்து, அப்பொருட்களைச் சந்தை விலைக்கு வாங்க வேண்டிய நிலையை உருவாக்கியதைப் போல, ரயில் கட்டணத்தையும் மாற்றியமைக்கத் தீவிரமாக முயன்று வரும் மோடி அரசு, அதனைப் பல்வேறு வழிகளில் நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களையொட்டி வழமையான கட்டணத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதைக் கைவிடுவதை காங்கிரசு கூட்டணி அரசு தொடங்கி வைத்தது என்றால், சுவிதா ரயில்கள் மட்டுமே இனி சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என்பதைக் கொள்கை முடிவாகவே அறிவித்திருக்கிறது, மோடி அரசு. அவரது தலைமையில் வலதுசாரி பார்ப்பன-பனியா ஆட்சி அமைந்தவுடனேயே, ரயில் பயணக் கட்டணம் 14 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டது. தொழிலாளர்களும் ஊழியர்களும் பயன்படுத்திவரும் மாதாந்திர பயணக் கட்டணமும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்கப்பட்டது. பயணக் கட்டணம் மட்டுமின்றி, நடைமேடைக் கட்டணமும் இரு மடங்காக, ரூபாய் பத்தாக உயர்த்தப்பட்டு, ரயில்வே நிலையத்திற்குள் நுழைவதே சூதாட்ட கிளப்புக்குள் தலையைக் கொடுப்பது போன்ற நிலைமை உருவாக்கப்பட்டது.

மேலும், பயணக் கட்டணத்திற்கு மேல் சூப்பர் பாஸ்ட் கட்டணம், சேவை வரி, கல்வி வரி, தூய்மை இந்தியா வரி, விவசாய நல வரி என மறைமுகக் கட்டணங்கள் ஏற்றப்பட்டன. சில்லரை பிரச்சினையைத் தீர்ப்பது என்ற பெயரில் டிக்கெட் கட்டணம் அனைத்தும் ஐந்து ரூபாய்களின் மடங்குகளாக மாற்றம் செய்யப்பட்டன. பிரீமியம் சிறப்பு ரயில், தட்கல் பிரிமீயம் சிறப்பு ரயில், தட்கல் சிறப்பு ரயில் எனப் பெயர்களை மாற்றிமாற்றிப் போட்டு, கட்டணக் கொள்ளைக்கான ரயில்களை அறிமுகப்படுத்துவது வாடிக்கையாகிப் போனது.

railway-robbery-2
வசதி படைத்தவனுக்குச் சொகுசுப் பயணம்; ஏழைகளுக்கு மரணத்தோடு விளையாடுகின்ற பயணம்: ரயில்வே சேவையில் காணப்படும் வர்க்க ஏற்றத்தாழ்வு

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பயணிகள் வருமானத்தை 46,000 கோடி ரூபாயிலிருந்து 51,000 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என அறிவித்த கையோடு, ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி சொகுசு ரயில்களில் இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்புக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. வளர்வீதக் கட்டண முறையைக் கொண்ட சுவிதா ரயில்கள் மட்டுமே சிறப்பு ரயில்களாக இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. ராமேஸ்வரம் விரைவு ரயில் உள்ளிட்டுப் பல்வேறு விரைவு ரயில்களை அதிவிரைவு ரயில்களாக அறிவித்து, மறைமுகக் கட்டண உயர்வு திணிக்கப்பட்டது.

ரயில்வேயை நவீனமயமாக்குவது என்ற முகாந்திரத்தில் நீளம் குறைந்த சாதாரண பெட்டிகளை அகற்றிவிட்டு, அதனிடத்தில் நீளம் அதிகமான, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளின் எண்ணிக்கை அதிகம்கொண்ட, ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள் படிப்படியாக இணைக்கப்படுகின்றன. அதேசமயத்தில், ரயிலின் மொத்த நீளம் அதிகமாகவதைத் தவிர்ப்பதற்காக, மாற்றுத் திறனாளிகளுக்கும், பெண்களுக்கும் ஒதுக்கப்படும் தனிப் பெட்டிகளை அகற்றுவது, பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்றவாறு சாதாரண பயணிகளின் உரிமைகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் மூலம் முன்பதிவு செய்ய இயலாத ஏழைகள் அல்லது திடீர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் விலங்குகளைப் போல மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்ற நிலை உருவாக்கப்படுகிறது.

துரந்தோ, சதாப்தி, ராஜ்தானி சொகுசு ரயில்களின் கட்டண உயர்வின் மூலம் மட்டும் ரயில்வேக்கு இந்த ஆண்டில் 500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிட்டும் என்றும்; ஒவ்வொரு சுவிதா ரயிலின் மூலமும் கிடைக்கும் வருமானம், அந்த ரயிலை இயக்குவதற்கு ஆகும் செலவிற்கு அப்பால், 4 சதவீத இலாபத்தைத் தருகிறதென்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கும் மேலாக, அனைத்துவிதமான பொதுப் பெட்டிகள் மற்றும் முன்பதிவு பெட்டிகளின் இடத்தில் குளுரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டு வருவதன் மூலம் பயணிகள் சேவையை அதிரடி இலாபமீட்டும் துறையாக மாற்றத் திட்டமிடுகிறது, மோடி அரசு. இதன் தொடக்கமாக, அனைத்தும் ஏ.சி. பெட்டிகளாகக் கொண்ட ஹம்ஸஃபர் ரயில்கள் அறிமுகமாகவுள்ளன.

இது குறித்த தொலைக்காட்சி விவாதத்தின்பொழுது பா.ஜ.க. பிரமுகர் நாராயணன், “யாரால் முடியுமோ, அவர்களிடமிருந்துதான் நாங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறோம்” எனப் பதில் அளித்தார். மிகச் சாதுர்யமாகச் சொல்லப்பட்டிருப்பதைப் போலத் தோன்றும் இந்த பதில் ஒரு மோசடி.

ஏ.சி. பெட்டிகளின் பயணச்சீட்டுக் கட்டணம் விமான கட்டணத்திற்கு இணையாக இருப்பதால், மேல்தட்டு வர்க்கத்தினர் ரயிலைவிட, விமான பயணத்திற்கு முன்னுரிமை தருகின்றனர். நடுத்தர வர்க்கமும்அதற்கும் கீழாக உள்ள ஏழைகளும் மட்டுமே இன்னமும் தமது பயணத்திற்கு அரசு பேருந்துகளையும் ரயில்களையும்தான் நம்பியுள்ளனர். குறிப்பாக, வேலை தேடி, வாழ்வாதாரம் தேடி இலட்சக்கணக்கான ஏழைகள் இந்தியாவின் நான்கு திசைகளிலும் உள்ள நகரங்களை நோக்கி விசிறியடிக்கப்படும் நிலையில், அந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவசரத் தேவைகளுக்கோ, வருடத்துக்கு ஒரிரு முறையோ தமது சொந்த கிராமத்துக்குச் சென்று திரும்புவதற்கு எளிமையான, கொஞ்சம் வசதியான போக்குவரத்துச் சாதனமாக ரயில்தான் இருந்து வருகிறது. நகரமயமாக்கம் தீவிரமடைய, தீவிரமடைய, அதற்கு நேர் விகிதத்தில் பயணிகள் கூட்டமும் அதிகரித்துச் செல்கிறது. இந்த நிலையில், ரயில் கட்டணத்தைச் சந்தையின் சூதாட்டத்துக்கு ஏற்ப உயர்த்திக்கொண்டே போவது ஏழைகளுக்கு, தொழிலாளர்களுக்கு எதிரான போர் என்றுதான் சொல்ல முடியும்.

– செல்வம்
___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

வராக் கடன் வராது ஆனால் வசூலிப்போம் – கேலிச்சித்திரம்

8
arun jaitly cartoon Slider

மல்லையா உள்ளிட்ட 63 முதலாளிகளின் 7016 கோடி கடன் தள்ளுபடி !

arun jaitly cartoon

கடனை தள்ளுபடி செய்யவில்லை. கணக்கிலிருந்து நீக்கியிருக்கிறோம்.

“ Not waivered But ‘only’ write off ”

அட பூவை தாம்பா புஷ்பங்கிறாரு…

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

கருப்பு பண முதலைகளின் வங்கிக் கடனோ ரூபாய் 7016 கோடி தள்ளுபடி!
உழைக்கும் மக்களின் சேமிப்போ ஜேப்படி !
அன்றாட செலவுக்கே அல்லல்படுதுமக்கள் கூட்டம்!
கருப்பு பண முதலை BJP ரெட்டி கும்பலோ 650 கோடியில் ஆடம்பர திருமணம் !
இந்த வக்கிரத்தை இனியும் அனுமதிப்பது அவமானம்!

PP_Black Money 1

நாம் உழைத்து சேர்த்த பணத்தை மாற்ற  குற்றவாளிகளைப் போல் விரலில் மை வைப்பானாம்!
கார்ப்பரேட் முதலாளிகள் வங்கி கடன் பல ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்வானாம்!
இப்போது புரிகிறதா மோடியின் மோசடி!
பாசிச மோடி கருப்புப் பண முதலைகளின் கைக்கூலி!
உழைக்கும் மக்களின் துரோகி!

PP_Black Money 2

படம் :
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்.
91768 01656

இணையுங்கள்:

வளர்ச்சியைப் பீற்றும் குஜராத்தின் இருண்ட பக்கம்

0
poverty

தான் மிக வேகமாக வளர்ந்து வருவதாக பீற்றிக் கொள்ள கிடைக்கும் எந்த வாய்ப்பையும் குஜராத் தவறவிடுவதில்லை. ஆனால் பிரம்மாண்டமான அதிவிரைவுச் சாலைகள், பெரும் தொழிற்சலைகள் மற்றும் பொருளாதார மண்டலங்களுக்குப் பின்னே, குஜராத்துக்கு வேறு ஒரு முகம் உள்ளது.  தீவிரமான ஊட்டச்சத்து குறைபாடும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியச் சீர்கேடும் குஜராத் எதிர்கொள்ளும் இரண்டு கடுமையான சவால்கள் என்று சமூகப் பொருளாதார குறியீட்டெண்கள் தெரிவிக்கின்றன. பிற மாநிலங்களில் இந்தப் பிரச்சினைகள் பழங்குடியின பிராந்தியங்களுடையதாக உள்ள நிலையில், தலைநகர் அகமதாபாத் உள்ளிட்டு குஜராத் முழுவதும் இப்பிரச்சினைகள் நிலவுகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட 2014-2015ம் ஆண்டுக்கான சமூகப் பொருளாதார ஆய்வின் படி, குஜராத்தில் உள்ள பானாஸ்கந்தா, பதான், நவ்சாரி, ஜூனாகட் மற்றும் கேடா உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் 46 தாலுக்காக்களில் 1.97 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், 24,762 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இது தவிற, அங்கன்வாடிகளால் பராமரிக்கப்படும் 43 லட்சம் குழந்தைகளில் 1.47 லட்சம் குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2013ம் ஆன்டு அக்டோபர் மாதம் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை ஒன்று, குஜராத்தின் சுகாதார நிலை படுகேவலமாக உள்ளதென்று சுட்டிக்காட்டியுள்ளது. சி.ஏ.ஜி அறிக்கையின் படி,  ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தேசிய சராசரியான 3.33 சதவீதத்தை விட, குஜராத்தில் மிக அதிக அளவாக சுமார் 4.56 சதவீத குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்றில் ஒரு குழந்தை எடைகுறைவாக உள்ள குஜராத் அரசு, போதுமான அங்கன்வாடிகளை அமைக்காததால் சுமார் 1.87 கோடி மக்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவையைப் (integrated child development services) பெற முடியாத நிலை உள்ளது. அகமதாபாத்தில் மட்டும் சுமார் 85,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘வளர்ச்சித் திட்ட’ அலைகளின் மேல் பயணித்துக் கொண்டிருந்த குஜராத் மாநிலத்தை அதிர்ச்சி அலைகளுக்குள் தள்ளியது சி.ஏ.ஜி அறிக்கை. ஆனால், குஜராத் மாநில அரசோ இவையெதையும் ஒப்புக் கொள்ளவில்லை. ஜூன் 2013ல் தீவிர எடைக்குறைவுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1.61 சதவீதமாக குறைந்து விட்டதாகவும், 2007 மார்ச் முதல் 2013 மார்ச் வரையிலான காலப்பகுதியில் எடுத்த பல்வேறு முன்முயற்சிகளின் விளைவாக எடைக்குறைவுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 73.04 சதவீதத்திலிருந்து 25.09 சதவீதமாக குறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது குஜராத் அரசு.

சுமார் 66 சதவீத குழந்தைகள் எடைகுறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த சி.ஏ.ஜியின் அறிக்கைக்கு பதிலளித்த மாநில அதிகாரிகள், அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து இது 26 சதவீதமாக 2013-ம் ஆண்டு குறைந்து விட்டது என்றனர். மேலும், 2012-13 காலகட்டத்தில் சுமார் நான்கு லட்சம் குழந்தைகள் “ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து விடுதலையடைந்து”  விட்டதாக மாநில அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டது.

FL11_AHMEDABAD
கிடைத்த உணவைக் கொறித்துவிட்டு சாலையோரம் தேசியக் கொடி விற்கும் அகமதாபாத் சிறுவன்.  நன்றி : FRONTLINE

“குஜராத் அரசு இந்தப் பிரச்சினையை மொத்தமாக மூடி மறைக்கப் பார்க்கிறது. ஆனால், எவ்வளவு நாட்களுக்கு அவர்களால் மறைக்க முடியும்? இதெல்லாம் அப்பட்டமான உண்மைகள். இதில் அவர்களால் மோசடி செய்ய முடியாது. அவர்கள் பிரச்சினையையே மறைக்க முயல்வதால், தீர்வு காணவும் மறுக்கிறார்கள்” என்கிறார் மனித உரிமைச் செயல்பாட்டாளரும், பழங்குடியினரிடையே செயல்பட்டு வருபவருமான ரோஹித் பிரஜாபதி.

ஏழைகளையும், ஒடுக்கப்பட்டவர்களையும் குஜராத் அரசு முற்றாக புறக்கணிக்கிறது என்கிறார் ரோஹித் பிரஜாபதி. “குஜராத்தின் வளர்ச்சிக் கொள்கைகளில் இருந்து தான் இந்த மாதிரியான பிரச்சினைகளே முளையிடுகின்றன. சமூகத்தில் மேல்தட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே வளர்ச்சி. சாதாரண மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகின்றனர். ஆனால், இந்தப் புறக்கணிப்பின் எதிர்விளைவுகள் தவிர்க்கவியலாமல் இது போன்ற பிரச்சினைகளாக மேலே எழுந்து வருகின்றன. நாங்கள் இந்த மாநிலம் நெடுக ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்து பல பத்தாண்டுகளாக போராடி வருகிறோம். அவர்கள் உண்மையை அப்படியே மூடி மறைக்கிறார்கள்” என்கிறார் ரோஹித் பிரஜாபதி.

ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மிகக் குறைந்த அளவிலேயே மாநில அரசிடம் விவரங்கள் உள்ளன. சில சுயேச்சையான நிறுவனங்கள் பழங்குடியின பகுதிகளில் நடத்திய ஆய்வின் முடிவுகள் அச்சுறுத்தும் விவரங்களைக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் உரிமையும் நீங்களும் (Child Rights and you – CRY) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2014-ம் ஆண்டு நடத்திய ஆய்வு ஒன்று, ஏழு மாதத்திலிருந்து 2 வயது வரையிலான குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டிய அங்கன்வாடிகளின் மிக மோசமான நிலையே பழங்குடியின மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு நிலவ மிக முக்கியமான காரணம் என்கிறது.

அங்கன்வாடி ஊழியர்கள் எப்போதாவது வருவார்கள் – அல்லது வர மாட்டார்கள். மேலும் மதிய உணவுத் திட்டம் பழங்குடியின குழந்தைகளைச் சென்று சேரவில்லை என்றும் மேற்படி ஆய்வு தெரிவிக்கின்றது. இதோடு கூட, பொது சுகாதார கட்டமைப்பே கிட்டத்தட்ட இல்லாமல் இருப்பதும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு காரணமாகிறது.

சுமார் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 249 அங்கன்வாடிகளை ஆய்வு செய்து CRY வெளியிட்ட முடிவுகள் சில இருண்ட உண்மைகளை முன்வைக்கிறது. சுமார் 30 சதவீத அங்கன்வாடிகளில் சமைப்பதற்கு போதுமான பாத்திரங்களே இல்லை. சுமார் 65 சதவீத அங்கன்வாடிகளில் கழிவறை வசதிகள் இல்லை.

ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும் அங்கன்வாடிகளின் நிலைமைக்கும் நேரடித் தொடர்புள்ளது என்று மனித உரிமைச் செயல்பாட்டளர்களும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். சுமார் 75,480 அங்கன்வாடி மையங்கள் தேவைப்படும் இடத்தில்,  52,137 அங்கன்வாடிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டு வெறும் 50,225 அங்கன்வாடிகளே செயல்படுகின்றன என்கிறது சி.ஏ.ஜி வெளியிட்ட அறிக்கை.

ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பழங்குடியின பிரதேசங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டைக் களைய சில நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக குஜராத் அரசு அறிவித்தது. குழந்தைகளுக்கு இரும்புச் சத்து பானங்களை வழங்க உள்ளதாகவும் மருத்துவ முகாம்களை நடத்தவுள்ளதாகவும் கடந்த மே 2016ல் அப்போதைய முதல்வர் ஆனந்திபென் பட்டேல் அறிவித்தார். மேலும், அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு வாரம் ஐந்து நாட்கள் பால் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இவையெல்லாம் வெறும் சில்லறையான முன்முயற்சிகள் தாம். வேலையின்மை, நிலவுரிமை, பொது விநியோகத் திட்டத்தை முறைப்படுத்துவது, ஊரக சுகாதார நிலையை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காதவரை ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு எந்தத் தீர்வும் காண முடியாது என்கிறார் ரோஹித் பிரஜாபதி.

மூலக் கட்டுரை – Gujarat : Piecemeal initiatives
நன்றி : FRONTLINE
தமிழாக்கம்: ஹசரத் மஹல்

பா.ஜ.க தலைவர்கள் : 120 கோடியிலே 100 பேர் செத்தால் என்ன ?

2
atm-crowd

“சிலவற்றை அடைய, சிலவற்றை இழந்து தான் ஆக வேண்டும்” என்கிறார் பாரதிய ஜனதாவின் பாராளுமன்ற உறுப்பினர் கோபால் ஷெட்டி. வங்கிகள் முன்பும், ஏ.டி.எம் இயந்திரங்கள் முன்பும் வரிசையில் நிற்கும் மக்கள் இறந்து போவதைக் குறித்து கேள்வியெழுப்பிய போது, “ஒவ்வொரு ஆண்டும் இரயில்வே தண்டவாளங்களில் 3500 பேர் சாகிறார்கள். ஐந்து லட்சம் மக்கள் சாலை விபத்தில் சாகிறார்கள். இன்னும் நிறைய பேர் தீவிரவாத தாக்குதல்களிலும் வேறு காரணங்களாலும் இறந்து போகிறார்கள். எவரும் இதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எஸ்.வி சேகர், “128 கோடி மக்களில் 25 பேர் தானே இறந்துள்ளனர்” என்று கொக்கரித்துள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்களிடம் பேசும் போது, வங்கிகளின் முன் வரிசைகட்டி நிற்பவர்கள் எல்லாம் ‘அசுர சக்திகள்’ எனவும், கள்ளப் பணத்தை மாற்றிச் செல்ல மக்களைப் போல் மாறுவேடமிட்டு வந்திருப்பார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதாவின் ஆதரவு பெற்ற கருப்புப் பண முதலையான பாபா ராம்தேவ், எதிர்கட்சிகள் திட்டமிட்டு ஏ.டி.எம் இயந்திரங்களின் முன்னும், வங்கிகளின் முன்னும் மக்களை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

atm-crowd chennaiதங்களுடைய அன்றாடத் தேவைகளுக்காக தாம் உழைத்துச் சம்பாதித்த பணத்தை எடுக்க வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களின் முன் நிற்கும் மக்களை கருப்புப் பணத்தை மாற்ற வந்தவர்கள் என இழிவு படுத்துகிறார் பிரதமர் மோடி. ஜப்பான் சுற்றுப் பயணத்தின் போது இது குறித்து உரையாற்றிய மோடி, “காங்கிரசு 25 பைசா நாணயங்களைச் செல்லாது என்று அறிவித்த போது நாங்கள் ஏதாவது கேட்டோமா?” என சில்லறைத்தனமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். மேலும், தனது அறிவிப்பு வெளியானதற்கு மறுநாள் திருமணம் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தவர்கள் திகைத்துப் போய் விட்டார்களாக்கும் என்று தனது கைகளால் சைகை செய்து நீட்டி முழக்கிய போது ஜப்பானின் கோபே நகரில் அவரது பேச்சைக் கேட்க கூடியிருந்த இந்தியர்கள் கைகொட்டிச் சிரித்தனர்.

மோடி அறிவித்த பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை துன்பமாகத் துவங்கி மெல்ல மெல்ல வரலாறு காணாத பொருளாதாரப் பேரிடரை நோக்கி முன்னேறி வருகின்றது. கருப்புப் பொருளாதாரத்தின் இயக்கம் மற்றும் அதன் விளை பொருளான கருப்புப் பணத்துக்கும் இந்த நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள பொருளாதார மேதமை கூட அவசியமில்லை – ரஜினி துவங்கி கவுதம் அதானி வரை யாரெல்லாம் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளார்கள் என்பதைக் கவனித்தாலே விளங்கும். என்றாலும் இந்நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்து விடுவதாகச் சவடால் அடித்து வரும் பாரதிய ஜனதா கும்பல், மக்களின் வாழ்க்கையை மீளாத துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருப்புப் பண ஒழிப்பு என்பதே மோசடி என்பது ஒருபுறமிருக்க, இந்த நடவடிக்கைகளின் விளைவாக மக்கள் படும் துன்ப துயரங்களும் அதைக் குறித்து இந்துத்துவ கும்பலுக்கு இருக்கும் அலட்சியமும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு ஆபாசத்தின் எல்லைகளைத் தாண்டியுள்ளது. பணம் எடுக்கச் சென்று அதிர்ச்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் இதுவரை 50-ஐத் தொட்டுள்ளது. மோடியின் அறிவிப்பு வெளியானவுடன் கருப்புப் பண பேர்வழிகள் அனைவரும் மாற்று உடை கூட இல்லாமல், சோற்றுக்கும் வழியின்றி வங்கிகளின் முன் பராரிகளாக நிற்கப் போகிறார்கள் எனக் கனவு கண்ட நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த கணிசமானவர்கள், பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

ஆனால், அவர்களது இன்பக் கிளுகிளுப்பு ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதாக சொல்லப்படும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் மோடியின் அறிவிப்பு வெளியாகி ஒருவாரம் கழித்த நிலையிலும் இன்னமும் புழக்கத்திற்கு வரவில்லை. சுழற்சியில் இருந்த ரூபாய் நோட்டுக்களில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு மட்டும் சுமார் 84%. 10, 20, 50 மற்றும் 100 ரூபாய்த் தாள்கள் மீதமுள்ள 16 சதவீத மதிப்புள்ளவைகள். இந்நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் கூட சில்லறையாக மாற்ற முடியாமல் எதார்த்தத்தில் செல்லாக்காசாகி உள்ளது. மேலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 மற்றும் 500 ரூபாய்த் தாள்களைக் கையாள்வதற்கு ஏதுவாக வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களை சீரமைக்க வேண்டிய பணியும் முழுமையாக நிறைவேறவில்லை – அவ்வாறு ஏ.டி.எம் இயந்திரங்களை முழுமையாக மறுசீரமைக்க சுமார் 30லிருந்து 60 நாட்களாகும் என பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Modi Checkmate
கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு என மீம் போட்டு பீற்றினர் மோடி விசுவாசிகள்

இதற்கிடையே பழைய நோட்டுக்களை மாற்றிக் கொண்டவர்களில் பலரும் தங்களது அத்தியாவசிய செலவுகளைக் கூட சுருக்கிக் கொண்டு கையிலிருக்கும் 100 ரூபாய்த் தாள்களை சேமிக்கத் துவங்கியுள்ளனர். இந்தப் போக்கின் விளைவாக 100 ரூபாய்த் தாள்களின் சுழற்சியும் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது. வங்கிகளில் நேரடியாகச் சென்று பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள ஏற்கனவே நிர்ணயித்திருந்த 4,500 ரூபாய் என்கிற வரம்பை 2,000 ரூபாயாக குறைப்பதாக அறிவித்துள்ள அரசு, ஒருவரே மீண்டும் மீண்டும் வந்து பணம் மாற்றுவதைத் தடுக்க விரலில் அழியாத அடையாள மை வைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. மக்கள் நியாயமாக உழைத்து சம்பாதித்த பணத்தைக் கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு நெட்டித் தள்ளியிருக்கும் மோடி, இன்னொரு பக்கம் வங்கிகளில் சுமார் 7000 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவையாக உள்ள முதலாளிகளின் கடன்களை வாராக் கடனாக அறிவித்து கைகழுவியுள்ளது.

இதற்கிடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய்த் தாள்கள் சாயம் போவதும் தெரிய வந்துள்ளது. இதற்கு பதில் அளித்த மத்திய நிதித் துறைச் செயலாளர் சக்திகந்ததாஸ், சாயம் போனால் கள்ள நோட்டுக்கள் என்றும் சாயம் போகாவிட்டால் நல்ல நோட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி உடனேயே கள்ள நோட்டுக்களை வெளியாகிவிட்டதை இவர்கள் ஒப்புக்கொள்கிறார்களோ என்னமோ! துவக்கத்தில் அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து வந்த படித்த நடுத்தர வர்க்கத்தினர், கையில் காசின்றிக் குடல் காய்ந்து போன நிலையில் அரசின் கோமாளித்தனங்கள் ஒவ்வொன்றாக வெளியாகத் துவங்கியதை அடுத்து நொந்து போயுள்ளார்கள். பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து சிறு மற்றும் நடுத்தர வர்த்தகப் பிரிவில் சுமார் 25 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders).

தினசரி 14,000 கோடிகள் புரளும் சிறு வர்த்தகச் சந்தையில் சுமார் 40 சதவீதம் வர்த்தகர்களுக்கிடையிலான பரிவர்த்தனையாகவும், 60 சதவீதம் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனையாகவும் உள்ளது. மோடியின் அறிவிப்பிற்குப் பின் வர்த்தகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும், பணத் தட்டுப்பாட்டின் விளைவாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

தனது வாக்கு வங்கியில் கணிசமான சதவீதம் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் ஆத்திரம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை உணர்ந்த மோடி, கோவாவில் (ஜப்பானில் இருந்து திரும்பிய பின்) உரையாற்றும் போது இந்நடவடிக்கயின் விளைவாக தனது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டாலும் பின் வாங்கப் போவதில்லை என்றும், நாட்டு நலனுக்காக மக்கள் மேலும் சிறிது காலம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உணர்ச்சிகரமாகப் பேசி முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.

மோடி பேசிய போது தெறித்த எச்சில் காய்வதற்குள் கர்நாடக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டி தனது மகளுக்கு 500 கோடியில் கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளார்.

janardhan wedding 3
500 கோடி செலவில் ஜனார்தன் ரெட்டி வீட்டு ஆடம்பரத் திருமணம்

“அது தான் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 22 கோடி இந்தியர்களுக்கு வங்கிக் கணக்குகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோமே? மடியில் கனமில்லாதவர்கள் தங்களது பணத்தை வங்கியில் கொண்டு போய் மாற்றிக் கொள்ள வேண்டியது தானே? நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு நாளுக்கு எத்தனை ஆயிரங்கள் செலவாகி விடப்போகிறது? நாங்கள் தான் ஏ.டி.எம்மில் நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் எடுக்க வகை செய்யப்பட்டுள்ளதே?” என்றெல்லாம் எகத்தாளமாய்க் கொக்கரிக்கின்றனர் இணைய இந்துத்துவ பீரங்கிகள்.

ஆனால், மொத்த இந்தியர்களில் 74 சதவீதம் பேரே கல்வியறிவு பெற்றவர்களாகவும் – அதிலும் வெறும் 40 சதவீதம் பேரே ஒரு படிவத்தைப் படித்துப் புரிந்து கொண்டு அதை நிரப்பும் அளவுக்கு கல்வியறிவு கொண்டவர்கள் என்பதைக் குறித்து இந்த இணைய மொண்ணைகள் வாய் திறப்பதில்லை. மேலும், கிராமப்புற மக்களில் வெறும் 6 சதவீதம் பேருக்குத் தான் ஏ.டி.எம் இயந்திரங்களை இயக்கும் அறிவு உள்ளது எனத் தெரிவிக்கிறது People research on India’s consumer economy (PRICE) என்ற நிறுவனத்தின் ஆய்வு ஒன்று. மேலும், ஊரகப் பகுதிகளில் போதுமான அளவுக்கு வங்கி வலைப்பின்னல் இல்லாத நிலையில், விவசாயிகளும் கிராமப் புற மக்களும் அடைந்துள்ள துயரங்களைச் சொல்லி மாளாது.

பொதுவாகவே இந்துத்துவ பாசிஸ்டுகள் பிறருக்கு துன்பம் வரவழைத்து அதிலிருந்து இன்பம் காணும் சாடிஸ்டுகள் என்பது நமக்குத் தெரியும் – தற்போது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில் பிறரின் துயரங்களில் மகிழ்ச்சி காணும் ஷாதென்ஃபராய்தெ (Schadenfreude) என்கிற மனநோயால் பீடிக்கப்பட்டவர்களைப் போல் மக்கள் மேல் ஒவ்வொரு நாளும் விதவிதமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். வரலாற்று காணாத வக்கிரங்களை மக்கள் மேல் காவி கும்பல் ஏவி விட்டுள்ள நிலையில், “எல்லையிலே இராணுவ வீரன் நிற்கையிலே.. ஏ.டி.எம் முன் வரிசையில் நிற்க உங்களுக்கு என்ன கேடு?” என்பது போன்ற ஆபாச நகைச்சுவைகளை உற்பத்தி செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

– முகில்

சமூக வலைத்தளங்களில் சாமியாடும் மோடி பக்தாஸ் !

2
modi-fan

பெரு முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காக மோடி அறிவித்த கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போயிருக்கின்றனர். அன்றாட வேலைகளை விட்டுவிட்டு வங்கிக்கு அலையும் இவர்களுக்கு இந்த செல்லாத நோட்டு தோற்றுவித்திருக்கும் துன்பங்கள் அளவிடமுடியாதவை! அதையே எக்காளம் செய்கின்றார்கள், மோடியை ஆதரிக்கும் நபர்கள்! பாசிச மோடிக்கு சற்றும் குறைவில்லாத சிந்னையை இவர்களும்  கொண்டிருக்கிறார்கள். சாதாரண மக்கள் மீதான இவர்களின் வன்மம்தான் முதலாளிகள் மீதான மோடியின் பக்தியை நியாயப்படுத்துகிறது.

– வினவு

Vijay Elumalai

சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லீ குவான் யூ. போல இந்தியாவில் மோடி பிறந்துள்ளார் என சிங்கப்பூர் நாளிதழ் புகழாரம். ஊர் உலகமும் மோடியை பாராட்டுது. இங்கே உள்ள கூமுட்டை முண்டம் மோடியை தூற்றுது. கேட்டால்…. எங்களை பேங்க் வாசலில் காக்க வைத்து விட்டார் என்கிறார்கள்.
எவனோ ஒரு நடிகன் நடித்த படத்திற்கு டிக்கெட் வாங்க ராத்திரி பகலாக தியேட்டர் வாசலில் காத்தி௫ப்பிங்க.
யாரோ ஒரு தலைவர் வ௫கிறார் என்பதற்காக கொழுத்துற வெயில்ல குவார்ட்ட௫க்கும் பிரியாணி க்கு காத்து௫ப்பிங்க. கிரிக்கெட் என்றால் பைத்தியமாக ஸ்டேடியம் முன்பாக காத்தி௫ப்பிங்க ஆனால் நாடு முன்னேற இரண்டெ௫ நாள் வங்கி வாசலில் காத்தி௫க்க மாட்டீங்க?
நாட்டிற்காக இந்த சிறிய சிரமத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாதவன். இந்த நாட்டில் இ௫க்க தகுதியே இல்லாதவன்.

?மோடி ஜீ…??Baba Ramdev

Muthu Siva

“ஹலோ நான் சாமான்யன் பேசுகிறேன்” அப்டின்னு இந்நேரம் ஒரு உருக்கமான கடிதம் வந்துருக்கனுமே..!!!

பாக்கிய நாதன்

எல்லையில் 24*7 மணிநேரம் துப்பாக்கியைத் தூக்கி கொண்டு நிற்கிறார்கள் நமது நாட்டினை பாதுகாப்பதற்காக ஆனால்,
இங்கே ஒரு கூட்டம் இரண்டு மணி நேரம் கியூவில் நிற்க பொலம்பித் தள்ளுராங்க..ஏண்டா நாட்டோட பொருளாதார வளர்ச்சிக்காக ஒரு ரெண்டு மணி நேரம் கியூவுல நிக்க மாட்டிங்களாடா ?
த்தா எவானாவது கருப்பு பணம் எங்க ? கள்ள நோட்ட ஒழிச்சிங்களானு கேட்டு இந்த பக்கமா வந்துராதீங்க வாயிலயே வெட்டுவேன் ..

 

Haran PrasannaKavarimaan

இரவு பகலாய் எல்லையில் பணிபுரியும் ராணுவத்தினர், மற்றும் காவல்துறை பண மாற்ற அவஸ்தைப்படும் நாமும்…
இதுவும் ஒரு தேசத்தொண்டு! ஜெய்ஹிந்த்

கார்த்திக் முத்தரையர் புதுக்கோட்டை

தயவு செய்து வருவாய்க்கு அதிகமாக வைத்திருக்கும் பணத்தை அண்டை மாநிலத்தில் உள்ள கோவில் உண்டியல்களில் செலுத்தாதீர்கள் அப்படி செலுத்தினால் அந்த மாநிலம் தான் வளர்ச்சி அடையும் , எனவே அப்படி உண்டியலில் செலுத்த விரும்பினால் தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் உள்ள உண்டியலில் செலுத்தினால் தமிழகம் வளர்ச்சி அடையும் வல்லரசாக மாறும்…. இது உண்மையென்றால் அதிகம் பகிரவும்…..
இப்படிக்கு,
மக்கள் நலன் கருதுவோர்,
ஜெய்ஹிந்த்…..

பாக்கிய நாதன்

அளவுக்கு அதிகமா பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு யோசனை:
திருப்பதி கோவில் உண்டியல் ல போட்டுருங்கடா கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும்…
( அது ஏன் திருப்பதில போட சொல்ரேன்னு தெரிஞ்சவன் பிஸ்தா )

AcuHealer Krishnan

வங்கியிலிருந்து புதிதாக வாங்கிய இரண்டாயிரம் ரூபாய்த் தாளோடு நண்பர் ஒருவர் வந்து என்னை சந்தித்தார். எங்கே அந்த ரூபாய் நோட்டை காண்பியுங்கள் என்று ஆர்வமிகுதியில் கேட்கவே சிரித்துக்கொண்டே தந்தார். கையில் வந்த பளபளா நோட்டை பார்த்ததும் எனக்குள் ஒரு பூரிப்பு. ” இருங்க என் பாக்கெட் ல வச்சிட்டுத் தர்றேன் ” என சொல்லி பாக்கெட்டுக்குள் வைத்ததும் திடீரென பட பட வென ஒரு சத்தம். நான் வெலவெலத்துப்போய் நண்பரை பயத்துடன் பார்க்க அவரோ குறும்புப் புன்னகை பூத்தபடியே என்னை பார்த்தார்.

பிறகு தான் புது 2000 ரூபாய் நோட்டு பற்றி என்னிடம் விளக்கினார். அதாவது அந்த நோட்டை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துப் பார்க்கமுடியும். ஆனால் அதற்கு சம்பந்தமில்லாத யாராவது அந்த நோட்டை பாக்கெட், மணிபர்சு அல்லது வீட்டிலோ வெளியிலோ வேறு எங்காவது வைத்தால் அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும். ஒருத்தர் எவ்வளவு நேரம் தான் கையிலேயே 2000 ரூபாய் நோட்டை வைத்திருக்க முடியும்?! எல்லாரும் சொல்வது போல இதுவொன்றும் நேனோ டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்டதல்ல. அதைவிட Advanced நியூரோமார்ஃபிக் டெக்னாலஜி மூலமே இது சாத்தியம் ஆகும். உலகின் வேறெந்த நாட்டிலும் இதுபோன்ற நோட்டு தயாரிக்கப்படவில்லை. இந்தியாவில் தான் முதன்முறையாக இது செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த மூன்றாவது மாதத்திலேயே இது தொடர்பாக ஒரு உயர் தொழில்நுட்ப குழுவை அமைத்து வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். தனது வெளிநாட்டு பயணங்களின் போதும் அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இதுபற்றி விவாதித்து கடைசியாக இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் …!

நண்பர் சொன்ன தகவல்களைக் கேட்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே போனேன். ஒரே நாளில் ஒட்டுமொத்த தேசத்தையே கறுப்புப் பணமற்ற தேசமாக மாற்றிக்காட்டிய பிரதமர் மோடி என் மனதிற்குள் மிக உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார். நான் பிறந்தது முதலே என்னை பலரும் ராசியில்லாதவன், அதிர்ஷ்டம் இல்லாத ஆள், போன ஜென்மத்தில் பாவம் செய்தவன் என்றெல்லாம் கேலி செய்வதுண்டு. ஆனால் இன்று அவர்களை தேடிப்பிடித்து சொல்வேன் : இப்படிப்பட்ட ஒரு மனிதர் எனக்குப் பிரதமராக கிடைத்திருக்கிறார் என்றால் நான் எவ்வளவு அதிர்ஷ்டமும் புண்ணியமும் செய்திருக்கவேண்டும்?!
#ஜெய்ஹிந்த்

Omkar BalajiMilton Prabhu

ஓசியா மிக்சி,க்ரைன்டர் ,டீவி வாங்கும்போது பத்துநாள் ஆனாலும் பொழப்ப கெடுத்து கால்கடுக்க நிப்பானுகளாம்…. என்னமோ இருக்க காச அடுத்தவன் அக்கோன்ட்ல போடுறமாதிரி ஓவராதான் சலிச்சுகிறானுவ…. நோகமா நொங்கு துன்னமுமாம் விட்டா அதையும் மோடிதான் ஊட்டி விடனும்னுகூட அடம்புடிப்பானுவ……. திருந்துங்கையா டீ வாங்கி தாறோம்…..

Boopathy Murugesh

எங்க வீட்ல எல்லோரும் அமெரிக்காலயா இருக்காங்க.. நானும் அடுத்த வாரம் வந்துருவேன்..
சரியா வரி கட்டுற யாரும் இதுக்கு பயப்பட அவசியமே இல்ல.. ஏன் அக்கவுண்ட்ல பணத்தை போட்டு கார்டை பயன்படுத்தலாமே? அமெரிக்காவில் கூட அப்படி தான் 😛
ஒருவேளை மோடி இதை செய்யலைனா கருப்பு பணத்துக்கு எதிரா ஒன்னுமே செய்யலைன்னு சொல்லுவிங்க..

Boopathy Murugesh

நான் அமெரிக்காவிலிருந்து டாலரில் அனுப்ப முடியும் எனும்போது நீங்க பெங்களூரிலிருந்து ரூபாய் டிரான்ஸ்பர் பண்ண முடியல என்பதைல்லாம் போய் ராகுல் காந்தி மாதிரி எவன்ட்டயாவது சொல்லுங்க..
பெங்களூரிலிருந்து கார்டை ஊருக்கு குடுத்துவிட்டா போலீஸ் புடிச்சுருமா? இல்ல வீட்ல ஒருவரிடம் கூடவா அக்கவுண்ட் இல்ல? கார்டு இல்ல? உழைத்த பணத்தை பயன்படுத்த என்ன பயம்?

Saran Mass

ஆட்சிக்கு வந்தோமா ஹாயா சம்பாதிச்சோமா குடும்பத்தை கோபுரத்தில் வச்சோமா நாலு பேருக்கு ஜிங்க் ஜக் பண்ணிட்டு கட்டிங்க சுவிஸ்சில் போட்டோமா அடுத்த எலக்ஷன்ல ஜெயிச்சா மீண்டும் அதையே செஞ்சோமா அப்படி தோத்துட்டா எதாவது ஒரு தீவ வாங்கிட்டு அங்க செட்டில் ஆனோமானு இல்லாம ஒரே நாட்ட திருத்தரேன் மக்களுக்கு உழைக்கறேனுட்டு இருக்காரு இந்த மனுஷன்…

இப்ப பாரு ஒன்னுக்கு ஒழுங்கா போகத்தெரியாதவன் கூட உலக பொருளாதாரம் பேசிட்டு இருக்கான்…நாங்க பாட்டுக்கு நாளு ஜோக்கு நாளு கிளுகிளுப்பு படத்தில் ஆசம், சூப்பர்னு கமெண்ட்ட போட்டு நிம்மதியா இருந்திருப்போம்… இவனுங்க வாந்தி எடுப்பதையெல்லாம் பார்க்க வச்சிட்டீங்க

இதெல்லாம் தேவையா மோடிஜி? இவனுங்க ஆட்டு மந்தைங்க..

Modi supporters in Facebook (3)

Ravi Kumar Bjp Thengapattanam

வெளி நாட்டு பத்திரிகைகள் மோடிஜி அவர்களின் கறுப்பு பண ஒழிப்புக்கு பாராட்டு. ஆனால் இந்தியாவில் உள்ள சில தேச விரோத ஊடகங்கள், மீடியாக்கள் மோடிஜி க்கு எதிராக ஒப்பாரி வைக்கின்றன.

elva Mani with Ganesan

முதன் முறையாக மோடிஜி ராஜாங்கத்தை பாராட்டி மோடி பஞ்ச் என்ற தலைப்பில் பல்வேறு கட்டுரைகளை பதிப்பித்துள்ளது விகடன் இதழ். நிறை குறைகளை சுட்டி காண்பித்து தலையங்கமும் எழுதியுள்ளது. மோடிஜியின் பாதை இப்போதுதான் பலருக்கு புரிய ஆரம்பித்துள்ளது.

மரணவியாபாரி எனபொய்பரப்புரை செய்யபட்டஇந்த மாமனிதரின்
உண்மையான உழைப்பும், தேசபக்தியும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் நாள்விரைவில் வரும்.

Kettavan Da Amar

பேங்க்’ல #Wifi இலவசம்’ன்னு மட்டும்
ஒரு #அறிவிப்ப விடுங்க #மோடிஜி
#நீங்களே அடிச்சு #விரட்டுனாலும்
பேங்க விட்டு #கிளம்ப மாட்டோம்???

Selvar Durai

ஜெய் மோடி_ஜி ……..

கடந்த இரு வருடங்களாக இந்தியாவில் ஒரு இடத்திலும் குண்டு வெடிக்கவில்லையே !!  கடந்த 63 வருடங்களாக … எத்தனை பிரதம மந்திரி… எந்த எந்த நாட்டிற்கு சென்றார்கள்… என்ன .. என்ன .. கிழித்தார்கள் உங்களுக்கு தெரியுமா ?????

பொழுது விடிந்து பொழுது போனால் சீனாகாரன் குதிரையில் நமது எல்லை தாண்டி வந்து பெயிண்ட் அடிப்பதை நிறுத்தி விட்டானே ,,,, ஏன் ????? பன்னிஸ்தான்… எல்லையில் ஆட்டம் போடுவது குறைந்தது ஏன் ??? குட்டிபன்னி ..வங்காளம்… வாலை சுருட்டிக்கொண்டு… இருப்பது ஏன் ??

63 வருடங்களில் ரயில் நிலையங்கள் எப்படி இருந்தன… இப்பொழுது எப்படி உள்ளது தெரியுமா???? 63 வருடங்களில் ரயில்கள் தாமதமாக வருவதை தவிர வேறு என்ன தெரியும்… இப்பொழுது நேரப்படியும்… முன்னதாகவே வருவது தெரியுமா !!!! 3 வருடங்களாக முல்லாவின் ஒட்டு வாங்க கட்டப்பட்ட ராணுவத்தின் கை அவிழ்த்து விட்டபின்… மியன்மாரில் பூந்து வேட்டையாடியதை இதற்கு முன்பு கேட்டது உண்டா..!!!!!!!

பணம் உள்ளவனுக்குத்தான் வங்கி … ஏழைகளுக்கு ஏங்கி ….இது கடந்த 63 வருடங்களில் …. இன்று… கோடிக் கணக்கான ஏழைகள் வங்கி கணக்கு உள்ளது!!! முத்ரா திட்டம் மூலம் 10 லட்சம் வரை கடன் ..பெற்று உள்ளது தெரியுமா. ??? ஜீவன் ஜ்யோதி திட்டத்தில் 2 லட்சம் காப்பீட்டு தொகை கடந்த 63 வருடத்தில் எந்த பாமரனுக்கு கிடைத்ததா ????? சுரக்ஷா பீமா மூலம் வெறும் 12 ரூபாய்க்கு விபத்து காப்பிடு 2 லட்சம் கடந்த 63 வருடத்தில் எந்த பாமரனுக்காவது கிடைத்ததா…??? உஜ்வலா திட்டம் மூலம் 5 கோடி குடும்பகளுக்கு இலவச எரிவாயு திட்டம் கடந்த 63 வருடங்களில் எந்த ஏழைக்காவது கிடைத்ததா….????? கடந்த 63 வருடங்களில் கிடைக்காத 7000 கிராமங்களுக்கு மின் வசதி கிடைத்தது தெரியுமா?????

கடந்த 63 வருடங்களில் எந்த தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு சுய தொழில் செய்ய 10 கோடி ரூபாய்கள் கிடைத்ததா…????? கடந்த 63 வருடங்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு OROP எவனாவது கொடுத்தானா….இல்லை …மதித்தானா… ராணுவ வீரர்களை….

மோதி நாடு .. நாடா சுற்றுகிறாராம்…. சொல்ல வந்து விட்டாங்க … பன்னிகளும்… பாவாடைகளும்… வந்தேறிகளும்… டம்பளர்களும்.. .. 2017 வருடம் முதல் வெளி நாட்டில் சுற்றிய சுற்றலுக்கு வேலை வாய்ப்புகள் மலை போன்று வர உள்ளது… அப்ப தெரியும் மோதி … உலகம் சுற்றிய வாலிபனா என்று.. உங்க ஆயா வெளி நாட்டு காரனிடமும் … வெளிநாட்டு இந்தியர்களிடமும் 22,000 கோடி ரூபாய் பெற்றார்களே…. அதை கேட்க மாட்டீர்களே !!!!

நீங்கள் என்னநாட்டிற்கு செய்தீர்கள்….?? ஹெல்மெட் போட சொல்வதை கேட்டீர்களா…???? நோ பார்கிங் இல் தானே வண்டியை நிறுத்துவீர்கள் ????? ONE WAY இல் எதிராக எவ்வளவு வேகமாக வருவீர்கள் ????? எச்சில் துப்பாதே என்ற பலகை மறையும்படி எச்சில் துப்பும் நீங்கள் … கேள்வி கேட்க வந்து விட்டீர்கள் …!!

முதலில் நீங்கள் திருந்துங்க. அப்புறம் மோதியை குறை கூறலாம்…

ஜெய் ஹிந்த்… ஜெய் ஹிந்த்… ஜெய் ஹிந்த்..????

Modi supporters in Facebook (1)Venkat Boss

#மோடிஜி யின் அருமை தெரியாத வெகுசில நன்றிகெட்ட நாய்களின் கவனத்திற்கு!

மாபெரும் தலைவர் ஆகிறார் பிரதமர் மோடி…! பணப்புரட்சி பற்றி பேச ஐ நா அழைப்பு..! உலகம் முழுக்க பணப் புரட்சி..!! மாபெரும் தலைவர் ஆகிறார் நமது பிரதமர் மோடி..! கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது..! இந்திய மக்கள் முதலில் நிறைய இடர்பாடுகளைச் சந்தித்தாலும் பின்னர் புரிந்து கொண்டு அமோக ஆதரவை அளிக்க துவங்கி விட்டனர்..!

பாக். முன்னாள் அதிபர் முஷாரப் தனது பாராட்டுகளைக் கூறினார். ஆஸ்திரிரேலிய அரசும் பணபுரட்சியைத் துவங்கி விட்டது. உலக நாடுகளின் தலைவர்கள் மோடியை தொடர்பு கொண்டு இது எப்படி சாத்தியம் என்று விசாரித்தபடி இருக்கிறார்கள். இந்நிலையில் ஐநா சபை வரை எதிரொலித்தது மோடியின் பணப் புரட்சி..! இது குறித்து ஐநா சபையில் உரையாற்ற அழைப்பு விடுத்துவிட்டது..! அங்கு எழுச்சி மிகு உரையாற்ற தயாராகி விட்டார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி..!

சல்யூட் மோடி சாப்…!

Modi supporters in Facebook (1)
வெள்ளைக்காரணையே நடுத்தெருவில் நிற்கவைத்து மோடிஜி சாதனை!

Sulthan Dulkarunai

வெள்ளைகாரணைக் கூட நடுதெருவில் நிற்கவைத்து சாதனை மோடிஜி…

Krishna Dhasarathan

குஜிலிவாலுக்கும் மம்தா பேகத்திற்கும் கருப்பு கொடி காண்பித்த டெல்லி வியாபாரிகள். மோடிஜியின் கருப்பு பண ஒழிப்புக்கு எதிராக தர்ணா செய்ய வந்த குஜ்லிவாலுக்கும், மம்தா பேகத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தும், மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டும் கலக்கிய டெல்லி வியாபாரிகள். கலங்கிய எதிர் கட்சிகள்.

மோடிஜி.. நீங்க கலக்குங்க !!
நல்லவர்கள் எல்லாம் இனி உங்கள் பக்கம் !!

கே.வி.ஆர். திருவாடானை பாண்டியர்வம்சம் சேதுபதிசீமை

தற்போது , பாரத பிரதமர் மோடிஜி அவர்களை விமர்சிப்பவர்கள் எல்லாம் தேச விரோத கும்பலும் , கொள்ளை கும்பலும்தான்….
எவ்வளவோ கஷ்டங்களும் , துயரங்களும் இருந்தாலும் தேச பக்தர்களும் , ஏழைகளும் பிரதமர் மோடிஜி அவர்களை முழு மனதோடு பாராட்டுகிறார்கள் , புகழ்கிறார்கள் ..
R Kesava Raman Konar Singapore ·

மக்கள் எதற்காக எனக்கு வாக்களித்தார்களோ அதை
முடிக்காமல் நான் ஓய போவதில்லை.! “அடுத்த தேர்தலுக்காக வேலை செய்பவன் அல்ல நான் அடுத்த தலைமுறைக்காக வேலை செய்கிறேன்””இந்த முடிவால் எனக்கு என்ன நடந்தாலும் அஞ்ச போவதில்லை”இந்த நாளுக்காகவே எனது குடும்பத்தை தியாகம் செய்துள்ளேன்.!

Modi supporters in Facebook (2)Venky VenkyBoy with Palanivel Rajan and 34 others.

எங்களைபோல் வெளிநாட்டில் கஷ்டபட்டு உழைக்கிறவனுக்குதான் தெரியும் பணத்தின் அருமையும் மதிப்பும்…
நன்றி மோடிஜி… போட்டான்பாரு சீங்கப்பூர் பத்திரிகைல… சிங்கப்பூரை வளார்ச்சியின் உச்சத்திற்க்கே கொண்டு சென்று உலக நாடுகளை திகைக்க வைத்த மறைந்த சிங்கப்பூர் அதிபார் #லீ_குவான்….

இந்தியாவில் பிரதமார் மோடியாக மீண்டும் பிறந்துள்ளாார்.-சிங்கப்பூர் பத்திரிகை..

நல்லதெல்லாம் கண்ணுக்கும் படாதே ! —

வோடஃபோன் வரி ஏய்ப்புக்கு அருண் ஜெட்லி வக்காலத்து ! கேலிச்சித்திரம்

0

வரி பாக்கி வைத்திருப்போர் யாரும் தப்ப முடியாது – அருண் ஜெட்லி !

final vogafon revised(1)

மக்கள்கிட்ட மட்டும் ஸ்ட்ரிக்ட்டா பேசுரவங்கள தான் நாங்க எல்லா நாட்டுலயும் லீகல் அட்வைசரா வச்சுக்குவோம்.

குறிப்பு : வோடபோனின் வரி பாக்கி 2000 கோடி. அருண் ஜெட்லி தான் அதற்கு முன்னால் ஆலோசகர்.

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!

1

சோசலிசம்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு! பாட்டாளி வர்க்கத்தின் கலங்கரை விளக்கம்!!

communism-livesது நவம்பர் புரட்சி நூற்றாண்டின் துவக்கம். 1917, நவம்பர் 7 – உலகின் முதல் தொழிலாளிவர்க்க அரசு அமைந்த நாள்.

இது கலாச்சாரப் புரட்சியின் ஐம்பதாண்டு நிறைவு. மே, 1966-இல் தான் சோசலிசத்தை உள்ளிருந்தே கவிழ்க்கும் முதலாளித்துவ மீட்புக்கு எதிரான சீன கலாச்சாரப் புரட்சி தொடங்கியது.

இது நக்சல்பாரி எழுச்சியின் ஐம்பதாம் ஆண்டு. மே, 1967-இல்தான், திருத்தல்வாத கம்யூனிஸ்டு தலைமையின் நாடாளுமன்ற சரண்டைவுப் பாதைக்கு எதிரான போர்க்குரலாக நக்சல்பாரி உழவர் எழுச்சி தொடங்கியது.

இது கார்ல் மார்க்ஸின் பிறந்தநாளின் 200-வது ஆண்டு தொடக்கம். முதலாளித்துவத்தின் மரணத்தையும், தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் முன்னறிவித்த பேராசான் மார்க்ஸின் பிறந்த நாள் மே 5, 1818.

working-classஐம்பதாம் ஆண்டு, நூறாம் ஆண்டு போன்றவை ஒருங்கே அமையப் பெறுவது ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஆனால் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட நிகழ்வுகளும், அவற்றுக்கு இடையிலான உறவும் தற்செயலானவைகள் அல்ல. அவ்வகையில் இந்நான்கு நிகழ்வுகளும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தவை.

1917 ரசிய சோசலிசப் புரட்சி என்பது முதலாளித்துவம் முயன்றாலும் மறக்கவே முடியாத கெட்ட கனவு. மனித சமூகத்தை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதாகக் கூறி வந்த முதலாளித்துவ வர்க்கத்தை, அதிகாரத்திலிருந்து அகற்றியது மட்டுமல்ல, அது சமூகத்துக்குத் தேவைப்படாத வர்க்கம் என்பதையும் சமூக முன்னேற்றத்தின் தடைக்கல் என்பதையும் நடைமுறையில் நிரூபித்தார் நவம்பர் புரட்சியின் நாயகன் தோழர் லெனின்.

இன்று சோசலிசம் தோற்றுவிட்டதாக முதலாளித்துவம் தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொள்கிறது. இருப்பினும் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு – என ஒவ்வொரு துறையிலும் சோசலிசம் நிகழ்த்திய சாதனைகள் தொல்பொருட்களாகப் புதைந்து விடவில்லை. அவை பல்வேறு வடிவங்களில் உலகெங்குமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளாக உயிருடன் உலவுகின்றன.

november-7-marx-naxalbar-cultural-revolutionதொழிலாளிகளுக்கான பணி உத்திரவாதம், ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, பெண்களுக்கான உரிமைகள் – என சோசலிச ரசியா முன்னோக்கி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் முதலாளித்துவத்தின் மீது இடியென இறங்கியது. இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் தொழிலாளி வர்க்கம் பெற்றிருக்கும் பல உரிமைகள், அன்று தத்தம் நாடுகளில் சோசலிசப் புரட்சியைத் தடுக்கும் பொருட்டு முதலாளித்துவம் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கைகளே!

சோசலிசத்தின் தோல்வி குறித்து பெருங்கூச்சல் போடும் முதலாளி வர்க்கம், அதனைக் காட்டிலும் நெடிய வரலாறு கொண்ட தன்னுடைய தோல்வியைப் பேசுவதில்லை. சுதந்திரச் சந்தையின் இடத்தை ஏகபோகம் கைப்பற்றிக் கொண்டிருப்பதையும், ஜனநாயகம் மெல்ல மெல்ல பாசிசமாக உருமாறி வருவதையும், உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் முதலாளித்துவம் தவிப்பதையும், முதலாளித்துவத்தின் கருவறையிலேயே கிளர்ந்தெழும் மக்களின் போராட்டங்களையும் அது தனது தோல்வியாக கூறிக் கொள்வதில்லை.

ஆனால் ஒரு நூற்றாண்டுக்குள் சோசலிசம் தோற்றுவிட்டதாக தீர்ப்பு கூறுகிறது. மனித குலத்தின் வரலாற்றுடன் ஒப்பிடும்போது நூறு ஆண்டுகள் என்பது ஒரு நாளின் ஒரு மணித்துளி. பிறந்த முதல் ஐம்பது ஆண்டுகளில் வெற்றி மேல் வெற்றி ஈட்டிய சோசலிசம், பிந்தைய ஆண்டுகளில் சரிவையும் தோல்வியையும் சந்தித்தது உண்மைதான்.

ஒரு நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தை மனித உடலில் சோதித்துப் பார்த்து, அதன் விளைவுகள் – பக்க விளைவுகள் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொள்வதற்கே அறிவியலுக்கு, ஒரு மனிதனின் ஆயுட்காலமே தேவைப்படுகிறது. சோசலிசம் என்பது சமூக அறிவியல். இது மனித சமூகத்தின் வாழ்நிலை மீதான சோதனை; சிந்தனை மீதான சோதனை. சடப்பொருளின் மீதோ, தன்னிலை உணரவியலாத உயிர்ப்பொருளின் மீதோ நடத்தப்படும் இயற்கை விஞ்ஞான சோதனை அல்ல. சிந்திக்கின்ற மனிதர்கள் மீதான சோதனை. உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமையை ஒழிப்பது மட்டுமல்ல, அந்தக் கருத்தாக்கத்தையே சமூகத்தின் நினைவிலிருந்து அகற்றுவதற்கான சோதனை.

உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமை ஒழிக்கப்பட்டு விட்டாலும், சமூகத்தில் பரவியிருக்கும் முதலாளித்துவ வர்க்க சிந்தனை உடனே அகன்று விடுவதில்லை. அது கம்யூனிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் தலையெடுக்கிறது. மக்களுக்கு பதில் சொல்லும் கடமையிலிருந்து தவறிய அதிகாரத்துவப் போக்காக, திறமைக்கு முன்னுரிமையும் சலுகையும் அளித்து அதிகாரத்தில் அமர்த்த வேண்டுமென்றும் ‘’இலக்குதான் முக்கியம்; வழிமுறை முக்கியமல்ல’’ என்றும் கூறுகின்ற முதலாளித்துவ சிந்தனைப் போக்காக அது வெளிப்படுகிறது.

இத்தகைய போக்குகள் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்குள் தலையெடுக்குமானால், அதற்கு எதிராகப் போராட மக்களைக் களத்தில் இறக்க வேண்டும் – சோசலிச அரசே அமைந்தாலும் வர்க்கப் போராட்டம் தொடரத்தான் செய்யும் என்றார் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் தோழர் மாவோ. சொன்னது மட்டுமல்ல, , சோசலிசத்தின் கீழ் தொழிலாளி வர்க்கம் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு நடத்த வேண்டிய கலாச்சாரப் புரட்சியின் அறைகூவலாக, ‘’தலைமையகத்தைத் தகர்த்தெறியுங்கள்’’ என்ற அறைகூவலையும் விடுத்தார்.

இருப்பினும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியை முதலாளித்துவப் பாதையாளர்கள் கைப்பற்றிக் கொள்வதை சீனத் தொழிலாளி வர்க்கத்தால் தடுக்கவியலவில்லை. இன்று முதலாளித்துவ மீட்புக்குப் பின்னர் சமூகத்தில் அதிகரித்து வரும் சீரழிவுகளும் ஏற்றத்தாழ்வுகளும் சோசலிசம் குறித்த ஏக்கத்தை சீனமக்களிடம் தோற்றுவித்து வருவதை சீன முதலாளி வர்க்கத்தாலும் தடுக்கவியலவில்லை.

முதலாளித்துவ மீட்புக்கு எதிராக சீனத்தில் கலாச்சாரப் புரட்சி தொடங்கிய அதே காலத்தில், நாடாளுமன்ற நாற்காலி கம்யூனிஸ்டு இயக்கமாக மாறி விட்ட இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்திலும் ஒரு புரட்சி வெடித்தது. மே, 1967-இல் நக்சல்பரி கிராமத்தில் வெடித்தெழுந்த உழவர் புரட்சி, ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியின் உருவாக்கத்துக்கு வித்திட்டது. இடது விலகல் காரணமாக இ.பொ.க (மா-லெ) பின்னடைவைச் சந்தித்த போதிலும், இந்த அரசமைப்பைத் தூக்கியெறிய வேண்டுமென்று அது விடுத்த அறைகூவல், இன்றைக்கு முன்னிலும் பொருத்தமானதாகியிருக்கிறது. ஆளும் வர்க்கம் தோற்கடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். எனினும், அது ஆளும் அருகதை இழந்து தோற்றுவிட்டது. தன்னை அகற்றும் வலிமையை பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தினால், அது அதிகாரத்தில் நீடிக்கிறது.

உலக முதலாளி வர்க்கத்தின் நிலையும் அதுதான். முதலாளித்துவத்தின் முடிவை, அதனை ஒழித்துக் கட்ட வேண்டிய பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையை முன்னறிந்து சொன்ன மார்க்சும் மார்க்சியமும் செத்துவிட்டதாக முதலாளித்துவம் பிரச்சாரம் செய்யாத நாளில்லை. மார்க்சியம் சாகவில்லை என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்திருக்கிறதோ இல்லையோ, முதலாளி வர்க்கம் தெளிவாகப் புரிந்திருக்கிறது.

“இத்தனை நாடுகளில் தோல்வியடைந்த பின்னரும் சோசலிசம் என்ற இந்தக் கருதுகோள் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் தலையெடுப்பது ஏன்? சோசலிசம் என்பது மனிதனின் உள்ளுணர்விலேயே உறைந்திருக்கிறதா? ஒரு வேளை அது மனித மூளையின் அங்கமாக இருந்தால், அதனை சமாளித்து சுதந்திரச் சந்தையின் ஆதாயங்களை மனிதர்களுக்குப் புரிய வைப்பது எப்படி?” என்று ஆராய்ச்சி நடத்துகிறது அமெரிக்க முதலாளித்துவம். மூளையை அறுத்தெறிவதன் மூலம் சோசலிசக் கருத்தை வெல்ல முடியுமா என்று சிந்திக்கிறது.

சோசலிசம் பெறவிருக்கும் வெற்றியை இதைக்காட்டிலும் தெளிவாக யாரேனும் கூற இயலுமா? இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் மனித குலத்தின் சிந்தனையில் உயிர்வாழும் மார்க்ஸை அகற்ற முடியாத முதலாளித்துவத்தின் தோல்வியைத்தான் மேலும் தெளிவாக யாரேனும் விளக்க இயலுமா?

___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

கபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு ?

33

சாதா திருடர்கள் மாட்டும் போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு திருடனைப் பிடி என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல் கலாம் கனவு கண்ட, இயக்குநர் ஷங்கர் கிராபிக்ஸாக செய்து பாரத்த இந்தியக் குடிமகன் என்று மக்களும் அதை மெய்மறப்பார்கள், ஆதரிப்பார்கள்.

அம்பானி, அதானி, டாடா போன்றோர் ஸ்பெஷல் திருடர்கள் என்பதால் அவர்களெல்லாம் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தை இயக்குபவர்கள், வெளிப்படையாக பேசமாட்டார்கள். சினிமா உலகம் இன்னும் பழைய சென்டிமெண்டுகளில் முக்குளிப்பதால் அங்கே நட்சத்திரங்களுக்கு அறிவு கம்மி.

நவம்பர் 8 அறிவிப்பு வந்த உடனேயே, “புதிய இந்தியா பிறக்கட்டும், ஜெய் ஹிந்த்” என்று ரஜினி, மோடியின் கருப்புப் பண ஒழிப்பு போருக்கு முரசு கொட்டினார். முரட்டுக் காளையில் துவங்கி கபாலி வரை அவரது நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டதுதான். திரையரங்க டிக்கெட்டிலிருந்து அவர் வாங்கும் ஊதியம் வரை கருப்பே பிரதானம். இது ஊரறிந்த உண்மை என்றாலும் அம்பானியை உழைத்து முன்னேறியவராக நம்பும் உலகம் இவரையும் உழைத்து சம்பாதித்தவராக நம்புகிறது.

Vishal Raid
விசிடி கடையில் வீரம் காட்டும் விசால் சார் உங்க வருமான கணக்கையும் கொஞ்சம் காட்டுங்க

நடிகர் சங்கத் தலைவர் விஷால் இடையில் தானும் ஒரு ரவுடிதான் என்று காட்டுவதற்கு சிறு நகரங்களில் உள்ள சி.டி விற்கும் கடைகள், கேபிள் டி.வி அலுலகங்களுக்கு பவுன்சர்களுடன் படையெடுத்தார். தூங்கிக் கொண்டிருக்கும் ஊழியர்களை தட்டி எழுப்பி புதிய படம் எடு, யார் ஓனர் என்று அதிகார தோரணையுடன் மிரட்டுவார். பிறகு சி.டிக்களை அள்ளிக் கொண்டு செல்வார். அப்புறம் போலீசு வரும். தந்தியில் செய்தியும் வரும். இதெல்லாம் ஊழலுக்கு எதிரான போராட்டமாம். அதாவது திருட்டு வி.சி.டிக்கு எதிராக திரையுலகத்தை காப்பாற்ற போராடுகிறாராம்.

போகட்டும். நாமும் அதே போல விஷால், சூர்யா, ரஜினி, கமல் வீடுகளுக்கு சென்று வருமான வரி ரசீதை எடு, போன படத்துக்கு வாங்கிய தொகை எவ்வளவு, வங்கி புத்தகத்தை எடு, சொத்து பத்திரங்களை காட்டு என்று கேட்கலாம். அதை சரிபார்த்து போலீசுக்கும் போகலாம். அதற்கு நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் விஷால் ஏற்பாடு செய்ய வேண்டும். இது கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டம்.

கபாலிக்கு ரஜினி வாங்கியது எவ்வளவு என்று தாணுவுக்கு தெரியும். தாணுவோடு ஜாஸ் சினிமாஸ், சசிகலா இறுதியில் அப்பல்லோ இரண்டாம் தளத்தில் இருக்கும் கடவுளுக்கும் தெரியும். கடவுளுக்குத் தெரிந்த உண்மை மனிதர்களுக்கு எப்படி தெரியும்?

கபாலிக்கு முந்தைய படமான லிங்காவும் அப்படித்தான் கள்ளப் பண வழியில் வசூல் செய்ய முயன்றது. அதை எதிர்பார்த்து வினியோகஸ்தர்கள் 200 கோடி ரூபாய்க்கு வாங்கினாலும் படம் படுத்துவிட்டது. பிறகு அவர்கள் பிச்சை போராட்டம் நடத்த இருந்தது தனிக்கதை. அந்த லிங்கா திரைப்பட பாடல் விழாவில் இயக்குநர் அமீர், சேரன், வைரமுத்து போன்றோர் கலந்து கொண்டு முதுகு சொறிந்தனர்.

“காந்தியும் காமராஜரும் போல ரஜினி சார் இந்த நாட்டுக்கு நல்லது செய்யணும்” என்று இயக்குநர் சேரன் பேசினார். இதையே கொஞ்சம் விரிவுபடுத்தி அம்பேத்கரையும் சேர்த்தார்கள், கபாலி படத்தை கொண்டாடிய அறிஞர்கள். ஒரு வேளை கருப்பு – வெள்ளை இரண்டிலும் காந்தி படம் இருப்பதாலும், காமராஜர் போல இமேஜ் பார்க்காமல் நரை தாடியோடு வெளியே வருகிறார் என்பதாகவும் சேரனை நாம் புரிந்து கொள்ளலாம். எப்படியோ கருப்பில் வாங்கினாலும் காந்தி காந்திதானே?

இயக்குநர் அமீரோ அந்த விழாவில் ரஜினியை தமிழகத்தின் முதலமைச்சராக தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று பேசினார். அம்மாவின் கோபத்தை கிளப்பிவிட்டு அண்ணனை ஒரு வழி செய்யலாம் என்று உள்குத்தோடு பேசினாரோ தெரியவில்லை.

பரவாயில்லை, அதே அமீர் தற்போது கருப்பு பண விவகாரத்தில் ரஜினியை கேள்வி கேட்டிருக்கிறார். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசிய போது,

“இந்த நாட்டில் எத்தனை அக்கிரமங்கள் நடந்திருக்கும்போது, எதற்குமே வாய் திறக்காத ரஜினிகாந்த், ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு மட்டும் வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன? காரணம் நீண்ட கால கள்ள நட்பு. புதிய இந்தியா பிறந்துவிட்டது எனச் சொல்கிறார்.

புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று சொல்கிறீர்களே, பழைய இந்தியாவில் ‘கபாலி’ என்ற ஒரு படம் வெளியானதே அதற்கு திரையரங்க டிக்கெட் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனை செய்தார்களா? உங்களுடைய சம்பளம் என்ன? அந்த படத்தின் மொத்த வியாபாரம் என்ன? அத்தனையும் கணக்கில் வந்திருக்கிறது என யாராவது காட்ட முடியுமா?

Director_and_FEFSI_President_Ameer
இயக்குநர் அமீர்

இப்படி இருக்கும்போது கறுப்புப் பணத்தின் அளவு என்பது என்ன இங்கே? எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்? 150 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கக் கூடிய ரஜினி, கறுப்புப் பணத்தை ஒழிக்க ஆதரவு கொடுக்கிறார் என்று சொன்னால் என்ன அநியாயம் இது”

என்று பொங்கியிருக்கிறார்.

லிங்கா படத்திற்கு பிறகு ரஜினி ஏதும் தேதி தருவதாக ஏமாற்றினாரா தெரியவில்லை. இல்லை கபாலிக்கு முன்னர் ரஜினி கருப்பில் வாங்குவது தெரியாமல் இருந்தாரா ? அல்லது நீயே முழுத் திருடன் நீ போய் கருப்பு பண ஒழிப்பை ஆதரிக்கலாமா என்று கேட்டாரா?

எப்படியோ அவர் எந்த நோக்கில் கேட்டாலும் கேள்வியில் உண்மை இருக்கிறது. அதை பரபரப்புச் செய்திகளாக வெளியிட்ட ஊடகங்கள் யாவும் அதே கேள்வியை கேட்கவில்லை. மோடியின் அறிவிப்பு நாடகத்தை போற்றிய ஊடகங்கள், ரஜினி முதலான திரைமாந்தர்களின் கருப்புப் பணத்தை கேட்காதது அதிசயமல்ல. “ஊழலை ஒழிக்க வந்த மகாத்மா, பாகுபலி” என்று அட்டைப் படங்களில் போட்டுத் தாக்கும் குமுதம் இதழ் அதே பாகுபலியின் கருப்பு பக்கத்தையோ, கபாலியின் திருட்டுக் கணக்கையோ கண்டுகொள்ளாது.

ரஜினி நடிக்கும் எந்திரத்தின் இரண்டாம் பாகமான “2.0” படத்தின் “பர்ஸ்ட் லுக் விழா” மும்பையில் பிரம்மாண்டமாய் நடக்கிறதாம். இதை யூ டியூபி-லும், படத்தை தயாரிக்கும் லைக்கா கம்பெனியின் செயலி மூலம் நேரலையாகவும் பார்க்கலாமாம். நிகழ்ச்சியை பாலிவுட்டின் இயக்குநர்-தயாரிப்பாளர் கரண் ஜோகர் வழங்குகிறாராம். இதை தினமலர், தி இந்து, விகடன், தந்தி, தினமணி அனைத்தும் வெளியிட்டிருக்கின்றன. இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான் என அடைமொழியோடு சேர்த்து போடும் இந்த ஊடகங்கள் சூப்பர் ஸ்டார் என்றாலே கருப்புப் பணம்தான் என்பதை வெளியிடுவதில் என்ன தயக்கம்?

கபாலி என்ற அடித்தட்டு மக்களின் பெயரை பயன்படுத்தியதையும், அதை கபாலி எனும் சிவனின் பெயராக ரஜினி ஏற்றதையும் சாதனையாக அறிவித்த இயக்குநர் ரஞ்சித், கருப்புப் பணம் குறித்து என்ன சொல்வார்?

ஒருவேளை கருப்புப் பணம், வெள்ளைப் பணம் என்ற பெயர்கள் கருப்பாக இருக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும், இதே போன்று வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை இருண்ட காலம் என்று பழிக்கிறார்கள் என்று புதிய தத்துவங்களை அள்ளி விடலாம். இதை ஏற்கனவே நியூஸ் 18 காலை நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்திருக்கிறார். அதாவது கள்ளப் பணம், கள்ள நோட்டு என்று பேசுவதை இதற்கு முன்பாகவே அவர் பயன்படுத்துகிறாராம். பொலிட்டகலி கரெக்ட் என்று வார்த்தைகளை பிடித்து தொங்கும் இவர்கள் பொருட் பிழை குறித்து அஞ்சுவதில்லை.

rajini-stills
முரட்டுக் காளையில் துவங்கி கபாலி வரை அவரது நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டதுதான்.

துண்டு சீட்டில் ஒரு கோடி, 50 இலட்சம் என்று கருப்புப் பணத்தை வாங்கி உள்ளே சென்ற பச்சமுத்துவின் டி.வியில் வேலை பார்த்த ஜென்ராம் இப்போது நியூஸ் 18-ல் வேலை செய்கிறார். புதிய தலைமுறை எனும் லோக்கல் பெருச்சாளியின் டி.வியில் இருந்து ஆசிய அளவிலான டைனோசரின் டி.வியில் அமர்ந்து கொண்டு அவர் அம்பானிகளின் ஊழல், கருப்பு பணம் குறித்து வாயே திறக்க முடியாது. ஆகவே கருப்பு என்றால் மக்களை இழிவு படுத்துவது என்று வார்த்தைகளில் நல்லவராக போராடுகிறார். பாவம்,வாழ்த்துக்கள்!

கம்யூனிசம் மட்டுமல்ல விபச்சார பகுதி கூட சிவப்போடு அடையாளப்படுத்தப்படுகிறது. சாலை சந்திப்பு ஒழுங்கமைப்பில் கூட சிவப்பே அபாயத்திற்கும், வண்டிகள் நிற்பதற்கும் காட்டப்படுகிறது. இதனால் சிவப்பை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று நாம் வெட்டி ஆய்வில் இறங்கலாமா? உண்மையிலேயே கருப்பு பணம் என்பது அத்தகைய நிறவெறியில் இருந்து தோன்றியதாகவே இருக்கட்டும். முதலில் மோடி, அதானி, அம்பானிகளின் கருப்புப் பண கொள்ளையை ஒழித்து விட்டு பிறகு நாம் வார்த்தையை மாற்றலாம். மாறாக இதை மாபெரும் அறவியல் மீறலாக பேசுவது இறுதியில் கருப்புப் பண முதலாளிகளுக்கே ஆதாயமாக போகிறது.

கபாலி படத்திலும் அதுதான் நடந்தது. ஜெயா சசி கும்பலின் கொள்ளை மற்றும் பார்ப்பனியத்தின் பக்தனான ரஜினியை குறி வைத்து பேசுவதற்கு பதில் சாதி வெறியர்களுக்கு எதிரான அடையாளமாக அதுவும் பி.எம்.டபிள்யூ காரில் போகும் தாதாவாக ரஜினியை முன்னிறுத்தினார்கள். கபாலியை போராளி என்று போற்றுவதும், ரஜினியை ஒரு கருப்புப் பண நாயகன் என்று பேசாமல் அமைதி காப்பதும் வேறு வேறு அல்ல.

ரஜனியின் யோக்கியதையை விடுதலை சிறுத்தைகளின் கூட்டத்தில் கேள்வி கேட்டதன் மூலம் கபாலி படத்தில் சறுக்கி விழுந்த சிறுத்தைகளுக்கு கொஞ்சம் வெட்கம் வந்திருக்கலாம். எனினும் திருமாவளவனோ இல்லை இயக்குநர் ரஞ்சித்தோ இல்லை ஊடகங்களோ கேட்காத கேள்வியை தைரியமாக எழுப்பியிருக்கிறார் அமீர். அந்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள்!

ரஜினி போன்று பாலிவுட் முதலைகள் பலரும் மோடியை ஆதரித்திருக்கின்றனர். அங்கும் இதே நிலைதான். சினிமாவில் கருப்பு பணத்தை நம்பி வாழ்பவர்கள்தான் சினிமா கதைகளில் ஊழலை எதிர்த்து பேசுகிறார்கள். அப்படித்தான் அதானி குழுமத்தால் முன்னிறுத்தப்படும் மோடியும் கருப்புப் பண ஒழிப்பை பேசுகிறார்.

நட்சத்திரங்களின் கருப்பு பக்கத்தை மறைக்கும் கயமைத்தனத்தை ஒழிக்கும் வரை கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியாது.

வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !

11

மோடியின் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு  அல்ல – தோழர் மருதையன் உரை – பாகம் 4 (இறுதி)

ட்டாய வரி விதிப்பு, கண்காணிப்பு என்பது மட்டுமல்ல மக்களுடைய சேமிப்பு, சம்பளம், சிறு வணிகர்களிடம் புழங்கும் பணம் ஆகிய அனைத்தையும்  வங்கிக்குள் கொண்டுவருவதுதான் இவர்களது நோக்கம். பணப் பொருளாதாரத்திலிருந்து வங்கிப் பொருளாதாரத்துக்கு மாற்றுவதன் மூலம் மக்களுடைய பணம் வங்கிக்கு செல்கிறது. அப்புறம், வங்கிப் பணம் மல்லையாக்களின் பணமாகிவிடும்.

மல்லையாவை மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். 2013 க்கும் 15 க்கும் இடையில் மட்டும் 29 அரசு வங்கிகள் 1,20,000 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன. அதானி, அம்பானி போன்ற முதலாளிகள் கடனுக்கு வட்டி கூடக் கட்டுவதில்லை. தொடர்ந்து வட்டி கட்டவில்லை என்றால் அதை வாராக் கடன் என்று கருத வேண்டும். அதனை தவிர்ப்பதற்காக, மீண்டும் அதே முதலாளிக்கு மேலும் கடன் கொடுத்து, அந்த கடன் தொகையிலிருந்தே வட்டியை வரவு வைத்திருக்கின்றன அரசுடைமை வங்கிகள்.

இப்படி வாராக்கடனை வரப்போகிற கடன் போல பொய்க்கணக்கு காட்டுகிறார்கள் வங்கி அதிகாரிகள். நீங்கள் பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டுவிட்டால் அது இளவரசி ஆகிவிடுமா என்று அரசு வங்கிகளின் தலைவர்களைக் கேட்டார் ரகுராம் ராஜன் இப்படித்தான் 2015 ஆம் ஆண்டு இறுதியில் வாராக்கடன் 4 இலட்சம் கோடி என்று வங்கிகள் பொய்க்கணக்கு காட்டினார்கள் அதனைத் துருவி ஆராய்ந்தவுடன், மூன்றே மாதங்களில் வாராக்கடன் 6 இலட்சம் கோடி என்ற கணக்கு வெளியே வந்தது.

பி.என்.பி பாரிபாஸ் என்ற நிதித்துறை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் எகனாமிக் டைம்ஸ் இல் வெளிவந்திருக்கிறது. இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 75 இலட்சம் கோடி. அவற்றில் 12 இலட்சம் கோடி கோவிந்தா, வாராக்கடன் என்கிறது அந்த அறிக்கை.

இதில் இந்தியாதான் ஆசியாவிலேயே முதலிடம். வாராக்கடன் கொரியாவில் 5.8, சீனா 6.66%, தாய்லாந்து 2.4%, இந்தியா 16.1%. அனில் அம்பானிக்கு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 1,21,000 கோடி. அதற்கு ஆண்டு வட்டி 8299 கோடி. ஆனால் அனில் அம்பானியுடைய நிறுவனங்களின் ஒரு ஆண்டுக்கான விற்றுமுதலே வெறும் 9848 கோடிதான். இப்படி ஒரு சிறு தொழிலதிபரோ வியாபாரியோ கடன் வாங்க முடியுமா? விவசாயிக்கு கடன் கிடைக்குமா? ஒரு பத்தாயிரம் ரூபாய் வங்கிக் கடன் வாங்க நாம் என்ன பாடு படவேண்டும்? வாராக்கடன் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை கொள்ளையடித்த முதலாளிகளின் பெயரைக்கூட வெளியிட முடியாது என்று சொல்லும் மோடிதான் கருப்பு பண முதலைகளை ஒழிக்கப்போகிறாராம்.

பணப்பரிவர்த்தனையை நிறுத்துங்கள், வங்கிப் பரிவர்த்தனைக்கு வாருங்கள் என்ற அழைப்பின் பொருள், உங்கள் பணத்தை அம்பானி, அதானியிடம் கொடுத்து வையுங்கள், பத்திரமாக இருக்கும் என்பதுதான். இதோ, கீழே கிடக்கிற பணம் உங்களுடையதா பாருங்க என்று சொல்லி உங்களைக் குனிய வைத்து பிக் பாக்கெட் அடிப்பார்கள் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள். இதோ, உங்களுக்கு சேரவேண்டிய கருப்பு பணத்தை மீட்டுக் கொடுக்கப் போகிறேன் என்று உங்களுக்கு ஆசை காட்டி உங்கள் பணத்தை பிடுங்கி பனியா முதலாளிகளிடம் கொடுக்கிறார் மோடி.இதுதான் உண்மை.

பாகிஸ்தான் புழக்கத்தில் விட்டிருக்கும் கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய் என்கிறது ரிசர்வ் வங்கி. 2500 கோடி என்கிறது இன்டெலிஜென்ஸ் பீரோ கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளுக்கு போட்டிருக்கும் நாமத்தின் மதிப்போ– 12 லட்சம் கோடி. 400 கோடிக்காக தேசத்தையே தெருவில் நிறுத்தியிருக்கும் மோடி 12 லட்சம் கோடிக்காக அம்பானிகளை தெருவில் நிறுத்தி விசாரிப்பாரா?

இந்த உண்மையை எல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் மோடியின் அறிவுத்துறை கூலிப்படையான ஊடகங்கள் மோடியால் கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் போகலாம் கருப்பு பண பேர்வழிகளுக்கு கொஞ்சமாவது நெருக்கடி வந்திருக்கிறதா இல்லையா என்று சாமர்த்தியமாக கேள்வி எழுப்புகிறார்கள்.

ink cartoon post
ஓவியம் : முகிலன்

ஐயா, கொசு உற்பத்தியாகும் பண்ணை  – கூவம் ஆறு கருப்பு பணம் உற்பத்தியாகும் இடம் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், ஊழல் அதிகாரவர்க்கம் அந்த கூவத்தை பாதுகாக்கும் மோடி, வீதி வீதியாக கொசுவுக்கு புகை போடுகிறார் இந்த மோசடியை அம்பலப்படுத்துவதா, அல்லது நாலைந்து கொசு செத்தாலும் நல்லதுதானே என்று பாராட்டுவதா?
பேராசிரியர். பிரபாத் பட்நாயக் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார் ஊரில் ஒரு குற்றம் நடந்தால் போலீசார் குற்றத்தை புலனாய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது தெருவில் உள்ள மக்களையெல்லாம் ஸ்டேசனில் வைத்து அடித்து விசாரிக்க வேண்டுமா? எது கருப்பு பண குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டிய அணுகுமுறை என்று கேட்கிறார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை, விற்பனை வரித்துறை, ஆர்.டி.ஓ ஆபீஸ் அதிகாரிகள், சுங்கத்துறை, கலால் துறை அதிகாரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் – எங்கெல்லாம் கருப்பு பணம் இருக்கும் என்று நமக்கு தெரிகிறது. ஆனால் பிரதமருக்கு தெரியவில்லையாம். நம்ப முடிகிறதா? போகட்டும். திருப்பூர் கன்டெயினர் பிடிபட்டதே அந்தப் பணத்தின் கதை என்ன ? அன்புநாதன் கோடவுனில் கைப்பற்றப்பட்ட பணமென்ன உஜாலா வெள்ளையா? போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து 2500 கோடி பணத்தை கூரை வரை அடுக்கி வைத்திருந்த கேதன் தேசாய் என்பவன், அவன் மீது போடப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த உத்தமனை உலக மருத்துவ கவுன்சில் தலைவராக சிபாரிசு செய்யவில்லையா திருவாளர் மோடியின் குஜராத் அரசு. இந்த நாட்டில் கருப்பு பண பேர்வழிகளுக்காகவே ஒரு கட்சி உண்டென்றால் அது black money janata party தான். சேட்டுகளின் தாய்கழகமல்லவா பாரதிய ஜனதா சேட்டு என்றாலே, நம்பர் 2 வணிகம் என்பது நாடறிந்த உண்மையல்லவா?

பணப்பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்கு வா, வங்கிக்கு வா ன்னு கூப்பிட்டும் மக்கள் வரவில்லை. அவர்களை வரவழைப்பது எப்படி? ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்றுதானே ஆகவேண்டும்? அதைத்தான் செய்திருக்கிறார் மோடி. இதோ, சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள். தொழில்கள் அழிகின்றன. சிறு வணிகம் அழிகிறது. நோயாளிகள் சாகிறார்கள். நாடே நிலைகுலைந்திருக்கிறது. இது நிர்வாகத் திறமையின்மை என்று சிலர் மோடி அரசை விமரிசிக்கிறார்கள்.

இது நிர்வாகத் திறமையின்மையா, திட்டமிட்ட சதியா? முட்டாள்தனமா, முட்டாள்தனம் போலத் தெரிகின்ற அயோக்கியத்தனமா? புழக்கத்தில் இருக்கின்ற பணத்தில் 85% ஐ செல்லாது என்று அறிவித்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பதை நிர்வாகம் தெரியாத அடி முட்டாள் கூடப் புரிந்து கொள்ள முடியும். முகேஷ் அம்பானியின் முன்னாள் ஊழியரான ரிசர்வு வங்கி கவர்னருக்கும், அதானியின் இந்நாள் ஊழியரான மோடிக்கும் இது புரியாமலா இருக்கும்? எதற்காக வரிசையில் நின்று அல்லல் படுகிறீர்கள்? டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுக்கு மாறிக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை சொல்கிறது ரிசர்வ் வங்கி. ஏ.டி.எம் இல்லையென்றால் என்ன, பேடிஎம் (paytm)-முக்கு மாறிக் கொள்ளுங்கள் என்கிறது பேடிஎம் கம்பெனியின் விளம்பரம்.

 நந்தன் நிலேகனி, Unique identification authority of india என்ற ஆதார் அட்டை திட்டத்தின் தலைவர். unified payment interface என்ற திறன்பேசி மூலம் வங்கி பரிவர்த்தனை நடத்தும் செயலி (App – ஐ) உருவாக்குவதில் பங்காற்றியவர். மக்கள் படும் துன்பத்தைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்.

“people will need to figure things out over the next few weeks because the dislocation that will happen  when people will not have their notes and the retailer will not accept notes, they will realize that cash was thought of as such a friction-free thing. Now, they will suddenly find that it’s a nuisance.  I think this will push people towards digital transactions.”

“அடுத்த சில வாரங்களில் மக்கள் முடிவு செய்தாகவேண்டும். கையில் ரூபாய் நோட்டுகள் இல்லையென்றால் என்ன ஆகும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். கடைக்காரர்கள் பணத்தை வாங்க மாட்டார்கள். கையில் பணமாக வைத்துக் கொண்டு செலவிடுவதுதான் தொந்தரவு இல்லாத வழி என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணமாக கையில் வைத்திருப்பதுதான் தொந்தரவு என்று இப்போது புரிந்து கொள்வார்கள்.” இந்த சூழ்நிலை டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி (வங்கி – கடன் அட்டை) மக்களை நெட்டித் தள்ளும்.

மக்களுக்கு நேர்ந்த அசவுகரியத்துக்கு வருந்துவதாக மோடி சொல்கிறாரே அது உண்மையா, நிலேகனி சொல்வது உண்மையா? இது நிர்வாகத்திறமையின்மையா சதித்திட்டமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மக்களை வங்கிக் கணக்கு என்ற வலையில் சிக்கவைத்து அவர்களுடைய சேமிப்பு பணத்தை அபகரித்து தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்குவது பெரு முதலாளிகளுக்கு வரி விலக்கு, சிறு வணிகர்கள் முதல் சுய தொழில் செய்வோர் வரை அனைவருக்கும் வரி விதிப்பு, இதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்க வைக்க வங்கிக் கணக்கு. ஆதார் அட்டையையும் வங்கிக் கணக்கையும் இணைத்து மானிய வெட்டு. பணப் பரிவர்த்தனையிலிருந்து கடன் அட்டை பரிவர்த்தனைக்கு மாற்றுவதன் மூலம் சிறுவணிகத்தை மெல்ல அழிப்பது 4ஜி ஆண்டிராய்டு போன், ஆதார் அட்டை, கடன் அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின் கண்காணிப்புக்கும் உட்படுத்துவது இதுதான் நந்தன் நிலேகனியின் டிஜிடல் இந்தியா, ரிலையன்ஸ் ஜியோ வின் டிஜிடல் இந்தியா, மோடியின் டிஜிடல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம்.அர்ஜென்டினாவில் இத்தகைய வங்கி நெருக்கடி வந்தபோது அதன் அதிபர் மக்கள் எழுச்சிக்கு பயந்து தப்பி ஓடினார். கிரீசில் மக்கள் போராட்டம் வெடித்தது. சேமநல நிதியை (PF) முடக்குவதாக மோடி கூறியவுடன் பெங்களூரூ நகரத்தை முடக்கியது படிப்பறிவு இல்லாத எளிய ஆயத்த ஆடை தொழிலாளர்களின் எழுச்சி. அடுத்த கணமே பின்வாங்கியது மோடி அரசு.ஏமாந்தது போதும். கேள்வி எழுப்புங்கள், இல்லையேல், 2002 இல் குஜராத் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி நம் அனைவருக்கும் நேரும்.

கேள்வி எழுப்புங்கள்…, போராடுங்கள். உங்களை வீதிக்கு வரவழைத்து விட்டார் மோடி !
வீதியில்தான் இதற்கு விடை காண வேண்டும் ! கேள்வி எழுப்புங்கள் !! போராடுங்கள் !!!

__________________________________________

ஆடியோ : ஆடியோவை தரவிறக்கம் செய்ய சுட்டியில் வலது பொத்தானை அழுத்தி சேவ அஸ் ஆப்சனை தெரிவு செய்யவும்.

பிற பாகங்களுக்கு :

பா.ஜ.க. வழங்கும் ”தேசியக் கொடிக்கு மரியாதை!”

0
ravi-sisodia-national-flag
தேசியக் கொடி போர்த்தப்பட்எட நிலையில் ரவி சிசோடியாவின் சடலம். (உள்படம்) ரவி சிசோடியா.

ந்து மதவெறிக் கும்பலால் அடித்தே கொல்லப்பட்ட முகம்மது அக்லக் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதக் குற்றவாளிகளுள் ஒருவனான ரவி சிசோடியா, கடந்த அக்டோபர் மாதம் சீறுநீரகக் கோளாறு காரணமாகச் சிறையிலேயே இறந்து போனான். கட்சிக்காரன் இறந்து போனால், அவனது உடல் மீது கட்சிக் கொடியைப் போர்த்துவதுதான் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இந்து மதவெறிக் கும்பலோ கிரிமினல் குற்றவாளியான சிசோடியா உடலின் மீது தேசியக் கொடியைப் போர்த்தி, அவனைத் தேசத் தியாகி போலக் கௌரவப்படுத்தி அடக்கம் செய்திருக்கிறது.

உ.பி. மாநிலம், தாத்ரி மாவட்டத்திலுள்ள பெசாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக் படுகொலை வழக்கு பத்தோடு பதினொன்றைப் போல சாதாரண வழக்கு அல்ல. மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, ஆர்.எஸ்.எஸ். கும்பல் முன்னெடுத்துவரும் பசு பாதுகாப்பு என்ற இந்து பயங்கரவாதத் திட்டத்தின் அங்கமாக நடத்தப்பட்ட படுகொலை அது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளும் கணக்குக் காட்டுவதற்காகச் சிறையில் தள்ளப்பட்டவர்கள் அல்ல. அக்குற்றவாளிகள் அனைவரும்முகம்மது அக்லக் குடும்பத்தினரால் அடையாளங்காட்டப்பட்டவர்கள்.

தேசியக் கொடி போர்த்தப்பட்எட நிலையில் ரவி சிசோடியாவின் சடலம். (உள்படம்) ரவி சிசோடியா.
தேசியக் கொடி போர்த்தப்பட்எட நிலையில் ரவி சிசோடியாவின் சடலம். (உள்படம்) ரவி சிசோடியா.

சிறையில் விசாரணைக் கைதிகள் இறந்து போவதும், அம்மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுவதும் பரவலாக நடந்து வருகிறது என்றாலும், இறந்து போகும் கைதிகள் தியாகியாகச் சித்தரிக்கப்படுவதில்லை. ஆனால், அசாதாரணமான சூழ்நிலையில் இறந்துபோகும் தனது கட்சிக்காரர்களைத் தியாகியாகச் சித்தரித்து, பொதுமக்களை அச்சுறுத்தக்கூடிய கலவரங்களையும் ரவுடித்தனங்களையும் நடத்துவதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.

கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார், பா.ஜ.க. மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடி நகர பா.ஜ.க. செயலர் முருகன், விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த சூரி உள்ளிட்ட பலர் கந்துவட்டி, ரியல் எஸ்டேட், பெண் விவகாரம் என ஏதோவொரு காரணத்தால் கொல்லப்பட்டிருப்பதை மறைத்து, அவர்களைத் தியாகியாக்கி கலவரங்களை நடத்தியதைத் தமிழகமும் கண்டிருக்கிறது.

ரவி சிசோடியா விவகாரத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், அவனது மரணத்திற்கு உ.பி. மாநில அரசு நட்ட ஈடு தரவேண்டும்எனக் கோரியதோடு, சிசோடியாவின் சடலத்தை உடனடியாக அடக்கம் செய்யாமல் போட்டு வைத்திருந்து, பதட்டச் சூழ்நிலையை உருவாக்கி, உ.பி. மாநில அரசைப் பணிய வைத்தது.

உ.பி. மாநில அரசு இந்து மதவெறிக் கும்பலின் மிரட்டலுக்குப் பணிந்து ரவி சிசோடியாவின் குடும்பத்திற்கு 20 இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளித்தது. மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா, உ.பி. மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோம் உள்ளிட்டோர் சிசோடியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். “சிசோடியாவின் மரணத்திற்குப் பழிக்குப் பழி வாங்குவோம்” என இந்து மதவெறிக் கும்பல் முழக்கமிட, தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட சிசோடியாவின் உடல், மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் வழியாக தேசபக்தி என்பதற்குப் புதிய பொருளைக் கற்பித்திருக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.

ரவி சிசோடியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மோடி அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா.
ரவி சிசோடியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மோடி அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா.

இந்திய தேசியக் கொடியைப் புனிதப் பசுவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதிலும், அதனின் புனிதத்தை மீறுவது மன்னிக்க முடியாத குற்றமாகஊருக்கு உபதேசிப்பதிலும்மற்ற கட்சிகளைவிட, இந்து மதவெறிக் கும்பல்தான் முந்திக் கொண்டு நிற்கும். இப்படி ஊருக்குப் பொருத்தப்படும் நியாயம் தனக்குப் பொருந்தாது என்பதை கிரிமினல் குற்றவாளி சிசோடியாவின் உடல் மீது தேசியக் கொடியைப் போர்த்திக் காட்டியிருக்கிறது, அக்கும்பல்.

சிசோடியாவைத் தியாகியாகச் சித்தரிப்பதன் வழியாக, உ.பி.யில் முகம்மது அக்லக்கைப் படுகொலை செய்தது; குஜராத் மாநிலம், உனாவில் பசுவைக் கொன்று அதன் தோலை உரித்தார்கள் எனப் பழிபோட்டுத் தாழ்த்தப்பட்டோரைத் தாக்கியது; அரியானாவில் மாட்டுக் கறியைச் சாப்பிட்டதாக ஊதிவிட்டு, ஒரு ஏழை முசுலீமின் வீடு புகுந்து, அவரது குடும்பத்தாரைக் கொலைவெறியோடு தாக்கி, அக்குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்தது எனத் தொடரும்  சட்டவிரோத அட்டூழியங்கள் அனைத்தையும் நாட்டிற்குத் தேவையான நியாயமான நடவடிக்கைகள் எனக் காட்டிவிட முயலுகிறது, ஆர்.எஸ்.எஸ்.

தனதுஇந்துமதவெறி பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்தையும் தேசியத்தோடு முடிச்சுப்போடுவது ஆர்.எஸ்.எஸ்.-க்குக் கைவந்த கலை. பாபர்மசூதியைத் தரைமட்டமாக்கிய குற்றத்தை, தேசிய அவமானச் சின்னத்தை இடித்துத்தள்ளியதாக நியாயப்படுத்தியது. குஜராத்தில் நடந்த போலி மோதல் கொலைகள் அனைத்தும் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட முசுலீம் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசபக்த நடவடிக்கைகளாகச் சித்தரிக்கப்பட்டன.

சோராபுதீன் போலி மோதல் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமித் ஷா விடுவிக்கப்பட்டு, தேசியத் தலைவராக்கப்பட்டார். குஜராத்தில் போலி மோதல் கொலைகளை நடத்திய போலீசு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அதிகாரமிக்க பதவிகளில் மீண்டும் அமர்த்தப்பட்டனர். உ.பி. முசாஃபர் நகர் கலவரத்திற்குத் தலைமை தாங்கிய மகேஷ் ஷர்மா கலாச்சாரத் துறை அமைச்சர்; சங்கீத் சோம் உ.பி. சட்டமன்ற உறுப்பினர். ரவி சிசோடியாவின் உடலுக்குத் தேசியக் கொடி.

குஜராத் மாநிலம் உனாவில் இந்து மதவெறிக் கும்பலால் தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்.
குஜராத் மாநிலம் உனாவில் இந்து மதவெறிக் கும்பலால் தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்.

அக்லக் படுகொலை வழக்கும்கூட இந்து மதவெறிக் கும்பலுக்குச் சாதகமாக வளைக்கப்படுகிறது. அக்லக் படுகொலை செய்யப்பட்ட நாளன்று, அவர் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கறியைப் பரிசோதித்து, அது ஆட்டுக் கறிதான் என விரிவான ஆய்வறிக்கையை அளித்தது, தாத்ரியில் உள்ள ஆய்வகம். ஆனால், இந்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டு, மதுராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, அந்தக் கறி மாட்டுக் கறி என எந்தவிதமான ஆதாரமும் இன்றி ஒற்றை வரி அறிக்கையைப் பெற்றிருக்கிறது, உ.பி. மாநில சமாஜ்வாதி அரசு. இதன் அடிப்படையில் அக்லக் குடும்பத்தினர் மீது பசுவதைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென உ.பி. மாநில போலீசு வாதாடியதை ஏற்றுக்கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதியுமாறு உத்தரவிட்டிருக்கிறது, உ.பி. கீழமை நீதிமன்றம்.

தன்னை மதச்சார்பற்ற கட்சியாகக் கூறிக்கொள்ளும் சமாஜ்வாதிக் கட்சி ஆட்சியின் இலட்சணமே இப்படி இருக்கும்பொழுது, உ.பி.யில் பா.ஜ.க. அதிகாரத்தில் இருந்திருந்தால், சிசோடியாவை அரசு மரியாதையோடு அடக்கம் செய்திருப்பார்கள்.

அக்லக் குடும்பத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை அம்பலப்படுத்தியும் கண்டித்தும் உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்குக் கடிதம் எழுதினார், உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு. அதன் பிறகும்கூட அக்லக் குடும்பம் பழி வாங்கப்படும் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் தலையிடவில்லை. இந்து மதவெறியின் சோதனைச் சாலையாக உள்ள குஜராத்தான் இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் எனச் சான்றளிக்கிறார், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தாக்கூர். இப்படி பொது அறம், நீதிக்கு எதிராகப் பேசும் நீதிபதிகள் இருக்கையில், அக்லக் குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும் என நம்புவது மூடநம்பிக்கையைவிடக் கேடானது.

இந்து மதவெறிக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட முகம்மது அக்லக் (இடது) மற்றும் அக்கொலை வழக்கு இந்து மதவெறிக் கும்பலுக்குச் சாதகமாக நடத்தப்படுவதை அம்பலப்படுத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு
இந்து மதவெறிக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட முகம்மது அக்லக் (இடது) மற்றும் அக்கொலை வழக்கு இந்து மதவெறிக் கும்பலுக்குச் சாதகமாக நடத்தப்படுவதை அம்பலப்படுத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு, போலீசால் சோடிக்கப்பட்ட தீவிரவாத வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, பத்து பதினைந்து ஆண்டுகள் சிறையில் கழிந்த நிலையில், நீதிமன்றங்களால் சாவகாசமாக நிரபராதிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அப்படியான நிரபராதிகளுக்கு, அவர்கள் முசுலீம்கள் என்பதாலேயே உரிய நட்ட ஈடு வழங்க அரசும், நீதிமன்றங்களும் மறுத்து வருகின்றன. அப்படி வழங்கினால், போலீசின் செயல்திறன் வீழ்ந்து போகும் என அநியாயமாகச் சப்பைக் கட்டுகின்றன. ஆனால், அக்லக் படுகொலை வழக்கிலிருந்து ரவி சிசோடியா விடுவிக்கப்படும் முன்பே, அவனது குடும்பத்திற்கு இருபது இலட்ச ரூபாய் நட்ட ஈடாக அரசால் வழங்கப்படுகிறது.

ravi-sisodia-caption-1“தேசம், தேசியக் கொடி, தேசிய ஒருமைப்பாடு, தேச பக்தி” என்றாலே சாமியாடும் நிலைக்குச் சென்றுவிடும் நடுத்தர வர்க்கம், இவையெல்லாம் நாட்டின் நலன், வளர்ச்சி, பாதுகாப்போடு சம்பந்தப்பட்டவையாகக் கற்பிதம் செய்து வைத்திருக்கிறது. ஆனால்,தேச பக்திக்கு அத்தாரிட்டியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலோ, இந்து மதவெறியே தேச பக்தி, இந்திய தேசியம் என்பதே இந்து தேசியம்தான் எனக் காட்டுகிறது. அந்த வகையில் இந்திய தேசியக் கொடி தனக்கு உரிய இடத்தில் – சிசோடியாவின் உடல் மீது போர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இது யாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்த வேண்டுமோ, அவர்கள், வலிக்காத மாதிரியே நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

– குப்பன்
___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________