முகப்புஇலட்சாதிபதி கம்யூனிஸ்ட் தா.பாண்டியன்!
Array

இலட்சாதிபதி கம்யூனிஸ்ட் தா.பாண்டியன்!

-

தா.பாண்டியன்

வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் தா.பாண்டியன் அம்மாவின் ஆசியுடன் வடசென்னையில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தாக்கல் செய்த சொத்துக் கணக்கில் அவர் பெயரில் வாங்கியிருந்த நிலத்தின் மதிப்பை குறிப்பிடாமல் ஏமாற்றி விட்டதாக தி.மு.க பரபரப்பு கிளப்பியதை நீங்கள் அறிந்திருக்கலாம். எல்லா வேட்பாளர்களும் தமது சொத்துக் கணக்காக ஒப்புக்கு ஏதோ ஒரு செட்டப் கணக்கை காட்டுவதும் தேர்தல் கமிஷனும் அதை ஏதோ கடமைக்கு ஏற்றுக் கொள்வதும் வாடிக்கைதான்.

இங்கே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அறியப்படும் ஒரு நபர் அவர் காட்டிய கள்ளக் கணக்கிலேயே வீடு, நகைகள், நிலம் என 43 இலட்சத்திற்கு கணக்கு கொடுத்திருக்கிறார். இது போக அவருக்கு கோடம்பாக்கம் வங்கியொன்றில் 23 இலட்சத்திற்கு கடன் இருக்கிறதாம். இவ்வளவு பெரிய தொகையை அவர் ஏன் கடனாக வாங்கினார்? அந்த அளவுக்கு ஒரு கம்யூனிஸ்ட் செலவு செயவதற்கான அவசியமே இல்லையே?

உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியில் முழநேர ஊழியர்களாக பணியாற்றும் தோழர்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்கு கட்சியை சார்ந்து எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். ஒருவேளை ஒருவர் சற்று வசதியான குடும்பத்திலிருந்து வந்து கட்சியில் முழுநேர ஊழியராக சேருகிறார்.பின்னர் அவரது குடும்ப சொத்து பிரிக்கப்பட்டு அவருக்குரிய பங்கு வந்தால் அதை அவர் கட்சிக்கு கொடுத்து விடுவதுதான் உலகமெங்கும் உள்ள மரபு. ஆனால் இந்தியாவில் புரட்சியை புதைத்துவிட்டு சந்தர்ப்பவாதத்தில் தொழில் நடத்தும் போலிக் கம்யூனிஸ்டுகள் தங்கள் அடையாளங்களைக்கூட பாட்டாளி வர்க்கமாக வைத்திருப்பதற்கு தயாரில்லை.

அதனால்தான் வலதின் மாநிலச் செயலாளரே தனது குடும்ப நிலங்களை வைத்திருப்பதும், பல இலட்சம் மதிப்பில் வீடு இருப்பதையும் அதையே கூச்ச நாச்சமின்றி வேட்பு மனுவில் தாக்கல் செய்திருப்பதும் இங்கே சகஜமாகப் பார்க்கப்படுகிறது. அம்மா கட்சியில் சேர்ந்து ஊழலால் திடீர் பணக்காரர்களான கழிசடைகளுக்கும், தொழிற் சங்கத்தை வைத்தே கல்லாக் கட்டி முதலாளிகளான இந்தப் போலி கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வேறுபாடு?

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

 1. இத்தாலி உள் ஆடைகலை குறைந்த செலவில் துவைத்து வுளர்த்த….
  கைராசியான ச்தாபனம்:
  மு.க&கம்பனி
  கோபாலபுரம்
  சென்னை

 2. சென்னையில் அவருக்கு ஒரு 1500 சதுர அடி அபார்ட்மென்ட் இருந்தால் அது முப்பது முப்பந்தைந்து லட்சம் பெறாதா? அதை வாங்க அவர் வங்கியில் கடன் வாங்குவது ஆச்சரியமா? இல்லை ம.க.இ.க.வினர் வாடகை வீட்டில்தான் எல்லாரும் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அவரது சொத்து கணக்கை – கிட்டத்தட்ட 20 லட்சம் சொத்துகள் – பார்த்தால் அவர் ஒரு மத்திய தர வாழ்க்கை வாழ்வதை போல்தான் தெரிகிறது – ஒன்றும் உல்லாச வாழ்க்கை வாழ்வது போல் தெரியவில்லை.

  • ஆர்வி,

   பாண்டியன் வைத்திருப்பது அப்பார்ட்மெண்ட் அல்ல. தனிவீடு. அதுவும் ஒன்னரை கிரவுண்டில் கட்டப்பட்ட மாளிகை.. இருப்பதோ அண்ணாநகரில்.. அது 40 லட்சம் என்று சொல்வதே மகாமோசடி.. அங்கே காலிமனையே ஒரு கிரவுண்ட் 60 லட்சத்துக்கு மேல் இருக்கும்.. இது ஊதாரித்தனம் இல்லையா?

   சாமி

   • சாமி, 60 லட்சமெல்லாம் 10 வருசம் முன்னால இப்போ 2 கோடிக்கு மேல….
    ஆர்வி, வீடு வச்சிருப்பது பிரச்சனையில்லை, திமுக, அதிமுக காரனெயெல்லாம் வினவு கேக்கலியே, அண்ணன் தாப்பா தன்னை ஒரு கம்மீனிஸ்டு, பாட்டாளி அப்பிடீன்னு சொல்லிகறத நிறுத்தினா இவரப்பத்தியும் பேச போவதில்லை… அதனால நீங்க தாப்பாவான்ட சொல்லி சேப்பு துண்ட தூற வீசிட்டு இந்த கூட்டணிக்கு பொருத்தமா பச்சத்துண்ட போட்டுக்க சொல்லுங்க…

   • //சென்னையில் அவருக்கு ஒரு 1500 சதுர அடி அபார்ட்மென்ட் இருந்தால் அது முப்பது முப்பந்தைந்து லட்சம் பெறாதா? அதை வாங்க அவர் வங்கியில் கடன் வாங்குவது ஆச்சரியமா? இல்லை ம.க.இ.க.வினர் வாடகை வீட்டில்தான் எல்லாரும் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அவரது சொத்து கணக்கை – கிட்டத்தட்ட 20 லட்சம் சொத்துகள் – பார்த்தால் அவர் ஒரு மத்திய தர வாழ்க்கை வாழ்வதை போல்தான் தெரிகிறது – ஒன்றும் உல்லாச வாழ்க்கை வாழ்வது போல் தெரியவில்லை.//

    அவரது வீட்டை பார்த்தால் ஆர். வீ வாயை பிளந்து விடுவார். அது மத்திய தர வீடு கிடையாது.

  • ஆர்.வி,

   நீங்கள் கூறியுள்ளது போல சொந்தவீட்டுடன் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் கட்சயின் முழுநேர ஊழியராக பணியாற்றுவோர் தங்களுக்கு கிடைக்கும் பாரம்பரிய சொத்து, நிலம், பணம், வீடு அனைத்தையும் கட்சியிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்பது பரவலாக கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் உள்ள நடைமுறைதான். ம.க.இ.கவிலும் அப்படித்தான். ஆனால் போலிக் கம்யூனிஸ்ட்டுகளிடம் அந்த நடைமுறை இல்லை. தா.பாண்டியன் சி.பி..ஐ கட்சியில் இருந்து காங்கிரசுக் கட்சியின் அடிவருடியாக மாறுவதற்காக துவங்கப்பட்ட யூ.சி.பி.ஐ எனும் கட்சியில் செயல்பட்டவர். இது அநேகமாக 80களின் துவக்கத்தில் நடந்தது. இந்தக் காலகட்ட்த்தில் சென்னை துறைமுகம் முதலிட்ட இடங்களில் தொழிற்சங்கம் வைத்திருந்த தா.பாண்டியன் நன்றாக சம்பாதித்தார். உண்மையில் இவரது சொத்து மதிப்பு இவர் கணக்கு காட்டிசயிருப்பதை விட பல மடங்கு அதிகமிருக்கும். அப்புறம் இவரது கட்சிக்கும், சி.பி.ஐக்கும் வித்தியாசமில்லை எனும் நிலையில் அதாவது காங்கிரசு அடிவருடித்தனத்தில் இரண்டும் ஏன் சி.பி.எம்மும் ஒன்றுதான் என்ற நிலையில் தா.பாண்டியனின் கட்சி சில ஆண்டுகளுக்கு முன்னர் சி.பி.ஐயுடன் இணைந்த்து. இந்த இணைப்பிற்கும் முன்பும், பின்னரும் தா.பாண்டியன் ஜெயலலிதாவின் ஆள் என்பது உலகப் பிரசித்தம்.

   வினவு

   • தா.பாண்டியன் பற்றி மேலும் சில விவரங்கள்

    கல்யாணசுந்தரம் எனும் பெயர் பெற்ற கொட்டை போட்ட பெருச்சாளியின் சீடர்தான் தா.பாண்டியன். இந்த கல்யாணசுந்தரம்தான் காங்கிரசின் ஆணைக்கேற்ப தி.மு.கவை பிரித்து எம்.ஜி.ஆரை வைத்து அ.தி.மு.க உருவாக்க காரணமாயிருந்தவர். அண்ணாயிசம், சோசலிசம் எல்லாம் ஒன்றுதான் எம்.ஜி.ஆருக்கு கற்றுக்கொடுத்தவர். இப்படி எம்.ஜி.ஆர் எனும் நோயை தமிழகத்திற்கு அறிமுகம் செய்த பாவத்தில் தா.பாண்டியனுக்கும் பங்குண்டு. அதன் பிறகு இருவரும் சி.பி.ஐயில் காங்கிரசு கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக இருந்தனர். இதனால் ஏற்பட்ட முரண்பாட்டில் 1987இல் யூ.சி.பி.ஐ கட்சி தோன்றியது. இதன் தலைவர் மோகித்சென். இப்படி காங்கிரசு. அ.தி.மு.க ஆதரவாளர்களாக அறியப்பட்ட தா.பாண்டியன்தான் தற்போது வலது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மாநிலச் செயலாளராகியிருக்கிறார். கம்யூனிசத்தின் பெயரில் காங்கிரசு, அ.தி.மு.க முதலான கட்சிகளுக்கான நலனில் செய்லபட்டவர்தான் தா.பாண்டியன்.

 3. D. Pandian was actually instrumental behind the alliiance of the Left with ADMK. CPM held parleys with Vijayakant at a time when Pandian was holding secret talks with Jaya. It was CPI, the first party who got the seat allotment in the alliance. Though CPI is not a potential ally for Jaya in terms of fetching votes the well established bond between Pandian and Jaya could be of one chief reason- which supposedly is the points she made on Elam could have come from Pandian. Pandian’s role here was just like Kalimuthu and Ka. Subbu like stooges in the past. One common factor which encompasses Pandian and Kalimuthu like people is they were and are not ambitous and have no personal high dreams, the quality which suits them to be priests[poosaries] and that is aptly described in the cartoon. This engendears them to the heart of ‘Puratchi Thalaivi.’

 4. பதில் அளித்த அனைவருக்கும் நன்றி!

  தா. பாண்டியன் பொய்க்கணக்கு காண்பித்திருக்கலாம். எனக்கு தெரியாது. வினவின் பதிவில் அவருக்கு என்ன சொத்து, வீடா, அபார்த்மேண்டா என்றெல்லாம் விவரங்கள் இல்லை. அங்கே எழுதி இருப்பது மட்டுமே வைத்து சொல்கிறேன் – 45 லட்சம் சொத்து, 23 லட்சம் கடன் என்பது சென்னையில் சொந்த வீட்டில் வாழும் ஒருவருக்கு உல்லாச வாழ்க்கையாக தெரியவில்லை.

  வினவு, ம.க.இ.கவினர் தங்களுக்கு கிடைக்கும் பாரம்பரிய சொத்துகளை கட்சிக்கு கொடுத்துவ் விடுவது பெரிய விஷயம். உங்கள் லட்சிய வேகத்துக்கு என் பாராட்டுகள். அது ஏன் பாரம்பரிய சொத்து என்று குறிப்பிட்டு சொல்கிறீர்கள்? சொந்தமாக சொத்து சேர்க்க மாட்டார்கள் என்பதாலா?

  • நண்பர் ஆர்வி,

   கம்யூனிஸ்டு கட்சியில் பணிபுரியும் முழு நேர ஊழியர் முழுக்க முழுக்க தன்னை மக்களுக்காக அர்ப்பணித்து கொள்பவர்.பிறகெப்படி சொத்து சேர்ப்பார். அவர் மக்களிடம் சென்று மக்களோடு வாழ்பவர்.அவருக்கு தனியாக சொத்து சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை.

   போலிகள் பார்த்து பார்த்து பலருக்கும் புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் வாழும் முறை பலருக்கும் தெரிவதில்லை. கம்யூனிஸ்டு என்பவர் உலக பாட்டாளிவர்க்கத்தின் பிரதி நிதி, உலக விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து கொள்பவர். அவர்களை போலிகம்யூனிஸ்டுகளில் தேடி பார்க்காதீர்கள் கண்டிப்பாய் கிடைக்க மாட்டார்கள்.

   • பாரம்பரிய சொத்து என்று குறிப்பிட்டு சொல்லி இருந்ததால் clarify செய்யும்படி கேட்டேன். ம.க.இ.கவினர் தங்கள் சொத்துகளை – பாரம்பரிய சொத்தோ, இல்லை சொந்த சொத்தோ – கட்சிக்கு கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

    • ஆர்.வி

     ம.க.இ.கவினர் என்று பொதுவாக பொருள் கொள்ளக்கூடாது. ம.க.இ.கவில் உள்ள முழுநேர தோழர்கள் என்பதே சரி. மற்றபடி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

     வினவு

 5. எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க கட்சிக்கு இரட்டை இலை வாங்கிக் கொடுத்ததிலும், ஐரோப்பிய நாடுகளில் வெற்றி (victory) என்பதன் சிம்பலாக காட்டுவதை, எம்.ஜி.ஆருக்கும் இரண்டு விரலைக் காட்ட கற்றுக் கொடுத்ததற்கும் தா. பாண்டியன் அவர்களுக்கு பங்கு இருக்கிறது. சமீபத்தில் ஒரு தோழர் சொன்ன செய்தி இது. இதை தா. பாண்டியன் வட்டாரம் பெருமையாக சொல்லித் திரிகிறார்களாம். வெட்ககேடு!

 6. ஆதரவாளர்கள் இப்படி செய்வார்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் எல்லா உறுப்பினர்களும் அப்படித்தான் என்றுதான் முதலில் புரிந்துகொண்டேன். தவறான புரிதலை clarify செய்ததற்கு நன்றி!

  ம.க.இ.கவினர் தங்கள் முழு நேர தோழர்களிடம் இப்படி எதிர்பார்ப்பதே பெரிய விஷயம். எல்லா முழு நேரத் தோழர்களும் இப்படி செய்யாவிட்டாலும் கூட. ஒரே ஒருவர் மட்டுமே அப்படி செய்தாலும் அந்த ஒருவரது லட்சிய வேகம் பாராட்டத் தக்கது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

 7. இதுல் யாரு சொத்து மதிப்பை சரியாக வெளியிட்டார்கள்?? கலைஞரைவிட ஒரு மிகப் பெரிய திருடன் இந்தியாவில் உண்டா?? தயாநிதிமாறனுக்கு 3 கோடி சொச்சம் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார். இதை நம்புகிறீர்களா?

  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!

 8. அரசியல்வாதிங்க‌ எல்லாவனுமே திருட்டுப்பயலுகதான். இதில் எவனும் விதிவிலக்கு கிடயாது. ஓட்டு வாங்கி ஜெயிச்சவனுக்கு தங்கபானை, ஓட்டு போட்டவனுக்கு உடஞ்ச பானை.

 9. கருத்துப்படம் அருமை. கருத்துப்படத்திற்கு பொருந்துகிற மாதிரி, ஒரு செய்தி. சமீபத்தில் சென்னையில் தா. பாண்டியன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லியிருக்கிறார்கள். “ஜெயலலிதா” என்று நாமகரம் சூட்டினாராம் பாண்டியன். உடன் போன சிபிஐ தோழர் நொந்து போயிருக்கிறார். அடுத்து ஒரு குழந்தைக்கு பாரதி என பெயர் வைத்தாராம்.

  • ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ பற்றியெல்லாம் நூல்களை எழுதித் தள்ளுபவருக்கு ஜெயலலிதா பெயர்தான் காலத்திற்கேற்ற பெயராய் தெரிந்திருக்கிறது. அவருக்கு பக்கத்தில் இருந்து கொண்டு நொந்து கொள்வதில் பயனில்லை என்பது அந்த தோழருக்கு விரைந்து தெரியவரும்.

   தோழமையுடன்
   செங்கொடி

 10. கம்யூனிஸ்ட்-கல்ல கொஞ்சம் நல்ல மனுசங்க இருந்தாங்க…அவங்களை பாராட்டி பேசவோ, அவங்களோட சேர்ந்து மக்கள் பணி செய்யவோ வராத, எப்போதும் திருடர்களுக்கு கொடி பிடிக்கிற நீங்க, இவரு ஜெயலலிதாவுக்கு சப்போர்ட் பண்றார்-ங்கறதுக்காக இப்ப முட்டிகிட்டு நிக்க கூடாது. நல்லது செய்றவனுக்கு வோட்டு போடவும் மாட்டீங்க. நல்லவங்க நீங்களா ஒன்னு சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யவும் மாட்டீங்க….அடுத்தவன் சூத்து (சொத்து) கணக்க நோட்டம் சொல்லுங்க…பல ஆயிரம் திருட்டு சொத்து வச்சிருக்கிற மு.க. கூட்டத்தை விட்டுட்டு சில லட்சங்கள குறைச்சு சொன்னவனை மட்டம் தட்டி பேசுறது எப்படி ராசா நியாயமாகும்?

 11. உங்கள் பேச்சாளர் ஒருவர் ஆறுமாதத்திற்கு ஒரு முறை மகளைப் பார்க்க என்று அமெரிக்க போகிறாரே,நடந்தபோகிறார்.? காஷ்யபன்

  • பேச்சாளரில் ஒருவர்னு சொல்லிடிங்க .. யாருன்னு சொன்னிங்கனா .. விளக்கம் கொடுக்க வசதியா இருக்கும் ல ?..

 12. தா.பாண்டியன் இந்த கேள்விகளுக்கெல்லாம் முன்பே பதில் சொல்லியுள்ளார்.கார் அவருக்கு அன்பளிப்பாக தொழிற்சங்கங்கள் கொடுத்தது.அவர் மனைவி வேலைப் பார்க்கிறார்.20 ஆண்டுகளுக்கு முன் 50,000 கொடுத்து வாங்கிய நிலம் இன்று 50 லட்சம் மதிப்புள்ளது என்றால் அதற்கு அவர் என்ன செய்ய முடியும். அவர் பரம்பரை பணக்காராக இல்லாமலிருக்கலாம்.இன்று வேலை பார்க்கும் கணவன்/மனைவி,மற்றும் வேலை பார்க்கும் மக்ன்(கள்)/மகள்(கள்) உள்ள பலர் லட்சாதிபதிகள்.காரணம் முன்பு வாங்கிய நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்டது.தா.பாண்டியன் பல முறை எம்.பியாக இருந்திருக்கிறார், தொழிற்சங்க தலைவர், சிபிஐயில் ஒரு தலைவர். அவர் மீது வாய் புளிதத்தோ மாங்காய் புளித்ததோ என்று குற்றம் சாட்டுவது சரியல்ல. ஒன்றரை கிரவுண்டில் உள்ளது மாளிகை,அரண்மணை என்று எழுதலாம்.அப்போதெல்லாம் அடுக்ககங்கள் இல்லை.தனி வீடு கட்டுவதுதான் வழக்கம்.அண்ணா நகர் 60களில்/70களில் இன்று போல் இருக்கவில்லை.இன்று 60 லட்சம் பெறக்கூடிய ஒரு வீட்டுமனை அன்று அதாவது 40 ஆண்டுகளுக்கு
  முன் ஆயிரங்களில் விற்கப்பட்டது. எனவே சகட்டுமேனிக்கு எழுதி ஒருவர் மீது அவதூறு செய்ய வேண்டாம்.இன்னாரிடம் லஞ்சம் வாங்கினார்,ஆடம்பர வாழ்க்கை வாழ கம்பெனிகளிடம் காசு வாங்கி தொழிலாளர்களுக்கு துரோகம் செய்தார் என்று குறிப்பான புகார் இருந்தால் எழுதவும்.

 13. அந்த பேச்சாளர் யார் என்று உங்களு க்கு தெரியும்.என் வாய் முலம் வரவழைத்து அவரை அம்பலப்படுத்த விரும்புகிறீர்கள். குயுக்தியான புத்தி உமக்கு!

  • லாவகமாக பேசி மழுப்பும் .. குப்பைத்தனமான புத்தி உடையவனா நீ ?..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க