நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் ஒன்றிய அஇஅதிமுக செயலாளர் M.சிவா, கட்ந்த 16-11-2018 அன்று புயல் நிவாரணப் பணிகள் மேற்கொண்டிருந்த பெண் கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ) மீது கொலைவெறித் தாக்குதல் மற்றும் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். இதனைக் கண்டித்து கடந்த 17-11-2018 அன்று முதல் கீழ்வேளுர் தாலுக்காவில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளும் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்னால் நின்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மக்களோடு மக்களாக புயலில் பாதிப்படைந்தவர்களுக்கு வேலை செய்து கொண்டிருந்த பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் கீழ்வேளுர் அதிமுக ஒன்றிய செயலாளர் M.சிவா மோசமாக நடந்து கொண்டது கேவலமானது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் பேச்சு நடத்தி சிவாவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர், கிராம நிர்வாக அலுவலர்கள்.

தகவல் : மக்கள் அதிகாரம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க