முகப்புசினிமா பாடல்: பரவசத்தில் மனுஷ்ய புத்திரன் !
Array

சினிமா பாடல்: பரவசத்தில் மனுஷ்ய புத்திரன் !

-

மனுஷ்ய புத்திரன் சினிமா பாடல்

மனுஷ்ய புத்திரனைத் தெரியுமா? தீவிர இலக்கியவாதி, உயிர்மை இதழ், பதிப்பகத்தின் ஆசிரியர், வெளியீட்டாளர், அப்புறம் கவிஞர். இவர் சினிமாப் படம் ஒன்றுக்கு பாடல் எழுதிய கதையை குமுதம் 27.05.09 இதழ் வெளியிட்டிருக்கிறது.

கமல் ஒரு நாள் நம்ம கவிஞரை தொலைபேசியில் அழைத்து வருமாறு கேட்டாராம். கவிஞரும் ஆச்சரியத்துடன் பார்க்கப் போனாராம். அங்கே கமல், அவர் மகள் ஸ்ருதி, இயக்குநர் சக்ரி மூவரும் இருந்தார்களாம். “உன்னைப் போல் ஒருவன்” படத்தில் ஒரு முக்கியமான பாடலை எழுதுமாறு கவிஞரை, உலக நாயகன் பணித்தாராம். உடனே கவிஞருக்கு இன்ப அதிர்ச்சியாம். அதுவும் கமல், மோகன்லால் என இரண்டு திரையுலகப் பிரம்மாக்களின் படத்தில் அறிமுகமென்றால் கேட்கணுமா? மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

இயக்குநர் சக்ரி பாடல் இடம்பெறும் சூழலை விளக்க, படத்தின் இசையமைப்பாளர் ஸ்ருதி இந்தியில் ஒரு சரணத்தைப் பாடி இசையமைத்து அதைப்பற்றி விளக்கி கவிஞரிடன் கொடுத்தாராம். இந்தி தெரியாதென்றாலும் ஸ்ருதி அந்தப்பாடலில் வெளிப்படுத்திய ஆழ்ந்த துயரம் கவிஞரின் மனதைக் கசியச் செய்ததாம்.

அடுத்து வீட்டில் உட்கார்ந்து கவிஞர் எழுதிய பாடலை ஸ்ருதி அவரது மெட்டுக்கு கச்சிதமாகப் பொருந்துவதாக கூறியதும் கவிஞருக்கு சந்தோஷமாம். அடுத்து கமல் சினிமாவில் பாடும் பாடல்கள் கவிஞருக்கு சின்ன வயதிலேயே பிடிக்குமாம். எண்ணெற்ற பாவங்களும், உணர்ச்சிகளும் வெளிப்படும் குரலாம் அது. அந்தக் குரல்தான் இந்தப் பாடலைப் பாடவேண்டுமென கவிஞர் விரும்பினாராம். அந்த ஆசையும் நிறைவேறியதாம்.

ஸ்ருதியின் இசையில் கமல் அந்தப் பாடலை பாடிய போது மனதைக் கரையச் செய்யும் வேறொரு கலைப்படைப்பாக மாறியதைக் கண்டு கவிஞரின் கண்களில் நீர் தளும்பியதாம். அவருக்கே நீர் வந்துவிட்டதால் இந்தப் பாடல் நம் காலத்தின் மாபெரும் துயரை வெளிப்படுத்தும் பாடலாக எல்லோருடைய இதயத்தையும் தொடுமாம்.

அடுத்து ஸ்ருதியின் ஆளுமையை, ” பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட நுட்பமான பெண், சினிமாவைத் தாண்டி ஒரு ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர், மிகப்பெரிய சாதனைகளையும், வெற்றிகளையும் எதிர்காலத்தில் குவிப்பார்” என்றெல்லாம் கவிஞர் உணர்ச்சிகரமாக நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்.

இதற்கு முன்னரே ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற தீவிர இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வந்திருக்கின்றனர். இதில் மனுஷ்ய புத்திரன் சமீபத்திய வரவு. பொதுவில் இந்த இலக்கியவாதிகளெல்லாம் சினிமாக்காரராக மாறுவதற்கு முன்னர் சினிமாவை சந்தைக் கலாச்சாரம், சதையை விற்கும் வியாபாரம் என்று பயங்கரமாக தாக்குவார்கள். ஆனால் சான்ஸ் கிடைத்துவிட்டால் போதும் மற்ற சினிமா உலகினரை விட நா கூசும் அளவில் வாய்ப்பு கொடுத்த புண்ணியவான்களை பயங்கரமாக ஐஸ் வைப்பார்கள். இதற்கு வாரமலரில் கவிதை எழுதுபவர்கள் தேவலாம்.

மேற்கண்ட சம்பவத்தில் ஒரே ஒரு சினிமாப் பாடல் எழுத சான்ஸ் கிடைத்ததும் கமலையும் அவரது மகளையும் எத்தனை தடவை உணர்ச்சிவசப்பட்டு, நெகிழ்ச்சியுடன், நுட்பம், ஆற்றல் என்றெல்லாம் உருகுகிறார் பாருங்கள். அந்தக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் தங்களுக்கு பொற்காசுகள் கொடுக்கும் மன்னர்களை இந்திரனே, சந்திரனே என்று வாய்நிறைய பாடுவார்கள். இந்தக்காலத்து சிற்றிலக்கியவாதிகளோ அந்த வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிப்போட்டு பாடுகிறார்கள். இதுதான் காலம்காலமாக தொடர்ந்து வரும் தமிழ் மரபு போலும்!

vote-012
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

  1. மனுஷ்ய புத்திரன் பற்றிய ஒரு குறிப்பு கேள்விபட்டது :
    கொடியன்குளம் சாதிப்படுகொலையின் போது கண் தெரியாதவர்களின் சுய இன்பத்தை மற்றவர்கள் எப்படி கேவலப்படுத்துகிறார்கள் என ஒப்பாரி வைத்தவர்.

    சுனாமியால் மக்கள் செத்ததுக்கு புதுக்காரணம் சொன்ன கமல்மாமாவுக்கு ஏத்த ஜோடிதான் நம்ம கவிப்புறாஆஆஆஆஆஆஆஆ

    கலகம்

  2. அடுத்து கமல் அழைக்கப் போவது யார் ? கவிஞர் சல்மாவா ?

  3. துதிபாடிகள் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளனர்…

  4. நாளைக்கு வினவுக்கு வாய்ப்பு கொடுத்தால் வினவும் புகழாது என்று என்ன நிச்சயம் ???

    • ரவி,

      வாய்ப்பு கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியர்கள், வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும அயோக்கியர்கள் என்பதுதான் இன்றைய உலகின் காரியவாதம் என்பதை உங்கள் கேள்வி நிருபிக்கிறது. ஈழத்துக்கு ஜே என ஜெயலலிதா முழங்கியதும் எல்லோரும் அம்மாவை ஈழத்தாய் என கொண்டாடிய போது வினவு மட்டும் எதிர்த்து எழுதியதே அதிலிருந்தே நீங்கள் வினவைப் புரிந்து கொள்ளலாமே? மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன் போன்ற இலக்கிய பிரம்மாக்கள் ஆரம்பத்தில் சினிமாவை அடியோடு எதிர்ப்பதும் பின்னர் வாய்ப்பு கிடைத்தால் முதுகு சொறிவதும் என ஜால்ரா அடிப்பதை விளக்கத்தான் இந்த பதிவு. நாளையே உங்கள் அபிமான கமலஹாசன் வினவைப் பாராட்டி ஒரு பின்னூட்டமிட்டாலும் நாங்கள் தேவை இருந்தால் கமலின் படத்தையும் விமரிசிப்போம்.

      நட்புடன்
      வினவு

      • தற்போது வெளிவந்திருக்கும் உன்னை போல் ஒருவன் என்ற படத்தை வினவு பார்த்து சரியான விமர்சனம் தரவேண்டும் பல அயோக்கியதனங்கள் உள்ளன இந்துதுவத்திற்கான ஒரு விளம்பரப்படம் அது
        ஆகவே சரியான விமர்சனத்தை எதிர்பாக்கிறோம்

    • கண்டிப்பாய் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் வினவை கடுமையாய் விமர்சனம் செய்யலாம். அதற்கு தயாராக இருக்கப்போய் தானே அனைவரையும் விமர்சனம் செய்கிறார்கள். விமர்சனம் என்பது இருபக்கமும் கூர்முனை கொண்ட கத்தி ஒன்றில் விமர்சனம் செய்து விட்டு பின்னர் மாறி செயல் பட்டால் அது தன்னையே காயப்படுத்தும், எல்லாவற்றுக்கும் தயாராகித்தானே அவர்கள்(வினவு) களத்திலிருக்கிறார்கள்.அய்யா ரவி நீங்கள் தயாரா? நீங்கள் என்னவோ புத்திரனுக்கு சப்பை கட்டு கட்டுவது போல தோன்றுகிறதே

      கலகம்

  5. எனக்கென்னமோ உங்களுக்கு உண்மையாக ஓட்டு விழுவது போல தெரியவில்லையே ? ஏதும் மார்க்கெடிங் தந்திரம் ???

    • ரவி,

      உரையாடல் கதைகளுக்கு மதிப்பெண் போட்டு ( அதற்கு வாழத்துக்கள்) களைத்துவிட்டீர்கள் போலத் தெரிகிறது. வினவின் பதிவுகளை தினமும் ஒரிரு ஆயிரம்பேர் படிக்கும்போது தமிழ்மணத்தில் பத்து பதினைந்து வாக்குகள் வாங்குவது பெரிய பிரச்சினையல்ல. ஆனால் எங்களுக்கு மற்றவர்களை விட எதிரிகள் அதிகம். அதனால் நெகட்டீவ் வாக்குகள் ஏன் விழுவதில்லை என்பதுதான்எங்ளுக்கே ஆச்சரியம். போகட்டும், மனுஷ்யபுத்திரன் போன்றோரைப் பற்றி பதிவு போட்டால்தான் செந்தழல்ரவி போன்ற மூத்த பதிவர்கள் வினவில் பின்னூட்டமிடுவார்கள் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.

      நட்புடன்
      வினவு

      • செந்தழல்ரவி இந்த பதிவை வாசித்து தான் பின்னூட்டமிட்டாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் அவரது பின்னூட்டம் இந்த பதிவுக்கு சம்மந்தமே இல்லாதது. அவருக்கு இதை புரிந்து கொள்ளும் சக்தி இருக்கிறதா என்பது கூட சந்தேகமே. ஒரு நாலு பேருடன் சேர்ந்து கும்மி அடிப்பது தானே அவர் வழக்கம். அவர் கூட்டமே அவருக்கு ஒட்டு போடுவதில்லை என்கிற வயிற்றெரிச்சல் நன்றாகவே தெரிகிறது

    • //எனக்கென்னமோ உங்களுக்கு உண்மையாக ஓட்டு விழுவது போல தெரியவில்லையே ? ஏதும் மார்க்கெடிங் தந்திரம் ??? கேட்கிறார் டீடெயில்! பல நல்ல பதிவுகள் மேலும் பல பதிவுகளில் பலர் பங்கெடுத்து கொண்டு, விவாதித்ததெற்கெல்லாம் வராதவர். இப்ப கேட்கிறார் மிகப்பெரிய சந்தேகம். “மார்கெட்டிங் தந்திரம்!” என்னா! ஒரு மாபெரும் கவலை! அதொன்னுமில்லை. தமிழ்மணத்தில் நிறைய பேருக்கு இது தான் கவலை. அது வலையுலக நோய்களில் இதுவும் ஒன்று.

    • அய்யா ரவி,

      அட்ரஸ் மாறி வந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்.கேப்புமாறி வேலை செய்வதெல்லாம் வினவுக்கு அவசியமில்லை.

      கலகம்

      • ரவி, நானும் தொடர்ந்து வினவு கட்டுரைகள் வாசிப்பவன். வெகுசில நேரங்கள் மட்டும் பின்னூட்டம் எழுதுவேன்.. ஆனால் எப்போதும் கட்டுரையைத் திறந்ததும் முதல் காரியமாக ஒரு + ஓட்டு போட்டு விட்டுத்தான் படிக்கவே ஆரம்பிப்பேன். ஏனெனில் ம.க.இ.கவினரின் கருத்துக்கள் – சிலவேளைகளில் நமக்கும் ஏற்புடையதாய் இல்லாவிட்டால் கூட ( உ-ம் :- புலிகள்) – நேர்மையானதாகவும், கறாரானதாகவும், போலித்தனங்கள் இல்லாமலும் இருக்கும் என்பதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது. காரணம் என்ன? இவர்கள் மற்ற அரசியல்வாதிகள் போல் கிடையாது – மக்களோடு இருப்பவர்கள் – மக்களின் அரசியல் பேசிகிறவர்கள். நாமோ மக்களைவிட்டு வெகுதூரம் விலகிநிற்கிறோம். நமது மண்டையில் மக்கள் அரசியல் என்பது உடனடியாக ஏறாது; கொஞ்சம் பொறுமையாக சிந்தித்தால் புரியலாம்

        சிலவேளைகளில் எனது கருத்துக்கள் கூட நாளடைவில் மாறியிருக்கிறது – புலிகள் பற்றிய எனது முந்தைய புரிதல் அடிப்படையில் ம.க.இ.கவின் / பு.ஜவின் கட்டுரைகள் முன்பெல்லாம் எனக்கு எரிச்சலூட்டவதாய் இருந்திருக்கிறது – ஆனால் ஈழப்போராட்டம் குறித்து இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக முன்னறிந்து சொன்ன ஒவ்வொன்றும் இப்போது நிதர்சனமாகியிருப்பதை பார்க்கிறேன் – குறிப்பாக சமீபமாக வந்த ஈழம் குறித்த மூன்று வெளியீடுகளைப் படித்த பின்.

        நீங்கள் வினவின் கருத்துக்களை மறுத்து உரையாடலாம் ஆனால் நேர்மை குறித்து சந்தேகப்படுவது தேவையற்றது என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். அப்படிச்செய்வதானால் ஆதாரத்தோடு செய்யுங்கள்

        • Dear vinavu,

          Who is this R.K?
          ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !-R.K?

          If it is true then it is a great effect by MKEK and Vinavu to change the political mind set of R.K. about eelam issue.

          I am very much thankful for ur effort to navigate people into the right direction.

          I too cleared most of my conflicts and contradiction with MKEK related with eelam issue now by reading and analyzing PJ and vinavu essays.

          Still I have very few doubts in my mind about the solution for eelam issue .

          I will come directly to PJ office and clear them soon.

          Thanking you!

      • ஆர். கே. யின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது. வினவு தளத்தை சில காலமே படித்து வந்தாலும், அவர்களோடு கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரு சில சக வாசகர்களோடு பல நாட்கள் பல விஷயங்களில் வாதம் புரிந்திருந்தாலும் எனக்கு அவர்கள் நாணயத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக திரு மருதையனின் தேர்தல் கால நேர்காணல் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. வாழ்வில் ஒரு முறை கூட லஞ்சம் வாங்காத, லஞ்சம் குடுக்காத, இன்னமும் நீதியில் நாணயத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களை இவர்களாவது மற்ற அரசியல் வாதிகள் போல ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்புகிறேன்!

  6. //எனக்கென்னமோ உங்களுக்கு உண்மையாக ஓட்டு விழுவது போல தெரியவில்லையே ? ஏதும் மார்க்கெடிங் தந்திரம் ???//

    ரவி,

    வினவின் அனைத்துப் பதிவுகளையும் படித்து ஓட்டுப்போடும் பலரில் நானும் ஒருவன். எனது நண்பர்களில் பலரும் வினவின் வாசகர்கள். ப்ளஸ் ஓட்டு குத்துபவர்கள். தங்கள் நிலைப்பாடுகளில் உறுதியாக இருப்பதுடன், நண்பர்கள் தடம் புரளும்போதும் சுட்டிக்காட்ட தயங்காத வினவின் குணமே, அவர்களது பதிவுகளை தொடர்ந்து வாசித்து ஓட்டு குத்த காரணம். இதில் மார்க்கெட்டிங் தந்திரம் இருப்பதாக தெரியவில்லை.

    தோழமையுடன்

    பைத்தியக்காரன்

  7. இதை எதிர் வினையாக எழுதவில்லை. கொஞ்சம் இடம் கொடுக்கலாமே என்ற பரந்த நோக்கோடுதான் சொல்கிறேன்.

    ஒரு வேளை, தப்பித் தவறி, இந்தப் பாடல் சிறப்பாக அமைந்து விட்டால், ஸ்ருதியின் இசையமைப்பு உயர்வாக இருந்து விட்டால், அதையும் நாம் பாராட்ட வேண்டும். கமல் என்ற புகழ் பெற்ற நடிகரின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக ஸ்ருதிக்கு உண்மையான திறமை இருந்தால் பாராட்டாமல் விடக்கூடாது.

    மற்றபடி, சரியான பதிவு என்றே எண்ணுகிறேன்.

  8. கமல் பட கவிஞர் காமெடி…

    அடுத்து ஸ்ருதியின் ஆளுமையை, ” பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட நுட்பமான பெண், சினிமாவைத் தாண்டி ஒரு ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர், மிகப்பெரிய சாதனைகளையும், வெற்றிகளையும் எதிர்காலத்தில் குவிப்பார்” என்றெல்லாம் கவிஞர் உணர்ச்சிகரமாக நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்….

  9. முதலில், சிறுபத்திரிக்கை என்பதே தமிழில் அழிந்து ஏறத்தாழ 10‍அல்லது 15 வருடங்கள் ஆகிவிட்டது. இதே சிறுபத்திரிக்கையில் தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்களும்/தொலைத்துக்கொண்டிருப்பவர்களும் ஏராளம்..ஏராளம்….
    உயிர்மை/காலச்சுவடு/உயிர் எழுத்து இத்தியாதிகள் சிறுபத்திரிக்கையே இல்லை. A4 சைசில் வண்ண வண்ண விளம்பரங்கள். தங்கள் நிறுவனத்திலிருந்து (publishing business ) அச்சாகி வரும் காகித குப்பைகளை விற்ப்பதற்க்குதான் ( சில விதிவிலக்காக, நல்ல புத்தகங்களும் வருகிறது), இந்த இதழ்களை நடத்துகிறார்கள். மேலும், அரசியல்/சினிமா போன்ற வெகுஜன தளத்திற்கு வருவதற்கு, சிற்றிதழ் நடத்துவது/ அல்லது அதில் எழுதுவது என்பதாகிவிட்டது. பழைய சிறுபத்திரிக்கையில் தீவிரமாக விவாதிக்க/கலந்துரையாட ஒரு களம் இருந்தது. ஆனால், இவர்கள் நடத்தும் இந்த middle magazine ல் ஒரு சீரிய/கூர்மையான கதைகள்/கட்டுரைகள் இல்லை. பொதுவில், இந்த பத்திரிக்கையில்,வெகுஜன சினிமா/இசை அல்லது current affairs பற்றி மேம்போக்காக நுநிப்புல் மேய்வது. இதை எழுதுவதற்குத்தான் “லத்தின் அமெரிக்க பீர் குடிப்பவரும், கேரளத்து மொந்த கள் குடிப்பவரும்” இருக்கிறார்கள். அதானால்தான், சுஜாதா/பாலகுமாரன் போன்ற குப்பைகளை படித்த வாசகனுக்கு, சாநி/ஜெமோ போன்றவர்களை அண்ணாந்து பார்க்கிறான். இந்த இணயதளத்தில், இருவருக்கும் பெரிய “தற்கொலை படை” யே இருக்கிறது. ஜெமோ/எஸ்.ரா/ம‌னஷ்ய‌புத்திர‌ன்/……..இவ‌ர்க‌ளை “பின் தொட‌ரும் நிழ‌ல்கள்” எவ‌ரோ??? சாநி யை சாதார்ண‌மாக‌ நினைக்காதிர்க‌ள்… மற்றவ‌ர்க‌ள் (ஜெமோ/எஸ்.ரா/ம‌னஷ்ய‌புத்திர‌ன்/) அடைந்திருக்கும் அல்ப‌ புக‌ழையும்/ப‌ண‌த்தையும், இவ‌ர் த‌ன் வ‌லைப்பூவில் அக்க‌வுண்டு ந‌ம்ப‌ர் கொடுத்து ச‌ம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.சாநியும் ரொம்பவும் புலம்பிக்கொண்டிருக்கிறார் கோடம்பாக்கத்தில் நுழைவதற்கு..ஆனால் யாரும் சீண்ட மாட்டுகிறார்கள்..பாவம் அவரும் என்ன பண்ணுவார்..எவ்வளவு காலம்தான் தன் எழுத்தில் “குறி” விளையாட்டு ஆடிக்கொண்டிருக்கிறார்..இதில் முக்கியமாக, ஜெமோ வின் சாதனைகளையும்/சாமர்த்தியங்களையும் மொழி ஆளுமை ஆற்றலையும் சொல்லி மாளாது!!!!! ஜெமோ வுக்கு, ராம் சேனா வின் முத்தலிக் தேவலை!! ஏனெனில், முத்தலிக் தான் சார்ந்துள்ள இயக்கம் சார்பாக பேசுகிறார்..ஆனால் ஜெமோ வோ தத்துவம் பேசுகிறேன் பேர்வழி என்று, இந்துத்துவா குப்பைகளை மிக நுட்பமாக அள்ளி தெரிக்கிறார்.. ஆகையால் ஜேமோ போன்றவர்கள் மிக ஆபத்தானவர்கள்..சிறுபத்திரிக்கையிலிருந்து (காலச்சுவடு மடம் ) அர‌சிய‌லில் நுழைந்த சல்மா என்ற பெண்ம‌ணி, திமுக‌ வில் சேர்ந்து தொண்டாற்றிருக்கின்றார்..(ம‌ருங்காபுரி தொகுதியில் நின்று தோற்ற‌வ‌ர்)…இதுதான் இவ‌ர்க‌ளின் சிறுப‌த்திரிக்கை தொண்டு…
    ஆக‌, கோட‌ம்பாக்கத்திற்கோ, கோபால‌புர‌த்திற்கோ போகுவ‌த‌ற்கு எளிய‌ வ‌ழி, சிறுப‌த்திரிக்கை தொண்டாற்றுவ‌து…

  10. //பொதுவில் இந்த இலக்கியவாதிகளெல்லாம் சினிமாக்காரராக மாறுவதற்கு முன்னர் சினிமாவை சந்தைக் கலாச்சாரம், சதையை விற்கும் வியாபாரம் என்று பயங்கரமாக தாக்குவார்கள். ஆனால் சான்ஸ் கிடைத்துவிட்டால் போதும் மற்ற சினிமா உலகினரை விட நா கூசும் அளவில் வாய்ப்பு கொடுத்த புண்ணியவான்களை பயங்கரமாக ஐஸ் வைப்பார்கள். இதற்கு வாரமலரில் கவிதை எழுதுபவர்கள் தேவலாம்.//

    பொதுப்படுத்துதல்கல் மற்றும் மிக தவறான பார்வை.
    மொத்த சினிமாவையும் யாரும் வெறுக்கவில்லை.
    மசாலா படங்கள் மற்றும் அதில் பங்கேற்பவர்கள் பற்றி
    அப்படி ஒரு பார்வை இருக்குதான். பல அருமையான‌
    படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
    சினிமா ஒரு அற்புதமாக மீடியம். எதோ கமல்
    இந்த அளவிற்க்காவது (அன்பே சிவம்,ஹேராம், மகாநதி
    போன்ற படங்கள்) நட்டத்தில் எடுக்கிறார் என்று
    ஒரு ஆறுதல், மரியாதை. அவ்வளாவுதான்.
    உடனே தூற்றுவீர்களே. அப்ப ரஜனி, சரத்குமார்
    ரக படங்கள் மட்டும் வந்தா போதுமா ?
    நடைமுறை சாத்தியங்களை பாருங்களேன்.

    மனுஸ்யபுத்திரன் மிகவும் பரந்த பார்வை, மற்றும்
    நேர்மை உடைய‌, மனிதனேயர். கமல் மீது அவருக்கு
    (ஏன், பலருக்கும்) இருக்கும் மரியாதை காரணமாக‌
    அப்ப்டி செல்லிருக்கிறார். இதே விஜயகாந்த அல்லது
    சரத்குமார் இப்படி அழைத்திருந்தால் சென்றிருக்க
    மாட்டர் / ஒப்புகொள்ள மாட்டார் என்பதை
    அவரின் வாசகர்கள் அறிவர்.

    மனூஸ்யபுத்திரன் வறுமையோடு போராடியவர்,
    இன்று வெற்றிகரமாக ஒரு பதிப்பாளாராக‌
    உயர்வது பெரும் குற்றமா என்ன ? அவர்
    வெளியிடும் புத்தகங்கள் இலக்கியமா அல்லது
    குப்பையா என்பதை யார் முடிவு செய்வது ?
    வாசகர்களும், காலமும் தான். ம.க.இ.க‌
    அல்ல.

    இங்கு பின்னோட்டம் இடும் பலரும்
    பன்னாட்டு நிறுவங்களில் கொழுத்த சம்பளத்தில்
    வேலை செய்கிறார்கள். அதே போல்
    மனுஸிய புத்திரன் ஒரு பதிப்பகத்தின்
    மூலம் “சம்பாதிப்பது” எமக்கு மிகுந்த‌
    மகிழ்ச்சியளிக்கிறது. கவிஞர்கள் மற்றும்
    எழுத்தாளர்கள் வறுமையில் வாட வேண்டும்,
    பிச்சை எடுக்க வேண்டும் என்பதே பலரின்
    எண்ணம் தானே ? ஏன் ?

    சரி, நீங்க எதிர்காலத்தில் செம்புரட்சி செய்து
    அரசமைத்தால் மனுஸ்ய புத்திரன் போன்றவர்களை
    என்ன செய்வீர்கள் ? சிறையில் அடைப்பீர்களா
    அல்லது தூக்கில் போடுவீர்களா ? அப்படிதானெ
    உள்ளது கடந்த கால புரட்சி வரலாறு ?

  11. நண்பர் அதியமான் அவர்களே,
    விஜயகாந்த், சரத்குமார் போன்றோரும் மனுஸ்யப் புத்திரனை அழைப்பார்கள். கொஞ்சம் பொறுங்கள். அதிர்ச்டசாலிகளுக்கு மட்டுமே திறக்கும் கோடம்பாக்கத்தின் சொர்க்க வாசல் இப்போது தான் மனுஸுக்கு திறந்திருக்கிறது. அவர் செல்லப் போகும் உயரத்தை வாசகர்கள் சாக்கிட்டு தடுக்க நினைக்கிறீர்களே, தகுமா? மேலும் கமல் அழைப்புக்குச் செல்லலாமா, வேண்டமா என்று வாசகர்களிடம் கருத்துக் கேட்டாரா என்ன? பாவம் சிறுப்பத்திரிக்கை வாசகர்கள்.

  12. “முற்போக்காக” தன்னை காட்டுபவர்களுக்கெல்லாம்… வாய்ப்பு தந்து தான் உரசிப்பார்க்க வேண்டும். வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பார்க்கலாம். எனக்கென்னவோ ஒரு பாட்டுக்கு புகழ்ந்தாக தெரியவில்லை. தொடர்ச்சியான வாய்ப்புகளுக்காக தான் இந்த ஐஸ் என தோன்றுகிறது.
    புரட்சி வந்த பிறகு தங்கள் நிலையை கண்டு பலருக்கு பயம் இருக்கிறது. அதற்காகவாவது புரட்சி வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

  13. அதியமான் அவர்களே புரட்சி வந்தால் மனுஸ்யப புத்திரனுக்கு என்ன நடக்கும் என்பதை அப்புறம் தெறிந்து கொள்ளலாம் முதலில் ‘சுமங்கலித் திட்டம்’ என்ற பெயரில் எங்கள் உழைக்கும் வர்க்கப் பெண்களின் ரத்ததை உரிஞ்சிக் குடிக்கும் திருப்பூர் கரூர் பகுதி கார்மெண்ட்ஸ் முதலாளிகளுக்கு என்ன நடக்கும் என்பதை பழைய அனுபவங்களில் இருந்து தொகுத்துப் பார்க்கவும்.

  14. அதியமான்,

    இங்கு யாரும் சிறுபத்திரிக்கையாளர்கள் சினிமாவில் வேலை செய்வதை குறை சொல்லவில்லை( இதுவரையில் சினிமாவுக்கு போய் அப்படி என்ன காலத்தால் அழிக்கமுடியாத மகத்தான படைப்புகளை இவர்கள் படைத்திருக்கிறார்கள்). இன்னும் சொல்லப்போனால், சிறுபத்திரிக்கையாளர்கள் நன்றாக சம்பாதிக்கவேண்டும்,வளமான வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால், சினிமாவில்/அரசியலில் சேர்வதற்கு செய்யும் பள்ளிளிப்பு, பரவசம், பிரபலங்களுக்கு பாததாங்கியாக இருப்பது, சார் போட்டு விளிப்பது….இத்தியாதிகள் சொல்லிக்கொண்டே போகலாம்.
    சமீபத்தில், பாடகர் சஞ்சய் சுப்ரமணியம், ஜெமோ வலைட்தலத்திற்கு வந்த‌தற்கு எப்படி சாஷ்டங்கமாக காலில் விழுந்து,கன்னத்தில் போட்டு, அவரை வரவேற்றார் தெரியுமா??? என்னே பவ்யம்!!!!பல பேர், வெவ்வேறு வேலை பார்த்துகொண்டு, சிறு பத்திரிக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்யும் கூர்மையான சிறுபத்திரிக்கையாளன், அவனின் முதலாளியையும்/அவர்கள் சார்ந்த நிறுவனத்தையும் பார்த்து பரவசமடைந்து பாட்டெழுத மாட்டான்.
    அப்புற‌ம், க‌ம‌ல் உங்க‌ளுக்கு வேண்டுமானால் வேண்டிய‌வ‌ராக‌ இருக்க‌லாம் ( இதிலிருந்தே தெரிகிற‌து உங்க‌ள‌து “க‌லா ர‌சிப்புத‌ன்மை”!!. ஆனால் தீவிர‌மாக‌ இய‌ங்கும் ஒரு சிறுப‌த்திரிக்கை எழுத்தாள‌ன்/வாச‌க‌னுக்கு க‌ம‌ல் ஒரு க‌ழிச‌டை!!!
    நீங்க‌ள், இப்ப‌டி வ‌க்கால‌த்து வாங்கும்போது என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம்‍‍‍‍
    உங்க‌ள் பின்னோட்ட‌த்தை பார்த்தால், ம‌ண்ட‌ப‌த்திலிருந்து பாட்டெழுதி கொண்டு வ‌ரும் புல‌வ‌ர் போலிருக்கிறீர்க‌ள்!!!!

    • முதிய துறவி,

      சஞ்சய் சுப்பிரமண்யம் இரு அபாரமான கர்னாட இசை கலைஞ்ர். அவரை பாராட்டி
      ஜெமோ எழுதுவது அவரது உரிமை / ரசனை மற்றும் ஒரு மரியாதை. அதை இப்படி
      கொச்சை படுத்தும் உம்மை பார்த்தால் கழுதைக்கு தெரியுமா கறுபூர வாசனை என்ற முதுமொழி நினைவிற்க்கு வருகிறது. ச‌ஞ‌ச‌ய் ஒரு பார்ப‌னர் ஆனால பார்பனவாதி அல்ல, மேலும் க‌ர்னாட‌க‌ இசை ம‌க்க‌ளின் இசை அல்ல‌ என்ப‌தால், அதை முற்றாக‌ நிராக‌ரிக்க‌ வேண்டுமா என்ன‌ ? ஒவ்வொருவ‌ருக்கும் ஒரு ர‌ச‌னை. கிராமிய‌ இசையை வ‌ள‌ர்த்து பேண த‌டையில்ல‌யே ?

      எம்மை போன்ற‌ பாம‌ர‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ம‌ல் மீது ம‌ரியாதை உண்டுதான். அவ‌ர் த‌ரும் ப‌ல‌ ம‌சாலா, ஹீரோயிச‌ ப‌ட‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் ஒர‌ள‌விற்க்காவ‌து அருமைய‌ன‌ ப‌ட‌ங்க‌ளை த‌ருகிறார் / தந்தார் என்று ஒரு ம‌ரியாதை. நீங்க‌ ல‌த்தீன் அமெரிக்க‌ சினிமா, இரானிய‌ சினிமாக்க‌ள், அகிரோ குர‌ஸா போன்ற‌வ‌ர்க‌ளின் காவிய‌ங்க‌ளை ம‌ட்டும் தான் பார்பீக‌ போல‌ ஒரு பில்ட‌ப் ! :)) எதோ இந்த‌ ப‌ட‌ங்க‌ளாவ‌து த‌மிழில் உருவாக்கினாரே என்று
      பாராட்ட கூட‌ விட‌மாட்டீர்க‌ள் போல் !

      தோழ‌ர் வின‌வு,

      ம‌னுஸ்ய‌ புத்திர‌னின் ஒரு செய‌லை ப‌ற்றி (ரொம்ப‌ முக்கிய‌ம் பாருங்க‌) ப‌திவு எழுதும்
      நீங்க‌, மே.வ‌ங்காளத்தில் மாவோயிஸ்டுக‌ளின் தொடர் தாக்குத‌ல் அல்ல‌து போராட்ட‌ முறைக‌ள்,கொலைக‌ள் அத‌ற்க்கு அர‌சின் எதிர்வினைக‌ள் ப‌ற்றி ஏன் எழுத‌மாட்டேங்கிறீக‌ ?
      மாவோயிஸ்டுக‌ள் ப‌ற்றி க‌ருத்து வெளிய‌ட‌ கூடாது என்ப‌து ம‌.க‌.இ.க‌ வின் நிலைபாடா ?
      அவ‌ர்க‌ள் உங்க‌ ச‌கோத‌ர‌ அமைப்புக‌ள் தானே. ஒரே தெய்வ‌ம் (கார‌ல் மார்க்ஸ்), ஒரே ம‌த‌ம் : மார்க்ஸிச‌ம், ஒரே உப‌ தெய்வ‌ங்க‌ள் : லெனின், ஸ்டாலின், மாவோ, ஒரே
      இல‌க்கு ; பின் என்ன‌ ?

  15. http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2009062659761000.htm&date=2009/06/26/&prd=th&

    Lalgarh: is it liberated or ruled by fear?

    Praveen Swami

    Is the violence in West Medinipur district really an adivasi uprising?

    ——————————————————————————–

    Land reform has given adivasis a high level of freedom and security

    Poll results in the area showed no resentment against CPI(M)

  16. Hi Adhiyaman, why do you shy away from the fact about the land acquisition policy of the WB government which grabbed the land from Adivasis without giving adequate compensation and the police atrocities on them. Actually it is not a Maoist violence as popularly believed. People’s committee against the atrocities of police is spearheading the campaign and maoists are part of it. The police atrocities on these people are actually responsible for them to retaliate against the police and the WB government. Where did all these media people go when the adivasis took to the streets in a peaceful manner to want their demands to be addressed by the government? Please don’t go by the poll results, you will be decieved. Just also refer The Hindu few days back to understand this. In Kashmir five women were gang raped by the security forces and people showed resentment of such a measure as that is happening now in WB. Did maoists back the people of Kashmir? The excessive projection of Maoists in the Lalgarh issue and the ban on them show the ugly face of the union and the WB governments to play down the real issue and divert the attention of common people.

  17. //வினவின் அனைத்துப் பதிவுகளையும் படித்து ஓட்டுப்போடும் பலரில் நானும் ஒருவன். எனது நண்பர்களில் பலரும் வினவின் வாசகர்கள். ப்ளஸ் ஓட்டு குத்துபவர்கள். தங்கள் நிலைப்பாடுகளில் உறுதியாக இருப்பதுடன், நண்பர்கள் தடம் புரளும்போதும் சுட்டிக்காட்ட தயங்காத வினவின் குணமே, அவர்களது பதிவுகளை தொடர்ந்து வாசித்து ஓட்டு குத்த காரணம். இதில் மார்க்கெட்டிங் தந்திரம் இருப்பதாக தெரியவில்லை.

    தோழமையுடன்

    பைத்தியக்காரன்
    //

    I am not voting for vinavu every time but I agree most of the time and some time change my opinion after read vinavu.

    repeateeeeeeeeeeeeeeeee.

    Subu

  18. Hi Sukadev,

    I am not shying away from anything. ok. The fascist actions of land grabbing of WB or for that matter any govt is condemnable and certainly not real free market capitalism or liberal demoracy. ok. but read that link from hindu i had given. the present confronation of violence has nothing to do with land grabbing, etc. and adivasis are not with MAoisists, rather threatened and coercered by them. i can provide many many reports and links for this. Maosists are as fascist as any state sponsored fascism. if you cannot judge this properly, then ? Maosism is not the answer to poverty and unemployment. in fact it increases these problems and destroys any constructiive moves for betterment. agreed that there is colossal poverty and hunger. but Maoists way or communism is not the solution as proved by history. try to analysis why Vietnam abandoned communism after a terrible war to implement it. entire world has abandoned any form of socialism and are moving towards free markets and liberal democracy. and that is the rational thing to do.

    ////The excessive projection of Maoists in the Lalgarh issue and the ban on them show the ugly face of the union and the WB governments to play down the real issue and divert the attention of common people.//////

    wrong. no need to divert people’s attention. try to read the reports about the feelings of people about all this. if you can justify Maoisits senseless violence, then anyone can easily justify govts counter violence. Salawa judan, etc…

    read that link fully first.

  19. மாதவராஜ் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டம்

    எதிர்க்கப்பட வேண்டியது பார்ப்பனீயம் தான், மாறாக அந்த சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே ஒருவரை எதிர்க்கக்கூடாது என்கிற உங்கள் கூற்று முற்றிலும் சரி ஆனால் யார் அப்படி எதிர்க்கிறார்கள் ? கமலஹாசன் பார்ப்பன சமூக‌ பின்னணி கொண்டவர் என்பதாலேயே அவரை எதிர்ப்ப‌வர்கள் யார் ? அல்லது பாரதியை அவ்வாறு எதிர்ப்பவர்கள் யார் ?

    நீங்கள் கூறுவது போல‌ கமலஹாசனை ஒரு மாபெரும் கலைஞன் என்று அவருடைய‌ ஒரு பகுதியை மட்டும் (நடிப்பு,அதிலும் அவர் சிவாஜிக்கு ‘வாரிசு’) வைத்துக்கொண்டு வாழ்த்த முடியாது. அவ்வாறு செய்தால் த‌ன் காலத்தின் மாபெரும் கலைஞனாக திகழ்ந்த,கலையை தன் மக்களுக்காகவே(மக்கள் என்றால் உழைக்கின்ற மக்கள்) வடித்தெடுத்த‌ சாப்ளினுக்கும் கமலஹாசனுக்கும் வேறு பாடு இல்லாமல் போய் விடும். அவரும் கலைஞன் இவரும் கலைஞன் என்றாகி விடும் ! அது சரியா ?

    கமலஹாசனுடைய பார்ப்பனச்சார்பு பளீர் என்று பருண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை,அது மிகவும் சூக்குமமானதாக இருக்கலாம், சில சமயம் பெரியார்,கம்யூனிசம் என்று அவருக்கான‌ ஊறுகாயுடன் முற்போக்கும் கலந்திருக்கலாம்,அதாவது பாரதியை போல. நான் கமலஹாசனை ஒரு ‘பார்ப்பன பாசிஸ்ட்’ என்று கூறவில்லை.பாசிச கருத்தை பேசுபவனெல்லாம் பாசிஸ்ட் இயக்கத்தில் இருக்க வேண்டியதுமில்லை.ஆனால் கலஹாசனுக்கு தனது பார்ப்பன சமூகத்தின் மேண்மை பற்றிய பெருமை இருக்கிறது.

    பாரதி பற்றி இனியும் சொல்வதற்கென்ன இருக்கிறது ? சொல்லியும் ஆகப்போவது ஒன்றுமில்லை.அனைத்தும் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும் எனவே பாரதி பற்றிய கதையை இத்துடன் விட்டுவிடுகிறேன்.

  20. விஜய் டி.வி.யில் உ.போ.ஒ. தொடர்பான நேரடி ஒளிபரப்பு. மனுஷ். கமலுடன் பேசும்போது, ‘உலகத்தரம்’ என்ற சொல்லை உதிர்க்க, கமல் பதிலுக்கு நியாயம் பேசினார்..

    “உலகத்தரம் என்று ஒன்றுமே கிடையாது” என்று பேசிக்கொண்டே போக, மனுஷ் கப்சிப்..

  21. அதியமான் அவங்கள விடுங்க அவங்க நெனைக்கற புரட்சி வரவே போறதில்லை அது அவங்களுக்கும் தெரியும்.முதலாளித்துவம் கெட்டதுன்னு அதே முதலாளித்துவம் கண்டு பிடிச்ச இணையத்துல எழுதுவாங்க இது தான் அவங்க செய்யற ஒரே புரட்சி வாழ்க்கையோட கசப்பான நகைச்சுவைகளில் ஒன்றாக இதைக் கருதினால் போதும்.லக்கி லுக் எழுதுன புரட்சியும் பூர்ஷ்வாவும் (http://www.luckylookonline.com/2009/07/blog-post_19.html) வாசிங்க இவங்க புரட்சி காமெடி புரியும்.

    • அப்படியா! Ezhil தம்பி, நீங்க எழுதியிருக்கர அதிகப்பிரசங்கித்தனமான கருத்திலிருந்து உங்களுக்கு புரட்சி, பூர்சுவா, முதலாளித்துவம் இதபத்தியெல்லாம் ஒன்னுமே தெரியாதுன்னு தெரியுது, சரி வந்துடிங்க ஒரு விசயம் தெரிஞ்சுகிட்டு போங்க…

      இணையம்கறது முதலாளித்துவம் கண்டுபிடிச்சது இல்ல, அது உங்களையும் என்னையும் போல சாதாரண மனுசங்க கண்டு பிடிச்சது. இப்படி மனித ஆற்றலையும் உழைப்பையும் கொண்டு உருவாகும் சாதனங்களை மனித குல மேப்பாட்டுக்காக இலவசமாக இலவசமாக பயன்படவேண்டும் என்ற லட்சியத்தை நோக்கியதுதான் புரட்சி… காசிருக்கரவனுக்கு மட்டும்தான் பயன்பாடு என்ற அநீதிதான் முதலாளித்துவம்.

      பணிவு வேணும் தம்பி இல்லன்ன குண்டு சட்டியல குதிரைதான் ஓட்ட முடியும்… அதப்பத்தி லக்கி எதாவது எழுதியிருக்காரா பாருங்க

      • கேள்விகுறி அண்ணே
        பணிவைப் பத்தி நீங்க எனக்கு பாடம் சொல்லித் தர்ற அளவுக்கு நான் இல்லீங்கண்ணா.தமிழ்நாட்லியே பணிவுக்கும் மரியாதைக்கும் பேர் போன கோவை மாவட்டத்துக்காரங்னா .விரிவான பதிலோட வர்றேங்க்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க !!!!

      • எழில் தம்பி கோயமுத்தூரா…வணக்கம் தம்பி.. நிச்சயம் காத்திருக்கேன் வாங்க, கோயுமுத்தூர்காரங்க கிட்ட பேசினாலே ஒரு இன்பம்தான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க