Friday, September 29, 2023
முகப்புஆண்மைக் குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும் !!
Array

ஆண்மைக் குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும் !!

-

ஆண்மைக்குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும் !!

குங்குமத்தில் ஆச்சி மனோரமா தான் முப்பது ஆண்டு காலமாக மனதில் அடக்கிவைத்து இருந்த மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். அதாகப்பட்டது, ஆண்மைக் குறைவுடைய ஆண்கள் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாகவும், எனவே திருமணத்திற்கு முன் பரஸ்பரம் மருத்துவ சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் எனவும், ஆண்மைக் குறைவோடு பெண்களை ( ஏமாற்றி ) திருமணம் செய்யும் ஆண்களை தண்டிக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்காக ஒரு தனி அமைப்பை தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

இனியும் இந்த கருத்தை வெளியிடாமல் இருந்தால் தான் பெண்ணாக பிறந்தததே அர்த்தமற்றதாகிவிடும், எனவே இனி தன் வாழ்வில் மீதம் இருக்கும் நாட்களை இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்த பெண்களின் விடிவுக்காக செலவிடப்போவதாக கூறி உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். இதே கருத்தை வலியுறுத்தி அவர் முதல்வரிடமும் ஒரு மனு கொடுத்திருக்கிறார்.

ஆச்சி., வாலிப வயோதிக அன்பர்களே என்ற வார்த்தைகளை பயன்படுத்தாததாலும், அவருக்கு லேகியம் விற்பனை செய்யும் யோசனை ஏதும் இருப்பதற்கான அறிகுறி ஏதும் அந்த பேட்டியில் தெரியாததாலும், நாம் அவரது கருத்துக்களை பரிசீலிகத்தான் வேண்டும்.

ஒரு தனி இயக்கம் ஆரம்பிக்கும் அளவுக்கு ஆண்மைக்குறைவு என்ன சர்வதேச பிரச்சினையா ? ஆச்சி குறிப்பிடுவதைப்போல பெருகிவரும் விவாகரத்திற்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு தான் காரணமா ?

சரி, மனோரமா மீதான தனிப்பட்ட அன்பினால் முதல்வரே இவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவே வைத்துக்கொள்வோம். அதன் விளைவுகளை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், வாலி தலைமையில் ” ஆண்மையை ஆராயச்சொல்லி சட்டம் போட்ட ஆதவனே ” என்கிற தலைப்பில் கவியரங்கம் நடக்கும், டாக்டர் நாராயண ரெட்டி, காமராஜ் ஆகியோர்களின் மருத்துவமனை டோக்கன்களை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அராஜகமான வழிகளில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்பதாக ஜெயலலிதா அறிக்கை விடுவார், மருத்துவப்பரிசோதனையின் முடிவுகள் திமுக வினருக்கு மட்டும் பாசிடிவ் என்று வரும்படி கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக விஜயகாந்த் குற்றம் சாட்டுவார்.

இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கும் ?

முதலில் ஆண்மைகுறைவு என்பதற்க்கு ஒரு முழுமையான வரையறை இதுவரை கிடையாது. இனியும் அது முடியாது. ஆச்சி குறிப்பிடும் ‘ ஆண்மை ‘ என்பது ஒரு ஆணின் பண்பியல் தொகுப்பு ( personality ) , வளர்க்கப்பட்ட முறை, இல்லத்துணை மீதான ஈர்ப்பு, அவரது புறச்சூழல் என ஏராளமான காரணிகளை உள்ளடக்கியது. ஒரு மருத்துவர் இதை சோதனை செய்து அறிக்கை அளிப்பது என்பது எந்த காலத்திலும் நடக்காது.

பெரும்பாலான விவாகரத்துக்களுக்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு ஒரு காரணமாக இருப்பது இல்லை. தம்பதிகளிடையேயான புரிதலில் உள்ள முரண்பாடும் தன் இல்லத்துணைக்கான குறைந்தபட்ச அன்பையும் மரியாதையையும் தரத் தவறுவதும்தான் மிகப்பெரும்பாலான விவாகரத்துக்களுக்கு காரணமாக இருக்கிறது.

கள்ளக்காதலின் கதை வேறு, முறையற்ற காதல் என்பது எல்லா காலத்திலும் இருப்பதுதான். பத்திரிக்கைகள் அதற்கு அளிக்கும் அதீத முக்கியத்துவம்தான் இதை ஒரு பெரிய சமூக சிக்கலாக காட்டுகிறது. ( சரியாக கவனியுங்கள்.. சாதாரண மனிதனின் முறையற்ற காதல்தான் கள்ளக்காதல் என குறிப்பிடப்படுகிறது.. பிரபுதேவா & நயன் தாரா உறவை காதல் என்றுதான் எல்லா பத்திரிக்கையும் எழுதுகிறது).

திருமணமாகும் பெண்கள் மட்டும் ஏமாற்றப்படுவதில்லை. காதலிலும் ஏமாற்றப்படுகிறார்கள். காதலித்து ஏமாற்றப்படும் பெண்கள் நல்ல?! ஆண்மையுள்ள ஆண்களால்தான் கைவிடப்படுகிறார்கள்.

ஆண்மை இல்லாமல் திருமணம் செய்து ஏமாற்றுகிறார்கள், எனவே ஆண்மை  உள்ளவன்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றால் (கட்டாய பரிசோதனை என்பதன் பொருள் இதுதான்)., ஆண்மை உள்ளவன் காதலித்து ஏமாற்றுகிறான் (பலர் தன் ஆண்மையை காதலியிடம் பரிசோதித்துவிட்டுத்தான் கைவிடுகிறார்கள்- ஒருவகையில் இவர்கள் ஆச்சியின் யோசனையை 50% கடைபிடிக்கிறார்கள்).

எனவே இதைத்தடுக்க காதலிப்பவனுக்கு ஆண்மையே இருக்கக்கூடாது என ஒரு சட்டம் போடலாமா ? இதற்கு நிகரான மடத்தனம்தான் ஆச்சி வைக்கும் கோரிக்கையும்.

பெண்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவேண்டும் என்கிற மனோரமாவின் நோக்கம் நியாயமானது. அதில் தனிப்பட்ட காரணம் ஏதும் இருக்கமுடியாது. ஆனால் அவர் பிரச்சினைக்கு சொல்லும் காரணமும் அதற்கான தீர்வும் நகைப்புக்குரியவை. தனி இயக்கம் காணவேண்டிய அளவுக்கு கடுமையான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏராளம் உண்டு. அதற்கு ஆச்சி போராட முன்வந்தால்  பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு… ஆச்சியை பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு.

-நன்றி வில்லவன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

நீங்கள் பாலியல் குற்றவாளியா?

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

ஆணாதிக்கத்தின் அமிலக் காதல் !

இது காதலா, கள்ளக்காதலா?

கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி

வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!

 1. //ஆண்மைக் குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும்//
  பேரு மாத்திக்கிட்டாங்களே.. தலைப்ப மாத்துங்க.”_____ மறத்தி மனோரமாவின் கவலையும்”

 2. இதை சோதனை செய்து அறிக்கை அளிப்பது என்பது எந்த காலத்திலும் நடக்காது.

  Thappu! Sterlity tests can differentiate between males who are impotent. I agree that we cant test the psychological reasons (eg. : social reasons, lack of awareness, homosexuals etc)
  but Doctors can certify the hormonal balance. If this is been made as law, males who are impotent will not dare to marry. Same applies to females…Females who have ovarian, hormonal problems will be known!
  We are not like western countries to switch to another partner just like that. Thats why manorama wants to make it a sure shot before marriage. Just think of some girl who gets married to impotent person, u will understand!

 3. ஆண்மைக்குறைவு என்பது குழந்தை பிறக்கும் தகுதி என்று பொருள் கொண்டு சொல்கிறாரோ என்னவோ ஆச்சி ?

  இப்படி பரஸ்பர மருத்துவ பரிசோதனை செய்யும்பட்சத்தில், எய்ட்ஸ் போன்ற நோய்களை கூட கண்டுகொள்ளலாம் அல்லவா ?

  ரைட் ஸ்ப்ரிட்டில் எடுத்துகொள்ளுங்கள் வல்லவன். 

  • மனோரமா தனது பேட்டியில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார், குழந்தை இல்லாமல் பல தம்பதிகள் மனநிறைவுடன் வாழ்வதாகவும், திருப்தியற்ற தாம்பத்தியமே கள்ளக்காதலுக்கும், கள்ளக்காதல் கொலைகளுக்கும் பிரதான காரணமென சொல்லிகிறார் ( குங்குமம் 28.09 இதழில் ). ஆக குழந்தையின்மையை அவரே ஒரு பிரச்சினையாக கருதவில்லை.

   மேலும் எயிட்ஸ் பரிசோதனை எளிமையானது அதன் முடிவுகளை நீங்கள் எத்தனைமுறை வேண்டுமானாலும் உறுதிப்படுத்த முடியும், அதேபோல “தாம்பத்தியத்திறனை அளவிடும்” முழுமையான பரிசோதனை எதுவும் மருத்துவத்தில் கிடையாது.

   விவாகரத்து மற்றும் கள்ளக்காதலுக்கான முக்கியமான காரணம் ஆண்மைக்குறைவுதான் என்பதை எப்படி ரைட் ஸ்ப்ரிட்டில் எடுத்துகொள்வீர்கள்?

   • எத்தனையோ ஆண்கள்.. புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு வாழ்வுரிமை கொடுத்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயம் நம் தமிழ்நாட்டிலும் இருக்குங்கோ ஆச்சி !!!
    முதலில் அவர்களை தேடி, பெண்களுக்கும் சம உரிமை கொடுத்ததற்கு நன்றி சொல்லுங்கள் ஆச்சி !!

    உங்களுக்கும் ஒரு மகன் உண்டு என்பதனால் தான் இந்த பதில்..

 4. ‘if i am not mistaken’ அதே விழாவில் தான் வீர மறச்சி என்று தன் பெயருக்கு முன்னால் போட்டுகொள்வேன் என்று சொல்லுச்சின்னு செய்திகள படிச்சேன். ஆச்சிக்கு என்ன சமூக அக்கறை சானதிபதி விருது கெடச்சிடும் கூடிய விரைவில்…

  • லூசுதனமான கேள்வியா இருக்கே வாலு… இது மாதிரி முன்முடிவோட அனுகுனா விளங்கினாப்புலதான். குஷ்புவ விடு ஷகிலா பெண்ணுரிமை
   யை பத்தி பேசுனத்துக்கு வினவு என்ன எழுதினாங்கன்னு மொதல்ல படி

   • இவரு மட்டும்,
    கவிஞர்கள் அப்படி பாடுவாங்க!, டாக்டர்கள் இப்படி செய்வாங்க, ஜெயலலிதா இப்படி அறிக்கை விடுவா, விஜயகாந்த் அப்படி அறிக்கை விடுவான்னு முன்முடிவோட ஒரு பதிவே எழுதலாம்! நான் ஒரே ஒரு கேள்வி கேட்டா லூசுதனமா!?

    சரி விடுங்க, யார் லூசுன்னு மக்களுக்கு தெரியும்! அந்த ஷகிலா பதிவோட லிங்க் கொடுங்க!

   • யதார்தமா வர கேள்விக்கும் உள்நோக்கத்தோட வர கேள்விக்கும் வித்தியாசம் தெரியாம இல்ல… குஷ்புவ இங்க இழுத்ததுக்கு காரணமும் புரியாம இல்ல… இருந்தாலும் பெனிபிஃட் ஆஃப் டவுட்ட நீங்களே வச்சுகிட்டு இந்த பதிவகளை வாசிங்க https://www.vinavu.com/category/society/women/ ரெண்டாவ து பேஜுல ஷகீலா மேட்டர் இருக்கு….

 5. இந்த கட்டுரையை வில்லவன் அருமையா எழுதியிருக்காரு… இதோட மையமான பொருளுக்கு பதிலளிக்காம சம்மந்தமில்லாம பின்னூட்டம் எழுதுனா எப்படி… ஆண்மை சர்டிபிகேட்டு கிடைச்சிட்டா பெண்ணுக்கு பிரச்சனை தீந்திடுமா? பஸ்சுல நூறு பேரு நடுவுலகூட ஒரு பொம்பள நிம்மதியா போக முடியாத அளவுக்கு ஆம்பளைங்க பாலியல் தொந்தரவு இருக்கத்தானேயா செய்யுது.. அத தீக்க இந்த சர்டிபிகேட்டு போதுமா? பெண்ணுரிமைன்னா என்னான்னு வகுப்புதான் எடுக்கனும் போலயிருக்கு..

 6. //கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி//

  இந்த பதிவுல இந்துமதம்னு கொடுத்த நாளா ஒரு வேளை குஷ்பு இந்த ஸ்டேண்ட்மெண்ட் கொடுத்திருந்தா அது பெண்ணியத்தில் சேருமா இல்ல வேற எதாவுதான்னு கேட்க தான் குஷ்பு மேட்டர்!

  நான் கடவுள் மறுப்பாளான்

  • நீங்க எழுதுனது புரியல… இருந்தாலும் குஷ்பு உங்க கண்ணுக்கு பெண்ணிய போராளியா தெரியுறாங்க போல.. எனக்கு அப்படியில்ல… பிரீ மேரிடல் செக்ஸ்சும், பிங்கு ஜட்டியும் பெண்கள் விடுதலைக்கு அளவுகோள் அப்படின்னா என்னத்த சொல்லி நொந்துகறது…

 7. Very good and clear article. Vinavu is reaching new heights by touching the untouched subjects. I think In the near future Vinavu will be the tamil internet spaces reference point. my request : Still a large section of tamil net users are not aware of vinavu…. i think we have to distribute some hard copy of vinavu blog in simple and crisp format to all college and higher secondry school students .They have to actively participate in Vinavu…………… in the coming years … very soon…… vinavu WILL be tamil political google……. who ever want’s to know progressive politics and ideas they have to log in to http://www.vinavu.com….. with more than 12 years of net browsing for political knowledge seeking,and eager to know about the working class struggles around the world , at last i am happy that there is a sustainable site that is almost UPDATING EVERYDAY this is really a great uphill task…
  V i v a f o r e v e r V i n a v u.

 8. அன்புள்ள வினவு,

  உங்களது வலைத்தளத்தில் கம்யூனிசம்‍‍_கல்வி என்ற தலைப்பின் கீழ் எதுவும் பதிவிடப்படவில்லை. ஏன்?

  • மார்க்சியக் கல்வியை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு தொடரை வெளியிடுவதாக கூறியிருந்தோம். அதை கூடிய விரைவில் அமல்படுத்த முயல்கிறோம்.

   • மனோராமாவின் கருத்துக்கள் பற்றி பதிவு எழுதும் நீங்க, மாவோயிஸ்டுகள் பற்றி பதிவுகள் எழுதுவதில்லை. ஏன் ?

    சமீபத்தில், ஜார்காண்டில் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்ட்டரை கடத்தி, கொடுரமாக அவரின் தலையை வெட்டி கொலை செய்தனர். தாலிபான் போல. பார்க்க : http://www.ptinews.com/news/316319_Maoists-behead-Jharkhand-police-inspector இதை பற்றி பேசுங்க. அல்லது மாவோயிஸ்டுகளில் செயல்களை விமர்சிக்க கூடாது என்று ஒரு கட்டுபாடு உங்க எஸ்.ஒ.சி யில் எடுக்கப்பட்டுள்ளதா ?

   • மாவோயிஸ்டுகள் கொலை செய்தால் அது வர்கப் போர். போலிஸார் எதிர்வினையாற்றினால் அது முதலாளித்துவ பயங்கரவாதம். அதுதான் உங்க மார்க்சிய அறம். அப்படிதானே ? நேற்று மகாராஸ்ட்ராவில் 17 போலிஸாரை மாவோயிஸ்டுகள் சுட்டு கொன்றனர் : http://www.hindu.com/2009/10/09/stories/2009100961360100.htm

    17 policemen killed in naxal ambush இதில் தப்பிய போலிஸாரின் கோணத்திலிருந்து பாருங்க : மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை மூர்க்கதனமாக என்கவுண்டிரில் கொல்லுவது சரிதான் என்று நினைக்க வைக்கும். போலிஸார் யார் என்று அவர்களின் சீருடை அடையாளம் காட்டும். கண்டுபிடிப்பது எளிது. ஆனால் உண்மையான மாவோயிஸ்ர் யார் என்று கண்டு பிடிப்பது கடினம். அப்பாவி கிராமவாசிகள் பலரும் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்பட்டு போலிஸாரால் வேட்டையாட்டப்படுவர். ஆனால் போல்சை பொறுத்த வரை மூர்க்கத்தனமாக நடப்பதை தவிர வேறு வழியில்லை.

    விடுதலை புலிகளை ஃபாசிஸ்டுகள் என்று (சரியாக மதிப்பிடும் வினவு, மாவோய்ஸ்டுகளை அப்படி கருதுவாரா ? இல்லை என்றால் ஏன் ? ’அவங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்’ என்ற எண்ணம் இருக்கும் !! சக மார்க்ஸியவாதிகள் தானே அவர்களும்.
    இது ஏறக்குறைய ஆர்.எஸ்.எஸ்க்கும், பஜ்ரங் தளத்திற்க்கு இருக்கும் உறவை போன்றதா ?

   • //மாவோயிஸ்டுகள் கொலை செய்தால் அது வர்கப் போர். போலிஸார் எதிர்வினையாற்றினால் அது முதலாளித்துவ பயங்கரவாதம். //

    போலிஸ்காரனும், பா. சிதம்பரமும் தாம் முதலாளித்துவ வர்க்கப் போரை நடத்துவதாக பிரகடனப்படுத்தட்டுமே. யார் தடுத்தது?

    ஆனால், அவர்கள் சொல்லுவது என்ன? மாவோயிஸ்டு பயங்கரவாதம்.

    மேலும் மக்களின் சார்பாக பா.சியும், போலிசும் போராடுகிறார்களாம். இத்தகைய பொய்யை கூசாமல் சொல்கிறார்கள் அவர்கள்.

    எனவே முதலாளித்துவ பயங்கரவாதம் என்ற சொல் சரியே.

   • புலிகளை பாசிஸ்டுகள் என்று நாங்கள் மதிப்பிடுவது உங்களுக்கு சரியாகப்படுகிறது,இன்னும் சரியாக சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் போலீசு நாய்களை பற்றி பேசினால் வலிக்கிறது.! மாவோயிஸ்டுகள் போலீஸ்காரனை கொன்றதால் ஒன்றையும் அடையவில்லை ஆனால் அதற்காக நாங்கள் ஒன்றும் அனுதாபமெல்லாம் தெரிவிக்க முடியாது. நீங்க வேண்ணுமினா போய் அழுகுங்க அதியமான்.

   • சர்வதேசியவாதிகள்,

    ///புலிகளை பாசிஸ்டுகள் என்று நாங்கள் மதிப்பிடுவது உங்களுக்கு சரியாகப்படுகிறது,இன்னும் சரியாக சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கிறது////// இல்லை வருத்தமாகதான் இருக்கிறது. ஒரு காலத்தில் அவர்களளை, ஆதரித்தவன் என்ற முறையில். நான் சொல்ல வந்தது பு.ரிதலை பற்றி..

    இந்தி்யாவில் உள்ள அனைத்து போலிஸாரும் ‘நாய்களா’ ? அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களா அப்ப ? அப்படி நடந்தால் முதலில் சந்தோசப் படுபவர்கள் குற்றவாளிகளும், சமூக விரோதிகளும், கொலைகாரர்களும், கொள்ளையர்களும் தான். நீங்க எப்படி ? போலிஸாரின் செயல்களுக்கு இதே போல சுலபமாக நியாயம் கற்பிக்க முடியும் தான். எங்கேயோதான் நடக்குது. இப்படிதான் பேசுவீக.

   • பாயாசம்,

    //ஆனால், அவர்கள் சொல்லுவது என்ன? மாவோயிஸ்டு பயங்கரவாதம்.
    /// ஆம். பிறகு அது என்னவாம் ? வர்கப்போரா அல்லது மக்கள் யுத்தமா ? சந்தேகமில்லாமல இது பயங்கரவாதம் தான். ‘கம்யுனிச’ பயங்கரவாதம் என்று சொல்லலாம். மனித உரிமைகளை யார் மீறினாலும் அது ஃபாசிசம் தான்.

   • //மனித உரிமைகளை யார் மீறினாலும் அது ஃபாசிசம் தான்//

    இங்கு உலகம் தெளிவாய் இரண்டு வர்க்கங்களாய் பிளவுப்பட்டு கிடக்கும் பொழுது, வர்க்க பார்வையற்று… பொத்தம் பொதுவாய் மனிதன், மனித நேயம், பொத்தம் பொதுவாய் லஞ்சம் என பேசுவதே அறியாமை தான். ஒருவேளை தெரிந்து கொண்டு, மறைத்து பேசினால், அது கயமைத்தனம்.

    “ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் ஒரு வர்க்க நலன் அடங்கியிருக்கிற்து” என இதைத்தான் அழகாக மாவோ விளக்குகிறார்.

    அதியமான் போன்றவர்களுக்காகவாவது, மார்க்சிய கல்வி சம்பந்தமாக பதிவுகள் இடுவது அவசியம் வினவு.

 9. ஆச்சி உணர்ச்சி பிளம்பானவர். எந்த நிகழ்ச்சிகளிளெல்லாம் பேசுகிறாரோ அங்கெல்லாம் கண் கலங்கி தான் பேசுவார்1 மனோராமை மேடைக்கு அனுப்பும் பொழுதே, அருகில் இருக்கும் ஸ்ரீபிரியா போன்றவர்கள் அன்பாய் போய் அழ கூடாது என்று செல்லமாய் மிரட்டி அனுப்புவார்கள்.

  ஆண்மை குறைவால் பாதிக்க பட்ட சிலர் போய் ஆச்சியிடம் அழுதிருப்பார்கள். ஆச்சி உருகி இயக்கம் எடுப்பதாக அறிவித்திருக்கிறார். முப்பாதாண்டு காலம் யோசித்து… என்பது அதிகமாகபடுகிறது.

  மற்றப்டி, வில்லவன் சொல்கிற படி, நடைமுறையில் சோதிப்பது சாத்தியமில்லை சரியான கருத்து தான்.

 10. //முதலில் ஆண்மைகுறைவு என்பதற்க்கு ஒரு முழுமையான வரையறை இதுவரை கிடையாது. இனியும் அது முடியாது. ஆச்சி குறிப்பிடும் ‘ ஆண்மை ‘ என்பது ஒரு ஆணின் பண்பியல் தொகுப்பு ( personality ) , வளர்க்கப்பட்ட முறை, இல்லத்துணை மீதான ஈர்ப்பு, அவரது புறச்சூழல் என ஏராளமான காரணிகளை உள்ளடக்கியது. ஒரு மருத்துவர் இதை சோதனை செய்து அறிக்கை அளிப்பது என்பது எந்த காலத்திலும் நடக்காது//

  ஆச்சி பல ஆண்டுகள் திரைத்துறையில் இருந்தவர், இருந்து கொண்டிருக்கிறவர். திரைவானில் கனவுக்கன்னியாக, பல ரசிகர்களின் ஏக்க பெருமூச்சுக்கு காரணமான பல நடிகைகள், வீட்டில் கட்டில் சுகம் இல்லாமல், கணவனால் தன்னுடைய இச்சைகள் தணிக்கப்படாமல் தனிமையில் புரண்டுகொண்டிருந்த பல கதைகள் அவருக்கு தெரிந்திருக்க கூடும். திருமணமாகி பின் நடிக்க வந்த சில நடிகைகள்-1970 களில்- பலரின் தனிப்பட்ட துயரம் பற்றி அறிந்திருக்க கூடும். நீங்கள் குறிப்பிடும் காரணிகளை மட்டுமே அவர் கருத்தில் கொண்டிருக்கிறார் என்பதை நம்புவதற்கில்லை. அவர் குறிப்பிடுவது உடலுறவு திறன் பற்றியதாகவே இருக்கவேண்டும்.

  சுமார் பத்தாண்டுகளுக்கு முன் என்னுடன் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு பெண் அலுவலகத்திலேயே வேறு சில ஆண்களுடன் தொடர்புகொண்டிருந்தவர். அதை பற்றி விசாரிக்கையில், அவளுடைய கணவனால் மிக சிறிய நேரம் கூட அவளுடன் உடலுறவுகொள்ள முடியவில்லை என்றும், கட்டி தழுவும்போதே அவருக்கு விந்து வெளிப்பட்டுவிடும் என்றும் கேள்விப்பட்டேன். அந்த திருமணம் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம். இதில் தவறு யார் பக்கம்?

  முற்காலத்தில் கிராமங்களில் ஒரு வழக்கம் இருந்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆணுக்கு அந்த ஊரின் சவர தொழிலாளி ஆண்குறியை சுற்றியுள்ள பகுதிகளில் சவரம் செய்ய வேண்டும் என்பது. சவர தொழிலாளியின் நாசூக்கான செயல்பாடுகளால் மாப்பிள்ளை படுக்கையில் என்ன செய்ய முடியும் என்பது பெண்ணின் தகப்பனாருக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். தகுதியில்லாத மணமகன்கள் உடனடியாக நிராகரிக்கப்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டு, அந்தன் பெண் காப்பாற்றப்படுவாள். நாகரிக வளர்ச்சியில் அந்த பழக்கங்கள் எல்லாம் காணாமல் போய், ஆச்சி போன்றவர்கள் வந்து குரல்கொடுக்கும்படி நிலைமை ஆகிவிட்டது.

  நீங்கள் குறிப்பிடும் பண்பியல் தொகுப்பு,வளர்க்கப்பட்ட முறை, இல்லத்துனை மீதான ஈர்ப்பு, அவரது புறச்சூழல் போன்ற ஏராளமான காரணிகளை விடவும், உடலுறவில் குறைந்த பட்ச திருப்தியின்மை கூட இல்லாததுதான் முக்கால்வாசி கள்ள உறவுகளுக்கும், விவாகரத்துகளுக்கும் காரணம். ஏனெனில், நீங்கள் குறிப்பிட்ட காரணிகளை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் நாளடைவில் பெண்களுக்கு வரக்கூடும். ஆனால், உடலுறவில் திருப்தி இல்லாத ஒரு பெண்ணுக்கு, வேறு வழிகளில் தன ஆவலை பூர்த்தி செய்துகொள்ளும் ஆவல்-பெரும்பாலான பெண்களுக்கு- எப்போதும் இருந்துகொண்டிருக்கும்.

  • /முற்காலத்தில் கிராமங்களில் ஒரு வழக்கம் இருந்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆணுக்கு அந்த ஊரின் சவர தொழிலாளி ஆண்குறியை சுற்றியுள்ள பகுதிகளில் சவரம் செய்ய வேண்டும் என்பது. சவர தொழிலாளியின் நாசூக்கான செயல்பாடுகளால் மாப்பிள்ளை படுக்கையில் என்ன செய்ய முடியும் என்பது பெண்ணின் தகப்பனாருக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். தகுதியில்லாத மணமகன்கள் உடனடியாக நிராகரிக்கப்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டு, அந்தன் பெண்காப்பாற்றப்படுவாள்// ……………சீனீவாசன் முட்டாள்தனமாக உளராதீர். ஆண்மை பற்றிய பிரச்சனையில் தேவையில்லாமல் சவரத்தொழிலாளியை ஏன் அசிங்கப்படுத்துகிறீர். இதே போன்று பெண்களுக்கும் ஏதேனும் முட்டாள்தனமான ஐடியா வைத்துள்ளீர்களா என்ன…………?

   • யோகேஷ், சவர தொழிலாளிகளை அசிங்கப்படுத்துவது என் நோக்கமல்ல. கனவிலும் அவ்வாறு கருதவில்லை. நான் எழுதிய பின்னூட்டம் அந்த தொனியில் இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில், நான் எழுதியது அந்த காலத்தில், சுமார் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் சில கிராமங்களில் நிலவி வந்த வழக்கம்தான். உங்களுக்கு சந்தேகமிருப்பின், நாட்டுப்புற வாழ்க்கை முறைகளை பற்றி ஆய்வு செய்து வரும்/வந்த ஆய்வாளர்கள் யாரையாவது அணுகி சந்தேக நிவர்த்தி பெறுங்கள். மேலும், ஆண்களுக்கான இந்த செயல்முறையானது என்னுடைய மூளையிலிருந்து உதிக்காததினால், பெண்களுக்கு என்ன செயல்முறை என்பதை உங்களுக்கு தெரிவிக்க முடியவில்லை.

    ஆனால் ஒரு குறிப்பு தருகிறேன். புதுச்சேரியில் பிரான்சு ஆட்சி நடந்தபோது அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த திரு.ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்புகளின் அடிப்படையில்/அல்லது அதை சார்ந்து திரு.பிரபஞ்சன் அவர்கள் எழுதிய ‘மானுடம் வெல்லும்’ என்னும் நூலில், குருசு என்பவரின் அம்மா அவனுக்கு பெண் தேடுகிறார். பெண்ணிடம் சில/பல கேள்விகள் கேட்டு முடித்து, அவளை குளிப்பதற்காக குளத்திற்கு அழைத்து செல்கிறார், பெண்ணை பெற்றவர்களின் சம்மதத்துடன். அவளுக்கு குளிக்க உதவி செய்யும் சாக்கில், அவளது அங்க அவயங்கள் நன்றாக வளர்ந்துள்ளதா, பெண்ணுடம்பில் வேறு எதாவது குறைகள் உள்ளதா என்று தெரிந்துகொள்ளுகிறார்.

    வேறு முறைகள் இருந்ததா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. திரு.பிரபஞ்சன் அவர்களை நீங்கள் நேரில் பார்த்து உரையாடினாலோ அல்லது திரு.ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாடுகுர்ப்புகளின் பிரதி கிடைத்தாலோ நீங்கள் படித்துப்பார்க்கலாம். மேலும் இது போன்ற விடயங்களில் சற்றே அனுபவமுள்ள, மண்ணின் மணம் தவழும் நாட்டுப்புற கதைகளை எழுதி வரும் திரு.கி.ராஜநாராயணன் அவர்களும் தங்களுக்கு உதவக்கூடும்.

 11. appadiye.. ponnungalukkum kanni thanmai irukannu certificate kudutha.. romba santhosam..koodave kulanthai pethukka mudiyumaanu verification panna double santhosam.. intha ammani..90 percent ponnungalukku kalyanam agama ivala mathiriye vaala vali solra..

 12. //சாதாரண மனிதனின் முறையற்ற காதல்தான் கள்ளக்காதல் என குறிப்பிடப்படுகிறது.. பிரபுதேவா & நயன் தாரா உறவை காதல் என்றுதான் எல்லா ப0த்திரிக்கையும் எழுதுகிறது//

  அட விடுங்க பாஸ் அவங்க வியாபாரத்த அவங்க பார்க்கறாங்க

 13. பிரபுதேவா-நயன்தாரா -கள்ளக் காதலா? நல்ல காதலா?
  ‘காதலில் ஏது கள்ளக் காதல், நல்ல காதல்?’ என்ற வாசகங்களுடன் ஒரு தமிழ் திரைப்படம் முடியும். கலாபக் காதலன் அதன் பெயர் என்று நினைக்கிறேன். சொந்த அக்காவின் கணவரை காதலிக்கும் தங்கையின் கதை அது. அந்தக் காதலை நியாயப் படுத்தும் விதமாகத்தான் அப்படம் மேலே சொன்ன வாசகங்களுடன் முடியும். அப்படியானால் பிறன் மனை நோக்காப் பேராண்மையை வலியுறுத்தும் திருக்குறளும் ராமாயணமும் கூறுவது இப்போதைய வாழ்க்கைக்கு பொருந்தாதா அல்லது தேவை இல்லையா? இது போன்ற கள்ளக் காதலில் ஈடு பட்டவர்கள் பிரபலமானவர்களாக இருந்தால் அது குற்றமில்லையா? தற்ப்போதைய முதல்வரில் இருந்து பிரபுதேவா-நயன்தாரா வரை எப்படி கூச்சம் இன்றி பொது மேடைகளில் தோன்ற முடிகிறது? இவர்களுக்கு தரப்படும் புகழுரைகள் மாலை மரியாதைகள் நம் இளைஞர் சமுதாயத்துக்கு தவறான வழியை காட்டாதா? அமெரிக்காவில் பொது மக்களின் ஒழுக்கம் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. ஆனால் தங்களை ஆள்பவர்கள் ஒழுக்க நெறியை கடை பிடிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இங்கோ சாதாரண மக்கள் ஒழுக்கமாக வாழ முயல்கிறார்கள். பிரபலங்களும் நம்மை ஆள்பவர்களும் ஒழுக்க கேடர்களாக இருப்பது மட்டுமின்றி சிறிதும் வெட்கமில்லாமல் மக்களுக்கு ஒழுக்கம் பற்றி போதிக்கவும் செய்கிறார்கள். நேரு, இந்திரா, போன்றவர்களின் ஒழுக்க நெறிகள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு அவர்கள் ஆதர்ஷ புருஷர்கள் ஆக்கப்பட்டு விட்டனர். தற்ப்போது மகளிர் சங்கங்கள் பிரபுதேவா நயன்தாரா கள்ளக் காதலை கண்டித்து கிரிமினல் புகார் தரப் போவதாக அறிவித்துள்ளது ஒரு நல்ல மாற்றத்திற்கான துவக்கமாக் இருக்கட்டும். -http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=8383044&tid=5386957259513097158

  • ஆளும்வர்க்கம் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டே, மக்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் யென்று பேராசான் ஏங்கல்ஸ் சும்மாவா சொன்னார்.

 14. தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தும் சக நடிகைகளின் வாக்குமூலங்களிலிருந்தும் மறத்தீ மனோரமா அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கக்கூடும். அன்பைப் பகிர்ந்துகொண்டு வாழ்கிற தம்பதிகளிடம் இது ஒரு பிரச்னையாகவே இல்லாமலிருப்பதை நான் அறிந்திருக்கிறேன். சுயநலமிக்க குடும்ப வாழ்க்கையில் இது போன்ற அற்பக் காரணங்களே பெரும் பிரச்னையாக பலருக்கு மாறிவிடுகிறது.ஜனநாயகப்பண்புகளும், நேர்மையான உறவுமே குடும்ப வாழ்வை மகிழ்ச்சியாக்கும். இதை அழிக்கிற நுகர்வுக்கலாச்சாரத்தைப் பரப்பிவரும் அரசுக்கு எதிரான போராட்டமும் நாம் செய்ய வேண்டியதிருக்கிறது. அதியமான் கொஞ்சம் டென்சனைக்குறைத்துக்கொள்வது நல்லது. நீங்கள் எதிலுமே சாராத நடுநிலையாளராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அது உண்மையல்ல.யாராலும் ஏதேனும் ஒருபக்கம் சாயாமல் இருக்கமுடியாது. நீங்கள் எந்தப் பக்கம் சார்ந்திருக்கிறீர்கள் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பிறகு இது போன்ற ஓப்பீடுளய்ச்செய்ய வரலாம். குருசாமிமயில்வாகன‌ன்.

 15. சிறுவர் இல்லம், அநாதை இல்லம், என்பதுபோல் ஆண்மை இல்லம் என்று ஒன்றைத் தொடங்கலாம். ஆண்கள் அங்கு தங்கியிருந்து ஆண்மையை பரிசீலித்து சான்றிதழ் ஒன்றைப் பெறுவதற்குரிய வழிகளை தமிழ்நாட்டில் தோற்றவிக்குமாறு ஆச்சி மனோரமா முதல்வரிடமும் ஒரு மனு கொடுப்பது சாலச்சிறந்தது.

  ஆச்சி மனோரமா அந்த முதல்வனை! கலைஞனை!! மாபெரும் தலைவனை!!! அப்பு கருனாநிதி என்றழைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உலகத்தமிழரின் தலைவனல்லவா தமிழரை படைத்து, காத்து, “அழிப்பதில்” வல்லவனல்லவா!

  இத்திட்டம் நிறைவேறினால் தனி அமைப்பு, தனிச் சட்டம் அப்படியெல்லாம் கொண்டுவராமல் தமிழ்நாட்டில் “ஆண்களை” திருமணம் செய்யும் பெண்கள் ஏமாற்றமடையாது ஆவனசெய்வார்.

 16. மனோரமாவின் ஆதங்கத்திற்கான காரணம் ஒன்று உண்டு. இந்த அறிவிப்பை மனோரமா வெளியிட்ட காலத்திற்கு சிறிது முன்னர்தான் அவர் ஒரு தமிழ் சினிமா டைரக்டரின் மகளது திருமணத்தில் கலந்து கொண்டாராம். அதில் மணமகனுக்கு ஆண்மை தனம் இல்லை என்பது பிறகுதான் தெரிந்த்தாம். மறுநாளில் இருந்தே டைவர்சுக்கு முயற்சிப்பதாக தகவல். இந்த கிசு கிசு தான் ஆச்சியை முன்னோக்கி தள்ளியதாக பலரும் பேசிக் கொள்கிறார்கள்

 17. நானும் இருக்கேன் னு சொல்லறதுக்கு இதெல்லாம் ஒரு யுக்தி அவ்வளவுதான் , பெண்கள் தங்கள் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் ஆண்கள் தான் காரணம் என்று கூறுவது பொறுக்க முடியவில்லை, கற்பு
  அழிந்தால் ஆண்கள் காரணமாக இருக்காலம், கற்பு இழந்தால் அவர்கள் தானே காரணம் நெறி கேட்டு அலையும் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு

 18. இந்த பிரச்சினை தீர ஒரே வழி புதிய அரசியல் அமைப்பில்தான் முடியும் நல்ல கல்வியும் பண்பாடும் ஆண் பெண் சமத்துவமும் வேண்டும் அன்புடன் ப.செல்வராஜ் நீலாங்கரை சென்னை

 19. If Mano aachi’s efforts can make people conscious of the issue and prick the conscience of irresponsible life partners, then she is surely stopping men from treating women like a piece of old wooden furniture! Hope her aachi image helps her!

 20. அட விடுங்கப்பா நம்மள யாரும் மதிக்கல நன் இங்கதான் இருக்கிறேன்னு காட்டிக்க அந்த ஆச்சி எதோ சொல்லிருச்சி அத கமெண்ட் அடிச்சி தேவை இல்லாம அந்தம்மாவ பெரிய ஆளா ஆக்கிவுடதிங்க.அவங்க சொல்றமாதிரி ஒரு எழவும் நடக்காது  

 21. ஆச்சி சொன்னது நீண்டநேரம் உறவு அதிக விரைபுதன்மையை பற்றிதான் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க