Wednesday, June 7, 2023
முகப்புகலாவதியின் துயரக்கதையும் ராகுல் காந்தியின் வக்கிரப் புத்தியும்
Array

கலாவதியின் துயரக்கதையும் ராகுல் காந்தியின் வக்கிரப் புத்தியும்

-

கலாவதிகாங்கிரசின் தேர்தல் வெற்றிக்குப் பின், “இளவரசர்” ராகுல் காந்திக்கு மகுடாபிஷேகம் பண்ணி வைக்கும் வேலையில் முதலாளித்துவப் பத்திரிகைகள் இறங்கியுள்ளன. ” அவர்தான் இந்தியாவின் ஒபாமா” என ராகுலைப் புகழ்ந்து தள்ளுகிறது, தெகல்கா வார இதழ். அவரது மேடைப் பேச்சுக்கும் மட்டுமல்ல, அவரது “ஸ்டைலுக்கும்” ஒரு பொருள் இருப்பதாகக் கண்டுபிடித்து எழுதுகிறது, இந்தியா டுடே இதழ். எதிர்கால இந்தியாவுக்கு ராகுலை விட்டால் வேறு சிறந்த தலைவன் யாரும் கிடையாது என்றொரு கருத்து, பாமர மக்களிடம் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறது.

தன்னை மக்கள் தலைவனாகக் காட்டிக் கொள்ளும் நடிப்பில் ராகுலும் சளைத்தவராகத் தெரியவில்லை. திடீரெனத் தாழ்த்தப்பட்டோர் வீடுகளுக்கு “விஜயம்” செய்து, அப்பாவி மக்களைத் திக்குமுக்காட வைக்கிறார். ஏழை விவசாயிகளைத் தேடிப்போய்ப் பேசுகிறார். அவர்களது துயர வாழ்க்கையை நாடாளுமன்றத்தில் எடுத்துப் பேசித் தன்னை ஏழைப் பங்காளனாகக் காட்டிக் கொள்கிறார். ராகுல், தனது பிறந்த நாளன்று இலண்டனில் குதூகலமாக இருந்தாலும், அவரது அடிப்பொடிகள் இந்தியாவில் அவரது பிறந்த நாளை சமூக நல்லிணக்க நாளாகக் கொண்டாடினர்.

திராவிடக் கட்சிகளின் அரசியலைப் பார்த்தவர்களுக்கு ராகுலின் இந்தக் கவர்ச்சி அரசியல் புதிதாகத் தெரியப் போவதில்லை. பழைய கள்ளு, புதிய மொந்தை; அவ்வளவுதான்!
இதோ, இந்தப் படத்தில் இருக்கும் தாயின் பெயர் கலாவதி. மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயி. விதர்பா பகுதியைப் பிடித்தாட்டி வரும் சாபக்கேடு இவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கலாவதியின் கணவர், தான் பட்ட 90,000 ரூபாய் கடனை அடைக்க வழி தெரியாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

ராகுல் காந்தி கடந்த ஆண்டு திடீரென கலாவதியின் குடிசைக்கு விஜயம் செய்து, அவரது துயரக் கதையைக் கேட்டுவிட்டு, அவருக்கு ஒரு வீடு ஒதுக்கித் தருமாறு அதிகாரிகளிடம் கூறுவதாக “அருள்” பாலித்துவிட்டு “மறைந்து” போனார். இடதுசாரிக் கட்சிகள் மன்மோகன் சிங் அரசிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டபொழுது, கலாவதியின் துயரக் கதையை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எடுத்துப் பேசி, அவர்களை மடக்கினார். பத்திரிகைகள் அனைத்திலும் கலாவதியின் துயரக் கதையும், ராகுல் அவருக்கு அளித்திருந்த வாக்குறுதியும் பிரசுரமாயின.

கலாவதி நம்பிக்கையோடு ஒவ்வொரு அதிகாரியாகத் தேடிப் போய்ப் பார்த்து, ராகுல் காந்தியின் வாக்குறுதியை நிறைவேற்றித் தருமாறு கேட்டார். அந்தோ பரிதாபம்! அவர் ஒவ்வொரு அதிகாரியாலும் பந்தாடப்பட்டார். “ஐயா, ராகுல் காந்தியே, நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை ஒரு சான்றிதழாக எழுதித் தாருங்கள்” என இப்பொழுது கலாவதி ராகுல் காந்திக்குத் தனது கதையை நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்.
கலாவதிக்குத் தான் அளித்த வாக்குறுதி அதிகார வர்க்கத்தால் உதாசீனப்படுத்தப்படும் என்பதை அறியாத அப்பாவி அல்ல ராகுல் காந்தி.  தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ளவே, அந்தப் பாமர ஏழை விவசாயத் தாயின் துயரத்தை ராகுல் காந்தி பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.

கலாவதியின் கதை, ராகுல் காந்தி தாழ்த்தப்பட்டோர் மீதும், ஏழைகளின் மீதும் காட்டும் திடீர் கரிசனம் வக்கிரம் நிறைந்த நாடகம் என்பதை அம்பலப்படுத்திவிட்டது. எனவே, உழைக்கும் மக்களே, ராகுல் காந்தி உங்கள் பகுதிக்கு வரப் போகிறார் எனக் கேள்விப்பட்டால், ஆரத்தித் தட்டிற்குப் பதிலாகத் துடைப்பத்தைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்!

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

  1. ராகுல் காந்தி ஒரு தேசியத் தலைவராக உருவாவது வெட்கக் கேடு. எனக்கு கருணாநிதியையும் ஸ்டாலினையும் பிடிக்காவிட்டாலும் ஸ்டாலின் அந்தக் கட்சிக்குள் உழைத்து மேலிடத்திற்கு வந்ததாகத்தான் எண்ணுகிறேன். காங்கிரஸில் காலங்காலமாக இருக்கும், மக்களோடு வாழ்ந்து வரும், நடுத்தரம் மற்றும் அதற்குக் கீழான வாழ்வைப் பற்றிப் புரிந்து கொண்டுள்ள ஒரு நாணயமான மனிதனுக்கு தலைமைப் பதவி கொடுக்க விருப்பமில்லாத கட்சித்தலைமை நம் எல்லோரையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறது.

  2. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

  3. ராகுல் போன்ற கழிசடைகளை ஆரம்பத்திலேயே ஒதுக்கிடவேண்டும்.

    • மற்றவர்களை கழிசடை சொல்றதுக்கு முண்ணாடி நீ எப்படி இருக்கிற …அஸ்கர் ..நீ ஒரு உருபடதவனு தெரிது

  4. ராகுல் காந்தியின் கூத்தினை பார்க்கும் போது அவங்கப்பன் ராஜீவும் இப்படித்தான் ஆரம்பித்தானென பழைய புதிய ஜனநாயகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.எச்சரிக்கை பாசிசம் பைஜாமாவில் வருகிறது. ஆத்தா போலவே மகனும்
    எது முன்
    எது பின்
    எனத்தெரியாமல் பிதுங்கி கிடந்தபோது
    தாய் மண்ணும் கூட அழுதிருக்கும்
    கண்ட கண்ட நாயெல்லாம்
    என் மேல் விழுந்து சாவுறாங்களே என்று….

    ‘கை’கதை தெரியாதென
    வருகிறார்களோ இல்லை
    தெரிந்தால் தான் என்னவென
    வருகிறார்களோ
    மறவாதீர் வாக்காளரே
    கைக்கு ஓட்டு போட்ட
    உங்கள் கையை பத்திரமாய்
    வைத்துக்கொள்ளுங்கள்
    ராகுல் காந்தியும் சேர்ந்து வருகிறாராம்……

  5. இந்த காந்திகளின் கொசுத்தொல்லையை ஒழிக்கவே முடியாதா! தாங்கமுடியவில்லை. எவ்வளவு காலம் தான் பார்த்துக்கொண்டிருப்பது. பொறுத்துக்கொண்டிருப்பது.

    இதில் இந்த குலக்கொழுந்து வருங்கால பிரதமர் வேறாம். இந்த மாதிரி கழிசடை அரசியல், அரசியல்வாதிகளின் வாரிசுகள் வளர முடியாத படி ஒரு அரசியல் மாற்றம் வந்தால் தான், பெரும்பான்மை மக்களுக்கு விடிவு காலம். அதற்கு முதல் வேலை நீங்கள் சொல்வது போல தான்.

  6. ஒரு ராகுல் காந்தியை மட்டும் குத்திக் காட்டிவிட்டால் போதுமா. அரசு இயந்திரம் கீழ்மட்டத்திலிருந்தே வேகத்துடன் வேலை செய்ய வேண்டும். அப்படியாக நிர்வாகத்தை மாற்றவேண்டும். அத விட்டுட்டு ராகுல் வந்து அவர்கிட்ட சொல்ற வரைக்கு விட்டு வச்ச அதிகாரி எவனோ அவனை கட்டி வைத்து உதைக்க வேண்டும். ராகுல் சொல்லியும் செய்யாத அதிகாரியை சுட்டுத்தள்ள வேண்டும்.

    பொதுவாக இது போன்ற விஷயங்களில் உச்சத்தில் உள்ள அதிகார மையங்கள் தலையிடுவது நிர்வாகத்துக்கு நல்லதல்ல. அவர்கள் தலையிடும் வரை பிரச்சினையை தீர்த்துவைக்காதது கொலைக்குற்றம்.

    பி.கு: இப்படித்தான் எங்க சந்திரபாபு 2004 வரைக்கும் கக்கூஸை கூட தணிக்கை பண்ணிக்கிட்டு இருந்தாரு. கிராம‌ச‌பை வ‌ச்சு வித‌வை பென்ஷ‌ன் கூட‌ தானே குடுக்க‌ப்பார்த்து வ‌ருச‌த்துக்கு ஒருமுறையா குடுத்தாரு ..இப்ப‌ ம‌க்க‌ள் அவ‌ருக்கு பென்ஷ‌ன் கொடுத்துட்டாங்க‌

  7. ஆங்கிலேயரிடம் இருந்து நாட்டை பிடுங்கி (ராகுல்) காந்திகளிடம் நாட்டை கொடுத்த ( மோகன்தாஸ்) காந்தியை சொல்ல வேண்டும்…
    இவன்கள் வெள்ளையனே பரவாயில்லை என்னும் அளவிற்கு ஆடுகிறான்கள்.

  8. திருவள்ளுவர்,காந்தி போன்றவர்களின் அறிவுரையை ஏற்காத இந்தியாவின் அந்நியமோகங்களே,தன்னை திருத்தினாலே சமூகம் தானாகத்திருந்தும் என்ற நினைவில்லாத மேலே கருத்துரைத்த புத்திசாலிகள் இருக்கும்வரை பாரதமாதா தினம்தினம்………..இழந்துகொண்டிருப்பார். பாவம் இந்தியா!!

  9. ஒரு தகவலுக்காக…

    மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சகோதர அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் “சிறையில் விசாரணை கைதிகள்” பற்றி ஒரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    “விருத்தாச்சலம் தாலூகா சட்டப்பணிகள் குழுத் தலைவரின் உத்தரவுப்படி, அங்குள்ள கிளைச் சிறையில் விசாரணை செய்தேன். விசாரணை கைதிகளிடம் விசாரணை நடத்தினேன். அப்பொது, அந்தக் கிளை சிறையில் உள்ள அனைத்துக் கைதிகளுக்காகவும், சில விசாரணை கைதிகள் சமையல் செய்வது தெரிய வந்தது. விருத்தாச்சலம் கிளைச் சிறையில் சமையல் செய்வதற்கு ஆட்கள் இல்லை. அவர்களே சமையல் செய்து சாப்பிடுகின்றனர். இது குறித்து விசாரித்த பொழுது, தமிழகத்தின் அனைத்து கிளைச் சிறைகளிலும் இதே நிலைமை தான் உள்ளது என தெரிய வந்தது. இது குறித்து அறிக்கை தயாரித்து சட்டப்பணிகள் குழுவின் தலைவரிடம் அளித்தேன். என் மனு உள்துறைத் செயலருக்கும் அனுப்பப்பட்டது”

    சிறை கூடுதல் டி.ஜி.பி.யிடம் இருந்து இதற்கு பதில் வந்துள்ளது.

    “கிளைச் சிறையில் 116 சமையல்காரர்கள் நியமிக்க அதற்கான கோப்பு உள்துறைச் செயலரிடம் நிலுவையில் உள்ளது. அவர் உத்தரவு பிறப்பித்த உடன் சமையல்காரர் நியமிக்கப்படுவர்”

    மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    “கிளைச் சிறைகளில் தற்காலிக சமையல்காரர்களைக் கூட நியமிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சிறைக்கைதிகளின் வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது. எனவே சிறை நடவடிக்கைகளில் விசாரணைக் கைதிகளை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும். என் மனுவை பைசல் செய்ய உடனே செயலருக்கு உத்தரவிட வேண்டும். ”

    இதை விசாரித்த நீதிபதி பாஷா இதற்கான பதிலை “எட்டு வாரங்களில் அரசு பரிசீலித்து உத்தரவிட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    பின்குறிப்பு : சிறை திருந்துவதற்கான இடம் என ஏட்டுளவில் இருக்கிறது. ஆனால், கஞ்சா போன்ற போதை வஸ்துகள், மற்றும் செல்போன் என காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கக்கூடிய இடங்களாக சிறைகளாக இருக்கின்றன. இது குறித்து சமீபத்தில் சட்டமன்றத்தில் விவாதத்துக்கும் வந்தது. ஆனால், மக்கள் நலம் நாடும் அரசு என்றால், சரியாக நடக்கும். இது தான் அராஜக அரசு ஆயிற்றே! சிறையில் தான் எல்லா அராஜகங்களூம், அட்டூழியங்களும் நடக்கின்றன. தோழர் ராஜூ விசாரணை கைதிகளை தொல்லைப்படுத்தும் வேலைகளிலிருந்து விடுபட வைக்க முயல்கிறார். பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று?

    http://socratesjr2007.blogspot.com

  10. இந்தக் கருமத்தை பார்க்கத்தான் திலகர், நேதாஜி, பகத் சிங், செண்பகராமன், வ.வு.சிதம்பரனார் போன்ற வீரர்கள் சுதந்திரம் பெற்றுத் தந்தனரா? இவர்கள் ஊட்டிய உண்மையான தேசப்பற்றை அழித்துவிட்டு இன்று நாட்டு மக்களிடையே போலியான தேசப்பற்றை ஊட்டி இந்த நாட்டையே மற்ற உலக நாடுகளுக்கு அடகு வைத்து விட்டன காங்கிரசும் அதன் தலைமையும். சுதந்திர போராட்ட வீரர்களே இந்த மக்களுக்குப் போய் உங்களுடைய குடும்பத்தையும் துறந்து உங்களின் இன்னுயிர்களையும் தியாகம் செய்து விட்டீர்களே. ‘காந்தி’ என்ற வார்த்தையை மறந்தால் மட்டுமே நம் மக்களிடையே உண்மையான நாட்டுப்பற்றை விதைக்க முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க