இந்த ஆண்டு மேதினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையை உழைக்கும் வர்க்கத்தின் முன் வைக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கு சவால்விட்டு, தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டங்களைத் தொடுக்குமாறு கோருகிறது.
ஆம், நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் தீராத, மீள முடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப்போய், எதிர்நிலை சக்திகளாக (Bankrupted, Failed, Collapsed, and Opposite force) மாறி விட்டன. அவை மேலும் முன்னோக்கி நகர முடியாமல், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டன. ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத சுமையாகப் போய்விட்டன. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்? இதுதான் இப்போது நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கேள்வியாகும்.
மத்தியில் பிரதமர், மாநிலத்தில் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாநிலத் தலைமை போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் ஆகிய உயர்பதவி வகிப்பவர்களே கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இருந்த போதிலும், இவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது நியமிக்கப்படுகிறார்கள். இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட இந்தக் கிரிமினல் குற்றவாளிகளிடமே இரகசிய ஆவணங்களையும், அதிகாரத்தையும் கொடுத்து நாட்டை ஆளும் நிலை நிலவுகிறது.
நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் தீராத, மீள முடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப்போய், எதிர்நிலை சக்திகளாக (Bankrupted, Failed, Collapsed, and Opposite force) மாறி விட்டன.
உளவுத்துறை, போலீசு, நீதிமன்றங்கள் ஆகிய குற்றத்தடுப்பு அரசு அதிகார அமைப்புகளை இந்தக் கிரிமினல் குற்றவாளிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். நாட்டின் குடிமக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாக, எங்கும் நீக்கமற நிறைந்து, வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாக அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் அடக்குமுறை நிறுவனங்கள் உள்ளன. இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகார அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைத்தால், அவர்களைத் தண்டிப்பதற்கு உச்சநீதிமன்றமே அஞ்சுகிறது. நீதிபதிகளோ பாலியல், கிரிமினல் குற்றவாளிகளாக, ஊழல் கிரிமினல் கும்பல்களின் எடுபிடிகளாக, நீதியே விற்பனைச் சரக்காக என்று நிர்வாணமாகி நிற்கிறது நீதித்துறை.
எங்கும் எதிலும் சட்டவிதிகள், நீதியின்படியான அரசு நிர்வாகம் கிடையாது. சட்டவிதிகளும், நீதியும் மக்களுக்கு எதிரானவையாக உள்ளன. அரசு நிர்வாகம் முழுவதிலும் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் நிரம்பி வழிகின்றன. அரசியல் அமைப்பு முழுவதும் கிரிமினல்மயமானதாகி விட்டது. கிரிமினல் குற்றக் கும்பல்கள், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள், போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு, சிவில் சமூகத்தின் மீது ஏறி மிதித்து, முற்று முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.
அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படைப் பொதுச் சுகாதாரம், மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு ஆகியவை எல்லாம் கானல்நீராகவே உள்ளன. இவை இன்று கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல்களின் மற்றும் கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டன.
நாட்டின் பொருளாதாரமோ ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக உற்பத்திப் பின்னடைவு, தேக்கவீக்கம், அந்நிய செலாவணிப் பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாத கடும் நெருக்கடிக்குள் சிக்கி விட்டது. அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படைப் பொதுச் சுகாதாரம், மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு ஆகியவை எல்லாம் கானல்நீராகவே உள்ளன. இவை இன்று கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல்களின் மற்றும் கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டன. கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக விவசாயிகள், மீனவர்கள், பழங்குடி மக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. காடுகள், மலைகள், கடல், நிலம், நீர்நிலைகள், ஆகாயம் ஆகிய எல்லா வளங்களும் நாட்டின் பொருளுற்பத்திக்குப் பயன்படுவதைவிட, பன்னாட்டு உள்நாட்டு ஏகபோகங்களின் கொள்ளையின் பொருட்டு சூறையாடப்படுகின்றன. உழைக்கும் மக்களோ கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.
ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச்சிறுபான்மையினர் மீது பார்ப்பனப் பாசிச பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன. சாதி, மதவெறி அமைப்புகள் பார்ப்பன பாசிசத்தின் தலைமையிலான இணை அதிகார மையங்களாக வளர்ந்து வருகின்றன.
ஒடுக்கப்படும் சாதியினர், மதச்சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்க முடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரிகத்தின் உச்சநிலையை எட்டிவிட்டன. நாட்டின் சமூக பண்பாட்டு விழுமியங்கள், அமைப்புக் கட்டுமானங்கள் முழுவதும் நொறுங்கி விழும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல்வெறித் தாக்குதல்கள் காரணமாக மக்கள்தொகையில் முக்கால் பங்குக்கும் மேலானவர்கள் வாழத்தகுதியற்றதாக நாடு மாறிவிட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச்சிறுபான்மையினர் மீது பார்ப்பனப் பாசிச பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன. சாதி, மதவெறி அமைப்புகள் பார்ப்பன பாசிசத்தின் தலைமையிலான இணை அதிகார மையங்களாக வளர்ந்து வருகின்றன.
ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு மேலும் விரிவாக ஆய்வு செய்தால், நாட்டின் ஒட்டுமொத்தச் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளதை எவரும் எளிதில் காணமுடியும். ஆளும் வர்க்கங்களும், அரசும், ஆட்சியாளர்களும் இவை எவற்றையும் தீர்க்க முடியாமல் திணறுவதையும் சிக்கித் தவிப்பதையும் காண முடியும். அவர்களின் கையாலாகத்தனத்தையும் தோல்வியையுமே இவை காட்டுகின்றன.
இந்தக் கட்டமைப்பைத் தாங்கிப் பிடிக்கின்ற, மக்களிடம் நியாயப்படுத்தி அங்கீகாரம் பெற்றுத் தந்துவந்த சித்தாந்தங்களும், அரசியல் கொள்கைகளும், பண்பாட்டு நெறிமுறைகளும், நீதி நெறிமுறைகளும், அரசியல் சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் கூட திவாலாகி, தோற்றுப்போய் விட்டன என்பதையும், சித்தாந்த, அரசியல், பண்பாட்டு ஆயுதங்கள் கருவிகள் எல்லாவற்றையும் பிரயோகித்துப் பார்த்தும் நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் நாடு மென்மேலும் நெருக்கடி எனும் கருந்துளைக்குள் (blackhole) போயக் கொண்டிருக்கும் பரிதாப நிலையையுமே இவை வெளிச்சம் காட்டுகின்றன.
இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணும் ஆயுதங்கள், கருவிகள் எதுவுமின்றி நிற்கின்ற ஆளும் வர்க்கங்களும் அதன் பல்துறை வல்லுனர்களும், சித்தாந்தவாதிகளும் அரசியல்வாதிகளும் இனி ஆளத் தகுதியற்றவர்களாக, நிர்வாகம் நடத்த வக்கற்றவர்களாக, சித்தாந்த அரசியல் ஓட்டாண்டிகளாக ஆகிவிட்டனர் என்பதையும், ஆள்வதற்கு மக்களிடமிருந்து பெற்ற நியாயவுரிமைகளை அவர்கள் தக்கவைக்க முடியாமல் முற்றிலும் அம்பலமாகி நிற்கிறார்கள் என்பதையும்தான் இது தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
இவை அனைத்தும் கூறுகின்ற செய்தி இதுதான். நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஒரு உச்சநிலையை எட்டிவிட்டன. அரசும், ஆளும் வர்க்கங்களும் ஆளும் தகுதியை இழந்துவிட்டன. இனி தனித்தனிச் சிக்கல்களுக்கு தனித்தனி தீர்வுகளும் கோரிக்கைகளும், முழக்கங்களும் முன்வைத்து தனித்தனி இயக்கங்கள் நடத்தித் தீர்வுகாண முடியாது. இந்தக் கட்டுமானங்கள் எவையொன்றையும் சீர்திருத்தவும் முடியாது.
நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகள்
தற்போதைய அரசியல் கட்டமைப்புக்கு
வெளியேதான் உள்ளன!
அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின்
அதிகாரத்தைத் தட்டிக் கேட்க
வேண்டும்!
அவர்களின் அதிகாரத்துக்கு
சவால்விட வேண்டும்!
தங்களுக்கான அதிகார அமைப்புகளை
மக்கள் தாமே கட்டி எழுப்ப வேண்டும்!
மே நாள் சூளுரை :
ஆளும் அருகதையற்ற
அரசுக் கட்டமைப்பை
வீழ்த்துவோம்!
மக்கள் அதிகாரத்தை
நிறுவுவோம்!
மேதின பேரணி – ஆர்ப்பாட்டம்
1. தருமபுரி
[போஸ்டர்களை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
பேரணி துவங்குமிடம் : வேல் பால் டிப்போ அருகில் நேரம் : மாலை 3 மணி பேரணி தலைமை : தோழர்.பரசுராமன், மாநிலத் துணைத் தலைவர், பு.ஜ.தொ.மு
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : BSNL அலுவலகம் அருகில். ஆர்ப்பாட்டத் தலைமை : தோழர்.கோபிநாத், வட்டாரச் செயலாளர், வி.வி.மு., பென்னாகரம்.
சிறப்புரை:
தோழர்.முத்து, வி.வி.மு. தோழர்.ராஜா, மாவட்ட அமைப்பாளர், பு.மா.இ.மு., தருமபுரி.
நன்றியுரை: தோழர்.சிவா, வட்டாரக் குழு உறுப்பினர், வி.வி.மு., பென்னாகரம்.
சுவர் விளம்பரங்கள்
[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
2. புதுச்சேரி
தகவல் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் – புதுச்சேரி
3. கோவில்பட்டி
தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி
4. சென்னை
மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம்
பேரணி துவங்குமிடம் : ஜேம்ஸ் கல்லறை – கல்லறைப் பேருந்து நிறுத்தம் அருகில், பூந்தமல்லி
ஆர்ப்பாட்டம் : அம்பேத்கர் சிலை – நீதிமன்றம் அருகில், பூந்தமல்லி
தலைமை : தோழர் சிவா, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு
சிறப்புரை : தோழர் விஜயகுமார், மாநிலப் பொருளாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு
நேரம் : காலை 10 மணி நாள் : 01-05-2015 வெள்ளிக்கிழமை
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்டம்
மன்னர்களுக்கு தேள் கொட்டினால் அரசவைப் புலவர்களுக்கு நெறிகட்டுவது தமிழ் மரபு. என்ன இருந்தாலும் அண்டிப் பிழைப்பதில் உள்ள சுகமும், பாதுகாப்பும், எலும்புத் துண்டும் நேர் வழியில் இல்லை அல்லவா?
அவ்வழியில் பவானி சிங் நியமனம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை ஒட்டி ஏகப்பட்ட சட்ட, சாத்திர, சாணக்கிய வாதங்களை அடுக்குகிறார், தினமணியின் வைத்தி.
சாரமாகச் சொன்னால் ஒரு வன்புணர்ச்சி நடைபெறுகிறது என்று வையுங்கள்! நாமெல்லாம் புணர்ந்தவனை பொளந்து கட்ட பொங்கியெழும் போது, பொறுக்கியை காப்பாற்றும் முகமாக அவனைப் பற்றி இல்லாதது, பொல்லாததையெல்லாம் இட்டுக்கட்டி நல்லவனாக்கும் கிரிமினல் லாயர் சூட்கேஸ் சகிதம் வருவார்கள் அல்லவா! அரசவைப் புலவர் வைத்தியும் அப்பேற்பட்ட லாயரின் வாயைக் கொண்டிருக்கிறார்.
பவானி சிங் நியமனம் தவறு என்றாலும் மறு விசாரணை தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பதை வைத்தி மாமா முதலில் எடுத்து வைக்கிறார். இது தீர்ப்பு குறித்த விளக்கம் என்று இன்னும் தினமணியின் நடுநிலை வேடத்தை நம்பும் கோயிந்துகள் நம்பலாம்.
ஆனால், அந்த விளக்கத்தினுள்ளே மாபெரும் அர்த்த சாஸ்திரத்தின் பொழிப்புரை மறைந்துள்ளதை அடுத்து வரும் பத்திகளில் அசால்ட்டாக பிட்டு வைக்கிறார் சாணக்கிய வைத்தி.
போயஸ் தோட்டத்து மந்திரவாதி வைத்தி
ஒரு வழக்கில் வாதம் புரியும் அரசு வழக்குரைஞர் அந்த வழக்கின் மேல்முறையீடுகளிலும் வாதிடலாம் என்று குற்றவியல் சட்டப் பிரிவு 301 சொல்கிறதாம். இதைத்தான் நீதிபதி பானுமதி ஏற்று பவானி சிங் நியமனம் தவறில்லை என்று குறிப்பிட்டதாக எழுதுகிறார் வைத்தி. தற்போது உச்சநீதிமன்றத்தின் மூவர் அமர்வு இந்த நியமனத்தை தவறு என்று தீர்ப்பளித்திருப்பதை இப்படி மறைமுகமாக மறுக்கிறார் மாமா. இருப்பினும் நீதியின் தீர்ப்புக்கு வணங்குவதாக கூறி அவமதிப்பு வழக்கு அபாயங்களிலிருந்தும் காத்துக் கொள்கிறார்.
அதே நேரம் இந்தத் தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம்தான் சுயமுரண்பாட்டோடு நடந்துள்ளதாக அடுத்து நிரூபிக்கிறார். அதாவது, இந்த மேல்முறையீட்டு வழக்கு முழுவதும் 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதே உச்சநீதிமன்றம்தானாம். அதைத்தான் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி குறிப்பிட்டு, அன்பழகனது மனுவை நிராகரித்தாராம்.
இதன்படி ஒரு வழக்கு எத்தனை காலத்திற்குள் நடக்க வேண்டும் என ஒரு நீதிமன்றம் முடிவெடுத்து விட்டால் பிறகு குற்றவாளியே அரசு தரப்பில் வாதாட வழக்குரைஞரை நியமிப்பதெல்லாம் பிரச்சினை இல்லையாம். எதற்கு இப்படி சுற்றி வளைக்க வேண்டும் வைத்தி சார்? ஜெயலலிதாவையோ இல்லை வைத்தியையோ நீதிபதியாக்கினால் ஒரு விநாடியில் வழக்கு முடிந்து விடுமே! பக்கத்து இலை பாயாசம் மற்றும் பங்சுவாலிட்டி மேல என்னமா ஒரு லவ்வு………
சொத்துக் குவிப்பு வழக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏன் உத்திரவிட்டது? இந்த வழக்கை இந்தியாவிலேயே இப்படி ஒரு முன்னுதாரணம் இல்லாத அளவுக்கு ஆயிரெத்தெட்டு வழிகளில் இழுத்தடித்தது யாராய்யா? வாய்தா ராணி என்று பட்டமே இங்கு பொன்னெழுத்தில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டதெல்லாம் வைத்திக்கு புரியாது என்றால் அவருக்கு பிடித்திருப்பது பைத்தியமா இல்லை பக்தியா?
எந்த மாநிலத்தில் வழக்கு நடைபெறுகிறதோ அந்த மாநிலம்தான் வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என்றால் அப்படி நியமிக்காத கர்நாடக அரசைத்தான் நீதிமன்றம் கண்டித்திருக்க வேண்டுமாம். மாறாக தமிழக அரசை கண்டிருத்திருப்பது கண்டு பூணுல் சிவக்கக் கேட்கிறார் தினமணி வைத்தி.
இதன்படி சொத்துக்குவிப்பு வழக்கில், ஏதோ நல்ல மனது காரணமாக கிடைக்கும் சொத்துக்களை குவித்து விட்ட தோழிகளுக்கு பதில் அந்த சொத்துக்களை வம்படியாக திணித்த தொழிலதிபர்களைத்தான் டின் கட்டியிருக்க வேண்டும். ஒரு வீட்டிற்குள் பீரோ இருப்பதால்தான் பீரோ புல்லிங் திருடன் திருடுகிறான். இதற்கு பீரோ உரிமையாளரை கைது செய்யாமல் திருடியவரை கைது செய்வது நியாயமா என்று கேட்கிறார் நிமிர்ந்த நன்னடைக்கு சொந்தம் கொண்டாடும் மாமா.
சொல்லப் போனால் அம்மா அரசை கண்டித்திருக்கும் வாசகங்களை மேன்மை தாங்கிய நீதிபதிகள் பதிவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்று போல்டாக போடுகிறார். போயஸ் தோட்டத்திற்காக இப்படி மானங்கெட்டு போனாலும் உச்சநீதிமன்றத்தை எதிர்க்கும் தைரியம் வைத்தி மாமா அல்லாது யாருக்கு வரும்? ஒரு வேளை சோ-வுக்கு வரலாம்.
பவானி சிங்கின் வாதங்களை புறக்கணித்து விட்டு, நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்ட முற்பட்டிருப்பது அந்த நீதிபதியின் (குமாரசாமியின்) கௌரவத்தை குலைப்பதாகாதா என்று சீறுகிறார் நிலத்தில் அஞ்சாத நெறிகளுக்கு சொந்தக்காரரான வைத்தி.
ஜெயா எனும் ஊழல் பெருச்சாளியின் வழக்கை ஒரு மாபெரும் ஊழல் பிரச்சினையாக கருதியே தீர்ப்பளிக்க வேண்டும் என்ற தொனியில் நீதிமன்றம் கூறியிருப்பதைத்தான் இப்படி சாடுகிறார். இது நீதிபதி குமாரசாமியின் மீதான அக்கறையா இல்லை அம்மாவை அண்டிப்பிழைத்து வாழும் ஒரு அற்பத்தின் வியாக்கியானமா என்று யாருக்கும் குழப்பம் வரவே வராது.
ஏனெனில், உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வழங்கிய பிறகு மேல்முறையீட்டில் அந்தத் தீர்ப்பின் குறைகளை சுட்டிக் காட்டி, சரியான புரிதலுடன் – அப்ஃளிகேஷன் ஆஃப் மைண்ட் – தீர்ப்பு எழுதப்படவில்லை என்று கூற உச்சநீதிமன்றத்திற்கு உரிமை இருக்கிறதாம். மாறாக, அந்த சுட்டிக்காட்டலை இப்போதே செய்ய நினைப்பது தவறான முன்னுதாரணம் என்று கன்னம் பழுக்க பேசுகிறார் ஜென்டில்மேன் வைத்தி.
என்ன செய்ய! நீதித்துறை என்பதே ஆதித்யா சேனலில் வரும் வண்டு முருகனது சிரிப்பு மன்றம் என்பதை சொத்துக் குவிப்பு வழக்கின் இத்தனை ஆண்டுகளில் எண்ணிறந்த முறைகளில் ஜெயா கும்பல் நிரூபித்தாலும் எச்சக்கலைகளுக்கு எப்படி புரியும்? ஜாமீனை மீனாக நினைத்த வண்டு முருகனது உதவியாளர்கள் போல, தாமதத்தை அம்மாவுக்கு எரிச்சலூட்டும் விடயங்களில் மட்டும் தேடுகிறது தினமணி. அதன்படி ஜெயா கும்பல் தண்டிக்கப்படும் வாய்ப்பை உருவாக்குவது மட்டும் நீதித்துறையின் தவறான முன்னுதாரணமாம்.
இதே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதே ஜெயாவுக்கு சட்ட விரோதமாக பிணை வழங்கினாரே அப்போது இதே வைத்தி எந்த கோவிலுக்கு மா விளக்கு வைக்க போயிருந்தார்?
மேல்முறையீட்டில் பவானி சிங் வாதிட்டது குறித்து தி.மு.கவுக்கு பெரும் ஆட்சேபணை இருந்தாலும் அவர்களது உள்நோக்கம் புதிய வழக்குரைஞரை நியமித்து தீர்ப்பு வழங்கப்படுவதை தாமதப்படுத்துவது என்று ஜேம்ஸ்பாண்ட் போல புலனாய்வு செய்து கூறுகிறார் வைத்தி.
பவானி சிங்கை தி.மு.கவிற்கு மட்டும் பிடிக்காதாம்.
பவானி சிங்குதான் வேண்டுமென்று ஜெயாவின் வக்கீல் படை எல்லா நீதிமன்றங்களிலும் வேர்க்க விறுவிறுக்க போராடியதும், அதற்கு பிராயச்சித்தமாக பவானி சிங்கும் அதிக சம்பளத்திற்கு பிகு பண்ணி பிறகு நீதிபதி குமாரசாமி கேள்வி கேட்கும் போது அச்சு அசலாக தில்லானா மோகானாம்பாள் வைத்தி போல சிரித்தாரே? பாம்பின் கால் பாம்பறிய வேண்டுமே மிஸ்டர் வைத்தி?
ஜெயாவின் சொத்து முறைகேடுகளை பச்சை பச்சையாக காப்பாற்றும் முயற்சியில் பவானி சிங் ஈடுபட்டது ஏதோ தி.மு.கவிற்கு மட்டும் ஆட்சேபணை ஏற்படுத்துமென்றால் இந்த வைத்தி சார் துன்னுவது அரிசியா இல்லை நரகலா என்று கேட்பது ஒன்றும் அநாகரிகமில்லையே?
தீர்ப்பை தாமதப்படுத்துவதால் தி.மு.கவிற்கு என்ன பயன்? ஜெயாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டால் அடுத்த தேர்தலில் அ.தி.மு.கவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் தி.மு.கவுக்கு உண்டாம். அதனால்தான் வழக்கை இழுத்து தேர்தல் முடியும் வரை ஆதாயம் அடைய தி.மு.க சதி செய்கிறது என்று போயஸ் தோட்டத்து மந்திரவாதி போல ஜோசியம் கூறுகிறார் வைத்தி.
இந்த வழக்கில் தி.மு.க விற்கு என்ன ஆதாயம் என்பது இருக்கட்டும். ஜனநாயகம், அரசு, கட்சிகள், நேர்மை, நீதிமன்றம், வழக்கு, ஊழலற்ற ஆட்சி இந்த வஸ்துகளுக்கு என்ன பாதிப்பு என்பதை திருவாளர் வைத்தி ஏன் யோசிக்க வில்லை? ஊழல் குற்றவாளிகள் தண்டிக்ப்பட வேண்டும், அந்தத் தண்டனை இங்கே தவறு செய்யும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்குமென்று ஏன் முழங்க முடியவில்லை?
ஆக பவானி சிங் நியமனம் குறித்த வழக்கு தி.மு.கவிற்கு ஆதாயமா இல்லை இந்த தீர்ப்பு குறித்து இப்படி ஜேப்படி திருடன் போல வெட்கம் கெட்டு பேசுவதால் தினமணிக்கு ஆதாயமா?
பவானி சிங் நியமனம் செல்லாது என்றாலும் மீண்டும் விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை தினமணி வைத்தி மனதார பாரட்டுகிறாராம். அதன் மூலம் இந்த வழக்கை தாமதப்படுத்தும் தி.மு.கவின் சதி முறியடிக்கப்பட்டதாம்.
உயர்நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் ஜெயா விடுவிக்கப்படுவார் எனும் நிலையில் தி.மு.க தலைவர் அன்பழகனது வழக்கு அதை மாற்றி விட்டது என்று கால் முதல் தலை வரை எரிச்சலுடன் புலம்புகிறார் வைத்தி. நல்லது, இந்த தாமதத்திற்கான அறச்சீற்றம் வாய்தா ராணியின் இழுத்தடிப்புகள் குறித்த மகிழ்ச்சியின் மற்றுமொரு பக்கம் என்றால்…………
மாட்டுக்கறி பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் – மே 2015 வெளியீடு
அன்பார்ந்த நண்பர்களே,
புதிய கலாச்சாரம் சார்பில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 2015 மே நாள் முதல் மாதம் ஒரு வெளியீடு கொண்டுவர இருக்கிறோம். மோடி தலைமையில் பா.ஜ.க கும்பல் ஆட்சி அமைத்த பின், ஒருபுறம் நாட்டு மக்களின் வாழ்வை நாசமாக்கும் பொருளாதாரக் கொள்கைகள் ஏகாதிபத்திய விசுவாசத்துடன் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் இந்துமதவெறி நிகழ்ச்சி நிரலும் திணிக்கப்படுகிறது.
சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள், கல்வித் துறை பார்ப்பன மயமாக்கம், ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அரசு விருதுகள்.. என்று நீளும் இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு மாட்டுக்கறி மீதான தடை.
இந்தியாவின் உழைக்கும் மக்கள் குறிப்பாக நகர்ப்புறத் தொழிலாளிகள் உண்ணும் மாட்டுக்கறியை மராட்டியத்தில் தடை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே குஜராத்தில் இருக்கும் இத்தடைச்சட்டம் இனி இந்தியாவெங்கும் கொண்டு வரப்படலாம்.
இதன்படி, இனி நாம் எதை உண்பது என்பதை இனி பார்ப்பனக் கூட்டம் கும்பல்தான் முடிவு செய்யுமா என்பதே நம் முன் உள்ள கேள்வி. புனிதப்பசு என்ற பார்ப்பன – ஆதிக்க சாதிக்கருத்தியலின் அடிப்படையில்தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்ற போதிலும், அதனை மறைத்துக் கொண்டு விவசாயிகளின் நன்மைக்காக என்று விளக்கம் சொல்கிறது பா.ஜ.க. மாட்டுக்கறி உண்டால், வெட்டினால், விற்றால், வாங்கினால் சிறைத் தண்டனை என்று மிரட்டுகிறது.
பார்ப்பனியத்திற்கும், தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தில் மாட்டுக்கறி ஒரு முக்கியமான ஆயுதம். சாதி ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடாகவும் அது இருக்கிறது. அவ்வகையில், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான கருத்தியல் ஆயுதமாக இந்நூல் பயன்பட வேண்டுமென விழைகிறோம்.
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
UGC விதிமுறைகளை மீறி நடக்கும், கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் நர்சிங் நிறுவனங்களை இழுத்து மூடு! – பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
UGC விதிமுறைகளைகளை மீறி மோசடி செய்யும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூட வலியுறுத்தி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், 24.04.2015 அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பதற்காக, தேர்வு நடத்துவது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் சஸ்பெண்ட் செய்து விடுவதாக வீடுகளுக்கு போன் செய்து மாணவர்களை மிரட்டுவது என்று அமிர்தா, அன்னம்மாள், மற்றும் சாய் நிறுவன நிர்வாகங்கள் மாணவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இருந்தாலும் அதையும் மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை மாநகரப் பொருளாளர் தோழர் ராஜா தலைமையில் UGC விதிகளை மதிக்காமல், நிறுவனங்களை நடத்தி மாணவர்களை ஏமாற்றிய நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இழுத்து மூடு ! இழுத்து மூடு !
தமிழக அரசே இழுத்து மூடு !
மாணவர்களை சுரண்டிக் கொழுக்கும்
பெற்றோர்களின் பணத்தைப் பறிக்கும்
கேட்டரிங் பார்மசி பயிற்சி நிறுவனங்களை
இழுத்து மூடு ! இழுத்து மூடு !
தமிழக அரசே இழுத்து மூடு !
கைது செய் ! சிறையிலடை !
மாணவர்களின் சம்பளத்தை
திருடித்தின்ற முதலாளிகளை
மாணவர்களின் சான்றிதழை
தரமறுக்கும் அயோக்கியர்களை
கைது செய் ! சிறையிலடை !
தடை செய் ! தடை செய் !
யூ.ஜி.சி விதிமுறைகளை மீறி
கேட்டரிங், பார்மசி படிப்புக்களை
நடத்துகின்ற கல்வி நிறுவனங்களை
தடை செய் ! தடை செய் !
பெற்றோர்களே ! மாணவர்களே !
படிக்கும் போதே ஹோட்டல் வேலை
படித்த உடனே கப்பல் வேலை
கலர் கலராய் மோசடி செய்யும்
தனியார் கல்வி நிறுவனங்களை
இழுத்து மூடும் அதிகாரத்தை
கையில் எடுப்போம் ! கையில் எடுப்போம் !
அணி திரள்வோம் ! அணி திரள்வோம் !
அமைப்பாக அணி திரள்வோம் !
திரும்பப் பெறுவோம் ! திரும்பப் பெறுவோம் !
கட்டிய பணத்தையும் சான்றிதழ்களையும்
திரும்பப் பெறுவோம் ! திரும்பப் பெறுவோம் !
ஒழித்துக்கட்டுவோம் ! ஒழித்துக்கட்டுவோம்
கல்வி தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவோம் !
தோழர் ராஜா தனது உரையில், “இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கவர்ச்சியான விளம்பரங்களை செய்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் கவர்ந்து, ஏமாற்றி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். இப்படிப்பட்ட நிறுவனங்களின் போலியான விளம்பரங்களை நம்பி பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் நிற்கின்றனர். அவர்கள் ஒரு சங்கமாக இணைத்து போராடாமல், கல்வி தனியார் மயத்தை வீழ்த்த முடியாது” என்றார்.
சென்னை மாநகர இணை செயலாளர் தோழர் மருது, கண்டன உரை ஆற்றினார். அவரது உரையில், “டி. வி விளம்பரங்கள், மாணவர்களை கவரும் வகையில் உள்ளன. ஆனால் உண்மையில், இப்படிப்பட்ட நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் கொத்தடிமை நிலையில் தான் உள்ளனர். பகுதி நேர வேலை என்ற பெயரில் ஹோட்டல்களுக்கு வேலைக்கு அனுப்பி, தட்டு கழுவுவது போன்ற வேலைகளை செய்ய வைத்து சம்பளத்தையும் பறிக்கின்றனர்.
UGC விதிமுறைகளை மீறி நடத்தப்படும் நிறுவனங்கள் என்றாலும், திட்டமிட்டே இந்த அரசு அவற்றை ஊக்குவிக்கிறது. தனியாரால் நடத்தப்படும் இது போன்ற பொறியியல், கேட்டரிங் நிறுவனங்கள் யாரும் நுழைய முடியாத மர்மக் கோட்டையாகவே உள்ளன. இப்படிப்பட்ட நிறுவனங்களை நடத்த எந்தத் தகுதியும் தேவையில்லை. 10/10 அறை இருந்தால் போதும் என்ற நிலை தான் உள்ளது. இப்படிப்பட்ட நிறுவனங்களில் மாணவர்கள் கொத்தடிமைகளாக மாட்டிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலைமை யூ.ஜி.சிக்கோ, கல்வித் துறைக்கோ, அரசுக்கோ தெரியாமல் இல்லை. தெரிந்தே நடக்கும் இந்த பகற்கொள்ளைக்கு அடிப்படையே கல்வி தனியார்மயம்தான். இந்தக் கொள்ளையை நடத்துவதற்கு அனுமதி அளித்த அரசிடமே இனியும் கெஞ்சுவது நியாயமில்லை. அதிகாரத்தை கையில் எடுக்காமல் தீர்வு இல்லை. அப்படிப்பட்ட போராட்டங்களை வழி நடத்துவதை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி முன்னெடுக்கும்” என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கேட்டரிங் மாணவர்கள் கல்வி தனியார்மயத்தினால் பாதிக்கப்பட்ட இத்துறை மாணவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்; தன்மானத்துடன் தங்களின் வாழ்வுரிமைக்காக போராடுகிறார்கள்; தங்களுடைய உரிமைக்காக மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இது போன்ற நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் உரிமைக்கான போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள், மாணவர் வர்க்கமாக பு.மா.இ.மு தலைமையில்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தமிழகம் முழுவதும் உள்ள கேட்டரிங் மாணவர்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க சங்கமாக அணிதிரளாமல் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை அறிவிக்கும் விதமாக இப்போராட்டம் அமைந்தது.
– தகவல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை.
9445112675
புதுவைப் பல்கலைக்கழகம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) ஆகியவற்றின் மேலாண்மையில் இயங்கும் மத்தியப் பல்கலைக் கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் அரசின் எல்லாத் துறைகளும் செயலிழந்து, உச்சகட்டச் சீரழிவை சந்தித்து முடங்கிப்போய் இருப்பதற்கான நிதர்சனமான சாட்சியமாக நிற்கிறது . அங்கு நடைபெற்றுவரும் பல்வேறு சீரழிவுகளும், முறைகேடுகளும், மாணவர் விரோத மற்றும் ஊழியர் விரோத நடவடிக்கைகளும் சந்திசிரித்து ஊடகங்களில் அன்றாடச் செய்தியாகியுள்ளன.
அவற்றை எதிர்த்து நாள்தோறும் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. ஆசிரியர்களும், ஊழியர்களும் புதுவை நகரிலும், வளாகத்திலும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்க, தங்களது விடுதிக்குத் தண்ணீர்கூட பல நாட்கள் தரத் துப்பில்லாத நிர்வாகத்தைக் கண்டித்து நள்ளிரவில் காலி பாத்திரங்களுடன் தமது விடுதிகளைவிட்டு வெளியேறி வீதியில் அமர்ந்து போராடியுள்ளனர் மாணவிகள். அப்படி என்னதான் பிரச்சனை இந்தப் பல்கலைக்கழகத்தில்?
முன்னாள் மத்திய அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர், நளினி சிதம்பரத்தின் நெருங்கிய தோழி, பார்ப்பன சாதியில் பிறந்தவர் போன்ற அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்ததால் புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்ற “பேராசிரியர்” சந்திரா கிருஷ்ணமூர்த்தி.
முன்னாள் மத்திய அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர், நளினி சிதம்பரத்தின் நெருங்கிய தோழி, பார்ப்பன சாதியில் பிறந்தவர் போன்ற அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்ததால் புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றார் “பேராசிரியர்” சந்திரா கிருஷ்ணமூர்த்தி. அவர் பிப்ரவரி1, 2013 அன்று பதவியேற்ற பின்னர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியும், மாணவர் சேர்க்கையும் முடங்கிப்போய், ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஒரு பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலைக்குச் சரிந்துள்ளது. முக்கியக் கோப்புகள் பலவும் ஆண்டுக்கணக்கில் தேங்கிப்போய் பணிகள் எதுவும் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோப்புகளின் மீது எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் தனக்கு வேண்டியவர்கள் என்றால் விதிகளுக்குப் புறம்பாக எதுவும் செய்வதும், வேண்டாதவர்கள் என்றால் காலவரையற்றுக் கிடப்பில் போடுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளின் நிர்வாக நடைமுறை.
தன்னைச் சந்திப்பதற்காக முன்அனுமதி பெற்றுவரும் உயர் அலுவலர்கள், துறைத்தலைவர்கள், புல முதன்மையர்கள் (Deans) என்று எல்லோரையும் மணிக்கணக்கிலும் நாள் கணக்கிலும் காக்கவைத்துச் சந்திப்பதே அம்மையாருக்கு வாடிக்கை. ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள் எந்த அனுமதியோ, அறிவிப்போ, காத்திருப்போ எதுவுமின்றி எப்போது நினைத்தாலும் தன் அறைக்குள் பிரவேசிக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளார், இந்தத் துணைவேந்தர். காத்திருந்து காத்திருந்தே கணிசமான காலத்தை விரையமாக்கி தங்களது கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குமுறுகின்றனர் பேராசிரியர்களும் ஊழியர்களும்.
கடந்த துணைவேந்தர் காலத்தில் தொடங்கப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஐந்து கட்டிடங்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்கும் தருவாயில் வேலைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டு, வேலைகள் அனைத்தும் முடிந்த பின்னரும்கூட திறக்கக் கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறார் இந்தத் துணைவேந்தர். அக்கட்டிடங்கள் புதிய 24 மணிநேர நூலகம், சுற்றுச்சூழல் துறை, தகவல் தொடர்பியல் துறை என பல்வேறு பயன்பாடுகளுக்கு எப்போதோ திறக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, நூலகம் திறக்கப்படாததால் மாணவர்கள் அமர்ந்து படிக்க ஒழுங்கான இடம் இல்லாமல் உள்ளனர்.
தனக்கென்று பிரத்தியேகமாக 3 பல்கலைக்கழக கார்கள் பயன்படுத்துவது, 25 இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகச் செலவில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பங்களாவைச் செப்பனிட்டு நீச்சல் குளம் அமைத்தது, மனம்போனபோக்கில் செலவழிப்பது என்று எல்லா விதங்களிலும் ஒரு மினி ஜெயலலிதாவாகத் திகழ்ந்து வருகிறார் இந்தச் சீமாட்டி.
ஆய்வுசெய்யத்தான் கட்டிடங்கள் இல்லை என்றால், ஆய்வேட்டைச் சமர்ப்பித்த பின்னரோ ஆய்வு மாணவர்கள் எதிர்கொள்ளும் சூழல் இன்னும் பயங்கரமானது. ஆய்வேட்டைச் சமர்ப்பித்துவிட்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்றனர் மாணவர்கள். ஆனால் ஆய்வேடுகள் தேர்வாளர்களுக்கு திருத்துவதற்காக அனுப்பப்படுவதே இல்லை. ஆய்வேட்டை எந்தத் தேர்வாளரிடம் (External Examiners) அனுப்புவது என்று முடிவுசெய்து குறிக்க (Tick பண்ணுவதுதான் வேலை!) வேண்டிய துணைவேந்தரோ இந்தச் சாதாரணப் பணியை முடிப்பதற்கு மாதக் கணக்கில் காலம் தாழ்த்துகிறார். அப்புறம் அவருக்குக் கீழ் உள்ள பணியாளர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? ஆய்வை முடித்து தனது வாழ்வில் செட்டில் ஆவது, பணிவாய்ப்பைத் தேடுவது ஆய்வு மேற்படிப்புக்குச் (Post-Doctorate) செல்வது என்று பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் சமர்ப்பித்த தமது ஆய்வேடு குறித்து ஏதேனும் வேலை நடக்கிறதா என்று தனியாக ஓர் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது!
யார் எப்படிப்போனாலும் தனது சுகபோகத்திற்கு எந்தக் குறையும் வைத்துக்கொள்வதில்லை இந்தப் “பேராசிரியர்”. தனக்கென்று பிரத்தியேகமாக 3 பல்கலைக்கழக கார்கள் பயன்படுத்துவது, 25 இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகச் செலவில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பங்களாவைச் செப்பனிட்டு நீச்சல் குளம் அமைத்தது, மனம்போனபோக்கில் செலவழிப்பது என்று எல்லா விதங்களிலும் ஒரு மினி ஜெயலலிதாவாகத் திகழ்ந்து வருகிறார் இந்தச் சீமாட்டி.
இவற்றையெல்லாம் வைத்து இவர் ஒரு மினி ஜெயா என்று நீங்கள் நம்பத் தயாரில்லையா? பல்கலைக்கழகத்தின் முக்கிய உயர் பொறுப்புகளுக்கு தகுதிவாய்ந்தவர்களை நிரந்தரமாக முறைப்படி தேர்வுசெய்து பணியிலமர்த்தாமல், தனது கைக்கூலிகள், நிர்வாக அறிவோ அடிப்படை அருகதையோ அற்ற தனது அடிவருடிகளை அப்பொறுப்புகளில் தற்காலிக (In Charge) நிலையிலேயே ஓராண்டிற்கும் மேலாக வைத்துள்ளார், இந்தத் துணைவேந்தர். பன்னீர்செல்வம் என்ற பேராசிரியர் பொம்மைப் பதிவாளராக நீட்டிய தாள்களில் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போடும் தனது வேலையைச் செய்கிறார், தமிழகத்தின் டம்மி முதல்வர் பன்னீர்செல்வத்தைப் போலவே. பூணூல் தகுதி பெற்றிருப்பவர்களும், அவர்களை அண்டிப்பிழைக்கக் கொஞ்சமும் அஞ்சாதவர்களும் இவ்வாறே தமது சாதிக்கும் விசுவாசத்திற்கும் தக்கபடி பதவிகள் பெற்றுள்ளனர்.
இந்த முறைகேடுகளோடு, இத்தகைய துணைவேந்தரின் நிர்வாகத்தில் மாணவர் விரோத நடவடிக்கைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. சென்ற ஆண்டு ஏப்ரல் 6-7-ம் தேதிகளில் ஹரிஹரன் என்ற பார்ப்பனப் பேராசிரியரும் பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ராதாகிருஷ்ணன் என்ற தமிழ்த்துறை மாணவனை செய்யாத குற்றங்களை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடைத்து வைத்துத் துன்புறுத்தினர். பின்னர் நடைபெற்ற மாணவர் போராட்டங்களால் நிலைகுலைந்துபோன நிர்வாகம் பெயரளவில் ஒரு விசாரணை நடத்தியது. ஆனால், இதுவரை அந்த விசாரணை அறிக்கையை வெளியிடவும் இல்லை, யார்மீதும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஹரிஹரனை மொத்தம் 28 பல்கலைக்கழகப் பொறுப்புகளில் அமரவைத்து அழகு பார்க்கிறார் துணைவேந்தர்! பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்களைக் கண்டறியத் துப்பில்லாமல் ஒரு அப்பாவி ஏழை மாணவனை அடித்துத் துன்புறுத்திய ஹரிஹரன் கும்பலையோ அதற்குத் துணைபோன இந்தத் துனைவேந்தரையோ இந்த அரசமைப்பும், நீதிப் பரிபாலனமும் எதுவும் செய்யவில்லை, மாறாக அவர்களின் பதவிகளைப் பாதுகாக்கின்றன.
பன்னீர்செல்வம் என்ற பேராசிரியர் பொம்மைப் பதிவாளராக நீட்டிய தாள்களில் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போடும் தனது வேலையைச் செய்கிறார், தமிழகத்தின் டம்மி முதல்வர் பன்னீர்செல்வத்தைப் போலவே. பூணூல் தகுதி பெற்றிருப்பவர்களும், அவர்களை அண்டிப்பிழைக்கக் கொஞ்சமும் அஞ்சாதவர்களும் இவ்வாறே தமது சாதிக்கும் விசுவாசத்திற்கும் தக்கபடி பதவிகள் பெற்றுள்ளனர்.
ஈவ்-டீசிங் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு எதிராக நின்று, உடற்க்கல்வித்துறை பேராசிரியர் பிரவீன் என்ற தனது அடிவருடிக்கு ஆதரவாக ஈவ்-டீசிங் புகார் கொடுத்த மாணவிகளை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கியது நிர்வாகம். இதனால் சென்னை உயர்நீதி மன்றத்தின் கண்டனத்தைப் பெற்று 20,000 ரூபாய் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மாணவிக்கும் நட்டஈடு வழங்கி அவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள பணிக்கப்பட்டது நிர்வாகம். மேலும் மாணவிகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழலை உருவாக்கி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்களையும் பாதுகாத்து வருகிறார் இந்தத் துணைவேந்தர்.
இந்தக் கேவலமான நிலையில்தான் தமது விடுதிகளுக்குத் தண்ணீர்கூட நாள்கணக்கில் வரவில்லை என்பதால் கொதித்துப்போன மாணவிகள் 23-ம் தேதி வியாழன் அன்று நள்ளிரவில் பல்கலைக்கழகச் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
“பேராசிரியர்” சந்திரா கிருஷ்ணமூர்த்தி பல பொய்யான தகவல்களைக் கொடுத்தே இப்பதவிக்கு வந்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டுமானால் குறைந்தது 10 ஆண்டுகளாவது பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று இந்த அரசின் விதிகள் கூறுகின்றன. ஆனால், பேராசிரியர் நிலையில் (Professor) பணியாற்றாத ஒருவர் இங்கு எல்லாச் சட்டங்களையும் மீறி துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றால் நடப்பது ஜனநாயக அரசா மனுநீதி அரசா? மொத்தம் 10 ஆய்வு மாணவர்களை உருவாக்கியிருப்பதாகப் புளுகியிருக்கிறார் இந்தத் துணைவேந்தர். ஆனால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான PUTA தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள தகவல்களின்படி ஒரு ஆய்வு மாணவர் மட்டுமே இவரது மேற்பார்வையில் ஆய்வு முடித்துள்ளார். மேலும் சி.பி.ஐ விசாரணையை எதிர்நோக்கியுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட எல்லாக் குற்றக்கும்பல்களுக்கும் பாதுகாப்பு அரணாய் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் துணைவேந்தர்.
இவரது நியமனத்தை செல்லாததாக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் மனிதவள அமைச்சகத்திற்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பியவண்ணம் உள்ளனர். மேலும் ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மூன்று முறை பேரணிகளும் மற்றும் முற்றுகையும், இரண்டு முறை உண்ணாவிரதங்களும் நடத்தியுள்ளன.
இந்தக் கேவலமான நிலையில்தான் தமது விடுதிகளுக்குத் தண்ணீர்கூட நாள்கணக்கில் வரவில்லை என்பதால் கொதித்துப்போன மாணவிகள் 23-ம் தேதி வியாழன் அன்று நள்ளிரவில் பல்கலைக்கழகச் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தத் துணைவேந்தர் கடந்த காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் டெல்லியில் தொடர்ந்து செல்வாக்குச் செலுத்துகிறார். பார்ப்பனப் பாசிச பங்காளிகள் மத்தியில் வீற்றிருக்கும்போது தனது பதவி பறிபோய்விடுமோ என்று கவலைப்பட துனைவேந்தருக்குக் காரணங்கள் இல்லைதான்! அதுமட்டுமின்றி, தானே எங்கோ ஒரு பல்கலைக்கழகத்தில் காசுகொடுத்து பட்டம் வாங்கியுள்ள மனிதவள அமைச்சரா இந்தத் துணைவேந்தரின் முறைகேடுகளைத் தடுக்கப் போகிறார்?
நீதிமன்றங்கள் தற்காலிகத் தீர்வுகளைத் தந்தாலும் தானே ஊழல்மயப்பட்டு அழுகி நாறும் இந்த அரசமைப்பு இப்பல்கலைக்கழகத்தின் சீர்கேடுகளைச் சரிசெய்யும் என்று இனியும் நம்ப காரணங்கள் எதுவும் இல்லை. நேர்மையும் உறுதியும் கொண்ட பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், மக்கள் என அனைவரும் இனைந்து போராடுவது மட்டுமே மக்களின் பொதுச்சொத்தான புதுவை பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்க ஒரேவழி. ஏனென்றால், இந்தப் பல்கலைக்கழகத்தின் சீர்கேடானது அதன் வளாகத்தோடு முடிந்துவிடும் பிரச்சனையல்ல, உண்மையில் தோற்றுப் போய் நிற்கும் மொத்த அரசமைப்பின் வகைமாதிரியே இந்தப் பல்கலைக்கழகம்.
தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு.), புதுச்சேரி அமைப்புக்குழு.
ஊரைக் கொள்ளையடித்து சொத்து சேர்த்த ஜெயலலிதா மீதான லஞ்ச வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
பவானி சிங் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
1991-96-ம் ஆண்டில் ஜெயா-சசி கும்பல் தமிழகத்தையே மொட்டையடித்தது.
“வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அதே நேரம் இவ்வழக்கில் மறு விசாரணைக்கு அவசியமில்லை” என்று அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
1991-96-ம் ஆண்டில் ஜெயா-சசி கும்பல் தமிழகத்தையே மொட்டையடித்தது. அந்த ஊழல் மலையின் சிறு துளிதான் இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியிருந்தது. பின்னர் 2001-ம் ஆண்டில் பாசிச ஜெயா மீண்டும் தமிழகத்தை ஆண்ட போது இந்த வழக்கில் எல்லா முறைகேடுகளும் நடந்தன. அப்போது தி.மு.க தலைவர் அன்பழகன் தொடுத்த வழக்கின் விளைவாகத்தான் இவ்வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது.
அதிலும் ஜெயா கும்பல் பல்வேறு இழுத்தடிப்புகளையும், மோசடிகளையும் செய்து “இதுதாண்டா நீதித்துறையின் இலட்சணம்” என்று கேலிக்கூத்தாக்கியது. இருப்பினும் வாய்தா ராணியையும் அவரது கூட்டாளிகளையும் குற்றவாளி என்று 2014, செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பளித்து சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது, சிறப்பு நீதிமன்றம்.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் முறைகேடான தீர்ப்பின் காரணமாக பிணை பெற்று வெளியே வந்தது, ஜெயா கும்பல்
சிறை சென்ற ஜெயா கும்பல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனு நிராகரிக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் முறைகேடான தீர்ப்பின் காரணமாக பிணை பெற்று வெளியே வந்தது. பிறகு உச்சநீதிமன்ற உத்திரவின்படி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் ஜெயா கும்பலின் மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில்தான் அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜரானார். பச்சையாகவும், வெளிப்படையாகவும் ஜெயா தரப்புக்கு ஆதரவாக அவர் வைத்த வாதங்களும், கேள்விகளும் காலாகாலத்திற்கு நீதித்துறையின் அருகதையை வெளிப்படுத்தும் சாட்சியமாக இருக்கும்.
ஜெயா மீதான ஊழல் வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட, அதே ஜெயா கட்டுப்படுத்தும் அரசின் உத்தரவுப்படி பவானிசிங் ஆஜரானது வெளிப்படையாக நடைபெற்றாலும் அது குறித்து இங்கே பெரிய அதிர்ச்சி ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை.
தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் மட்டும் இதை எதிர்த்து வழக்கு தொடர, அது உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட பிறகு அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் நீதிபதிகள் மதன் லோகூர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. பவானி சிங் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி, விழா ஒன்றில் பாசிச ஜெயாவை புரட்சித் தலைவி என்று அழைத்திருக்கிறார். நீதித்துறை அனைவருக்கும் சமமாக நடந்து கொள்வதில்லை என்பது பொதுவான உண்மையாக இருந்தாலும் ஜெயாவின் வழக்கில் அது பச்சையான திமிருடன் அறிவிக்கப்பட்டது.
ஜெயா கும்பல்தான் குற்றவாளி என்று வாதிட்டிருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் சேம் சைடு கோல் போடுகிறார் என்றால் அந்த வழக்கு எப்படி நடந்திருக்கும்?
பிறகு மூவர் அடங்கிய அமர்வில் பவானிசிங் நியமனம் செல்லாது என்று தற்போது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயதார்த்தம் செல்லாது என்று அறிவித்திருக்கும் நீதிமன்றம் திருமணத்தை மட்டும் அங்கீகரித்திருக்கிறது. ஜெயா கும்பல்தான் குற்றவாளி என்று வாதிட்டிருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் சேம் சைடு கோல் போடுகிறார் என்றால் அந்த வழக்கு எப்படி நடந்திருக்கும்?
அதாவது, மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் மறு விசாரணை தேவையில்லை என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். பவானி சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்திருக்கும் வாதத்தை நீதிபதி குமாரசாமி ஏற்கக் கூடாது என்று தடுத்திருக்கின்றனர். கர்நாடக அரசு மற்றும் அன்பழகன் தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்களை ஒரு நாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும், அதை கருத்தில் கொண்டு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
ஊரறிய உலகறிய பேசி, வாதிட்டு, ஒரு வெளிப்படையான சதிகாரராக நடந்து கொண்ட அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு என்ன தண்டனை?
இவை அனைத்திற்கும் என்ன பொருள்? பவானி சிங்கை முறைகேடாக நியமித்து வழக்கை குழி தோண்டி புதைக்க முயன்ற தமிழக அரசு, அதை ஆணையிட்டு நடத்தும் ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதா அவரது அடிமைகள் ஓ.பி.எஸ் முதலான அற்பங்கள் அனைவருக்கும் என்ன தண்டனை?
சாட்சியங்களை கலைப்பார் என்று பிணை மறுக்கும் நீதிமன்றம், இங்கே நீதிமன்றத்தையே கலைக்கும் வல்லமை கொண்ட ஜெயாவை சுதந்திரமாக போயஸ் தோட்டத்தில் குந்த வைத்து பா.ஜ.க மோடி அரசுடன் ஒப்பந்தம் போட்டு இவ்வழக்கை சீர்குலைக்க முயல்வதற்கு ஆசீர்வாதம் அளித்திருப்பதற்கு என்ன பொருள்?
அரசு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வது சகஜம் என்றாலும் இங்கே ஊரறிய உலகறிய பேசி, வாதிட்டு, ஒரு வெளிப்படையான சதிகாரராக நடந்து கொண்ட பவானி சிங்கிற்கு என்ன தண்டனை? அவருக்கு இவ்வழக்கின் மூலம் அளிக்கப்பட்ட தமிழக மக்களின் பல இலட்ச ரூபாயை பறிக்காமல் விட்டு வைத்திருப்பது என்ன நீதி?
வழக்கை குழி தோண்டி புதைக்க முயன்ற தமிழக அரசு, அதை ஆணையிட்டு நடத்தும் ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதா அவரது அடிமைகள் ஓ.பி.எஸ் முதலான அற்பங்கள்.
மேலாக, பலான பவானி சிங் நியமனமே செல்லாது என்று அறிவித்துவிட்டு அவரது வாதத்தை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு அளியுங்கள் என்றால் என்ன பொருள்? இவையெல்லாம் என்ன முறைகள், முன்னுதாரணங்களின் கீழ் வரும்? ஒரு நாளில் கர்நாடக அரசும் தி.மு.க தரப்பும் தாக்கல் செய்ய வேண்டுமென்றால் என்ன பொருள்? இது என்ன பரபரப்பு செய்திகளை காட்டும் தொலைக்காட்சியா?
இங்கே நமது கேள்வி என்னவென்றால் நாடறிந்த ஒரு ஊழல் தலைவரைக் காப்பாற்ற இங்கே ஆளும் வர்க்கம் அனைத்தும் எப்படி ஒரு குரலில் சேர்ந்து வேலை செய்கிறது என்பதே! ஊடகங்கள் அனைத்தும் ஓரிரு விதிவிலக்கு தவிர இந்த வழக்கை ஒரு தொழில் நுட்ப சிக்கலாகவே பேசுகின்றன. உண்மையில் ஜெயா கும்பல் நடத்தியிருக்கும் சதி, அதற்குத் துணை போன அரசு, நீதி அமைப்புகள் குறித்து இங்கே யாரும் வாதங்களை வைக்கவில்லை. இது ஜெயா மீதான பயத்தினால் அல்ல, ஆளும் வர்க்கம் திவாலாகி வருவதை விட்டுக் கொடுக்காத எச்சரிக்கையினால் வருவது.
இனி நீதிபதி குமாரசாமி, ஜெயா கும்பலை குற்றவாளி என்று அறிவித்தாலும் இன்னும் அதை அமல்படுத்த முடியாத அளவுக்கு ஏகப்பட்ட ஓட்டைகளையும், வாய்ப்புகளையும் இவ்வழக்கில் கொண்டு வந்து விட்டார்கள். மேலாக, கிரிமினல் பிரதமர் மோடி இருக்கும் போது, அவரது ஆசி பெற்ற உச்சநீதிமன்றம் இருக்கும் வரையிலும் பார்ப்பன பாசித்தின் இளைய பங்காளியான ஜெயலலிதாவை காப்பாற்றுவதையே ஆளும் வர்க்கம் செய்யும்.
ஊழல் வழக்கில் ஜெயா கும்பலை நாம்தான் தண்டிக்க வேண்டும். அந்த கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்து மக்கள் சொத்துக்களாக அறிவிக்க வேண்டும். இந்தப் போராட்டங்கள் வீச்சாக நடைபெற்றால் மட்டுமே நீதித்துறையிலிருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்.
‘வரலாற்றில்’ தொலைந்து போன சரஸ்வதி நதியை மீட்கப் போகிறதாம் ஹரியானா மாநில அரசு. பிப்ரவரி, 2015-லிருந்து ஆதி பத்ரா பகுதியில் இதற்கான ஆய்வுகளை, மாநில அரசின் வனத்துறை மேற்கொண்டு வருகின்றது.
சரஸ்வதி நதியை மீட்கப் போகிறதாம் ஹரியானா மாநில அரசு. (படம் : நன்றி thehindu.com )
13 மார்ச், 2015 தேதியன்று யமுனா நகரில் நடந்த கூட்டமொன்றில் பேசிய மாநில பாரதிய ஜனதா முதல்வர் மனோகர் லால் கட்டர், ஆதிபத்ராவில் துவங்கவுள்ள சரஸ்வதி நதிக்கான அகழ்வாய்வு மிகப் பெரிய திட்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்காகவே அரசு உயரதிகாரிகள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட உள்ள சரஸ்வதி நதிக்கான நீராதாரத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
தமக்கு கிடைக்காத கல்வி குறித்து “சரஸ்வதி கடாட்சம் கிடைக்கவில்லை” என்று ஏழை மக்கள் முடித்துக் கொள்வார்கள். இங்ஙனம் ‘உயர் சாதி’ இந்துக்களிடம் சிக்கியுள்ள கல்வி சரஸ்வதி ஒரு புறம் என்றால் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் உருவாக்கியிருக்கும் சரஸ்வதி நதி இன்னொரு அவதாரம்.
ஆதிக்கத்தை தொடர வேண்டுமென்றால் வரலாற்றில் “ஏ டூ இசட்” வரை சகல பொய்களையும் கச்சிதமாக எழுப்ப வேண்டும். ஆகவே ஹரப்பா – சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நதி நாகரீகம் என்றே அழைக்கப்பட வேண்டும், மறைந்து போன சரஸ்வதி நதிக்கரையில் தான் வேதகால நாகரீகம் உச்சகட்ட வளர்ச்சியடைந்திருந்தது….. என இவற்றையெல்லாம் நிலைநாட்ட இந்துத்துவ கும்பல் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் கரடியாக கத்திக் கொண்டிருக்கிறது.
‘ஆரியர்கள் வந்தேறிகள் இல்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் தான் இந்தியாவின் சரஸ்வதி நதி தீரத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறிய ஆதி குடிகள்’
அதாவது, ‘இந்த நாட்டின் திராவிடர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட எல்லா இன மற்றும் மொழிக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஆரியர்களும் வேறு வேறு அல்ல; சரஸ்வதி நதிக்கரையில் வைத்து எழுதப்பட்ட ஆரிய இலக்கியங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் – அதாவது சமஸ்கிருதம், பார்ப்பனியம், சாதி – மொத்தமும் இந்திய கலாச்சாரமே’ என்பதை நிலைநாட்டும் முயற்சிகளை இந்துத்துவ கும்பல் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இந்த விளக்கங்கள் எந்தளவுக்கு நீள்கிறது என்றால், ‘ஆரியர்கள் வந்தேறிகள் இல்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் தான் இந்தியாவின் சரஸ்வதி நதி தீரத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறிய ஆதி குடிகள்’ என்கிறார் சமீபத்தில் மோடி அரசால் பத்மவிபூஷன் விருது அளிக்கப்பட்ட அமெரிக்க சாமியார் டேவின் ஃப்ராலே (வாமதேச சாஸ்திரிகள்).
சமஸ்கிருதம் தான் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்யும் பிரச்சாரத்துக்கு ”ஆதாரங்கள் சப்ளை” செய்யப் போகும் ஆய்வாளர் இவர் தான்.
பிரச்சாரங்களுக்குத் தேவையான ஆதாரங்களை சப்ளை செய்வது.
தங்கள் பிரச்சாரங்களுக்குத் தேவையான ஆதாரங்களை சப்ளை செய்வதற்காகவே நட்வர் ஜா, ராஜாராம் போன்ற பல்வேறு ‘அறிஞர்களை’ உற்பத்தி செய்து அவர்களின் ’ஆய்வு’ அறிக்கைகளை, தமது ஆட்சிக்காலங்களில் நடந்த அறிவியல் மாநாடுகளில் சமர்பிக்கச் செய்தது இந்துத்துவ கும்பல். அறிவியல் மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்டதாலேயே அவற்றில் உள்ள உளறல்களை இந்துத்துவ இணையச் சில்லுண்டி அறிஞர் பெருமக்கள் மேற்கோள் காட்டி தங்களுக்குள் மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
ஆனால் பரிதாபம் என்னவென்றால், இந்துத்துவ வரலாற்று அறிஞர்களால் சிந்து சமவெளி நாகரீகத்தைக் கைப்பற்றச் செய்யப்படும் முயற்சிகள் ஒவ்வொன்றும் மொத்த ஆய்வுலகத்தையும் நகைப்பில் ஆழ்த்துகிறது. ஹரப்பாவில் ’கண்டுபிடிக்கப்பட்ட’ குதிரையும், ‘சரஸ்வதி நதியிலிருந்து உலகமெங்கும் பரவிச் சென்றது மனித இனம்’ என்ற விளக்கமும் மிகக் கேவலமாக அம்பலப்பட்டு சந்தி சிரித்தது.
“அரசர் ஆடையில்லாமல் அம்மணமாக வீற்றிருக்கிறார்” என்ற உண்மையை அவர்களது அரசவையில் உள்ள எவரும் இன்று வரை எடுத்துச் சொல்லவில்லை. விளைவு? ஆர்.எஸ்.எஸ் ஷாகாவின் தயாரிப்பான மோடி, அறிவியலே வெட்கப்படுமளவு விஞ்ஞானியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
திருவாளர் மோடி அவர்கள், புராண காலத்தில் இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததற்கான ஆதாரமாக சிவகாசி ஓவியரால் வரையப்பட்ட விநாயகரின் படத்தை முன்வைத்திருப்பதை வாசகர்கள் அறிவார்கள். இன்னும் சில ஆண்டுகள் கழித்து ’அறிவியல்’ மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட இந்த ’அறிவியல்’ உரையிலிருந்து அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் மேற்கோள் காட்டி எழுதும் நூலை கிழக்கு பதிப்பகம் பதிப்பிக்கலாம்; இந்து கடவுளர்களையே உருவாக்கிய சிவகாசி ஓவியர்களின் வரலாற்றை அறிந்தவர்கள் ஆதித்யா சானல் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
போகட்டும். எத்தனை அடித்தாலும் தாங்குவதற்கு முதுகோ, மானமோ இல்லை என்பதால் குதிரையில் விட்டதை சரஸ்வதியில் பிடிக்கும் முயற்சியை காவி கோஷ்டிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
’காணாமல்’ போன சரஸ்வதி நதியைத் தேடும் பாரதிய ஜனதாவின் முயற்சி புதிதல்ல. 2014-ம் ஆண்டில் நீர்வளத் துறை அமைச்சரான உமா பாரதி சரஸ்வதி நதியை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் இம்முயற்சியை 2002-ம் ஆண்டே எடுத்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும், சரஸ்வதி நதியை இன்னும் தயாரித்து தீர்ந்தபாடில்லை.
இல்லாத கலாச்சார பாரம்பரிய பெருமைகளை இந்துக்களின் மூளைக்குள் திணிக்கும் நடவடிக்கைகள்.
இல்லாத கலாச்சார பாரம்பரிய பெருமைகளை இந்துக்களின் மூளைக்குள் திணிக்கும் நடவடிக்கைகளில் அப்போதைய பாரதிய ஜனதாவின் கலாச்சாரத் துறை அமைச்சரான ஜக்மோகன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். “சரஸ்வதி நதியை உருவாக்கும் முயற்சியைப் பொருத்த வரை, அதில் கிடைக்கப் போகும் வெற்றி தோல்விகளை விட அம்முயற்சி உண்டாக்கும் தேசியப் பெருமிதமே முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
கிணறு : வடிவேலுவின் வார்த்தைகளின் படி…
சரஸ்வதியைத் தேடுவதிருக்கட்டும், முதலில் அவள் கருப்பா சிவப்பா என்பதிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன. “சரஸ்வதி நதி புராண காலத்தில் இமயத்தில் உற்பத்தியாகி கங்கைக்கும் யமுனைக்கும் நடுவே ஓடி உத்திரபிரதேச மாநிலம், அலகாபாத் நகரின் திரிவேணி சங்கமத்தில் கலந்தது; தற்போதும் அந்த நதி கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கு அடியில் ஓடிக் கொண்டிருக்கிறது” என்பது ‘இந்துக்களின் நம்பிக்கை’.
இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அலகாபாத்தில் கும்பமேளா நடக்கிறதாம். இந்துக்களின் நம்பிக்கையை கிளறிவிட்டோ, இல்லை, வேக வைத்தோ வயிறு வளர்க்கும் கட்சிதான் பாரதிய ஜனதா என்பதைச் சொல்லத் தேவையில்லை. அந்த ‘நம்பிக்கையின்’ அடிப்படையிலேயே பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது, சேது கால்வாய்த் திட்டம் முடக்கப்பட்டது. ஆனால், சரஸ்வதியின் விசயத்தில் இந்துக்களின் நம்பிக்கையும் இந்துத்துவாவின் நம்பிக்கையும் வேறு வேறாக இருக்கிறது.
‘சரஸ்வதி நதி ஹரியானா மாநிலம் ஆதி பத்ராவில் உற்பத்தியாகி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத்தின் வழியே தெற்கு நோக்கிப் பாய்ந்து கட்ச் அருகில் கடலில் கலந்தது’
இந்துத்துவ கும்பலைப் பொருத்தவரை, ‘சரஸ்வதி நதி ஹரியானா மாநிலம் ஆதி பத்ராவில் உற்பத்தியாகி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத்தின் வழியே தெற்கு நோக்கிப் பாய்ந்து கட்ச் அருகில் கடலில் கலந்தது’ என்கிறார்கள். இதில் ஒரு டெக்னிக்கல் பிரச்சினை இருக்கிறது – அதாவது, அந்தப் பகுதி நிலப்பரப்பின் புவியியல் தன்மையையின் படி நிலம் தென்மேற்கான சரிவு கொண்டது. புவியியலை கணக்கில் எடுத்துக் கொள்வதானால், உருவாக்கப்பட உள்ள சரஸ்வதி நதி பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் சென்றாக வேண்டும்.
அந்தோ பரிதாபம்! எதிர்கால அகண்ட பாரதத்தில் இடம் பெறவுள்ள பாகிஸ்தான் தற்போதைக்கு மாட்டுக்கறி தின்னும் முசல்மான்களின் வசம் உள்ளது. கோட்டைத் தாண்டிப் போனால் கவட்டைக்குள் கம்பை விட்டுச் சுத்தும் ஆபத்து உள்ளது. வேறு வழி? ”கோதாவரீ.. இந்திய எல்லைக் கோட்டுக்கு உள்ளேயே கோட்டைக் கிழிடி” என்கிறது இந்துத்துவ கும்பல்.
விட்டால் கொஞ்ச நாட்களில் சிந்துவெளி நாகரீகமே இன்றைய இந்தியாவில்தான் தோன்றியது என்றும், மொகஞ்சதாரோ, ஹரப்பா கண்டுபிடிப்புகளெல்லாம் வெள்ளையர் சதி என்றும் கூற வாய்ப்பிருக்கிறது.
“சரஸ்வதி நதியை கற்பனை செய்வது” – வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபீப்
வேத புராணங்களில் – குறிப்பாக ரிக் வேதத்தில் – சரஸ்வதி நதி குறித்து வரும் சில குறிப்புகள் அதை, சிந்து நதிக்கு இணையாக ஓடிய பெரு நதியாகச் சித்தரிக்கின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தைப் பறை சாற்றும் ஆதாரங்கள் அனைத்துமே சிந்து நதிக்கரையை ஒட்டிய சமவெளிப் பகுதியில் இருந்து கிடைத்தவை. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை தற்போதைய பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்துள்ளன.
ஆரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், வேத நாகரீகம் தான் இந்திய நாகரீகம் என்ற தங்களது சிந்தாந்தத்திற்கு முட்டுக் கொடுக்க வேண்டுமென்றால், சிந்து சமவெளி நாகரீகத்தை பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் கொண்டு வந்தாக வேண்டும்; சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நதி நாகரீகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஆக, ரிக் வேதத்தில் சொல்லப்படும் சரஸ்வதி நதியின் பாதை எப்படி இருந்தால் தங்களது விளக்கங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை உத்தேசித்தே தற்ப்போது ஆதி பத்ராவில் நிலத்தைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்.
எனில் பிரயாகையையும், திரிவேணி சங்கமமும்?
‘சமஸ்கிருதம், பார்ப்பனியம், சாதி – மொத்தமும் இந்திய கலாச்சாரமே’
சரஸ்வதி நதி வற்றிப் போன பின் கிழக்கு நோக்கி நகர்ந்த மக்களின் தொன்ம நினைவுகள் என்கிறார்கள். அதாவது இந்துக்களின் ’நம்பிக்கைக்கு’ அலகாபாத் – இந்துத்துவாவின் நம்பிக்கைக்கு ஆதி பத்ரா!
சரி, நதியின் பாதையை வரையறுத்தாயிற்று.. தண்ணீருக்கு எங்கே போவது? கடைசியாக கிடைத்த தகவல்களின் படி போர்வெல் போட்டு பூமியைக் குடைந்து கொண்டிருக்கிறார்களாம். ஆதி பத்ரா என்பது ஹரியானாவின் சிர்சா மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி. சிர்சா மாவட்டம் ஏற்கனவே வறண்ட பகுதி. எனவே நிலத்தடி நீர் தீர்ந்து போனால்? அக்கம் பக்கத்தில் உள்ள நீராதாரங்களில் உள்ள நீரை மடைமாற்றி விட்டு எப்படியாவது சரஸ்வதியை உருவாக்கியே தீர்வது என்ற லட்சிய வெறியில் உள்ளனர் காக்கி டவுசர்கள். இனி விவசாயிகள் சரஸ்வதி நதிக்காக நிலத்தடி நீரை இழப்பதோடு தற்கொலையும் செய்து கொள்ள வேண்டும் போல.
வடிவேலு வெட்டிய கிணறு : வட்டமா சதுரமா முக்கோணமா?
அரசியல் கழிசடைத்தனமான விளையாட்டிற்கு மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கான கோடிகளில் கொட்டப்படும்.
ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட சரஸ்வதி நதியைப் பற்றிய குறிப்புகளே முரண்பட்டவையாக உள்ளன. நான்கு வேதங்கள் என்று சொல்லப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகியவற்றின் சமஸ்கிருத சுலோகங்களின் தொகுப்புகள் ஒரே காலகட்டத்தில் ஒரே நபராலோ அல்லது ஒரு குழுவாலோ எழுதப்பட்டவை அல்ல.
மொழியியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி காலத்தால் முந்தையதாகச் சொல்லப்படும் ரிக் வேதத்தின் பகுதிகள் சுமார் முன்னூறு ஆண்டுகால இடைவெளியில் எழுதப்பட்டவை (கி.மு 1500 – 1200). எழுதப்பட்டவை என்று சொல்வதை விட பாடப்பட்டவை – அப்போது சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் கிடையாது.
ரிக்வேத சுலோகங்களைப் பாடியவர்கள் யாரும் தாங்கள் பாடும் பாடல்கள் பிற்காலத்தில் வேதங்களாக அறியப்படும், புனிதமாக போற்றப்படும் என்ற தன்னுணர்வில் இருந்து அவற்றைப் பாடவில்லை. தாங்கள் பாடுவது (இன்றைக்கு 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருளிலான) வேதங்கள் என்ற புரிதலும் அவர்களுக்குக் கிடையாது. நாடோடி நாகரீகத்தில் இருந்த ஆரியர்களின் ஆரம்ப கால கட்ட புரிதலே இப்பாடல்கள். மேற்படியாக இயற்றப்பட்ட பாடல்களை குப்தர்களின் காலமான 6-ம் நூற்றாண்டில் தான் வேதங்களாக எழுத்து வடிவில் தொகுத்துள்ளனர்.
குழப்பமான வர்ணனைகளை தற்போதைய புவியியல் கூறுகளோடு பொருத்தும் முயற்சிகள் இந்துத்துவ கும்பலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ‘வேத கால’ பாடல்களில் சொல்லப்படும் சரஸ்வதி நதி என்பதைப் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வர இயலாது.
முதலாவதாக, ரிக்வேதத்தின் நதி சூக்தத்தில் வரும் பாடல் ஒன்று (X.75.5) நதிகளை கங்கையில் துவங்கி சுஷோமா வரை கிழக்கு மேற்காக பட்டியலிடுகிறது. இந்தப் பாடலும் வேறு சில பழைய பகுதிகளில் வரும் குறிப்புகளும் சரஸ்வதி நதியை சட்லெஜ் – யமுனை நதிகளுக்கு இடையில் ஓடிய நதியாக முன்வைக்கின்றன. ஏறக்குறைய இந்த புவியியல் விவரணைகளின்படி பார்த்தால், ஹரியானாவின் தானேஸ்வர் பகுதியில் ஓடும் ஒரு சிறு ஒடையான சிர்ஸுதி என்ற நதியைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
இரண்டாவதாக, ரிக்வேதத்தின் மற்றொரு பாடல் (VII, 95.2) மலையில் துவங்கி சமுத்திரம் வரை ஓடிய நீண்டதொரு நதியாக குறிப்பிடுகிறது. பிந்தைய காலத்தில் இயற்றப்பட்ட வேறு சில புராணப் பாடல்கள் மற்றும் மகாபாரதத்தில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே நடந்த இறுதிச் சண்டையின் போது குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதி குறித்த வர்ணனைகள் அந்நதி பாலைவனத்தோடு கலந்து கரைந்து போனதாகச் சொல்கின்றன.
ஆக மூலத்திலேயே குழப்பம்.
‘காக்கர் – ஹக்ரா நதி நீண்டதும் இல்லை, இமயத்தில் உற்பத்தியாகவும் இல்லை, கடலில் கலக்கவும் இல்லை, அது ஒரு ஜீவ நதியும் இல்லை.
இந்தக் குழப்பமான வர்ணனைகளை தற்போதைய புவியியல் கூறுகளோடு பொருத்தும் முயற்சிகள் இந்துத்துவ கும்பலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ‘சிந்து நதிக்கு இணையாக தற்போதைய இந்திய எல்லைக்குள்ளும் பாகிஸ்தானின் எல்லையைத் தொட்டும் ஓடக்கூடிய சிறு நதியான கக்கர்-ஹக்ரா (Ghaggar – hakra) தான் முன்னொரு காலத்தில் சரஸ்வதி நதியென்று அழைக்கப்பட்டது’ என்ற கருதுகோளை அறுதி உண்மை போல் முன்வைக்கிறார்கள். சிர்ஸூதி நதி கக்கர் நதியோடு இணைந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த விளக்கத்தில் மூன்று பிரச்சினைகள் எழுந்தன.
முதலாவதாக, சிர்ஸூதி நதி கக்கரோடு இணைந்தது வேதகால கடவுள்களின் செயலால் அல்ல – மாட்டுக்கறி தின்னும் முசல்மானான பெரோஸ் ஷா துக்ளக்கின் (1351 – 88) கைங்கர்யத்தால். அதற்கு முன் துக்ளக் தனது ஆட்சிக்காலத்தில் பாசன வசதிக்காக இந்த இரண்டு நதிகளையும் இணைத்து காக்கர்-ஹக்ரா நதியை ராஜஸ்தானின் ஹர்னி கேரா வரை ஓட வைத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் ஷாகாகளில் உற்பத்தி செய்யப்பட்ட ‘விஞ்ஞானிகளை’ களமிறக்கி பல ’ஆய்வுக்’ கட்டுரைகளை வெளியிடச் செய்தனர். (ஆர்.எஸ்.எஸ் ‘ஆய்வாளர்’களில் ஒருவர் தீனாநாத் பத்ரா)
நியாயமாகப் பார்த்தால், சிர்ஸூதியை காக்கர் நதியோடு சேர்த்து மேலும் கொஞ்சம் தூரம் ஓட வகை செய்து கொடுத்த பெரோஸ் ஷா துக்ளக்கிற்குத்தான், இந்து முன்னணி ராம கோபாலன் அலகு குத்தி காவடி எடுக்க வேண்டும்.
இரண்டாவதாக, வேத பாடல்களில் சொல்லப்பட்ட விளக்கத்தின் படி காக்கர் – ஹக்ரா நதி நீண்டதும் இல்லை, இமயத்தில் உற்பத்தியாகவும் இல்லை, கடலில் கலக்கவும் இல்லை, அது ஒரு ஜீவ நதியும் இல்லை.
மூன்றாவதாக, காக்கர் சமவெளிப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த அலூவிய படிமத்தை ஆய்வு செய்த மேரி ஆக்னஸ் கவுண்டி குழுவினர் (1983 – 87) கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இந்தப் பகுதியின் ஊடாக இமயத்திலிருந்து எந்த நதியும் பாய்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவினர்.
புதுவை அரவிந்தர் ஆசிரம கஞ்சா யோகத்தில் ஞானதீக்ஷை பெற்ற மிஷேல் தனினோ.
காக்கர்- ஹக்ரி தான் புராணகாலத்தில் தொலைந்து போன சரஸ்வதி நதி என்ற விளக்கத்திலிருந்த முரண்பாடுகளை பிற வரலாற்று, புவியியல், மொழியியல் துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் முன்வைத்து சுற்றி வளைத்து எல்லா கேட்டையும் பூட்டிய பின்னும் இந்துத்துவ கும்பல் அடங்கவில்லை – அதற்கெல்லாம் கொஞ்சம் கூச்ச நாச்சம் வேண்டுமல்லவா?
ஆர்.எஸ்.எஸ் ஷாகாகளில் உற்பத்தி செய்யப்பட்ட ‘விஞ்ஞானிகளை’ களமிறக்கி பல ’ஆய்வுக்’ கட்டுரைகளை வெளியிடச் செய்தனர். மேற்படி ஆய்வுக் கட்டுரைகளை பல இடங்களில் மேற்கோள்காட்டி ஆதாரங்களை ஏற்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டனர்.
அந்த வகையில் பிரான்சைச் சேர்ந்த மிஷேல் தனினோ என்ற ஆய்வாளர் The Lost River என்கிற நூல் ஒன்றை எழுதியுள்ளார். மிஷேல் தனினோ விஞ்ஞானப் படிப்பை பாதியில் கைவிட்டதோடு, புதுவை அரவிந்தர் ஆசிரம கஞ்சா யோகத்தில் ஞானதீக்ஷை பெற்றவர். முக்கியமாக இவருக்கும் புவியியல் அறிவியல், நிலவியல், தொல்லியல், மொழியியல் முதலான அறிவுத்துறைக்கும் யாதொரு தொடர்புமில்லை. இருப்பினும், ‘ஒரு வெள்ளைக்காரரே சரஸ்வதி நதியை ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்’ என்று இந்துத்துவ சில்லறைகள் இதை போற்றுகின்றன.
வெவ்வேறு அறியலாளர்கள் முன்வைக்கும் கருதுகோள்களில் இருந்து இந்துத்துவ நோக்கங்களுக்கும் விளக்கங்களுக்கும் பொருத்தமானவற்றை முறைகேடாக பொறுக்கியெடுத்து ஆஃப் பாயில் உண்மையாக தனது நூலை எழுதியுள்ளார். ஒப்பிட்டுப் புரிந்து கொள்வதற்காக – நமது தமிழ்தேசிய அரைகுறைகள் லெமூரியா காண்டம் பற்றியும், ‘தமிழ் தான் மில்கி வே கேலக்சியிலேயே முதல் மொழி’ என்கிற ரீதியிலும் வெளியிடும் “அறிவியல்” நூல்களை இதற்கு இணையாகச் சொல்லலாம். தனினோ எழுதியதை தமிழாக்கம் செய்து வெளியிட்ட பத்ரியின் கிழக்கு பதிப்பகம் எப்பேற்பட்ட தரத்தோடு இயங்குகிறது என்பதற்கு இந்த கூமுட்டை நூல் ஒரு எடுப்பான சான்று.
பத்ரியின் கிழக்கு பதிப்பகம் எப்பேற்பட்ட தரத்தோடு இயங்குகிறது என்பதற்கு இந்த கூமுட்டை நூல் ஒரு எடுப்பான சான்று.
இந்தக் கோமாளித்தனம் ஒரு பக்கமிருக்க, ருடால்ப் வோன் ரோத் என்ற ஆய்வறிஞர், வேதகாலத்தவர்கள் சிந்து நதியைக் குறிப்பதற்கான இன்னொரு பெயராக சரஸ்வதி நதியை பயன்படுத்தினார்கள் என்கிறார். வோன் ரோத்தின் விளக்கப்படி, சமஸ்கிருதத்தில் நதியை குறிக்க சிந்து அல்லது சரஸ்வதி என்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகிறது என்பது மற்றொரு ஆய்வாளரான ஜிம்மரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சமஸ்கிருத அறிஞரான கே.சி சட்டோபாத்யா போன்றோரும் அதை அங்கீகரிக்கின்றனர்.
இறுதியாக, லிவியு ஜியோசான் என்ற புவியியல் ஆய்வாளர் வேதங்களில் சொல்லப்படும் சரஸ்வதி நதி குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டு (high resolution topographic data, geomorphologic analysis and sediment dating) அவ்வறிக்கையை 2012-ல் வெளியிட்டுள்ளார். அதன்படி, “காக்கர் – ஹக்ரா நதியானது பருவமழையினால் நீரூட்டப்பட்ட நதி” என்றும், “கடந்த பத்தாயிரம் வருடங்களில் (holocene) ஹரியானாவின் குறுக்காக இமயத்தின் பனிச்சிகரங்கள் உருகி அதனால் நீரூட்டப்பட்ட நதி எதுவும் ஓடவில்லை” என்றும் தெளிவாக நிலைநாட்டப்பட்டுள்ளது.
எனினும், ஜியோசானின் ஆய்வறிக்கையை அறிவியல் பூர்வமாக எதிர்கொள்ளும் திராணியற்று வழக்கம் போல் தொன்மம், நம்பிக்கை, வேதம் போன்ற வஸ்துக்களை தூவி இந்துமதவெறியர்கள் எதிர்கொள்கின்றனர். முன்னர் குதிரை இலட்சினைக்கு நடந்ததே, சரஸ்வதி பில்டபுக்கும் நடந்தது. வரலாற்றறிஞர்கள் இந்த நகைச்சுவை இம்சைகளை ரசிக்கிறார்களா, இல்லை, இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று வெறுக்கிறார்களா தெரியவில்லை.
வேதங்களில் சொல்லப்படும் சரஸ்வதி நதி குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொண்ட புவியியல் ஆய்வாளர் லிவியு ஜியோசான்
இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் அது தொடர்பாக வெளியான ஆய்வறிக்கைகள், மற்றும் இந்துத்துவ கும்பல் வைத்த அரைகுறை ”விஞ்ஞான” எதிர்வினைகள், அவை தொடர்பாக ஆய்வுலகில் நடந்த விவாதங்கள் மற்றும் அவை எப்படி முறியடிக்கப்பட்டது என்பதற்கான இணைப்புகள் உள்ளன.
எப்படிப் பார்த்தாலும் சரஸ்வதி நதி என்று வேதங்களில் சொல்லப்படுவது ஒன்று கற்பனையானதாகவோ அல்லது வேறு ஒரு பெரிய நதியைப் பற்றிய வர்ணனையாகவோ அல்லது ஆரியர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையில் இருந்த வேறு ஒரு நதியைப் பற்றிய பழைய நினைவுகளாகவோ அல்லது சட்லெஜ் யமுனைக்கு இடையே ஓடி கடலில் கலக்காத சிறிய ஓடையாகவோ, அல்லது நதி தேவதை குறித்த வேத காலத்தவர்களின் விவரணைகளாகவோ தான் இருந்திருக்க வேண்டும் – அல்லது இவை எல்லாமாகவும் இருந்திருக்கலாம் (ரிக் வேதம் தான் பல காலகட்டத்தில் பலரால் பாடப்பட்டதாயிற்றே, ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த சரஸ்வதியைப் பற்றிச் சொல்லியிருக்க கூடிய வாய்ப்பும் உள்ளது)
ஆனால் சர்வ நிச்சயமாக இந்துத்துவ கும்பல் தற்போது போட்டுக் காட்டும் வரைபடத்தில் இருப்பது போன்ற ஒரு ஜீவ நதி எந்தக் காலத்திலும் அங்கே பாய்ந்திருக்க வாய்ப்பே இல்லை.
இல்லாத கிணற்றைத் தேடும் இந்துத்துவ முயற்சி, கோமாளித்தனமா?
இல்லை, இது நரித்தனம். பழைய புராணங்களின் கற்பனைக் கதைகளைத் தேடும் இந்துத்துவ முயற்சிகள் ஒவ்வொன்றும் மக்களை மத அடிப்படையில் திரட்டி இந்துக்களின் ஓட்டுக்களைப் பொறுக்க பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்யும் சதிகள். ஹரியானாவின் ஆதி பத்ராவில் இருந்து ராஜஸ்தான் வழியே குஜராத்தின் கட்ச் பிராந்தியம் வரை மசூதிகளையும் சர்ச்சுகளையும் இந்துக்களின் புனித ‘நம்பிக்கையின்’ பேரில் உடைப்பதற்கான பிரச்சாரங்கள் இனி வேகமெடுக்கும்.
இந்த அரசியல் கழிசடைத்தனமான விளையாட்டிற்கு மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கான கோடிகளில் கொட்டப்படும். புராணக் கதையான ராமாயணத்தில் வந்த கதாபாத்திரமான இராமனை முன்வைத்து அயோத்தியில் நடத்தப்பட்ட வெறியாட்டங்கள் மொத்த நாட்டையும் கலவரங்களால் அழச்செய்தது. அயோத்தியில் கற்றுக் கொண்ட பாடத்தை தேசமெங்கும் விரிவு படுத்தும் முயற்சியின் துவக்கப் புள்ளியாகவே இந்த முயற்சிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பலை இந்த நாட்டில் இருந்து விரட்டாமல் மக்கள் மட்டுமல்ல, வரலாறு, அறிவியல் போன்ற கல்வித்துறைகளும் நிம்மதியாக இருக்க முடியாது.
ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட மூவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்த மக்கள் உரிமைப் பாது காப்பு மையத்தின் பொது நல வழக்கு!
ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட மூவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்த மக்கள் உரிமைப் பாது காப்பு மையத்தின் பொது நல வழக்கு!
திருச்சி ஜோசப் கண்மருத்துவமனையின் பெரம்பலூர் கிளை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் என்ற பெயரில் 2008-ம் ஆண்டு 66 ஏழை மக்களின் பார்வையைப் பறித்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமுடியாது. அந்த கொடூர நிகழ்வின் குற்றவாளிகளுக்கெதிரான வழக்கின் தீர்ப்பு 22.04.2015 அன்று திருச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் வழங்கப்பட்டது.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் நெல்சன் ஜேசுதாசன், நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் தாமஸ், பெரம்பலூர் மருத்துவமனை நிர்வாக அதிகாரி மருத்துவர் அசோக் ஆகிய மூவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. இதில் நெல்சன் ஜேசுதாசன் 2013-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயாவிடம் “தனியார் நிறுவனங்களில் சிறந்த நிர்வாகி” என்ற விருது பெற்றவர். கிரானைட் மாஃபியா- நரபலி நாயகன் பி.ஆர். பழனிச்சாமி “சிறந்த ஏற்றுமதியாளர்” விருதை ஜனாதிபதியிடம் பெறும் போது, 66 பேரின் கண்களைப் பறித்த இவருக்கு மாநில அளவு விருது கூட கிடைக்காமல் போனால் எப்படி? என்ற உயரிய நோக்கில் ஊழல் ராணி அளித்த சிறிய விருதுதான் இது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நால்வரை, “அவர்கள் மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை” என்று சொல்லி விடுவித்து விட்டார் தலைமைக் குற்றவியல் நடுவர் ஸ்ரீதர். இதில் மூன்று பேர் பெண் மருத்துவர்களாவர். அவர்களின் கவனக்குறைவு குறித்து விசாரித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளார். “அதனிடம் நன்னடத்தைச் சான்று பெற்ற பின்னரே மருத்துவத் தொழிலைத் தொடர வேண்டும்” என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
“இந்தத் தீர்ப்பு ஏழை மக்களை வஞ்சிக்கும் வகையிலானது”
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடாக ரூ. 2,30,000 முதல் 5,80,000 வரை வயது மற்றும் வருவாய் அடிப்படையில் நிர்ணயித்து, “மருத்துவமனை நிர்வாகம் இடைக்காலமாக தந்த ஒரு லட்சத்தை கழித்துக்கொண்டு மீதித் தொகையை 7.5 சத வட்டியுடன் ஒரு மாதத்திற்குள் தர வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பை மாலை 3 மணிக்குத்தான் நீதிபதி அறிவித்தார் என்றாலும் காலையில் நீதிமன்றம் தொடங்கிய போதே மருத்துவமனை தரப்பு வழக்கறிஞரிடம், “ குற்ற விசாரணை முறைச் சட்டம் 398-ஐப் பார்த்துக்கொள்ளுங்கள், கடைசி நேரத்தில் கஷ்டப்பட வேண்டாம்” என்று அக்கறையுடன் டிப்ஸ் கொடுத்தார். அப்போதே தண்டனை உறுதி என்பதும், ஆனால் 3 ஆண்டுக்கு குறைவான தண்டனைதான் என்பதும் உறுதியானது. அந்த வகையில் மருத்துவமனை தரப்பில் பிணை எடுப்பதற்கான முழு தயாரிப்புடன் வந்திருந்தனர். வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து வந்த பத்திரிகையாளர்கள், மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும் குழுமியிருந்தனர்.
சி.பி.ஐ போலீஸ் மற்றும் அரசு வழக்கறிஞர்
தீர்ப்பை அறிவித்தவுடன், “இந்தத் தீர்ப்பு ஏழை மக்களை வஞ்சிக்கும் வகையிலானது” என்பதை உணர்ந்த நாம், உடனடியாகவே அதே நீதிமன்ற வாயிலிலேயே இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச்செயலரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞருமான தோழர் வாஞ்சிநாதன் இதற்குத் தலைமை தாங்கினார். பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உறவினர்கள் 40 பேருடன் திருச்சி மக்கள் உரிமைப்பாதுகாப்பு மைய வழக்கறிஞர் தோழர் சங்கர், செயற்குழு உறுப்பினர்கள், விருத்தாசலம் வழக்கறிஞர்கள் மற்றும் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற அமைப்புகளின் தோழர்களும் கணிசமாகத் திரண்டிருந்தனர். ஏழை மக்களுக்கெதிரான நீதித்துறையின் போக்கை எதிர்த்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
“66 பேரின் கண்ணைப் பறித்த கொடுமையை மோட்டார் வாகன விபத்து போன்ற ஒரு கவனக் குறைவு என்பதாக வகைப்படுத்தி இந்திய தண்டனைச் சட்டம் 338-ன் படி வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. 6 நிமிடத்தில் ஒரு அறுவை சிகிச்சை, அத்தனை பேருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் படி ஒரே கையுறை… என்று மருத்துவ நெறிமுறை எதையுமே மதிக்காமல் நிர்வாகத்தின் லாப வெறிக்கேற்பவும் ஏழை மக்களை கிள்ளுக்கீரையாகக் கருதியும் செய்த தவறை மிகச் சாதாரணமான கவனக்குறைவாகப் பார்த்து வழங்கிய இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது; உயர்நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலுமான எமது போராட்டம் தொடரும்” என்று அறிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
“66 பேரின் கண்ணைப் பறித்த கொடுமையை மோட்டார் வாகன விபத்து போன்ற ஒரு கவனக் குறைவு என்பதாக வகைப்படுத்தி தீர்ப்பு”
மருத்துவமனை நிர்வாகம் மட்டுமின்றி நீதிமன்றமும் ஏழைகளை ஏளனமாகப் பார்ப்பது கண்டிக்கப்பட்டது. “இதுவே பணக்காரர்கள், அரசியல்வாதிகளின் கண்கள் பறிபோயிருந்தால் தீர்ப்பு இப்படி வந்திருக்குமா? மருத்துவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பார்களா? 66 பேரை நடை பிணமாக்கிய வழக்கில் இவ்வளவு குறைந்த தண்டனையும் அற்பமான நட்ட ஈடும் அறிவிக்கப்பட்டிருக்குமா?” என்கிற கேள்விகளை எழுப்பி இந்த தீர்ப்பின் வர்க்க சார்பு கண்டிக்கப்பட்டது. அத்துடன், “மக்களின் உயிருடன் அலட்சியமாக விளையாடும் மருத்துவர்களை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை” என்பதை சுட்டிக்காட்டி அத்தகைய சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் நடைபிணமாக வாழும் தங்கள் வாழ்க்கையின் அவலங்களை வேதனையுடன் விவரித்து பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தனர். பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர்.
பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர்.
இதற்கிடையில் அனைத்து ஆவணங்களையும் தயாரித்துக்கொண்டு எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு பிணைகேட்டனர். நாம் வெளியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக நீதிபதி பிணை தர மறுத்துவிட்டு, “அம்மாவே ஜெயிலுக்கு போயிருக்காங்க இவங்களுக்கென்ன?” என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். குற்றவாளிகளின் தரப்பு அத்துடன் நின்று விடாமல் திருச்சி மாவட்ட தலைமை நீதிபதியிடம் சென்று பிணைக்கு நின்றனர். அங்கும் PRPC வழக்கறிஞர் தோழர் சங்கர் சென்று அவர்களுக்கு பிணை கொடுக்கக் கூடாதென்று பேசினார். இதனால் அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களிடம், மேல்முறையீடு செய்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும், குறைந்த தண்டனை பெற்றவர்களுக்கு கூடுதல் தண்டனை கிடைக்கச் செய்யவும், இழப்பீட்டுத் தொகையை உயர்த்திப் பெறவும் முயற்சிக்கலாமென்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தோம்.
“மக்களின் உயிருடன் அலட்சியமாக விளையாடும் மருத்துவர்களை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை”
இந்த மருத்துவ மனைகள், இலவச கண் சிகிச்சை முகாம் என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக மக்களைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து சோதனைச்சாலை எலிகளைப் போல கொடுமைப்படுத்துகின்றனர். ஆனால், உண்மையில் இது இலவசமுமில்லை. சேவையும் இல்லை. அரசு, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தை அமைத்து, அதன் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் இத்தகைய முகாம்களை நடத்த அனுமதித்து ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் நிதி உதவியும் செய்கிறது. அந்த நிதியையும் பெற்றுக்கொண்டு மக்களை இப்படி புழு, பூச்சிகளைப் போல நடத்தும் திமிர் இந்த தனியார் மருத்துவ மனைகளுக்கு எப்படி வருகிறது?
மக்களின் உயிரையும் கூட தனியார் முதலாளிகளிடம் பணயம் வைப்பதுதான் இதற்கு அடிப்படை.
மக்களுக்கு மருத்துவம் வழங்கும் தனது பொறுப்பை தட்டிக்கழித்து அரசு, தனியாரிடம் தள்ளி விடுவதால்தான் மருத்துவத்திலும் தனியாரின் மனிதத் தன்மையற்ற கொள்ளை அரங்கேறுகிறது. முதலாளிகளுக்கு வரியைக்குறைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பது, விவசாயிகளின் நிலத்தையும் பறித்துக்கொடுப்பது என்று சேவை செய்யும் அரசு, மக்களின் உயிரையும் கூட தனியார் முதலாளிகளிடம் பணயம் வைப்பதுதான் இதற்கு அடிப்படை.
தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள்
அசோக்
நெல்சன்
கிறிஸ்டோபர்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையம் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை பெருமுயற்சியெடுத்து ஒன்று சேர்த்து ஒரு பொது நல வழக்கு போட்டிருக்க வில்லையென்றால் இந்த அளவுக்கு கூட மக்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கப் போவதில்லை. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கப் போவதுமில்லை. ஆனால், இந்த குறைந்த பட்ச காரியத்தை சாதிக்கவேநாம் 8 ஆண்டு கால நீண்ட போராட்டத்தை நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நடத்த வேண்டியிருந்தது. சொல்லப்போனால், மலையைக் கிள்ளி எலியைப் பிடித்துள்ளோம் என்பதுதான் நிலைமை.
பாதிக்கப்பட்ட மக்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
முதலாளிகளுக்காகவே இயங்கும் இந்த அரசையும் நீதிமன்றம் உள்ளிட்ட அதன் எந்த அங்கத்தையும் நம்புவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. மொத்தத்தில் தனியார் மயத்தை ஒழிக்காமல் மக்களுக்கு வாழ்வில்லை என்பதையே இத்தீர்ப்பு உணர்த்துகிறது.
தகவல் : மக்கள் உரிமைப் பாதுபாப்பு மையம், தமிழ்நாடு.
“போராட்டமே மகிழ்ச்சி” என்றார், பேராசான் மார்க்ஸ். போராட்டமும் கொண்டாட்டமும் ஒருங்கே அமைந்தால், சொல்லவொண்ணா மகிழ்ச்சிதான். மார்க்ஸ் போராட்டமே மகிழ்ச்சி எனக் கூறியது, கம்யூனிஸ்டுகளுக்கு; கலை இரவு நடத்தும் கோமாளிகளுக்கல்ல.
போராட்டமும் கொண்டாட்டமும் ஒருங்கே – சி.ஆர்.ஐ பம்ப்ஸ் முன்பு லெனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
கோவை சி.ஆர்.ஐ கம்பெனி கதவடைப்பு செய்து கிட்டத்தட்ட 29 நாட்களாகின்றன. கதவடைப்பு செய்த மறு கணமே அங்கு போராட்டம் என அமர்ந்த தொழிலாளிகள் இன்று வரை போராட்டத்தைத் தொடர்கின்றனர். இடையில் 10 தொழிலாளிகளை பணி நீக்கம் வேறு செய்திருக்கிறார்கள் அவர்களும் போராட்டப் பந்தலில் தொடர்கின்றனர். இப்படியான தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை வேறு எந்த தொழிற்சங்கமும் இது வரை சந்தித்ததில்லை.
இதை விட அவமானகரமான விசயம் இன்னொன்று உள்ளது; தமிழகத்தின் தொழில் முனையங்களில் முக்கியமானது கோவை. இங்கு பல பத்தாண்டுகளாக சங்கம் வைத்திருக்கும் போலி கம்யூனிஸ்டுகள் ஒரு கம்பெனி முதலாளியின் பெயர் போட்டு போஸ்டர் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ துணிவதில்லை.
அது சரி, போலிகளின் பத்திரிகை ஆண்டு மலர்களில் விளம்பரங்களில் ஜொலிக்கும் முதலாளிகளின் பெயர்கள், சுத்தி அரிவாளுடன் போஸ்டரில் வந்தால் முதலாளிகளுக்கு அசிங்கம் அல்லவா….? அவ்வளவு அக்கறை இவர்களுக்கு.
ஏற்கெனவே இதே சி.ஆர்.ஐ கம்பெனியின் வேறு யூனிட்டில் சங்கம் தொடங்க முயற்சித்த சி.ஐ.டி.யு வை விசிறியடித்தார் முதலாளி சவுந்திரராஜன். கோவையில் இருக்கும் டெக்ஸ்மோ போன்ற இதர பம்பு தொழிற்சாலை தொழிலாளிகளே பார்த்து பரிதாபப் படும் அளவுக்கு கொத்தடிமை போல தொழிலாளிகளை நடத்துபவர் சவுந்திரராஜன்.
“போங்கடா டேய், நாங்க ஐ.டி துறையிலேயே சங்கம் தொடங்கிட்டோம்.”
உலகப் புகழ் பெற்று சீனா வரை சென்றிருப்பதோடு வித விதமான விளம்பர வசனங்களால் தொலைக்காட்சிகளையும் நிரப்புகிறது சிஆர்ஐ பம்ப்ஸ். ஆனால் இந்த புகழுக்குப் பின்னர் நிறைந்திருக்கும் தொழிலாளிகளின் சோக கீதம் யாரும் அறியாதது. அந்த சோக கீதத்தை போர் நாதமாக மாற்றியது பு.ஜ.தொ.மு. கோவையின் எட்டுத் திக்கும் H1N1 இன்ஃபுளூயன்சா வைரஸ் கிருமி பற்றி விழிப்புணர்வுப் பதாகை வைத்திருக்கும் முதலாளித்துவ நச்சுக் கிருமி சி.ஆர்.ஐ சவுந்திரராஜனுக்கு ஆன்டி வைரசாக (Anti-Virus) பு.ஜ.தொ.மு வந்து வாய்த்திருக்கிறது.
“ஐயையோ, சி.ஆர்.ஐ கம்பெனியா அங்கெல்லாம் சங்கம் தொடங்க முடியாது” என்று பதறியவர்கள் கண்ணெதிரேயே அதே சி.ஆர்.ஐ யில் சங்கம் தொடங்கி வருடம் நான்காகிறது.
இப்போது உரிமைக்கான போராட்டம் ; வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 29 நாள் போராட்டமேல்லாம் சி.ஐ.டி.யு கனவிலும் நினைத்துப் பார்த்திராத ஒன்று. 29 நாட்கள் இங்கு முதலாளியையும் கம்பெனியையும் எண்ணி மன நெருக்கடி, நண்பர்களின் கேள்விகள், குடும்பத்தாரின் கேள்விகள், உறவினர்களின் கேள்விகள், அவ நம்பிக்கைப் பேச்சுக்கள் என எரியும் தீப்பிழம்பின் நடுவினில் எரியாத கற்பூரத் துண்டுகளாய் தொழிலாளிகள். அவர்களுக்கு ஒரே ஒரு உற்ற துணையாய் வழிகாட்டும் சங்கமான பு.ஜ.தொ.மு.
எரியாத கற்பூரத் துண்டுகளாய் தொழிலாளிகள். அவர்களுக்கு உற்ற துணையாய் வழிகாட்டும் பு.ஜ.தொ.மு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சின்னியம்பாளையம் தியாகிகள், ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் போன்ற பல தீரர்களின் போர்க்குணத்தை வரித்துக் கொண்ட சங்கமாய், முதலாளிகளை நடுநடுங்க வைக்கும் சங்கமாய், நக்சல்பாரி சங்கமாம் பு.ஜ.தொ.மு இந்த போராட்டத்தை சிறிதும் உணர்வு குன்றாமல் தலைமையேற்று நடத்தி வருகிறது.
“வரலாற்றை சில சமயம் முன்னகர்த்த வேண்டியிருக்கிறது” என்பது ஆசான் லெனினின் கூற்று. அதன்படி பார்த்தால், காலங்காலமாக பொருளாதார வாதத்திலும் ஓட்டுச் சீட்டு அரசியலிலும் மூழ்கிக் கிடந்த தொழிலாளிகளை, அரசியலற்று இருந்த தொழிலாளிகளை, கோவைத் தொழிலாளர் சமூகத்தை புதியதொரு வடிவத்துக்கு போர்க்குணம்மிக்க போராட்டங்களுக்கு இழப்புகளுக்கு அஞ்சாத போராட்டங்களுக்கு நாங்கள் வடித்துக் கொண்டிருக்கிறோம். ஆம்., நாங்கள் வரலாற்றை முன்னகர்த்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டப் பந்தலில் தான் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஆசானாகிய தோழர் லெனின் பிறந்த நாளை கோவையின் ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தின் ஒரே பிரதிநிதியான பு.ஜ.தொ.மு புரட்சிகர உத்வேகத்துடன் உற்சாகத்துடனும் கொண்டாடியது.
தோழர் லெனின் பிறந்த நாளை கோவையின் ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தின் ஒரே பிரதிநிதியான பு.ஜ.தொ.மு புரட்சிகர உத்வேகத்துடன் உற்சாகத்துடனும் கொண்டாடியது.
ஏப்ரல் 22 காலை எஸ்.ஆர்.ஐ, சி.ஆர்.ஐ, எம்பெஸ்ட், கௌரி மெட்டல் மற்றும் பெரோலிங்க்ஸ் கிளைகளில் வாயிற்கூட்டம் நடத்தி இனிப்பு வழங்கி துண்டுப் பிரசுரம் கொடுத்து கொண்டாடப்பட்டது. அதே போல் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் சார்பில் முருகன், சி.எஸ்.டபில்யு கம்போடியா, ரங்கவிலாஸ் மற்றும் பங்கஜா மில் கிளைகளிலும் விழாக்கள் நடத்தப்பட்டது. இறுதியாக கடந்த 29 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் சி.ஆர்.ஐ கம்பெனி முன்பு லெனின் பிறந்த நாள் போராட்டமாக நிகழ்த்தப்பட்டது.
சி.ஆர்.ஐ தொழிலாளர்கள் கதவடைப்புக்கு எதிராக கம்பெனி வாயில் முன்பு கொட்டகை அமைத்து வெயில் மழை என அனைத்தையும் எதிர்கொண்டு இம்மியளவும் அகலாமல் தங்களது போராட்டத்தினை நடத்திக் கொண்டுள்ளனர்.
போராட்டம் நடந்தும் உற்சாகம் குறையாமல் தோழர்கள் பாட்டாளி வர்க்கத்தின் வீரப்புதல்வர்கள் அணிதிரண்டனர்.
லெனின் உருவம் தாங்கிய மிகப்பெரிய விளம்பர பதாகை சி.ஆர்.ஐ கேட் முன்பு கட்டப்பட்டது. செங்கொடிகள் 29 நாட்களாக கம்பெனி முன்பு தொடர்ந்து பறந்து கொண்டிருக்கின்றன. 29 நாள் போராட்டம் நடந்தும் உற்சாகம் குறையாமல் தோழர்கள் பாட்டாளி வர்க்கத்தின் வீரப்புதல்வர்கள் அணிதிரண்டனர்.
கிளைத் தலைவர் தோழர் மூர்த்தி தனது தலைமையுரையில், “தோழர் லெனின் அவர்களிடம் கற்றுக் கொண்டு நமது போராட்டம் வெற்றி நடை போடும்” என்றார்.
கிளைச் செயலாளர் தோழர் குமாரவேல் தனது உரையில், “முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்கும் மாபெரும் ஆயுதம் லெனினியமே” என முழங்கினார்.
வாழ்த்துரை வழங்கிய பெரோலிங்க்ஸ் நித்தியானந்தன் லெனின் சிறப்புகளை பட்டியலிட்டு காட்டி அவ்வழியில் தங்கள் ஆலையில் நடந்த கதவடைப்பை முறியடித்ததை நினைவு கூர்ந்து உணர்வூட்டினார்.
தில்லைக் கோயில் போராட்டத்திற்கு சிறை சென்றதற்காக ரூட்ஸ் கம்பெனியின் எச்ஆர் “உன்னால் முடியும்” வசனப் புகழ் தன்னம்பிக்கை தகர டப்பா கவிதாசனால் பழிவாங்கப்பட்ட தோழர் கவியரசு முதலாளித்துவ பயங்கரவாதம் மனிதத் தன்மையற்றது என்பதை விளக்கினார்.
பங்கஜா மில் செயலாளர் தோழர் கோபால், “வெற்றி அடையும் வரை போராட்டம் தொடர வேண்டும்” என உற்சாகமூட்டினார். மாவட்ட அமைப்பாளர் தோழர் கோபிநாத் தனது பேச்சில் லெனின் சிறப்புகளை பட்டியலிட்டார்.
“வெற்றி அடையும் வரை போராட்டம் தொடர வேண்டும்”
இறுதியாக, பு.ஜ.தொ.மு மாநில துணைத் தலைவர் விளவை இராமசாமி “தோழர் லெனின் தூங்கவும் மாட்டார், மற்றவர்களையும் தூங்க விடமாட்டார். தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி பழைய வாழ்க்கையில் முதலாளிகளின் அடிமையாக வாழ அனுமதிக்காமல் தட்டி எழுப்புவார். கோவை பாட்டாளி வர்க்கத்தின் மரபுப்படி போராடும் சி.ஆர்,ஐ தொழிலாளர்கள் தோழர் லெனின் பிறந்த நாளை தங்கள் கம்பெனி முன்பு கொண்டாடுவதன் மூலம் சிறப்பு சேர்க்கின்றனர்.
தோழர் லெனின் தூங்கவும் மாட்டார், மற்றவர்களையும் தூங்க விடமாட்டார். தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி பழைய வாழ்க்கையில் முதலாளிகளின் அடிமையாக வாழ அனுமதிக்காமல் தட்டி எழுப்புவார்.
கடந்த 29 நாட்களாக கம்பெனி முன்பு கோடை மழை பல முறை கொட்டிய போதும், கோடை வெயில் கொளுத்திய போதும், கொசுக்கள் தொடர்ந்து கடித்த போதும் அஞ்சாமல் அசராமல் போராடும் கணங்கள் மகத்தானவை. இதற்கு ஈடு இணை இல்லை. நாம் உன்னதமானவர்கள், நமது போராட்டம் உன்னதமானது. ஆனால், சிஆர்ஐ முதலாளி சவுந்திர ராஜனோ மிகவும் கேவலமானவர். முதலாளி மீதான நமது கோபத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். முதலாளி நமது இளமைக் காலத்தை உறிஞ்சியதும் கடந்த காலத்தை களவாடிவிட்டான். கதவடைப்பு செய்து நிகழ்காலத்தை நாசம் செய்து விட்டான். நாளை எப்படி பிழைப்பது எனும் நிலைக்கு தள்ளி எதிர்காலத்தையும் சூறையாடுகிறான். நமது குடும்பத்தின் எதிர்காலம், குழந்தைகளின் எதிர்காலம் அனைத்தையும் பறித்தவனை பழிவாங்கியே தீர வேண்டும்.
நாம் இப்போது கம்பெனியை சுற்றியுள்ள சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம், மணியகாரன்பாளையம், சரவணம்பட்டி என பத்து ஊர்களில் மக்களிடம் வீடு வீடாக முதலாளியின் கொடூரத்தை விளக்கி துண்டுப் பிரசுரம் கொடுத்துள்ளோம். அடுத்து அவன் குடியிருக்கும் பீளமேடு, ஆவாரம்பாளையம் பகுதிகளிலும் களம் காண வேண்டும்.
உலக முதலாளிகளை நடு நடுங்க வைத்த தோழர் லெனின் பிறந்த நாளை கொண்டாடுவதன் மூலம் இந்த ஒரு முதலாளியை வீழ்த்த முடியும். நமது போராட்டத்தின் எல்லை எது? கால வரையறை என்ன? நமது போராட்டத்தின் எல்லை கதவடைப்பு நீங்கி கதவு திறக்க வேண்டும். எத்துணை நாள் ஆனாலும் அத்துணை நாளும் போராட வேண்டும். கோவையில் இது போல ஒரு போராட்டத்தை கடந்த ஆண்டுகளில் யாரும் நடத்த வில்லை. நாம் நடத்துகிறோம். இதன் மூலம் கோவையின் ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் தட்டி எழுப்புகிறோம். கோவைத் தொழிலாளர்களை ஏற்கெனவே செயல்பட்ட பொருளாதார வாதிகள் ஊமையாக்கி விட்ட்னர். அதன் ஒட்டு மொத்த சுமையை நாம் சுமப்பதால் நமக்கு சிறிது சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் நாம் வெல்வோம்.
முதலாளித்துவ கொடூரம் என்பது நமது புற அம்சம், நம்முடைய லெனின் சிந்தனை என்பது அக அம்சம். அக அம்சத்தை தோழர் லெனின் போதனைகளை படிப்பதன் மூலம் வலுவாக்குவோம். எத்தகைய புற நிலைமையையும் நமது புரட்சிகர சிந்தனையில் வலுவூட்டப் பெற்ற போராட்டத்தால் மாற்றி அமைக்க முடியும். இதுதான் தோழர் லெனின் நமக்கு காட்டிய வழி.
நமது கம்பெனியில் எஃகு என்பது புற அம்சம், அதை நமது உழைப்பு எனும் அக நிலையில் பம்புகளாக மாற்றி அமைக்கிறோம். எஃகு உலோகத்தை விட கடினமானவன் அல்ல நமது முதலாளி. அவன் கொடூரத்தை நாம் மாற்ற முடியும். நமது குடும்பத்தோடு குழந்தைகளோடு போராட்டத்தை விரிவு படுத்துவோம். நமக்கு வாழ்வு கிடைக்கும் வரை நீதி கிடைக்கும் வரை முதலாளி சவுந்திரராஜன் தூங்க அனுமதிக்கக் கூடாது. கம்பெனியை திறக்கா விட்டால் அவன் கோவை மண்ணில் நடமாடும் உரிமையை முடக்க வேண்டும். போலீசு ஜெயிலுக்கெல்லாம் குலையாது உறுதி; வெற்றிதான் இறுதி. இதுவே லெனின் போதனை” என முடித்தார்.
முதலாளி சவுந்திரராஜன் தூங்க அனுமதிக்கக் கூடாது. கம்பெனியை திறக்கா விட்டால் அவன் கோவை மண்ணில் நடமாடும் உரிமையை முடக்க வேண்டும்.
எஸ்.ஆர்.ஐ கிளைத் தலைவர் தோழர் துரை நன்றி கூறினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு, காரம், காபி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி நிறைவு பெற்றது. போராட்டம் தொடர்கிறது.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை
தோழர் லெனினின் 146-வது பிறந்தநாள் விழா மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்களால் 22-04-2015 அன்று மாலை 6 மணியளவில் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் நடத்தப்பட்டது. முன்னதாக, சுற்று வட்டாரப் பகுதிகளில் லெனின் பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் லெனின் பிறந்தநாள் விழா.
விண்ணதிரும் பறையோசையோடு கூட்டம் தொடங்கியது. செஞ்சட்டை அணிந்த தோழர்கள் முழக்கமிட்டனர். ஆங்காங்கே இருந்த மக்கள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் குவிந்தனர். தோழர் லெனின் படம் வைக்கப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்துக்கு தோழர் காமராஜ் தலைமையேற்று நடத்தினார். தோழர் அஜிதா சிறப்புரையாற்றினார்.
விண்ணதிரும் பறையோசையோடு கூட்டம் தொடங்கியது.
“சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயாவின் பிறந்தநாளை அவரது கழகத் தொண்டர்கள் காலாண்டுக்கு மேலாக கொண்டாடிவரும் இந்நேரத்தில், தோழர் லெனினின் பிறந்தநாளைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? அவர் சாதித்தது என்ன?
உலகப் பரப்பளவில் ஆறில் ஒரு பகுதியைக் கொண்டது ரஷ்யா. ஜார் மன்னனின் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து ரசியாவை மீட்டெடுத்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சியை சாதித்துக் காட்டியவர் தோழர் லெனின். சாதாரண விவசாயி கூட விமானத்தில் பறந்து உரம் வாங்கி வரும் நிலை ரசியாவில் இருந்தது. இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் அமைச்சர்களைக் கூட்டி ஆலோசனை கேட்கிறார்கள். ஆனால், பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் மக்களிடையே ஆலோசனை நடத்தி அதை திட்டமாக வகுத்து ஓராண்டுக்குள் ரசியநாடு முழுவதும் மின்சாரமில்லாத இடமே இல்லை என்ற நிலைமையே மக்களோடு சாதித்தார்.
பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் மக்களிடையே ஆலோசனை நடத்தி அதை திட்டமாக வகுத்தார்
எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியிலும், புரட்சி ஒன்றையே தனது லட்சியக் கனவாகக் கொண்டு புரட்சியை நடத்தி, உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கு பாட்டாளிவர்க்க தலைமையிலான ஆட்சிதான் மக்களாட்சி என்று அறுதியிட்டு உறுதியாக நிகழ்த்திக் காட்டியவர், தோழர் லெனின்” என்று தோழர் உரையாற்றினார்.
ஆர்.எஸ்.எஸ்-ஐ அம்பலப்படுத்தி பாடப்பட்ட எச்சரிக்கை பாடல் மக்கள் உணர்வை தட்டி எழுப்பியது. கம்யூனிசம் வெல்லும் என்ற பாடல் நம்பிக்கையூட்டியது.
நாம் லெனினுடைய வாரிசுகள், ரசியப் புரட்சியைப் போன்று பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான இந்தியப் புரட்சியை நடத்த வேண்டும் என்ற உணர்வை அளிக்கிறது, தோழர் லெனின் பிறந்தநாள்.
தகவல் மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளில் உழைக்கும் மக்களின் அதிகாரத்தைக் கைப்பற்ற சூளுரைப்போம்!
ஏப்ரல்-22 : ‘மார்க்சியம் என்பது வெறும் வெற்று வார்த்தை; இது நடைமுறைக்கு பொருந்தாது. அடிமைகள் போல் வேலை செய்யும் இவர்களா ஆட்சியை நடத்தப் போகிறார்கள்’ என்றும், ‘படிப்பறிவற்ற அழுக்குச் சட்டையை அணிந்த இவர்களா தலைமையேற்கப் போகிறார்கள்’ எனவும் தொழிலாளர்களை ஏளனமாகப் பேசிய முதலாளித்துவ அறிவிலிகளுக்குப் பாடம் புகட்டி, மார்க்ஸ் சொன்னவை வெறும் வார்த்தை ஜாலங்களோ, கற்பனைக்கெட்டாத கதைகளோ அல்ல. அது அனைத்து ஜீவன்களையும் வாழவைக்கும், இயற்கைக்கும் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் தேவையான உன்னதமான சமூகக் கட்டமைப்பு என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டி ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் சொர்க்கத்தை மண்ணிலேயே படைக்கும் சக்தி பாட்டாளி வர்க்கம் மட்டுமே என்பதை உணர வைத்த கம்யூனிச ஆசான் தோழர் லெனின் பிறந்த நாள்.
ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் சொர்க்கத்தை மண்ணிலேயே படைக்கும் சக்தி பாட்டாளி வர்க்கம் மட்டுமே என்பதை உணர வைத்தார் கம்யூனிச ஆசான் தோழர் லெனின்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த தோழர். லெனினின் தேவை, இன்றைய அரசியல் சூழலில் எவ்வளவு இன்றியமையாதது என்பதை பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகத் திகழ்கின்ற தொழிலாளர்களுக்கு உணர்த்தும் வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயல்படும் இணைப்பு சங்கங்களில் வாயிற்கூட்டங்கள் நடத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது. தோழர் லெனின் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வாயிற்கூட்டங்கள் நடத்தப்பட்டது.
தோழர் லெனின் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வாயிற்கூட்டங்கள் .
ஒவ்வொரு ஆலை வாயிலிலும், முகமூடி அணியும் போதும், இனிப்புகள் வழங்கும் போதும், இதில் உள்ளவர் யார் என்பதை தொழிலாளிகள் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். நாம் அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் இன்றைய அரசியல் சூழலில் அவரது தேவையை உணர்த்திப் பேசினோம். புதிதாக கட்டப்பட்ட சங்கங்களில் தோழர் லெனினைப் பற்றியும் இன்றைய அரசியல் சூழல் தொழிலாளர்களுக்கு எவ்வளவு அபாயகரமாக மாறியுள்ளதை அரசியல் ரீதியாக உணர்த்திப் பேசும் போது, அனைவரும் கவனத்துடன் கேட்டனர்.
இன்றைய அரசியல் சூழலில் லெனினின் தேவை
வாயிற்கூட்டங்களில் பேசிய தோழர்கள், “இன்று மக்களின் சொத்துக்களைச் சுரண்டிக் கொள்ளையடித்து சொத்துக்களைச் சேர்த்த ஓட்டுக் கட்சிக் கழிசடைகள் தமது சுயவிளம்பரத்திற்காக, அல்லக்கைகள் மூலமும் தனது சொந்தப் பணத்திலும், உயிரே, உடன்பிறப்பே என்றெல்லாம் சொல்லி மக்களே வெறுக்கும் வகையில் தங்களது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
தனிநபர் துதிபாடுவது என்ற அடிப்படையில் இல்லாமல், தோழர் லெனின் அவர்களின் பிறந்த நாளை, நாம் நினைவு கூர்கிறோம்.
இத்தகைய சூழ்நிலையில் மேற்கூறிய தனிநபர் துதிபாடுவது என்ற அடிப்படையில் இல்லாமல், தோழர் லெனின் அவர்களின் பிறந்த நாளை, நாம் நினைவு கூர்கிறோம். தோழர் லெனின் தலைமையிலான அழுக்குச்சட்டைக்காரர்களின் ஆட்சி உலகத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. இன்றைய ஆட்சியின் மோசடிகளையும் மக்களுக்கு எதிரான தன்மையையும் ஒப்பீட்டு ரீதியில் உணர்ந்து கொள்வதன் மூலம் நமக்கான உண்மையான ஆட்சி முறை எந்தத் தத்துவத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவற்றை உணர்வதற்காகவே தோழர் லெனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது என கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி விளக்கிப் பேசப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டு தோழர். லெனினைப் பற்றித் தெரிந்து கொண்டனர்.
சுரண்டலற்ற புதிய உலகம் படைக்க உறுதியேற்போம்
மேலும், உழைக்கும் மக்களுக்கு எதிரான, மக்களை ஆளும் தகுதியற்ற, நொறுங்கி விழும் இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து வீழ்த்தி மக்களுக்கே அதிகாரம் வழங்கும் அமைப்புக்களை நிறுவ பாட்டாளி வர்க்க ஆசான்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் நமக்கு காட்டிய வழியில் சுரண்டலற்ற புதிய உலகம் படைக்க உறுதியேற்போம் என்ற அறைகூவலுடன் வாயிற்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801.
ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முதல் பாகம்.
கேள்வி
குஜராத் முஸ்லீம் இனப்படுகொலை நடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அன்றைய குஜராத் முதல்வர் மோடி இன்று நாட்டின் பிரதமர். அவரது வலது கையான அமித் ஷா இன்று பா.ஜ.க தேசியத் தலைவர். சிறையிலிடப்பட்ட மாயா கோத்னானி, பாபு பஜ்ரங்கி மற்றும் வன்சாரா, பிற போலீஸ் அதிகாரிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மதச்சார்பின்மை மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் தோல்வியா? அல்லது நீதிமன்றம், ஊடகங்கள் அடங்கிய இந்த அரசமைப்பின் தோல்வியா?
தீஸ்தா சேதல்வாத்
இரண்டும்தான். பாசிசத்திற்கு எதிரான போராட்டம் நீதிமன்ற வழக்குகளாக மட்டும் குறுக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. 2002 எதை குறிக்கிறதோ அதற்கான எதிர்ப்பு மக்கள் மத்தியில் கட்டியமைக்கப்படாமல், எதிர்க் கட்சிகளின் தேர்தல் அரசியலுக்கு தேவைப்படும் போது மட்டும் ஒரு அடையாள நடவடிக்கையாக அது நடக்கிறது.
அந்த வகையில், இது அனைத்து மதச்சார்பற்ற சக்திகளின் தோல்வி. உலகெங்கிலும் உள்ளது போல நம் நாட்டிலும் உரிமைகள் எழுத்தில் இருந்தாலும், அரசியல் சட்டத்தில் தரபபடடிருநதாலும், மககள் அதற்காக போராடாமல் அநத உரிமைகளை நடைமுறையில் பெற முடியாது.
நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, நாம் சாதிய அடிப்படையிலான, மத அடிப்படையிலான, முழுவதும் ஜனநாயகப்படுத்தப்படாத இந்த அமைப்பின் கதவுகளை தொடர்நது தட்ட வேணடும். சான்றாக அரசியலமைப்பின் பிரிவு 21, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்கிறது. ஆனால், நீதிமன்றத்திற்கு போகாமல் அந்த உரிமையை வெனறெடுக்க முடியாது.
குஜராத்தை பொறுத்தவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை ஆகியவற்றில் நீதிபதிகள் எங்களைப் போன்ற செயல்பாட்டாளர்கள் கூறுவதை உறுதிப்படுத்தியிருககினறன. இல்லையெனில் உச்ச நீதிமன்றம் வெகு காலத்திற்கு முன்பே எங்கள் வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கும்.
கேள்வி
நீதிக்கான இந்தப் போராட்டத்தின் தற்போதைய பின்னடைவுகளுக்கு முதன்மையான காரணம் மோடி அதிகாரததுககு வநததா? அலலது இநத அமைபபு, தான் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொணட அறஙகளை கைவிட்டு வருகிறதா?
தீஸ்தா சேதல்வாத்
மோடி அதிகாரத்துக்கு வந்ததுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு 3 மாதஙகளுக்கு முன்பு குஜராத் உயர்நீதிமன்றம் மாயா கோத்னானிக்கு பிணை வழங்க மறுத்து விட்டது. பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசு பதவியேற்றபிறகு அதே நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருக்கிறது.
அதற்கு எதிராக, பாதிககப்பட்டவர்களும், சி.ஜே.பி.யும் (நீதி மறறும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு) ஒரு பொதுநல வழக்கு மூலமாக உசசநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தோம். உயர்நீதிமன்றம் பிணை வழங்கியதோடு மட்டுமல்லாமல், தண்டனையையும் குறைத்திருந்தது. “விசாரணை நடத்தாமல் எப்படி தண்டனையை குறைக்க முடியும்” என்று அந்த விசித்திரமான உத்தரவை நாங்கள் கேள்விக்குள்ளாக்கினோம். இது தலைமை நீதிபதி தத்து மற்றும் 2 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி தத்து அரசியல்வாதிகளுக்கு பிணை கிடைத்தே தீர வேண்டும் என்று கருதலாம். (அவர்தான் ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியவர்); ஆனால், இந்த வழக்கில் அவர் நடந்து கொண்டது விசித்திரமாக இருந்தது.
“நான் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தொலைபேசியில் பேசி, தண்டனையை எப்படி குறைத்தீர்கள் என்று கேட்டு அதை திருத்தச் சொல்கிறேன்” என்றார் அவர். எங்கள் வழக்கறிஞர், “தொலைபேசியில் பேசுகிறேன் என்கிறீர்களே அதற்கு என்ன பொருள்? இது போல எல்லா வழக்குகளிலும் உயர்நீதிமன்றங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உத்தரவுகளை மாற்றச் சொல்வீர்களா” என்று கேட்டார்.
இரவோடு இரவாக, மாயா கோத்னானியின் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு உத்தரவை திருத்தக் கோரினர். தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சகாய் உத்தரவை மாற்றிக் கொடுக்கிறார்.
இது சட்ட நடைமுறை அல்ல. முறைப்படி, ‘தண்டனையை குறைத்த தவறு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்க வேண்டும்; அதை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும்.’ பிணை வழங்கவே விரும்பினாலும், இதுதான் நடைமுறை. அதற்கு மாறாக இப்படி ஏன் செய்ய வேண்டும்?
இது நடந்தது போது, நாங்கள் இது பற்றி அனைவருக்கும் வழக்கமாக அனுப்புவது போல மின்னஞ்சலில் தகவல் அனுப்பினோம். ஆனால், எதிர்க்கட்சிகள் யாரும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை.
தலித் படுகொலைகளாக இருந்தாலும் சரி, சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகள் அவை குறித்து தமது குரலை விடாப்பிடியாக எழுப்புவதில்லை.
ஆனால், வலது சாரிகள் தொடர்ந்து நீதிமன்றத்தின் மீது அழுத்தம் கொடுக்கின்றனர்; தடை செய்யப்பட்ட விஷயங்களையும் பேசுகின்றனர். ராமர் கோவில் வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தின் முன் உள்ளது, எனவே அது குறித்து வெளியில் பேசக் கூடாது, ஆனால் அவர்கள் பேசுகின்றனர்.
இவ்வாறு, இந்த வழக்குகளை தொடர்ந்து அரசியல் ரீதியாக துடிப்பாக எதிர்ப்பதில் பிரச்சனை உள்ளது. சட்டபூர்வமான எதிர்ப்பில் நாங்கள் ஈடுபட்டிருப்பதால், எங்களுக்கு ஒரு வரம்பு வைத்துக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்கள் தமது குரலை எழுப்பலாம். மற்றவர்கள் பேச நாங்கள் அமைதியாக இருத்தல் என்பதுதான் திட்டமாக இருக்க வேண்டும்.
குஜராத்தோடு தொடர்பில்லாத இன்னொரு உதாரணம் சொல்கிறேன். மோடி சென்ற ஆண்டு நேபாளத்திற்கு சென்றார். ரீடிஃப் இணைய தளத்தில் இது பற்றி ஒரு சின்ன செய்தி வெளியானது.
மோடி பசுபதிநாத் கோவிலுக்குச் சென்ற போது, 2,400 கிலோ சந்தன மரம் மற்றும் பல கிலோ சுத்த நெய் வழங்கியிருக்கிறார். இதற்கான மொத்தச் செலவு ரூ 4 கோடி இருக்கும் என பத்திரிகையாளர்கள் மதிப்பிட்டிருந்தனர். இந்தப் பணத்தை யார் கொடுத்தார்கள்? பிரதமர்களுக்கு அவ்வளவு பணம் ஏது, அவர்களது சம்பளம் அவ்வளவு கிடையாது. மேலும், ஒரு சுதந்திரமான, மதசார்பற்ற, ஜனநாயக நாட்டின் பிரதமர் இது போன்ற ஒன்றைச் செய்வது சரியா?
சென்ற இரண்டு நாடாளுமன்ற அமர்வுகளில் இந்தக் கேள்வியை எழுப்பும்படி நான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முயற்சித்து வருகிறேன். அது எழுப்பப்படவில்லை.
கேள்வி
சென்னைக் கூட்டத்தில் பேசும்போது, “நமது அரசியல் சட்டம் என்பது வங்கிக் கையிருப்பு இல்லை; நமக்கு நாமே கொடுத்துக் கொண்ட ஒரு புனித வாக்குறுதி. அரசியல் சட்டம் வழங்கும் மதிப்பீடுகளை மக்கள் மதிக்கும் அளவுக்குத்தான் மதச்சார்பின்மை இந்த நாட்டில் பிழைத்திருக்கும்” என்று ஜாவித் குறிப்பிட்டார்.
கார்ப்பரேட்டுகளால் திட்டமிடப்பட்டு, மோடி வளர்ச்சி நாயகன் என்று முன்வைக்கப்பட்டுதானே பிரச்சாரம் செய்யப்பட்டது? மோடியின் இப்போதைய வெற்றியை மக்களின் மதச்சார்பின்மைக்குக் கிடைத்த தோல்வியாக பார்க்க முடியுமா?
தீஸ்தா சேதல்வாத்
நம் நாட்டில் தேர்தல் அரசியல் இப்படித்தான் செயல்படுகிறது. மோடிக்கான பிரச்சாரத்தில் மயங்கி பல்வேறு பிரிவினரும் வாக்களித்திருந்தனர்.
மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் முழுக்க முழுக்க தோல்வி அடைந்து விட்டன. அவர்கள், தங்களது குறுகிய நலன்களை ஒதுக்கி வைத்து விட்டு, மோடி அதிகாரத்துக்கு வந்து விடாமல் தடுக்க ஒன்றுபட்டிருக்க வேண்டும்.
இப்போது, ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களுக்கு சித்தாந்தம் இல்லை, முசாஃபர் நகர் பற்றி அவர்கள் பேசவே இல்லை, மதவாதம் அவர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இல்லை. சச்சார் குழு அறிக்கை அவர்களுக்கு முக்கியமானது இல்லை. தேர்தல்களுக்கு முன்னர் கெஜ்ரிவால், குஜராத்துக்கு சென்றார், வளர்ச்சி குறித்து பேசினார், ஆனால், 2002 பற்றி குறிப்பிடவேயில்லை.
ஆனால், அதனாலேயே அவர்களை நாம் ஒரேயடியாக ஒதுக்கி விட முடியுமா? நாம் அப்படி ஒரு தூய்மைவாத நிலைப்பாட்டை எடுத்தால் யார் மிஞ்சியிருப்பார்கள். இந்த வெற்றிடம் நிரப்பப்படும் வரை இந்த நிலைமை தொடரும்.
மணல் கொள்ளையை வேடிக்கை பார்த்தால் கொள்ளிடம் ஆறு கூண்டோடு அழிந்து விடும்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் கொள்ளிடம் ஆற்றில் அரியலுர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்காவிலுள்ள மதனத்தூர் முதல் அடிக்காமலை வரை மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி தஞ்சை மவட்டத்திலும் மற்றொரு பகுதி அரியலுர் மாவட்டத்திலும் உள்ளது. இப்பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையின் காரணமாக நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இவையன்றி இப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்த மணற்கொள்ளையின் காரணமாக இந்த குடிநீர் திட்டங்களும் இந்த பகுதி குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக போராடக்கூடிய நபர்களை தனிப்பட்ட முறையில் மிரட்டுவதும் அல்லது பணத்தை கொடுத்து சரிகட்டுவது என நடைபெற்று வருகிறது.
இந்த மணற்கொள்ளை பற்றி தெரிந்த உடன் இதற்கு எதிராக போராடுவது என்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக முடிவு செய்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக நீலத்தநல்லூர், அத்தியூர், மகாராஜபுரம் பஞ்சாயத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.
ராமலிங்கம் என்ற விவசாயி நம்முடன் தொடர்புகொண்டு, “மணற்கொள்ளையால் நாங்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கோம். மோட்டர் போட்டா போர்செட்டில் தண்ணி வரமாட்டேங்குது. நாங்க எல்லாம் எப்படி விவசாயம் செய்வது என்று தெரியவில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் நம்முடன் சேர்ந்து கிராமம் கிராமமாக பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் முதல்நாளே மணற்குவரி மேனேஜர் சந்தித்து, “என்ன செய்யப் போறீங்க” என்று கேட்டார்.
விவசாயி ராமலிங்கம், “குவாரி மூடினால் தான் நாங்கள் விவசாயம் செய்யமுடியும்” என்றார்.
மேனேஜர், “டூவிலர் ஓட்டுபவர்கள் எல்லாம் ஹெல்மெட் போடுனுன்னு சட்டம் இருக்கு அதை யார் பாலொ பண்ணுறா” என்றார்.
விவசாயி ராமலிங்கம், “அதற்குத்தான் போலீஸ் பைன் போடுது” என்றார்.
மேனேஜர், “அத உடுங்க. எவ்வளவு வேண்டுமானாலும் பணம் வாங்கிக்குங்க. நீங்க எதுவும் தலையிடாதிங்க” என்று சொல்ல,
“நீ கொடுக்கும் காசை நம்பி வயல்களை இழக்கத் தயாராக இல்லை” என்று கூறி மறுத்து விட்டார்.
மீண்டும் ராமலிங்கத்தை தொடர்பு கொண்டு, “பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் வீணாகபகையை வளர்த்துக் கொள்ளாதீங்க” என்று மிரட்டல் பாணியில் பேசியிருக்கின்றனர்.
“யார் செய்தால் என்னங்க? தப்பு தப்பு தானே! இதை பார்த்துகிட்டு எப்படி சும்மா இருக்க முடியும். இதற்கு எதிராக எங்களால் முடிந்ததை செஞ்சிக்கிட்டு இருக்கோம்” என்று பதில் கூறி அனுப்பியுள்ளார்.
வழக்கமாக மிரட்டுவதன் மூலமாகவும், பணம் கொடுப்பதன் மூலமாகவும் காரியம் சாதிக்கும் இந்த கும்பலுக்கு ஒரு புது அனுபவம் கொடுக்கப்பட்டது.
இதனிடையே அய்யாநல்லூர் இளைஞர்களை கூட்டி இது சம்பந்தமாக விளக்கப்பட்டது. அடுத்த நாள் காலை 10 மணிக்கு நம்மை தொடர்புகொண்ட இளைஞர்கள், “உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும்” என்று சொன்னார்கள். அதன்படி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சார்ந்த தோழர் நேரில் சென்று அவர்களை சந்தித்தார்.
சுமார் 30 இளைஞர்கள் அங்கு கூடியிருந்தனர். “நீங்க பேசினதை கேட்டு ராத்திரி முழுக்க தூக்கமே வரலங்க. நாம இதுக்கு எதாவது செய்யணும்” என்று கூறி விறுவிறுவென ஆற்றில் இறங்கி நடக்கத் தொடங்கினர். இளைஞர்களின் உணர்வுகளை அங்கீகரித்து நாமும் உடன் சென்றோம். ஆறு சின்னாபின்ன படுத்தப்பட்டு இருப்பதை பார்த்த இளைஞர்கள் ஆத்திரப்பட்டு கிட்டாச்சி இயந்திரங்களை நிறுத்தச் சொல்லி சத்தமிட்டனர். அங்கு செயல்பட்ட 9 கிட்டாச்சி எந்திரங்களும் நிறுத்தப்பட்டன.
“எங்களுக்கு என்ன செய்யணும்? நீங்க ஆத்தவிட்டு வெளியே போகணும்”
உடனே ஓடிவந்த சூப்பர்வைசர், “என்ன விசயம்” என்று கேட்டார்.
“எங்க ஆத்தை வெட்டி கொள்ளை அடிக்கிறிங்க. அதை நிறுத்துவதற்கு வந்து இருக்கோம்” என்றதும் உடனடியாக மேனேஜருக்கு போன் செய்து இளைஞரிடம் போனை கொடுத்தார்.
மேனேஜரும், “சொல்லுங்க, நாங்க உங்களுக்கு என்ன செய்யணும்” என்ற வார்தைகளுடனே பேசதொடங்கினார்.
“எங்களுக்கு என்ன செய்யணும்? நீங்க ஆத்தவிட்டு வெளியே போகணும்” என்று பதில் கொடுத்தனர்.
அதற்கு மேனேஜரோ, கீறல் விழுந்த ரெக்காடு போல மீண்டும், மீண்டும், “உங்களுக்கு என்ன செய்யணும்” என்று சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறினார்.
காசுக்கு ஆசைபடாமல் மண்ணை காக்க போராடியவர்களை இதுவரை பார்த்ததில்லை.
காசுக்கு ஆசைபடாமல் மண்ணை காக்க போராடியவர்களை இதுவரை பார்த்ததில்லை என்பதாலேயே அவரால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், “என்ன சொன்னதையே திரும்பத் திரும்ப பேசிகிட்டு இருக்கிங்க. உங்களிடம் கொடுக்கப்பட்ட அனுமதியை எடுத்துகிட்டு நேரில் வாங்க, நாம பேசலாம்” என்றதும்,
“நான் வெளியூரில் இருக்கேன் தம்பி, என்னால் உடனே வரமுடியாது” என்றார்.
‘உங்களுக்கு கீழ் உள்ள நபர்களை பேச அனுப்பவும் என்று மணற்குவாரி கும்பலிடம் நாம் கூறியதை அவர்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர்’
“அப்போ உங்களுக்கு கீழ் உள்ளவங்களை அனுப்பி வையுங்கள்” என்றதும் அடுத்த 5 நிமிடத்தில் நம்மை நோக்கி ஓடிவந்தார் ஒருவர்.
மணல் கொள்ளை அடிக்கும் கும்பலின் கீழ் செயல்படும் நபர் என்று நினைத்து பேசதுவங்கியவுடன் தான் தெரிந்தது அவர் பொதுபணித்துறை அதிகாரி என்று. ‘உங்களுக்கு கீழ் உள்ள நபர்களை பேச அனுப்பவும் என்று மணற்குவாரி கும்பலிடம் நாம் கூறியதை அவர்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர்’ என்று உணர்ந்தபடி பேச தொடங்கினோம்.
எடுத்த எடுப்பிலேயே, “தம்பி இங்கே எல்லாம் சரியா நடந்துக்கிட்டு இருக்குது. சட்டப்படிதான் எல்லாம் செய்கிறோம். எதுக்கு எல்லாத்தையும் தடுத்து நிறுத்தினீங்க?” என்றார்.
“மொத்தம் எத்தனை அடி ஆழம் வெட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது” என்று கேட்டதும், “6 அடி கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
15 அடிக்கு மேல் வெட்டிய பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீர்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
உடனடியாக, அவரை கையோடு அழைத்துக் கொண்டு, 15 அடிக்கும் மேல் வெட்டப்பட்டு நீர் தேங்கியுள்ள ஒரு குழியில் இளைஞர்களை இறக்கி, “இதற்கு என்ன சொல்லுறீங்க” என்று கேட்டதும் திருதிருவென விழித்தார்.
இதற்கிடையே வாங்கிய காசுக்கு பொறுப்பாக பணியாற்ற காவல்துறை அங்கு விரைந்து வந்தது. இதைப் பார்த்த இளைஞர் ஒருவர், “நாம தண்ணி வேணும், ரோடு வேணும்னு போராட உட்கர்ந்தா ஒரு பயலும் வரமாட்டங்குறான். இப்பமட்டும் எவ்வளவு வேகமா வர்றாங்க. பார்றா” என்று கிண்டலடித்தார்.
“நாம தண்ணி வேணும், ரோடு வேணும்னு போராட உட்கர்ந்தா ஒரு பயலும் வரமாட்டங்குறான். இப்பமட்டும் எவ்வளவு வேகமாவர்றாங்க. பார்றா”
இங்கு ‘சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு’ இருப்பதைப் பார்த்து பதறிய காவல்துறை ஆய்வாளர், “தம்பி, எல்லாம் சட்டபடி நடந்து கொள்ளுங்க. நீங்க கலெக்டர் கிட்ட மனுகொடுங்க, இல்லை என்றால் படமெடுத்து வாட்சப் அல்லது பேஸ்புக்கில் கலெக்டருக்கு அனுப்புங்க” என்றார்.
“அது எல்லாம் சரிதாங்க உங்க வீட்டுக்கு திருட வந்தா திருடனை பிடித்து கட்டி போடுவீங்களா, இல்லாட்டி கம்ப்ளெய்ண்ட் கொடுக்கப் போவீங்களா” என்றதும்,
“நாம் எதற்கு இதை கேட்கிறோம்” என்று புரிந்து கொள்ளாமலேயே, “கட்டிபோட்டு பிடித்து கொடுப்பது சரி தான்” என்றார்.
“அதைத்தான் நாங்க இப்ப செய்யுறோம். மணல் கொள்ளை போவுது வந்து புடிங்க” என்றதும் ‘நம்முடைய வேலைக்கே வம்பாபோவுது’ என்று உணர்ந்தவர்,
“நீங்க அவங்க கிட்ட பேசிக்கிங்க” என்று பொதுபபணித்துறை அதிகாரியை கைகாட்டினார்.
“எத்தனை இயந்திரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது”.
பொதுப்பணித்துறை அதிகாரியிடம், “உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நீர் இருக்கும் பகுதியில் மணல் அள்ளக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. ஆனால் நீரிலேயே இறங்கி கிட்டாச்சி மூலம் மணல் அள்ளுகிறார்கள்” என்று காட்டினோம்.
மேலும் 9 கிட்டாச்சி இருப்பதை காட்டி, “எத்தனை இயந்திரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டோம்.
“3 தான் அனுமதி” என்று கூறி நம் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு, “சார் இது எல்லாம் ஓ.பி.எஸ் அவருடைய தம்பி நேரடி கண்ட்ரோல்ல நடக்குதுங்க சார். நீங்க சொல்லுறபடி செய்யுறதுக்கு எனக்கு அதிகாரம் இல்லை” என்றார்.
அதிகாரிகள் நம்மிடம் கையை பிடித்து கெஞ்சுவதை பார்த்து சகிக்க முடியாத காவல்துறை வேகமாக நம்மிடம் வந்து, “சார், உங்களுக்கு என்ன தான் பிரச்சனை” என்று கேட்டார்.
“குடிமக்கள் எங்களோட பிரச்சனையை அதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இதுல உங்களுக்கென்ன பிரச்சனை” என்று கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை விலகி நின்றார்.
இதற்கிடையே இளைஞர்கள், “இதுக்கு மேல இவங்க கிட்ட பேசி புரியோஜனம் இல்லை. நாம ஊர் மக்களிடம் பேசி அடுத்த கட்டமாக நாம என்ன செய்யலாம் என்று முடிவு செய்யலாம்” என்றனர்.
அதை அங்கீகரித்து இதை அதிகாரிகளிடம் அறிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வந்தோம்
நம்முடன் வந்த இளைஞர்களோ, “ஒரு 30 பேர் திரண்டு 2 மணி நேரம் குவாரியை முடக்கி வைக்கமுடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஆத்திரத்தில் புரப்பட்டு வந்தோம். ஆனால் இங்கு வந்த பிறகு மணல் குவாரிக்கு பின்னாடி யார், யார் இருக்காங்க. அதிகாரிகள் எப்படி எல்லாம் துணைபோறாங்க என தெரிந்து கொண்டோம்” என்றனர்.
அதிகார வர்க்கம் உணரும்படி போராட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.
நாம் குவாரியை விட்டு வெளியேறியபோது நம்மை நோக்கி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், “தம்பி, நானும் இந்த தண்ணியை குடிச்சிதான் வாழுறன். உங்கபக்கம் ஞாயம் இருக்கு. நாங்க அரசாங்க சம்பளத்தை நம்பி வாழுறோம். அதனால் அரசாங்கம் சொல்லுறததான் கேட்கமுடியும். அதனால நீங்க எங்களை சட்டை செய்யாமல் போராடுங்க” என்றார்.
அந்த காவல்துறை அதிகாரி, “அரசாங்கம் என்றால் மக்கள்தான். தான் வாங்கும் சம்பளம் மக்கள் தரும் சம்பளம்” என்பதை உணர்வில்லை.
இந்த அதிகார வர்க்கம் அதை உணரும்படி போராட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் டி.டி.கே பி.டி.எல் தொழிலாளர்கள் “சட்ட விரோத ஆலை மூடலைக் கைவிடு” என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாட்டாளி வர்க்க பேராசான் லெனினின் 146-வது பிறந்த நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
19.04.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் முன்னிலையில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம், பு.ஜ.தொ.மு லைட் விண்ட் ஸ்ரீராம் கிளை, கும்முடிப்பூண்டி பகுதி ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்டன.
கைப்பந்தாட்டப் போட்டி
கைப்பந்து போட்டி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இதில் லைட்விண்ட் ஸ்ரீராம் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர், லெனின் குறித்த புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
பரிசு வழங்குதல்
ஆலைவாயில் கூட்டங்கள்…
பட்டாபிராம் TI மெட்டல் ஃபார்மிங் சங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத்தின் தலைவர் தோழர் செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் தோழர் மகேஷ்குமார் வரவேற்றார். பு.ஜ.தொ.மு- வின் மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் ஆசான் லெனினது படத்துக்கு மாலையணிவித்து கொடியேற்றினார்.
லெனின் படத்துக்கு மாலை அணிவித்தல்
பு.ஜ.தொ.மு- வின் மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் உரை
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அவர் தனது சிறப்புரையில, லெனினை பாட்டாளி வர்க்கம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார். திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் மு.முகிலன், ஆவடி-அம்பத்தூர் பகுதி தலைவர் தோழர் ம.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பு.ஜ.தொ.மு-வின் ஜி.எஸ்.எச்., இண்டெக்ரா ஆகிய கிளைச்சங்க உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மாவட்டத்திலுள்ள அனைத்து இணைப்பு கிளைச் சங்கங்களிலும், ஆசான் லெனினின் உருவப்படம் வைத்து, கொடியேற்றி இனிப்பு வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மற்ற சங்கங்களில் பகுதி முன்னணியாளர்கள் முன்னிலையில் அந்தந்த சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆசான் லெனின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.
லைட் விண்ட் கிளைச்செயலர் மீன் பகதூர்
லைட் விண்ட் ஆலை
ஆலை வாயில் கூட்டம்
டால்மியா செயலர் தாஸ்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
கும்மிடிப்பூண்டி பகுதி சங்கங்களில் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் கொடியேற்றினார். மாவட்டச் செயலாளர் செல்வகுமார் உரையாற்றினார். “ஆசான் லெனின் பிறந்த நாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? ஜார் மன்னனுக்கு ஒத்ததான பாசிச நடவடிக்கைகளை கையாளும் மோடிக்கெதிராய் தொழிலாளிகள் கிளர்ந்தெழ வேண்டும். அத்தகைய தொழிலாளி வர்க்க ஆட்சி அமைக்க பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் பிறந்த நாளில் உறுதியேற்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் டால்மியா ஆலையில் கொடியேற்றினார்
SRF மணலியில் நடந்த விழாவில் கிளைச் செயலாளர் ஞானபிரகாஷ் தலைமையில், கிளை பொருளாளர் ஆனந்தபாபு உரையாற்றினார்.
எஸ்.ஆர்.எஃப் மணலி கிளை ஆலைவாயில் கூட்டம்
தோழர் ஆனந்த பாபு உரை
ஆலைவாயில் கூட்டம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மாவட்டத்திலுள்ள அனைத்துச் சங்கங்களில் உள்ள தொழிலாளர்களையும் ஆலைவாயில் முன் கூட்டி பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாட்டாளி வர்க்கம் என்ற வகையில் ஆசான் லெனின் பிறந்த நாளை உயர்த்திப் பிடிக்க வேண்டியஅவசியத்தை தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த கூட்டங்கள், வண்ண வன்ண பிழைப்புவாதிகளை அம்பலப்படுத்துவதாகவும், புரட்சிகர தொழிற்சங்கத்தின் கடமைகளை நிலை நிறுத்துவதாகவும் அமைந்தது.
வணக்கம். அழுக்குச் சட்டை தொழிலாளர்களை அரசாள வைத்த ஆசான் லெனினின் 145-வது பிறந்த தினம் இன்று. சிறப்புமிக்க இந்த நாளைக் கொண்டாடுவது பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்கிற வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆசான் லெனின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம்.
லெனின் பிறந்த நாளை ஏன் கொண்டாட வேண்டும் ?
பு.ஜ.தொ.மு கென்மின் கிளையில் கொடியேற்றம்
1870-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதியில் ரஷ்ய நாட்டில் பிறந்தார், லெனின். “இந்த உலகத்தில் எதுவுமே மாறாது” என்ற கருத்தை உடைத்து, “மாற்றம் ஒன்று தான் மாறாதது” என்ற கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் வகுத்தளித்த விஞ்ஞானத்தை நடைமுறையில் சாதித்துக் காட்டியவர் லெனின்.
“நீங்க நாலு பேரு செவப்பு சட்டை போட்டுட்டு, கொடி பிடிச்சி கோஷம் போட்டா எல்லா பிரச்சனையும் தீந்துடுமா?” என்று அறியாமையினால் இன்றைக்கு கேள்வி கேட்பவர்களைப் போலவே வரலாறு நெடுக கேள்வி கேட்டு வந்திருக்கிறார்கள்; ரஷ்யாவிலும் கேட்டார்கள். “தொழிலாளர்களால் அரசாள முடியுமா” என்றும், “முதலாளிகள் இல்லாமல் தொழில் துறை வளர்ச்சி சாத்தியமா” என்றும் ஏளனமாகப் பேசினர். உலக வரலாற்றில் முதன்முறையாக, ரஷ்யாவில் சோசலிச புரட்சியை நடத்திக்காட்டி, தொழிலாளி வர்க்கத்தால் அரசாள முடியும், முதலாளிகள் இல்லாமல் தொழில்துறை வளர்ச்சி சாத்தியம் என்று நிரூபித்துக் காட்டினார் லெனின்.
கொடுங்கொல் ஆட்சி புரிந்து வந்த ஜார் மன்னனின் ஆட்சி, லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியால் வீழ்த்தப்பட்டது. உலக முதலாளித்துவத்தின் செவிப்பறையில் ஓங்கி அடிக்கும் வண்ணம், தொழிலாளிகள்-விவசாயிகள் நேச அணியை உருவாக்கி, முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கு சாவுமணி அடித்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிலநாட்டினார்,லெனின். உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய ஆசான் லெனினின் பிறந்த நாளை உயர்த்திப் பிடிக்க வேண்டியது தொழிலாளர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை.
ஆசான் லெனினை நாம் வரித்துக் கொள்ள வேண்டும்!
பிறந்து வளர்ந்து, படித்து முடித்து வேலை தேடி, கிடைத்த பின் வீடு கட்டி திருமணம் செய்து, குழந்தை பெற்று, அதையும் தன்னைப் போலவே வளர்த்து கடைசியில் மாண்டு போகும் அற்பத்தனமான வாழ்க்கையை வாழவில்லை, ஆசான் லெனின். தன் மனைவி, தன் குழந்தை, தன் குடும்பம் என வட்டமிட்டுக்கொண்டு சொத்து சேர்த்துக்கொள்ளவில்லை. சக மனிதர்கள் வறுமையில் உழன்ற போது, அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஆளான போது, அதனை அவனது தலைவிதியென்றும், பூர்வஜென்ம பாவமென்றும் வியாக்கியானம் பேசி ஒதுங்கிச் செல்லவில்லை. மாறாக சமுதாயத்தை ஆய்வு செய்தார். அது விதியல்ல, ஜார் மன்னனின் பேயாட்சியில் முதலாளித்துவ கொடுங்கோன்மையால் விளைந்த சதி என்று தொழிலாளர்களுக்கு உணர்த்தினார். சுரண்டலில் கொழுத்த முதலாளி வர்க்கத்தை உழைக்கும் மக்களின் முன் அம்பலப்படுத்தி அவர்களை விரட்டியடித்தால் ஒழிய உழைக்கும் மக்களுக்கு விடிவு இல்லை என்பதை உணர்த்தியதோடு நில்லாமல் வழிநடத்தவும் செய்தார்.
முழக்கமிடுதல்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்] உலகின் முதல் சோசலிசப் புரட்சி
உலகின் முதல் சோசலிச அரசு 1917 நவம்பர் 07 அன்று நிறுவப்பட்டது. ஆசான் லெனின் தலைமையிலான இந்த ஆட்சியில் வறுமை ஒழிப்பு, விலைவாசி குறைப்பு, அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவம், சுகாதாரம் என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது, உலகின் சிறந்த நாடாகவும், அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய நாடாகவும் வளர்ந்து நின்றது , ரஷ்யா.
ஆங்கிலேய ஏகாதிபத்திய கொடுங்கோன்மையை வீழ்த்துவதற்கு இந்திய நாட்டு இளைஞர்களை அறைகூவி அழைத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங், தனது கருத்தை நாடறியச் செய்ய வேண்டுமென்பதற்காக, உயிர்ச் சேதம் விளைவிக்காத வெடிகுண்டை நாடாளுமன்றத்தில் வீசிய போது அவரை ஏகாதிபத்திய தீவிரவாதியாக சித்தரித்து தூக்கிலிட்டுக் கொன்றது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். பகத்சிங்கின் பிணத்தைக் கூட கண்டு அஞ்சினார்கள். இறந்த உடலைத் துண்டு, துண்டாக வெட்டி சட்லஜ் நதிக்கரையில் வீசினார்கள் காலனியாதிக்கவாதிகள். அன்று பகத்சிங்கின் உடலைக் கண்டு அஞ்சியதைப் போலத்தான் இன்று ஆசான் லெனின் குறித்தும், கம்யூனிசம் குறித்தும் அஞ்சி நடுங்குகின்றது, ஆளும் வர்க்கம்.
ஒடுக்கப்படுகின்ற வர்க்கங்களின் விடுதலைக்கென்று ஒரு தத்துவம் உள்ளது. அதுதான் கம்யூனிசம்! அந்த கம்யூனிச தத்துவமெனும் ஆயுதத்தை நாம் முதலாளிகளுக்கெதிராக நீட்டி விடக்கூடாது என்பதால் தான் தத்துவத்தையும் , அதனை வளர்த்தெடுத்த தலைவர்களையும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறது, ஆளும் வர்க்கம். அவதூறும் செய்து வருகிறது. ஆளும் வர்க்கத்தின் இருட்டடிப்புகள், அவதூறுகள் அத்தனையையும் முறியடித்து ஆசான்களையும், கம்யூனிசத் தத்துவத்தையும் உலகறியச் செய்ய வேண்டும். நம்முடைய ஆசான்களை நாம் தானே உயர்த்திப் பிடிக்க வேண்டும்!
நமது நாட்டில் புரட்சி மலர லெனின் பிறந்த நாளில் உறுதியேற்போம்
ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் உழைக்கும் மக்கள் வதைக்கப்பட்டதைப் போலவே இன்று நமது நாட்டிலும் பாசிச நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். முதலாளிகளின் நலன்களுக்காக நாடு நாடாக பறந்து கொண்டிருக்கிறார், பிரதமர். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதன் மூலம் தொழிலாளிகளை முதலாளிகளுக்கு கொத்தடிமைகளாக்கும் வேலையைச் செய்வது, அவசரச் சட்டங்கள் போட்டு உழைக்கும் மக்களை மரணக்குழியில் தள்ளுவது என அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் கிஞ்சித்தும் தயக்கமின்றி செய்து வருகிறது மோடி அரசு.
தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள் மிகத்தீவிரமாக அமுல்படுத்தத்தப்பட்டதன் விளைவாக மக்கள் ஓட்டாண்டிகளாகி நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கின்றனர். தண்ணீர், கல்வி, மருத்துவம் என அனைத்தும் தனியார்மயம். வேலை தற்காலிகம், பசி பட்டினி தான் நிரந்தரம்! மக்களைக் காக்கவோ, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவோ முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த அரசால் முடியாது என்பது நிருபணமாகியுள்ளது.
அரசும் அதன் உறுப்புகளும் ஆளத் தகுதியிழந்து நிற்கிறது. போலீசு, நீதித்துறை, இராணுவம் அனைத்துமே மக்களுக்கானதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆளும்வர்க்கமே தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகும் நாம் அமைதியாய் இருக்க முடியாது.ஆசான் லெனின் காட்டிய வழியில் தொழிலாளி வர்க்கமாக ஒன்றிணைந்து திவாலாகிப் போன,ஆளத் தகுதியற்ற இந்த அரசமைப்பை அடித்து நொறுக்குவோம். மக்களுக்கான அதிகார அமைப்புகளை நிறுவுவோம். அதை செய்து முடிக்க ஆசான் லெனின் பிறந்த நாளில் உறுதியேற்போம்.
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர்
உரத்த சப்த்ததுடன் யாரோ வாசல் கதவைப் பிடித்து உலுக்குவது கேட்டது. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பதினொரு மணிக்குத் தான் மருத்துவ ஆலோசனை அறை வேலைகளை முடித்துவிட்டு, இரவுச் சாப்பாட்டிற்குப் பின் ஏதோ ஒரு புத்தகத்தினைப் படிக்க ஆரம்பித்தேன். இரவு படுப்பதற்கு தாமதமாக செல்வது எனக்கு வழக்கமாகிவிட்டது. மார்கழி குளிர் காரணமாக பாப்பாவிற்கு ஏற்பட்டுள்ள ஆஸ்துமா, அவளின் தூக்கமின்மையே மனைவியையும் விழிப்புடன் வைத்திருக்கச் செய்த்து. எனவே வாசல் குரலுக்கு எந்த எதிர்ச் செயலுமின்றி புத்தகத்தினுள் ஆழ்ந்திருந்த என்னை என் மனைவி உசுப்பினாள்.
பன்னாட்டு மருந்து நிறுவன இலாபம் ! – (கிளாக்ஸோ நிறுவனம் இப்போது கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் – GSK என்று அறியப்படுகிறது.)
“இரு இரு, புத்தகத்துல அடையாளம் வைக்கிற அட்டைய காணோம். இந்த பக்கத்த முடிச்சிட்டுப் போறேன்” என்றவாறு அந்தப் பக்கத்தை முடிக்காமலே புத்தகத்தை மூடினேன்.
கதவைத் திறந்து விளக்கைப் போட்டவாறு வாசல் நோக்கி முன்னேறினேன். வெளி விளக்கை எரியவிட்டவுடன் “யாரது?” என்றேன். “ஐயா, ஆம்பட்டங்க, காலைல ஆசுபத்திரிக்கு வந்தோங்க. இப்ப சுரம் தாங்கலங்க, அதான் அழைச்சிகிட்டு வந்தேன்” என ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
நான் கதவைத் திறந்து அவர்களை உள்ளே அழைத்தேன். ஆணும் பெணமணுமாய் நன்றாகத் தெரிந்த முகங்கள். ஆனால் பெயர் ஞாபகம் இல்லை. அழுக்கான சேலை குளிருக்காக அதையே முக்காடாய் தலைக்கு சுற்றி போர்த்திருந்தாள். அவளது கணவன், முகம் மட்டும் தெரியும் வண்ணம் ஒன்றோ, இரண்டோ அழுக்குப் போர்வைகளைச் சுற்றிக் கொண்டிருந்தார். அதையும் மீறி குளிராலும், காய்ச்சலாலும் அவர் பற்கள் கிட்டித்துக் கொண்டிருப்பதையும் உணரமுடிந்தது.
உட்காரச் சொன்னேன். முடியாமல் வாசல் பெஞ்சிலேயே படுத்துவிட்டார்.
“காலைலதானம்மா ஆஸ்பத்திரியில பார்த்து மருந்து எழுதிக் கொடுத்தேன். அதுக்குள்ள என்ன?” என்றேன், சற்று எரிச்சலுடன். கிராமத்து மக்களுக்கு இப்படித்தான். காய்ச்சலோ வாந்தியோ, வயிற்றுப் போக்கோ அப்படியே மருந்து கொடுத்தவுடன் மாறிவிட வேண்டும். இதனால்தான் டாக்டர்களைவிட பூசாரிகள் எளிதில் ஏமாற்றித் திரிகிறார்கள்.
“நேத்திலேருந்துதான். கவலைப்படாதீங்க” என்றவாறு வெப்பமானியை வைத்து உடல் வெப்பத்தைப் பரிசோதித்தேன். காய்ச்சல் 104 இருந்தது. “ஒரு நாள் சுரத்திற்கு ரொம்ப பயப்பட வேண்டாம். இந்த பனியில வைரஸ் கிருமியால் கூட ஃபுளு ஜுரம் வரும். அதனால காய்ச்சல் மாத்திரையை மட்டும் விடாம குடுங்க.” என்றேன்.
“ஆசுபத்திரி மாத்திர வேண்டாங்க. நீங்க வேற குடுங்க” அந்தப் பெண்ணின் வாதம் எனக்கு வேடிக்கையாக இருந்தது. அப்போதுதான் உற்றுப் பார்த்தேன். “எந்த ஊரு, ஆம்பட்டமா, உங்க பேரு என்ன பஞ்சவர்ணமா?” என்றதும் அந்தப் பெண் மிகுந்த மகிழ்ச்சியுடன் “ஆமாய்யா… போன மாசம் மார்ல சீழ்வச்சி நீங்கதானே ஆபரேசன் பண்ணி விட்டீங்க. எம் புருஷனையும் எப்படியாவது காப்பாத்துங்க”என்றாள்.
இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு விவசாய குடும்பம். தாய்ப்பால் கொடுக்கும் இப்பெண், குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வயலுக்கு களை எடுக்க செல்வதும், அவசர அவசரமாக திரும்பியவுடன், அழுக்கையும், வியர்வையையும் பொருட்படுத்தாமல் ஏணையில் ஒண்ணுக்கு ஈரத்துடன் கிடக்கும் பிள்ளையை மாரோடு அணைத்துக் கொண்டதன் காரணமாகவோ என்னவோ வலது மார்பகத்தில் சீழ்கட்டி ஏற்பட்டிருந்தது. மார்பகத்திற்கு பிரத்தியேகமான கவனிப்பு தேவை என்பதாலும், கூச்சம் காரணமாகவும் வேறு மருத்துவரிடம் போகுமாறு பரிந்துரைத்தேன்.
“நன்னிலத்துக்கும், திருவாரூருக்கும் போனோம். ஆனா முன்னூறு, நானூறு ஆவுங்கிறாங்க. அதனால திரும்பிட்டோங்க” என்றாவது மறுநாளே என்னிடம் வந்தார்கள். நானே சிகிச்சை அளிக்க நேர்ந்தது. கிட்டதட்ட அரைலிட்டருக்கும் மேல் சீழ் எடுக்கப்பட்டது. சுகாதார நிலையத்திலேயே தொடர் சிகிச்சையளித்து நலமானது.
“அதுசரி! இந்த குளிர்லயும், பனியிலயும், இருட்டுல ஆமபட்டத்துலருந்து வயலுக்குள்ள நடந்து வந்துக்கிறீங்களே. விளக்கு ஒன்னும் எடுத்துக்கிட்டு வரலயா? இரணடும் சின்ன குழந்தைகளாச்சே யார்கிட்ட விட்டுட்டு வந்தீங்க?” என்றவாறு ஊசிக் குழாயில் மருந்தினை எடுத்து நோயாளியை நோக்கி நகரந்தேன். பாவம் அவர் நோயினால் பேச இயலாதவாறு இருந்தார்.
சட்டென்று அந்தப் பெண்ணின் குரல் கரகரப்பானது. கமறும் குரலில் “நல்லா இருக்கனுங்க நீங்க. உங்க கை பட்டதுமே நல்லாயிடும். வீட்டுல பிள்ளைங்கள பார்த்துக்க யாரும்இல்ல. ரெண்டையும் தூங்கப்போட்டுட்டு ஓடியாந்துட்டேன். சீக்கிரம் போனுங்க.” என்றதும் எனக்கு மனது உடைந்து போனது.
ஏனெனில், அது அந்த பெண்ணின் ஒன்றைக் குரலாய் எனக்குத் தெரியவில்லை. ஓராயிரம் ஏழை விவசாயத் தொழிலாளிகளின் குரலாலத்தான் ஒலித்தது. நள்ளிரவில் நண்டும் சிண்டுமாய் இரண்டு குழந்தைகள், ஆதரவற்ற நிலையில், எவர் உதவியுமின்றி, வயலுக்கு நடுவிலுள்ள ஒரு குடிசையில் விட்டு விட்டு, இருட்டில் நினைவு தப்பிய கணவனை சிகிச்சைக்கு அழைந்து வரும் நிலைமையை நினைத்துப் பார்ப்பவர்களுக்குத்தான் அந்தக் கொடிய நிலை புரியும். நான் ஏதும் பேசாமல் ஊசி போட்ட பின் மருந்துச்சீட்டை எழுதிக் கையில் கொடுத்தேன்.
“மாத்திரைக்கு என்ன பண்ணுவீங்க? புத்தகரம் போயில்ல மாத்திரை வாங்கணும்?” என்றேன். புத்தகரம் என் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.
அதற்குள் அந்தப் பெண் தட்டுத் தடுமாறி முந்தானையின் முடிச்சை அவிழ்த்து அதற்குள்ளிருந்து கசங்கிய ஒர ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து என்னிடம் நீட்டியவாறு சற்று கூச்சத்துடன் “இதாங்க ஐயா இருக்க வைச்சுக்குங்க, மாத்திரை காலைல வாங்கிக்கிறோம். கையில பணமில்லீங்க. அறுப்பு கிறுப்பு ஆரம்பிச்சாத்தான் கைல காசு இருக்கும். காலைல ஆருகிட்டயாச்சும் கடன் வாங்கி மாத்திரை வாங்கி குடுத்துர்றேங்க.”
மார்கழி மாதத்தில் குளிர் மட்டுமல்ல, வறுமையும் சேர்ந்தல்லவா இவர்களை வாட்டுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதில் விவசாயிகளின் வாழ்க்கையும் ஒளிந்துள்ளதோ என்றவாறு மேசையிலிருந்து பாராசிடமால் மாத்திரை சிலவற்றை எடுத்து அவரிடம் கொடுத்து, “காச அப்புறம் வாங்கிக்கிறேன். இந்த பணத்தை வைச்சு காலைல முதல்ல மருந்து வாங்கிக் கொடுங்க” என்றேன்.
குளிராலும், நன்றியுணர்வாலும் நடுங்கும் கைகளை இருவரும் கூப்பினர். கணவரைத் தாங்கியவாறு அப்பெண் நடக்க ஆரம்பித்தாள். இதற்குள் என் மனைவி பொறுமை இழந்து வாசல்வரை வந்து விட்டாள். “நடுராத்திரியில் என்ன அங்க ஒரே பேச்சு? சட்டுபுட்டுன்னு பார்த்து அனுப்பிவிட்டு வரக் கூடாதா?” என லேசாகச் சீறினாள்.
“நீ பாட்டுக்கு லைட்ட அணைச்சிட்டு தூங்க வேண்டியது தானே!” என்றேன். “எவ்வளவு நேரம்? எனக்கு பயமா இருக்குல்ல. லைட்ட போட்டா பாப்பா முழிச்சிக்குறா,” என்றவாறு என் மனைவி முன்னால் நடந்தாள். என்ன பயம் இவளுக்கு? இவளுடைய பயமும், அந்தப் பெண்ணின் பயமின்மையும்….
அடுத்த சில தினங்களுக்கு வாழ்க்கை வழக்கம்போல் கழிந்தது. அந்தப் பெண்ணையும் அவள் கணவனையும் மறந்து போனேன்.
ஒரு வாரம் சென்றிருக்கலாம். ஒரு நாள் நான் மருந்துவமனையில் பணியில் இருந்தபோது ஒரு கட்டை வண்டியில் இருந்து அதே நோயாளியை இறக்கினர். மெதுவாக கைத்தாங்கலாகக் கொண்டுவந்து மருத்துவமனை முன் உள்ளிருந்த பெஞ்சில் படுக்க வைத்தனர். அதற்குள் மருத்துவ ஊழியர்கள் பதறிக் கொண்டு வந்தனர். “ஏப்பா அப்படி வெராந்தாவுல படுக்க வைக்க வேண்டியதுதான” என்றார் கம்பவுண்டர்.
“வாந்தி வயித்தால கேசுகளை உள்ள கொண்டு வந்து போட்டா யாரு கழுவுறது” என முணுமுணுத்தார் துப்புரவாளர்.
இதற்குள் அந்தப் பெண் இடுப்பிலிருந்த குழந்தையை அணைத்தவாறு, “சார் நீங்கதான் அவர காப்பாத்தணும். ரொம்ப புண்ணியமா போவும் உங்களுக்கு” என்று தரையில் விழுந்து கும்பிட எத்தனித்தாள்.
நான் தடுத்தவாறு “இருங்கம்மா அவசரப்படாதீங்க பார்ப்போம்” என்றேன். அதற்குள் வண்டியோட்டி மாடுகளை அவிழ்த்துக் கட்டிவிட்டு உள்ளே வந்தவர் “இந்த…. நீ போ வெளில, ஐயா இருக்காங்கல்ல, எல்லாம் பாத்துக்குவாங்க” என்றார்.
நான் அவரிடம், “இவரு பேரு என்னாங்க?” என்றேன், “பளனிச்சாமிங்க” என்றார். “பழனிச்சாமி நாக்க நீட்டுங்க” என்றேன் நோயாளியிடம், மிகவும் பலவீனமாக நாக்கை நிட்டினார். நாக்கு உலர்ந்து வெள்ளை படிந்திருந்தது.
உடலைத் தொட்டேன். உடல் கொதித்தது. “ஜூரம்தானா, வேற ஏதும் இருக்கா?” என்றேன். குழந்தையுடன் மீண்டும் அப்பெண் உள்ளே நுழைந்தாள். கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீரை பழைய வெளுத்த நைலக்ஸ் புடவைத் தலைப்பில் துடைக்க முனைந்தாள். நைலக்ஸ் அவளது கணீரை உள்வாங்க மறுத்தது.
“நீங்க ஊசி போட்டு ரெண்டு நாளைக்கு நல்லா இருந்ததுங்க. அப்புறம் சுரம் வந்து உடல் செரிக்கல ஒரே வாந்தி. சீதம் சீதமா வயித்தால வேற போவுதுங்க” என்றார்.
நான் வயிற்றில் கை வைத்துப் பாரிசோதித்தேன். கல்லீரலும், மண்ணீரலும் வீங்கிப் பெருந்திருந்தது. டைபாய்டு காய்ச்சலாக இருக்கவேண்டும் எனினும் பலரைப் போல் நான் வழக்கமா டைபாய்டு நோய்க்கு என உள்ள குளோரோம்பினிகால் மருந்தினை பரிந்துரைப்பதில்லை. எதற்கும் டைபாய்டு நோய் என தீர்மானிக்கும் ‘வைடால்’ இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளியின் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்க வேண்டுமே, எனவே குளோரோம்பினிகால் மருந்தினை கொடுக்க தீர்மானித்து, வார்டில் படுக்கச் செய்து சிரைவழி நீர்மம் மருந்துகளும் அளித்தேன்.
வசதியற்ற மருந்துவமனையிலும் அந்த மருந்துவம் அவர்களுக்கு மகத்தானதாக பட்டிருக்க வேண்டும். ஆயினும் நோயாளிக்கு காய்ச்சல் குறையவே இல்லை. காய்ச்சல் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. எனவே ‘வைடால்’ பரிசோதனை செய்ய தீர்மானித்தேன்.
துணைக்கு யாருமற்று அனாதரவாக நிற்கும் பெண்ணிடம் இதைக் கூறுவதற்கே எனக்கு கஷ்டமாக இருந்தது.
“இதப்பாரும்மா டைபாய்டு காய்ச்சல் மாதிரி தெரியுது. ஆனா அதுக்கு மருந்து கொடுத்தும் கேட்க மாட்டேங்குது. இரத்தம் எல்லாம் டெஸ்ட் பண்ணித்தான் பார்க்கணும். நீங்க ஏதாவது பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போங்க அல்லது ஒரு ஐம்பது ரூபாய் ஆகும். ஒரு ரத்த டெஸ்ட் மட்டுமாவது பண்ணுங்க” என்றேன். அப்பெண்ணின் குழந்தைகள் இருவரும் அங்குள்ள வேப்ப மரத்தடியில் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.
கண்களில் நீர்மல்க “கொஞ்சம் இருக்க வர்றேன்” என்றவாறு வேப்பமரத்திற்குப் போய் சின்னவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பெரியவனுக்கு முதுகில் ஒரு அடி கொடுத்து இழுத்துக் கொண்டு நகர்ந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் பணத்துடன் வந்தாள் அப்பெண். அந்தக் ‘கதையைக்’ கேட்பதற்கு என் மனம் இணங்க வில்லை. இரத்தம் எடுத்துக் கொடுத்தனுப்பிப் பரிசோதனை செய்தேன்.
சோதனை ‘டைபாய்டு நோய்’ என்பதை உறுதி செய்த்து. எனக்குள் குழப்பம், பின்னர் ஏன் குளோரோம்பினிகால் வேலை செய்யவில்லை? மருந்து எதிர்ப்பு குணம் ஏற்பட்டிருக்குமோ? கவலையுடன் புத்தகங்களை ஆராய்ந்தேன். சமீபத்திய மருந்துவ ஆய்வு இதழ் ஒன்று சிக்கியது. இதழ் விவாதத்திலிருந்த முக்கிய விஷயம் – Drug resistant typhoid – Danger in india – “இந்தியாவில் அபாயம் – மருந்து எதிர்ப்பு டைபாய்டு நோய்”
வழக்கமான மருந்துகளுக்கு பதிலாக கிளாக்சோ நிறுவனம் இவ்வகை நோய்களுக்கு புது மருந்தினைக் கண்டு பிடித்துள்ளது. ‘சிப்ரோபிளாக்கசின்’: இது ஒருவகை குயினோலின் வகை மருந்து என விளக்கங்கள் நீண்டன. உதவிக்காக திருவாரூரில் எம்.டி. படித்த மருத்துவரைத் தொடர்பு கொண்டேன். அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
“இந்த மருந்து லேட்டஸ்டா இப்பத்தான் வந்திருக்கு சிவா. இத கிளாக்சோ அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஆஸ்பத்திரியில கிடைக்கிறதில்லை. மாத்திரை ஒன்று 28, முப்பது ரூபாய் வரும். நீங்க சொல்ற நிலைமையில இருக்கிற பேஷண்டுக்கு ஐ.வி.யாத்தான் கொடுக்கிறது நல்லது. ஐ.வி. மருந்து 125 ரூபாய் ஆகும்.” என்றார்.
எனக்குத் தலை சுற்றியது. குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?
வேறு வழியில்லாமல் அந்தப் பெண்ணை அழைத்து விவரமாக விளக்கம் கூறினேன். “குறைந்தது மருந்துக்கே 1000 ரூபாய் ஆகும். உங்க கஷ்டம் எனக்குத் தெரியும். நம்ம ஊரு கவர்மெண்டு ஆஸ்பத்திரிலயெல்லாம் இன்னும் அந்த மருந்து வரலயாம். அதனால நீங்க எதுக்கும் காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க. அங்க இருக்கலாம். என்னால முடிஞ்சத எல்லாம் நான் செஞ்சுட்டேன்” என்றவுடன் அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
நான் அந்தப் பெண்ணை ஏறிட்டு நோக்க அஞ்சி வண்டியோட்டியிடம் “எப்படி கொண்டு போகப் போறீங்க; காரைக்கால் தானே?” என்றேன்.
“இல்லைங்க சார் அந்த பெண்ணு ஒரு ரெண்டாங்கெட்டான். சொந்தபந்தமும் யாருமில்லை, நீங்களே முடியாதுன்ன பிறகு என்ன செய்யுறது. வீட்டுக்குத்தான் கொண்டு போறோம்.”
மறுநாள் காலை வண்டி கட்டிக் கொண்டு அதே ஆள் வந்தான். நான் அந்தப் பெண்ணை ஏறிட்டு நோக்க அஞ்சி வண்டியோட்டியிடம் “எப்படி கொண்டு போகப் போறீங்க; காரைக்கால் தானே?” என்றேன்.
“இல்லைங்க சார் அந்த பெண்ணு ஒரு ரெண்டாங்கெட்டான். சொந்தபந்தமும் யாருமில்லை, நீங்களே முடியாதுன்ன பிறகு என்ன செய்யுறது. வீட்டுக்குத்தான் கொண்டு போறோம்.”
எனக்குள் மண்டைக்குள் ஏதோ வெடிப்பது போல இருந்தது. எளிதில் குணமாகும் இந்த நோயை இப்படிச் சிக்கலாக்கியது யார்? அவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சிக்கலான நோய்க்கு ஏன் ஒரு பன்னாட்டு நிறுவனம் மட்டுமே மருந்து தயாரிக்க வேண்டும்? ஏன் அவர்களே விலையை நிர்ணயிக்க வேண்டும்?
இரண்டு நாட்கள் கழித்து பழனிச்சாமி வீட்டிலேயே இறந்து போன செய்தி வந்தது.
பத்துநாள் கழித்து கருமாதிப் பத்திரிகை கொடுக்க சிலர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் ‘பழனிச்சாமிக்கு என்ன வியாதி சார்’ என்றார்.
நான் அவர் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
பின்குறிப்பு : டைபாய்டு நோய்க்கு மருந்தாகும் ‘குளோரோம்பினிகால்’ எனும் மருந்து ஏனோ பலனளிக்காத நிலையில், ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றாக ‘சிப்ரோபிளாக்சசின்’ மருந்தினைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தின. அறிமுகமாகும் முதல் 5 ஆண்டுகளுக்கு (‘காட்’ ஒப்பந்தத்திற்கு முந்திய நிலை) காப்புரிமை உண்டு என்பதால் மிக அதிக விலையில் விற்று கொள்ளை லாபம் அடித்தனர். இச்சம்பவம் நடந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகியிருக்கும்.(தற்போது 30 ஆண்டுகள்) அப்போது இம்மருந்து வாங்க இயலாமல், அந்நோய்க்குப் பலியான ஏழைக் கூலி விவசாயி ஒருவரின் கதை இது.
– சிவசுப்ரமணிய ஜெயசேகர், மருத்துவர்
________________________________ புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2000
________________________________