கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் :

டலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி பொது நிர்வாகத் துறையில் போதிய ஆசிரியர்கள் இல்லாதது மற்றும் போதிய வகுப்பறைகள் இல்லாததைக் கண்டித்து வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக வாக்குறுதியளித்த கல்லூரி முதல்வர் மாணவர்களை கலைந்து செல்லுமாறு பேசிப் பார்த்தார்.

பொதுவில் இதுபோன்று மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தும் பொழுதெல்லாம் மாணவர்களை பீதியூட்டுவது அல்லது அப்போதைக்கு வெற்று வாக்குறுதிகளை அள்ளிவீசி கூட்டத்தை கலைப்பது என்ற பொதுப்போக்கை கல்லூரி நிர்வாகங்கள் வாடிக்கையாக கடைபிடித்து வருகின்றன.

படிக்க:
பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

இம்முறை, கல்லூரி நிர்வாகத்தின் நைச்சியமான பேச்சுக்கு மாணவர்கள் உடன்படவில்லை. தங்கள் கோரிக்கையில் உறுதியாக நின்றனர். பின்னர், போராட்டக்களத்திலிருந்த மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்து தனது தலைமையில் ஆசோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார், கல்லூரி முதல்வர். அக்கூட்டத்தில், மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான பருண்மையான முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. போதிய ஆசிரியர்களை ஒதுக்கியதோடு, பாடவேளைக்கான கால அட்டவணையும் வகுக்கப்பட்டது. இதனையடுத்தே, மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தகவல்:

புமாஇமு

கடலூர்.
தொடர்புக்கு: 97888 08110.

 

*****

மணல் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்: மிராளூர் – சி. சாத்தமங்கலம் மக்கள் அறைகூவல்:

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மிராளூர் – வெள்ளாற்றில் சுரங்கம் வெட்டி எடப்பாடி அரசு தொடர்ந்து மணல் கொள்ளை!

மணல் கொள்ளையால் முக்கொம்பு மேலணை உடைந்தது போல் சேத்தியாத் தோப்பு அணை உடையும் ஆபத்து; கரைகள் உடைந்து கிராமங்கள் ஆற்றில் அழியும் பேராபத்து!

தொடர்மணல் கொள்ளை மூலம் கடல்நீரை உட்புகச் செய்து மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் சதித் திட்டம்!

உழைக்கும் மக்களே !

கொள்ளையர்களிடம் கெஞ்சிப் பலனில்லை.
அதிகாரத்தைக் கையிலெடுப்போம் !
மணல் கொள்ளைக்கும் முடிவு கட்டுவோம் !

ஒருங்கிணைப்பு: மக்கள் அதிகாரம்
கடலூர் மண்டலம் : 81108 15963

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க