ஜீன்ஸ் அணிந்தால் கொல்லப்படலாம்!

49
புர்கா

செய்தி -73

புர்காபாகிஸ்தானில் லாகூரைச் சேர்ந்தவர் ஆசாத் அலி, போலிசாக வேலை பார்ப்பவர். இவரது தங்கை நஜ்மா பீபி(22) ’ஆண்களின்’ உடைகளை குறிப்பாக ஜீன்ஸ் பேண்டு அணிவது அவரது அண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் எச்சரிக்கை, பிறகு மிரட்டல் என்று போகிறது. அண்ணனின் மிரட்டலிலிருந்து பாதுகாப்பு வேண்டுமென ஷதாரா காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார் நஜ்மா. ஆனால் போலிசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு 20.7.12 அன்று இசுலாமியர்கள் அனைவரும் தொழுகை செய்யும் வெள்ளியன்று வீட்டிலிருந்து புறப்பட்ட நஜ்மாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார் ஆசாத் அலி.

பாகிஸ்தானில் இசுலாமியப் பெண்கள் மீதான மத அடக்குமுறை நாட்டுப்புறங்களில் அதிகமாகவும், நகர்ப்புறங்களில் குறைவாகவும் இருக்கும். எனினும் தூய இசுலாமிய நெறியின்படி வாழ வேண்டும் என்ற தாலிபானிசமும் ஒரளவுக்கு செல்வாக்குடனே இருக்கிறது. முழு நாடும், பொருளாதாரமும் அமெரிக்க அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் போது இத்தகைய மதவாதிகள் தங்களது புனிதத்தை அப்பாவிப் பெண்களின் மீது தேடுகிறார்கள்.

மதப்புனிதத்தைக் கட்டிக் காப்பாற்றுபவர்களாகப் பெண்களை மட்டும் எல்லா மதங்களும் நியமித்திருக்கின்றன. தற்போதைய ஒலிம்பிக் போட்டியில் முழு உடலை மறைக்கும் துணியோடும், ஆண்களின் துணையோடும் சவுதியின் வீராங்கனை ஒருவர் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கே இத்தனை ஆண்டுகளாகியிருக்கின்றது. ஜீன்ஸ் பேண்டு அணிவதை கொலையால் தடுத்து நிறுத்த நினைக்கும் இசுலாமியர்களின் ஆணாதிக்கமும் விரைவில் புதைகுழிக்குப் போவது உறுதி.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_________________________________________________

_________________________________________________

_________________________________________________

_________________________________________________

_________________________________________________