ண்டின் இறுதியில் ஆண்டு முழுவதும் நடந்த முக்கியமான சம்பவங்களை ஊடகங்கள் நினைவு கூறுவது உண்டு. மோடி ஆட்சி முக்கிய சம்பவங்களின் பட்டியலில் (பார்ப்பனிய இந்துமதவெறி) வெறுப்பு அரசியல் கலவரங்கள் – கொலைகளை இணைத்துள்ளது.

2014-ஆம் ஆண்டு முதல் காவிகள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் இந்துத்துவ கலவரங்கள்-கொலைகளின் எண்ணிக்கை சாதனை உயரத்தை எட்டியிருக்கின்றன. 2018-ஆம் ஆண்டு அதன் உச்சத்தை தொட்டிருக்கிறது.

2018 டிசம்பர்  26-ஆம் தேதி வரையிலான கணக்கின் படி மத அடிப்படைவாதத்தின் மூலம் தூண்டிவிடப்பட்ட 93 கலவரவங்கள் நடந்துள்ளதாக சொல்கிறது வெறுப்பு அரசியல் கண்காணிப்பகம்.  இந்த ஆண்டு மட்டும் காவி கும்பலின் வெறுப்பரசியலுக்கு 30 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

2011-2012-ஆம் ஆண்டுகளில் தலா ஒரு சம்பவம் மட்டுமே நடந்துள்ளது. கொலைகள் எதுவும் நடக்கவில்லை. 2013-ஆம் ஆண்டு பாஜக-ஆர்.எஸ்.எஸ். மத்தியில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் வெறுப்பரசியல் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளன. ஒன்பது கலவரங்களும், இரண்டு கொலைகளும் அந்த ஆண்டு நடந்துள்ளன.

மோடி ஏக பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்ததும் வெறுப்பரசியல் வேகம் கண்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு 18 சம்பவங்கள், நான்கு கொலைகளை செய்துள்ளது காவி கும்பல்.

2015- ஆம் ஆண்டு 30 சம்பவங்கள், 18 கொலைகள் நடந்துள்ளன. 2016ல் 42 காவி கும்பலின் வன்முறை சம்பவங்கள், 15 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 2017-ஆம் ஆண்டு 75 சம்பவங்கள், 29 கொலைகள் வெறுப்பு அரசியல் சம்பவங்களும் கொலைகளும் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. 2018-ஆம் ஆண்டு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மதத்தை முன்வைத்து இந்துத்துவ அடியாட்கள் செய்த கலவரங்களின் எண்ணிக்கை உள்ளது.

படிக்க:
தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!
♦ மோடியின் ஆட்சியில் இந்தியா கலவரங்களில் நம்பர் 1 நாடு

காவிகளின் புகலிடமான உத்தர பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான கலவர சம்பவங்கள் நடக்கும்  மாநிலமாக உள்ளது. அடுத்து பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆண்டு கொண்டிருக்கும் பீகாரிலும் அதற்கடுத்து பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தான் (இப்போதுதான் ஆட்சியை இழந்திருக்கிறது பாஜக) மாநிலங்களிலும் காவிகளின் தென்னக நுழைவாயிலான கர்நாடகத்திலும்வெறுப்பரசியல் சம்பவங்கள் நடந்துள்ளன.

2018-ஆம் ஆண்டு நடந்த 81 சம்பவங்களில் 60% முசுலீம்களும் 14% கிறித்தவர்களும் ஒரு சம்பவத்தில் சீக்கியரும் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது 75% மத சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  25% இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலித்துகள் இந்து பட்டியலில் வருவதால் அவர்களே பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம்.

2009-ஆம் ஆண்டு முதல் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இந்த வன்முறைகளை 82% இந்துக்கள் ஈடுபட்டதாகவும் 17% முசுலீம்கள் காரணமாக இருந்ததாகவும் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள பகுப்பாய்வு தெரிவிக்கிறது.  அதுபோல, இந்த தாக்குதல்களில் 27% மாட்டரசியலை முன்வைத்து நடத்தப்பட்டவை என்றும் 14% வெவ்வேறு மதங்களுக்கிடையேயான உறவு (உதாரணத்துக்கு லவ் ஜிகாத்) தொடர்பாகவும் 9% மத மாற்றம் தொடர்பாகவும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி, ஜீ நியூஸ் சேனலுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அளித்த பேட்டியில், “நாங்கள் நாட்டின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவதால் தொடர்ந்து 15 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் இருக்கிறோம். மத்திய பிரதேசம், சத்தீஸ்கரை ஆண்டுகொண்டிருக்கிறோம். மதம் சார்ந்த கட்சி என்று குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரே ஒரு கலவரம் கூட குஜராத்தில் நடக்கவில்லை; ம.பி.யில் நடக்கவில்லை; சத்தீஸ்கரில் நடக்கவில்லை. உ.பி.யில் ஆட்சிக்கு வந்தவுடன் கலவரங்கள் நடப்பது நின்றுவிட்டன” என ஆகாச புளுகை அவிழ்த்துவிட்டார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத்தில் மட்டும் கிட்டத்தட்ட 36 ஆயிரம் மத கலவர சம்பவங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணம் சொல்கிறது. மத்திய பிரதேசத்தில் 32 ஆயிரம் சம்பவங்களும் சத்தீஸ்கரில் 12 ஆயிரம் சம்பவங்களும் நடந்துள்ளதாக அரசின் ஆவணம் தெரிவிக்கிறது. ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏன் சமீபத்தில்கூட புலந்தசாகரில் காவி கும்பல் போலீசு அதிகாரியை சுட்டுக்கொன்றது. தினமும் அங்கு கலவர சம்பவங்கள் நடப்பதை ஊடகங்கள் ஆவணப்படுத்துகின்றன.

வெட்ட வெளிச்சமாகிவிட்ட உண்மைகளை மறைத்து பொய் பேச அசாத்திய தைரியம் வேண்டும்.  காவி பாசிஸ்டு கும்பலுக்கு கலவரங்களை செய்யவும் வெட்கமில்லை, அதை மறைக்க பொய் சொல்லவும் நா கூசுவதில்லை. 2018-ஆம் ஆண்டில் பத்தாண்டுகளில் இல்லாத சாதனையை எட்டியிருக்கும் காவி கும்பலை தூக்கி எறியவில்லை என்றால் இங்கே மக்களுக்கு எதுவும் இல்லை!

கலைமதி
நன்றி: ஃபேக்ட் செக்கர்

 

 

செய்தி ஆதாரம் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க